மகரஜோதி நாள் அன்று சபரிமலை அருகில் புல்மேடு வனப்பகுதியில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. புனித யாத்திரைக்காக இருமுடி கட்டிப் போய் தரிசனம் செய்யும் பக்தர்கள் 102 பேர் கொடூரமாக மரணத்தைத் தழுவியிருக்கின்றனர். விபத்து முடிந்த ஒரு வாரத்திற்கு செய்தி ஊடகங்கள் இது பற்றிய சோகக் கதைகளால் நிரம்பியிருந்தன. மைசூர்க் காரர் ஒருவர் தனது நண்பரை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டு மலைக்கு தன்னுடன் வரச் சொல்லியிருக்கிறார். விபத்தில் நண்பர் இறந்து விட்டார், வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் தான் நான் வாழவேண்டும் என்று இந்த மனிதர் புலம்புகிறார். மாளிகைப்புரம் என்று பக்தியுடன் அழைக்கப் பட்டு மாலைபோட்டு வந்த 11 வயது சிறுமி ஒருத்தியும் விபத்தில் இறந்திருக்கிறாள். அடிபட்டு குற்றியிரும் குலையுயிருமாய்க் கிடந்த 6-7 பக்தர்களை தனது லாரியில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்க் காப்பாற்றலாம் என்று கிளம்பியிருக்கிறார் அங்கிருந்த ஒரு ஓட்டுனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவர் ஆஸ்பத்திரியை அடைய 6 மணி நேரம் எடுத்தது, வண்டியை ஓட்டிக் கொண்டு வருகையில் வலியில் துடித்து அரற்றி ஒவ்வொரு குரலாக அடங்கியதைக் கேட்க நேர்ந்த தன் துர்ப்பாக்கியத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று புலம்புகிறார் அவர். இந்த விபத்தினால் அநாதையான குடும்பங்கள், திக்கற்றுப் போய்விட்ட உறவுகள், சிதைந்து போன கனவுகள் பற்றிய விவரணைகளே நெஞ்சத்தைப் பிழிவதாக உள்ளது. கோயிலுக்குப் பயணம் போன மனித ஜீவன்கள் நடுக்காட்டில் கும்மிருட்டில் கால்களில் மிதிபட்டு எலும்புகள் முறிந்து மூச்சுத் திணறி சேற்றில் புரண்டு செத்துப் போவது என்பது எவ்வளவு குரூரமானது!
It can help you lose up to 27% of your body or 18 pounds in fat. This is a list of drugs San Luis del Palmar getting prescribed clomid uk with high-profile brand name marketing, in order of the year of approval and highest market share. Find more drugs and discount drug stores in kansas city, co online buying inderal online .
Buy generic sildenafil (viagra) from the official online pharmacies. Clomid tablets online the following information is provided under the terms of the creative commons attribution 4.0 international public license (http://creativecommons.org/licenses/by/4.0/), which permits use, duplication, adaptation, distribution and reproduction in any medium or format, as long as you give appropriate credit to the original author(s) Taloc buy clomid tablets and the source, provide a link to the creative commons license and indicate if changes were made. I'm not talking about a relationship where you want to marry them and have a family, but rather a relationship where.
This drug works by suppressing the development of male hair. Eli lilly acquired prozac from wyeth otherwhere in 1994 for us.2 billion. Some dogs with liver disease do not respond to doxycycline for cats, and may go crazy, get violent, or even attack people and their pets.
இந்த குரூர சாவுகளுக்கான முழுப் பொறுப்பும் கேரள அரசாங்கத்தையும், ஊழலில் திளைத்துள்ள திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் அமைப்பையுமே சாரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. 5 லட்சம் பக்தர்கள் அந்த வனப் பகுதி முழுவதும் நிரம்பியிருக்க, வெறும் 9 காவலர்கள் மட்டுமே அங்கு நிறுத்தப் பட்டிருந்த அவலமும், இரவு 8 மணிக்கு விபத்து நடந்தும் நள்ளிரவு 2 மணி வரை எந்த மருத்துவ உதவியும் அங்கு சென்றடையவில்லை என்பதும் நிர்வாக அமைப்பு ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டிருந்ததையே சுட்டிக் காட்டுகின்றது. ஆனால் இந்தச் சீர்குலைவு ஏதோ திடீரென்று ஏற்பட்டதல்ல. சொல்லப் போனால் இப்படிப் பட்ட விபத்துகள் சபரிமலையில் வருடந்தோறும் நடக்காமல் இருந்திருந்தால் தான் அது ஆச்சரியம். தெய்வாதீனமாகத் தான் ஒவ்வொரு முறையும் மகரஜோதி சீசன் எந்த துயர சம்பவமும் இன்றி நடந்து கொண்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?
வருடாவருடம் கார்த்திகை, மார்கழி ஆகிய இரு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் சபரிமலைக்கு சராசரி 8 முதல் 10 லட்சம் பேர் வருகிறார்கள் என்று சொல்லப் படுகிறது. இந்த இருமாதங்களில் மொத்தமாக சபரிமலைக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை 6 கோடிக்கு மேல் இருக்கும். கேரள மாநிலத்தின் மக்கள் தொகையைப் போல இது இரண்டு மடங்கு! சபரிமலைக் கோவில் மூலம் வருடத்திற்கு 2500 கோடி ரூபாய் கேரள பொருளாதாரத்திற்கு வருமானமாக வருகிறது. வருடாந்திர மாநில பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கு தொகை இது. எனவே சபரிமலை என்பது புனிதத் தலம், கலாசார மையம் என்பதையும் தாண்டி, கேரள மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பு நல்கும் ஒரு “துறை”யாகவே பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்பது நிதர்சனம்.
சபரிமலையின் இந்த பிரம்மாண்டமும், முக்கியத்துவமும் உண்மையிலேயே கேரள மாநிலத்தின், அரசின், மக்களின் பெருமிதத்திற்கும், நேர்த்தியான நிர்வாக செயல்திறனுக்கும் அடையாளமாக ஆகியிருந்திருக்க வேண்டும். மலைகள் புடைசூழும் கானகத்தின் இயற்கை எழில் பின்னணியில் பாரம்பரிய கோயில் திருவிழாவின் வசீகரமும், பக்தி வெள்ளப் பெருக்கில் மாபெரும் மக்கள் கூட்டம் ஒன்றுகூடும் தெய்வீக சங்கமுமாக உலகம் போற்றும் உன்னதம் இது. ஆனால் இப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் உயிருக்குக் கூடப் பாதுகாப்பு அளிக்கத் திராணியில்லாத கேரள நிர்வாக சீரழிவின் முகமாக, வெட்கக் கேடான விஷயமாக ஆகியிருக்கிறது.
கடந்த 20-30 வருடங்களாக, ஒவ்வொரு வருடமும் சபரிமலை யாத்திரீகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20% சதவீதம் அதிகரித்து வருகிறது என்று கேரள அரசே புள்ளிவிபரங்கள் தருகிறது. ஆனால் மேல்பூச்சான சில விஷயங்க்ள் தவிர்த்து, சபரிமலை பிராந்தியத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் 30 வருடம் முன்பு இருந்தது போலவே இன்றும் உள்ளன என்று கூறப் படுகிறது. இதற்கு முன்பு இருமுறை இதே போன்ற பெரும் விபத்துக்கள் நடந்து அதன் பின்னர் அமைந்த விசாரணை கமிஷன்கள் அளித்த பரிந்துரைகள் ஒன்று கூட செயல்படுத்தப் படாமல் விடப் பட்டிருக்கின்றன. 1950கள் முதல் கேரளத்தில் கோலோச்சி வரும் இடது சாரி அரசுகளும் சரி, காங்கிரஸ் அரசுகளும் சரி, மேடைகளில் உச்சக்குரலில் நாத்திகவாதம் பேசி நள்ளிரவில் ரகசியமாக கணபதி ஹோமம் செய்யும், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திருடன் போல கோயில்களுக்குப் போய்வரும் அரசியல்வாதிகளும் சரி, எல்லோருமே இந்த சீர்கேட்டுக்குக் காரணமாகிறார்கள்.
பாரம்பரியமாக சபரிமலைப் பயணம் மேற்கொள்ளும் எரிமேலி-பம்பா பாதை பெரும்கூட்டத்தைத் தாங்க முடியாமல் தத்தளிக்கிறது. மகரவிளக்கு சமயத்தில் 7-8 மணி நேரம் வாகனங்கள் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. பிறகு பம்பையிலிருந்து சன்னிதானம் வரை பல மணி நேரங்கள், சன்னிதானத்தில் தரிசனம் கிடைப்பதற்கும் அது போல நீண்ட காத்திருப்புக்கள். எனவே வெளிமாநிலங்களில் இருந்து வரும் பல பக்தர்கள் குமுளி-புல்மேடு வழியாக குறுக்கு வழியில் 7 கிமீ. மட்டுமே பயணம் செய்து சபரிமலையை அடைய மாற்றுப் பாதையை முறையான அனுமதியின்றி பல ஆண்டுகளாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த புல்மேடு பாதை அடர் காட்டின் வழியாகச் செல்கிறது.காட்டு யானைகளும், புலிகளும், கரடிகளும் நடமாடும் இந்த பிராந்தியம் வனத்துறையால் பாதுகாக்கப் பட்ட பகுதி என்றும் புலிகள் சரணாலயத்துக்குள் அடங்கியது என்றும் அறிவிக்கப் பட்ட பகுதியாகும். வனத்துறை அதிகாரிகள், வாகன ஆபரேட்டர்கள், இந்த வழிநெடுக கடைபோடும் வியாபாரிகள் மூவரும் இணைந்து ஒரு மாஃபியாவாக புல்மேடு பாதையில் செயல்பட்டு வருகிறார்கள். இதை நன்கு அறிந்திருந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஐயப்பனின் தரிசனத்திற்காக வரும் கோடிக் கணக்கான பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காதது மட்டுமல்ல, பக்தர்களை முடிந்த அளவு சுரண்ட வேண்டும் என்பதே அரசு மற்றும் உள்ளூர் ஆட்களின் எண்ணமாக இருந்து வருகிறது. மகரவிளக்கு சீசனில் பணியமர்த்தப் படும் காவலர்களுக்கான செலவை சபரிமலையை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு தன் கையிலிருந்து தான் ஏற்றுக் கொள்கிறது. வழக்கத்தை விடக் கூடுதலான மின்சாரக் கட்டணத்தை செலுத்துகிறது. மாநில அரசு பஸ்களே வழக்கமான கட்டணத்தை விடக் கூடுதலாக பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும்போது, தனியார் வாகனங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. சபரிமலை யாத்திரீகர்களில் மத்தியதர, கீழ்மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும், மிக ஏழைப் பட்டவர்களும் விளிம்பு நிலை மாந்தருமே பெரும்பாலர். ஆனால் இந்தியாவில் பல புனிதத் தலங்களில் பக்தர்களுக்கு உணவு இலவசமாகவோ, அல்லது மிகக் குறைந்த விலையிலோ கிடைக்கும் நிலையில், சபரிமலையில் மட்டும் உணவுப் பொருட்களைக் கொள்ளை விலையில் உள்ளூர் ஆட்கள் விற்றுக் காசு பார்க்கிறார்கள். சமீபகாலமாக கோயில் பிரசாதத்தின் தரமும் மிகக் குறைந்து போய்விட்டதாக பக்தர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. சபரிமலைக்கு வரும் வெளிமாநில பக்தர்களை போலீசார், வியாபாரிகள் ஆகியோர் சிறிதும் மரியாதையில்லாமல் நடத்துகிறார்கள். சாதாரண நேரங்களில் கூட கூட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டுமென்றே அடிதடி பிரயோகம் செய்கிறார்கள்.
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா எழுதுகிறார் – “இந்த விபத்தின் பின்னுள்ள மனச்சாட்சியில்லாத, தலைக்குனிவுக்குரிய விஷயம் என்னவென்றால், கேரளாவின் நிரந்தர பற்றாக்குறை பட்ஜெட்டை ஒவ்வொரு வருடமும் இட்டு நிரப்புவது, தமிழக, ஆந்திர, கன்னட யாத்திரீகர்கள் தாங்கள் கஷ்டப் பட்டு உழைத்த பணத்தின் மூலம் சபரிமலைக்கு அளிக்கும் காணிக்கையினால் வரும் வருமானம் என்பது தான். ஆனால், இந்த யாத்திரீகர்கள் புழுவைப் போல நடத்தப் படுகிறார்கள். அவர்களது நலனுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசுத் துறைகள் தொடங்கி உணவகங்கள், வாகன ஆபரேட்டர் வரையிலான பேராசைக் காரர்கள் அவர்களைக் கொடுமையாகக் கொள்ளையடிக்கிறார்கள். கேரளாவின் கந்துவட்டிக் கசாப்புக் கடைக்காரர்களுக்கு, வெட்டத் தயாராக நிற்கும் பாவப்பட்ட பலியாடுகள் இந்த யாத்திரீகர்கள் (For Kerala’s shylocks, they are like sheep for slaughter)”
– இந்தியன் எக்ஸ்பிரஸ், 23-1-2011, “Innocent Pilgrims who were killed by greed”, Paul Zacharia.
முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரும் இதே ரீதியிலான கருத்தைக் கூறியிருக்கிறார். கேரள அரசு நிர்வாகத்திற்கு சிறிதாவது மானம் இருந்தால் உடனடியாக அடுத்த மகரவிளக்கு சீசனுக்கு முன் சபரிமலை விஷயத்தில் செயல்படவேண்டும். இது குறித்து பல தரப்பிலிருந்தும் பல நல்ல யோசனைகள் ஏற்கனவே வந்துள்ளன.
1. சபரிமலை சன்னிதானத்தைச் சுற்றியுள்ள 40-50 கிமீ பிரதேசம் மகரவிளக்கு சீசனில் ஒரு பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப் படவேண்டும். கூட்டத்தை நெறிப்படுத்த நவீன அறிவியல்-தொழில்நுட்ப முறைகள் (scientific crowd management) எத்தனையோ இருக்கின்றன. அவறைப் பயன்படுத்த வேண்டும்.சன்னிதானம், பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அச்சன் கோவில் என்று பல இடங்களில் இருந்து மகரவிளக்கு தரிசனம் செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு பக்தர் கூட்டம் தன்னிச்சைப் படி சிதறவிடாமல் முன்பே திட்டமிட்டு இந்த எல்லா இடங்களிலும் கூட்டத்தை சம அளவில் distribute செய்யவேண்டும். ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கூட்ட நகர்வுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கேரள, கர்நாடக, தமிழக, ஆந்திர காவல்துறையினருடன், மத்திய காவல்துறையினரும் இதில் பங்களிக்கலாம்.
2. உடனடி விபத்து முதலுதவிக்கான ஆயத்தக் குழுக்கள் சபரிமலை பிராந்தியத்தில் பல இடங்களில் தயார் நிலையில் இருக்க வேண்டும். மத்திய ரிசர்வ் போலிசாரை இதில் ஈடுபடுத்த வேண்டும்.
3. சுத்தமான கழிப்பறைகள், நியாய விலையில் தங்குமிடங்கள், உணவகங்கள் ஆகியவற்றை சபரிமலைப் பிராந்தியம் முழுவதும் அமைக்க வேண்டும். தேவஸ்வம் போர்ட், அரசுசாரா அமைப்புகள், தன்னார்வ சேவை அமைப்புகள் ஆகியோர் இணைந்து இதைச் செய்யலாம்.
4. மகரவிளக்கு சீசனில் மட்டும் இல்லாமல், ஆண்டு முழுவதும் சபரிமலை பிராந்தியத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஒரு நீண்டகால செயல்திட்டம் வேண்டும். அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் மற்ற இந்து இயக்கங்களையும் ஈடுபடுத்தலாம். முன்பு அமைக்கப் பட்ட சந்திரசேகர மேனன் கமிஷனும் இந்து அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.
5. யாத்ரீகர்களுக்கான வசதிகள், வனப் பிராந்தியத்தின் சுற்றுச் சூழல் இரண்டையுமே கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப நிரந்தர உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப் படவேண்டும். தற்காலிக ஏற்பாடுகள் வசதிக் குறைவானவை, அபாயகரமானவை, மீண்டும் மீண்டும் செலவு ஏற்படுத்துபவை. புல்மேடு பகுதியில் சாலை/மின்சார வசதி, பம்பா நதி மாஸ்டர் பிளான் ஆகிய திட்டங்கள் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளன. இவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
6. முதல்கட்டமாக சபரிமலை பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கென்று 500 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கி, நீண்டகாலமாக செய்யப் படாமல் இருக்கும் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். திருவாங்கூர் தேவஸ்வம் போர்ட் முற்றிலும் அரசியல் சார்பற்றதாக ஆக வேண்டும். நிர்வாக செயல்பாடுகளில் யோசனை கூறவும், கண்காணிக்கவும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்த சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு நியமிக்கப் படவேண்டும்.
7. சபரிமலை ஒரு தேசிய புனித யாத்திரை தலமாக அறிவிக்கப் படவேண்டும். கும்பமேளா போன்ற நிகழ்வுகளை தேசிய அளவிலான பல அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நடத்துவதால் அந்த நிகழ்வுகள் சிறப்பாகவும், எந்த விபத்துகளும் இல்லாமலும் நடந்தேறுகின்றன. அதே போன்ற கவனிப்பு சபரிமலைக்கும் அளிக்கப் படவேண்டும்.
இவை உருப்படியான யோசனைகள்.
விபத்து பற்றிய வழக்கை விசாரிக்கும் கேரள உயர்நீதிமன்றம் நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை, குறைகளைக் கண்டறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் எல்லாரிடமும் இருக்கிறது.
இதனூடாக, விசாரணையின் தொடக்கத்திலேயே “மகர ஜோதி என்பது தெய்வீக நிகழ்வா அல்லது மனித உருவாக்கமா என்று கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அது நம்பிக்கை சார்ந்தது என்று சொல்லிவிட்டு அரசு ஒதுங்கி விட முடியாது. உண்மை என்ன என்று பொதுமக்களுக்கு கண்டிப்பாக சொல்லப் பட வேண்டும்” என்று நீதிமன்றம் கேட்டுள்ளது.கேரள முதல்வர் உடனடியாக இது பற்றி எந்த புதிய விசாரணையும் நடத்தப் படாது, இது நம்பிக்கை தொடர்பான விஷயம் என்று அறிவித்து விட்டார். முன்னாள் அமைச்சர் சுதாகரன் பொன்னம்பலமேடு மலைப்பகுதியில் மலைமுகட்டில் சுடர் ஏற்றப் படுகிறது; இது பழங்குடி வழிபாட்டு மரபின் தொடர்ச்சி என்று வரலாற்று ரீதியாக ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
ஒருவேளை அது தெய்வீக நிகழ்வு அல்ல என்று கேரள அரசு அதிகாரபூர்வ்மாக அறிவித்து விட்டால், சபரிமலையில் கூட்டம் வெகுவாகக் குறைந்து விடும், எல்லா பிரசினைக்கும் எளிய “தீர்வு” கிடைத்துவிடும் என்று கோர்ட் கருதுகிறதா? புரியவில்லை.
நீதிமன்றம் இந்த விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், 2007ம் ஆண்டு இதுபற்றிக் கேட்டபோது சபரிமலைக் கோயிலின் தலைமை தந்திரி (அர்ச்சகர்) கண்டரூரு மஹேஸ்வரரு திட்டவட்டமாக இதற்கு விளக்கம் அளித்திருந்தார். “மகர ஜோதி வேறு, மகர விளக்கு வேறு. ஜோதிட ரீதியாக சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாள் மகர சங்கிராந்தி; அப்போது வானில் தோன்றும் மகர நட்சத்த்திரமே மகர ஜோதி எனப்படுகிறது. பொன்னம்பலமேடு மலை முகட்டில் தோன்றும் சுடருக்குப் பெயர் மகரவிளக்கு. கற்பூரத்தைக் கொட்டி மூன்று முறை இந்தச் சுடர் ஏற்றப் படுகிறது. கோயிலில் தீபாராதனை ஆகும் அதே நேரத்தில் மலைமுகட்டிலிருந்து ஐயப்பனுக்கு பெரிய தீபச் சுடர் காட்டி செய்யும் வழிபாடு இது” என்று அவர் கூறியிருந்தார். எல்லா செய்தி ஊடகங்களிலும் அது பெரிய செய்தியாக வந்திருந்தது. சமீபத்தில் கூட தாழமன் நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் ஈஸ்வர் (யுவ ஹிந்த் என்ற இளைஞர் இயக்கத்தை நடத்தி வருபவர் இவர்) இதே விளக்கத்தை மீண்டும் ஒரு முறை தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அளித்திருந்தார் .
இதற்கெல்லாம் பின்னர் சபரிமலையில் மகரவிளக்கு சீசனில் கூட்டம் குறைந்ததா? இல்லவே இல்லை. வழக்கம் போல வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று கேள்வி கேட்கும் நீதிமன்றம் யோசித்துப் பார்த்ததா தெரியவில்லை. சபரிமலைக்கு மாலைபோடும் ஐயப்பன்மார்களில் பலர் எளிய மனிதர்கள், ஏன் கல்வியறிவு குறைந்தவர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் முழு முட்டாள்களோ, கருத்துக் குருடர்களோ அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சபரிமலை யாத்திரை என்பது ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு ஒரு பக்தி அனுபவத்தை, ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது. அதனால் தான் இவ்வளவு இடர்ப்பாடுகளையும், வசதிக் குறைவுகளையும் கூட பொறுத்துக் கொண்டு வருகிறார்கள்.
“சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்று திருவாசகம் கூறுகிறது.தத்துவார்த்தமாக எல்லா ஒளிப் பொருள்களும் பரஞ்சுடரின் கீற்றுகளே.
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
என்று சேக்கிழார் கூறுவது போல, இறையன்பில் தோய்ந்த மனத்திற்கு கணந்தோறும் நிகழும் பிரபஞ்சத்தின் தோற்றமனைத்துமே அற்புதக் கோலம் தான்! அது தவிர்த்த “அற்புதச் செயல்கள்” ஊடகங்களிலும் வெகுஜன அளவிலும் பரபரப்பாகப் பேசப் படலாம், ஆன்மீக மனம் அவற்றையும் ஒரு கோலாகலமாக எடுத்துக் கொள்ளும். அவ்வளவே.
சபரிமலை மகரவிளக்கு பற்றி உருவாக்கப் பட்டுள்ள சில பாமர நம்பிக்கைகள் (உதாரணமாக, அது பக்தியுடன் விரதம் இருப்பவர் கண்களுக்கே தெரியும்; விரதக் குறைபாடு உள்ளவர் கண்களுக்குத் தெரியாது) அதீதமான மிகைப் படுத்தப் பட்ட ஊடகப் பிரசாரங்கள் அன்றி வேறில்லை. தொலைக் காட்சிக் காமிராக்களின் கண்களுக்கும், அதன் வழியாக உலகெங்கும் உள்ள் கோடிக்கணக்கான மக்களுக்கும் அது தெரியத் தானே செய்கிறது! ஐயப்பனைப் பற்றிய சம்ஸ்கிருத புராண நூல்களில் இத்தகைய “நம்பிக்கைகள்” பற்றியெல்லாம் எதுவும் சொல்லப் படவே இல்லை. தென் தமிழ் நாட்டின் பாரம்பரிய சாஸ்தா வரவுப் பாடல்களிலும், ஸ்துதி பஞ்சகங்களிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவற்றில் சபரிமலை பற்றிக் குறிப்புகள் உள்ளன; ஆனால் நானறிந்த வரை மகரஜோதி பற்றி எதுவும் இல்லை. ஒருவேளை மலையாள நாட்டார் வழிபாட்டு சாஸ்தா பாட்டுகளில் மகரவிளக்குத் திருவிழா பற்றிய செய்திகள் இருக்கலாம்.
கார்த்திகை, மார்கழி மாதங்கள் ஐயப்பன்மார்கள் விரதமேற்கும் புனித காலம். அப்போது பெரிய பாதை என்று சொல்லப் படும் வன யாத்திரை வழி திறக்கப் படுகிறது. ஐயப்பன் இருமுடி கட்டிச் சென்றதாக ஐதிகமாகக் கூறப்படும் காட்டு வழி நடந்து செல்கையில் காளைகட்டி, அழுதா நதி, அழுதை ஏற்றம்/இறக்கம், கரிமலை போன்ற புனிதத்துவம் வாய்ந்த க்ஷேத்திரங்கள் வழிநெடுக வருகின்றன. எனவே இந்தப் பருவத்தில் இந்தப் பாதையில் நடந்து செல்வதே புனிதத்துவம் மிக்கதாகக் கருதப் படுகிறது. மற்ற நேரங்களில் இந்தப் பாதை மூடப் பட்டிருக்கும். இந்தப் பாதையில் பயணம் செய்யவேண்டியே பக்தர்கள் பலர் இந்த சீசனில் சபரிமலை செல்கிறார்கள். பலர் மகரவிளக்குத் திருநாளுக்கு முன்பே திரும்பி விடுவதும் உண்டு.
எதற்கு இதையெல்லாம் சொல்லவேண்டியுள்ளது என்றால், கேரள நீதிமன்றத்தின் கேள்வியைத் தொடர்ந்து மகரஜோதி என்பது கேரள அரசாங்கமும், சபரிமலைக் கோயில் நிர்வாகமும் உருவாக்கி உலவ விட்டிருக்கும் ஒரு மோசடி என்ற ரீதியில் கருத்துக்கள் ஊடகங்களில் பரப்பப் படுகின்றன. Makara jyoti hoax, fraud போன்ற பிரயோகங்களை செய்தித் தாள்கள் பயன்படுத்துகின்றன.
சபரிமலை சாஸ்தா வழிபாடு பல நூற்றாண்டுகள் பழமையானது. பொய்யான ஒரு அற்புதத்தையோ, மோசடியையோ உருவாக்கி அதில் வாழவேண்டும் என்ற அவசியம் அதற்கில்லை. சைவ, வைஷ்ணவ, சாக்த மதங்களும், அத்வைத தத்துவமும், நாட்டார் தெய்வ வழிபாடுகளும் எல்லாம் ஒன்று கலக்கும் அற்புத ஆன்மிக சங்கமம் ஐயப்பன் வழிபாடு.
சரணம் ஐயப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
சகல சௌபாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம
ஸ்தான மெய்ஞான குருவே
என்று தான் பக்தர்கள் ஐயனை வேண்டுகின்றனர். காடுமலை கடந்து, படியேறி வரும் பக்தனுக்கு ஐயப்பனின் சன்னிதி முகப்பில் கிடைப்பது “தத்வமஸி” (நீயே அது) என்ற தத்துவ உபதேசம் தான். இது தான் சபரிமலை யாத்திரையின் ஆன்மிக சாரம்.
மகரவிளக்கைப் பற்றி கேள்வி கேட்கும் நீதிமன்றமும், அவதூறு செய்யும் ஊடகங்களும் இதனை உணரவேண்டும்.
மகர ஜோதி இயற்கையோ செயற்கையோ அந்த விவாதம் எதுவும் இந்த கோர விபத்து பற்றிய விசாரணைக்கு சிறிதும் அவசியமில்லாதது. அரசு தன் கடமை தவறி செயலிழந்து நின்றது என்பது தான் பிரசினை. நீதிமன்றம் வேண்டுமென்றே இதில் மத நம்பிக்கை தொடர்பான சர்ச்சையை உள்நுழைத்து பிரசினையைத் திசைதிருப்ப முயல்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. கண்டனத்திற்குரியது.