கிலாபத் கனவுகள்…

சிரியாவிலும் ஈராக்கிலும் கிலாபத்தை நிறுவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கிலாபத் கனவுகள் பழமையானவை. கிறிஸ்தவம் கனவு கண்ட புனித ரோமானிய சாம்ராஜ்ஜியம் – Holy Roman Empire போல. துருக்கியின் ஒட்டாமான் பேரரசு உலக இஸ்லாமிய மேன்மைவாத அரசியலின் லட்சிய கனவுகளில் ஒன்று.  ஐரோப்பிய காலனியம் பரவிய போது ஏற்கனவே அதை விட நுண்ணிய ஒரு காலனிய பேரரசை இஸ்லாம் ஆசியாவில் படர விட்டிருந்தது. தன்னை சுல்தானாக அறிவிக்க வேண்டி திப்பு அன்றைய துருக்கி காலீப்பிடம் கேட்டுக் கொண்ட கடிதங்கள் இதற்கு சான்று. morning_hindutvaஆனால் ஒட்டோமான் காலத்தின் பலத்தையும் சாம்ராஜ்ஜியங்களையும் இழந்துவிட்ட துருக்கிய காலிபேத் என்கிற கிலாபத் ஒன்றாம் உலகப்போரை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது உருவாகி வந்த இஸ்லாமிய அரசியலுக்கு இது ஒரு நம்பிக்கை துரோகமாகவே விளங்கியது. ஏனெனில் 1857-க்குப் பிறகு இஸ்லாமியரிடம் பிரிட்டிஷார் தனி கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தனர்.  பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து கொண்டிருந்த இந்திய தேசிய இயக்கம் இந்துக்களால் நிரம்பியிருந்தது. எனவே இஸ்லாமியரிடம் பிரிட்டிஷார் அதீத அக்கறை கொண்டது இயல்பானது. அப்போதுதான் உருவாகி வந்த இஸ்லாமிய அரசியலுக்கும் இது சரியாக இருந்தது. என்ன இருந்தாலும் பிரிட்டிஷார் இந்துக்களை போல காஃபிர்கள் இல்லை. அவர்கள் ‘இறை வேதமான’ விவிலியம் அருளப்பட்டவர்கள். பிரிட்டிஷாருக்கும் முஸ்லீம்கள் இந்துக்களை போல விக்கிரக வழிபாடு செய்யும் விநோத ஜந்துக்கள் அல்ல. உருவமற்ற இறைவனை வணங்குகிறவர்கள். துல்லியமான அரசியல் காரணங்களுக்கு அப்பால் இந்த மத காரணங்களும் பிரிட்டிஷ் பாரபட்சத்தின் அடியாழத்தில் இருந்தன. இதனை பின்னாட்களில் சர்ச்சிலின் எழுத்துகளில் காணலாம்.

Doxycycline 100 online at walmart.com is available for sale in different doses. Food and drug administration for the treatment of http://pdmbhind.org/btc-d-el-ed/ bacterial infections in cats and dogs. Iron, iron supplements, iron-folic acid product-clomid, pct.

Cheap generic nexium (generic nexium) nexium (generic nexium) 100mg free shipping no prescription. Priligy online eczane kostkowa w cheap clomid polsce, znane dzisiaj na żywo z katolickich kierownicach. Clomid online pharmacy are now offering clomid as well as other drugs from an online.

Buy generic clomid 50mg generic clomid clomid 50 mg clomid 100 mg clomid 100mg clomid 200mg clomid 200mg clomid 50mg clomid 50mg generic clomid clomid 50mg clomid pct clomid pct clomid pct clomid pct. Ok, i have been on the orlistat for about 3 months and i am not satisfied buy phenergan 25mg tablets Voúla with it. This video is for people like you who have dogs that need to be taken outside to go potty.

இத்தகைய சூழலில்தான் துருக்கி கிலாபத் கவிழ்ந்தது. பிரிட்டிஷார் மீது இந்திய இஸ்லாமிய அரசியலுக்கு ஒரு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. நம்பிக்கை துரோகத்தினால் உருவான ஆத்திரம். ஆனால் அன்று எழுந்து வந்த தலைவரான காந்தி இதை இந்திய விடுதலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நினைத்தார். இந்தியாவில் கிலாபத் இயக்கம் எழுந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். k1இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள். பிரச்சார பேச்சுகளில் கனல் பறந்தது. ‘ஆப்கானிஸ்தானின் அமிர் இந்தியா மீது படையெடுத்தால் அதை ஆதரிக்க வேண்டும்’ என்றெல்லாம் முழங்கப்பட்டது.  காந்தி எழுதினார், “அமிர் இந்தியா மீது படையெடுத்து வரும் பட்சத்தில்  நான் இந்திய மக்கள் பிரிட்டிஷ் இந்திய அரசை ஆதரிக்கக் கூடாது என வெளிப்படையாக சொல்வேன்.” (யங் இந்தியா, 4 மே 1921). கிலாபத் ஒரு ஆதர்ச அரசு என்றார் காந்தி. தான் விரும்பும் ஆட்சி அதுதான் என்று மேடைகளில் கூறினார்.  “ஹைதராபாத் நிஜாம் இந்தியாவின் பேரரசரானால் அது நூறுசதவிகித சுவராஜ்ஜியம் என்றே நான் கருதுவேன்.” என்று முழங்கினார் மகாத்மா. உண்மையில் பிரிட்டிஷார் ஊட்டி வளர்த்த இஸ்லாமிய அரசியல் என்பது மேல்தட்டைச் சார்ந்து இருந்தது. ஆனால் காங்கிரஸ்தான் அதை இஸ்லாமிய சமுதாயம் முழுமைக்குமாக கொண்டு சேர்த்தது. இந்த காலகட்டத்தில் துருக்கியில் அட்டாதுர்க் கமால் பாஷா எனும்  மதச்சார்பற்ற புரட்சியாளர் எழுந்தார். துருக்கி மதச்சார்பற்ற நாடாகியது. கிலாபத்துக்கு பெரிய அடி.

காந்தி பிரிட்டிஷாரை எச்சரித்தார், “சாத்வீகமான ஒத்துழையாமை இயக்கம் தோற்றுப் போய்விட்டால், அப்புறம் இஸ்லாமியர்கள் அவர்களது மதம் சொல்லும் முறைகளில் செயல்பட உரிமை உடையவர்களாகிறார்கள்.”  இஸ்லாமியர்களும் பொறுமை இழந்தார்கள். கிலாபத் அங்கே போனால் அதை இங்கே நிறுவ முடியாதா என்ன? கேரளத்தின் மலபார் பகுதிகளில் கிலாபத் இயக்கம் தூய இஸ்லாமிய காலிபேத் ஒன்றை உருவாக்க முடிவு செய்தது. டாக்டர் அன்னி பெசண்ட், டாக்டர். அம்பேத்கர் அனைவருமே மாப்ளா கலவரங்களின் கொடூரங்களை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்கள். தலைகள் வெட்டப்பட்ட இந்துக்கள், இந்துக்களின் சடலங்களாலும் குற்றுயிருடன் சாகாத உடல்களாலும்  நிரம்பிய கிணறுகள். குடும்பத்தினர் முன்னால் வயது வேறுபாடின்றி வன்புணரப்பட்ட பெண்கள். 20-ஆகஸ்ட்-1921 இல் தொடங்கி 22-பிப்ரவரி-1922 வரை நீடித்த இந்த வெறியாட்டத்தினை  உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியில் ஆரம்பித்து தேசிய தலைவர்கள் வரை பலரும் ஆவணப்படுத்திய கொடூரங்கள்… k3ஆனால் விரைவில் தொடங்கியது இந்த மானுடத்தன்மையற்ற கொடூரங்களுக்கான சால்ஜாப்புகள்… பொருளாதார காரணங்கள், நிலவுடமை சமுதாய அநீதிகள்  உண்மையில் இது நிலவுடமையாளர்களுக்கும் நிலமற்ற ஏழை தொழிலாளிகளுக்குமான வர்க்க போராட்டமேதான்… பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான் அதற்கு வகுப்புவாத முலாம் பூசிவிட்டது… இத்தகைய அக்மார்க் மார்க்ஸிய வெள்ளையடிப்புகளை இந்துக்களின் பிணக்குவியல்களின் மீது செய்ய ஆரம்பித்தனர் அறிவுஜீவிகள். மாப்ளா கொலைகாரர்களுக்கு அரசு உதவி பணம் அளித்தது. திரைப்படங்களில் அவர்கள் விதந்தோதப்பட்டனர். குமாரனாசான் 1923 இல் அவர் எழுதிய ’துரவஸ்தா’வில் இஸ்லாமிய பாசிசம் இந்துக்களுக்கு செய்த கொடுமைகளை இலக்கிய ஆவணப்படுத்தியிருக்கிறார். ஸ்ரீ நாராயணகுரு பாரம்பரியத்தில் வந்த அவர் வகுப்புவாதி அல்ல.  மதம் மாற மறுத்த தலித் இந்துக்கள் இஸ்லாமிய வெறியர்களால் கொல்லப்பட்டனர் என்பதும் மாப்ளா கலவரம் என்பது விவசாய கூலிகளுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் இடையில் நடந்த ஒரு வர்க்க போரன்றி வேறில்லை என்பதை பொய்யாக்குகிறது.

இப்படியெல்லாம் நடந்திருக்குமா? இவையெல்லாம் வகுப்புவாத கற்பனைகளா என கேட்பவர்களுக்காக இந்த கொடுமைகள் இப்போது மீண்டும் நடந்தேறுகின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும். மீண்டும் கிலாபத் கனவுகள். இம்முறை வெட்டி எடுக்கப்படும் தலைகள் காஃபிர் இந்துக்களுடையவை அல்ல. ஷியா முஸ்லீம்களுடையது. mnpபாலியல் வன்கொடுமைகளுக்கு வயது வேறுபாடின்றி இரக்கம் இன்றி ஆட்படுத்தப்படும் பெண்கள் விக்கிரவழிபாடு செய்யும் காஃபிர்களின் வீட்டு பெண்களல்ல. ஷியா முஸ்லீம் பெண்கள் பலியாகின்றனர். எல்லையற்ற கருணையாளனின் இகவுலக அரசு உருவாக்கப்பட இத்தனை ரத்தம் சிந்தப்படும் போது இத்தனை மானுடம் பலி கொடுக்கப்படும் போது  இந்தியாவின் இஸ்லாமிய மேன்மைவாத அரசியல் இயக்கம் சும்மா இருக்க முடியுமா? khilafatஇடதுசாரி அறிவுசீவிகளாலும் போலி மதச்சார்பின்மைவாதிகளின் வாக்கு வங்கி அரசியலாலும் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட உயிரினமல்லவா அது! குறைந்தது இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள்  சென்னை கல்லூரி மாணவர்கள் சிரியாவில் கிலாபத்தை உருவாக்கும் ஜிகாதி அமைப்புகளில் பங்கேற்று பயிற்சி பெறுவதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. சிங்கப்பூரில் விசாரணை செய்யப்பட்ட கடலூரை சார்ந்த குலம் மரைக்காயர் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இந்த விஷயங்களை கூறியிருக்கிறார்.  இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. (பார்க்க, ‘”Fundamentalist outfit busted at Nellikuppam”, Hindu, October 29, 2004). சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும். சில மாதங்களுக்கு முன்னால் இஸ்லாமியர் கணிசமாக வாழும் சென்னை பகுதிகளில் இந்த சுவரொட்டி தோன்றியதை கவனித்திருக்கலாம்.

2004 இல் காவல்துறை வெளிக்கொணர்ந்த அடிப்படைவாத அமைப்பு… 2007 இல் அந்த பகுதிக்கு மார்க்க பயிற்சிக்காக வந்த சிங்கப்பூர் இளைஞர்… 2014 இல் சென்னையில் தோன்றும் கிலாபத் பிரச்சார சுவரொட்டிகள் … இப்போது சென்னை -கடலூர்-சிங்கப்பூர் என விரியும் வலைப்பின்னலின் பின்னணியில் சென்னை கல்லூரி இளைஞர்கள் சிரியா-ஈராக் ஜிகாதில்.  கழுத்துகளை வெட்டி ரத்தம் சிந்த ஏக இறைவனுக்கு மகிமை என வெற்றிக்குரல் எழுப்பும் காணொளிகள் எங்கோ நடக்கும் விபரீதம் என எண்ணாதிருங்கள்… அந்த அபாயம் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கலாம். ஆனால் ஒன்று இந்தியாவில் வாழும் அக்மதியாக்களும், ஷியாக்களும் ஏன் தர்கா மரபினை பேணும் பாரம்பரிய சுன்னி முஸ்லீம்கள் கூட ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம்… இந்த கொடிய வன்முறை அழிவிலிருந்து இவர்களையும் காப்பாற்றுவது இந்த மண்ணின் இறை பன்மை பேணும் பண்பாட்டுத் தன்மை – அதன் ஒட்டுமொத்த பெயர் ஹிந்துத்துவம். எனவே அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்…

 

மீண்டும் காலைத் தேநீர்… ஜீவனுள்ள தெய்வம்

மீண்டும் காலைத் தேநீருடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை. பூரி ஜெகன்னாதர் என்றதுமே பல விஷயங்கள் நினைவுக்கு வரும். நல்ல விஷயங்கள். பெருமை அளிக்கும் விஷயங்கள். ஆனால் Juggernaut என்கிற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் பொருள் என்ன? ஆங்கில விக்கிபீடியா இப்படி சொல்கிறது: morning_hindutva “ in current English usage, is a literal or metaphorical regarded as mercilessly destructive and unstoppable. This usage originated in the mid-nineteenth century as an allegorical reference to the Hindu Ratha Yatra temple car, which apocryphally was reputed to crush devotees under its wheels” புரிந்திருக்கும்.  இரக்கமற்ற அழிக்கும் சக்திக்கான உருவக சொல்லாம்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்  உருவானதாம். ஹிந்து ரதயாத்திரையின் போது இந்த ரதத்தின் சக்கரங்களில் பக்தர்கள் நசுக்கப்படுவதாக சொல்லப்பட்ட கதைகளின் விளைவாக ஏற்பட்ட பெயராம்.

சுருக்கமாக சொன்னால், காலனிய கட்டுக்கதையின் விளைவாக ஏற்பட்ட ஒரு அவமரியாதை சொல்.  இப்படி பல பெயர்கள் அவமதிக்கும் சொற்களாக ஆங்கில அகராதிக்குள் ஏறியிருக்கின்றன.  அவற்றுள் ஒன்று இது.  கல்கத்தாவில் வாழ்ந்த கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிக்கு புரொட்டஸ்டண்ட் மிஷினரிகள் அனுப்பிய கூட்டு கோரிக்கைகளில் பூரி ஜெகன்னாதரின் ரதயாத்திரை நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்று அவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  “இந்து விக்கிர வழிபாட்டின் ஆகப்பெரிய சீர்கேடு” என பூரி ஜெகன்னாதர் ஆலயம் விவரிக்கப்பட்டது.  மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மடிகின்றனர். இந்த தேர் திருவிழாவினால் பெரிய தொத்து வியாதிகள் இந்தியா முழுக்க பரவுகின்றன. ஒழுக்கமின்மை ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கின்றனர்.  ரத யாத்திரையின் போதும் அதைத் தொடர்ந்தும் பார்த்தால் பூரி முதல் கட்டாக் வரையான பாதையெங்கும் செத்துப் போன,  சாகக்கிடக்கும் அப்பாவி மக்களின் பிணங்கள்… இத்யாதி இத்யாதி. இது பின்னர்  இங்கிலாந்தின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் தொடர்ந்தன.missionaries ‘விரைவில் இந்த விக்கிரகங்கள் பூமியை விட்டே ஒழிந்துவிட வேண்டும். உண்மையான தேவனின் ஆட்சி மலர வேண்டும். அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உதவ வேண்டும்….’ இத்யாதி.இப்படித்தான் உருவானது ‘Juggernaut’ கதை. ஆனால் உண்மை என்ன? 1813 இல் கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையை நேரில் பார்த்திருக்கிறார்.  அவர் பெயர் சார்ல்ஸ் புல்லர். கட்டாக்கில் கும்பெனியின் கமிஷனராக இருந்தவர். அவர் ஒரு விரிவான அறிக்கையை எழுதினார். ’நான்  கட்டாக்கிலிருந்து பூரிக்கு பலமுறை சென்றிருக்கிறேன். ரத யாத்திரை காலங்களிலும் சென்றிருக்கிறேன். அப்படி அவலமான மக்கள் குவியல்களை நான் கண்டது இல்லை.  ரத யாத்திரையின் போது முழுக்க ஒரு முறை பூரியில் இருந்திருக்கிறேன். 1,00,000 மக்கள் இந்தியா முழுவதிலும் இருந்து 1600 மைல்கள் வரை பிரயாணம் செய்து வந்திருந்தார்கள். இதில் பலர் மிகவும் வயதானவர்கள். propaganda தம் முதுமை காலத்தில் இந்த புனித நகரத்தில் உயிர் விட வேண்டுமென்று வந்திருந்தவர்கள். இத்தனை பேரில் ரதத்தின் முன்னால் பாய்ந்து உயிரை விட்டவர் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து ஒருவர்தான்…’ இத்யாதி. அன்றைய தேதியில் மிஷினரிகளின் பொய் பிரச்சாரத்தால் ரத யாத்திரை தடை செய்யப்படவில்லை.  பூரி ஜெகன்னாதர் கோவிலின் நிலங்களை அபகரித்து கொண்ட பிரிட்டிஷ் அரசு அதற்கு பதிலாக கொடுத்து வந்த (நில அபகரிப்புக்கு ஈடாகாத) உதவி தொகையை நிறுத்த முடியவில்லை.[தமிழ்நாட்டின் இந்து அறமற்ற துறை என்கிற பெயரில் கோவில் நிலங்களை கொள்ளையடிக்கும் அரசியல்வாதி மாஃபியாக்களின் முன்னோடி பிரிட்டிஷ் காலனியவாதிகள்தான்.] 1857 கூட பூரி ஜெகன்னாதர் மீது கை வைக்காததற்கு காரணமாக இருக்கலாம். இதையெல்லாம் அருண் ஷோரி தனது ‘Missionaries in India’ நூலில் ஆவணங்களுடன் எழுதியிருக்கிறார். ஆனால் உலகத்தின் பொது புத்தியில் அந்த பிரச்சாரத்தை உண்மையாக்க அவர்களுக்கு முடிந்திருக்கிறது. இன்றைக்கும் கூட நம் ஆங்கிலேய எழுத்தர்கள் எந்த விதமான வரலாற்றுணர்வோ பண்பாட்டுணர்வோ எதுவுமின்றி நம் பண்பாட்டின் ஒரு மகோன்னதமான ஆன்மிக கலை சின்னத்தை கேவலப்படுத்தும் பதத்தை தன் ஆங்கில அறிவை காட்டும் பெருமை என நினைத்து பயன்படுத்துவதை காண்கிறோம்.

தமிழ்நாட்டின் கலை விமர்சக பிதாமகர் வெங்கட் சாமிநாதனின் ’கலை உலகில் ஒரு சஞ்சாரம்’ நூலில் இருந்து ஒரு பகுதி:

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் ப்ரொஃபுல்ல மொஹந்தி என்ற ஒரிய ஓவியரின் கண்காட்சி டெல்லியில் பார்க்கக் கிடைத்தது. எல்லாம் ஒளி வட்டங்கள். ஒளி வட்டங்களுக்குள் சென்றால்  இன்னும் ஒளிவட்டங்கள்…. இப்படி நீண்ட வசனத்தில் கவிதை வேறு யாரும் செய்ததில்லை. mohantiபாரதியாரின் சொற்கோலத்தின் காட்சிப்பதிவு ப்ரொஃபுல்ல மொஹந்தியின் ஓவியங்கள்…. இதற்கு அடுத்து வந்த கண்காட்சி ஒன்றில் இவரது ஓவியங்களைப் பார்த்த இன்னொரு விமர்சகர் ‘உங்களிடம் Paul Klee இன் பாதிப்பு காணப்படுகிறது’ என்றாராம். அது யார் Clay என்று மொஹந்தி கேட்க அவர் க்ளேயை குறித்து விவரமாக சொன்னாராம். ஒரிய கிராமத்தின் சித்திரக்காரராக இருந்து கட்டிடக் கலைஞராகக் கல்வி கற்ற மொஹந்திக்கு ஐரோப்பிய ஓவிய வரலாறு தெரியாது. பால் க்ளே, வாஸ்ஸிலி, காண்டின்ஸ்கி , மோண்ட்ரியான் எல்லாரும் தத்துவார்த்த சிந்தனைகளால்  பாதிக்கப்பட்டவர்கள். கலையின் ஆத்மீகத் தேட்டம் பற்றிப் பேசியவர்கள்…. போகட்டும். பால் க்ளேயின் பாதிப்பு தனது ஓவியங்களில் இருப்பதைச் சுட்டிக்காட்டியதும், மொஹந்தி நடைத்தூரத்தில் இருந்த தனது அறைக்கு அந்த விமர்சகரைச் கூட்டிச் சென்று, அங்கிருந்த பாரம்பரியக் கிராமியக் கலைச்சித்திரங்களை – கிருஷ்ணன், பலராமன், சுபத்ரா- வரிசையாக மூன்று வட்டங்களாக வட்டத்தில் வரையப்பட்ட பெரிய கண்களும் வாய்களுமான ஓவியங்களைக் காட்டினார்.

வெங்கட் சாமிநாதன் தொடர்கிறார்:

ப்ரொஃபுல்ல மொஹந்திக்கும் அந்தக் கலை விமர்சகருக்கும் இடையே நிகழ்ந்த சம்பாஷணையும் “எங்கள் ஜகந்நாதரும் பலராமரும் சுபத்திரையும் ஆயிரம் வருஷத்திற்கும் மேல் பழமையானவர்கள். puri_jagannathபால் க்ளே இவர்களிடமிருந்து ஆதரிஸம் பெற்றிருக்கக் கூடுமா அல்லது நான் பால் க்ளேயிடமிருந்து ஆதரிஸம் பெற்றேனா?” என்ற கேள்வியும் மிகவும் விசேஷமானவை. நமது முந்நூறு வருட காலனிய மனக்கட்டமைப்புக்கு எதிரானது. “ஆமாம் இதெல்லாம் ஒண்ணும் புதிசில்லை. அந்த காலத்திலேயே ராமர் புஷ்பக விமானத்திலே பறக்கலையா” என்ற கேள்வி கேட்கும் மனக்கட்டமைப்பின் மறுபக்கம்தான் காலனீய மனக்கட்டமைப்பும்.

இந்துக்கள் குறிப்பாக இந்துத்துவர்கள் சிந்திக்க வேண்டிய…இல்லை இல்லை…தியானிக்க வேண்டிய வரிகள். பூமியிலிருந்தே ஒழித்துவிட வேண்டுமென காலனிய மிஷினரிகள் தங்கள் குறுகிய மத வைராக்கியத்துடன் வெறுத்த அதே தெய்வம் கலை உலகிலும் வியாபித்து இன்றும் வாழ்கிறது….ஆம். ’ஜீவிக்கிறார்’ என கொக்ககோலா போல சந்தை பிரச்சாரம் செய்யப்படாமலே  இந்த மண்ணின் தெய்வங்கள் உண்மையிலேயே ஜீவிக்கும் தெய்வங்கள்.

இறுதியாக -ஆனால்-முக்கியமாக

சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து தொழிலாளர்களை காவு கொண்டிருக்கிறது. வருத்தமான செய்தி. மானுட சோகங்களுக்கு பிறகுதான் அதற்கான காரணங்களைக் குறித்து சிந்திக்க வேண்டும் என்கிற சமூக விழிப்புணர்வு கொடுமையானது. ஊர்களில் கோவில் கோபுரத்தை விட அதிக உயரத்தில் வீடுகள் கட்ட மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு கோவில் கோபுரங்களை மறைக்கும் உயர உயர அப்பார்ட்மெண்ட்களை கோவில் நகரங்களிலேயே தங்களை பக்த சிரோன்மணிகள் என்று சொல்பவர்களே கட்டுவதை காண முடிகிறது. sanghலாரி பேக்கர் போன்றவர்களின் மாற்று கட்டிட முறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பது அவசியம். நிச்சயம் மக்கள் அனைவருக்கும் நல்ல அழகிய வீட்டு வசதிகளை மாற்று கட்டிட முறைகள் மூலம் செய்து கொடுக்க முடியும். அதற்கு நாம் தொழிலாளர்களை கட்டிட மேற்பார்வையாளர்களை பொறியியலாளர்களை பயிற்றுவிக்க வேண்டும். நம் பாரம்பரிய வீடுகள் கட்டும் கலைகளை மீட்டெடுக்க வேண்டும். இடிபாடுகளில் சிக்கிய நம் தொழிலாளர்களை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக களமிறங்கியிருக்கிறார்கள் ஸ்வயம் சேவகர்கள். இன்றைய பாரதத்தில் இயற்கையான பேரிடர்களோ அல்லது இத்தகைய மானுட விபத்துகளோ இயல்பாக  உடனடியாக களமிறங்கி மீட்பு பணிகளில் ஈடுபடுகிறவர்கள் ஆர்.எஸ்.எஸ்காரர்கள்தான். விடுதலைக்கு பின்னான ஏறக்குறைய எழுபதாண்டு வரலாற்றில் மிகப் பெரிய சோகங்களிலெல்லாம் ஆறுதல் அளித்து பாரபட்சம் ஏதுமின்றி மானுட உயிர் காப்பாற்றும் பணியை செய்து வந்துள்ள ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களின் இந்த பணி அனுபவங்கள் அதிலிருந்து அவர்கள் பெற்ற அனுபவ படிப்பினைகள் ஆகியவை தேசிய பேரிடர் களையும் அமைப்புகளால் எந்த அளவு ஆராயப்பட்டுள்ளன? பயன்படுத்தப்பட்டுள்ளன? மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள். ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.

நாளை தேநீருடன் மீண்டும் சந்திப்போம்.

கோயில்கள் புற்றீசல்களா? – தி.க அவதூறுக்கு பதிலடி

ன்று, 21-07-2012 சனிக்கிழமை அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதுப்புது அர்த்தங்கள்” நிகழ்ச்சியில் இந்து அறநிலை துறை பற்றிய விவாதம் நடந்தது (மீண்டும் ஞாயிறு இரவு 8: 30 மணிக்கு மறு ஒளிப்பரப்பு செய்யப்படும்) பொதுவாக இது போன்ற விவாதங்களில் ஹிந்து தரப்பை சேர்ந்தவர்கள் பேச்சு முழுமையாக ஒளிப்பரப்படுவது இல்லை அல்லது அவர்களுக்கு பேச வாய்ப்பு தரப்படுவது இல்லை என்பதை பலர் கவனித்திருக்கலாம்.

ஒவ்வொறு முறையும் ஹிந்து மதம் & சமூகம் சம்மந்தப்பட்ட விவாதத்தின் பொழுது ஹிந்து இயக்கங்களை சேர்ந்த ஒருவரையும் திராவிட கட்சியை சேர்ந்த ஒருவரையும் அழைப்பார்கள். ஆனால் கிறித்துவத்தை சார்ந்தவர்களையோ அல்லது இஸ்லாமிய மதத்தினரையோ, காங்கிரஸ் கட்சிகாரர்களையோ அழைக்க மாட்டார்கள். அதே போல் கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய விவாதத்தின் பொழுது அரசியல் கட்டுபாடுகள் பல கொண்ட பா.ஜ.க.வை அழைப்பார்கள். அப்பொழுது திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களை அழைக்க மாட்டார்கள். இது ஏன் என்பது கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய விசயமே.

மேலே சொல்லப்பட்ட விதியில் இருந்து மாறாமல் இந்த நிகழ்ச்சியிலும் இருவர் அழைக்கப் பட்டார்கள் – ஒருவர் கோயில் முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளைப் போட்டு நடத்தி வரும் வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி. இன்னொருவர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த விடுதலை ராஜேந்திரன்.

சமீபத்தில் இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவர் தங்களிடம் சில ஆயிரம் கோயில்களே கட்டுபாட்டில் இருக்கிறது என்று கூறியிருந்தார். நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் வீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை சுட்டிக் காட்டி இருந்தார் (அறிக்கை இந்தப் பதிவின் இறுதியில் உள்ளது). அதை பற்றிய விவாதத்தின் பொழுது பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கும் பொய்களை அவிழ்த்து விட்டார் விடுதலை ராஜேந்திரன். அதாவது 1929 ஆம் ஆண்டு கோயில்களில் ஊழல்கள் அதிகரித்து விட்டதால் தான் கோயில்கள் சம்மந்தப்பட்ட அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் 1951 ஆம் ஆண்டு கோயில் சொத்துகளை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டது எனவும் கூறினார். இது முற்றீலும் தவறான செய்தி. அற நிலையத்துறை உருவான வரலாறு பற்றிய குறிப்புகளில் இது பற்றி தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றங்களிலும் தாசில்தார் அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் தெரு ஓரங்களிலும் புற்றீசல் போல பல கோயில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன என்று கேட்ட கேள்விக்கு தொடர்பே இல்லாமல் ஒரு கருத்தையும் சொன்னார் தி.க. காரர். இவர் சொல்லும் நீதிமன்றங்களும், தாசில்தார் அலுவலகங்களும் மருத்துவமனைகளும் உண்மையில் ஒரு காலத்தில் கோயில்களாகவும் மற்றும் அவற்றிற்கு சொந்தமான நிலங்களாகவும் தான் இருந்தன என்பது வரலாற்றை ஓரளவு படித்தவர்களுக்கு கூடத் தெரியுமே? வங்க கடலோரம் சென்னையின் மத்தியப் பகுதியில் இருந்த பிரம்மாண்டமான சென்னகேசவ பெருமாள் கோயில் போன்ற கோயில்களை இடித்து விட்டுத் தான் வெள்ளையர்கள் தற்பொழுது சொல்லப்படும் நீதிமன்ற கட்டிடங்களையும் பல அரசு அலுவலகங்களையும் கட்டினார்கள். இதை பற்றிய பல்வேறு தகவல்கள் மதராசப் பட்டிணம் என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

மின்சார வாரியத்தின் பெரும்பான்மையான கட்டிடங்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டவை. அவ்வளவு ஏன்? சென்னை கோயம்பேடு பஸ் நிலையமே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப் பட்டது. பல ஊர்களில், பக்தர்கள் வரவும் பொங்கல் வைத்து வழிபடவும் உருவாக்கப்பட்ட, ஹிந்து சமுதாயத்திற்கு சொந்தமான, குறிப்பாக தலித் சமூகத்திற்கு சொந்தமான பரந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பஸ் நிலையங்களாக மாற்றப்பட்டன. உதாரணமாக சேலம் பஸ் நிலையம், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் என்று சொல்லி கொண்டே போகலாம். உண்மை இப்படி இருக்க கழகப் பொய்யர் வழக்கம் போல உண்மைக்கு மாறான செய்தியை வெட்கமில்லாமல் வந்து தொலைக்காட்சியில் சொல்கிறார்.

அறநிலை துறை கோயில்கள் பற்றிய விவாதம் தான் அது. ஆனால் விவாதத்தின் போது, ஆபத்து விளைவிக்கும் சாலையோர கோயில்கள் என்றும், ஆகம கோயில்கள் வேறு தமிழர் கோயில்கள் வேறு என்றும் சொன்னார் விடுதலை ராஜேந்திரன். அதோடு மட்டும் நிற்கவில்லை, கோயில் கொள்ளைகளை தடுக்கும் சக்தி உள்ளே இருக்கும் தெய்வத்திற்கு இல்லை என்று வேறு சொன்னார் (சர்ச்சில் திருட்டு நடந்தால், உள்ளே இருக்கும் ஏசுவுக்கும் சிலுவைக்கும் சக்தி இல்லாததால் தான் நடந்தது என்றும் இதே போல சொல்வாரா இந்தப் பகுத்தறிவு திலகம்? – யாராவது கேட்க வேண்டும்).

கேட்கப்பட்ட கேள்வி அறநிலை துறையின் நிர்வாகத்தை பற்றியது. ஆனால் சம்மந்தமே இல்லாமல் வேறு விசயங்களை பேசி கொண்டு இருந்தார், ஆரிய பாஷைப் பெயர் தாங்கிய திருவாளர் விடுதலை ”ராஜேந்திரன்”.

அவர் பேச்சின் படியே வரலாம். பெரும்பாலான சாலையோர கோயில்கள் இவர் சொல்லும் மாரியம்மன், செல்லியம்மன் போன்ற தமிழர் தெய்வங்களுக்கு சொந்தமானது தானே? இந்த சாலையோர கோயில்களை பற்றி இவர் கருத்து என்ன? சரி, தமிழர் கோயில்கள் என்று சொல்கிறார். தமிழகத்தில் உள்ள தமிழர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் பொழுது இவர்கள் ஏன் போராடவில்லை?

தற்பொழுது சாலையோர கோயில்கள் என்று சொல்லப்படும் கோயில்களில் பல வனக்கோயில்களாகவும் காணி கோயில்களாகவும் குல கோயில்களாகவும் இருந்தது பக்தர்களுக்கும், இந்து செயல்வீரர்களுக்குமே தெரியாது என்பது வேதனை தரும் விசயம். வன தேவதை கோயில்களும் காணி கோயில்களும் ஆக்கிரமிக்கப்பட்டு கிராம கோயில்களாகி, பின்னர் பொது கோயில்களாக உருமாறி, அதன் இடங்கள் கான்கீரீட் கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பின்னர் கோயிலை சுற்றி சாலைகள் போடப்பட்டு, பின்னர் அது தெருக்கோயில் என்று சொல்லப்பட்டு இடிக்கப் படுகிறது.

மேலும் அறநிலை துறையால் ஆக்கிரமிக்கப்படும் கோயில்கள் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு கோயில் தல மரங்கள் உட்பட அனைத்தும் வெட்டப்பட்டு கடைகள் நிரம்பி வழியும் வியாபார தலமாக மாற்றப்படுகின்றன. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அரசாங்க நிறுவனங்களாலும் ஆதிக்க சாதி அரசியல் வியாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதனால் வேறு வழி இன்றி கோயில் வெளியில் பொங்கல் வைக்கும் அவல நிலைக்கு நமது மக்கள் தள்ளப்பட்டனர். ஆனால் சாலை போக்குரவத்திற்கு இடையூறு செய்கிறார்கள் என்று இதன் கலாசார பின்னணியையும் வரலாறையும் குறித்த எந்த அறிவும் இல்லாத கத்துக்குட்டி செய்தியாளர்கள் 24×7 தொலைக்காட்சிகளில் பொங்கல் வைப்பதைப் பற்றி உளறி கொட்டுகின்றனர். அந்த சாலைகள் மட்டுமல்ல, இவர்கள் குடியிருக்கும் வீடுகளும் கூட ஒரு காலத்தில் காணி (விவசாய) நிலமாகவும், அந்த காணி அப்பகுதியின் கோயிலுக்கு சொந்தமானதாகவும் இருந்திருப்பதற்கே அதிகபட்சம் சாத்தியம் உள்ளது என்பது இந்த அதி புத்திசாலிகளுக்கு உறைப்பதில்லை.

இப்படி ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை துரத்திய கதையாக, கோயிலையும் நீர் நிலைகளையும் விவசாய கிராமங்களையும் அழித்து / ஆக்கிரமித்து ஒரு பெரு நகரத்தை அமைத்துவிட்டு, கோயில்களைச் சுற்றி ரோடுகளை அமைத்து விட்டு, கடைசியில் கோயில்களை ஆபத்து விளைவிக்கும் தெருக் கோயில்கள் என்று பொய் பேசும் வாய்க்கு அந்த கோயிலை கட்டிய முன்னோர்கள் தான் தண்டனை தர வேண்டும்.

கிறித்துவ மிசிநரிகளும் ஜிஹாதிகளும் இந்தியாவை ஆக்கிரமிக்க டாலர்களையும் தினார்களையும் கொட்டி மத நிறுவனங்கள் என்று சொல்லி பல கோடி மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றனர். பல மில்லியன் பணம் ஹஜ் யாத்திரை என்று அரசாங்கம் கொட்டி கொடுத்து கொண்டு இருக்கிறது. இதை பற்றி பேச விடுதலை ராஜேந்திரன் போன்றவர்களுக்கு துப்பு இல்லை. ஆனால் ஏழை மக்களுக்கு, குறிப்பாக தலித் சமுதாயத்திற்கு சொந்தமான கோயில்களை ஆபத்து விளைவிக்கும் சாலையோர கோயில் என்று கூசாமல் கூறுகிறார்.

சேலம் கோதண்டராமர் கோயில் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் ஒரு வழக்கறிஞர் எனக்கு சொன்ன தகவல் கோயில்கள் தெரு கோயில்களாக மாற்றப்படுவதற்கும், கோயில்களில் அறநிலை துறை செய்யும் அநியாயங்களுக்கும், தெருக்கோயில்கள் பற்றிய விவாதத்திற்கும் ஒரு சிறந்த உதாரணம். பல ஆயிரம் வருட பழமையான சேலம் அயோத்தியாப்பட்டிண கோயிலை ஜவுளி கடை போல மாற்றிய நிர்வாக அதிகாரியான பெண்மணி, ஏற்காடு மலைவாச ஸ்தலத்திற்கு செல்லும் வழியில் உள்ள சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்புறம் உள்ள கோயிலுக்கும் நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

அரசு கலை கல்லூரி வருவதற்கு முன்பே அந்த கோயில் ஒரு சிறு வனக்கோயிலாக இருந்தது. வனங்கள் பிரிட்டீஷ் காரர்களால் அழிக்கப்பட்டு கடைசியில் அது தெருக் கோயிலாக மாறியது. அதாவது அந்த கோயில் அரசாங்க முறைப்படி தெருக் கோயில். சமீபத்தில் பக்தர்கள் அதிகம் வர கோயில் சிறப்பு பெற்று பணவரவு அதிகமானது. இதை அறிந்த அறநிலை துறை வெட்கமே இல்லாமல் நாய் உணவிற்கு நாக்கை தொங்க போட்டு கொண்டு வருவது போல் அதை கைப்பற்றியது. நாளை அதே கோயில் தெருக் கோயில் என்று இடிக்கப்பட்டால் அந்த கோயில் பணத்தை அடிப்படையாக வைத்து சம்பளம் வாங்கும் இந்த நிர்வாக அதிகாரி பெண்மணியோ அல்லது அவரின் அறநிலையத் துறை உயர் அதிகாரியோ போராடுவார்களா?

பொதுவாக ஊழியர்கள் தவறு செய்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறநிலை துறையிலோ ஊழியர்கள் சம்மந்தப்பட்ட கோயில்களில் முறைகேடு நடந்தால் அவர்களுக்கு பெரிய கோயில்களில் வாய்ப்பு கிடைக்கும். மேற்படி சொல்லப்பட்ட கோயிலில் விலை உயர்ந்த நகைகள் நிர்வாக அதிகாரியின் பராமரிப்பில் கொள்ளை போனது. அவர் அதற்காக பணி இடை நீக்கம் செய்யப்பட்டு தற்பொழுது ஒரு பெரிய கோயிலில் நிர்வாக அதிகாரியாக உள்ளார். இது போன்ற அராஜக நிர்வாகம் இவர்கள் துறையில் மட்டுமே நடக்கும் விசயம்.

இது மட்டுமா? கோயில் துவஜ ஸ்தம்பத்திற்கும் கோயிலுக்கும் நடுவே சாலை போடுகின்றனர் பொது துறை அதிகாரிகள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு பிறகு அந்த துவஜ ஸ்தம்பத்தையே ஆக்கிரமிப்பு என்று சொல்லி அழிக்கின்றனர். தேர் நிலைகள் கூட இவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த தப்பவில்லை. இதை எல்லாம் ஏன் என்று கேட்க அறநிலை துறை அதிகாரிகளுக்கு துப்பு இல்லை. இதை பற்றி நாம் கேள்வி கேட்டால் இதை பற்றிய தகவல் எங்களிடம் இல்லை. இதை பற்றி எங்களுக்கு தெரியாது என்று பதில் வேறு.

வடபழனி கங்கை அம்மன் கோயில் ஒரு காலத்தில் கிராம கோயிலாக இருந்தது. ஆனால் தற்பொழுது மிக கடுமையான ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டு தெரு கோயிலாக மாற்றப்பட்டு உள்ளது. இதை எல்லாம் தடுக்க அறம் கெட்ட அறநிலை துறை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?

இன்னும் ஒரு உதாரணம் சென்னை கடற்கரையில் உள்ள அஷ்டலஷ்மி கோயில். வெவ்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட செயற்கை கோள் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் அறநிலை துறையின் யோக்கியதை என்னவென்று.


Image taken on 14-FEB-2008

காற்றோட்டம் மிக்க, விசாலமான, அலைகடல் மகளாம் லஷ்மி தேவியின் திருத்தலம். பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு பரப்பளவுடன் இருந்தது. கோயில் தல மரமும் இந்த படத்தில் தெளிவாக உள்ளது.


Image taken on 21-APR-2009


Image taken on 15-MAY-2010


Image taken on 16-MAY-2011

அறம் அற்ற துறையின் நிர்வாகத்தில் ஒரு கோயில் புனிதம் அழிக்கப்படுகிறது என்பதற்கு ஒவ்வொடு வருடமும் எடுக்கப்பட்ட மேலே சொல்லப்பட்ட படங்களே சிறந்த உதாரணம்.

இந்த கோயில் ஸ்தல மரங்களை அறமற்ற துறை வெட்ட முயற்சி செய்தது (அம்பு குறீயீடில் குறிப்பிடப்பட்டு உள்ளது). பகதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி வைத்தனர். ஆனால் இடையில் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அந்த கோயில் தல மரம் வெட்டப்பட்டு அந்த கோயிலிலேயே எரிக்கப்பட்டது என்ற வேதனையான விசயம் எனக்கு சில தினங்களுக்கு முன்பு தெரிய வந்தது. தற்பொழுது அந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் வேறு விமர்சையாக ஆபிரகாமிய அடிவருடிகளும் அறநிலையத் துறை கொள்ளையர்களும் புடைசூழ ஜவுளிக்கடை திற்ப்பு விழா போல ஆடம்பரத்துடன் நடந்தது.

இதே கோயில் வருமானம் இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக தெரு கோயிலாக மாற்றப்பட்டு திராவிட வெறியர்களின் அரசியலில் இடிக்கப்பட்டு இருக்கும். இது போன்ற ஆயிரகணக்கான அநியாயங்களை எழுத இந்த ஜென்மம் போதாது என்றே தோன்றுகிறது.

இவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே? கோயில் விசயத்தை பற்றி பேசுவதற்கு முன்பு திராவிட கழகத்தின் சொத்துகள் பற்றியும் அதன் தற்பொழுது உள்ள நிலையை பற்றியும் பேசட்டுமே. இது வரை அந்த சொத்தில் இருந்து கிடைத்த பணம் என்ன ஆனது? என்ன நலத் திட்டங்கள் அவர்கள் செய்து உள்ளார்கள் என்று சொல்லிவிட்டு அவர் இயக்கத்தில் உள்ள வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு கோயில்களை பற்றிய விவாதத்திற்கு வரட்டும். இல்லாவிட்டால் அவர் பெயருக்கு பின்பு வைத்து கொண்டு உள்ள விடுதலை என்பதற்கு பதில், வீரமணி அடிமை இராஜேந்திரன் என்று மாற்றி கொண்டு ஹிந்து கோயில்களை பற்றி பேசட்டும்.

20-7-2012 அன்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை

அறநிலையத்துறையைச்சீர்படுத்திட தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்

தமிழகத்திருக்கோயில்களை நிர்வாகம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை திக்குத்தெரியாமல் தடுமாறுகிறதோஎன சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் பத்திரிகை செய்தி ஒன்றில் அதன் அதிகாரி ஒருவர் அறநிலையத்துறையின்கீழ் 11 ஆயிரம் கோயில்கள் மட்டும் உள்ளதாகவும், கோயிலுக்குச் சில ஆயிரம் நிலங்கள் தான்உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? 2010இல் அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி38 ஆயிரத்து 481 கோயில்களும் அவற்றிற்கு 4 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும்தெரிவித்தது. இரண்டு ஆண்டுகளில் அவை காணாமல் போய்விட்டனவா? பட்டா போட்டு தனியாருக்குத்தாரை வார்த்து விட்டனரா? மூன்றில் ஒரு பங்கு கோயில்கள் தான் அரசின் கட்டுப்பாட்டில்இருக்கிறதென்றால் மற்றைய கோயில்களின் நிலை என்ன? தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் கவனம்கொடுத்து சீர்ப்படுத்தி, மக்களுக்கு உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

கோயில்கள்கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றன; கோயில் சொத்துகள் ஒருபுறம் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றன;மறுபுறம் கோயில் சிலைகள், விக்ரகங்கள், தங்க வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.கோயில்களுக்குச் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இதற்குக் காரணம். எப்போது கோயில்களைஅரசு எடுத்துக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியதோ அதிலிருந்துஅவை அரசின் பாதுகாப்பில் இருப்பதாகும். கோயில்களுக்கோ, அதன் சொத்துகளுக்கோ ஏற்படும்பாதகத்திற்கு அரசாங்கமே பொறுப்பாகும்.

`அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது மக்கள் வழக்குமொழி. கோயிலுக்குப்பாதகம் செய்தவர்கள் அழிந்தே போயுள்ளார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறக்கவேண்டாம்.

இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பற்றிய விவரங்களையும், அதன்சொத்துகள் பற்றியும் முழுமையான அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டும். இதில் சட்டத்திற்குப்புறம்பாக கோயில் நிலங்களைத் தனியாருக்கு மாற்றித் தந்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

தரிசனக்கட்டணக் கொள்ளையை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி வரும் ஞாயிறன்று (22-7-12) மாநிலம்தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஆலயங்களையும் ஆலயச் சொத்துகளையும் சரிவர நிர்வகிக்காமல்மோசடி செய்து வரும் இந்து சமய அறநிலையத் துறையை அரசு கலைத்துவிட்டு, இந்து சமய நம்பிக்கைகொண்ட ஆன்றோர்கள், இந்து இயக்கப் பொறுப்பாளர்களைக் கொண்ட தனித்து இயங்கும் வாரியத்தைஅமைக்க வேண்டும். இதுவே இன்னமும் மிஞ்சியிருக்கக்கூடிய பாரம்பரியமிக்க ஆலயங்களைப் பாதுகாப்பதற்குவழி.

தரிசனக் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி இந்து முன்னணி 25 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களிடையே கோயில்பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, பக்திபூர்வமான, உணர்வுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தமாபெரும் எழுச்சியானது இந்து கோயில்களைப் பாதுகாக்கச் சரியான வழியை வருங்காலத்தில்ஏற்படுத்தும் என்று இந்து முன்னணி நம்பிக்கை தெரிவிக்கிறது.

கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

ஃபிப் 19, 2012, ஞாயிறு – யூத் ஃபார் தர்மா (Youth for Dharma) அமைப்பின் சார்பில், “ஹிந்து வாழ்வியல் முறையே உலக பொருளாதார சிக்கலுக்கு தீர்வு” என்கிற தலைப்பில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் எஸ். குருமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார். அனுமதி இலவசம். அனைவரும் வருக.

அழைப்பிதழ்:

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

தீர்த்த கரையினியிலே……

p1அடையாறு கலாக்ஷேத்திராவின் மத்திய பகுதியில் மரங்களும் மலர்ச்செடிகளும் அடர்ந்த பசுஞ்சோலையின் நடுவே இருந்த அல்லிதடாகம்  இப்போது ஒரு அழகான குளமாக்கப் பட்டிருக்கிறது. மூலைகளில் சிறு மண்டபங்களின் கீழே சீராக செதுக்கப்பட்ட  படிகற்கள், இருபக்க படிகளுக்கிடையே   பரவிநிற்கும்  பசும் புல்திட்டுக்கள்.

குளத்தின் ஒருகரையின் மத்தியில்  கல் மண்டபம். குளத்தின் தெளிவான நீரில் மிதக்கும் தாமரை இலைகள். படிகளில்  அங்காங்கே வசதியாக உட்கார சதுர வடிவ குஷின்கள். குளத்திற்கு வெளியே சில நாற்காலிகள்.

முன்பனி காலமாதலால் பரபரவென்று இருள்பரவ துவங்கிற அந்த வேளையில் மாணவிகள் அகல்விளக்குகளை ஏற்றுகிறார்கள்.

மூங்கிலில் பேப்பர் ஒட்டி தயாரிக்கப்பட்ட சட்டையை அணிந்து படிகளிலும், புல் தரைகளிலும் விளக்குகள் பரவிநிற்கின்றன. குளத்திலும் சில விளக்குகள் மிதக்கின்றன. இருட்டில் அந்த  மெல்லிய இதமான வெளிச்சம், நறுமணம் பரப்பும் அகில் புகை சூழலை ரம்மியமாக்குகிறது.  குளத்தின் படிகள் கரைகளிலும் அதைத் தாண்டியிருக்கும் தோட்டப் பகுதிகளிலும்  இருட்டில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அறிவித்தபடி சரியாக 6.30 மணிக்கு கல்மண்டபத்தில் மட்டும் மின் விளக்குகள் பளிச்சிட நமஸ்காரம் என்ற இனிய குரலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.

“டாக்டர் பத்மாஸினி கலாக்ஷேத்திராவின் நிறுவனர்களில் ஒருவர். நிறுவனர் ருக்மணியுடன் இதை உருவாக்க உறுதுணையாகயிருந்தவர். வார்டன், டீச்சர். டான்ஸ் டீச்சர் ருக்மணி அத்தையின் செகரட்டரி இப்படி ஒரே நேரத்தில் பல அவதாரங்களில்  இந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்தவர். அவரது நினைவாக இந்த அல்லிகுளத்திற்கு பத்மபுஷ்கரணி எனப் பெயரிட்டு இதை இசை நிகழ்ச்சிகள் நடத்த திறந்தவெளி அரங்கமாக அர்பணிக்கிறோம்”

என்று மிக சுருக்கமான அறிமுகத்துடன், அன்றைய இசை நிகழ்ச்சிக்கு அழைக்கபட்டிருந்த டி.எம் கிருஷ்ணா கலாக்ஷேத்திராவின் புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்ததற்கு நன்றி சொல்லப்படுகிறது. சொல்லுபவர் அதன் பாரம்பரியத்தைப் போஷிக்கும் பொறுப்பேற்றிருக்கும்   தலைவரான திருமதி லீலா சாம்ஸன்.

அன்றைக்கு மிக நல்ல பார்மிலிருந்த டி. எம் கிருஷ்ணா ரசிகர்களை  தன் குரலால் கட்டிபோட்டிருந்தார்.  சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் மாராட்டி, தமிழ் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வோரு ராகத்தில் ஒரு பாடல்.

p18“காலைத் தூக்கியாடும் தெய்வமே” என்ற தமிழ் பாடல் பாடும்போது பக்தி பரவசத்தில் அவரும்  கேட்டோரும் நெகிழ்ந்தது நிஜம். நிகழச்சியின் துவக்கத்தில் சிவப்பு பட்டு  ஜிப்பா, தரையை தொடும் நீண்ட வெள்ளை அங்கவஸ்திரம் என்று கலக்கலாக வந்து அமர்ந்த கிருஷ்ணாவை கைதட்டி வரவேற்ற ரசிகர்களைப் பார்த்து வாயில் விரல்வைத்து அமைதியாக இருக்கச்சொல்லி சைகை காட்டியதாலோ என்னவோ  அன்று அவருக்கே உரிதான  ஸ்டெயிலான   கைகளை உயர்த்தி விரித்து ஆட்டி ஸ்வரங்களை நிரவல் செய்து கொண்டு உச்சத்தை தொட்டபோது கூட ஆர்ப்பாட்டமான கரகோஷங்கள் இல்லாமல்  அனைவரும் அமைதியாக ரசித்து பாடல் முடிந்த பின்னரே கைதட்டியதில் வந்திருந்த  ரசிகர்களின் தரம் புரிந்தது.

ஒலிக்கட்டுபாடு,  டிடிஸ் ஸிஸ்டம்  பொருத்தப் பட்ட பெரிய ஏர்கண்டிஷன் அரங்கங்களை விட திறந்த வெளியில் இசையையும், வயலினையும்  துல்லியமாக கேட்க முடிந்தற்குக் காரணம் கலாஷேத்திராவின் நல்ல ஆடியோ சிஸ்டம் மட்டுமில்லை; ரசிகர்களின் ஒத்துழைப்பும் தான்.

“60களில் நான் படிக்கும் காலத்தில் சற்று பெரிய நீர் தேக்கமாகயிருந்த  இந்த இடம் இன்னும் அழகான காடாயிருந்தது. நீர்த்தேக்கதில் இரண்டு பாம்புகள் நாடனமாடிக்கொண்டிருந்தை பார்த்த நினைவுகூட இருக்கிறது”  என்று சொல்லும் திருமதி லீலாஸாம்ஸனின்  எண்ணத்தில் உதித்தது  இந்த  ”புஷ்கரணியில் சங்கீதம்” என்ற புதிய முயற்சி.

p5”இது நான் முயற்சிக்கும் புதிய விஷயம் இல்லை. பண்டைய காலங்களில் குளங்களின் மண்டபங்களில் கச்சேரிகள் நடப்பது வழக்கமாயிருந்தது.”

என்று அடக்கத்துடன் சொன்னாலும் வெறும் மழைநீர் சேர்ந்துகொண்டிருந்த குட்டையை  4 மாதங்களில் இப்படி அழகான இடமாக்கியதில் இவர் பங்கு கணிசமானது. அன்று இசைநிகழ்ச்சி துவங்குமுன் இதற்காக உழைத்த தோட்டப் பணியாளர்களை பரிசளித்து கவுரவித்தது இவர் தோட்டத்தை மட்டுமில்லை உழைப்பவ்ர்களையும் நேசிப்பவர் எனபதைப்  புரிய வைத்தது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது, ஒரு நல்ல கச்சேரியை ஒரு நல்ல இடத்தில் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அவருக்கு தெரியுமோ என்னவோ  இந்த சீஸனில் கலாக்ஷேத்திராவின் இசைவிழாவில் பாடவிருக்கும் இளம் கலைஞர்கள் இங்குதான் பாடப்போகிறார்கள் என்பது.

அறியும் அறிவே அறிவு – 1

kanchi_paramacharyaருமுறை காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் நான் வேலை செய்துகொண்டிருந்த சென்னை I.I.T -யில் உள்ள சிவன் கோயிலுக்கு விஜயம் செய்தபோது, அவர்களுக்கு வரவேற்புரை வழங்கும் கௌரவத்தை எனக்குக் கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் விஜயத்திற்கு சில நாட்கள் முன்பே நான் காஞ்சி மடத்திற்குச் சென்றிருந்தபோது, என்னைப் போல் அங்கு வந்திருந்த ஒருவரிடம் என்னை வேறொருவர் அறிமுகம் செய்து வைக்க, அவரோ திடீரென்று என்னிடம் ஒரு மாதிரியாகப் பேசினார். “IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ?” என்றார். வந்தவருக்கு அங்கு என்ன நடந்ததோ, ஏன் இப்படிப் பேசுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றியதே தவிர, அவருக்கு ஏதும் உருப்படியான பதில் எதுவும் நான் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். கேள்வி உருப்படியாக இருந்தால்தானே பதிலும் உருப்படியாக வர முடியும் என்றே இப்போதும் நினைக்கிறேன். ஆனாலும் அவரது கேள்வி என்னை பாதித்திருக்கக்கூடும். ஏனென்றால் அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

ஆச்சாரியார்களுக்கு நான் அளித்த வரவேற்புரையின் போது, எப்படி அங்கு வெவ்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமியைத் தோண்டும்போது ஒரு சிவலிங்கம் கிடைத்தது, மகா பெரியவர்கள் வழி காட்டுதலில் கவர்னர் மாளிகை அமைந்துள்ள ராஜ் பவன் ஆவணங்களில் இருந்து அந்த லிங்கத்தின் நாமம்தான் ஜலகண்டேஸ்வரர் என்று கண்டுகொண்டது, அதை அப்பைய தீட்சிதர் பூசித்ததற்கான சாத்தியக்கூறுகள் முதலான IIT கோயில் பற்றிய சில விவரங்களைக் கூறினேன். பின்பு மடத்தில் என்னை IIT பற்றி கேள்வி கேட்ட மேற்கூறிய நிகழ்ச்சியையும் விவரித்தேன். அதன் பின் நான் யோசித்து உணர்ந்த விஷயங்களையும் பின்வருமாறு கூறினேன்.

“கேள்வி கேட்டவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பின்னரே நான் யோசித்துப் பார்க்கும்போது ஒன்றை உணர்ந்தேன். அவர் பார்த்ததில் ஒரு I-யை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி உள்ள I T-யையும் சேர்த்துப் பார்த்தால், நான்+அது என்றாகிறது. “தத் த்வம் அசி” எனும் மகா வாக்கியத்தின் படி “நான் அதுவே” என்று உணர்த்தும் அதி உன்னத நிலையைத் தரும் இடம் IIT எனக் கொள்ளலாகுமோ” என்று சொல்லி மேலும் சொன்னேன்.

“இப்படியான விளக்கத்தை அந்தக் கேள்வியைப் போலவே இன்னுமொரு மிகைப்படுத்தல் என்று நீங்கள் சொல்லலாம். ஆனாலும் உங்களைச் சுற்றிப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஆலமரங்கள் இருக்கின்றன. ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே; அதற்கு முதல் என்றும் முடிவு என்றும் உண்டோ? நல்லறிவை உணர்த்தும் கல்வியும் அப்படித்தானே இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள கல்விக்கூடமும் அத்தகைய குணத்தைத்தானே கொண்டிருக்க வேண்டும்?

banyan-treeஅது மட்டுமல்லாது, கல்விக் கூடம் அமைந்துள்ள இடத்தையும் கவனியுங்கள். ஆதி காலத்தில் வடமொழியில் “வேத ஸ்ரேணி” என்றும், தூயதமிழில் “வேள்விச் சேரி” என்றும் சொல்வார்கள் என முன்பு ராஜ்பவனின் ஒரு பகுதியாக இருந்த இந்த இடத்தை அங்கு உள்ள ஆவணங்களும் குறிப்பிடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது இப்போதைக்கு மருவி “வேளச்சேரி” என்று ஆகியுள்ளது. ஆக அக்னி வளர்த்து அன்றைய காலத்துக் கல்வியான வேதங்கள் எல்லாம் முறைப்படி ஓதப்பட்ட கானகத்தில்தான் இக்காலக் கல்விக்கூடமும் குடி கொண்டிருப்பது மிகப் பொருத்தம் அல்லவா? முன்வினை என்பது மனிதர்கள், மற்றும் சகல சீவ ராசிகளுக்கு மட்டுமல்லாது, ஒரு இயக்கத்துக்கும் இருக்கலாம் அல்லவா?” என்றேன்.

நான் IIT என்பதற்கு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு சற்றே மிகையான விளக்கம் கொடுத்திருந்தாலும், அன்று சொன்ன மற்ற விவரங்களைப் பாருங்கள். “வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்” என்றபடிதானே இருக்கிறது. என்றோ நடந்திருக்கக் கூடிய போதிக்கும், மற்றும் கற்கும் முயற்சிகள் காலத்திற்கு ஏற்ப நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இது போன்றதைத் தான் மகாகவி “ஆங்கோர் ஏழைக்குக் கல்வி கற்பித்தல்” என்று அதனைச் சிறப்பித்தும், சான்றோர்கள் “நெல்லைக் கொடுப்பதைவிட விதையைக் கொடுப்பது மேல்” என்றும் சொன்னார்களோ?

காலத்திற்கு ஏற்ற கல்வி, மற்றும் அறிவு என்று சொன்னேன். மூதாட்டி ஔவை சொன்னதுபோல் “கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று அறிவு வெவ்வேறு அளவினதாய் இருக்கலாம். அது தவிர கல்வியும், அறிவும் இடம், பொருள், காலம் இவைகளுக்கு ஏற்பவும் இருக்கலாம், அவைகள் காலத்தைக் கடந்தும் நிற்கலாம். ஒவ்வொருவர் திறனுக்கும், முயற்சிக்கும் ஏற்ப ஒருவரது அறிவின் முதிர்ச்சி எழுத்துக் கூட்டிப் படிப்பதாகவோ, கவிதை, கட்டுரை புனைவதாகவோ இருக்கலாம். இது தவிர ஒவ்வொருவரது தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போலும் அறிவு அமையலாம்.

ஆனாலும் நம் முன்னோர்களில் முற்றும் உணர்ந்த முனிவர்கள் கண்டறிந்து கூறிய, காலத்தால் அழியாத உண்மைகளை எவனொருவன் கேட்டு, கண்டு, உணர்ந்து அதன் வழிப்படி வாழ்கிறானோ அவனே அறிவாளிகளில் முதன்மையானவன். அத்தகையவனுடைய அறிவுதான் என்ன? அதை அடையும் வழி எப்படி? உணர்வது எப்படி? என்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி “உள்ளது நாற்பது” எனும் தொகுப்பில் செய்யுள் வடிவில் இயற்றியுள்ளதில் சிலவற்றை, முதன்முறையாகப் படிப்போர்க்குப் புரிவதற்காக சொற்றொடரை சற்றே பிரித்து எழுதி, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பில் நானும் எனது பணியைத் தொடர்கிறேன்.

“ஒளி உனக்கெது? பகலில் இனன் எனக்கு, இருள் விளக்கு
ஒளி உணர் ஒளி எது? கண், அது உணர் ஒளி எது?
ஒளி மதி, மதி உணர் ஒளி எது? அது அகம்
ஒளிதனில் ஒளியும் நீ, என குரு, அகம் அதே”

sri-ramanarபொருள்: உனக்குப் பிரகாசம் தரும் ஒளி எது? எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது? மதியின் ஒளியாகும். மதியை உணர்கின்ற ஒளி எது? அது “நான்”. எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது “நீ” என்று குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன்.

குரு சீடனிடம் கேள்விகள் பல கேட்டு அவனிடமிருந்து வரும் மறுமொழிகளிலிருந்து சரியான முடிவை அவனே உணர்வதாக அமைந்துள்ள செய்யுள் இது. சாதாரணமாக கல்வி கற்கும்போது குரு சில விவரங்களை விளக்கிச் சொல்ல, சீடனும் தனது அளவில் புரிந்துகொண்டு குருவைக் கேள்விகள் கேட்டு மேலும் அறிந்து கொள்வதாகத்தான் இருக்கும். இங்கோ குருவே தொடக்கத்திலிருந்து கேள்வி கேட்பதாக அமைக்கப் பட்டுள்ளதால், கற்கும் படலம் சிறிதே முதிர்ந்த நிலையில் உள்ளது என்றே நாம் கொள்ளலாம். அதனால் இந்த ஞான மார்க்கமானது நேரான வழி என்று சொல்லப்பட்டாலும், சீடன் சிறிது கவனமாக இருப்பது நல்லது. இல்லையேல் புரிதல் என்பது வெறும் ஏட்டளவில் நின்று, புத்தி பூர்வமாக மட்டும் விவரங்களைக் கிரகித்துக்கொண்டு, எதனையும் தன்னுள் உணராது, அனுபவத்தில் உண்மை நிலையை உணர இயலாது, தர்க்கம் குதர்க்கமாகி, அடி-முடி தேடிய புராணத்தில் வருவது போல பிரமனின் கதியை சீடன் அடைய நேரிடலாம். இதை மனதினில் கொண்டு, இங்கு சொல்லப்பட்டுள்ளதை நாம் மேற்கொண்டு கவனிப்போம்.

தினம் விழித்தவுடன், சாதாரணமாக நாம் செய்யும் காரியம் என்ன? கண் விழிப்பதால் நாம் எதையோ பார்க்கிறோம். சரி, அது எதுவானாலும் அதைப் பார்க்க ஒளி வேண்டும் அல்லவா? அந்த ஒளியானது காலையில் என்றால் சூரியனிடமிருந்தும், இரவு என்றால் ஏதோ ஒரு விளக்கிலிருந்தும் கிடைக்கிறது. ஒளி மட்டும் இருந்தால் போதுமா? ஒளி விழும் அந்தப் பொருளை எப்படிப் பார்க்கிறது? நமது கண்ணினால்தான். கண் மட்டும் இருந்து அது குருடாயிருந்தால்? ஆக அந்தக் கண்ணுக்குக் காணக் கூடிய சக்தியும், மூளை, நரம்பு உள்பட எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்யவேண்டும். இதுவரை நாம் பார்த்தது ஒரு காட்சிக்கு தேவையான உபகரணங்களைப் பற்றியது. எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் பல சமயம் ஒரு பொருள் நம் பக்கத்தில் இருந்தாலும், நாம் அதைக் காண்பதில்லை. ஏன்? கவனிக்கவில்லை என்போம். அதாவது நம் மனம் அதில் ஈடுபடவில்லை என்கிறோம். இதைத்தான் உள்ளுணர்வாகிய மதி என்கிறோம். கவனித்தல் என்பதும் நாம் அதை மதிக்கிறோம் என்பதும் ஒன்றேதான். ஆனாலும் ஒன்றை மதித்துப் பார்க்கும் முன்னமே, நாம் விழித்ததும் “நான்” என்ற உணர்வு அவரவர்களுக்கு வந்து விடுகிறதல்லவா? அந்த “நான்” என்ற உணர்வுதான் உண்மையான ஒளி என்று குரு சொல்ல, கல்வி கற்றுச் சிறந்த சீடனும் “நான் அதுவே” என்கிறான்.

(தொடரும்)

சென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

muththarammanதெருக்கோவில்கள் இந்து நகரிய பண்பாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் ஆன்மிக வாழ்வாதாரமாக அவை திகழ்கின்றன. நகர்களில் குடிசை வாழ் மக்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து புலம் பெயர்பவர்கள். இவர்கள் தங்கள் கிராம குல தெய்வங்களையும், வழிபடு தெய்வங்களையும் (குறிப்பாக அம்மன்) சென்னைக்கு தங்களுடனேயே உணர்வுபூர்வமாகக் கூட்டி வந்து பிரதிஷ்டை செய்கின்றனர். சென்னை நகரம் முழுவதும் இத்தகைய அம்மன் கோயில்கள் நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இடம்பெற்று அருள் பாலிக்கின்றன. சென்னையில் பெருகி வரும் சமூக பொருளாதார அழுத்தங்கள் மற்றும் அதன் விளைவாக இம்மக்கள் அனுபவிக்கும் மன அழுத்தங்களுக்கு மருந்தாக, தாய் தெய்வம் உறையும் தெருவோரக் கோயில்களே ஆன்மிக சரணாலயமாக விளங்குகின்றன.

சில இடங்களில் இத்தெய்வ கோவில்கள் நடைபாதைகளில் கூட இருக்கலாம். ஆனால் நடைபாதைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் எத்தனையோ இடைஞ்சல்களுடன் ஒப்பிடுகையில் – அரசியல்வியாதியின் ஃபிளக்ஸ் பேனர் முதல் நடிகர் மன்ற ஆக்கிரமிப்பு வரை – இந்த கோவில்கள் அப்படி ஒன்றும் மிகப் பெரிய இடைஞ்சல்கள் இல்லை. இவை இந்த மண்ணின் மிக நெடிய பண்பாட்டுச் சின்னங்கள். இந்தியா போல நீண்ட தாய் தெய்வ வழிபாட்டுப் பாரம்பரியம் வேறெந்த நாட்டுக்கும் இல்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், இந்தக் கோவில்களை நமது அரசுகளும் பொதுப் பணித்துறையும் எத்தனை கவனத்துடன் அணுக வேண்டும் என்பது புரியும்.

சென்னை கோபலபுரம் பகுதியில் பழமையான அம்மன் கோயிலை இடித்துத் தகர்க்கும் நகராட்சி (24 மார்ச் 2010)

கோயிலை இடித்தது மட்டுமல்லாமல் தெய்வச் சிலைகளையும் அப்புறப் படுத்தி விட்டனர்: குமுறும் பொதுமக்கள்

பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக, போக்குவரத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமாக உருவாகி விட்ட ஒருசில நடைபாதைக் கோவில்களை வேறு வழியே இல்லை என்னும் கட்டத்தில் அவற்றிற்கு உரிய மரியாதை அளித்து இடமாற்றம் செய்ய வேண்டும் தான். ஆனால் அதைக் கண்மூடித் தனமாக செய்தல் கூடாது.அந்தக் கோவில்கள் சமீப காலத்தவையா அல்லது 100-200 வருடங்களாக இருந்து வருபவையா, அவற்றை ஆன்மிக அமைதிக்காக நாடும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை எவ்வளவு ஆகிய விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். நகராட்சியினரோ, பொதுப்பணித் துறையினரோ அப்படிச் செய்யும் போது அந்தக் கோவில்களை மாற்று இடங்களில் அமைத்து, பழைய கோயில்களில் வழிபடப் பட்டு வந்த அதே தெய்வச் சிலைகளை நிறுவி ஏழை மக்களின் இறைவழிபாடு தொடர வழி செய்ய வேண்டும். அதற்கு ஆகும் செலவில் கணிசமான அளவையும் அந்தத் துறையினரே ஏற்க வேண்டும். அது தான் ஜனநாயகமான வழிமுறை.

கட்டப் பட்டு 25 வருடங்களுக்கு மேல் ஆன வழிபாட்டுத் தலங்கள், அவை நடைபாதையிலேயே இருந்தாலும் கூட, கண்மூடித்தனமாக இடித்தல் சட்டப் படி குற்றம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் சென்னையில் இந்த அரசுத் துறையினர் செயல்படுவதும் விதம் இப்படி இல்லை. அடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் – இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அவர்கள் செயல்பாடுகள் இருக்கின்றன. இது சரியான வழிமுறை அன்று.

மக்களின் உணர்வுகளை நசுக்கி மிதித்து கோயிலை இடித்த போலீஸ் அராஜகம்

இவ்வாறு கோவில்கள் இடிக்கப்படும் போது அன்னிய மத ஆக்கிரமிப்புக்கள் மட்டும் விதிவிலக்காக விடப்படுகின்றன. இது அரசு கடைப்பிடிக்கும் அப்பட்டமான போலி மதச்சார்பின்மை மற்றும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதத்தவர்களுக்கு காட்டும் அதீத சலுகை தவிர வேறொன்றுமில்லை.

இதனைக் கண்டித்து  சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ உள்ளது. ஆலய பாதுகாப்பு இயக்கம் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துகிறது.

இடம்:  பனகல் கட்டிடம், சைதாப்பேட்டை (கலைஞர் கருணாநிதி நினைவு வளைவு அருகில்)
நாள்:   14 ஜூலை 2010,  புதன்கிழமை.
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணி வரை.

அனைவரும் வாரீர் ! ஆதரவு தாரீர்!

கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்

அரைமணி நேரம் முன்பு இந்தச் செய்தி நமக்குக் கிடைத்தது. அதனை அப்படியே வெளியிடுகின்றோம்.

சென்னை வாழ் ஹிந்துக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

அன்புள்ள நண்பர்களுக்கு,

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறை தோமா-கிறிஸ்தவ மோசடிப்பிரச்சாரகரான தெய்வநாயகத்தையும் சீமான் என்கிற திரைப்பட இயக்குனரையும்  மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும்  இந்து விரோத பேச்சுகள் ஆற்றவும் அனுமதித்ததாக அறிகிறோம்.  இது பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி  இங்கே.

indian_express_mylapore_news_03_05_2010_004_0081

அரசாங்கம் கோவிலுக்குள்  இந்து விரோத ஆர்ப்பாட்டங்களுக்கு இடம் கொடுப்பதென்பது நமது வரலாற்றில் கேட்டறியாத ஒரு விஷயமாகும். திமுக அரசாங்கம் இந்து விரோத செயல்பாட்டில் எல்லா நாகரீக வரையறையையும் கடந்து விட்டதற்கு இதுவே உச்சகட்ட உதாரணமாக இப்போது திகழ்கிறது. இதனை மிக கடுமையாக கண்டனம் செய்வதும் இந்த விஷயத்தில் நமது எதிர்ப்பை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் காட்டுவதும் நமது கடமையாகும்.

எனவே  இந்துக் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சமூக ஒற்றுமையை குலைத்த குற்றவாளிகளான சைமன் என்கிற சீமானையும் மு.தெய்வநாயகம் என்கிற பேர்வழியையும் கைது செய்ய வேண்டும்; மற்றும் இந்த அநாகரீக செயலுக்கு ஆதரவு வழங்கிய மைலாப்பூர் அறநிலையத்துறை அதிகாரியையும் சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  வைக்க இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இன்றே அணிதிரள்கிறார்கள்.

இடம்: மயிலாப்பூர் காவல் நிலைய வளாகம்,  கச்சேரி ரோடு, மயிலாப்பூர்.
நேரம்:  மே-3 (திங்கள்) மாலை நான்கு மணியளவில்.

எனவே, தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இந்து தர்மத்தை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டுமாறு  ஹிந்து தர்மப் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை. ரமணன் என்பவரிடம் புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் காசு கொடுத்து ‘இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை பொழியும்’ என்று சொல்லச் சொன்னதே மழை திடீரென்று நின்றதற்குக் காரணம் என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்குப் புத்தகக் கண்காட்சி திறந்து பத்து நிமிடங்களுக்குள்ளாகவே போய் சேர்ந்தேன். ஆட்களே இல்லாமல் ஈயாடிக் கொண்டிருந்தது. ஹரன் பிரசன்னாவை அழைக்க வெகுநேரம் முயற்சி செய்தும் இணைப்பே கிடைக்கவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கையில் ‘ஹரன் பிரசன்னா எங்கிருக்கிறீர்கள்?’ என்று கத்தியிருந்தாலே அவருக்குக் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அத்தனை நிசப்தமாக, தூங்கி வழிந்து கொண்டிருந்தது கண்காட்சி. பொதுவாகவே அரங்குக்குள் செல்ஃபோன் இணைப்பு மோசமாக இருந்தது. எழுத்தாளர் சுப்ரமணியன் சுவாமிநாதன் புத்தக அரங்குக்குள் என்னைத் தேடி அனுப்பிய SMS இரவு 12 மணிக்குதான் கிடைத்தது.

கடைசியாக ஹரன்பிரசன்னா தொலைபேசியில் கிடைத்தார்:
“ஹலோ.. சேது சொல்லுங்க.. வந்துட்டீங்களா?…
ஏஏஏஏய்… அந்தப் பெட்டியை அங்க வைக்காதப்பா… ஆங்… ஆங்.. அங்கதான்… எத்தனை புத்தம் இருக்கு?”

“சாரி சேது சொல்லுங்க.. நான் கிழக்கு ஸ்டால்ல இருக்கேன்… ஒரு நிமிஷம் இருங்க… ஏம்பா.. நான்தான் அதை அங்க வைக்க வேண்டாம்னு சொன்னேன்ல.. மத்தப் புத்தகம்லாம் எங்க..? இன்னும் வரலியா?”

இப்படி ஒரு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்குமிடையே ‘உரையாடல்’ தொடர்ந்தது. சரி, நேரில் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தேன்.

முதலில் கண்ணில் பட்டது ‘எனி இந்தியன்’ ஸ்டால்தான். உள்ளே நுழைந்து நூல் தடுப்புகள் மேல் சாய்ந்திருந்த புத்தகங்களை, ஜோசியக்கிளி சிரமப்பட்டு ஒரே ஒரு சீட்டை எடுப்பது போல் கலைக்காமல் புரட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு புத்தகங்களையும் வாங்கினேன். வெளியே வந்து தேவராஜனிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேசிவிட்டுத் திரும்பியவுடன், நூலிழையில் ஒட்டிக்கொண்டிருந்த புத்தகங்கள் தடதடவென்று சரிந்தன.

ஒவ்வொரு வரிசையாகப் புகுந்து புகுந்து வெளிவந்தேன். ‘தமிழினி’ வசந்தகுமார் தன்னந்தனியாக ‘தமிழினி’ ஸ்டாலில் அமர்ந்திருந்தார். என்னைப் பற்றி ஏற்கனவே ‘தினமணி கதிர்’ சிவக்குமார் அவரிடம் சொல்லி வைத்திருந்ததால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொண்டார். அவருடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நிறைய எழுத்தாளர்களைப் பற்றியும், உலகத் திரைப்படங்களைப் பற்றியும் சொன்னார். நான் வாங்கவிருந்த பெரும்பாலான புத்தகங்களிலிருந்து என்னைக் காப்பாற்றினார்.

அவருக்குப் பயணம் செய்வதில் பெரும் ஆர்வம் இருக்கிறது. தமிழினி வெளியீடாக வரும் பெரும்பாலான புத்தகங்களின் அட்டைகளின் புகைப்படங்கள் அவரே எடுத்தது. வசந்தகுமாருக்கு ஒரு தேர்ந்த விஷுவல் ரசனை இருப்பது புரிந்தது. ‘ஆனால் இப்படிப்பட்ட நேர்த்தியான வடிவமைப்பு பெரும்பாலானோருக்குப் புரிவதில்லை. கிட்டத்தட்ட இதுவரை யாருமே அந்த அட்டைப்படங்களைக் கவனித்ததில்லை’ என்று வருத்தப்பட்டுக்கொண்டார்.

Chennai-Book-fair-1அவரிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் கண்காட்சியில் அலைந்தேன். ஒரு கட்டத்தில் கிழக்கு பதிப்பகமும் கண்ணில் பட்டது. ஹரன் பிரசன்னா, இறுக்கமான கிழக்கு டி-ஷர்ட்டில் தன் Single Pack-ஐக் காண்பித்துக்கொண்டிருப்பார் என்று ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது. வழக்கமான, பேண்ட் ஷர்ட்டிலேயே அருகில் யாருமே இல்லாதபோதும், யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்.

அப்புறம்தான் பத்ரி அருகில் இருந்ததே ஹரன் பிரசன்னா அப்படிப் பரபரப்பாக எல்லோரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்ததன் காரணம் என்று புரிந்தது. எழுத்தாளர் பாரா, பத்ரி இருவரிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார். என் நண்பர் sishri.org-யின் சுவாமிநாதனும் கிழக்கு ஸ்டாலில் என்னுடன் இணைந்து கொண்டார். ‘பாரா’ பிள்ளையாருக்கு மட்டும்தான் ‘மாவா’ கொடுப்பாரா, எனக்கெல்லாம் தரமாட்டாரா என்று கேட்க நினைத்து கேள்வியை விழுங்கினேன்.

பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது குறும்பட இயக்குநர் அருண் வைத்தியநாதனும் சேர்ந்து கொண்டார். அவர் தற்போது இயக்கி முடித்த ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற முழுநீளத் திரைப்படம் பற்றியும், பொதுவான தமிழ்த் திரைப்படச்சூழல் பற்றியும் நிறைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். (“ரெட் கேமரால படம் எடுத்தேன்னு சொன்னா, நெறைய பேர் கேமரா சிவப்பா இருக்குமான்னு கேக்கறாங்க!”)

“திரைப்படத்துக்கு இசை யார்?” என்றேன்.
“கார்த்திக்ராஜா.”
“ஓ! கிரேட்!”

பெரும்பாலானோர் ‘கார்த்திக்ராஜா’ என்றதும் ‘ஏன் இந்தக் கொலைவெறி?’ என்று கேட்டிருப்பார்கள் போல. நான் Great என்றதும் நிறைய சந்தோஷப்பட்டார். பத்ரியிடம் “இவருக்கு கார்த்திக்ராஜாவைப் பற்றித் தெரிந்திருக்கிறது. படம் வந்தபின் எல்லோரும் கார்த்திக்ராஜா Great என்று புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

பத்ரியும் ‘வித்தியாசமான, பல்துறைப்புத்தகங்களைப் படிக்க ஆட்கள் இருக்கிறார்கள், எழதுவதற்குதான் ஆட்கள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். இருளர்கள், நான் சரவணன், அடியாள் புத்தகங்களை உதாரணமாகச் சொன்னார்.

Chennai-Bookafair-2பத்ரி, அருண் வைத்யநாதன் இருவரிடமும் விடைபெற்று எழுத்தாளர் சுகாவைச் சந்திக்கப் போனேன். தன் வேலையில் பிஸியாக இருக்கும் அவர் என்னைப் பார்ப்பதற்காகவே கண்காட்சிக்கு வந்திருந்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. கட்டுரைகளில் இருக்கும் நகைச்சுவை அவருக்கு நேர்ப்பேச்சிலும் இருக்கிறது. அடுத்த இரண்டு மணி நேரத்தை அவருடன் செலவழித்தேன். மீண்டும் தலை முதல் வால் வரை அவரோடு சேர்ந்து புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். அவருடன் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் ‘பாப்’ மனோகரும் வந்திருந்தார்.

சுகாவுடன் நேரம் செலவழித்தது ஒரு இனிய அனுபவம். இசையைக் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். அவருடனும், மனோகருடனும் சேர்ந்து கேண்டீனுக்குச் சென்றோம். மொத்தமாக ஐந்து கைப்பைகளை வைத்திருந்த என்னால் இன்னொரு கையில் வடையையும் பிடித்துக் கொள்ள முடிந்தது ஒரு வாழ்வியல் அனுபவம். கேண்டீனில் ஒரு மூலையில் அழுக்காக இருந்த ஒரு அலமாரியில் அத்தனை பொருட்களையும் வைத்துவிட்டு வடையைச் சாப்பிட்டு, காபி குடித்து விடை பெற்றோம்.

‘வார்த்தை’யில் வெளிவந்திருந்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு எனக்கு ஃபோன் செய்தது முதல் எனக்கு சுகா நண்பராக இருக்கிறார். என்னுடனான சந்திப்புக்குப் பின், முன்பின் தெரியாத யாருக்கும் ஃபோன் செய்து பாராட்டுவதைக் குறித்து மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறேன்.

சனிக்கிழமை மதியம் மீண்டும் என் நண்பர்களுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். கூட்டம் இருந்தது என்று சொன்னாலும், இரண்டு வருடங்களுக்கு முன் நான் பார்த்த கூட்டமில்லை. ஷாமியானாவுக்குக் கீழ் உட்கார்ந்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அருகே அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் ‘வார்த்தை’ முதல் இதழில் வந்திருந்த என் ‘இசையில் நனையும் காடு’ கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தார். நண்பர்களிடம் கூப்பிட்டுக் காட்டினேன். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்திருந்தால் ‘அவனா நீயி?’ என்று சட்டையைப் பிடித்திருக்கலாம். இருந்தாலும் அவர் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறார் என்ற சந்தோஷமான கற்பனையுடன் உள்ளே நுழைந்தேன்.

முதல்நாள் நிறைய இலக்கிய அரங்குகளுக்குள் நுழைந்துவிட்டதால், இலக்கியமல்லாத மற்ற அரங்குகளுக்குள்ளும் நுழைய முடிந்தது. நண்பர்கள் யாருமே பணமாக எடுத்துக்கொண்டு வர மறந்துவிட்டிருந்தோம். இருந்தாலும் க்ரெடிட் கார்ட் நிறைய ஸ்டால்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உயிர்மை வாசலில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்த்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவரைச் சுற்றி நிறையக் கூட்டம் இருந்தது. மனிதர் சிரித்துக்கொண்டேயிருந்தார். ஜெயமோகன் எஸ்.ரா.வைப் பற்றி எழுதிய அங்கதக்கட்டுரை நினைவுக்கு வந்தது. ஜெயமோகன் எழுதியதுபோல் ‘சாருநிவேதிதா’ என்று சொன்னால் இன்னும் அதிகமாகச் சிரிக்கிறாரா என்று பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

எஸ்.ரா.விடம் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவருடைய அபார ஞாபக சக்தி. நான் எங்கோ எப்போதோ எழுதிய திருந்துதேவன்குடி பற்றிய நான்குவரிக் குறிப்பைக் கூட நினைவில் வைத்திருந்து குறிப்பிட்டார். எஸ்.ரா. ஒரு நல்ல பயணி என்பதை முன்பே அறிந்திருந்தாலும், நேர்ப்பேச்சில் அதை உறுதி செய்து கொண்டேன். சிறு சிறு கிராமங்களும், கோயில்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தமிழில் பயண இலக்கியத்தின் போதாமையை இவர் போன்ற இயல்பாகவே பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவரிடமிருந்து விடை பெற்றேன்.

மொத்தமாக இரண்டு நாட்களிலும் சேர்த்து 25 புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் இவற்றையெல்லாம் படித்து முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!

நான் வாங்கிய புத்தகங்களில் முக்கியமான புத்தகங்கள் சில:

1) விசும்பு – அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன் – எனி இந்தியன் வெளியீடு
ஏற்கனவே பலமுறை படித்த சிறுகதைகள் இவை என்றாலும் தமிழின் முக்கியமான சிறுகதைகள் என்று நான் நினைப்பதால், ஒரு கலெக்ஷனுக்காக வாங்கிக்கொண்டேன். இன்று காலையே மீண்டுமொருமுறை படித்தும் விட்டேன்.

2) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் – தமிழினி வெளியீடு
நான் இன்னும் படிக்காத தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.

3) கன்னி – ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி வெளியீடு
தமிழினி வசந்தகுமாரின் பலத்த பரிந்துரையைப் பெற்ற நாவல்.

4) குவாண்டம் கணினி – வெங்கட்ரமணன்- தமிழினி வெளியீடு
டோக்யோ வெங்கட் என்றறியப்படும் வெங்கட்ரமணின் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.

5) கடவுளும், 40 ஹெர்ட்ஸும் – அரவிந்தன் நீலகண்டன்- தமிழினி வெளியீடு
இந்த அறிவியல் கட்டுரைகளை கணினியில் படித்தபோது புரியவில்லை. புத்தகத்தில் படித்தாலாவது புரிகிறதா என்று தெரிந்துகொள்வதற்காக வாங்கினேன்.

6) இன்னும் தொலையாத தனிமை – நா.மகுடேஸ்வரன்- தமிழினி வெளியீடு
கவிதைத் தொகுப்பு

7) அகி – முகுந்த் நாகராஜன் – கவிதைத் தொகுப்பு – ‘வரப்புயர’ வெளியீடு

8. அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு – யூமா.வாசுகி – கவிதைத் தொகுப்பு

9) கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா – மருதா பதிப்பகம்
மிகுந்த கவனத்தைப் பெற்றதொரு முக்கியமான குறுநாவல்.

10) அங்கே இப்ப என்ன நேரம்? – அ.முத்துலிங்கம் – கட்டுரைத் தொகுப்பு – தமிழினி
அ.முத்துலிங்கம் உரைநடையின் பெரிய விசிறி நான்.

11) வியத்தலுமே இலமே – அ.முத்துலிங்கம் – காலச்சுவடு
அ.மு. கண்ட முக்கியமான பல நேர்காணல்களின் தொகுப்பு.

12) காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் – கட்டுரைத் தொகுப்பு – உயிர்மை
எஸ்.ரா.வின் சில முக்கியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் இருக்கின்றன.

13) கு.அழகிரிசாமி கடிதங்கள் – உயிர்மை
கி.ரா.வுக்கு கு.அ. எழுதிய கடிதங்கள். சுகாவின் பரிந்துரையின் பேரில் வாங்கினேன்.

14) இலக்கியவட்டம் – இதழ்த்தொகுப்பு

15) விருட்சம் – இதழ்த்தொகுப்பு

16) இருளர்கள் – ஓர் அறிமுகம் – க.குணசேகரன் – கிழக்கு பதிப்பகம்
தமிழில் வந்திருக்கும் மிக முக்கியமான சமூகவியல் புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்கிறார்கள்.

17) மாணிக்க வீணை – சுவாமிநாத ஆத்ரேயா – பண்மொழி பதிப்பகம்
சுவாமிநாத ஆத்ரேயன் மணிக்கொடி காலத்து எழுத்தாளர். கு.ப.ரா, சிட்டி, நா.பிச்சமூர்த்தி, தி.ஜா போன்றவர்களின் நெருங்கிய நண்பர். அவருடைய சில முக்கியமான படைப்புகளின் தொகுப்பு இது.

18) சங்கீத யோகம் – கல்கி – வானதி பதிப்பகம்
எழுத்தாளார் கல்கி ‘கர்நாடகம்’ என்ற புனைப்பெயரில் எழுதிய பல இசைவிமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. இப்புத்தகத்தைப் பரிந்துரைத்த எஸ்.கே-வுக்கு என் நன்றி.

19) இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள் – சு.ரா. – அல்லயன்ஸ் வெளியீடு
சில முக்கியமான, அவ்வளவாக அறியப்படாத கர்நாடக இசைக்கலைஞர்களைப் பற்றிய கட்டுரைத்தொகுப்பு.

20) Galaxy of Carnatic Musicians – SVK – அல்லயன்ஸ் வெளியீடு
கர்நாடக இசைக்கலைஞர்களைப் பற்றிய ஆங்கிலக்கட்டுரைகளின் தொகுப்பு.

21) தினமணி இசைமலர்
தமிழின் மிகச்சிறந்த பொக்கிஷங்களுள் ஒன்று தினமணி ஒவ்வொரு வருடமும் வெளியிடும் இசைமலர். இந்த வருடமும் ஒரு சிறந்த படைப்பாக வந்திருக்கிறது. Indian Express Stall-இல் கிடைக்கிறது.