பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு

பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும்.
உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக…
ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில், இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷிகளின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.

View More பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு

திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

பிட்ஸாவும் பர்கரும் உண்டு மேற்கத்தியமாகி நம் உயிர் வாழ்தலின் அடிப்படையான பண்பாட்டு மரத்தையே வெட்டி வீழ்த்தி நம்மை நாமே “நீருக்கான உலகப் போரில்” அழிக்கும் மேற்கத்திய நாகரிக தலைமுறையாக நாம் முழுமையாக மாறுவதற்கு முன்னால் “உணவாகும் நீரை” கட்டிக்காத்த பண்பாட்டின் சுவடுகளையும் சிறிது பின்நோக்ககிப் பார்ப்பது நல்லது… நம் பண்பாட்டின் ஆகப்பழமையான பொறியியல் கலையின்-அறிவியலின் அடிப்படை அமைப்புகளில் ஒன்றாக குளங்கள் மற்றும் ஏரிகளின் வடிவமைப்பையே குறிப்பிடலாம்.

View More திருவள்ளுவர் கண்டுபிடித்த துப்பாக்கி!

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கினால், நீங்கள் இதுவரை சந்தித்துள்ள ஏழைகளில் பரம ஏழையாக உள்ளவருக்கு அதனால் பயன்கிடைக்குமா? என்று சிந்தித்து பார்த்து காரியத்தை தொடர்ந்து நிறைவேற்றுங்கள் என்பதுதான் மகாத்மா சொன்ன அறிவுரை ஆகும்… இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்..சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு மாறுபடும். இதில் நெகிழ்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 2

பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் எல்லாவற்றுக்கும் செலவு அதிகமாக ஆகும். புவி பாதுகாப்பு உச்சி மாநாடு காசபிளாங்காவிலோ அல்லது கொல்கத்தாவிலோ நடைபெற்றிருந்தால் செயற்கையாக வெப்பம் அளிப்பது மற்றும் ஒளி அளிப்பது ஆகியவற்றுக்காக மின்சாரத்தை அதிக அளவில் செலவிடவேண்டி இருந்திருக்காது….. அமெரிக்கா கடந்த 30 ஆண்டில் தனது நிலப்பரப்பில் அணுசக்தி ஈனுலைகளை ஒன்றைக்கூட அமைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணுசக்தி ஈணுலைகளை அமைத்துத் தருவதாக சொல்லி கோடிக்கணக்கான தொகையை அபகரிக்க முற்படுகின்றன. (மூலம்: எம்.டி.நளபத், தமிழில்: ஆழிநோக்கி)

View More பசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1

திரைப்பார்வை: அவதார்

ஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.

View More திரைப்பார்வை: அவதார்

புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் ஒரு முக்கிய கருத்தியல் புரட்சிக்கான தொழில்நுட்ப விதை போடப்பட்டது. அதிகமாக பெயர் அறியப்படாத ஒரு கணிதப் பேராசிரியர் தான் வடிவமைத்த ஒரு பொருளை நகர சபையாரின் முன்னால் வைத்தார்,. சில அடிகளே உள்ள மரத்தாலான குழாயின் உள்ளே ஆடிச்செல்லுகளை வைத்து செய்யப்பட்ட அந்த அமைப்பு விரைவில் மேற்கின் கருத்தியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என யார்தான் நினைத்துப் பார்த்திருக்க முடியும்!

View More புரட்சியிலிருந்து வேதாந்தத்துக்கு

மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாய பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால் பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பி போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச்சிறந்த ஆயுதங்களாக உதவக்கூடியவை.

View More மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்