விழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்

சங்கராபுரம் அருகே கோவில் தேர் எரிப்பு: கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு; 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது

It may be time to switch to the more expensive treatment, such as accutane, to prevent cancer. Is nizagara fda approved in the us is a clomid over the counter Pacora problem, with me nizagara fda approved. A: this article provides an overview of the pharmacological, pharmacokinetic and pharmacodynamic properties of doxycycline, as well as its various clinical uses.

But only a few options are actually safe, proven treatments for acne. Orchids in the genus orchis are dioecious, with male and Vyāra doxycycline monohydrate goodrx female flowers on separate plants. An antibacterial drug that is used to treat certain types of bacterial infections.

It is a simple chemical formula with a complex molecular. Generic clomid for sale has a similar action as clomid, does not require regular Mariquita monitoring, and no known side effects. It may be used to treat breast cancer, prostate cancer, and ovarian cancer.

Temple-Car-Torched-in-Villupuram-2ஆகஸ்டு 17: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இங்கு காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்திருவிழாவின் போது ஊர் தரப்பு மக்கள் தங்கள் பகுதி வழியாக தேர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த காலனி மக்கள் முடிவு செய்தனர். இதையறிந்த ஊர் மக்கள் தங்கள் தெரு பகுதியில் தேர் வரக்கூடாது என்று கூறி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையடுத்து இவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பிரச்சினைக்கு உரிய பகுதியில் தேரை கொண்டு செல்லாமல் விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதைதொடர்ந்து கடந்த 14-ந் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அங்கு தேர் திருவிழா நடக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலனி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மீது கற்களும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போலீசாரின் 5 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன…

–   தினத்தந்தி, ஆகஸ்டு 17.  முழுமையான செய்தி இங்கே.

இந்த சம்பவத்தில் அம்மனின் புனிதமான தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளைக்  கொளுத்தி வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களுக்கு எதிராகத்  தமிழ்ஹிந்து தனது கடுமையான கண்டனங்களைத்  தெரிவிக்கிறது.  கலவரக் காரர்களை  அரசும் காவல்துறையும்  கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.  இந்து இயக்கங்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள்  உடனடியாக  கிராம மக்களை சமாதானமடையச் செய்து  அமைதியையும் நல்லிணைப்பையும் உருவாக்கிட வேண்டும்.

இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப் பட்ட சில கருத்துக்கள்:

டிகை நீட்டி அமர்ந்த காலில்
போலி பகுத்தறிவு
திராவிடவாதியின் நாக்கில்
வர்த்தக சினிமா
உலக நாயக போலித்தனத்தில்…
இவற்றிலெல்லாம் என் தர்மத்தின் மானம் போய்விட்டதாக பொங்கினேன்.
அறியாமையையும் ஆபாசத்தையும்
மலின அரசியலையும் கடந்தது
தர்மத்தின் பெருமிதம் என்று சொன்னாள்
தேசமுத்துமாரி
ஆனால்
ஒட்டுமொத்தமாக
எரிந்து கிடக்கும்
என் தர்மத்தின் மானம்
என்று எனக்கு அன்று தெரிந்திருக்கவில்லை…
கரித்துண்டுகளாக
நேற்று தர்மபுரியில்
இன்று சேஷசமுத்திரத்தில்
அந்த கரி துண்டுகளின் குவியலில்
மாரியம்மனின் தேர் துண்டுகளையும்
தேடி பொறுக்குவேன் என்று
நானெங்கு கண்டேன்…
இன்று நின்று எரிக்கிறது மிச்சம் மீந்த
என் உயிர் உணர்வை
காவியின் மௌனம்.

அரவிந்தன் நீலகண்டன் 

******

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது என்று நான் கருதுகிறேன்.

Temple-Car-Torched-in-Villupuramபங்காரு அடிகளாரின் இயக்கம் அந்தப் பகுதியில் வேர்கொண்டு தமிழகம் முழுவதும் 1980களில் பிரபலமடைந்தது (அதன் வளர்ச்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் ஆற்றிய பங்கும் மிக முக்கியமானது). அனைத்து சாதியினரும், குறிப்பாக பெண்களும் நேரடியாக சக்தி வழிபாடும், பூஜைகளும், சடங்குகளும் செய்யும் ஏற்பாட்டின் மூலமாக எளிய மக்களிடையே ஆன்மீக மறுமலர்ச்சியையும் சமுதாய சமத்துவத்தையும் அவரது இயக்கம் வலியுறுத்தி வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கல்வி, மருத்துவ மையங்களையும் நடத்தி வருகிறது.

பங்காரு அடிகளார் இந்தக் கிராமத்திற்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும். இரு தரப்பினரும் அவர் முன்னிலையில் கூட வேண்டும். அம்மனின் தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளை எரித்த ஆதிக்க சாதியினர் அவர் முன்னிலையில் தாங்கள் செய்த பெரும் பாவத்திற்கு தலித் குடும்பங்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எரிந்த குடிசைகளை மீண்டும் கட்டித் தருவதும் தேரை மீண்டும் செப்பனிட்டு கோலாகலமாக அம்மனை ஊரின் அனைத்துத் தெருக்களிலும் பவனி வரச்செய்வதுமே இதற்கான பிராயச்சித்தம் என்று அடிகளார் அறிவிக்க வேண்டும். இந்த பிராயச்சித்தத்தை செய்யாத பட்சத்தில், அம்மனின் கோபம் அந்த வன்கொடுமை செய்தவர்களின் குடும்பங்களையும் அவர்களது தலைமுறைகளையும் சென்று தாக்கும் என்ற விஷயம் உறுதியாக ஆதிக்க சாதிக்காரர்களிடம், குறிப்பாக அந்தக் குடும்பத்துப் பெண்களிடம் சொல்லப் பட வேண்டும். இதற்கான நிதியுதவியின் ஒரு பங்கை ஆதிபராசக்தி பீடமும் இந்து இயக்கங்களும் இணைந்து வழங்கலாம். தேர்த்திருவிழாவிலும் அடிகளார் பங்குகொண்டு ஆசியளிக்க வேண்டும்.

இந்த ஏற்பாட்டை உடனடியாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் செய்ய வேண்டும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை உடைத்தெறிந்ததில் அவர்களது பங்கு சிறப்பானதாக இருந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இந்தப் பிரசினையிலும் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.

(பி.கு: இந்தச் சம்பவம் நடந்த சங்கராபுரம் கிராமப் பகுதியுடன் எனக்கு தனிப்பட்ட அளவில் ஒரு தொடர்பு உண்டு. எனது மாமனாரின் பூர்வீக ஊரான மேலகரம் அங்கு தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விசேஷத்திற்காக அங்கு போயிருக்கிறேன். அவரது குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலர் ஊரிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுப் பெயர்ந்து விட்டனர்).

ஜடாயு 

******

சேஷசமுத்திரம் வன்முறையில் தலித்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவில் தேர் எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது.

செய்ததது சோ கால்டு சாதி இந்துக்களே தான். அதுவும் புர்ச்சிகர கட்சிகளான திமுக, திக மற்றும் தேமுதிக, அதிமுக கட்சிகளில் இருப்பவர்கள். கவனிங்க சோகால்டு பாமக வன்னிய சாதி வெறியர்கள் ஏதும் செய்யலியாம். செஞ்சது எல்லாம் மத்த கட்சி சாதிவெறியர்களே.

அவர்கள் அதுவும் மேடை போட்டு இது டந்தை டரியார் பிறந்த மண் இங்கே இந்துத்துவா தலையெடுக்கமுடியாது என முழங்குபவர்கள்.

அவர்கள் எல்லாம் அப்போ புர்ச்சிகர பொங்கலாளிகளாக இருப்பவர்கள் இப்போ மட்டும் சாதி இந்துக்கள் ஆகிவிடுகிறார்கள்.

தேர்தல் வந்தா மட்டும் இங்கே இந்து இயக்கங்களை உள்ளே விடமாட்டோம். இந்துத்துவா காலூன்ற விடமாட்டோம் என கூவும் டுபாக்கூருகள் இப்போ இந்து இயக்கங்கள் என்ன செய்தன என கேட்கிறார்கள்.

இதை இந்து இயக்கங்கள் வாய்ப்பாக சவாலாக எடுத்துக்கொண்டு அங்கே எரிக்கப்பட்ட தேர் மீண்டும் ஓடவும் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்து இந்த மானங்கெட்ட த்ராவிட த்ராபைகள் மீதும் புர்ச்சி பொங்கலாளிகள் மீதும் கரியை பூசவேண்டும்.

தேர் இழுப்பு, சாமி ஊர்வலம் எல்லாம் வயதானவர்கள், முடியாதவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கடவுளை கும்பிட கோவிலுக்கு வரவேண்டியதில்லை கடவுளே வீடு தேடி போய் அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பவை.

அதை எரிக்கும் கபோதிகளுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் முன்நின்று அதை நடத்திக்காட்டவேண்டும்.

ராஜசங்கர்

*****

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1

மீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்…

தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.  பகுத்தறிவை வளர்ப்பதாக முழங்கிக்கொண்டு,  ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக முழங்கிக்கொண்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகளின் காலத்தில் தான் ஜாதி மிகவும் வெறுப்பூட்டும் கருவியாக மாறி இருக்கிறது. . இதன் காரணங்களை சமூக வளர்சசிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக, வாக்குவங்கி அரசியலில் கட்சிகள் ஈடுபடுவதன் காரணமாகவே, ஏற்கனவே சமூகத்தில் புரையோடி இருக்கும் ஜாதிக் காழ்ப்புணர்வு மேலும் வேகமடைந்து வன்முறைகளை உருவாக்கி வருகிறது.  இதற்கு என்ன தீர்வு?

ஒரு நோய்க்கு மருந்து அளிக்க வேண்டுமானால், அந்த நோயை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அந்த நோய் தாக்கி இருப்பதை நோயாளி முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு நோய்க்கான மருந்தை நோயாளி உட்கொண்டாக வேண்டும்.  கண்ணை மூடிக்கொண்டு,  நோய் எதுவும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நோயாளியால் அந்த நோய் பிறரையும் தொற்றலாம். அதற்கு முன்,  தடுப்பு நடவடிக்கைகளை பலவந்தமாகவேனும் செய்தாக வேண்டும். இப்போது தமிழகத்தில் நிலவும் எரிமலை நிலை, உடனடியாக மருந்து கொடுக்கப்பட வேண்டிய, அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறது.

caste02  இதற்கு முக்கியமான ஆதாரம், கடந்த 60 நாட்களுக்குள் தமிழகத்தின் மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்  சம்பவங்கள். இந்தத் தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த மூன்று நிகழ்வுகளிலும் ஆதிக்க ஜாதியினரும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் மோதிக்கொண்டு ஒற்றுமை வேரில் அமிலத்தைப் பாய்ச்சி இருக்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய மதுரை, எஸ்.புளியகுளத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வந்த வாகனம் மீது கடந்த அக். 30ம் தேதி மதுரை சுற்றுச்சாலையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்;  அதில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.  இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கைதாகியுள்ள பலரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

தேவர் ஜெயந்தி (அக். 30) வந்தாலே தென் மாவட்டங்கள் கலவர பீதிக்குள் சிக்கிக் கொள்வது வழக்கமாகி இருக்கிறது. தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் தேவர் சமூக மக்கள் செல்லும் வழிகளில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். குறிப்பாக தேவர் சமூகத்தின் எதிரிகளாக தங்களை கூறிக்கொள்ளும் தேவேந்திர  குல வேளாளர் சமூகத்தினர். தேவர் ஜெயந்திக்குப் போட்டியாக, தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த அமைப்புகள் சார்பில், இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் (செப். 11) சமீப காலமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்திலும், காவல்துறையினர்  நெருப்பின் மீது நின்றுகொண்டு பணியாற்றுவது போலத்தான்  காணப்படுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக ஜாதிய கட்டுமானத்தில், அடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது  தாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை என்பதை உணர்ந்து வருகிறார்கள்.  இது நல்ல விஷயம். ஆனால், அந்த சமுதாயத்திற்கு தலைமை தாங்கும் பலர், இதுநாள் வரை தாங்கள் அடைந்த அவமானங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்று தங்கள் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு, இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் காரணமாகிறார்கள். பசும்பொன் செல்லும் வழியில் தேவர் இன இளைஞர்கள் இடும் கோஷங்கள் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களைக் கொந்தளிக்கச் செய்கிறது. இருதரப்பும் உரசிக் கொள்ள பசும்பொன் குருபூஜை வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தான், தேவர் குருபூஜை என்றாலே தென் மாவட்டங்களில் காவல் துறையை குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ”தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று சொன்ன முத்துராமலிங்கரை அவமானப்படுத்தும் விஷயம் இது.

தேவர் ஜெயந்திக்கு சென்றுவந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் அதில் 7 பேர் உயிரிழப்பதும், நாம் எந்தக் காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஜாதிவெறி எந்த அளவுக்கு மக்களை சிறுமைப்படுத்தி இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வு மிக மோசமான உதாரணம்.  இதை அடுத்து தென் மாவட்டங்களில் பதிலடி கலவரம் நடக்காமல் தடுக்க காவல்துறையினர் இன்னமும் பல இடங்களில் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதையும் மீறி சில இடங்களில் தாக்குதல்களும் நடந்துள்ளன. தேவர் சமூக மக்களிடையே வன்முறையைத் தூண்டிவிட்டதாக தேவர் இனக் கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதேபோல, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தருமபுரி மாவட்டத்தில் நடந்துள்ள தாக்குதலும்  நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம். தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய்  என்ற இடத்தில் நடந்த காதல் திருமணம் இரு சமூகங்களிடையே பெரும் மோதலை உருவாக்கி 288 வீடுகள் எரிக்கப்பட காரணமாகி இருக்கிறது.

caste04

நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் வன்னிய சமுகத்தைச் சேர்ந்த ஒருவரது மகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவரை கடந்த அக். 14 ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார். இதை எதிர்த்து காவல்துறையில் புகார் செய்த பெண் வீட்டாரின் கவலை கண்டுகொள்ளப்படவில்லை. திருமணம் செய்துகொண்ட ஆண் திருமண வயதை எட்டாதவர் எனபது பெண் வீட்டாரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள, வெறுப்பு ஆவேசம் பரவிக் கிடந்த நிலத்தில் குபீரென தீ பற்றிக்கொண்டது.

காதல் திருமணம் செய்த இளைஞரின் சொந்த ஊரான நத்தம் காலனியிலும், அதை அடுத்த அண்ணாநகர், கொண்டம்பட்டி பகுதிகளிலும், 2,000க்கு மேற்பட்ட ஆதிக்க ஜாதியினர் திரண்டு சென்று  நவ. 7 ம் தேதி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அந்த நேரத்தில்  அங்கிருந்த ஆடவர் அனைவரும் தப்பி ஓடிவிட, தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் நிர்கதியாக சிக்கி கொண்டார்கள். கும்பலின் கோபம் வீடுகள் மீது திரும்பியதில் அப்பகுதிகளில் இருந்த 288 வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன; பல வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே குலைந்துபோகும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பல வீடுகளில் நகைகள், பணம் கொள்ளை போயிருக்கிறது. டிவி, பிரிட்ஜ், கட்டில் உள்பட அனைத்து உடைமைகளும் சாம்பலாக்கப்பட்டுள்ளன.  பல வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளன.

ஆண்கள் இல்லாத சமயத்தில், ஆதரவற்ற சூழலில் பெண்கள் அனைவரும் ஓடி ஒளிந்த நிலையில்,  ஆதிக்க ஜாதியினரின் ஆவேசம் எவ்வளவு கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் நமது முதுகெலும்பே சில்லிடுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி தற்போது அரசால் வழங்கப்பட்டுள்ளது. இரு குடும்பங்களிடையிலான மோதல் இரு சமூகங்களிடையிலான மோதலாக மாற்றம் பெற்றது எப்படி?  இப்போது இக்கலவரம் தொடர்பாக சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால், இழந்த பொருள்களும் இழந்த நம்பிக்கையும் மீண்டும் திரும்புமா?

கேரளத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்தும் ‘லவ் ஜிகாத்’ போலவே தர்மபுரி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள சிலர் வன்னிய சமூக பெண்களை திட்டமிட்டு காதலித்து ஏமாற்றுவதாக, தாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பாமக தலைவர் ராமதாஸ் இதை வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். இதற்கு தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக என்று இயங்கும்  சில இயக்கங்களும் காரணமாக உள்ளதை மறுக்க முடியாது. வன்னிய ஜாதியைச் சார்ந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே அவர்கள் தரப்பில்  அறைகூவல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பில் ‘இந்தக் கலவரத்துக்கே பாமக தான் காரணம்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். ராமதாசுடன் இணைந்து  பல அரசியல் நிகழ்வுகளை நடத்தியுள்ள திருமாவளவனே பாமக மீது (குறிப்பாக காடுவெட்டி  குரு மீது)தான் குற்றம் சாட்டுகிறார். மக்களிடையே பரப்பப்படும் வதந்திகள், அவர்களிடையே ஏற்கனவே சுமுக சூழல் இல்லாத நிலையில் பூதாகரமாக்கப்படுகின்றன. பரஸ்பர அவநம்பிக்கையும் வெறுப்பூட்டும் பிரசாரமும்  இணைந்து மக்களை காவு வாங்குகின்றன.  இங்கும்,  முந்தைய பல்லாண்டுகால ஆதிக்கத்தால்  பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உசுப்பேற்றும் கும்பலும், ஆதிக்கம் தளர்ந்துபோன வன்னியர்களை உசுப்பேற்றும் கும்பலும் தான் இதற்குக் காரணமாகின்றன.

ramdoss01

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே குறிஞ்சிப்பாடியில், பாச்சரம்பாளையத்தில்  நடந்துள்ள மற்றொரு மோதல், கலவரத்தின் வித்து எங்கிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆதிக்க ஜாதியைச் சார்ந்த ஒருவரது மகளிடம்  கையைப் பிடித்து வம்பு செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு இளைஞனால், அங்கு கலவரம்  பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த நவ. 27ம் தேதி, குறிஞ்சிப்பாடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆறு வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்தக் கலவரத்தில் ஏழு பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இச்சம்பவம்  இரு தரப்பிலும் சிலர் கைதாகி இருக்கின்றனர்.

இதே ஊரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பெரும் ஜாதிக் கலவரம் நடந்திருக்கிறது. அங்கு ஜாதிகளிடையே நிலவும்  வெறுப்புணர்வும் காழ்ப்புணர்வும் தான், ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதில் கொண்டுசென்று சேர்த்திருக்கிறது. இதை பெண்கள் மீதான வன்கொடுமையாகக்  கருதாமல் ஜாதீய தாக்குதலாக கருதியதால் தான், கலவரம் நடந்திருக்கிறது. ஆக ஒரு கலவரத்தை ஆரம்பிக்க எதிர்த்தரப்பு பெண்ணை கேவலப்படுத்தினால் போதும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் கருதும் தமிழ்ப் பண்பாடு எந்த கீழ்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது என்பது வெறும் துன்பியல் நிகழ்வல்ல. நமது பாரம்பரிய மதிப்பீடுகளை வெட்டிச் சாய்த்த திராவிட இயக்கக் கண்மணிகளுக்கு இதில் பெரும் பங்குண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஜாதிய ஒற்றுமைக்கு அற்புத உதாரணங்களை உருவாக்கிய நாயன்மாரும் ஆழ்வாரும் ஜாதி வேறுபாடுகளை வென்று பக்திப்பயிர் வளர்த்த தமிழகத்தில், இன்று நிலவும் ஜாதி மோதல்கள், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற கவலையை ஏற்படுத்துகின்றன. இதற்கு அடிப்படை, ஜாதியை மூலதனமாகக் கொண்டு வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகள்  தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த சமூக வேற்றுமை உணர்வை அதிகரித்து சமூகத்தைப் பிளக்கும் சதிகளில் பிற சமயம் சார்ந்த கும்பல்கள் ஈடுபடுவதாகக்  கூறப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் அதற்கு வித்திடும் நம்மிடையே உள்ள ஜாதிய கொடுமைகளைப்  புறக்கணிக்க முடியாது. நம்மிடையே உள்ள வேற்றுமையைக் கொண்டுதான் நம்மிடையே சண்டை மூட்ட முடிகிறது. எனவே, நம்மிடையே உள்ள வேற்றுமையைக் களைவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். அதை விடுத்து புற சமயத்தவரின் சதிகள் புலப்படுவது கண்டு ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.

 

ஏனெனில் நோயை அறிந்தால் தான் அதனை குணமாக்க மருந்தளிக்க முடியும். இது வள்ளுவன் சொன்ன அமுதமொழி. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் அதே வள்ளுவர் தான் மருந்தையும் சொல்லிச் சென்றிருக்கிறார். நாட்டுநலனுக்காகப் பாடுபடும் சங்க குடும்ப இயக்கங்களுக்கு இவ்விஷயத்தில் அதிமுக்கியமான கடமைகள்  காத்திருக்கின்றன. ஏனெனில், வெறுப்பூட்டும் பிரசாரத்தை வெல்ல அன்பு ஒன்றே மருந்து. அதை வழங்குவதற்கான தகுதி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. இதற்கு அற்புதமான உத்தப்புர உதாரணம் நம் முன் ஏற்கனவே உள்ளது.

 anticaste01

காதல் திருமணத்தால் ஜாதி வேற்றுமை ஒழியுமா?

திருமணம் என்பது இரு மனம் இணைவது. காதல் திருமணமோ, பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கும் திருமணமோ எதுவாயினும், அது அவ்விருவர் மட்டுமே தொடர்புடைய ஒரு புனிதமான விஷயம். இதை தங்கள் ஜாதீய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான கருவியாக ஒருவர் நினைக்கும்போதே தரம் தாழ்ந்துவிடுகிறார். அதேபோலத் தான்  காதல் திருமணத்தால் ஜாதி ஒழியும் என்ற சிந்தனையும். ஏனெனில் காதலர்கள் எவரும் சமூக மாற்றத்துக்காக காதலித்து ஏங்குவதில்லை.

காதல் திருமணங்கள் பல தோல்வியில் முடிவதையும் நாம் கண்டுவருகிறோம் (பெற்றோர் செய்துவைக்கும் திருமணங்களிலும் மணமுறிவு இல்லாமல் இல்லை. ஆனால், அங்கு ஒரு சமூகப் பாதுகாப்பும் குடும்பப் பாதுகாப்பும் இருக்கிறது என்பது உண்மை). காதலர்களில்  யாராவது ஒருவர் குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதால் தான் காதல் திருமணங்கள் நிலைக்கின்றன. அங்கு சென்று சமூகத்தைக் காக்கும் போராளிகளாக அவர்களை சித்தரிப்பது குடும்பத்தில் குறுக்குசால் ஓட்டும் வேலை.

காதல் திருமணங்களால் ஜாதி வேறுபாடுகள் ஒழியும் என்று சில சமூக சிந்தனையாளர்கள் கருதலாம். ஆனால், அது தானாகக் கனிந்த கனியாக அமைய வேண்டுமே அல்லாது, தடியால் அடிக்க வைத்து கனியவைப்பது இனிய சுவையைத் தராது. தவிர நமது சமூகம் குடும்பத்தை மையமாகக் கொண்டது. எனவே காதல் திருமணமே ஆயினும், குடும்ப நலம் கருதி செயல்படுவதும் அவசியம். இங்கு தான் நாயக்கன் கோட்டை ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவு என்று கூறிக்கொண்டு, இந்த விஷயத்தை மூடி மறைக்க்க கூடாது. எந்த சமூகமாயினும், காதலுக்காக பெற்றோரையே துறக்கும் ஆணோ, பெண்ணோ, நாளை நாட்டுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது என்ன முடிவு எடுப்பார்கள்?

காதல் திருமணம் மட்டுமே ஜாதி வெறியைப் போக்கும் என்பதற்காக, அதை வலிந்து திணிப்பதோ, பெற்றோர் சம்மதமின்றி உடன்போக்கில் ஓடுவதோ பல சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தும். இதற்கு பல நேரடி உதாரணங்கள் உள்ளன. இப்போது விஷயம் அதுவல்ல. இருவரது காதல் திருமணம் இரு சமூகத்தையும் மேலும் பிளவு படுத்தி இருக்கிறது என்பது தான். இதற்கு அப்பகுதியில் நிலவும் பல சமூகக் காரணங்கள் இருக்கலாம். பல்லாண்டுகால ஆதிக்க மனப்பான்மையையும், அடிமைத்தனத்தையும் ஒரு திருமணத்தால் மாற்றிவிட முடியாது. அதற்கு நாம் இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டி இருக்கிறது.

(தொடரும்)

ஆதார செய்திகள்:

தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை (தமிழ் ஹிந்து கட்டுரை- 11.11.2012)
காதல் திருமணம் செய்த வாலிபருக்கு 19 வயதா? (தினத்தந்தி செய்தி- 23.11.2012)
கலப்புத் திருமணத்தால் கலவரம் (தினகரன் செய்தி – 08.11.2012)
மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சு (தினமணி செய்தி- 05.11.2012)
மதுரை: பெட்ரோல் குடுவீசில் சாவு எண்ணிக்கை ஆறாக உயர்வு (தினமணி செய்தி – 06.11.2012)
இம்மானுவேல் சேகரன் நினைவுநாள்- போலீஸ் குவிப்பு (மாலை மலர் செய்தி- 09.09.2012)
குறிஞ்சிப்பாடியில் 8 வீடுகளுக்கு தீவைப்பு (தினத்தந்தி செய்தி – 28.11.2012)