குமரி அன்னையின் மூக்குத்தி ஒளி

பொதுவாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது: ‘இந்தியர்களுக்கு வரலாற்று அறிவு கிடையாது’. ஆனால் சிறிது ஆராய்ந்து பார்த்தால் உண்மை அப்படி அல்ல என்பது விளங்கும். பாரதவாசிகளாகிய நமக்கு ஒற்றை வரலாறு கிடையாது. மேற்கத்திய வரலாற்றில் வெற்றி அடைந்தவனின் வரலாறு மட்டுமே சொல்லப்படும். ஆதிக்க சக்திகளாக விளங்கிய மன்னர்களின் மத பீடங்களின் வரலாறே பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய வரலாறாக அமைந்தது. அத்தகைய ஒற்றை வரலாறு பாரதத்துக்கு உண்டா என்றால் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆங்கிலேய அறிவியக்க ஆதிக்கம் இந்தியாவில் ஏற்பட்ட பிறகுதான் அத்தகைய ஒற்றைப்படை வரலாறுகள் எழுதப்பட்டன. வின்ஸெண்ட் ஸ்மித் முதல் நீலகண்ட சாஸ்திரிகள் வரை அத்தகைய ஒற்றைத்தன்மை கொண்ட வரலாற்றை நமக்கு அளித்தவர்களே. நம் கல்வி நிலையங்களில் இன்று நமக்கு நம் வரலாறாக சொல்லிக் கொடுக்கப்படுவது இந்த ஒற்றைச் சட்டக அடிப்படையில்தான்.

Its main use is for the treatment of tuberculosis, but is also used as an antibiotic for the treatment of various other bacterial infections such as those caused by streptococcus bacteria (strep throat), and by certain other organisms such as nocardia species. It's a very serious mistake and could be buy clomid for men Mequon downright harmful. The first thing you should remember is this: even if you are on your.

Nigerian pharmaceutical companies, pharmaceutical and healthcare suppliers, the national agency for food and drug administration and control, pharmaceutical associations, pharmaceutical research institutes and private pharmacies were visited and their prices for azithromycin were sought. Clomid for sale the drug and its price, is a standard drug that is used to treat and to prevent ovarian clomid tablets price Hellersdorf hyper-stimulation disorder (ohdsd and infertility and also to suppress. I am so glad that the fda is finally listening to the voices of our readers!

Dapoxetine is a medication used for the treatment of anxiety disorders. The weight gain happens so Edosaki fast in women (i am a man) and i am. They are also effective if the person is ovulating and if she is using a product that contains a high dose of the drug (more- than- 1000 mg per day) clomid tablets buy online over the counter.

ஆனால் பாரதத்தில் ஒவ்வொரு சமுதாயக்குழுவும் அந்தந்த சமுதாயக்குழுவின் வரலாற்று நினைவுகளை அழியாமல் பாதுகாத்து வந்துள்ளது. பள்ளுகளாகவும் தெம்மாங்குகளாகவும் வில்லுப்பாட்டுகளாகவும், கிராம குல தெய்வங்களின் தொன்ம கதைகளாகவும் அந்த வரலாற்று நினைவுகள் ஐதீகப்புனைவுகளுடன் பாதுகாக்கப்பட்டு தலைமுறை தலைமுறைகளாக கடத்தப்பட்டு வந்துள்ளன. ஏன் வரலாற்றுடன் ஐதீகப்புனைவுகள் கலக்கப்பட்டன? எந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியிலும் வளமடைந்தவர்களும் இருப்பார்கள் வெற்றி பெற்றவர்களும் இருப்பார்கள், பாதிக்கப்பட்டவர்களும் இருப்பார்கள், தோல்வி அடைந்தவர்களும் இருப்பார்கள். வரலாற்று நினைவுகள் பெருமிதங்களும் கசப்புகளும் நிரம்பியவை. வரலாற்றின் பெருமிதங்களை நினைவு கூர்பவர்கள் அவற்றின் கசப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் வரலாற்று கசப்புகளை தக்கவைத்து கொண்டே சென்றால் இறுதியில் அது வெறுப்பின் விஷமாக மாறி சமூக நல்லிணக்கத்தை அழித்துவிடும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறு என்கிற பெயரில் ஐரோப்பாவில் யூதர்கள் மீது வளர்க்கப்பட்ட வெறுப்பை சுட்டிக்காட்டலாம். ஆனால் இந்திய சமூகக்குழுக்களின் வரலாற்று நினைவுகளான நாட்டுப்பாடல்களில், சடங்குகளில் இருக்கும் தொன்ம ஐதீக பரிமாணம் இந்த வெறுப்பை பெருமளவு அழித்துவிடுகிறது.

இன்று இந்த சமூகக்குழு வரலாறுகள் சொல்லப்படும் விதம் அடையும் மாற்றம் முக்கியமானது. இன்றைக்கும் ஆதிக்க சக்திகளாக ஆங்காங்கே விளங்குகிறவர்கள் ’இதுதான் உன் வரலாறு’ என அனைத்து சமுதாயக் குழுக்களுக்குமான பொது கதாநாயகர்களையும் வில்லன்களையும் சிருஷ்டித்து வரலாற்றைக் கையளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நம் பாரம்பரியத்தின் நீட்சியாக உருவாகும் வரலாற்றறிஞன் அவனே தேடி சென்று தன் சமுதாயத்தின் தன் முன்னோரின் தன் பிராந்தியத்தின் வரலாற்றை அதன் அத்தனை அம்சங்களுடனும் பதிவு செய்கிறான். வரலாறு இன்றும் காலவெள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகளும் நினைவுகளும் நம் இன்றைய செயல்பாடுகளை நிர்ணயிக்கின்றன. பாதிக்கின்றன. வழி நடத்துகின்றன. எனவே அவற்றை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அத்தகைய சமூக வரலாறுகள் அந்தந்த பிராந்தியம் சார்ந்து மீட்டெடுக்கப்படுவதும் பதிவு செய்யப்படுவதும் அவசியமாகின்றன. அத்தகைய ஒரு வரலாற்றாசிரியராகவே ஜோ தமிழ்செல்வன் விளங்குகிறார்.

kumari_duraisami_titleலூர்தம்மாள் சைமன் குறித்த ஆராய்ச்சியின் போது அவருக்கு கொட்டில்பாடு எஸ் துரைசாமி குறித்த ஒரு சிறிய துப்பு கிடைக்கிறது, அதன் அடிப்படையில் அவர் வரலாற்றால் மறக்கப்பட்டுவிட்ட இம்மனிதரைக் குறித்து ஒரு ஆர்வத்துடன் தேடுகிறார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும் தலைவருமாக இருந்தவர் இவர். இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரரும் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்றவருமாக இவரது ஆளுமையை ஜோ தமிழ்செல்வன் வெளிப்படுத்துகிறார். அத்துடன் அந்த காலகட்டத்தின் பல சாதிய மதவாத அரசியல் செயல்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. மனதிற்கு கஷ்டத்தை அளிப்பவையாக அவை அமைந்தாலும் அவற்றை முதன் முதலாக வெளிக் கொண்டு வர அசாத்திய தைரியமும் நேர்மையும் தேவை. குமரி மாவட்டத்தில் இன்று ஆதிக்க சக்திகளாக விளங்குவோரால் உருவாக்கப்பட்டுள்ள சில பிம்பங்கள் உடைத்தெறியப்படுகின்றன. இது பலருக்கு உவப்பான விஷயமாக அமையாது.

இந்த வரலாற்று வெளிப்பாடு குமரி மாவட்ட மீனவ சமுதாயத்தினை மேல் தூக்கி பிடிக்க அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டது என எளிதாக சொல்லி இதை புறக்கணிக்க முயலலாம். ஆனால் இந்த நூலை ஒருவர் படித்தால் அதற்கான மிக சிறிய மிக நுண்ணிய வாய்ப்பு கூட இல்லை என்பதை உணரலாம். மிகுந்த நேர்மையுடன் ஜோ தமிழ்செல்வன் இதுவரை மறக்கடிக்கப்பட்ட வரலாற்று சம்பவங்களை வெளிக் கொணர்கிறார். இதில் எந்த ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் பெயரும் இருட்டடிப்பு செய்யப்படவோ அதை விட முக்கியமாக அவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படவோ இல்லை.

இன்னும் சொன்னால் இதில் ஒரு அகில இந்திய தலைவரான காமராஜரின் கூர்த்த மதியும் எந்த அளவு சமரசமில்லாத நேர்மையுடன் மக்கள் பிரச்சனைகளை அவர் அணுகினார் என்பதும் வெளியாகிறது. குமரிமாவட்டம் தமிழகத்துடன் இணையும் அந்த நாளில் கூட காமராஜர் ‘இனி உங்களுக்கு அதிகாரமும் பதவியும் வாரி வழங்குவோம்’ என புகழாரங்கள் சூட்டவில்லை. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் முன்னேறி இருப்பதால் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்கே முன்னுரிமை தரப்படும் என தெளிவாக சொல்கிறார். பசப்பு வார்த்தைகள் பேசாமல் இத்தகைய நேர்மையுடன் நேர்பட பேசும் ஒரு தலைவர் அண்மைக் கடந்த காலத்தில் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்.

லூர்தம்மாள் சைமனுக்கும் துரைசாமி அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு கருத்து முரண் குறித்து ஜோ தமிழ்செல்வன் சொல்லியிருக்கும் அத்தியாயம் முக்கியமானது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா சமுதாயக்குழுக்களிலும் தம்மை அரச பரம்பரையினர் என சொல்ல தரவுகள் இருக்கும். இந்தியாவில் நிலவிய அரச முறை ஐரோப்பிய அரச அமைப்பினை போன்றதன்று. இங்கு பெருமளவுக்கு சமூகக்குழுக்களுக்கு சுதந்திரம் இருந்தது. சாதியக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் பிராந்திய நிர்வாகத்தில் இந்த சுதந்திரம் நிலவியது. எனவே ஒவ்வொரு சமுதாயக் குழுவும் தன்னை அரசர் என சொல்வதை முழுமையாக வரலாற்றுப் பிழை என கருத முடியாது. ஆனால் இன்று அது அடக்குமுறையையும் சாதிய வெறியையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு அருவெருப்பான பெருமையாக வடக்க்கு மற்றும் மத்திய தமிழ்நாடுகளில் காண்கிறோம். ஜனநாயக மாற்றத்தில் ஒரு சமுதாயக்குழு முன்வைக்க வேண்டியது இந்த பழம் பெருமையை அல்ல அதன் ஜனநாயக பிரதிநிதித்துவத்தையே என்பதை துரைசாமி அவர்கள் உணர்ந்திருந்திருக்கிறார். எனவே தம்மை அரச பரம்பரையினர் என பதியாமல் முக்குவர் என பதிய வேண்டுமென்று லூர்தம்மாள் சைமனை எதிர்த்து கோரிக்கை வைத்து வெற்றியும் பெறுகிறார் துரைசாமி அவர்கள். ‘அரசர் குலத்தை முக்குவர் குலமாக மாற்றியது முக்குவர்களுக்கிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கான’ முயற்சி என மிகச்சரியாக ஜோ தமிழ்செல்வன் கணிக்கிறார்.

அரசு மருத்துவமனையை விரிவுபடுத்த லூர்தம்மாள் சைமன் முயன்ற போது அதனை நாகர்கோவிலின் ஒரு முக்கிய தனியார் மருத்துவர் எதிர்ப்பதுடன் அதற்கு பழிவாங்க கத்தோலிக்க சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொருவரை லூர்தம்மாள் சைமனுக்கு எதிராக நிற்க வைத்த சதி ஆச்சரியமளிக்கிறது. அதில் துரைசாமி அவர்கள் காமராஜரின் வழிகாட்டலில் லூர்தம்மாள் சைமனுக்காக செயல்பட்டது அதற்கான காரணங்கள் முக்கியமானவை. தொடர்ந்து திராவிட இயக்கங்கள் காமராஜருக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பது இதுவரை எவரும் வெளிக்கொண்டு வந்திராத ஒரு முக்கிய தகவல். அப்போது காமராஜருக்கு எதிராக மிகக்கடுமையாக பல்முனைத் தாக்குதல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஜோ தமிழ்செல்வன் விவரிக்கிறார். இன்றைய மதவாத பிரச்சாரங்களின் ஒட்டுமொத்த வடிவத்தை அன்றைக்கே காண முடிகிறது.

ஜோ தமிழ்ச்செல்வன்
ஜோ தமிழ்ச்செல்வன்

1969 தேர்தலில் இந்த சாதி-மத பிரிவினை வாதங்களுக்கு அப்பால் தேசிய ஜனநாயக மக்கள் நல உணர்வுடன் துரைசாமி செயல்படுகிறார். வாக்குகள் சாதி மத அடிப்படையில் சிதறிய போதும் துரைசாமி எனும் மீனவ கத்தோலிக்க சமுதாய தலைவர் ஒருவரின் தேசிய பார்வையால் காமராஜர் வெற்றி பெறுகிறார். திராவிட மாயையால் தமிழ்நாடே இருளில் வீழ்ந்த காலகட்டத்தில் குமரிமாவட்டம் குமரி அன்னையின் மூக்குத்தி ஒளியாக ஒற்றை ஒளிக் கீற்றை தமிழகத்துக்கு அளித்த தருணம் அது. என்றென்றைக்கும் குமரி மாவட்டத்துக்கு வரலாற்றில் இடம் தந்த தருணம் அது. அதற்கான முதன்மை காரணமாக அமைந்தவர் கொட்டில்பாடு எஸ்.துரைசாமி அவர்களே. இன்றைய மீனவ சமுதாயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த குமரிமாவட்டமே படித்துக் கொள்ள வேண்டிய ஒரு சிறப்பான பாடத்தை இங்கு ஜோ தமிழ்செல்வன் நம் முன் வைக்கிறார்.

ஆக இந்த நூல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைவரின் வரலாற்று நினைவுகளை மீட்டெடுக்கும் நூல் மட்டும் அல்ல. அதற்கு மேலாக பல தளங்களில் அது நம்முடன் உரையாடுகிறது. ஒரு இந்திய குடிமகனாக, குமரி மாவட்ட மண்ணின் மைந்தனாக, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த முயற்சியாக, வரலாற்று ஆவணமாக, என இந்த நூல் நமக்கு அளிக்கும் பல தள ஒளிவீச்சுகள் இந்நூலை சமகால வரலாற்று பதிவுகளின் வரிசையில் முக்கியமானதாக ஆக்குகிறது. ஜோ தமிழ்செல்வனுக்கு குமரிமாவட்டமும் தமிழகமும் நன்றிக்கடன் பட்டுள்ளன.

(”குமரிக்காங்கிரஸின் தந்தை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி”  நூலுக்கு எழுதிய முன்னுரை)

 

நூலிலிருந்து சில பகுதிகள்

கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தை விரும்பாத நாயர் சேவா சங்கத் தலைவர் மன்னத்து பத்மநாபனும், எஸ்.என்.டி.பி யோகத்தின் தலைவரான சங்கரும் இணைந்து இந்துக்களை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் ‘இந்து மகா மண்டலம்’ என்கிற அமைப்பை 1950 இல் உருவாக்கினர். ஏராளமான நாயர்களும் ஈழவர்களும் இதில் இணைந்தனர். குறிப்பாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தாணுலிங்க நாடாரும், இந்திய தேசியக் கட்சியைச் சார்ந்த இந்து நாடார்கள் சிலரும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்தனர். இதனால் இந்த அமைப்பு புத்துருவம் பெற்றது. இவ்வமைப்பில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தாணுலிங்க நாடார் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தாணுலிங்க நாடாரைத் துணைத்தலைவராகத் தேர்வு செய்வதற்கு காரணம் அவர் இந்து நாடார்களை கிறிஸ்தவத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யும் தவறான போக்கை குமரி மாவட்டத்தில் எதிர்த்து வந்தார். பலவேளைகளில் அதனைத் தட்டிக் கேட்கவும் தயங்கவில்லை.

புரோட்டஸ்டண்ட் சபைகளின் ஆதிக்கத்தால் இந்து நாடார்கள் மதமாற்றம் செய்யப்படுவதனைக் கண்டு பொறுக்க முடியாமல் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ.வி.தாஸ் அவர்கள் உதவியுடன் கரும்பாட்டூரில் இந்து குழந்தைகளுக்காக ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியை தாணுலிங்க நாடார் தொடங்கினார். ஒவ்வொரு இந்து ஊரிலும் பஜனை நடத்தச் சொல்லியும் இந்து மதத்தின் ஆன்மிகத்தை அறிய வழி வகை செய்தும் ஊக்கப்படுத்தினார். இந்து மதத்தின் மீதிருந்த பற்றே தாணுலிங்க நாடார் அவ்வமைப்பில் சேர முக்கியமான காரணமாக இருந்தது….

தாணுலிங்க நாடார்
தாணுலிங்க நாடார்

1950 இல் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள யோசப் என்பவர் வீட்டில் திருத்தமிழர் இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நேசமணி தாணுலிங்க நாடாரைப் பார்த்து “யோவ் தாணுலிங்க நீர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் செயற்குழு உறுப்பினராக இருந்து கொண்டு எந்த முறையில் கேரளா ஹிந்து மிஷன் துணைத் தலைவராகவும் இருக்க முடியும்?” என்று கேட்டார். அதற்கு தாணுலிங்க நாடார், “உமக்கு எப்படி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸிலும் கிறிஸ்தவ காங்கிரஸிலும் பதவி வகிக்க முடியுமோ அப்படித்தான் எனக்கும்.” என்று பதிலளித்தார். நேசமணி “நீ யாரைப் பார்த்து பேசுகிறாய் தெரியுமா?” என்று கோபத்துடன் கேட்டார், அதற்கு தாணுலிங்க நாடார், “பள்ளியாடி அப்பாவு நாடார் மகன் நேசமணியைப் பார்த்து பொற்றையடி பரமார்த்தலிங்க நாடாரின் மகன் தாணுலிங்கம் பேசுகிறேன்.” என்றார். நேசமணியின் அடியாட்கள் தாணுலிங்க நாடாரைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டார்கள். (பக்.56-7)

மத்தியாசுக்கு ஆதரவாக மு.கருணாநிதி பிரச்சாரம் செய்த போது ‘விருதுநகரில் விலைபோகாத மாடு வடசேரி சந்தைக்கு வந்திருக்கிறது, பல்லைப் பிடிச்சுப் பார்த்து வாலைப் பிடிச்சு பார்த்து ஓட்டு போடுங்கள் என்றார். மத்தியாசுக்காக இரண்டு மாதங்கள் தொடர்ந்து நாகர்கோவிலில் தங்கி பிரச்சாரம் செய்தார். … காமராசரை தோற்கடிப்பதற்காக பல்வேறு உக்திகளைக் கையாண்டார். “ஒருவர் வந்த நாடார். மற்றொருவர் சொந்த நாடார். ஒருவர் சிவனை வணங்குகிறவர். மற்றொருவர் சிலுவையை வணங்குகிறவர். இந்த மாவட்ட மக்கள் நன்கு படித்தவர்கள் எனவே சொந்த நாடாருக்கு வாக்களியுங்கள்.” என்றார். ,,, காமராசருக்கு எதிராக பல்வேறு நபர்களும் கட்சிகளும் தொடர்ந்து சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரச்சாரம் செய்தனர். ‘தட்சிண நாடார் கட்சி’ காமராசருக்கு எதிராக, ‘விருதுநகர் நாடார்கள் நமது சாதியைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மிடமிருந்து பெண் கொள்வதில்லை’ என தென்றல் எனும் தினசரி நாளிதழ் மூலம் அக்டோபர் 8 1968 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. ‘கிறிஸ்தவ நாடார் கூட்டமைப்பு’ சார்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் சனவரி 2 1969 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் ‘இந்த தொகுதியில் பாதிக்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ நாடார்கள். எனவே இத்தொகுதி கிறிஸ்தவர்களுக்குரியது.  ஒரு கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாகும்.’ என குறிப்பிட்டு மத்தியாசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. அதே எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் தட்சண நாடார் கட்சியின் சார்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ‘விருதுநகர் நாடார்கள் எவரேனும் கிறிஸ்தவராக மாறிவிட்டால் சமூகத்தை விட்டே விலக்கி விடுவார்கள். அவர்கள் வேறு சாதி. நம்மை சரி சமமாக கருதவே மாட்டார்கள். எனவே மருத்துவர் மத்தியாசுக்கு வாக்களியுங்கள். விருதுநகர் காமராசருக்கு அல்ல’ எனக்கூறி தட்சண நாடார் கட்சி காமராசருக்கு எதிராக வேலை செய்தது.

காமராஜ் நாடாரை எதிர்த்து நிற்பவர் யார்? மத்தியாஸ் நாடார்தான் நிற்கிறார் என கருணாநிதி பேசிய செய்தி 23 டிசம்பர் 1968 இல் தினதந்தியில் வெளிவந்தது. ‘காமராசர் நேசமணியின் அரசியல் வாழ்வை நாசம் செய்தார்’ என நேசமணியின் சகோதரரின் பேட்டி டிசம்பர் 10 1968 மாலை முரசு இதழில் வெளியானது…. காமராசர் இந்தியை வரவேற்கிறார் எனவே அவருக்கு வாக்களிக்காதீர்கள் என முஸ்லீம் லீக் கட்சியிலுள்ள இஸ்மாயில் சாகிப் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்…. மத்தியாசுக்காக கருணாநிதி, நெடுஞ்செழியன், தினத்தந்தி பத்திரிகை நிறுவனர் ஆதித்தனார், தமிழரசுக் கழகம், முஸ்லீம் லீக், திராவிட கழகம் என பல கட்சிகள் வேலை செய்தன. இது போதாதென்று எம் ஜி ஆர் ரசிகர்களை காமராசருக்கு எதிரான பிரச்சாரத்தில் இறக்கி விட்டனர். பிரச்சாரத்தில் முக்கியமாக சாதி மத உணர்வுகள் தூண்டிவிடப் பட்டன. கொட்டில்பாடு எஸ் துரைசாமியின் தேர்தல் பிரச்சார நுணுக்கத்தைப் பார்த்த காமராசர் கொட்டில்பாடு எஸ் துரைசாமியிடம் ‘நீ தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிறகுதான் எனக்கு தெம்பாக இருக்கிறது’ என கூறினார். பொதுக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல் காமராசர் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரங்கள் செய்தார். காமராசரைக் குறித்த அத்தனை விமர்சனங்களுக்கும் கொட்டில்பாடு எஸ்.துரைசாமியே பதிலடி தந்தார்.

கிருஸ்தவ நாடார்களில் பெரும்பான்மையோர் மருத்துவர் மத்தியாசுக்கு வாக்களித்தனர். இந்து நாடார்களில் பெரும்பான்மையோர் காமராசருக்கு வாக்களித்தனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு.அலிக்கு வாக்களித்தனர்.கொட்டில்பாடு எஸ்.துரைசாமியின் அபார முயற்சியினால் மீனவர்கள் பெரும்பான்மையோர் காமராசருக்கு வாக்களித்தனர். 8 சனவரி 1969 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட போது காமராசர் 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராசரை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த பெருமை மீனவ மக்களுக்கே உண்டு என்றால் அது மிகையாகாது. ஆம்! தேர்தலின் மூலம் காமராசருக்கு மகுடம் சூட்டிய பெருமை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி ஒருவருக்கே உண்டு.

[ பக்.141-4]

குமரிக்காங்கிரஸின் தந்தை கொட்டில்பாடு எஸ்.துரைசாமி

  • ஆசிரியர்: ஜோ. தமிழ்ச்செல்வன்
  • பக்கங்கள்: 184
  • கிடைக்குமிடம்: வேதா புத்தக நிலையம், நாகர்கோவில்.
  • அலைபேசி: 8903252895, 8695911069
  • விலை: ரூ.130/-