சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் (கோ.செங்குட்டுவன்) சமீபத்தில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான சிறு வரலாற்று நூல். விழுப்புரம் மாவட்ட ஊர்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த திராவிட-மார்க்சிய பின்னணி கொண்ட நூலாசிரியர், எண்ணாயிரம் என்ற ஊர்ப்பெயரைக் குறித்த தேடல் மூலமாக இந்த விஷயத்திற்குள் வந்து சேர்ந்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. இந்த ஆய்வில் அவர் கண்டடைந்து எழுதியுள்ள முடிவான கருத்து எனக்கு முற்றிலும் உடன்பாடானது.

It is also helpful for your partner to not to do things that trigger stress in you. Azithromycin 500mg price in kenya - cytotec precio farmacias del ahorro df Alor Gajah the cost of cialis canada online - cialis canada buy uk. Orlistat weight loss pill reviews can i buy orlistat with the buy orlistat pill discount code.

Forse la mamma, la sorella o il mio avversario, soprattutto se n'avesse, quando il bagnato si presentasse, io mi sarei ritrovato. Can i order medicine online in philippines mercury australia a lot more people buy medicine in health and order dapoxetine Mūl hospital in philippines cheap mercury australia. If you’re looking for an all-around high performance speaker, look no further than the all-mahogany mox audio series, which includes the mox audio m3 subwoofer, the mox audio p3 powered subwoofer, and the mox audio x7 powered subwoofer.

Generic levitra professional 40mg online from india. If you have not consulted with a veterinarian before you https://r-mpropertyservices.com/blog/ begin taking the drug or are taking the drug and are not sure of its effects on your pet, call your veterinarian or pharmacist to. The cost of the prescription will also include all the cost-saving measures to help you and your health care team.

“ஒரு கதைக்கு 12ஆம் நூற்றாண்டில் கால் முளைத்தது. இது, 16ஆம் நூற்றாண்டில் இறக்கை கட்டிப் பறந்தது. இப்போதும் அது பறந்து கொண்டுதான் இருக்கிறது” என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது முற்றிலும் சரி. கதை என்பதற்குப் பதிலாக “ஐதிகம்” என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். “சம்பந்தருடனான வாதத்தில் தோற்று மதுரையில் 8000 சமணர்கள் கழுவேறினர்” என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. சம்பந்தரின் காலத்திற்கு 5 நூற்றாண்டுகளுப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு விஷயத்தைப் பதிவு செய்வது தான் இந்த ஐதிகக்கதையின் தொடக்கம். பிறகு, சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடும் அளவுக்கு இந்த ஐதிகம் வளர்ச்சியடைந்தது. இதனைக் கோர்வையாக சான்றுகளுடன் நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். நூலில் குறிப்பிடாவிட்டாலும், இந்த வரிசையில் அருணகிரிநாதரும் உண்டு. முருகப்பெருமானே சம்பந்தராக அவதரித்தவர் என்று பல இடங்களில் கூறும் அருணகிரியார், “மாள அன்றமண் நீசர்கள் கழுவேற – வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா” “சமணரைக் கழுவேற்றிய பெருமாளே” முதலான வரிகளின் மூலம் கழுவேற்றத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதனை அழுத்தமாக ஆவணப்படுத்தும் முகமாக, பாரம்பரிய ஜைனத் துறவியான மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரகர் அவர்களிடமும் நேர்காணல் செய்து, அவரது புகைப்படத்துடன் நூலில் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜைன மடாலயங்களும், ஜைனக் கோயில்களும் பொ.பி 10ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களிலேயே அதிகமாக செழித்து வளர்ந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் இந்த நூல் பதிவு செய்கிறது. இக்காலகட்டம் சம்பந்தர் மதுரையில் கூன்பாண்டியனை சைவத்திற்குத் திருப்பி நின்றசீர் நெடுமாறனாக ஆக்கியதற்குப் பிற்பட்டது. சமணக் கோயில்கள் பெருமளவில் எங்கும் இடிக்கப் பட்டு சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்படவில்லை (மிகச்சில இடங்களில் விதிவிலக்காக அப்படி நடந்திருக்கலாம் என்று கருத இடமுள்ளது). குணபரேச்சரத்திலும், பாண்டி நாட்டிலும் அமணர் பள்ளிகளை அழித்ததாக சைவ நூல்களில் உள்ள ஒன்றிரண்டு குறிப்புகள் மிகைக்கூற்றுகள் அன்றி வேறில்லை என்றும் மிகச் சரியாகவே நூலாசிரியர் கருதுகிறார். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் மதப் போர்களுடனும், கலாசார அழிப்புகளுடனும் இது எந்த வகையிலும் ஒப்பிடத்தக்கல்ல என்றும் ஆசிரியர் வெளிப்படையாக பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நூலின் முக்கியமான பகுதியாக நான் கருதுவது, “சமணர் கழுவேற்றக் கதை தொடர்பாக 1867 முதல் 2014 வரை நடந்தேறிய விவாதங்களை, ஓரளவு தொடர்ச்சியாகத் தொகுக்க முயற்சித்துள்ளேன்” என்று முன்னுரையில் கூறியபடி, நூலாசிரியர் செய்துள்ள தொகுப்பினைத் தான். பெரியபுராணம் அச்சிலேறும் வரை இந்தக் கதை தமிழ்நாட்டில் அவ்வளவு பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை. புத்தகமாக வெளிவந்தவுடன் இந்த விவகாரம் 19-20ம் நூற்றாண்டு சைவ மறுமலர்ச்சி பிரசாரகர்கள், தமிழறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த ஐதிகக் கதையை உண்மை என்று ஏற்றும் மறுத்தும் வாதிட்ட தரப்புகள் யார்யார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

சைவசமயக் குரவர்களைப் போற்றி வழிபட்டாலும், ஜீவகாருண்ய மானுட நேசரான வள்ளலாரை இச்சம்பவம் உறுத்தியிருக்கிறது. ‘இறகெடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈதென்ன ஞாயம்’ என்று சிவபெருமானிடமே நீதிகேட்டிருக்கிறார். திரு.வி.க “அகச்சான்றுகள் கிடைக்கும் வரை சமணரைக் கழுவேற்றிய வரலாற்றை யான் கொள்ளேன், கொள்ளேன்” என்று மறுத்திருக்கிறார். வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களுமான வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியவர்களும், தமிழ்ச் சமண அறிஞர்களான டி.எஸ்.ஸ்ரீபால் முதலானவர்களும், “இது வரலாற்றுச் சம்பவம் அல்ல” என்றும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே” என்றும் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகளான அ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர் போன்றோர், கழுவேற்றம் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். “வேதத்திற்கு நிகரான திருமுறைகளில்” நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் கூறியுள்ள விஷயம் சத்தியமே அன்றி எவ்வாறு பொய்யாகும் என்று அவர்கள் சாதிக்கின்றனர். பாண்டிய மன்னன் சமண முனிவர்களைக் கழுவேற்றியது முற்றிலும் நீதிக்கும் நியாயத்திற்கும் உட்பட்ட செயல்தான் என்றும் கருதுகின்றனர். மதப்பாரம்பரியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மிகக் கடுமையான இறுக்கமான பற்றே இத்தகைய அடிப்படைவாத மனநிலைக்குக் காரணம். அதேசமயம் சைவநெறியாளரான திரு.வி.க, அறிவாரந்த சமநிலையுடன் இவ்விஷயத்தை அணுகியதையும் கவனிக்க வேண்டும். 2009ம் ஆண்டு சென்னையில் ஒரு சைவசமயக் கருத்தரங்கில் கழுவேற்றம் முற்றிலும் கற்பிதமானதே என்ற கருத்தை முன்வைத்து நான் உரையாற்றினேன். திருநெல்வேலி செங்கோல் ஆதீனம் மற்றும் பல சைவ அறிஞர்கள் அவ்வரங்கில் இருந்தனர். எனது உரைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. மாறாக, இத்தகைய ஆய்வுபூர்வமான கருத்துக்கள் பரவலாக பேசப்படவேண்டும் என்றே வந்திருந்தவர்கள் கூறினர்.

கழுவேற்றம் உண்மையே என்று வாதிட்ட மற்றொரு தரப்பினர் திராவிட, மார்க்சிய, பகுத்தறிவாளர்கள் மற்றும் மயிலை. சீனி.வெங்கடசாமி போன்ற விதிவிலக்கான வரலாற்றாசிரியர்கள். பெரியபுராணத்தின் மற்ற சம்பவங்களையும் நரிகள் பரிகளான கதை போன்ற திருவிளையாடல்களையும் கட்டுக்கதைகள் என்று நிராகரித்து விட்டு, அதே வீச்சில் கழுவேற்றம் மட்டும் உண்மையான சம்பவம் என்று இவர்கள் கருதுவதற்குக் காரணம், அந்த சம்பவம் இந்துமதத்தை எதிர்மறையாகவும் வன்முறை நிரம்பியதாகவும் சித்தரிக்க அவர்களுக்கு உதவுகிறது என்பது மட்டும் தான். இதன் பின்னுள்ள நேர்மையின்மையையும் இரட்டைவேடத்தையும் நூலாசிரியர் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளார்.

மற்றபடி, இந்த நூலின் மீதான எனது இரண்டு விமர்சனங்கள்:

1) நல்ல சமநிலையுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டாக அமைந்துள்ளது ‘தமிழகத்தில் சமயங்கள் – ஒரு பார்வை’ என்ற முதல் அத்தியாயம். இந்த அத்தியாயத்தை அப்படியே எடுத்துவிட்டால் கூட நூலின் முழுமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு பீடிகை போல எழுதப்பட்டுள்ள இந்த அத்தியாயத்தில் ஆரிய திராவிட இனவாதம், சம்ஸ்கிருத வெறுப்பு, பிராமண வெறுப்பு ஆகியவற்றில் தோய்ந்த ஆதாரமற்ற கருத்துக்களையும், தமிழ்நாட்டில் வழக்கமாகச் சொல்லப்படும் சிலபல பொய்களையும் அங்கங்கே அள்ளித் தெளித்துச் சென்றிருக்கிறார்நூலாசிரியர். சிறந்த வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களையும், தந்தை பெரியார், புலவர் குழந்தை, தேவநேயப் பாவாணர் போன்ற புரட்டு பிரசாரகர்களின் கருத்துக்களையும் அடுத்தடுத்து ஒரேவிதமான தராதரத்துடன் மேற்கோளிட்டுச் சென்றிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. தமிழ்ச்சூழலில், இங்கு ஏற்கனவே உட்கார்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்க, மார்க்சிய சித்தாந்த காவல் பூதங்களுக்கு ஒரு சம்பிரதாய சலாம் வைத்துவிட்டுத் தான், அந்த சித்தாந்தங்கள் பரப்பிய பொய்களைக் கட்டுடைக்கும் உருப்படியான ஆய்வைக் கூட எடுத்துவைக்க வேண்டும் என்பது ஒரு விதி போல. போகட்டும். நூலாசிரியரின் அரசியல் பின்ணனி இத்திறக்கில் இருந்தாலும், சேக்கிழார் பெருமான், மாணிக்கவாசகப் பெருமான், சம்பந்தர் பெருமான் என்று நூலின் பிற்பகுதியில் அவரது மொழி நடைபோடும்போது, அவரது உள்ளத்துக்குள் இன்னும் சேதப்படாமல் மறைந்திருக்கும் தமிழ் இந்துப்பண்பாட்டு அபிமானம் தான் வெளிவருகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும்.

2) வைதீக, சமண, பௌத்த சமயங்களுக்கிடையே நிகழ்ந்த மோதல்களை அவற்றின் சமூக, அரசியல், தத்துவ பின்னணியில் இன்னும் சிறிது விரிவாக ஆசிரியர் விளக்கியிருக்கலாம். ஆசிரியர் ஆய்வின் பகுதியாக வாசித்த நூல்களிலும் அது போதுமான அளவில் விளக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில் கடைசியிலுள்ள “துணைநின்ற நூல்கள்” பட்டியலில் தமிழ் நூல்கள் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டின் வரலாறு, சமயம், தத்துவம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் பல விரிவான நூல்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. எனவே, ஆராய்ச்சியின் விரிவுக்கும் வீச்சுக்கும் ஆங்கில நூல்களை நேரடியாகவோ அல்லது துணையுடனோ வாசித்து அவற்றின் கருத்துக்களையும் அறிவது முக்கியமானதாகிறது. உதாரணமாக, The Kalabhras in the Pandiya Country (M Arunachalam. University of Madras, 1979) என்ற நூல் இப்புத்தகத்தின் பேசுபொருளுக்கான பல முக்கிய தரவுகளை அளித்திருக்கக் கூடும்.

இந்த விஷயம் குறித்து ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் இணையப் பதிவுகளை அவர் சுட்டிகளுடன் குறிப்பிடுகிறார். இவற்றுடன் “சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்” (2009) என்ற எனது நீள்கட்டுரையையும் அவர் குறிப்பிட்டிருக்கலாம் (இவ்விஷயம் குறித்த கூகிள் தேடல்களில் அதுவும் பிரதானமாக வருகிறது தான்).

“இந்நூலில் புதிய தகவல் எதையும் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறேன், அவ்வளவுதான். ஆனாலும் நூலின் தலைப்பு பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம், சமணர் கழுவேற்றம் சொல்லப்பட்டது போல் இதனை மறுக்கக் கூடிய கருத்துக்கள் ஆழமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதே” என்று முன்னுரையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நூலாசிரியர், இந்த கச்சிதமான நூலின் மூலம் தானே அத்திறக்கில் ஒரு சிறப்பான பதிவை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.

சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்
கோ.செங்குட்டுவன்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
பக்கங்கள்: 168
விலை: ரூ 150

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/9789386737243.html

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)