இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்

aud0011.7.2013ந் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் திரு வெள்ளையப்பன் பஸ் நிலையம் அருகில் பட்டப் பகலில் 23 வெட்டுக்களுடன் படு கொலை செய்யப்பட்டார்.  வெள்ளையப்பன் கொலையை போலவே, 19.7.2013ந் தேதி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஆடிட்டர் ரமேஷ் இரவு 10 மணியளவில் தனது ஆலுவலகத்திற்கு வெளியே பயங்கரமான முறையில் வெட்டிக் கொள்ளப்பட்டார்  நடந்த இரண்டு சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமில்லாமல், 1980 முதல் இன்று வரை தமிழகத்தில் கொல்லப்பட்ட இந்து இயக்களின் பொறுப்பளார்களை கணக்கில் கொண்டால், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வெறித் தாக்குதல் எந்தளவிற்கு இருந்ததே அதே அளவிற்கு தமிழகத்திலும், இந்து இயக்கங்களின் சொந்தங்களை வெட்டி சாய்த்த  கொடுமை சொல்லி  மாளாது.  இவ்வாறு நடக்கும் பயங்கரவாத செயல்களை  ஆளும் கட்சியினர் கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமில்லாமல, கொலையாளிகளை பிடிப்பதில் கூட அக்கறை காட்டுவதில்லை.  1967க்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கதினர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததின் காரணமாகவே, இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மீது முறையான சட்டபடியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை.

This medication is not a controlled substance, but it may still be considered by some states to be a schedule 1 or schedule 2 controlled substance. This is a discussion on clomid and serophene over the counter within the health forums, part of the general board category; are you taking clomid to treat pcos or Talitsa clomid cycle cost hormonal issues? However, this drug is also known for a couple of other conditions, like the one known as social anxiety disorder (sad) and generalized anxiety disorder (gad).

This drug is usually used for: bacterial infections, bacterial vaginosis and amoxicillin ritemed price as a vaginal contraceptive. There are no Itajubá generic propecia for sale other than propecia online no prescription online canadian pharmacy. The method involves induction by thiopental followed by a combination of a thiopental-based anesthetic solution, sodium pentobarbital, and potassium chloride with or without sodium bicarbonate (bicarbonate buffer).

With the use of clomid, these women achieve a pregnancy approximately 75 percent of the time. For more information, see clomid and other Karabash ovulation inducing agents. Diese zusammenarbeit wird ein großes anliegen inne mit einem kostenlosen bonus angeboten.

1947 ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி விடுதலைக்கு முன்னர் தமிழகத்தில் கூட கிளாபத் இயக்கத்தின் தாக்கம் இருந்தது.  சுதந்திரம் அடைந்த பின்னர் மற்ற மாநிலங்களில் வகுப்பு கலவரங்கள் தொடர்ச்சியாக நடந்தாலும், தமிழகம் அமைதியாகவே காட்சி தந்தது.  ஆனால் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ந் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த 1,200 தலித்துக்களை ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மத மாற்றம் நடந்த பின்னர், தமிழகமும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கயமை தனத்திற்கு ஆட்பட்டது என்பது தெரியவந்தது.  மத மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவுர், மதுரை, சென்னை, வட ஆற்காடு போன்ற மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களை குறிப்பாக தலித்துகளை மத மாற்றம் செய்ய முயன்றனர்.  இம் மத மாற்றத்தை தடுப்பதற்காகவே இந்து சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட்ட போது, இஸ்லாமியர்கள் தங்களின் எதிர்ப்பை வன்முறையின் மூலம் காட்ட துவங்கினார்கள். 1992-ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின்னர்தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்கியது என்று ஆய்வாளர்களும், அரசியல் வாதிகளும் தெரிவிப்பது தவறானது.  ஏன்என்றால் 1992க்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்து இயக்கத்தினர் உட்பட்டனர்.  ஆண்டு தோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைகாடு பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் பொங்கல் விழாவில் 1982-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 1ந் தேதி கிறிஸ்துவர்கள், கடலில் குளித்துவிட்டு வந்த இந்து பெண்களை மானபங்கப்படுத்தி கலவரத்தை உருவாக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது, இதில் பலர் படு காயமடைந்த்து மட்டுமில்லாமல் சிலர் மரணமடைய காரணமாகவும் அமைந்த, இதை விசாரிக்க அமைக்க்ப்பட்ட கமிஷன் பல பரிந்துரைகளை செய்தும், அந்த பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வில்லை என்பதையும் இச் சமயத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.

ad002

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது கோவையில் மட்டுமே மையம் கொண்டது, பின்னர் திருநெல்வேலியில் மேலப்பாளையம், தேனி, போன்ற பகுதிகளிலும்,  தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பயங்கரவாத செயல்பாடுகள் பரவ துவங்கின.  ஆனால் அதிக அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வெடி குண்டு தாக்குதல்கள் கோவையில் மட்டுமே நடந்துள்ளது.

 

தமிழகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள்:

1981-ல் கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த திருக்கோவிலூர் சுந்தரம் தாக்கப்பட்ட சம்பவத்திலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இந்து இயக்கங்களின் பொறுப்பாளர்கள் தாக்கப்பட்டார்கள், சில சம்பவங்களில் கொலை செய்யப்பட்டார்கள்.  1984-ல் கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது,  செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு,   காந்திபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது, இக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, திரு.திருக்கோவிலூர் சுந்தரம், மாநில தலைவர் திரு நாராயணராவ், திரு.டி.ஆர்.கோபால் போன்றவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டார்கள்.  அதே ஆண்டு அதாவது 18.7.1984ந் தேதி  இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் திரு.ராமகோபாலன் அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில்  பயங்கரமான முறையில்  தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்பாட்டம் நடத்திய போது கோவையில் முகாம்பிகை மணி, மற்றும் கூடங்குளம் ஜெயராஜ் இருவரும் தாக்கப்பட்டார்கள்.  இதன் காரணமாக 30.8.1989ந் தேதி தனது இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் போது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து முன்னணியின் பொறுப்பாளர் வீர கணேஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையை தொடர்ந்து, 5.9.1991ந் தேதி வீர கணேஷ் கொலை செய்யப்பட்டது போல், இந்து முன்னணியின் மற்றொரு பொறுப்பாளர் சிவக்குமார் கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்திற்கு பின்னர் கோவையில் காவல் துறை ஆணையராக இருந்த திரு.ஜீ.கணேசன் என்பவரும், துணை ஆணையராக இருந்த டி.ராதாகிருஷ்ணன் என்பரும் கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக சோதனை செய்த போது பெருமளவில் ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன, இதன் காரணமாக கோட்டை மேடு சுற்றி ஆறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

ad003

1992-ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின்னர் கோவையில் குண்டு வெடிப்பு சம்வங்கள் நடந்தன. இந்த குண்டு வெடிப்பிற்காக அல் உம்மா இயக்கதினர் ஹைதர் அலி, அப்துல் முத்தலிப், முகமது அப்துல் காதர், ஜாகீர் உசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.  இவர்கள் கேரளத்திலிருந்து திருடப்பட்ட கார் மூலமாக அக்டோபர் மாதம் 1997-ல் கோவைக்கு வெடி குண்டுகள் கொண்டு வந்தனர் என காவல் துறையினர் கைது செய்த போது தெரிவித்தார்கள்.  அயோத்தி சம்பவத்திற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே 8.8.1993ந் தேதி சென்னையில் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்தியதில் 11 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  14.4.1995ந் தேதி சென்னையில் சிந்தாரிப் பேட்டை பகுதியில் உள்ள இந்து முன்னணியின் அலுவலகத்தில் குண்டு வெடித்தது, இதில் இருவர் கொல்லப்பட்டார்கள், பையிள் சண்முகம் என்பவர் கொல்லப்பட்டவர்களில் ஒருவராவார்.

ad004தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிக அளவில் நடந்த வருடம் 1997 என்றால் மிகையாகாது.  இதற்கு காரணம், 1996-ல் தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது, இத் தேர்தலில் கோவையில் தி.மு.க. சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் திரு சி.டி.தண்டபானி மற்றும் மு.ராமநாதன் போன்றவர்கள் தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், கோவையில் கோட்டை மேடு பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளை உடனடியாக அப்புறப்படுத்தப்டும் என்றார்கள்.  ஆகவே தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது, திமுகவினர் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தவுடன், கோட்டை மேடு பகுதியில் அமைந்த சோதனை சாவடிகளை வன்முறையின் மூலமாக இஸ்லாமியர்கள் அப்புறப்படுத்தினார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.  இந்த சோதனை சாவடிகளை அப்புறப்படுத்தப்பட்ட போது அங்கே பணியில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டார்கள்.  1996-ம் இறுதியில் கோவை சிறையில் வெடி குண்டு தாக்கி ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார்.  1993-ல் சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வெடி குண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கதினர் 16 பேர்களுக்கும்  ஜாமீன் கிடைத்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

Picture291992-ம் வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் காளான்கள் போல் துவங்கின.  1993-ல் அல்உம்மா இயக்கம் துவக்கப்பட்டது.  எஸ்.ஏ.பாட்சா என்பவரும், பேராசிரியர் எம்.ஹெச.ஜவஹருல்லா என்பவராலும் ஆரம்பிக்கப்பட்டது.  கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் தலைமையகம் அமைந்த்து.  1997-க்குள் தமிழகத்தின் பல பகுதிகளில் அல் உம்மா இயக்கம் துவக்கப்பட்டது, இவ்வாறு துவக்குவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள இஸ்லாமிய வியாபாரிகளின் ஊக்கமே காரணமாக கூறப்பட்டது.  அல் உம்மா இயக்கத்தின் தலைவரான சயீத் அகமது பாட்சா கோவையில் மர வியாபாரம் செய்து வந்தவன்.  இஸ்லாமியர்களின் நலன்களை காக்க வேண்டியே அல் உம்மா இயக்கம் துவக்கப்பட்டதாக முதலில் கூறினாலும், பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதும்,  இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க கட்ட பஞ்சாயத்து செய்வதும் தினசரி வேலையாக மாறிவிட்டது. 1996-ல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 15 அல் உம்மா இயக்கத்தினர் ஜனவரி மாதம் 1997-ல் விடுவிக்கப்பட்டார்கள்.  விடுவிக்கப்பட்டவுடன், மீன்டும் தங்களது பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முனைந்தார்கள் அதன் விளைவாகவே சில சம்பவங்கள் நடைபெற்றன.

ad0051996-ல் நடு நிலை வகித்த இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காகவே , சென்னையில் 30.7.96-ல் ஆசியா ஹோட்டல், 27.9.1996-ல் ஹோட்டல் இம்பீரியல், 25.10.1996-ல் லக்கி ஹோட்டல்கள் தாக்கப்பட்டன, இந்த தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள், இதன் மூலம் இஸ்லாமியர்களையும் மிரட்டும் முகமாக இந்த தாக்குதல்களை நடத்தியதாக பின்னர் அல் உம்மா இயக்கத்தினர் தெரிவித்தார்கள். 3.12.1997-ந் தேதி உடுமலை பேட்டையில் உள்ள நகராட்சி அலுவலத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் 3 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  6.12.1997-ந் தேதி அயோத்தி சம்பவத்தின் நினைவு தினத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டு வைக்கப்பட்டு வெடித்ததில்  ஐந்து பேர்கள் கொல்லப்பட்டார்கள். 29.8.1997-ல் மதுரை சிறைச்சாலையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் சிறைசாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இதே சமயத்தில் காவல் துறை ஆய்வாளர் முரளி மீதான வெடி குண்டு தாக்குதலில் அதிர்ட்ஷவசமாக அவர் உயிர் தப்பினார். 29.11.1997-ந் தேதி எவ்வித ஆவணங்கள் இல்லாமல் உக்கடம் பகுதியில்இரு சக்கர வாகனங்களில் வந்த இஸ்லாமியர்களை விசாரிக்கும் போது எவ்வித ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, ஆனாலும் தாங்கள் இஸ்லாமியர்கள் எங்கை விசாரிக்க கூடாது என ஆர்பாட்டங்கள் நடத்தி வெளியேறிய போது அருகில் இருந்த போக்குவரத்து காவலர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.  1997 –ல் நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடத்திய  தாக்குதல்களில் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், இதற்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே அத்வானி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது.

ad00614.2.1998ந் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்குகொள்வதற்காக வருகை புரிந்த அத்வானி அவர்களை கொல்லும் விதமாக வெடி குண்டுகள் வைக்கப்பட்டன.  தமிழகத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதல் என்பதும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் இந்த சம்பவம் மட்டுமே.  19 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்த்தின் காரணமாக 58 பேர்கள் இறந்தார்கள், 250க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.  மேலும் 13 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.  முதன் முறையாக தமிழகம் தொடர் குண்டு வெப்பு சதியைச் சந்தித்தது.  இந்த சம்பவத்தில் திரு. அத்வானி அவர்கள் வர வேண்டிய விமானம் கால தாமதமாக வந்த்த்தால் அவர் கடவுள் அருளாள் தப்பினார்.   கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தி.மு.கவினர்,  கோவையில் உள்ள அல் உம்மா இயக்கதினர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த போகிறார்கள் என்பதை முன் கூட்டியே தகவல்கள் கிடைத்த பின்னரும்,  தமிழக அரசு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.  31.1.1998ந் தேதி மாநில உளவு பிரிவு மாநில அரசுக்கு தகவல் கொடுத்தார்கள், இதை அடுத்து 12.2.1998ந் தேதி அத்வானி வரும் போது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற தகவல் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.   உளவு பிரிவின் தகவல்கள் கிடைத்த பின்னரும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் எடுக்கவில்லை என்பதற்கு இன்று வரை சரியான விடை கிடைக்கவில்லை.  மேலும் கோவை குண்டு வெடிப்பிற்கு முன்னரே 8.2.1998ந் தேதி தஞ்சையில் சாலியமங்கலம் பகுதியில் முகமதியா மில்லிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி சோதனையின் போது குண்டு வெடித்து மில் உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கூட கோவையில் நடக்கும் பயங்கரவாத செயலுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. 14.2.1998ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் சில தினங்களில் இஸ்லாமியர்களின் வன்முறை சம்பவங்களின் காரணமாக மேலும் 10 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.   அல் அமீன் காலனியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்திய போது, வீட்டில் வைத்திருந்த வெடி குண்டு வெடித்து நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள்.   இதில் வேடிக்கை என்னவென்றால், வெடி குண்டுகள் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே உள்ள மாட்டு வண்டி, இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்,  போன்றவற்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டன.

Picture2110.10.1994ந் தேதி மதுரையில் தனது வீட்டின் வாசற்படியில் அமர்ந்து செய்திதாள் வாசித்துக் கொண்டிருந்து இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு ராஜகோபாலன் படு கொலை செய்யப்பட்டார். இக் கொலைக்கு காரணம் உள்ளுர் பகை என்று அப்போது காவல் துறையினர் தெரிவித்தார்கள், ஆனால் முழு விசாரணையை முடுக்கி விடும் போது, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்த கொலை நடத்தப்பட்டதாக பின்னர் தெரிவித்தனர்.  28.3.1998ந் தேதி அதே மதுரையில் அகில பாரத வித்தியார்த்தி பர்ஷித்தின் பொறுப்பாளராக இருந்த மதுரா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய கே.ஆர். பரமசிவம் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டார்.  இவரது கொலையில் கூட மேலப்பாளையத்தை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருந்தும்,  காவல் துறையினரின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக கைது செய்த குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலம் விடுதலை பெற்றார்கள்.

ad007திருச்சி காவல் நிலையத்தின் மீது வெடி குண்டு தாக்குதல், 11.12.2000 கோவை உக்கடம் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது, 2.8.2000ந் தேதி நாகூர் இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டிற்கு வெடி குண்டு பார்சல் அனுப்ப பட்டது, தவறுதலாக அவரது மனைவி பிரிக்கும் போது வெடித்து அவர் உயிர் இழந்தார்.  சைனைட் விஷம் கலந்து இனிப்பு கோவை காவல் நிலையங்களுக்கு பார்சல் அனுப்பட்ட சம்பவம், டைரக்டர் மணி ரத்தினம் வீட்டின் மீது குண்டு வெடிப்பு போன்ற சம்வங்களும் நடந்தன.  சென்னை திருச்சி, கோவை போன்ற நகரங்களில் உள்ள காவல் துறை சம்பந்தப்பட்ட அலுவலங்கள், வீடுகளுக்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. இவைகள் தக்க நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.  சென்னை அண்ணா சாலையில் டிபன் கேரியர் வெடி குண்டு வைக்கப்பட்டது.   சென்னையில் கொடுங்கையுரில் வீட்டில் விதவிதமான  வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்ட்டது.  குமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினத்தில் தேங்காய் வடிவில் வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.   திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொல்லப்பட்டார், 2005-ல் மதுரைளில் இந்து முன்னணியின் காளிதாஸ் கொல்லப்பட்டார். திண்டுக்கல்லில் மாவட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்பாட்டத்தில் சில கொலைகள் நடந்தன.

2006-ல் தமிழகத்தில் மீன்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கதையாக மாற துவங்கியது.  தென்காசி விசுவநாதர் கோவிலுக்கு உரிய இடத்தை இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட போது அதை தடுத்தவர் இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியன்.  இதன் காரணமாக 17.12.2006ந்தேதி தென்காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் குமார பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார், குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யாததின் விளைவாக, 14.8.2007ந் தேதி தென்காசியில் மேலும் குமார பாண்டியனின் சகோதரர்கள் மூன்று போர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள்  சில காலங்கள் தமிழகம் அமைதியாக காட்சி தந்தாலும், கடந்த ஓர் ஆண்டு காலாமாக ஆறு கொலைகள் நடந்துள்ளன.

ad008தமிழக அரசுக்கு காவல்துறையின் உளவு பிரிவானது,1998-ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் போல் மீன்டும் கோவையில் நடைபெறலாம் என அரசுக்கு  தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துள்ள  சில சம்பவங்கள் உளவுத் துறையினரின் செய்தியை உறுதிப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அ.இ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர்  27.11.2011ந் தேதி மதுரையில் அத்வானியை கொல்ல பைப் வெடி குண்டு வைத்த சம்பவம், இது தொடர்பாக குற்றவாளிகள் தவணை முறையில் காவல் துறையினர் கைது செய்து வருகிறார்கள்.   இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தில் பல் வேறு மாவட்டங்களில் இந்து இயக்கத்தினர் மீது தொடர் தாக்குதல்கள், மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் மீது கொலை வெறித் தாக்குதல், குன்னுரிலும், ஊட்டியிலும் இந்து முன்னணியினர் மீது நடத்திய தாக்குதல்கள், கோவையில் இந்து இயக்கதின் பொறுப்பாளர் வீட்டின் மீது வெடி குண்டு வீச்சு, நாகர்கோவிலில் முன்னாள் மாநில பொறுப்பாளர் மீது நடத்திய அரிவால் வெட்டு, , போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே  மாறி வருகிறது.

2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெங்களுரில் பா.ஜ.க அலுவலகம் அருகில் நடந்த  வெடி குண்டு தாக்குதலின் முக்கிய குற்றவாளிகள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் குறிப்பாக கோவை மற்றும் மேலப்பாளையத்தை சார்ந்தவர்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர். 1998-ல் கோவை குண்டு வெடிப்பிற்கு பின்னர் தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தினர் தற்போது பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையில் 2012 ம் வருடம் அக்டோபர் மாதம் சேலம் வழியாக 300 டன் அமோனியம் நைட்ரேட் என்ற வேதிய பொருள் கேரளத்திற்கு கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட வேதிய பொருள் கோவைக்கும், தேனி வழியாக மேலப்பாளையத்திற்கும் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெங்களுர் மற்றும் ஹைதராபாத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய வெடி குண்டு அமோனியம் நைட்ரேட்லிருந்து தயாரிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மையினர் என்ற போர்வையில் வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்களுக்கு இங்கே ஆர்பாட்டம் என்ற பெயரில் நடத்தும் செயல்பாடுகள் கூட மத பயங்கரவாத செயலுக்கு அச்சாரமாகவே கருத வேண்டியுள்ளது.  .  4.7.2012-ல் நாகப்பட்டினத்தில் பா.ஜ.க  மாநில செயற்குழு உறுப்பினர் புகழேந்தி கொல்லப்பட்டது, 23.10.2012 ந் தேதி வேலூரில் மாநில மருத்துவ அணியின் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்டது, 19.3.2013 ந் தேதி பரமகுடியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முருகன் கொலை செய்யப்பட்டது, போன்ற கொலைகளில் கூட இன்னும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க இயலாத நிலையில் இந்த அரசு உள்ளது.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்

ad009தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.  இஸ்லாமிய பாதுகாப்புப் பேரவை, அல்-உம்மா, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி), ஜமாத்அத-இ-இஸ்லாமி-இந்த், எஸ்.ஐ.ஓ. ( மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு) , தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய ஜிகாத் கமிட்டி, தேசிய பாதுகாப்புப் பேரவை, மனுநீதி பாசறை , ட்ரூத் வாய்ஸ் போன்றவற்றுடன்,  1998-ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்கு பின் அல்-உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது, தடை செய்யப்பட்டவுடன் மனித நீதி பாசறை என்ற பெயரில் ஒரு புதிய இயக்கம் துவங்கப்பட்டது.  கேரளத்தின் எல்லையில் அமைந்துள்ள கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மனித நீதி பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருந்தன.  இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரளத்தில் உள்ள என்.டி.எஃப்பிடமிருந்து கிடைத்தன.   மனித நீதி பாசறையில் செயல்படும் இரண்டு முக்கிய அமைப்புகள் ஒன்று அறிவகம்  மற்றது தமிழ்நாடு டெவலப்மென்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் என்பதாகும்.  இந்த இரண்டு அமைப்புக்கள் பற்றியும், மனித நீதி பாசறையைப் பற்றியும் துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் திரு. சஞ்சய் அரோரா தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும்.  மனித நீதி பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  மேலும் இந்த அமைப்பில் உள்ள இரண்டு அமைப்புகளும் மனித நீதி பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது.  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தை கூறி இந்த கருத்தை தெரிவித்தார்.  நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்துகளை இஸ்லாமாக மதம் மாற்றி அவ்வாறு மதம் மாறியவர்களை தேனி மாவட்டத்தில் உள்ள முத்துதேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்பபட்டு , அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்கு பயிற்சி எனும் பெயரில் முளை சலவை செய்வது முக்கிய கடமையாகும்.  இதில் இவர்களுக்கு 1992ல் நடந்த அயோத்தி சம்பவம், 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரம் போன்றவற்றின் காட்சிகள் அடங்கிய சி.டியை காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது.  இதன் காரணமாக நெல்லிக்குப்பத்தில் சில வீடுகளில் சோதனை நடத்திய போது பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆகவே தமிழகத்தில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாத செயல்களை செய்யும் அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது அரசுக்கும், காவல் துறையினருக்கும் நன்கு தெரிந்தும், நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டும் மர்மம் என்ன என்பது தெரியவில்லை.