பத்மநாபனின் செல்வம்: மகாராஜா மார்த்தாண்ட வர்மாவுடன் ஒரு நேர்காணல்

(DERSPIEGEL  என்ற ஜெர்மானிய பத்திரிகைக்கு திருவனந்தபுர மஹாராஜா உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா அளித்த நேர்முகம் –  தமிழில் வி. ரமணன் )

The pills have different strengths and are usually taken by mouth. In a situation where you don't have access to the internet or if you simply can't read the label/package insert, your best bet is online clomid prescription Leesburg to take a swab from inside the package and send a sample away for testing by a professional lab. More serious side effects include problems with heart rhythm, abnormal liver function, and decreased immunity, which may lead to hospitalization.

It works as a appetite suppressant, and it works as a pain-relieving agent. This medication works to reduce inflammation in order clomid online the body and it is used to treat asthma and other chronic lung disorders. In the second, the court held that an implied-in-fact contract existed as a matter of law.

But in fact, you should consider that you are being tested, and it is very unlikely that you will be taking this drug for the rest of your life. Buy cheap amoxicillin 250 mg 250 tablets online in usa and canada, pharmacies like ciprofloxacin for dogs price Gohāna veda pharmacy are selling amoxicillin 250 mg 250 tablets online. What are the side affects if a woman uses accutane?

பத்மநாபசுவாமி கோவிலுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு  என்ன?

நாங்கள் சேரர்கள். முன்னாளில் தென்னிந்தியாவில் ஆட்சி செலுத்திய நான்கு அரச வம்சங்களுள் ஒன்று எங்களுடையது.  எங்கள் குடும்பம் நீண்ட நெடிய பரம்பரையாக,  பல கிளைகளை கொண்டுள்ளது.  1750 வாக்கில் திருவாங்கூர் சமஸ்தானம் அளவிலும் வளத்திலும் செழிப்பாக இருந்தது.  என் மூதாதைய மன்னர்களில் ஒருவர் மிக தனித்தன்மை வாய்ந்த,  சரித்திர பிரசித்தி பெற்ற  ஒரு ஆன்மீக முடிவை எடுத்தார்.  ஆன்மீகத்தில் ஈர்க்கபட்ட அவர் எங்கள் குலதெய்வமான பத்மநாப சுவாமியிடம் அவரது செல்வம் அனைத்தையும்  நாட்டையும் கோவிலுக்கு கொடுத்துச் சரணடைந்தார்.   நமது குடும்பம், கோவிலையும் அதிலுள்ள சொத்துகளையும் நாட்டையும்  அவர் சார்பில்   பாதுகாத்து வர வேண்டும். ஆனால் நமது குடும்பத்தினருக்கு அதனால் எந்த விதச் செருக்குமிருக்கக் கூடாது என்று சொல்லி  இந்த முடிவை எடுத்தார்.  கலிங்கப்போரில் பேரரசர் அசோகர் எல்லாவற்றையும் புத்தருக்கு அர்ப்பணித்தமாதிரி, தன் செல்வத்தையும் நாட்டையுமே ஆண்டவருக்கு அர்ப்பணித்திருந்தார்.  அதிகப் பணம் ஆணவத்தை வளர்க்கும் என்று எணணிய அவர் திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள்  பத்மநாபருக்கு “தாஸர்கள்” “ என அறிவித்தார்.  தாஸர்கள் என்றால் கட்டளையேற்று ஊழியம் செய்பவர்கள். வேலைக்காரர்கள் இல்லை. ஒரு வேலையாள் ராஜினாமா செய்யலாம், ஒய்வு பெறலாம். ஆனால் தாஸர்கள் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்யவேண்டும்.

பத்மநாபசுவாமி கோவில்

இந்தியாவின் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று உங்களுடையது. ஆனால் மற்ற முன்னாள் அரச குடும்பங்கள் போல இல்லாமல் ஏன் மிக எளிமையாகவும்  சிக்கனமாகவும் வாழ்கிறீர்கள்?

இதைப் பற்றி சொல்லுவதற்கு நாம் கொஞ்சம் கடந்த காலத்திற்குப் போக வேண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியர்கள் எழுந்தது 1857ல் என எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. 1741ல் டச்சுக் காரர்கள் இங்கு காலடியெடுத்து வைத்த உடனேயே அவர்களை தோற்கடித்த ஆசியசக்தி திருவாங்கூர் சமஸ்தானம். போர் முடிந்ததும் அத்தனை டச்சுக்காரர்களும் எங்கள் முதாதையர் முன் மண்டியிட்டிருக்கிறார்கள். ஒரு டச்சுக்காரர் பெனடிக்ட்ஸ் என்பவர் எங்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிருக்கிறார். அவரை கிரேட் கபித்தான் என்று அழைத்திருக்கிறார்கள். உண்மையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியான ஃபிராங்களின் ரூஸ்வெல்ட்டின் முதாதையர் என்பதை, பின்னாளில் அவரது பேரன் எங்களது பழைய ஆவணங்களை பார்க்க இங்கு வந்த போது தெரிந்து கொண்டேன்.

உத்திராடம் திருநாள் மன்னர் மார்த்தாண்டவர்மா பின்னர் 1839ல் கிட்டத்தட்ட சிப்பாய் புரட்சி எழுவதற்கு  ஏறக்குறைய 20 ஆண்டுகள் முன்னால் பிரிட்டிஷ்காரர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுந்தோம். அதற்கான தண்டனை கடுமையாக இருந்தது. ஐம்பதாயிரம் எண்ணிக்கையிலான எங்களது  போலீசையையும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு, தலைநகரையும் கொல்லத்துக்கு மாற்றி, அவர்களது  இரண்டு பிரிட்டிஷ் ராணுவ ரெஜிமெண்டுகளை நிறுத்தி அதன் செலவை எங்களை ஏற்கச் சொன்னார்கள். தாமஸ்மன்ரோ தன்னையே திருவாங்கூரின் திவானாக அறிவித்து கொண்டார். நாங்கள் அதற்கும் தளராமல் இருந்தபோது  மத போதகர்களை கொண்டு வந்தனர். எங்கள் மன்னர் குடும்பங்கள் அப்போதும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்கவில்லை.  நாங்கள் எப்போதாவது வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது உண்டு; ஆனால் அதனால் எங்கள் எளிய வாழ்க்கை முறை எந்த விதத்திலும் பாதிக்கவோ, மாறவோ இல்லை.  இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், வெளியில் இருந்து எத்தனையோ ஊடுபாடுகள் ஏற்பட்ட போதும், எங்கள் வாழ்க்கை முறை சமய ஆன்மீக  நம்பிக்கைகளால் சூழப்பட்டிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.

”அந்த செல்வம் யாருக்கும்  சொந்தம் இல்லை” நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை – மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள்.

இப்போது கோவில் ரகசிய அறைகள் திறக்கப் பட்டு விட்டன. உலகம் முழுவதும் உங்கள் நன்கொடைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த அளவற்ற திடீர் கவனம், விமர்சனம் என கோவிலைச் சுற்றி நிகழுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும், நான் அங்கு என்ன நடக்கிறது என்று கருத்து  சொல்லமுடியாது. விஷயம் கோர்ட்டில் உள்ளது.  இருந்தும் இது மட்டில் சொல்லுகிறேன், அரசாங்கம் கோவில் பொக்கிஷங்களை கணக்கெடுப்பதிலோ, அதிக பாதுகாப்பு போடுவதிலோ எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் தயவு செய்து அந்த பொருட்களை கோவிலிலிருந்து நீக்கப் படக்கூடாது. அந்த செல்வம் யாருக்கும்  சொந்தம் இல்லை, நிச்சயமாக எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை. அவை கடவுளுக்கே சொந்தம்; அவ்வாறு இருப்பதை நமது சட்டம் அனுமதிக்கிறது. கடவுளின் செல்வம் பற்றி  இப்படி விவாதங்கள் உள்ளது துரதிருஷ்டமானது.  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். மற்றபடி நான் என் ஆலோசகர்களை கேட்கவேண்டும். எங்கள் குடும்பம் பல நூற்றாண்டுகளாகக் கோவிலுக்குப் பொருட்கள் நன்கொடை எல்லாம் அளித்து வருகிறது. நான் கோவில் தலைமை புரவலர், நான் ஒவ்வொரு நாளும் அங்கு போகிறேன். நான் ஒரு நாள் போக விட்டுபோனால் கூட  நான் பழைய திருவாங்கூர் பாரம்பரியபடி  – ரூ 166,35 அபராதம் செலுத்திவிட்டு தான் மறுநாள் போக வேண்டும்.

ஆனால் அந்த செல்வத்தை ஏழைகளுக்காகச் சிறப்பாகப் பயன்படுத்த வைக்க முடியும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?

இப்போது இந்தியாவில் படித்தவர்கள் நிறைய இருக்கிறோம், ஆனால் கோவிலுக்குள் நிகழ்ந்த தானங்களைப் பற்றிய இந்த கருத்து முற்போக்கானது அல்ல. மெல்ல நம் இந்திய அடையாளத்தை இழந்து வருகிறோம் (என்பதையே இது காட்டுகிறது). இப்பொழுது பணமே எல்லாமாகி விட்டது.  ஆனால் இதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.  என்னால் உலகத்தை மாற்ற முடியாததால் நான் ஏமாற்றமடைந்தவனாகயிருப்பதை விட வேதாந்தியாக இருப்பதையே விரும்புகிறேன்.

marthandavarma

இப்படிபட்ட மதநம்பிக்கைகள் எல்லாம் குருட்டுநம்பிக்கைகள் என்பது பகுத்தறிவாளார்கள் வாதிடுகின்றனரே…

தயவு செய்து இங்கிலாந்தில் 1500களில் எட்டாம் ஹென்றியின்  காலத்தை நினைவுபடுத்தி பாருங்கள். அவருக்கு இரண்டு விஷயங்களில் மிகுந்த நாட்டம். மனைவிகளும், பணமும். அதனால் சர்ச்சுகளில் சுரண்டிக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் தன் மனைவியை (Catherine of Aragon) விவாகரத்துச் செய்ய விரும்பிய போது, சிக்கிக் கொண்டார்.  அவரது மனைவி தீவிர கத்தோலிக்கராக இருந்ததால் சர்ச் விவாக ரத்தை அனுமதிக்க மறுத்துவிட்டது. அவருடைய கிறிஸ்தவ குருவின் ஆலோசனையின் பேரில் ஒரு புதிய சர்ச்சை உருவாக்கினார்.  ஒரு விவாகரத்துக்காக ஒரு மதப் பிரிவையே உருவாக்கினார். இது மட்டும் பகுத்தறிவா?

சுய நலமிகுந்து தாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்ளாம் தவறு என்ற எண்ணம்  வளர்ந்து வரும் இன்றைய மக்களிடம்  நமது நம்பிக்கைகளை புரிய வைப்பது மிக கடினம்.  நான் என்ன செய்கிறேன் என்பதை விட எனக்கு என்ன கிடைக்கும் என்றே  இன்றைய உலகம் இயங்குகிறது. தென் ஆப்பிரிகாவில் ஒரு வனவிலங்கு பூங்காவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. பல கொடிய விலங்குகளைப் பார்த்தபின்  வந்த கைடிடம் எது மிக பயங்கரமான மிருகம் என கேட்டேன்.  அவர்  முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினார்.

உங்கள் குடும்பத்தின் வருமான ஆதாரம் என்ன? உங்கள் குடும்பம் எப்படி வாழ்க்கை நடத்துகிறது?

நாங்கள் டிராவல் எஜென்சி மற்றும் ஹோட்டல் தொழில்களில் இருக்கிறோம் .நான் ஒரு  பிரிட்டிஷ் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சேர்மனாக இருக்கிறேன். ஏதோ பத்திரிகையில் எழுதியிருப்பது போல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிளகு அனுப்பவில்லை. நாங்கள் ஏழு அறக்கட்டளைகள் இயக்குகிறோம். ஏழைகளின் கல்வி, மருத்துவம்  மற்றும் வீடுகள் போன்றவற்றிற்காக  ஒரு ஆண்டுக்கு ஐந்து முதல் எட்டு லட்சம் வரை செலவழிக்கிறோம்.பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறோம்,. குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் வருமானத்திலிருந்து  நிறைய செய்கிறார்கள். எங்கள் சமூக பணிகளை ஒரு அரசும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது பற்றி கவலையில்லை. நாங்கள் விரும்புவதினால்  செய்கிறோம்

தங்கச் சிலைகள், ரத்தினம் மற்றும் வைரங்கள், வைடூரியங்கள், தங்கம் பதித்த நெப்போலியன் கால மற்றும் கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள் இருப்பது அனைத்தும் உண்மையா?

நான் அந்த அறைகள் உள்ளே போனது இல்லை.  கடவுளுக்குச் சேவை செய்யும் மன்னர்கள் இப்படிபட்ட செல்வக் குவியலை பார்க்கக் கூடாது. அதனால் செல்வத்தின் மீது ஆசை வரக்கூடும். ஆனால் அறைகளின் உள்ளே மதிப்பு மிக்க செல்வம் இருப்பது தெரியும்.

இந்த பொது விவாதங்களினால் உங்களை விட உங்கள் குடும்பத்தின் இளைய தலைமுறையினர் கோபமாக இருக்கிறார்களா?

எங்கள் குடும்பத்திலேயே நான்தான் மிகுந்த கோபக்காரன். ஆனால் இந்த விஷயத்தில்  எங்கள் அனைவரது உணர்வும் ஒரே மாதிரிதான். நான் ஒரு படை வீரானாயிருந்தவன். 15 ஆண்டுகள் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டில் கேப்டானாக இருந்தவன். நாங்கள் கொடுத்த நன்கொடைகளுக்காக எங்களை விமர்சிப்பவர்களை நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒன்றுதான். எவரோ  செய்துவிட்டு போன செயல்களுக்காக இவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்?  அவர்கள் நம்பும் விஷயத்திற்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? கடவுளுக்கு கொடுத்த நன்கொடைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை விவாதம்?

uthradan-thirunaal-marthanda-varma

90 வயதில், நீங்கள் ஒரு கைத்தடி பயன்படுத்தக் கூட இல்லை.  உங்கள் தினசரி வாழ்க்கை எப்படிப்பட்டது ?

நாங்கள் மிகவும் கண்டிப்புடனும் எளிமையாகவும்  வளர்க்கப்பட்டவன். என் நாள் காலை 4 மணிக்கு தொடங்குகிறது யோகா செய்த பின் வேதங்கள் படிப்பேன். பால் தவிர பானங்கள் அருந்துவதில்லை. (teetotaler. )  வெஜிட்டேரியன் உண்வு மட்டுமே. தினமும் கோவிலுக்குச் சென்று பத்மநாபருடன் தனியே 10 நிமிடங்களை கழித்து விட்டுத் திரும்புவேன். பின் எனக்கு பிடித்த ஹாபியான  “மீடீயா சர்ஜரி” செய்வேன். எளிய காலை உணவிற்குப் பின் செய்தித்தாட்கள்களை படித்து விட்டு கத்தரித்து வைத்திருந்த முக்கிய செய்திகளை நோட்புக்கில் ஒட்டி வைப்பேன். என்னிடம் 30 ஆண்டு கலெக்‌ஷனிருக்கிறது.  ஒரு வேளை எங்கள் குடும்பக் குழந்தைகளுக்கு அவற்றில் ஆர்வம் இல்லா விட்டால் அவைகளை  டிரஸ்ட் பள்ளிகளுக்கு கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன். பின் பொது மக்கள் என்னை சந்திக்க வருவார்கள். விழாக்களுக்கு அழைப்பர்.  நான் நல்ல பேச்சாளன். பிறகு மதியம் சுமார் இருபது நிமிடம் படுத்துறங்குவேன். இரவு 9.45க்கு படுக்கைக்கு போவேன்.  எப்போதுமே நன்றாக தூங்கிவிடுவேன். மனத்தில் எந்த பாரமும் இல்லாதால் எளிதாக உடனே தூக்கம் வருகிறது.

இப்போது, இந்த பொக்கிஷங்களை இன்ஷ்யூர் செய்யப் போகிறீர்களா? அதைப்  பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது  ஏற்கனவே இன்ஷ்யூர்  செய்யப்பட்டுள்ளதா?

(சிரிக்கிறார்) அவைகள் திருட்டுபோனாலும்  நான் கவலைப் படமாட்டேன்.  அப்படி எதாவது நடந்தால் கடவுள் பார்த்துகொள்வார்..

கர்நாடக இசைக் கலைஞர்கள் சுவாதித் திருநாள், ஒவிய கலைஞர் ராஜா ரவிவர்மா போன்றவர்கள் உங்கள்  புகழ்பெற்ற முதாதையர்கள். உங்களுக்கு எதில் ஆர்வம்?

இசைக்கும் ஓவியத்திற்கும் தெய்வீகத்தையும் மனித உணர்வையும் கொடுத்த மாபெரும் கலைஞர்களின் பாரம்பரியம் தொடர்கிறது  நான் கலைகளை நேசிப்பவன். அழகிய சிலைகளை சேகரிக்கிறேன். ஓருமுறை வெனிஸ் நகரில் ஒரு அழகான பீங்கான் சிலையைப் பார்த்தேன் .ஊஞ்சலில் ஆடும் பெண்.  ஆடும்பொழுது  அவள் கால் தரையில்  படுமிடத்தில்  மணலின் தடம் கூட தத்ரூமாகயிருந்தது. விலை 100 பவுண்டுகள். அன்னிய செலாவணி கடுமையாக இருந்த காலம் அது. என்னால் 40 பவுண்டுகள் தான் தர முடிந்தது என்பதால் வந்துவிட்டேன். கடைக்காரர் கூப்பிட்டு நான் கேட்ட விலைக்குக் கொடுத்தார்.  அவர் சொன்ன காரணம் “கண்ணை மூடிக் கொண்டு ஒரே மாதிரி  இருநூறு சிலைகளை வாங்குபவர் அல்ல நீங்கள், நுணுக்கமான வேலைப் பாடுகளுக்கு மதிப்பளிப்பவர் என்று தெரிகிறது” என்றார்.

கேரளா 50 ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஒரு கம்யூனிஸ்ட் கோட்டையாக உள்ளது.  ஆனாலும் மக்கள் உஙகளை மன்னராகவே மதிக்கிறார்கள். உங்களை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இது உங்களுக்கு விசித்திரமாகயிருக்கிறதா?

ஆமாம். ஆச்சரியம் தான். ஏனெனில் நான் மிக எளிமையாக இதையெல்லாம் விரும்பாமல் தான் இருக்கிறேன்.  ஹரித்துவாரில் என் குருவின் கூட்டங்களுக்கு போனால்  கூட பின் வரிசையில்தான் இதே முண்டு – சட்டை அணிந்தே அமர்கிறேன்.  யாராவது திருவனந்தபுரம் மன்னர் வந்திருக்கிறாமே எங்கே என்றால் கையை உயர்த்துவேன். பலர் நம்பியதில்லை.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான – ராஜஸ்தான் மற்றும் பிற இடங்களில் உள்ள அரச குடும்பங்களுடன் ஓப்பிடும்போது  நீங்கள் எந்த அளவிற்கு பணக்காரர்கள்?

அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுபவனில்லை.  இந்த தகவல்  ஒருக்கால் உங்களுக்கு உதவலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் பீரங்கி சல்யூட் வழக்கமிருந்த்து.  மிக பணக்கார சமாஸ்தானத்திற்கு அதிகபட்சம்  21 என்பதில் துவங்கி  மிக சிறிய சம்ஸ்தானத்திற்கு 11 வரை என்று ஒரு ஆர்டர்   இருந்தது. அதில் திருவாங்கூருக்கு 21. உலக போருக்கு  நாங்கள் படை தராததிற்காக அதை 19 ஆக குறைத்தார்கள்.

உங்கள் வாரிசு யார்?

மருமக்கள் வாரிசு முறை பரம்பரையை பின்ப்ற்றுபவ்ர்கள் நாங்கள்.. எனக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிரார்கள். ஆனால் என் சகோதரியின் மகன் தான் எனக்கு அடுத்த ராஜா.  ஒரு முறை ஒரு ஐரோப்பிய மாது எனனை சந்தித்தபோது இந்த எளிதில் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வாரிசு முறையைப் பற்றி  அவருக்கு விளக்கினேன்.. அவர் திரும்பிப்போய் தன் நண்பர்களிடம். அவர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட புரியவில்லை ஆனால் அது எதுவாகயிருந்தாலும் பெண்களுக்கு நல்லது என்பதை புரிந்துகொண்டேன்  என்றாராம், பெண்ணின் உரிமையை பல காலமாக போற்றும் அமைப்பு எங்களுடையது. கேரளா மெதுவாக மீண்டும் ஆணாதிக்கப்  போக்குக்கு மாறி வருகிறது. அது நல்லதல்ல. பொதுவாகவே நமது நாட்டில் பெண்களை இரண்டாம் வகுப்பு குடிமக்களாகதான் நடத்துகிறோம். நீங்கள் ஒரு மனிதனை பார்க்கும்போது ஒரு நபரைத்தான் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணை பார்க்கும்போது ஒரு குடும்பத்தையே பார்க்கிறீர்கள்.

தினசரி காலையில் கோவிலில் தெய்வத்துடன் 10 நிமிடம் தனியாக யிருக்கிறீர்கள் அரசனும் தெய்வமுமாக! அந்த வேளையில் எப்படி உணர்கிறீர்கள்?

ஒவ்வோரு முறையும் மெய்சிலிர்த்து புல்லரித்து போகும்  அந்த நிகழ்வு.  ஒரு அற்புதமான பரவசமான தருணம்.