வள்ளிச் சன்மார்க்கம்


நாதா குமரா நம: ‘ எனத் துதித்து மாணவக பாவத்தில் நின்று, ‘ஓதாய்’ எனக் கேட்ட அரனுக்குச் சாமிநாதனாய் குகப் பெருமான் உபதேசித்தது, இந்த வள்ளி சன்மார்க்கம் என்றார், அருணை முனிவர்.

If you wish to ask a question or submit a review about a product or service, please click here. Although there are many other methods such as drugs, iuds or surgical methods that can be used for the same purpose, but i http://4gfixedip.com.my/high-speed-internet-for-business-solutions-contact-us/ am not gonna discuss them here because they are not my concern and this article only focus on how to prevent pregnancy. This type of therapy may have the side effect of reducing your sex drive, but it’s important that you get a full sexual health history before deciding to go for therapy.

Some of the information on this page cannot be presented in the united states and canada. There are some Kanchanaburi clomiphene price in pakistan medications prescribed with a generic equivalent for other conditions, such as hypertension, diabetes, and hypercholesterolemia. The most common addictive drug is alcohol, followed by coffee and tobacco.

It is also a very good treatment for tapeworms in humans and dogs. And how often do you need to take it, and what effect will glucophage tablet price it have if you do? I have noticed if i take a tablet by itself, i will get a small rash and redness at the area of where the drug has been injected.

வள்ளிச் சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்றும் இளையோனே” (திருப்புகழ் 317)

(விள்ளை = விள்+ஐக்கு , கேட்ட தந்தைக்கு; நோக்க வல்லைக்கு – கண்ணிமைப்போதில், நொடியில்; ஏற்ற – மனதில் கொள்ளும்படி உபதேசிக்க)

ள்ளிச்சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி என்று பொருள். இம்மார்க்கத்தையே திருஞானசம்பந்தர் நன்னெறி, அருள்நெறி, பெருநெறி என்று உரைக்கின்றார்.

ந்தச் சன்மார்க்கம், இம்மார்க்கத்தில் பயணிப்பவர்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை அருணை முனிவர் பலதிருப்புகழ்ப் பாடல்களில் தெளிவாக விதந்து ஓதுகின்றார்.

”நீவேறெ னாதிருக்க நான்வேறெ னாதிருக்க
நேராக வாழ்வ தற்குன் னருள்கூற”
(நாவேறு, சுவாமிமலைத் திருப்புகழ்)

“இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்
ஏகநாயகா”
(திருவிடைமருதூர்த் திருப்புகழ், அருகுநுனி)

த்திருப்புகழ்களில் எல்லாம் உயிர் இறை எனும் இருபொருள்கள் உள்ளன; மங்கலம் அல்லது சிவம் எனப்படும் இறை இன்பவடிவானது, ஆனந்தமயமானது, அதனைத் துய்க்கும் உரிமை உயிர்க்கு உளது, அந்த இன்பத்தைத் தடுப்பது மும்மலங்கள், அவையாவன சகசமலம் எனப்படும் ஆணவம், ஆகந்துகம் எனப்படும் மாயை கன்மங்கள், இவை நீங்கினால் உயிர் இறையின்பத்தைத் துய்க்கும்; இறையின்பத்தைத் துய்க்க ஒட்டாமல் தடுக்கும்  தடை நீங்கும், தடைநீங்கிய உயிர் சிவத்தைக் காணும், கண்டால் அதனுடன் தான்வேறு சிவம் வேறு என்று தோன்றாத வகையில் இரண்டற்ற நிலையில் ஏகபோகமாய் இறுக வேண்டும்.  அவ்வாறு இறுகும் நிலையில் முத்தியாகிய பரமசுகம் விளையும் அதுவே உயிர் அடைய வேண்டிய கதி என்பனவாகிய பொருள்கள் விளங்குகின்றன.

யிரும் சிவமும் ‘ஏக போகமாய் (நீயு நானுமாய்) இறுகும்வகை’யைச் சைவசித்தாந்தம் அத்துவித சம்பந்தம் என்கின்றது. அத்துவித சம்பந்தம் என்பது யாது?  பேதமான பொருள்கள் இரண்டு தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்தம், அத்துவித சம்பந்தம். அந்த சம்பந்தத்தால் உயிருக்கு அழியாப்பரமானந்தம் விளைகின்றது. அதுவே முத்தி.

பொருள் இரண்டாக இருந்தும் பேதப்படுத்தும் குற்றம் நீங்கித் தம்முள் வேறறக் கலந்து நிற்கும் தன்மையே அத்துவிதம். அத்துவிதம் என்றால் ஏகம் அல்லது ஒன்று என்பது பொருள் அன்று; துவிதம் அல்ல, இரண்டல்ல ஒன்றுமல்ல என்பதுதான் பொருள்.

சிவமும் உயிரும் இரண்டும் சித்து அதாவது அறிவுடையன என்பதால் ஓரினத்தன எனினும் சிவம் அருளும் சித்து, உயிர் அருளினைச் சேரும் சித்து; சிவம் முற்றறிவுடையன், சர்வஞ்ஞன்; உயிர் சிற்றறிவினன், கிஞ்சிஞ்ஞன். சிவம் தானே அறிவன்; சிவன் அறிவிக்க உயிர் அறிவன். சிவன், வியாபகன் ஆகையால் இருந்தாங்கு இருந்தபடி அறிவன், உயிர் ஏகதேசன், கால இட எல்லைக்குட்பட்டவன். ஆதலால் எதனையும் அழுந்தி அனுபவித்து அறிவன். சிவன் உயிர்களின்பொருட்டு ஐந்தொழிற் செய்வன்; உயிர் ஐந்தொழிலிற் படுவன். இவைபோல சிவத்துக்கும் உயிர்களுக்கும் பேதம் உண்டு.

னவே, சிவம் உயிர் இரண்டும் சித்தென ஓரினமே என்றாலும் உயிர் சிவானுபவம் ஒன்றற்கே உரியது. அந்த அனுபவம் சிவமும் உயிரும் தனித்தனியிராமல் ஒன்றெனுமாறு கூடினாலே உண்டாவது. இதுவே சைவசித்தாந்தம் கூறும் சுத்தாத்துவிதமுத்தி.

ந்தச் சுத்தாத்துவித முத்தி நிலையை அடைய உபதேசிக்கப் பெற்ற மார்க்கமே வள்ளி சன்மார்க்கம்.

ந்தச் சன்மார்க்கத்தில் ஒழுகுவோரை முருகன் ஆட்கொள்ளும் நெறியினை வள்ளியை முருகப்பெருமான் காதற் திருமணம் செய்து கொண்ட திருவிளையாடலை ஏதுவாக வைத்து அருணைமுனிவர் கந்தரலங்காரப் பாடலில்(24) விளக்குகின்றார்.

“கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே”

(கின்னம் – துயரம். குன்னம் – இரகசியம். குறிச்சி – வேடுவர் வாழிடம். கோடு குழல் சின்னம் – வேட்டுவர்களின் இசைக்கருவிகள்)

முருகா! நீ எனக்கு இரகசியம் என்று உபதேசித்த பொருளை  வள்ளிமலை வெட்ட வெளிச்சமாகி விட்டது. நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருள் ‘யான் எனது’ என்னும் தற்போதத்தை விடவேண்டும் என்பது. ‘யாரொருவர் யான் எனது என்னும் ஆணவச் செருக்கற்று என்னை வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு நான் எளியன்; குற்றேவல் செய்பவன்’ என்பதல்லவா நீ எனக்கு உபதேசித்த இரகசியம். நீ உபதேசித்த முறையில் உன்னை வழிபட்டவள் வள்ளிப் பிராட்டி. அதனால் அல்லவா நீ அவளுக்கு ‘திருவேளைக்காரன்” ஆனாய். அதனால் அல்லவா, நீ அவள் வாழ்கின்ற குறிச்சிக்குச் சென்று அவள் மகிழும்படியாக பல விளையாடல்கள் நிகழ்த்தி, அவளுக்குக் குற்றேவல் செய்து, அவளைத் திருமணமும் செய்து கொண்டு உன் தேவியாக்கிக் கொண்டாய். முருகா! நீ நான் பிறவிநோய் நீங்கி வாழும்பொருட்டு என் செவிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்ன குன்னத்தை (தெய்வ ரகசியத்தை), கோடு குழல் சின்னம் முதலிய இசைக்கருவிகள் முழங்க நீ வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடமாகிய குறிச்சி ஊருலகம் எல்லாம் அறிய வெட்ட வெளியாக்கிவிட்டதே. தெய்வ ரகசியத்தை கொட்டுமுழக்கோடு வெளியிடுவதாக அல்லவா இச்செயல் உள்ளது?!” எனக் கேட்டு அருணகிரிநாத சுவாமிகள் முருகப் பெருமானைப் பழிப்பதுபோலக் கொண்டாடுகின்றார்.

காமனை முனிந்த கடவுட் குமரனாகிய செவ்வேட் பரமன், வள்ளி தனக்காகப் பக்குவப்படுள்ளாள் என நாரதமுனிவர் உரைக்கக் கேட்டு, ‘மையல் மானுட வடிவந் தாங்கினான், வேட்டுவக் கோலத்தைக்கொண்டு குமரன் தோன்றினான், தூண்டியே கன்று காமநோய்க் கவலையுள் வைத்தான்’ எனக் கச்சியப்ப சிவாச்சாரியர் முருகன் தன் தெய்வநிலையை விட்டு வள்ளியின் பொருட்டு மையல் மானுடனாய் வந்த எளிமையைப் பாடுகின்றார்.

ள்ளியின் மனத்தைத் தன்பால் ஈர்க்க முருகன் மேற்கொண்ட திருவிளையாடல்கள் அனைத்தும் தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்கேற்ப அமைந்திருப்பதால் அவை, கந்தபுராணத்தில் வள்ளியம்மை திருமணப்படலத்திலும் திருத்தணிகைப் புராணத்தில் களவியற் படலத்திலும் காவியச் சுவை படப் பாடப்பட்டுள்ளன.

ந்த நிகழ்ச்சிகள் அருணகிரிநாதப் பெருமானால் திருப்புகழிலும் பாடப்பட்டுள்ளன. இவ்விரு புராணங்களிலும் சொல்லப்படாத பலதிருவிளையாடல்களும் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளன. அவை வள்ளி மீது முருகன் கொண்ட அளவிலா மோகத்தை (அதாவது, அடியவர்மீது இறைவன் கொண்டுள்ள கருணையை) வெளிப்படுத்துகின்றன.

முருகன் வள்ளி மீது கொண்ட காதலை விளக்கும் பல திருப்புகழ் பாடல்களில் சிருங்கார ரசம் கொப்பளித்துப் பொங்குகின்றது.

“வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
யான் வழி அடிமை எனச்செப்பி
வீறுள அடியினைப்பற்றிப் – பலகாலும்
வேதமும் அமரரும் மெய்ச்சக்ர
வாளமும் அறிய விலைப்பட்டு
மேருவில் மிகவும் எழுத்திட்ட – பெருமாளே”

(திருப்புகழ், 1199)

”கொங்கைக் கொப்பாகும் வடகிரி
செங்கைக் கொப்பாகும் நறுமலர்
கொண்டைக் கொப்பாகும் முகிலென – வருமாதைக்
கும்பிட்டுக் காதல் குனகிய
இன்பச்சொற் பாடும் இளையவ”

(திருப்புகழ், 945)

”குறப்பொற் கொம்பை முன்
புனத்தில் செங்கரம்
குவித்துக் கும்பிடும் – பெருமாளே”

… ஒரு
பெண் காதலொடு வனமேவி வளிநாயகியை
இன்பமான தேனிரச மார்முலை விடாத கர – மணிமார்பா”

(வங்கார மார்பிலணி)

… புனம் வாழும்
கோலப்பெண் வாகு கண்டு
மாலுற்று வேளைகொண்டு
கூடிக் குலாவும் பெருமாளே”
(திருப்புகழ், 1241)

மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும்
மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனன்”

(வேடிச்சி காவலன்)

ற்பண்புகளையுடைய தம்பதியரிடையே அமைந்த நற்காமம் பத்தியாக, சிவ- சக்தி ஐக்கிய அனுபவமாக அமையும்.. நற்காமம் தம்பதியரிடையே உயர்ந்த அனுபவத்திற்கு வழியமைக்கும்.

லிதாம்பிகை ”சிருங்காரரச சம்பூர்ணா” என எம்பிரானைத் தன்வசப் படுத்துகின்றாள். அச்செயல் அவள் பொருட்டன்று; அவளீன்ற பிள்ளைகளாகிய உயிர்களின் நலன் கருதி. லலிதையின் பலநாமங்கள் அவள் காமேஸ்வரனை சிருங்காரத்தில் அன்புகாட்டித் தன் வசப்படுத்தலை வெளிப்படுத்துகின்றன. காமகலா ரூபா”, “காமகேளீ”, “காமகோடிகா”, “காமதாயினி”, “காமசேவிதா”, “காமேசக்ஞாத ஸெளபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா”. “ரமண லம்படா” (தன்னுடைய பதியுடன் ரமிப்பதில் ஆசையுடையவள். ரமணம் – சம்போகம்,கிரீடை),  என்னும் நாமங்கள் அம்பிகையின் ஸ்ருங்காரத்தை வெளிப்படுத்துகின்றன.

பிராமி அந்தாதியிலும் அம்மையின் சிருங்காரரசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் உள்ளன.

“அதிசய மான வடிவுடை யாளர விந்தமெல்லாந்
துதிசய வானன சுந்தர வல்லி துணையிரதி
பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன் றோவாம பாகத்தை வவ்வியதே (17)

(தமது வேலைக்காரனாகிய மன்மதன்பொருட்டுத் தமது நாயகராகிய சிவபெருமானது புத்தி குன்றும்படி அவரது வாமபாகத்தை வௌவிய அபிராமிதேவி தமதன்பனாகிய தமியேனுக்கு அனுக்கிரகத்தைச் செய்யாதொழியார். மதிசயமாக – புத்திசயமாக)

”இடங்கொண்டு விம்மி யிணைகொண் டிறுகி யிளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண் டிறைவர் வலியநெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட வல்குற் பனிமொழி வேதப் பரிபுரையே” (42)

(ஸ்தனங்களாகிய மலையரணையும் அல்குலாகிய தேரினையும் போர்த்துணையாகக் கொண்டு இறைவரது வலிய நெஞ்சை வென்று அந்நெஞ்சைத் தமக்கு நடனத் தானமாகக் திறைகொண்டவர்)

“ககனமும் வானும் புவனமுங் காணவிற் காமனங்கந்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையுஞ்செம்
முகனுமுந் நான்கிரு மூன்றேனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே” (65)

(அபிராமிதேவியே, தங்களுடைய வல்லமையினால், யோகமூர்த்தியாய் ஞானோபதேசம் செய்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்திக்கும் ஷண்முகக் கடவுளாகிய ஒரு குழந்தை உண்டாய தென்றால், தேவி!, நும் வல்லமைக்கு முடியாத காரியம் ஒன்றும் இல்லை)

“தைவந்து நின்னடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சினல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகவறி யாமடப் பூங்குயிலே” (98)

(பூங்குயில் போன்ற அபிராமிதேவியே!, தங்களுடைய திருவடித்தாமரைகளை வருடிப் பின் சிரசிற் சூடி ஊடல் தீர்த்த சிவபெருமானுக்குப் பற்றிச் சூடுதற்குக் கருவியாகிய தம்முடைய திருக்கரத்திலுள்ள ஓமாக்கினிநெருப்பும் சூடுதற்கு இடமாயுள்ள சிரசின்கண் உள்ள கங்காநதியும் அப்படித் திருவடிகளைப் பற்றிச் சூடும்போது எவ்விடத்திலே ஒளித்துக்கொண்டன திருவாய் மலர்ந்தருளுக)

ற்காமம் பத்தியனுபவத்துக்குத் தடையன்று. இயல்பாகக் குழந்தையின் மேலுள்ள பாசத்தை அக்குழந்தையை முருகனாகவும் கண்ணனாகவும் பாவித்து, அக்குழந்தையைப் பேணும் செயலை இறைவழிபாடாக மாற்றிக் கொள்ளுதலைப் போல, இயல்பாகத் தம்பதியருக்குள் இருக்கும் நற்காமத்தை சிவசத்தி ஐக்கிய பாவனையால் சிவானுபவமாகவும் தாம்பத்திய வாழ்க்கையே சக்தி உபாசனையாகவும் மடை மாற்றம் செய்து கொள்ளும் வழியைப் பெரியோர்கள் அருளி யுள்ளார்கள்.  சைவமரபில், பெண்கள், பாவை நோன்பிருந்து, சிவனடியார்களே தங்களுக்குக் கணவனாக வாய்க்கப்பெற வேண்டும் என பெருமானிடம் வேண்டினார்கள். கணவனுக்குச் செய்யும் உபசாரங்களே சிவபூசையாக அமையும் பேறு அதனால் வாய்த்தது. பெண்ணுக்குச் சொன்னது ஆணுக்கும் பொருந்தும்.

வரவர்க்கு உகந்த மார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகி இறையருளைப் பெற வைதிகம்,இந்து தருமம் அனுமதிக்கின்றது.

ள்ளி மீது முருகன் கொண்ட மோகத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் ஜெயதேவரின் அஷ்டபதிக்கு நிகராகக் காதலின்பத்தை வெளிப்படையாகப் பாடுகின்றன. வடநாட்டு பக்தி மரபு தமிழ்நாட்டில் வேர்கொண்டபோது அஷ்டபதி பாடி இராதாகல்யாணம், சீதாகல்யாணம் , திவ்யநாம பஜனை ஆகியனவற்றை மகோற்சவமாகக் கொண்டாடும் மரபு திருவிடைமருதூர், கும்பகோணம், பாலக்காடு முதலிய பகுதிகளில் பிராமணர்களால் மேற்கொள்ளப்பட்டது.

திருப்புகழ்வழி வள்ளி திருக்கல்யாணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளிமலைச்சுவாமிகள் என்னும் மகானால் உருவாக்கப்பட்டது. திருப்புகழின் பெருமையை உலகறியச் செய்த பெருமை இம்மகானுக்கே உரியது. அர்த்தனாரி எனப் பூர்வாசிரமப் பெயர்கொண்ட இப்பெருமான், மைசூர் அரண்மனையில் தலைமைச் சமையற்காரராகப் பணியாற்றி வந்தார். வினை வயத்தால் அருமை மனைவி மக்கள் ஆகியோரை இழந்து விரக்தியோடு திருப்பழனிக்கு வந்தார். அங்கு பூரணநிலவொளியில் திருக்கோயில் தாசி, சுவாமி ஊர்வலத்தின்போது, ‘வங்கார மார்பிலணி’ எனத் தொடங்கும் திருச்செங்காட்டங்குடித் திருப்புகழுக்கு அற்புதமாக அபிநயம் செய்தாடினாள். தமிழ் எழுதப் படிக்க அறியாத அர்த்தனாரிக்கு இந்த நிகழ்ச்சி திருவருள் விளக்கமாக அமைந்தது. முருகன் அர்த்தனாரியை இந்த நிகழ்ச்சியின் வழியே ஆட்கொண்டான். இந்தத் திருப்பாடலை அறிய வேண்டும் என்பதற்காகவே அர்த்தனாரி தமிழ் எழுதப்படிக்கத் தொடங்கினார். திருப்புகழ் அவரைப் பற்றிக் கொண்டது. வள்ளியம்மை அவருக்குக் குருவானார். வள்ளித் தாயைப் ‘பொங்கி’ எனப் பெயர் சூட்டிக் கொண்டாடினார். அர்த்தனாரி வள்ளிமலைச்சுவாமிகள் ஆனார். வள்ளிமலைச் சுவாமிகள் தம்மை வள்ளியாகவே பாவித்து கொண்டார். முருகனைக் காட்டிலும் வள்ளியை ஆராதிப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டார்.  வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதனாகிய முருகனே வள்ளியை அல்லது பிறரைத் துதியா விரதன்தானே!

குருஜி டாக்டர் ராகவன்

 கொச்சி சமஸ்தானத்து தலைமை நீதியரசராகவும் பின்னர் சென்னையில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும்  விளங்கிய டி.எம். கிருஷ்ணசுவாமி ஐயர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை, சாது பார்த்தசாரதி சுவாமிகள் போன்றோர் இவருடைய சீடர்களானார்கள்.

 வள்ளி திருக்கலியாண மகோற்சவம் கொண்டாடுவதில் இரு பத்ததிகள் இன்று நிலவுகின்றன. ஒன்று, வள்ளிமலைச்சுவாமிகள் அமைத்த பத்ததி. மற்றொன்று குருஜி டெல்லி இராகவன் அவர்கள் உருவாக்கித் திருப்புகழ் அன்பர்கள் மேற்கொண்டுள்ள பத்ததி.

ந்த சஷ்டி விரதத்தை வள்ளி திருக்கலியாண மகோற்சவமாகக் கொண்டாடி நிறைவு செய்வோம்.

ன்மணம் விரும்பி வள்ளி சமேத முருகப்பெருமானை வழிபடுதல் சிலப்பதிகாரகாலத்துக்கும் முந்திய மரபு.

குறமக ளவளெம குலமக ளவளொடும்
அறுமுக வொருவனின் னடியிணை தொழுதேம்;
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெருகநன் மணம்விடு பிழைமண மெனவே”

(சிலப்பதிகாரம், குன்றக்குரவை).

போகியை யோகி எனல்

தமிழ் ஹிந்துவில் ஸ்ரீ அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு கட்டுரையில் உடல் ரீதியான காமத்தினூடாக ஆன்மிக உணர்வு பெறுதல் தொடர்பான ஒரு கட்டுரை எழுதி, அதன் மீது பெரும் வாதப் பிரதி வாதங்கள் நிகழ்ந்ததாகவும், நமது மரபில் இது பற்றி உள்ள நிலைப்பாடு இன்னதென்று நான் எழுத வேண்டும் என்றும் சில வாசகர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். நான் எதிலும் முடிந்த முடிபைக் கூறுபவன் அல்ல. ஆங்கிலத்தில் அத்தாரிட்டி என்கிறார்களே அது மாதிரியானவன் அல்ல. பண்டிதனோ பல்கலைக் கழகங்கள் ஒப்புக்கொள்ளும்படியான ஆய்வாளனும் அல்ல. நான் அறிந்ததை அறிந்தவரையில் பகிர்ந்துகொள்வதுதான் எனது எழுத்தின் / பேச்சின் நோக்கம்.

venus_of_willendrofஹிந்து மரபின் தோற்றுவாய் மனித குலம் நாகரிகமடையத் தொடங்கிய போதே ஏற்பட்டுவிட்ட நிகழ்வாகும். ஆகவே தொன்மையான இம்மரபில்  ஆபாசம், பாபம்  என்பதான கருத்தாக்கங்கள் இல்லை. குறிப்பாக நிர்வாணம் ஆபாசம் அல்ல.

உடல் உறுப்புகளின் பெயர்களை இயல்பாக உச்சரிப்பதிலும் மனத் தடை ஏதும் நமது மரபில் இல்லை. பார்வதித் தாயை உண்ணாமுலை (அபீத குஜாம்பா) என்றோ, குன்று அனைய முலையுடையாள் (கிரிகுஜாம்பாள்) என்றோ அழைத்து மகிழ்வதில் நமக்குத் தடையில்லை. ஆற்றல் மிக்க சக்தித் தலங்களை யோனி பீடம் என்றுதான் அழைக்கிறோம். இவ்வாறு அழைப்பதில் ஒரு பிழையும் இல்லை.

எனது தியானத்தில் பிரசன்னமாகும் என் குல தெய்வம் முழு நிர்வாணமாகவே என்முன் தோற்றங் கொள்கிறாள். அது கண்டு பரவசம்தான் உண்டாகிறதேயன்றி சபலமோ, இச்சையோ, அதிர்ச்சியோ, அருவருப்போ, காம உணர்வோ ஏற்படுவதில்லை. நிர்வாணம் மிக இயல்பானதாகவும் மகிழத்தக்க எழிலின் தரிசனமாகவுமே உள்ளது.

செளந்தர்ய லஹரியின் முதல் 41 ஸ்லோகங்கள் ஒவ்வொன்றிலும் மந்திர பீஜங்கள் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதி ஆனந்த லஹரி எனப்படுகிறது. இதில் 19-வது ஸ்லோகம் உமையவளின் முக மண்டலம், மார்பகங்கள், யோனி பீடம் ஆகியவற்றைத் தியானிக்கச் சொல்கிறது. தியான பலனையும் சொல்கிறது. இதனை ஆபாசம் என்று கருதுவது பேதைமையும் பக்குவமின்மையுமே ஆகும்.

kids_naked_spongebob_and_patrick_t_shirt_print_500_270_270_76நிர்வாணம் ஆபாசம் என்ற கருத்தாக்கம் ஹிந்துஸ்தானத்திற்கு வெளியிலிருந்து உட்புகுந்த மாற்று மதங்களுடையதே. அதேபோல் உடல் உறவும் ஆபாசம் என்பது அவற்றின் கருத்தாக்கம். ஆகையால்தான் ஒரு ஜீவன் பிறக்கும்போதே பாபச் சுமையுடன் பிறப்பதான கருத்தாக்கமும் தோன்றியது. இவையிரண்டும் நமது மரபுக்குப் புறம்பானவை.

மார்பகங்கள் இருப்பதன் நோக்கம் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவூட்டி வளர்ப்பதற்காக என்பது நம் மரபு. அவை அழகின் நிமித்தம் அல்ல. ஆனால், அழகாக இருப்பவை. ஆனால், உடல் முழுவதுமே அழகுதான். அழகுக்காக மட்டுமே மார்பகங்கள் என்கிற எண்ணம் பிற்கால வணிக நோக்கின் விளைவு. யோனியும் அவ்வாறே. நம் மரபில் இவை அவற்றின் அடிப்படையான நோக்கம் கருதிக் கொண்டாடப்படுபவை, மதிக்கப்படுபவை. இதேபோல் ஆண் உடலில் இனப்பெருக்கத்திற்காக உள்ள உறுப்பும் அதன் காரணமாக மதிக்கப்படுவதாகும்.  

வாத்ஸ்யாயனர் இயற்றிய காமசூத்திரமும் கொக்கோகரின் சாஸ்திரமும் போர்னோகிராஃபி அல்ல.

பிற்காலத்தில் உட்புகுந்த மாற்றுச் சமயங்களது கருத்தாக்கங்களின் பாதிப்பால்தான் நமக்குள் வக்கிர புத்தி தோன்றி, ஆபாசம் என்கிற எண்ணப் போக்கிற்கு ஆளாகிவிட்டிருக்கிறோம்.

காமத்தின் நோக்கம் என்ன? அது மஹாமாயையின் விளையாட்டே அல்லவா?

உயிரினங்களின் சங்கிலித் தொடர் அறுபடாமல் இருப்பதற்காக அவளால் தோற்றுவிக்கப்பட்ட உணர்வே காமம் என்பதில் ஐயம் உண்டா? இனப் பெருக்கப் பணி  வெறும் இயந்திர கதியில் நிகழ்வதாக இருந்தால் காலப் போக்கில் அதில் சலிப்புத்தட்டி அந்தப் பணியில் ஈடுபாடு குன்றி உயிரினங்களின் சங்கிலித்தொடர்கள் அறுபட்டுப் போய்விடும் அல்லவா? அதனால்தான் அதில் அளவுகடந்த ஈடுபாட்டைத் தோற்றுவித்திருக்கிறாள், மஹா மாயை. அந்தப் பணியில் மிகுந்த இன்பம் இருப்பதான உணர்வை அவள் தோற்றுவிப்பதால்தான் அதில் உயிரினங்களுக்குச் சலிப்பு ஏற்படுவ தில்லை.

மற்ற உயிரினங்களின் விஷயத்தில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இனப் பெருக்கத்திற்கான தூண்டுதலை வைத்த மஹா மாயை, மனித இனத்திற்கு மட்டும் பகுத்தறிவைத் தந்து அதற்கேற்ப நடந்துகொள்ளும் வாய்ப்பையும் தந்திருக்கிறாள். மனிதன் அதைத் துஷ்பிரயோகம் செய்தால் அதன் பலனை அவன் அனுபவிக்க வேண்டியதுதான். உயிரினங்கள் பல்கிப் பெருகி சமநிலை கெடலாகாது என்பதற்காகவே பிற உயிரினங்களின் விஷயத்தில் குறிப்பிட்ட பருவ காலத்தில் அந்த உணர்வு பிறக்கச் செய்தாள்.

காமம் என்பதுதான் உடல் மூலமாக உள்ளத்திற்குத் துய்க்கக் கிடைத்துள்ள இன்பங்களிலேயே தலையாயது. ஆனால் அதனைச் சிற்றின்பம் என்று கருதுவதுதான் நமது மரபு. ஏனெனில் பேரின்பம் என ஒன்று உள்ளது. அது ஆன்மிக உணர்வு பெற்று இறைச் சக்தியுடன் கலந்துறவாடுவதாகும். இதில் சரீர சம்பந்தமில்லை.  ஆனால் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும் சிற்றின்பத்தை அனுபவிக்கையில் கிட்டும் ஆனந்தம் உள்ளத்தால் நிரந்தரமாக உணரப்பட்டுக் கொண்டிருப்பதுதான் பேரின்பம். 
 
சரீரத்தை ஒரு கருவியாக மட்டுமே கருதுவது நமது மரபு. பணியாற்றுவதற்காக நமக்குத் தரப்பட்டுள்ள கருவியே நமது உடம்பு. ஒரு தொழிலாளி தனது பணி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு அவசியமான தனது கருவியை மிகவும் ஜாக்கிரதையாகவும் நல்ல முறையிலும் பராமரிப்பது போல நாம் நமது கடமைகளைச் சரிவர ஆற்றும் பொருட்டு நம் உடல் எனும் கருவியை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். திருமந்திரமும் இதைத்தான் அறிவுறுத்துகிறது. உடம்பை ஓம்பாவிடில் உயிரையும் ஓம்ப இயலாது.

புறவய இன்பங்களை உடலும் மனமும்தான் துய்க்கின்றன. அதனைத் தானே அனுபவிப்பதாக ஆத்மா மயக்கமுறுவதால்தான் பிறவிச் சுமை அதன் மீது ஏறுகிறது. பின் தொடரும் நிழலாகக் கரும வினை ஆத்மாவைத் தொடர்கிறது. எப்போது ஆத்மா தன்னை உணர்ந்து, உடலும் உள்ளமும் துய்ப்பவை தனது இல்லை என்பதையும் உணர்ந்து, உடலும் உள்ளமும் துய்ப்பனவற்றை வேடிக்கை பார்க்கிறதோ அப்போது அதன் மீது பிறவிச் சுமை ஏறுவதில்லை.

radhakrishnaஉபநிடதத்திலும் இதற்கான குறிப்பைக் காணலாம். ஒரு மரக் கிளையில் இரு பறவைகள் அருகருகில் அமர்ந்துள்ளன. ஒரு பறவை மரத்தின் பழங்களைத் தின்று கொட்டைகளை எச்ச்மிட்டுக்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள பறவை செயல் ஏதுமின்றி அதனை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் காவியச் சுவையுடன் உபநிடதம் வர்ணிக்கிறது.  

உடலின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் ஒத்துழைத்தாலும் எதுவும் தனது சுய நலனுக்காக அல்ல. இதை ஆத்மாவுக்கு அனுசரணையாகப் பக்குவப்பட்ட உள்ளம் உணர்ந்திருக்குமானால் அதன் செயல், காமத்தின் விளைவாக நிகழும் செயலாகவே இருப்பினும் அது உள்ளத்தையும் உள் அந்தரங்கமான ஆத்மாவையும் பாதிப்பதில்லை. இதனால்தான் போகியை யோகி என்று கூற முடிகிறது.

நமது ஞானாசிரியன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நிகரான போகியும் இல்லை யோகியும் இல்லை. ஏனெனில் அவன் தனது உடலாலும் உள்ளத்தாலும் ஆற்றுகிற எந்தப் பணியையும் தனது சுய நலனுக்காகச் செய்வதில்லை. மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகவும் நன்மைக்காகவுமே அவன் எல்லாப் பணிகளையும் செய்கிறான்.

உடலாலும் உள்ளத்தாலும் துய்க்கும் இன்ப துன்பங்கள் அனைத்தையுமே இறைச் சக்திக்கு அர்ப்பணித்துவிடுவதுதான் ஆன்மிகத்தின் நோக்கம். தற்போது எனது வலது கால் சுண்டு விரலில் கடுமையான வலியை உண்டு பண்ணுகிற பிளவை போன்ற புண் வருத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக நான் மெய்யாகவே என் அம்பாளுக்கு நன்றி சொல்லிகொண்டிருக்கிறேன்.

a_time_cover_0809உனக்கு உடம்பு என்பதாக ஒன்று உள்ளது, கடமையாற்ற ஒரு கருவி வேண்டும் என்பதற்காகவே உடல் என்பதாக ஒன்று உனக்குத் தரப்பட்டுள்ள்ளது என்று நினைவூட்டுவதற்காகவே எனக்கு இப்படி யொரு வலியுடன் கூடிய புண்ணைத் தந்துள்ளாய் அதற்காக என் மனமார்ந்த நன்றி என்று என் குல தெய்வ தேவியிடம் கூறி வருகிறேன். வலி இல்லையேல் உடலின் பிரக்ஞை இல்லாமல் போகிறது.

இந்த அடிப்படையில்தான் உடலாலும் உள்ளத்தாலும் துய்க்கும் இன்பங்களுள் தலையாயதான காமத்தையும் இறைச் சக்தியை உணர்வதற்கான தேடலாகத் தொடர்ந்து,  பின் அந்த இன்பத்தை இறைச் சக்திக்கு அர்ப்பணிக்கவும் வேண்டும். இறைச் சக்தியை உணர்வதற்கான ஆன்மிகத் தேடலாக காமத்தையும் கொள்வது நமது மரபு. ஆனால் இன்று மாற்றுச் சமய, கலாசாரத் தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்ட நிலையில் நாம் இருக்கிறோம்.

ஆகையால், மிகவும் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே காமத்தையும் ஆன்மிகத் தேடலுக்கான மார்க்கமாகக் கருதும் முதிர்ச்சி நமக்கு இருக்கும். நமது முன்னோருக்கு அந்தப் பக்குவம் இருந்தது. சராசரியினரான நமக்கு இல்லை. இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

பக்தியின் உச்ச கட்டத்தில் நாயக நாயகி பாவத்துடன் சில பக்குவப்பட்ட ஜீவாத்மாக்கள் காமத்தை ஆன்மிக விழிப்புடன் கொண்டாடுகின்றன என்பதற்காக நானும் அவ்வாறே செய்கிறேன் என்று கிளம்பினால் அது வெறும் வக்கிர புத்தியாகத்தான் இருக்கும்.

நமது கோயில்களில் சிற்பங்களின் வடிவில் காமம் அனைவரும் பார்க்கும்படியாக உள்ளதே என்று கேட்டால் ஆன்மிகத் தேடலுக்கு இதுவும் ஒரு மார்க்கமாகக் கொள், அது வெறும் சுயநலத்திற்கான சுகமல்ல என்கிற அறிவுறுத்தலாக அதனை எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி வீண் விதண்டா வாதங்களில் இறங்குவது சரியல்ல.

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

sri-lanka-ganesh-temple-mahakumbabhishekam

கும்பாபிஷேக விழா என்பது நினைக்கும் போதெல்லாம் இன்பம் தரவல்லது. கும்பாபிஷேகத்தை அதன் விளக்கங்களை உள்வாங்கி தரிசிப்பது மேலும் இன்பம் தரவல்லது. விரிவான கிரியைகளைக் கொண்டும் பல்வேறு ஆழமான தத்துவங்களின் அடிப்படையிலும் ஆற்றப்பெறும் கும்பாபிஷேகக் கிரியைகளில் மிக ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் ஓரளவேனும் அக்கிரியை முறைகளை அறிந்திருப்பது அவசியம். ஆகவே, மிகச் சுருக்கமாக கும்பாபிஷேகக் கிரியைகளை எம் அறிவிற்கேற்ப விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஆகாயவடிவில் எங்கும் பரந்திருக்கும் இறைவன், வாயுவாகவும் அக்கினியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் அவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும் கல்லிலும் இறைவனை ஆவாஹித்து வழிபடுவதைக் காணலாம். தைத்திரிய உபநிஷத் பஞ்சபூத உருவாக்கம் பற்றி “ஆத்மன ஆகாச’: ஸம்பூ⁴த:, ஆகாசா’த்³ வாயு:, வாயோரக்³நி:, அக்³நேராப: அத்³ப்⁴ய: ப்ருத்²வீ”” என்று அழகாகச் சொல்கிறது. கும்பாபிஷேகக் கிரியைகளிலும் இப்படியான முறைப்படுத்தப்பெற்ற ஒழுங்கை அவதானிக்கலாம். ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று, ‘கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை’ என்று ஞானசம்பந்தப்பெருமான் சொல்வது போல் உரிய வேதாகமப் பிரகாரம் எரியோம்பும் வழிபாடு நடக்கிறது. அங்கிருந்து கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின்அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் ‘ஸ்பரிஸாஹூதி’ என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்ப அபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பரமானந்தமாகிய பரம்பொருளை அர்ச்சக ஸ்வாமியானவர் மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம். இறைவனை ஆவாஹிக்கும் திருவுருவை நமது தேசத்தில் அநேகமாக, நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சபூத சேர்க்கையைத் தெளிவுறக் காட்டும் கருங்கல்லிலும் பஞ்சபூதங்களையும் பிரதியீடு செய்யும் பஞ்சலோகத்திலும் ஆக்குவது வழக்கமாக இருப்பதனை அவதானிக்கலாம். முக்கியமாக பேரரசர்கள் கட்டிய பெருங்கோயில்களில் ஆலயக் கருவறை விமானத்தையே பொன் வேய்ந்த போதும் மூலமூர்த்தியை கற்சிலையாகவே அமைத்துள்ளமையும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.

‘அர்ச்சகஸ்ய ப்ரபா⁴வேன சி’லா ப⁴வதி ச’ங்கர:’– என்று இதனையே காட்டுவர். வெறும் சிலையானது அர்ச்சகரின் மந்திர பாவனை மற்றும் கிரியைகளாலேயே சிவமாக… சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது. எனினும் விரிவான கிரியைகளுடன் கூடிய கும்பாபிஷேகத்தை ஆற்றும் போது பக்திக்கு முதன்மை தரப்பட வேண்டியதும் அவசியம். பக்தியற்ற வெறும் கிரியைகள் உயிரற்ற உடல் போன்றவை. ஆகவே, கும்பாபிஷேகத்தில் ஈடுபடக்கூடிய குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், கோயில்சார் அடியவர்கள், கும்பாபிஷேக விழா ஏற்பாட்டுக் குழுவினர், யாவரும் பக்திமயமாக இவ்வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியமாகும்.

 

நால்வகைப் பேறும் அருளவல்ல கும்பாபிஷேகம்

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தையும் நான்கு வகையாக வகைப்படுத்திப் பேசும்.  ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம் என்பனவே அவை.

ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது அநாவர்த்தனம். முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது ஆவர்த்தனம். ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது அந்தரிதம். இத்தகு கும்பாபிஷேகங்கள் ‘பிராயச்சித்த கும்பாபிஷேகம்’ என்ற பெயரிலே கடந்த கால போரனர்த்தங்களின் போது இலங்கையில் அடிக்கடி நடைபெற்று வந்துள்ளன. பூஜை, உத்ஸவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப்பெறும் கும்பாபிஷேகம் சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம். பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் அறிந்திருக்கக் கூடும்.

பூரணமான மஹாகும்பாபிஷேகம் ஐம்பத்தைந்து கிரியைகளைக் கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இத்தகு பாரிய முயற்சியாகிய கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு (பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும்.

கும்பாபிஷேகத்தை பெரியளவில் பாதுகாப்பு, பிரசார, சுகாதார ஏற்பாடுகளுடனும் செய்வது நல்லது. ஆயினும் இவை கும்பாபிஷேகக் கிரியைகளை குழப்பாததாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விழாக்களுக்கு வருகை தருகிற அரசியற்பிரமுகர்கள் தெய்வகாரியத்திற்கு இடையூறின்றி தரிசனம் செய்து செல்ல முயலவேண்டும். கும்பாபிஷேக நிகழ்வுகளை வர்ணனை செய்வதும் கும்பாபிஷேக மலர் வெளியீடு செய்வதும் கூட வழக்கில் இருந்து வருகிறது.

 

புனரமைப்பின் போது செய்யப்பெறும் பாலஸ்தாபனம்

சைவாகமக் கிரியைகளை காமிகம், காரணம், போன்ற ஆகமங்களின் படி செய்வது வழக்கம். ஆகமக் கிரியைகளைச் சுருக்கி இன்றைய கிரியைநெறி முறைகளை பத்ததிகளாக எழுதியோர் பலர். காஞ்சி காமாக்ஷியம்பாள் ஆலய வழிபாட்டு முறைகள் ‘துர்வாச கல்பம்’ என்ற பத்ததிப்படி ஆற்றப் பெறுகின்றதாம். ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலங்களில் வைகானஸ, பாஞ்சராத்திர ஆகமங்களின்படி சம்பிரோக்ஷண விழா நடைபெறும். இது போலவே சிவாகம வழி நிற்கும் பதினெட்டுப் பத்ததிகள் சொல்லப்படுகின்றன. ஆயினும் இவற்றில் பலவற்றையும் இன்று நாம் காணமுடியாதுள்ளது. கால வெள்ளமும் போற்றுவாரின்மையும் இவற்றைச் சிதைத்திருக்க வெண்டும். எனினும் இன்று தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள சிவாலயங்களில் ஸோமசம்பு சிவாச்சார்யார் பத்ததி, அகோர சிவாச்சார்யார் பத்ததி, ஸத்யோஜாத சிவாச்சார்யார் பத்ததி என்பனவே வழக்கில் உள்ளன.

பத்ததிகளுக்கு இடையில் சிற்சில பேதங்கள் இருப்பினும் யாவும் ஆகமங்களின் வழி எழுதப்பெற்றவையே.. இதே வேளை ஆகமப் பிரதிஷ்டை போலவே வைதீகப் பிரதிஷ்டையும் வழக்கில் உள்ளது. கேரளாவில் இவ்வகை வைதீகப் பிரதிஷ்டையே அதிகளவில் பின்பற்றப்பெறுகிறது. ஆனால் இக்கட்டுரை ஆகமப் பிரதிஷ்டைசார் கும்பாபிஷேகம் பற்றியே எழுதப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ‘இளங்கோயில்’ என்று போற்றப் பெறுவதும் ‘தருணாலயங்கள்’ என்று சொல்லப் பெறுவதும் பாலாலயங்கள் என்று கூறப்படுகின்றன. கும்பாபிஷேகத்திற்கு முன்னர் கோயில் திருப்பணி செய்யப்பெறும் போது சிறிய பாலாலயம் ஒன்று அமைக்கப்பெற்று மூலவரின் நாமம் தாங்கிய பாலமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். சிற்சில இடங்களில் மூலமூர்த்தியையே பெயர்த்து திருப்பணி வேலை நிறைவுறும் வரையில் பாலாலயத்தில் பிரதிஷ்டை பண்ணி வைத்திருப்பதும் வழக்கம்.அங்கே அப்படிப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வதை ‘பாலஸ்தாபன கும்பாபிஷேகம்’ என்று கூறுவர்.

paalasthaabanam

பாலஸ்தாபனம் செய்யப்பெறும்போது மூல பிம்பத்திலிருந்து கும்பத்தில் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து, பின் கும்பத்திலிருந்து பாலபிம்பத்தில் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பெறுவார். இதையே ‘பாலஸ்தாபன கும்பாபிஷேகம்’ என்பர். பாலஸ்தாபன காலத்திற்கு ஏற்ப கத்தி, கண்ணாடி, சித்திரம், பாதுகை, ஆயுதம், மரச்சிலை, கல்லுருவம் ஆகியவற்றை பாலபிம்பமாகப் பயன்படுத்திப் போற்றி வழிபடுவர். நினைத்தவுடன் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்து விட்டு பின்னர் திருப்பணிகள் நடைபெறத் தாமதிக்கின்றனவே என்று கவலை கொள்ளாது முறைப்படி இறைவனிடம் அநுக்ஞை பெற்று திருப்பணிக்கான சகல ஆயத்தங்களையும் செய்துகொண்டு, கோயில் திருப்பணிக்காக ஒரு குழுவையும் நியமித்து, அதனை செவ்வனே இயங்க வழிசெய்து இத்தனையாம் நாளில் கும்பாபிஷேகம் செய்வது (நாலு மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வது) என்று முடிவு செய்துகொண்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்தால், விரைவாகத் திட்டமிட்டு பணிகளை நடாத்தி கும்பாபிஷேகம் செய்ய வாய்ப்பாயிருக்கும்.

நான் அறிந்த வரையில் சில முக்கிய ஆலயங்களில் கும்பாபிஷேக நாளை நிர்ணயம் செய்த பின்னரே பாலஸ்தாபனம் செய்கின்றனர். பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது. ஏனெனில் ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காகவாம்.

 

கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள்

கும்பாபிஷேகத்திற்கு முன்னேற்பாடாக முகூர்த்த நிர்ணயம், ஆசார்ய வரணம் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். முகூர்த்த நிர்ணயம் என்பது கும்பாபிஷேக முகூர்த்தத்தை நிர்ணயிப்பதாகும். மிகவும் கவனமாக ஆராய்ந்து, இத்துறையில் மிக்க அனுபவம் கொண்டவராயும் இறை பக்தி மிக்கவராயும் உள்ள ஜோதிஷர் மூலம் வளர்பிறையினையுடையதாய் இதனை ஆற்ற வேண்டும். இதே போலவே ஆசார்ய வரணம் என்பது கும்பாபிஷேக பிரதான ஆச்சார்யாரைத் தெரிவுசெய்து (வரித்து) அழைத்து வருதலாகும். ஒழுக்கம் மிக்க வாழ்வு கொண்டவராயும் வேதாகம அறிவு மிக்கவராயும் ஆச்சார்ய இலக்கணம் மிக்கவராயும் உள்ள குருவானவரைத் தெரிவுசெய்து, அவரை வணங்கி வேண்டி அழைத்து வர வேண்டும்.

குருக்கள் என்பவர் இறைப்பணியாற்றுபவர். அவருக்குரிய மரியாதையை வழங்க வேண்டியது இந்துக்களின் கடன். பிற சமயிகள் தமது குருமார்களுக்குக் கொடுக்கும் மரியாதையை நம்மவர்கள் கிருகஸ்தர்களாக உள்ள அர்ச்சகர்களுக்குக் கொடுப்பதில்லை என்று பலரும் வருந்துவர். இதற்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கின்றனர். காரணங்கள் என்றும் எதற்கும் இருக்கும். ஆனால் நம் தர்மத்தை செவ்வனே வாழச் செய்ய சிறந்த குருமார்களின் உருவாக்கத்திற்கு பணி செய்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இறைவனே அர்ச்சக வடிவு கொண்டு பூஜை பண்ணியதாக கூறும் பல கதைகள் உள்ளதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.

அடுத்து முதற் கிரியையாக, புண்ணியாகம் செய்யப் பெற்று தூய்மைப் படுத்தும் காரியம் இடம்பெறும். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்துள்ள பிராம்மணர்களிடமும் விக்கினங்களை அழித்து அருளும் விநாயகர், மூலமூர்த்தி, உத்ஸவமூர்த்திகள், அஸ்த்திரதேவர் (ஸ்வாமியின் ப்ரதிநிதியான ஆயுதம்) ஆகியவர்களிடம் வழிபட்டு, கும்பாபிஷேகம் செய்ய ஆதரவும் ஆசியும் அனுமதியும் அருளும் தந்தருளுமாறு பிரார்த்திப்பர். இதனை ‘அனுஜ்ஞை’ என்பர்.

அடுத்து, கும்பாபிஷேக திரவியங்களைச் சுத்திசெய்தல், அவற்றை பாகம் செய்தல் என்பவை நடைபெறும். ஆகமங்கள் கும்பாபிஷேகத் திரவியங்களைப் பதினொரு பங்காக வகுக்க வேண்டும் என்று சொல்வதால் அதனைக் குறிக்கப் பதினொரு நாணயங்களை வைத்து குருக்கள் வகுப்பார்.

எனினும் ஆகமங்கள் மற்றும் பத்ததிகள் கூறுவது போல திரவிய விபாகம் நடைமுறையில் எங்குமே செய்வதுமில்லை. செய்யவும் முடியாது. சம்பிரதாயக் கிரியை நடக்கிறதே அன்றி கால மாற்றமும் செலவுப் பெருக்கமும் உண்மையில் ஆகம முறை திரவிய விபாகத்திற்கு இடந்தருவதாக இல்லை. இதனையடுத்து ஆகமம் கட்டாயப்படுத்தாத இடத்தும் கட்டாயம் செய்ய வேண்டிய கிரியை கணபதி ஹோமம். அனேகமாக ஐந்து குருமார்கள் இணைந்து விநாயகப்பெருமானுக்காக ஹோம வழிபாட்டை ஆற்றுவர். விநாயகர் அகவல், காரியசித்தி மாலை, விநாயகர் அநுபூதி போன்ற தமிழ்ப் பாசுரங்களையும் இவ்வமயம் பாராயணம் செய்தல் சிறப்பு. அடுத்து கிராமசாந்தி, பிரவேசபலி ஆகியன நடைபெறும்.

கிராமசாந்தி என்பது பைரவப்பெருமானை முன்னிட்டுக் கொண்டு காமம், குரோதம் முதலிய அகப் பகைகளை அசுரர், ராட்சசர், பூதர், பிசாசர் என்று உருவகித்து ஆலயமுள்ள கிராமத்திலுள்ள குற்றங்களை நீக்கும் முகமாக நீற்றுப்பூசணிக்காயை வெட்டி பலி கொடுத்து வழிபடுவது இதுவாகும். இலங்கையில் சில ஆலயங்களில் இன்றும் கிராமசாந்தியின் போது பலி மேளம் முழங்க, சேவலின் பூவை வெட்டி ஹோமம் செய்யும் வழக்கம் இருக்கிறது.

பிரவேசபலி என்பதும் கிராமசாந்தி போன்ற கிரியையே. ஆலயத்தைச் சுற்றி எண்திசைகளிலும் இன்னும் பிரம்மஸ்தானம் என்ற இடத்திலுமாக ஒன்பது இடங்களில் (நவசந்திகளில்) பலி கொடுத்த பூஜை செய்வதாகும். இதே போல ராஷஸர்களை அழிக்கும் ரஷோக்னதேவரை முன்னிறுத்திப் போற்றி ரஷோக்ன ஹோமம் செய்வர்.

சிவாஸ்திரம், அகோராஸ்திரம், பிரத்தியங்கிராஸ்திரம், பாசுபதாஸ்திரம் ஆகிய நாற்பெரும் ஆயுதங்களைப் போற்றிச் செய்வதாக திசாஹோமம் செய்வர். இவ்விழாவில் வாய்ப்புண்டாகிற சமயத்தில் சிறப்பாக கோபூஜை, கஜபூஜை ஆகியவற்றையும் செய்யும் வழக்கம் உள்ளது.
சிறப்பு மிக்க கிரியைகள்

அடுத்து வாஸ்து சாந்தி நடைபெறும். வாஸ்து புருஷன் என்பவர், ஒருவராலும் அழிக்க இயலா ஆற்றல் பெற்றவராகக் கருதப்படுகிறார். அவரை அசையாமல் இருக்குமாறு வேண்டி நாகபந்தனம் செய்து அவர் மீது காயத்திரி ஸாவித்திரி ஸமேத பிரம்மா உள்ளிட்ட ஐம்பத்துமூன்று தேவர்களையும் பிரதிஷ்டித்து பூஜை செய்வதே வாஸ்து சாந்தி. (வாஸ்து புருஷன் அசைந்தால் பூகம்பம் உண்டாகும் என்பர்.) இது எந்த ஒரு நற்கருமத்திற்கும் முன்னதாகச் செய்யப்பெறுகின்றது. ஆக, வாஸ்து புருஷனை பிரபஞ்ச சக்தியாக அதாவது இயற்கையாகக் கருதமுடியும்.

இந்நிகழ்விலும் வாஸ்து ஹோமம் உண்டு. கூஷ்மாண்டம் என்ற நீற்றுப்பூசணிக்காய வெட்டி பலி கொடுப்பர். நான்கு முழ அளவில் வைக்கோலால் (தர்ப்பையால்) ஓர் ஆளுருவம் செய்து, அதில் வாஸ்து புருஷனை ஆவாஹித்து, அவ்வுருவின் தலைப்பாத்தில் ஹோம அக்கினியை எரியூட்டி கோயில் முழுவதும் இழுத்து வருவர். பின்னால் சாந்திகும்ப நீர் தெளிக்கப்பெறும்.

கணபதி ஹோமத்தைப் போலவே சிறப்பிற்குரியது நவக்கிரஹமகம் என்ற நவக்கிரஹ ஹோமம். இதன் போது ஞானசம்பந்தப்பெருமான் அருளிய ‘கோளறு பதிகம்’ பாராயணம் செய்வதும் சிறப்பாக அமையும். இதையடுத்து இறைவனின் மூர்த்தி சாந்நித்தியத்தை வலுவூட்டும் முகமாக பதினொரு மந்திரங்களான சம்ஹிதா மந்திர ஹோமம் மற்றும் மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் என்பன இடம்பெறும். இக்கும்பங்கள் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதும் வழக்கு.

இவற்றினைத் தொடர்ந்து நிகழ்வது ம்ருத்சங்கிரஹணம். இது பற்றிய விரிவான விளக்கத்தை ‘கொடியேற்ற விழா எனும் தெய்வீக நிகழ்வு’ என்ற இத்தளத்திலே வெளியான கட்டுரையிலும் காணலாம். ம்ருத் என்றால் மண். சங்கிரகணம் என்றால் சேகரித்தல். ஏந்த ஒரு நற்காரியத்திற்கும் முன்னோடியாக அங்குரார்ப்பணம் செய்வது வழக்கம். அதற்குத் தேவையான மண்ணை மந்திரபூர்வமாகப் பெற்றுக் கொள்ளலே இக்கிரியையாகும். இதன் போது ‘பூ ஸூக்தம்’ ஓதப்பெறும்.

ம்ருத்சங்கிரஹணம் மூலம் பெறப்பெற்ற மந்திரபூர்வமான மண்ணை தலையிற் சுமந்து வந்து யாகசாலையை அடைந்து அதன் வடமேற்கு மூலையில் கிருத்திகா ரோஹிணி தேவியருடனாய அமிர்தேஸ்வரன் என்ற சந்திர பகவானையும் பன்னிரு சூரியரையும் பூஜித்து எடுத்து வந்த மண்ணை நிரப்பி அதில் ‘ஓஷதி ஸூக்தம்’ ஓதி பசும் பாலில் இடப்பட்டிருந்த நவதானியங்களை மண்ணில் விதைப்பர்.

ம்ருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் என்பவற்றை அடுத்து ரஷாபந்தனம் இடம்பெறும். கங்கணம் சாற்றுதல் என்றும் காப்புக்கட்டுதல் என்றும் சொல்லப்பெறும் இந்த ரஷாபந்தனத்தில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் குருமார்கள் அனைவரும் தமது வலது கை மணிக்கட்டில் காப்பணிந்து கொள்வர். காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை (கும்பாபிஷேகம் நிறைவுறும் வரை) செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது.

 

புதிய மூர்த்திகளுக்குச் செய்யப்பெறும் கிரியைகள்

புதிதாக உருவாக்கி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பெறவுள்ள மூர்த்திகளுக்கு நயனோன்மீலனம் போன்ற கிரியைகள் இடம்பெறும். அதாவது கண்திறத்தல், ஜலாதிவாசம் (நீருள் வைத்திருத்தல்), தானியாதி வாசம் (தானியத்துள் வைத்திருத்தல்), சயனாரோஹணம் (தூங்கச் செய்தல்), கிராமப் பிரதட்சணம் (ஊரைச் சுற்றி வலம் வரச் செய்தல்) போன்றவற்றைச் செய்வது வழக்கம்.

 

யாகமும் யாகபூஜைகளும்

yaagasalaiயாகசாலையை ஆலய வீதியுள் (மூன்றாம் வீதியிலேனும்) அமைப்பது சிறப்பு. (பாதுகாப்பும் முக்கியம்.) கிழக்கு, ஈசானமூலை, வாயு மூலையில் அமைப்பதும் சிறப்பு. பூமியை ஒரு முழஆழத்திற்கு வெட்டி, புதுமண் பரப்பி, நடுவே ப்ரதான கும்பம் அமையவுள்ள வேதிகையின் கீழே ரத்னங்களிட்டு, மட்டம் செய்து பூசி, நடுவே, வேதிகையில் பத்மாசனம், கூர்மாசனம் ஆகியவற்றை உருவாக்குவதும் சிறப்பு. பிரதான யாகசாலைக்கேனும் பஞ்சாசன வேதிகை அமைப்பது மேலானதாகும். வசதியில்லாத இடங்களில் ஆலயத்திலுள்ள ஸ்வாமி எழுந்தருளும் சிம்மாசனத்தையே வேதிகையில் வைப்பதுமுண்டு.

 

yaga-saalai

சிவாகமத்தின் படி ருத்ரசூத்ரக்கிரமம், விஷ்ணு சூத்திரக்கிரமம், பிரம்மசூத்திரக்கிரமம், மநுசூத்திரக்கிரமம், ரவிசூத்திரக்கிரமம் என்று ஐவகையான யாக வடிவமைப்புகள் முக்கியமாக உள்ளன. ருத்ரசூத்ரக்கிரமப்படி அதிஉச்சமான 33 குண்டங்களையுடைய மஹாயாகம் அமைப்பர். மற்றையவற்றின் பிரகாரம் 25, 17, 09, 05 என்ற எண்ணிக்கையிலும் குண்டங்கள் அமையும். யாகசாலைகளுக்கு 100, 64, 36, 16 என்ற வகையில் தூண்கள் அமையும். வாழை, தோரணங்களால் யாகாசலை அலங்கரிக்கப்பெறும். 33 குண்டம் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்வது சிறப்பு என்ற எண்ணப்பாங்கு இலங்கையில் பரவி வருகிறது. சிறப்புத்தான் எனினும் அதற்குரிய வசதிகள் இல்லாத இடத்து ஒழுங்கற்ற முறையில் அவ்வாறு செய்வதைக் காட்டிலும் பஞ்சகுண்ட பக்ஷம், அல்லது ஏககுண்ட பக்ஷம் என்பவை மூர்த்திகரத்தை அதிகரிக்க சிறப்பாயமையும். குளிக்கப் போய் சேறு பூசலாகாதல்லவா?

பொதுவாக நவகுண்ட பக்ஷமாக கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். அட்டமூர்த்திகளான ஆகாயம், காற்று, நீர், நிலம், தீ, சூரியன், சந்திரன், ஆத்மாவுடன் மூலமூர்த்தியின் பிரதான குண்டம் ஆக ஒன்பது குண்டங்கள் இதில் அமையும். அநேகமாக பிரதான குண்டத்தை ஈசானத்திற்கும் கிழக்கிற்கும் இடையில் அமைப்பது வழக்கம். வேதிகைக்கு முன் அமைப்பதும் தவறல்ல.

ரக்ஷாபந்தனத்தையடுத்து சூரியனிலிருந்து பூதக்கண்ணாடி மூலம் நெருப்பை பஞ்சில் பெறும் ஸூர்ய காந்தாக்னி ஸங்கிரஹம் இடம்பெறும். இதன்போது பெறப்பெற்ற அக்கினி யாகசாலைக்குக் கொண்டு செல்லப்பெறும். கடஸ்தாபனம் என்ற கிரியை அடுத்து இடம்பெறும்.; வெண்துணியால் வடித்து எடுக்கப்பெறும் கங்கை முதலிய புனித நீர்கள் இதன்போது மந்திரபூர்வமாக பிரதான குடத்தில் சேர்க்கப்பெறும். இதன்பின் கும்பங்கள் அலங்காரம் செய்யப்பெறும். அடுத்து கலாகர்ஷணம் என்ற கிரியை மூலம் மூலபிம்பத்தின் இறைசாந்நித்யம் கும்பத்தில் சேர்க்கப்பெறும். அடுத்து மங்கல வாத்திய கோஷத்துடனும் வேத, திருமுறைப் பாராயணங்களுடன் கும்பங்கள் உரிய யாகசாலைகளுக்கு எடுத்து வரப்பெற்று வேதிகையில் பிரதிஷ்டை செய்யப்பெறும்.

 

இறைவனுக்கு கும்பத்திலும் பிம்பத்திலும் நடக்கும் ஆராதனை

pradhaana-kumbamதொடர்ந்து மிக மிக விரிவாக யாகமண்டபபூஜை இடம்பெற்று பிரதான குண்டத்தில் பிரதான ஆச்சார்யரால் சிவாக்னி ஆவாஹனம் செய்யப்பெறும். தொடர்ந்து அக்னி ஸம்ஸ்காரங்களும் மிக மிக விரிவாகப் பலமணிநேரம் தொடர்ச்சியாக நடைபெறுவது வழக்கம். இவ்வமயம் நடைபெறுகிற கிரியைகள் பற்றி சிவாச்சார்யார் (ஸர்வ ஸாதகாச்சார்யார்) ஒருவர் விளக்கவுரையாற்றி அடியார்களை கிரியையுடன் ஒன்றச் செய்வதும் ஓதுவா மூர்த்திகள் தமிழ் வேதபாராயணத்தில் ஈடுபடுவதும் அவசியம். ச்ருக்ச்ருவம் என்ற நெய்க்கரண்டிகளால் ஸம்ஸ்காரம் செய்யப்பெற்ற நெய்ப் பாத்திரத்திலிருந்து அக்னியில் விசேட ஆஹூதிகள் வழங்கப்பெறும்.

அக்னி ஸம்காரங்களில் சில வைபவங்களுக்கு பாலாக்னியைப் பயன்படுத்துவர். சிலவற்றிற்கு யௌவனாக்னி வரை ஸம்ஸ்காரம் செய்வர். ஆயினும் கும்பாபிஷேக விழாவிற்காக ஏற்படுத்தப் பெறும் மஹாயாக அக்னியில் விவாகம் வரையிலான ஸம்ஸ்காரங்கள் நடைபெறும். விருத்தாக்னி வரை பூஜிக்கப்பெறும். தொடர்ந்து பிரதான குண்ட அக்னியைப் பாகம்செய்து அதிலிருந்து பிற அனைத்துக் குண்டங்களிலும் அக்னி இணைப்புச் செய்யப்பெறும். அனேகமாக கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள் விரிவான முறையில் யாகத்தில் ‘விசேஷ த்ரவிய ஹோமம்’ நடைபெறும்.

பிரதான யாகம் தவிர்ந்த பிற பரிவார மூர்த்திகளின் யாகசாலைகளிலும் இவ்வாறே யாகபூஜை, ஹோமம், விசேஷ த்ரவிய ஹோமம் என்பன நடைபெறும். பல்வேறு குண்டங்களிலும் ஹோமம் செய்த பூர்ணாஹூதி நடைபெற்றபின் ஒவ்வொரு காலமும் சர்வ அக்னியும் பிரதான குண்டத்தில் சேர்ப்பிக்கப்பெறும். யாகசாலையில் பிரதானகும்பமூர்த்திக்கு அபிஷேகம் செய்யுமாறும் விதிக்கப்படுகிறது. இதற்காக அநேகமாக அஸ்திரதேவருக்கும் பிரதான கும்பத்திற்கும் நாடீசந்தானம் (நூலால் தொடுகை) செய்து அபிஷேகம் செய்கிற வழக்கம் உண்டு.

kumbam-installation

deepasthapanam-by-womenகும்பாபிஷேகத்திற்கு இருநாள்களுக்குமுன் சுபவேளையில் கலசஸ்தாபனம் (விமானங்களில், ராஜகோபுரத்தில் கலசம் என்கிற திருமுடிகள் வைக்கப்பெறும்.) மூலஸ்தானத்திலும் பரிவார சந்நிதிகளிலும் சுமங்கலிகளால் தீபஸ்தாபனம் என்பன இடம்பெறுவது வழக்கம். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் ஒரு மண்டலம் சிறப்பாக விசேட அபிஷேக ஆராதனைகளுடன் பூஜிக்கப்பெற்ற அந்தந்த மூர்த்திகளின் மஹோன்னதமான யந்திரங்கள் மூலாலயத்தில் ஸ்தாபிக்கப்பெறும். அன்றைய தினமே சுபவேளையில் பிம்பஸ்தாபனம் இடம்பெறும். அப்போது அஷ்டபந்தனம் என்ற சுக்காங்கல், குங்கிலியம், கொம்பரக்கு, தேன்மெழுகு, காவி, செம்பஞ்சு, எருமை வெண்ணெய், சாதிலிங்கம் என்பவை கலந்து இடித்து உருவாக்கப்பெற்ற அஷ்டபந்தனத்தால் பீடமும் ஸ்வாமி விக்கிரஹமும் இணைக்கப்பெறும்.

ennai-kappuஇவற்றினையடுத்து கும்பாபிஷேகத்திற்கு முதல், முதல் நாள்களில் முக்கிய நிகழ்ச்சியான தைலாப்பியங்கம் என்கிற ‘எண்ணைக் காப்பு’ சாற்றும் வைபவம் இடம்பெறும். இலங்கைத் திருக்கோயில்களில் இந்நிகழ்வின் போது அடியவர்கள் யாவரும் மூலட்டானேஸ்வரர் உள்ளிட்ட எல்லாக் கருங்கல் மூர்த்திகளுக்கும் கருவறை மற்றும் சந்நிதானங்களுள் சென்று தம் கைகளால் எண்ணைக் காப்பிடக் கூடிய பேறுபெறுகிறார்கள். இதனைப் பாக்கியமாகக் கருதி பலமணி நேரங்கள் எந்த ஜாதி, இன பேதமுமின்றி வரிசையில் காத்திருந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். சில முக்கிய ஆலயங்களில் இதனை இரண்டு நாள்கள் செய்வதுமுண்டு. (மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதற்காக) இதே போலவே தென் தமிழகக் கோயில்கள் சிலவற்றிலும் மக்கள் இறைவனைத் தீண்டி எண்ணை சாற்றும் பேற்றைப் பெறுவதாகவும் அறிய முடிகின்றது.

பொதுவாக க்ருத ச்ரோர்ப்பணம், தைலாப்பியங்கம் என்ற இந்நிகழ்ச்சி சகல தமிழக ஆலயங்களிலும் நடைபெறுகின்றது. ஆச்சார்யார் மற்றும் அந்தணர்கள் மட்டுமேனும் இதில் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகத்திற்கு முன் நிகழக்கூடிய இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்வது அனைவருக்கும் திருப்தி தரவல்லதாக இருக்கும் எனலாம்.
ஸ்பர்ஸாஹூதி என்ற மிக உயரிய கிரியை முறை

எண்ணெய்க் காப்பின் பின் பிம்பசுத்தி, தேவாலய சுத்தி செய்யப்பெற்று இறைமூர்த்தங்களுக்கு சந்தனம் சாற்றுவர். எல்லா இறை மூர்த்தங்களுக்கும் காப்பு நாண் சாற்றும் முறையும் உண்டு. அடுத்து கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவுப் பொழுதில் நாடீ சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, தத்வார்ச்சனை ஆகியன இடம்பெறுவது வழக்கம். யாகசாலையிலுள்ள அக்கினி, பிரதானகும்பம், மூர்த்தி என்கிற மூன்றையும் தொடுப்புச் செய்து தர்ப்பைக் கயிறால் இணைத்து இக்கிரியை நடைபெறும். இதன் போது தொட்டு கும்பாபிஷேகம் வரையிலான காலத்தில் மூர்த்தங்களுக்கு வஸ்திரம் சாற்றும் முறை சில தமிழகக் கோயில்களில் இல்லாது இருப்பதால் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பெறுவதில்லை என்று தெரிகிறது. எனினும் இலங்கையில் தேவி மூர்த்தங்களுக்கு சிறிய எளிய வஸ்திரம் சாற்றியிருப்பார்கள். எப்படியாகிலும் பொது மக்கள் இக்கிரியைகளையும் தாராளமாகப் பார்க்கமுடியும். இப்படி ஒவ்வொரு ஆலயங்களிலும் சில வேறுபட்ட சம்பிரதாயங்கள் இருக்கலாம். ஆங்காங்கே சம்பிரதாயங்களை ஏற்று வழிபாடாற்ற வேண்டும்.

ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. பொதுவாகவே கருவறையிலுள்ள இறைமூர்த்தங்களை படம் பிடிப்பதைத் தவிர்ப்பது இறை சாந்நியத்திற்கு குறைவுண்டாகாமல் காக்கும். திருவுருவங்களை கண்டத்திற்கு மேல் ருத்திரபாகம் என்றும் சிவதத்துவம் என்றும் கண்டத்திலிருந்து முழங்கால் வரையான பாகம் விஷ்ணுபாகம் என்றும் வித்யாதத்துவம் என்றும் முழங்காலுக்குக் கீழ் பாதம் வரையில் பிரம்மபாகம் என்றும் ஆத்மதத்துவம் என்றும் பாகம் செய்து தத்வார்ச்சனை செய்வர்.

ஆத்மதத்வாதி⁴பதயே பிரம்மணே ஸ்வாஹா என்று அக்னியில் ஆஹூதி செய்து பிம்பத்தின் பிரம்மபாக சுத்தி செய்து அப்பாகத்தில் பிரம்மனை நிலைபெறச் செய்து பிம்பத்தின் அடிப்பாகத்திலும் ஆச்சார்யார் ஆஹூதி செய்வார்.இதற்கிடையில் மூலமந்திர ஹோமங்கள் விசேட ந்யாசபூர்வ ஆராதனைகள் இடம்பெறும். இது போலவே விஷ்ணுபாகம், ருத்ர பாகம் என்பவற்றிற்கும் அக்னியிலும் பிம்பத்திலும் விரிவான ஆராதனைகளுடன் ஆஹூதிகள் வழங்கப்பெறும். தொடர்ந்து யாகாக்னியில் பிராயச்சித்த ஹோமங்கள் செய்து மூலவருக்கு சாந்தி கும்ப நீரால் அபிஷேகிப்பர். ஸர்வ லோகேஸ்வரனாகிய பகவான் பிம்பத்திலே நிலைபேறாக எழுந்தருளப் பிரார்த்தித்து செய்யப்பெற்ற கிரியைகளில் குற்றமுண்டாகில் மன்னிக்குமாறு ஸ்வாமியின் வலது திருக்காதில் ஆச்சார்யார் பிரார்த்திப்பர்.

 

கோலாகலம் நிறைந்த கும்பாபிஷேக நாள்

mahapoornahudhi

கும்பாபிஷேக நன்நாளன்று அதிகாலையிலேயே (கும்பாபிஷேக முகூர்த்தத்திற்கு சில மணிநேரம் முன்னதாகவே) யாகசாலாபூஜை நடைபெற்று பிராயச்சித்த, மூலமந்திர ஹோமம் செய்து மஹாபூர்ணாஹூதி வழங்குவர். இதே போலவே சகல யாகங்களிலும் பூர்ணாஹூதி நிகழும். பிரதான யாகசாலையில் பூர்ணாஹூதியை அடுத்து அக்னிவடிவாக எழுந்தருளியுள்ள பகவானுக்கு உபசாரங்களை வழங்கி திருப்தி செய்து நிறைவாக சகல அக்னிகளையும் பிரதான அக்னியில் சேர்த்து பிரதான அக்னியிலுள்ள இறைசக்தியை முறைப்படி கும்பத்தில் சேர்ப்பர்.

kalasams-for-kumbabhishekamஅந்தர்பலி, பஹிர்பலி என்பனவும் நிகழ்த்தி பிரதான கும்பமூர்த்திக்கு சோடச உபசாரபூஜை செய்து நால்வேதபாராயணம், தமிழ்வேத பாராயணம், கீத, ந்ருத்ய உபசாரங்கள் போன்றவற்றையும் பிரதான கும்பத்தின் முன்னே செய்து அர்ச்சகர்கள் ஸ்வாமி மற்றும் அம்பாளின் வாஹனங்களாக தம்மைக் கருதி இருக்க பக்திப் பரவசம் பொங்கவும் மங்கல இசை விண்ணைக் கிழிக்கவும் வேதபாராயணம், பஜனை என்பன நடைபெறவும் கும்பங்கள் அர்ச்சகர்களின் சிரசில் எழுந்தருளச் செய்து வீதியுலாவாகக் கொண்டு செல்வர்.

இதன்பின் ராஜகோபுரம், மூலவிமானம், விமானங்களில் ந்யாசபூர்வ அர்ச்சனையுடன் கும்பாபிஷேகம் நடைபெறும். தமிழகத்தில் இதனையே மக்கள் மிகச்சிறப்பாகப் பார்த்து மகிழ்வதுண்டு. அடுத்து வாயிலில் புஷ்பாஞ்சலியுடன் மூலஸ்தானத்திற்கும் பரிவார மூர்த்திகளின் சந்நிதிகளுக்கும் உரிய மஹாகும்பங்கள் கொண்டு செல்லப்பெறும். விசேஷ ந்யாசங்களின் மூலம் ‘.இறைவா, கும்பத்திலிருந்து இருந்து எம் போன்ற ஆன்மகோடிகளுக்கு அருளும் முகமாக இத்திருவுருவத்தில் எழுந்தருள வேண்டும்’ என்கிற பிராத்தனையை பலமுறை விண்ணப்பித்து மூலஸ்தான மூர்த்திக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெறும்.

 

cow-pujaகும்பாபிஷேகத்தின்பின் யாகசாலையில் ஸ்திராஹூதி வழங்கி விசர்ஜனம் செய்வர். இலங்கையிலிருக்கும் வழக்கின்படி கும்பாபிஷேகம் நிறைவுற்றதும் மூலஸ்தான திருக்கதவு சாற்றப்பெறும். முன்னே கோ(பசு)வை நிறுத்திப் பூஜிப்பர். தவிர அஷ்ட மங்கலப் பொருள்களும் திருக்கதவின் முன்வைத்துப் போற்றப்படும்.

‘பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ
மண்ணினால் வலஞ்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்மினே’

என்று உள்ள திருமறைக் காட்டுப் பதிகம் பாராயணம் செய்யப்பெற்று மங்கல வாத்திய முழக்கத்துடன் திருக்கதவு திறக்கப்பெறும். தொடர்ந்து யாவரும் மூலவரை நேரிலும் முன்னே வைக்கப்பெற்ற கண்ணாடியிலும் தரிசனம் செய்வர். ஸ்வாமி முன்றலில் ஸந்நியாசி, பிரம்மசாரி, சுமங்கலிகள், ராஜா, பிராம்மணர்கள் போன்றவர்களை நிற்கச் செய்து இதனை ஆற்றுவர்.

sangabhishekamதொடர்ந்து சண்டஹோமம், ஆச்சார்ய உத்ஸவம், யஜமான உத்ஸவம், மஹாபிஷேகம், மாலையில் திருவீதியுலா தொடர்ந்து மண்டலாபிஷேகம் என்பன நடைபெறும். தமிழகத்தில் மண்டலாபிஷேகம் 15, 30, 45 என்ற கணக்கில் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. இலங்கையில் இது 12, 24, 36, 48 என்கிற கணக்கில் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று சஹஸ்ரசங்காபிஷேகம் செய்து திருக்கல்யாண உத்ஸவமும் செய்வது வழக்கம். (சில இடங்களில் கும்பாபிஷேகமன்று மாலையிலேயே திருக்கல்யாண உத்ஸவம் செய்யும் வழக்கம் உள்ளது.) வைஷ்ணவத் திருத்தலங்களிலும் சிற்சில வேறுபாடுகளுடன் மஹாஸம்ப்ரோக்ஷணம் என்கிற பெயரில் கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது. இதே போலவே காஞ்சி காமாக்ஷியம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திலும் சம்பிரதாய வேறுபாடுகள் உள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் பொதுவாக சிவாகம வழியில் பூஜை நடைபெறும் சிவாலயம், அம்பாள் ஆலயம், முருகன் மற்றும் விநாயகர் போன்ற ஆலயங்களில் கைக்கொள்ளப்பெறும் கும்பாபிஷேக நடைமுறைகளையே இங்கு காட்டியிருக்கிறோம்.

mahakumbabhishekam

கும்பாபிஷேகத்தை தமிழில் ‘பெருஞ்சாந்தி வைபவம்’ என்றும் ‘திருக்குடமுழுக்கு’ என்றும் ‘திருக்குடநன்நீராட்டு விழா’ என்றும் சிலர் எழுதுகிறார்கள். ஆயினும் சில அறிஞர்கள் இச்சொற்கள் ‘கும்பாபிஷேகம்’ என்ற சொல்லிற்கு ஈடாகா என்றும் கருதுவதாக அறிய முடிகிறது. மிக்க ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து பங்காற்றுபவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்று ஆகமங்கள் உறுதி சொல்கின்றன. எனவே ஓரளவேனும் பொருள் தெரிந்து கிரியைகளில் நாமும் இணைந்து இவ்விழாவில் பங்கேற்பது பேருவகை தரவல்லதல்லவா?

தேவி சூக்தம்

ரிக்வேதம் 10.125.

ருத்திரர்களுடன், வசுக்களுடன் சஞ்சரிக்கிறேன் நான்.
ஆதித்யர்களுடன், உலகத் தேவர் அனைவருடனும் உலவுகிறேன்.
வருணனை மித்திரனை
இந்திரனை அக்னியை
இரட்டையர் அசுவினி தேவரை
நான் தாங்குகிறேன்.   (1)

devi_maha_shakti

பொங்கி எழும் சோமனை சுமப்பவள் நான்.
த்வஷ்டாவை, பூஷனை, பகனைத் தாங்குபவள்.
ஆகுதி சொரிந்து சோமரசம் பிழிந்து  வேண்டுவோர்க்கு
செல்வமளிப்பவள்.  (2)

நான் தலைவி
உலகின் வளங்களைத் திரட்டுபவள்
அனைத்தும் அறிந்தவள்
தெய்வ முதல்வி.
பல உருவில் பல வழிகளில் பிரவேசிப்பவள்.
என்னையே தேவர்கள் எங்கணும் நிறுவினர். (3)

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும்
சொல் கேட்பதும் எல்லாம் என்னால்.
அதை அறியார் ஆயினும்
அவர்கள் என் உள் உறைபவரே.
சிரத்தையுடைய அன்பனே
சொல்கிறேன் கேள்.  (4)

இவை எல்லாம் நானே என்று சொல்கிறேன்.
என்னையே போற்றுவர் தேவரும் மனிதரும்.
நான் உக்கிரமாக விரும்புபவனை
பிரம்ம நிலையினன் ஆக்குகிறேன்.
ரிஷியாக, சிறந்த மேதையாக ஆக்குகிறேன். (5)

ருத்திரனின் வில்லை நானே வளைக்கிறேன்.
நன்மையை வெறுப்போரை அம்பெய்து அழிக்கிறேன்.
மக்களுக்காக நானே போர் புரிகிறேன்
மண்ணிலும் விண்ணிலும் நானே புகுந்து நிறைகிறேன். (6)

இதன் உச்சியில் தந்தையாகிய வானம் நான் செய்தது
ஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி
அதனால் உலகில் உயிரெங்கிலும் நிறைந்து நிற்கிறேன்
அதுபோல வானையும் உடலால் தொடுகிறேன். (7)

அனைத்துலகும் உயிர்தரிக்கையில்
நானே மூச்சுக் காற்று.
மேலான பூமிக்கும்  அப்பாலானது
வானத்திற்கும் அப்பாலானது
எனது  மகா மகிமை. (8)

**********

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார்.

சக்தி வழிபாட்டில் இன்றளவும் எல்லா பூஜைகளிலும் முக்கியமாக ஓதப் படும் ஒரு சூக்தம் இது (இன்னொன்று ராத்ரி சூக்தம். அது பற்றி முன்பே இங்கு எழுதியிருக்கிறேன்).

முதல் பாடல் வேத இலக்கியம் கூறும் தேவ வர்க்கம் அனைத்திற்கும் இறைவியாக தேவியைக் காண்கிறது. பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், பன்னிரண்டு ஆதித்தியர்கள், இரட்டையர் அசுனிவி தேவர் ஆகிய முப்பத்து மூவர் அடங்கியது தேவ வர்க்கம்.  அனைத்து விதமான தெய்வீக இயற்கைச் சக்திகளின் குறியீடு இந்த தேவ வர்க்கம்.

இரண்டாம் பாடலில், சோமன் அல்லது சோம ரசம் அழிவில்லாத ஆனந்தத்தைக் குறிக்கிறது. த்வஷ்டா என்பவன் தேவ தச்சனாகிய விசுவகர்மா, உலகத் தொழில்களின் அதிபதி.  பூஷன் (போஷித்து வளர்ப்பவன்), பகன் (ஒளி பொருந்தியவன்) ஆகியவர்கள் சூரிய தேவனின் அம்சமாக உள்ள தேவதைகள்.

mariammanதலைவி, அரசி என்பதற்கான சொல் ராக்ஞீ, ஸம்ராக்ஞீ என்பது. ஆனால் மூன்றாம் பாடல் முதல் அடியில் “அஹம் ராஷ்ட்ரீ” என்றே வருகிறது. “ராஷ்ட்ரீ” என்பது ராஷ்டிரம் (தேசம்) என்பதன் பெண்பால். தேசத்தை ஆளும் தலைவி என்பதோடு, தேசமே ஆனவள் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். ”தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி” என்ற பாரதி பாடலின் மூலவேர் இந்த உருவகத்தில் உள்ளது.

ஏழாவது பாடலில் ’ஆழ்கடலின் உள்ளே நீரில் எனது யோனி’  (மம யோனீரப்ஸ்வா: அந்த ஸமுத்ரே:) என்ற வரி வருகிறது. யோனி என்பதற்கு இவ்விடத்தில் இரண்டு பொருள் கொள்ளலாம்  –  உயிர்களின் பிறப்பு/பிறப்பிடம்  அல்லது  உயிர்களைப் பிறப்பிக்கும் சக்தி, அதாவது படைப்பாற்றல்.  பிரபஞ்ச சிருஷ்டியின் படைப்பாற்றல் ஆழ்கடலின் நீரில் இருந்து வெளிப்பட்டது என்ற  கருத்து அறிவியல் பூர்வமாகவும் பொருந்துவதாக உள்ளது.

எட்டாவது பாடலில் மகா சக்தியின் அப்பாலான தன்மை “பரா” என்ற மந்திரச் சொல்லால் குறிக்கப் படுகிறது.

*************

இந்த சூக்தத்தை அருளிய ரிஷியான “வாக்” என்பவளை “வாக்” (வாக்கு) என்ற தெய்வத்துடன் இணைத்தே காணவேண்டும்.  சொற்களின், மொழியின் அதி தேவதையாக வாக்-தேவி ரிக்வேதத்தில் குறிப்பிடப் படுகிறாள். வேத ரிஷிகள் தங்கள் மெய்யுணர்வின் வெளிப்பாடுகளைக் “கேட்டு” அவற்றையே தங்கள் வாக்காக, மந்திரங்களாக அருளினர்.  அதனால் வேதம் “சுருதி” (கேட்கப் பட்டது) என்று அழைக்கப் படுகிறது.

தேவர்கள் வாக்தேவியைப் பிறப்பித்தனர்
உலகின் எல்லா உயிர்களும், விலங்குகள் உட்பட அவளையே பேசுகின்றன.
வளமும், வீரியமும் பொழியும் பசு அவள்
புகழ்ச்சிகளுடன் கூடி இன்பம் ததும்பும் வாக்தேவி நம்மிடம் வரட்டும்.

என்று ரிக்வேதத்தின் மற்றொரு சூக்தம் (8.100) கூறுகிறது.

பேச்சு மொழியின் உருவாக்கம் மனித மூளையின், அறிவின் பரிணாம வளர்ச்சியில் அடையப் பட்ட மிகப் பெரிய திருப்பு முனையாக பரிணாம அறிவியலில் கருதப்படுகிறது.  மனித இனம் பேச்சு என்ற ஒன்றைக் கண்டு கொண்ட பிறகு தான் அதன் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல் (quantum jump) ஏற்பட்டது. பரிணாமத்தின் எந்தப் புள்ளியில், எந்தக் காரணத்திற்காக, மனித மூளையின் நியூரான் வலைப்பின்னல்கள்  சொல் என்ற, மொழி என்ற மிகச் சிக்கலான, பல அடுக்குகள் கொண்ட ஒரு குறியீட்டு சங்கேதத்தை (meta-representation) உருவாக்கின என்பது  இன்றைய அதி நவீன நரம்பியல், உயிரியல் அறிஞர்களையே அயர வைக்கும்  பெரும் புதிர். இது பற்றி உலகப் புகழ் பெற்ற நரம்பியலாளர் வில்லியனூர் ராமச்சந்திரன் சுவாரஸ்யமாக ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் (The Emerging Mind என்ற நூலில்  Neuroscience – The New Philosophy என்ற கட்டுரை).

பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர் ஹீராக்ளிடஸ் பிரபஞ்ச அறிவை வழிநடத்தும் மூலவாக்காகக் குறிப்பிடும் லோகோஸ் (logos) என்ற தத்துவம் வேத இலக்கியத்தின் ”வாக்” தத்துவத்துடன் நேரடியாகவே ஒப்பிடத் தக்கது. அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகிய கிரேக்க தத்துவ ஞானிகளின் சிந்தனைகளிலும் இந்தக் கருத்தாக்கம் தொடர்ந்தது. பின்னர் கிறிஸ்தவ இறையியலில் “ஆதி இறை வாக்காக” (The Word) திரிந்து உருமாற்றம் பெற்று விட்டது!

”சொல்” என்று பாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘சொல் ஒன்று வேண்டும், தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்’  என்று தொடங்கும் கவிதை. மந்திரச் சொற்களின் தொகுதியான வேதங்களை தெய்வ வடிவாகவே வேத ரிஷிகள் போற்றினர் –

வரமருளும் தேவி, வேதங்களின் தாயே காயத்ரி
பிரம்மத்துடன் கூட்டி வைக்கும் அழிவற்ற இந்தத் துதியை ஏற்று
இங்கே எழுந்தருள்வாய்

(’ஆயாஹி வரதே தேவி’  என்ற ரிக்வேத மந்திரம்)

இந்தக் கருத்தாக்கமே பின்னாளில் கல்வியின், கலைகளின் தேவியாக நாம் வணங்கும் சரஸ்வதி என்ற திருவுருவாகப் பரிணமித்தது.  வாக்தேவியாகிய சரஸ்வதி  அறிஞர்களின், கவிஞர்களின் நாவில் சொற்களாகவே உறைவதாக உருவகம் ஏற்பட்டது.

வாக்கு நான்கு வகைப்பட்டது
மேதைமை கொண்ட பிரம்மஞானிகள் அவற்றை அறிகின்றனர்
அதில் மூன்று மறைபொருளாக ஆழ் அமைதியில் உள்ளது.
மனிதர் நான்காவதையே பேசுகின்றனர்.

என்று ரிக்வேதம் (1.164.45) கூறுகிறது. சாக்த தாந்திரீக மரபில் (Tantra)  இதனை மேலும் நுண்மையாக வளர்த்தெடுத்தனர். மனதில் எண்ணம் உருவாகி அது சொல்லாகப் பரிணமிப்பது பற்றிய ஆழ்ந்த உளவியல் தத்துவம் அது. வாக்கு அல்லது மொழி நான்கு படிநிலைகள் கொண்டது என்று தந்திர சாஸ்திரம் கூறுகிறது. பரா என்பது வாக்கின் ஆதி நிலை. பஷ்யந்தீ, மத்யமா, வைகரீ என்பவை மற்ற நிலைகள்.

parvatiபரா என்பது வாக்கு சக்தியாக உறைந்திருக்கும் நிலை. பஷ்யந்தீ என்பதில் வாக்கு மொழியாக வெளிப்படுவதற்கான எண்ணமாக, இச்சையாக உள்ளது. மத்யமா என்ற நடுநிலையில் சிந்தனை வடிவமாக, சொற்களாக உள்ளது, ஆனால் வெளிப்படவில்லை. வைகரீ என்பது முழுவதுமாக வெளிப்படும் வாக்கு, அதாவது நாம் வாயால் பேசும் பேச்சு.

பரா என்பது மூல ஒலியின் வடிவம்,  மனதின் விதை. அது பிரபஞ்ச மகா சக்தியுடன் ஒன்றுபட்டது; அதனால் “பரா சக்தி” என்று அழைக்கப் படுகிறது. “பரா” என்ற சொல்லுக்கு “அப்பாலான” என்பது பொருள். ஆனால் அப்பால் உள்ள பொருள் என்பதால் வெளிப் புறத்தில் எவ்வளவு தேடினாலும் அதனைக் கண்டு கொள்ள முடியாது. உள்முகமாகத் தேடினால் மட்டுமே அறிய முடியும். அதனால் தான் “பரா ப்ரத்யக் சிதீ ரூபா” என்று லலிதா சகஸ்ரநாமம் கூறுகிறது.  (ப்ரத்யக்  = உள்முகமான பார்வை).  இந்தச் சொல்லடுக்கில் காணும் முரணியக்கம் அபாரமான கவித்துவம் நிரம்பியது.

சங்கீத சாஸ்திரத்தில் இதே தத்துவத்தை “நாதம்” என்ற ஒலியின் நிலைகளாகக் காண்கிறார்கள். நாதம் அடிவயிற்றில் பிறக்கிறது, இதயத்தில் வளர்கிறது, கழுத்துப் பகுதியில் தொண்டையில் உருக் கொள்கிறது, நாவில் இசையாக வெளிவருகிறது.  நாபீ-ஹ்ருத்-கண்ட-ரஸனா  என்று தியாகராஜர் பாடுவார்.   நாபிக் கமலத்தில் இருந்து எழாமல் வெறும் வாயசைப்பில் மட்டும் பாடப் படுவது சங்கீதமல்ல, ஓசை மட்டுமே என்று கூறப் படுகிறது.

தேவி சூக்தம், வேத பண்டிதர் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தியின் குரலில் –

Get this widget | Track details | eSnips Social DNA

(கேட்க மேலே உள்ளதில் Play என்பதை அழுத்தவும்).

இந்தக் கவிதை அத்வைத நிலையில்,  ‘நான்’  என்று தன்மையில் பாடப்பட்டுள்ளது சிறப்பானது.

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கும் முதற்சோதி நான்

என்ற பாரதியின் கவிதையும் இதே வகையிலானது. கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் ஏற்படும் ஆன்மிக பரவச நிலையிலேயே அத்தகைய கவிதை எழுகிறது.  அது காலவெளியையும் கடந்து செல்கிறது.

இதைப் பற்றிச் சிந்திக்கையில் தோன்றும் இன்னொரு ஆச்சரியமூட்டும் விஷயம், மனித மனம் தன்னைத் தான் (self) என்று அறிவதற்கும்,  சொல்/மொழி என்ற உயர் அறிவுக் கருவியை உருவாக்கியதற்கும் பரிணாமவியல் ரீதியாக ஆழமான தொடர்பு உள்ளது என்பது. மேற்குறிப்பிட்ட கட்டுரையில் ஒரு இடத்தில் ராமச்சந்திரன் கூறுகிறார் –

.. the solution to the problem of the self is not straightforward, empirical one. It may instead require a radical shift in perspective, the sort of thing that Einstein did when he rejected the assumption that things can move arbitrarily high velocities. When we finally achieve such a shift in perspective, we maybe in for a big surprise and find that the answer was staring at us all along. I don’t want to sound like a New Age guru, but there are curious parallels between this idea and the Hindu philosophical (albeit somewhat nebulous) view that there is no essential difference between self and others, or that the self is an illusion.

இந்தக் கவிதையின் பெண்ணிய வெளிப்பாடும் கவனிக்கத் தக்கது. எழுதியவர் பெண் என்பதால் மட்டுமல்ல, சிருஷ்டியின் ஆதிகாரணமாக, அனைத்து தெய்வங்களையும் ஆளும் சக்தியாகப் பெண்மையைப் பாடுகிறது என்பதாலும் தான்.

இந்து தாலிபானியம்…? – ஒரு எதிர்வினை

அன்மையில் ஜெயமோகன் அவர்களின் வலைப்பதிவில் படித்த ”எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்” என்று தலைப்பிடப்பட்ட பதிவின் விளைவே இந்தக் கட்டுரை.

ஓவியர் ஹுஸைன் தொடர்பான ஒரு கேள்விக்கான நீண்ட பதிலில் ஹுஸைன் இந்து கடவுள்களை வரைந்திருந்த முறைமையை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அதைக் கண்டிக்கும் செயலை இந்து தாலிபானியம் என்றும் வர்ணித்திருந்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. வழக்கமான இந்து நாத்திகர்களின் பரப்புரை போன்றதென்று நாம் ஜெயமோகனின் கருத்துகளை ஒதுக்கித் தள்ளிவிட இயலாது. இந்திய ஞானமரபில் ஆழ்ந்த நம்பிக்கையுடனான பலசெய்திகளை நமக்காக அவ்வப்போது தந்துகொண்டிருக்கும் அற்புதமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான ஒருவரின் கருத்து கூர்ந்து ஆராயத் தக்கதான ஒன்றாகவே கருதப்பட வேண்டும். ஆனால் இந்த்ப் பதிவு சொல்லும் செய்திகள் உடன்பட முடியாத எண்ண அலைகளைத் தோற்றுவிக்கின்றன.

கேள்வி கேட்ட கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவரை மதவெறியர் என்று அழைத்து, அவர்களின் மனம் எப்போதும் விரிவதில்லை என்ற அவநம்பிக்கையுடன் தன் பதிலை ஆரம்பிக்கிறார்.

இந்துமதத்தின் பன்முகத் தன்மையால் ஏற்பட்ட பல மரபுகளைப் பற்றிக் கூறி அவற்றில் சமீபத்திய ஒன்றாக இந்த ஓவிய முறைமையைச் சிலாகிக்கித்து அதற்கான பல ஆதாரங்களை அடுக்குகிறார்.

// இந்துமதம் என்று நாம் இன்று பொதுவாகக் காணும் படிமங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள்,நம்பிக்கைகள் போன்றவை அனைத்துமே இன்றைய தோற்றத்தை பக்தி இயக்கத்தின்போது உருவாக்கி கொண்டவை. ஆனால் இவை மட்டும் அல்ல இந்து மரபு. பக்தி இயக்கத்தால் வேற்றுப்பொருள் கொள்ளப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட பல ஞான மரபுகள் இந்து மரபில் உண்டு. பக்தி இயக்கத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்ட மரபுகளும் உண்டு. அவை இப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளன……  அதேபோன்றதே தாந்த்ரீக மரபும். இந்தியாவின் தாந்த்ரீக மரபு பக்தி இயக்கத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒன்று. தாந்த்ரீகத்தின் சடங்குகளும் ஆசாரங்களும் சாதாரணமான ஒரு ஆசார இந்துவுக்கு அதிர்ச்சியையும் கசப்பையும் அளிக்கக்கூடும். ……..  இந்து ஞான மரபின் உள்வழிகளில் ஒன்றில் புனிதம் எனப்படுவது இன்னொன்றில் புனிதம் அல்ல. ஒன்றில் அபச்சாரம் எனப்படுவது இன்னொன்றில் ஓர் வழிபாட்டு முறையாகவே இருக்க முடியும் …//

mf_husain_1இந்த அடிப்படையிலேயே ஜெயமோகன் இந்துக்களின் கண்டனங்களை இந்து தாலிபானியம் என்று வர்ணிக்கிறார். இந்து மதத்துக்குள்ளாகவே தோன்றிய சில மரபுகள் பக்தி இயக்கத்தினரால் முற்றாக நிராகரிக்கப்பட்ட செயலையும் இந்து தாலிபானியம் என்றா ஜெயமோகன் கூறுவார்? இந்த ஓவிய முறைமையை இந்து ஞான மரபில் ஒன்றாகக் கருத இயலுமா? இந்து மதத்தினரில் ஒரு பகுதியினர் வெறுத்து ஒதுக்குவதாலாயே இது இன்னொரு இந்து மரபு என்றே கொள்ளப் படவேண்டும் என்ற கருத்தாக்கம் புரிந்துகொள்ள இயலாததாயிருக்கிறது. இந்து ஞான மரபுகள் எத்தனை எத்தனை இருந்தாலும் அவை யாவும் இந்து மதத்துக்குட்பட்ட ஆன்மிகத் தேடலாகத்தானே இருக்க முடியும்? ஹுஸைனின் இந்த ஓவிய முறைமை அத்தகைய ஆன்மிகத் தேடலோ அல்லது வழிபாட்டு முறையோ எனக்கொள்ளும்படிக்கு ஜெயமோகனுக்கு எவ்வாறு தோன்றுகிறது? உருவ ஓவியம் வரைவதையே தடை செய்யப்பட்ட ஒரு மதத்துக்கு உள்ளிருந்துகொண்டு ஹுஸைன் செய்யும் காரியம் அந்த மதத்தில் அவர் வேறு மரபை உருவாக்குகிறார் என்று கருத இடமிருக்கிருக்கிறதே தவிர இந்துமரபில் இன்னொன்றைச் செய்கிறார் என்று கொள்ளுவதற்கில்லை.

மேலும் கூறுகிறார்:

//பாலியல் இந்து மரபில் எக்காலத்திலும் அருவருப்பானதாக, ஆபாசமானதாக, ஏன் மறைக்கப்பட வேண்டியதாக க்கூட கருதப்பட்டதில்லை….. கோயில்களுக்குப் போய் கும்பிடுவதும், சோதிடம் பார்ப்பதும், பரிகாரங்கள் செய்வதும், சடங்குகளைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே அல்ல இந்து மதம். பக்தி நெகிழ்வு மட்டுமல்ல இந்து மதம். பிராமணச்சடங்குகள் மட்டுமல்ல இந்து மதம். அது பலலயிரமாண்டு காலமாக உருவாகிவந்த பலநூறு வழிபாட்டுமுறைகள் பலநூற்றாண்டுக்கால மகத்தான தத்துவ , மெய்ஞான விவாதம் மூலம் தொகுக்கப்பட்டு உருவானது. இதை பன்மையாக அணுகும் நோக்கு மட்டுமே இதை புரிந்துகொள்ள உதவும். இதில் புகுத்தப்படும் ஒற்றைமைய நோக்கு இதை அழிக்கும். இத்தனைநாள் இந்த மூர்க்கம் மூலம் நீங்கள் உருவாக்கிய பேரழிவுகள் போதும், இனியாவது இந்த மரபின் பன்மையை புரிந்துகொள்ள முயலுங்கள். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பன்மை மதமான இந்து மதத்தை வாழவிடுங்கள். இதையும் ஒற்றைப்படையான வழிபாட்டமைபபக ஆக்கி அழித்துவிடாதீர்கள்.//

ardhanareeshwaraகோயில் சிற்பங்களும் ஓவியங்களும் நம் தெய்வங்களை நிர்வாணமாகக் காட்டுவது நமக்குப் புதிதல்ல. அவை வரலாற்றுடனும் காலகட்டங்களின் பழக்க வெளிபாபாடுகளுடனும் கலை நோக்குடனும் பொருத்திப் பார்க்கத்தக்கவை. ஆனால் வியாபார நோக்குடனான அதிர்ச்சி மதிப்பீடுகள் கொண்ட இந்துமதம் சார்ந்த எவ்வித நோக்குமற்ற ஹுஸைனின் இந்துக் கடவுளர் ஓவிய முறைமையை இந்துதெய்வங்களின் சிற்ப முறைமையோடு இணை வைப்பது தகாத செயல். இதைக் கண்டிப்பதன் மூலம் நாம் இன்னொரு பேரழிவைச் செய்வதாகவும் இந்து மதத்தை ஒற்றைப்படையான வழிபாட்டமைப்பாக மாற்றும் முயற்சியை செய்வதாகவும் ஜெயமோகன் நம் மீது சாட்டும் குற்றச்சாட்டு அபாண்டமானதும் அதீதமான கற்பனையுமாகும்.

//அதுவும் பாமர மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அந்த மக்களின் அளவுகோல்களைக் கொண்டு நுண்மையும் விரிவும் கொண்ட இந்து மரபை வரையறுக்கவும் மாறானதை அழிக்கவும் நினைக்கும் செயல் அப்பட்டமான ·பாஸிசம் மட்டுமே.//

நுண்மையும் விரிவும் கொண்ட இந்து மரபாக ஹுஸைனின் இந்துக் கடவுளர் ஓவிய முறைமையை எப்படி கூசாமல் கூற முடிகிறது என்று புரியவிலை. இந்துக்களின் கண்டனங்கள் விக்டோரிய யுகத்து தூய்மைவாத கிறித்தவர்கள் இங்கே கொண்டுவந்த ஒழுக்கவியலை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுவதாக ஜெயமோகன் கூறும் கருத்தும், இதை இந்து தாலிபானியம் என்று அவர் விவரிப்பதும் நாம் ஆபிரகாமிய மதக்காரர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றன. ஆனால் இந்து மதத்தில் காலங்காலமாக பல மரபுகள் தோன்றுவதையும் அவற்றில் சில வேறு சில இந்துக்களால் எதிர்க்க்கப்படுவதையும் இக்கட்டுரையிலே பதிவு செய்த அவர் இங்கு முரண்பட்டு இந்த கண்டனங்களுக்குப் புது நோக்கங்கள் கற்பிக்கிறார்.

இதை இந்து ஞான மரபின் ஒரு புத்தெழுச்சியாகப் பார்த்த ஜெயமோகன் அவரை சிறந்த கலைஞராகவும் சிலாகிக்கிறார்.

//ஹ¤செய்ன். தன் ஓவியங்களில் நவீன ஐரோப்பிய ஓவியங்களின் அழகையும் இந்தியக்கலையின் தனித்தன்மையையும் கலந்து இந்திய ஓவியங்களுக்கு சர்வதேச மரியாதையை உருவாக்கியவர். ஐயமின்றி இந்தியக் கலைமேதைகளில் ஒருவர்//,

என்று அவர் சொல்வதை கலை நோக்கில் சரியென்றே ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கண்டிக்கப்படும் அவரது ஓவியங்களால் அவரை ஒரு பொது நாகரிகமற்றவராகக் கருதவேண்டியிருக்கிறது. பொதுவில் வைக்க இயலாதததும், காணும் ஓர் இந்துமனம் துணுக்குற்றுப் போவதும், காலங்காலமாக வழிபட்ட தெய்வங்களை சிதைத்துச் சீரழித்தது போன்ற உணர்வு ஏற்படுத்துவதும், வணங்க இயலாததும், மற்ற மதத்தினருக்கு நம்மதத்தின் மீது மரியாதை எற்படுத்தாததுமான ஓவியங்களை கங்கணம் கட்டிக் கொண்டு வரைந்து தள்ளுவது நிச்சயம் பொது நாகரிகம் இல்லாத செயல். இந்த ஓவியங்கள் இந்துக்களைப் புண்படுத்தும் என்ற நினைவற்றவராவும் அதை சுட்டிக் காட்டிய பின்பும் உணரயிலாதவராகவும் இருக்கும் ஒரு மனிதர் நிச்சயம் நாகரிகமற்றவர்.

இந்து தெய்வங்களை ஏன் அப்படி வரைகிறார் என்றால் இந்து மதம் அதை அனுமதிக்கிறதென்றும் அவருடைய மதக் கடவுளை ஏன் வரையவில்லை யென்றால் அதற்கு அங்கு அனுமதியில்லை
என்றும் ஜெயமோகன் ஹுஸைனுக்கு பேராதரவு தருகிறார். இவர் சார்ந்திருக்கும் மதம் இந்து மதக் கடவுள்களை இப்படி வரையலாம் என்ற அனுமதியைத் தந்துவிடவில்லை என்பது சர்வ நிச்சயம். அங்கு இருக்கும் சிலவன்முறையாளர்களுக்கு இந்துமத இழிவில் ஆர்வம் இருக்கலாம். அதுவே தலிபானியர்களின் செயல்பாடு.

அதைத்தான் ஹுஸைன் பட்டவ்ர்த்தனமாகவும் விடப்பிடியாகவும் செய்துகொண்டிருக்கிறார். அதேநேரம் இந்துமதம் எந்த மதக் கடவுளரையும் நிர்வாணமாக வரைவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை.

இந்துமதம் தரும் இந்த கட்டற்ற சுதந்திரத்தை ஹுஸைன் மற்ற மதக் கடவுளர்களுக்கு பயன் படுத்தாமல் தன் மதக் கட்டுப்பாட்டுக்கு இணங்கி விடுகிறார். இதற்குத்தான் ஜெயமோகன் தன் அமோக ஆதரவைத் தந்து நியாயப்படுத்துகிறார்.

ஒரு கலைஞனுக்கு கட்டற்ற சுதந்திரத்தை இந்தியாவும் இந்து மதமும் வழங்குகின்றன. ஆனால் இந்து மதத்தினரின் கண்டனத்துக்குள்ளாகும் ஒரு ஓவிய முறைமையை விடாப்பிடியாக செய்தே தீருவேன் என்று செய்பவர் வக்கிர மனத்த்தினர் தரும் மாபெரும் விலைகளுக்காக பொது நாகரிகம் கருதாத, மனித மன மரியாதையற்ற, கலை வியாபாரியாகவே இருக்க வேண்டும். அல்லது தன் மதத்தைக் காயப் படுத்தாமல் இந்து மதத்தினரைக் காயப்படுத்தி, தீவிரவாதிகள் குண்டுகளால் சாதிப்பதை தூரிகையால்
சாதிப்பவராக இருக்க வேண்டும்.

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (2)

கடாமரின் கொள்கைகளை இப்படிப் பயன்படுத்தலாமா என்று ஆட்சேபிக்கிறார் டேவிட் ப்ரீட்ஹோல்ம். கடாமரின் fushion of horizons முறையைப் பின்பற்றித் தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வை ஆய்வு செய்தேன் என்று க்ரைபல் சொல்வது தவறாகும் என்று கூறுகிறார் டேவிட். இது உண்மையில் கடாமரின் முறையைப் புரிந்துகொள்ளாமல் தப்புந்தவறுமாகக் கையாளுவது என்று கூறுகிறார்.

சரி இவர்கள் ஏன் இந்த மாதிரி ஏதாவது கோட்பாடுகளைக் கைக்கொண்டுதான் மகான்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமா? அப்படிப் புரிந்துகொள்ளும் போதும் ஏன் செருப்புக்கு ஏத்தபடி கால் என்று கோட்பாடுகளுக்கு ஏற்றாற்போல் உண்மைகளைத் திரிப்பானேன்? இதற்கு ஒரு விடை இந்த invading the sacred என்ற நூல் தோன்றுவதற்கே மூல காரணராய் இருந்த திரு ராஜிவ் மல்ஹோத்ரா தரும் சக்ரா விளக்கவியல் கோட்பாடு என்பதில் இருக்கிறது.

ராஜீவ் மல்ஹோத்ரா
ராஜீவ் மல்ஹோத்ரா

திரு ராஜிவ் மல்ஹோத்ரா இணயத்தில் ஸுலேகா முதலிய தளங்களில் எழுதி எடுத்த முயற்சிகளே பெரும் தூண்டுகோலாய் இருந்திருக்கிறது இத்தகைய அறிவு ரீதியான சூதுகளை அம்பலாமாக்குவதற்கு. அது மட்டுமன்று அவர் செய்த மற்றொரு நல்ல செயல் இந்த மாதிரிக் கல்விக் கழகங்களில் ஏற்படும் சூழ்ச்சிக் கூட்டாளிகள் எப்படி பாரபட்சமற்ற அறிவு நிரூபண நெறிமுறைகளையும் பலவிதங்களில் ஊடுருவி வெறும் கேலிக்கூத்தாய் ஆக்கிவிட முடிகிறது என்பதையும் வெட்ட வெளிச்சமாக ஆக்கியது. அதுதான் சூழ்ச்சிக்கார ஆய்வாளர்களின் கோபத்தை பெரும் அளவு மல்ஹோத்ரா, அவருடைய கருத்தின் நியாயத்தை இணங்கிய வேறு யாரேனும், அது தங்களுடைய ஆய்வுக்குடும்பத்தைச் சேர்ந்த ஆளாகவே இருந்தாலும் (உதாரணம் அந்தோனியோ து நிக்கோலா) அவர்களுக்கு எதிராகத் தூண்டியது.

ராஜயோகத்தில் ஏழு சக்ரங்களைப் பற்றிக் கூறுவார்கள். முதல் மூன்று சக்ரங்கள் மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம். இந்த சக்ரங்களில் மனது சஞ்சரிக்கும் வரை உலகாயத ரீதியிலான விஷயங்களில்தான் நாட்டம் செல்லும். அந்த விஷயங்களே உண்மை என்ற தீவிர பிடிப்பு இருக்கும். எந்த உயர்ந்த மனநிலைகளையும் எப்படியாவது தம்முடைய நிலைகளுக்கு ஏற்றாற் போல் மாற்றி அர்த்தம் பண்ணிக் கொள்ளத்தான் முனைப்பு இருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதுபோல் நாலாவது சக்ரமாகிய அனாகதத்திற்கு வந்ததும்தான் மனம் ஆன்மிக விஷயங்கள் என்பதையே ஆர்வமுடன் ஈடுபடும். ஆனாலும் வாசனா பலத்தால் மீண்டும் மீண்டும் கீழ் மூன்று சக்ரங்களில் போய் விழும். பிறகு ஐந்தாவதான விசுத்தி, ஆறான ஆக்ஞா ஏழான ஸஹஸ்ராரம் இவையெல்லாம் உறுதியான ஆன்மிக மனநிலைகள். உண்மையின் காட்சி மறைக்கப்படாத சக்ரங்கள்.

மல்ஹோத்ரா கூறுவது பொதுவாக மேலை நாட்டு நாகரிக ஆய்வாளர்கள் இந்தக் கீழ்மூன்று சக்ரங்களில் இருந்துதான் ஆய்வு நடத்துகிறார்கள் என்பது. எனவே அவர்களால் உயர்ந்த சக்ரங்களின் பார்வையில் கருத்துக்களைக் கூற மொழி கையாளப் படும்பொழுது, அந்த மொழி உருவகங்கள் இவற்றிலிருந்து உயர்ந்த நிலைகளுக்கான உட்செறிவுகள் புரிந்துகொள்ளப் படாமலே போய் வேறும் மொழியின் மேல் கூடுகளாய் இருக்கும் அம்சஙகள் மட்டுமே, உருவகங்களின் அடிமட்டமான கட்டுமானங்களே நிதர்சனங்களாகக் கைக்கொள்ளப் படுகின்றன.

உதாரணமாக ஆணும் பெண்ணும் மணம் புரிதல், உடலுறவு கொண்டு மக்களைப் பெறுதல் என்பது மனித வாழ்வின் புறவயமான யதார்த்தம். மனித உயிராய் இருக்கும் எதுவும் எதார்த்தமாக இந்தப் பிணைப்பில் குடும்பமாக ஆகி சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. உலக அடிப்படை உண்மைகளை தத்வார்த்தங்களை உணர்த்த வரும் ஆன்மிகம் பிரபஞ்சத்தின் அடிப்படை சத்யமும் அதன் இயங்கு திறனும் ஒரே தத்துவத்தின் இரு காட்சிகளாய்ப் பிரிக்க முடியாதவை என்று கூறவந்தால் என்ன செய்யும்? ஏற்கனவே மனிதனின் அன்றாட அனுபவத்தில் இருக்கும் ஆண்பெண் கூட்டுறவு என்ற புழங்குகருத்தைப் பயன்படுத்தி, தான் சொல்ல வரும் தத்வார்த்தத்தை விளக்க முயலும்.

பிரபஞ்ச காரணமான சத்யமும், அதன் இயங்கு திறனும் ஆண்பெண் இணைந்த ஒரு கூட்டுறவான குடும்பம். இதன்றி அது இல்லை. பழங்காலத்தில் வேறு எப்படியும் பொது மககளுக்குப் புரிய வைக்கவும் முடியாது. அன்றாடமான அடிமட்டமான உறவுகளையும், நெருக்கங்களையும் வைத்துத்தான் மிக உன்னதமான தத்வார்த்தமான ஒன்றிப்புகளையும் கூறமுடியும், அதுவும் அந்தக் காலத்தில். அப்படி தத்வங்களை பொதுமக்கள் பாஷையில் கூற வந்தவைதான் புராணங்கள்.

பல கதைகள். இதில் மக்கள் குழுக்களில் வழிவழியாக வரும் யதார்த்தமான வரலாறுகளும், கதைகளும், உருவகங்களும் ஏற்கனவே இருந்துகொண்டே இருப்பன. புராணப் படுத்துதல் என்பது எப்பொழுது ஆரம்பிக்கிறது? எப்பொழுது உயர்ந்த ஆன்மிகக் கருத்துகள் பெரும்பான்மையான மக்களால் புரிந்துகொள்ளப்படும் விதத்தில் மொழியாட்சி, உருவக ஏற்றம் என்பதற்கு உட்படுத்தப் படுகிறதோ அப்பொழுதுதான். இந்தக் கூறுகள் எல்லாம் நம் ஆன்மிகப் பண்பாட்டில் படிந்து பழகிய மனங்களுக்கு இயல்பாகப் புரிந்துகொள்ளப்படும் மொழியாடல்களாக இருக்கின்றன.

காரணம் உயர்ந்த சக்ரங்களுக்கான பார்வைகளின் ஒரு முன்னூட்டம் நமக்குப் பிறப்பின் காரணமாகவே இந்த மண்ணில் பண்பாட்டு அம்சமாக ஊட்டப்பட்டு விடுகிறது நம்மை அறியாமலேயே. எனவேதான் தெய்வங்களுக்கு இடையில் நடைபெறும் உறவுகளுக்கு நாம் என்றும் யதர்த்தமான பொருள் love_games_of_radha_and_krishna_wp08கொள்வதில்லை. அதைத் தத்வார்த்தமானது என்று நம் மனமே தனிப்பட பிரித்துப் பார்க்கிறது. அது ஏதோ தத்வ ரீதியான கருத்து ஒன்றைக் கூறவந்த மொழி உருவக வடிவே என்று நாம் அறிஞராய் இருந்தாலும் சரி பாமரனாய் இருந்தாலும் சரி பாரத குடிமகன் ஒவ்வொருவர் புரிதலிலும் இந்த முதிர்ச்சியான புரிந்துகொள்ளுதல் ஊறிப்போயிருக்கிறது. ஒரு சமயத்தில் நாமே இவற்றைப்பற்றிக் கொச்சையாகக் கேள்வி கேட்டுப் பார்த்தாலும் உள்மனத்தில் நமக்கு ஓர் எண்ணம் இருக்கவே செய்கிறது. இவை புறப்பொருள் ரீதியான நிகழ்வுகள் அல்ல என்று. என்ன அறிவு ஜீவிகளாய் இருக்கும் நம்மில் சிலர் என்ன சொல்வோம்? ஏன் தத்வங்களை உள்ளபடி சொல்லிவிடக் கூடாதா? எதற்கு இந்த மாதிரியான விபரீதக் கற்பனைகளும் உருவகங்களும்.? இன்று பரவியுள்ள பொதுக் கல்வியின் தாக்கத்தை வைத்து நாம் அன்றைய ஆக்கங்களுக்கு விமரிசனம் செய்ய முயல்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆனாலும் நாம் யாராயினும் எல்லோருமே அன்றாட வாழ்வில் எந்த ஒழுங்கீனங்களையும், பாலியல் ரீதியிலான வக்ரங்களையும் ஒரு போதும் ஒப்புவதில்லை. பொது இடத்தில் உறவுமுறைகளின் கௌரவம் இப்படித்தான் பேணப்பட வேண்டும் என்பதில் நாம் மேலை நாடுகளைவிட கறாரான சமுதாயமே. என்றும் புராண உருவகங்களையும் நடைமுறை வாழ்க்கையையும் போட்டு ஒரு நாளும் யாரும் குழப்பிக் கொள்வதில்லை.

நமது பொது மக்கள் ரீதியிலான இந்த முதிர்ச்சியான மனநிலையும் இல்லாமலேதான் செமித்திய மதப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த மேலைநாட்டு ஆய்வாளர்கள் புராணக் கருத்துக்களையும் உருவகங்களையும் அப்படி அப்படியே கொச்சையாக அர்த்தம் கொண்டு, அதுவும் போதாதென்று மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் கணக்காய்ப் பொருந்தாத உருவகங்களையெல்லாம் வலுக்கட்டாயமாக வலிந்து பொருத்தித் தாமே பல புனைவுகளில் ஈடுபடுகின்றனர். தத்வார்த்தங்கள் எல்லாம் அடிமட்டமான கருத்துக்களை மூடிமறைக்கச் செய்யும் சால்ஜாப்பே என்பது அவர்களுடைய முன்முடிவு நம்பிக்கையாகும்.

ஹிந்து மதக் கருத்துக்கள் அறிவியலும் கண்டு வியந்து உவக்கும் தத்துவச்செறிவு கொண்டவை என்பது விவேகாநந்தரில் தொடங்கி உலகம் எங்கணும் பரவலாகச் சென்றடைந்த ஆன்மிக விளக்கம் என்பது வரலாறு. அந்த வரலற்றை எப்படியாவது இல்லையாக்கிவிட வேண்டும் என்று சிலக் கூட்டங்கள் முயற்சி செய்வது போல் இருக்கிறது இந்த மாதிரியான சூழ்ச்சிகளும், சொதப்பல்களும்.

ஒரு காலத்தில் ‘நாம்–அவர்கள்’ என்ற பிணக்கு ஆய்வுத்துறையிலும், இலக்கிய ஆக்கங்களிலும் கடும் உளைச்சல் கொடுத்துவந்ததை ஆய்ந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர் எட்வேர்ட் செயித் போன்றவர்கள். இலக்கியங்களே இந்த ‘உள்ளே வெளியே’ சூதாட்டத்திற்கு இரையான கொடுமையை தமது ‘ஓரியண்டாலிஸம்’ (Orientalism) என்ற நூலிலும், ‘கல்சர் அண்ட் இம்பீரியாலிஸம்’ (Culture and Imperialism) என்ற நூலிலும் விளக்கமாக ஆராய்ந்திருக்கிறார் செயித் என்னும் அராபிய கிறித்தவராகப் பிறந்து அமெரிக்கா சென்று குடியேறி பேராசியராகப் பணிபுரிந்தவர். இந்த ‘நாம் — அவர்கள்’ என்ற பிணக்கு இன்று அமெரிக்கச் சூழ்நிலையில் சில பல்கலைக் கழக வளாகங்களிலேயே வெண்டி டொனீகர் போன்றவர்களின் செயலால் இன்னும் வக்ர முகம் அடைந்திருக்கிறது என்பதை இன்வேடிங் த சேக்ரட் நூலில் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதலில் மல்ஹோத்ராவின் Wendy’s Child Syndrome என்ற விளக்கக் கருவி மிக முக்கியமானது. இந்த WCS என்பதின் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்த்தால் விஷய்ம் நன்கு சுவை படுகிறது.

1) மேலை நாட்டுப் பெண்கள் தங்கள் பாரம்பரியச் சூழலில் தங்களுக்கான இடம் மிகவும் அலட்சியக்கப்பட்ட ஒன்றாய் இருப்பதை உணர்ந்தார்கள். ஆனால் அதுவே ஹிந்து மதப் பண்பாட்டின் குடை நிழலில் ஒதுங்கின பாரம்பரியக் காட்சிகளில் பெண் என்பவளுக்கு, நன்கு முக்கியப் படுத்தப்பட்ட, கவனம் மிக்க இடம் தானாகவே அமைந்திருக்கக் கண்டார்கள். அதனால் முதலில் மிக ஆர்வத்துடனும் மதிப்புடனும் தங்கள் ஆய்வுகளை நடத்தியவர்கள் சிறிது காலத்தின் பிறகு தங்களுடைய உள்ளார்ந்த வாசனைகள் தலைதூக்கவும், ஹிந்துமதச் செழுமைகளை மெதுவாக தங்கள் பண்பாட்டுப் பெண் புனிதங்களின் மீது சுமத்தித் தங்கள் கையோங்கலை ஸ்தாபித்துக்கொள்ளத் தொடங்கி விட்டனர். ஹிந்துமதப் பெண்களின் ஆளுமைச் சித்திரத்தையும் தங்களின் உள்நோக்கங்களுக்குத் தகுந்தவாறு வரையறுக்கத் தொடங்கினர். தலைப்பொட்டு, சேலை, குனிந்த தலை நிமிராமை, கல்லானாலும் கணவன், தியாகச் சித்திரம் என்பன போன்ற கருத்துப்படங்கள் மட்டுமே ஹிந்துப் பெண்களுக்கான ஆமோதிக்கப்பட்ட வரையறை. யதார்த்தமான வாழும் மரபின் பெண்களின் காலத்திற்கேற்ற வளர்ச்சி என்பது இந்த அச்சடித்த உள்நோக்கம் மிகுந்த வலியுறுத்தும் வரையறையின் புறமான விபரீதம் என்று தீர்ப்புணர்த்தும் ஒரு அபிப்ப்ராயச் சூழலை பரவவிட்டனர்.

(இந்தச் சித்திரத்தில் பல அம்சங்கள் நாமே ஏற்கனவே பெண்ணின் விழுமியங்களாகப் பேணும் கருத்துக்கள்தானே என்று தோன்றும். ஆனால் நமது வாழும் மரபில் காலத்தோடு ஒட்டி வளர்கின்ற வளர்ச்சிக்கும் ஒரு சாத்தியத் திறவு கூடவே இருக்கிறது. நாம் சீதையை மட்டும் ஹிந்துப் பெண்ணின் சித்திரத்தில் காண்பதில்லை. நமது பார்வை ஸர்வதோமுகமானது. சீதையை வணங்கும் அதே நேரத்தில் திரௌபதியையும் நாம் கற்புக்கரசியாய்ப் பார்க்கிறோம். விழுந்த பழம் ஒட்டிக்கொள்வது ஒரு பெண் தன் மனத்தைத் திறந்து சொல்லத் தரப்படும் வாய்ப்பில், அஞ்சாது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறாள், அந்த அச்சமின்மையை சுற்றியிருக்கும் சமூகம் இயல்பாக எடுத்துக்கொள்கிறது என்றும் பார்க்கிறோம். அதே நேரத்தில் கலயாணமாகாத பெண் தன் வரனைத் தானே தீர்மானிப்பது மட்டுமன்று, அவன் தலைவிதியையும் தான் மாற்றி எழுத முடியும் என்பதை நிறுவுகிறாள் என்ற விழுமியத்தை சாவித்திரியிடம் பார்க்கிறோம்.

அநசூயையின் சித்திரம் ஒருபக்கம். அகல்யாவின் சித்திரம், நளாயினியின் சித்திரம், கண்ணகியின் சித்திரம், இந்திரனின் மகன் ஜயந்தனின் சம்பந்தமான கதைப் பின்னணியுடன் தரப்படும் மாதவி மணிமேகலை சித்திரம் ஒருபக்கம். தான் பெறாத குழந்தைக்கு முலை சுரந்த பெருந்தாயான யசோதை, தான் ஈன்ற மகவுகளைக் கங்கைக்கு இரையாக்கிய ஊர்வசி, புருஷகார பூதை என்று ஸ்ரீவைஷ்ணவச் சான்றோர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீமஹாலக்ஷ்மி, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் யோகநித்ரா என்று கொண்டாடப்படும் சண்டிகா, ரஜபுத்ரப் பெண்ணரசிகள், கணவனுக்குச் சமமாக அரியணை வீற்று அரசில் பங்கெடுத்த சோழ, சேர, பாண்டிய குல அரசிகள் — நமது பெண்மையைப் பற்றிய சித்திரஙக்ள் எண்ணத்தொலையாத முகங்களை உடையன. வரையறைக்கு இறாய்க்கும் இந்த பன்முக விழுமியப்பாட்டைப் புரிந்துகொள்வது சற்று கடினம். அதுவும் காலக் கோளாறுகளால் சில காலமாய் நாம் பெண்மைக்கு நமது மரபிற்கும் ஒவ்வாத முறையில் இழைத்திருக்கும் அநீதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் புரிந்துகொள்வது இன்னும் சற்றுக் கடினம். கருத்துகளின் நுணுக்கப் பெருக்கம், காலத்தின் கொடுமை, இதை எதையுமே உணராத நம்மில் பலரின் அறியாமை இவைதான் இந்த மேலைநாட்டுப் பொறுப்பற்ற சிலரின் விஷமங்களுக்கு ஊக்கமளிக்கிற அடித்தளம்.)

வெண்டிக் கூட்டம் என்று சொல்லத்தக்கவர்கள், அதிலும் பெண்கள் இந்த மாதிரியான ஹிந்துவின் பெண்மையைப் பற்றிய விழுமியச் செறிவைத் தங்கள் உள்நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதாவது தங்கள் சொந்த இனத்தில் தங்களுக்கு மறுக்கப்பட்ட வேட்கைகளையும், இஷ்டப்படியான சுயசரிதப் போக்குகளையும் ஹிந்துக் கடவுட் பெண்களின் மீதும், தேவியரின் மீதும் சுமத்தி அதற்குத் தகுந்தாற்போல் விளக்கம் கூற முற்படுகின்றனர். பல விழுமியங்கள் ஒன்றுக்கொன்று உள்தாங்கும் ஒரு மரபிலிருந்து ஒற்றைப்பட்டையை உருவி எடுத்து தங்கள் கற்பனைகளையும், தீரா வேட்கைகளையும் அதற்குள் புகுத்தி, பின்னர் அதுதான் மூல மரபிலும் இருக்கிறது, அவ்வாறு இல்லாது போனாலும் தங்கள் திரிபு வேலைக்கேற்பத்தான் மூல பாடங்களையே அர்த்தம் செய்யவேண்டும் என்ற போக்கு இது WCS என்பதில் ஒரு பிரதான அம்சம்.

2) WCS இல் இரண்டாவதாக, மேலைநாட்டு முறைசாராப் பாலியல் உறவு வகைகளான ஓரின முயக்கங்கள் பொது சமுதாயத்தில் தங்களுக்கு ஒரு வித கௌரவத்தையும், செல்வாக்கையும் சம்பாதித்துக்கொள்ள ஹிந்து மத விழுமியப் பெருக்கத்தின் செறிவு மிக்க தொன்மங்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் நோக்கத்திற்கு ஏற்ப மற்றொரு பண்பாட்டு அமைப்பில் கிளர்ந்த சில சோதனா முயற்சிகளைத் தங்களுக்கான சான்று தரும் சாய்வுரைகளாகப் பயன்படுத்த முயன்றனர். விளைவு விபரீதம்தான். (தம்முடைய அருட்செல்வத்தைப் பயன்கொள்ளத் தகுந்த சீடர்கள் வருவார்கள் என்று தமக்குக் காட்டப்பட்டும் இன்னும் அந்தக் குழந்தைகள் வரவில்லையே என்று தக்ஷிணேஸ்வரத்துத் அருட்புனல் கதறிய உருக்கம், இந்த அபத்தங்களின் நோக்கத்திற்கு ஏற்றாற்போல் ‘சின்னப் பையன்களிடம் கவர்ச்சி’யான விபரீதம் ஒன்று போதுமே உதாரணத்திற்கு).

3)அடுத்து அப்ரஹாமிய மதச் சூழலில் ஆண்டவனுக்கும், சாத்தானுக்கும் இருக்கும் நிரந்தரப் பிணக்கம், ‘நம்மவர்’ – ‘மற்றவர்’ என்ற சமன்பாட்டின் தலையில் ஏற்றப்பட்டு ’நாம்’ அல்லாத ’மற்றவர்கள்’ சாத்தானைப்போலவே கருதப் பட வேண்டியவர்கள் என்ற மனப்போக்கு அடைந்த விபரீதம்.

‘வெண்டிக் கொடுக்குகளின் விடம்பனம்’ என்று மொழிபெயர்க்கத் தக்க Wendy’s Child Syndrome என்பதின் முக்கிய அம்சங்களை மேலே கண்டவாறு இதுகாறும் விளக்கினோம். இனி இந்த வெ.கொ.வி யின் தாத்பர்யங்களாகச் சிலவற்றை மல்ஹோத்ரா அவர்கள் பட்டியல் இடுகிறார்கள். அவற்றையும் ஒரு சொடுக்குப் பார்வை பார்த்துவிட்டு ’நாம்–மற்றவர்’ என்பதின் அமெரிக்க பிராண்டு வக்ரம் என்ன என்பதைப் பார்க்க இருக்கிறோம் இனி.

WCS -Wendy’s Child Syndrome என்ற வார்த்தையை எப்படி மல்ஹோத்ரா கையாளுகிறார்? ஜெப்ரி க்ரைபல் Kali’s Child என்று நூல் எழுதினாரா? சரி இப்படி எழுதுகின்ற இவர்கள் மூலம் இயக்கும் கருத்துச் சூழ்நிலை யாருடையது? அந்த நபருடைய ஊக்கம், தாக்கம் இவற்றால்தானே இந்தக் கல்விப்பரம்பரை இப்படி அலங்கோல ஆய்வுகளில் ஈடுபடுகிறது. எனவே இதுவே ஒருவித உளவியல் சூன்யம் போல்தானே செயல்படுகிறது. அதன் பாதிப்பில் வந்தவர்கள் எல்லாம் ஒரே அபஸ்வரமாகப் பாடிக்கொண்டு. இந்தத் திருப்பித் திருப்பி உந்தித் தள்ளும் பழக்கச் சுழலை syndrome என்றால் இது வெண்டிக்கொடுக்கு syndrome அல்லவா? (கொடுக்கு — மகன்). இவ்வாறு ஒருவித கேலியாகத்தான் மல்ஹோத்ரா இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் அது மிகவும் குறிப்புணர்த்தும் பெயராகவும் மாறிவிட்டது.

இந்த WCS இன் தாத்பர்யங்களாக மல்ஹோத்ரா குறிப்பிடுபவை:

1) இந்த ஆய்வாளர்கள் பலபேருக்கு ஒரு மரபின் உள்ளாழங்களை அதன் நளினம் அறிந்து பயன் கொள்ளத்தக்க பண்பாட்டுச் சூழலைப்பற்றிய அறிவோ, பிரதேச மொழியறிவோ, மொழியாளுமையில் பண்பாட்டுக் கூறுகள் நடத்தும் செறிவான பொருள் தரங்கள் பற்றிய சாதாரண தெரிவோ எதுவுமே இருப்பதில்லை. எனவே அவர்களால் அந்தப் பிரதேச மொழியினராகிய அறிஞர்களின் விளக்கத்தை மிஞ்சுகிற அளவிற்கு யோசிக்கமுடிவதில்லை. ஆனால் அவ்வாறு தாங்கள் எடுத்த எடுப்பிலேயே மிஞ்சிப் போய்விடுவதாக மனப்பால் குடிக்கின்றனர்.

2) ஒரு மரபைச் சார்ந்த உள் தேசிகர்கள் இவர்களின் கலந்துரையாடலிலும், விவாதங்களிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப் படுவதில்லை. காரணம் பயம். கட்டி எழுப்பப்படும் கோணல்
சித்திரங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்படும் வாய்ப்பு அதிகம் அன்றோ! அப்படியே உள்ளே அனுமதித்தாலும் அவர்களுக்கான அந்தஸ்து ’விவரம் தெரிவிக்கும் ஊரான்’ என்பதே ஆகும்.

3) துறை சார்ந்த கருவிச் சொற்கள் கர்ம சிரத்தையாகத் தாறுமாறாக மொழிபெயர்க்கப்பட்டு, அலட்சியமான விதங்களில் கையாளப்பட்டு, எல்லா சொற்களும் கூடியவரையில் அவற்றின் அடிமட்டமான பொருளிலேயே வலுக்கட்டாயமாகப் பொருத்திவைக்கப் படுகின்றன.

chakra_chart

4) ஹிந்து மத நூல்களைப் படிக்குமிடத்து வேண்டுமென்றே யோக சக்ரங்களில் கீழ் மூன்று சக்ரங்களான மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் இவற்றின் மூலமாகவே நூல் கருத்துகள் அணுகப்படுகின்றன. இதன் காரணம் மேல் சக்ரங்கள் மூலம் அணுகினால் நூல்களின் உள்ளார்ந்த உயர்வும், சிறப்பும் புலனாகி மாணவர்களுக்கு ஹிந்து மத நூல்களைப்பற்றிய ஈர்ப்பும் ஆர்வமும் மிக்குயர்ந்து விடுமே என்ற கவலை.

5) ஆய்வாளர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் நூல் பகுதிகளைக் கத்திரித்து ஒட்டவைத்து, தற்கால எண்ணங்களை ஊடே கலசி ஒப்பேத்துவதில், ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாய் இருக்கின்றார்கள் என்பது.

6) இவர்கள் ஆய்வுகளை மறுக்கும் ஆதாரங்களை இவர்கள் காண மறுத்துவிடுவர். ஹிந்து மரபுக்குள்ளிருந்து வரும் மாற்றுக் கருத்துக்களை கவனிக்காமல் நிராகரித்தல், அல்லது கவனித்தே தொலைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் எதிர்ப்பவர்களை வசை பாடுவது.

7) ஆய்வாளர் ஒரு தலைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அப்புறம் அந்தத் தலைப்பே அவருடைய தனிப்பட்ட சொத்தாக உருவகிக்கப் படுகிறது.

இதைப்போன்ற அம்சங்களை இந்த WCS எனபதின் நடைமுறைத் தாக்கங்களாகக் காட்டுகிறார் ராஜிவ் மல்ஹோத்ரா.

இதைத்தவிர அமெரிக்காவில் குடியேற்ற காலங்களில் குடியேற வந்த ஐரோப்பியர்களுக்கும், அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கும் இடையே பயமும், அந்நியத்தன்மையும், வெறுப்பும், பகையும், போரும் இருந்தன. அமெரிக்கர்களால் காட்டுமிராண்டிகள் நாகரிகம் அற்றவ்ர்கள்,
நாகரிகமான தங்கள் வாழ்விற்கு ஊறு விளைப்பவர்கள் என்று கருதப்பட்டனர் பூர்வ குடிகள். நாம் – அவர்கள் என்பது நாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்குமான சமன்பாடாக ஆகிவிட்டது. அமெரிக்கர்களின் இன்றைய மனத்தின் உள்ளும் ஊன்றிப்போயிருக்கும் மனோபாவம் இந்த ஆதிகால குடியேறிகள் – பூர்வகுடிகள் என்பவரிடையே நடந்த வெறுப்பும், போரும், பிணக்கமுமேயாம். இந்த ஆய்வாளர்களும் தங்களை எதிர்ப்பவர்களை அது என்னதான் அறிவு பூர்வமான தளமாக இருந்தாலும் அதெல்லாம் கவலையே இன்றி தயங்காது அந்த சரித்திர வயமான தங்கள் சமுதாய குடியேற்றப் பிரச்சனை சமன்பாட்டிலேயே வைத்துக் காண்கின்றனர்.

எனவேதான் ஹிந்துமதக் கோட்பாடுகளில் தாங்கள் உள்புகுந்தால் அது உடனேயே நாகரிகமிகுந்த தங்களுக்கான முன்னுரிமைப் பிரதேசமாக ஆகிவிடுகிறது இந்த ஆய்வாளருக்கு. எதிர்க்கும் ஹிந்துக்கள் அந்த பூர்வ குடிகளின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப் படுகின்றனர். உடனேயே சக ஆய்வாளருக்கு விசில் ஊதப் படுகிறது. நாகரிக உலகிற்கே கேடு என்பதுபோல் பதட்டங்கள் பரப்பப் படுகின்றன. இந்தக் கருத்துப்புலத்தைச் சார்ந்த (அவர்கள் கண்ணோட்டத்தில்) பூர்வ குடிகளையும் அவர்களுக்கான பிராந்தியத்திற்குள் கட்டுப்படுத்தி வைக்கும் ஆத்திரமும் தொனிக்க ஆரம்பித்துவிடுகிறது.

(தொடரும்…)