தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் உச்சநீதிமன்றம் வழக்கம் போல தனது சிறப்பான பங்கை ஆற்றிவிட்டது. ஹிந்து மரபுக்கு குந்தகமாக செயல்பட விரும்புபவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுறுசுறுப்பாகியுள்ள இக்கால கட்டத்தில் நாம் இந்தப் பண்டிகையை எதற்காக கொண்டாடி வருகிறோம் என்பது பற்றி, நூலாராய்ச்சியின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துக்களை அறிவது மிக அவசியம். அதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் “பட்டாசு வெடித்தல்” எதற்காக என்பதனை அறிவது அவசியமாகிறது.
It is caused when the nervous system makes long-lasting and persistent problems with your body's pain and temperature control systems. I’ve never had trouble paying for my son’s medications, Campo Belo misoprostol price cvs except my other kid’s medications. Side effects include stomach bleeding, and if they happen, then go to a doctor to prevent complications.
You can buy amoxicillin in australia from online pharmacy. I have to be honest, i was skeptical due clomid 50mg price in kenya about purchasing this item from the website. In the event that the patient develops nausea, a severe allergic reaction to the drug, or liver failure, tamoxifen is no longer recommended for patients who develop cancer in the breast, and the medication should be withdrawn for at least 4 weeks before beginning treatment with an anti-cancer agent.
He works with his own pharmaceutical firm in the name of dr. The Brčko ciprofloxacin manufacturer coupon most common side effects of prednisone are fatigue, dry mouth, constipation, and headache. This article examines the relationship between human papillomavirus (hpv) infection and cervical cancer.
பத்மபூஷன் திரு வே ராகவனின் ஆராய்ச்சி
பத்மபூஷன் திரு. வே. ராகவன் (1908-1979) மிகவும் மதிக்கப்பட்ட ஒரு ஸம்ஸ்க்ருத அறிஞர். Festivals, Sports and Past time of India (1979) எனும் நூல் அவரால் எழுதப்பட்டது. அந்த நூல் ஹிந்துப் பண்டிகைகள் பற்றி ஆழமான ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலிலிருந்து சில கருத்துக்களை தொகுத்து மொழிபெயர்த்து இங்கே அளிக்கிறேன்.
ஒவ்வொரு ஹிந்து பண்டிகைக்கும் அது கொண்டாடப் படுவதற்காக காரணங்கள் மாறுபட்டுக்கொண்டு வருகின்றன. அது கொண்டாடப்படும் விதமும் மாறுகிறது. தொன்றுதொட்டு. ஆஸ்வயுஜ/புரட்டாசி (செப்டம்பர் முடிவில் அல்லது அக்டோபர் துவக்கத்தில் வரும்) அமாவாசை துவங்கி, கார்த்திகை பௌர்ணமி வரை பல உற்சவங்கள் கொண்டாடப்பட்டன என்பதற்கு நூலாதாரம் உள்ளது. தீபாவளி, காலத்தின் ஓட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்ட காலகட்டத்தினுடைய பண்டிகைகளின் தொகுப்பாக ஆகியுள்ளது. அனைத்துமே ஏறக்குறைய ஒளி தொடர்பான விழாக்கள் தான். (பக்கம் 58.)
வேதங்களில் தீபாவளி?
தீபாவளி பண்டிகை பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழைக் காலம் கழிந்து இருளும், ஈரமும் வடிந்த பின் இலையுதிர்காலத்தின் துவக்கத்தில் ஒளியின் உற்சவமாக பண்டைய காலத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. (ப.171)
ரிக்வேதத்திலும், ஶுக்ல யஜுர்வேதத்திலும் ஒளியைப் போற்றுவது பற்றி பல குறிப்புகள் உள்ளன. புத்தரும் கூட “ஆத்ம தீபோ பவ” (உனக்கு நீயே ஒளியாகு) என்று உபதேசித்தார்.(ப.162). மேலும், தீபாவளி பற்றி வாத்ஸ்யாயனரின் காமஸூத்ரம் (பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டு), நாகாநந்தம் எனும் ஸம்ஸ்க்ருத நாடகம் (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு), ஸோமதேவரின் யசஸ்திலக சம்பூ (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு) போன்ற நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.( (ப.165))
நரக சதுர்தசி
தீபாவளியை நரக சதுர்தசி என்கிறோம். நரகாசுரனை பகவான் க்ருஷ்ணர் வதைத்த தினமாகக் கொண்டாடுகின்றோம். அதர்மத்தை தர்மம் வென்ற நாளாக தற்போது இந்த விழா கொண்டாடப்படுகிறது. நரக சதுர்தசிக்கு மற்றொரு விளக்கமும் உண்டு. யமன் ஆட்சி புரியும் நகரத்திற்கு நரகம் என்று பெயர். மனிதர்கள் நரகத்திற்குப் போகமல் இருப்பதற்காகவும், அகால மரணம் அடையாமல் இருப்பதற்காகவும் (கங்கா) ஸ்னானம் முதலியவை தீபாவளி தினத்தில் செய்யப்படுகின்றன. என்று பத்மபுராண குறிப்பு உணர்த்துகிறது. (பத்மபுராணம் காண்டம் 4 அத்யாயம் 124 ஸ்லோகம் 4,6,9,10) (ப.165)
முன்னோர்களும் தீபாவளியும்
முன்னோர்களுக்கு மிக உகந்த மகாளய பட்சத்திற்குப் பின் வருவதனால் தீபாவளிக்கும் முன்னோர்களுக்கும், யமனுக்கும் தொடர்பு உள்ளது என்பது தெளிவு. மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூவுலகிற்கு வந்து தர்ப்பணம் முதலியவற்றால் அளிக்கப்படும் உணவினை ஏற்கிறார்கள். இந்த காலகட்டத்தின் கடைசியில் யமனுக்கும் பூஜை செய்யப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்குப் பின் வரும் த்விதியை திதி யம-த்விதீயை என்று அழைக்கப்படுகிறது. யமனுக்கு தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. (ப.166)
தீபாவளியில் பட்டாசு
தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள் எப்போது வந்தன? இது ஒன்றும் புதிய பழக்கமல்ல. தீபாவளி பண்டிகையின் மிக புராதனமான அம்சம் இது. இன்று கொண்டாட்டத்திற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. ஆனால் பண்டைய காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு வேறு காரணமிருந்தது. மகாளய பட்சத்தில் பூவுலகிற்கு வந்த முன்னோர்கள் திரும்பிச் செல்லும் காலம் தீபாவளி. அவர்கள் தங்கள் லோகத்திற்குத் திரும்பச் செல்லும் வழியினை ஒளிமயமாக்கத்தான் உயர்ந்த கம்பங்களில் தீப்பந்தங்கள் பண்டைய காலத்தில் ஏற்றப்பட்டன. ஆகாயத்தில் வாணவேடிக்கைகளும் கூட இதற்காகத்தான் தீபாவளி சந்தர்பத்தில் ஏற்படுத்தப்பட்டன. பண்டைய நூல்களில் இதற்கு “உல்கா தானம்” என்று பெயர். இது பற்றி ஒரு குறிப்பு வருமாறு
“உல்கா ஹஸ்தா நரா: குர்யு: பித்ரூ’ணாம் மார்க³த³ர்ஶனம்” (வாசஸ்பத்யம் ப. 1360)
கையில் தீப்பந்தம் ஏந்தி மாந்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு (திரும்பிசெல்ல) வழிகாட்ட வேண்டும். (ப.167)
தீபாவளி-க்ருத்யம் (Chandra Shum Shere Collection, Bodlien, Oxofrd, D.824, xiv (works between 16-19th Century)) எனும் நூலில் தீபாவளியன்று செய்யப்பட வேண்டிய சடங்குகள் கூறப்பட்டுள்ளன. அதிகாலையில் எண்ணைக் குளியலை முடித்துக்கொண்டு, லக்ஷ்மி, குபேரன், இந்த்ரன் ஆகியோர்களின் திருவுருவங்களை வழிபட்டு தீபச்ராத்தம் எனும் சடங்கு செய்யப்பட வேண்டும். மேலுலகிற்குத் திரும்பிச்செல்லும் முன்னோர்களின் பாதை ஒளிர இது செய்யப்படுகிறது. அது தொடர்பான ஒரு ஸம்ஸ்க்ருதச் செய்யுள் வருமாறு –
யமலோகம் பரித்யஜய ஆக³தா யே மஹாலயே |
உஜ்ஜ்வலஜ்யோதிஷா வர்த்ம ப்ரபஶ்யந்தோ வ்ரஜந்து தே ||
(மகாளயத்தில் யமலோகத்தை விட்டு நம்மிடம் வந்த முன்னோர்கள், தங்கள் பாதை ஒளிமிகுந்ததாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துக்கொண்டே திரும்பச்செல்லட்டும்). (ப.167)
மெக்ஸிகோ தேசத்திலும் கூட இதே காலகட்டத்தில் (நவம்பர் 2 தேதி) “All Souls Day” எனும் விழா கொண்டாடப்படுகிறது. முன்னோர்களின் கல்லறைகளில் இனிப்பு வகைகள், பட்டாசுகள் இந்தச் சந்தர்பத்தில் படைக்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. சைனாவில் Lanterns Day, ஜப்பானில் “போன் மட்ஸூரி” போன்ற விழாக்கள் இதே காரணத்திற்காக கொண்டாடப்படுகின்றன. பண்டைய எகிப்திலும் கூட இது போன்றதொரு பண்டிகை இருந்தது. (ப.170)
விஜய நகர ஸாம்ராஜ்யத்திலும் (பொ.யு. 1336 முதல்) , மொகலாயர்களின் காலகட்டத்திலும், மராட்டிய பேஷ்வாக்கள் ஆட்சியிலும் கூட மகாநவமியினை தொடர்ந்து வாணவேடிக்கைகள் விசேஷமாக செய்யப்பட்டன. ஒரிய அரசனான ப்ரதாப ருத்ரனின் (பொ.யு. 1497-1539) ஆட்சியில் வாணவேடிக்கைகள் நடந்தது பற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளத்திலும் காஷ்மீரத்திலும் கூட வாணவேடிக்கைகள் இருந்தது பற்றி குறிப்புகள் கிடைத்துள்ளன. விசேஷமாக கேரளத்தில் நீலகண்டன் என்பவரால் “வெடிக்கம்ப விதி” என்று பட்டாசுகள் தயாரிப்பு பற்றி ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது. (ப.211).
பதினெட்டாம் (பொ.யு.) நூற்றாண்டில் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் தீபாவளி சந்தர்பத்தில் லட்சக்கணக்கில் தீபங்கள் ஏற்றப்பட்டு, நான்கு நாட்கள் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் அந்தப் பகுதியின் அரசரால் நடத்தப்பட்டது என்பது பற்றிய ஆதாரங்களை கொடுக்கிறார் பி.கே கோடே எனும் அறிஞர் (P.K.Gode Studies, Vol.V, Studies in Indian Cultural History, Vol.II, 1960, The History of Fireworks in India, p.31-56)
இவ்வாறு மிகவும் புராதனமான, பல ஆழமான காரணங்கள் கொண்ட, எல்லா நாகரீகங்களுக்கும் பொதுவான, களிப்பும் ஒளியும் மிகுந்ததான, இந்த தீபாவளி பண்டிகை நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் சொத்து. பண்டைய மரபுத் தொடர்ச்சியின் இழை. இந்த கலாச்சார பொக்கிஷத்தை இழக்கலாமா? இந்த மரபுத் தொடர்ச்சியின் இழை அறுபடலாமா?
இந்த தீபாவளி பண்டிகை மேலும் சிறப்பாகவும் மகிழ்வுடனும் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும், இயற்கை மாசுபடாமல் பட்டாசுகளை தயாரிக்கும் முறை என்ன, என்பது பற்றி சிந்தித்து அதற்குத் தகுந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தான் விவேகம். மாறாக, காலங்காலமாக நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த பண்டிகை பற்றி, மக்களை கலந்தாலோசிக்காமல், அவர்களிடையே ஒத்த கருத்தை உருவாக்காமல், கலாச்சார புரிந்துணர்வில்லாமல் கட்டுப்பாடுகளை விதிப்பது எதிர்மறையான உணர்வுகளையே தூண்டும் அல்லவா?
இந்த தீபாவளித் திருநாளில் தீபாவளி, மற்றும் இது போன்ற பண்டைய அர்த்தமுள்ள ஹிந்து கலாச்சார நிகழ்வுகள் பற்றிய விவேக ஒளி அனைவரிலும் பரவ அந்தப் பரமன் அருள்புரியட்டும்.
கட்டுரையாசிரியர் ஜெயராமன் மகாதேவன் வேத, சாஸ்திரங்களிலும், யோகத்திலும் ஆழ்ந்த புலமைபெற்ற சம்ஸ்கிருத அறிஞர். சென்னை கிருஷ்ணமாசார்யா யோக மந்திரத்தில் ஆய்வுத்துறை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவரது எழுத்துக்களை கீழ்க்கண்ட இணையதளங்களில் வாசிக்கலாம். https://independent.academia.edu/jayaramanMahadevan
http://yoga-literary-research.blogspot.in/2015/10/the-books.html
http://alarka-bhasitam.blogspot.in/