கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 8

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்

தமிழாக்கம்: சிவஸ்ரீ.விபூதிபூஷண்

பகுதி 1 — பதியியல்

இயேசுவின் ஜீவிதம்

இயேசுவின் அற்புதங்களும் அவரது தெய்வீகத்தன்மையும்

கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

Lilly and other drug makers face growing consumer demand for generics, as the cost of brand-name drugs have risen. The world-renowned online pharmacy viagra 100mg online uk veridically buy amoxicillin no prescription is an online pharmacy where doctors can buy genuine viagra online. The good thing is that there are many benefits when you are going to buy one.

In this case, the doctor will prescribe some medicines. Dapoxetine is also sold buy amoxicillin for uti in many countries as well. I believe that the tablet should be in any network, otherwise it would not turn on.

But, you must make sure that it can not hurt you in any way. When compared Sete Lagoas claritin for sale with the price in pakistan, the u.s. I was able to control my asthma until the end of meds.

இயேசு தனது ஜீவிதத்தில் அனேக அற்புதங்களை செய்தார். ஆகவே, அவர் கடவுளே என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர் செய்ததாகக் கூறப்படுகின்றவை மெய்யாகிலும் அதிசயங்களா? அற்புதங்களா? அருஞ்செயல்கள்தானா?

அதைச் சற்று ஆராயலாம், வாருங்கள்.

யார் அந்தச் சாத்தான்?

00 Satanமுதலாவதாக, இயேசு சாத்தானை வெற்றிகொண்டு அவனைத் தோற்கடித்த சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். யார் இந்தச் சாத்தான்? அவனைப் படைத்தது யார் என்ற கேள்விகளுக்கு உங்கள் பரிசுத்தவேதாகமாகிய விவிலியத்தில் பதில் தேடினால் எதுவும் கிடைப்பதில்லை. சில பைபிள் உரையாசிரியர்கள் படைப்புக்காலத்தில் ஜெஹோவா ஆயிரக்கணக்கான ஏஞ்சல்களைப்[i] படைத்தார் என்றும் அவர்களுள் தனது கட்டளைக்குக் கீழ்படியாதவர்களை அவர் சபித்தார் என்கிறார்கள். சபிக்கப்பட்ட ஏஞ்சல்களுள் ஒருவனே இந்த சாத்தான் என்றும் அவர்கள் சொல்வதுண்டு.

இந்த உரையாசிரியர்கள் எங்கிருந்து இந்தப் புராணத்தைக் கண்டுபிடித்தார்கள்? இந்தத்தகவல்களின் மூலம் எது?  பைபிளிலில் இதைப்பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. இயேசுவின் தாயான மரியாளின் கணவர் யோசேப்புவின் கனவில் வந்ததுபோல் யாராவது ஏஞ்சல் வந்து இவர்களது கனவிலும் சொன்னதோ?

இயேசு, சாத்தான் — இவர்களில் வல்லமையானவர் யார்?

சாத்தானைப்பற்றிய இவர்களது கட்டுக்கதையை நம்பினாலும்கூட இயேசுவைக் கடவுள் என்று ஒப்பமுடியாது.     கடவுளின் சாபத்தால் சாத்தான் தனது ஏஞ்செல் நிலையிலிருந்து வீழ்ந்தான் அல்லவா? இயேசு கடவுளாக இருந்தால், சாத்தான் அஞ்சாமல் அவருக்கு அருகில் வருவதற்கு முடியுமா? இயேசுவைக் கண்டதுமே அவன் அஞ்சி நடுங்கி ஓடிப்போய் இருக்கவேண்டுமே! அல்லது, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி இருக்கவேண்டும் அல்லவா?.

நமது கிராமங்களில் பேய், பிசாசு, துஷ்ட ஆவிகளால், பீடிக்கப்பட்டவர்கள் மாடசாமி, கருப்பசாமி, ஐயனார், சங்கிலி பூதனார் போன்ற கிராமதேவதைகளின் சன்னிதிக்கு வரும்போது அவர்களைவிட்டு ஓடிவிடுவதைக் காணலாமே! சாமியாடிகளைக்கண்டால் மனிதரைப் பிடித்து ஆட்டும் பேய்கள் அஞ்சி நடுங்குவதைத்தானே காணமுடிகிறது?

இங்கே நிலமை இப்படியிருக்க, அங்கே சாத்தானுக்கு இயேசுவை பிடிப்பதற்கு எந்தவித அச்சமும் இருந்ததாக பைபிளிலிருந்து அறியமுடியவில்லை. சான்றாக கீழ்கண்ட வசனத்தைப்பாருங்கள்.

அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குகொண்டு போகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்கு பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடையக் குமாரனேயானால், இந்த கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்” — (மத்தேயு, 4:1-4).

இதே நிகழ்வினை லூக்கா(4:1-13)வின் சுவிஷேசத்திலும் காணலாம்[ii].

      சாத்தான் இயேசுவைப்பிடித்து, பட்டினிபோட்டு, பல இடங்களுக்கு இழுத்து சென்று அலைக்கழித்தது, இந்த வசனங்களில் இருந்து தெளிவாகப் புலனாகிறது மேலும், இயேசுவுக்கு சாத்தானை தூரவிரட்டும் அளவிற்கோ, அல்லது தன்னிடம்   நெருங்குவதைத் தடுக்கும் அளவிற்கோகூட சக்தி இல்லை என்பதும் தெரிகிறது.

சாத்தான் உங்கள் தேவனைவிடவும் திறமையானவனா?

      மத்தேயுவின் சுவேஷேசத்தில்(4:1) இருக்கும் ‘அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குகொண்டு போகப்பட்டார்,’ என்பதைச் சுட்டிக்காட்டி, எமது வாதத்தினை மறுக்கலாம்.

பரிசுத்த ஆவியின் அனுமதியின் பேரிலேதான், சாத்தான் இயேசுவைப்பிடித்து பரிசோதனை செய்தான் என்றும் நீங்கள் வாதிடலாம்.

அப்படியானால் வேறு சில வினாக்கள் அங்கே எழுகிறது.

  1. இயேசுவை வனாந்திரத்துக்கு அனுப்பி சாத்தானைக்கொண்டு பரிசோதிக்கவேண்டிய அவசியம் பரிசுத்த ஆவிக்கு வந்தது ஏன்?
  2. சாத்தான் இயேசுவைப் பரிசோதித்து, இவர் தேவ குமாரன் என்று சான்றிதழ் வழங்கினால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்று பரிசுத்த ஆவி எண்ணியதா?
  3. உங்களது திரித்துவக்கோட்பாட்டின்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் ஒன்று என்கிறீர்களே. அதன்படி பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகியன வேறுவேறு அன்று என்றே பொருள்படும். சுதன் சாத்தானால் சோதிக்கப்பட்டால் பிதாவும், பரிசுத்த ஆவியும்  சோதிக்கப்பட்டதாகத்தானே அர்த்தமாகிவிடும்?

   உங்கள் தேவனாகிய ஜெஹோவா, இயேசுவை சோதனை செய்வதற்கு சாத்தானை அனுமதித்தார் என்பது சாத்தான் அவரைவிட சக்திவாயந்தவன் என்பதை அவரே ஒத்துக்கொள்வதாகிவிடாதா? அன்றி, அவன் உங்கள் ஆண்டவரைக்காட்டிலும் சக்தி குறைந்தவனா இல்லையா என்று அவருக்குத்தெரியாதா?

ஆனால் ஒன்று தெரிகிறது — சாத்தானால் சோதிக்கப்பட்டால் மக்கள் இயேசுவை நம்புவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதே அது.

      சாத்தானுடைய சோதனைகள் என்னென்ன என்பதையும், அவற்றையெல்லாம் உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெய்யாகிலும் வெற்றிகொண்டாரா என்பதையும் ஆராய்வோம்.

வனாந்திரத்தில் இயேசுவின் உண்ணாவிரதம்:

இயேசுவுக்கு சாத்தான் வைத்த சோதனை நாற்பதுநாள் உண்ணாவிரதத்தில் தொடங்குகிறது. உண்ணாவிரதமிருந்த இயேசுவுக்குப் பசித்தது. அப்போது அவரிடத்திலே கல்லை அப்பமாக மாற்றும்படி சாத்தான் சொன்னான். அதனைச் செய்ய இயேசுவால் முடியவில்லை[iii].

இதுதானா பரிட்சையில் தேறும் லட்சணம்? வேறென்ன அவர் செய்தார்?

அவர், மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை, தேவனின் வாய்மொழிகளாலும் வாழ்கிறான், என்றல்லவா பதிலளித்தார்!

கல்லை அப்பமாக்காமல் இப்படி அவர் மடத்தனமாக பதிலளித்தது ஏன்? அவருக்குப் பசி இல்லை என்பதால் அவர் அப்படிப் பேசவில்லை என்று நீங்கள் பதில் கூறலாம். ஆனால் அவருக்குப் பசி எடுத்தது என்பதை, மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிஷேசங்கள் தெளிவாகச் சொல்லுகின்றனவே! — (மத்தேயு, 4:2).

அவர் பசியை வென்றுவிட்டார், ஆகவே அவருக்கு பசிக்கவில்லை, எனவே அவர் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் வாதிடலாம். வனாந்திரத்தில் அவருக்கு பசி ஏற்பட்டதாக பைபிள்சொல்வதால் உங்கள் வாதத்தை ஏற்கவியலாது.

தேவவார்த்தைகளால் மனிதனுக்குப் பசியாறும் என்ற இயேசுவின் கருத்து உண்மையாக இருந்தால் தேவவார்த்தைகளைப்  பயன்படுத்தி பசியாறி இருக்கலாமே?

இன்னொருசமயம், தனது பசிதீர்க்கக் கனிகொடுக்காத அத்திமரத்தைக்கண்டு அவர் கடும்கோபம்கொண்டு சபிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே!

ஆகவே, பசியில்லாததாலோ, பசியை வென்றுவிட்டதாலோ, அல்லது தேவவார்த்தையின் மகிமையால் பசியை வென்றுவிட்டதாலோ, இயேசு கற்களை அப்பமாக மாற்றவில்லை என்பது சரியாகாது. அப்படி மாற்றுவதற்கு எந்த தெய்வீக சக்தியோ மந்திர ஆற்றலோ அவருக்கு இருந்திருக்கவில்லை என்பதே உண்மை.

தேவாலய கோபுர உச்சியிலிருந்து இயேசு குதிக்கமறுத்தது ஏன்?

Jesus on piancle with satanசாத்தான் இயேசுவுக்கு வைத்த இரண்டாவது பரிக்ஷைதான் என்ன? சாத்தான் ஒரு தேவாலயத்தின் கோபுர உச்சிக்கு இயேசுவைக்கொண்டு சென்று, அங்கே இருந்து கீழே குதி, ஏஞ்சல்களான பிதாவின் ஏவலர்கள் காப்பாற்றுவார்கள், என்றதுதான்[iv] இரண்டாம் சோதனை.

இந்தத்தடவையும் இயேசு எதையும் செய்யவில்லை.

உண்மை அவ்வாறு இருக்க, சாத்தானை ஏசு தோற்கடித்தார் என்று இன்னமும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?

சரி, சாத்தானுக்கு ஏதாவது பதில் சொன்னாரா, உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து?

ஆமாம், அவர் சாத்தானை நோக்கி கர்த்தராகிய ஜெஹோவாவை பரிச்சயம் பண்ணிப்பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்வதாக சொன்னார். அபத்தத்திலும் அபத்தம் அல்லவா இது? சாத்தானின் சவாலை ஏற்று, இயேசு  கீழே குதித்திருக்கவேண்டுமே.

சகிப்புத் தன்மையால், பொறுமையால்தான், கோவில் விமான உச்சியிலிருந்து இயேசு தாழக்குதிக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம்.

இயேசு உண்மையிலே பொறுமையின் வடிவமாகவே எப்போதும் இருந்திருந்தால் யாரையும் கடிந்துகொண்டிருக்கமாட்டாரே! பல சமயம் அநியாயமாக சபிக்கவும் செய்திருக்கமாட்டாரே! பொறையுடைமையால் அல்ல, பயத்தினால்தான் இயேசு கோயிலின் சிகரத்திலிருந்து கீழே குதிக்கவில்லை.

பரிசுத்த ஆவியின் ஆணைப்படி சாத்தான் இயேசுவைப் பரிசோதித்தான்; அதனால் அப்படி அவர் செய்யவில்லை என்றுகூட நீங்கள் வாதிடலாம். அப்படியானால்கூட, பரிசோதிப்பது சாத்தானின் கடமை என்றால் — அதில் வெற்றிபெறுவது இயேசுவின் கடமை அல்லவா? அதைவிட்டு நழுவுவது சரியாகாது.

சாத்தானின் சோதனைகளை ஏமாற்றுவது, அதற்கு பதிலாக ஏதேதோ தத்துபித்தென்று அர்த்தமின்றி பேசுவது,  பரிசுத்த ஆவி மற்றும் பிதாவின் ஆணையை மீறுவதாகாதா?

ஜெஹோவாவின் பூரண அருள் இயேசுவுக்கு இருந்திருந்தால், சாத்தானின் சவாலை ஏற்று, ஏஞ்சல்கள் காப்பாற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கையோடு, கோயிலின் சிகரத்திலிருந்து அவர் கீழே குதித்திருக்கமுடியாதா? அல்லது அங்கிருந்து சாத்தானையாவது கீழே தள்ளியிருக்கமுடியாதா? அல்லது, தான் கீழே குதித்தது போன்றதொரு மாயத்தோற்றத்தைச் சாத்தானுக்குக் காட்டியிருக்கலாமே? இவை எதையும் செய்யவில்லையே, உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து!

மலையுச்சியில்  இயேசு நடுநடுங்கியது ஏன்?02 Temptation

இயேசுவைப்பிடித்து, பம்பரம்போல சுழற்றி, ஒரு மலையின் முகட்டுக்குகொண்டு சென்ற சாத்தான், உலகில் உள்ள எல்லா அரசுகளையெல்லாம் காட்டி, நீ எனக்கு முன் மண்டியிட்டால், இவை அனைத்தையும் உனக்குத் தருவேன், என்றான்.

அச்சத்தால் வெலவெலவென நடுநடுங்கிய இயேசு தத்துபித்தென்று உளறினார்[v].

சாத்தானை மெய்யாகிலும் இயேசு தோற்கடித்திருந்தால் அவரை வெற்றியாளர் எனலாம். மாறாக சாத்தான்தான் இயேசுவை  நடுநடுங்கவைத்து வெற்றிபெற்றிருக்கிறான் என்பதுதானே உண்மை?

ஆகவே, பிதா-சுதன்-பரிசுத்த ஆவியாகிய திரித்துவரும் சாத்தானைக்காட்டிலும் வல்லமைகுறைவானவர்கள் என்பது தெரிகிறது.

சாத்தானை வெல்லமுடியாதவர் எப்படிக் கடவுளாக இருக்கமுடியும்?

மேலும், எந்தக்கொடுமையும் செய்யாமல் இயேசுவைப் பாவமே என்று விட்டுவிட்ட சாத்தான், ஜெஹோவாவைவிடக் கருணையுள்ளவராகவே தெரிகிறார்.

பன்றிகளைத் தீயஆவிகளுக்கு இயேசு பலிகொடுத்தது முறையா?

   08 Pigs ஒருசமயம், சில தீய ஆவிகள் பிடிக்கப்பட்ட மனிதனை இயேசுவிடம் கூட்டிவந்து, ஆவிகளை விரட்டச்சொன்னார்கள். அவனை விட்டுவிட, ஆவிகள் இயேசுவிடம் ஆயிரம் பன்றிகளை பலியாகக்கேட்டன. தீயசக்திகளின் இந்த அநியாயமான பேராசையை நிறைவேற்றிக்கொள்ள  ஆயிரம் பன்றிகளைக் கடலில் மூழ்கடித்துக்கொன்றுவிட இயேசு சம்மதித்தார்[vi]. இரண்டாயிரம் பன்றிகளை இழந்துவிட்ட அதன் உரிமையாளர்க்கு எவ்வளவு பெரிய நஷ்டம் இது![vii]

இயேசுவின் தெய்வீக சக்திக்கு நேர்மைக்கு எவ்வளவு பொருத்தமான உதாரணம் இதுவென்று பாருங்கள்!

பசியால் சாபம்விட்ட இயேசு, தானே உண்ணாவிரதம் இருந்தாரா? 

ஒருசமயம் பசியின்வேகத்தில், தனக்குக் கனிகொடாத அத்திமரத்தை அழிந்துபோகும்படி சபித்தார் இயேசு என்பதை நாம் அறிவோம்.

அது உண்மையிலேயே ஒரு பெரிய அற்புதம்தான்! செயற்கரிய அருஞ்செயல்தான்!

மரங்கள் பூத்துக் காய்த்து கனிவதற்கும் பருவம் இருக்கிறதல்லவா? அப்படியே இருந்தாலும், கனிகளை  நாம் பறித்தால்தானே நமக்கு கனிகள் கிடைக்கும்?

நமக்கு பழங்கள் தேவையா, இல்லையா என்பதை மரம் எப்படி அறியும்? கடவுளின் நியதிப்படியேதான் பருவகாலங்களும், மரங்கள் பூப்பதும் காய்ப்பதும், காய்கள் கனியாவதும் நிகழ்கின்றன.

இயேசு மெய்யாகிலும் தேவனாக, தேவகுமாரனாக இருந்திருந்தால் அப்போது அவருக்கு கனிகிடைக்காதற்கு அவரேதான் காரணமாக இருக்கவேண்டும்!. அப்படியானால், தன்னைத்தானே  நொந்துகொள்ளாமல், குற்றமில்லாத அந்த அத்திமரத்தை ஏன் சபித்தார்?  தாளாத பசியால் ஆத்திரம் அடைந்து, சாபம்விட்ட இயேசுவின் செயல் சரிதானா?

ஒருநாள்கூடப் பட்டினியை, பசியைத் தாங்கமுடியாமல் அத்திமரத்துக்கு அழிந்துபோகக்கடவது என்று சாபம்விட்ட ஏசு, நாற்பது நாற்கள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி?

நிச்சயம் அது பொய்தான்.

ஏசுவால் பசியைத்தாங்கமுடியும், ஆனால் தனது மகிமையை சீடர்களுக்கு காட்டுவதற்காகத்தான் அத்திமரத்தை சபித்தார்,’ என்று நீங்கள் சொல்லலாம்.

ஆனால் அத்திமரத்தினைக் கனிகொடுக்கும்படி செய்திருந்தால், அது நிச்சயமாக அற்புதமாக இருந்திருக்கும். அது அனைவரது பசியையும் போக்கியிருக்கும். அதனால் அவரது சீடர்களுக்கு இயேசுவின்மீது இருந்த நம்பிக்கை இன்னும் உறுதியாயிருக்கும்.

சரியான காலத்தில் பொருத்தமான செயல்களைச் செய்வது இயேசுவுக்கே தெரியாத செயலாகத்தான் தெரிகிறது. அவர் நாற்பதுநாள்கள் உண்ணாவிரதம் இருந்தது உண்மையிலே நடந்திருந்தாலும், அது அவரது இச்சைப்படி  நிகழ்ந்திருக்கவாய்ப்பில்லை. சாத்தானின் காவலில், காட்டிலே சிறைப்பட்டு இருந்ததால், அவருக்கு உணவு ஏதும் கிடைக்கவில்லை.  யாரும் உணவைக்கொண்டுவந்து கொடுக்காததாலும், உணவை அவரே தேடிக்கொள்ள முடியாததாலும் அவர் உண்ணாவிரதம் இருந்ததுதான் உண்மை.

நீர்மேல் நடத்தல் போன்றவை அற்புதங்களா?Jesus walks on water

இயேசு நீர்மேல் நடந்தார் என்று புதிய ஏற்பாடு சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் அது ஒரு அற்புதம் ஆகாது.

ஜலஸ்தம்பம் என்னும் இந்த செயல் சாமானியார்களாலும் தற்காலத்தில் நடத்தப்படுகிறது[viii]. தற்காலத்தில் செப்படிவித்தைக்காரர்கள், மாயாஜாலக்காரர்கள், மந்திரவாதிகள் போன்றோர் செய்யும் வித்தைகளை இயேசு அந்தக்காலத்தில் செய்ததாகச் சொல்லப்படுகிறது. மிகச்சாதாரணமான அவற்றை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லை.

இறந்துபோனவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு தேவனா?

     மரித்துப்போனவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு தேவன் என்று சொல்லுகிறீர்கள். அப்போஸ்தலருடைய நடபடிகள் (26:23)[ix] மற்றும் வெளிப்படுத்தின விஷேசம் (1:5)[x] ஆகிய பைபிள்வசனங்கள் தெளிவாக மரித்தோரிலிருந்து எழுந்தவர்களில் இயேசுவே முதலானவர் என்று சொல்வதால் இயேசு செத்துப்போனவர்கள் யாரையும் உயிர்ப்பிக்கவில்லை என்பது உறுதியாகிறது. இயேசு மரித்தவர்கள் யாரையாவது உயிர்ப்பித்திருந்தால் அவர்களில் யாரவதல்லவா முதலாவதாக உயிர்த்தெழுந்த மனிதராக இருந்திருப்பார்கள்? மரித்து உயிர்த்தெழுந்தபின்னர் இயேசு வேறுயாரையும் உயிர்த்தெழச் செய்யவில்லையே! ஆகவே, உயிர்த்தெழுந்த மரித்தவர்களில் இயேசுதானே கடைசியானவராய் இருந்திருக்கவேண்டும்?

மரித்துப் போனவர்களில் — உயிர்த்தெழுந்தவர்களில் முதலானவர்தான் இயேசு; ஆனால், உயிர்த்தெழவைக்கப்பட்டவர் அல்லர் இயேசு, என்று நீங்கள் வாதிடலாம். இயேசுவால் உயிர்ப்பிக்கப்பட்ட மரித்தவர்களும், உயிர்த்தெழுந்தவர்கள்தான் என்பதை யாராவது மறுக்கமுடியுமா? நேற்றிரவு இடியோசைகேட்டு விழித்துக்கொண்டேன் என்று ஒருவர் சொன்னால் அவரே விழித்ததாகத்தானே பொருள்? மரித்துப்போன ஒருவர் உயிர்த்தெழவைக்கப்பட்டாலும் அவர் உயிர்த்தெழுந்தவர்தானே?

 இயேசு தானே உயிர்த்தெழுந்தாரா?

அடுத்து நமக்கு எழும் சந்தேகம்,  இயேசு தனது சக்தியினாலேயே உயிர்த்தெழுந்தாரா என்பதுதான். நிச்சயமாக தனது சக்தியினாலே அவர் உயிர்த்தெழவில்லை. அவரது தேவனால்தான் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதைக்கீழ்கண்ட விவிலிய வசணங்கள் தெளிவுபடுத்துகின்றன:

“நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.(ரோமர் 4:24).

“ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.”  — (அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:15)

கொரிந்தியர் 15ல் காணப்படும் கீழ்கண்ட வசனங்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு யார் காரணம் என்பதை சொல்லவில்லை:

 “கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?  மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே! — (கொரிந்தியர் 15: 12-13).

ஆனால், பின்வரும் வசனம் இயேசு அவரது தேவனாலே உயிர்த்தெழச்செய்யப்பட்டார் என்று தெளிவாகச் சொல்கிறது:

“மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.” — (கொரிந்தியர் 15:15).

இயேசு மரித்தவர்களில் உயிர்த்தெழுந்தவரில் முதலானவர் என்ற விவிலியத்தின் கருத்து மெய்யானதென்றால், அவர் மரித்தவர்களை உயிர்த்தெழச்செய்தார் என்று அதே விவிலியம் சொல்லுவது தவறானதாகத்தானே இருக்கமுடியும்?

குறிப்புக்கள்

[i]  ஏஞ்சல் என்பதைத் தேவதை என்று மொழிபெயர்ப்பு செய்வது கிறிஸ்தவர்களின் வழக்கமாக இருக்கிறது. ஏஞ்சல் என்பதும், தேவதை என்பதும் வேறுவேறு. ஹிந்துப் புராணங்களில் சொல்லப்படும் தேவ, தேவதைகளுக்கு இருக்கிற சுதந்திரம், ஜெஹோவா என்ற யூததேவனின் அடிமைச் சேவகர்களான் ஏஞ்சல்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. –(சிவஸ்ரீ).

[ii] இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாள்கள் முடிந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல் அப்பமாகும்படி சொல்லும்,” என்றான்.

அவர் பிரதியுத்தரமாக, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்றார்.

பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து, “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால், எல்லாம் உம்முடையதாகும்,” என்று சொன்னான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்றார்.

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக்கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது,” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே,” என்றார்.

பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான் — (லூக்கா 4:1-13).

[iii] அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக்கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து, “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்,” என்றான். அவர் பிரதியுத்தரமாக “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு, 4:1-4).

[iv] அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக்கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி, “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுப் போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது,” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு, 4: 5-7).

[v] மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்,” என்று சொன்னான்.

அப்பொழுது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே,” என்றார் — (மத்தேயு 4:8-10).

[vi]  அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு, விட்டு பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில்மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும் — (மாற்கு 5:13).

[vii]  ஊரான்வீட்டு நெய்யே என்பொண்டாட்டி கையே என்ற பழமொழி இங்கே நமது நினைவுக்கு வரலாம். இந்த பன்றிகளின் உரிமையாளர்கள் என்ன பாடுபட்டனர் என்பதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் ஏதும் கூறப்படவே இல்லை.  நமது ஊரில் பேய்விரட்டும் மந்திரவாதிகள் செய்யும் ஆவிகளின் ஆசையை நிறைவேற்றும் வேலையைத்தான் இயேசுவும் செய்திருக்கிறார் போலிருக்கிறது.

[viii]  ஜலஸ்தம்பம் செய்யமுடியுமா என்று சவால்விட்ட ஹிமாலய யோகியிடம் அது பத்துபைசா விலைபோகக்கூடிய வேலை என்று சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், என்பது வரலாறு — (சிவஸ்ரீ.).

[ix] “ தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான் — (அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:23).

[x] உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. — (வெளிப்படுத்தின விஷேசம் 1:5).

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>