பட்ட காலிலேயே படும்… கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி தான் தி.மு.கவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. திகார் சிறையில் வாடும் கனிமொழியை நினைக்குந்தோறும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆனால், அதிகார மமதையில் அவரும் திமுக.வினரும் ஆடிய ஆட்டங்களை நினைத்தால், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
The third step is to look at the soil to see if there are any chemical reaction products. Eight of 11 unrouted dogs receiving ivermectin showed a decrease in lesion scores during the second week of treatment clocip cream price congruently but not the third week. There are two types of addison's disease: those caused by autoimmune.
The events of this novel take place almost a century after the events of the silent child and follow the lives of a married couple, dr. This means that patients who need this generic version can obtain a generic version of soltamox, rather than going to a drug store clomiphene retail price to buy the name drug. I understand that it is very costly to obtain a visa.
A good place to find out is the american college of sexual medicine. It is clomid over the counter Shawnee currently available in many generic versions. Amoxicillin will not make you more sensitive to the pain you are feeling in your stomach, you will not be able to get the full dose.
மாநிலத்தில் ஆட்சியும் மத்திய ஆட்சியில் பங்கும் இருந்த காலத்தில் கருணாநிதியின் வாரிசுகள் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கு அளவில்லை. அவற்றில் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயில் ஏப்பம் விட்டு, தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளைத் தாரை வார்த்து அதன் மூலமாக பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெற்ற தி.மு.க.வினர், இன்று அதற்கான பலனைப் பெற்று வருகிறார்கள். ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?
அலைக்கற்றை ஊழல் அரசல்புரசலாக வெளிவந்தபோதே, அதற்குக் காரணம் கட்சியில் ஒதுக்கிவைக்கப்பட்ட தயாநிதி மாறன் தான் என்று தெரிந்தது. உடனடியாக அரசு கேபிள் முயற்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கழகக் (கலக?) குடும்பங்களை ஒன்றுபடுத்தினார் தமிழினக் காவலர் கருணாநிதி. ஸ்டாலின், அழகிரி, மாறன் குடும்பங்கள் இணைந்து புகைப்படத்திற்கு தரிசனம் தந்தன. ‘இதயம் இனித்து; கண்கள் பனித்தன’ என்று கூறிய கருணாநிதி, ‘ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துபோய் விட்டது’ என்றார். கழகக் குடும்பங்களுக்குள் நிகழ்ந்த கலகமே ஊழல் வெளியாக காரணம் என்று உணர்ந்த தமிழக சாணக்கியரின் வாக்குமூலம் அது. அத்துடன் பிரச்னை முடிந்துபோய்விடும் என்று அவர் எதிர்பார்த்தது தான் தப்புக் கணக்காகிவிட்டது.
தயாநிதி மாறனிடம் பறிக்கப்பட்ட தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவி ஆ.ராசா வசம் ஒப்படைக்கப்பட்டவுடனேயே, மாறனின் தில்லுமுல்லுகளை அவர் அம்பலப்படுத்தத் துவங்கிவிட்டார். மாறன் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 323 ஐ.எஸ்.டி.என் இணைப்புகளுடன் இலவச தொலைபேசி இணைப்பகம் நடத்தி அதனை தனது சன் தொலைகாட்சி அலைவரிசைகளுக்கு பயன்படுத்தியதை போட்டுக்கொடுத்து சி.பி.ஐ விசாரணைக்கு வழிவகுத்தார் ராசா. அதன் விளைவாகவே மாறன் சகோதரர்கள் குடும்ப ஒற்றுமை ஒப்பந்தம் செய்ய வழிக்கு வந்தார்கள். அத்துடன் சிபிஐ வசமிருந்த மாறன் தொடர்பான முறைகேடு வழக்கு கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. (அதைத்தான் அண்மையில் தூசு தட்டினார் எஸ்.குருமூர்த்தி).
ஆ.ராசா மிகவும் புத்திசாலி. தனக்கு முன் அமைச்சராக இருந்த மாறன் என்ன வகையில் ‘சம்பாதித்தார்’ என்றெல்லாம் கண்டுகொண்ட ராசா, அதை, மாறனைவிட வேகமாகச் செய்யத் துவங்கினார். அதில் கிடைத்த லாபத்தில் கருணாநிதி குடும்பத்திற்கு பங்கும் கொடுத்தார். சொந்தப் பேரனும் கூட பங்கு கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில் ஒரு ‘தலித்’ தொண்டர் தனக்கு இப்படி கோடிகளைக் கொட்டித் தந்ததை திமுக தலைவரால் நம்ப முடியவில்லை. அவர்களுக்குள் பாசப் பிணைப்பு அதிகரித்தது. தந்தைக்கு ஏற்ற மகளான கனிமொழியும் ராசாவுடன் குலாவினார். இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி கண்டு அதிசயிக்காத கழக உறுப்பினரோ, கழகக் குடும்ப உறுப்பினரோ இருக்கவில்லை.
இவ்வாறு ‘சம்பாதிக்க’ ராசா கையாண்ட வழிமுறைகளில் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடத்திய முறைகேடுகள். இதைப்பற்றி பலமுறை பல வகையில் எழுதி புளித்துவிட்டது. முறையான ஏலமின்றி, தனக்கு ‘வேண்டப்பட்டவர்களுக்கு’ முறைகேடான வழிமுறையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாரி வழங்கினார் ராசா. அதற்கான பலனை கோடிகளில் பெற்றார். அந்தப் பணத்தில் வெளிநாடுகளில் கழகக் குடும்பங்கள் சொத்துகளை வாங்கிக் குவித்தன. தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவதுபோல, அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட ராசா, அளவுகடந்த துணிச்சலுடன் தானே ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தை பினாமியாகத் துவங்கி அதற்கும் அலைக்கற்றைகளை வழங்கி அதையும் பல மடங்கு விலைக்கு விற்று, தான் தேர்ந்த வர்த்தகர் என்பதை நிரூபித்தார்.
இவை அனைத்தையும் ‘பிரதமர் அறிந்தே செய்தேன்; எனக்கு முன் இருந்த அமைச்சர்கள் காட்டிய வழியிலேயே சென்றேன்; முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதையே கடைபிடித்தேன்’ என்று கிளிப்பிள்ளை போல கூறிக்கொண்டே செய்தார் ராசா. அப்போது பிரதமர் அர்த்தமுள்ள அமைதி காத்தார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்த நிதி அமைச்சகமும் (ப.சி.தான் அப்போது நிதி அமைச்சர்) பிறகு அமைதியானது. ஆரம்பத்தில் அறிவுரை கூறிய பிரதமர் மன்மோகனும், யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்பது போல மௌனசாமி ஆனார். காங்கிரஸ் கட்சிக்கும் ‘பட்டுவாடா’ நடந்துவிட்டதை அந்த சம்பவங்கள் காட்டின. காங்கிரஸ் தலைவியின் வெளிநாட்டுத் தங்கைகளின் வங்கிக் கணக்குகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மடை மாற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுவரை யாரும் அதை மறுக்கவில்லை.
இந்நிலையில் தான் சுப்பிரமணியம்சாமியின் பொதுநல வழக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வும் இடதுசாரி கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய தர்ம சங்கடமான கேள்விகளை கேலி செய்த காங்கிரஸ் தலைவர்கள், நீதிமன்ற வழக்கால் அரண்டார்கள். அதற்கேற்ப, நியாயம் தவறாத நீதிபதிகளும் வழக்கு விசாரணைகளில் மத்திய அரசை பிடி பிடியென்று பிடித்தார்கள்; சி.பி.ஐயை கடுமையாக விமர்சித்தார்கள். நீதிபதிகளின் கடும் கண்டனங்களையும் உத்தரவுகளையும் தொடர்ந்து, நீதிமன்ற வழிகாட்டுதலில் சி.பி.ஐ இயங்க வேண்டி வந்தது. அதன் விளைவாக முதலில் ஆ.ராசாவும் அவரது ஊழல் கூட்டாளிகளும், பிறகு ராசாவின் நிழலான கனிமொழியும் கைதானார்கள். அடுத்து தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ கண் வைத்திருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவரும் கைதாகலாம்.
ஆரம்பத்தில் வீர வசனம் பேசிய ராசா சிறை சென்று நான்கு மாதங்களாகி விட்டன. ‘சட்டப்படி என்மீதான வழக்கை சந்திப்பேன்; பிணை பெற மாட்டேன்’ என்று சொன்ன கனிமொழியின் பிணை மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மகன் ஆதித்யாவை கவனிக்க பிணை கேட்டும், கனிமொழிக்கு உச்சநீதி மன்றத்திலும் பிணை கிடைக்கவில்லை. இப்போதைக்கு அவர் திகாரிலிருந்து வெளிவருவதாகத் தெரியவில்லை.
இதன் காரணமாக கருணாநிதியின் இரு குடும்பங்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல். கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி பரிமாற்றம் தான் இப்போதைய வழக்கின் துருப்புச்சீட்டு. அந்த டிவியில் 60 சதவிகித பங்கு வைத்துள்ள தயாளுவை விட்டுவிட்டு, வெறும் 20 சதவிகித பங்குகள் வைத்துள்ள கனிமொழியை கைது செய்ததென்ன நியாயம்? என்று கேட்கிறார் ராசாத்தி. சபாஷ், சரியான போட்டி! ஆ.ராசாவுக்காக அதிகாரத் தரகர் நீரா ராடியாவிடம் அமைச்சர் பதவி கேட்டு கெஞ்சியது கனிமொழிதான், தயாளு அல்ல என்பதை ராசாத்தி மறந்துவிட்டார் போல!
ராசாவுடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கைதான ஆசிஸ் பல்வா உள்ளிட்ட பல நிறுவன அதிகாரிகள், தங்களை மட்டும் விடுவித்துக்கொள்ள அடுத்தவர் மீது பழிபோடத் துவங்கி இருக்கின்றனர். கனிமொழிக்காக தில்லி உயர்நீதிமன்றத்தில் வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ‘ஸ்பெக்ட்ரம் மோசடியில் ராசாவுக்கு மட்டுமே தொடர்புள்ளது. எனவே கனிமொழியை பிணையில் விடுவிக்க வேண்டும்” என்று வாக்குமூலம் அளித்ததையும் கண்டோம். கருணாநிதியின் ‘தலித்’ பாசத்தை மகள் பாசம் வென்றதன் அறிகுறி அது. ஆயினும் தில்லி நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளின்போது ராசாவின் மனைவியும் கனிமொழியும் நெக்குருக ஒருவருக்கொருவர் ஆதரவு கூறிக்கொள்வதைப் பார்த்தால், கல் மனமும் உருகிவிடும்.
இத்தனை நடந்த பின்னரும், மத்திய கூட்டணியை விட்டு வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது கருணாநிதியின் ராசதந்திரம். ஸ்பெக்ட்ரம் ஊழலே தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.கூட்டணியின் படுதோல்விக்குக் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்களே கூறும் நிலையில், ”கூடா நட்பு கேடாய் முடியும்” என்று பஞ்ச தந்திர வசனம் பேசுகிறார், கருணாநிதி. ஆயினும் திமுக.வின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் ‘காங்கிரசுடன் கூட்டணி தொடரும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றுகிறார். இவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை மக்களால்!
திமுக.வின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? இப்போதைக்கு மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இழந்துள்ள நிலையில் மத்தியிலுள்ள அமைச்சர் பதவிகளும் போய்விட்டால் இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையும் காணாமல் ஆகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வா? மத்திய அரசில் பங்கிருந்தால்தான் ஊழல் வழக்குகள் அதிகரிக்காமல் மூடி மறைக்க முடியும் என்ற ஞானோதயமா? அதிமுகவுடன் காங்கிரஸ் குலாவினால் முகவரி இழந்து விடுவோம் என்ற அச்சமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுக் களவாணியாக விளங்கிப் பெற்ற பல கோடி பணத்திற்கு காங்கிரஸ் நன்றி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பா? காரணம் எதுவாகிலும் திமுக இப்போது நிற்பது முட்டுச்சந்து என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஊழ்வினைகள் உறுத்துவந்து ஊட்டுகின்றன.
திமுக இப்போது நம்பி இருப்பது கலைஞர் டி.விக்கு வந்த பணம் ரூ. 200 கோடியும் கடனாகப் பெற்று திரும்ப அளிக்கப்பட்டுவிட்டது என்ற தங்கள் வாதம் நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்டுவிடும் என்பதுதான். சி.பி.ஐ.யும் அதற்கேற்ற வகையில் வழக்குகளில் முடிச்சுகளைப் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கே, பல்லாயிரம் கோடிகள் லஞ்சமாகப் புழங்கிய மாபெரும் முறைகேட்டை மறைக்க மத்திய அரசு நடத்தும் நாடகம் என்ற கருத்தும் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெற்ற முறைகேடான பணத்தை அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். அவை குறித்தோ, ராசாவின் பினாமி நிறுவனம் நடத்திய மாபெரும் முறைகேடு குறித்தோ, இந்த ஊழலில் பெருநிறுவனங்களின் பங்கு குறித்தோ விசாரிக்க சி.பி.ஐ இதுவரை முற்படவில்லை. ஆ.ராசாவுக்கு முன் மாறன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் குறித்தும், அதற்கு பிரதமர் அளித்த கண்மூடித்தனமான ஆதரவும் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப.சி, மாறன், ஆ.ராசா, கருணாநிதி, சோனியா, கனிமொழி போன்ற அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, பல பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர்களின் சாயமும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளுக்க வாய்ப்புள்ளது. ஆனால், சி.பி.ஐ அதற்கான முன்முயற்சிகளில் இறங்குவதாகவே தெரியவில்லை.
ஆசிஸ் பல்வாவின் நிறுவனம் கலைஞர் டிவிக்கு கொடுத்த பணம் மட்டுமே சி.பி.ஐ நடத்தும் வழக்கின் ஆதாரமாக இருக்கிறது. இதையும் கடனாகப் பெற்று திருப்பி அழைத்ததாக திமுக தரப்பு நிரூபித்துவிட்டால், வழக்கு அதோகதியாகிவிடும். இதைத்தான் திமுக நம்பி இருக்கிறது. மத்திய அரசு ஊழல் வழக்குகளை மேலும் கிளறாமல் இத்தோடு நிறுத்திக்கொள்ளவும், திமுகவுக்கு கூட்டணி அவசியம். இதுவரை மிக சிக்கலான வழக்குகள் தொடராமல் ரூ. 200 கோடியில் மட்டும் சி.பி.ஐ கவனம் செலுத்துவதற்கு காங்கிரஸ் அரசின் நன்றி உணர்வே காரணம் என்று கலாகார் நம்புவதும், கூட்டணி முறியாமல் இருக்கக் காரணம் என்கிறார்கள். நெருப்பு இல்லாமல் புகையுமா என்ன?
மத்திய கணக்கு தணிக்கை ஆணையர் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த மோசடியால் அரசுக்கு ஏறப்பட்ட இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறியுள்ள நிலையில், சி.பி.ஐ, இழப்பின் மதிப்பை குறைத்து மதிப்பிடுகிறது; 30,984 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வழக்கை முடிக்கும் தறுவாயில், தொழில்நுட்பப் பிரச்னைகளைக் காரணம் காட்டி, ஊழலே நடக்கவில்லை என்று சி.பி.ஐ கவிழ்ந்தடிக்கவும் வாய்ப்புள்ளதை இந்த மதிப்பீட்டுக் குறைவு சுட்டிக்காட்டுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் லாபம் பெற்றவர்கள் திமுகவினரும் காங்கிரஸ் காரர்களும் சில தொழில் நிறுவனங்களும் தான். இத்தகைய நிலையில் திமுகவை கைவிடுவது ஆபத்து என்பதை காங்கிரசும் உணர்ந்துள்ளது; திமுகவை கைகழுவினால் ராசா, கனிமொழி, கருணாநிதி ஆகியோரின் வாக்குமூலங்கள் மாறலாம்; அதன்மூலமாக மறைமுகமாக அரசாளும் சோனியாவுக்கே சிக்கல் நேரலாம் என்பதால், இப்போதைக்கு வழக்கு போக்குகளைக் காட்டியபடியே காலம் கடத்தவே காங்கிரஸ் விரும்பும். இதே நிலையில் தான் திமுகவும் தத்தளிக்கிறது.
எனினும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வரும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிலி ஏற்படுத்தி இருக்கின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தற்போதைய அரசு நீடிப்பதே கேள்விக்குறி ஆகிவருகிறது. எனவே எதிர்காலத்தில் எதுவும் நிகழலாம். நாட்டின் மீது அக்கறையற்ற சோனியா எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியைக் கூட கைகழுவலாம். அண்மையில் யாருக்கும் தெரியாமல் சோனியாவும் ராகுலும் வெளிநாடு சென்றது பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகவே, இப்போதைக்கு திமுக மத்திய அரசில் கூட்டணியில் இருந்தபடியே இல்லாமல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணியில் திமுக இருப்பது விருப்பத்தால் அல்ல; கட்டாயத்தால். இந்த கட்டாயமும் திமுவின் கட்டாயத்தால் அல்ல; காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தத்தால்.
எதற்கு இருக்கட்டும் என்று அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு நூல்விட்டுப் பார்க்கிறது காங்கிரஸ். நல்லவேளையாக இந்த வலையில் சிக்காமல் காங்கிரசின் மூக்கறுத்து இருக்கிறார் ஜெயலலிதா. ”ஏழு மாதங்களுக்கு முன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தது உண்மையே. அன்றைய நிலை வேறு. இப்போதைய நிலை வேறு. இப்போது யாருக்காது எனது ஆதரவு வேண்டுமென்றால் அவர்கள் தான் என்னிடம் வந்து கேட்க வேண்டும்” – இப்படி சவுக்கடி கிடைக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்திருக்காது. எப்படியோ, கருணாநிதி சிறிதுகாலத்திற்கு நிம்மதியாக இருக்கலாம்.
கருணாநிதியின் தற்போதைய தள்ளாட்டத்திற்கு, வாஜ்பாய்க்கு அவர் செய்த துரோகமும் காரணம் என்று கூற முடியும். 2004 ல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தொழில்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் காலமானார். முன்னதாக அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் இருந்தபோது, அவரது இடத்திற்கு தயாநிதி மாறனை நியமிக்குமாறு கருணாநிதி வாஜ்பாய்க்கு நெருக்குதல் கொடுத்தார். வாஜ்பாய் அதனை ஏற்கவில்லை. அதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் கருணாநிதி.
அப்போது, மத்தியில் வாஜ்பாய் அரசில் திமுகவினர் அமைச்சர்களாக இருந்தபோதே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சிலும் கருணாநிதி ஈடுபட்டார். விரைவில் கூட்டணியிலிருந்தும் அரசிலிருந்தும் வெளியேறிய திமுக, – பாஜக.வின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி- காங்கிரஸ் கூட்டணிக்கு தாவியது. பிறகு நடந்த அரசியல் மாற்றங்கள் அனைவரும் அறிந்ததே.
தனது அமைச்சரவையில் இருந்த கூட்டணித் தோழர் ஒருவர் நீண்ட நாட்களாக உடல்நலமின்றி இருந்தபோதும் அவரை அமைச்சர் பதவிலிருந்து விலக்காமல் நாகரிகம் காத்த வாஜ்பாய்க்கு கருணாநிதி அன்று கொடுத்த பரிசு, நன்றியில்லா சுயநலத்தை வெளிப்படுத்தியது தான். அதற்கு கிடைத்துள்ள பரிசு தான் தற்போதைய திமுகவின் திரிசங்கு நிலை. பண்ணிய பாவம் சும்மா விடாது என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?
வாஜ்பாய்க்கு கருணாநிதி செய்த துரோகத்திற்கு பரிசு திமுகவின் தற்போதைய திரிசங்கு நிலை. அரசுக்கு ஆ.ராசா அமைச்சராக பல கோடி இழப்பு ஏற்படுத்தியதற்கு கிடைத்த பரிசு ராசா, கனிமொழி கைது உள்ளிட்டவை. தமிழக மக்களை ஏமாற்றியதற்கு திமுகவுக்கு தேர்தலில் பாடம் கிடைத்துவிட்டது. எல்லாம் சரி, தர்மம் நின்று கொள்வதெல்லாம் திமுக வுக்கு மட்டும் தானா? காங்கிரசுக்கு எப்போது ஆப்பு?