தமிழகத்தில் ஜனவரி கடைசி வாரம் மிகவும் பரபரப்பான நிகழ்வுகளால் திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சி போல மாறி இருந்தது. இந்த நிகழ்வுகளின் அடிநாதம் கமலஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தால் விளைந்தது. இந்த நிகழ்வுகள், நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை, நமது தலைவர்களை, நமது கலைஞர்களை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது எனில் மிகையில்லை.
Goodrx doxycycline monohydrate for acne is approved for use in the united states. Vardenafil tablets are used to cost of clomid in india Bückeburg treat erectile dysfunction. Glucophage retard is a glucosamine/chondroitin sulfate supplement.
The price of the medication is not always affordable and sometimes you may have to spend a lot of money to get your prescription filled. It is used only on Espoo women during the first trimester of pregnancy to prevent premature labor. The recommended dose for ivermectin is 200mg for patients.
Can i use nolvadex 20 mg on a plane the study authors concluded, "in conclusion, we have shown that the combination of the two vitamins has a beneficial effect on reducing the incidence of breast cancer in the general population of postmenopausal women." Some pharmacies will take order from the loratadine 10 mg prescription manufacturer or the mail. Priligy tablets are used to treat patients who have epilepsy.

நடிகர் கமலஹாசன் இயக்கி, தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ படம் அதன் தயாரிப்பு உத்திகளுக்காக பரவலான கவனம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு நிலவியது. இடையே ‘திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே டிடி.எச்-சில் படம் வெளியாகும்’ என்ற கமலின் அறிவிப்பால் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடகம் சில நாட்களுக்கு நடந்தது.
அந்த நாடகம் அமுங்கிய வேளை, இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்திரித்திருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் துவங்கின. படத்தின் முன்னோட்ட துண்டுக் காட்சிகளைக் கண்டு (டிரெய்லர்) இந்த முடிவுக்கு முஸ்லிம் அமைப்புகள் வந்தன.
இது தொடர்பாக கமலை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்தபோது, படம் வெளியாகும் முன்னர் கண்டிப்பாக அவர்களுக்கு திரையிட்டுக் காட்டுவதாக உறுதி அளித்தாராம். இதைத் தான், வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொண்ட கதை என்பார்கள்.

திட்டமிட்டபடி விஸ்வரூபம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். அதற்கு முன் இந்தப் படத்தை தனது ஆருயிர் நண்பர்களான ‘இஸ்லாமிய சகோதரர்’களுக்கு திரையிட்டுக் காட்டினார் கமல். படத்தில் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் பயங்கரவாதிகள் குறித்த காட்சிகள் இருக்கவே, இஸ்லாமிய சகோதரர்கள் வெகுண்டார்கள். இந்தப் படம் இஸ்லாமியர்களை தவறாக சித்திரிக்கிறது என்று போர்க்கொடி உயர்த்தினார்கள்.
அவர்களை சமாளிக்க கமலால் முடியவில்லை. ”நான் என்றும் இஸ்லாமியர்களின் நண்பன்; இஸ்லாமியர்களை உயர்வாகக் காட்டுவதே எனது நோக்கம்” என்றெலாம் அவர் மன்றாடினார். ‘அது எப்படி, படத்தில் வரும் பயங்கரவாதிகள் அனைவரையும் இஸ்லாமியர்களாகக் காட்டலாம்? பயங்கரவாதிகள் குர்ஆன் ஓதும் காட்சிகள் கூடாது. ஒரு ஆப்கன் பயங்கரவாதி தமிழ் பேசுவதாக வரும் காட்சி தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது தவறான (!) அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும்’ என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. மாநில அரசின் தலைமை செயலரை நேரில் சந்தித்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்குமாறும், அவ்வாறு தடுக்காவிட்டால் மறுநாள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்கள். ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து வைத்த கோரிக்கையைக் கண்டு மிரண்ட தமிழக அரசு, 15 நாட்களுக்கு இப்படத்துக்கு தடை விதித்தது.
இந்தத் தடை முக்கியமான விவாதத்தை கிளப்பியது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) சான்றளித்த பிறகு எந்தப் படத்தையும் எந்த அரசும் தடை செய்யக் கூடாது. இதற்கு பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் ஆதரவாக உள்ளன. ஆனால், தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி அனுமதித்த ‘விஸ்வரூபம்’ படத்தை தன்னிச்சையாக தடை செய்தது.

இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அரசின் தடையை விலக்கினார். ஆயினும் மறுநாள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டு இப்படம் வெளியாகாமல் தமிழக அரசு தடுத்தது. சில இடங்களில் படம் திரையிடப்பட்டபோதும் அரை மணி நேரத்தில் படம் நிறுத்தப்பட்டது; சில இடங்களில் திரையரங்குகள் தாக்கப்பட்டன. இதனிடையே, தடை விலக்க உத்தரவுக்கு எதிரான ஆணையை மேல் முறையீட்டில் பெற்ற அரசு, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை தொடர்வதாக அறிவித்தது. இதனால் பல இடங்களில் கமல் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், ‘விஸ்வரூபம் திரையிடப்படும் தமிழகத்தில் உள்ள ஐநூறுக்கு மேற்பட்ட திரையரங்குகளுக்கு காவல்துறையால் பாதுகாப்பு வழங்க முடியாது; இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கிய பிறகே படத்தை வெளியிட முடியும்’ என்று அரசு அறிவித்தது.

இந்த தொடர் நிகழ்வுகளால் ஜனவரி 25 முதல் மாதக் கடைசி வரை, ஊடக வட்டாரங்களில் விஸ்வரூபமே பேச்சாக இருந்தது. இதற்கு, கமலுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான தனிப்பட்ட பகையே காரணம் என்று சிண்டு முடிய முயன்றார் ராசதந்திரி கருணாநிதி. அதிகாரப் பசி கொண்ட ப.சி.யை பிரதமராக தகுதி படைத்தவர் என்று ஒரு கூட்டத்தில் கமல் பேசியதால் தான் ஜெயலலிதா இவ்வாறு பழி வாங்குகிறார் என்றும் ஒரு பிரசாரம் உலா வந்தது. கடைசியில் ஜெயலலிதாவே பேட்டி அளித்து, இந்த ஊகங்களை மறுக்க வேண்டியதாயிற்று.
தமிழக அரசின் நிர்பந்தத்தால் முஸ்லிம் அமைப்புகளுடன் மீண்டும் பேச்சு நடத்தி, படத்தின் ஆட்சேபகரமான காட்சிகளில் கத்தரி போட்டு வெளியிட கமல் உறுதி அளித்துவிட்டார். இதற்காக அரசு- கமல் தரப்பு- முஸ்லிம் தரப்பு என்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார் மனிதநேய (?) மக்கள் கட்சித் தலைவர் ஒருவர்.
அதன்படி, தணிக்கைத் துறையை விட மேலானவர்களான இஸ்லாமிய அமைப்பினர் கூறிய பல ‘பிழை’களை திருத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் ‘கலைஞானி’ கமல். இப்போது இஸ்லாமிய அமைப்புகளும் கமல் தரப்பும், அரசு தலைமை செயலாளர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அரசும் விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை நீக்கி கொள்வதாக அறிவித்திருக்கிறது. வரும் 8-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தகவல்.
இப்போதைக்கு அரசும் இஸ்லாமிய அமைப்புகளும் செய்த சண்டித்தனத்தால் கருத்து சுதந்திரம் கத்திரி போடப்பட்டிருக்கிறது. ஆயினும், இந்த சர்ச்சை உருவாக்கி உள்ள பல கேள்விகளை கத்தரி போட்டு தடுத்துவிட முடியாது.
கமலுக்கு சில கேள்விகள்:
1. சென்சார் போர்டில் சான்றும் அனுமதியும் பெற்ற பிறகு எந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சொன்னீர்கள். ஆனால், சென்சார் போர்டு அனுமதித்த படத்தை வெளியீட்டுக்கு முன்னதாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஏன் திரையிட்டுக் காட்டினீர்கள்? உங்களுக்கே சென்சார் போர்டு மீது நம்பிக்கை இல்லையா?
2. இது தொடர்பான தொலைகாட்சி விவாதத்தில், இயக்குனர் சீனு ராமசாமி, ”எனது நீர்ப்பறவை படத்துக்கு கிறிஸ்தவர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்கள். படத்தை தங்களுக்கு திரையிட்டுக் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என்று சொன்னார்கள் .நான் மறுத்து விட்டேன்” என்றார். அவருக்கு இருந்த தெளிவும் துணிவும் உங்களுக்கு ஏன் இல்லை?

3. இந்தப் படத்தை தயாரிக்க சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்துள்ளேன் என்று தான் உருகினீர்களே ஒழிய, கருத்து சுதந்திரம் குறித்து உங்களிடம் தார்மிக ஆவேசம் இல்லாமல் போனது ஏன்? ‘மன்மதன் அம்பு’ படத்தில் வரலட்சுமி விரதத்தை கேலி பேசும் வாலியின் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது படத்தின் தயாரிப்பாளர் அதை நீக்க ஒப்புக் கொண்டார். ஆனால் அதை ஏற்க மறுத்து, நீங்கள் கருத்து சுதந்திரம் என்று கொண்டாடினீர்கள். இப்போதும் ‘கருத்து சுதந்திரம் தான் எனது லட்சியம்’ என்று நெஞ்சு நிமிர்த்தி நீங்கள் ஏன் பேசவில்லை?
4. இப்போதும்கூட, தேவையில்லாமல் விநாயகரை (அப்படி ஒரு கடவுள் இல்லையாம்) வம்புக்கு இழுக்கிறீர்கள். அதாவது ஹிந்து தெய்வங்களை கேலி பேசினால் முஸ்லிம்கள் மகிழ்ந்து உங்கள் படத்துக்கு ஆதரவளிப்பர் என்று எதிர்பார்க்கிறீர்களா? இது பச்சையான சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா?

5. ‘தசாவதாரம்’ படத்தில் வரலாற்றைத் திரித்து சைவ- வைணவ மோதல் காட்சிகளை திணித்தீர்கள். அதை ஹிந்துக்கள் எதிர்த்தபோதும், நீங்கள் அதை பொருட்படுத்தவே இல்லை. இப்போது மட்டும் முஸ்லிம்களின் எதிர்ப்புக்காக படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட எப்படி சம்மதித்தீர்கள்? இல்லாவிட்டால் அவர்கள் ‘வெட்டி விடுவார்கள்’ என்ற பயம் தானே காரணம்?
6. நிலைமை கைமீறிப் போன பிறகு, மதச்சார்பில்லாத நாட்டுக்கு ஓடிப் போவேன் என்றீர்களே. இந்தியா தவிர வேறெங்கு இளித்தவாய்த் தனமான மதச்சார்பற்ற நாடு இருக்கிறது என்று சொல்வீர்களா? அதாவது ஹிந்துக்களை நீங்கள் குட்டிக் கொண்டிருந்தபொதெல்லாம் உங்கள் மதச்சார்பின்மைக்கு ஆபத்து நேரவில்லை; முஸ்லிம்களை விமர்சித்தால் ஆபத்தாகி விடுகிறது என்று சொல்கிறீர்கள் என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?
7. இத்தனைக்குப் பிறகும் இஸ்லாமிய சகோதரர்களை நான் நம்புகிறேன். அவர்கள் தவறு செய்யவில்லை என்று கைப்பிள்ளைத்தனமாக, எவ்வாறு அரசை குற்றம் சாட்டும் விதமாக பேசுகிறீர்கள்? இவன் எத்தனை அடித்தாலும் தாங்குவான் என்று உங்களை எதிர்க்கும் மதவெறிக் கும்பல் கருதி விடாதா?
அரசுக்கு சில கேள்விகள்:
1. நாட்டில் எத்தனையோ தலைபோகும் பிரச்னைகள் இருக்கும்போது, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, விஸ்வரூபம் படத்தை தடுக்க அரசு ஏன் இந்த அளவுக்கு மல்லுக் கட்டியது? முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்கி விடுவார்கள் என்று அரசு அஞ்சுகிறதா? அப்படியானால், கைப்பிடி அளவுள்ள மதவெறிக் கும்பலை கையாளத் தெரியாத அளவுக்கு தமிழக அரசு பலவீனமானதா? அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் எந்தப் பிரச்னையும் இன்றி திரையிடப்பட்டதே. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அதிகம் என்றோ, அவர்களால் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றோ அரசு கருதுகிறதா?

2. சென்னை உயர் நீதிமன்றம் தடை நீக்கிய அரை மணிநேரத்தில், இரவோடு இரவாக அத உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் அளவுக்கு இப்படத்தை இஸ்லாமிய சகோதரர்கள் எதிர்க்கிறார்களா? அவ்வாறு உளவுத் துறை கூறும் தகவல்கள் உண்மையெனில், கலவரத்தைத் தூண்ட வாய்ப்புள்ள அமைப்புகள் மீது ஏன் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது? விஸ்வரூபம் படம் வெளியான சில திரையரங்குகளைத் தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
3. சிறுபான்மையினருக்கு ஆதரவாக நடந்தால் அதிமுக-வுக்கு லாபம் என்று கணக்கிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இன்னமுமா இஸ்லாமியர்களை அதிமுக நம்புகிறது? அவ்வாறு ஜெயலலிதாவை தவறாக வழிநடத்தும் மதியூகி யாரோ?
4. விஸ்வரூபம் பட விவகாரத்தில் மாநில அரசு மீதான நம்பகத்தன்மை படுபாதாளத்துக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதையேனும் உளவுத் துறை அரசுக்கு தெரிவித்துள்ளதா?
5. விஸ்வரூபம விவகாரத்தால் மின்வெட்டு போன்ற அத்தியாவசிய பிரச்னைகளில் இருந்து மக்கள் மனம் மாறிவிடும் என்று ஜெயலலிதா நினைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. உண்மையில் ஏற்கனவே நற்பெயரை இழந்துவரும் அதிமுக அரசுக்கு ‘விஸ்வரூபம்’ உச்சகட்ட சறுக்கல் என்பதை யாராவது எடுத்துச் சொல்வார்களா?

6. எதிர்காலத்தில் ஹிந்துக்களை கேவலப்படுத்தும் திரைப்படங்கள் வெளிவருமானால், அதற்கும் ஜெயலலிதாவின் மதச்சார்பற்ற அரசு தடை விதிக்குமா? ‘விஸ்வரூபம் படம் தமிழகத்தில் ஒடாது’ என்று தவ்ஹீத் ஜமாத் மாநிலம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி இருப்பதற்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறதா?
7. கருத்து சுதந்திரம் என்பது தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சிறப்புரிமையா? ஹிந்து இயக்கங்கள் நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அரசு, முன்னறிவிப்பின்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் இஸ்லாமிய இயக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அரசு அவர்களுக்கு அஞ்சுகிறதா?
இஸ்லாமிய அமைப்புகளுக்கு சில கேள்விகள்:
1. இனிமேல் முஸ்லிம் பெயருடன் யாரும் எந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கினாலும் உங்களிடம் தான் அனுமதி பெற வேண்டுமா? இனிமேல் யார் எந்தப் படம் எடுத்தாலும் அதற்கான சென்சார் போர்டு சான்றிதழை உங்களிடம் தான் பெற வேண்டுமா?
2. ஆப்கனில் உள்ள தீவிரவாதிகளை குறித்து படம் எடுத்தால், நீங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? 1910களில் கிலாபத் இயக்கத்தின் போது துருக்கியின் கலிபா பதவி இழந்தார் என்பதற்காக, சம்பந்தமே இல்லாமல் இந்தியாவில் சக இந்துக்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட அப்போதைய முஸ்லிம் லீக்கிற்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லையே! நீங்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

3. கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஒருவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தக் குற்றவாளிகள் இன்னமும் பலர் கைதாகவில்லை என்பதை நீங்கள் அறிந்திராமல் இருக்க முடியாது. ‘அன்வர்’ என்ற படம் கேரளத்தில் முஸ்லிம்களாலேயே எடுக்கப்பட்டு தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்ததை நீங்கள் அறிவீர்களா? அதில் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு கதாநாயகனான முஸ்லிம் கதாபாத்திரம் அளிக்கும் தண்டனையை பார்த்தீர்களா?
4. ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், ‘விஸ்வரூபம்’ படத்திலும் கதாநாயகனான கமல் முஸ்லிம் கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார் என்பதை ஏன் உங்களால் பெருமிதமாகக் காண முடியவில்லை? ஓர் இஸ்லாமியர் பயங்கரவாதத்தை எதிர்ப்பது பாவமா? உங்கள் கண்மூடித்தனமான எதிர்ப்பு பொதுமக்களிடையே உங்களைப் பற்றி உருவாக்கும் எதிர்மறை சித்திரம் குறித்து உணர்ந்திருக்கிறீர்களா? உங்களை மாநில அரசு தவறாக முன்னிறுத்துவதாக நீங்கள் உணரவில்லையா?

5. குண்டுவீசித் தாக்குவதும், திரையரங்குகளைத் தாக்குவதும், பத்திரிகைகளைக் கொளுத்துவதும் தான், நமது அரசியல்வாதிகளையும் ஊடக அறிஞர்களையும், திரையுலக நண்பர்களையும் அச்சத்தில் வைத்திருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஓர் இயல்பான உரையாடல் மூலமாக உங்கள் எதிர்ப்பை உங்களால் பதிவு செய்ய முடியாதா?
6. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது என்று ‘பத்வா’ வெளிடுகிறீர்களே. உங்கள் இஸ்லாமில் கருத்து சுதந்திரமே கிடையாதா? உண்மையிலேயே முகமது நபி இவ்வாறு தான் கூறினாரா?
7. ”முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்கள்” என்ற பொதுவான கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவீர்களா? இதை மாற்ற மனப்பூர்வமாக என்ன நடவடிக்கையை இதுவரை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்? முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாகவே உங்கள் செயல்பாடுகள் அமைந்துள்ளதை உணர்ந்திருக்கிறீர்களா?
சில பொதுவான அச்சங்கள்…
உலகம் முழுவதுமே இஸ்லாமியர்களை எவ்வாறு கையாள்வது என்பது தான் நாகரீக அரசுகளின் சிக்கலாக மாறி உள்ளது. பிரான்ஸ் தேசத்தில் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்ட சமயத்திலும், டென்மார்க்கில் ஒருவர் முகமது நபி கார்ட்டூன் வெளியிட்ட சமயத்திலும், அமெரிக்காவில் ஒரு கிறிஸ்தவ வெறியன் முகமது நபியை கேவலப்படுத்தும் விதமாக ஒரு திரைப்படம் எடுத்த சமயத்திலும், அதன் எதிரொலிகள் உலக அளவில் வன்முறையாகவே காணப்பட்டன.

யாரோ பற்றவைத்த தீக்கு சம்பந்தம் இல்லாத பலர் இரையாவது சகஜமாகி இருக்கிறது. முகமது நபியை அவமதிக்கும் அமெரிக்கப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை- அண்ணா சாலையில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய காட்டு தர்பாரை யாரும் மறந்திருக்க முடியாது.
அண்மையில் நடிகர் விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் பல காட்சிகள் முஸ்லிம்களை கேவலமாக சித்திரிப்பதாகக் கூறி, முஸ்லிம்கள் மிரட்டல் விடுத்ததால் அந்தப் படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டன. அதற்கு அப்போது தமிழக அரசு துணை போனது. “சென்சார் போர்டு சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை இஸ்லாமியர்களுக்காக மறு தணிக்கை செய்யலாமா?” என்று எந்த அறிவுஜீவியும் அப்போது கேட்கவில்லை.
அண்மையில் சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளம்பெண் ஒருவர் தலை துண்டித்து தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து செய்தி வெளியிட்ட தமிழ்ப் பத்திரிகைகள் மிரட்டப்பட்டன. இளம்பெண் தண்டிக்கப்பட்டதை விமர்சித்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் என்ற சாகுல் ஹமீது மிக கேவலமாக வசைபாடப்பட்டார்.

கேரளத்தில் கல்லூரித் தேர்வுத்தாளில் முஸ்லிம்களை அவமதிக்கும் விதமான கேள்வியை தயாரித்த கிறிஸ்தவப் பேராசிரியர் ஒருவரின் கை வெட்டப்பட்டது. அண்மையில் நடிகர் கமலையும் அவரது மகள் சுருதி கமல்ஹாசனையும் சம்பந்தப்படுத்தி மிக கேவலமாகப் பேசி இருக்கிறார் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஒருவர். அது யூ-டியூபிலும் உலா வருகிறது.
மொத்தத்தில் ஹிந்துக்களை விமர்சிப்பதாகட்டும், வன்முறையில் இறங்குவதாகட்டும், முஸ்லிம் அமைப்புகளிடையே பெரும் போட்டியே நிலவுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய ஜவ்ஹீத் ஜமாஅத், மனிதநேய மக்கள் கட்சி (தமுமுக-வின் அரசியல் பிரிவு), சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சி (பாப்புலர் ப்ரண்ட் அமைப்பின் அரசியல் கட்சி) , முஸ்லிம் லீக், தேசிய லீக் என, எந்த ஒரு முஸ்லிம் அமைப்பாக இருந்தாலும், அமைதி வழி யாருக்கும் பிடித்தமானதாக இல்லை.
ஏனெனில், இது அவர்களது மரபிலேயே ஊறிவிட்ட ஒன்றாகிவிட்டது. முஸ்லிம் மதத்தில் உள்ள பழமைவாதிகளை விட அதில் உள்ள சீர்திருத்தவாதிகள் தான் சமீபகாலமாக அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். ஏனெனில், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல அது ஓர் சர்வதேச அரசியல் இயக்கத்தின் வழிமுறை. இந்தப் பிணைப்பிலிருந்து இஸ்லாம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை.

நமது அச்சம் என்னவென்றால், கமலுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, நாளை யாருக்கும் ஏற்படலாம். அப்போது நமது அரசுகளும் இதே கலைஞர்களும் ஊடகங்களும் எப்படி செயல்படுவர்? விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு அஞ்சி, மென்மையான இலக்குகளை திரையுலகும் ஊடகங்களும் தாக்குவது அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. (இப்போதே கமல் அதைத் தானே செய்கிறார்?) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி தானே?
இன்று இஸ்லாமியர்களுக்கு அஞ்சி மண்டியிடும் கலைஞர்களும் அரசும், நாளை இஸ்லாமியர்களை திருப்திப்படுத்த ஹிந்துக்களை மிதிக்கவும் தயங்க மாட்டார்கள். இதற்கு சரித்திரம் பல முன்னுதாரணங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இதுவே இப்போதைய நமது ஆகப் பெரிய கவலை.