ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

morning_hindutvaபிரிவினையைத் தொடர்ந்து நடந்த அந்த மிகப்பெரிய நிகழ்வு மக்கள் இடப்பெயர்வு. இதை குறித்து பேசியதுமே நினைவுக்கு வருவது பஞ்சாபில் நடந்த அந்த அகதிகள் வரவுதான். ஆனால் வங்கத்தின் கதை என்ன? ஏன் பஞ்சாபிலிருந்து சிந்துவிலிருந்து வந்தது போல வங்கத்திலிருந்து அகதிகள் வரவில்லை? இல்லை. வந்தார்கள். ஆனால் அப்படி ஒரு அகதிகள் இருப்பதே வங்கத்துக்கு வெளியே தெரியவில்லை. தெரியவிடப்படவில்லை. எப்படி ஈழத்தமிழர்களின் அகதி நிலை தமிழ்நாட்டுக்கு வெளியே தெரிவதில்லையோ அதை போல. இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் நம் முதல் பிரதம மந்திரி  ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோஜாவின் ராஜா, சாச்சா ஜவஹர்லால் நேரு அவர்கள்தான்.

It is effective in the treatment of hot flashes and night sweats. Male ross 308 broiler chickens (1) were individually Konnagar housed in a well-ventilated room in the poultry facility. Tamoxifen is the only oestrogen-containing drug to be used in the treatment of both breast and endometrial cancer.

The risk can be increased if the mother is receiving treatment for a thyroid problem while pregnant. Caveat emptor - or buyer beware - is an clomid online prescription old saying. Include the following tips when choosing a fucidin 15g cena and consider the following information:

I found someone else who also needed it and i had to wait for the drug. A daily dose price for clomiphene citrate of celexa provides relief for men and women experiencing anxiety when used in an extended-release formulation. The drug is usually taken by mouth as a tablet, usually in the morning.

பிரிவினையால் மிகவும் கஷ்டமடைந்தவர்கள் இந்துக்கள். முஸ்லீம்களுக்கு அவர்களுக்கு என்று பாகிஸ்தான் ஜனித்திருந்தது. ஆனால்  இந்துக்களுக்கு  பாகிஸ்தானில் (கிழக்கு & மேற்கு) எவ்வித வாழ்க்கை நிச்சயமும் இல்லை.  அகதிகளாக இந்தியா வந்தால் அங்கும் வாழ்க்கை நிச்சயமில்லை. நேருவிய அரசு அவர்கள் வாழ்க்கை எத்தனை அவமானகரமாக்க முடியுமோ அத்தனை அவமானகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. இதனுடைய உச்ச கட்டம்தான் 1971 இனப்படுகொலை. அதில் வங்க தேச இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் மதரீதியில் பாகிஸ்தானிய இராணுவத்தால் வேட்டையாடப்பட்டவர்கள் இந்துக்கள்தான். 1971 இனப்படுகொலையின் போது பாகிஸ்தானிய ராணுவம் ஒரு வங்காளி இந்துவா இல்லையா என சோதிக்கும் புகைப்படம் அங்கு வாழும் இந்துக்களின் நிலை என்ன என்பதை காட்டும்.

1971

இந்த சூழலில் இந்துக்களை வாழ வைத்து அவர்களை அவமானப் படுத்தி மடிய வைக்கும் ஆரம்பத்தை ஆணவத்துடன் உருவாக்கியவர் ஜனாப் ஜவஹர்லால் நேருவேதான். அதை அன்றே பல தலைவர்கள் உணர்ந்தனர். எனவேதான்  ஒட்டுமொத்த இந்து தலைவர்களுக்கு ஜவஹர்லால் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை இருந்தது.

இந்த சூழலில்தான் இந்து சிவில் சட்ட முன்வரைவு அருமையான ஒரு வாய்ப்பாக கிடைத்தது ஜவஹருக்கு. அதை கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். பாபா சாகேப் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு வேறு. ஜவஹரின் சிந்தனை வேறு. ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத் தன்மை கொண்ட இந்து சிவில் சட்டம் என்பது இந்து சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் செலுத்தும் என்பது பாபா சாகேப் அவர்களின் எண்ணம். இந்தியா இந்துக்களுக்கான பாதுகாப்பான தேசமாக இருக்க இது அவசியம் என்பது அவர் எண்ணம். நாளைக்கு இதுவே இந்தியாவின் பொது சிவில் சட்டமாக வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு.  அவருடைய வார்த்தைகளை அப்படியே கூறினால் இன்றைய  போலி-மதச்சார்பின்மைவாதிகள் ’பெரும்பான்மை வகுப்புவாதம்’ என்றும் பாசிசம் என்றும் கூச்சலிடுவார்கள். பாபா சாகேப் கூறினார் (11-ஜனவரி-1950):

(இந்து சிவில் சட்ட) முன்வரைவு முற்போக்கானது. இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சி இது. சட்டம் இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் மேற்கத்திய இறக்குமதி அல்ல என்பதையும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையிலானது என்பதையும் கவனிக்கவும். தொடர்ந்து ஒரு செயல்திட்டத்தின் முன்னோடி என்பதையும் அந்த செயல்திட்டம் அனைத்து பாரதியர்களுக்குமான ஒரு பொது சிவில் சட்டம் என்பதையும் அந்த பொது சிவில் சட்டத்தின் முதல் அடிப்படையாக இந்து சிவில் சட்டத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன்வைப்பதையும் கவனிக்கவும். பாபா சாகேப் அம்பேத்கருக்கு இது ஆரோக்கியமான இந்து சமுதாயத்தை உருவாக்கும் ஒரு பெரிய வாய்ப்பு. அதன் மூலம் இந்தியாவில் இந்துக்களை ஒரு பலமான ஜனநாயக சமுதாயமாக மாற்றுவது அவர் இலக்கு. நேருவின் கணக்குகள் வேறு. இதன் மூலம் எப்படியும் தம்மை இந்து ஆச்சாரவாதிகள் எதிர்ப்பார்கள். அதனை வைத்து அவர்களை பிற்போக்குவாதிகளாக காட்டிவிட முடியும். எனவே இந்து ஆச்சாரவாதிகள் மனதில் இந்த சட்டம் ஏதோ நேருவால் இந்து மதத்துக்கு எதிராக கொண்டு வரப்படுவது போன்ற உணர்வு திட்டமிட்டு பரப்பப்பட்டது. நேருவை எப்போதுமே பாஸிடிவ்வான கேலிச்சித்திரங்கள் மூலம் விதந்தோதும் ’சங்கர் வீக்லி’ போன்றவை துரிதமான பிரச்சாரத்தில் இறங்கின.

துரதிர்ஷ்டவசமாக இந்து தலைவர்கள் நேருவின் இந்த தந்திர வலையில் வீழ்ந்தனர்.  இது இந்துத்துவம் நழுவவிட்ட ஒரு வரலாற்று வாய்ப்பு. நேருவின் மீதான ஐயப்பாட்டால் பாபா சாகேப் அம்பேத்கரின் ஈடியணைற்ற ஒரு சாதனையை போற்றி வரவேற்காமல் அவரை காயப்படுத்திவிட்டனர். இதில் வீர சாவர்க்கர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் அப்போது அவரும் பிரதான அரசியல் குரலாக இல்லை. இதுவே பாபா சாகேப் அம்பேத்கரையும் அவர் தள்ளிப்போட்டிருந்த பௌத்த மதமாற்றத்தை நோக்கி நகர்த்தியது. ஜவஹர் எதிர்பார்த்தது நடந்தது. ஹிந்துத்துவர்களை ஒட்டுமொத்தமாக ஹிந்து ஆச்சாரவாதிகள் என முத்திரை குத்தி ஒதுக்க முடிந்தது. அத்துடன் ஹிந்துக்களை பாதுகாப்பது என்பதையே ஹிந்து வகுப்புவாதமென அவரால் பேசமுடிந்தது.

ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் இதனால் நேருவின் மதச்சார்பின்மை எனும் மாயவலையில் விழவில்லை.  பாபா சாகேப் முன்வைத்த மதச்சார்பின்மை என்பது கோஷமல்ல. இந்துக்களின் நன்மையை பாதுகாப்பை அரசு காப்பாற்றுவதென்பது என்பது வேறு இந்து மத மேன்மையை அரசு தூக்கி பிடிப்பதென்பது வேறு. இதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். கம்யூனிச சீனாவும் இஸ்லாமிய நாடுகளும் மதமாற்ற சக்திகளும் செயல்படும் சூழலில் இந்துக்களின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் கடமை என்பதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். நேருவிய மதச்சார்பின்மை என்பது கோஷமும் வேஷமும் மட்டும் நிரம்பியது. ரோசாவின் ராசாவே அப்படிப்பட்ட நிலைபாடுடையவர்தான். ஹஜ் யாத்திரைக்கு மான்யமும், காஷ்மீருக்கு தனி அந்தஸ்தும்  என மதச்சார்பின்மைக்கு புது விளக்கம் கொடுத்தவர் மனிதருள் மாணிக்கம். எனவேதான் ஆசியஜோதியின் அமைச்சரவையிலிருந்து பதவிவிலகிய போது சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்:

பாகிஸ்தானுடனான நம் உறவில் பிரச்சனை அளிக்கும் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று காஷ்மிர் மற்றொன்று கிழக்கு வங்கத்தில் நம் மக்களின் நிலை. நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே  அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை அங்கு தான் சகிக்க முடியாததாக உள்ளது. அதெல்லாம் குறித்து babasaheb1கவலைப்படாமல் நாம் காஷ்மீர் குறித்தே அனைத்து கவனத்தையும் செலுத்துகிறோம். இங்கு கூட நாம் உண்மையற்ற விஷயத்தில்தான் அக்கறை செலுத்துகிறோம். யார் செய்தது சரி தவறு என்பதல்ல எதை செய்வது சரி என்பதுதான் கவனம் செலுத்த வேண்டிய உண்மையான விஷயம். இந்த முக்கியமான விஷயத்தில் என்னுடைய பார்வை எப்போதுமே காஷ்மீரை பிரிவினை செய்துவிட வேண்டும் என்பதுதான். ஹிந்து – பௌத்த பகுதிகள் இந்தியாவுக்கும் முஸ்லீம் பகுதி பாகிஸ்தானும் அளிக்கப்பட்டு விடவேண்டும். நமக்கு காஷ்மீரின் முஸ்லீம் பகுதி குறித்து கவலையில்லை.  அது பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் முஸ்லீம்களுக்குமான பிரச்சனை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்துவிட்டு போகட்டும். அல்லது உங்களுக்கு வேண்டுமென்றால் அதை மூன்றாக பிரியுங்கள்.  போர்-நிறுத்த பகுதி, சமவெளி பகுதி, ஜம்மு-லடாக் பகுதி. இதில் விருப்பத்துக்கான தேர்தல் (நேரு வாக்களித்த -’proposed plebiscite’) சமவெளி பகுதியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.   ஆனால் (நேருவின் வாக்குறுதிப்படி ) அனைத்து பகுதிகளுக்கும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீரின் ஹிந்துக்களும் பௌத்தர்களும் அவர்கள் விருப்பத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இழுத்துச் செல்லப்படுவர். நாம் மீண்டும் கிழக்கு வங்காளத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஏன் நம் ஆசியஜோதி கிழக்கு வங்க அகதிகளை குறித்து கவலை கொள்ளவில்லை? பிரிவினை குறித்த வரலாற்றாசிரியர் ஒருவர் விளக்குகிறார்:

இன்றைக்கு யோசிக்கும் போது ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் மத்திய அரசோ பிராந்திய அரசோ ஹிந்து சிறுபான்மையினர் கிழக்கு வங்காளத்திலிருந்து பெருமளவுக்கு குடி பெயர்ந்து பாரதத்துக்கு வருவார்கள் என கருதவில்லை. …. இறுதியாக தயங்கி தயங்கி அரசாங்கம் அகதிகளை ஒரு யதார்த்தமாக கணக்கில் எடுக்க தொடங்கிய போது கூட அவர்களின் முக்கிய நோக்கம் அகதிகளை எப்படியாவது தடியை பயன்படுத்தியோ அல்லது சில சலுகைகளை காட்டியோ எங்காவது விரட்டி விடுவதாகவே இருந்தது. இவையெல்லாம் அகதிகளாக வந்தவர்களின் முகத்தில் அறைவதாக இருந்தது….

refugees1

இந்த மிக மோசமான அதிகாரபூர்வ அரசு நிலைபாட்டில் பாதி பங்கு டெல்லியில் உள்ள நேரு அரசாங்கத்தினுடையது. அகதிகள் மறுவாழ்வு என்பது மத்திய அரசின் தற்காலிக அதிகாரத்துக்குள் வருவதாக ஆக்கப்பட்டிருந்தது. எனவே மேற்கு வங்காள அரசு அகதிகளுக்கான நிவாரண நிதியளிக்கும் வழிகாட்டுதலுக்கும் மத்திய அரசையே நம்ப வேண்டியதாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு மத்திய அரசு கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதையே ஏற்கவில்லை. நெருவே கிழக்கு வங்காளத்திலிருக்கும் சூழ்நிலை ஒன்றும் அங்குள்ள ஹிந்து சிறுபான்மையினர் கவலைப்பட்டு ஓடிவர வேண்டிய அளவுக்கு மோசமானதாக இல்லை என்று கருதிக் கொண்டிருந்தார். ஹிந்துக்கள் அகதிகளாக ஓடிவருவதற்கு காரணம் தேவையற்ற அச்சம், வதந்திகள்தானே தவிர இந்துக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ எவ்வித ஆபத்தும் உண்மையில் இல்லை என உறுதியாக இருந்தார். …

ஆனால் 1950 இல் தெள்ளத் தெளிவாக புறக்கணிக்க முடியாத அளவு இந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த போது நேரு- லியாகத்  ஒப்பந்தத்தை நேரு கையெழுத்திட்டார்… நேருவின் முக்கிய முதன்மை நோக்கம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகள் பாரதத்துக்குள் வருவதை தவிர்ப்பதுதான். அது நல்ல நோக்கம். ஆனால் அந்த திட்டத்தையே அவர் பிடித்துக் கொண்டிருந்தது இந்திய அரசாங்கம் வங்க அகதிகளுக்கு நிலமைக்கும் நேரத்துக்கும் தகுந்த ஒரு நிவாரணத்தை அளிப்பதிலிருந்து தடுத்துவிட்டது. (நேருவின்) டெல்லி அரசாங்கம் கிழக்கு வங்காளத்திலிருந்து வரும் (ஹிந்து-பௌத்த) அகதிகளின் மறுவாழ்வு என்பது தேவையற்றது என்றும் தீவிரமாக தவிர்க்கப்பட வேண்டியது என்றும் வலியுறுத்தி வந்தது.

– ஜோயா சாட்டர்ஜி, The Spoils of Partition, Cambridge University Press, 2010, பக்.128-31

அப்போது வங்க முதல்வராக இருந்த பிரபுல்ல சந்திர கோஷ் கிழக்கு வங்க அகதிகளுக்கு ஆதரவளித்தார் என்ற காரணத்துக்காக சாச்சா நேரு அவரை பதவியிறக்கினார். பின்னர் மேற்கு வங்காளத்தின் முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராய்க்கு ஆசிய ஜோதி மனிதருள் மாணிக்கம் ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதுகிறார்:

கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்… அங்கே போரே ஏற்பட்டாலும் கூட அப்படி (இந்துக்கள்) இடம் பெயர்வதை நான் தடுப்பேன்.

1951 இறுதியில் இத்தனை அவமானங்களை இந்திய அரசு அவர்கள் முகங்களில் விட்டெறிந்து ஜனாப் ஜவஹர் தன் காலால் இந்துக்களை உதைத்த பிறகும் 25 இலட்சம் இந்துக்கள் இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்களென்றால் கிழக்கு வங்கத்தில் (பாகிஸ்தானில்) நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்? (அதே காலகட்டத்தில் மேற்கு பஞ்சாபிலிருந்து வந்த இந்து-சீக்கிய அகதிகளின் எண்ணிக்கை 24 இலட்சம்).

nehru3ஆக ஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதானே. சாகிற இந்துக்களுக்காக சங்கடப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் மனிதர்களே அல்ல. ஹிட்லரும் ஸ்டாலினும் மாவோவும் மக்கள் உயிர்களை குறித்த அலட்சியத்தை வெளிப்படையாக பேசினார்கள். ஆனால் ஆசிய ஜோதி புத்திசாலி. அவர் இனிமை நிரம்பிய வார்த்தைகளால் ஜனநாயக லட்சார்ச்சனையும் மகாத்மா அஷ்டோத்திரமும் சொல்லியபடியே இந்துக்களை பாகிஸ்தானிய வதை முகாம்களில் தள்ளுவதில் கவனமாக இருந்தார்.

1971 இல் பாகிஸ்தானிய ராணுவம் கிழக்கு வங்காளத்தில் ‘எத்தனை இந்துக்களை இன்று நீ கொன்றாய்?’ என அப்பட்டமாக கேள்வி கேட்டு ராணுவ அதிகாரிகளை முடக்கிவிட்டு இனப்படுகொலை நடத்திய போது நேரு உயிருடன் இருந்திருந்தால்?

அதை நடத்திய பாகிஸ்தானிய ராணுவ தளபதி யாஹியாகானுக்கு ஒரு இந்திய ரசிகர் கிடைத்திருப்பார். யாஹியாகான்- ஜவஹர் ஒப்பந்தம் இந்திய அமைதி விரும்பிகளுக்கு ஒரு சாதனையாக அமைந்திருக்கும். கொல்லப்பட்ட இந்து குழந்தைகளின் ரத்ததில் நேரு மாமாவின் ரோசா இன்னும் சிவந்திருக்கும்.

மீண்டும் தேநீருடன் நாளை காலையில் சந்திப்போம்.

ஜோகேந்திரநாத் மண்டல் சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.

ஆனால் பிரிவினைக்குப் பிறகு உருவான இஸ்லாமிய கிழக்கு பாகிஸ்தானில் நாமதாரிகள் போன்ற தலித் சமூகங்கள் உட்பட எல்லா இந்துக்களுக்கும் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு அல்லது துரத்தப் படுவதே விதியாகி விட்டதை நேரடியாகக் கண்டு தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அந்த ராஜினாமா கடிதத்தின் மொழி பெயர்ப்பு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிய ஒரு முக்கிய ஆவணமாக இது உள்ளது.

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்

பகுதி 1, 2, 3, 4

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 6

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

தொடர்ச்சி…

(I) வெறியேற்றும் கொடூரமான மானியங்கள்

(அ) ரயில் பயணத்தில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்யும் முதியவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள்.(குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்வோர் ஏழைகள்தானே! அதிலும் மூதாட்டிகளுக்கு அரை கட்டணம்தான்!(பெண்ணென்றால் இரயில்வே துறையே இரங்கும்!)

என்னைப் பொறுத்தவரை ரயில் கட்டணத்தில் எந்த பெட்டியிலும் மானியங்கள் அளிக்கப்படக் கூடாது.

(ஆ) பி.எஸ்.என்.எல்லின் அகன்ற அலைவரிசை (Broadband) சேவையில், 20 சதவிகிதம் மானியமாக, வேலை செய்யும்

அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கட்டண குறைப்பாக அளிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.அரசு ஊழியர்கள் மட்டும்தான் இணையத்தை பயன்படுத்துகிறார்களா?

இணைய பயன்பாட்டில் அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறை ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும் என்ன வேறுபாடு

இருக்கிறது? இதைப் போன்ற ஒரு கொடூரமான மானியம் உலகில் வேறு எங்கும் இருக்காது.

(அரசு ஊழியர்களாயிற்றே! கொம்புடன் பிறந்தவர்களாயிற்றே!) ஒரு சுவாரசியமான தகவல். இந்த மானியத்தை எங்கள் குடும்பமும் பயன்படுத்துகிறது.
தேச நலனுக்காக அனவரதமும் உழைத்த என் தந்தை, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிதான். 500 ரூபாய்க்கான மாதாந்திர இணையதள கட்டணத்தில், நாங்கள்

400 ரூபாய் மட்டுமே செலுத்துகிறோம். அரசு ஊழியரின் மகனாகப் பிறந்த எனக்கும் கொம்பு உண்டு!இந்த பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்திற்குத்தான், விருப்ப ஓய்வூதிய திட்டத்திற்காக, 20000 கோடி ரூபாய்களை அரசு வழங்க இருக்கிறது. ஒரு நிறுவனம் தன் நிதி நிலையை, சரியாக நிர்வகிக்காத காரணத்தால், மானியங்களை கொடூரமாக வழங்கிக் கொண்டிருப்பதால், தன் செலவுகளுக்கு அரசையே எதிர்பார்க்கிறது.

(இ) இந்திய ரயில்வேயில் பணிபுரிபவர்களுக்கு இலவச பயண மானியங்கள்

(வருடத்திற்கு 3 பாஸ் போதுமா என்று தெரியவில்லை! ஓய்வு பெற்றவர்களுக்கும் பாஸ்தான்; ஊழியர் இறந்தவுடன்

மனைவிக்கும் பாஸ்தான்! ரயில்வே ஊழியர்கள் மட்டும் பாஸ்; நாம் எல்லோரும் ஃபெயில்!)

இதைத்தவிர, இரயில்வே துறையில் பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்றவர்களுக்காக சில இடங்கள் ஒவ்வொரு இரயிலிலும் தனியாக ஒதுக்கப்படுகின்றன. காசு கொடுத்து பயணிப்பவர்களை விட, ஓசியில் ஓபி அடிக்கும் ஊழியர்களுக்கு அதிக மரியாதை. இந்த முறையை மட்டும் தவறு என்று நாம் கூறக்கூடாது. இலவச பயணத்தையே நாம் எதிர்க்க வேண்டும்.ஒரு சுவாரசியமான தகவல். இந்திய இரயில்வேயில், கடந்த சில வருடங்களாக, எங்கும் நிற்காத இரு நகரங்களுக்கு இடையே ஓடும் Duronto Express இயக்கப்படுகிறது. இதில் இலவசம் இருக்காது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. முதலில் இரயில்வே துறையின் சில ஊழியர் குழுக்கள், ஆணையங்கள் போன்றவை ஒதுக்கீடு கேட்டுப்பெற்றன. பிறகு இரயில்வேயின் அதிகாரிகளுக்கும், அதன்பிறகு அனைத்து ஊழியர்களுக்கும் இலவச பாஸ் மட்டுமல்ல, விசேஷ ஒதுக்கீடும் செய்யப்பட்டது (Privilege Seats). இதைக் கண்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களின் பங்கை பிடுங்கிக் கொண்டன. தற்பொழுது அந்த இரயில், சாதாரண இரயிலாகி விட்டது. இலவசமும், பாஸ்களும், மானியமுமே ஓங்கி இருக்கிறது.

(ஈ) ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விமான பயணத்திற்கு அளிக்கப்படும் மானியங்கள்.

(நிறுவனத்தின் டப்பா டேன்ஸ் ஆடினால் என்ன! குடும்பத்துடன் சொகுசு பயணம் உண்டு.

அந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நம் அரசு, நம் வரிப்பணத்திலிருந்து 30000 கோடி ரூபாய்களை வழங்க இருக்கிறது)

(உ) எங்கள் வீட்டில் 2 குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் உள்ளன. நாங்கள் சராசரியாக 800 முதல் 1000 யூனிட்டுகள் மின்சாரத்தை உபயோகிக்கிறோம். சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தை தயாரித்து அளிக்க மின்வாரியத்திற்கு 5 ரூபாய் 50 பைசா பிடிக்கிறது. ஆனால் ஏழைகளான எங்கள் குடும்பத்திற்கும் (!), எங்களைப் போன்ற பல இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கும், முதல் 500 யூனிட்டுகளுக்கு மானியம் உண்டு.

(ஊ) கடந்த 6 வருடங்களில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்ட இரு முறையும், ரேஷன் கார்ட் வைத்துள்ள எங்களுக்கும் 1000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. நாங்கள் வெள்ளத்தால் எதை இழந்தோம் என்றே தெரியவில்லை.நல்ல மழை காலத்தில் கூட வீட்டிற்குள் பஜ்ஜி செய்து சாப்பிட்டு கொண்டு சந்தோஷமாக இருந்தேன். கான்கிரிட் வீட்டில் வசிக்கும் எங்களுக்கு 1000 ரூபாய். குடிசை மற்றும் ஓட்டு வீட்டில் வசிப்பவர்களுக்கு 2000 ரூபாய். எங்கள் மாவட்டத்தில் மொத்தமாக 10,15 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அனைவர்க்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.

வெள்ளம் கடந்த 10, 15 வருடங்களாக மட்டும்தான் ஏற்படுகிறதா?. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வருடந்தோறும் மிகச்சரியாக பருவமழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. மழை பெய்கையில் 10 நாட்களுக்கு வீட்டிற்குள் முடங்கிவிட்டு பின் வேலையை ஆரம்பிப்பதைத்தான் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இதில் என்ன அதிசயம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

(எ) வருடம் தோறும் இலவச வேட்டி சேலையும் எங்களுக்கு உண்டு. ரேஷன் கார்ட் இருந்தால் போதும்.இலவசங்களிலேயே வாழ்ந்து விடலாம்.

(II) அட்டூழிய மானியங்கள்:-

(அ) தமிழக மீனவர்களுக்கு அவர்கள் வேலை பார்க்காத காலங்களில் 2000 ரூபாய் மாதாந்திர மானியமாம்.சபரி மலை சீசனில் மட்டும் வேலை செய்பவர்களுக்கு கேரள அரசு மானியம் அளிக்கலாம். பத்ரிநாத் போன்ற இடங்களில் வேலை செய்வோருக்கும் இதை விரிவுபடுத்தலாம்! கடைசியாக வேலையே செய்யாமல் சும்மாவே இருக்கும் ஒண்டிபுலிக்கும் (நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாதிப்பு) வேலை செய்யாததற்கு மானியம் அளிக்கலாம்.பல காலமாகவே இவர்கள் இந்த சீசனில் மட்டுமே வேலை பார்த்தவர்கள்தான். சீசன் அல்லாத காலங்களில் வேறு வேலை செய்ய பழகியவர்கள்.

(ஆ) நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில் வேலை செய்வோருக்கு இலவச / குறைந்த விலையில் மின்சாரம் அளிக்கப்படுகிறது.

(இ) பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு தொலைபேசி கட்டணத்தில் மானியங்கள் அளிக்கப்படுகிறது.

(ஈ) பி.எஸ்.என்.எல் நிறுவன தொலைபேசி கட்டணத்தில் கிராம இணைப்புகளுக்கு மாதாந்திர வாடகையில் மானியம் அளிக்கப்படுகிறது. எங்கள் கிராமத்தை “கிராமம்” என்ற நமக்கு புரிந்த அடைமொழியுடன் ஒப்பிடவே முடியாது. கிட்டத்தட்ட 90 சதவிகித நகரம்தான். நாங்கள் காட்டிற்கு நடுவில் வாழவில்லை. ஆனால் எங்களுக்கும் மானியம் உண்டு. மாதம் தோறும் எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பலசரக்கு பொருட்களின் விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவே நான் அனுப்புகிறேன். வீடு தேடி வருகிறது பொருட்கள். சென்னை போன்ற நகரங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் பெரும்பாலான வசதிகளில் வித்தியாசமே இல்லை.

(உ) அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அமைப்பு சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் (Both private and Public sector organised employees) வரி விதிப்பில் விலக்குகள் அளிக்கப்படுகின்றன. சரியாக கூறுவதானால், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. இந்திய வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானது.

பல்வேறு வகைகளில் வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான கல்வி, காப்பீடு, சேமிப்பை ஊக்கப்படுத்தும் முதலீடுகள் என்று பலவகைகளில் வரி விலக்குகள் அமலில் உள்ளன. விவரம் அறிந்தவர்களின் கூற்றுப்படி, வரி விதிப்பு மிகவும் குறைவாக மாற்றப்பட்டு அத்துணை வரி விலக்குகளும் நீக்கப்பட்டு விட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் எந்த வகையில் தன் சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டும் என்பதிலெல்லாம் அரசாங்கம் தலையிடுவது நன்மை பயக்காது.

(III) பிரயோஜனமில்லாத மானியங்கள்:-

உண்மையான ஏழை மக்களுக்கு, அவர்களை ஏழ்மையிலேயே வைத்திருக்கப் பயன்படும் அனைத்து மானியங்களும் பிரயோஜனமில்லாத மானியங்களே!

(IV) தேவைப்படும் மானியங்கள்:-

இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

அமேரிக்காவின் மானியங்கள்:-

Social Security என்று கூறப்படும் அமேரிக்காவின் மானியங்களை இந்தியாவில் அமல்படுத்தப்படும் மானிய திட்டங்களுடன் ஒப்பிடவே முடியாது. அங்கு வேலை பார்க்கும் அனைத்து மக்களிடமிருந்தும், தொழில் நிறுவனர்களிடமிருந்தும் Payroll Tax என்ற வரி வசூலிக்கப் படுகிறது. அந்த வரி வருமானத்தைக் கொண்டே, ஓய்வு பெற்றவர்கள், வேலை இல்லாதவர்கள்,முதியோர்களுக்கான மருத்துவ வசதிகள் போன்றவற்றிற்க்கு மானியம் அளிக்கப்படுகிறது.

அமேரிக்காவிலேயே இந்த மானிய திட்டங்களுக்கான விமர்சனமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உதாரணமாக சில பொருளாதார நிபுணர்கள் இந்த திட்டத்தை Ponzi Scheme என்ற அளவிற்கு விமர்சனமும் செய்கிறார்கள். 2020ம் வருட வாக்கில், இந்த திட்டத்தின் வருவாயை விட செலவு அதிகமாகி விடும். ஒன்று, அரசே அதற்கான அதிகப்படி செலவை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் அல்லது சில திட்டங்களை நிறுத்த வேண்டி வரும் என்று அந்த திட்டத்தை செயல் படுத்தும் நிர்வாகிகளும் கூறியிருக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு மானியம் அளிக்கும் எந்த திட்டமும், எந்த நாட்டிலும் தோல்வியையே சந்திக்கும். அமேரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள், பணக்கார நாடுகளாக இருப்பதால், சில தசாப்தங்கள் மானிய செலவுகளை தாக்குப் பிடிக்க முடிந்தது. பொருளாதார நிலை கீழ்நோக்கி பயணம் செய்தவுடன் பிரச்சினைகள் கைமீறிப் போகின்றது.இதை சுலபமாக புரிந்து கொள்ள ஒரு தகவலை அவதானிக்கலாம். இந்த மானியங்களை அமேரிக்காவில் 1937ல் ஆரம்பித்தபோது, 53000 பேர் பயனாளிகளாக இருந்தார்கள். செலவு வெறும் 1.2 மில்லியன் டாலர்கள். ஆனால், 2008ம் ஆண்டு 5 கோடி பயனாளிகளுக்கான செலவு 615 பில்லியன் டாலர்களாக உருவெடுத்துள்ளது.1940ல் வேலையில் இருந்தவர்கள் 0.2 சதவிகித சம்பளத்தை அளித்ததனாலேயே பயனாளிகளுக்கு மானியங்களை அளிக்க முடிந்தது. 1950ல் அது 2 சதவிகிதமாக உயர்ந்து, தற்பொழுது 11 சதவிகிதமாக, பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

மானியங்களை நிறுத்தவோ / குறைக்கவோ முடியுமா?

நைஜீரியாவின் அனுபவம்:-

எண்ணெய் வளங்களை அதிகம் கொண்ட நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் 2011 வரை, ஒரு லிட்டர் பெட்ரோல் 24 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதற்கு அதிகமல்ல, வருடத்திற்கு 42000 கோடி ரூபாய்களை மானியமாக வழங்கி வந்தது நைஜீரிய அரசு. ஏனெனில் நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் அதே நேரத்தில், சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோலையும், டீஸலையும் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.2012 ஜனவரி 1ம் தேதி, பெட்ரோலின் விலை இரண்டு மடங்காக, அதாவது 48 ரூபாய் ஒரு லிட்டர் என்று விலை உயர்த்தப் பட்டது. நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கின.இந்த விலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை உபயோகித்து, புதிய சுத்திகரிப்பு நிலையங்களை தன் நாட்டிலேயே அமைக்க அரசு திட்டம் போட்டது.ஆனால் நடந்தது வேறு. எதிர்ப்புகளினால், 16 நாட்கள் கழித்து அதிபர் தடாலடியாக விலையைக் குறைத்து விட்டார்.இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் மிகவும் எளியது. மக்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட இலவசத்தை நிறுத்துவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.இந்த கதை நைஜீரியாவிற்கு மட்டுமானதல்ல. ஜோர்டானிலும் ஒரு முறை இப்படிப்பட்ட விலை ஏற்றம் வாபஸ் பெறப்பட்டது.வெனிஸுவேலாவில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு வெறும் இரண்டரை ரூபாய்தான். 1989ல் விலை ஏற்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் மூண்ட கலவரத்தில் 100 பேருக்கு மேல் இறந்தார்கள்.

மானியங்களுக்கு Creamy-Layer:-

முன்னாள் அமேரிக்க அதிபர் திரு.ரோனால்ட் ரீகன் இதை சரியாக கூறுவார்.

The right measures the success of a welfare program by how many people are able to get off it, the left measures the success of welfare programs by how many people get on it.

ஒரு உதாரணத்துடன் இந்த வாக்கியத்தை நோக்கலாம்.

திருபாய் அம்பானியின் விதவை மனைவியையும், என் தாயாரையும், என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டியையும் அவதானிக்கலாம்.

கோகிலா பென்னின் பணவசதியைப் பற்றி நான் கூற வேண்டியதில்லை.என் தாயாரைப் பற்றி கூறுகையில், நேரடியாக அவருக்கு பணவசதி இல்லையென்றாலும், என் தந்தைக்கு 17000 ரூபாய் ஓய்வூதியம் வருகிறது என்பதை குறித்துக் கொள்வோம். என் வீட்டில் வேலை செய்யும் மூதாட்டிக்கு இருக்கும் வசதிகளை நாம் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.மேற்கூறிய மூன்று வித பெண்களும், 60 வயது தாண்டிய மூதாட்டிகள். மூன்று பேருக்கும் சமையல் எரிவாயுவிற்கான மானியமும், ரயிலில் பயணம் செய்ய 50 சதவிகித மானியமும் அளிக்கப்படுகிறது. குளிர்சாதன பயணம் என்பதை மானியத்துடன் கூட உபயோகிக்கும் வசதி, வேலைக்கார மூதாட்டிக்கு இல்லை என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

இதைப் போன்ற கொடூரமான மானியங்களால், நாட்டிற்கு தம்புடிக்கும் பிரயோஜனம் கிடையாது.யாருக்கு மானியம், எந்த காலத்தில் மானியம், எந்த அளவிற்கு மானியம் என்ற கேள்விகள் எல்லாம் நம் நாட்டில் கேட்கப்படுவதே இல்லை. மூதாட்டி என்றால் மானியம்தான். பணக்கார மூதாட்டியாக இருந்தால்தான் என்ன?

மானியங்களை நிறுத்தவோ / குறைக்கவோ முடியாதா?

ஏன் முடியாது? இன்றைய இந்தியாவில், எனக்குத் தெரிந்தவரை ஒரு தலைவரால் மட்டுமே இந்த மானியங்களை குறைக்கவும் முடியும். இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லவும் முடியும். யார் அவர்? விடை கடைசி பாகத்தில்.

 

எல்லார்க்கும் எல்லாம்” இயற்கை நியதிக்கு, அறிவியலுக்கு எதிரானது:-

சார்ல்ஸ் டார்வினின் பரிணாம கொள்கையைப் போல் உலகில் முழுவீச்சுடன் ஆதரிக்கப்படுவதும், எதிர்க்கப் படுவதுமான கொள்கை ஒன்று உலகில் கிடையாது. என்னதான் வெள்ளையர்களை நாம் குற்றம் கூறிக் கொண்டிருந்தாலும், இந்த கொள்கையை கண்டுபிடித்தவரும், அதை முன்னெடுத்தவர்களும், ஆப்பிரகாமிய இறையியலை அந்த கொள்கையைக் கொண்டே எதிர்ப்பவர்களும், அதற்கான ஆதாரங்களை கண்டளித்தவர்களும் வெள்ளையர்களே! மேற்கத்திய நாடுகளில் எந்தளவுக்கு இந்த பரிணாம வளர்ச்சி கொள்கையை எதிர்ப்பவர்கள் இருக்கிறாற்களோ, அதற்கு மேலாகவே, அக்கொள்கையை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள் என்ற பட்டவர்த்தனமான உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நவீன அறிவியலை ஏற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை சந்தித்து வரும் இஸ்லாமிய சமூகங்களால் இந்த கொள்கையை முன்னெடுப்பதென்ன, ஆதரிப்பதில் கூட இன்றும் சிக்கல்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்திய சமூகம் தற்பொழுதுதான் சில மட்டங்களில், இது குறித்த பொது விவாதத்திற்கே
வந்துள்ளது.

கம்யூனிஸ சித்தாந்தம் தன் அரக்கத்தனமான கொள்கைகளை முன்னெடுப்பதற்கு உலகின் எந்த இறையியலும் தடையாக இருக்கும் என்று தீர்மானமாக நம்பியது. அரக்கத்தனமான கொள்கைகளை செயல்படுத்துவதற்காகவே, ஆப்பிரகாமிய இறையியலின், மனித உருவாக்கத்தை எதிர்க்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சியை கைக்கொண்டது. அதற்காகவே உலகின் அனைத்து இறையியலையும், அது சார்ந்த மரபுகளையும் கொச்சை படுத்துவதையும், நிராகரிக்கவும் செய்தது. மேலும், அந்த அரக்கர்கள் பதவியை கைப்பற்றிய அனைத்து நாடுகளிலும் அனைத்து இறையியலையும், மரபுகளையும் சிதைக்கவும் முயன்றனர். இந்தியாவில் கூட, தங்கள் கொள்கைகளை முன்னெடுக்க, குறிப்பாக “ஆப்பிரகாமிய இறையியலை” எதிர்ப்பதற்காக பரிணாம கொள்கையை ஆதரிப்பதையும் சர்வ சாதாரணமாகவே நம்மால் காண முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை, சாதாரணமான மக்கள் பரிணாம வளர்ச்சி கொள்கையை, இந்த குழுக்கள் ஆதரிப்பதைப் போலல்லாமல், அறிவியலுக்காக மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நான் பரிணாம வளர்ச்சியை ஆதரிப்பது, அதனால் ஆப்பிரகாமிய இறையியலுக்கு தொந்தரவு என்பதற்காக அல்ல, அது அறிவியல் என்பதற்காக மட்டுமே!

சரி, பரிணாம வளர்ச்சியைக் குறித்த இந்த முன்னுரையுடன், நான் ஒரு புத்தகத்தின் சில விளக்கங்களை இந்த கட்டுரைக்கு சான்றுகளாக எடுத்தாளப் போகிறேன்.

திரு.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய “The Selfish Gene” என்னும் புத்தகமே அது. “Nature is Wild”, இயற்கை கொடூரமானது என்று விவரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். ஆனாலும் பொதுவில் பேசும்போதும், எழுதும்போதும், கொஞ்சம் அடக்கி வாசிப்பதையே நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

உதாரணமாக உடல் ஊனமடைந்த விலங்குகள் காடுகளில் வாழ்வது சாத்தியமே அல்ல. அவை கொஞ்சம் கொஞ்சமாக பட்டினி கிடந்து சாகும். ஆனால், மனித சமூகம் தன்னிடமுள்ள ஊனமுற்றவர்களை அப்படி விட்டு விடுவதில்லை.

திரு.ரிச்சர்ட் டாகின்ஸ், இந்த சமநிலையை கொஞ்சமென்ன, அதிகமாகவே இந்த புத்தகத்தில் மீறியிருப்பார். ஆனாலும் “Over ஆகப் போகிறோம்” என்று அவரே நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த இடத்திலெல்லாம், மனித இனம் தன் மொத்த இனத்திற்காகவும் வாழ்கிறது என்று ஒரு வாக்கியத்தை போடுவார். (வாழ வேண்டும் என்றும் எழுத மாட்டார்)திரு.ரிச்சர்ட் டாகின்ஸின் ஆளுமையெல்லாம் எனக்கு கிடையாது என்பது மட்டுமல்ல, அவரைப் போன்று உயிரியல் துறையிலும் அனுபவம் கிடையாது என்னும் நிலையில் நான் இங்கு அதிகமாகவே அடக்கி வாசிப்பேன். எனினும் அவரின் இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள குறைந்த பட்சம் “Selfishness”, “Individual Selection”, “Group Selection”, “Competition”,”Altruism” போன்ற சில வார்த்தைகளையாவது நாம் அறிந்து கொள்வது அவசியம். Altruism என்பதை பொதுநலன் (சுயநலத்திற்கான எதிர்ப்பதம்) எனலாம். அடுத்தவர்களின் நல்வாழ்வின் மேல் கரிசனம் கொள்ளும் நிலை. இந்த வார்த்தை இக்கட்டுரைக்கு மிகவும் முக்கியமானது.

முதல்படியில் மனித மரபணு, தன் சுயத்தேவைக்காக சுயநலத்துடனேயே போராடும்.2வதாக, குழுவாக போராடினால் அதிகம் பேருக்கு அதிக இலாபம் என்ற படியால், மனிதன் சமூகமாகவும், சிறு சிறு குழுக்களாகவும் வாழ ஆரம்பித்தான். இதிலும் குழுவின் அளவில் அவனுக்கு சுயநலம் Selfishness உண்டு. தன் குழு உறுப்பினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள்தான் பிரதானமே தவிர மற்ற குழுவின் உறுப்பினர்களைப் பற்றி அக்கறை இருக்காது.3வது நிலையில், மனித இனம் மொத்தத்தையும் ஒரே குழுவாக வைத்துக் கொண்டு, அனைத்து மனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முயலும் போக்கு சில தசாப்தங்களாக அதிகரித்துள்ளது.4வது நிலையில், மனித இனம் மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டே மனித சமூகம் வாழ வேண்டும் என்ற கொள்கைகள் தற்காலத்தில் பலரால் முன்வைக்கப் படுகிறது.ஆனால், இந்த மனநிலை, “எந்த உயிர் சிறந்ததோ அதுவே வெல்லும்” “Survival of the Fittest” என்ற பரிணாம வளர்ச்சி கூறுக்கு முற்றிலும் வேறுபட்டது, எதிரானது.

தற்காலத்தில் மனித ஒழுக்க நெறிமுறைகளின் (Ethics) படி, எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்பதில் உயிரியலாளர்களிடையே விவாதம் நடக்கிறது. குடும்ப அளவிலா, நாட்டின் அளவிலா, இன அளவிலா, மொத்த மனித அளவிலா அல்லது அனைத்து உயிர்களின் அளவிலா? அதே நேரத்தில், இதற்கு எதிரிடையாக, உயிரியல் துறையில், பரிணாம வளர்ச்சியின் படி, எந்த அளவிற்கு பொதுநலன் தேவை என்பதும் ஒரு விவாதப் பொருளாக உள்ளது.

திரு.ரிச்சர்ட் டாகின்ஸின் புத்தகம் நமக்கு பல அரிய தகவல்களை ஒரு விதமான ஆச்சரியத்துடன் அளிக்கிறது. மேலும் நம்மை தெளிவாக சிந்திக்க வைக்கவும் தூண்டுகிறது.1940களில் பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பரிணாம வளர்ச்சியை நேருக்கு நேராக எதிர்க்க தொடங்கியது என்றே கூறலாம். உடலுறவு என்பது இனவிருத்திக்கான ஒரு வழி என்ற நிலையிலிருந்து உடல் சுகம் என்பதற்காக மட்டுமே இருக்க முடியும் என்ற அறிவியலின் ஆச்சரியமான முன்னெடுப்பு அது.

பரிணாம வளர்ச்சி ஏற்பட இனப்பெருக்கமும், அதற்காக உடல் உறவும், நம் உடலில் பின்னி பிணைந்துள்ள உந்து சக்தி. இந்த பரிணாம வளர்ச்சியை ஒரு படியில் எதிர்த்த பிறகு, எந்த அளவிற்கு எதிர்க்க முடியும் என்பதை விட எந்த அளவிற்கு எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியே நம் முன் தொக்கி நிற்கிறது.

என்னைப் பொறுத்தவரை, எந்த அளவிற்கு பொதுநலன் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை நம் மரபுகளிலிருந்தே பெற முடியும் என்று நம்புகிறேன். எந்த மனிதருக்கு, எந்த அளவிற்கு, எந்த சூழலில் மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதை தெளிவாகவே நம் முன்னோர்கள் எழுதி, அதை அனுசரித்தும் உள்ளனர். நான் பல மட்டங்களில் நவீனத்தை ஆதரிப்பவன். ஆகவே, சில மாற்றங்களை செய்து கொண்டு எளிதாகவே இந்த பிரச்சினையை அணுக முடியும்.
ஆனால், “எல்லார்க்கும் எல்லாம்” என்பதை எக்காலத்திலும் நம் முன்னோர்கள் ஏற்றதில்லை என்பதையும், அது நம் மொத்த மனித சமுதாயத்தையே அழிக்க வல்ல “பொது நலன்” என்றும் நான் தீர்மானமாகவே நம்புகிறேன்.

“Follow the Law in letter and Spirit” என்று கூறுவார்களே, அதைப் போன்று சில மாற்றங்களை காலத்திற்கேற்ற படி செய்து கொள்வது சரிதான். ஆனால் அது Spiritக்கு வெளியே போகாமல் இருக்க வேண்டும். இங்கு Spirit என்று நான் கூறுவது இயற்கை நியதியை.

தேவைப்படும் மானியங்கள்:-

இதுகாறும், பொதுவுடைமை என்னும் பெயராலோ, கருணையினாலோ அளிக்கப்படும் வரைமுறையற்ற மானியங்கள் எவ்வாறு கொடூரமானவை, அறிவியலுக்கு எதிரானவை, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பவை, ஒரு சமூகத்தை, அதன் கலாச்சாரத்தை அழித்தொழிப்பவை என்பதை என் பார்வையில் எழுதினேன்.

ஆனால் இந்த பகுதியில், மானியங்கள் என்பது சிலருக்கு, சில நேரங்களில் வேண்டும் என்பதை நான் நம்பும் சில காரணங்களின் அடிப்படையில் எழுத உள்ளேன்.

வலதுசாரித்துவத்தை ஆதரிக்கும் ஒருவனால், மானியத்தை ஆதரிக்க முடியுமா என்பது சுவாரசியமான விஷயம்தான்.என்னைப் பொறுத்தவரை, வாய்ப்புகள் சமமாக அளிக்கப்படும் ஒரு சமூகத்தில், மானியம் இருக்கக்கூடாது என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். அந்த சமூகத்தில், பணக்காரர்களும், ஏழைகளும் பல்வேறு பொருளாதார நிலையில் உள்ளவர்களும் இருப்பார்கள். இது இயற்கை நியதிதான். இது சரிதான்.

ஆனால், உலகில் இன்று எந்த நாட்டிலும், எந்த சமூகத்திலும் அனைவர்க்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. என்றுமே அளிக்கப்பட்டதுமில்லை. அளிக்கப்படப் போவதுமில்லை. எனவே, சமவாய்ப்பு என்பது வெறும் கனவுதான். ஆகவே சில சமாதானங்களை செய்து கொண்டுதான் ஆகவேண்டும்.அந்த சமாதானங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஒரு பார்வை உள்ளது. அதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு விஷயம். ஆனால், இதை படிக்கும் எவரும், கந்தலாக்கும் கம்யூனிஸமும், சோம்பலாக்கும் சோஷலிஸமும் முன்வைக்கும், “எல்லார்க்கும் எல்லாம்” என்பதை ஏற்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.சரி, என்னைப் பொறுத்தவரை Altruism, பொதுநலன் என்பது எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

(1)அனைவர்க்கும் சமவாய்ப்பு என்பது அடிப்படையில் உடல் நலனை ஆதாரமாக கொண்டது. “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்றுதானே கூறுவார்கள். அந்த உடல் நலன், உணவு மற்றும் தண்ணீரை ஆதாரமாக கொண்டது. ஆகவே என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு செலவு ஆனாலும் சரி, எந்த அளவுக்கு வரி விதிப்பு அதிகரித்தாலும் சரி, உணவு மற்றும் தண்ணீர் அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கப்பட்டே ஆக வேண்டும்.ஆனாலும், யாருக்கெல்லாம் இந்த வசதிகள் மானிய விலையில் வழங்கப்படக் கூடாது என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.

(2) உடல் ஊனமுற்றவர்களும் ஒரு சமூகத்தால் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அவர்களால் சமூகத்திற்கு பங்களிப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. உடல் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை எந்த சமூகத்திலும் குறைவாகவே இருக்கும். அவர்களை பராமரிப்பது அப்படி ஒன்றும் கடினமாக இருக்காது.

(3)ஆதரவற்ற குழந்தைகளை, 18 வயது முடியும் வரை அரசே, நம் வரிப்பணத்தைக் கொண்டு பராமரிக்க வேண்டும்.அவர்களுக்கு சொத்து இருந்தால், அச்சொத்தை அரசனே பராமரித்து, அக்குழந்தை வயதுக்கு வந்தவுடன் அளிக்க வேண்டும் என்று நம் ஹிந்து சமூக சட்டங்கள் பகரும்.

மேலும் உணவைத் தவிர, நவீன காலத்திய, நவீன மருத்துவ அற்புதங்களான “நோய் எதிர்ப்பு மருந்துகள்” “Vaccines”போன்றவையும் அளிக்கப்பட வேண்டும். தற்பொழுதும் இந்த வசதிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஏழைகள் அல்லாத குழந்தைகளுக்கும் இவை இலவசமாக அளிக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்படத்தான் வேண்டும்.

(4)ஆதரவற்ற விதவைகளையும், முதியவர்களையும் பராமரிக்க வேண்டும். ஆனால், பணவசதி பெற்றவர்கள் இந்த மானிய திட்டங்களிலிருந்து விலக்கப்பட வேண்டும்.

(5)இயற்கை பேரிடர் ஏற்படும் சமயங்களில் (மட்டும்), வரி விதிப்பிலிருந்து தற்காலிக விலக்கு, விவசாயம் மற்றும் தொழில் தொடங்க கடன் போன்ற வசதிகளை தற்காலிகமாக செய்து தருதல் வேண்டும்.

மேற்கூறிய மானியங்கள் புதியவையே அல்ல. இவற்றில் பெரும்பாலானவை நம் ஹிந்து மரபுகளில் பேசப்பட்டே வந்திருக்கின்றன. அவற்றை நாம் அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், இதைத்தவிர, ஏழை அல்லாதவர்களுக்கு தம்புடி பணம் கூட மானியமாக அளிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருத்தல் அவசியம்.

மேற்கூறிய மக்கள் வகைகளைத் தவிர, கம்பெனிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் மானியங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் நவீன காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.

நவீன பொருளாதார முறைமைகளை, உலகமயமாக்கலை ஒப்புக்கொண்டால் மட்டுமே, மேற்கொண்டு எழுதப்படுவதன் நியாயம் புரியும். மற்றவர்களிடம் விவாதித்து பயனில்லை.

குஜராத்தையே எடுத்துக் கொள்வோம். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் போராட்டங்களின் விளைவாக, டாடா நிறுவனம் தன் கார் தொழிற்சாலையை சிங்கூரிலிருந்து, குஜராத்திற்கு மாற்றிக் கொண்டது. இதற்காக பல மானியங்களை குஜராத் அரசு டாடா நிறுவத்திற்கு அளித்தது.

இவ்வளவு நேரம் நடுத்தர மக்களுக்கே மானியங்கள் அளிக்கக் கூடாது என்று கூறியவன், பணக்கார கம்பெனிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறானே என்று எண்ணலாம். மானியங்களை அளிக்க வேண்டும் என்று நான் கூற வில்லை. மானியம் அளித்தால்தான் நவீன பொருளாதார முறைமைகளில் வெல்லவே முடியும். வேறு வழியே இல்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மாநில அரசின் வரி விதிப்பிலிருந்து தற்காலிக விலக்கு போன்றவை மானியங்களாக டாடா கம்பெனிக்கு, குஜராத் அரசால் அளிக்கப்பட்டுள்ளன. 10 வருடங்கள் கழித்தும், மிகக் குறைந்த வட்டியிலேயே டாடா நிறுவனம் அரசுக்கு இந்த வரியை கட்டும்.

(1)குஜராத்தைப் போல பல மாநிலங்கள் டாடா தொழிற்சாலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர விரும்பின. இது அப்பட்டமான போட்டி யுகம். பல காரணிகளில் இந்த மானியங்களும் டாடாவின் முடிவிற்கு காரணம்.

(2)இந்தியாவில் எந்த மாநிலமும் மானியம் அளிக்க வில்லை என்றால், டாடா கம்பெனி, வேறு நாட்டிற்கே தொழிற்சாலையை கொண்டு சென்று விடும்.

(3) தொழிற்சாலைகள் உருவாகையில், வேலைவாய்ப்பு பெருகும்; வரி வருமானம் பெருகும்; மாநிலத்தின் தரம் (Image) உயரும்; அந்த தொழிற்சாலையைத் தொடர்ந்து வேறு தொழிற்சாலைகளும் முதலீடு செய்ய ஆரம்பிக்கும். கூட்டி கழித்து பார்க்கையில் மாநிலத்திற்கு இலாபமே அதிகமாக இருக்கும்.

மத்திய அரசு, தன் வரவு-செலவு அறிக்கையில், 2006 முதல் புதியதாக ஒரு விவரத்தை தர ஆரம்பித்திருக்கிறது. அதாவது,தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்குகளினால், அரசுக்கு எவ்வளவு வரி வருமானம் குறைந்தது என்ற தகவலை அளிக்கிறது.

ஹிந்துத்துவா அமைப்புகளில் அதிகம் பேசப்படும் திரு.குருமூர்த்தி, துக்ளக் பத்திரிகையில் இது குறித்து பலமுறை எழுதியுள்ளார். 2008ம் ஆண்டு அமேரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையின் தாக்கம் இந்தியாவில் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் கம்பெனிகளுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட ஆரம்பித்தன. 2011-12ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் ஏன் தொடர்கின்றன என்று திரு.குருமூர்த்தி கேட்கிறாரே தவிர, 2008ல் சலுகைகள் அளிக்கப்பட்டதை அவர் தவறு காணவில்லை. நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பணக்கார கம்பெனிகளுக்குக் கூட சில அசாதாரணமான சூழலில், சலுகைகளை அளித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்வோம்.

திரு.குருமூர்த்தி அளிக்கும் இந்த பிம்பத்தைத் தவிர வேறு ஒரு பார்வையும் உண்டு. சில பொருளாதார நிபுணர்கள் கார்பொரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்களை சரிதான் என்றும் கூறுகின்றனர். நான் அவர்கள் கூறுவதையே ஏற்கிறேன். டாடா நிறுவத்திற்கு குஜராத் அரசு அளித்த மானியங்கள் அசாதாரண சூழலில் அளிக்கப்பட வில்லை.எந்த ஒரு கார்பொரேட் நிறுவனமும், குஜராத்தில் முதலீடுகள் செய்தாலும் வசதிகள் அளிக்கப்படவே செய்கின்றன. நான் ஏற்கெனவே கூறியபடி, தொழில்துறை முன்னேறும்போது, அம்மாநிலத்தின் மக்களின் வாழ்க்கை தரமும் முன்னேறவே செய்யும். சிலர் நான் எழுதும் கருத்துடன் ஒத்துப் போகப்போவதில்லை. ஆனால் உண்மை இதுதான். விவசாயத்திலிருந்து தொழில்துறைக்கு உலகின் பல சமூகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இச்சூழலிலேயே இந்த மானியங்களை அவதானிக்க வேண்டும்.

மத்திய அரசு கடந்த 5 வருடங்களாக அளித்து வரும் வரி விலக்கினால் 25 இலட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு என்றும், கடந்த வருடம் மட்டும் 5 இலட்சம் கோடி ருபாய் இழப்பு என்றும் மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது.இந்த கூற்றில் பெருமளவில் உண்மை இல்லை. கார்பொரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக அளிக்கப்பட்ட வரிவிலக்கு வெறும் 50000 ரூபாய்கள்தான். மற்றவை கலால் வரி,ஏற்றுமதி வரி போன்றவற்றில் அளிக்கப்பட்ட வரி விலக்குகள்தான்.
இந்த வரிகள் குறைக்கப்பட்டதால், பொது மக்களும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கியுள்ளனர் என்பதை தெளிவாக நாம் உணர வேண்டும்.

அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்த ஒவ்வொரு நாடும், இறக்குமதியை விட ஏற்றுமதியை அதிகம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே ஏற்றுமதியை ஊக்குவிக்க உலகின் அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு வகையில் வரிவிலக்கை அமல் படுத்தவே செய்கின்றன. இவைகளில் ஊழல் இல்லை என்றோ, அனைத்து வரிவிலக்குகளும் பயனளிப்பவை என்றோ என்னால் வாதிடமுடியாது. ஆனால் அடிப்படையில் இந்த வரிவிலக்குகளை நான் ஆதரிக்கிறேன்.

http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/tax-exemptions-it-s-not-just-the-fat-cats-who-benefit

பணக்கார பன்னாட்டு கார்பொரேட் நிறுவனங்கள் என்று கம்யூனிஸ்ட் கொரில்லாக்களைப் போன்று அழுது ஆர்பாட்டம் செய்வதால் பயன் ஒன்றும் இல்லை.

(தொடரும்..,)

கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1

சுதந்திரத்திற்காக போராடியவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு.நேரு அவர்கள் 1936ல் கூறியது –

“காங்கிரஸ் கட்சி வலுவுடன் வளர்ந்ததற்கு காரணம், நான் பொதுவுடைமை கொள்கைகளுக்காக குரல் கொடுத்ததனால் தான்.”

ஆனால் என்னைப் போன்றவர்களால் பொதுவுடைமையை எங்களுக்கு புரிந்த இயற்கை நியதிகளின்படி ஏற்றுக் கொள்ள இயலவில்லை.121 கோடி மக்களில் பெரும்பான்மையானோர் பொதுவுடைமை என்றால் என்ன என்று கூட தெரியாத நிலையில், அதன் முன்னெடுப்புகளை ஆதரிக்கலாம். பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு வளங்களை அளிக்க வேண்டும் என்று போராடலாம். ஜனநாயகம் இருப்பதாலும் ஏழைகளே பெரும்பான்மையாக இருப்பதாலும், அவர்களின் ஓட்டுகள் இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதாலும் இலவசங்களையும் மானியங்களையும் அள்ளிவழங்குபவர்களே ஆட்சிக்கும் வரலாம். சுதந்திரம் அடைந்து 65 வருடங்கள் ஆகியும், எங்கள் நாட்டின் பொருளாதாரம் இந்த வழியில்தான் செல்லும் என்று கூற முடியாதவர்கள் இருக்கலாம். கடைசியாக சீனாவைப் போன்றோ, சோவியத் யூனியனைப் போன்றோ, ஓர் அரக்க ஆட்சி இந்தியாவில் ஏற்படவும் செய்யலாம். ஆனால் எந்த நிலையிலும்,பொதுவுடைமையை ஆதரிக்காத என்னைப் போன்ற ஒரு சிலர் இருக்கவே செய்வார்கள். இந்த நிலைப்பாட்டிற்க்காக என் உயிரை கொடுப்பேன் என்று வீர வசனம் பேச என்னால் முடியவில்லை. ஆனால் பல்வேறுபட்ட பொருளாதார நிலைகளில் ஒரு சமூக மக்கள் வாழ்வது இயற்கையே என்ற அடிப்படை கொள்கையை விட்டுக்கொடுக்க இயலாது.

அமேரிக்காவில் வாழ்ந்த திரு.விட்டேக்கர் சேம்பர்ஸ் அவர்கள் 1948ல் கூறியது –

“நான் வெல்லும் குழுவை விட்டுவிட்டு தோற்கும் குழுவை தேர்ந்தெடுத்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் பொதுவுடைமை சமூகத்தில் வாழ்வதை விட, தோற்கும் குழுவில் இருந்து கொண்டு உயிர் விடுவதே மேல்”

திரு.ஜவஹர்லால் நேரு கைக்கொண்ட சோஷலிஸ கொள்கைகள் குறித்து, ஆறு வருடங்கள் கழித்து காந்திஜி கூறியதை கடைசி பகுதியில் பார்க்கலாம். இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

முக்கிய எச்சரிக்கை:-

திரைப்படங்களைப் போலவே இக்கட்டுரைக்கான சான்றிதழை “A-Adults Only”என்று நானே கூறி விடுகிறேன்.அதாவது இது குழந்தைமனம் கொண்டவர்களுக்கான கட்டுரை அல்ல. ஆபாசத்திற்காகவோ, வன்முறைக்காகவோ அல்லாமல் தைரியமாக சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பழைய திரைப்பட பாடலொன்று நினைவுக்கு வருகிறது. “திருடாதே பாப்பா திருடாதே” என்று ஆரம்பிக்கும். அப்பாடலில்வரும் “இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்” என்ற வரி பலருக்கு நினைவுக்கு வரலாம்.இந்த கோஷத்தின்”தாயாதி பங்காளி கோஷங்கள்”உலகெங்கும் வெவ்வேறு வகைகளில் விண்ணை பிளந்து கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்காக, ஆம் ஆத்மிக்காக (பொது ஜனத்திற்காக), விவசாயத்திற்காக, கல்விக்காக, மருத்துவத்திற்காக, ஓய்வூதியத்திற்காக என்று பல “காக”க்களுக்காக மலை போல மானியங்களை உலகின் அனைத்து நாடுகளும் ஏதோவொறு வகையில் அளித்து வருகின்றன.

முழுமையான பொதுவுடைமை சமுதாயம் என்பது எவ்வாறு

(அ) இயற்கை நியதிகளுக்கு எதிரானது.
(ஆ) அறிவியலுக்கு எதிரானது.
(இ) நடைமுறை எதார்த்தத்திற்கு எதிரானது.
(ஈ) மனிதனின் நாகரீக முதிர்ச்சியில் நாம் அடைந்த வளர்ச்சியை பின் நோக்கி கொண்டு செல்லக் கூடியது.
(உ) மானுட தேடலின் உச்சமான நம் ஹிந்து மரபுகளுக்கு எதிரானது என்பதை
நிறுவ முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

எச்சரிக்கை-1:-

பொது உடைமை சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம்.

என்னைப்போன்றவர்கள் கூறுவதை நீங்கள் ஏற்று கொள்ள போவதில்லை. நீங்கள் கூறுவதை என்னை போன்றவர்கள் எங்கள் உயிருள்ளவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.முன்னாள் அமேரிக்க அதிபர் திரு.Ronald Reagon இதை சரியாக கூறுவார்.

“Communism is evil, we (Right and Left) have philosophical differences, This war will be eternal”

மனித குலம் உள்ளவரை இந்த போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

எச்சரிக்கை-2:-

இந்த கட்டுரையில் அரசாங்க வேலையில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். என் கருத்துபடி பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் ஊதியம், வேலை உத்திரவாதம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கு தகுந்த வேலைத்தரத்தை காண்பிப்பதில்லை என்று தீர்மானமாக நம்புகிறேன். இன்று ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்கள் அவர்களால் மனமுவந்து அனுசரிக்கப்படவில்லை. மாறாக, அரசாங்க கொள்கைகள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள், குறிப்பாக பொதுமக்களுக்கு அவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் கடுமையான கோபங்கள் ஆகியவையே அவர்களில் சிலரை காலத்திற்கேற்றபடி மாற வைத்திருக்கிறது. எனினும் களையெடுக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் உளர்.

முன்குறிப்பு-1:-

இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்.இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் அனுசரிக்க வேண்டிய சில பொதுவுடைமை கூறுகளை, நாம் நமது மரபுகளிலிருந்தே தெளிவாக பெற முடியும். அவசியமில்லாமல் மேற்கத்திய கூறுகளை அனுசரிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் சந்தை பொருளாதார முறைமைகளை மேற்கத்திய நாடுகளிலிருந்தே நாம் பெற்றாக வேண்டும்.குறிப்பாக வங்கி செயல்பாடுகள், காப்பீட்டு முறைமைகள், தொலைத் தொடர்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள் என்று நவீன காலத்திய பொருளாதார முறைமைகள் மேற்கத்தியர்களாலேயே முன்னெடுக்கப்பட்டு முதிர்ந்திருக்கின்றன.இதை மறுப்பது மூடத்தனமே!

மேலும் கம்யூனிஸத்தை எதிர்ப்பவர்கள், அந்த சித்தாந்தத்தின் இறையியலை எதிர்க்கும் கூறுகளுக்காகவும், மரபுகளை அழிக்கும் முன்னெடுப்புகளையும் முன்னிறுத்தியே எதிர்ப்பார்கள். இக்கட்டுரையை பொருத்தவரை, கம்யூனிஸம் முன்வைக்கும் “எல்லார்க்கும் எல்லாம்” என்ற பொதுவுடைமையை,பொருளாதார கண்ணோட்டத்துடனேயே எதிர்க்கிறேன்.

முன்குறிப்பு-2-என் தகுதி:-

நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல. இதை முதலிலேயே தெளிவு படுத்தி விடுகிறேன். ஆகவே பொருளாதார சொல்லாடல்கள் இந்த கட்டுரையில் இருக்காது.

என் அனுபவத்தின் அடிப்படையிலும், உலக நடப்புகளின் அடிப்படையிலும், மனிதனின் மனநிலையை ஒட்டியும், இயற்கை நியதியைப் பற்றின என் புரிதலின் அடிப்படையிலும் மட்டுமே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

முன்னுரை:-

மஹாபாரத்தில் குருஷேத்திர யுத்தம். துரோணரின் தாக்குதலை தாங்க மாட்டாமல் சிதறி ஓடுகிறது பாண்டவர்களின் படை. உண்மை பேசுவதை வாழ்க்கை நெறியாகவே கொண்டிருக்கும் தர்மபுத்திரனை ஒரு பொய் கூறச்சொல்கிறான் பகவான் கண்ணன். “அஸ்வத்தாமன் என்னும் யானை இறந்தது” என்றும் கூற வைக்கிறான். மீதி கதை நமக்கு தெரியும்.

தர்மபுத்திரனை ஒரு பொய் கூற வைக்க கண்ணன் பட்ட பாடு இன்றைய நிலையில் சிரிப்பையே வர வழைக்கிறது. ஏனெனில் இது நவீன யுகம். உண்மைக்கு பதிலாக பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, அது புனிதத் தன்மையையும்பெறும் யுகம்.

ஆனால், தர்மபுத்திரன் கூறிய வாக்கியத்திற்கும், இன்றைய நிலைக்கும் ஒரு முக்கிய ஒற்றுமையும் உண்டு. அதாவதுஉண்மையின் ஒரு பகுதி ஈனஸ்வரத்திலேயே அன்றும் கூறப்பட்டது. இன்றும் கூறப்படுகிறது. உண்மையை எப்படிமறைத்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும் என்ற மானுடத்தின் அதி உச்ச குணாம்சத்தின் ஒரு துளி இன்னும் மிஞ்சியிருக்கிறது.

பொருளாதார நிலையைத்தான் நான் சுட்டி காட்டுகிறேன். இன்றைய குரல்களில் சில இப்படி இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் திரு.பிரணப் முகர்ஜி- எந்த வகையிலாவது மானியங்களை அளிக்கும் திட்டங்கள் தொடரும்.மானியங்களின் அளவை நினைத்தால் எனக்கு தூக்கமே வருவதில்லை. (ஈனஸ்வரத்தில்)

முன்னாள் தமிழக முதல்வர் திரு. கருணாநிதி- ஏழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடரும். ரேஷன் கார்ட் உள்ள அனைவர்க்கும் இலவசங்கள் வழங்கப்படும்.இலவசங்கள் சமூகத்தை சோம்பலாக்கும் (விவரம் அறிந்தவர்களின் குரல்-ஈனஸ்வரத்தில்)

தொழிலாள வர்க்கத்தினை காப்பதே எங்களின் நோக்கம் (கம்யூனிஸ்டுகள்) ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் விமான ஓட்டிகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.மாதம் ஒன்றரை இலட்சம் சம்பளம் வாங்குபவர்கள் தொழிலாள வர்க்கம் இல்லைதான். (ஈனஸ்வரத்தில்)

மேற்குறிப்பிட்டதைப் போன்ற ஈனஸ்வரங்கள் மழுங்கி ஒலித்தாலும், “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நடைமுறை சாத்தியமற்ற பொய்கள், பகட்டு வார்த்தை ஜாலங்களால் வெகுஜன ஊடகப்ரிய வாக்கியமாக மாறி விட்டது. இது இந்தியாவிற்கு மட்டுமான பொய்யல்ல. ஐரோப்பா முதல் அமேரிக்கா வரை கொரியா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தவிஷ வாக்கியத்தின் தாக்கம் இருக்கிறது.

தற்பொழுதைய உலக பொருளாதார நிலை இச்சூழலுக்கு சாமரம் வீசுகிறது. கடந்த பல தசாப்தங்களாக, வரவுக்கு மேல் செலவு செய்து வரும் ஐரோப்பிய மற்றும் அமேரிக்க நாடுகள், மேலும் கடன் வாங்க விழி பிதுங்கி நிற்கின்றன.

ஆகவே, 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான். கார்ல் மாக்ஸின் அடிவருடிகளும், பித்தம் தலைக்கேறி இருக்கும் கருணைக்காவலர்களும், ஊடகங்களும், அந்த அரக்கனின் தீநாக்குகளுக்கு நெய்யை ஆகுதியாக அளித்து வருகின்றன.

“சத்யம் வத ப்ரியம் வத” என்றுதான் நம் மரபுகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் இந்த கட்டுரை எள்ளளவும் அவ்வாக்கியத்தை அனுசரிக்காது. பொய்களின் பல்முனை தாக்குதல் நிலவும் இன்றைய சூழலில், மனித சமுதாயம் மீள முடியாத அசட்டுத்தனத்தை நோக்கி வீறுநடை போட்டு கொண்டிருக்கும் சூழலில் எழுதப்படும் கட்டுரை இது.

Ponzi Schemeகளின் உலகளாவிய வளர்ச்சி:-

அமேரிக்காவில் திரு.பான்ஸி என்பவர்தான் முதலில் சீட்டு கம்பெனி வியாபாரத்தில் பெரிய அளவில் மக்கள் பணத்தைசுருட்டிக் கொண்டு ஓடியவர். அவரின் பெயரினாலேயே இது போன்ற திட்டங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த திட்டம் மிகவும் எளிமையானது. 45 நாட்களில் 50 சதவிகித வட்டி, 90 நாட்களில் 2 மடங்கு பணம் என்று அவர்தன் வியாபாரத்தை ஆரம்பித்தார். பேராசை பிடித்த மக்களுக்கு உலகில் என்றுமே குறைவு இல்லாததால், அவரின்திட்டத்திற்கு நல்ல கிராக்கி. திட்டத்தை தொடங்கியவர், சில காலங்களுக்கு அதிகப்படியான வட்டியை அளிக்கவும்செய்தார். புதியதாக சேர்பவர்களின் பணத்தைத்தான், அதிக வட்டியாக பழைய வாடிக்கையாளர்களுக்கு அளித்தார். இதுதெரியாத பொது மக்கள், பெரிய அளவில் திட்டத்தில் சேர்ந்தார்கள். ஒரு நிலையில், அவரால், அதிகப்படி வட்டியைஅனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்க முடியாது போனது. பொது மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டுஓடி விட்டார்.

தமிழகத்தில் நடந்த “அனுபவ் ஃபௌண்டேஷன்” தொடங்கி, அமேரிக்காவில் 2 வருடங்களுக்கு முந்தி ஏமாற்றியபர்னி மேட்ஆஃப் வரை ஒரே கதைதான்.

சீட்டு கம்பெனி என்றால் முதலாளி ஓடி விடுவார். ஒரு நாட்டின் அரசே இது போன்ற திட்டங்களை நடத்தினால்?உங்களால் நம்ப முடிகிறதா? அமேரிக்கா தொடங்கி, இந்தியா வரை, இது போன்ற மக்கள் நல திட்டங்கள் என்னும்பெயரில் சீட்டு கம்பெனி வியாபாரம் தான் நடந்து கொண்டிருக்கிறது. சீட்டு கம்பெனி சில காலத்திலேயே மூடி விடும்.ஆனால் அரசாங்கமே நடத்துகிறதல்லவா! சில தசாப்தங்கள் தாங்கி பின்னர் சந்தி சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. சிலதிட்டங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அதிர்ச்சி வைத்தியத்தின் அவசியம்:-

கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்னால், நம் நாட்டில் இருந்தவர்கள் சடங்குகளின் பிடியில் சிக்கியிருந்தனர்.பிறந்ததிலிருந்து இறப்பது வரை ஏதேனும் வேத சடங்குகளை செய்த வண்ணம் இருந்தனர். மேலும் அச்சடங்குகளை செய்வது மட்டுமே மனித ஏற்றத்திற்கு அவசியம் என்றும், வேதாந்தங்கள் உதாசீனம் செய்யப்படவேண்டியவை என்றும் கூறி வந்தனர். இச்சூழ்நிலையில்தான் காலடியில் என் அப்பன், சங்கரன் பிறந்தான். குமரில பட்டருக்கும், மண்டன மிஸ்ரருக்கும், அவர் வழி சென்றவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தான். சடங்குகளின் உதவியினாலேயே, சடங்குகளை கடந்து, உன்னத மனித அனுபவங்களை அடைய முடியும் என்றும் அதுவே வேதங்களின் முடிவான தீர்ப்பு என்பதையும் உறுதியாக நிறுவினான்.

அதுகாறும் அனுசரித்த “சடங்குகள் மட்டுமே ஒரே வழி” என்ற விளக்கத்தை வேரோடு, வேரடி மண்ணோடு பிடுங்கிபோட்டான். அக்காலத்திய மனிதர்களுக்கு, பல தலைமுறைகளாக அனுசரித்த விளக்கங்களை, மாற்றிக் கொள்வதுஎவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாம் எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும்.

நம் போன்றவர்களும், வாழ்க்கையில் பல அதிர்ச்சிகளை சந்தித்திருப்போம்.

சமீபத்தில் “Vicky Donor” என்னும் ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். படத்தின் விமர்சனத்தை விட்டு விடுவோம். கதாநாயகன், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலினால், தன் விந்தணுக்களை விலைக்கு கொடுக்கிறான். அவனின்விந்தணுக்களின் மூலமே 53 குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர் கூறுகிறார். இது என்னுள் பல அதிர்வலைகளைஏற்படுத்தியது. இது போன்ற அறிவியல் நிகழ்வுகளினால் மனித சமூகம் எத்திசையில் போகும் என்ற அச்சம் உடனடியாக ஏற்பட்டது. இவை அனைத்தும் மனதின் விளையாட்டுகள்தான். சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்டுயோசித்தால், வரலாறு முழுவதுமே இது போன்ற அதிர்ச்சிகளை சமூகம் சந்தித்தே வந்திருக்கிறது. சங்கரன் அளித்தஅதிர்ச்சி, ஒரு மனிதனின் சுயத்தை பற்றியது. அறிவியலிலும், கலிலியோ, டார்வின் என்று அனைவரும் அதிர்ச்சிகளையே மனித சமூகத்திற்கு அளித்தார்கள்.

சப்பாத்தியின் கணக்குகள்:-

சந்தை பொருளாதார முறைமையை விளக்க ஒரு உதாரணம் கூறப்படும். சிறிய மாறுதலுடன் அக்கதையை நோக்கலாம்.

ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். குடும்ப வருவாயாக ஒரு சப்பாத்தி இருந்தால், அது அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதையே ஒரு நாட்டிலுள்ள அனைவர்க்குமான பெரிய சப்பாத்தியாக ஊகித்துக்கொண்டு, அதை அனைத்து மக்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க முயற்சித்தால்? பொதுவுடைமையின் எளிமைப் படுத்தப்பட்ட விளக்கம் இதுதான்.

கேட்பதற்கு மிகவும் குஷியாக இருக்கும் இந்த முறையை நடைமுறை படுத்தினால், சில தசாப்தங்களிலேயே,அச்சமூகம் முற்றிலுமாக அழிந்துவிடும். இந்த முறையில் பல குறைபாடுகள் உண்டு. அடிப்படை குறைபாடு”எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கைதான்.`இந்த சப்பாத்தியை, வெறும் உணவாக மட்டுமல்லாமல், உணவுடன் சேர்த்து இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை வாழ்வாதாரங்களை சேர்த்து உள்ளடக்கிய ஒரு குறியீடாக எடுத்துக் கொள்வோம்.

இந்தியா என்ன, உலகின் அனைத்து நாடுகளும் இந்த சப்பாத்தியின் ஒரு பகுதியை, ஒதுக்கி வைத்து விடுகின்றன. அதைகுறைவான விலைக்கு அல்லது இலவசமாக சில குடிமக்களுக்கு வழங்குகின்றன. வேறொரு பகுதி பொதுவில் வைக்கப்பட்டு, அவரவர்களின் சாமர்த்திய அளவை பொறுத்து, பெரியதாகவோ, சிறியதாகவோ பெற்றுக் கொள்கிறார்கள்.

அனைத்தையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கம்யூனிஸ்டு கொரில்லாக்களின் வாதம். அதுமுடியாத போது, இந்தியா போன்ற நாட்டிற்கு 3 வழிகளே உள்ளன.

ஒன்று, சப்பாத்தியை குறைவாக உபயோகப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். நவீன வாழ்க்கை முறையை முற்றிலுமாகவிட்டு விட்டால் மட்டுமே இது சாத்தியம்.

இரண்டு, சப்பாத்தியின் அளவை பெரிதாக்க வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே இது சாத்தியம்.

மூன்று, சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்.

கம்யூனிஸ்ட் ஸ்டாலின் 3வது வழியை, அதாவது உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதை, சோவியத் யூனியனில் நடைமுறை படுத்தினார். பஞ்சம் தலைவிரித்தாடுகையில், சாமர்த்தியம் உள்ளவர்கள் மட்டும் எஞ்சட்டும், மற்றவர்கள் மாண்டு போகட்டும், மாஸ்கோவிலிருந்து நாம் தலையிட வேண்டாம், தானியங்களை அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்த வெறியன்.

இந்தியாவில் நமக்கு 3வது வழி விலக்கப்பட வேண்டியது. ஆனால் இரண்டாவது வழி, அதாவது பொருளாதார மேன்மையை அடைய வேண்டும் என்று கூறிக்கொண்டே இந்தியாவின் மத்திய அரசுகள், சப்பாத்தியின் பெரும் பகுதியை தனியாக ஒதுக்கி வைத்து விடுகின்றன. இதனாலேயே பொருளாதார மேன்மைக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுகட்டைகள்முளைக்கின்றன.

சப்பாத்தியின் ஒரு பகுதி ஒதுக்கி வைக்கப் பட்டு சிலருக்கு இலவசமாகவோ, குறைந்த விலையிலோ அளிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே! ஆனால் எந்த அளவில் என்பதும், யார் யாருக்கு மானியத்தில் அளிக்கவேண்டும் என்பதிலேயே பிரச்சினை.

குழந்தை கணக்குகள்:-

திரைப்படங்களை நகைச்சுவையுடன் கிண்டலடிக்கும் “லொல்லு சபா” நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். நடிகர்திரு.தனுஷ் அவர்களின் ஒரு திரைப்படத்தை கிண்டலடிக்கும் நிகழ்ச்சியில் வரும் காட்சி இது.

தனுஷை வில்லனிடம் அறிமுகப்படுத்துகிறான் வில்லனின் ஒரு அடியாள்.

வில்லன்: டேய் குமாரு,யார்ரா இவன்?அடியாள்: செல்வராகவனோட தம்பி.வில்லன்: யார்ரா செல்வராகன்?அடியாள்: கஸ்தூரி ராஜாவோட பையன்.வில்லன்: யார்ரா கஸ்தூரி ராஜா?அடியாள்: சூப்பர் ஸ்டாரோட சம்பந்தி.வில்லன்: யார்ரா சூப்பர் ஸ்டாரு?அடியாள்: ஐஸ்வர்யாவோட அப்பா?வில்லன்: யார்ரா ஐஸ்வர்யா?அடியாள்: இவனோட பொண்டாட்டி.வில்லன்: இவன் யார்ரா?

எங்கு சுற்றினாலும் ஒரே இடத்திற்கு வரும் இந்த காட்சியைப் போலத்தான், இன்றைய பொருளாதார நிபுணர்கள் மானியங்களைக் குறைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி அளந்து விட்டு “ஏழைகளுக்காக” ஜோதிக்கே திரும்பிவிடுவார்கள். அதுகாறும் அவர்கள் ஆணித்தரமாக நிறுவிய விளக்கங்களை, ஏழைகளுக்கான மானியங்கள் அடியோடு புரட்டிப்போட்டு விடும் என்று தெரியாதவர்களா? அப்படி இல்லை. நம் சமூக பிரக்ஞையிலேயே “எல்லார்க்கும் எல்லாம்” என்ற கோஷம் பின்னி பிணைந்துள்ளது..இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 45 வருடங்கள், கம்யூனிஸ வெறித்தனத்தின் தம்பியாகிய சோஷலிஸ கிறுக்குத்தனத்தினை அனுசரித்ததால், இடது சாரி பொருளாதார நிபுணர்களை மட்டுமே பொதுவில் காணமுடியும். 1991க்கு பிறகு சோஷலிஸத்தின் எச்ச-சொச்ச தாக்கங்களுடன் சிலர் “மைய-வலது” “Centre-Right” என்ற நிலையில் பொருளாதாரத்தைப்பார்க்கும் போக்கை சமீபத்தில் நம்மால் காண முடிகிறது. தைரியமான வலதுசாரிகளே இந்தியாவில் இல்லை என்றே கூறி விடலாம். உண்மை நிலையை கூறினால், “ஏழைகளுக்கு விரோதி” என்ற பட்டப்பெயர் கிடைக்குமாதலால் யார்தான் முன் வரமுடியும்?

ஔட்லுக் பத்திரிகையின் ஆசிரியர், திரு.வினோத் மேத்தா ஒரு பேட்டியில் இந்த நிலையை, தன் வாழ்க்கை அனுபவமாகஎடுத்து வைத்தார்.

“நான் அரசியல் ரீதியாக இடதுசாரியாகவே என் பயணத்தைத் துவங்கினேன். கம்யூனிஸ்டாக அல்ல. அரசு, சமூகத்தின் பல அம்சங்களில் தலையிட வேண்டும் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். தற்பொழுது நான் மாறி விட்டேன். அமர்த்யா சென் எடுக்கும் முடிவுதான் சரியென்று தோன்றுகிறது. சந்தை பொருளாதார முறையை நம்புகிறேன். ஆனால் அதனால் கிடைக்கும் வரி வருமானத்தை சமூகத்தில் செலவு செய்ய வேண்டும்.”

திரு.வினோத் மேத்தாவின் நிலையில்தான் இன்று இந்தியாவில் பலர் உள்ளனர். இடதுசாரி பொருளாதார கொள்கையைஅனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனாலும், இடதுசாரித்துவத்தின் தாக்கம் இன்னும் இருப்பதால், மானிய திட்டங்களை அரசே பெரியஅளவில் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். நான் இந்த நிலையிலிருந்து வேறுபடுகிறேன்.

நான் வலதுசாரித்துவம் என்னும்போது, பொருளாதார வலதுசாரித்துவத்தையே பேசுகிறேன். அதிலும் அமேரிக்காவிலும்சரி, ஐரோப்பாவிலும் சரி, நாட்டிற்கு நாடு வலதுசாரித்துவத்தின் விளக்கங்கள் வேறுபடுகின்றன. என்னைப் போன்றவர்களால் அவற்றோடு ஒத்துப்போக முடியாது. ஆனாலும், வேறு வார்த்தைகள் இல்லாததால் “வலதுசாரி” என்ற அடைமொழியை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இந்த கட்டுரையை முழுவதும் வாசித்த பிறகு, நான் குறிப்பிடும் வித்தியாசங்கள் புரிபடலாம்.

அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் என்ன வாழ்கிறது? என்று கேட்கலாம். அரசியல்வாதிகளில் வலதுசாரிகள் என்று கூறிக் கொள்பவர்கள்தான் இருக்கிறார்களே தவிர உண்மையில் அவர்களை வலதுசாரிகளாக அடையாளப் படுத்தவே முடியாது. அது ஒரு பெரிய கதை. ஆனாலும் ஊடகங்களில் தெளிவாக தீர்மானமாக அமேரிக்க அரசு அளித்து வரும் மானியங்களை விமர்சிக்கும் தைரியமானவர்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கிறார்கள்.

இக்கட்டுரை “எல்லார்க்கும் எல்லாம்” என்ற விளக்கத்தை முழுமையாக நிராகரிக்க முயலும் என்பதை ஏற்கெனவே கூறிவிட்டேன். ஆனால் ஒரு உதாரணத்திற்காக, ஒரு பேச்சிற்காக “எல்லார்க்கும் எல்லாம்” என்ற சமுதாயத்தை அடைய,சில காரணிகளுக்கு ஆகும் செலவை கணக்கு போட்டு பார்த்தேன். இதில் மனிதனின் வாழ்வாதாரங்களாக முன்வைக்கப்படும் பல காரணிகளில் கல்வி, மருத்துவம் என்ற இரண்டே இரண்டு அம்சங்களை மட்டும் எடுத்து கொள்ளலாம்.

அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரத்தில் சீரான கல்வி அளிக்க தேவைப்படும் நிதி – 9.25 இலட்சம் கோடி ரூபாய்கள்அனைத்து மக்களுக்கும் ஒரே தரத்தில் மருத்துவம் அளிக்க தேவைப்படும் நிதி – 5.5 இலட்சம் கோடி ரூபாய்கள்

மத்திய அரசின் 2012-13 பட்ஜெட்டின் படி, ஒரு வருடத்திற்கு இந்தியாவின் மொத்த செலவு 15 இலட்சம் கோடி ரூபாய்கள்.

(இந்த செலவு கணக்குகள் மத்திய அரசின் இணைய தளங்களிலிருந்து பெறப்பட்டு இன்றைய விலைவாசியுடன் பொறுத்தி பார்த்தே அடையப்பட்டது.விவரங்களை பிறகு பார்க்கலாம்)

தவிரவும், அரசின் செலவுகளான ஓய்வூதியம், விவசாயம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், நஷ்டத்தில் நடந்துகொண்டிருக்கும், நடக்கப்போகும் ஏர்-இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அதே நஷ்ட நிலையிலேயேவைத்துக்கொள்ள அளிக்கப்படும் மானியங்கள், சாலை வசதிகள் போன்ற கட்டமைப்புகள் என்று அனைத்து செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்-வேண்டாம்டா சாமி! போதும் இந்த கணக்கு!

பொருளாதாரத்தில் சில விளக்கங்கள்:-

கம்யூனிஸம்:-

ஒரு நாட்டின் அரசு, அனைத்து வளங்களையும் தன் வசம் வைத்து கொண்டு எல்லா மக்களையும் ஒரே தரத்தில் நடத்தும் முறையை கம்யூனிஸம் என்று கொள்ளலாம். புத்திஜீவிகளின் வரையரை வேறுவிதமாக இருக்கும்.

எளிமையாக கம்யூனிஸத்தை புரிந்து கொள்ள பழைய சோவியத் யூனியனை கவனிக்கலாம். எல்லா விவசாய நிலங்களையும் அரசே கையகப் படுத்திக்கொண்டு மக்களை வெறும் வேலை மட்டும் செய்ய சொல்லியது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உணவு, குழந்தைகளின் படிப்பு, மருத்துவம் போன்ற அனைத்தையும் அரசே செய்யும். சரியாகக் கூறுவதானால் செய்வதாக போக்கு காட்டும். இன்னும் ஒரு படி மேலே செல்ல நாம் க்யூபாவை கவனிக்கலாம். காஸ்ட்ரோவின் ஆட்சியில் மருத்துவருக்கும் ஒரே சம்பளம், கம்பௌண்டருக்கும் ஒரே சம்பளம். ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த ரவுல் காஸ்ட்ரோ இந்த கிறுக்கு முறையை நீக்கி விட்டார் என்பதை குறித்துகொள்வோம்.

சோஷலிஸம்:-

இந்த முறையில் அரசு பெரும்பான்மையான துறைகளை தன்வசமே வைத்து கொண்டிருக்கும். ஆனாலும் சில துறைகளில்பல கெடுபிடிகளுக்கு உட்பட்ட அளவில் தனியாரும் ஈடுபடுவர். 1991க்கு முன் இந்தியாவில் இந்த முறைதான் கைகொள்ள பட்டது.

சந்தை பொருளாதார முறை: (Market Economy):-

இந்த முறையில் அரசு மிகவும் முக்கியமான துறைகளை மட்டும் தன்வசம் வைத்திருக்கும். பாதுகாப்பு போன்ற துறைகளை தவிர்த்து அனைத்து துறைகளிலும் தனியார்கள் அனுமதிக்க படுவார்கள். 1991க்கு பிறகு இந்தியா இந்த முறையில்தான் இயங்க தொடங்கியுள்ளது.

சீனா 1970களின் இறுதியில் பொருளாதார தாராளமயமாக்குதலை ஆரம்பித்தது.அரசியல் அளவில் கம்யூனிஸத்தையும், பொருளாதாரத்தில் பொது உடைமைக்கு எதிரான சீர்திருத்தத்தையும் கைக்கொண்டுள்ளது. இதை விமர்சிக்கும் இந்தியர்களில் சிலர் நம் முதுகையும் பார்த்துக் கொள்வது நல்லது. Republic of India என்ற பெயரை Socialist Republic of India என்று மாதர்குல சிரோன்மணியான திருமதி. இந்திரா, அவசர நிலை ஆட்சியின் போது மாற்றி விட்டார். நம் நாட்டின் பெயரின் அடிப்படையில் பார்த்தால், நாம் பொது உடைமையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால் நடப்பதோ வேறு.

(தொடரும்)

காந்தியின் (கி)ராம தரிசனம்

தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியை பல முறை புகைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறேன். மையமாக ஒரு கரும்பளிங்கு மேடை. அதன் மீது எரியும் அணையாத ஜோதி. மேடையின் முகப்பிலுள்ள “ஹே ராம்” என்ற வாசகம். எளிமை, ஒளி, ராம நாமம் – காந்தி என்ற மாமனிதரின் ஸ்தூலமான நினைவிடத்தின் அடையாளங்கள் இவை தான்.

குண்டடி பட்டு சாகும் தறுவாயில் காந்தியின் வாயிலிருந்து கடைசியாக உதிர்ந்த சொல் ஹே ராம். அப்படித் தான் நாம் பாடப் புத்தகங்களிலும் காந்திஜி வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் படித்து வந்திருக்கிறோம். காந்தியின் மரணம் குறித்த செய்திகளை அளித்த பத்திரிகை நிருபர்களும் அவ்வாறு தான் பதிவு செய்திருக்கிறார்கள் [1]. ஆனால் அந்தத் தருணத்தில் காந்திக்கு மிக அருகில் இருந்தவர்கள் மூன்றாவது குண்டு பாய்ந்தவுடனேயே காந்தியின் உயிர் பிரிந்து விட்டது. அவர் வாயிலிருந்து சொற்கள் எவையும் வெளிவரவில்லை என்று கூறியிருக்கிறார்கள். காந்தியின் தனிப்பட்ட காரியதரிசியாக இருந்த கல்யாணம் சில வருடங்களுக்கு மூன் அளித்த ஒரு பேட்டியில் கூட இதைக் குறிப்பிட்டிருந்தார் [2].

வரலாறு எப்படியும் இருக்கட்டும். ஆனால் ராம நாமம் தோய்ந்த காந்தியின் மரணத் தருணம் ஒரு தொன்மம் போல, ஐதிகம் போல இந்திய பிரக்ஞையில் பதிந்து விட்ட ஒன்று. பல நேரங்களில் தொன்மங்கள் வரலாற்றை விட இந்திய மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. காந்தியை ஒரு புனிதராக, அருளாளராக, அவதாரமாக இந்திய கிராமிய மனம் ஏற்கனவே உள்வாங்கிக் கொண்டிருந்தது. இந்த சம்பவம் மூலம் அது முழுதாக உறுதிப் படுத்தப் பட்டது.

ஜனம் ஜனம் முனி ஜதன் கராஹி
அந்த் ராம கஹிங் ஆவத நாஹி

ஜன்ம ஜன்மங்களாக முனிவர் யத்தனம் செய்கின்றனர். ஆயினும் அந்திம காலத்தில் ராமன் அவர்களிடம் வருவதில்லை

என்ற துளசிதாசரின் பாடல் வரிகளுடன் இணைத்துப் பார்க்கையில், காந்திக்கு கிடைத்தது எப்பேர்ப்பட்ட பேறு என்று எண்ணி மெய்சிலிர்க்கவும் அது இடமளித்தது.

ஆனால் இந்த சம்பவம் குறித்த நம்பிக்கை ஆதாரமற்றதல்ல. நான் மரணத்தைத் தழுவும் நேரம் என் உதடுகள் ராம நாமத்தைத் தான் உச்சரித்துக் கொண்டிருக்கும் என்று காந்தியே பலமுறை சொல்லியிருக்கிறார். எப்போதும் ராம நாம தியானத்தில் தோய்ந்திருந்த அவர் இதயத்தில் குண்டு பாய்ந்த அந்தத் தருணத்திலும் ராம நாமமே கோலோய்ச்சியிருக்கும் என்று நாம் கருத இடமிருக்கிறது.

பதின்ம வயதிலேயே ராம நாமம் என்ற புனித விதை தம் மனதில் ஆழ ஊன்றப் பட்டுவிட்டதாக காந்தி தன் சுயசரிதையில் எழுதுகிறார். அவரது குடும்பத்தில் பணிப்பெண்ணாக இருந்த ரம்பா என்பவர் தான் பேய் பிசாசுகளை எண்ணிப் பயந்து கொண்டிருந்த பள்ளி மாணவர் காந்திக்கு அந்த பயத்தைத் தெளிவிப்பதற்காக ராம நாமத்தை உபதேசம் செய்த ஞானகுரு. பிறகு அவரது தந்தை நோய்வாய்ப் பட்டிருந்த போது அவரது வீட்டுக்கு ராமாயணம் படிக்க வரும் ஒரு முதியவரின் தழுதழுத்த குரலும் அவர் கூறிய விளக்கங்களும் ராமநாமம் மீதான காந்தியின் ஈர்ப்பை ஆழப் படுத்தின. ‘துளசிதாசரின் ராமாயணத்தையே நான் உலகின் தலைசிறந்த பக்தி நூலாகக் கருதுகிறேன்’ என்ற அவரது கருத்தில் இறுதி வரை மாற்றம் ஏற்படவில்லை.

ராம நாமம் உதடுகளில் இருந்து மட்டுமல்ல இதயத்திலிருந்தும் ஜபிக்கப் படவேண்டும். அப்போது தான் அதன் உண்மையான ஆன்மிக சக்தி வெளிப்படும் என்று காந்தி நம்பினார். ராம நாமத்தை நோட்டுப் புத்தகங்களில் பக்கம் பக்கமாக எழுதுவதும், தாயத்துகளில் பொறித்து அணிவதும் போன்ற பழக்கங்கள் சிறுபிள்ளைத் தனமானதும், மூட நம்பிக்கையும் ஆகும் என்று ஒரு கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

உங்கள் பிரார்த்தனையில் சீதா ராம், ராஜா ராம் போன்ற சொற்கள் வருகின்றன. நீங்கள் அன்றாடம் பெயர் சொல்லி தியானிக்கும் ராமன் தசரதனின் புதல்வன். சீதையின் கணவன். ஒரு சரித்திர ரீதியான மகாபுருஷன். அவனது நாமத்தை பிரார்த்தனையில் ஏன் எல்லாரும் சொல்லவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறீர்கள்? அதை விட இன்னும் பொதுவான ஆன்மீக மந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது? என்று ஒரு ஆரிய சமாஜி கேள்வி எழுப்பினார். இந்துக்கள் அல்லாதவர்களும் ஏன் பிரார்த்தனையின் போது ‘ராம துன்’ பாட வேண்டும் என்று வேறொருவர் கேட்டார்.

“இந்தக் கேள்வியை ராம பக்த சிரோமணியான துளசி தாசரே எழுப்பி அதற்கு “ஸியா ராம மய ஸப் ஜக் ஜானி” (உலகம் முழுவதையும் சீதா ராம மயமாகவே அறிகிறேன்) என்று விளக்கம் அளிக்கிறார்… தொடக்கத்தில் தசரதன் புதல்வனாக, சீதை மணாளனாகவே ராமனைத் தொழுதேன். ஆனால் அவனைக் குறித்த எனது ஞானமும் அனுபூதியும் அதிகரிக்க அதிகரிக்க, ராமன் அழிவற்ற சத்தியமாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் பரிணமித்தான். இதன் பொருள் அவன் சீதை மணாளனாக இல்லாமலாகி விட்டான் என்பதல்ல. மாறாக ராம தரிசனத்தால் சீதை மணாளன் என்பதன் பொருள் விரிந்தது, விகசித்தது. ராமனை சரித்திர புருஷனாக மட்டுமே கருதுபவனுக்கு, அந்தர்யாமியான ராமனின் தரிசனம் ஒரு போதும் கிட்டாது” [3]. இவ்வாறு, அனைத்து உயிர்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் பரம்பொருளையே தனது ராமன் குறிப்பதாக காந்தி விடையிறுத்தார். தனக்கு ராம நாமம் போல ஒவ்வொரு ஆன்மிக சாதகருக்கும் அவரது இஷ்ட தெய்வத்தின் நாமம் அரணாக நின்று காக்கும் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறார்.

ராம நாமம் குறித்த காந்தியின் கருத்துக்களைப் படிக்கும் பல “ஆஸ்திகர்களுக்கு” அவை அசட்டுத் தனமாகவே தோன்றும். முழுமையான லௌகீக மறுப்பு மனநிலைக்குச் சென்றால் ஒழிய அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள முடியாது. ராம நாமத்தின் மீதான காந்தியின் நம்பிக்கை அந்த அளவு மிகத் திடமானதாக இருந்தது. பல கிராமங்களில் தனது முகாமுக்கு வந்த நோயாளிகளுக்கு ராம நாமத்தையும், சில இயற்கை வைத்திய முறைகளையுமே மருந்தாக மருந்துச் சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார் [4]. டாக்டர்களும் ஆயுர்வேத வைத்தியர்களும் ஹகீம்களும் சகல நோய்களையும் தீர்க்கும் மாமருந்தான ராம நாமத்திற்கு தங்கள் சிகிச்சைகளில் ஏன் உரிய இடமளிப்பதில்லை? ராம நாமம் ஒருவன் இதயத்தில் குடிகொண்டால் அவனது வாழ்க்கை தூய்மையாகிறது. அவனது தீய பழக்கங்கள் அகல்கின்றன. அதுவே அவனைப் பீடித்த நோய்கள் அகல உதவுகிறது என்று ஒரு கட்டுரையில் வாதிடுகிறார் [5]. மரணத்திற்கு ஒரு நாள் முன்பு கிஷோரிலாலுக்கு எழுதிய கடைசி கடிதம் இப்படி முடிகிறது – “.. என் உடம்பு திருப்திகரமாக தேறி வருகிறது. இந்த முறை இரண்டு கிட்னிகளும், ஈரலும் இதில் சம்பந்தப் பட்டிருக்கின்றன. ராம நாமத்தின் மீது நான் கொண்ட சிரத்தை பலவீனப் பட்டு வருவதையே இது காட்டுகிறது என்று எண்ணுகிறேன்.” [6]

தனது வாழ்க்கை லட்சியங்களான சத்தியமும், அகிம்சையுமே ராம நாமத்தில் உருக் கொண்டிருப்பதாக காந்தி கருதினார். தனது ஆசிரமத்தில் பாட வேண்டிய பஜனைப் பாடல்களை “ஆஸ்ரம் பஜனாவளி” என்ற பெயரில் காந்தியே தொகுத்திருக்கிறார். அதில் துளசிதாசரின் ராமாயணத்திலிருந்து பல பாடல்கள் உள்ளன. “ராம ரதம்” என்ற பாடல் முக்கியமானதும் அவருக்கு மிகவும் பிடித்ததும் ஆகும்.

ராம ராவண யுத்தம். ராவணன் மிகப் பெரிய தேரில் படாடோபமாக வந்து நிற்கிறான். உன்னிடம் தேர் இல்லையே என்ன செய்வாய்? என்று விபீஷணன் கேட்க, ராமன் கூறுகிறான் –

கேளாய், நண்பனே
எப்பேர்ப் பட்ட இடர்களிலும் வெற்றி தரும் தேர் என்னுடையது.
வீரமும், துணிவும் அதன் சக்கரங்கள்
சத்தியமும், சீலமுமே அதன் திடமான வெற்றிக் கொடி.
வலிமை, விவேகம், புலனடக்கம், தன்னலமின்மை என்று நான்கு குதிரைகள்.
பொறுமை, கருணை, சமநிலை என்பவை அவற்றைப் பிணைக்கும் கயிறுகள்.
தெய்வ அருள் அதன் சாரதி…

என்று அந்தப் பாடல் போகிறது. எதேச்சாதிகார பிரிட்டிஷ் அரசையும், இயந்திர மயமாக்கலையும், நவீன நுகர்வுக் கலாசாரத்தையும் மாபெரும் வல்லமை கொண்ட ராவணனாகவும், அவற்றுக்கு எதிராக சத்தியத்தையும், அகிம்சையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு போரிடும் சாமானியர்களை ராமனின் உருவாகவும் காந்தி கண்டார். இந்தப் பின்னணியில் பார்த்தால் தான் ‘ராம்’ என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்தில் தனது இலட்சியங்கள் அனைத்தையும் காந்தி தரிசித்தார் என்பது விளங்கும்.

******

கீதையின் உபதேசங்கள் அனைத்திலும் மையமானதாக பற்றின்மை என்பதையே காந்தி எடுத்துக் கொண்டார். கீதையை அனாசக்தி யோகம் என்றே தான் காந்தி அழைத்தார். ஆனால் இதற்கான ஆதர்சங்கள் அவருக்கு கீதையை உள்ளடக்கிய மகாபாரதத்தில் அல்லாமல், ராமாயணத்திலேயே கிடைத்தன.

மகாபாரதத்தின் மாபெரும் தர்மக் குழப்பங்களையும், சிடுக்குகளையும், நீதிநெறிகளின் விளிம்பில் நின்று பேசும் தர்க்கங்களையும் அரசியல் விவாதங்களையும் விட, ராமாயணத்தின் சத்தியம் தவறாமை, தியாகம், அன்பு, தொண்டு ஆகிய எளிய விழுமியங்களே அவருக்கு நெருக்கமாக இருந்தன. நவீனத்துவத்தின் சிடுக்குகளுக்கு மாற்றாக இயற்கையோடு இணைந்த கிராம வாழ்க்கையை வலியுறுத்திய அவரது கண்ணோட்டமும் அடிப்படையில் இதிலிருந்தே பெறப்பட்டது.

ஹிந்த் ஸ்வராஜ் என்ற புத்தகத்தில் எதிர்கால இந்தியாவைக் குறித்த தனது கனவுகளையும் செய்ல்திட்டங்களையும் அவர் பதிவு செய்தபோது, கிராம சுயராஜ்யத்திற்கே முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்தார். கிராம ராஜியத்தையே அவரது ராமராஜ்யம் என்ற கருதுகோள் குறித்தது. 1928லேயே இது குறித்து காந்திக்கும் நேருவுக்கும் பெரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. “.. உங்கள் கருத்துடன் நான் முற்றிலுமாக மாறுபடுகிறேன். நீங்கள் குறிப்பிடும் ராமராஜ்யம் கடந்த காலத்தில் உன்னதமான ஒன்றாக இருந்து என்பது எனக்கு ஏற்புடைய கருத்தல்ல. அதனைத் திரும்பக் கொண்டு வரவும் நான் விரும்பவில்லை. ஒரு சில சிறிய மாறுதல்களுடன், மேற்கத்திய, பெருந்தொழில் சார்ந்த பண்பாடு தான் இந்தியாவை வெற்றி கொள்ளப் போகிறது.” என்று நேரு காந்திக்கு எழுதினார் [7]. காந்தி தனது யங் இந்தியா பத்திரிகையில் இது குறித்து பொதுவில் விவாதிக்குமாறு நேருவை அழைத்தார். ஆனால் நேரு அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் கிடப்பில் போட்டார். பிறகு ஒத்துழையாமை இயக்கமும், வெள்ளையனே வெளியேறு இயக்கமும் சூடுபிடித்து தேச விடுதலையே குறியாக காங்கிரஸ் இயங்க ஆரம்பித்தது.

1945ல் சுதந்திரத்திற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியவுடனேயே காந்தி மீண்டும் கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தத் தொடங்கினார் –

“இந்தியாவும், இந்தியாவின் ஊடாக உலகமும், உண்மையான சுதந்திரத்தை அடைய முடியுமென்றால், நாமெல்லாரும் கிராமங்களில் சென்று வசிப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன். நாம் வசிக்க வேண்டியது குடிசைகளில், மாளிகைகளில் அல்ல. பல லட்சக் கணக்கிலான மக்கள் ஒரு போதும் பெரு நகரங்களிலும் மாளிகைகளிலும் சுகமாகவும், அமைதியாகவும் வசிக்கவே முடியாது. ஒருவரை ஒருவர் கொலை செய்தோ, பொய்மையையும் வன்முறையையும் கைக் கொண்டோ அந்த சுகத்தையும் அமைதியையும் பெற முடியாது. சத்தியம், அகிம்சை என்ற இரு பெரும் கொள்கைகளும் இல்லையென்றால் மனிதகுலம் அழிந்து பட்டுப் போகும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை. அந்த சத்தியத்தின், அகிம்சையின் தரிசனத்தை நாம் கிராமங்களின் எளிமையில் மட்டுமே காண முடியும்”.

இதற்கு நேரு எழுதிய பதில் –

“நம் முன்னே உள்ள கேள்வி பொய்மையா சத்தியமா அல்லது வன்முறையா அகிம்சையா என்பதல்ல. ஒரு கிராமம் எப்படி தன்னியல்பில் சத்தியத்தையும் அகிம்சையையும் கொண்டிருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. பொதுவாக எந்த ஒரு கிராமமும் அறிவு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பிற்போக்கானது. அந்தப் பிற்போக்கான சூழலில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்பட முடியாது. குறுகிய மனம் கொண்ட அந்த மக்கள் பொய்யர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகளே அதிகம்”. [8]

இந்தக் கடிதங்களில் இருவருக்குமிடையே உள்ள அணுகுமுறை வேறுபாடுகள் மிகத் துல்லியமாகத் தெரிய ஆரம்பிக்கின்றன. சமீபத்தில் ஜெயமோகன் அண்ணா ஹசாரேயின் தோல்வி பற்றிக் குறிப்பிடுகையில் “இந்தியாவில் நகரங்களின் வல்லாதிக்கம் நிகழ்கிறது. கிராமங்கள் நொறுக்கி உண்ணப்படுகின்றன. கிராமங்களை உறிஞ்சி நகரங்களை வலுப்படுத்தும் ஓர் அரசியல் இங்கே அங்கீகரிக்கப்பட்டுள்ளது… கிராமியமனநிலை என்பதே பிற்போக்குத்தனம் என்ற நம்பிக்கை நம்மில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது” என்கிறார். நேருவின் மேற்கண்ட கடிதங்களே இந்த அரசியல் நிலைப்பாட்டின் ஊற்றுமுகம்.

குறுகிய காலத்தில் ஊழலுக்கு எதிராக மாபெரும் காந்திய மக்களியக்கத்தைக் கட்டியெழுப்பிய ஒரு கிராமியப் போராளி, காந்தியின் 64வது நினைவு தினத்தின் போது தோல்வியடைந்து நிற்கிறார். இந்தியாவின் நவீன பொருளாதார வளர்ச்சி என்ற பூதத்தின் பெரும்பசிக்கு கிராமங்கள் தொடர்ந்து பலியிடப் பட்டுக் கொண்டே வருவதன் நீண்ட கான்வாஸ் சித்திரம் உண்மையில் நமக்குத் தெரிவதே இல்லை. நாம் படிக்கும் தினசரிகளும், வார இதழ்களும் ஊடக ஜாலங்களும் அந்த சித்திரத்தை புகை மூட்டமாகக் கூட நமக்குத் தருவதில்லை.

நேரு தன் கடைசி காலத்தில் இது குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தான் மீண்டும் மீண்டும் மகாத்மா காந்தியின் அணுகுமுறைகளை எண்ணிப் பார்ப்பதாக 1963ல் பாராளுமன்ற விவாதங்களில் பேசினார். “இந்தியாவின் 550,000 கிராமங்களையும் அங்கு வாழும் மக்களையும் குறித்த பிரசினையை அளவிட என் மனம் முயன்று கொண்டிருக்கிறது.. பங்களிப்பு ரீதியாக, இந்தியாவின் மிகப் பெரிய முக்கியமான தொழிற்சாலைகள் எல்லாவற்றையும் சேர்த்தால் கூட, அவை உண்மையில் விவசாயத்துடன் ஒப்பிட்டால் முக்கியமற்றவையாகவே தோன்றுகின்றன. காந்திஜி செய்தது அடிப்படையில் சரி. அவர் எப்போதும் இந்தியாவின் கிராமங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வகையிலும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டிருந்தார்.. அவர் இயந்திரங்களுக்கு எதிரானவர் என்று தான் பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். அவர் எதிரானவராக இல்லை என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. நமது பெருந்திரளான மக்களின் நல்வாழ்வு என்பதைத் தவிர்த்த மற்ற சூழல்களில் அவர் இயந்திரங்களை விரும்பவில்லை” என்று ஒரு உரையில் நேரு குறிப்பிட்டார் [9].

நமது தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கைகள் செயல்பட ஆரம்பித்து இருபதாண்டுகள் ஆகி விட்ட தருணத்தில் காந்தியின் ராம ராஜ்யம், கிராமிய பொருளாதாரம் குறித்த கொள்கைகள் நாம் தடம்புரண்டு விடாமல் நமக்கு நல்வழி காட்டக் கூடும். உதாரணமாக, அப்துல் கலாம் கூறும் PURA திட்டம் நகரங்களுக்குரிய தரத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் இன்னபிற வசதிகளை கிராமங்களுக்கு அளிப்பதன் மூலம் கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து பேசுகிறது. இயற்கை விவசாயம், குடிநீர் மேலாண்மை, கால்ந்டைப் பாதுகாப்பு ஆகிய பல விஷயங்களில் நவீன தொழில் நுட்பத்தை நாம் திறமையாக பயன்படுத்துவதன் மூலம் கிராமங்களின் உள்ளார்ந்த தன்மையை அழிக்காமல் அதே சமயம் சீரான பொருளாதார வளர்ச்சியையும் நாம் அடைய முயற்சிக்கலாம்.

நமது பொருளாதார சீர்திருத்தங்கள் ஒருவகையில் நேருவிய சோஷலிசத்தின் தவறுகளை சரி செய்வதற்காக ஏற்பட்டவை. ஆனால் இவையும் மானுட முயற்சிகளே. இவையும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. அதை உணர்ந்து செயல்படவேண்டிய தருணம் இது.

காந்தி அதை எப்போதும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பார் –

The freedom to err and the power to correct errors is one definition of Swaraj.

தவறு செய்வதற்கான சுதந்திரமும், தவறுகளை சரி செய்வதற்கான வல்லமையும் இணைந்து தான் உண்மையான சுயராஜ்யம்.

சான்றுகள்:

[1] ஹரிஜன்: 15-2-1946
[2] http://www.mkgandhi.org/last%20days/glastday.htm
[3] ஹரிஜன்: 22-9-1946
[4] ஹரிஜன்: 7-1-1946, 26-5-1946, 2-6-1946
[5] ஹரிஜன்: 19-5-1946
[6] ஹரிஜன்: 8-2-1948
[7] நேருவின் கடிதம், 11-1-1928
[8] காந்தி நேரு கடிதங்க்ள் – அக்டோபர் 1945.
[9] Speech by Jawaharlal Nehru to a seminar on ‘Social Welfare in a Developing Economy’, September 22, 1963.

[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 26-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று, அம்பேத்கர் இஸ்லாமிய மதமாற்றத்தையும் நேரடியாகவே எதிர்க்கிறார். இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாகப் பாவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும் என்று தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அறிவுறுத்துகிறார். இந்த அறிக்கையின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதை அம்பேத்கர் சற்றும் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்ளலாம்.

பாகிஸ்தானில் நடைபெற்ற கொடூரங்கள், கொடுமைகள் எண்ணற்ற தீண்டத்தகாதவர்களையும் பாதித்தன. இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள் ஆகியோரினால் அடையும் துயரங்களை விவரித்து எண்ணற்ற தீண்டத்தகாதவர்கள் அம்பேத்கருக்குக் கடிதங்கள் எழுதினார்கள். ஆகவே, தீண்டத்தகாதவர்களின் துன்பங்களை எடுத்துக்கூறி, அந்தத் தாழ்த்தப்பட்ட இன அகதிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கோரி அவர் பிரதம மந்திரி நேருவிற்கு 1947 டிசம்பர் 18-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார்.

 
அக்கடிதத்தில்,

“பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வெளியேற்றப்பட்ட மற்றும் இந்தியாவிற்கு வருவதினின்றும் தடுக்கப்பட்டு பாகிஸ்தான் அரசினால் அங்கேயே அடைக்கப்பட்டிருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எண்ணற்ற முறையீடுகள் எனக்கு வந்துள்ளன. அவர்களின் துயரங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

அங்கு என்ன நடைபெறுகிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் படும் துயரங்களுக்கான காரணங்களையும், அவற்றை நீங்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் இங்கு கீழே தந்திருக்கிறேன்.

1.பாகிஸ்தான் அரசு தங்கள் எல்லையிலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் வெளியேறுவதை எல்லா வழிகளிலும் தடுத்து வருகிறது. குற்றேவல்கள் செய்வதற்கும் நிலமுள்ள பாகிஸ்தானிய மக்களுக்கு நிலமற்ற கூலிகளாக இருந்து உழைப்பதற்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதுதான் இதற்குக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. பாகிஸ்தான் அரசு, குறிப்பாக, தோட்டிகளை இருத்தி வைத்துக்கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அவர்களை அத்தியாவசியப் பணியிலீடுபட்டிருப்பவர்கள் என்று அறிவித்திருக்கிறது. ஒருமாத அறிவிப்புக் கொடுத்தாலன்றி அவர்களை விடுவிக்க அரசு தயாராக இல்லை.

2.வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட இன அகதிகளுக்கு எம்.இ.ஓ. என்று அழைக்கப்படும் ஓர் அமைப்புத்தான் சிறிது உதவி செய்துவருகிறது. எனினும் வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட மக்களோடு நேரடித்தொடர்பு கொள்ள எம்.இ.ஓ-வை பாகிஸ்தான் அரசு அனுமதிப்பதில்லை என அறிகிறேன். இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடைபெறுகின்றன. சில இடங்களில் அது ஸ்தம்பித்து விட்டது. விரைவில் எம்.இ.ஓ. மூடப்பட்டுவிடும் என்றும் கேள்விப்பட்டேன். அது நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து தாழ்த்தப்பட்ட இனத்தவரை வெளியேற்றுவது என்பது முடியாததாகிவிடும்.

3.இந்நிலையில் என்ன செய்யப்பட வேண்டும் என்றால்:

1.தாழ்த்தப்பட்ட இன மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதத் தடையும் செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
 
2.வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட இனமக்களோடு நேரடித்தொடர்புகொள்ள எம்.இ.ஓவை அனுதிக்க வேண்டும்.

3.தாழ்த்தப்பட்ட இன மக்கள் எல்லாம் வெளியேற்றப்படுகிற வரைக்கும் எம்.இ.ஓ. தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.

4.இதுவரையிலும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சகம் மேற்கு பஞ்சாபிற்குத் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரே ஓர் அதிகாரியைத்தான் நியமித்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பவல்பூர் போன்ற பிற மாகாணங்கள் விடுபட்டுப்போய்விட்டன. அம்மாகாணங்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படவேயில்லை. இந்தப் பகுதிகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்யும்படி அமைச்சகம் அறிவுறுத்தப்பட வேண்டும். இதனால் அச்சிறப்பு அதிகாரிகள் பாகிஸ்தான் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து எந்தெந்தப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனமக்கள் வெளியேறுவதினின்றும் பாகிஸ்தான் அரசினால் தடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.’’

என்று எழுதியிருந்தார்.

 
அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. இருந்தால் இஸ்லாமியர்களால் கொடுமைப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில் உள்ளதுபோல் வாழ முடியாது என்பதே அவர் எண்ணம். அதனாலேயே பிரிவினை ஏற்பட்டு தாழ்த்தப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தப்படும்போது அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்ற “மகர்சேனை” என்ற அமைப்பை உருவாக்கி பாகிஸ்தானுக்கு அனுப்பினார். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். மகர்சேனையின் இந்த வீரச்செயல் அன்று தாழ்த்தப்பட்டர்களிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
 
இதுகுறித்து 1951 அக்டோபர் 27-இல் ரம்தாஸ்பூர், ஜலந்தர், பஞ்சாபில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது, ‘‘….. பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்.’’ என்று சொல்கிற அம்பேத்கர் தொடர்ந்து பேசுகையில், “…பிரிவினையின்போது, பாகிஸ்தான் அதிகாரிகள் எம்மிடம், பாகிஸ்தானிலே இருந்துவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் கேவலமாக வேலை செய்ய வேண்டியது இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் அப்போது நான் பண்டிட் நேருவிடம் ஏழை தாழ்த்தப்பட்டோர் வெளியேறுவதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டேன். நமது மக்கள் வெளியேறுவதற்கு வசதி செய்வதற்காக இரு நபர்களை நான் அனுப்பினேன். அத்துடன் நமது மகர் படைகளையும் நமது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அனுப்பிவைத்தேன்.’’ என்று கூறுகிறார்.
 

மேலும் இதே கருத்தை 1951 நவம்பர் 22ஆம்தேதி தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தின் பம்பாய் கிளை சார்பில் போய் வதாவிலுள்ள விளையாட்டு அரங்கில் அம்பேத்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது அம்பேத்கர் பேசியதாவது:

“…தேசப்பிரிவினை சமயத்தில் சாதி இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதித்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் பாகிஸ்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. இவர்களில் பலர் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். மகர்சேனை சில தாழ்த்தப்பட்டோரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களில் சிலர் ராஜ்காட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆனால் எவரும் அவர்களது போராட்டத்தில் அக்கறை காட்டவில்லை. காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’

என்று கூறுகிறார்.

இங்கு ‘தாழ்த்தப்பட்டோர் பாகிஸ்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்களில் பலர் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். மகர்சேனை சில தாழ்த்தப்பட்டோரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றது.’ என்று அம்பேத்கர் சொல்லவருவதன் நோக்கம் என்ன? இஸ்லாம் மதமாற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதுதான்.

இது ஒருபுறமிருக்க, பிரிவினையின்போது நடைபெற்ற கொடூரங்கள், கற்பழிப்புகள், படுகொலைகள் இவற்றைத் தடுத்திருக்க முடியாதா என்ற கேள்வி மனதில் எழும்போது அம்பேத்கர் சொன்ன திட்டத்தைச் செயற்படுத்தியிருந்தால் சோகம் நிறைந்த அந்தச் சம்பவங்களை கண்டிப்பாகத் தடுத்திருக்க முடியும். மேலும் இப்போதுள்ள இந்து-முஸ்லீம் மதப்பிரச்சினையும் 90 சதவீதம் ஏற்பட்டிருக்காது. இஸ்லாமிய மதமாற்றம் நடைபெறுகிறதே என்ற கவலையும் இருந்திருக்காது. அப்படி என்ன திட்டத்தை முன்மொழிந்தார் அம்பேத்கர்?

 

அம்பேத்கர் கூறுகிறார்:

‘‘பஞ்சாப், வங்க மாநில நிலவரங்களிலிருந்து, வடமேற்கு எல்லை, சிந்து மாநில நிலவரங்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளதைக் காண்கிறோம். பஞ்சாப், வங்க மாநிலங்களில் இயற்கையாகவே முஸ்லீம், இந்துப் பெரும்பான்மைப் பகுதிகள் பிரிந்து அமைந்திருப்பதால், எல்லைகளைச் சரியாகத் திருத்தியமைப்பதன் மூலம் ஒரேசமய மக்கள் சீராக வாழும் பகுதிகளைப் பிரித்து, ஒரே வகுப்பினர் கொண்ட நாடாக உருவாக்குதல் இயலும். மிகச்சிறு எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் குடிபெயர நேரும். ஆனால், வடமேற்கு எல்லைப்புற சிந்து மாநிலங்களில், இந்துச் சிறுபான்மையோர் மாநிலம் முழுவதும் பரவலாக விரவிக் கிடப்பதால் எல்லைகளைத் திருத்தி அமைப்பதால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் வாழும் அரசை உருவாக்க இயலாது. மக்களை குடிபெயரச் செய்தல் ஒன்றே இங்கு வழியாகத் தெரிகிறது.

மக்களை இடம் பெயர்த்துக் குடியமர்த்தும் திட்டத்தைப் பலர் பழித்து இகழ்வர். அப்படி இகழ்வோர், பெரும்பான்மை வகுப்பினரின் பகைப்புலத்திற்கிடையே சிறுபான்மையோரை வாழவிடுவதால் அவர்களுக்கு நிகழும் இன்னல்களையும் கடந்த காலத்தில் அத்தகையோரின் துயர் களைய எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளின் தோல்விகளையும் பற்றி அறியாதவர்கள் என்றே கூறலாம்.

ஐரோப்பாவில் உலகப் பெரும் போருக்குப் பின்னர் அமைந்த நாடுகளிலும், பழைய நாடுகளிலும் கூடச் சிறுபான்மையோருக்கான பாதுகாப்பு, அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்படுவதன் மூலமாகவே எய்தப்படுமென்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதையே வரலாறு உணர்த்துகிறது. எனவே, சிறுபான்மையோர் உரிமைகளைப் பெரும்பான்மையோர் மிதித்துச் சிறுமைப்படுத்துவதைத் தவிர்க்க, நீண்ட அடிப்படை உரிமைப் பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு வருவதையும் அறிவோம். வரலாற்று அனுபவம் என்ன கூறுகிறது? சட்டப் பாதுகாப்புகளால் சிக்கல் தீரவில்லை என்பதையும் சிறுபான்மை இனத்தவர் மீது நடத்தப்பட்ட கொடும்போர்களாலும் சிக்கலைத் தீர்க்க இயலவில்லை என்பதையுமே வரலாறு உணர்த்துகிறது. எனவே, அயலவரான சிறுபான்மையினரை நாடுகளுக்கிடையே குடிபெயரச் செய்து மாற்றிக் கொள்வதன் வாயிலாக ஒரே இனத்தவர் நாடு எனும் நிலையை அடைவதையே இறுதியான தீர்வாக வரலாறு காட்டுகிறது. துருக்கி, கிரேக்கம், பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையே இத்தகைய சிறுபான்மையோர் பரிமாற்றம்தான் இறுதித் தீர்வாக அமைந்தது. குடிபெயர்த்தல் திட்டத்தைப் பழித்திகழ்வோர் துருக்கி, கிரேக்கம், பல்கேரியா ஆகிய நாடுகளின் சிறுபான்மையினரது சிக்கல் வரலாற்றினைப் படித்துப் பார்க்க வேண்டும். படித்தால் சிறுபான்மையோர் சிக்கல்களுக்கான நிலைத்த தீர்வு காண்பதற்கு ஒரே வழி சிறுபான்மை மக்கள் குடிபெயர்ப்புப் பரிமாற்றம்தான் என்ற முடிவுக்கு இந்நாடுகள் வந்ததை அறிந்துகொள்வர். இந்த நாடுகளில் நடைபெற்றது, ஏதோ ஒரு சில மக்களைக் குடிபெயர்க்கும் எளிய செயலன்று. ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் குடிபெயர்க்கப்பட்ட மாபெரும் திட்டப் பணியாகும். நிலையான வகுப்பு அமைதி என்னும் குறிக்கோளை எய்துவதற்கு இப்பணியின் தேவையை உணர்ந்தமையால், இதிலுள்ள இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், திட்டத்தை நிறைவேற்றும் பணியில் மூன்று நாடுகளுமே ஒன்றுபட்டுச் செயலாற்றின.

சிறுபான்மை மக்களை குடிபெயர்ப்பு செய்வதுதான் நீடித்த வகுப்பு அமைதிக்கு ஒரே வழி என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

….இந்துக்கள் அக்கறை செலுத்த வேண்டிய பிரச்சினை இதுதான்: பாகிஸ்தான் உருவாக்கப்படுவதன் மூலம், இந்துஸ்தானத்தில் வகுப்புப் பிரச்சினை எந்த அளவுக்குத் தணிவடையும்? நாம் கருத்துச் செலுத்த வேண்டிய மெய்யான பிரச்சினை இதுவே. பாகிஸ்தான் உருவாக்கப்படுவதால் இந்துஸ்தானத்தில், வகுப்புப் பிரச்சினை அறவே மறைந்துவிடாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எல்லைகளைத் திருத்தியமைப்பதன் மூலம் பாகிஸ்தானை ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களின் நாடாக உருவாக்குதல் இயலுமென்றாலும் இந்துஸ்தான் பல்வேறு வகுப்பினர் கொண்ட நாடாகத்தான் விளங்க முடியும். இந்துஸ்தானம் முழுவதும் முஸ்லீம்கள் பரவிக்கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நகரங்களிலேயே திரண்டு வாழ்ந்து வருகின்றனர். எவ்வளவு திறமையாக முயன்று பார்த்தாலும் எல்லைக்கோடுகளை எப்படி மாற்றி வரைந்து பார்த்தாலும் இந்துஸ்தானத்தை ஒரே இனத்தவர் வாழும் நாடாக மாற்றிவிட முடியாது. இந்துஸ்தானத்தை ஒரே இன நாடாக்குவதற்குக் குடிபெயர்த்தல் ஒன்றே வழியாக இருக்க முடியும். இதனைச் செய்து முடிக்கும்வரை, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டாலும்கூட, இந்துஸ்தானத்தில் பெரும்பான்மையோர்-சிறுபான்மையோர் பூசல்களையும், அதனால் இந்திய அரசியலில் விளையும் குழப்பங்களையும் தவிர்க்க இயலாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.’’

என்று கூறுகிற அம்பேத்கர் மேலும் தொடர்கிறார்….

“முஸ்லீம்கள் எதற்காகப் பாகிஸ்தான் கோருகிறார்கள்? முஸ்லீம்கள் தங்களுக்கு ஒரு தேசியத் தாயகம்தான் தேவையென்று கருதினால் அதற்காக பாகிஸ்தான் பிரிவினை கோர வேண்டியதில்லை. இந்தியாவிலேயே, முஸ்லீம் மாநிலங்களை அவர்கள் தம் தாயகமாக்கிக்கொள்ள முடியும். அவர்களது சமயப் பண்பாட்டை மேம்படுத்தும் வாய்ப்புகளுக்கு இங்கு குறையேதும் இருக்காது. அவர்கள் பாகிஸ்தானை ஒரு தேசிய அரசாகக் கோருகிறார்களெனில், தமது நாட்டுப் பகுதி மீது முழு இறையாண்மை கோருவதாகவே பொருள். அதைக் கோர அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அவர்கள் பெறும் நாட்டின் எல்லைப் பகுதிகளுள், முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினரையும் குடிமக்களாக இருத்திக்கொண்டு அச்சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய தேசியத்தைத் திணிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதே கேள்வி. அரசியல் இறையாண்மையுடன் அத்தகைய உரிமை இணைந்தேயிருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தகைய கலப்பு மக்கட் குழுமங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இதுவே பெரும்பாலான குழப்பங்களுக்குக் காரணமாயிருக்கிறது என்பது இற்றை நாள் உலகநிலை. இந்தக் கூறுபாட்டைப் புறக்கணித்துவிட்டுப் பாகிஸ்தான் பிரிவினைக்குத் திட்டமிடுதல் வரலாற்றின் படிப்பினையைப் புறக்கணிப்பதாகும்.

வெகு அண்மைக் காலத்தில் துருக்கி, கிகம், பல்கேரியா, செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையினத்தவர் மீது பெரும்பான்மையினத்தவர் நிகழ்த்திய கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள், சூறையாடல்கள் முதலான அட்டூழியங்களைப் பற்றி இக்கால வரலாற்று ஏடுகள் விவரிப்பனவற்றையெல்லாம் மறந்துவிடத்தான் முடியுமா? ஆனால் இதற்கான வாய்ப்பை நம்மால் தவிர்க்க இயலும். அதாவது முற்றிலும், முஸ்லீம் மக்களை மட்டுமே கொண்ட தேசிய முஸ்லீம் அரசினை அமைக்க அனுமதிப்பதன் வாயிலாகவே இதைச் சாதிக்க இயலும். முஸ்லீம்களும் இந்துக்களும் கலந்து ஒருவருக்கொருவர் பகைமையுணர்வு பூண்டு முஸ்லீம் பெரும்பான்மையுடன் வாழும் பகுதிகளைக் கொண்டு பாகிஸ்தான் அரசு அமைக்க ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது.’’

அம்பேத்கரின் இந்தக் குடிபெயர்த்தல் திட்டம் இங்கிருக்கும் எல்லா முஸ்லீம்களையும் பாகிஸ்தான் பகுதிக்கு அனுப்பிவிடுதல் என்பதாகும். இதன்மூலம் அவர் இஸ்லாமியர்கள் அல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை– தம்முடைய கருத்தை– முன்மொழிந்தார். அதுமட்டுமல்லாமல் காஷ்மீரிலும் இஸ்லாமியர்களைத் தவிர்த்து நமது மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.

1951 நவம்பர் 7-இல் லக்னோ பல்கலைக்கழக மாணவர்களிடையே டாக்டர் அம்பேத்கர் காஷ்மீர்  பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ‘‘காஷ்மீர் ஓர் ஒன்றிய அரசல்ல என்று கூறினார். அது இந்துக்கள், பௌத்தர்கள், முஸ்லீம்கள் முதலியோரைக் கொண்ட ஒரு கலப்பு வகுப்பாகும். ஜம்முவும் லடாக்கும் முஸ்லீமல்லாத பகுதிகள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கோ முஸ்லீம் பிரதேசம்” என்று கூறிய அவர் மேலும் தொடர்கையில், ‘‘காஷ்மீரிகள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா கட்டுப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு பாகிஸ்தானுக்குச் சாதகமாக இருக்குமானால், முஸ்லீம்கள் அல்லாத 20 சதவிகித மக்களின் கதி என்னவாகும்? இது ஒரு மிகப்பெரிய கேள்வியாகும். காஷ்மீரிகள் அனைவரையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நமது உற்றார் உறவினர்களையாவது காப்பாற்றுவோம். இது தெள்ளத்தெளிவான உண்மை நிலவரமாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.’’ என்றார்.

பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற தமது எண்ணம் நிறைவேறியதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கீழ்க்கண்டவாறு அம்பேத்கர் எழுதினார்:

‘‘பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாகிஸ்தானைப் பொருத்தவரை என் கருத்து தீர்க்கதரிசனமாகப் பலித்தது. பாகிஸ்தானை நான் ஆதரித்தற்கான காரணம், பிரிவினை ஏற்பட்டால்தான் இந்துக்கள் சுதந்திரமடைவதோடு சிக்கலிலிருந்தும் விடுபடுவார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும், ஒரே நாடாயிருந்தால், இந்துக்கள் முஸ்லீம்களின் தயவில்தான் வாழ வேண்டியேற்படும். இந்துக்களைப் பொருத்தவரை அரசியல் விடுதலை மட்டுமே விடுதலையாகக் கருதப்பட மாட்டாது. ஒரே நாட்டில் இரு தேசங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லீம்கள்தான் ஆளும் மக்களாக இருப்பார்கள். இந்து மகாசபையோ ஜனசங்கமோ அவர்களிடம் வாலாட்ட முடியாது’’
–நூல்: (Thoughts on Linguistic States)

இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய தேசம் யாருக்கானது, யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும், இங்கு யார் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இன இழிவு நீங்க இஸ்லாம் இனிய மருந்து என்பதை அம்பேத்கர் எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றத்திற்கு இஸ்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய மதம் அல்ல என்பதுதான் அம்பேத்கரின் கருத்து என்பதை மேற்கண்ட அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தும் பேச்சுகளிலிருந்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்து அவர்முன் நின்றது கம்யூனிசம்.

அதைப் பார்ப்போம்.

(தொடரும்…)

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்தோம். பாகம் 23-இல் முஸ்லீம் அரசர்கள் தங்கள் படையெடுப்பால் எவ்வாறு புறச்சமயிகள், கோயில்கள், கலாசாரத்தை அழித்தொழித்தார்கள் என்றும் பாகம் 24-இல் ஷரியா சட்டத்தின்மூலம் எவ்வாறு இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டும், வன்கொடுமை, கொலை என்று எண்ணிப்பார்க்கமுடியாத இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்று பார்த்தோம். பாகம் 25-இல் இந்துக்கள் வெறுப்பதற்காக முஸ்லீமை ஏற்பது எவ்வளவு பெரிய தவறு என்று விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23 || பாகம் 24 || பாகம் 25

அண்ணாவின் நடுத்தர வர்க்கம் ஏன் பாராளுமன்றத்தை அலட்சியம் செய்கிறது?

மூலம்: பேரா.ஆர்.வைத்தியநாதன்
தமிழில்: ஜடாயு

 

ஜவகர்லால் நேரு உருவாக்கிய தேசிய முக்காலி மூன்று கால்களில் நிற்பதாகச் சொல்லப்பட்டது- சோஷலிசம், மதச்சார்பின்மை, பாராளுமன்றத்தின் மாட்சிமை.

சோஷலிசம் நரசிம்மராவின் காலத்தோடு போய்விட்டது. நம் நாடு ஒரு “சோஷலிசக் குடியரசு” என்று பிரகடனம் செய்யும் அந்தச் சொல் மட்டும் அரசியலமைப்புச் சட்டத்தில் எஞ்சியுள்ளது. நமது அரசியல் நடைமுறைகளின் போலித்தனம் ஓங்கி வெளிப்படும் வகையில், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் அந்தச் சொல்லையும் சேர்த்து உச்சரித்து பதவிப் பிரமாணம் எடுக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப் படுகிறார்.

ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குவதை மறுத்து சட்டம் இயற்றப்பட்ட அந்த தினத்தில், மதச்சார்பின்மை என்ற மாளிகையின் அடித்தளமே விரிசல் கண்டுவிட்டது. மரங்களையும், விலங்குகளையும் கூட புனிதம் சார்ந்த உணர்வுடன் அர்த்தப்படுத்திக் கொள்ளும் பண்பாடு கொண்ட ஒரு சமுதாயத்தில், மதச்சார்பின்மை என்ற கொள்கை ஆரம்பம் முதலே கொஞ்சம் மிகையானதாகத்தான் இருந்தது. அயோத்தி இயக்கத்துடன் அது முழுவதுமாக தகர்ந்து வீழ்ந்தது. ஆயினும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இப்போதும் மதச்சார்பின்மை இருக்கிறது. அரசியல் சட்டத்தின் முதல் வடிவத்தில் அது இல்லை; நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் போதுதான் உள்ளே புகுத்தப்பட்டது.

இவ்வளவு நடந்த போதும், சட்டம் இயற்றுவதில் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ள முற்றான அதிகாரம் என்ற கொள்கை (நேருவிய முக்காலியின் மூன்றாவது கால்) பெருமதிப்புடனும் மரியாதையுடனும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. சட்டசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் “சட்டம் இயற்றுபவர்கள்” என்று கௌரவத்துடன் அழைக்கப்பட்டனர், அவர்களில் கணிசமானவர்களுக்கு தாங்கள் என்ன சட்டம் இயற்றுகிறோம் என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத போதிலும்கூட! ஆனால், வளர்ந்து வரும் நமது நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தச் சட்டம் இயற்றும் கனவான்களுக்கும் இடையே உள்ள இடைவெளி, கடந்த சில பத்தாண்டுகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகமாகக் கொண்டே வந்திருக்கிறது.

சில காலமாகவே ஒரு பெரிய பிளவுக்கோடு உருவாகி வந்து கொண்டிருக்கிறது. குருட்டு அரசியல் நோக்கர்களால் அது கவனிக்கப்படுவதில்லை. இன்று அரசியல்வாதி வர்க்கத்தின் மீதே ஒட்டுமொத்த அவநம்பிக்கை நிலவுகிறது. 1960-களின் தொடக்கத்தில், சீனப்போரின் போது அரசியல் தலைவர்கள் ஜீப்களில் சென்று ராணுவத்திற்காக நிதி திரட்டுவதையும், பெண்கள் தயங்காமல் தங்கள் தங்க நகைகளைக் கழற்றித் தருவதையும் நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். இன்று அரசியல்வாதிகள் நன்கொடை கேட்டு ஜீப்பில் வந்தால், பெண்கள் தலைதெறிக்க வீட்டுக்குள் ஓடிக் கதவைச் சாத்திக் கொள்வார்கள்!

நேருவிய நடுத்தர வர்க்கம் பொதுத் துறை நிறுவனங்களால் சமைக்கப்பட்டதாக இருந்தது. அந்த வர்க்கத்தினர் நேரடியாக அரசிலோ, அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிலோ பணி புரிந்தார்கள் -HMT, BHEL, LIC, பாரத ஸ்டேட் வங்கி… இப்படி. 1950-கள் மற்றும் 60-களின் ஒவ்வொரு என்ஜினீயரும், கணக்கரும் இத்தகைய நிறுவனங்களில் பணிபுரிவதையே வாழ்க்கைக் கனவாகக் கொண்டிருந்தார்கள். இவற்றின் நுழைவுத் தேர்வுகளுக்காக சளைக்காமல் தங்களைத் தயார் செய்து கொள்பவர்களாக இருந்தார்கள்.

அந்தக் காலகட்டத்திய பொதுத்துறை நடுத்தர வர்க்கம் பெரும்பாலும் இடதுசாரித் தொழிற்சங்கங்களுடன் அணி சேர்வதாகவே இருந்தது. மேன்மேலும் அரசுத் துறை நிறுவனங்கள் உருவாகவேண்டும் என்றும் ஊதியம் மேன்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிப் போராடியது. இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கியபோது கொடியசைத்து வரவேற்றது. அந்த நாள்களின் ஊர்வலங்களில் “இன்குலாப் ஜிந்தாபாத்!” என்று அந்த வர்க்கம் கோஷமிட்டுச் சென்றது. வங்காளமும் கேரளமுமே அன்று தேசிய அளவில் அந்த வர்க்கத்தினருக்கு வழிகாட்டிகளாக இருந்தன.

கலைகள், சினிமா, இலக்கியம், புத்தகங்கள், வரலாறு என்று இந்திய வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் அந்த நடுத்தர வர்க்கத்தின் ஊடுவருலும், தாக்கமும் இருந்தன. நமது அறிவுஜீவிகளையும்,  சிந்தனாவாதிகளையும் அந்த வர்க்கத்தினரே தேர்வு செய்தார்கள். அரசாங்கத்தை அவர்கள் காட்டமாக விமர்சித்தார்கள் – அவர்கள் விரும்பிய அளவு இடதுசாரித் தனத்துடன் அரசு இல்லை என்பதற்காக. ஆனால் திட்டக் கமிஷனையும் பற்பல நூற்றுக்கணக்கான அமைப்புகளையும் அவர்கள் எளிதாகக் கைப்பற்றினார்கள். அரசு மானியத்தில் இயங்கிய புரட்சியாளர்கள்! அவர்களது சாதனையின் சிகரம் என்றால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்தான். நல்ல பெயர்ப் பொருத்தம் கொண்ட அந்தப் பல்கலைக்கழகத்தில், “லால் சலாம்”, “இன்குலாப்” கோஷங்களையே தீவிர சமூக ஆய்வுக் கட்டுரைகளாக சமர்ப்பித்து விட முடியும்!

இத்தகைய இடங்களில் கூட பொருட்படுத்தத்தக்க கருத்து மோதல்களும் இருந்தன. அவை பெரும்பாலும் தீவிர இடதுக்கும் மிதவாத இடதுக்கும் இடையேயானவை.

ஆனால் 1980-களிலும், குறிப்பாக 1990-களிலும், காலம் மாறியது. பெர்லின் சுவர் உடைந்தது கருத்தியல் ரீதியாக ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பல வரலாற்றாசிரியர்களை விடவும் தெளிவாக நரசிம்மராவ், வரலாற்றின் போக்கைப் புரிந்து கொண்டார். நமது பொருளாதாரம் திறந்து கொண்டது. புதிதாக வளர்ந்த சேவைப் பொருளாதாரத்தின் (service economy) அடிப்படையில் புதிய நடுத்தர வர்க்கம் உருவாகி வந்தது. பொருளாதாரத்தில் சேவைத் துறைகளின் (service sector) பங்களிப்பு 60 சதவீதத்திற்கு உயர்ந்தது. அந்தத் துறைகளின் வளர்ச்சியே ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்னும் நிலை உருவாயிற்று. தகவல் தொழில்நுட்பத் துறை (IT) நடுத்தர வர்க்கத்தின் புதிய ஒளிவிளக்காயிற்று. இந்தப் புதிய நடுத்தர வர்க்கத்தை *மென்பொருள் நடுத்தர வர்க்கம்* என்று அழைப்போம், இந்தக் கட்டுரையின் புரிதலுக்காக.

நமது ஒட்டுமொத்த சேவைப் பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு சிறியது என்றாலும் கூட, பழைய பொதுத்துறை நடுத்தர வர்க்கத்தின் இடத்தை அது பிடித்துக்கொண்டுவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. செங்கொடி நிறம் மாறிவிட்டது, காவித் தீற்றல்களுடன்! இந்த வர்க்கத்தின் கனவுகள் வேறுவிதமானவை. இதில் வெள்ளைச் சட்டை பணியாளர்கள் மட்டும் இல்லை, மிகப்பெருமளவில் சுயதொழில் முனைவோர்களும் உள்ளனர். இன்றைக்கு இந்த வர்க்கத்தின் மொத்த எண்ணிக்கை 20 கோடிகளுக்கு மேல் இருக்கும்.

இந்த நடுத்தர வர்க்கத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிகளுக்குமிடையில் இணைப்பும் உறவும் சிறிதும் இல்லை, குறிப்பாக உள்ளூர் அளவில். உதாரணமாக, மும்பையிலோ பெங்களூரிலோ, நகரசபை பிரதிநிதிகளுக்கும், நகர மக்களுக்கும் இடையில் பேச்சிலோ, நடைஉடை பாவனைகளிலோ எந்தவொரு இணைவும் இல்லை. பெரும்பாலான நகரசபை பிரதிநிதிகள் சாலை போடும் காண்டிராக்டர்களாகவோ கள்ளச் சாராய வணிகர்களாகவோ அல்லது லாட்டரிச் சீட்டு பிரபுக்களாகவோதான் இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் இவர்களிடமிருந்து அன்னியப் பட்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை. பாராளுமன்றத்தையே எடுத்துக் கொண்டாலும், அதன் உறுப்பினர்கள் பலர் கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டவர்கள் என்பதை மறுத்துவிட முடியுமா?

இந்தப் புதிய மென்பொருள் நடுத்தர வர்க்கத்தினர்தான் பெருவாரியாக அண்ணா ஹசாரேயுடன் களத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பாராளுமன்றம் செயல்படும் முறையே முழுதாகத் தெரியவில்லை, புரியவில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றன. பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் அண்ணா தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்படுகிறது.

உண்மைதான். ஆனால் மன்மோகன் சிங் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரா என்ன? மக்களை விடுங்கள், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட சுதந்திரமாக வாக்களித்து அவரைத் தேர்ந்தெடுக்கவில்லையே? கட்சியின் பிரதமரைத் தேர்ந்தெடுக்க சோனியா காந்திக்கு முழு உரிமை அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் சட்டதிட்டங்களையே 2004-ஆம் ஆண்டு திருத்தி எழுதிவிட்டார்கள். அப்படி சோனியாவால் மட்டும் ”தேர்ந்தெடுக்கப் பட்டு” வந்திருப்பவர்தான் மன்மோகன் சிங். சோனியா தலைமையில் இயங்கும் National Advisory Council (NAC) என்ற குழுதான் எல்லா சட்ட வரைவுகளையும் உருவாக்குகிறது; மத்திய அரசு அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. இந்த NAC குழு மட்டும் மக்களால் *தேர்ந்தெடுக்கப் பட்டதா* என்ன?

இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, தேர்ந்தெடுக்கப் படுதல் என்ற விஷயத்தை நடுத்தர வர்க்கம் ஒரு நகைச்சுவையாகத்தான் கருதுகிறது என்று தோன்றுகிறது. நடுத்தர வர்க்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையேயான கண்ணியமான சமூக ஒப்பந்தம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரண்டு கட்சிகளையுமே சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு சீக்கிரம் இதைப் புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது.

ஏன் ஏழைகளையும், பழங்குடிகளையும் ராம்லீலா மைதானத்தில் காண முடியவில்லை என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்வியே அர்த்தமற்றது. அவர்களால் அங்கு போவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. போனால் அவர்கள் தினக்கூலி என்னாகும்?

ஆனால், அப்பேர்ப்பட்ட பரம ஏழைகளும் கூட இந்தப் போராட்டத்தில் அண்ணா பக்கம்தான் நிற்கிறார்கள் என்பது கண்கூடு. ஏனென்றால் நிறுவனங்களையும், செல்வந்தர்களையும் விடவும் ஊழல் இந்த ஏழைகளைத்தான் மிக அதிகமாகப் பாதிக்கிறது. நிறுவனங்களிடம் ஊழலுக்குத் தீனி போடும் சக்தி உள்ளது; அதற்கு ஆகும் செலவையும் சேர்த்து தங்கள் வாடிக்கையாளர்கள் தலையிலோ, பணியாளர்கள் தலையிலோ கட்டிவிடுவார்கள். ஊழல் என்பது அவர்களுக்கு எரிச்சலூட்டும் ஒரு செலவினம், அவ்வளவுதான்.

ஆனால், பெங்களூரில் எங்கள் பகுதியில் உள்ள பூக்காரருக்கு லஞ்சம் என்பது அவரை நேரடியாகக் காயப்படுத்தி நிலையகுலைய வைக்கும் செலவினம். 300 ரூபாய் சம்பாத்தியத்தில் 30 ரூபாய் வரை லஞ்சமாகத் தரவேண்டிய கட்டாயம்! நமது சாய்வு நாற்காலி இடதுசாரி அறிவுஜீவிகள் உண்மையான இந்தியாவின் இந்த முகத்தைக் கண்டுகொள்வதில்லை. பெரிய வணிக நிறுவனங்கள் அண்ணாவின் போராட்டத்தின்பின் நின்றுகொண்டிருப்பதாக அவர்கள் வெற்றுவாதம் செய்கிறார்கள். ஒருசில பெருவணிகர்கள் ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால், ஏழை மக்கள்தான் அதையும் விட அதிகமாக அண்ணாவிற்கு அருகில் நிற்கிறார்கள். தங்களது வலியையும், இழப்பையும், தினந்தோறும் அரசு இயந்திரத்தின் குட்டிதேவதைகள் தங்களிடம் அடிக்கும் பகல் கொள்ளைக்கு எதிரான தங்கள் உறைந்து விட்ட கோபத்தையும் அண்ணா புரிந்து கொண்டிருக்கிறார் என்று அவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்.

பிரச்சினை, பொதுமக்கள் ஊமைகள் என்பதல்ல. சட்டத்தின் காவலர்கள் செவிடாகியிருக்கிறார்கள் என்பதுதான். நேருவிய முக்காலியின் மூன்றாம் கால் ஒடிந்து விழுந்து கொண்டிருக்கும்போது, பாராளுமன்றத்தின் முதற்தலைமை பற்றி சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்!

ஒரு தேசமாக, இந்தச் சூழலைக் கையாளும் நிலையில் நாம் இருக்கிறோமா? நாம் 1960-களின் பொதுத்துறை நடுத்தர வர்க்கங்களின் பழைய கோஷங்களையே கூவிக் கொண்டிருக்கப் போகிறோமா அல்லது புதிய மென்பொருள் நடுத்தர வர்க்கத்தின் குரலுக்கு செவிசாய்க்கப் போகிறோமா? பாராளுமன்றத்தையும் மற்ற பிரதிநிதி சபைகளையும் புதிய நடுத்தர வர்க்கத்தின் இலட்சியங்களுடன் ஒத்திசைவு கொள்ளும் வகையில் ஆக்குவது சாத்தியமானதுதானா?

லெனினின், மாவோவின் அறைகூவல்கள் எப்படியிருந்தாலும், நம் நாட்டில் உருவாகும் எல்லா சமுதாய மாற்றங்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினரே தலைமை ஏற்றிருக்கின்றனர் என்பது வரலாறு. சுதந்திரப் போராட்டமும் சரி, நெருக்கடி நிலைக்கெதிரான ஜனநாயகப் போராட்டமும் சரி, அப்படித்தான் நிகழ்ந்தன. பாராளுமன்றம் என்ற அமைப்பே பொருளற்றதாக, பயனற்றதாக ஆகும் நிலை வருமானால், நமது அனைத்து அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய பெரிய சவாலுக்கு நாம் தயாராக வேண்டும். இந்த நேரத்தில் அதுதான் நம் விவாதத்திற்கான பொருளாக இருக்க வேண்டுமே அன்றி, பாராளுமன்றத்தின் மாட்சிமை பற்றியும் அரசியல் சட்டத்தின் மாட்சிமை பற்றியும் மக்கள் பிரதிநிதித்துவத்தின் மாட்சிமை பற்றியுமான வெற்றுரைகள் அல்ல.

நமது தற்போதைய பாராளுமன்ற நடைமுறை, அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்களையும் தாண்டி அதிக நாள்கள் அப்படியே வாழ்ந்து வருகிறதோ என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

கட்டுரை ஆசிரியர் ஆர். வைத்தியநாதன் பெங்களூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IIM – Indian Institute of Management) நிதி நிர்வாகத் துறைப் பேராசிரியர். வெளிநாடுகளில் இந்தியக் கருப்புப் பணம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்.

இங்கு குறிப்பிடப் பட்டவை அவரது சொந்தக் கருத்துகள், அவரது நிறுவனத்தினுடையவை அல்ல.

குமட்டவைக்கும் காங்கிரஸ் முகஸ்துதிகள்

சென்ற வார தினசரிகளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். அதில் திருச்சிக்கு வருகைதரும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த விளம்பரத்தைக் கொடுத்திருந்தார். அவர் விளம்பரம் கொடுத்ததில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அவர் திராவிடக் கட்சிகளின் பாணியில் கொடுத்திருந்த வாசகம்தான் பலரை முகம் சுளிக்க வைத்தது.

அப்படி அவர் அதில் என்ன வாசங்களை எழுதியிருந்தார்? அதை ஆங்கிலத்தில் அப்படியே கொடுத்திருக்கிறேன்…

Respectful Warm Welcome to the Rockfort City of Trichy today to Our Living BHARATMATA who spurned High Office in the footsteps of the Mahatma Longest Serving President of AICC Inspirer of Social Scheme for Aam Aadmi and Selfless Leader of India in the New Millenium. Let us Strengthen to build a Strong Self Reliant Secular and Shining India.

இந்த விளம்பரம் பார்த்ததும் நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. இது திராவிடக் கட்சியினரைப் பார்த்து காப்பி அடித்ததனால் ஏற்பட்ட கோளாறா? அல்லது நேரு, வல்லபாய் படேல், ராஜன் பாபு, காமராஜ் ஆகியோரால் வளர்க்கப்பட்ட காங்கிரஸை ஒரு திராவிடக் கட்சியாக மாற்றியதன் பலனா? தெரியவில்லை.

bharath-mathaஇதில் முரண்பாடான, உண்மைக்குப் புறம்பான பல கருத்துகள் விரவிக்கிடப்பதை சாதாரணமானவர்களும் உணரமுடிகிறது. முதலில் ‘வாழும் பாரதமாதா’ எனும் சொல்லடைவினைப் பார்ப்போம். பாரதமாதா எனும் குறியீடு சுதந்திரப் போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட சொல். நாட்டு சுதந்திரத்தின்பால் அதிக அக்கறை எடுக்காத, படிப்பறியாத, அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் இந்திய மக்களுக்கு எப்படி நாட்டின் சுதந்திர உணர்வை ஊட்ட முடியும் என்று சிந்தித்தபோது கிடைத்த ஒரு மந்திரச்சொல்தான் அது. வங்கத்தில் எழுதப்பட்ட ஒரு நாவலில் வந்த ‘வந்தேமாதரம்’ எனும் விழிப்புணர்வூட்டும் சொல்லை வைத்து பாரதத் திருநாட்டை ஓர் அன்னையாக உருவகப்படுத்தினால் என்ன என்று தேசபக்தர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. படிப்பறிவோ, நாட்டறிவோ, நாம் அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணமோ இல்லாமலிருந்த பாமரர்க்கு இறை பக்தி– அதிலும் கிராம தேவதைகளான மாரியம்மா, காளியம்மா, திரெளபதியம்மா போன்ற கிராமப்புற தெய்வங்களிடம் அளவுக்கதிகமான பக்தி– இருந்ததைப் பயன்படுத்திக் கொள்ள மேலுமொரு தெய்வத்தை தேசபக்தர்கள் சிருஷ்டி செய்தார்கள். அந்த புதிய தெய்வம் தான் “பாரத மாதா”. இந்தத் தெய்வத்தை வணங்கப் பயன்பட்ட மந்திரச்சொல்தான், “வந்தே மாதரம்”. இந்தப் புதிய பாரதமாதா தெய்வத்தின் உருவம், இந்திய வரைபடம் போலவே சர்வாலங்கார பூஷிதையாக ஒரு பெண் தெய்வத்தின் உருவத்தை உருவாக்கி, அந்த அன்னையின் உடல் முழுவதும் ஏராளமான பொன், வைர நகைகளை அணிவித்து, அவள் முகம் சோகத்தால் வாட, கையிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டிருக்க, “பாருங்கள் பாரத அன்னையை! எவ்வளவு பெருமைகளும், செல்வங்களும் மிக்க அந்த அன்னையை கையில் விலங்கிட்டு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான் வெள்ளைக்காரன்!!…” என்ற முறையில் செய்த பிரசாரம் நல்ல பலனைத் தந்தது. அறியாமை இருளில் துவண்டு கிடந்த இந்திய மக்களுக்குச் சுதந்திர தாகம் உண்டாக்க இந்த பாரதமாதா உதவி செய்தது. நாடெங்கும் வந்தேமாதரம் தீயில் எண்ணை ஊற்றியது போல பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது. அத்தகைய புனிதமான உருவந்தான் தேசபக்தர்கள் உருவாக்கிய பாரத அன்னை.

sonia-bharath-mathaஅந்த பாரதமாதாவாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் கூட வர்ணிக்கப்பட்டார். அதிலும் காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவா என்பவர் இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்ற வகையில் முகஸ்துதி செய்தார். ஆனால் இன்று அவை எல்லாவற்றையும் தோற்கடிக்கக்கூடிய வகையில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது.

சரி! இப்போது “வாழும் பாரதமாதா” எனும் சொல்லுக்குப் பொருள் பார்க்கலாம். சோனியா காந்தி வாழும் பாரதமாதா என்றால், வாழாத அல்லது மாண்டுபோன பாரதமாதா என்று ஒருவர் உண்டா? அப்படியென்றால், அன்று மக்கள் கொண்டாடிய பாரதமாதா இறந்து போய்விட்டாளா. இன்று இருக்கும் சோனியாதான் வாழும் பாரதமாதாவா? புரியவில்லை. வேறு யாருக்காவது புரிந்தால் சற்று விளக்குங்கள்.

sonia-the-bossஅடுத்ததாக பதவியை வேண்டாமென்று தூக்கி எறிந்துவிட்டு மகாத்மா காந்தியின் அடிச்சுவட்டில் இருப்பவர் என்கிற துதி வேறு. ராஷ்ட்டிரபதி மாளிகைக்குள் நுழையும் வரையில் தனக்கு இத்தனை உறுப்பினர் ஆதரவு இருக்கிறது என்று மக்களுக்கு வெற்றிச்சின்னம் கைகளால் காட்டிவிட்டுச் சென்ற சோனியா திரும்பி வரும்போது வாடிய கத்தரிக்காய் போல முகத்தைச் சுறுக்கிக்கொண்டு எனக்குப் பதவி வேண்டாம் என்று அறிவித்ததின் பின்னணி என்ன, உண்மை என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா. இதில் மகாத்மா காந்திக்கு ஒப்புவமை வேறு. மகாத்மா சுதந்திரம் நெருங்கி வருவதை உணர்ந்தபோது சொன்ன கருத்து, “சுதந்திரம் வருவது நிச்சயமாகிவிட்ட இந்த நிலையில், எனது கவலையெல்லாம் நம் மக்கள் இந்த சுதந்திரத்தை எப்படிப் பேணி காக்கப் போகிறார்கள்,” என்பதுதான். அந்த நிலையில் 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் டெல்லியில் யார் யாருக்கு என்ன பதவிகள் என்று கூறுபோட்டுக் கொண்டிருந்த போது இவர் மேற்கு வங்கத்தில் நவ்காளியில் நடைபெற்ற இரத்தக் களறியில் சமாதானம் பேசிக்கொண்டு, உண்ணாவிரதம் இருந்துகொண்டு, நாட்டு மக்களோடு மக்களாக இருந்தார் என்பதை சரித்திரம் படித்த எவரும் மறந்துவிட முடியாது. இந்த இரண்டும் ஒன்றா? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சிறிது விளக்குங்கள்.

sonia_gandhi_caricatureஅடுத்ததாக, “காங்கிரஸ் தலைவர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர்” என்கிற புகழாரம். அதுசரிதான். காங்கிரஸ் சரித்திரம் 1885-இல் தொடங்கப்பட்ட காலம் முதலாக இரண்டாம் உலகப் போர் காலத்தில் சில ஆண்டுகள் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் கூடி புதிய தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பதவி ஏற்கச் செய்தனர். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் காங்கிரஸ் மாநாடு கண்டிப்பாக நாடு முழுவதிலிருந்து வரும் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வருமாண்டில் தாங்கள் செய்யப்போகும் வேலைகளுக்கு பட்டியலிட்டு ஒரு தீர்மானம் கொண்டு வருவார்கள். அதற்கு ஓரிரு மாதங்கள் முன்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி அந்த மாநாட்டின் தலைவர் யார், வருமாண்டில் செய்யவேண்டிய பணிகள் இவை குறித்து முடிவுசெய்து, அந்தத் தீர்மானத்தை டிசம்பரில் நடக்கும் மாநாட்டில் முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். அப்படிச் செய்யும்போது ஒவ்வோராண்டும், தவிர்க்கமுடியாமல் போகும் ஆண்டுகள் தவிர, புதிய தலைவர்களே வருவது வழக்கம். காரியக் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், மாநாட்டுக்குத் தலைமை வகிப்பதோடு, மறு ஆண்டு முழுவதும் கட்சியின் தலைவராக இருப்பார். தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்று? சொல்லுங்கள்? ஹிட்லரும், முசோலினியும், ஸ்டாலினும், குருஷேவும், மாவோவும் பல்லாண்டுகள் தங்கள் நாட்டின் தலைமையில் இருந்திருக்கிறார்கள். இவர்களும் அந்த நாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களும் ஒன்றா? இப்படியே போனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பாரம்பரிய முறைப்படி காரியக் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இவை கூடாமல் வாழ்நாள் முழுக்கக்கூட தலைவராக யாரால் வேண்டுமானாலும் இருக்க முடியும். நமக்குப் புரியவில்லை.

kamaraj-childrenஅடுத்து, சுயநலமில்லாத பெருந்தலைவர், ஏழை எளிய மக்களின் பங்காளர், இப்படியெல்லாம் புகழாரம். காமராஜரைச் சொன்னார்கள், ‘ஏழைப் பங்காளர்’ என்று; கல்விக்கண் திறந்தவர் என்று; பகலுணவு கொடுத்த கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் தொடங்கியவர் என்று. மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஏன்? அதுதான் உண்மை. அந்த ஏழைப்பங்காளர் கொடுத்த சலுகைகள், திட்டங்கள் இவற்றால் சாதாரண மக்கள் பயனடைந்தார்கள். அவர் காலத்தில் படிக்கத் தொடங்கியவர்களின் குடும்பத்தில் அவர்கள்தான் முதன்முதலில் பள்ளிக்கூடம் சென்றவர்களாக இருப்பார்கள். அப்படிப் பயனடைந்தவர்கள் அடித்தட்டில் உழன்று கிடந்த காலம் மாறி பல உயர்ந்த பதவிகளில் அமர்ந்தார்கள். அப்படி அவர்கள் உச்சத்துக்குச் சென்ற போது நன்றி மறவாமல் அந்த உத்தமத் தலைவன்- காலா காந்தி என அழைக்கப்பட்ட- காமராஜை வாழ்த்தினார்கள். அவர் இறந்தபோது, தன் சொந்தத் தந்தையை இழந்தது போல் உணர்ச்சிவசப்பட்டு மயங்கியவர்களையும் பார்த்திருக்கிறோம். யார் இப்போது ஆம் ஆத்மிக்கு உதவுபவர்கள், யார் சுயநலம் இல்லாதவர்கள்? தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாத காமராஜா? வேறு யாராவதா? தன் தாய் தன் வீட்டுக்கு விருதுநகர் நகராட்சி கொண்டு வந்து இணைத்த குடிநீர் குழாயை யாரைக் கேட்டு வைத்தீர்கள் என்று உடனடியாக கழற்றச் சொன்னவர் காமராஜ். அன்னைக்கு ஓர் ஐம்பது ரூபாய் அதிகமாக மாதாமாதம் கொடுக்கக்கூடாதா என்று கேட்ட நண்பர்களிடம், அப்படிக் கொடுத்தால் அவர் அதையும் செலவு செய்துவிடுவார். தற்போது கொடுக்கும் மாதம் நூறு ரூபாயே போதும் என்று சொன்ன காமராஜ சுயநலம் இல்லாதவரா, வேறு யாராவதா? தெரியவில்லை.

congressபுத்தாயிரமாண்டின் விலை மதிப்பில்லாத சுயநலமற்ற தலைவராம். முகஸ்துதி அதிகமானால் நகைச்சுவையாக மாறிவிடும். திராவிடக் கட்சிகள்தான் தங்கள் தலைவர்களை என்னவெல்லாமோ சொல்லி முகஸ்துதி செய்கிறார்கள் என்றால், தேசிய கட்சியான காங்கிரஸுமா அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். ‘என் இதயமே’, ‘ என் மூச்சுக்காற்றே’, “என் சுவாசமே’, ‘என் முகவரியே’ இப்படியெல்லாம் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது. ஒருவன் கடுமையாக வாழ்நாள் முழுவதும் உழைத்தும் வாய்க்கும் கைக்குமாக வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஆனால் அதே நேரம் அவனுக்குத் தெரிந்த ஒருவன், ஒன்றுமே இல்லாமல் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்தவன் இன்று கார், பங்களா, கணக்கில்லாத வங்கி இருப்புத் தொகை, அந்நிய நாட்டு வங்கிகளில் முதலீடு, பல துணைவிகள் என்று வாழ்வதைப் பார்த்து, உழைக்கும் நல்ல உத்தமனும் அப்படி வாழ நினைத்தால் அது சரியான வழிதானா? மகாத்மாவின் பெயரையும், நேரு, படேல், ராஜாஜி, காமராஜ் ஆகியோரின் பெயரையும் சொல்லும் அருகதை இவர்களுக்கு இருக்குமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

bharath-matha1

இவர்கள் கட்சி நடத்தவோ, பிழைப்பு நடத்தவோ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நமக்குக் கவலை இல்லை. ஆனால் தெய்வத்துக்கு நிகராக மக்களால் போற்றப்பட்ட, இந்த நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்த மாபெரும் பெரியோர்களின் பெயரோடு தங்களையும் இணைத்துக் கொண்டு அவர்களுடைய இமேஜுக்குக் களங்கம் ஏற்படுத்தி விடாதீர்கள் என்று இவர்களைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்வதுதான் நாம் செய்யமுடியும். தங்கள் வளர்ச்சிக்காக, தங்கள் ஆதாயத்துக்காக இவர்கள் செய்யும் இதுபோன்ற விளம்பரங்கள் பெரியோர்களை இழிவு செய்வதாக அமைந்துவிட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் இவர்கள் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. காங்கிரஸுக்கு இந்தப் பாரம்பரியம் கிடையாது என்பதை உணர்ந்தால் போதும்.

ஒரு தேசியவாதி என்ற முறையில் என் வேண்டுகோள் இதுதான்.

வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே

ஒரிஸாவில் கிறிஸ்தவ மிஷனரிகளோடு கைகோர்த்த நாக்ஸலைட்டுகள் லக்ஷ்மணானந்த சுவாமிகளைக் கொடூரமாக கொலை செய்ததால் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அது குறித்து எழுதப்படும் பல கட்டுரைகளில் ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது: வனவாசிகள் இந்துக்கள் இல்லை என்பதே அது. வனவாசிகளின் தொழுகைமுறை என்பது வேறு, இந்துக்களின் தொழுகைமுறை என்பது வேறு என்றும், அதனால் தன்னை இந்துவாக ஒரு வனவாசி கருதும்போது அவன் மதம் மாறியதாகக் கருதப்படவேண்டும் என்றும் அறிவுஜீவிகள், ஊடகங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. ஒரு விதத்தில் இந்தப் பார்வை ஆரிய-திராவிட இனவாதத்தின் நீட்சி எனலாம்.

பாரத சமுதாயத்தின் இயல்பான பன்மைத் தன்மையை இப்பார்வைச் சட்டகத்தின் மூலம் பல சமூகத் துறை ஆராய்ச்சியாளர்கள் ‘விளக்க’ முற்படுகின்றனர். குறிப்பாக வனவாசி சமுதாயங்களின் நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், தொன்மங்கள் ஆகியவற்றை பாரதத்தின் பொதுவான பண்பாட்டு நீரோட்டத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பார்வைகள் இந்த பார்வைச் சட்டகத்தின் மூலம் ஏற்கப்பட்ட உண்மைகள் ஆகிவிட்டன. குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய அரசின் போது நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்புகளில் இம்முறை சமுதாய ஒற்றுமையைக் குலைக்கும் புதிய சமுதாய அடையாளங்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆரியர்-ஆரியரல்லாதவர் என்னும் சட்டகத்தின் அடிப்படையில் எண்ணற்ற கள-ஆய்வுகள் பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளாலும் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களாலும் செய்யப்பட்டது. இதுவே தொடர்ந்து வந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்தது. விடுதலைக்குப் பின்னரும் இன்றளவும் இதே நிலை–ஆய்வாளர்களின் அறிவுநிலை சோம்பல் முதல் அரசியல் காரணங்கள் வரை–எனப் பலவித காரணங்களால் தொடர்கிறது.

வரலாற்று ரீதியாக பாரதத்தின் கலாசாரத்தை ‘பிராம்மணீய’ மேல் சாதி கலாசாரமாகவும் வனவாசிகளின் கலாசாரங்கள் அனைத்துமே இந்த பிராம்மணீய மேல்சாதி கலாசாரத் திணிப்பால் ஒடுக்கப்பட்டதாகவுமான பார்வைக்கு முக்கியப் பங்களித்தவர் மாக்ஸ்முல்லர். ஆனால் வனவாசிப் பண்பாடு என்பது அவ்வாறு ஒடுக்கப்பட்டவை அல்ல என்பதும் அவை பாரத கலாசாரத்துக்கு இடையறாத பங்களித்தவாறு செயல்பட்டுவருவதும் இந்தச் சட்டகத்துக்கு அப்பால் விரிந்து நோக்கும் திறனுடையவர்களுக்கு எளிதாகப் புரியும்.

சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மெக்கிம் மாரியோட் ஒரு மானுடவியல் பேராசிரியர். இவரது ஆராய்ச்சி பாரதம் மற்றும் இதர தெற்காசியா, ஜப்பான் ஆகியவற்றின் கிராமங்கள், கிராமத்தார் வாழ்க்கை மற்றும் நகர்ப்புற வாழ்க்கை ஆகியவற்றை களமாகக் கொண்டது. மாரியோட் பாரத ஆன்மீக வாழ்க்கை என்பதன் நிறமாலையானது செவ்விய (classical) மற்றும் வனவாசி ஆன்மீகப் பண்புகளின் பிரித்தறியமுடியாத இணையாடல்களால் காலங்கள் தோறும் இடையறாது உருவாக்கப்படுவது என்பதனைக் காண்கிறார். மேற்கத்திய குறுகிய மாதிரிகளால் அவை அளவிட்டுக் கூறுபடுத்த முடியாதவை அவை என்பதனை வலியுறுத்துகிறார். ஸ்ரீ அரவிந்தர், மகாத்மா காந்தி ஆகிய ஆன்மீக தேசியவாதிகளும் வீரியர் எல்வின், சரத் சந்திர ராய், ஜி.எஸ். குர்யே, மற்றும் கே. சுரேஷ் சிங் போன்ற பாரத மானுடவியலாளர்களும் வலியுறுத்திய ஒரு தேசிய யதார்த்தமே இது.

இதில் வீரியர் எல்வினைக் குறிப்பிட்டு கூற வேண்டும். ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”

மூரியா வனவாசிகள் குறித்து எழுதும்போது எல்வின் கூறுகிறார்: “முரியா மதம் என்பது இந்து மதக் குடும்பத்தில் ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. குறிப்பாக சைவத் தொடர்புடையது.” மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது வனவாசி வழிபாட்டு முறைகளும் ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்து மதம் என்றே கணக்கெடுக்கப் படவேண்டுமென மிகத் தீவிரமாக ஃபாதர் எல்வின் வலியுறுத்தினார். 1940களில் கத்தோலிக்க மிஷினரி முயற்சிகளுக்கு எதிராக மிகக்கடுமையான இயக்கத்தை எல்வின் தொடங்கினார். வனவாசி சமூகங்களிடையில் கிறிஸ்தவ மிஷினரிகளின் செயல்பாடுகள் மூன்றுவிதமான பாதகங்களைக் கொண்டு வருவதாக எல்வின் கருதினார்: 1. பொருளாதாரச் சுரண்டல்; 2. மனோதத்துவ ரீதியிலான சுரண்டல்; 3. சமுதாயச் சுரண்டல், குறிப்பாக அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் கைப்பாவையாக ஒருவித இனவாதத்தை உருவாக்குதல். பொருளாதார கடன்கள் கொடுத்து மதம் மாறினால் வட்டி கொடுக்க வேண்டாமெனக் கூறுவதன் மூலமும் வேலைகளை முதலில் கொடுத்து பின்னர் மதம் மாறாவிட்டால் வேலைக்கு உத்தரவாதம் இல்லை என மன அழுத்தம் கொடுப்பதன் மூலம் மதம் மாற்றுவதையும் எல்வின் ஆவணப்படுத்தினார். இதுபோக அன்னிய மதுபான வகைகளும் மதமாற்றத்துக்கு உதவுவதாக எல்வின் குற்றம் சாட்டினார். மதம் மாறும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறி கத்தோலிக்க பாதிரியார்கள் ஏதுமறியா வனவாசி இளைஞர்களை மதம் மாற்றியதையும் எல்வின் குறிப்பிடுகிறார்.

காந்தியவாதியான தக்கர் பாபாவும் எல்வினும் வனவாசிகளின் ஆன்மீகப் பாரம்பரியத்தின் பாரதீயத் தன்மையைக் காப்பாற்ற மதமாற்றத்தை எதிர்க்க வேண்டிய அவசியத்தைக் கூறி, கடுமையாக பிரசாரம் செய்தார்கள். மண்ட்லா பகுதியில் மதமாற்ற அமைப்புகளைத் தடை செய்ய எல்வின் செய்த பிரசாரத்தில் இந்தியாவின் அனைத்து இந்து சமுதாயமும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துப் போராடவேண்டும் என எல்வின் பிரகடனம் செய்தார். மதச்சார்பற்ற இந்திய அரசின் வனவாசிக்கோட்பாடு நேரு-எல்வின் கோட்பாடு என அழைக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு வீரியர் எல்வினையே சுதந்திர இந்தியா வனவாசி சமூகங்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவின் தன்மை குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கச் செய்தார். எனவே வனவாசிகள் இந்துக்கள் என்பதே மதச்சார்பற்ற இந்திய அரசின் நிலைப்பாடும் ஆகும்.

பழங்குடி/வனவாசி vs சாதி இந்துக்கள் என வேறுபாடாகக் காட்டப்படும் பாரம்பரியங்கள் பல இடங்களில் பிரித்தறிய இயலாத அளவில் ஒன்றி உருவாகியுள்ளன. உதாரணமாக, பூரி ஜகன்னாதர் கோவில் உருவாக்கம் குறித்த ஐதீகக் கதை இதை தெளிவாகக் காட்டுகிறது. பன்மைப் பாரம்பரியங்களை எமது-மற்றவரது என ஒன்றை ஒன்று ஒழித்தோ அல்லது ஒன்றினை ஒன்று அடக்கியோ உருவாக்கப்பட்டது அல்ல பூரி ஜகன்னாதர் கோவில். வனவாசி குடும்ப தெய்வமான நீலமாதவரை மதித்து ஏற்று அதற்கான மிகப்பெரும் கோவிலை அரசன் அமைத்துக் கொடுக்கும் அந்த ஐதீக கதையில் மேற்கத்திய பொதுப்பிரக்ஞையில் காட்டப்படுவது போல வனவாசி நாகரிகமற்ற காட்டுமிராண்டியாகக் காட்டப்படாமல் மிகுந்த பண்பாடும் ஆன்மீக மேன்மையும் உடையவராக, அரசனுக்குச் சமமான அந்தஸ்தினை கொண்டவராகக் காட்டப்படுவது நமக்கு இந்த உண்மையை இன்னமும் தெளிவாக்குகிறது. குருக்பா, லம்பாடி, ஏனாதி, ஏருகுலா மற்றும் செஞ்சு போன்ற வனவாசி சமுதாயங்களுக்கும் திருப்பதி வெங்கடேஸ்வரருக்குமான உறவு, சபரிமலை அய்யப்பசாமி, ஜம்முவின் வைணவி தேவி ஆகிய கோவில்களின் வனஜாதி உறவுகள் இந்தத் தொடர்ச்சியை வலியுறுத்தி நிற்கின்றன. கந்தோபா மற்றொரு முக்கியமான வனவாசி சமுதாய தெய்வமாகும். அதைப் போலவே சர்ப்ப வழிபாடு, தேவியர் வழிபாடு ஆகியவையும் நமது வனவாசி பாரம்பரியத்தின் பரிமாணங்களே ஆகும்.

தமிழ்நாட்டில் குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கியங்களிலும் குறவன், குறத்தி சமுதாயத்தினர் பொது-சமுதாயத்தின் ஒரு அங்கமாக -அவர்களுக்கே உரிய பண்பாட்டுச் செழுமையுடன் விளங்குகின்றனரே அன்றி ஒடுக்கப்பட்டவராகவோ ஒதுக்கப் பட்டவராகவோ விளங்கிடவில்லை. பல வனவாசி சமுதாயங்களுக்கு பாரத சமுதாய அமைப்பில் வனங்களில் தனித்தன்மைகொண்ட உரிமைகள் இருந்ததையும் வனவாசி சமுதாயங்கள் வனங்களின் ஆர்வலராகவும் அதே நேரத்தில் வனங்களின் வளத்தினை வளங்குன்றாத் தன்மையுடன் பயன்படுத்தி வந்தமையும் சமுதாயத்தின் பிற சமூகத்தினர் வனவாசி சமுதாயங்களின் இந்த உரிமையை மதித்து நடந்தமையும் பாரத இலக்கியங்களிலும் பண்பாட்டிலும் நிலையாக இடம் பெற்றுள்ளதோர் அம்சமாகும்.

ஆனால் பிரிட்டிஷார் வந்த பிறகே வனவாசிச் சமுதாயங்களுக்கு வனத்தின் மீதான உறவுகள் சிதைக்கப்பட்டன. முக்கியமாக 1871ல் பல நூற்றுக்கணக்கான வனவாசி சமுதாயங்களை பிரிட்டிஷ் அரசு தனது ‘குற்றவாளி இனங்கள்’ எனும் சட்டத்தின் மூலம் அந்தச் சமுதாயங்களின் வாழ்வாதாரமான வாழ்க்கை முறைகளிலிருந்து துண்டித்தது. இதற்காக அது பெரும் வன்முறையைப் பயன்படுத்தியது. பல வனவாசிச் சமுதாய எழுச்சிகள் கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டன. இந்நிலையில் இவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் ஒதுக்கப்படுதலுக்கும் மேலும் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கும் ஆளானார்கள்.

இன்றைய சாதிய அமைப்புக்குள் இருக்கும் சமுதாயத்திற்கும் வனவாசிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் முந்தையவர்கள் ஆரிய இனத்தவர் என்றும் பிந்தையவர் மண்ணின் மைந்தர்கள் (aborigines) என்றும் கூறும் கருத்தாக்கங்கள் உள்நோக்கத்துடன் ஊடகங்களிலும் அரசியல்வாதிகளாலும் பரப்பப்படும் நிலையில் மரபணு ஆராய்ச்சிகள் உண்மைநிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன. மரபணு ஆராய்ச்சிகள் வனவாசி சமுதாயம் பாரதத்தின் சமுதாயத்தில் ஒரு அங்கமேயன்றி வேறல்ல என்பதனை வெளிப்படுத்தியுள்ளது. அண்மையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி உலகப்புகழ்பெற்ற மானுட மரபணுவியல் ஆராய்ச்சியாளரான லூகா கவல்லி ஸ்கப்ரோஸா என்பவரால் இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களான சங்கமித்திர சென்குப்தா, பார்த்தா மஜும்தார் ஆகியோருடன் இணைந்து நடத்தியதாகும். அந்த ஆராய்ச்சி முடிவு மத்திய ஆசியாவிலிருந்து ‘ஆரிய’ படையெடுப்பு நடந்திருக்கலாம் என்பதை மறுக்கிறது. கிவிசல்ட், சௌபே ஆகியோர் நடத்திய மரபணு ஆராய்ச்சிகளும் சாதிய சமுதாயங்கள் என கருதப்படும் மக்களுக்கும் வனவாசி சமுதாயங்களுக்குமான மரபணு வேறுபாடுகள் இனரீதியிலானவை அல்ல என்பதனைக் காட்டுகின்றன. ஆர்1ஏ1 (R1A1) என்னும் மரபணுத்தொடரின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் அந்தணர்களாக இன்று கருதப்படும் சாதியினருக்கும் வனவாசிகளுக்குமிடையே ஆழ்ந்த மரபணுத் தொடர்ச்சி இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நூல்கள் மற்றும் கட்டுரைகள்

1.Sandhya Jain, Adi Deo Arya Devata: A Panoramic View of Tribal-Hindu Cultural Interface/Sandhya Jain. New Delhi, Rupa and Co., 2004, x, 335 p., plates,. ISBN 81-291-0522-5.
2. Peopling of South Asia: investigating the caste-tribe continuum in India, Chaubey G, Metspalu M, Kivisild T, Villems R., Department of Evolutionary Biology, Institute of Molecular and Cell Biology, University of Tartu and Estonian Biocentre, Tartu, Estonia, Bioessays. 2006 Dec 22;29 (1):91-100
3. Nandini Sundar, Verrier Elwin and the 1940s missionary debate in central India,Between Ethnography and Fiction: Verrier Elwin and the Tribal Question in India, Tanka Bahadur Subba, Sujit Som, K. C. Baral, North Eastern Hill University Dept. of Anthropology
4. The Autochthonous Origin and a Tribal Link of Indian Brahmins: Evaluation Through Molecular Genetic Markers, The American Society of Human Genetics, 57th Annual Meeting Abstract Book , 2007.