இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8

முந்தைய பகுதிகள்:

It's important to note that drugs like this are not meant to be used as long term or lifetime drugs. Cara untuk makan nasi lebih penting bagi siapa pun, juga diketahui Mārkāpur terbinafine cream price sebagai yang terpencil. I started taking doxy with my new prescriptions as a treatment for a rare disease called familial gyrate myosein.

It does not take anything at all, you only need to keep some water in your mouth and start eating whatever food you can. A: the first thing you promethazine with codeine syrup prescription Miharu need to do is to make sure you know how much. That’s more people taking zithromax than any other zithromax-containing drug.

To test for heartworm disease in dogs, a veterinarian will order a complete blood count (cbc), serum biochemistry panel. It is used to purchase clomid online treat infections and has helped countless people to overcome the illness and recover from it. Where do i buy viagra online the company that makes the most sense for us, they are the ones that are going to be the most profitable.

சட்டவிரோத மதரஸாக்கள்

நாட்டின் தலைநகரங்களில் மட்டும் தாக்குதல் நடத்தியதில்லாமல், பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களிலும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் பல அப்பாவிகள் கொல்லப்படுவதும், உடமைகள் சேதமடைவதும் வாடிக்கையாகிவிட்டது. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஆந்திரா உட்பட்ட மாநிலக் கடற்கரைப் பகுதிகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளன. பிற மாநிலங்களில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும், கள்ளத்தனமான வளர்ச்சியையும் பார்ப்பதற்கு முன் இன்னும் சில இயக்கங்களின் பங்குகளையும் காண வேண்டும். கேரளா, தமிழகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்பாடுகளை விரிவாகப் பார்த்தது போல் உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம் , பீகார், கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இவர்களின் பங்கு குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

mumbai-attack

இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்பாடுகளில் மதரஸாக்களின் பங்கு

பாரத நாடு முழுவதும் 35,000 மதரஸாக்கள் உள்ளன. இந்த மதரஸாக்களுக்கு மாநில அரசும், அந்தந்த மாநிலத்தில் உள்ள வக்ஃப் (Waqf) வாரியங்களும் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களை விட சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட மதரஸாக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக உளவுத் துறையினரின் அறிக்கை தெரிவிக்கின்றது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இது சம்பந்தமாக நடத்திய ஆய்வில் 2003-ம் ஆண்டில் மட்டும் சுமார் 9,000க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான மதரஸாக்கள் இயங்குவதாகத் தெரிவித்தார்கள். சட்ட விரோதமாக இயங்குகின்ற மதரஸாக்கள் மூலமாகத் தான் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. சட்ட விரோத மதரஸாக்களும் ஜமாத் உத் துவா (Jammat-ud-Duwa) முறையில் நடைபெறுவதால் சட்ட விரோத மதரஸாக்கள் எவை madarasa-2எனக் கண்டுபிடிப்பது இயலாத செயலாகும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன.

2003-ம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த தேசீய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாரத தேசத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பின் அந்த வெள்ளை அறிக்கை மறைக்கப்பட்டது. ஆனாலும் கூட சுதீப் வாஸ்லேகர் (Sudheep Waslekar) என்பவர் மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையின் சில பகுதிகளை தனது Cost of Conflict between India and Pakistan என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் 2003-ல் ஐ.எஸ்.ஐ தனது பயங்கரவாதத் தன்மையை விரிவு படுத்த ஒன்பது மாநிலங்களைத் தேர்வு செய்தது. அதில் உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகியவை முக்கியமானவை. இந்த மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்களை ஏற்படுத்துவது என்பது முக்கியக் குறிக்கோளாகும். இந்தச் செயல்பாட்டில் அதிக அளவில் மதரஸாக்கள் ஏற்படுத்திய மாநிலம் கேரளாவிற்கு அடுத்தப்படியாக மத்தியப் பிரதேசம் தான். கேரளத்தில் புதிதாகச் சட்ட விரோதமாக 10,000 மதரஸாக்களும், 6,000 மதரஸாக்கள் மத்திய பிரதேசத்திலும் துவக்கப்பட்டன. இவ்வாறு சட்ட விரோதமாகத் துவக்கப்பட்ட மதரஸாக்களுக்கு ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டது. இது பற்றி பாகிஸ்தானின் கல்வியாளர் கூறிய கருத்து மிகவும் முக்கியமானதாகும்,.எஸ்.. யின் மூலம் உருவாக்கப்பட்ட மதரஸாக்கள் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் கையில் ஆயுதம் தாங்கி ஜிகாத் புரிவார்கள் என்றால், இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில் நாம் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடியும்.” என்ற வாக்கியம் முக்கியமானதாகும்.

மேலும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல் காஷ்மீரில் மட்டுமே குடி கொண்டிருந்த இஸ்லாமியப் பயங்கரவாதம் பாரத நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. சட்ட விரோதமான முறையில் ஏற்படுத்தப்பட்ட மதரஸாக்களினால்தான் கோத்ரா கலவரம் மூண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் 78வது பக்கத்தில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைச் சீர் குலைக்கும் வழி முறைகளும் அப்பட்டமாக வரையப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பைப் பலவீனப்படுத்த மதரஸாக்கள் செயல்படும் விதமும், இந்த மதரஸாக்கள் மூலமாக லஷ்கர்தொய்பா, ஜிகாத்காஷ்மீரி போன்ற இயக்கங்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விரிவான கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சில தொண்டு நிறுவன அமைப்புகள் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, தற்போது 9,000க்கு மேற்பட்ட சட்ட விரோத மதரஸாக்கள் இயங்குகின்றன. இதில் 3,000 மகாராஷ்ட்ராவிலும், 2,800 கேரளத்திலும் உள்ளதாக மத்திய மாநில உளவுத் துறையினர் தெரிவித்தாலும் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் உள்ளதாக இந்த தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிலிருந்து ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் நிதி இந்த சட்ட விரோத மதரஸாக்களுக்கு வருகின்றன. நிதி வருவது மட்டுமில்லாமல் மதரஸாக்களின் பாடத்திட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தான் வகுக்கும் பாடத்திட்டம் போல் அமைத்திருக்கிறார்கள். போதிக்கும் பாடத் திட்டங்களுடன் 44 வகையான ஜிகாத் சம்பந்தமான பயிற்சிகளும் பாடத் திட்டத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பல் வேறு மாநிலங்களில் உள்ள சட்ட விரோத மதரஸாக்களில் இந்திய எதிர்ப்பு சம்பந்தமான பாடங்கள் அதிக அளவில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இம் மாதிரியான மதரஸாக்களில் பயிலுவதற்காகவே ஆட்களை கொண்டு வருவதற்கு என சிலீப்பர் செல் மற்றும் புதிதாகச் சேர்பவர்கள் செல் என தனிப் பிரிவு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயில் உள்ளது. சட்ட விரோதமாகச் செயல்படும் மதரஸாக்கள் அடிக்கடி தங்களது இடங்களையும், பயிற்சிகளையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்; குறிப்பாகப் பாகிஸ்தானிலிருந்து வரும் கட்டளைகளுக்கு ஏற்பச் செயல்பாடுகளும் அமையும் என்பது குறிப்பிடத் தக்கது.

madrasa_students313

இந்தியாவில் நடைபெற்ற பயங்கரவாத செயல்களில் எவ்வாறு பயங்கரவாத அமைப்புகளுக்கு முக்கியப் பங்கு உள்ளதோ அதே போல் மதரஸாக்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. பாரத தேசத்தின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடனும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிட வேண்டும் என்பதற்காகவும் திட்டம் தீட்டும் பாகிஸ்தானின் ஐஎஸ்.ஐக்கு உதவிகரமாக இருக்கும் அமைப்புகள் தான் மதரஸாக்கள். இந்தியாவில் உள்ள 9 மாநிலங்களில் ஐஎஸ்ஐ யின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்த செயல்பாடுகளுக்காக 60 சென்டர்களும், 10,000க்கும் மேற்பட்ட உளவாளிகளும் இருக்கிறார்கள். 2000-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி “ஐஎஸ்ஐ கள்ளத்தனமான மதரஸாக்களை” ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கள்ளத்தனமாக ஏற்படுத்தப்பட்ட மதரஸாக்கள் உத்திர பிரதேசம், மத்தியப்பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் இயங்குவதாகவும், இதில் கேரளத்தில் மட்டும் 10,000க்கு மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது. கேரளத்திற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசத்தில் 6,000க்கு அதிகமான மதரஸாக்கள் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள அமெரிக்கன் சென்டர் மீது குண்டு வீசித் தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்காக அன்றைய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள் இந்திய எதிர்ப்புப்  பிரச்சாரமும், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பயிற்சியும் கொடுப்பதாக இதழ்களுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தார். இத்துடன் தனது சக அமைச்சர்களிடம் மேற்கு வங்கத்தில் Prevention of Organised Crime Ordinance எனும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் வாதிட்டார். 24.1.2002ந் தேதி எக்கானமிக் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரையில் உள்ள முக்கியமான செய்தி “ நாட்டின் வளர்ச்சி பாதையில் தங்களை இணைத்துக் கொள்ள மேற்கு வங்கத்தில் உள்ள பல மதரஸாக்கள், மதரஸா போர்டில்(Madarasa Board) தங்களைப் பதிவு செய்து கொள்வதில்லை. இதன் காரணமாக தேச விரோத சக்திகள் இம்மாதிரியான மதரஸாக்களிலிருந்து செய்படுகின்றன”.

darul-uloom-deoband

மேற்கு வங்க மாநிலம் பங்களா தேஷ் எல்லைப் புறங்களில் 208 மதரஸாக்கள் இயங்குகின்றன. இந்த எண்ணிக்கையில் 125 மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக தங்களது பாடத் திட்டங்களை வகுத்திருக்கிறார்கள. இளம் வயதில் படிக்க வரும் இஸ்லாமிய மாணவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுவது போல் இந்திய எதிர்ப்பையும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதின் அவசியத்தையும் போதிக்கிறார்கள். இந்த பாடத் திட்டங்களை போதிக்கும் மதரஸாக்கள் Cooch Behar, Jaipaiguri, North Dinajpur, South dinajpur, Malda, Mushidabad, Nadia, North 24 Parganas & South 23 Parganas போன்ற எல்லைப் புற மாவட்டங்களில் அமைந்துள்ளன.

1998 முதல் 2003ம் ஆண்டு வரை எல்லைப் புற பகுதிகளில் 73 புதிய மசூதிகளும், 89 புதிய மதரஸாக்களும் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு புதிதாகத் துவக்கப்பட்ட இடங்கள் சித்தார்த் நகர்(Siddarth Nagar), மகா சம்பரான்(Maha Champaran), சீத்தாமாரி(Stiramarhi), மதுபானி(Madhubani), ஆராரியா(Araria) ஆகிய மாவட்டங்கள் ஆகும். இதன் காரணமாக பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் ஹஜி எனும் பயங்கரவாத அமைப்பினர் ஊடுருவது எளிதாக அமைகிறது.

bengaljihadஇந்தியா நேபாள எல்லைப் புறங்களில் கூட சட்ட விரோத மதராஸக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தேராய்(Terai ) பகுதியில் சட்ட விரோத மதரஸாக்களின் எண்ணிக்கை உயர்வின் காரணமாக சிறுபான்மையினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியப் பகுதியில் 10 கிலோ மீட்டர் எல்லையில் 343 மசூதிகளும், 300 மதரஸாக்களும், 17 மசூதியுடன் கூடிய மதரஸாக்களும் செயல்படுகின்றன. இதே தூரம் உள்ள நேபாளப் பகுதியில் 282 மசூதிகளும், 181 மதரஸாக்களும், எட்டு மசூதிகளுடன் கூடிய மதரஸாக்களும் செயல்படுகின்றன. நேபாளத்தை விட இந்தியாவில் அதிக அளவில் மதரஸாக்கள் செயல்படுகின்றன. இந்திய நேபாள எல்லையில் உள்ள மதரஸாக்களுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், குவைத், பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷ் நாடுகளிலிருந்து நிதி வருகிறது.

இந்திய எல்லையில் உள்ள மதரஸாக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் நேபாளத்தின் காட்மாண்டில் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளின் தூதரங்களின் தொடர்பில் உள்ளார்கள். இவர்களுக்கு வரும் நிதி Jedda வில் உள்ள இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் மூலமாகவும், பாகிஸ்தானில் உள்ள ஹபீப் பேங்கின் மூலமாகவும் பெறப்படுகின்றது. அரபு நாடுகளிலிருந்து வரும் நிதி நேபாளத்தில் உள்ள ஹிமாலயன் பேங்க் மூலமாக இந்திய நாணயமாக மாற்றப்படுகிறது. ஹிமாலயன் வங்கி பாகிஸ்தானில் உள்ள ஹபீப் வங்கியின் துணை நிறுவனமாகும். நேபாளத்தில் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களைப் போதிக்கும் மதரஸாக்களில் முக்கியமானது Madrasa Zia-ul-Uloom in Noorpur, Narsingh in Sunsari மாவட்டமாகும்.

ராஜஸ்தான்பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் சட்ட விரோத மதரஸாக்கள் முளைத்துள்ளன. இப் பகுதிகளில் 129 மதரஸாக்கள் வக்ப் வாரியத்தின் அனுமதி பெற்று நடைபெறுகின்றன, இதே பகுதிகளில் அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை பல மடங்காக உள்ளது. எல்லைப் புறங்களில் இருப்பது போலவே மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் சட்ட விரோத மதரஸாக்கள் செயல்படுவதாக மத்திய உளவுப் பிரிவு தெரிவிக்கின்றது. பொக்கரானில் உள்ள Madrasa Ilamia, Madrasa Anwarul Uloom Jaisalmer and Madrasa Ahle Sunnat Rizvia எனும் மதரஸாக்கள் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி கொடுக்கும் இடமாகவும், பாதுகாப்பாகத் தங்குகிற இடமாகவும் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் இயங்குகின்ற தாலிபா ஜமாத் என்கிற மதரஸா ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்தில் உள்ளது. இதே மாவட்டத்தில் புதிதாக 14 Deen-e-Talim மதரசாக்கள் தோன்றியுள்ளன.

பாரத தேசத்தின் எல்லைப் புற மாநிலங்களில் குறிப்பாக எல்லைப் பகுதிகளில் மதரஸாக்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குஜராத் மாநிலத்தின் எல்லையில் பாகிஸ்தான் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை கூடுதலாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் குஜராத் எல்லையில் உள்ள Kachcheeha மாவட்டத்தில் 34 மதரஸாக்கள் 1991லிருந்து இருக்கின்றன. அதைபோல் Banaskantha மாவட்டத்தில் 28 மதரஸாக்கள் அங்கீகாரம் பெற்று இருந்தன. இந்த இரு மாவட்டங்களிலும் 1995ல் ஆய்வு செய்த போது மதரஸாக்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதும், அவ்வாறு அதிகரித்த மதரஸாக்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த எல்லைப் புற மதரஸாக்களுக்கு உள்ளுர் இஸ்லாமியர்கள் மூலமாகவும், அரபு நாடுகளின் மூலமாகவும் நிதி உதவிகள் குவிகின்றன.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது.

இது சம்பந்தமாக மத்திய அரசு நியமித்த அதிரடிப் பிரிவு பல்வேறு உண்மைகளை மத்திய அரசுக்கு தனது அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியமாக குறிப்பிட்டுள்ள அம்சம், இந்தியா பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில் உள்ள மதரஸாக்களின் எண்ணிக்கையாகும். இந்திய எல்லையில் உள்ள மதரஸாக்களின் எண்ணிக்கை 905 மசூதிகள், 439 மதரஸாக்கள், இதே அளவுள்ள பங்களா தேஷ் எல்லையில் உள்ள மசூதிகளின் எண்ணிக்கை 960ஆகவும் , 469 மதரஸாகள் ஆகவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்தியில் அகமதாபாத் நகரில் காவல் துறையினரால், புகழ் பெற்ற மதரஸாக்களை சார்ந்த நால்வர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணை மூலமாக மதரஸாக்களின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. குஜராத்தில் உள்ள பல மதராஸாக்கள் இஸ்லாமியர்களுக்கு கல்வி புகட்டுவதுடன் தீவிரவாத்தையும் கலந்து புகட்டுகிறார்கள். பல மதரஸாக்கள் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது என்பதும் உலகறிந்த உண்மையாகும். 2006ல் கைது செய்யப்பட்ட காலித் சர்தாணா (Khalid Sardana ) உட்பட்ட இலியாஸ் மேமன் (Illyas Memon) சிராஸ் அன்சாரி ( Siraj Ansari ), குவாரி முப்துல் (Qari Mufidul) என்பவர்கள் தார்உல்உல்லூம் இஸ்லாமிய அரேபிய மதரஸா என்கிற அங்கீகாரம் பெறாத மதராஸவைச் சார்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. காவல் துறையினர் கைது செய்த போது இவர்களிடம் ஆயுதங்களும், அதைவிட ஆபத்தான வகுப்புக் கலவரத்தைத் தூண்டக் கூடிய இஸ்லாமியத் துண்டுப் பிரசுரங்களும், விடியோக்களும் இருந்தன.madarasa1

2007ம் ஆண்டில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான முகமது அஸ்லம் சர்தானா , மும்பை குண்டு வெடிப்பிற்காக லஷ்கர் இ தொய்பாவாவில் பயிற்சி பெற்ற 20 பேர்களில் முக்கியமானவன். 2006ம் ஆண்டு மே மாதம் அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்ட முகமது அமீர் ஷகீல் அகமது ஷேக் என்பவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். இவர்கள் இருவரும் 2001ல் அவுரங்காபாத்தில் உள்ள சிமி இயக்கத்தினருடன் சேர்ந்து மும்பை குண்டு வெடிப்பிற்காகப் புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள் அந்த அமைப்பிற்கு ஜமாத் அகில் இ ஹதீஸ் (Jamaat-Ahil-e-Hadis) என பெயர் வைக்கப்பட்டது. ஆகவே இந்தியாவில் உள்ள பல மதரஸாக்கள் பயங்கரவாதிகளை உருவாக்கும் கேந்திரங்களாக விளங்குகின்றன.

மதரஸாக்களில் படித்த பல இளைஞர்கள் தற்போது பின்லேடனின் அல்கயிதா இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். ஜெயிஷ்முகமது(Jaish-e-Muhammad) இயக்கத்தின் நிறுவனர் மௌலான முகமது அஸார் கராச்சியில் உள்ள பினோரி நகரில்(Binori) உள்ள மதரஸாவில் பயின்றவன். இந்தோனேசியாவில் உள்ள பாலித் தீவில் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் லஷ்கர்ஜிகாத் அமைப்பபை சார்ந்தவர்கள் இவர்கள் இந்தோனேசியாவில் உள்ள சலாப்பி(Salafi) மதரஸாவில் பயின்றவர்கள்.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதிக்கு பின் சட்ட விரோத மதரஸாக்கள் அதிக அளவில் ஏற்பட்டன என பலர் கூறுகின்ற கருத்து நகைப்பிற்கு இடமளிக்கிறது. 1980லிருந்து இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் நாடு முழுவதும் தலையெடுக்க துவங்கியது என்பதை மறந்து விட்டுச் சுமத்துகின்ற குற்றச்சாட்டாகும். 1970ம் ஆண்டு மத்தியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாரூல் உலாமம் தண்டிபோரா (Darul Uloom Dandipora) என்கிற மதரஸா ஏற்பட்டது என்பதும், இந்த மதரஸா காஷ்மீர் மாநிலத்தில் நடத்தும் பயங்கரவாதச் செயல்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சியும் பெற்றவர்களை அனுப்பும் இடமாகவும் உள்ளதாகப் பல்வேறு கால கட்டங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாத சம்பவங்களுக்கு ஏற்பக் கைது செய்யப்பட்ட பலர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஏற்பச் சட்ட விரோத மதரஸாக்களும் சம அளவில் துவங்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

இந்தியாவில் இயங்கும் சட்ட விரோத மதரஸாக்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொடுப்பதற்காகவே பாகிஸ்தான் மதரஸாக்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி வெளியான செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. பாக்கிஸ்தானில் உள்ள Madrassa-e-Arania Faizanul Quran மதரஸாவில் வெடி மருந்து பொருட்கள் பயங்கரமான ஆயுதங்கள், வெடி குண்டுகள், துப்பாக்கிகள் கண்டுபிடித்தாக வந்த செய்தியாகும். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள் என்பது வேறு விஷயமாகும். ஆனால் இன்னும் பெயர் குறிப்பிடாத சில மதரஸாக்களில் சோதனை செய்த போது லைட் மிஷின் கன், 7 எம்.எம். துப்பாக்கி, 1,000 துப்பாக்கி குண்டுகள், ஐந்து பெட்டி நிறைய வெடி மருந்துப் பொருட்கள், எட்டு பெட்டிகள் நிறைய இந்துக்களுக்கு விரோதமான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், இந்திய நாட்டை விமர்சித்து எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டன.

madarasa-raidகள்ளத் தனமான ஆயுதத் தொழிற்சாலை உத்திரப்பிரதேசம் காஸியாபாத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. 14.12.2010ந் தேதி உத்திரப் பிரதேசக் காவல் துறையினர் காஸியாபாத்தில் நடத்திய சோதனையில் தெரிய வந்தது, இதன் காரணமாக முகமது அப்துல் கலாம், மூர்ஸிலீன், ஷாகீர்உதீன், என்பவர்கள் கைது செய்ப்பட்டார்கள். இவர்களிடம் நடத்திய விசாரனையில் எல்லைப் புறங்களில் உள்ள மதரஸாக்கள் மூலம் வெடிப் பொருட்கள் வந்ததாக ஒப்புக் கொண்டார்கள்.

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் கூட பயங்கரவாதிகளும், அண்டைநாடான பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷிலிருந்து கள்ளத்தனமாக ஊடுருவியவர்களும் தங்கும் இடமாக மாறியுள்ளன. இம்மாதிரியான நிகழ்வுகள் இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா பங்களா தேஷ் எல்லைப் புறங்களில் நடக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட்(Jorhat) மாவட்டத்தில் Titabor பகுதியில் உள்ள மதரஸாவில் 150 மாணவர்கள் பயிலுவதாக தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அங்கு சோதனை நடத்திய போது 87 மாணவர்கள் மட்டுமே இருப்பதாகவும், அவர்களுக்குறிய அடையாள அட்டைகள் வைத்திருந்ததாகவும் ஆய்வு சென்றவர்கள் அரசுக்கு கொடுத்த அறிக்கையாகும். ஆனால் இந்த மதரஸாவின் பொறுப்பாளர் பரூக் அகமது முறையான தகவல்களை அரசுக்கு சமர்பிக்காமல் 150 பேர்களுக்குறிய மானியமும் , உணவு உடைகளுக்குரிய மானியத்தையும் தொடர்ந்து பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது. ஆகவே இப்படிப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஆகவே அனைத்து மதரஸாக்களிலும் நடக்கும் சட்ட விரோதச் செயல்பாடுகளும் இதிலும் நடக்கிறது.

simi-activist-nabbed1

சிமியின் மறு அவதாரம்

தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் ஐம்பது மாறுபட்ட பெயர்களில் பயங்கரவாத செயல்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறது. துவக்கத்தில் Tahreek-e-Ehyaa-e-Ummat(TEU) , Tehrik Tahaffuz-e-Shaaire Islam (TTSI), Wahada-e-Islami என்கிற பெயர்களில் சிமி இயக்கத்தினர் மாநிலத்திற்கு தகுந்தார் போல் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தில் மேற் கூறிய எந்த பெயரும் அவர்களுடைய பட்டியலில் கிடையாது. ஐம்பது பிரிவுக்குப் பதில் 34 அமைப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எட்டு மாநிலங்களில் 46 புதிய பெயர்களில் சிமி இயக்கத்தினர் தங்களது பயங்கரவாதச் செயல்பாடுகளுக்குரிய திட்டங்களை தீட்டிக் கொண்டும், திரைமறைவு செயல்பாடுகளைச் செய்து கொண்டும் இருந்தார்கள்.

vizag_seaport1மும்பை குண்டு வெடிப்பில் கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியதற்கு பின் மத்திய மாநில அரசுகள் இந்திய கடற்கரையின் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு ஆய்வு நடத்தினார்கள். ஆய்வுகள் நடத்தியும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 974 கி.மீ. தூரம் கொண்ட கடற்கரை ஆந்திராவில் உள்ளது. முக்கியமான நகரங்களும் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக விசாகப்பட்டிணமும் , காக்கிநாடாவும் இதில் அடங்கும். கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நகரம், முக்கிய தொழில்களான ஆயில், காஸ், பெட்ரோ கெமிக்கல் தொழில் உள்ள நகரமாகும் விசாகப்பட்டிணம். ஆகவே தொடர்ந்து ஏற்படும் ஆபத்துகளால் இந்த நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கக் கூடிய அபாயம் உள்ளது. 2003ல் விசாகப்பட்டிணத்தில் மனித வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடைபெற்றது. ஆனால் இந்தச் சம்பவத்தில் எவரும் பாதிக்கப்பட வில்லை என்றாலும், மனித வெடி குண்டு மூலம் இறந்தவன் பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவன் என்பதில் பாகிஸ்தானின் குள்ள நரித்தனம் வெளிப்படுகிறது.

(தொடரும்…)