இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.

View More இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

தியானமே நம்மை உய்விக்கும்

தினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.

வெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.

View More தியானமே நம்மை உய்விக்கும்

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!

View More காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

நான் (சரவணன்) வித்யா.

திருநங்கை – பெயரே நாகரீகமாக இல்லை? இப்படி ஒரு பெயரை அறிமுகம் செய்தவருக்கு திருநங்கைகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். இதுபோக அரவாணிகள், மூன்றாம் பாலினம் என்னும் வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எது வல்லமை உள்ளதோ அது நிற்கும்.

View More நான் (சரவணன்) வித்யா.