ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரி ‘ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம்’ மற்றும் பொதுமக்கள் சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக, கண்டன ஆர்ப்பாட்டம், மனுக் கொடுத்தல், அடையாள உண்ணாவிரதம், ஒருநாள் கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம், பேரணி, பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை, சாகும்வரை உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
In rare cases, people may be allergic to ivermectin or have an allergic reaction to the drug, such as anaphylaxis, which. In a cocaine dependence study in rats, a dose of 0.3 mg/kg of niacinamide injected tongue-in-cheek intravenously resulted in a significant increase in the ratio of extracellular dopamine metabolites, and a decrease in dopamine metabolites in plasma \[[@b23]\]. Statistical analyses of efficacy and safety variables were carried out using the cochrane collaboration\'s review manager version 5.2 and sas software, version 9.2 (sas institute, cary, nc).
I am now on prednisolone and it works for a day but then the pain starts and the same thing repeats itself. You will also see how they are not the same and that these are different people with different types of happiness online clomid prescription that they wish to lead, and thus, that the pursuit of happiness is something that every individual should do. It has all the properties of all the pills and capsules and this is the reason why it is the best drug for you.
In a study published in clinical therapeutics and drug safety, doctors found that the most common side effect of dapoxetine is nausea, which is also the most common side effect of fluoxetine. The patient has to click on a particular treatment and this brings up a detailed explanation and clotrimazole cream price in rupees solo the details of treatment for the particular ailment. Doxt is a cheap remedy that is highly effective against ed, and its ingredients are all natural and do not contraindicate any prescription drugs.

காண்க:
ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!
ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்
இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வரும் ஈரோடு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது, அண்மையில் வெளியான நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியரின் விசாரணை அறிக்கை. இதன்மூலமாக, இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.
நடந்தது என்ன?
இதுநாள் வரை சி.எஸ்.ஐ. தரப்பில் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால், ”ஈரோடு நகர பழைய புல எண்: 586, 587-ல் உள்ள கட்டிடம் மற்றும் இடம், லண்டன் மிஷனரி சொசைட்டி சார்பில் 12-08-1905-ல் நடைபெற்ற ஏலத்தில் முறையாக எடுக்கப்பட்டது; அதன் பின்னர் 19-01-1906-ல் கோவை மாவட்ட ஆட்சியரால் எச்.எ.பாப்ளி என்பவருக்கு புல எண்: 586, 587-ல் உள்ள 12.66 ஏக்கருக்கு உரிமைப் பட்டயம் (Sale Title) அளிக்கப்பட்டது; 12-12-1907-ல் எச்.எ.பாப்ளி என்பவர் லண்டன் மிஷ¬னரி சொசைட்டி உரிமைகளை லண்டன் மிஷ¬னரி சொசைட்டி கார்ப்பரே¬னுக்கு மாற்றம் செய்துள்ளார்; 14-04-1965-ல் லண்டன் மிஷ¬னரி சொசைட்டி கார்ப்பரே¬ன் பதிவு செய்யப்பட பத்திரம் மூலமாக, மேற்படி சொத்துக்களை தென்னிந்திய திருச்சபைக்கு மாற்றம் செய்துள்ளனர்; அது முதல் மேற்படி சொத்துக்கள் தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்பது தான்.
இந்த வாதத்தின் அடிப்படையிலேயே, ஈரோட்டின் மையப் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, ‘சிறுபான்மையினர்’ என்ற போர்வையில் அழிச்சாட்டியம் செய்து வந்தது சி.எஸ்.ஐ.
ஈரோடு வட்டாட்சியரிடம் பட்டா பெற இயலவில்லை
இந்நிலையில், சி.எஸ்.ஐ. நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்திற்கு அவர்களிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு ஈரோடு வட்டாட்சியரிடமிருந்து (தாசில்தார் ), பட்டா பெற இயலவில்லை. எனவே, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, சென்னையில் உள்ள உதவி நிலவரித் திட்ட அலுவலரை 2010ம் ஆண்டில் அணுகினர்.
முறையற்ற ஆணை
வழக்கிடைப் புலங்கள் இன்றைய பராமரிப்பில் உள்ள நகரளவை ஆவணங்களின்படி அரசு புறம்போக்கு என பதிவாகி உள்ள நிலையில், ‘Custodian of Land’ என்ற முறையில், ஈரோடு வருவாய் வட்டாட்சியரை விசாரணைக்கு உட்படுத்தாமலேயே, சென்னை-5 நிலவரித்திட்ட அலுவலரால் 30-6-2010-ம் நாளன்று முறையற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேற்கண்ட 30-6-2010-ம் நாளிட்ட உத்தரவுக்கு எதிராக, ஈரோடு மக்கள் நலம் நாடுவோர் சங்கம், ஈரோடு அருள்மிகு மாரியம்மன் பக்தர்கள் சங்கம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையருக்கு மேல் முறையீடு செய்தனர்.
நிலவரித் திட்ட ஆணையர் மறு விசாரணைக்கு உத்தரவு
மேல் முறையீட்டு மனுக்களை ஏற்றுக் கொண்ட நிலவரித்திட்ட ஆணையர் (Commission of Land Revenue & Settlement), “ஈரோடு வட்டாட்சியரை விசாரணைக்கு உட்படுத்தாமல், நிலவரித் திட்ட உதவி அலுவலர் பிறப்பித்த ஆணை சரியானதல்ல” என்று கூறி, அவ்வாணையை ரத்து செய்து மறு விசாரணைக்கு (Denovo Enquiry) உத்தரவிட்டார். (கடிதம் தேதி : 30-03-2011).
அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: “வழக்கிடைப் புலங்கள் தொடர்பாக ஈரோடு வட்டாட்சியரை விசாரணை செய்து, ஆவணங்களை விரிவாக பரிசீலனை செய்து, தகுதி மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு முடிவு செய்ய ஏதுவாக மறு விசாரணைக்கு (Denovo Enquiry) ஈரோடு நகர வருவாய் பின் தொடர்பணி நிலவரித் திட்ட வட்டாட்சியருக்கு மீட்டனுப்பி உத்தரவிடுகிறேன்”.
நிலவரித் திட்ட வட்டாட்சியர் மறு விசாரணை:
இதனடிப்படையில் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, vநிலவரித் திட்ட வட்டாட்சியரால் (Settlement Tahsildhar) தாவா குறித்து (Denovo Enquiry) மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த எழுத்து மூலமான வாக்குமூலம், ஆஜர்படுத்திய ஆவணங்களின் நகல்கள் யாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நிலவரித் திட்ட தனி வட்டாட்சியருக்கு எழுத்து மூலமாக, சி.எஸ்.ஐ. நிறுவனத்தினர் அளித்த வாக்குமூலத்தில் “விற்பனைச் சான்றும் மற்ற உரிமைப் பத்திரங்களும் (Title Deeds) எங்களால் உண்மைக்குப் புறம்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு கவுரவத்தை குறைப்பதற்கு மேல் ஒன்றுமில்லை. சி.எஸ்.ஐ. அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டுபவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும், ஒருபோதும் கற்பனையான உண்மைக்குப் புறம்பான ஆவணங்களைத் தயார் செய்திட வளைந்து கொடுத்ததில்லை. சி.எஸ்.ஐ. சாதி, மத, மொழி, கொள்கை வேறுபாடின்றி எல்லா வகையான மக்களுக்கும் சேவை செய்து கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை. மத சிறுபான்மையோராகிய எங்களின் உரிமைகளையும் நலன்களையும் காப்பாற்ற வேண்டிய முதற்கடமை அதிகாரிகளுக்கு உள்ளது என்பதைச் சமர்ப்பித்துக் கொள்கிறோம்” என்று கூறினர்.
நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அளித்த விசாரணை அறிக்கை:
விசாரணையின் இறுதியில் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையின் சுருக்கம் (ந.க.எண்: 0041/2012 ; நாள் : 10-07-2012 ) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வழக்கிற்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள்: விசாரணையில் கண்டுபிடிப்பு
ஈரோடு நகரில் சி.எஸ்.ஐ. வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்திற்கு இந்திய முத்திரைச் சட்டம் 1902-ன்படி பதிவு செய்ததற்கான பத்திரத்தை எச்.ஏ.பாப்ளியோ அல்லது அவருக்குப் பின்னிட்டவரான அந்தோணி வாட்சன் பிரப் துரையோ அல்லது தற்பொழுது சொத்தில் உரிமை கொண்டாடும் சி.எஸ்.ஐ. நிறுவனமோ ஆஜர்படுத்தவில்லை. எனவே, ஏலமிட்டதாகக் கூறப்படும், ஏல ஆவணங்கள் யாவும் விதிமுறைகளுக்குப் புறம்பானதாகவும், சட்டத்திற்குப் புறம்பானதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கிற்காக போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என தெளிவாகிறது.
எந்த ஆவணங்களிலும் எச்.ஏ.பாப்ளியின் கையெழுத்து இல்லை.
எச்.ஏ.பாப்ளி 12-08-1905-ல் ஈரோடு டிவிசன் டிப்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் செட்யூலில் கண்டுள்ள சொத்துக்களை முழுத் தொகை அதாவது ரூ.12910/- கொடுத்து விலைக்குப் பெற்றதாக Sale Certificate ரூ.100/-க்கான முத்திரைத் தாளில் வழங்கப்பட்டுள்ளது. கையில் எழுதப்பட்டுள்ள இந்த சான்றில் செட்யூல் என்ற இடத்திற்கு நேராக கையயாப்பம் இடப்பட்டுள்ளது. அதன் கீழ் Collector என்று எழுதப்பட்டுள்ளது.
கையொப்பம் இடப்பட்ட தேதி, கலெக்டரின் முத்திரை, செட்யூலில் ஏலமிடப்பட்ட நில விவரம் ஆகியன எதுவுமில்லை. ஏல ஆவணங்கள் எனில் ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம், ஏலம் கூறிய விவரம், அவர்களின் கையயாப்பம், அதிக ஏலத் தொகை, ஏலத் தொகை எண்ணால் எழுத்தால் குறிக்கப்படும், ஏலச் சொத்து விபரம் குறிக்கப்பட்டும் இருக்க வேண்டும்.
ஏலம் நடைபெற்றதற்கான ஆவணங்களோ, ஏல ஆவணத்தில் எச்.ஏ.பாப்ளி கையயாப்பமிட்ட ஆவணங்களோ எதுவுமில்லை. வழங்கப்பட்ட ஏலச் சான்றுக்கு கோப்பு எண், தேதி விவரங்கள், வழங்குவோரின் பதவி முத்திரை எதுவுமில்லை.
உயிரற்ற உரிமைப் பத்திரம்
எச்.ஏ.பாப்ளி பெயரில் உள்ள உரிமைப் பட்டயம் (Title Deed) அதாவது நிலப்பட்டா மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டது. உரிமைப் பட்டயம் (Title Deed) இந்த வழக்கின் (Life) உயிர் போன்றது. மற்ற ஆவணங்கள் உடல். மற்ற ஆவணங்களுக்கு உயிரூட்டும் வல்லமை உரிமைப் பட்டயத்திற்குத்தான் உண்டு. ஆனால், இந்த வழக்கில் உரிமைப் பட்டயம் உயிரற்றதாக உள்ளது. எனவே, ஏல ஆவணங்கள் அனைத்தும் செயல்நிலை அற்றதாகவும், மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளன.
ஏலம் எடுத்த சொத்துக்களின் உரிமையை லண்டன் மிஷன் மற்றும் சி.எஸ்.ஐ.க்கு மாற்ற, பாப்ளிக்கு அதிகாரம் இல்லை.
சி.எஸ்.ஐ. வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தின் உரிமை, ஏலத்தில் எடுத்தகாகக் கூறப்படும் எச்.ஏ.பாப்ளிக்கு இல்லாதபோது, அவர் லண்டன் மிசனுக்கு (தற்போதைய சி.எஸ்.ஐ.) சொத்துக்களின் உரிமையை 1907-ஆம் ஆண்டில் மாற்றிக் கொடுக்க அதிகாரமற்றவர், அருகதையற்றவர். ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்களின் நிலவரி மற்றும் ஏலத் தொகையையும் செலுத்தியதற்கான செல்லுச் சீட்டினையும், பாப்ளி பெற்றிருக்கவில்லை.அத்தகைய ரசீதுகள். ஆவணங்கள் சி.எஸ்.ஐ. சொத்து மேலாளர் விசாரணையில் கொடுக்கவில்லை.
பத்திரப் பதிவில் மோசடி : ஒரு கிரிமினல் குற்றம்
ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்களின் மதிப்பு 1905-ஆம் ஆண்டில் ரூ.12,910.00 செலுத்தியதற்கு ரசீது யாதொருவரும் ஆஜர்படுத்தவில்லை. எச்.ஏ.பாப்ளியும் இது குறித்து 1907-ஆம் வருடத்திய பதிவுப் பத்திரத்தில் சர்வே எண்கள். 586 & 587 தனக்கு இன்ன வகையான, இன்ன ரூபாய்க்கு பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. உரிமை பட்டயத்தில் (Title Deed) சர்வே எண்கள். 586 & 587 குறிப்பிடாத போதும் அத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் (Schedule) தவறான நில வாடகை குறிப்பிட்ட நிலையிலும், 1907-ஆம் வருடத்திய பத்திரப் பதிவு மோசடியானது. இரு ஒரு கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது. இவ்வாறு ஈரோடு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
நகர நிலவரித் திட்ட வட்டாட்சியர் பிறப்பித்துள்ள ஆணை
இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்தபின், நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் கீழ்க்கண்ட ஆணையை பிறப்பித்துள்ளார்:
- சி.எஸ்.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களில் Title Deed-ல் நிலப்பட்டாவில் சர்வே எண், எந்த சர்வே எண்ணுக்கு, எவ்வளவு விஸ்தீரணம், ஒவ்வொன்றுக்கும் கிரவுண்ட் ரெண்ட் எவ்வளவு எனக் குறிப்பிடாததாலும், ‘அ’ பதிவேட்டில் உள்ள பதிவுகளுக்கும், ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களில் உள்ள பதிவுகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாததாலும், 1902-ஆம் வருடத்திய இந்திய முத்திரைச் சட்டத்தின்படி பத்திரப் பதிவு இல்லாததாலும், ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஏலத்தொகை செல்லானதற்கு செல்லுச் சீட்டு இல்லாததாலும், சி.எஸ்.ஐ. தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கலெக்டரின் கையயாப்பம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக ஒத்துப் போகாமல் வேறுபாடாக உள்ளதாலும், இவ் ஆவணங்கள் யாவும் மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டிருப்பதாலும், சுருக்கமாக சர்வே எண். இல்லாமல் Title Deed (A Physique without soul) உள்ளதாலும், அதில் உள்ள நிலவரி GR ‘அ’ பதிவேட்டிற்கு மாறுபடுவதாலும், (Schedule)-லில் உள்ள GR ‘அ’ பதிவேட்டில் உள்ள பதிவுகளுக்குப் புறம்பாக உள்ளதாலும், சி.எஸ்.ஐ. ஆஜர்படுத்திய ஆவணங்கள் மெய்த்தன்மைக்கு புறம்பாக இருப்பதாலும், சி.எஸ்.ஐ.யின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
- மேற்படி எச்.ஏ.பாப்ளி பதிவு செய்த ஆவணம் எண்: 3067.1907/ நாள் 12-12-1907-ல் கண்டுள்ள ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டவுடன் இந்திய முத்திரைச் சட்டம் 1902-ன்படி பதிவு செய்யப்படாமல், உள்நோக்குடன் தயார் செய்யப்பட்ட மோசடிக் கிரையம் என்பதாலும், Title Deed -ல் நிலப்பட்டாவில் குறிப்பிடாத சர்வே எண்களைக் குறிப்பிட்ட மோசடிக் கிரையப் பத்திரத்தினை ஏற்படுத்தி அரசை ஏமாற்றி தனக்கில்லாத உரிமையினை லண்டன் மிஷனுக்காக மாற்றிக் கொடுத்துள்ளார் எச்.ஏ.பாப்ளி.
- இந்த நில மோசடியானது கிரிமினல் குற்றம் என்பதாலும், பாப்ளியின் கிரையப் பத்திரத்தினைத் தொடர்ந்து 1965-இல் சி.எஸ்.ஐ. மிஷனுக்கு சொத்துக்கள் மோசடியாக மாற்றப்பட்டிருப்பதும் கிரிமினல் குற்றமாகும் என்பதாலும், சி.எஸ்.ஐ. உதவி சொத்து மேலாளரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
- ஈரோடு டவுன் பழைய சர்வே எண்: 586, 587 பரப்பளவு 12.66 ஏக்கரின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 900 கோடிக்கும் மேற்படுவதால், அரசு சொத்துக்களின் பாதுகாவலர் (Custodian of Govt. Properties) என்ற முறையில் மேற்படி சொத்துக்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரை பெற்று செயல்பட ஈரோடு வருவாய் வட்டாட்சியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
- பத்திர எண்: 3067 & 1907-ல் ஈரோடு நகர பழைய சர்வே எண்: 586, 587 தவிர பிற சொத்துக்கள் உள்ளதால், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர் அவர்களின் உத்திரவு பெற்று பிற சொத்துக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஈரோடு நகரம் பழைய சர்வே எண்: 586, 587-க்கு டவுன் சைட் அரசு புறம்போக்கு என ஏற்கனவே உள்ளவாறே ஆவணங்களில் பதிவு செய்திட உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்நிலங்கள் யாவும் அரசு புறம்போக்காக ஏற்கனவே உள்ளதால், வருவாய்த்துறை புதிதாக சுவாதீனம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சி.எஸ்.ஐ. நிர்வாகமே! சேவை என்பது பெயரில் மட்டும்தானா?
இந்த உத்தரவு குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சி.எஸ்.ஐ. நிர்வாகிகளான ஐ.ஆல்ட்ரின் ராஜேஸ்குமார் (பிரப் மெமோரியல் சர்ச் அஸிஸ்டண்ட் பிராபர்ட்டி மேனேஜர்) மற்றும் பாதிரியார் சாந்தக்குமார் ஆகியோர், “இந்த அறிக்கையானது ஒருதலைப்பட்சமானது மட்டுமின்றி, ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு எதிரானதாகும். இது உண்மையிலேயே அரசு புறம்போக்காக இருந்தால், இத்தனை நாட்களாக எவ்வாறு நாங்கள் பயன்படுத்தியிருக்க முடியும்? ஆகவே, இது குறித்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டுபவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர்.
சி.எஸ்.ஐ., பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி – சென்னை உயர்நீதிமன்றம்
தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், கோவை பதிப்பில் 27-மார்ச்-2012ம் தேதி வெளியான ஒரு செய்தியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எஸ்.ராஜேஸ்வரன் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், ‘’சி.எஸ்.ஐ. (Church of South India) என்பது தொண்டு நிறுவனம் அல்ல; இந்திய கம்பெனிகள் பதிவு சட்டத்தின்படி 1947-48-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் வெளிவந்துள்ள அறிக்கை மேற்கண்ட தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வண்ணம் உள்ளது.
ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பு
ஈரோடு மக்களும், மாரியம்மன் பக்தர்களும் இதுநாள் வரை கூறிவந்த குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக, சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்புள்ள நிலத்தை மீட்டு, அங்கு ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு ராஜகோபுரத்துடன் கூடிய மிகப் பிரமாண்டமான ஆலயம் அமைக்க விரும்புகின்றனர். இதுவே ஈரோடு மக்களின் பெருவிருப்பம் ஆகும். இதை நிறைவேற்றுவது கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறையின் கடமை.
அதேபோல ஈரோட்டின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க திட்டமிடப்பட்டுள்ள உள்ள 80 அடி சாலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.
அரசுக்குச் சொந்தமான நிலத்தை 100 ஆண்டுகளுக்கு மேலாக மோசடியாக அனுபவித்து வந்ததற்காக சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் அதிகபட்ச குத்தகை கட்டணமும், போலி பத்திரங்களை தயார் செய்ததற்காக சட்ட ரீதியான கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென விரும்புகின்றனர்.
மேலும் சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிற சொத்துக்கள் குறித்தும் ஆழமான விசாரணை நடத்த வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.
இந்த விஷயத்தில், இனி அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொதுமக்களும், அம்மன் பக்தர்களும் அமைதியுடன் கூர்ந்து கவனித்து வருகின்றனர். மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
(சேக்கிழான் உதவியுடன்)
ஆதாரம் (Source) :
இணைப்பு:
1) விசாரணை அறிக்கை
2) பத்திரிகை செய்திகள்.