ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி [ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை ]
தமிழில்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்

This is a little different than the other types of anti depressants. The time to contact a doctor who will Shimla help you understand how to. You should also avoid taking other drugs that could interact with the prednisolone.

What are the most important questions on your mind right now? Buy cheap Gaoua ivermectin in the netherlands no prescription. The most accurate method of evaluating and comparing the various drug treatments available is to review each on the basis of its effect on the cause.

You may want to find a doctor you're comfortable with, or be looking for information on a specific procedure. Moxatag (; ; ) is an herbal drug, derived from moxa, the http://jualah.id/7-tips-sukses-menjadi-reseller-bagi-pemula/ south asian herb of origin, and has been used in traditional medicine for over 2000 years, and is used by people of various cultures. A prescription for nolvadex can be a useful document in helping you get the best nolvadex product at a price you can afford, as well as help you get a prescription.

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பொற்களஞ்சியம் (கோவில் காணிக்கைகள்) கோவிலுக்குச் சொந்தமா இல்லை அரசுக்குச் சொந்தமா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் அரசுக்கே சொந்தம் என்றும், வேறு சிலர் கோவிலுக்குச் சொந்தம் என்றும் இரு தரப்பாக கருத்துக் கூறுகின்றனர். ஆனால் அவர்களில் எவருக்கும் பழமையான சம்பிரதாயங்களும் தெரியவில்லை, நவீனகால நிலமையும் புரியவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

பாரத நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே, இந்த மாபெரும் களஞ்சியத்தைக் கண்ணும் கருத்துமாகக் கட்டிக்காத்ததற்காக, திருவிதாங்கூர் மஹாராஜாவுக்கும் பத்மனாப தாசர்களான அவரது குடும்பத்துக்கும், உயர்ந்த மரியாதையைச் செலுத்த வேண்டும்.

padmanabhaswamy-golden-statue

ஆனால், இங்கு விவாதிப்பவர்களின் சிந்தனையில் தோன்றாத கேள்வி, இந்தக் காணிக்கைகள் உண்மையில் யாருக்காக அளிக்கப்பட்டன என்பது. இவை பத்மநாப சுவாமிக்கே நேரடியாக பக்தியுடன் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இது போன்ற காணிக்கைகள், கடவுளுக்கே நேரடியாக அளிக்கப்பட்டன, கோவில் என்ற அமைப்புக்கு அல்ல என்பதை, நமது நாடெங்கிலும் பரவியுள்ள, வரலாற்றுத் தொடக்க காலம் முதல் நவீனகாலம் வரைக்குமான காலத்தைச் சேர்ந்த, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள், சாசன்ங்கள் வழியாக அறிகிறோம். பொ.மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து நவீன காலம் வரை இத்தகைய கொடைகள் கோவிலில் உறையும் இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பொ.பி. 3-4 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய கல்வெட்டுக்கள் காணிக்கைகள் கோவிலின் தெய்வத்திற்குக் செலுத்தப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. கேரளாவிலும் 9ம் நூற்றாண்டிலிருந்து பல ஆதாரங்கள் தெய்வங்களுக்குக் காணிக்கைகள் செலுத்தப்பட்டதைப் பதிவு செய்துள்ளன. [பொ.பி (CE) – பொது யுகத்திற்குப் பின், Common Era, Circa; பொ.மு (BCE) – பொதுயுகத்திற்கு முன்]

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் (juristic entity) போலக் காண முடியுமா என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வியாகும். இத்தகைய “கடவுளால்” சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா? நமது முன்னோர்கள் இந்த நுட்பமான, பூடகமான இறையியல் கொள்கையைக் கடந்து சென்று, நடைமுறைத் தளத்தில் கடவுள் தனது பிரதிநிதி மூலமாக செயல்படுகிறார் என்ற விளக்கத்தையும் அளித்தனர். இதன் அடிப்படையிலேயே, சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் பெயரிலும், விஷ்ணு கோவில்களில் விஷ்வக்சேனரின் பெயரிலும், இதே ரீதியில் மற்ற தெய்வக் கோயில்களிலும், கொடுக்கல் வாங்கல் முதலான நடவடிக்கைகள் செயல்படுத்தப் படுகின்றன.

19, 20-ம் நூற்றாண்டுகளில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், இந்தியாவின் பல பகுதிகளிலும் நடந்த பல நீதிமன்ற வழக்குகளில் இதே போன்ற கேள்வி எழுப்பப் பட்டது. இந்த எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் கோவிலில் உறையும் கடவுள் சட்ட வரையறைக்குட்பட்ட நபராக கருதப் படுவார் என்றே தீர்ப்பு வழங்கியுள்ளன. சமீபகாலங்களில், பிரபல லண்டன் பத்தூர் நடராஜர் சிலை வழக்கின் போது, மேற்கத்திய நாடுகளில் கடவுள் எனப்படுபவர் சட்ட வரையறைக்குட்பட்ட நபராக ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலும், இந்திய மற்றும் தெற்காசிய நாடுகளில் இது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம் என்று லண்டன் உயர்நீதி மன்ற நீதிபதி தான் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டார். ”சிதிலமடைந்த சோழர் காலத்திய பத்தூர் கோவிலில் ஒரு கல்லாவது எஞ்சி இருக்கும் வரையில், சட்டத்தின் பார்வையில் அக்கோவில் அங்குள்ளது. அவ்வாறு கருதப்படும் வரையில், அக்கோவிலைச் சேர்ந்த சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை அக்கோவிலுக்கு உள்ளது. எனவே, [லண்டனுக்கு கடத்தி எடுத்துவரப்பட்ட] அந்த பஞ்சலோக நடராஜர் திருவுருவம் மீண்டும் கோவிலுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் அந்த நீதிபதி தீர்ப்பளித்தார். இந்தியாவில் நடத்தப்பட்ட பல வழக்குகளின் தீர்ப்புக்களை நன்கு ஆராய்ந்த பின்பே தான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

padmanabhaswamy-templeஹிந்து தர்ம சாஸ்திர விதிப்படி, ஒருவர் சட்டப்படி அவருக்கு உரிமையில்லாத பொருளைக் கொடையாக வழங்க இயலாது (சட்டத்துக்குப் புறம்பான செல்வத்தை பெறுவதையோ அதற்கு ஈடாக புண்ணியத்தை வழங்குவதையோ பழங்கால இந்திய தர்மசாஸ்திர சட்டங்கள் அனுமதிப்பதில்லை). சட்டப்படி உரிமையுள்ள ஒரு பொருளை, கொடையாக ஒருவர் வழங்குவது ‘தானம்’ எனப்பட்டது. தானமாகப் பொருளையோ சொத்தையோ கொடுப்பவர், அதன் மீதுள்ள தனது சட்டப்படியான உரிமையை முழுமையாக இழக்கிறார் என்பதற்கு அறிகுறியாக, தானம் வாங்குபவரின் கைகளில் தண்ணீரை தாரை வார்ப்பார். சரியாக 900 ஆண்டுகளுக்கு முன், பொ.பி. 1111ம் ஆண்டில் நடந்த ஒரு சிறப்பு மிகுந்த நிகழ்வு கல்வெட்டுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆண்டில் குலோத்துங்கச் சோழனும் அவனது பட்டத்தரசியும் காஞ்சிபுரம் ஊரகம் (திருக்கச்சி ஊரகம்) கோயிலுக்கு விஜயம் செய்தனர். ஆலயத்தில் உறையும் இறைவனின் கரம் மீது நீரை தாரை வார்த்து, நீர் நிரம்பிய பொற்கலத்தையும், நிலபுலன்களையும் சோழன் தானமாக வழங்கினான். இவ்வாறு தானம் வழங்கியபின் அச்சொத்துக்களின் மீது அவனுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதும் புலப்படுத்தப் படுகிறது.

இதுபோலவே, ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கிடைத்துள்ள நிதிக்குவைகள், நகைகள் , காசுகள் எல்லாம், அரச குடும்பமும் அந்நாட்டுப் பொதுமக்களும் செழிப்பாக வாழ வேண்டும் என்ற மனப்பூர்வமான வேண்டுதல்களுடனும, ஆழ்ந்த பக்தியுடனும் கடவுளுக்கு நேரடியாகக் காணிக்கையாக அளிக்கப் பட்டவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பண்டைய வரலாறு, நவீன வரலாற்றுத் தரவுகள் இரண்டையும் சரியாக அறியாத சில பேராசிரியர்கள், போர்களில் கொள்ளையடித்ததன் மூலம் அரசர்கள் இச்செல்வத்தைச் சேர்த்தனர் என்று கூறிச் செல்கின்றனர். ஆனால் பண்டைய இந்து சட்டங்களின் படியும், ராஜ தர்மத்தின் படியும், போரில் வென்ற அரசன் (தான் வென்ற நாட்டின்) செல்வங்களைக் கைப்பற்றிக் கொள்ளலாம், அவற்றை சட்டப்படி உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

இது ஏதோ புதைத்து வைக்கப்பட்ட செல்வம் என்று கூறி ‘புதையல் சட்டத்தின்’ (Treasure Trove Act) கீழ் இவற்றை வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், இச்செல்வங்கள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சைக்கே இடமில்லை. இவை ஏதோ அகஸ்மாத்தாக தோண்டி எடுக்கப் படவில்லை. இந்தச் செல்வங்கள் பற்றிய தகவல் வாழும் நினைவுகளாகவே ஆவணப் படுத்தப் பட்டிருக்கின்றது. இவை அரசகுடும்பத்தினரால், பிற்கால உபயோகத்திற்காகவோ, நெருக்கடி நிலைகளைச் சமாளிப்பதற்காகவோ கோவில் களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பதும், இவற்றிற்கு ஸ்ரீபத்மநாபனே உரிமையாளர் என்பதும் விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும்.

இவை அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டுமென்றும் ஒரு சாரார் கோருகின்றனர். லண்டன் உயர்நீதி மன்ற வழக்கில், பத்தூர் நடராஜர் சார்பாக நான் சாட்சியாக ஆஜரான போதும், இதே போன்ற கேள்வி எழுந்தது. ”இந்தச் சிலையைத் திருப்பித் தந்தால், நீங்கள் கோவிலில் வைப்பதை விரும்புவீர்களா, அல்லது பொதுமக்கள் பார்க்கும்படி அருங்காட்சியகத்தில் வைப்பதை விரும்புவீர்களா?” என்று வழக்கை விசாரித்த நீதிபதி கேட்டார். ஒரு ஹிந்துவாக அல்லாமல், புதைபொருள் ஆராய்ச்சியாளன் என்ற கோணத்திலிருந்து நான் பதி̀லளிக்க வேண்டும் என்று கோரினார். அப்போதும், கோவிலில் இவ்விக்கிரகம் இருப்பதையே விரும்புவேன் என்று நான் கூறினேன். “அது ஏன்?” என்று கேட்டார் நீதிபதி.

”இந்தத் திருவுருவத்தைக் காணிக்கையாக அளித்தவர், இதனை வெறும் காட்சிப் பொருளாக்கும் நோக்கத்துடன் கொடுக்கவில்லை. பக்தியுடன் ஆராதிக்க வேண்டும், இசை உள்ளிட்ட தெய்வீக்க் கலைகளால் வழிபட வேண்டும் என்றெல்லாம் கருதி, ஒரு புனிதக் கொடையாகவே அளித்திருக்கிறார். அதனால் தான்” என்றேன்.

என் கருத்துடன் உடன்பட்ட அந்த நீதிபதி, அவ்வாறே அறிவுறுத்தி, விக்கிரகம் அந்தக் கோவிலுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஒரு அந்நிய நாட்டு நீதிமன்றமே, நமது ஆலயங்களின் புனிதத் தன்மையையும், நமது சமய உணர்வுகளையும் அறிவியல் நோக்கில் அணுகி, புரிந்து கொண்டு, சொத்துக்களை கோவிலுக்குத் திருப்பியளித்திருக்கிறது. எனவே, இது பற்றி ஆதாரமற்ற கருத்துகளைக் கூறும் சுயதம்பட்ட ‘வரலாற்று ஆய்வாளர்களை’ நாம் பொருட்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை.

padmanabhaswamy-maharaja-marthanda-varma-in-procession

இந்திய அருங்காட்சியகங்களில் நமது விலை மதிக்க முடியாத அரிய பல செல்வங்கள், எவ்விதப் பராமரிப்புமின்றி குப்பை போல போட்டு வைக்கப் பட்டிருப்பதையும் நாம் மறந்து விட வேண்டாம். அருங்காட்சியகத்தில் வைப்பதைக் குறித்துப் பேசும்போது, இச்செல்வங்களை யார் நிர்வாகம் செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. நிச்சயமாக அரசால் அது முடியாது. முதலாவதாக, இந்திய அரசு மதச்சார்பற்றது என்று தன்னை பிரகனப் படுத்திக் கொண்டுள்ள ஒன்று. இரண்டாவதாக, கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்.

நடப்பு விதிகளின்படி, சட்டபூர்வமாக இச்செல்வங்கள் மீது உரிமையுள்ளவர்களே இவற்றை நிர்வாகம் செய்ய வேண்டும். எனவே, பன்னெடுங்காலமாக இவற்றைக் கட்டிக்காத்து வந்த திருவிதாங்கூர் அரச குடும்பமே தொடர்ந்து தர்மகர்த்தாக்களாக ( டிரஸ்டிகளாக) இருக்க வேண்டும். இச்செல்வத்தை யாரும் தகாத வழியில் உபயோகித்து விடாமல், ஆவன செய்து பாதுகாத்து வரவேண்டும். இது வரை இருந்த நிலையே தொடரும் என்று மாநில அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான நிலைப்பாடு. உயர்நீதிமன்றத்தின் மதிப்பிற்குரிய நீதிபதிகளும் இவ்வாறே உத்தரவிட்டிருக்கின்றனர் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

இந்தக் களஞ்சியத்தின் மூலம், இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது.

Art Gallery 165டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.

jeyamohan-2011ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் களஞ்சியம் & தொடர்புள்ள வரலாற்றுச் செய்திகள் குறித்து திரிபுகளையும், பொய்யான செய்திகளையுமே தமிழ் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இச்சூழலில், சிறந்த இலக்கியவாதியும், சிந்தனையாளருமான ஜெயமோகன் ஆதாரபூர்வமாக, வாசகர்களுக்கு தெளிவு தரும் வகையில், தனது வலைப்பதிவில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றைக் கீழ்க்கண்ட இணைப்புகளில் படிக்கலாம் –

அனந்தபத்மநாபனின் களஞ்சியம்
பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்
அனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?
பத்மநாபனின் செல்வம் – மேலும் விளக்கம்

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் வருகிறது என்றால் பிரச்சாரம் என்பது அரசியல் கட்சிகளுக்கு மிக அவசியமானதொரு பணி. நான் 1952ஆம் வருட தேர்தல் முதல் இந்த தேர்தல் வரை பணிகளில் ஈடுபாடும், பங்கும் பெற்றிருக்கிறேன். 1952இல் நடந்த தேர்தல்தான் இந்தியா குடியரசாகப் பிரகடனப் படுத்திய பிறகு நடந்த முதல் தேர்தல். அதிலிருந்தே பல தவறுகள் நடக்கத் தொடங்கி விட்டன.

first-general-electionசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற பல தியாகிகள் அந்தத் தேர்தலில் ஓரம் கட்டப் பட்டார்கள். காங்கிரஸ் இயக்கத்துக்கு முட்டுக் கட்டைகளாக இருந்த பல ஜஸ்டிஸ் கட்சிக் காரர்கள் காங்கிரசில் சேர்ந்து கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட முற்பட்டார்கள். பல தியாகிகளுக்கு போட்டியிட வாய்ப்புக்கூட கொடுக்கப்படவில்லை. அவர்கள் சுயேச்சைகளாக நின்று தோல்வி அடைந்தனர். பலரிடம் தேர்தலில் போட்டியிடப் பணம் இல்லை. உங்கள் நினைவிற்காக ஒரே ஒரு தியாகியின் பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

அவர் வட ஆற்காடு மாவட்டத்தில் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்காக மகாத்மா காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவர். அவ்விருவர் முறையே அரக்கோணம் தேவராஜ ஐயங்கார், மற்றொருவர் ஜமதக்னி நாயக்கர். இவர்களில் தேவராஜ ஐயங்கார் ராஜாஜி பக்தர். அவரோடு சேர்ந்து இவர் சுதந்திரா கட்சியில் இருந்தார். பதவியோ, சுகமோ பெறாமல் மாண்டு போனார்.

 மற்றொருவர் ஜமதக்னி நாயக்கர். இந்த ஜமதக்கினி யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளுதல் நலம். கடலூரில் அஞ்சலை அம்மாள் என்றொரு சுதந்திரப் போராட்டத் தியாகி. அவரது கணவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான். இவர்கள் இருவரும் சிறையில் இருந்த போது, ஜமதக்னியும் அதே சிறையில் அடைபட்டிருந்தார். சிறையில் இவர் காரல் மார்க்சின் “தாஸ் கேபிடலை” தமிழில் மொழி பெயர்த்தார். இவர் இடதுசாரி சிந்தனையாளர். இவர்களில் ஜமதக்னி மட்டும் வயதில் குறைந்தவர். அப்போது அஞ்சலை அம்மாளின் மகள் தனது பெற்றோர்களைப் பார்க்க சிறைக்கு வருவது வழக்கம். அப்பொது சிறையில் இருந்த ஜமதக்னிக்கும் அந்தப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. ஆனாலும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுதான் திருமணம் என்று தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். அது போலவே 1947இல் சுதந்திர தின விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது இவர்களுடைய திருமணமும் பதிவுத் திருமணமாக மிக எளிமையாக நடந்து கொண்டிருந்தது.

 1947 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதே நாளில் ஜமதக்னிக்கும் அஞ்சலை அம்மாளின் மகளுக்கும் திருமணம் நடந்தது. இந்த ஜமதக்னி 1952 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் தரவில்லை. ஆகையால் அவர் அரக்கோணம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். டெபாசிட் கூட போய்விட்டது என்று நினைவு. வேதாசல முதலியார் எனும் வக்கீலுக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அங்கு மாணிக்கவேலு நாயக்கர் கட்சியின் ஆதரவோடு சுயேச்சையாக நின்று பின்னாளில் துணை சபாநாயகராக விளங்கிய பி.பக்தவத்சலு நாயுடு என்பவர்தான் வெற்றி பெற்றார். பிறகு அவரும் காங்கிரசில் சேர்ந்தார் என்பது தனிக்கதை.

kamban_adippodiகாரைக்குடியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எனும் தியாகிக்கு வாய்ப்பு தரப்படவில்லை. செட்டி நாட்டு ராஜா குடும்பத்தினருக்கு அந்த வாய்ப்பு காங்கிரசில் கிடைத்தது. இருந்தாலும் அப்போதெல்லாம் தேர்தல் களத்தில் கெளரவமான, நியாயமான பிரச்சார யுக்திகள் கடைப் பிடிக்கப் பட்டன. அதன் பின்னர் நடந்த தேர்தல்களிலும்கூட வேட்பாளர் தேர்வு முதல், தேர்தல் பிரச்சாரம் வரை ஒழுங்காக நடந்தது. 

கார், வண்டிகள் மூலம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் இடம் வரை கொண்டு விட அனுமதியும் இருந்தது. அப்பொதெல்லாம் சொல்லப்படும் ‘ஜோக்’ என்ன வென்றால், வாக்களிக்க காரில் அழைத்துச் செல்வார்களே தவிர, வீட்டுக்குத் திரும்பி வர நாம் நடந்தே வர வைத்துவிடுவார்கள் என்பதுதான்.

பணம் கொடுப்பது என்பது எங்கோ சில இடங்களில், மிக ஏழை மக்கள் வாழும் பகுதிகளில், அதிகம் போனால் ஐந்து ரூபாய் தருவார்கள். பெரும்பாலும் ஊழலற்ற, நேர்மையான தேர்தலே நடந்து வந்தது. 1957, 1962 இந்த காலகட்டங்களிலும் கூட மக்கள் தேர்தலைத் திருவிழா என்று அழைத்து மகிழும்படி போட்டிகளும், பிரச்சாரங்களும், பொதுக் கூட்டங்களும் இருக்கும். மக்கள் மத்தியில் சற்று பணப் புழக்கமும் இருக்கும்.

 பெரும் தலைவர்கள், குறிப்பாக காமராஜ், ராஜாஜி, ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, அண்ணாத்துரை,  இவர்கள் கூட்டமென்றால் மக்கள் வெள்ளம் போல வருவார்கள். அவர்களுடைய பேச்சும் மிக உயர்ந்த தரத்தோடு, நாட்டின் பொருளாதாரம், அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகள், நடைமுறை தவறுகள் இவற்றைப் பட்டியலிட்டுப் பேசுவார்கள். இவர்களில் சிலர் புள்ளி விவரங்களை (அது சரியோ தப்போ) அள்ளி வீசி மக்களைத் திகைக்க வைப்பார்கள். இந்த மாநிலத்தில் 9756 ஏரிகளும், 27653 குளங்களும் பயிர் பாசனத்துக்கு இருக்கின்றன என்பார் ஒருவர். இதனை எவரும் சரியா என்று பார்ப்பதில்லை. ஆகா! அப்படி புள்ளி விவரங்கள் தருகிறார் இவர் என்பர் மக்கள். பெரும்பாலும் இப்படிப் பேசுபவர்கள் அன்று வெகுவாக வளர்ந்து வந்த தி.மு.க.பேச்சாளர்களாகத்தான் இருப்பார்கள்.

f1967 தேர்தல் வந்தது. பிடித்தது தமிழ் நாட்டுக்குச் சனியன். இல்லாத பொய், பித்தலாட்டங்கள். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகள். எதிரிகள் மீது வசைமாறி பொழிதல், எதிர்கட்சிக் கூட்டங்களில் வன்முறை, வெறியாட்டம்.

அன்று வரை ஏசிப் பேசியவர்களின் வீடுகளுக்குச் சென்று, நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று உறவாடுதல்,     (வேண்டவே வேண்டாம் நமக்கு இப்படிப்பட்ட பிள்ளை. இப்படியொரு பிள்ளை நமக்கு வாய்க்குமானால் நாம் சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஓடிவிட வேண்டியதுதான்),  எதிரணித் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக பேசுதல் போன்றவைகள் நடைமுறைக்கு வந்தன.

இதில் தி.மு.க.தலைவர் அண்ணாதுரை மிகவும் கண்ணியமாகவும், மக்களைக் கவரும் விதத்திலும் பேசுவார். நெடுஞ்செழியன், இரா.செழியன் போன்றவர்கள் மிக சரளமாக எளிமையாகப் பேசுவார்கள். பேச்சில் கண்ணியம் இருக்கும். வேறு சிலர் குறிப்பாக சினிமா துறையிலிருந்து வந்தவர்கள் கருணாநிதி உட்பட சிலர் அடுக்கு மொழியிலும், அலங்காரமாகவும் பேசினாலும், கண்ணியக் குறைவாகப் பேசத் தயங்க மாட்டார்கள்.

காங்கிரசில் பேச ஆள் இல்லை. பேசவும் தெரியாது. கம்யூனிஸ்ட்டுகள் பேச்சில் ஆவேசம் இருக்கும், நாட்டின் பொருளாதார விஷயங்கள் இருக்கும், தொழிலாளர் பிரச்சினைகள் இருக்கும் ஆனால் அலங்கார மொழி நடை இருக்காது. இவர்களுக்கென்று ஒரு வாக்கு வங்கி ஏழை, எளிய விவசாயிகள், தொழிலாளர் மத்தியில் இருந்தது.

காங்கிரசார் தாங்கள் செய்த சாதனைகளைக்கூட சொல்லத் தெரியாமல் பேசுவார்கள். தி.மு.க.வோ, அரசில் தினசரி செய்யவேண்டிய காரியங்களைக்கூட சாதனைகளாகப் பட்டியலிட்டுப் பேசுவார்கள். புதிய புதிய தத்துவங்களை எடுத்துப் பேசுவார்கள். ‘நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்பதை அண்ணா கண்டுபிடித்துக் கூறி14யது போல” என்பார்கள். கேட்பவர்கள் வாய் திறந்து கேட்டிருப்பார்கள். “வானில் திரண்டு வரும் கருமேகம் மழை பொழியும்” என்பதை தி.மு.க.தான் கண்டுபிடித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தது என்பார் ஒருவர்.

தமிழ் நாட்டு மக்களுக்கு அப்போது அறிமுகமே இல்லாத சாக்கரட்டீஸ், மாஜினி, இங்கர்சால், முஸ்தபா கமால் பாட்சா என்றெல்லாம் என்னென்னவோ பெயர்களைச் சொல்லுவார்கள். இளைஞர்களும் மாணவர்களும் வாய் திறந்தபடி அவற்றைக் கேட்டு மகிழ்ந்து போவார்கள். அவர்களைப் பற்றி யெல்லாம் கையடக்கத்தில் புத்தகங்களை வண்ண அட்டையோடு வெளியிடுவார்கள். அவற்றை வாங்கிப் படித்துவிட்டு உலக ஞானம் பெற்று விட்டதாக அன்றைய இளைஞர்கள் மகிழ்வார்கள்.

awards திராவிட இயக்கத்தில் பெயருக்கு முன்பு பட்டப்பெயர் இல்லாத தலைவர்களே இல்லை எனலாம். அண்ணாத்துரை என்று பெயர் “அ”வில் தொடங்க்கினால், அங்கு ‘அ’ வரும்படி “அறிஞர்” என்கிற பட்டம், கருணாநிதி என்றால் ‘க’ வரும்படி “கலைஞர்” என்ற பட்டம் இப்படி. ‘சிந்தனைச் சிற்பி’, ‘சொல்லின் செல்வர்’, ‘நாவலர்’, ‘கவிஞர்’, கல்லூரியில் பணியாற்றிவிட்டால் ‘பேராசிரியர்’ இப்படியெல்லாம் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு ஊர் ஊராகக் கூட்டம் கூட்டி, அந்தக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூல் செய்து பணமும் சேர்ப்பார்கள். அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தி அதற்கு டிக்கெட் போட்டு பணம் வசூலித்தவர்கள் உலகிலேயே திராவிடக் கட்சியார்களாகத்தான் இருக்க முடியும்.

பெரும்பாலும் திராவிட இயக்கத்தார் நாடகம், சினிமா சம்பந்தப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆகவே சினிமா நடிகர்களில் பலர் அந்தக் கட்சியில் சேர்ந்து கருப்பு சிவப்பு பார்டர் ஆடைகள் அணிவார்கள். திரைப்படங்களில் தாங்கள் வாயசைக்கும் பாடல் வரிகளில் கட்சி வாசம் அடிக்கும்படி சில பாடல்களை அமைத்துக் கொள்வார்கள். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்பார் ஒருவர். அதற்கு வழிவகுத்தவர் கலைவாணர் எனும் பட்டம் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் எனும் நடிகர். அவர் தன் படத்தில் ‘தி.மு.க.’ என்றொரு பாட்டைப் பாடி, அதற்கு ‘திருக்குறள் முன்னணிக் கழகம்’ என்று விளக்கம் வேறு கொடுப்பார்.

 அண்ணாதுரை ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ என்றெல்லாம் படங்களுக்குக் கதை வசனம் எழுதினார். கருணாநிதி ஏ.எஸ்.ஏ.சாமி எனும் இயக்குனரிடம் உதவியாளராகச் சேர்ந்து அவருக்கு உதவியாக வசனங்கள் எழுதி, சில சாமி பெயரிலேயே வந்தாலும், பின்னர் தனது தனித்தன்மை வாய்ந்த அந்த நாளில் கேட்டிருக்க முடியாத துள்ளல் மொழியில் வசனம் எழுதி இளைஞர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அவர் கதை வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’, வசனம் எழுதிய ‘மனோகரா’, ‘திரும்பிப்பார்’ ஆகிய படங்கள் ஓகோ வென்று ஓட அவருக்கு மார்க்கெட் பிடித்துக் கொண்டது. ஐம்பதுகளில் எடுபட்ட அவரது வசனம் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போது எடுபடுமா? இப்போதெல்லாம் அவர் எழுதியது எதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, ரசிக்கவும் இல்லை.

 இப்படி 1967இல் நாசமடையத் தொடங்கிய தேர்தல் பிரச்சாரம், பேச்சுக்கள், யுத்திகள் இவை யெல்லாம் ஆரோக்கியம் கெட்டு, மக்களைச் சீரழிக்கும் நிலைமைக்கு அழைத்துச் சென்றுவிட்டது என்பதை இப்போது நாம் கண்கூடாகக் காண்கிறோம். நடிக நடிகையர்  எல்லாம் பெரிய பேச்சாளர்கள். எங்கோ வட இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒரு இந்திப் பெண் கொச்சை மொழியில், இங்கு வந்து தமிழ் நாட்டு அரசியலை கோமாளித்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் முடிந்த பிறகு இது போன்றவர்களுக்கு எப்படியெல்லாம் எதிர்ப்பும், நட்டமும் ஏற்படும் என்பதை இவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. முன்பெல்லாம் கூட இப்படி பலர் வந்தார்கள்; பேசினார்கள். எல்லாம் முடிந்த பிறகு நடந்ததற்கு மன்னிப்பும், கண்ணீரும் விட்டு அழுத நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறோம்.

gசினிமாவில் தமாஷ் பண்ணி சிரிக்க வைக்கும் ஒரு காமெடியன். அவருக்கும் மற்றொரு ஹீரோவுக்கும் சொந்த முறையில் தகறாறு. அந்த ஹீரோ இப்போது அரசியலில் ஒரு தலைவர். தேர்தலில் முக்கியமான புள்ளி. அவருக்கு எதிராக இதுதாண்டா சான்ஸ் என்று களமிறக்கி விடப்பட்டார் இந்த காமெடியன். கேட்க வேண்டுமா? முன்னே பின்னே நாக்ரிகமாகப் பேசிப் பழக்கமிருந்தால் சரி, இல்லையே. இவர் கூட்டங்களில் ‘குண்டக்க மண்டக்க’ ஏதாவது சினிமா வசனம் போல பேசி சிரிக்க வைத்தாலும், பின்னால் அவை எந்த அளவுக்கு இவரைப் பாதிக்கும் என்பது அறியாதவராக இருந்து வருகிறார். அரிக்கும் போது சொறிந்து கொண்டால் இதமாகத்தான் இருக்கும். பின்னர் எரிச்சல் எடுக்கும்போதுதான் தெரியும் கஷ்டமும் நஷ்டமும்.

செய்தித் தாளைப் பார்க்கவோ படிக்கவோ, சாதாரண மக்கள் தயங்கும் அளவுக்கு அசிங்கமான பேச்சுக்கள். பொய், பித்தலாட்டங்கள். கட்சியின் கொள்கைகள் பற்றியோ, மக்களிடம் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டுமென்பதில்லை. குழாயடிச் சண்டைதான். எங்கு திரும்பினாலும் எப்போது பற்றிக் கொள்ளுமோ எனும் பயப்படும்படியான சூழல். இதற்கு நடுவில் மக்களுக்கு பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது அதிர்ஷ்ட்டம். பணம் கட்டு கட்டாக வருகிறது. நகைகள், பாத்திரங்கள், துணி மணிகள், தேர்தலுக்குப் பிறகு தருவதாகச் சொன்ன மிக்சி, கிரைண்டர் போன்றவை இப்போதே லாரிகளில் படையெடுக்கின்றன. இந்தச் சீரழிவு எதுவரை போய் நிற்கும், நமக்குத் தெரியவில்லை.

ஒரே ஒரு ஆறுதல். தேர்தல் கமிஷன், டி.என்.சேஷன் காலத்துக்குப் பிறகு தனது தனித்தன்மை வாய்ந்த அதிகாரத்தை அழுத்தம் திறுத்தமாக வலியுறுத்தி வருகிறது. ஆளுவோரின் அச்சுறுத்தலை அலட்சியம் செய்துவிட்டு அடக்குமுறைக்கு பயப்படாமல் நேர்மையாகக் காரியம் ஆற்றி வருகிறது. நேர்மையாக நடக்கும் அதிகாரிக்கு எதிராக வழக்கு, அச்சுறுத்தல், அவரை மாற்ற வேண்டுமென்கிற போர்க்கொடி. இப்படி எல்லா வகைகளிலும் நேர்மையைக் கொன்றே தீரவேண்டுமெங்கிற வெறியோடு காரியங்கள் நடக்கின்றன.

வானமும் பூமியும், எங்கும் இருண்டு கருத்து பூகம்பமோ, பிரளயமோ ஏற்படப் போகிறது, உலகம் அழியப் போகிறது என்கிற அச்சத்துக்கு மத்தியில் மெல்லிய ஒளிக் கீற்று போல, உச்ச நீதிமன்றம், தற்போதைய தேர்தல் கமிஷன் இவற்றின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நமக்குச் சற்று ஆறுதலைத் தரக்கூடிய விஷயம்.

bjp_election_manifestoகாலம் மாற வேண்டும். உண்மையான ஜன நாயகம் இந்த மண்ணில் மலர வேண்டும். பொருளாதார அறிவும், மக்கள் நலனில் அக்கறையும் கொண்டவர்கள் ஆள வரவேண்டும்.

காந்திஜி சொன்ன தர்மகர்த்தா முறைப்படி ஆளவருவோர், தான் அணிந்திருக்கிற உடையைத் தவிர மற்ற அனைத்தையும் கழற்றி தூர வைத்துவிட்டு, ஆம்! உறவுகளையும், குடி, குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு துறவி போல தாமரை இலைத் தண்ணீர் போல இந்த நாட்டை ஆளும் நாள் எதுவோ அதுவே இந்திய நாட்டின் ஜன நாயகத்துக்குப் பெருமை. வருமா அத்தகைய நாள்? பார்ப்போம்.