மீன்டும் வாலாட்டும் சீனா

எவ்வித அறிவிப்பும் இல்லாமல், சீன அதிபர் ஜீ ஜின்பிங் திபெத்திற்கு விஜயம் செய்துள்ளார்.  30 ஆண்டுகளுக்கு பின்னர்   இந்த விஜயம் நடந்துள்ளது.  1990-ல்  Jiang Zermin க்கு பின்னர் எந்த ஒரு சீன அதிபரும் திபெத்திற்கு விஜயம் செய்ததில்லை.    ஜி ஜின்பிங் பயணம் குறித்து முன் கூட்டியே அறிவிக்கப்படவில்லை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   சீன அதிபரின் விஜயம் உலகின் பல நாடுகளின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.  அதாவது கொரோனா தொற்று பற்றிய ஆய்வை மீன்டும் நடத்த சீனா ஒப்புதல் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம்  விடுத்த அழைபுக்கு பின்னர் நடந்த செயலாகும்.    

Some people are able to stay up until the early hours at night, some people are able to stay up late when there is nothing better to do, and some people just don’t have the energy to sleep. Las ventas de http://davepowers.com/product/the-x-t-shirt/ éstas en américa latina y el caribe se han incrementado en los últimos meses de manera espectacular. You are working a full time job, you need to take care of your health.

When you take it you will feel a little dizzy and lightheaded but you will not need to stay in bed or. So much for the theory that the only way to prevent cancer is not to single-mindedly take a daily pill. It will not leave any empty spaces in the bowl, making it perfect for large serving dishes and large mixing bowls.

The side effects are very rare and include nausea, breast tenderness, vaginal bleeding, and headaches. The plasma Zacatepec loratadine 10 mg prescription level of topamax, which varies from about 50 ng/ml to about 1,000 ng/ml, is. However, some insurance companies may charge a higher co-pay if the insurance plan has an “essential health benefits” plan that includes the drug.

             2011 ஆம் ஆண்டில் ஜி ஜின்பிங் சீனாவின் துணைத் தலைவராக  இருந்த போது திபெத்துக்கு  விஜயம் செய்திருந்தார்,  அப்போது சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் (XUAR) தனது நன்பரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சென் குவாங்குவோ திபெத்தில் கட்சித் தலைவராக இருந்தார்.   இவரின் விஜயத்தை முன்னிட்டு   ஜீலை 21 ந் தேதியே திபெத்தின் லாசா நகரில் நடந்து கொண்டிருந்த   கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.     நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் குளிர்கால இல்லமும்,  லாசாவின் சின்னமான பொட்டாலா அரண்மனையும்  மூடப்பட்டது,   பெரும்பாலான தொழிற்சாலைகளும்  மூடப்பட்டன.   1951 ஆம் ஆண்டில்  17 ஷரத்துகளுடன் கையெழுத்திட்ட உடன்படிக்யைின்  70 வது ஆண்டு விழாவாகும்.    இந்த உடன்படிக்கை  திபெத்தின் மீது  சீனாவால் கட்டாயப்படுத்தப்பட்டு,  நாட்டின் கட்டுப்பாட்டை தன் கைக்கு பிடுங்கப்பட்ட  ஒரு ஒப்பந்தமாகும்,  இது ஏற்கனவே திபெத் நாட்டின் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சீனாவால், மேலும் இராணுவ நடவடிக்கைகளின் அச்சுறுத்தலில் மொத்த  திபெத்தும் கொண்டு வரப்பட்டது.     சீன ஜனாதிபதியின் திபெத்துக்கான விஜயம், இந்தியாவின் சீனாவுடனான எல்லையில் பதட்டங்களை ஏற்படுத்துவதற்கு ஜி ஜின்பிங் முன்னுரிமை அளிக்கிறது என்பதை இந்தியாவுக்கு சமிக்ஞை செய்யும் நோக்கில்  இந்த விஜயம்  இருந்திருக்கலாம் என வெள்ளிக்கிழமை ஆர்.எஃப்.ஏ. நேர்காணல்களில் இந்தியாவை தளமாகக் கொண்ட பிராந்திய வல்லுநர்கள்   தெரிவித்தார்கள்.  

             மேற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan )  மாகாணத்துடன்  திபெத்தை இணைப்பதற்காக கட்டப்பட்ட ஒரு உயரமான  ரயில்வே  பாதையின் வழியாக  ரயிலில் ஜி ஜின்பின் பயணம் செய்தார்.    கட்டுமான பணியின் தரத்தை சோதிப்பதற்காக பயணித்தார் என கூறப்பட்டது.    ஏனென்றால் இந்த ரயில் பாதைகளை நிர்மாணிப்பதில் உண்மையில் என்ன நடந்தது என்பது [சிச்சுவான் தலைநகர்] உள்ளூர் இராணுவ பிராந்தியத்தின் தலைமையகமான செங்டுவிலிருந்து லாசாவுக்கான தூரம் வெறும் 13 மணி நேரமாக குறைந்துள்ளது, ” என துருவேவ் கடோச் ( Dhruv Katoch , former Director at New Delhi’s Centre for Land and Warfare Studies ) கூறினார்.   அருணாசல பிரதேசத்தின் எல்லையிலிருந்து வெறும் 15 கி.மீ. தூரம் கொண்டது செங்டு  என்பதும்   இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைய கூடும்  என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  என்றார்.  மேலும்  இது சீனாவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான துருப்புக்களை திபெத் பிராந்தியத்திற்கு போர்  ஏற்பட்டால் நகர்த்தும் திறனை அளிக்கிறது” என்றும் அவர் கூறினார்.     “கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களின் உண்மையைப் பார்க்கும்போது, ​​ஜனாதிபதி அதைச் சரிபார்க்கவே வந்தார் என்று நான் நினைக்கிறேன்,” என்று கடோச் கூறினார். 

                 திருவாளர் ஜீ ஜின்பிங் இறங்கிய இடம்  அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள நைங்கி  (Nyingachi  )  பகுதியாகும்.  ஏற்கனவே  அருணாசல பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வரும் இச் சூழ்நிலையில்  சீன அதிபரின் விஜயம் பலரின் கேள்விக்கு பதில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.  வழக்கம் போல்  சீன அதிபரின் விஜயத்தை இரு தினங்கள் கழித்து  சீனாவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் , பாரம்பரிய உடைகளை அணிந்த திபெத்தியர்கள் சீன கொடியுடன் ஜின்பிங்கை வரவேற்பதை காட்டினார்கள்..  சிகப்பு கம்பளத்துடன் அவர் வழி அனுப்பி வைக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டார்கள். 

                இலங்கையின் ஏழ்மையை பயன்படுத்தி  தென் இந்தியாவில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபடும் சீனா , தற்போது அருணாச்சல பிரதேச எல்லையில்  சீன அதிபர் ஆய்வு செய்தது பல்வேறு யூகங்களையும் எழுப்பியுள்ளது.  பிரமபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட இருக்கும்  மிகப் பெரிய ஆணைக்கட்டின்   இடத்தை ஆய்வு செய்ததாகவும்,  நியாங் பாலத்தை பார்வையிட்டதாகவும்,  யர்லுங் ஜாங்போ நதி மற்றும் அதன் துணை நியாங் நதியின் படுகையில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆய்வும் செய்தார் என சீனாவின் சின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் அதிகாரபூர்வ செய்திகள் வெளியிட்டுள்ளது..  உண்மையில்  அருணாசல பிரதேசத்தை தாக்குதல் நடத்தினால்  கள நிலவரம் எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காகவே வந்ததாகவும்   மற்றொரு செய்தி கூறுகிறது.  பூகோள ரீதியாக அருணாசல பிரதேசம்  சீனாவின்  தாக்குதலுக்கு உகந்த இடம் கிடையாது என்பதும்,   இந்தியாவிற்கே சாதகமான பகுதி என்றும் ராணுவ ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.   1962 யுத்தத்திற்கு பின்  சீனா லடாக் பகுதியில் ஆக்கிரமித்த இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை,  மாறாக  அருணாசல பிரதேசத்தில் ஊடுருவிய இடங்களை விட்டு கொடுத்தது என்பதையும் கவனிக்க வேண்டும். 

                சீன வரலாற்றில் முதன் முறையாக ”அமைதியான வழியில் திபெத் சீனாவுடன் இணைந்த ” 70 வது ஆண்டு தினத்தை  அருணாசல பிரதேச எல்லையில் கொண்டாடபட்டது  உலக அரங்கில் சீன ராணுவத்தை நிறுத்தி திபெத் அபகரிக்கப்பட்டது என்ற உண்மையை மறைக்க நடந்த விழாவாக பார்க்க முடிகிறது.  இந்த கொண்டாடத்தில் கலந்து கொள்வதற்காகவே ஜி ஜின்பிங் விஜயம் செய்தார் என்றும் கூறப்பட்டது.   இதை விட கொடுமையான நிகழ்வு லாசாவில் உள்ள தலாய் லாமாவின் இருப்பிடத்திற்கும் சென்றுள்ளார்.   தலாய் லாமாவை அங்கீகரிக்காமல், ஒரு பொம்மையை உட்கார வைத்துள்ள சீனா  அங்கு விஜயம் செய்தது மற்றவர்களை ஏமாற்ற நடத்திய நாடகமாகும்.

                இது தவிர இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்கள் எல்லை என்று சீன பல ஆண்டுகளாக கூறி வருகிறது.   சீனாவின் தெற்கு திபெத் என அருணாசல பிரதேசத்தை தங்களது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.   தொடர்ந்து பல ஆண்டுகளாகவே  அருணாசல பிரதேசத்தின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் சீனா சந்தர்பம் கிடைத்தால் ஆக்கிரமிப்பு செய்ய கூட தயங்காது.   இந்நிலையில்   சீனா அருணாசல பிரததேசத்தின் எல்லையில்  உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து பலப்படுத்தும் செயலை செய்து வருகிறது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில்  திபெத்தின் தலைநகர் லாசாவிலிருந்து நைங்கி வரை 490 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் சேவையை தொடங்கியிருகிறது.   இந்த வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளதால்,  ஏற்கனவே உள்ள பதற்றத்தை  மேலும் அதிகமாக்கவே  இது வழி வகுக்கிறது.

                சீனா அருணாசல பிரதேசத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  வெளிப் பார்வைக்கு  திபெத்தின் வளர்ச்சிக்காக   பல்வேறு  உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதாக காட்டிக் கொண்டாலும்,  அந்த பணிகளின் உள்நோக்கம்  ராணுவத்தை  இந்தியாவின் எல்லையில் கொண்டு வருவதற்குறிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  திபெத் மற்றும் சின்ஜியாங்கிடையே  அதி வேகமாக மேற்கொள்ளப்படும்  மாற்றங்கள்.  உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் படி திபெத்துக்கான ஐந்து சூப்பர் ஹைவேக்கள்,  ரயில்வே, தளவாட உள்கட்டமைப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. சியோகாங் எல்லையில் பாதுகாப்பும்,  அக் கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.   ,  இந்திய விமானப் படைக்கு இருந்த நன்மைகளை மாற்றுவதற்கான முயற்சியில் திபெத் – சின்ஜியாங்கில்  விமான நடவடிக்கைளை மேற்கொள்வதில் சீனா முனுப்பு காட்டுகிறது.  

                காஷ்கர், ஹோடன், நகரி-குன்சா, டிங்ரி, டாம்கங், நைங்கி, தாஷ்கோர்கன் மற்றும் லாசா ஆகிய விமான நிலையங்கள்  புதிய தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வருகிறது.   இத்துடன்  ஆளில்லா வான்வழி வாகனங்கள் ( )  நிலத்தடி சுரங்கங்கள் , கடினப்படுத்தப்பட்ட விமான முகாம்கள், மற்றும் குண்டு வெடிப்பு பேனாக்கள், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்குகள்,  மற்றும் விமான ஓடுபாதைகள் புதுப்பிக்கப்பட்டு  வருகிறது.  திபெத் மற்றும் ஜின்ஜியாங்கில்  எஸ்.400 ஏ.டீ. அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளி வந்துள்ளன.   இது மட்டுமில்லாமல்  மேற்படி விமான தளங்களுக்குள்  வான் பாதுகாப்பு  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.   இது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் செயலாகவே  பார்க்கப்படுகிறது.  இயற்கையாகவே  சந்தேகம் எழும்,  சீனாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில்  குறிப்பிடதக்க எண்ணிக்கையிலான பாதுகாப்பு பணிகள் ஏன் கட்டப்படவில்லை.    தரைவழி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால யுத்தத்தின் புதிய களங்கள் தெளிவான கருத்துருவாக்கத்தை உருவாக்கியுள்ளது.  மேலும்   இந்தியப் படைகளும்  களநிலவத்தின் அடிப்படையில்  சாலைகள், சுரங்கங்கள்,  வாழ்விடங்கள், நிலத்தடி சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளின் உள்கட்டமைப்பு  வளர்ச்சியை கடந்த சில ஆண்டுகளாகவே    முடுக்கிவிட்டன என்பதை சீனா நன்கறிந்துள்ளது.

              2017லிருந்து சீனா டோக்லாம் பகுதியில் தனது ராணுவத்தை நிறுத்தியது மட்டுமில்லாமல், சாலைகள் அமைப்பதிலும் முனைப்பு காட்டியது.   முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அறிக்கை மட்டுமே விட்டு விட்டு பேச்சு வார்த்தையை நடத்தியது போல், மோடி  அரசும் நடந்து கொள்ளும் என நினைத்த சீனாவிற்கு இந்தியாவின் செயல்பாடு ஆச்சிரியத்தை கொடுத்தது மட்டுமில்லாமல்,  தனது போக்கை மறு ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டது.  ஏன் என்றால்  2019 ஆகஸ்ட் மாதம் சுமார் இரண்டு மாதங்கள் இந்திய ராணுவம் விட்டுக் கொடுக்காமல் போருக்கும் தயாராக இருப்பதாக காட்டிக் கொண்டது.    இதன் பின்னரே  சீனா தனது ராணுவத்தை பின்வாங்க வைத்தது.   டோக்லாம்   இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமான மையமாகும்.   குறிப்பாக விமான படைக்கு முக்கியமான கேந்திரமாகும்.   டோக்லாம் பூடானுக்கு சொந்தமானது என்றாலும்,  அதை பாதுகாக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உண்டு.  டோக்லாம் பீடபூமிக்கு அருகில்  இந்தியாவின் விமானப்படை தளம் அமைந்துள்ளது.   இந்த விமான தனம்  முதலில் போக்குவரத்துக்கு என திட்டமிட்டாலும், பின்னர்  தங்களது சு.30 எம்.கே.ஐ. போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.  இந்த விமான தளத்துக்கு உதவியாக சிலிகுரியில் உள்ள பாக்தோக்ரா மற்றும் ஹாசிமா விமான தளம்  உள்ளது .   இதுவே  சீனாவின் பின்வாங்குதலுக்கு காரணமாக அமைந்தது.  ஆகவே  தான் சீனா தனது குள்ள நரி தந்திரத்தை மாற்றும் விதமாக 19வது காங்கிரஸ் தீர்மானம் அமைந்துள்ளது.

                சீனாவின் குள்ளநரித் தந்திரம்  2014லிருந்து மாறுபட்ட கோணத்தில் அதன் அனுகுமுறை உருவாகியுள்ளது.   தங்களது 19 வது காங்கிரஸ் தீர்மானங்களை செயல்படுத்துவதால் ,  அதன் சர்வதேச உறவுகளின் அடிப்படையில்,  அது தெற்காசியாவை பெரிதும் பாதிக்கிறது என்பது தெரிந்தும் செயல்படுகிறது.     சீனாவின் தெற்காசிய கொள்கை என்பது மிகவும் மோசமான செயல்திட்டத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.  சீனா உருவாக்கியுள்ள திட்டங்களை  மூன்று தீமைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்   ஆய்வாளர்கள்.   பிரிவினைவாதம் ( separatism ),  தீவிரவாதம் (extremism )  ,  பிளவுபடுத்தும் வாதம் (separatism ),   இம் மூன்றுக்கும்  சீனா கொடுத்துள்ள  குறியீட்டு  வார்த்தை,  திபெத், உய்கார், ஹாங்காங் என்பதாகும்.   இதன் அடிப்படையில் தான் திபெத்தின் சினோசிசேஷன்  என்ற பெயரில்  உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது   திபெத் சின்ஜியாங் பங்கு இத் திட்டத்திற்கு  முக்கியமானதாக சீனா கருதுவதற்கு ,  இந்த இரு பகுதியின் எல்லைகள்  மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் மற்றும் இந்தியா ஆகியவற்றின் எல்லைகள் அமைந்துள்ளன.   இந்தியாவை தவிர மற்ற நாடுகளுடன்  நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள இந்த திட்டம்  சீனாவிற்கு  கை கொடுக்கும் என சீனா அரசு கருதுகிறது.  இந்தியாவுடனான உறவுக்கு பண்டைய 36 உத்திகளை பயன்படுத்த முற்படுகிறது.  அதாவது பெரியவர்களை தோற்கடிக்க சிறியவர்களுடன் ஒத்துழைக்கின்றன  என்ற கோட்பாட்டின் படி , இந்தியாவை வீழ்த்த சிறிய நாடுகளான  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியான்மரை் நாடுகளுடன் உறவை மேம்படுத்த, நிதி உதவி என்ற போர்வையில்  தனது குள்ளநரித் தந்நதிரத்தை பயன்படுத்துகிறது.  அதன் ஒரு அங்கம் தான்  திபெத் விஜயமாகும்.  

                இது பற்றி  Fox News,க்கு  Republican Congressman Devin Nunes said: ” I believe, that a Chinese dictator had been to Tibet, and also threatening India, over a billion people and also a nuclear power; threatening India that he’s going to build a big water project, possibly cut off water to India.”   என குறிப்பிட்டுள்ளார்.  ஆகவே சீனாவின் குள்ளநரித் தனம் மீன்டும் தலை தூக்குகிறது.     

இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்

china021962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள  லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள்  அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும்  அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். .  நட்பு என்ற முறையில் இந்திய சீன உறவுகள் என்றைக்குமே சுமூகமாக இருந்த்தில்லை. சீனாவுடன் அவ்வப்போது மோதல் போக்கு நீடிக்கின்றது, இதற்கு முக்கிய காரணம் இந்திய சீன எல்லைப் பிரச்சினையில் ஓர் உடன்பாடு ஏற்படாததால், இந்த மோதல் போக்கு நீடிக்கிறது.

 

இந்திய சீன எல்லைகள்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள எல்லைக் கோட்டின் அளவு 4,056 கி.மீ. தூரம் கொண்ட பகுதியாகும்.  இந்த பகுதி மூன்று விதமாக பிரித்து பார்த்து நிலைமையை காணலாம்.  கிழக்கு பகுதி, மத்திய பகுதி, மேற்கு பகுதி,  இதில் கிழக்கு பகுதி என்பது சிக்கிம் முதல் பர்மா வரை உள்ள எல்லைப் பகுதியாகும்.  1890ல் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம்  எல்லைக் கோடு நிர்ணயக்கப்பட்டது.  இது        1914-இல் வரையறுத்த எல்லைக் கோடு. காஷ்மீரிலிருந்து இன்றைய மியன்மர் வரை உள்ள எல்லைக்கோடே இந்திய அரசின் சட்ட  பூர்வ இந்திய- சீன எல்லைக் கோடு.   இந்த எல்லைக் கோட்டிற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல், இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றைய கால கட்டத்தில் சீனாவின் மேலாண்மை மோசமாக இருந்ததின் காரணமாகவும், திபெத் சுதந்திர நாடாக இருந்ததால், ஆங்கில அரசாங்கம் திபெத்தின் ஆட்சியாளர்கள் மூலமாக உடன்படிக்கையில் கையெழுத்து பெற்றுக் கொண்டது.  இதுதான் மெக்மோகன் எல்லைக் கோடாகும் (MaMohan line  ) மேற்கு பகுதியானது  அக்சாய்சின் பகுதியிலிருந்து லடாக்கின் மேற்கு பகுதியான  Lanka La, Niagzu stream, Demchok,  Teshigong வழியாக   Emis  கணவாய் வரை எல்லைப் பகுதி வரையரைக்கப்பட்டது.  இந்த பகுதி முழுவதும் லடாக் அரசரால் ஆட்சி செய்யப்பட்டது.  திபெத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அக்சாய்சின் பகுதி சீனாவிடம் இருக்க வேண்டும் என்ற காரணத்தால், சீனா 38,000 ச.கி.லோ மீட்டா அளவு கொண்ட அக்சாய்சின் பகுதிக்கு உரிமை

china01

கொண்டாடுகிறது.  மத்திய பகுதியானது ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (Spiti ) முதல் ஷிப்கிலா (Shipkila ) கணவாய் வரை உள்ள பகுதியாகும்.  உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்வால் பகுதியும், சட்லஜ் கங்கா நீர் நிலைகள் கொண்ட பகுதி இந்தியாவின் பாரம்பரியம் கொண்ட பகுதியாகும்.  இந்தப பகுதியிலிருந்து 1,300 கி.மீ. தூரம் உரிமை கொண்டாடுகிறது.

1962-ல் நடந்த சண்டைக்கு பின் சீனா சட்டவிரோமாக அருணாசல பிரதேசத்தில் 20,000 ச.கி.மீ இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட லடாக் பகுதியில் 38,000 ச.கி.மீ  பரப்பளவு கொண்ட அக்சியாசின் பகுதியையும், 1963-ல் பாகிஸ்தான் சீனாவிற்கு தானமாக கொடுத்த 5,180 ச.கி.மீ தூரத்தையம் ஆக்கிரமித்துக் கொண்டது.  இவ்வாறு சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டது மட்டுமில்லாமல் இந்த பகுதிகளுக்கு உரிமை கொண்டாடுவதுடன், கிழக்கு பகுதிக்கும் மத்திய பகுதிக்கும் தடையில்லா போக்குவரத்தை உருவாக்கவும், திபெத்தின் உரிமையை நிலைநாட்டவும், கண்கானிக்கவும் மேற்படி சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட பகுதி சீனாவிற்கு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தியாவும், சீனாவும் பல முறை நடத்திய பேச்சு வார்த்தைகளில் மத்திய பகுதியின் எல்லைகளைப் பற்றியே நடந்த்தே தவிர கிழக்கு , மேற்கு பகுதியின் எல்லைகளைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடத்த படவில்லை.

சீனா இந்த எல்லைக்  கோட்டை அங்கீகரிக்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டாலும்,   1914 முதல் 1947 வரை சீனாவின் எந்த அரசும், எல்லைப் பிரச்சினையை எடுக்கவில்லை. 1954 வரையும் கூட சீன எல்லைப் பிரச்சினையை எங்கேயும் எழுப்பவில்லை என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். 1954 மற்றும் 1956-ல் இந்திய பிரதமர் நேருவும், சீன அதிபரும் நடத்திய பேச்சு வார்த்தைகளில், சீனா தரப்பில் வெளியிட்ட பல்வேறு விதமான கருத்துக்களை புறக்கனிக்கும் விதமாக  கூறிய வார்த்தையை கவனிக்க வேண்டும்,  “ Chinese maps not as representive Peiping’s “Claim”  என்பதாகும்.  ஆனால் எல்லைப் பிரச்சினையை மையப்படுத்தியே 1962-ல் இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்த்து.   1986-ல் இந்திய பாராளுமன்றத்தில் அருணாசல பிரதேச மசோதா கொண்டு வந்த போது கூட, சீனா பிரச்சினையை எழுப்பவில்லை.  1954-ல் இந்தியா திபெத் பகுதி சீனாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொண்ட போது கூட, சீன அதிபர் சூயென் லாய், எல்லைப் பிரச்சினையை எழுப்பவில்லை.  1954ல் நடந்த மாநாட்டில் கூட சீனா மெக்மோகன் கோடு பற்றிய எல்லைப் பிரச்சினையை எழுப்பவில்லை. 1960-ம் வருடம் ஏப்ரல் மாதம் சீனாவின் அதிபர் சூயென் லாய் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.  அப்போது  துர்க்கா தாஸ் என்பவர் பின்வருமாறு எழுதினார்  “Nehru was anxious  to get China to accept the McMahon Line as the Northern boundary of NEFA and Chou was willing to do so.”

china21959ம் வருடம் மார்ச்சு மாதம் 10ந் தேதி திபெத்தில் சீனாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது, ஏப்ரல் மாதம் 18ந் தேதி சீனாவை எதிர்த்து தலாய் லாமா ஒரு அறிக்கை வெளியிட்டார், திபெத்தின் 14வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்தவுடன் தான் சீனா எல்லைப் பிரச்சினையை எழுப்பியது என்பதை மறந்து விடக் கூடாது.  இதற்கு முன்பாகவே சீனா திபெத்த்தை ஆக்கிரமித்த போது ஐ.நா சபையில் நடந்த  ஒரு சம்பவத்தை குறிப்பிட வேண்டும்.  இந்தியாவின் ஐ.நா.சபையின் பிரதிநிதியிடம் சீனாவின் ராணுவ அதிகாரிகளான Chang Kuo – hua,  Tan Kuan-San    இருவரும், ” அமைதியான முறையிலேயே திபெத்தை ஆக்கிரமிப்போம், எங்களது படைகள் Changtu   வரையில் மட்டும் நிலைநிறுத்தப்படும்  எக்காரணத்தை கொண்டு லாசா (Lhasa )   வரை செல்ல மாட்டோம் என உறுதி கொடுக்கிறோம் என்றார்கள், இந்த வாக்குறுதிக்கு மாறாக தங்களது படைகளை  லாசா வரை ஆக்கிரமித்தார்கள் என்பதை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

1954-ல் ஏற்றுக் கொண்ட பஞ்சசீல கொள்கைக்கு மாறாக , இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்தது.  குறிப்பாக பஞ்ச சீல கொள்கையில் முதல் இரண்டு அம்சங்களை சீன மீறியுள்ளது  (1) mutual respect for each other’s territorial integrity and sovereignty; (2) mutual non-aggression;  இந்த போக்கு நம்பிக்கை துரோகம் என்பதாகும்.  1962-ல் நடந்த இந்தியா சீனா போரின் போது சீனா கைப்பற்றப்பட்ட பகுதி, சுமார்38,000 ச.கி.மீ தூரம் கொண்டு பகுதியாகும்.  இதில் முக்கியமான பகுதி அக்சைய் சின் என்ற பகுதியாகும்.  இன்று வரை சீனா ஆக்கிரமித்த பகுதி என்பதை சீனா உணரவில்லை, சீனாவிற்கு துதிபாடிகள் கூட இச் செயலை வன்மையாக கண்டிக்கவில்லை.

சீனாவின் குள்ள நரித்தனம்

china031962-ல்நடந்த போருக்கு பின்னர் சீனா தந்திரமாக பல பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.  1962 போருக்கு பின் அருணாசல பிரதேசத்தில்  Zemithang  வடக்கு  பகுதியில் 60 கி.மீ தூரத்தில் உள்ள Thagla Ridge, Namka Chu, Sumdrong Chu  ஆகிய பகுதிகள் 1986லிருந்து சீனாவின் வசம் உள்ளது. Bumla பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில் இந்திய  ராணுவம் கண்கானிப்பில் இல்லை.  அந்த இடத்தில் சீன ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.  அருணாசல பிரதேசத்தில் உள்ள தின்பு  ( Tingbu) என்ற பகுதியில் பாரம்பரியமாக மேய்ச்சல் நிலங்கள் உள்ள இந்தப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி விட்டு சீனா அந்த இடத்தை தன் வசம் கொண்டு வந்துள்ளது.  அருணாசல பிரதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள மேல் பகுதியில்  Subansiri  மாவட்டத்தில் உள்ள           Asa-Pila-Maya என்ற பகுதி இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பில் தற்போது உள்ளது. அருணாசல பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள   Dibang மாவட்டத்தில்   Athu-Pupu   பகுதியில் 2006லிருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது.  மத்திய அருணாசல பிரதேசத்தில் அமைந்துள்ள  Kurung  Kumey  மாவட்டத்தில் 1962க்கு பின்னர் ஒன்பது ராணுவ முகாம்கள் இந்திய ராணுவத்திடம் இருந்தது, தற்போது இரண்டு முகாம்களை தவிர மீதமுள்ள ஏழு முகாம்களும் சீன ராணுவ வசம் உள்ளது.  இவ்வாறு 4,057 கி.மீ எல்லை நெடுங்கிலும் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்த பகுதிகள் ஏராளமாகும்.

அருணாசல பிரதேசத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்தது போல், லடாக் பகுதியிலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமில்லாமல், ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளையும் செய்து வருகிறது.  இதே காலகட்டத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் கட்டமைப்பு பணிகளை செய்ய முற்பட்டால், சீனா தடுப்பதும் மட்டுமில்லாமல் கட்டுமான பணிகளை சீர் குலைப்பதிலும் ஈடுபடுகிறது.  லடாக் பகுதியில் உள்ள  Demchok வில் 2009-ம் உள்ளுர் நிர்வாகம் நான்கு கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.  ஆனால் சீனா தனது ராணுவ பலத்தை கொண்டு பணிகள் நடைபெறாமல்  தடுத்துவிட்டது.  இதைப் போலவே ரூ3.75 கோடி செலவில்  விவசாயத்திற்காக கால்வாய் கட்டும் பணியை கூட துவங்க விடாமல் சீனா செய்து விட்டது.  இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இந்திய ராணுவத்தினர் தடுக்கவில்லை என்ற கோபம் கொண்டுள்ளார்கள்.  2004-2005-ம் ஆண்டு சீனா மேற்படி இடங்களில் தங்களது வசதிக்காக சாலைகள் போட்டதும், கால்வாய்கள் வெட்டியதும் உலகறிந்த விஷயமாகும்.  இதை இந்திய அரசு தடுக்கவில்லை.  1957 அக்டோபர் மாதம் முதல் 1958 பிப்ரவரி மாதம் வரை சீனா லடாக் பகுதியில்  குர்னக் (Khurnak Fort  ) கோட்டையை கைப்பற்றியது மட்டுமில்லாமல்,  லடாக் பகுதியிலிருந்து அக்சாய் சின் பகுதிக்கு செல்லும் விதமாக  Rudok to Tibet,  Sugat Qarawal to Sinkiang  வரை சாலைகள் அமைத்தது.

1954-ம் ஆண்டு ஜீலை மாதம் பஞ்சசீல உடன்பாடு கையெழுத்தான மூன்று மாதத்திற்குள் சீனா உத்திரபிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள பாராஹூட்டி என்ற இடத்தில் இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டதிற்கு தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள்.   இதற்கு சீனா தெரிவித்த காரணம் வித்தியாசமானதாகும், தலாய் லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததற்காகவே இந்த கண்டனம் என தெரிவித்தாலும், உண்மையான காரணம் வேறுமாதிரியானது.  ஏன் என்றால் ஊடுருவல் நடைபெற்ற வருடம் 1955, ஆனால் தலாய் லாமா அடைக்கலம் வந்த ஆண்டு 1959 மார்ச்சு மாதம், ஆகவே 1914-ல் ஏற்பட்ட சிம்லா உடன்பாடிக்கைக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்காமல், சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சீன இந்திய பகுதிக்குள் ஊடுருவலை செய்து வந்த்து.  இது போல் சீனா கள்ளத் தனமாக ஊடுருவல் செய்த செயல்களை பட்டியலிட்டால் கணக்கில் அடங்காது.

china041967-ல் மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு நக்ஸல்பாரி இயக்கம் துவங்கிய போது, சீனா அதை முழுமையாக ஆதரித்த்து, சீனாவின் அதிபர் மாசே துங் விடுத்த செய்தி” இந்தியா முழுவதும் வசந்தம் இடி ” (spring Thundr over India  ) என்றார். இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தது சீனா. 1967-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி  நாது லா வடக்கு பகுதியில் ( Nathu La) இந்திய ராணுவத்தின் எறி குண்டு வீசும் பிரிவினர் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது, ஐந்து நாட்கள் நடந்த இந்த சண்டையில் இந்திய வீரர்கள் 62 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 1ந்தேதி சிக்கிமின் சோழ அவுட் போஸ்ட்  பகுதியில் உள்ள பெரிய பாறையில் ரோந்து பணி செய்து கொண்டிருந்த கூர்க்கா பட்டாலியன் ராணுவத்தினர் மீது சீன ராணுவம் நடத்திய சண்டையில் 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதை போலவே தொடர்ந்து இந்தியா ராணுவத்தின் மீது சீனா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. 1981ம் ஆண்டு டிசம்பர்  மாதம் முதல் 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்திய மற்றும் சீனாவும் நடத்திய எட்டு முறை பேச்சு வார்த்தையில் எல்லைப் பிரச்சினைக்கு இறுதி முடிவு எடுக்க முடியாமல் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மத்தியில்  காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர், சீனாவின் அத்துமீறல் நடந்த போது, ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது எதிர்ப்பை முறையாகவும் திடமாகவும் காட்டவில்லை.  அருணாசல பிரதேசத்தை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா கொடுக்க சீனா அரசாங்கம் மறுப்பு தெரிவித்த்து, மறுப்பிற்கு கொடுக்க காரணம், அருணாசல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி, எனவே சீனாவின் ஒரு பகுதியில் உள்ளவர்களுக்கு விசா தேவையில்லை என தெரிவித்தனர். ( ) 2008-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் அருணாசல பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது தங்களது கடுமையான எதிர்ப்பை காட்டினார்கள். இந்தியாவின் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி அருணாசல பிரதேச எல்லைப் பகுதிக்கு சென்ற போது சீனா ராணுவத்தினர் மிரட்டும் விதமாக தங்களது துப்பாக்கி தூக்கி காட்டினார்கள்.  2009 அக்டோபர் மாதம் ஆசிய டெலவல்ப் மென்ட் வங்கி அருணாசல பிரதேசத்திற்கு கொடுக்க முன் வந்த கடனை கொடுக்காமல் தடுத்தது சீனா அரசாங்கம். பின்னர் அமெரிக்காவின் உதவியுடன் கடன் பெற முடிந்தது.

2010-ல் 228 முறை சீனா லடாக் பகுதியில் ஊடுருவல் செய்துள்ளது. 2011-ம் ஆண்டு சீனா எல்லைக் கோட்டு பகுதியில் 180 முறை ஊடுருவல் செய்திருக்கிறது.  2012-ம் ஆண்டு செப்டம்பர் வரை 400 முறை இவ்வாறு ஊடுருவல் செய்திருக்கிறது. ( ஆதராம் மெயில் டூ டே 16.10.2012)  2012-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந் தேதி இந்திய எல்லைக்குட்ட Chumar பகுதியில் உள்ள சாலையை செப்பனிட்டுக்கு கொண்டிருக்கும் போதே சீன ராணுவத்தினர் தடுத்தது மட்டுமில்லாமல் இப் பகுதியின் உரிமையை பற்றிய கேள்விகளை எழுப்பினார்கள்.  அப்போது கூட இந்திய அரசாங்கம் சீனாவிற்கு தக்க பதில் கொடுப்பதற்கு பதிலாக, இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது, இதற்கு மாறாக கட்டுப்பாட்டுடன் பொறுமையாக இருக்க வேண்டும் என உத்திரவிட்டது. 2013ம் ஆண்டு இதுவரை 100 தடவைக்கு மேலாக சீனா ராணுவம் தனது எல்லையை மீறி புகுந்துள்ளது.  இந்திய ராணுவத்தினரின் வரைப் படத்தை அழித்தும், இந்திய பகுதியில் உள்ள பாறைகளில் சீனா என்ற வாசகத்தை ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் எழுதியதையும் மறந்து விடக் கூடாது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல முறை சீனா ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் ஊடுருவல் செய்திருக்கிறார்கள்.china05கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும், சீனாவின் ஊடுருவலை இதுவரை தடுக்க இயலவில்லை. லடாக் எல்லைப் பகுதியில் மட்டுமில்லாமல், தற்போது சீனா இந்திய கடல் பகுதியிலும் தங்களது ஊடுருவல்களை செய்து வருகிறது.   நீரில் முழ்கிய பொருள்களை ஒலி அலைகள் கொண்டு அறியும் முறையில் இந்திய பெருங் கடல் பகுதியில் சீனாவின் 22 சப்மெரின்கள் இருப்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கண்டு பிடித்தன.  இந்திய கப்பற் படைக்கு தொல்லைகள் கொடுப்பதற்காகவே சீனா தங்களது சப்மெரின் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது.  ஏற்கனவே 2012 ஆகஸ்ட் மாதம் இம் மாதிரியான ஆய்வில் தெரியவந்த்து.

2012-ம் வருடம் மே மாதம் 19ந் தேதி அருணாசல பிரதேசத்தில் உள்ள Asaphila     எனுமிடத்தில் இந்திய ராணுவத்தினரின் ரோந்து குடிசைகளை சீனா ராணுவத்தினர் நாசம் செய்தார்கள்.  2003-ல் சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டதிற்கு சீனா தனது முழு சம்மதத்தையும் தெரிவித்த பின்னர், 23 சீனா ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினருடன் நேருக்கு நேர் மோதல் போக்கை உண்டாக்கினார்கள்.  இதை போலவே  சிக்கிமின் கிழக்கு பகுதியில் உள்ள  Batang La   என்ற அணையிலிருந்து இந்திய ராணுவத்தினர் தண்ணீர் எடுக்க கூடாது என சீன ராணுவத்தினர் தடுத்தார்கள்.  T-16  யுத்த டாங்க்  சிக்கிம், லடாக், அருணாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சீனா நிறுத்தி வைத்துள்ளது.

சீனாவின் நீர்ப் போர் பிரகடனம்

நீர் மின் திட்டங்களில் சீனா எப்போதும் புதிராகவே நடந்து கொள்கிறது.  பிரம்மாண்டமான திட்டங்களைக் கூட ஓசையின்றி நிறைவேற்றுவதுதான்  அதன் வழக்கமே.  சீனாவுக்கு கங்கை, சிந்து, பிரம்ப்புத்திரா ஆற்றங்கரைப் புகுதிகளை ஆண்டு கொள்ளும் உரிமையை திபெத் தந்திருக்கிறது.  சீனாவிலிருந்து 10 முக்கிய ஆறுகள் உற்பத்தியாகி 11 நாடுகளுக்குச் செல்கின்றன.   இந்த உரிமையை பயன்படுத்திக் கொண்டு சீனா ஒரு வேளை நதியைத் திருப்பி விடுவது மட்டும் நடந்து விட்டால் அது இந்தியா பாகிஸ்தான், வங்க தேசம், நேபாளம், ஆகிய நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறிவிடும்.  1997-ல் சர்வதேச நீராதாரங்களை போக்குவரத்து தவிர்த்த இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது குறித்த ஐ.நா.சபையின் தீர்மானத்தை எதிர்த்து சீனா உள்ளிட்ட 3 நாடுகள் வாக்களித்தன.   சீனா எப்போதும் வெளிப்படையாக சொல்வதில்லை என்ற விமர்சனமும் அவ்வப்போது உலக நாடுகள் மத்தியில் எழும், சீனா எப்போதும் தனது நீர் மின் பொறியியல் திட்டங்களைப் புதிராகவே வைத்திருக்கிறது.  சீனா தகவல்களை கூட அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில்லை, பார்வையிட கூட அனுமதிப்பதோ கிடையாது. மெகா திட்டங்களை கூட ஓசையின்றி செயல்படுத்துகிறது என பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்கிறது.  இந்நிலையில் இந்தியா சீனாவுடனான பிரம்மபுத்திரா நதி பங்கீடு எவ்வாறு முடியும் என்பது தெரியவில்லை.  ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா பயணிகளுக்கு தனி விசா, அருணாசலப் பிரதேச அந்தஸ்து ஆகிய விஷயங்களில் நாம் சீனாவை எவ்வளவோ பார்த்தாகி விட்டது, எனவே பிரம்மபுத்திரா விஷயத்தில் சீனாவை ரொம்பவே நம்ப வேண்டியதில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.

china061950லிருந்து சீனா தொடர்ந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவல் செய்து கொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள Shipkila    பகுதியிலும், வடகிழக்கு எல்லைப் புறங்களிலும், கார்வால் பகுதியில் Barahoti  இடங்களிலும், லடாக்கின் எல்லைகளிலும்  ஊடுருவல் செய்வதுடன், அவ்வாப்போது துப்பாகி சண்டையும் நடக்கிறது.  அருணாசல பிரதேசத்தை முழுமையாக மீட்க வேண்டி இந்தியாவின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறு செய்கிறது.  பேச்சு வார்த்தையின் மூலம் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கான வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.  ஆகவே ஜப்பான் ஆளுமைக்குட்ட தீவுகளில் சீனா நுழையுமானால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை செய்த்து போல் இந்தியாவும் தனது நிலைப்பாட்டை தெளிவாக உறுதியாக தெரிவிக்காத வரை சீனாவின் அத்துமீறல் தொடர்கதையாகவே இருக்கும்.

சீனாவைப் பற்றி பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள்.

இதற்கு முந்தை காலங்களில் பல்வேறு தலைவர்கள் எடுத்து வைத்த கருத்தை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். 1950-ம் வருடம் அக்டோபர் மாதம் 7ந் தேதி சீனா சுதந்திர நாடான திபெத்தை ஆக்கிரமிக்க தனது ராணுவத்தை உள்ளே அனுப்பியது.  இச் செயலை சோவியத் அரசும் ஆதரவு தெரிவித்த்து, இந்நிலையில் டிசம்பர் மாதம் 6ந்தேதி பாராளுமன்றத்தில் நேரு இதை தெரிவித்த போது  டாக்டர் சியமா பிரசாத் முகர்ஜி கூறியது ” It is no use our trying to gloss over things because these are matters which affects not only the people of Tibet, but also the security of India. “ இது இன்று வரை உண்மையாகவே இருக்கிறது.  1950-ம் வருடம் நவம்பர்மாதம் 7ந் தேதி உள்துறை அமைச்சர் சர்தார் வல்லாய் பட்டேல் நோய்வாய் பட்டிருந்த சமயம் நேருவிற்கு கடிதம் எழுதினார் அதில் “ We have to consider what new situation now faces us a r result of the diapperance of Tibet, as we knew it, and the expansion of China almost up to our gates “. என குறிப்பிட்டார்.  நேரு பாராளுமன்றத்தில் இந்தியா அக்சியசின் பகுதியில் ஒரு இன்ச் இடத்தை கூட விட்டுத்தராது என்றார் உடனடியாக கிருபளானி அவர்கள் “ How many miles make one inch ?” என்று வினவினார். இந்திய அரசு பனிப்போரில் அமெரிக்காவை ஆதரித்து அமெரிக்காவுடன் உறவு கொண்டு திபெத் விடுதலைக்கு உதவி கோர வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் நாராயன் கோரிக்கை வைத்தார். திரு திம்மையா தன் படைகள் சீனாவுடனான போருக்கு ஆயுத்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார், ஆனால் சீனாவிற்கு ஆதரவாக திரு.கிருஷ்ணமேனன் இருந்ததை தற்போது எவரும் குறிப்பிட்டு கூறுவதில்லை.

chn071960-ம் ஆண்டு பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் திரு.ராஜேந்திர பிரசாத் அவர்கள் தனது சொந்த மாநிலமான பீகாரில் மாணவர்களிடையே  எதிர்ப்பு மற்றும் கோபம் பற்றி பேசும் போது ” இந்த இளைஞர்கள் சீன ஆக்கிமிப்பிலிருந்து இந்தியப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்க வேண்டும் என விரும்புகின்றனர்.  அரசின் எந்த்த் தவறான அல்லது பலவீனமான நடவடிக்கைகளையும் அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.”  என்றார் ( ஆதாரம் இந்திய வரலாறு   காந்திக்கு பின் ஆசிரியா ராமச்சந்திர குஹா பக்கம் 483)  மேலும் 1960 ஜனவரி கடைசி வாரத்தில் ஜனசங்கத்தின் தலைவர் விடுத்த கோரிக்கை தேசத்தின் சொந்த நலன்களும் சுய ம்ரியாதையும் இந்திய மண்ணை சீன ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைவான சக்தி வாய்ந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும்.         1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் மாத மோதல்களுக்கு பிறகு சௌ என் லாய் இருதரப்பினரும் கிழக்கே மக்மோஹன் கோட்டுக்கு 20 கிலோமீட்டர் அப்பாலும், மேற்கே அப்போதைய கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பாலும் சென்றுவிட வேணட்டும் என்று நேருவிற்கு கடிதம் எழுதினார்.  இக் கடித்த்தின் மூலம் கூட எல்லைப் பிரச்சினையை தீர்த்த பின்னர் படைகள் வாபஸ் பெறலாம் என்பதை கூற வில்லை.

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை

சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்த பின்பும் நேரு சொனார்: சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே 2000 வருஷங்களுக்கும் மேலாக எந்த சச்சரவும் இருந்ததில்லை என்று. நேருவுக்கும் தெரியும் சைனா ஒரு ஆக்கிரமிப்பு மனம் கொண்ட நாடு என்று. ஆனால் அவரது ரொமாண்டிக் கனவுகள் அவர் கண்களுக்குத் திரையிட்டு விட்டன. சைனா தான் அதை நமக்கு நினைவுறுத்தியது.

china-war_1962

அதிலிருந்து அதனுடன் வம்புக்குப் போகாது ஒதுங்கி பயந்தே இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. “ அவன் தான் மகா துஷ்டன்னு தெரியுமோல்லியோடா, அவன் வம்பு பண்ணினா நீ பாட்டிலே பேசாமெ இருந்துடேண்டா” என்று நம் பாட்டிகள் பேரப்பிள்ளை களுக்குச் சொல்லும் அறிவுரை தான் சீனாவுடனான நம் வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் அதை நாம் இப்படி வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னமோ சமாதான வார்த்தைகள் சொல்லி மூடி மறைத்து வருகிறோம். அதையே சிறந்த கொள்கையாக வழிமொழிய இரண்டு அரசியல் கட்சிகள் நம் மண்ணிலேயே வளர்ந்து வந்துள்ளன. நாட்டுப் பற்று உள்ளவர்களாக அவர்கள் என்றுமே தம்மைக் காட்டிக் கொண்டதில்லை.

ஆனாலும் நாம் கண்களை மூடிக்கொள்வதில் அர்த்தமில்லை. சைனாவுடன் ஒரு சின்ன தகராறு என்றால் கூட நமக்கு உதவ யாரும் இல்லை. சைனாவுடனான நமது தகராறு சைனாவுடனேயே நின்று விடாது. அது தான் சாக்கு என்று நம்மீது பாய சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் தயார் தான். இப்போது இலங்கையும் அந்தக் கூட்டணி முகாமில் கடைசியாகச் சேர்ந்துள்ளது. சைனா நம்மை ஒன்றும் விழுங்கி விடப்போவ தில்லை. அந்த மாதிரி பைத்தியக்காரத் தனத்தை அது செய்யாது. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே கால் நடுக்கங்கொள்ளும், முகம் வியர்க்கும் ஸ்திதியில் இந்தியாவை வைத்துக் கொண்டாலே அது போதும். சைனாவுக்கு. அதை வெற்றிகரமாகவே செய்து வருகிறது. ”தேஜ்பூர் போகாதே” என்றால் நாம் தில்லிக்குத் திரும்பிவிடுவோம். அது போதும் தர்மஸ்தலாவில் உள்ள திபெத்தியர்களை அடக்கி வை என்றால் நாம் மறுபேச்சு பேசப்போவதில்லை. 1962-லிருந்து . ஒவ்வொரு தில்லி அரசுக்கும் ”நம் காலத்துக்கு பயந்து நடுங்கி தகராறு ஏதும் இல்லாது சைனாவைக் கோபப் படுத்தாது அமைதியாகக் காலம் கழித்துவிடுவோம்” என்பதே தொடர்ந்துவரும் சைனா பாலிஸி. 1962-ல் எல்லை கடந்து வந்த சீனர்களைத் “துரத்தி விரட்டுங்கள்” என்று நேரு சொன்ன வார்த்தையின் விளைவுகள் இன்னொரு முறை நேராது.

இடையில் சைனா, ஏழ்மையிலும். 30 வருட உள்நாட்டுப் போரின் நாசத்திலும் மூழ்கியிருந்த போதிலும் தனக்கு இருந்த ஒரே துணையும் அப்போது ஒரு வல்லரசுமான ரஷ்யாவையே எதிர்த்து நின்றது. எவரது மிரட்டலுக்கும் அஞ்சாது திபெத்தைக் கபளீகரம் செய்தது. இப்போது சைனா தனக்குப் போட்டியாகக் கருதுவது அமெரிக்காவைத் தான். வேறு எந்த நாடும் அதற்கு லட்சியமில்லை. இந்தியா அதற்கு ஒரு லக்ஷியமே இல்லை. ஒரு மிரட்டல் போதும் இந்தியா வாலைச் சுருட்டிக்கொள்ள என்று தான் நினைக்கிறது. அப்படி நாம் அரை நூற்றாண்டு காலமாக நடந்துகொண்டு வந்துள்ளோம். காந்தியும் புத்தரும் அவதரித்த நாடாயிற்றே!

அறுபது வருட காலத்துக்குள் பல துறைகளில் இந்தியாவுக்குப் பின் தங்கியிருந்த நாடு தான் சைனா, இப்போது பொருளா தாரத்திலும், ராணுவ பலத்திலும் இந்தியா என்ன, பல முன்னேறிய நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முன் சென்று விட்டது. அறுபது வருட கால உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. மாவோவின் கலாசாரப் புரட்சி வரை சைனா இன்னும் படு மோசமாக நாசமடைந்திருந்தது. ஆக சைனாவின் பயங்கர பாய்ச்சல் நடந்தது சுமார் இருபது வருடங்களுக்குள்ளாக.

la-chine-chung-kuo-cina-1972காரணம், சைனாவின் அதிகார வர்க்கத்தின் யதேச்சாதிகாரம் மாத்திரமல்ல. அந்த யதேச்சாதிகாரம், அசாத்திய தன்முனைப்போடு, துணிச்சலோடு, செயல்பட்டது. அதன் சரித்திரத்திலேயே ஊறியிருக்கும் ஏகாதிபத்ய பெருமை உணர்வு.. உலகமே தன்னைச் சுற்றியிருப்பதாக தான் அதன் மத்தியில் வீற்றிருப்பதாகத் தான் அதன் வரலாற்றுப் பிரக்ஞை இருந்திருக்கிறது. தன்னை மத்திய நாடு, அதாவது சுங் க்கோ (Chung kuo) என்று தான் சொல்லிக்கொள்கிறது. 60 வருட காலமாக ஒரு வெறிபிடித்த யதேச்சாதிகாரத்துக்கு அடிமைப் பட்டு, வாழ்ந்தாலும், எந்த சீனனும் நாட்டுப் பற்று குறைந்தவனாகி விடவில்லை. தான் நன்றாக வாழ்வதாகவே நம்புகிறான். அப்படி நம்ப வைக்கப் பட்டிருக்கிறான் என்பதுடன் அவன் நாட்டுப் பற்றும் அதற்குக் காரணம். இன்றும் சைனாவுக்காக பரிந்து பேசும் நம் கம்யூனிஸ்ட் கட்சிகள் போல, சைனாவில் இந்தியாவுக்காகப் பரிந்து பேச யாரும் அதன் வரலாற்றில் இருந்ததில்லை. ரஷ்யா ஒரு வல்லரசாக இருந்த ஐம்பது அறுபதுகளில் கூட சைனா ரஷ்யாவை லக்ஷியம் செய்ததில்லை. மாவோ தன் போக்கில் தான் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார். ஸ்டாலினுக்கு மாவோ என்றும் தண்டனிட்டவரில்லை. அதன் வரலாறு முழுதும் சைனா தனக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் அதன் ஏகாதிபத்ய பேராசைகள் என்றும் மங்கியதில்லை. சமயம் கிடைத்த போதெல்லாம் யாரை கபளீகரம் செய்யலாம் என்றே அதன் வரலாறு இருந்து வந்திருக்கிறது.

இப்போது உலக நாடுகள் பலவும் சைனாவுடன் தம் உறவுகளை வெகு ஜாக்கிரதை உணர்வுடன் சுமுகமாகத்தான் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. வல்லரசாக இன்னும் ஆகாத போதே ஒரு வல்லரசின் கெடுபிடிகளுடன் சைனா உலக அரங்கில் மிதப்புடன் நடந்து கொள்கிறது. எங்கும் யாருக்கும் அது தன் உரிமைகள் என தான் கருதுவதை கொஞ்சம் கூட விட்டுக் கொடுப்பதில்லை. மற்ற நாடுகள் தான், அவை வல்லரசாக இருந்த போதிலும், அதனோடு சமாதானமாகப் போக சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.

உலகம் முழுதும் இப்போது சைனா- இந்தியா என்றே ஒரு இடைக்கோடு போட்டு இரண்டு பெரிய நாடுகளையும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு தான் இப்படிப் பேசப்படுவதில், சந்தடி சாக்கில் தனக்கும் ஒரு பொன்னாடை போர்த்தப்படும் சந்தோஷம். Basking in reflected glory என்பார்களே, அப்படித்தான் இந்த ஒரே அடைப்புக்குறிக்குள் அடைபடும் ஜொலிப்புக்கும் மேல் அடிக்கடி நடக்கும் ஒப்பீடுகளில், சில விஷயங்கள் நமக்கு ஒரு கிறுகிறுப்பு தரம் விஷயங்களும் உள்ளன. சைனாவின் அதி வேக வளமும் பெருகி வரும் பலமும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று. மக்களைக் கொத்தடிமைகளாக்கி பெறப்படும் அதிவேக பாய்ச்சல். அந்த அதிவேகமும், பாய்ச்சலும் தொடர்ந்து நீடிக்கும் சாத்தியமில்லை. காரணங்கள், மக்களின் ஜனநாயக பங்களிப்பு இல்லாத போது ஒரு நாள் அடிமனக் கொந்தளிப்பு வெடிதெழும்.

இந்தியா அப்படி அல்ல. அதன் ஜனநாயக கட்டமைப்பு. அத்தகைய திடீர் கொந்தளிப்புக்கள் இந்தியாவில் சாத்தியமில்லை. இந்தியா நிதானமாக, நிச்சயமாக முன்னேறி வருகிறது. ஆக இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் என்றும் ஆனால் சைனா அதிகம் போனால் இன்னம் ஒரு பத்திருபது வருடங்களுக்கு மேல் இத்தகைய வேகத்தைத் தொடர முடியாது. திடீரென அதன் கால் முடங்கிவிடும் என்றும் ஜோதிடம் சொல்கிறார்கள். சைனா என்றாலேயே, பயந்து நடுங்கிக் கொண்டு, வாய் பொத்தி இருக்கும் இந்திய அதிகார தலைமைகளுக்கு இந்த ஜோதிடங்கள் ஒருவாறான ஆறுதல் அளிக்கின்றனதான். ”சரி, நம் காலம் ஒழுங்காக கடந்து விடும்” என்ற நிம்மதியோடு வாளா இருக்கும் நடவடிக்கை தான். சும்மா இருப்பதும் ஒரு நடவடிக்கை தான் என்று வேறு ஒரு மகத்தான ராஜதந்திர பிரகடனம். (Not taking any action is also an action) நமக்குப் பழக்கமானது.

நம்மால் நம் அதிகார தலைமைகளின் குணத்தை மாற்ற முடியாது. ஆனால், ஏகாதிபத்ய கனவுகளும், வரலாற்று ப்ரக்ஞையும், உலகிலேயே பலம் வாய்ந்த ஒரு மாபெரும் வல்லரசாக வேண்டும் என்ற அயராத முனைப்பும் அதை நோக்கிய நீண்டகால செயல் திட்டத்தோடு தளராது செயல்பட்டுவரும் ஒரு அண்டை நாட்டை, நம்மை அடக்கியே வைத்திருக்கவேண்டும் என்ற முனைப்பும் கொண்ட அந்த அண்டை நாட்டை, நாம் சரிவர புரிந்துகொள்ளவும் வேண்டும். அத்தோடு நம் எதிர்காலத்தை பற்றியும் ஒரு திட்டமிட்ட செயல்பாடு நமக்கு வேண்டும். இது இரண்டும் நம் தலைமைகளுக்கு இல்லாத போது நாமாவது நமக்குள் இது பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும். அது பற்றி நம் அளவிலாவது கருத்துப் பரிமாறல்களும் சர்ச்சைகளும் எழச் செய்யவேண்டும். ஆனால் குடிமக்களாகிய நமக்கு,  made in China எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் பொம்மைகளும் ரொம்ப சீப்பாகக் கிடைக்கும் அற்ப சந்தோஷத்தில் நம் கவலைகள் முடிந்து விடுவது, பயந்து பயந்து காலத்தை ஓட்டிவிடப் பார்க்கும் நம் அரசியல் தலைமகளுக்கேற்ற பிரஜைகள் தாம் நாமும் – என்பதைத் தான் காட்டுகிறது.

china_vilagum_thirai_book_coverஇந்த சந்தர்ப்பத்தில் பல்லவி அய்யரின் சீனா – விலகும் திரை என்னும் புத்தகம் ஒரு முக்கியமான காலடி வைப்பு. நமக்கு இந்த காலடி வைப்பு இப்போதெல்லாம் ரஷ்யாவுக்குப் போய் ஆண்டையை பார்த்து தரிசனம் பாக்கியம் பெறுவது நின்று சைனாவுக்குப் போய் ஆண்டையப் பார்த்து தரிசன பாக்கியமும் உபதேசங்களும் பெற்று வரும் கம்யூனிஸ்டுகள் சொல்வதையோ, அல்லது நம் அரசியல் தலைமைகள் சொல்வதையோ (அல்லது சொல்லபயந்து வாய் மூடி இருப்பதையோ) கேட்டுப் பயன் இல்லை. இவர்களிடம் பெற நமக்கு ஏதும் இல்லை. நமக்குக் கொடுக்க அவர்களிடமும் ஏதும் இல்லை.

பல்லவி அய்யர் சைனாவில் ஐந்து வருட காலம் இருந்தவர். சீன ஒளி பரப்புத் துறையில் பணியாற்றச் சென்று பின்னர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பத்திரிகைக் கல்வி படிப்பித்தவர். அங்கு சென்று சீன மொழி கற்றவர். அவரிடம் நாம் சந்தேகம் கொள்ளத் தூண்டும் ஒரே விஷயம் நம்ம ஊர் ஹிந்து பத்திரிகையுடன் அதுவும் உலகறிந்த சீனாவுக்குப் பல்லாண்டு பாடும் என். ராம் இருந்த காலத்திய தொடர்பு தான். ஆனால் அவர் புத்தகத்தைப் படித்த பின் அந்த சந்தேகங்களும் முற்றாக விலகின.

பல்லவி அய்யர் தில்லியில் வளர்ந்தவர். முஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் நிஜாமுதீன் பகுதியில் அவரது சிறு பிராயம் கழிந்தது. கலாசார நோக்கில் தான் பாதி முஸ்லீம் என்று இந்த அய்யர் வித்தியாசமான அய்யர் என்று சொல்லும் பாவனையில் சொல்லிக் கொள்கிறார். தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர். பின்னர். இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-லும். இங்கிலாந்தில் இருந்த போது ஒரு ஸ்பானியரைக் காதலித்து மணந்தவர். பல்லவி ஜூலியோவாக தன்னை நாமகரணம் செய்துகொள்ளாது பல்லவி அய்யராகவே தன்னை அறியப்படுத்திக் கொள்பவர். சைனாவில் உணவு அவருக்குப் பிரசினயாக இருக்கவில்லை. சாப்பிடும் போது, ”இது என்ன நாய் மாமிசமா?” என்று ஜோக் அடிப்பாராம். இந்த பின்னணி போதும், அவருக்கு அனுபவங்களையும் பார்வையையும் எந்த சார்பும் முன் தீர்மானிக்கவில்லை என்பதைச் சொல்ல. ஆகவே அவருடைய ஹிந்து பத்திரிகைத் தொடர்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. .

எனக்கு இது மிக சுவாரஸ்யமான, இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான பல புதிய தகவல்களைப் பார்வைகளை அளித்த புத்தகமாக இருந்தது. ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) ஐம்பதுகளில் படித்த Edgar Snow-வின் Red Star Over China –க்குப் பிறகு சைனாவில் நிகழும் பெரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்லும் புத்தகம். ஐந்து வருடங்களில் (2002 லிருந்து 2007 வரை) சைனாவில் ஒவ்வொரு துறையிலும் நிகழ்ந்த மாற்றங்கள். அவை.

ஏதோ ராணுவ படையெடுப்பு நடப்பது போலத்தான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை உலகம் வியக்கும் வகையில் பிரமாண்டமாக நிகழ்த்தி விடவேண்டும் என்ற தீவிர முனைப்பில் எதுவும் அரசுக்குத் தடையாக இருக்கவில்லை.

பெய்ஜிங்கின் மூன்றில் ஒரு பகுதி, பழமையும் வரலாறும் தன்னுள் கொண்ட பகுதியை இடித்துத் தள்ள அவர்கள் தயங்க வில்லை. சாய் என்று இடிக்கப்பட வேண்டிய கட்டிட சுவர்களில் எழுதினால் போதும். எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம். இடிக்கப் பட்டன. அவ்விடத்தில் புதிய ராக்ஷஸ கட்டிடங்கள் எழுந்துவிட்டன.

உலகத்திலேயே பெரிய அணைக்கட்டுகள் அசுர செலவில், அசுர வேகத்தில் கட்டப் படுகின்றன. லக்ஷக் கணக்கில் மக்கள் குடிபெயர்க்கப் படுகின்றனர்.

லாஸா எக்ஸ்ப்ரெஸ், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து திபேத் தலைநகர் லாஸாவுக்கு 4000 மைல் நீள ரயில் பாதை, மலைகளைக் குடைந்து, அமைக்கப்பட்ட ரயில் பாதை பிராணவாயு குறைந்துவிடும் மூச்சுத் திணறும் உச்சத்தில், திடீரென உறையும் பனி, திடீரென அது கரைந்து தண்ணீராகவும் பெருக்கெடுக்குமாம். வேடிக்கை தான். இவ்வளவு கஷ்டங்களையும் எதிர்கொண்டு ஐந்து வருட காலத்தில் முடிந்து விடுகிறது. நம் ஊரில் மாயவரம் கும்பகோணம் அகலப் பாதை இன்னமும் போக்குவரத்துக்கு தயாராகவில்லை! எத்தனை வருடங்கள்? (இந்த அழகில் இந்தியாவும் சைனாவும் வல்லரசாகப் போகின்றனவாம்). பெய்ஜிங்கிலிருந்து லாஸாவுக்கு ஒரு வாரம் பிடிக்கும் பயணம் மிக சொகுசாக 2 நாட்களில் முடிகிறது. உலகம் வியக்கும் ரயில் பாதை அமைத்தது ராணுவத் தேவையை முன்னிட்டு என்று சொல்லலாம். உண்மை உண்டு. இந்தியாவிலும் ரயில் பாதை அமைத்தது பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ராணுவத் தேவைக்குத் தான் என்றார்கள். அந்த ரயிலில் தான் மகாத்மா காந்தி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு தன்னைத் தயார் செய்துகொள்ள. திபெத்தியர்கள் பயமும் அது தான். ஆனால் அது பயணிகளுக்கும் பொருளாதாரத் தேவைகளுக்கும் உல்லாச பயணிகளுக்கும் பயன் படும். பயன் படப் போவது சீனர்களுக்குத் தான், திபேத்தியர்களுக்கு அல்ல என்பதும் வாஸ்தவம் தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சாத்தியமே இல்லை என்று கைவிரித்த காரியம் ஐந்து வருடங்களில் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளது சீன அரசு. இப்போது லாஸாவில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், பெரிய மால்கள் காட்சி தருகின்றன. திபேத்தில் பல புதிய சாலைகள், நகரங்கள். புதிய வியாபார ஸ்தலங்கள்.

முன்னால் இடித்துத் தள்ளப்பட்ட பௌத்த கோயில்களும் லாமாக்களின் மடங்களும் இப்போது திரும்ப கட்டப்பட்டு வருகின்றன. காரணம் மாவோ காலத்தில் மதம் ஒரு அபினி. அழிக்கப்பட வேண்டியது. இப்போது அவரவர் மதம் சார்ந்த வாழ்க்கை அனுமதிக்கப்படுகிறது. காரணம் மறுபடியும் மக்களுக்கு ஒரளவு வாழும் சுதந்திரம் தந்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். அரசு அதிகாரத்தைக் கேள்வி கேட்கக் கூடாது. அரசு கட்டளைகளுக்கு அடி பணிய வேண்டும். திபெத்தில் தலாய் லாமா பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது. அந்தந்த பிரதேச மொழிகளைக் கற்கலாம். ஆனால் மண்டாரின் (வடக்கு சைனாவில் பேசப்படும் சீன மொழி) கட்டாயம் கற்க வேண்டும். அதில் தான் அரசு பணிகள் அத்தனையும் நடக்கும்.

முன்னர் தடைபடுத்தப்பட்ட இடங்களில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்போது அரசு ஆதரவு பெறுகின்றன. நிறைய இடங்களில் தேவாலயங்கள், மசூதிகள் கட்டப் படுகின்றன. அரபு மொழி கற்க முகம்மதியர்கள் பெரும்பான்மையில் வாழும் மேற்கு எல்லையோர பிரதேசத்தில் அனுமதிக்கப்படுகிறது. காரணம், மறுபடியும் இப்போது சீன தலைவர் ஹு ஜிண்டாவின் சுருதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று பிரகடனம் செய்யப்பட்ட தேசீய கொள்கை தான். அவ்வப்போது இப்படி ஏதோ ஒரு தேசிய கொள்கை பிரகடனப்படுத்தப் படும். நூறு பூக்கள் மலரட்டும் என்ற மாவின் கோஷத்தில் எத்தனையோ மாவோ கூட்டாளிகள் அவமானப்படுத்தப்பட்டார்கள். மக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறை வைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான ஸ்லோகன் அல்ல இது. அவ்வப்போது அரசு வெளியிடும் கொள்கைகளை எதிர்க்கக் கூடாது. கொடுக்கப் பட்டுள்ள வேலிக்குள் யாரும் சுதந்திரமாக இருந்து கொள்ளலாம்.
திபெத்தில் தனக்கு திபெத்திய மொழி பெயர்ப்பாளனாக பல்லவி அய்யர் அமர்த்திக் கொண்டவன் சைனாவை உள்ளுக்குள்ளேயே குமைந்து குமைந்து எதிர்ப்பவன். எல்லா திபெத்தியர்களும் அப்படித்தான். 60 வருடகால கொடூர ஆக்கிரமிப்புக்குப் பின்னும் சீன எதிர்ப்பு அவர்கள் ரத்தத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளன் தன் விசிட்டிங் கார்டை கொடுக்கிறான். மடித்த அந்த கார்டை சற்றே திறந்து அதில் தலாய் லாமா படம் அச்சிட்டிருப்பதைக் காட்டுகிறான் ரகசியமாக. தலாய் லாமா பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப் பட்டுள்ள நிலையில் அவன் எதிர்ப்பு அது. இந்தியா திபேத்தியர் அனைவருக்கும் ஒரு யாத்திரை பூமி. தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு.

three-gorge-dam-chinaசைனா கொஞ்சம் கூட இடைவிடாது ராக்ஷஸ வேகத்தில் தன்னை பலப்படுத்திக்கொண்டும் நாட்டை வளப்படுத்திக் கொண்டும் வருகிறது. பல்லவி அய்யர் சொல்கிறார்:  ”2006-ல் சீனாவில் ஏற்கனவே 86,000 அணைகள் இருந்தன இது உலகம் முழுதும் இருக்கும் அணைகளில் 46 சதவிகிதம். இதில் வீடிழந்தவர்கள் தொகை 1.6 கோடி பேர்.” அங்கு மேதா பட்கரோ அல்லது வேறு யாருக்குமோ இடமில்லை. தலைதூக்கிய அடுத்த நிமிடம் அவர்கள் மாவோ இருக்குமிடத்தை அடைவார்கள். ஒரு இடத்தில் அணைகட்ட சர்வே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. யாருக்கும், அங்கு வீடு இழக்கப் போகும் லக்ஷக்கணக்கிலானவர் எவருக்கும், அது பற்றி செய்தி இல்லை. ஒரு நாள அனைவரும் முன்னறிவிப்பு இன்றி வேறிடத்துக்கு அனுப்பப் படுவார்கள். அதிர்ஷ்டமுள்ளவருக்கு ஏதோ நஷ்ட ஈடு கிடைக்கும். தமிழ் நாட்டில் ஜனநாயகத்தில் நடப்பது அங்கு பெரும் அளவில் சர்வாதிகார ஆட்சியில் நடக்கிறது.

ஆனால் பல்லவி அய்யர் சொல்கிறார் – கொழுத்த பணக் காரர்கள் இருக்கிறார்கள் தான். முன்னை விட இப்போது பணம் புரள்கிறது தான். முன்னைவிட மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள். மறுக்கப்பட்ட சுதந்திரம் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. பொருளாதார சுதந்திரம் அவர்களை மகிழ்விக்கிறது. இந்தியாவில் காணுவது போல ஏழைகளை அங்கு காணவில்லை. சைனா பூராவும் எந்த மூலைக்கும் செல்ல அகலமான சாலைகள், கார் வழுக்கிக்கொண்டே விரைந்து செல்லும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வசதிகளே வெளிநாட்டவர்களை முதலீடு செய்ய அழைக்கின்றன. விரைவாகச் செயல்படுவதால் அரசின் முடிவுகளில் எங்கும் தாமதம் ஏற்படுவதில்லை. (வாஜ் பாய் அரசு தொடங்கிய இந்தியாவின் நான்கு திசைகளையும் இணைக்கும் பெருவழிச் சாலை பற்றி யாருக்கும் இப்போது நினைவிருக்கிறதா?)

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். அதற்கான எல்லா வசதிகளும் நாட்டில் ஏற்படவேண்டும். என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது. அரசை எதிர்த்து மாத்திரம் மூச்சு விடக்கூடாது. இந்தியா போல் அசுத்தமும் குப்பைகளும் குண்டும் குழியுமான சாலைகளும் சைனாவில் இல்லை. வாஸ்தவம், அங்கும் லஞ்சம் உண்டு தான். ஆனால் காரியங்கள் நடக்கின்றன. 10 இருபது சதவிகிதம் பணத்தை அதிகாரிகளும் இன்னும் சம்பந்தப் பட்ட மற்றவர்களும் சுருட்டிக் கொண்டாலும், 80 சதவிகித வேலைகள் நடக்கின்றன. இந்தியாவிலோ வேலையே ஏதும் நடக்காமல் பணம் கொள்ளை போகின்றது. அது தான் இங்குள்ள லஞ்சத்துக்கும் அங்குள்ள லஞ்சத்துக்குமான வித்தியாசம். மேஸ்திரியிலிருந்து கவுன்சிலர் என்று ஒரு பெரிய வரிசை மந்திரி வரை லஞ்சப் பணம் நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதத்தில் வினியோகிக்கப்படுவது நடைமுறையானால், இந்த ப்ராண்ட் ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய? சாய் என்று எழுதப்பட்டால் வீடு என்ன ஒரு குடியிருப்பு பகுதியே இடிக்கப்பட்டு விடும். அங்கு ஒரு அகல சாலையோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ, அல்லது ஒலிம்பிஸ் கட்டிடமோ எழும். எழும் கட்டாயம். 1970-லிருந்து பிரகடனப் படுத்தப்பட்ட கூவம் மணக்கும் கோஷம் இன்றும் 40 வருடங்களாக கோஷமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தான். ஐந்து வருஷத்துக்கு ஒரு முறை வோட்டு போடுகிறவர்களுக்கெல்லாம் ரூ. ஆயிரமோ ஐயாயிரமோ கிடைத்துவிடுகிறது.

இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே இடைப்புள்ளி எதுவுமே கிடையாதா? லஞ்சம் கொடுத்து, இலவசங்களை வாரி இறைத்து பெற்ற வோட்டுகள் அதிகாரம் செய்பவர்கள் தாம் நாம் இருப்பது ஜனநாயக நாட்டில். சர்வாதிகார ஆட்சியில் அல்ல என்பார்கள். இந்த வாதத்தின் ஆபாசத்தை என்ன சொல்ல?

சீனாவில் இப்போது யோகா ஆங்கிலம் ஹிந்தி, அரபி என்று எல்லா மொழிகளையும் கற்கும் வேகம் பற்றியிருக்கிறது. காரணம் அவை தான் வெளி உறவுக்கும் உலக வாணிப பெருக்கத்திற்கும் சீன பொருளாதார வளத்திற்கும் இட்டுச் செல்லும்.

china_yoga_practitioner2003-ல் பல்லவி அய்யரும் அவரது கணவர் ஜூலியோவும் ஒரு டாங்கோ வகுப்புக்குச் செல்ல அங்கு இருந்த ஒரு சீனப் பெண் “ஓம் சூர்யாய நமஹ” என்று வரவேற்கிறார். அந்தச் சீனப் பெண்ணுக்கு சைன அரசுக்கு இருக்கும் இந்தியப் பகைமை, மண்டாரினில் இதை எப்படி சொலவது? என்று கேட்கவில்லை. நம்மூரில் தான் “ஞாயிறு போற்றுதும்” என்று சொல்லலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. யோகா மையம் நடத்தும் மோகன் அவரது சீன காதலி அழைப்பில் வந்தவர். வந்த இரண்டாவது மாதத்தில் மூன்று டஜன் மாணவர்கள் சேர்ந்தார்கள். மறுபடியும் பல்லவி அய்யர் சந்தித்த போது மோகனின் யோகா மையத்துக்கு 51 கிளைகள். பெய்ஜிங்கில் மாத்திரம் 3500 மாணவரகள். சீனா முழுதும் 10,000 மாணவர்கள். யோகா மீது ஏது இத்தனை மோகம்? யோகாவை நாடுபவர்கள் சைனாவின் செல்வந்தர்கள்.

2002-ல் இந்தியா பெற்ற அந்நிய முதலீடு 5.5 பில்லியன் டாலர். சரிதானா. அதேசமயம் கம்யூனிஸம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் சைனாவில் 2005-ல் அந்நிய முதலீடு 72.4 பில்லியன் டாலர். இந்திய கம்யூனிஸ்டுகள் இது பற்றியெல்லாம் மூச்சு விடுவதில்லை. இந்தியாவை மாத்திரம் தாக்குவார்கள் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு அடிமையாகிவிட்டதாக. சைனா இந்தியாவை விட 15 மடங்கு அதிகம் அடிமையாகிவிட்டதே இந்தக் கணக்கில்!

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னம் ஒரே ஒரு காட்சியை மாத்திரம் சொல்லி, மேலும் அறிய பல்லவி அய்யரின் புத்தகத்துக்குச் செல்லுமாறு சொல்லி முடிக்கிறேன். அடுக்கு மாடி வீட்டை விட்டு பெய்ஜிங்கின் (ஹூடாங் என்று சொல்லப்படும்) பழம் வீடுகள் இருக்கும் பகுதிக்குக் குடிபோக நினைத்து கடைசியில் வீடு ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். பழங்கால வீடு. நவீன வசதிகளுடன் அதன் உள்கட்டமைப்பு மாற்றப் படுகிறது, பல்லவி அய்யர் சொன்ன மாற்றங்களுடன்.  வீட்டுக்குச் சொந்தக்காரர் வூ எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பிக்கிறார். கழிப்பறையைக் காட்டி உபயோகித்துப் பாருங்கள் என்று. அதன் மகத்துவத்தில் பெருமை கொள்கிறார்.

வீடு சின்னதாக நன்றாக இருக்கிறது. வீட்டு நடுவில் ஒரு மரம். அழகாக அதன் அடியில் உட்கார்ந்து கொள்ளலாம்.

திடீரென காலையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் வூ. குழாய் ரிப்பேர் சாமான்களுடன். கதவு திறந்ததும் அனுமதி கூட கேட்காமல் உள்ளே நுழைந்து டாய்லெட்டைக் கழுவுகிறார். குழாய்களை ரிபேர் செய்கிறார். மற்றும் ஒருமுறை வாசலில் துடைப்பத்துடன் நிற்கிறார். வழ்க்கம் போல உள்ளே நுழைந்து மரத்தடியிலும் சுற்றிலும் இருக்கும் குப்பைகளை அகற்றுகிறார். துடைப்பத்தை பல்லவி அய்யரிடம் கொடுக்க மறுக்கிறார்!

ஒரு நாள் தன் மனைவியை அழைத்து வருகிறார். இவர் வேலை செய்ய வூ தன் காரியத்தில் முனைப்பாக இருக்கிறார். சுற்றியிருப்பவர்கள் எல்லாம் வெள்ளைக் காரனை மணந்த ஒரு கருப்பு இந்தியரைப் பார்க்கக் கூடுகிறார்கள்.

வூ ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஞ்சினீயர். அவருக்கு இது போல இன்னும் பல வீடுகள் ஹூடாங்கில் சொந்தம். அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் தன் வேலைகளுக்கு ஒரு மோபெட்டும், தன் மகனுக்கு ஒரு காரும் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மகன் காரில் ஊர் சுற்றுவது தான் வேலை. அவர் தன் மகனுக்கு எங்காவது ஒரு டிரைவர் வேலை வாங்கிக்கொடுக்கும்படி பல்லவியையும் அவர் கணவரையும் கேட்கிறார்.

வூ ஆரம்பத்தில் இம்மாதிரி ஒரு பழைய வீட்டில் தான் இருந்தார். கலாசாரப் புரட்சியின் போது அவர் வீடு பறிபோயிற்று. அவர் எங்கோ தூரத்தில் அகதியாக அனுப்பப் படுகிறார். அங்கு அவரைச்சீர்திருத்த கக்கூஸ் கழுவும் வேலை தரப்படுகிறது. பல வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, டங் சியாவ் பிங் ஆட்சியில் அவர் ஊர் திரும்புகிறார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஒய்வு பெற்றுத் திரும்புகிறார். அந்தச் சமயம் அரசு கொள்கை மாறி யாரும் கொஞ்சம் நிலம் அரசு குத்தகையில் பயிர் செய்து கொள்ளலாம். வீடு வைத்துக்கொள்ளலாம் என்று மாறுகிறது. வூ முதலில் ஒரு வீடும் பின்னர் ஹூடாங்கில் அலைந்து இன்னும் பல வீடுகளும் வாங்குகிறார். இப்போது அவர் கோடீஸ்வரர். சில வருஷங்கள் முன் மக்கள் விரோதி என குற்றம் சாட்டப்பட்டு எங்கோ கக்கூஸ் கழுவியவர். இப்போதும் அவர் குழாய் ரிப்பேர், வீடு பெருக்குவது கக்கூஸ் சுத்தம் செயவது என பல வேலைகள் செய்பவர். முகம் சிணுங்காமல். சந்தோஷமாக. பல சமயம் பல்லவி அய்யரின் விருந்தினராவார்.

இன்னொரு காட்சி. படித்தவன். வேறுஏதோ வேலை செய்தவன். இப்போது ஹூடாங்கில் உள்ள கக்கூஸை கழுவி சுத்தம் செய்கிறான். இதில் பணமும் நிறையக் கிடைக்கிறது. வேலையும் சுலபம்.

சைனாவில் யாரும் எந்த வேலையும் செய்யும் மனப் பக்குவம் பெற்றவர்கள். உழைப்பில் கௌரவம் பார்ப்பதில்லை.

நம்மூரில் நம் வாழ்க்கையில் அனேக நம்பிக்கைகள் நம்மை அடக்கியாள்கின்றன. மூட நம்பிக்கையோ பகுத்தறிவோ என்னவோவாக இருந்துவிட்டுப் போகட்டும்.

மார்க்ஸ் எங்கோ சொல்லியிருக்கிறாராம். ஏழு பேருக்கு மேல் ஒருத்தன் தன் கீழ் வேலைக்கமர்த்தினால் அவனிடம் முதலாளீய சுரண்டல் மனம் தோன்றிவிடுகிறது என. இந்த ஏழு கணக்கு எப்படி வந்ததோ. இருக்கட்டும். சைனாவில் யாரும் ஏழு பேருக்கு மேல் (மார்க்ஸ் சாஸ்திரப்படி) வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், புத்திசாலி சீனர்கள். யாரும் யாருக்கும் கீழ் வேலை செய்வதில்லை, கூட்டுறவு அடிப்படையில் எல்லோரும் வேலையாட்கள் எல்லோரும் முதலாளிகள் தான் –  என்று அரசு விதிகளின் கண்ணில் மிளகாய் தூவி பெரிய தொழில் சாலைகளை அமைத்துக் கொள்கிறார்களாம்.

சட்டத்துக்குச் சட்டமும் ஆயிற்று. தன் காரியத்துக்கும் தடையில்லை.

சுரீந்தர் சிங் என்று ஒரு சர்தார்ஜிக்கு ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்தது. சுரீந்தர் சிங்கின் தலைப்பாகை வெளிநாட்டவரைக் கவரும் என்பது அவர்கள் எண்ணம்.. ஒரு நாள் சுரீந்தர் சிங் கிராப் வைத்துக் கொண்டான் ஹோட்டல் நிர்வாகம் கிராப் வைத்துக்கொண்டாலும் தலைப்பகையை விடக்கூடாது. இல்லையெனில் அவனுக்கு வேலை கிடையாது என்று சொன்னதாம். சீன அரசு போலவே ஹோட்டலுக்கும் தன் வியாபாரத்தில் தான் அக்கரை. சுரீந்தர் சிங்கின் மதம் பற்றி ஏதும் அக்கறை இல்லை.

சைனாவை ஒரு சமயம் சார்ஸ் அசுரத்தனமாகத் தாக்கியது. சீன அரசு அதை மறைத்தது. ஒப்புக்கொள்ள மறுத்தது. ஆனால் அது விஷவேகத்தில் பரவவே, இந்த  இணைய யுகத்தில் எதை மறைக்க முடியும்? உடனே சார்ஸ் தாக்குதலை ஒப்புக்கொண்டு அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டது அரசு.  தீவிரத்தையும் செயல் உத்வேகத்தையும் காட்டியது. ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவ மனை ஏழே நாளில், ஏப்ரல் 24லிருந்து 30க்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதில் 1200 டாக்டர்கள் நர்ஸுகள்.

ஒரு ஊரையே முதலாளிகளின் பங்களா வாசிகளின்  குடியிருப்பாக மாற்றிய ஒரு தொழிலதிபர் கூறுகிறார்:” எங்களூர் மக்கள் கம்பெனி பங்குகள் வைத்திருக்கிறார்கள். நல்ல டிவிடெண்ட் வருகிறது. இது முதலாளித்துவம். எல்லோருக்கும் இலவசமாகக் கல்வி, மருத்துவ உதவி கிடைக்கிறது. இது கம்யூனிசம். மாதா மாதம் சம்பளம் போனஸ் எல்லாம் கிடைக்கிறது. இது சோஷலிசம். இப்படி எல்லாவற்றிலிருந்தும் நல்லதை எடுத்துக்கொள்கிறோம். கெட்டதைத் தள்ளி விடுகிறோம்”

இன்னொரு மேற்கோள்; ”ஆண்டான் அடிமை என்ற நிலபிரபுத்துவ வேற்றுமை மறைந்தது. அதற்குப் பதிலாக கட்சிக்காரன் மற்றவன் என்ற புதிய கோணத்தில் அதிகாரமும் சலுகைகளும் சிலருக்கு மாத்திரம் அமோகமாகக் கிடைத்தன” ( தமிழ் நாட்டைச் சொல்வதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். அந்த நினைப்பு சரியென்றே தோன்றினாலும், சொல்லப்படுவது சைனாவைப்பற்றி.) .

கடைசியாக, “ஜனநாயக இந்தியாவை விட சர்வாதிகார சீனாவில் தான் குடிமக்கள் சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள்” இது பல்லவி அய்யர் ஒரு கட்டுரையில்.

சீனா: விலகும் திரை – பல்லவி அய்யர். தமிழில்: ராமன் ராஜா
கிழக்கு பதிப்பகம். 33/15 எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார் பேட்டை. சென்னை – 18
பக்கங்கள்: 360
விலை: ரூ 200

இணையம்  மூலம் புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பரதனின் மேன்மையை விளக்க இராமாயணத்திலிருந்து ஒரு கதை கூறப்படும். இராமன் வனவாசத்திற்கு சென்ற பிறகு பரதன் அயோத்திக்கு வெளியே ஒரு குடிலை அமைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறான். தினமும் குளிக்க நதிக்கரைக்கு சென்றாக வேண்டும். ஆனால் பொது மக்கள் தன்னை பார்த்து, இராமனை காட்டிற்கு துரத்தி விட்டு ஆட்சியை கைப்பற்றி கொண்டவன் என்று அவதூறு சொல்வார்கள் என்று அஞ்சி பொழுது புலர்வதற்கு முன்பே நீராடிவிட்டு வந்து விடுவானாம். வால்மீகி இராமாயணத்தில் இந்த கதை உள்ளதா என்பது தெரியவில்லை.

இதிலிருந்து எந்த காலத்திலும் பொது ஜனம் என்பவன் முழுமையான ஆதாரத்தின் அடிப்படையில் அல்லாமல் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே முடிவுக்கு வருபவன் என்பது தெரிகிறது.

சரி,ஆனால் அந்த காலத்திலேயே பரதன் நேர்மையானவன் என்று நம்பிய ஒரு சிறு கூட்டமாவது இருந்தே இருக்கும். அவர்களால் பெரும்பான்மையான பொது ஜனத்தின் முன் அனுமானங்களை மாற்ற முடிந்திருக்காது. இந்த கட்டுரையில் நானும் பரதனை நம்பிய ஒருவனை போன்றே பெரும்பான்மையினரின் கருத்திலிருந்து முரண்படுகிறேன். பெரும்பான்மையான பொதுஜனத்தின் முன் அனுமானங்களை மாற்ற முடியாது என்பதை அறிந்தும் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.

தூணிலும் அமேரிக்க எதிர்ப்பு-துரும்பிலும் அமேரிக்க எதிர்ப்பு:

antiamerica உலகில் கம்யூனிஸ்டுகளின் அட்டூழியங்களை “கண்டும் காணாமல்” இருந்த இந்திய அறிவு ஜீவிகள் எதற்கெடுத்தாலும் “அமேரிக்க ஏகாதிபத்தியம்”, “ஐரோப்பியர்களின் காலனித்துவ மனநிலை” என்று மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருந்தார்கள். இன்றும் சிலர் முழங்கி கொண்டிருக்கிறார்கள்.

1990களின் ஆரம்பத்தில் சென்னையில் கன்னிமரா நூலகத்திற்கு முதன்முதலில் ஒருவரால் அழைத்து செல்லப்பட்டேன். சோவியத் யூனியனையும், கம்யூனிஸத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பதாகவோ உள்ள புத்தகங்கள்தான் கண்ணில் படும். Perestroica, Glasnost புராணங்கள் இல்லாத அரசியல் புத்தகங்கள் இருக்காது. அக்காலகட்டத்தில் முழுவதும் புரிய வில்லையெனினும், அந்த சீர்திருத்தங்கள் தேவைப்பட்டதே கம்யூனிஸத்தின் கோரங்களால்தான் என்பது பின்னர் புரிந்தது. அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளில் அமேரிக்க எதிர்ப்பு ஒரு மையப்புள்ளியாகவே இருக்கும்.

சமூகத்திலும் அரசியல்வாதிகளின் பேச்சுகளிலும் “அமேரிக்க ஏகாதிபத்தியம்”, சுவரொட்டிகளிலும் “அமேரிக்க ஏகாதிபத்தியம்” என்று அன்றைய அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் இந்த கோஷத்தை வைத்தே நடந்தன.

பலவிதமான புளுகுமூட்டைகளும் சமூகத்தில் அக்காலகட்டத்தில் இருந்தன.

உதாரணமாக சோவியத் யூனியனில் ஒவ்வொரு குழந்தைக்கும் 3 வயது ஆனவுடனே அது எந்த துறையில் சோபிக்க விரும்புகிறதோ அதற்கேற்ற பயிற்சி வழங்கப்படுகிறது. விதவிதமான வேலைகளை செய்தாலும் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டே சம்பளம் வழங்கப்படும். இன்னும் எத்தனை எத்தனையோ!!!

மின்சார பற்றாக்குறை ஏற்பட்டால் அமேரிக்காதான் காரணமென்று கூறியிருக்க மாட்டார்களே தவிர, நம் நாட்டின் அத்தனை பிரச்சினைகளுக்கும், நம் குறைகளுக்கும் அமேரிக்காதான் காரணம் என்று கூற யாரும் யோசித்ததில்லை.

சுய விமர்சனத்தின் தேவை:

சுய விமர்சனம் (Self Criticism) என்பது ஒரு சமூகத்தின் தார்மீக நெறிமுறைகளை மீளாய்வு செய்யவும், சீர்திருத்தங்களை காலத்திற்கேற்ப மேற்கொள்ளவும் தேவையானது என்று விவரமறிந்தவர்கள் கூறுவார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாமல், விமர்சனம் செய்பவர்களையே சிறையில் அடைத்தோ அல்லது கொன்றோ போடுவது பழைய சோவியத் யூனியனிலும், பெயரளவிற்கு கம்யூனிஸ்டுகள் என்று ஆகாசப்புளுகை அவிழ்த்து விடும் இன்றைய சீனாவிலும் சர்வ சாதாரணமானவை.

சுதந்திர இந்தியாவும் பெயரளவில் “அணி சேரா கொள்கை” என்று உதார் விட்டுக் கொண்டிருந்தாலும் சோவியத் யூனியனுக்கு சலாம் அடித்து கொண்டுதான் இருந்தது.

அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 20ம் நூற்றாண்டில் புரிந்த தவறுகளை முன்னிலை படுத்தும் நம் அறிவுஜீவிகள், அதே தவறுகளை 21ம் நூற்றாண்டில் இந்தியா செய்ய துவங்கியுள்ளதை மறைக்க முயல்கின்றனர். அவற்றை வெளிச்சம் போட்டு காண்பிப்பதும் இந்த கட்டுரையின் நோக்கம்.

தவறுகளை சரிசெய்வதற்கான முதல்படி தவறு செய்கிறோம் என்று ஒப்புக் கொள்வதுதான்.

பகுதி-I அமேரிக்கா எவ்வழி-இந்தியா அவ்வழி

கடந்த 100 வருடங்களாக நடந்த உலக நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து அமேரிக்காவின் மேல் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. முக்கியமாக,

  1. அமேரிக்கா உலகத்தின் போலிஸ்மேனாக நடந்து கொள்கிறது.
  2. அமேரிக்கா ஜனநாயகத்தை ஆதரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு உலகின் பல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது.
  3. அமேரிக்கா சில நேரங்களில் தன் வசதிக்காக உலகின் பல சர்வாதிகாரிகளை ஆதரிக்கிறது.

மேற்கூறிய குற்ற்ச்சாட்டுகளில் “அமேரிக்கா” என்ற இடத்தில் “இந்தியா” என்றும் “உலகின்” என்ற இடத்தில் “தெற்காசியா” என்றும் சொற்களை மாற்றி படித்து பாருங்கள். நம்ப முடியவில்லையா?

சுதந்திர இந்தியா தனது தெற்காசியா மற்றும் சில அண்டை நாடுகளின் நிகழ்வுகளில் தலையிட்டதை விவரமாக பார்க்கலாம்.

மியன்மார் (பர்மா):-

myanmar-status11960களிலிருந்தே இந்நாடு இராணுவ சர்வாதிகாரிகளின் பிடியில்தான் இருந்து வருகிறது. ஆனால் 1990ல் நடந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற ஜனநாயக கட்சிக்கு ஆட்சியை விட்டுக்கொடுக்காமல் இராணுவம் தன் சர்வாதிகார ஆட்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட நாட்டின் இன்றைய சர்வாதிகாரிக்கு சில மாதங்களுக்கு முன், சிவப்பு கம்பள வரவேற்பை இந்தியா அளித்தது.

மனித உரிமை என்பதையே ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்த இராணுவ ஆட்சியுடன் இந்தியா ராஜ்ஜீய உறவுகளை பலபடுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்த முஷரப்ஃபை அமேரிக்கா ஆதரித்தது தவறு என்று கூறும் நாம், மியன்மாரின் சர்வாதிகாரியை இந்தியா ஆதரிப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

இந்தியா மியன்மாரை ஆதரிப்பதற்கு காரணங்களை தேட வேண்டியதில்லை. எரிவாயுவும் , எண்ணெய் வளமும் மியன்மாரின் பல பகுதிகளில் கண்டறியப்படுகின்றன. இவற்றை தங்களின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள சீனா ஒருபுறமும், இந்தியா மறுபுறமும் மியன்மாரில் முயன்று வருகின்றன. அமேரிக்காவும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் மியன்மாரின் மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் இந்தியா மற்றும் சீனாவால் செல்லாததாக்க பட்டுள்ளன.

மாலத்தீவுகள்:-

இந்நாட்டின் முன்னாள் அதிபர் கயூமின் மீது சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டு இருந்தது.1988ல் உள்நாட்டு கலக காரர்களுடன் சேர்ந்து இலங்கையின் தீவிரவாத குழுவான PLOTE, அதிபர் கயூமை பதவியில் இருந்து வெளியேற்ற (Military Coup) முயற்சி செய்தது. இந்திய இராணுவம் தலையிட்டு அதிபர் கயூமுக்கு உதவி செய்து மீண்டும் அவரின் ஆட்சி தொடர வழி செய்தது.

மாலத்தீவின் அதிபர்தான் இந்திய இராணுவ உதவியை நாடினார் என்பது உண்மைதான். ஆனால் இதே அளவுகோலில் தெற்கு வியட்நாமும், தென் கொரியாவும் அமேரிக்க உதவியை நாடின. அதனாலேயே அமேரிக்கா அந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டது என்று கூற முடியும்.

இலங்கை:-

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாத நாளே இல்லை. சில நிகழ்வுகளை மட்டும் நோக்கலாம்.

1982-மே மாதம் 19ம் தேதி சென்னை மாம்பலத்தில் விடுதலை புலிகளுக்கும், PLOTEன் யுதகுழுவுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு PLOTE தீவிரவாதி கொல்லப்பட்டார். பிரபாகரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசு விடுதலை புலிகளின் பிரபாகரன் மற்றும் சிவகுமார் ஆகியோர் தலைக்கு 5 இலட்சம் பரிசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்தியா இலங்கையால் தேடப்பட்டு வந்த பிரபாகரனை இலங்கை அரசிடம் கையளிக்காமல் ஜாமீனில் வெளிவர அனுமதித்தது. பின்னர் நடந்தவை நமக்கு தெரியும்.

இந்திரா காந்தி மற்றும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில், விடுதலை புலிகளுக்கு வெளிப்படையாக தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

1980களில் இந்திய துருப்புகள் கிட்டத்தட்ட 1,50,000 இராணுவத்தினர் இலங்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் பல போராளிக் குழுக்களுடன் போரிட்டனர்.

2010ல் சில மாதங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா அடுத்த நாளே இந்தியாவிற்கு வருகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கிறார். பொன்சேகாவை விடுதலை செய்யவைக்க இலங்கையுடன் பேச வேண்டும் என்று இந்தியாவை கேட்டு கொள்கிறார். இலங்கை நீதிமன்றத்தை நாடாத எதிர் கட்சி தலைவர், அந்நாட்டின் நடவடிக்கைகளில் இந்தியாவால் தலையிட முடியும் என்ற நம்பிக்கையில்தானே இந்தியாவில் முறைப்பாடு செய்கிறார்?

திபெத்:-

dalai-lama-with-nehru

1956ல் தலாய் லாமா இந்தியாவிற்கு விஜயம் செய்யும்போது அன்றைய பிரதமர் நேருவை சந்தித்தார். நம் பிரதமரிடம் தனக்கு அரசியல் புகலிடம் இந்தியாவில் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு நம் பிரதமர் தன் நாடும் சீனாவும் அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்திருப்பதால் அவ்வாறு செய்ய இயலாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அமேரிக்காதான் சீன அட்டூழியங்களுக்கு எதிராக திபெத்திற்கு உதவியது. மேலும் அமேரிக்க முயற்சியால்தான் இந்தியா தலாய் லாமாவுக்கும், ஆயிரக்கணக்கான அவரின் சீடர்களுக்கும் புகலிடம் அளித்தது. தார்மீக நெறிமுறைகளின்படி நம் நாடு திபெத்தியர்களுக்கு உதவ முன்வர வில்லை. அமேரிக்க தலையீட்டிற்கு பின்தான் இந்தியா உதவியது என்பதை குறித்து கொள்வோம்.

பங்களாதேஷ்:-

1971ல் இந்தியா பங்களாதேஷுக்கு விடுதலை பெற்று தந்தது இந்த கட்டுரைக்கு விஷயமல்ல. அன்றைய கிழக்கு பாகிஸ்தானின் வங்காளி படைவீரர்கள் கொரில்லா முறையில் போரிட்டுதான் பாகிஸ்தானின் இராணுவத்தினரை நாட்டை விட்டு துரத்தினர். அந்த வங்காளி கொரில்லா வீரர்களுக்கு இந்திய இராணுவம் உதவி செய்தது. வெளிப்படையாக கூறுவதென்றால் மற்றொரு நாட்டின் ஆயுத குழுவிற்கு உதவி அந்நாட்டின் ஒரு பகுதி சுதந்திர நாடாக மாற இந்தியா உதவியது.

நேபாளம்:-

நேபாளத்துடன் இந்திய உறவு புதியதாக ஏற்பட்டது அல்ல. பழைய வரலாற்றை விட்டு 1996க்கு பிறகு அந்நாட்டின் நிகழ்வுகளை நோக்குவோம். முடியாட்சியை ஒழிக்க முனைந்த மாவோயிஸ்ட் கொரில்லாக்களை ஒழிக்க இந்தியா நேபாளத்திற்கு பல உதவிகளை செய்தது. 2008ல் நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கொரில்லாக்கள் அதிக தொகுதிகளை கைப்பற்றினார்கள். ஆனால் பெரும்பான்மை பெறவில்லை. இந்நிலையில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களின் முக்கிய நிபந்தனையான, தங்கள் போராளிகள் நேபாள இராணுவத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை பிற கட்சிகளால் தள்ளிப்போட பட்டு வந்தது. இவ்விஷயத்தில் நேபாள இராணுவ ஜெனரலுக்கு இந்தியா மறைமுக உதவி செய்தது என்பது ஊரறிந்த ரகசியம். மாவோயிஸ்டுகள் நேபாள இராணுவத்தில் சேர்ந்து விட்டால் சீன தலையீடு அதிகரிக்கும் என்ற இந்திய கவலையை நாம் அவதானிக்கலாம்.

ஆப்கானிஸ்தான்:-

2001ன் இறுதியில் தாலிபான்களின் ஆட்சி அமேரிக்காவால் தூக்கி எறியப்பட்டவுடன் இந்தியா, இராணுவம் அல்லாத மற்ற கட்டமைப்பு வசதிகளை செய்து தர முனைந்தது. இது சுயநலத்திற்குத்தான் என்பது குழந்தைக்கும் தெரியும். பாகிஸ்தானின் தலையீட்டை மட்டுபடுத்த இந்தியா ஆப்கானிஸ்தானை உபயோக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் இரண்டு முறை தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தானின் அரசு, அத்தாக்குதல்களுக்கு பாகிஸ்தானே காரணம் என்று அறிவித்ததை நாம் நோக்கலாம்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளிலெல்லாம் இந்தியா செய்தது தவறு என்று நான் கூறவேயில்லை. இவையெல்லாம் ராஜதந்திரம்தான். இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிற, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல.

என் முறைப்பாடெல்லாம், இவற்றைப்போன்ற நடவடிக்கைகளை அமேரிக்கா பெரிய அளவில் உலகின் பல நாடுகளில் நிகழ்த்தியுள்ளது. அவற்றை தவறுகள் என்று குற்றம் கூறும் நாம், அதே போன்ற தவறுகளை இந்தியா சிறிய அளவில், தன் அண்டை நாடுகளில் நிகழ்த்தும்போது அவற்றை ஏன் மறைக்க முயல வேண்டும். நம் நாட்டின் செயல்களை நியாயப்படுத்த நாம் உபயோகப்படுத்தும் அதே காரணங்கள் அமேரிக்காவாலும் உபயோகப்படுத்த பட முடியும் என்பதை நாம் ஏன் மறக்க வேண்டும்? எதற்கெடுத்தாலும் அமேரிக்காவை ஏன் எதிர்க்க வேண்டும்?

பகுதி-II அமேரிக்கா தவறுகள் புரிய காரணம்

அமேரிக்கா ஏன் தவறுகள் புரிந்தது என்ற கேள்விக்கு விடைகாண அந்த காலகட்டத்தின் பனிப்போர் நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும். அமேரிக்காவிற்கு வேறு வழியே இருக்க வில்லை என்பதே என் கருத்து.

பனிப்போர் காலகட்டத்தில் உலகில் (பொய்) பிரச்சாரம் என்பதை ஒரு வழிமுறையாக அனைத்து கம்யூனிஸ்ட், சோஷியலிஸ்டு நாடுகளும் கடைபிடித்தன.

1990களின் ஆரம்பம் வரை இந்தியாவில் எந்த திரைப்படத்திற்கு சென்றாலும் ஒரு குறும்படத்தை (Films Division, Documentary) காண்பிப்பார்கள். ஒவ்வொரு திரையரங்கும் இதை காண்பிக்க வேண்டும் என்ற சட்டமும் இருந்தது.

எனக்கு நினைவுக்கு வரும் ஒரு ஆவணப்படத்தில் ஒரே ஒரு கிராமத்தில் ஒரே ஒரு விவசாயி இருப்பார். இவர் மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட விவசாய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மிக அதிக மகசூலை பெறுவதாகவும், தனக்கு பெரிய அளவில் இலாபம் கிடைத்ததாகவும் அளப்பார். இந்த குறும்படத்தை காணும் மக்கள் குறிப்பாக நகரவாசிகள் புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள். இந்தியா விவசாயிகளை கண்ணுக்கு கண்ணாக பாதுகாக்கிறது, நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது என்று புல்லரித்து போயிருக்கலாம். ஆனால் சோஷலிசத்தில் நடந்தது என்ன என்று நமக்கு தெரியும்.

ஆனால் 1989க்கு பின் உலகில் நடைபெற்ற மாற்றங்களுக்கு பின், குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி, அதை தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிஸத்திலிருந்து விலகியது போன்றவை பழங்கதைகளை அறிவுபூர்வமாக நம்மை யோசிக்க வைக்கின்றன.

லெனின், ஸ்டாலின் போன்ற கொடுங்கோலர்கள் சோவியத் யூனியனில் அடித்த கொட்டங்கள் அவர்களின் கைப்பட எழுதிய ஆவணங்களின் மூலம் இன்று கிடைத்திருக்கின்றன. இந்த கொடுங்கோலர்களைப்பற்றி ஏற்கெனவே பலர் எழுதியிருப்பதால் இக்கட்டுரையில் எழுத வேண்டிய தேவை இல்லை.

ஆனால் கிழக்கு ஐரோப்பிய நாடான ரோமானியாவில் நடந்த அட்டூழியங்களை பற்றி நான் அறிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ரோமானியா:
இது வேறு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளை போலல்லாமல் சோவியத் யூனியனின் நேரடி ஆட்சியில் 1960 வரை இருந்தது. 1989 வரை சோவியத் யூனியனுக்கு ஜால்ரா அடித்து கொண்டிருந்தது. ஜால்ரா அடித்தது குற்றமில்லை. இந்நாட்டில் நடந்த அட்டூழியங்கள் சிலவற்றை பார்ப்போம். 1989ல் தாங்கள் வீழ்ந்து விடுவோம் என்பது தெரிந்தவுடன் சில உயர்நிலை கம்யூனிஸ்ட் இராணுவ அதிகாரிகள் லாரி லாரியாக ஆவணங்களை எரித்திருக்கிறார்கள். டன் டன்னாக காகிதங்கள் இருந்ததால் என்னதான் எரித்தும் தீரவில்லை. பாதி எரிந்து பாதி எரியாத நிலையில் அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டார்கள்.

அப்படி என்னதான் இருந்தது அந்த ஆவணங்களில்?-2.2 கோடி ஜனத்தொகை இருந்த ரோமானியாவில் 20 இலட்சம் பேர் வேவு பார்க்க பட்டார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோப்பு. அந்த 20 இலட்சம் பேரின் கோப்புகளில் முக்கியமானவர்களின் கோப்புகளை எரிப்பதைத்தான் மேலே பார்த்தோம். வேவு பார்த்தவர்களில் வெறும் 10 வயது சிறுவர் கூட அடங்குவர்.

யார் யாரெல்லாம் வேவு பார்க்க பட்டனர்.? வேற்று நாட்டினருடன் பேசினால், வெளிநாட்டினருடன் தொலைபேசியில் பேசினால், உள்ளூர் பிரச்சினைகளால் ஆட்சிக்கு எதிராக பேசினால்… என்று இந்த காரணங்கள் நீளும். 20 இலட்சம் பொது ஜனத்தின் தொலைபேசி உரையாடல்களை ஒலிநாடாவில் பதிவு செய்து, பின் அந்த உரையாடல்களை காகிதத்தில் பதிவுசெய்து (Transcript) வைத்துள்ளனர். இதற்கு அந்த கிறுக்கர்கள் எவ்வளவு பேரை வேலையில் அமர்த்தி இருப்பார்கள்? எவ்வளவு பெரிய அறைகளை கட்டியிருப்பார்கள் என்று நினைத்தாலே ஒரு பக்கம் பிரமிப்பாகவும் ஒரு பக்கம் அருவருப்பாகவும் இருக்கிறது. தங்கள் நாட்டின் 10 சதவிகித மக்களை ஒற்றர்கள் என்று சந்தேக கண் கொண்டு பார்த்தவர்கள் வேறு என்னதான் செய்திருக்க மாட்டார்கள்? (Source-BBC-The past secrets of Communists)

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அமேரிக்கா மீது வைக்க முடியுமா? யோசிக்க வேண்டும். அமேரிக்கா, கம்யூனிஸ்ட் நாடுகளின் மீது குறிப்பாக சோவியத் யூனியன் மீது வைத்த குற்றச்சாட்டுகள் பெருமளவில் உண்மைதான் என்பது தெளிவாகி இருக்கிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் நாடுகள் மேற்கத்திய நாடுகளின் மீது வைத்த குற்றச்சாட்டுகள் புளுகு மூட்டைகள் என்றும் தெளிவாகி இருக்கிறது. இவற்றை தெளிவு படுத்தியவை கம்யூனிஸ்ட் நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள்.

மேற்கூறிய விவரங்களின் மூலம் , அமேரிக்கா ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் குழுக்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியது என்றாலும், அமேரிக்கா சோவியத் யூனியனுக்கு ஒரு எதிர்வினையாக இருந்தால் மட்டுமே தான் வாழ முடியும் என்ற நிலையிலிருந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

time_gorbachevஇன்னொரு உதாரணமாக க்யூபாவில் பயிராகும் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்கிய சோவியத் யூனியன், 3ல் 1 பங்கு விலைக்கு எரிசக்திக்கான எண்ணெயை பல சகாப்தங்களுக்கு மானிய விலையில்
வழங்கியதையும் நாம் கவனித்தில் வைக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் அதிரடியாக 5,00,000 பேரை வேலையிலிருந்து க்யூபா அரசாங்கம் நீக்கியதை நினைவு படுத்தி கொள்வோம். “குந்தி தின்றால் குன்றும் அழியும்” என்னும் முதுமொழிக்கேற்ப வரவு இல்லாமல் செலவை (அரசு ஊழியர்களின் சம்பளத்தை) செய்ய முடியாது என்பதை கடைசியாக க்யூபா அரசு ஒப்பு கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கடந்தகால சூழ்நிலைகளில் அமேரிக்கா “தார்மீக உயர்நிலை”யை கடைபிடித்திருந்தால் அது அழிந்து அதன் வேரில் கம்யூனிஸ ஆஸிட் ஊற்றப்பட்டிருக்கும்.

அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும் என்பதே என் கருத்து.

(தொடரும்)