நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

achchan_urangatha_veedu01எப்பொழுது ஒரு மதமோ, கொள்கையோ, தத்துவமோ, தலைவரோ, நிறுவனப்படுத்தப் படுகிறதோ, சொத்துக்கள் சேருகின்றனவோ அப்பொழுது அந்த இடத்தில் பிரச்சினைகள் துவங்குகின்றன. ஊழல்கள் ஏற்படுகின்றன. சகலவிதமான பாவங்களுக்கும் அந்த நிறுவனத்தின் அபரிதமான பணமும், அதிகாரமும் இட்டுச் செல்கின்றன. இதற்கு இந்து மதத்தின் சில மடங்களும் கூட விலக்கில்லை. குறிப்பாக நிறுவனப் படுத்தப்படும் மத அமைப்புக்களின் மீதும் அதன் நிர்வாகிகள் மதத் தலைவர்கள் மீதும் பல்வேறு விதமான குற்றசாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டே வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஏராளமான சர்ச்சுக்களில் சிறுவர்கள் மீது அந்த சர்ச்சுக்களின் பாதிரியார்கள் பாலியல் வன்முறை செய்தார்கள் என்ற குற்றசாட்டு வைக்கப்பட்டு பல பாதிரியார்களின் குற்றங்கள் நிரூபணமாகி பாதிக்கப் பட்டவர்களுக்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு ஏராளமான சர்ச்சுக்கள் இன்று திவாலாகி வருகின்றன. வாடிக்கன் வரை இந்தப் பிரச்சினை அலசப்படுகிறது. இருந்தாலும் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும், கற்பழிப்புக்களும் சர்ச்களில் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இந்திய சர்ச்சுகளும் இந்தப் பிரச்சினைக்குத் தப்பவில்லை.

I am not sure if they have similar symptoms, but i know they do what i did – they had a pelvic exam and pelvic ultrasound and the doc said, "i'm going to prescribe you 10mg of clomid and you could feel the difference", and i was like, "ok.. And in another study, researchers also found that breast cancer was still more common in african price of clomid in canada american women than in white women. Prednisolone 5mg price per pill, how to order a prednisolone online in india.

However, i cannot find a lot of information about this drug, so i am researching. One particular species that is of special interest in our study is hoarily zyrtec price chemist warehouse clostridium difficile. People use steroids because they are a safe way to get rid of unwanted fat.

In men with erectile dysfunction, the hormone testosterone is the main cause of the problem. They may look like generic drugs, but they are http://galeriatak.pion.pl/gerard-fieret-fotograf-i-kobieta/ often not as effective. Buy tamoxifen 20mg online from india and get best deals.

கேரள மாநிலம் இந்தியாவில் மிக அதிகமான கன்யாஸ்திரீகளையும், பாதிரியார்களையும் உருவாக்குகின்றது. அந்த மாநிலத்தில்தான் இளம் கன்யாஸ்த்ரீகள் மீதும் சர்ச்சுக்கு பிரார்த்தனைக்கு வரும் சிறுவர்கள், சிறுமிகள் மீதும் சர்ச் பாதிரியார்களாலும், கன்யாஸ்த்தீர்களாலும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த வக்கிரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சமீபத்தில் ஜெஸ்மின் என்றொரு கன்யாஸ்த்ரீ எழுதிய உண்மை அனுபவங்கள் “ஆமென், ஒரு கன்யாஸ்த்தீரீயின் கதா” என்ற பரபரப்பான புத்தகமாக வெளிவந்து பல பதிப்புக்கள் கண்டும், இன்றும் கேரளாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த கன்யாஸ்த்ரீ ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். கேரள மாநிலத்தின் மிகப் பெரும் பணக்கார சர்ச்சான மலபார் சர்ச் நடத்தும் கல்லூரியில் பணியாற்றியவர். கத்தோலிக்க சர்ச்சுக்களில் நடக்கும் ஊழல்களையும், பெண்கள் மீது நடத்தப் படும் பாலியல் வன்முறைகளையும் கண்டித்ததால் இந்த கன்யாஸ்த்ரீக்கு மனநோய் என்று பொய்யான குற்றம் சாட்டப்பட்டு சபையில் இருந்து விலக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார். தன் கதையை தான் கண்ட அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டு கத்தோலிக்க சர்ச்சுக்களின் கோர முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். புதிதாகச் சேரும் கன்யாஸ்திரீகளை மூத்த கன்யாஸ்தீரீகள் தங்கள் ஓரினச் சேர்க்கைக்குப் பலியாடாக்குவதையும், ஆண் பாதிரியார்கள், இளம் பெண்களை கட்டயாப் படுத்திக் கற்பழித்ததையும் அங்கு நிலவும் மோசமான ஊழல்களையும் இந்த சகோதரி அம்பலப் படுத்தியுள்ளார்.

புனிதமான இறைப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படும் பாதிரியார்களும், கன்யாஸ்திரீகளும், பிறரது பாவங்களையெல்லாம் வாங்கி அவர்களுக்குப் பாவ மன்னிப்பு வழங்க ஆண்டவனிடம் பிரார்த்திப்பதாகக் கூறும் இவர்கள் சாதாரண மனிதர்கள் சிந்திக்கக் கூடத் தயங்கும் கொடும் பாவங்களை எவ்வித மனசாட்சியும் இன்றி தொடர்ந்து செய்து வருகின்றனர். சரி கிறிஸ்துவ மதத்தின் நிறுவனங்களில் நிகழும் ஊழல்களையும், கற்பழிப்புக்களையும் குறை கூற, பேச இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று எந்த ஒரு கிறிஸ்துவரும் கேள்வி எழுப்பலாம். புட்டபர்த்தி சாய்பாபா மடம் உட்பட பல்வேறு இந்து மடங்கள் மீதும் இது போன்ற குற்றசாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பணம் குவியும் இடத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களால் பாவம் சேர்க்கப்படுகிறது. உண்மைதான். இந்துச் சாமியார்களிலும் போலிச்சாமியார்களும் மதுரை ஆதீனம் போன்ற கோமாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இந்துக் கோவில்களில் பணிபுரியும் ஒரு சில அர்ச்சகர்களும் கூட கோவிலுக்குள்ளேயே அசிங்கமாக நடக்கும் சம்பவங்கள் கூட அவ்வப் பொழுது நடக்கின்றனதான். இதில் ஒரு மதத்தை மட்டும் குறிப்பாகக் குற்றம் சாட்ட முடியாதுதான் இருந்தாலும், நிறுவனப்படுத்தப் பட்ட மதங்களைச் சேர்ந்த வழிபாட்டு நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கும் இந்து மதத்தைச் சார்ந்த மத நிறுவனங்களுக்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன.

முதலில் இந்து மத மடாலயங்களும், ஆதீனங்களும், சபைகளும், மிஷன்களும் ஒட்டு மொத்த இந்துக்களைக் கட்டுப் படுத்துவதில்லை. இந்து மதம் என்பதே யாராலும் கட்டுப் படுத்தப் படாத இயல்பான ஒரு மதமாகும். இங்கு எந்த ஒரு பூசாரிகளும், சாய்பாபாப்க்களும், சங்கராச்சாரியார்களும், ஜீயர்களும் இந்த மத பக்தர்கள் மீது யாதொரு கட்டுப்பாடும் கொள்ள முடியாது. இங்கு இந்தக் கிழமை சர்ச்சுக்குப் போக வேண்டும் இந்த கிழமை நோன்பு இருக்க வேண்டும் இந்த திசை பார்த்துத்தான் வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை யார் மீதும் திணிக்க முடியாது. இந்து பக்தர்கள் இந்த மடாலயங்களின் தலைவர்களுக்கும் துறவிகளுக்கும் மதிப்பளிக்கிறார்கள் ஆனால் ஒரு சிலரைத் தவிர ஒட்டு மொத்த இந்து மதத்தினரும் யாதொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் விதி முறைகளுக்குள்ளும் அடங்காதவர்கள். மடாலயங்களின் நிர்வாக வசதிக்காக அந்தந்த மடங்களுக்குள்ளே பலத்த கட்டுப்பாடுகளும் நியமங்களும் சாஸ்திரங்களும் சடங்குகளும் இருந்த போதிலும் மடத்துக்கு வெளியே, கோவில்களுக்கு வெளியே இந்து மதத்தினர் முழு சுதந்திரத்துடனேயே தங்கள் வழிபாடுகளையும் அன்றாட வாழ்க்கை முறைகளையும் நிகழ்த்தி வருகிறார்கள். ஒரு இந்து வெள்ளிக் கிழமை கோவிலுக்குப் போகா விட்டால் அவருக்கு எந்தவொரு பூசாரியும் தண்டனை கொடுப்பதில்லை. ஏனென்றால் இந்து மதம் நிறுவனப் படுத்தப்பட்ட மதம் அல்ல. ஒரு மடத்திற்கு அபிமானம் உள்ள சீடர்களைக் கூட அந்த மடத் தலைவர் கட்டுப் படுத்துவதில்லை. அறிவுரைகளையும், விதிமுறைகளையும் சொல்வார்களே ஒழிய யாரையும் யாரும் நிர்ப்பந்தப் படுத்துவதில்லை. அதனால்தான் இயல்பாக இருத்தலே இந்து மதம் என்று அறியப் படுகிறது. ஒரு வைணவர் தங்கள் குடும்ப வழக்கப் படி ஒரு ஜீயர் மடத்திற்குச் சென்று வணங்கலாம், அந்த ஜீயரைக் குருவாக ஏற்றுக் கொள்ளலாம் ஆனாலும் அந்த ஜீயர் அந்த வைணவரின் குடும்ப விவகாரத்திலோ அவர் அன்றாடம் என்ன செய்கிறார் என்ன செய்ய வேண்டும் என்றோ அவர் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்றோ என்று எப்படி கோவிலுக்குப் போக வேண்டும் என்பதையோ வற்புறுத்துவதில்லை, திணிப்பதில்லை. மத சம்பிரதாயங்களை மட்டும் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்கிறாரே அன்றி யாரையும் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டு நிர்ப்பதித்து சட்டம் போட்டு தன் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரவே முடியாது. இது சங்கர மடங்களுக்கும், மேல்மருவத்தூருக்கும், அமிர்தானந்த மாயி அம்மாவுக்கும், சாய்பாபாவுக்கும் எந்தவொரு இந்து மடத்துக்கும் பெரிய மடத்தின் பெரிய குருபீடங்களில் இருந்து சாதாரண சாலையோரக் கோவில் பூசாரிகள் வரை பொருந்தும். இந்து மத அமைப்புகள் இந்துக்களின் சொந்த விவகாரங்களில் தலையிடுவது ஒரு எல்லையுடன் நின்று விடுகின்றது.

ஒரு இந்து நாத்திகனாக இருக்க விருப்பப்பட்டால் தாராளமாக இருந்து கொள்ளலாம். அதனால் அவனைக் கோவிலுக்குள் நுழையாதே என்று எந்தப் பூசாரியும் சொல்லி விட முடியாது. தன்னை நாத்திகன் என்று சொல்லிக்கொண்டு திரிந்த ஈ வெ ராமசாமி நாயக்கரைக் கூட, அவர் ராமர் விக்ரகங்களையும், விநாயகர் சிலைகளையும் செருப்பால் அடித்த பின்னரும் கூட எந்தவொரு இந்து மதத் தலைவரும், மடமும், கோவிலும், பூசாரியும் அவரை இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்கச் சொல்லவில்லை விலக்கவும் முடியாது. சமுதாயப் பகிஷ்கரிப்பும் நடப்பதில்லை. அனைவரும் இந்து மதத்திற்குள் அடக்கம் என்பதுதான் இந்து மதத்தின் பலமும் பலவீனமூமாக பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருகின்றது. கோவிலுக்குப் போனாலும் சரி, போகா விட்டாலும் சரி, சடங்குகளை அனுசரித்தாலும் சரி அனுசரிக்கா விட்டாலும் சரி, பக்தி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மத குருமார்களை மதித்தாலும் சரி, மதிக்காவிட்டாலும் சரி, கடவுள் நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி எல்லோருமே இந்துக்கள்தான். கிராமங்களில் பஞ்சாயத்துக்கள், ஜாதி அமைப்புக்கள் போன்ற மதம் அல்லாத சமுதாய அமைப்புக்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எவையுமே ஒரு சில விதிவிலக்குகள் தவிர மதம் சார்ந்தோ கோவில் சார்ந்தோ அமைவதில்லை. மதத்தின் பெயரைச் சொல்லி இந்து மதத்தில் யாரையும் சாதி விலக்கமோ, மத விலக்கமோ, கிராம விலக்கமோ செய்யப் படுவதில்லை. மதத்தின் பெயரால் எவரும் தண்டிக்கப் படுவதும் இல்லை. சாதிக் கொடுமைகள் என்பதும் ஆதிக்க சாதியின் அடக்கு முறைகளும் கூட சாதியினரின் பலத்தின் பாற்பட்டு வருவதே அன்றி இந்து மதத்தின் பெயரால் வருவதல்ல. சாதிக் கட்டுப்பாடுகள் கூட அந்தக் குறிப்பிட்ட ஜாதியினரிடம் மட்டும்தான் செல்லுபடியாகுமே தவிர ஒட்டு மொத்த இந்துக்களையும் கட்டுப் படுத்தாது. தீண்டாமைக் கொடுமைகளும் அழிய வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஏராளமான சீர்திருத்தங்களை மதத்தின் பெயரால் எதிர்ப்பு இல்லாமல் அமுல் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க ஜாதிகளின் தீண்டாமைக் கொடுமை மட்டும் அழிக்கப்பட்டு விட்டால் இந்து மதத்தில் இருக்கும் ஒரு பெரிய குறையும் அகன்று விடும். அதுதான் இந்து மதத்தின் இன்றைய நிலமை. இந்துக்கள் பெரும்பாலும் தங்கள் மத குருமார்களாலோ, கோவில்களாலோ கட்டுப்படுத்தப் படுவது கிடையாது.

மாறாக கிறிஸ்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் மதத்தின் பெயரால் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப் படுத்தப் படுகிறார்கள். ஜமாத்தினாலும், சர்ச்சுகளினாலும், பாதிரியார்களினாலும் முல்லாக்களாலும் அவர்களின் சுதந்திரம் பெரிதும் கட்டுப் படுத்தப் படுகின்றன. உதாரணமாக பல ஊர்களிலும் சர்ச்சுக்கு ஒழுங்காக வராத கிறிஸ்துவர்கள் பெருத்த தொகையை அபராதமாகக் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஒருவர் சர்ச்சுக்குப் போகாமல் தன் மகளின் திருமணத்தை நடத்த மட்டும் சர்ச்சுக்குப் போவாரேயானால் அவர் அந்தச் சர்ச்சுக்கு லட்ச ரூபாயையும் தாண்டும் பெரிய அபராதத்தைக் கட்டினால் மட்டுமே அவரை அந்தச் சமூகத்திற்குள் மீண்டும் சேர்த்துக் கொள்வார்கள். மேலும் கிறிஸ்துவர்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதையும் சர்ச்சுக்களும் பாதிரியார்களுமே தீர்மானம் செய்கிறார்கள். சமீபத்தில் நடந்த நாடாளுமனறத் தேர்தலில் ஒரே ஒரு இந்து மட்டும் பி ஜே பி சார்பாக நிற்கிறார் என்பதற்காக அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து பங்குகளும், சர்ச்சுக்களும், பாதிரியார்களும் ஒருமித்துச் சேர்ந்து அனைத்து கிறிஸ்துவர்களும் தி மு க வேட்பாளருக்கே ஓட்டளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். தங்களுக்கு மதம் இல்லை ஜாதி இல்லை என்று வெளியில் போலியாகச் சொல்லி ஊரை ஏமாற்றும் மார்க்ஸிஸ்டு கம்னியுஸ்டு கட்சியினர் கூட தங்கள் மார்க்ஸிஸ்டு வேட்ப்பாளருக்கு ஓட்டுப் போடாமல் தங்கள் சர்ச்சுக்கள் கட்டளையிட்ட தி மு க வேட்பாளருக்கே ஓட்டுப் போட்டார்கள். ஏன் அந்த மார்க்கிஸ்டு கட்சி வேட்பாளரே கூட தனக்கு ஓட்டுப் போட்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆக ஒவ்வொரு கிறிஸ்துவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனிப்பட்ட சுதந்திரத்திலும் தனிப்பட்ட குடும்ப தீர்மானங்களிலும் கூட மத அமைப்புகள் தலையிடுகின்றன. யார் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும், யார் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், யார் யாருடன் பேச வேண்டும், யார் என்றைக்கு எந்த சர்ச்சுக்குப் போக வேண்டும், என்பது முதல் தங்கள் சர்ச்சுகளைச் சேர்ந்த ஒருவர் எந்தவிட உள்ளாடை அணிய வேண்டும் என்பது வரை சர்ச்சுக்களும் அதன் பாதிரியார்களும் தீர்மானம் செய்கின்றார்கள். அந்த அளவுக்கு நிறுவனப் படுத்தப் பட்ட மதங்களைச் சேர்ந்தவர்களுடைய தனி மனித சுதந்திரத்திற்குள் அமைப்புகள் மூக்கை நுழைத்து அவர்களைத் தங்களது சர்வாதிகாரமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஒரு கோவில் அர்ச்சகரோ அல்லது ஒரு சங்கராச்சாரியாரோ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் நாலு பேர் கூட கேட்க்க மாட்டான். ஆனால் ஒரு சர்ச்சின் பிஷப் இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கட்டளையிடும் பொழுது பெரும்பாலான கிறிஸ்துவர்கள் தங்கள் கட்சி அபிமானங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்ச்சின் கட்டளைக்கு அடிபணிகிறார்கள் என்பதை கேரளாவிலும், சமீபத்தில் கன்யாகுமரி தொகுதியிலும் கண்டோம். அதைப் போலவே முஸ்லிம்களின் தனி வாழ்வு முதல் அரசியல் முடிவுகள் வரை அவர்கள் மதத்தின், மத குருமார்களின், மத அமைப்புகளின் கட்டளையின்படியே தீர்மானிக்கப் படுகின்றன. ஒரு சில விதி விலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

உதாரணமாக அமெரிக்காவில் மிட் ராம்னி என்று ஒருவர் ரிபப்ளிகன் ஜனாதிபதி அபேட்ச்சகராக சென்ற ஜனாதிபதி ப்ரைமரி தேர்தலில் போட்டியிட்டார். இவர் ஒரு தீவீர மார்மான் (http://www.whymormonism.org/) நம்பிக்கையாளர், கிறிஸ்துவத்தில் ஒரு பிரிவான மார்மோன் சர்ச்சைச் சேர்ந்தவர். இவர் தான் ஜீசஸ் கடவுளின் பிள்ளை என்பதை நம்புவதாகவும் அதே சமயத்தில் தீவீரமான மார்மோன் என்றும் அறிவித்துள்ளார். மார்மோன் சர்ச் கொஞ்சம் மொகமதின் சாயல் கொண்டது. கடவுள் சர்ச்சின் தலைமைப் பாதிரியாரிடம் வந்து காதுக்குள் குசு குசுவேன்று பேசுவதாக நம்புவதுதான் முக்கியமான மார்மோன் நம்பிக்கை. இவர்களுக்கு யேசுவை விட தங்கள் சர்ச்சின் பாதிரியார்தான் முக்கியமானவர் அவர்தான் கடவுள் கூட செல்ஃபோனிலோ அல்லது ஹாட்லைனிலோ பேசும் வல்லமை படைத்தவர், அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அப்படிப் பட்ட மார்மோன் ஒருவர் நாளைக்கு ஜனாதிபதியானால் கடவுளுடன் ஹாட்லைனில் பேசும் தன் சர்ச் பாதிரி சொல்வதைக் கேட்ப்பாரா அமெரிக்க கான்ஸிடிடியுஷனைக் கேட்ப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவர் என்னமோ எனக்கு அமெரிக்காவின் அரசிலமைப்புச் சட்டம்தான் முக்கியம் என்கிறார், நம்புவார்தான் யாரும் இல்லை ஏன் நம்ப மாட்டேன் என்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. மார்மோன்களுக்கு எல்லாமே சர்ச்தான், குடும்பம், பிள்ளை, குட்டி, கல்யாணம் எல்லாம் சர்ச் சொல்வது படிதான் நடக்க வேண்டும், சர்ச்தான் அவர்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது. உங்களுக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் அவர்கள் டவுசருக்குள் போட்டுக் கொள்ளும் உள்ளாடைகளளக் கூட சர்ச்தான் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. சிரிக்காதீர்கள் தன் பக்தர்களுக்காக பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட அந்த உள்ளாடைகளுப் பெயர் “புனித ஜட்டிகள்” சர்ச் செய்து விற்கும் மந்திரிக்கப்பட்ட அந்தப் புனிதமான அண்டர் கார்மெண்டுகளைத்தான் அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அப்படியாகப் பட்ட சர்ச்சினால் ஆசீர்வதிக்கப் பட்ட உள்ளாடைகளை அணிந்துகொண்டு வரும் ஒரு ஜனாதிபதி நாளைக்கு எப்படியாகப்பட்ட சட்ட திட்டங்களை வகுப்பார் என்று யோசனை செய்த தீவீர ரிபப்ளிக்கன்கள் கூட அவரை நிராகரித்துவிட்டார்கள். மார்மோன்கள் நிரம்ப வேடிக்கையானவர்கள், அவர்கள் சர்ச்சுக்கு மேலே விமானம் பறக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் யாரும் மது அருந்தக் கூடாது என்று ஒரு சட்டம் இருப்பதாகச் சொல்வார்கள். இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எப்பொழுது செய்து கொள்ளலாம், எப்பொழுது முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம் சர்ச்தான் தீர்மானம் செய்யும். இப்படிப் பட்ட கடும் மத நிறுவனத்தின் பிடியில் சிக்கி தம் சுதந்திரத்தை இழந்தவர்கள்தான் இந்துக்களையும் பிற மதத்தினரையும் பார்த்துக் காட்டுமிரரண்டிகள் என்றும் பாவிகள் என்றும் ஏசித் திரிகிறார்கள். உலகமெங்கும் இப்படி நிறுவனப் படுத்தப் பட்ட மத நிறுவனங்களும் அதன் தலைவர்களும் மதத்தின் பெயரால் தனி நபர்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட கட்டாயப் படுத்தப்பட்ட நிர்ப்பந்தங்கள் இல்லாத சுதந்திரம் கொண்டது இந்து மதம்.

taslima-nasrin முஸ்லிம் மதத்திலும் இதைப் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. இந்தியா பாக்கிஸ்தான் போர் வந்தால் பாக்கிஸ்தானை ஆதரிக்கச் சொல்லியும், கிரிக்கெட் மேட்சுகளுக்குக் கூட பாக்கிஸ்தானின் வெற்றிக்குப் பிரார்த்திக்கச் சொல்லியும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது பற்றியும் மசூதிகளும் முல்லாக்களும் நிர்ப்பந்திக்கின்றனர். இப்பொழுது இந்துப் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கல்யாணம் செய்யச் சொல்லும் லவ் ஜிகாதைக் கூட மத நிலையங்கள் அறிவிக்கின்றன. காஃபீர்களின் மீதான வெறுப்பும், தாக்குதலுக்கான கட்டளைகளும் கூட மதத் தொழுகையின் பொழுது அறிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் சொந்த விவாகரங்கள் கூட முல்லாக்களால்தான் தீர்வு செய்யப்படுகின்றன. அங்கு நாத்திகராகவோ, மத நம்பிக்கையை எதிர்ப்பவர்களுக்கோ இடம் இல்லை. ஒரு சில அடிப்படைவாத மதக் கொள்கைகளை விமர்சித்த கவிஞர் ரசூல் என்பவர் இன்று வரை மத விலக்கம் செய்யப்பட்டு எண்ணற்ற மன உளைச்சல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார். ஒரு தஸ்லீமா நஸ்ஸ்ரீன் உயிருக்குப் பயந்து நாடு நாடாய் அகதியாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

இந்த நிறுவனப் படுத்த மதங்கள் அந்த மதத் தலைவர்களுக்குத் தரும் அளவற்ற சர்வாதிகாரமும், அதிகாரமும், பண பலமும், ஆதிக்கமும் அந்த மதத் தலைவர்களின் ஊழல்களுக்கும் பிற குற்றங்களுக்கும் வித்திடுகின்றன. ஒரு சர்ச் பாதிரியார் என்பவர் யாராலும் கேள்வி கேட்க்கப் பட முடியாதவர், அவர் கட்டளையின் படிதான் அவருக்குக் கீழே உள்ள சர்ச்சின் உறுப்பினர்கள் அனைவரும் செயல்பட வேண்டும் என்ற அளவற்ற அதிகாரம் காரணமாக அவரால் துணிந்து கற்பழிப்பு கொலைகள் பிற வன்முறைகளைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விட முடிகிறது. ஆக நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் கட்டுப்பாடில்லாத அதிகார வெறி பல்வேறு குற்றங்களுக்கு வழிகோலுகின்றன. இவற்றை பற்றி தமிழ் இந்து ஏன் கவலைப் பட வேண்டும் அது அவர்களது உள் மத வி(வ)காரங்கள் அல்லவா என்று முற்போக்காளர்கள் சிலர் கேள்வி எழுப்பலாம். அதற்கான பதிலைத் தனியாகப் பார்க்கலாம். முதலில் இப்படி சர்ச்சுக்களின் அதிகார வெறிக்குப் பலியான, சர்ச்சுக்களின் அதிகார வெறியால் சீரழிக்கப் பட்ட ஒரு சிறுமியின் உண்மைக் கதை ஒன்று மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது வந்துள்ளதா? இப்பொழுது கமலஹாசன் அளித்துள்ள உன்னைப் போல் ஒருவன் ஒரு அதிசய வரவு. ஒரு துணிவான முயற்சிதான். நமது இயக்குனர்கள் ஒரு சொப்பன வாழ்வில் வாழ்பவர்கள், நடக்க முடியாத சாத்தியம் இல்லாத மிகைப்படுத்தப் பட்ட ஃபாண்டசிகள் எடுப்பதில் மட்டுமே குறியானவர்கள். இவர்களுக்கு நல்ல படங்களும் எடுக்கத் தெரியாது, சமூகப் பிரச்சினைகளை மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்லவும் தெரியாது.. மீண்டும் மீண்டும் காதல், பார்த்துக் காதல், பார்க்காமலேயே காதல், கேட்டுக் காதல், கேட்க்காமலேயே காதல் அல்லது வன்முறை – இதைத் தவிர தமிழ் நாட்டுச் சினீமாக்காரர்களுக்கு வேறு பிரச்சினைகள் இருப்பதே தெரியாது. அப்படியே வேறு பிரச்சினைகளளத் தொட்டாலும் அவையும் யதார்த்தத்துக்குத் தொடர்பில்லாத அபத்தக் குப்பைகளாகவே அமைகின்றன. அபூர்வமாக எப்பொழுதாவது வரும் யதார்த்தப் படங்கள் கூட நிகழ்காலப் பிரச்சினைகளைத் தொடத் துணிவதேயில்லை. கேரளத்தில் தற்காலப் பிரச்சினைகளை துணிந்து தொடர்ந்து தொடுகிறார்கள். ஈநாடு என்ற படம் கேரளத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே படத்தில் ஒட்டு மொத்தமாக அணுக முயன்றது. அதன் பின்னால் எமர்ஜென்சியின் பொழுது நடந்த கோழிக்கோடு ஆர்.இ.சி மாணவனான ராஜன் கொலை வழக்கு சினிமாவாகியது. எத்தனையோ சமகால வழக்குகள் திரைப்படக் கருவாகி மக்களிடம் பிரச்சினையின் ஆழத்தைக்கொண்டு சென்று அவர்களை அலச வைத்தது. எனக்குத் தெரிந்து 94ல் நடந்த இஸ்ரோ நம்பி நாராயணன் கேஸ் மட்டும் தான் இன்னும் திரைப்படமாக வரவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தைக் கலக்கிய கொடூரமான வழக்குகளில் ஒன்று சூரிய நெல்லி பள்ளி மாணவி கடத்தலும், விபச்சாரத்துக்கு உட்படுத்தப்பட்டதும். அதில் பல பிரபலங்களின் பெயர்கள் கைதானார்காள். ஒருவரைத் தவிர அனனவரும் விடுவிக்கப் பட்டனர். நெஞ்சைப் பதற வைக்கக் கூடிய அந்தக் கொடூரத்தை இப்பொழுது சினிமாவாக்கியிருக்கிறார் லால் ஜோஸ் என்ற இயக்குனர். இந்தப் படம் கேரளத்தின் சமூக அவலங்கள் பலவற்றையும் தொட்டுச் செல்கிறது. பெண்களைப் பெற்றோரின் வயிறைக் கலங்க அடிக்கிறது. ரத்தக் கண்ணீர் வரவழைத்துள்ளது. பிரச்சினையைத் தானே சொல்லுகிறோம் என்று ஏனோ தானோவென்று ஒரு பிரச்சாரப் படமாக எடுத்து விடவில்லை. ஒரு அற்புதமான சினிமாவகவும் எடுத்துள்ளார்கள். பல நாட்களுக்கு நம்மைத் தூக்கம் வராமல் செய்யக் கூடிய ஒரு படம் அச்சன் உறங்காத வீடு.

சூரியநெல்லி கேஸ் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். 1996 செப்டம்பரில் கேரளத்தின் மலைகள் நிறைந்த அடர்வன மாநிலமான இடுக்கி மாவட்டத்தில் ஒரு பள்ளிச் சிறுமியையை காதலிப்பது போல் ஆசை காட்டி ஒரு பஸ் கண்டக்டர் தன்னுடன் கடத்திச் சென்று தான் அனுபவித்த பின் அச்சிறுமியைப் போகப் பொருளாக கேரளத்தின் வெகுமானப் பட்ட கனவான்களுக்கு விற்றிருக்கிறான்., கேரளா முழுக்க அந்தப் பெண்ணை மிரட்டி ஒரு டூர்கொண்டு போய் ஊர் ஊராகப் போய் பெரிய மனுஷாளுக்குப் படைத்திருக்கிறான். 40 நாட்கள் கேரளத்தின் முக்கியப் பிரதானிகளால் சக்கையாகப் பிழீயப்பட்ட அந்தச் சிறுமியை மிரட்டி வெளியே விட்டிருக்கிறார்கள்., விஷயம் வெளியே கசிந்து பின் வழக்காக மாறியது. மொத்தம் 43 பேர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து 35 பேர்களுக்கு கீழ்க்கோர்ட் தண்டனை வழங்கியது. ஹைகோர்ர்ட் ஒரே ஒருவனை மட்டும் தண்டித்துவிட்டு பிறரை விடுதலை செய்துவிட்டது. கேரள அரசு வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு இப்பொழுது எடுத்துச் சென்றுள்ளது. ஆனால் சூரியநெல்லி கேரள மக்களின் மனசாட்சியை எந்தவிதத்திலும் பாதித்து விடவில்லை. அதன் பிறகு விதுரர என்ற ஒரு கேசும், அப்புறம் இன்னொரு கேசுமாகக் கேரளத்தில் பள்ளிச் சிறுமிகள் தொடர்ந்து கடத்தப்பட்டு பெரிய மனுஷாளுக்கு சதை விருந்து படைப்பது தொடர்ந்து நடை பெறுகிறது. கேரளத்தின் மந்திரிமார்களும், போலீஸ்மார்களும், நடிகர்களும் கூட இதில் கூட்டாளிகள். நீலலோகிதசநாடார்,, ஜோசஃப் என்று தொடர்ந்து மந்திரிகள் பதவி விலகினாலும் கூட இதுவரை ஒருவர் கூட தண்டனை அடைந்தது இல்லை. அந்தச் சூரியநெல்லி கேஸ் கடந்த வருடம் திரைப்படமாக எடுக்கப்பட்டு மக்களின் மனசாட்சியைக் கடுமையாக உலுக்கி விட்டது. படம் நம் மனசாட்சியை உலுக்கி பல நாட்களுக்கு நம்மை கலங்க அடிக்க வைப்பது. ஒரு நல்ல சினிமாவால் லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கலங்க அடிக்க முடியும், சிந்திக்க வைக்க முடியும் என்பதற்கு இந்தச் சிறந்த படம் ஒரு உதாரணம். படம் கேஸ் பற்றியது மட்டும் அல்ல, அதையும் தாண்டி, கிறிஸ்துவ சர்ச்சுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் மதம் மாறிய மலையாளிகளின் நிலை, பணக்காரர்களின் விளையாட்டுக்கள், பள்ளிகள் மாணவர்கள் மேல் திணிக்கும் சைக்காலஜிக்கலான அழுத்தம், பெற்றோர் பிள்ளைகளின் மீது திணிக்கும் அழுத்தம், குழந்தைகள் மீது கவனமின்மை, அரசின் அலட்சியம், போலீஸின் பாரபட்சம், மீடியாக்களின் கருணையில்லாத பரபரப்பு, பெண்ணப் பெற்றவர்களின் அவல நிலை என்று ஏராளமான பிரச்சினைகளை மிக அழுத்தமாகத் தொட்டுச் சென்று காண்போரைக் கலங்க அடிக்கிறது அச்சன் உறங்காத வீடு.

சினிமா மிக மிக பவர்ஃபுல் மீடியா அதை அபத்தக் களஞ்சியங்களுக்கு வீணடிக்கக் கூடாது என்பது இது போன்ற படங்களளப் பார்த்தால் புரியும்., இது எந்த விதத்திலும் ஒரு பிரச்சாரப் படம் அல்ல. நீதி போதனைப் படம் அல்ல, இப்படி இப்படி சமூகம் இருக்கிறது என்று படம் பிடித்துக் காட்டுகிறது. அது காண்போரிடம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காண்போரை மனசாட்சிக்குப் பயந்து நடக்க வைக்கிறது. மிகவும் யதார்த்தமான முறையில் இயல்பான நடிப்பு, சிறப்பான காமிரா, இசை என்று மிகச் சிறந்த ஒரு சினிமாவாக பரிமளிக்கிறது அச்சன் உறங்காத வீடு.

அச்சன் உறங்காத வீடு, மூன்று பெண்களைப் பெற்றுவிட்டு சமுதாயத்த்தில் படாத துயர் படும், சிறு வயதிலேயே மனைவியை இழந்த ஒரு அச்சன் உறங்க முடியாமல் போன வீட்டின் கதை. கேரளத்தின் மிக அழகிய மலைப் பிரதேசமான பீர்மேட்டில் எலக்டிரிசிட்டி போர்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண அரசு ஊழியரின் வீட்டில் விதி விளையாடச் சின்னாப் பின்னமாகிறது அவரது வாழ்க்கை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைநாட்டில் சில மனித மிருகங்களின் வக்கிரம் அவரது வாழ்க்கையை நிரந்தரமாக நிர்மூலமாக்கி விடுகிறது. கிறிஸ்துவப் பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மணம் மாறி கிறிஸ்துவ மதத்திற்குப் போய் சாமுவேலாகி விடும் பிரபாகரனை கிறிஸ்துவ மதமும் ஏற்கவில்லை, சொந்த பந்தமும் விலக்கி விடுகிறது. அடைக்கலம் கொடுத்த பெந்த கோஸ்தே சர்ச்சில் விசுவாசமான கிறிஸ்துவனாக மாறி விடுகிறார் சாமுவேல். மூன்று பெண்களை ஈன்ற பின் மனைவி மறைந்து விட தனியாளாய் நின்று கனவுகளுடன் பெண்களை வளர்க்கிறார். கனவுகள் ஒவ்வொன்றாக சிதைய ஆரம்பிக்க கடைசிப் பெண்ணான லில்லியிடம் தன் நம்பிக்கையை வைக்கிறார், அவளை ஒரு டாக்டாருக்குவது அவரது லட்சியமாகிறது. பெந்தேகோஸ்தேயின் வெறி பிடித்த பஜனைகள், தன் பெண்கள், அழகிய மலைச் சூழல் என்று அமைதியான நதியாகப் போகும் வாழ்வில் சூறாவளி வீசுகிறது. பள்ளிக்குப் படிக்கப் போன லில்லி கடைசி பஸ்ஸில் கூட வீடு வந்து சேர்வதில்லை. அதன் பிறகு அவளைத் தேடுகிறார். விதி கொடூரமாக விளையாடுகிறது, 40 நாள் கழித்து சின்னா பின்னமாகி வீடு வந்து சேரும் லில்லியய சாமுவேலும் அவரது குடும்பமும் எப்படி எதிர் கொள்வதும். ஈவு இரக்கமற்ற சமுதாயமும் அவர் அன்று வரை வெறித்தனமாக நம்பிக்கை வைத்த பெந்தகோஸ்தே சர்ச்சும், அரசாங்க அமமப்புகளும் நீதித்துறையும் அவரையும் அவர் குடும்பத்தையும் கடித்துக் குதறிச் சின்னா பின்னப் படுத்தித் தற்கொலைக்குத் தள்ளும் வரை செல்கிறது.

படம் பலரது பார்வைகளில் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் இறுதியில் அனைத்துப் புள்ளிகளும் இயல்பாக இணைகின்றன. படம் “சியோன் மணவாளன், ஏசு மஹராஜன்” என்ற வெறித்தனமான பெந்தகோஸ்தே பஜனைப் பாடலுடன் தொடங்குகிறது. வேகமும் விறு விறுப்பும் நிறைந்த பஜனைப் பாடல் காட்சி. அப்படி ஒரு காமிரா கோணமும் விறுவிறுப்பும் நிறைந்த உக்கிரமான காட்சியுடன் படம் துவங்குகிறது. பின்பு அதே பஜனைக் காட்ச்சி சாமுவேல் மனம் வெந்து சர்ச்சினால் கைவிடப்பட்ட பொழுது கலங்கிய மனநிலையுடைய சாமுவேலின் கண்களில் ஃபிஷ் ஐ காட்சியாக விரிவது அபாரம். காமராமேனும் எடிட்டரும் மிகச் சிறப்பாக அந்தக் காட்சிகளை எடுத்துள்ளார்கள். படம் முழுவதும் இடுக்கி/கோட்டடயம் மாவட்டத்தின் அடர் பச்சைக் கண்னைக் கவருகிறது. ஆனாலும் அதை ரசிக்கும் மனநிலையைக் கதை நமக்கு அளிப்பதில்லை, காட்சிகளின் விறுவிறுப்பும் கதையும், இசையும் நம் மனதைப் படபடப்பில் ஆழ்த்துகிறது. பலஹீனமான மிருதுவான, இரக்க மனம் உள்ளவர்களை பல நாட்களுக்குத் தூக்கம் வராமல் செய்யக் கூடிய உண்மைச் சம்பவம் இந்தத் திரைப்படம்.

வசனங்கள் மிகக் கூர்மையாக வைக்கப்பட்டுள்ளன. வெறித்தனமான பஜனை முடிந்து ஆபீசுக்கும் வரும் சாமுவேல் எதிர்த்த சீட் அம்மணியைக் காட்டி அவர்கள் எல்லாம் வெளுப்புத் தோல் கிறிஸ்துவர்கள் நாங்கள் எல்லாம் கருப்புத் தோல் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதில் தொடங்கி, தொடர்ந்து மலையாளத்தின் சர்ச்சுகளின் கோரப் பிடிகளில் சிக்கித் திணறும் மதம் மாறிய கிறிஸ்துவர்களின் நிலைமை சாடப் படுகிறது. தான் நம்பி விசுவாசமாக நடந்து கொண்ட அதே சர்ச், தன் பெண்ணைக் கடத்திக் கற்பழித்து வீதியில் விற்ற கொடூரன் மதம் மாறி அதே சர்ச்சில் சேர்ந்த ஒரே காரணாத்தினால் மன்னித்து விடச் சொல்கிறது. சாமுவேலின் மத நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அந்த சர்ச் சந்தர்ப்பவாதமாகப் பயன் படுத்திக்கொண்டு அவரை நட்டாற்றில் விடுகிறது. எந்தக் கயவன் பெண்ணைக் கடத்தினானோ அவன் அதே சர்ச்சில் சேர்ந்துகொண்டு பாதிரியுடன் சாமுவேலின் குடும்பத்தில் அமைதி நிலவப் பாட்டுப் பாடுகிறான். மத மாற்றம் ஒன்றே குறி என்று பெந்தகோஸ்தே சர்ச்சுகள் வெறித்தனமாக நீதி நியாயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுகின்றன. சாமுவேல் நம்பிய சர்ச்சும் கை விட்ட நிலையில் கலங்கித் தவிக்கிறார். அந்தப் பாதிரியாரிடம் சாமுவேலின் இந்து நண்பர், அரசியல் கட்சிகள் பிரியாணி கொடுத்து ஆட்களைச் சேர்ப்பது போல ஒரு மதத்திற்கு மதமாற்றம் செய்து ஆட்களைச் சேர்க்கும் நீங்கள் எல்லாம் புனிதர்கள்தானா என்று சாடுகிறார். கிறிஸ்துவர்கள் நிறைந்த மலையாளத்தில் இப்படி மதமாற்றத்தை எதிர்த்து ஒரு சினிமா சாடுவது குறிப்பிடத் தக்கது. பெந்தகோஸ்தே சர்ச்சுகள் தீவீர மதமாற்றதில் குறியாக இருக்கும் பொழுது பிற பிரிவு சர்ச்சுகள் தீவீரமான ஜாதி வெறியையை சமுதாய ஏற்றத் தாழ்வை வளர்க்கின்றன என்பதையும் படம் சொல்கிறது. மொத்தத்தில் சர்ச்சுகள் கேரள கிறிஸ்துவர்கள் வாழ்விலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமூக ஒழுக்கங்களிலும் தலையிட்டு அளவற்ற தீமைகளைக் கொணர்வது படத்தில் மிகத் தெளிவாய்ச் சொல்லப்படுவது, சிக்குலார் வியாதி பிடித்த கம்னியுச கேரளாவில் ஒரு ஆச்சரியகரமான நிகழ்வே. சாமுவேலின் இரண்டவது மகளைத் திருமணம் செய்ய தன் மதம் மாறாத இந்துவானச் சொந்தச் சகோதரியின் மகனே விரும்பிய பொழுதும் சர்ச் தலையிட்டுத் தடுத்து விடுகிறது. பெண்ணைக் கடத்திக்கொண்டு போன பஸ் உரிமையாளரின் பையனுக்கு உயர்ஜாதி சர்ச் உறுதுணையாக இருக்கிறது. இப்படி கேரளாவின் அன்றாட அரசியலிலும் சொந்தக் குடும்ப வாழ்விலும் சர்ச்களின் அதிகாரத் தலையீடுகள் பலமாக இருப்பதை இந்தப் படம் அப்பட்டமாகக் காண்பிக்கின்றது. அதனால்தான் அண்டர்வேரில் கூட சர்ச் தலையிடும் அமெரிக்க மார்மோன் உதாரணத்தை உதாரணமாகச் சொல்லி இந்தப் படத்தின் விளக்க ஆரம்பித்தேன்.

மூத்த பெண்கள் இருவருக்கும் படிப்பு வராத காரணத்தினால் தன் நம்பிக்கையை தன் கடைசி மகள் மீது வைக்கும் சாமுவேல் மிகுந்த அழுத்தத்தை கடைசி மகள் மீது செலுத்துகிறார். அந்த பளு அவரது மகளிடம் அளவு கடந்த மன உளளச்சலையும் பயத்ததயும் உருவாக்குகிறது. உயர் தரப் பள்ளியில் 80 மார்க்குகள் பெற்ற பின்னரும் கூட மார்க் போதாது என்று சொல்லி பெற்றோரை அழைத்து வரச் சொல்லும் பள்ளிக் கூடங்களும் பிள்ளைகள் மீது அளவற்ற சுமையை வைக்கின்றன. அந்த அழுத்தம் தாங்காமல் பயந்து நடுங்கிய பெண் தனக்கு லவ் லெட்டர் கொடுத்தவனை நம்பி சென்று விட அவள் வாழ்க்கைச் சூறையாடப் படுகிறது. தவறு அதிக அழுத்தம் கொடுத்த பெற்றொரின் பக்கமா, 100 சதம் வாங்கச் சொல்லி நெருக்குதல் கொடுக்கும் பள்ளிக்கூடம் மீதா என்ற கேள்வி எழுகிறது. இந்தப் படம் கொடுத்த அதிர்ச்சி நிச்சயம் பெற்றோரரயும் பள்ளிக் கூடங்களையும் ஒரு கணமாவது யோசிக்க வைத்திருக்கும். போலீஸின் அதிகார மீறல்கள், பத்திரிகை டி விக்களின் பேராசைகள் எல்லாம் சேர்ந்து பாதிக்கப் பட்டவர்களின் கண்ணியத்துக்கு இடம் இல்லாமல் செய்து விடுவதும் மிகத் தீவீரமாகப் படத்தில் காட்டப் ப்டுகிறது. போலீஸின் அலட்சியத்தால் அப்பாவி ஒருவரும் இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் சிக்க நேர்ந்து அவரது வாழ்வும் நாசமாகிறது. சர்ச்களின் அரசியல் விளையாட்டுக்கு சாமுவேல் பகடையாகிறார். அரசியல்வாதிகளும் சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். சர்ச்சின் ஆதரவு பெற முயலும் தன் எதிரியையை எம் எல் ஏ இந்தக் கேசில் சிக்க வைக்க முயல்கிறார். ஒரு அபலைச் சிறுமியின் பரிதாபத்தில் சர்ச்சும், அரசியலும் மீடியாக்களும் குளிர்காய முயல்கின்றன

saleem_kumarபடத்தின் முழுப் பலமுமே அச்சனாக வரும் சலீம் குமாரின் அபாரமான நடிப்புத்தான். மலையாளப் படவுலகின் ஒரு சாதாரரண காமெடியனாக இருந்த சலீம்குமாரை மிகவும் கனமான ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்து அவார்ட் வாங்க வைத்திருக்கிறார் இயக்குனர். அற்புதமான நடிப்பு. வெகு யதார்த்தமாகச் செய்திருக்கிறார். ”ஜட்ஜ் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்று அர்த்தம் அதனால்தான் ஜட்ஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று மனநிலை கலங்கி அவர் சொல்லும் இடத்தில் நம் கண்ணீரைத் தவிர்க்கவே முடிவதில்லை. ’இந்திரா கொலையாளிகளுக்குத் தண்டனை கொடுக்க 10 வருடம் எடுத்துக் கொண்டனர். ஆனால் எனக்கு உடனடியாக தண்டனை கொடுத்துவிட்டார்கள். நான் பாக்யவான்’ என்று நீதித்துறையை மிக யதார்த்தமாகச் சாடுகிறார். இப்படி படம் நெடுக இவரது வெகு யதார்த்த நடிப்பு கண்டு அசந்து போனேன். இந்தப் படம் சிறந்த நடிகருக்கான விருதினை மோகன்லாலுடன் இணைந்து சலீம் குமாருக்கும் வாங்கிக் கொடுத்துள்ளது.

மலையாளப் பட உலகின் ஹீரோக்களில் ஒருவரான ப்ரித்விராஜ் இதில் விதிவசத்தில் கேசில் மாட்டிக் கொள்ளும் அப்பாவி இளைஞனாக வருகிறார். அவரது கால்ஷீட் கிடைத்து விட்டது என்பதற்காக பீர்மேடு பகுதியின் இயற்கை எழிலைக் காண்பிக்க அவருக்கு ஒரு பாடலல வைத்தது படத்தின் விநியோயகஸ்தர்களின் வணிக நிர்ப்பந்தமாக இருந்திருக்க வேண்டும். படம் ஒரு கேங்க் ரேப் பற்றியதாக இருந்த பொழுதிலும் கூட ஒரு இடத்தில் கூட ஒரு கட்டில் காட்சியோ, கற்பழிப்பு என்ற சொல்லோ, அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த கோர நிகழ்வுகளோ காட்டப் படுவது கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. எந்த வி்த அபத்தமும், ஆபாசமும், கண்யக் குறைவும் இன்றி இப்படி ஒரு சிக்கலான கேஸ் பற்றிய படத்தை எடுக்க முடியும் என்பது ஆச்சரியமானதொரு விஷயம். பாடல்களும் படத்தில் இருந்து விலகாமல் (ஒரு பாடல் தவிர) பிண்ணனியில் மட்டுமே மிருதுவாகவும் சோகமாகவும் வருகின்றன. அருமையான பாடல்கள்.

படம் பார்த்த பின் சொல்ல முடியாத மன வேதனைக்கும், அழுத்தத்துக்கும் உள்ளானேன். மனம் மிகவும் கனத்துக் கிடந்தது. ஏராளமான கேள்விகளையும் பாடங்களையும் தரும் மிக முக்கியமான ஒரு சினிமா அச்சன் உறங்காத வீடு. அந்த அச்சனை மட்டும் அல்ல படம் பார்க்கும் பெண்ணைப் பெற்ற அச்சன் எவரையுமே பல இரவுகள் உறக்கம் வராமல் அடிக்கக் கூடிய வலுவான திரைப்படம். அவசியம் பார்க்கப் பட வேண்டிய ஒரு திரைப்படம்.

அச்சன் என்ற சொல் ஆண்டவனையும் குறிக்கும், பாதிரியாரையும் குறிக்கும். அச்சனின் பெயரால் அச்சன்கள் போடும் ஆட்டத்தில் அப்பாவி அச்சன்கள் உறங்க முடியாத நிம்மதியற்ற நிலை உருவாவதை அச்சன் உறங்காத வீடு காட்டுகிறது. ஆண்டவனின் பெயரால் மத சாம்ராஜ்யங்கள் நடத்தும் பாதிரியார்கள் பலரும் இப்படி மத வெறியினாலும், அளவற்ற பண பலத்தாலும், அதிகாரக் குவியலினாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கள் சர்ச்சுக்களில் உறுப்பினர்களின் வாழ்க்கையைச் சின்னா பின்னப் படுத்துகிறார்கள் என்பதை இந்த சினிமா மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளது. கேரள சர்ச்சுக்களில் எப்படி பாதிரியார்கள் இளம் பெண்களைச் சூறையாடுகிறார்கள் என்பதை சின் என்ற ஒரு மலையாள வாடை அடிக்கும் ஆங்கிலப் படம் ஒன்றும் காட்டியுள்ளது. மத மாற்றம், ஊழல், அப்பட்டமான வன்முறைகள், கொலைகள் என்று அனைத்துக் கொடுமைகளையும் இந்த நிறுவனப் படுத்தப் பட்ட மதங்கள் அதன் குருமார்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வழங்குகின்றன என்பதை இந்த சினிமா தெளிவாக விளக்குகிறது. நிறுவனப் பட்ட மத அமைப்புகள் எவ்வாறு அந்த அமைப்பின் உறுப்பினர்களான சாமான்யர்கள் வாழ்வைக் குலைக்க முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு தெளிவான சாட்சி. அவசியம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இந்து மதத்தில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் அருமையை இந்தப் படம் விளக்குகிறது.