அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

It has been used both topically and orally for the treatment of skin and vaginal candidiasis. Doxycycline is prescribed for those clomid for men for sale who have had a negative or unclear medical history and are not pregnant and lactating. Amoxicillin can also be used to treat bacterial skin infections.

We hope that you will enjoy the competitive pricing on our products. We accept cash, debit or credit cards, paypal dejectedly and other methods. Can i take ivermectin over the counter in south africa?

So the psychiatrist went to the office of the real doctor. The Es Senia buy clomid without prescription information on drugwatch is provided solely for general consumer understanding and use. They can be taken orally, rectally or as a tincture.

நுழைவாயில்

அஞ்சல் உலகம் ஓர் அற்புத உலகம். அங்கு அனைத்து நாடுகளின் பண்பாட்டு மலர்களும் இடையறாது மலர்கின்றன. ‘தபால்தலை’ என்பது postage stamp என்பதன் மொழிபெயர்ப்பாகப் பயன்பாட்டில் உள்ளது. தபால்தலைகள் என்பதைவிட அஞ்சல் பூக்கள் என்னும் அழைப்பு இன்னும் நன்றாகப் பொருந்தும்.

இந்து சமயத்தின் இனிய பிரவாகம், பாரதப் பண்பாட்டுப் பாரம்பரியம். பாரதப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் நிறமும் மணமும் மென்மையும் இந்து சமயத்தை மையங்கொண்டு மலர்ந்த அஞ்சல் பூக்களில் அழகாக விகசிக்கின்றன. இவ்வஞ்சல் பூக்கள் உலக அஞ்சல் பூங்காவில் ஓர் உன்னத இடம் பேணவல்லவை. இவற்றின் எழிலையும் ஏற்றத்தையும் நுகர விழைவோர்க்கு இனிய வரவேற்பினை நல்குகின்றது இப்பகுதி.

கலைநிறை கணபதி சரணம் சரணம்

ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசிகண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் என்பவை அத்தேசங்கள்.

dutttiaமத்திய இந்தியாவில் தத்தியா (duttia or datia) என்னும் மன்னராட்சிப் பிரதேசம் நான்கு வகைப்பட்ட அஞ்சல் பூக்களை வெளியிட்டது. 1893-இல் வெளியிடப்பட்ட கிழிதுளை (impert) அஞ்சல் பூவினை இங்கு காண்கிறோம். ஐங்கரனாகப் பத்மாசனக்கோலம் கொண்டு விநாயகார் விளங்குகின்றார். பிறவகை மூன்றும் சிற்சில வேறுபாடுகள் உடையவை.

அஞ்சல் பூக்களை முறைப்படுத்திச் சேகரிக்கும் ஆர்வம் உலகளாவியது. இது ஒரு ‘கலை’யாகவே வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு PHILATELY என்று பெயர். அஞ்சல் பூக்களின் கிடைப்பருமை (scarity), ஆர்வலர் பெருநாட்டம், (பிழைபுரிந்து) பிழைப்போர் பேராசை என்பவை காரணமாக அஞ்சல் பூக்களிலும் போலிகள் உள. தத்தியாவின் விநாயகர் அஞ்சல் பூக்களிலும் போலிகள் உள்ளன என்பர் ஆய்வாளர்.

nepal-kageshwarநேபாளம் இந்து ஆட்சி அமைந்த நாடாக இருந்தவரையிலும் அந்த நன்மணம் நேபாள அஞ்சல் பூக்களில் நன்றாகவே பதிவு பெற்றிருந்தது. 2003-ஆம் ஆண்டு டிசம்பர் 23-இல் “நேபாளத்துக்கு வாருங்கள்” (visit nepal) என்னும் கருத்தாட்சியில் மூன்று அஞ்சல் பூக்கள் வெளியாயின. சுற்றுலாவினருக்கு அழைப்புவிடுக்கும் அஞ்சல் பூக்களின் வரிசை அது. அவற்றுள் முதல் அஞ்சல் பூவில் விநாயகரின் திருவுருவம் உள்ளது. காத்மண்டுவில் காகேஷ்வர் (kageshwar) அல்லது கணேஷ் (ganesh) என்னும் பெயரில் வீற்றிருக்கும் திருவுருவம் அது. இடக்கரம் ஏந்திய மோதகத்தைத் துதிக்கையால் எடுக்கும் தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார் காகேஷ்வர். இந்த அஞ்சல் பூவின் வெளியீட்டு விலை நேபாள ரூபாய் ஐந்து.

srilanka-archaeological-centenaryஸ்ரீலங்கா பாரதத்துடன் கலாசார நெருக்கம் மிக்க நாடாகும். 1990-இல் இந்நாடு தொல்பொருள் நூற்றாண்டு விழாவினைக் கருதி நான்கு அஞ்சல் பூக்களை வெளிக்கொணர்ந்தது. இவற்றுள் ஒன்று கணபதி திருவுருவம் பொறித்ததாகும். இச்சிற்பத்தின் காலம் 12-ஆம் நூற்றாண்டு. அழகிய பீடத்தில் கலைநுட்பத்துடன் விளங்குகின்றது இந்த அருட்திருக்கோலம் இந்த அஞ்சல் பூவின் வெளியீட்டு விலை ஸ்ரீலங்கா ரூபாய் இரண்டு.

laos-nakhanet

லாவோஸ் (LAOS) ஃபிரஞ்சு இந்தோ-சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தது. 1951-இல் சுதந்திரம் பெற்றது. அங்கும் பாரதக் கலாசாரச் சுவடுகளை நிரம்பவே காணலாம். அழகுமிக்க அஞ்சல் பூக்களைத் தந்த நாடுகளில் லாவோஸூம் முக்கியமானது. “லாவோஸியப் புராணங்கள்” (Laotian mythology) என்னும் கருத்தாட்சியில் மும்முறை மூன்று மூன்றாக வெளியிட்ட அஞ்சல் பூக்களின் முதல்வரிசையின் முதல் அஞ்சல் பூ விநாயகர் திருவுருவம் பெற்றுள்ளது. ஐங்கரனாக வீற்றிருக்கும் விநாயகரின் ஆடை அணிகளில் அழகுமிளிர்கின்றது. பீடத்திலும் அழகு, பின்னமைந்த திருவாயிலும் அழகு. 1971-இல் வெளிவந்த இந்த அஞ்சல் பூவின் மதிப்பு 70 கிப். (கிப் – KIP என்பது லாவோஸ் நாணயம்.) விநாயகரின் பெயர் நாகநத் (Nakhanet) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

thailand-ganesaதாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு சுதந்திர நாடு முன்பு சயாம் எனப்பெயர் கொண்டு விளங்கியது. தாய்லாந்துப் பண்பாட்டில், ஆழமான இந்துசமய நேயத்தைக் காணமுடியும். இந்துப் பண்பாட்டு உறவைத் தாய்லாந்து பெருமிதமாகவே கருதுகிறது. அஞ்சல் துறை இந்துக் கடவுள்கள் உள்ள நான்கு அஞ்சல் பூக்களை வழங்கியது. நோக்கம் – அஞ்சல் பூச்சேகரிப்பு மேம்பாடு, ஒவ்வொன்றும் ஐந்து பாஹ்ட் (Baht) இவற்றுள் முதல் அஞ்சல் பூவில் துதிக்கையான் இருகரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அமைந்த சிற்பத்தைக் காண்கிறோம். பிறமூன்று அஞ்சல் பூக்களும் பிரம்மன், நாரணன், சிவபிரான் என்னும் மும்மூர்த்திகளின் திருக்கோலங்கள். முதல் நாள் அஞ்சல் உறையின் (first day cover) சிறப்பு முத்திரையில் பிரணவம்.

indonesia-6th-five-year-plan

இந்தோனிஷியா 1945-இலிருந்து சுதந்திர நாடாக விளங்குகின்ற தீவுக்கூட்டம்; முன்பு டச்சுக்காரர்களுக்குச் சொந்தமாயிருந்தது. மலேயாத் தீவுக்கூட்டத்தின் பகுதியே இந்நாடு. ஜாவா, சுமத்ரா, மதுரை போர்னியோ, டைமோர், பாப்புவா, பாலி முதலிய பல தீவுகள் சேர்ந்தமைந்த தீவுக்கூட்டம் இது. பாரதத்தின் தென்பகுதியிலிருந்து சென்ற இந்துசமயப் பண்பாட்டுப் பதிவும், வடபகுதியினின்று சென்ற புத்த சமயப் பண்பாட்டுப் பதிவும் இங்குண்டு. ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களுக்குக் கையகப்பட்டபின், அதற்கு முன்பு பேணப்பட்ட இனிய இந்துப் பண்பாடு மங்கியதோர் நிலவின் துலக்கமற்ற காட்சியாக நிழலாடுகின்றது இப்பண்பாட்டுச் சித்திரங்களைப் பேணும் அஞ்சல் பூக்கள் நாளைய வரலாற்றுத் திரிபுகளைத் தடுக்கும் நற்சான்றுகள். இவ்வகையில்  அதிமுக்கியத்துவம்  பெறுகின்றன, இந்தோனிஷியா அஞ்சல் துறையில் 1994 ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட மூன்று அஞ்சல் பூக்கள். ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கம் கருதி வெளியிடப்பட்டவை இவை. நாட்டு முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு, கல்வியறிவுத் திறம், உடல்நலம் பேணல் என்னும் மூன்று கருத்தோட்டங்களின் குறியீடுகள் அவை.

kalainirai-ganapathyஅவற்றுள் கணேசத் திருவுருவம் தாங்கிய அஞ்சல் பூ கல்வியின் சிறப்பினையும், அறிவுத் திறன் மேம்பாட்டையும் குறித்து நிற்கின்றது. கலைநிறை கணபதி, கல்விக் களத்தின் மேம்பாட்டுக் குறியீடு. இதன் மதிப்பு இந்தோனிஷியா ரூபாய் எழுநூறு. முதல் நாள் அஞ்சல் உறையிலும் (First day cover) கணேசத் திருவுருவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பக்கவாட்டுத் தோற்றத்தில் விளங்கும் அற்புதம் நின்ற கற்பகக் களிறு இனிய பரவசம் நல்குகின்றது.

indonesian-currency

இந்தோனிஷியாவின் பணத்தாளிலும் விநாயகர் திருவுருவம் பொறிக்கப்பட்டு அது விவாதத்துக்குள்ளான செய்தி உண்டு.

czech-republic

மத்திய ஐரோப்பாவிலுள்ள நாடு செக்கோஸ்லாவாக்கியா (Czechoslovakia); செக், ஸ்லோவாக் என்னும் இருவேறு மொழிப் புலங்களை இணைத்து 1914-இல் உருவான நாடு அது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கம்யூனிசம் அரசைக் கைபற்றியது. 1989-இல் கம்யூனிசப் பிடியிலிருந்து விடுபட்டு மக்களாட்சியைத் தேர்ந்தெடுத்தது அந்நாடு.

czech-siva-parvathi-ganesa1993-இல் செக் என்றும், ஸ்லோவாகியா என்றும் இருநாடுகளாகப் பிரிந்தது செக்கோஸ்லாவக்கியா. இதில் செக் குடியரசு 21.02.2007-இல் இந்தியக் கலையைச் சிறப்பித்து அழகியதோர் அஞ்சல் பூவை வழங்கியது. சிவபெருமானும் பார்வதியும் குழந்தை விநாயகருடன் வீற்றிருக்கும் அற்புதமான இறைக்குடும்பக் காட்சி இதில் ஒளிர்கிறது. ஆசிய ஆப்ரிக்க அமெரிக்கப் பண்பாடுகளுக்கான தேசிய அருங்காட்சியாகத்திலுள்ள கண்ணாடி ஓவியமே இதில் இடம்பெற்றுள்ளது. இதன் மதிப்பு 23 Kt. முதல் நாள் உறையின் சிறப்பு முத்திரையிலும் எழில் மிகு கணபதி முகம் உள்ளது.

நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் என்னும் நாடுகளின் அஞ்சல் பூக்களில் எழுந்தருளிய விநாயகப் பெருமான் சுதந்திர பாரதத்தின் அஞ்சல்பூக்களில் எழுந்தருளும் நாள் எந்நாளோ?

காத்திருப்போம்.

அஞ்சல் பூங்காவில் வேறு பல இந்து சமய இனிமைகளும் உள்ளன.  அவற்றையும்  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.