பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

Ap Result Graphicsபாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.

Family studies were performed and were reviewed to assess the risk of a similar phenotype in other uncles. A total number of 23 ra patients with active disease on stable antirheumatic therapy were Las Delicias buy xenical online amazon prescribed augmentin alaptare (100 mg twice daily orally). Moxie: it is not something that can be handled with one pill.

It has been shown in several studies that in the long term, the development of the child’s own sexual identity is one of the factors leading to the development of a healthy, happy adulthood. Propecia australia buy much propecia australia buy prope. But the way the whole thing started, they thought, you know, they have to be out of there.

It may be helpful to have a prescription before taking the medication. How to treat the causes of https://abnovo.eu/services/one-stop-shop/ premature ejaculation with an organic testosterone supplement. It is one of the most commonly used medicines worldwide.

இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல பிரதேசங்களிலும் பாஜக வெற்றி கண்டுள்ளது.

மணிப்பூர், மிசோரம், சிக்கிம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. பெரிய மாநிலங்களில் கேரளத்தில் மட்டுமே பாஜகவால் சாதிக்க முடியவில்லை. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் பெரும் வெற்றி பெறாவிட்டாலும், தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக.

ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதியில் பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில்,  தெலங்கானா பகுதியில் அம்மாநிலத்தின் உதயத்திற்குப் போராடிய தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும் வெற்றி பெற்றுள்ளது.  எதிர்பார்த்தது போலவே,  இம்மாநிலத்தின் இரு பகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது. மாறாக பாஜக இரு பிரதேசங்களிலும் தனது வெற்றிகளை உறுதியாகப் பதிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் தே.ஜ.கூட்டணி  37.6% வாக்குகளுடன், 19 தொகுதிகளில் வென்றுள்ளது.

கேரளத்தில் 10.3% வாக்கு:

Kerala Result Graphicsகேரளத்தில் பாஜகவின் தோல்விக்குக் காரணம் தெளிவு. அம்மாநிலத்தின் மக்கள் விகிதாசாரம் சிறுபான்மையினரின் ஆதிக்கத்துக்கு உகந்த்தாக இருப்பதே அங்கு பாஜகவின் வெற்றிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளது.

இருந்தும் இம்முறை கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 15470 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக வேட்பாளர் ஓ.ராஜகோபால் தோல்வியுற்றார். இம்முறை கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 18,56,750 (சதவிகிதம்: 10.3%).

கேரளத்தில் மார்க்சிஸ்ட்-5, இந்திய கம்யூனிஸ்ட்-1, ஆதரவு சுயேச்சைகள்-2 உள்பட இடது முன்னணியில் 8 தொகுதிகளில் வென்றுள்ளனர். காங்கிரஸ்-8, முஸ்லிம் லீக்-2 கேரள காங்கிரஸ் (மோனி பிரிவு)-1, ஆர்எஸ்பி (போட்டிப் பிரிவு)-1 உள்பட ஜனநாயக முன்னணியில் 12 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

இம்மாநிலத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் இருப்பதால், அவர்களே தேர்தல் களத்தைத் தீர்மானித்து வருகிறார்கள். தவிர, காங்கிரஸுக்கு மாற்று இடது முன்னணியே என்ற நிலை இங்கு நீடிக்கிறது. இம்மாநிலத்தில் பாஜக வெல்ல இன்னமும் தொலைதூரம் செல்ல வேண்டும் என்பது நிதர்சனம். ஆனாலும், அங்கு பாஜகவின் தோல்வி கௌரவமானதாகவே கணிக்கப்படுகிறது.

ஒடிசாவில் அரசியல் மாற்று:

Odisa result Graphicsஒடிசா மாநிலத்திலோ, இம்முறை பெரும் அரசியல் மாற்றத்திற்கான கால்கோள் இடப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஆளும் பிஜு ஜனதாதளத்திற்கு (பிஜேடி) அரசியல் மாற்றாக இருந்த காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இடத்தை பாஜக நெருங்கியுள்ளது.

இம்மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பாஜக ஓரிடத்தில் வென்றுள்ளது. மீதமுள்ள அனைத்து இடங்களிலும் பிஜேடி வென்றாலும், இரண்டாவதாக 9 இடங்களில் பாஜக வந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 46,38,619. (சதவிகிதம்: 21.5%) இங்கு 26 சதவிகிதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் ஓரிடத்திலும் வெல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

ஒடிசாவில் பிஜேடி பாஜகவுடன் நட்புக் கட்சியாக இருந்த காலத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இப்போது பத்தாண்டுகளாக பிஜேடி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்ட சூழலில், பாஜக தன்னை பிஜேடிக்கு மாற்றாக வளர்த்துக் கொண்டுள்ளது.

வருங்காலத்தில் இம்மாநிலத்தில் பாஜக சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. குஜராத் மாநில அரசியல்நிலை இதேபோலத் தான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது.மிக விரைவில் பாஜகவின் தோழமைக் கட்சியாக மீண்டு பிஜேடி கட்சி மாற வாய்ப்புள்ளது.

மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆர்ப்பாட்டமற்ற அரசியலும், குற்றச்சாட்டுகள் அதிகம் எழாத ஆட்சி நடத்தியதும், இம்மாநிலத்தில் அவரது ஆட்சியை நீடிக்கச் செய்ததுடன் (117/147) , அதிக எம்.பி.க்களையும் அளித்துள்ளது. இங்கு பாஜகவுக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

வங்கத்தில் ஊடுருவிய பாஜக:

WB Result Graphicsஇதுவரையிலும் பாஜக மேற்குவங்க மாநிலத்தில் தனித்து நின்று தனது சக்தியைப் பெருக்கிக் கொண்டதில்லை. இம்மாநிலமும் கிட்டத்தட்ட கேரளம் போன்ற சிறுபான்மையினர் ஆதிக்கம் மிகுந்த மாநிலமே. தவிர, பங்களாதேஷிலிருந்து ஊடுருவிய கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் (உத்தேச மதிப்பீடு: 2.5 கோடி) மேற்கு வங்கத்தில் (அசாமிலும் தான்) இந்தியக் குடிமகன்களாகவே மாறிவிட்டனர். அவர்கள் இதுவரையிலும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்களாக இருந்தனர். சமீபகாலமாக இவர்களின் ஆதரவு மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்து வருகிறது.

இம்மாநிலத்தின் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. இம்மநிலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 86,91,765. (சதவிகிதம்: 16.8%). இங்கு 3 தொகுதிகளில் பாஜக இரண்டாமிடம் பெற்றது. தனித்து நின்று இத்தனை வாக்குகளைப் பெற்றிருப்பது பாஜகவுக்கு தெம்பூட்டுகிறது. இதற்கு மோடி அலையே காரணமாகி உள்ளது.

ஒருகாலத்தில் இங்கு ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் 34 தொகுத்களில் வென்றுள்ளது. 22.7 % வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது. இம்மாநிலத்தில் இடதுசாரிகள் படுதோல்வியுற்றுள்ளனர் என்றால் மிகையில்லை. சட்டசபைத் தேர்தலின்போது அக்கட்சி மீது நிலவிய அதிருப்தி இன்னமும் அகலவில்லை என்பது இத்தேர்தலில் உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் பரவாயில்லை:

TN result Graphicsகேரளா, ஒடிசா, மேற்குவங்கம் போலல்லாது, பாஜக தமிழகத்தில் தனித்து விடப்படவில்லை. இங்கு பாஜகவே முனைந்து ஏற்படுத்திய தேசிய ஜனநாயக்க் கூட்டணி, இரு பிரதான திராவிடக் கட்சிகளுக்கு தேர்தலின்போது சவாலாக உருவெடுத்தது. விஜயகாந்தின் தேமுதிக, ராமதாஸின் பாமக, வைகோவின் மதிமுக, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக கட்சி ஆகிய 6  கட்சிகளுடன் இணைந்து 7 கட்சிக் கூட்டணியை பாஜக உருவாக்கியது. புதுவையில் இக்கூட்டணி செயல்படாவிட்டாலும், அங்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமியின் என்ஆர்.காங்கிரஸ், பாஜகவின் கூட்டாளியானது.

இத்தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 2 இடங்களில் வென்றது. பாஜக (கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி) ஆகிய இடகளில் முறையே பொன்.ராதாகிருஷ்ணனும்,  அன்புமணி ராமதாஸும் வென்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு மட்டும் தனியே வாக்களித்த மக்களின் எண்ணிக்கை: 22,22,090 (சதவிகிதம்: 5.5%). தவிர, தேமுதிக (5.1%), பாமக (4.4%) மதிமுக (3.5%) கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளன. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற வாக்குவிகிதம்: 18.5%.

கோவை, பொள்ளாச்சி, வேலூர் தொகுதிகளில் பாஜகவும், விருதுநகர், ஈரோடு தொகுதிகளில் மதிமுகவும், திருப்பூரில் தேமுதிகவும் இரண்டாமிடம் வந்துள்ளன. அதிலும் கோவை, வேலூர் தொகுதிகளில் குறைந்த வித்தியாசத்தில் தான் பாஜக தோற்றுள்ளது. 1.80 கோடி வாக்குகள் (சதவிகிதம்: 44.3%) பெற்ற அதிமுக 37 இடங்களில் வென்று லோக்சபையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதேசமயம் 96 லட்சம் (சதவிகிதம்: 23.6%) வாக்குகள் பெற்ற திமுக படுதோல்வியுற்றுள்ளது.

புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான என்ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் காங்கிரசிடமிருந்த தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறார். இத்தனைக்கும், இங்கு பாமக கூட்டணி தர்மத்தை மீறிப் போட்டியிட்டு, அதனை தேமுதிக ஆதரித்தது. மொத்தத்தில் பாஜக தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும், பரவாயில்லை என்று கூறத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளது எனலாம்.

ஜெயலலிதா வென்றதன் ரகசியம்:

jayalalithaதமிழகத்தில் அதிமுகவின் வெற்றிக்கு, இலவசத் திட்டங்கள், ஒருங்கிணைந்த பிரசார அணுகுமுறை, ஜெயலலிதாவின் தலைமை, திமுக மீதான அதிருப்தி அகலாமை, காவிரி, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் விவகாரம், மீனவர் பிரச்னை போன்ற தமிழகம் சார்ந்த ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவை காரணம் எனலாம்.

மாறாக, பிரதான எதிர்க்கட்சியான திமுக பல சில்லறைக் கட்சிகளைக் கூட்டணி சேர்த்தும் பயனின்றிப் போனது. அக்கட்சியை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னமும் துரத்துகிறது. தவிர, சென்ற திமுக ஆட்சியில் அக்கட்சியினர் நடத்திய அராஜகம் போல தற்போதைய அதிமுக ஆட்சியில் நிலவரம் இல்லை என்பதே மக்களின் திருப்திக்கு வழிவகுத்துள்ளது.

ஊழலைப் பொருத்த வரை, திமுக ஆட்சியில் இருந்த்தை விட அதிமுக ஆட்சியில் ஊழல் பெருகியிருந்தாலும், சாமானிய மக்களை திமுக அரசு பாதித்த அளவிற்கு அதிமுக அரசு பாதிக்கவில்லை. மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகிய பிரச்னைகள் இருப்பினும், அதனை மக்களிடம் கொண்டுசென்று ஆளும்கட்சியை வீழ்த்தும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் இங்கு சக்தி வாய்ந்ததாக இல்லை. அதிமுகவின் கடைசிநேர பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் திறன் கூட இல்லாமல் எதிர்க்கட்சிகள் திணறின.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பெரும்பான்மையோர் அதிமுகவினர் என்பது அக்கட்சிக்கு சாதகமாக இருந்தது. அவர்கள் அனைவரும், வெற்றி பெறாவிட்டால் கட்சித்தலைமை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைக்கு அஞ்சி கடுமையாக உழைத்தனர். தவிர ஆளும்கட்சி என்ற அந்தஸ்து அக்கட்சிக்கு  ‘பலவகைகளில்’ உதவியது. இவையும் அதிமுகவின் வெற்றிக்கு பிரதான காரணம்.

அதிமுக தலைவி ஜெயலலிதா தனது பிரசாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகளை பொருத்தமாக முன்வைத்தார். மின்வெட்டிற்கும் கூட மத்திய அரசே காரணம் என்று அவர் சொன்னதை மக்கள் நம்பினர்.

நாடு முழுவதும் மோடி காங்கிரஸுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்திய வேளையில், தமிழகத்தில் தன்னையே முன்னிறுத்தினார் ஜெயலலிதா. அவரது தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடும், அதிமுகவின் நிறுவன அமைப்பும் இணைந்து, மோடியை விட லேடியே தமிழகத்திற்குப் போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டன. தமிழக அதிமுகவினர் தங்கள் தலைவியை பிரதமர் வேட்பாளராகவே பிரசாரம் செய்தனர். அதற்கும் குறிப்பிட்ட பலன் இருந்தது.

தவிர பாஜகவின் புதிய உத்வேகம், சிறுபான்மையினரின் வாக்குகளை திமுகவிடமிருந்து மடைமாற்றி அதிமுகவுக்கு செல்லக் காரணமானது. இதுவும்,  திமுகவின் படுதோல்விக்கும் அதிமுகவின் வெற்றிக்கும் ஒரு காரணம். திமுக கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் கட்சிகள் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிட்டபோதும் அதிமுக அக்கட்சிகளை வென்றுள்ளது. திமுகவுக்கு வாக்களித்து வாக்குகள் சிதறுவதை சிறுபான்மையினர் தவிர்த்துள்ளனர் என்பது, அதிமுக பெற்றுள்ள வாக்குசதவிகித அதிகரிப்பில் புலப்படுகிறது.

பணபலமும் அதிகார பலமும் அதிமுகவை வெற்றிக்கோட்டை நோக்கி விரைவாக அழைத்துச் சென்றுள்ளன. இதுமட்டுமே காரணம் என்று கூறமுடியாவிட்டாலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. அதன் தாக்கமும் இருக்கவே செய்தது.

தே.ஜ.கூட்டணியின் பலவீனம்:

BJP Leader Narendra Modi Casts His Vote In Ahmedabadஇவை அனைத்தையும்விட, மோடியை முன்னிறுத்திய பாஜக கூட்டணி, தமிழகத்தில் ஒத்த சிந்தனையுடன் இயங்கவில்லை. மோடி முன்னிலையில் ஒரே மேடையில் அனைத்து கூட்டணிக் கட்சியினரும் ஏறும் காட்சியைக் காணவே முடியவில்லை. மிகத் தாமதமாக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமை வடிவம் பெறவில்லை. தேமுதிக, பாமக ஆகியவற்றிடையே கடைசிவரை நிலவிய உரசல் சரியாகவே இல்லை. ஆகவே கூட்டணிக் கட்சிகள் மனப்பூர்வமாகப் பணியாற்றவில்லை.

பாஜக கூட்டணியில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டுமே மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தனர். வைகோ விருதுநகரிலும், ராமதாஸ் தர்மபுரியிலும் முடங்கினர். பாஜக மாநிலத் தலைவர்களோ, வெற்றிவாய்ப்பு இல்லாதபோதும் வீம்புப்பிடியாக தேர்தலில் போட்டியிட்டு, அற்புதமான பிரசார வாய்ப்பை நழுவவிட்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் தவிர்த்த மாநில அளவில் பிரபலமான பாஜக தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், பாஜக மேலும் பிரபலம ஆகியிருக்கும்; மேலும் சில இடங்களில் வெற்றியும் கைகூடி இருக்கும்.

கோவையில் ஆரம்பத்தில் நிலவிய கோஷ்டிப்பூசலே பாஜகவை கடைசிவரை தொடர்ந்தது. நீலகிரியில் பாஜக வேட்பாளர் செய்த தவறு கட்சியின் மதிப்பை குலைத்தது. இவையும் பாஜகவின் தோல்விக்குக் காரணங்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், திமுக களத்தில் காட்டிய சோர்வு, பாஜக கூட்டணியின் இயலாமை, ஆளும்கட்சி என்ற சிறப்புத் தகுதி, பணபலம், மற்றும் ஜெயலலிதாவின் நிகரற்ற தலைமை ஆகியவையே அதிமுகவின் அபரிமித வெற்றிக்கு வித்திட்டுள்ளன. ஜெயலலிதாவின் வெற்றியிலிருந்து பாஜக கற்க வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன.

(குறிப்பு: தேர்தல் முடிவு புள்ளிவிவர வரைபடங்களுக்கு நன்றி: கேபிகே போல் கிராஃபிக்ஸ்).

.