பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]

கேவலம் ஒரு புவிப்பரப்பை தேவியின் சொரூபமாகக் கருதுவதா என்று நினைக்கும் கடுஞ்சாக்தர்கள் சாக்தத்தின் முக்கியமான கருத்தொன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நலம்… தம்முடைய வாழ்வியல் நெறியையும், ஆன்மிகக் கொள்கை விளக்கத்தையும் நன்கு நிறுவி ஒரு நூலாக இயற்றுவதற்கு வேண்டிய கால வசதி அந்தப் பெருமகனாருக்கு இல்லாமலே போய்விட்டது… நாம் இப் பாரத மாது நிரந்தர கன்னி யென்பதாகவும், இவளுக்கும் நரை, திரை முதலியன இல்லையென்பதாகவும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்…

View More பாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]

மதமெனும் பேய்

”நம் வள்ளலாரோ ஒரு படி மேலே சென்று மதம் ஒரு பேய் என்றே எடுத்துரைத்திருக்கிறார். என்னே வள்ளலாரின் பகுத்தறிவுப் பாங்கு!..”… காலனிய காலகட்டத்தில் மேற்கத்தியர்கள் தங்கள் மதமான கிறிஸ்தவம் இயற்கையிலேயே புனிதமானது, தெய்வீக ஆணையுடையது என்றும், மற்ற மதங்கள் வெறும் கருத்துக் குவியல்கள் என்றும் கருதினார்கள். ஆனால் இந்திய மரபில் மதம் வெறும் நம்பிக்கையை அல்ல, அறிவுபூர்வமாக விவாதித்து பின் உட்கிரகிக்கப் பட்ட கொள்கை என்பதையே குறித்தது என்று அந்தச் சொல்லின் உருவாக்கம் மூலமே புரிந்து கொள்ள முடியும்…

View More மதமெனும் பேய்

அறியும் அறிவே அறிவு – 2

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே… உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும்.

View More அறியும் அறிவே அறிவு – 2

ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

இந்தப் புராணத்தில், ஆசிரியர் தக்க இடங்களில் அந்நிய மதத்தாரால் ஈழநாட்டில் இந்துமதத்திற்கு ஏற்பட்ட தொல்லைகளையும் பதிவு செய்து வைத்துள்ளார்… தாமன் என்பது ‘தாமசு’ என்பதன் மரூஉ. கனகசபாபதி குருக்கள், மறைவாக, ‘தாமன்’ என்ற அந்தப் பெயரையே ‘தாமோதரன்’ என மாற்றியமைத்து, தமது சைவசமய ஆசாரப்படி… அருணாசலம் மதமாற்றத்திற்குச் சிறிதும் மனங்கொள்ளாது, முந்தினநாள் இரவே பாடசாலை மதிலை ஏறிக் குதித்து…

View More ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்

பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்…

View More பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும்… விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்படட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்…

View More விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

சாதி எனப்படுவது யாதெனின்…

என்னை உற்றுப் பார்த்தவர், “உன் ஜாதி என்ன?” என்றார். “ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா?” என்று அவர் தொடர்க்கேள்வி போட, சற்று தடுமாறி, “வன்னியர்” என்று கூறி முடித்தேன்… இனி அவை உனக்குத் தேவை இல்லை. ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது..

View More சாதி எனப்படுவது யாதெனின்…

ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது… விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்… சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது… இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது…

View More ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன்.

View More சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கோபிகா கீதம்

இன்பம் ஊற்றெடுக்கும் – சோகம் அழிக்கும் – ஸ்வரமெழுப்பும் புல்லாங்குழல் அதை அழுத்தி முத்தமிடும்…. தூய அன்பிற்கு வெளி சாட்சியங்கள், பிரமாணங்கள் தேவையில்லை. அதற்கு அதுவே சாட்சி, அதுவே பிரமாணம்” என்று பக்தி சூத்திரம் இதனை இன்னும் அழகாகச் சொல்கிறது. கோபிகைகளின் பக்தியில் இந்த தத்துவத்திற்கு அற்புதமான உதாரணம் உள்ளது… இந்திய மனதில் “பக்தி” என்ற சொல் “மதரீதியான” குறுகிய பொருள் கொண்டதல்ல; பரந்த ஆழமான பொருள் கொண்டது. அதனால் தான் தேசபக்தி, பதிபக்தி, குருபக்தி ஆகிய சொற்கள் நம் மொழிகளில் புழக்கத்தில் உள்ளன..

View More கோபிகா கீதம்