வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர். ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?

View More வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

உள்ளத்தே உள்ளதே உண்மை

என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை… அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம்.

View More உள்ளத்தே உள்ளதே உண்மை

அற வழியில் நால்வர்: ஒரு பார்வை

நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன? நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா? நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள்… எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

View More அற வழியில் நால்வர்: ஒரு பார்வை

அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை

அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத, பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்… மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?

View More அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல் அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்… வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார். மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

View More வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது… சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் – இங்கே …

View More சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?