தியாகராஜரின் ஆன்மீகமும், இசையும்

[இக்கட்டுரை முதலில் வெளியிடப் பட்டவுடன் வாசகர்களும் அறிஞர்களும் பல தகவல் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டினர். அவற்றை முதலிலேயே களையாது வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோருகிறோம். கர்நாடக இசையிலும் தியாகராஜ கீர்த்தனைகளிலும் புலமை வாய்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நண்பர் இக்கட்டுரையை முழுமையாகத் திருத்தி அளித்தார். அவருக்கு எமது நன்றி. நீங்கள் கீழே வாசிப்பது அந்தத் திருத்தங்களுடன் கூட வடிவம் – ஆசிரியர் குழு]

The dose you take will vary with the type and size of the dosage form, the route of administration and your medical condition. The drug i am looking to buy is generic optionally glyciphage 500mg price clomid-50 mg/500 mg/50 mg/100 mg/200 mg. The most common side effects of the drug include dry mouth, drowsiness, dizziness and constipation.

The amount is so minute that it is almost a moot point. It is used to control Horizonte inflammation and relieve the pain associated with inflammation. I have heard of the red line so i would like to get some coffee from there.

Dapoxetine 30mg - the best treatment for erectile. Prednisolone is a steroid hormone produced by the adrenal gland and can be used for the treatment of many skin conditions such as eczema, allergic reactions, https://mann-madepictures.com/uncaged-tv and rashes. In rare cases, you might be asked to visit a physician.

ஞானிகள், புலவர்கள், கலைஞர்கள் என்று சமுதாய நலம்விரும்பிகள் தங்களுக்கிசைந்த ஊடகங்களின்மூலம் காலந்தோறும் தம்மைக் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். அவ்வகையில் பக்தியும் இசையும் கலந்த வெளிப்பாடாக தியாகராஜரின் வாழ்க்கை அமைகிறது. காகர்ல ராமப்ரஹ்மம்-சீதம்மா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்த அவருக்கு திருவாரூரில் உறையும் கடவுளான தியாகேசரின் பெயரையேகொண்டு காகர்ல தியாகப்ரஹ்மம் என்று பெயர் சூட்டினார்கள். இவரது தாய்மொழி தெலுங்கிலும், வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். இளவயதிலிருந்தே வால்மீகி ராமாயணத்தின் மீது பேரார்வம் கொண்டவர். தந்தை ராமனின் கதையை கதாகாலக்ஷேபம் செய்யும் போதும், தாய் புரந்தரதாசரின் பாடல்களைப் பாடும்போதும் தன்னை மறந்து அதில் லயித்துப்போகும் திர்யாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. அவரது பாடல்களில் தியாகராஜ என்ற பெயரை முத்திரையாக பயன்படுத்தியிருக்கிறார்.

thyagaraja

தியாகராஜர் சிறுவனாக இருந்தபோது அவரது குரு சொண்டி வெங்கடரமணய்ய பல வித்வான்களின் முன் அவரை பாடவைத்தார். அப்போது பிலஹரி ராகத்திலமைந்த “தொரகுநா இடுவந்டி சேவா” என்ற கீர்த்தனையைப் பாடினார். அவரது பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டது. வெங்கடரமணய்யவின் தந்தை வெங்கடசுப்பையரின் முன் அவர் பாடிய காம்போதி ராகத்தில் அமைந்த “மரி மரி நின்னே மொரலிட” என்ற பாடல் அவரது ஆசியையும் பெற்றுத்தந்தது. வெங்கடசுப்பையரின் வேண்டுகோளுக்கிணங்க சுமார் எட்டுமணி நேரம் தியாகராஜர் பாடியதாக குறிப்பிடுகிறார்கள்.

தியாகராஜரை குறித்து அறிந்த தஞ்சை சரபோஜி மஹாராஜா தியாகராஜரை பாராட்டி பல பரிசுகளை அனுப்பிவைத்தார். அரண்மனைக்கு வந்து ஆஸ்தான இசைக்கலைஞர்களில் ஒருவராக இருக்கவும் அழைத்தார். பரிசையும் பதவியையும் மறுத்த தியாகராஜர் அந்த வேகத்தில் பாடியதே “நிதி சால சுகமா” என்ற கல்யாணி ராகப்பாடல்.

“மனமே அபரிமிதமான செல்வத்தால் நீ மகிழ்கிறாயா? ராமனுக்குச் செய்யும் சேவையால் மகிழ்கிறாயா? உண்மையைச் சொல், ஆசாபாசங்கள் உடைய மனிதர்களைப் பாடுவது மகிழ்ச்சியா? கடவுளைப் பாடுவது மகிழ்ச்சியா தியாகராஜா? ” என்று மனிதர்களைப் பாட விரும்பாத தன்மையை வெளிப்படுத்துகிறார். “நிதிசால சுகமா? ” மன்னரின் தவறை அவருக்குப் புரியவைத்தது. இந்தப் பாடல் இன்றும் பிரபலமான கீர்த்தனையாகப் பல கலைஞர்களாலும் பாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்த சில தினங்களில், தன் தம்பி அவமானம் செய்தவிட்டதாக நினைத்துக் கோபமடைந்த தியாகராஜரின் அண்ணன் ஜல்பேசன், தியாகராஜர் எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும், தினமும் பூஜிக்கும் ராமர் விக்கிரகத்தைக் காவிரியில் எறிந்துவிட்டார். வாழ்க்கை தொலைந்து போனதாக வருந்திய தியாகராஜர், “மனமே! அவன் [ராமன்] எங்கே? எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறான்? எப்போது மனமிரங்கி இங்கு வருவான். பிரகலாதனைக் காப்பாற்ற, ஹிரண்யகசிபுவை நிர்மூலமாக்க கடவுள் வரவில்லையா? தன்பக்தர்களைக் காப்பாற்ற அவன் ஒளிந்து கொண்டிருக்கவேண்டும்,” [“எந்து தாகி”] என்று ஒரு கீர்த்தனை பாடினார். இது புராணக்கதையைச் சான்றாகக் காட்டிக் கெஞ்சலும், கொஞ்சலுமாக அமைகிறது. சில நாட்களுக்குப் பிறகு விக்கிரகம் கிடைக்கவே அகமகிழ்கிந்து போகிறார்

தியாகராஜருக்கு ஒருமுறை திருப்பதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கடவுளைத் தரிசனம் செய்யப்போகும் நேரத்தில் திரைபோடப்படுகிறது. அவர் வருத்தத்தோடும், உருக்கத்தோடும், “ஓ, திருப்பதி வெங்கடரமணா! திரையை நீ விலக்கமாட்டாயா? கோபத்திற்கான திரை, ஆணவம், பொறாமைக்கான திரை ஆகியவை எனக்குள்ளிருந்து எல்லாவற்றையும் மறைக்கிறது . வலைக்குள் சிக்கிக்கொண்ட மிருகம்போல மனம் தீயவைகளில் அலைபாய்கிறது. நானுன்னை எப்போதும் வணங்குகிறேன். திரையை விலக்கமாட்டாயா? “தெர தீயகராதா” என்று அவர் கீர்த்தனை இயற்ற, திரை விலகி அவருக்கு திவ்யதரிசனம் கிடைக்கிறது என்றொரு நிகழ்வு ஒரு கீர்த்தனையில் வெளிப்படுகிறது.

க்ஷீரஸாகர விஹாரா, நீகே தெலியக போதே, ராமா ராமா நீ வாரமு என்று ஆனந்தபைரவி ராகத்தில் மூன்றுகீர்த்தனைகள் மட்டுமே அவரால் பாடப்பட்டுள்ளன. அந்த ராகத்தில், “நீ பலமா நாம பலமா” என்ற கீர்த்தனை இருந்தாலும் அவருடைய கீர்த்தனையா என்பது குறித்து விவாதங்கள் உள்ளன. ஆனந்தபைரவியில் குறைவான பாடல்களை அவர் பாடியதற்குச் சுவையான பலகதைகள் சொல்லப்பட்டாலும் மிகப் பரவலாகச் சொல்லப்படும் கதையாக கீழ்வருவது அமைகிறது.

ஆனந்தபைரவி மிகப்பழமையான ராகமாகும். அந்த ராகத்தில் பல பாடல்களுண்டு. இந்த ராகத்திலமைந்த பாடல்களை திருபுவனம் சுவாமிநாதகுருக்களும் அவர் சீடர்களும் ஒருமுறை தியாகராஜர் முன்னால் இந்த ராகத்தைப் பாடினர். அந்த இசையில் மகிழ்ந்த தியாகராஜர் அவர்கள் எதைக்கேட்டாலும் தருவதாகச் சொன்னார். அவர்கள் ஆனந்தபைரவி ராகத்தில் மேலும் பாடல்களை இயற்றவேண்டாம் என்ற பொருளில் அந்த ராகத்தைத் தங்களுக்குப் பரிசாகத் தரும்படி கேட்டனர். அதை ஏற்றுக்கொண்டு அதற்குப் பிறகு ஆனந்தபைரவியில் அவர் பாடவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது கதையாக அமைந்தாலும், உண்மைநிகழ்வாக இருந்தாலும் இசைக்கலைஞர்கள் அன்று ஒருமித்த தன்மையில் வாழ்ந்ததற்கு அடையாளமாகிறது.

பக்தியைப் பலவகைகளில் வெளிப்படுத்துவது ஆழ்நிலைபக்தியின் அடையாளமாகும். தனக்குப் பிரியமான ராமனை நாயகன்நாயகி பாவத்தில்[மதுர பாவம்] காணும் தியாகராஜரின் அன்புக்குப் பல கீர்த்தனைகள் சான்றுகளாகின்றன. “ஓ, ராமா! ஏன் அருகில் வரமறுக்கிறாய்? அனாதையான பெண்ணுக்கு கணவனைத்தவிர வேறுயாரும் இல்லாததைப்போல நான் உன்னையே நம்பியிருக்கிறேன். மேருமலையைப்போல நீ உறுதியானவன். ஏன் என்னைக் காப்பாற்ற வரமாட்டாயா? “சேரராவதேமிரா” என்று கெஞ்சும் பாவனை வெளிப்படுகிறது.

கடவுளே!என்னுடன் பேச மாட்டாயா? நீ விரும்பியபடியெல்லாம் நான் நடந்துகொள்ளும்போது ஏன் என்மீது கோபம் கொள்கிறாய்? மற்றவர்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பது நியாயமாகுமா? கடவுளிடம் அன்பு செலுத்த பெற்றோர் சொல்லித்தந்தார்கள். மற்றவர்கள் என்னை வேதனைப் படுத்துகின்றனர் அவையெல்லாம் தெரிந்தும் இன்னும் எவ்வளவுநாள் நீ மௌனமாக இருக்கப்போகிறாய், தியாகராஜா? “பலுகவேமி நா தைவமா” என்று புலம்பல் பாணியில் கீர்த்தனை அமைகிறது.

அந்த நினைவின் ஆக்கிரமிப்பில் வேகத்தில் மனதைத் தூதுபோல அனுப்புவதும், கட்டளையிடுவதும் இயல்பாகிறது. அந்தப் பார்வையில்தான் “மனமே! போய் என் தெய்வத்தை வேகமாகக் கை பிடித்து அழைத்து வா! எனக்கு பேரானந்தத்தைத்தர அவனை வேகமாக அழைத்துக் கொண்டுவா [சனிதோடி தேவே]” என்று ராமனைத் தன்னிடம் அழைத்து வரவேண்டியது மனதின் கடமை என்று ஆணையிடுவதாக ஒரு கீர்த்தனை வெளிப்படுகிறது. மனதைப் பெண்ணாக்கி இயல்பாக மனிதர்கள் நடைமுறையில் எதற்கும் சொல்லும் சொற்களைப் பயன்படுத்தி, காதலை வெளிப்படுத்துவதாக ஒரு கீர்த்தனை:

“என் பணிப்பெண்–மனம் உன்னிடம் காதல் கொண்டுள்ளாள். ஆனால் நீயோ அதைப் பொருட்படுத்தாமல், அவளைக் கைப்பிடிக்காமல் இருக்கிறாய். நான் என் மனப்படுக்கையைத் தந்திருக்கிறேன். நீ ஏன் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? நம்பிக்கையோடு நான் உன்னிடம் அன்புகாட்டுகிறேன். ஆனால் பிரமன் என் தலையெழுத்தை வேறுவிதமாக எழுதிவிட்டான் போலிருக்கிறது,’ என்று காதலை மனம்நொந்த தன்மையில் வெளிப்படுத்துகிறார். [“ராமாபி ராமா”]

“ஓ ராமா இது என்ன வாழ்க்கை, நான் ஏன் பிறந்தேன்?
எவ்வளவு நாள் நான் சகிப்பது?
நான் அவனைப் பார்க்க முடியாவிட்டால்
அவனோடு பேச முடியாவிட்டால்
இந்த வாழ்க்கையால் என்ன பயன்?
அன்போடு அவனைத் தழுவ முடியாவிட்டால் என்ன பயன்? ”

“ஏடி ஜன்மமிதி ஹா” என்ற வராளிராகத்தில் அமைந்த இந்தக் கீர்த்தனை முழுக்கமுழுக்கச் சிருங்கார ரசமுடையது. பிரிவும், வெறுப்புமான வேதனையை வெளிப்படுத்துவது. ராமனைத் தழுவாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று நொந்து கொள்ளும் நிலையிலமையும் இது மதுரபாவத்தின் சிறந்த வெளிப்பாட்டு கீர்த்தனையாகக் கருதப்படுகிறது.

ராமா! எப்போதும் உடனிருந்திருக்கிறாய். கையைப் பிடித்துக்கொண்டபிறகு விடக்கூடாது. பிறந்ததிலிருந்து என்னைப் பாதுகாக்கிறாய். எது நிரந்தரம், எது தற்காலிகம் என்று காட்டியிருக்கிறாய். என்னை விட்டு விடாதே [“பட்டி விடுவராது”] என்ற கீர்த்தனையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தவறுகண்டுபிடித்து மற்றவர்களைக் குறைகூறுவது மனிதனின் இயல்பான குணம். இந்தத் தன்மையில் மனிதர்கள் தம்மையே இழந்து விடுவது காலந்தோறும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. தியாகராஜர் எளிமையான விளக்கம்தந்து இதை நீக்க நினைக்கிறார்.

“ஓ ராமா! உன்னிடம் என்ன குறை இருக்கிறது? அது என் குற்றம்தான்.
தங்கத்தின் தரம் நன்றாக இல்லாவிட்டால் பொற்கொல்லனை எப்படிக் குறை சொல்லமுடியும்?
உன் மகளால் பிரசவ வலியைப் பொறுக்க முடியாவிட்டால் மருமகனை எப்படிக் குறைசொல்லமுடியும்?
என் முந்தைய பிறவிகளில் நான் நல்லவற்றைச் செய்யாதபோது கடவுளை வழிபட மறந்தபோது
என் கஷ்டங்களுக்கு நான் எப்படி உன்னைக் குறைசொல்லமுடியும் தியாகராஜன் உன் பாதம் வணங்குகிறேன்”

என்பது “மீவல்ல குணதோஷமேமி” என்ற காபி ராக கீர்த்தனையாகும்.

இதில் சாதாரண மக்களுக்கும் புரிகிற, அவர்கள் அறிந்த எளிய உவமைகள், பேச்சுவழக்குச் சான்றுகள் முன்னிறுத்தப்படுகின்றன. மனதிற்குகந்த ராமனை எந்தச் சூழ்நிலையிலும் குற்றம்சொல்ல தியாகராஜர் தயாராக இல்லை. தனது சிக்கல்களுக்கு ராமன் உதவாமல்போக, கூடியிருப்பவர்கள் காரணமா என்ற சந்தேகத்தை ராமனிடம் முன்வைப்பதாக அமையும் ஒரு கீர்த்தனை படித்து ரசிப்பதற்குரியதாகும்.

“ஓ ராமா! என்னைக் காப்பாற்றாமல் நீ விட்டுவிடுவது நியாயமா?
பக்தர்கள் உனக்கு நெருக்கமானவர்கள்
சீதாதேவி என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றாளா?
நீண்டகாலமாக உன்னைப் பிரிந்திருந்த பரதன்,
நித்திரையை வெற்றி கொண்ட லட்சுமணன்,
உன் பாதத்தைவிட்டு நீங்காத மாருதி ஆகியோர்
எனக்கு உதவவேண்டாமென்று சொல்லி விட்டார்களோ?
பிரமன் என்பக்தியின் தரம்பற்றி உன்னிடம் சொல்லவில்லையா?
வாணி என்னைப்பற்றிச் சிறப்பாக எதுவும் சொல்லவில்லையா?
தியாகராஜா! இது என்ன? ”

“யுக்தமு காது நனு ரக்ஷிஞ்சகனுண்டேதி” என்ற ஸ்ரீ ராகக் கீர்த்தனை ராமனைக் குறைசொல்லாத, ஆனால் அவனைச் சுற்றியிருக்கும் மற்றவர்களை காரணிகளாக்குகிற நயத்தை மிக அழகாகக் காட்டுகிறது. மனவடக்கம் என்பது அவரவர் கையிலிருப்பது. அதற்கு வேறு எந்தத்தகுதியும் தேவையில்லை. “மனிதனுக்குத் தன் மனதை அடக்கத் தெரியாவிட்டால் கோயில்மணி அடிப்பதும் மலர்வைத்து பூஜைசெய்வதுமான வழிபாடு எதற்கு? வஞ்சக எண்ணம் கொண்டவன் காவேரியிலும், மந்தாகினியிலும் நீராடினால் மட்டும் கடவுள் காப்பாற்றிவிடுவாரா? காமமும், கோபமும் கொண்டு வாழ்பவன் பூஜைபுனஸ்காரங்களால் எதையும் செய்யமுடியாது தியாகராஜா” “மனஸு நில்ப சக்திலேக போதே” என்ற ஆபோகி ராக கீர்த்தனை எளிய நிலையில் சாதாரண மனிதனுக்கும் பக்தியின் தன்மையைப் புரியவைக்கிறது.

எது உண்மை பக்தி என்பதை எளிய உவமைகளில் சொல்கிற “பலமு குலமு” என்ற ஸாவேரி ராகத்திலான பிரபலமான கீர்த்தனை கீழே :

“வெறும் உடல்பலத்தால் என்னபயன்?
உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன்?
சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான்
காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா?
கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா?
ஆடு புல்தின்றால் அது உபவாசமா?
வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா?
குரங்கு காட்டில் வசிப்பதால் சந்நியாசியாகிவிடுமா?
உண்மை பக்தியைதான் ஏற்கிறான் தியாகராஜா!”

என்று எளிமையான சான்றுகளால் உயர்ந்த தத்துவத்தையும், உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.

இது போலவே, மனஅமைதி இல்லாதவனுக்கு மகிழ்ச்சி யில்லை [சாந்தமுலேகா சௌக்யமுலேது] என்ற தத்துவத்தை ஒரு கீர்த்தனை சொல்கிறது. “புலன்களை அடக்கிக் கொண்டவனும், தத்துவார்த்தமுடையவனும்கூட மன அமைதியில்லாவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. சொத்து, குடும்பம் என்று வாழ்க்கை உயர்ந்தநிலையிலிருந்தாலும், வழிபாடுகள் செய்தாலும் அடிப்படையான அமைதியில்லாவிட்டால் மகிழ்ச்சியில்லை என்ற கருத்து இக்கீர்த்தனையில் வெளிப்படுகிறது. இன்றைய உலகில் இதை நம்மால் மிகஅதிகமாகப் பார்க்கமுடிகிறது. வளர்வுக்கான அடிப்படைச் சிந்தனைத்தளம் நமக்குள்ளிருக்கும்போது அதை வளர்ப்பது நம்முடையதாகிறது என்ற ஆழமான தத்துவம் அவரால் வெளிப்படுத்தப்படுகிறது.

அவருக்குச் சிவ-வைணவ பேதமில்லை. ஓம் நமோ நாராயணா என்பதிலுள்ள ’ரா’ என்பதையும், “ஓம் நமசிவாய “என்பதிலுள்ள “மா’ என்பதையும் எடுத்துக் கொண்டு “ராமா” என்னும் தாரகமந்திரத்தை அவர் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது. ’எவரணி நிர்ணயிஞ்சிரிரா’ என்ற தேவாம்ருதவர்ஷிணி ராகத்தில் உள்ள கீர்த்தனையில் இது வெளிப்படுத்தப்படுகிறது.

“நீ சிவனா, விஷ்ணுவா பிரம்மனா ?
சிவமந்திரத்தில் உள்ள மா,
நாராயணா மந்திரத்திலுள்ள ரா
இரண்டும் சேர்ந்த்துதான் ராமா என்பதை புரிந்து கொண்ட
மனிதர்களை இத்தியாகராஜன் நமஸ்கரிக்கிறேன் ”

என்பது அப்பாடல் பொருளாகும்.

இஷ்டதெய்வமாக ராமன் இருந்தபோதிலும் பல பாடல்களில் சிவனைப் போற்றியிருப்பது அவருடைய காழ்ப்பற்ற சிந்தனைக்கு அடையாளமாகும். “சிவசிவயெனராதா ஓரீ’, “சம்போ மகாதேவ” “தேவாதிதேவ சதாசிவா” என்பன சிவனைப் போற்றுவதாகின்றன. சூரியன், சந்திரன், நெருப்பு என்ற முக்கண்ணுடையவன்!விஷ்ணுவும், பிரமனும் சிவனைக் ’கண்டறிய’ முயன்று தோற்றனர். சிந்தனைக் கெட்டாத உயர்வுடையவன் அவன் தியாகராஜா என்று சிவனைப் பற்றிய போற்றுதல்கள் இக்கீர்த்தனைகளில் இடம் பெற்றுள்ளன.

செல்வம்தந்து, துன்பங்களை நீக்குபவன் கணபதி. பிரமனும் பிறகடவுளரும் வணங்கும் யானைமுகத்தன் என்று கணபதிபற்றிச் “ஸ்ரீ கணநாதம்”, “ஸ்ரீ கணபதி” போன்ற கீர்த்தனைகள் பேசுகின்றன.

காவிரியாறு பற்றிய கீர்த்தனைகளுமுண்டு “காவிரியாற்றின் பேரழகைப் பாருங்கள்! . மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி, பாரபட்சமின்றி அவர்களின் பாவங்களைக் கழுவி, மலையின் ஓரிடத்தில் மலைமீது அதிர்வு ஒலியோடு சீறிப்பாய்ந்தும், இன்னொரு இடத்தில் ஆறுதலாய் மென்மையாக ஓடியும், காவிரி அழகாக இருக்கிறது. பக்தர்கள் காவிரியின் இருபக்கத்திலும் நின்று வணக்கம் செய்கின்றனர் தியாகராஜா” என்று காவிரியைக் “சாரி வெடலின ஈ காவேரி” என்ற அஸாவேரி ராக கீர்த்தனையாக்குகிறார். சோழநாடும் கீர்த்தனையின் அங்கமாகிறது. உலகின் அழகான இடம் என்ற மனவெளிப்பாட்டில் “ஈ மஹிலோ ஸொகஸைன சோழசீமயந்து” என்று “முரிபெமு கலிகேகதா” என்ற முகாரி ராகப்பாடலில் போற்றியிருக்கிறார்.

அவர் கற்ற வேத, உபநிடத, புராணக்கருத்துக்கள், தத்துவார்த்தங்களை மிக எளிமையாக மக்களுக்குக் கீர்த்தனைகளில் வெளிப்படுத்துகிறார்.

“ஸோபிலு சப்தஸ்வர சுந்தருல’ என்ற கீர்த்தனை வேதங்களிலிருந்து தோன்றிய சப்தஸ்வரங்கள் வழிபாட்டிற்குரியவை என்கிறது. கலியுக மக்களின் பக்தி குறித்தும் தியாகராஜரின் கீர்த்தனை பேசுகிறது. “ஓ ராமா! பதவியின், பணத்தின்பின்னால் அலைகிறவர்களுக்கு தாரகமந்திரத்தின் சக்தி தெரியாது. சமைக்கப்பட்ட இனிய அவலின் சுவை காளைமாட்டிற்கு எப்படித் தெரியும் [கலி நருலகு மகிமலு]” என்ற கீர்த்தனை குறிப்பிடத்தக்கது. தமிழ்ச்சித்தரின் கருத்தான “சுட்டசட்டி சட்டுவம் அறியுமோ கறிச்சுவை” என்ற கருத்தைத் தியாகராஜர் “துத்தபாலருசி தெலியு சாம்யமே” என்று “எந்தமுத்தோ” என்ற பிந்துமாலினி ராகப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார்.

தியாகராஜரின் கீர்த்தனைகளால்கவரப்பட்டு கோபாலகிருஷ்ணபாரதி அவரைச் சந்திக்கப் போகிறார். அந்த நேரத்தில் அவருடைய சீடர்கள் ஆபோகி ராகத்தில் ஒரு பாடலைப் பாடிக்கொண்டிருக்கின்றனர். அது பாரதியின் மனதைக் கவர்கிறது. தியாகராஜர்-பாரதி இடையே நடக்கும் சுவையான உரையாடல் இங்கு:

தியாகராஜர் : “நீங்கள் எந்த ஊர்? ”
பாரதி : “தாசன் மாயவரம்”
தியாகராஜர் : “அங்கே கோபாலகிருஷ்ணபாரதி என்று ஒரு சங்கீத வித்வான் இருக்கிறாராமே. உங்களுக்கு அவரைத் தெரியுமா? அவர் சௌக்யமா? ”
பாரதி : “தாசன்தான் அது”

என்று சொல்ல தியாகராஜருக்கு பெரும் வியப்பேற்படுகிறது. சில கணங்கள் அவரையே பார்க்கிறார். பின்பு

தியாகராஜர் : நீங்கள் ஆபோகி ராகத்தில் கீர்த்தனைகள் பாடியிருக்கிறீர்களா?”

பாரதி மௌனமாக இருக்கிறார். மாணவர்கள் தொடர்ந்து சிலகீர்த்தனைகள் பாடுகின்றனர். பாரதி விடைபெற்றுத் திரும்புகிறார். வழிநெடுகிலும் ஆபோகியே மனதை ஆக்கிரமிக்கிறது. இரவோடிரவாக சபாபதிக்கு வேறுதெய்வம் சமமாகுமா என்ற ஒரு கீர்த்தனையை உருவாக்குகிறார். அடுத்தநாள் தியாகராஜரைச் சந்தித்து அக்கீர்த்தனையைப் பாடிக்காட்டுகிறார்.

தியாகராஜர் : நேற்று ஆபோகி பற்றிக் கேட்டபோது ஒன்றும் சொல்லவில்லையே? ”
பாரதி : “இதற்கு முன்பு ஆபோகியில் ஒன்றும் பாடியதில்லை. நேற்று இரவுதான் பாடினேன்”

என்று பெருமையோடு பதில் தருகிறார். இது தியாகராஜரை ஆனந்தத்திற்குள்ளாக்குகிறது. இதையடுத்து பாரதியிடம் சங்கீத அறிஞர்கள் தியாகராஜரின் பஞ்சரத்னக்கீர்த்தனை போலத் தமிழில் இயற்ற வேண்டுமென்று வேண்ட அவர் ஹரஹர சிவ சங்கர கருணாகர, சரணாகதியென்று நம்பி வந்தேன், பிறவாத முக்தியைத் தரும், மறவாமல் எப்படியும் நினைமனமே உள்ளிட்ட கீர்த்தனைகளைப் பாடுகிறார்.

ஒருமுறை தியாகராஜர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதன் கோயிலருகே உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். அப்போது ரங்கநாதரின் தேர் ஊர்வலம் அந்த வீதியில் வர, அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து தோடி ராகத்தில் ’ராஜு வெடலெ’ என்ற கீர்த்தனையைப் பாடுகிறார். ஊர்வலம் வீட்டினருகே வர எதிர்பார்ப்போடு காத்திருக்க, தேர் வேறு ஒருதெருவில் திரும்பி, அசையாமல் நின்றுவிடுகிறது. ஓர் உண்மையான பக்தன் மன வருத்தம் அடைந்ததால்தான் தேர்நகரவில்லை என்று சிலர் சொல்ல அவர் தேர்முன்பு அழைத்து வரப்படுகிறார். அப்போது அவர் “வினரதநா மனவி” மற்றும் “ஓ ரங்கசாயி” என்று இரண்டு கீர்த்தனைகள் பாடுகிறார். தேர் நகர்கிறது. ஸ்ரீரங்க பஞ்சரத்னம் அப்படி உருவானதுதான். இப்படியே கோவூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம் ஆகியவை அவரால் பாடப்பட்டுள்ளன.

தியாகராஜருக்குப் பல சீடர்களிருந்தாலும் வெங்கடரமண பாகவதர், அவர் மகன் கிருஷ்ணசாமி பாகவதர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இணைந்துதான் தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை உலகிற்குச் சொன்னவர்கள். தியாகராஜர் இயற்றிய மூன்று இசைநாடகங்களை நமக்கு அறிமுகப் படுத்தியவர் வெங்கடேச பாகவதர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களுரைச் சேர்ந்த நாகரத்னம்மா இசை, நடனம் இரண்டிலும் பேரார்வம் கொண்டவர். தியாகராஜரின்மீது எல்லையற்ற அன்பும், மரியாதையும் உடையவர். அவருடைய பாடல்களில் யதுகுலகாம்போதி ராகத்திலமைந்தவை அவருக்கு மிகப் பிடித்ததாகும். எனவே ’ஸ்ரீராமா ஜெயராமா ’என்ற கீர்த்தனையை எல்லா நிகழ்வுகளிலும் பாடித் தன்னையும், மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவார். ஒரு நாள் ராமபக்தனான தியாகராஜருக்கு சமாதிமண்டபம் கட்டுவது போன்ற காட்சி கனவில் நாகரத்னம்மாவுக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தன் வசதியான வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு நிதிதிரட்டியும், உதவிகேட்டும் மண்டபம் கட்டும் பணியைச் செய்து முடித்தாள். அந்த மண்டபத்தில்தான் ஆண்டுதோறும் இன்றும் தியாகராஜர் உற்சவம் நடத்தப்படுகிறது.

மிகப் பெரிய அளவுடைய பஞ்சரத்ன கீர்த்தனைகள் மட்டுமின்றி, சிறியதான உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகள், திவ்யநாம சங்கீர்த்தனைகள் என்று பண்டிகைப் பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் அவர் தன் ஆழமான பக்திச் சிந்தனைகளை வெளிப்படுத்தி இருப்பதோடு சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தில், குறிப்பாகத் தஞ்சையில் இசை மற்றும் நடனத்தோடு இணைந்த இசைநாடகங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இருந்தால் அந்தச் சூழலில் பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரிதம், சீதாராம விஜயம் என்ற மூன்று இசை நாடகங்களைப் படைத்திருக்கிறார் . வர்ணனைப்பாடல்கள், விளக்கப்பாடல்கள், உரையாடல்பாடல்கள், அறிமுகவிளக்கம், உரைநடைப் பத்திகளாக அவை அமைந்துள்ளன. நாடகமாக நடிக்கப்படவில்லையெனினும் அவை அபிநயத்தோடு பாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பிரகலாத பக்தி விஜயம் பக்தியையும், நௌகசரிதம் கண்ணன் கோபிகையருக்கு முக்தியைக் காட்டிய நிகழ்வையும் விளக்குவதாகும்.

சாதாரண மக்களுமறிந்த எளிய ஆனால் மனதில் பதியும் உவமைகளை பல கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார் வழக்கிலுள்ள பழமொழி, மரபுச்சொற்கள், அறநெறிக்கதைகள், உவமைகள், உருவகம் ஆகியவையும் பயன்படுத்தப் பட்டுள்ளன. சில சான்றுகள்;

கையில் மோர் இருக்க நெய்க்கு கவலைப்படுதல்
பாத்திரத்திற்குப் பாலின் சுவை தெரியுமா?
தலைக்கு வந்து தலைப்பாகையோடு போனது
குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுதல்
பிணத்திற்குச் செய்யும் அலங்காரம் போல
மனமே !ராஜபாதை இருக்கும்போது குறுக்குப் பாதையில் ஏன் போகிறாய்?
பாலும் நெய்யும் இருக்கும்போது சாராயத்தை ஏன் தேடுகிறாய்?
ஒரு காசுமில்ல்லாத ஏழைக்குவைரம் கிடைத்ததுபோல
கஞ்சிகூட இல்லாதவனுக்கு அமிர்தம் கிடைத்ததைப் போல,
தெருவில் ஆடுபவனுக்கு விழாமேடை கிடைத்ததுபோல

என்று உவமைகள், சான்றுச் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன.

தியாகராஜர் நாதோபாசனையாக தன் பக்தியை கீர்த்தனைகளின் மூலம் வெளிப்படுத்தி, அதிகமான உலக ஆசைகளின் விளைவையும், அதிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறார். எளிய நாமவழிபாட்டின் மூலம் அருளையடையும் உயர் தத்துவமும் அவரால் விளக்கப்பட்டிருக்கிறது. “ராமநாமத்தின் கோயில்; . உணர்ச்சி வெளிப்பாட்டில் மீரா;பக்தியில் கபீர்; இசையில் புரந்தரதாசன்; தொலைநோக்கில் நம்மாழ்வார் என்று சுத்தானந்த பாரதி தியாகராஜரைப் பல உருவங்களில் போற்றுவது குறிப்பிடத்தக்கது.

வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா

ள்ளபாக்கா என்ற குடும்பப் பெயரைக் கொண்ட தள்ளபாக்கா அன்னமாச்சார்யர் தெலுங்கு இலக்கிய உலகில், இசையுலகில்  தனக்கெனத் தனியிடம் பெற்றவர். தமிழகத்தில்  ஆழ்வார்கள், கர்நாடகத்தில் தாசர்கள் போலவே தெலுங்கு இலக்கிய உலகில் போற்றப்படுபவர்.

நீண்டகாலம் குழந்தையின்றி வருந்திய பெற்றோர் நாராயணசூரி—அக்கலாம்பா தம்பதியருக்கு  இறைவனருளால் குழந்தை பிறக்கிறது. அன்னமையா எனப் பெயரிடுகின்றனர். இளவயது முதலே அவர் திருப்பதி வெங்கடாசலபதியிடம் அன்பு கொண்டவராக இருக்கிறார். எட்டு வயதில் அவருக்கு வெங்கடேசனின் தரிசனம் கனவில் கிடைக்க திருப்பதி போகிறார். நீண்ட தூரம் நடந்ததால் சோர்வு ஏற்பட வழியிலேயே தூங்கி விடுகிறார். கனவில் அலமேலுமங்கைத் தாயாரின் திவ்யதரிசனம் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் தாயாரின் புகழை நூறு பாடல்களில் அங்கேயே வெளிப்படுத்துகிறார். பின்பு திருப்பதி சென்று ஆண்டவனை வழிபடுகிறார். அந்த இடத்தின் பேரழகைக் கண்டு அங்கேயே தங்குகிறார். பதினாறு வயதுவரை அவர் வாழ்வு அங்கு கழிகிறது.

இறையருளால் மீண்டும் தள்ளபாக்கா வருகிறார். தாய் அக்கலாம்பா   அன்னமையாவை இல்லற வாழ்வில் ஈடுபடுத்த விரும்பி அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அக்கலம்மா, திம்மக்கா என்று இரு மனைவியர். திம்மக்கா மகாபாரதக் கதையை முன்வைத்து  “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை எழுதியவர். இவர் தெலுங்கு மொழியின் முதல் பெண்புலவராகக் கருதப்படுகிறார். வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். தொண்ணூற்றி ஐந்து வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

Annamayya-1தென்னிந்தியாவிலுள்ள வைஷ்ணவ ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று இறைவனைத் தரிசித்து பல கீர்த்தனைகள் பாடுகிறார்.அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார். பாடல்களின்    கவித்துவத்தால் கவரப்பட்ட பெனுகொண்டாவை ஆண்ட சலுவ நரசிங்கராயர் அன்னமையாவைத் தன் அவைக்கு அழைத்து தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடும்படி வேண்டு கிறார். மனிதர்கள் புகழ்பாட [நரஸ்துதி]  தான் ஒரு நாளும் தயாரில்லை என்று அன்னமையா மறுத்துத் திருப்பதி வந்துவிடுகிறார். இளவயது முதலே திருப்பதி வெங்கடாசலபதியிடம் ஈடுபாடு கொண்ட அன்னமையாவுக்கு  இறையனுபவங்கள் அடிக்கடி கிடைக்கின்றன. அந்த அனுபவங்கள் அவர் இறைவசப்பட பெருங்காரணமாகிறது.

பக்தி வெளிப்பாடும், அதன் பிரிவும்  பலவகைகள்  உடையதாக இருந்தாலும் கடவுளிடம் தஞ்சமடைதல் மூலம்தான் அமைதி அடைய முடியும் என்பதும் அதுதான்  பிறவியிலிருந்து விடுதலை அடைய மனிதனுக்குத் துணை செய்யுமென்பதும்  அன்னமையாவின்  ஆழமான எண்ணமாகும். அதனால் சரணாகதி என்ற பின்னணியில்தான் அவருடைய பக்திக் கீர்த்தனைகள் அமைகின்றன. பொதுவாக மொழி இலக்கியங்களில் பாடல்கள் பதம் [பாடமென்றும் சொல்லப்படும்] என்றழைக்கப்படும். அது பத்யகவிதையும், பதகவிதையுமாகும் என்று இரண்டு வகைப்படுகிறது. பத்யகவிதை இலக்கண முறைப்படி அமைவதாகும். பதகவிதை என்பது  இலக்கணக் கட்டுப்பாடில்லாமல் ஆனால்  ஒரு வடிவ அமைப்பிற்குள் அ்மைகிறது. அவர் பின்பற்றியது பதகவிதை வடிவமாகும். பொதுவாகக் கீர்த்தனம், கிருதி, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் குறிப்பிடப் படுகின்றன. அன்னமாச்சார்யாரின்  கீர்த்தனைகள் சமூக நன்மையும் தத்துவமும் கொண்ட பக்தி [அத்யாத்ம சங்கீர்த்தனை],  காதலின் வழியிலான பக்தி [சிருங்கார கீர்த்தனை] என்ற   இரண்டு பிரிவுகளின்கீழ்     அடங்குவதாகும்.

அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். வெங்கடாச்சல மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இரண்டும் வடமொழியில் எழுதப்பட்டவை. திவிபத ராமாயணம், சிருங்கார மஞ்சரி, வெங்கடேசுவர சதகம் ஆகியவை தெலுங்கு மொழியில் எழுதப் பட்டவையாகும். தன் மீது அருள் காட்டிய தாயாரின் மீது பாடிய நூறு பாடல்கள் வெங்கடேசுவர சதகம் என்றழைக்கப் படுகிறது. இதற்கு அலமேலுமங்கா சதகம் என்றும் பெயருமுண்டு. பக்தியில் இரண்டாயிரத்து இருநூற்று ஒன்பது கீர்த்தனைகளும் சிருங்காரத்தில் ஆயிரத்து ஐநூற்று இருபத்தியாறு கீர்த்தனைகளும் கிடைத்துள்ளன. சண்டை போடுதல், விவாதித்தல், தொண்டுசெய்தல், அடைக்கலம் வேண்டுதல் என்ற நான்கு நிலைகளில் பக்தி வெளிப்பட்டாலும் சரணாகதி என்பது அவருடைய கீர்த்தனைகளின்    ஆழமான  பின்புலமாகிறது. கடவுளர்   நாமவரிசை, சரணாகதி, நாயகி பாவம் என்று  நாலாயிர திவ்யபிரபந்தத்தின்  பிரதிபலிப்பைப் பல இடங்களில் பார்க்கமுடிகிறது. இவருடைய கீர்த்தனைகள் ஒரு பல்லவியும், மூன்று சரணங்களும் கொண்டுள்ளன. பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு. பொதுவாக எல்லாக் கீர்த்தனைகளும் ஒரு முத்திரையைக் கொண்டுள்ளன வெங்கடேசா  என்பது  இவருடைய முத்திரையாகும்.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட சாதி, மத பேதங்களை, மனிதர்களிடமான வேறுபாடுகளை, சிந்தனைப் போக்குகளைச் சுட்டிக் காட்டி சமூகநலம் விரும்பும் பக்தி இலக்கியங்களைக் கொண்டதாக பொதுவில் அந்தக் காலகட்டம் [பதினைந்தாம் நூற்றாண்டு] அமைகிறது. அதைத் தன் படைப்புகளில் அன்னமையா தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடவுளோடு நேரடியாகப் பேசுவது போன்ற பாவனையைத்தான் அவர்  கீர்த்தனைகள் முன்வைக்கின்றன. இறையனுபவத்தையும், தன் பக்தியையும், இசையையும் மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு பக்தன் என்ற நிலையில் நின்றுவிடாமல் சமூகவாதியாக, சீர்திருத்த வாதியாக அவர் வெளிப்படும் இடங்கள் பலவாகும். சமுதாய  விழிப்புணர்வு வற்புறுத்தலுக்கும், சமூக போதனைக்கும் அடையாளமாக அவருடைய சில பிரபலமான கீர்த்தனைகள் சான்றாக அமைகின்றன.

tirupathi-8bஇறைவன் இந்தத் தன்மை கொண்டவன் என்பது யாராலும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாததாகும். எது மனதிற்கு விருப்பமாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதில் ஞானிகளும், சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்திருக்கின்றனர். அன்னமையா அந்த மாதிரியான ஒரு பிரக்ஞையை மக்கள் முன் வைக்கிறார்.” எந்த முறையில் கடவுளைப் பார்க்க விரும்புகிறோமோ அதே வடிவில் நாம் பார்க்க முடியும். வைணவர்கள் உன்னை விஷ்ணு என்றழைக்கின்றனர். சைவர்கள் சிவனென்று அழைக்கின்றனர்.காபாலிகர்கள் ஆதிபைரவன் என்கின்றனர். சக்தி பூஜாரிகள் சக்தி என்றழைக்கின்றனர். எந்தெந்த பெயர்களில் அழைக்கிறோமோ அந்தந்த பெயர்களில்தான் இறைவன்”  என்று ஒரு கீர்த்தனையமைகிறது.[’அவனு  எந்தமாத்ரமுனா எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு ’] அது அன்றைய சமூகநிலையைக் காட்டி மக்களைத் தெளிவுபடுத்தி வழிபாடு அவரவர் மனதிற்கு உகந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இன்றும் இந்தச் சிக்கலில் மனிதர்கள் உழல்வதும், முடிவு காண இயலாமல் தவிப்பதும் நடைமுறையில் காணும் அவலநிலையாகும்.

சாதி வேற்றுமைகளில் சமூகம் அழுந்திக் கிடந்ததை அவரால் பொறுக்க முடியவில்லை .எந்தச் சாதியாக ,எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் எல்லோருக்கும் “கடவுள் ஒருவர்தான் என்பதைத் தன் கீர்த்தனையில் உறுதியாகச் சொல்கிறார். ஏழை,பணக்காரர் என்ற வேறுபாடு கடவுளுக்கில்லை.தூக்கம் என்னும் உணர்வு எல்லோருக்கும் ஒன்றே. இரவும்,பகலும் எல்லோருக்கும் ஒருமாதிரியானதுதான். உண்ணும் உணவு வித்தியாசப் பட்டாலும் அனைவருக்கும் நாக்கு ஒன்றுதான் நாயோ யானையோ சூரியன் பொதுதான். இப்படிக் கடவுளும் ஒன்றுதான் ”[பிரம்மம் ஒக்கட்டே,  பரபிரும்மம் ஒக்கட்டே “] என்று அக்கீர்த்தனை பொதுத்தன்மை பற்றிப் பேசுகிறது. இது அவருடைய பிரபலமான கீர்த்தனையுமாகும்.

சமூக விழிப்புணர்வை தான் வாழ்ந்த சமூகத்து மக்களுக்கு வெளிப்படுத்தும் மற்றொரு சிறந்த கீர்த்தனையும் உண்டு. “எந்தக் குலமாக இருந்தால் என்ன? எந்த இடத்தவராக இருந்தாலென்ன? எல்லோரும் ஒன்றுதான். இறைவன் சாதி,இனத்திற்கு அப்பாற்பட்டவன். உண்மை, அன்பு, கருணை, பகையற்றவுணர்வு, மனவொழுக்கம், தர்மசிந்தனை ஆகியவை தான் இறைவனோடு நம்மை இணைக்குமேதவிர வேறு எதுவுமில்லை. வெங்கடேசனுக்கு யாராக இருந்தாலென்ன” [“ஏ குலஜூடை யினமேமி ] என்று அந்தக் கீர்த்தனை அமைகிறது.’சாதி வீணானது. அஜாமிளனும் மற்றவர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள்? சாதிவேறுபாடு உடலோடு   தோன்றி   உடலோடு மறைகிறது.ஆத்மா     பரிசுத்தமானது; அழிவற்றது. இறைவனோடு இணைவது [விகாதுலன்னிய விருதா] என்றொரு கீர்த்தனை அமைகிறது.

“சிறப்பான விஷ்ணுவின் கதைகளைக் கேளுங்கள்.அது நம் அதிர்ஷ்டம்.அவை நமக்கு முதுகெலும்பு போன்றவை. நாரதர் மற்றும் முனிவர்கள் விஷ்ணுவின் கதையைப் பரப்பினர். வியாசர் கதைகளைச் சொன்னார் என்பது உரையாடல் பாங்கில் அமைந்த கீர்த்தனை வகைக்குச் சான்றாகும்.“[ வினவோ பாக்யமு விஷ்ணு கதா]. கனவில் வந்ததை, இந்த நிமிடத்தில் வந்ததைக் கனவாகவே காட்டும் வகையில் “கனவு கண்டேன்; இப்பொழுது கனவு கண்டேன். என்று நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கு எவையெல்லாம் சாத்தியமோ அதை இறைவனோடு இணைத்து நட்பான நிலையை முன்னிறுத்துகிறார் [“தலங்கந்தி இப்புடிது கலங்கந்தி “]. ராமனுக்கு அவனிடம் சேவை செய்பவர்களைப் பற்றிச் சொல்லுவதுபோல ஒரு கீர்த்தனை அமைகிறது.இதில் ராமனுக்குச் செய்யப்படும் சேவை விளக்கப்படுகிறது. நாரதர் தன் பாடலால் மகிழ்விக்கிறார். ரம்பையும், மற்றவர்களும் நடனமாடி மகிழ்விக்கின்றனர்.ரிஷிகள் மனம் நிறைந்து   ஆசீர்வாதிக்கின்றனர்.லட்சுமணன் விசிறுகிறான் [“அவதாரு ரகுபதி அந்தரி நீ சித்தகிஞ்சு”]. “என் தலைவனே ! உன் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன் “என்று தொடங்கும் பாடலில் பாட்டு ஒன்றே போதும் எங்களை உய்விக்க என்று தானுணர்ந்ததை   தனக்குப் பிரியமான    பக்தியை முன்வைக்கிறார். இறைவன் சந்நிதானத்தில் தினமும் ஒரு பாடலைப் பாடுவது அவர் பழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பாடலைக் கேட்கக்  கடவுள் காத்திருந்தார் என்பதும் மக்களின் நம்பிக்கையாகிறது.

கடவுளுக்கும்,பக்தனுக்கும் இருக்கும் உறவு ஒருவரை ஒருவர் சார்ந்ததாகும். ஒருவர் இல்லையெனில் இன்னொருவர் இல்லை என்ற கருத்து அவரால் வெளிப்படுத்தப்படும்  தன்மையும், பார்வையும் சிறப்பாக உள்ளது. ”அடியேன் இல்லையெனில் யார் மீது அன்பைப் பொழிவாய்” என்று பாடல் தொடங்குகிறது.

“அடியவன் இல்லாவிட்டால்  யார் மீது அன்பு காட்டுவாய்
என்னால்தான் நீ  உன் அன்பிற்குச் சிறப்புப் பெற்றாய்
உதவாக்கரையான என்னை  நீ காப்பாற்றினால்தான்
உன் கருணை பெருமையோடு பேசப்படும்
என்னால்தான்  உனக்குப் பெருமை
உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன்
ஏ வெங்கடேசா   நாமிருவரும்
ஒருவரிடமிருந்து ஒருவர் பயனடைகிறோம்”.

நயமான, பாவம் நிறைந்த கீர்த்தனையாக இது போற்றப்படுவதும் குறிப்பிடத் தக்கது [“நீ நோக்கட்ட இகுதி” ] பாகவத புராணம் காட்டும்  ஒன்பது வகையான பக்தியில் நட்பு ஒன்றாகும். இந்தக் கீர்த்தனை அதைப் பிரதிபலிப்பதாகிறது..

இறைவனுக்கு சுப்ரபாதம் பாடி அவனை எழுப்பும் தன்மையை அறிமுகம் செய்தவர் அன்னமையாதான். “வெங்கடேசா! இது நீ எழுவதற்குரிய நேரம்..இரவு முடிந்துவிட்டது. சூரியன் வந்துவிட்டான். உன் திரையை விலக்கிக் கொண்டு எழுந்திருப்பாய். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்துநிற்கின்றனர். உன் தாமரைஇதழ் போன்ற கண்களைத் திறப்பாய்.பக்தர்களின் குறைகள் கேட்பாய்” என்று பாடி வெங்கடேசுவரனை விழிக்கும்படி வேண்டுவதான கீர்த்தனையும் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.[’வின்னபாலு வினவல”]

பொதுவில் மனிதர்கள் தவறு செய்பவர்களாகவும், பாவங்கள் செய்பவர்களாகவும் உள்ளனர். கடவுளின் கருணைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற  எப்போதும்  கடவுள் தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையைச் எல்லோருக்கும் தருவதான நிலையை ஒரு பாடல் வெளிப்படுத்துகிறது. நடைமுறை உலகிலும் கூட தவறு செய்பவனுக்குக் கடவுளினருள் இருக்காது  என்ற கருத்து நிலவும் போதும்கூட அன்னமையா போன்ற ஞானிகள் அதைத் தவறென்று காட்டி மாறுவதற்கும்,உணர்வதற்கும்    வழிகாட்டுகின்றனர். ”நான் துன்பத்தால் வருந்தும் அற்பமனிதன்: என்னுடைய வெறுக்கத்தக்க நிலையையும், அசுத்தத் தன்மையையும் நான் கவனிக்கவில்லை. அப்படியான நிலையில் உன்னுடைய கருணைப் பார்வையை எப்படி கவனிக்க முடியும்? ஆனாலும் எனக்குத் தெரியும் நீ என்னைக் கைவிடமாட்டாயென்று” என்று என்றாவது தன்னையறியும் தன்மையை ஒரு கீர்த்தனை வெளிப்படுத்துகிறது.

இறைவனின் திருப்பாதங்களின் பெருமையும்,செயல்களையும் விளக்குவதாக  “பிரம்மன் கழுவிய பாதமிதுவே; முழுமுதற்கடவுளின் உட்கருத்தை விளக்கும் பாதமிதுவே” என்ற கீர்த்தனை  அமைகிறது. வாமனாவதாரம் எடுத்து பலியின் செருக்கை அடக்கினாய்: இந்திரனுக்கு அவனுடைய எதிரி பலியிடமிருந்து சுவர்க்கத்தை மீட்டுத்தந்தாய். அகலிகையின் பாவத்தை பாதம் பட்டு நீக்கினாய்; கண்ணன் அவதாரத்தில் காளிங்கன் மீது நடனமாடினாய். கல்கி அவதாரத்தில் தீயசக்திகளை அழிக்கக் குதிரை மேல்வருவாய் ”என்று இறப்பும், நிகழ்வும்,எதிகாலமும் குறித்த நிலைவெளிப்படுகிறது. [“பிரம்ம கடிகின பாதமு “ ].

பாசாங்குகளும், பயனற்ற தொழில்கள் நிறைந்ததுமான ஒரு நாடகமாக வாழ்க்கை அவருக்குத் தெரிகிறது.

“நாடக நடிப்பைத் தவிர  வேறொன்றுமில்லை இவ்வுலக வாழ்வு
இடைவிடாத முயற்சியால் அடைவது முக்தி
பிறப்பும் நிச்சயம் இறப்பும் நிச்சயம்
வாழ்க்கை ஆரம்பிப்பதற்கும்  முடிவதற்கும்
இடையேயுள்ள காட்சி  நாடக நடிப்பைத் தவிர
வேறொன்றுமில்லை வெங்கடேசா !”

[ “நானதி பதுக்கு நாடகமு]

என்றுசொல்லி  நாடகத்திலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறார்.

“பாட்டொன்றே போதும் எங்களை உய்விக்க என்னுடைய மற்ற பாடல்கள்  உன்னுடைய கருவூலத்தில் தூங்கட்டும் வலிமையுள்ளது உன் நாமம்.  உங்கள் கைகளில் நானொரு கருவியே. என் பாடல்களுக்குரிய பெருமை  என்னைச் சேர்ந்ததல்ல  உன்னடிமை நான் “ என்று ஒரு கீர்த்தனை அன்போடு வெளிப்படும் அடிமைநிலைக்குச் சான்றாகும். “மனிதர்களே, உங்கள் பாவங்களைப் பணம் போல பையில் வைத்துக் கொண்டு சந்தைக்கு வாருங்கள். பிறப்பு,இறப்பு, உலக மகிழ்ச்சி  எல்லாவற்ரையும் இங்கு மலிவாகப் பெற்றுக் கொள்ளுங்கள். வெங்கடேசன் மேலேயிருந்து உங்களை கவனித்தபடி இருப்பான் “என்ற பொருளில் அமைந்த ஒரு கீர்த்தனை மனிதர்களுக்கு அன்றாடம் பரிச்சயமான பணம்,சந்தை,மகிழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லி அவைகளால் மட்டும் நிம்மதியடைய முடியாது,தவறுகளுக்கான சாட்சியாக இறைவன் இருப்பான்.அதனால் மனசாட்சியோடு வாழ்வது உயர்வு  என்ற தத்துவமான கருத்தைக் காட்டுகிறார்.[ கோலாடி  புண்யா பாவாயி] இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை போலத்  தெரிந்தாலும் வாழ்க்கை, மனம், கர்மம் சார்ந்த பொருளாகும். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை நாமறிந்த வகையில் சொல்கிறார்.

padmavathi_alamelu_mangaகாதல் பாவமும் அவரால் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. அலமேலு மங்கையை அவர் வியப்பதும்,போற்றுவதும் பல கீர்த்தனைகளின் சிறப்பாகிறது. ”அலமேலுமங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு [’அலமேலுமங்கா நீ அபிநவ ரூபமு’].

இன்னொரு கீர்த்தனையில் அவள் அழகாக நடனமாட பூக்கள் அவள் மீது பொழிகின்றன. மெல்ல திரைச்சீலைக்குப் பின்னால் மெட்டியொலிக்க அவள் நடனமாடும்போது வெங்கடேசன் அதை ரசிக்கிறார் என்ற நயமான  காதல் வெளிப்பாடு கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அவ்வுணர்வழகு ஏற்படும் வகையிலமைகிறது  [அலரலு குரியகா]. இந்தக் கீர்த்தனை குச்சிப்புடி நடனத்தில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அலமேலு மங்கையின் முகம் அழகானது. அவள் அசைவுகள்     நளினமானவை.   கருமையான மேகமூட்டம் நிறைந்த வானத்தில் இடையிடையே ஒளிவிடும் மின்னல்  போல வெங்கடேசனின் அருகில் அவள் இருக்கிறாள் என்ற கருத்திலமைந்த கீர்த்தனை எல்லோராலும் போற்றப்படுவதும், விரும்பிக் கேட்கப்படுவதுமாகும் [ஒக்கபரி  கொக்கபரி].

இறைவனின் அருகிலிருக்கும் அலமேலுமங்கையின் காதல் மட்டுமல்ல என் காதலும் தாபமும்,வேகமும் நிறைந்ததுதான் என்று நாயகி பாவத்தை கொண்டு வருகிறார் இன்னொரு கீர்த்தனையில் ஏக்க உணர்வில் தாபத்தோடு,

“கூரை மேலிருந்து உன்னைக் பார்த்துக் கொண்டு
உன் காதலுக்கு ஏங்குகிறேன் முனகிக் கொண்டே
நாட்களைக் கழிக்கிறேன் வெங்கடேசா
எங்கே போனாய் இவ்வளவு நேரம்?”

என்று செல்லமாகக் கோபிக்கிறார்.

“ஏ மனமே கடவுளை அடைவதற்கு இசை,பக்தியைத் தவிர வேறு சிறந்த வழி இருக்கிறதா? என்றறிந்த   ஓர் உண்மையை சந்தேகம் போல பல கீர்த்தனைகளில் கேட்டு இரண்டின் ஆழத்தையும் உணரவைக்கிறார்.

பல கீர்த்தனைகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நாட்டுப்புறப் பின்னணியில் அமைந்துள்ளன.  இவை “ஜானபதளு” என்றழைக்கப் படுகின்றன. ”சுவ்வி சுவ்வி சுவ்வாலம்பா” என்ற கீர்த்தனை கிருஷ்ணன் பிறப்பை  பெண்கள்  கூட்டமாகக்     கூடிப்பாடுவதாகிறது. விழாக்கள், பண்டிககளின் போது பெண்கள் மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே செய்யும் நெல்குத்துதல்   நிகழ்வை  கீர்த்தனை வெளிப்படுத்துகிறது. இக்கீர்த்தனையில் அன்னமையா வெங்கடேசுவரனை ”சோனேடப்பா “என அழைக்கிறார்.கோயில் அருகேயுள்ள குளத்திற்கு சோனே என்பது பெயர். அதைக் காட்டும் வகையில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இது வடமொழிச் சொற்கள் கலக்காத முழுவதுமான தெலுங்கில் உள்ள கீர்த்தனை  என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பாலோடு விளக்கெண்ணைய் மற்றும் பிற மருந்துப் பொருட்கள் சேர்த்து குழந்தைக்கு செரிமானம் வளரக் கொடுக்கும் மருந்து சடங்கிற்கு  ’உக்கு’ என்ற பெயருண்டு.  குழந்தை அதைக் குடிக்க  மறுக்கும். தாய்  யசோதா  அதைக் கொடுக்கும்படி கோபிகையரிடம் வேண்டுகிறாள். என்றாலும் அதைக் குடிக்கக் கண்ணன் மறுக்கும்போது அவனை அதட்டக்  கூடாது எனக் கண்டிப்பும் வேண்டுதலுமான நிலையில் அமையும் கீர்த்தனையான இதில் நாட்டுப்புறச் சொற்கள் இயல்பாக இடம் பெறுகின்றன. “சின்னத் தங்கையே” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அலமேலுமங்கையே தசாவதாரம் பற்றிச் சொல்வதை   ஒரு கீர்த்தனை காட்டுகிறது. நாட்டு புறப் பின்னணியில் அமைந்த இதுவும் வடமொழிச் சொற்கள் கலக்காத தன்மையுடையது.[“சிறுத நவ்வுலா’] ,”ராவே ராவே கோடலா ரட்டடி கோடலா   “சந்தமாவே ராவோ, ஜாதிபிலி ராவோ”,”ராரா சின்னண்ணா, ராரோரி சின்னவடா “ என்பன போன்ற கீர்த்தனைகளும் நாட்டுப்பாடல் வடிவம் பெற்று அமைகின்றன. இவற்றில் இறைவனின் லீலைகள் விரிவாக விளக்கம் பெறுகின்றன. தாலாட்டு வடிவிலான கீர்த்தனைகளும் அவரால் பாடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் இன்றும் அப்பாடல்கள் மிகப் பிரபலமாகவும், வழக்கிலுமுள்ளன. ”ஜோ ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ “ என்பது அதிலொன்றாகும்.

சில கீர்த்தனைகள் எளிமையான உவமையோடும், நடைமுறை வாழ்க்கையிலான அணுகுமுறையும் பெற்றுள்ளன. ”ஏன் இறைவனைக் குறை சொல்ல வேண்டும். மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு? குயிலும் ,காகமும் பார்க்க ஒன்றாக இருந்தாலும் வசந்தகாலத்தில் அவற்றின் திறமை வேறுபாடு  வெளிப்படுகிறது. அவரவர்     பாவ, புண்ணிய தன்மைக்கேற்றபடி தான்    வாழ்க்கை“ என்கிறார் [தய்வமு     துரங்கனேன]’. ’வேப்பமன்னு பலுவோசி ’ என்ற கீர்த்தனையில் வேப்பமரத்தைப் பாலூற்றி வளர்த்தாலும் கசப்பு அதைவிட்டு நீங்காது, என்றும் அரிவாளை நீண்டகாலம் தண்ணீரில் வைத்திருந்தாலும் அது மென்மையாக முடியாது என்றும் அன்போடு பாதுகாத்தாலும் தேள் கொட்டாமலிருக்காது என்றும் சாதாரண மக்களறிந்த இயல்பான உவமைகளை முன்வைத்து வாழ்க்கை நிலையை வெளிப்படுத்துகிறார். நாட்டுப்புற நடையில்  தத்துவக் கருத்துக்களை கீர்த்தனைகளாக்கிய சூழலில் மக்களறிந்த அன்றைய வழக்குச் சொற்களான  ஏலா, ஜஜரா, லாலி ,உய்யாலா, ஜோலா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

வந்தே வாசுதேவம், பாலபுண்யமுலோ, டோலாயாம், ஒக்கபுரி கொக்கபுரி, பாவயாமி கோபாலபாலம், வந்தேஜகத் வல்லபம் நாராயணட்டே, ஸ்ரீமன் நாரயணா ,நீலமேகமோ என்பவை அவரது பிரபலமான கீர்த்தனைகளில் சிலவாகும். அன்பும், தத்துவமும் கைகோர்த்த தன்மை இவர் பாடல்களின் சிறப்பாக இருப்பதால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகின்றன என்றும் மொழியை எளிமையாகவும், ‘ஒருமித்த‘ தன்மையிலும் அவர்   கையாண்டிருப்பதாகவும் இசையாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

அன்னமய்யா திருவுருவச்சிலை, திருமலை
அன்னமய்யா திருவுருவச்சிலை, திருமலை

அன்னமையாவின் சிறப்பறிந்து புரந்தரதாசர் அவரைச் சந்திக்க வருகிறார். அன்னமையாவைப் பார்க்கும் போது   புரந்தரதாசருக்கு வெங்கடேசப் பெருமானையே பார்ப்பது போல் இருக்கிறது, அன்னமையாவுக்கு புரந்தரதாசர் பாண்டுரங்கன் போலத் தெரிகிறார் என்று இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சொல்லப்படுகிறது.

வேதம், உபநிடதம், புராணம் ஆகியவற்றின் உயர்ந்த கருத்துக்களைச் சாதாரண மக்களுக்கும் எடுத்துச் சென்றது அன்னமையாவின் சிறப்பெனலாம். அவருடைய கீர்த்தனைகைகள் தொண்ணுறு  ராகங்களைக் கொண்டிருப்பதாக இசைவல்லுனர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர். அன்னமையாவின் பேரன் சின்னண்ணா எழுதிய ’அன்னமாச்சார்யா சரிதமு’ என்ற நூலின் அடிப்படையில்தான் அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தன் தாத்தாவை ’பதகவி பிதாமகர்’ என்று அவர் போற்றியுள்ளார். அன்னமையாவின் சிறப்பைக் காட்டும் வகையில் “அன்னமாச்சார்யா”என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உள்ளிட்ட   பலர் பாடியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் ’அன்னமையா ஆராய்ச்சித் திட்டம்” என்ற பெயரில் பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை

வேமனா
வேமனா

தெலுங்கு இலக்கியத்தில் வேமனாவின் படைப்புகள்  புரட்சிகரமான சிந்தனையின் அடையாளமாக விளங்குகின்றன. ஆந்திர மாநிலத்தில்  கொண்டவீடு என்ற இடத்தில் வேமனா பிறந்தார். குமரகிரி வேமா ரெட்டி என்பது இயற்பெயர்.  இளைய வயதிலேயே தாயை இழந்து,  மாற்றாந்தாயின் கொடுமைக்கு ஆளாகி அனபைத் தேடி அலைந்தார்.  தேவதாசியிடம் உறவுகொண்டு, பின்பு திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வெற்றி அடையாமல் போனதாக அவர் வாழ்க்கை பற்றிய கதைகள் கூறுகின்றான்.   இளைய வயதிலேயே யோகத்தில் ஈடுபாடுகொண்டு லம்பிகா சிவயோகியிடம் பயிற்சிபெற்றதாகவும் செய்திகள் உண்டு.  இந்தப் பின்னணியில் யோகி வேமனா என்றும் அழைக்கப் படுகிறார்.

ஏறக் குறைய மூன்றாயிரம் பாடல்கள்கொண்ட வேமனாவின் படைப்பு ’வேமனாவின் பத்யங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. பாடல்கள் நான்கு அடிகளைக்கொண்டு உள்ளன.  மூன்று வரிகள் அவர் கருத்தையும் இறுதி அடி ‘விஶ்வதாபிராமா வினுரா வேமா’ என்ற முத்திரையோடும் அமைகிறது. எளிமையான மொழியில் எல்லாக் கால கட்டத்துக்கும் பொருந்தும் கருத்துக்களைக்கொண்டு பத்யங்கள் அமைகின்றன.

சாதிகளுக்கு முதலிடம் தந்து சக மனிதர்களை மனிதர்களே புறக்கணித்த  காலகட்டத்தில் இராமானுஜர் ஓர் சீர்திருத்தவாதியாக  செயல்பட்டதைப் போலவே வேமனாவும் தன் காலகட்டத்தில் சாதியைத் தீவிரமாக  எதிர்த்தவர். அவர் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது.  சிவனை மட்டும் வழி படும்  ஜங்கம் பிரிவைச் சேர்ந்தவர்.  உழவு குடும்பத் தொழிலாகிறது.  சிவன் அவருக்கு பிடித்த கடவுளாக  இருந்ததைப் பாடல்கள் காட்டுகின்றன.  என்றாலும் கடவுளைக் காட்டி மக்களை வேறுபடுத்தும் தன் கால அவலத்தை அவரால் பொறுக்கமுடியவில்லை.

“மனிதன்  நடக்கும் மண் குடிக்கும் தண்ணீர்
எரிக்கும் தீ எல்லாம் ஒன்றே  இதில்
சாதியும்   குலமும் எங்கிருந்து வந்தன
விஶ்வதாபிராமா வினுரா வேமா”

என்பது பாடல்.

சர்வக்ஞர்

இதே கருத்தை கன்னட ஞானியான சர்வஞ்ஞரும் வலியுறுத்துகிறார்.  எந்தச் செயலிலும் வெற்றி அடைவதற்கு மனிதன் தொடர்ந்து செய்யும் பயிற்சிதான் காரணமாக முடியும் என்று நவீன உளவியல் இன்று சொல்வதை வேமனா அன்றே காட்டியிருக்கிறார். சர்வஞரும் அதையே சொல்கிறார்.

‘பாடப் பாட ராகம் இனிமையாகும்
தின்னத் தின்ன வேம்பு சுவைக்கும்
பயிற்சிதான் செயலை முடிக்கும்
விஶ்வதாபிராமா வினுரா வேமா

என்பது அவர் கவிதை.

துன்பம் தந்தவரை அழித்தே தீருவேன் என்ற வெறுப்பு மனமோடு வாழ்வது சகஜம்தான்.  ஆனால் அதிலிருந்து விடுபடும்போதுதான் தான் மனிதன்,  தன் பிறவிக்கான அடையாளத்தைப் பெறுகிறான்.  குற்றம் செய்தவனை மன்னித்து தண்டிக்காமல் சுதந்திரமாக விடுவதே மனிதத் தன்மை என்பது அவர் கருத்தாகிறது.  இது வள்ளுவரின் ’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்பதோடு ஒன்றுகிறது.

இலக்கியம் என்பது எவராலும் அணுகமுடிவதாக இருக்கும் போதுதான் அது சமூகப் பயன்பாடு உடையதாகிறது.  பாரதி உறுதிபடுத்தியதைப்போல எளிமைதான் நல்ல கவிதையின் அடையாளம்.

அன்றே இதைச் சில பெரியபுராணப் பாடல்களும், நாலாயிர திவ்யப்பிரபந்தப் பாடல்களும்,   ஒன்பதாம் நூற்றாண்டைய கன்னடமொழி வசனங்களும், தெலுங்குமொழி பத்யங்களும் காட்டி உறுதிசெய்துள்ளன.  நல்ல கவிதை என்பதும், கவிஞன் என்பவன் என்று உணரப்படுவதும் அவற்றில் இருந்து வெளியாகும் உவமைகள் மூலம்தான்.  சான்றாகச் சாதாரண மனிதனுக்குத் தெரிந்த உப்பு, கற்பூரம்,  பசும்பால்  இவையெல்லாம்தான் வேமனாவின் உவமைப் பொருள்களாகின்றன.  உப்பும்,  சூடமும் பார்வைக்கு ஒன்றுபோலத் தெரிந்தாலும் கூர்மையான கவனிப்பு  அவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை அறியச்செய்வதுபோல, தனித்த பார்வையால் இரக்கம் உடையவர்களை இனம்காணமுடியும் என்கிறார். பாத்திரம் நிறைய இருந்தாலும் கழுதைப்பாலால் பயன் இல்லை. சிறு கிண்ணத்தில் உள்ள பசும்பாலைப்போல சிறிதளவு உணவு என்றாலும்  மரியாதையோடு தரப்படும் போதுதான் சிறப்பு கிடைக்கும் என்கிறார்.

முக்காலமும் உணர்ந்தவர்களாகவே சமூக சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கின்றனர்.  முதியோர் இல்லங்கள் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில், வேமனா அன்று சொன்ன கருத்து பொருத்தம் உடையதாகிறது.  ”தாய் தந்தையிடம் மதிப்பும், நன்றியும் இல்லாத மனிதன் எதற்காகப் பிறக்கிறான்,” என்ற வினாவை முன் வைக்கிறார்.

சில வினாக்களுக்கு விடை ஒவ்வொருவரின் மனசாட்சியுமாகத்தான் இருக்கமுடியும்.   இந்த வினாவின் நோக்கமும்  படிப்பதோடு நின்றுவிடாமல் தன் பிறப்பின் காரணத்தை ஒவ்வொருவரும் அறியவேண்டும் என்பதுதான். பெற்றோர்களிடம்கூட சரியான உணர்வுகளை வெளிப்படுத்தாதவன் ஆறறிவு அற்றவன் என்பது அவர் பார்வையாகிறது.

தோற்றத்தை வைத்து மனிதனை எடைபோடுவது சரியான தீர்வாவதில்லை. ஆனால் உலகம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.  அந்த நிலையை ஓர் எளிய உவமைமூலம் புரியவைக்கிறார். ’உலகம் அத்திப்பழம் போன்றது.  அத்தியின் வெளித்தோற்றம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கிறது.  அதை எப்படி வெட்டினாலும் உள்ளே புழுக்கள் பெருகிக் கிடப்பதைப்போல, புறம் அழகாக இருந்தாலும் அகம் அழுக்கு  நிறைந்து  கிடப்பதாக உள்ளது என்கிறார்.  இந்த அத்திப்பழ உவமை கன்னட ஞானி பசவேசராலும் சொல்லப் படுகிறது.

“எனது மனமோ அத்திப் பழம், பாரையா
ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை”

என்ற வசனம், வெளிப்புறத்தில் மிக அழகான  தோற்றம் கொண்ட அத்திப்பழம்போன்ற வெளித்தோற்ற அழகிருந்தாலும்.  பழத்தின் உள்ளே பெருகிக்கிடக்கும் புழுக்களைப் போன்றது மனதின் கசடுகள் என்ற அவரது உவமையை இங்கு ஒப்பிடலாம்

வழிபாட்டைவிட அதன் நோக்கம்தான் எப்போதும்  முக்கியமானதாகிறது.  தன்னுடைய வாக்கைக் காப்பாற்றமுடியாமல் போகும்போது பக்குவமான மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது.  பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும்.  மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை.

தேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும்.  ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச்  சார்பற்றும்  சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது.  அதை உறுதியாக்கும் வகையில் அவர் கவிதைகளும் கருத்துகளும் வாழ்கின்றன.  எல்லாக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துக்கள்கொண்ட ஓரிரு  கவிதைகள் தரப்பட்டுள்ளன.

“இடமும் நேரமும் நம்முடையதாக இல்லாதபோது
வெற்றி நமக்கில்லை, இதனால் நாம் சிறியவர்களில்லை
கண்ணாடியில் மலை மிகச்சிறியது தானே
விஶ்வதாபிராமா வினுரா வேமா”

“தளர்வு  நேரத்தில் உறவுத்தன்மையைப் பார்க்கவேண்டும்
பயமான சமயத்தில்  படைபணியைப் பார்க்கவேண்டும்
வறுமைப்பொழுதில் மனைவியினியல்பைப் பார்க்கவேண்டும்
விஶ்வதாபிராமா வினுரா வேமா”

மக்கள் கவி வேமனாவிற்கு தன்னம்பிக்கையே பலம். ஒளிவுமறைவின்மை,  அச்சமின்மை, அனுபவமே படைப்பு என்று ஒரு கலவையாக வாழ்ந்தவர்  அவர்.

“மழையில் நனையாதவர் எவருமில்லை
வேமனாவின் கவிதையை அறியாதவருமில்லை”

என்ற  பாராட்டு அவருக்கு உரியதாகிறது.

எப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்

எப்படிப் பாடினரோ தொடரின்  மற்ற பகுதிகளை இங்கு படிக்கலாம். 

னகராஜனின் அரண்மனை; விசுவாமித்திரர் அழகான இரு வாலிபர்களுடன் அரசவைக்குள் நுழைகிறார். அந்த வாலிபர்களுள் ஒருவனான ஸ்ரீராமன் யாராலுமே தூக்கி நிறுத்தக் கூட இயலாத சிவதவனுசை நாணேற்றலாமா என எண்ணுகிறான். குருவின் அனுமதிக்காக அவர் முகத்தை அண்ணந்து நோக்குகிறான். வாலிப மிடுக்கும், எழிலும், கருணையும்,  ராஜ கம்பீரமும் பொங்கும் முகம், எடுத்த காரியத்தில் ஈடுபட்ட முனைப்பு; சுருண்ட கேசக் குழல்கள் நெற்றியில் புரண்டு விளையாடுகின்றன;  அந்த அழகில் ஈடுபட்டு மெய்மறந்த ராஜரிஷி விசுவாமித்திரர் பேசவும் மறந்து, கண்ணால் சைகை செய்து அனுமதி அளிக்கிறார். சிவதனுசை நாணேற்றுகிறான் ஸ்ரீராமன்.

எப்படிப்பட்டதொரு கண்கொள்ளாக் காட்சி! தியாகராஜர் என்னும் மாபெரும் வாக்கேயகாரர் எழுதிய மிக ஒரு அழகான சித்திரத்தை அல்லவோ கண்முன் காண்கிறோம். காதாலும் கேட்கிறோம்!

‘அலகலல்ல ஆடககனி ஆராண்முனி எடுபொங்கெனோ’– சுருண்ட குழல்கள் அசைந்தாடும் அழகில் சொக்கிப் போய் மெய்ப்புளகமுற்று நிற்கும் ராஜரிஷியான விசுவாமித்திரர் தனது சீடன் ராமன் வில்லை நாணேற்றுவானா எனக் கவலையே படவில்லை! ராம லாவண்யத்தில் தன் வயமிழந்து நிற்பவராக விசுவாமித்திரர் தியாகராஜரால் உருவகப் படுத்தப்பட்டுள்ளார்.

‘முனிகனு சைக தெலிசி சிவதனுவுனு விரிசே’- முனிவனின் கண் சைகை அறிந்து வில்லை எடுக்கிற ராமனின் நெற்றியில் புரளும் குழல்களின் அழகில் நம்மையும் மயங்க வைக்கும் பாடல். இத்தகைய ஒரு நுணுக்கமான விஷயத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்து ராமனின் அழகில் ஈடுபட்டு விடும் தியாகராஜரின் இந்த மத்யமாவதி ராகக் கிருதியை அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் விறுவிறுப்பான பாடாந்தரத்தில் கேட்கலாம். மனக்கண்ணில் காட்சியைக் கண்டு நமது பாரம்பரியப் பெருமையை எண்ணி உள்ளம் பூரிக்கலாம்.

கேட்க: அலகல்ல ஆடககனி – அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்

thyagarajaஇறையனுபவம் என்பது அவனுடைய எண்ணற்ற கல்யாண குணங்களில் (அருள், கருணை, பேராண்மை, இன்ன பிற) ஆழ்ந்து, அதைப் போற்றுவது. குணம் என்பதில் வடிவும் உருவும் சேரும். இவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டு ராமனை கார்முகில் வண்ணன், தடந்தோளன், தடக்கையன், தாமரைக் கண்ணன் என்றெல்லாம் வர்ணித்து மகிழ்கிறார் தியாகராஜர்.

ராமனின் எல்லையற்ற ‘அழியா அழகை’த் தமது எல்லையற்ற கற்பனைக்குள் அடக்கிப் பார்த்து மகிழும் இது போன்ற எண்ணற்ற கிருதிகள்! எத்தனை முயன்று நீந்திப் பார்த்தாலும் ஆழம் காண முடியாத பெரும் சங்கீத சாஹித்யக் கடல் தியாகராஜருடையது. இதில் மூழ்கி ஒரு சில அபூர்வமான முத்துக்களை எடுத்துப் பார்த்து, கேட்டு மகிழலாமே!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் தியாகராஜர் என நாம் அறிவோம். ராமபக்தியில் மூழ்கி, தன்னை, தன் வாழ்வையே ராம சேவையில் கழித்தவர். நாரதரின் மறு அவதாரம் எனப் போற்றப் படுபவர். இவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு. திருவாரூரில் பிறந்த இவர் வாழ்ந்த ஊர் திருவையாறு. திருவாரூர் தியாகேசனின் பெயரையே தாய் தந்தையர் இவருக்குமிட்டனர். தெலுங்கிலும் சம்ஸ்கிருதத்திலும், சங்கீதத்திலும் மிகத் தேர்ச்சி பெற்ற பரம்பரையில் வந்தவர். தந்தை பெயர் ராமப்பிரம்மம். திருவாரூரிலிருந்த ராமப்பிரம்மத்தின் குடும்பம் தியாகராஜரின் கல்விக்காகத் திருவையாற்றுக்குக் குடி பெயர்ந்தது.

தர்க்கம், வியாகரணம் ஆகியவற்றில் நாட்டமின்றி, சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தார் தியாகராஜர். ராமபக்தியிலேயே மூழ்கியிருந்த தியாகராஜர் பிற தெய்வங்களை ஏறெடுத்தும் பாராதிருந்தார். ‘லாவண்ய ராம கனுலார ஜூடவே’ என்ற பூர்ணஷட்ஜ ராகக் கீர்த்தனையில் ‘உன் மனசு, உன் தினுசு, உன் சொகுசு வேறு தான்! நீ இருக்கும்போது தாமச தெய்வங்களை நான் தொழலாகுமோ?’ எனப் பாடினார். ஆனால் இவரது மனைவி சிவபக்தை; ஹரியும் சிவனும் ஒன்றென எண்ணுபவர். திருவையாறிலே வாழ்ந்திருந்தாலும் கூட தியாகராஜர் தர்மசம்வர்த்தனி அம்பிகையின் பவனியைப் பார்க்க மாட்டாராம்! கனவில் தினமும் ராமனைத் தரிசித்து மகிழ்ந்தவர், ஒருமுறை நோயில் படுத்தார்; அப்போது ராமன் அவர் கனவில் வரவில்லையாம்! ‘எல்லா தெய்வங்களும் சமம்; ஒன்று’ என்ற எண்ணம் அப்போது தான் அவருக்கு உதித்தது. பின்பு சிவன், அம்பிகை ஆகிய தெய்வங்களின் மீதும் அழகான பல பாடல்களை இயற்றினார்.

கேட்க: லாவண்ய ராம கனுலார ஜூடவே..

இவர் இயற்றிய கீர்த்தனைகள் கிட்டத்தட்ட 24,000 என்பார்கள். ஆயினும் சில நூறுகளே தற்போது புழக்கத்திலுள்ளனவாம்.

ஸ்ரீராமனைத் தன் ஆண்டானாக, தோழனாக, குழந்தையாக, மகனாக, தந்தையாக, குருவாக என எல்லாமாக எண்ணி நவவித பக்தி செய்தவர் தியாகராஜர்.

‘மானமுலேதா தனவாடனி அபிமானமு லேதா’ என்ற ஹமீர் கல்யாணி ராகப் பாடலில், “உனக்கு வெட்கம் இல்லையா, உன் தனயனான என்னிடம் அபிமானமும் இல்லையோ?” என்று உரிமையுடன் ராமனைக் கேட்கிறார். ‘கானமுரா நீவலெ நிர்மோஹினீ,’ எனும் அனுபல்லவி வரிகளில், “உன்னைப் போன்ற பற்றற்றவனை (நிர் மோஹியை) நான் கண்டதில்லையே,’ எனப் பரிகசிக்கிறார். பரிகாசம் ஏன்? எல்லா பந்த பாசங்களையும் ஒதுக்கி விட்டு, கற்பில் சிறந்தவளான சீதையை ஊராரின் சொல்கேட்டு வனவாசம் செய்ய அனுப்பினான் ராமன். இசையில் சிறந்த குச லவர்களின் தந்தை,’ எனக் கூறி, ‘இருப்பினும் ஒரு அரசனுக்கு தனது தருமமே முக்கியம் எனக் கருதியே இவ்வாறு செய்தவன்,’ எனவும் ஏத்துகிறார்.

கேட்க: மானமு லேதா – சஞ்சய் சுப்ரமணியன்

விஜய்சிவாவின் ஆழம் பொதிந்த ஸ்பஷ்டமான அபூர்வக் குரலில் அர்த்தம் செறிந்த இவ்வரிகள் அழகு மிளிரப் பொங்கியெழுந்து உள்ளத்தைச் சுண்டியிழுக்கும்.

தியாகராஜர் எல்லாப் பாடல்களிலும், அவற்றின் வரிகளினூடே ஒரு தத்துவத்தை, ராம காதையிலிருந்து தாம் ஆழ்ந்து அனுபவித்த ஏதேனும் ஒரு செய்தியை அல்லது ரசத்தை கோடியிட்டுக் காட்டியிருப்பார்.

‘ஆடமோடி கலதா’ எனும் சாருகேசி ராகப் பாடல்- ‘என்னுடன் ஒரு சொல் பேச நீ ஏன் இவ்வளவு பிணங்குகிறாய் ராமைய்யா?… கற்க வேண்டியது அனைத்தையும் கற்றறிந்த, சங்கரனுடைய அம்சமான அனுமனிடம் கூட  (முதல் சந்திப்பில்) உனது தம்பியை விட்டுப் பேசச் செய்தவன்  நீ…  (எளியவனான இந்த) தியாகராஜனிடம்  பேச மாட்டாயா..” எனப் பாடிப் பரிதவிக்கிறார்.

‘சதுவுலன்னி தெலிஸி சங்கராம்ஸுடை
ஸதயுடாஸுக ஸம்பவுடு ம்ரொக்க
கதலு தம்முனி பல்க ஜேஸிதிவி கா-
கனு த்யாகராஜு ஆடின மாட(லாட)’

இதனை லால்குடி ஜயராமன் வயலினில் அற்புதமாக வாசித்துள்ளார். அன்னாரது சாருகேசி ராக ஆலாபனையே பிள்ளையார் சுழி இட்டு ஒரு தேவானுபவத்திற்கு நம்மைத் தயார் செய்து விடும். பின்பு இந்தக் கிருதியைக் கேட்கும் போது கண்களில் கங்கைப் புனல் பெருகி விடும். பாடலின் சாஹித்யங்களையும் புரிந்து கொண்டு கேட்டு பாடலுடன் ஒன்றி நெகிழச் செய்யும் இன்னொரு ஒலிப்பதிவு பாலமுரளி கிருஷ்ணாவினுடையது!

கேட்க: ஆடமோடி கலதா: எம்.பாலமுரளி கிருஷ்ணா

இவையெல்லாம் தான் தியாகராஜரின் கிருதிகளின் மேன்மை எனலாம். தான் மட்டுமின்றிக் கேட்பவர்களையும் இறைவனோடு ஒருங்கிணைக்கும் வாக்சாதுர்யம் ததும்பும் கவிநயம், பாவம்!

தியாகராஜர், இறை அனுபவம் மட்டுமின்றி அந்த இறைவன் குடியிருக்கும் இயற்கையையும் போற்றிப் பல பாடல்களை இயற்றியுள்ளார். ‘முரிபமு கலிகே கதா ராம சம்முனினுத’ என்ற முகாரி ராகப் பாடலை தற்போது புழக்கத்தில் இருக்கும் இத்தகைய பாடல்களுள் ஒன்றாகக் கொள்ளலாம். இசைக்குயில் எம். எஸ். சுப்புலட்சுமி இதனை மிக அழகாகப் பாடியுள்ளார். தென்றல் தவழும் காவேரி நதி தீரத்தை வர்ணிக்கும் கீழ்க்காணும் வரிகள் அவரின் இனிய குரலில் நம்மை மயக்கும். நாமும் அங்கு சென்று குடியிருக்க மாட்டோமா என ஏங்கவும் வைக்கும்!

‘ஈடுலேனி மலயமாருதமுசே
கூடின காவேரி தடமந்து
மேடலமித்தெலதோ ஸ்ருங்காரமு
மிம்சு சதனமுலலோ………’

‘ஈடிணையற்ற தென்றல் வீசும் காவேரி நதிக் கரையில் உள்ள அழகிய வீடுகளில் வாழும் உத்தம புருஷர்கள் வேதங்களை ஓதி இறைவனை வழிபட்டு வருகின்றனர்,’ என்பது இதன் பொருள்.

கேட்க: முரிபமு கலிகே – நேதனூரி கிருஷ்ணமூர்த்தி

யாருமே பாடாத (நான் தான் கேட்டதில்லையோ என்னவோ!) ஒரு அருமையான அசாவேரி ராகக் கிருதி காவேரி நதியின் பெருமையை விண்டுரைக்கின்றது! ஒரு ஆடிப்பெருக்கின் போது, காவேரி பூஜையின் சமயம் ஸ்வாமிகள் இதனை இயற்றியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

rama_gives_darshan_to_thyagaraja‘ஸாரி வெடலின ஈ காவேரினி ஜூடரே’ எனத் தொடங்கும் கிருதி, ‘கரை புரண்டு வரும் இந்தக் காவேரி நதியைத் தரிசியுங்கள்! யாரிடத்தும் வேறுபாடு கொள்ளாமல் எல்லாருக்கும் நல்வாழ்வை வழங்கியபடி, ஓரிடத்தில் அலைகள் புரள, பிறிதோரிடத்தில் கர்ஜனை புரிவது போன்ற பெருத்த ஓசையுடனும், மற்றோரிடத்தில் அமைதியாக நடை பயின்றும் ஸ்ரீரங்கநாதனைத் தரிசிப்பது போல ஸ்ரீரங்கத்தின் வழியே பெருக்கெடுத்து ஓடி, ஈரேழுலகங்களையும் உய்விக்கும் ஈசன் உறையும் பஞ்சநதீஸ்வர  க்ஷேத்திரத்தின் வழியே பாய்ந்து, அவ்வீசனையும் தரிசித்து, எல்லா மக்களும், தேவர்களும் இருகரைகளிலும் கூடி நின்று ‘ராஜராஜேஸ்வரி’ என மலர்களைத் தூவிக் கொண்டாடி வழிபடும் காவேரி என்னும் இந்தக் கன்யகா மணியைத் தரிசியுங்கள்,’ என ஆனந்த பரவசராய் ஸ்வாமிகள் பாடியது.

காவேரியின் போக்கை எத்துணை அழகாக வர்ணித்துள்ளார்! ‘நடந்தாய் வாழி காவேரி,’ என்று இயற்கையைப் போற்றிக் காவேரியை வழிபட்ட இளங்கோவடிகளுக்கு இதோ ஒரு போட்டியாளர் எனத்தான் வியக்கத் தோன்றுகிறது! இத்தனை அழகிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து மேடைகளில் பாட இன்றைய இளைய தலைமுறைக் கலைஞர்கள் முன் வருவார்களா எனக் கேட்கவும் ஆவல் மிகுகின்றது!

திருவையாறு பஞ்சநதீசன் மேலும் அன்னை தர்மசம்வர்த்தனியின் மேலுமாகப் பதினோரு கிருதிகளைத் திருவையாறு க்ஷேத்ரக் கிருதிகள் என்ற பெயரில் இயற்றியுள்ளார் தியாகராஜர். சங்கீத வித்வானும் சித்திரக் கலைஞருமான திரு. எஸ். ராஜம் அவர்கள் இவற்றுள் சிலவற்றைத் தமக்கே உரிய தனித்து விளங்கும் பாணியில் அற்புதமான சித்திரங்களாக வழங்கி (Musings on Music) விளக்கமும் அளித்துள்ளார்.

‘விதி சக்ராதுலகு தொரகுணா’ என்ற யமுனாகல்யாணி ராகக் கீர்த்தனையில், தர்மசம்வர்த்தனியான அன்னையின் வெள்ளிக்கிழமை தர்பார் வைபவத்தை மிக அழகான சொல்- இசை ஓவியமாகவே வர்ணிக்கிறார். தியாகராஜரின் சொல் ஓவியத்தை திரு. ராஜம் வண்ண ஓவியமாக வடிக்க, இதன் இசை ஓவியத்தை திரு. ராஜம் அவர்களின் சிஷ்யையான விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் தனது வசீகரக் குரலில் பாடியுள்ளார். சாக்தம் எனும் பெயர் கொண்ட இசைக் குறுந்தகட்டில் இதைக் கேட்டு ரசிக்கலாம்!

‘பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுக்கும் காணக் கிடைக்காத தர்மம் என்னும் கடலில் துயிலும் அன்னையின் இந்த சேவையைக் காண வாரீர்! அன்னையின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்துள்ளனர்.  விருதுச் சின்னங்களை ஏந்தி நிற்கின்றனர். ஜய ஜய என்ற கோஷங்களை எழுப்புகின்றனர். நாட்டியமாடுகின்றனர். மலர்களைச் சொரிகின்றனர். அன்னை பராசக்தி (தர்மசம்வர்த்தனி) மஹாலட்சுமியுடன் சிரித்துப் பேசியபடி வருகிறாள்; அவளுடைய பிரகாசமான புன்னகையுடன் போட்டியிட்டபடி அவளணிந்துள்ள வைர வைடூரிய ஹாரங்கள் ஜொலிக்கின்றன,’ எனவெல்லாம் நேர்முக வர்ணனையாளர் போல விவரிப்பவர், முத்தாய்ப்பாக,

‘….. அமரகோடுலு
தடபட பூமினி தண்டமுலிடகா சந்தோஷமுனனு
கடகண்டினி ஜூசெ சொகஸு..’

என உள்ளம் குளிர வைக்கிறார். அதாவது, தேவர்கள் ‘தடபட’ வென பூமியில் விழுந்து தண்டமிட்டு வணங்குவதை கடைக்கண்ணால் பார்த்து அங்கீகரித்துக் கொள்ளும் அழகை (சொகுசை) நம் கண்முன் படம் பிடித்து வைத்து விடுகிறார். இந்த ஒரு அனுபவத்தை உணருவதற்காகவே தர்மசம்வர்த்தனியின் திருக் கோவிலுக்குப் போகத் தோன்றும்!

இந்தக் கிருதியை இறை வழிபாடாக மட்டுமின்றி, முதலில் கண்ட தியாகராஜரின் மற்றும் பல கீர்த்தனைகளைப் போல தெய்வீக அழகின் ஆராதனையாகவும் நாம் காணலாம்.

இவை அனைத்தும் ஒரு சில துளிகள் தான். இன்னும் பஞ்சரத்னக் கிருதிகள், நௌகா சரித்ரம், ப்ரஹலாத பக்தி விஜயம் எனும் இசை நாடகங்கள், ஸ்ரீரங்கம் பஞ்சரத்னம், திருவொற்றியூர் பஞ்சரத்னம், லால்குடி பஞ்சரத்னம் எனும் ஒப்பற்ற இசைச் செல்வங்களை நமக்கு வாரி வழங்கியிருக்கிறார். இசை விற்பன்னர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் இறைவனுக்குச் செய்யும் பஜனையிலும் பூஜைகளிலும் சாமானியர்களும் பங்கேற்று மகிழும் வண்ணம் அழகான எளிய ராகங்களில் ‘சீதா கல்யாண வைபோகமே.’ லாலி, ஊஞ்சல் வகைப் பாடல்களை உத்சவ சம்பிரதாயக் கிருதிகள் என இயற்றியுள்ளார். ராமனை, ‘லாலி ஊகவே,’ எனத் தாலாட்டி மகிழ்ந்துள்ளார்.

‘சீதம்மா என் தாய். ஸ்ரீராமன் என் தந்தை; பரதன், லக்ஷ்மணன், அனுமன் ஆகியோர் உறவினர்கள்,’ எனக் கொண்டாடிப் பெருமைப் பட்டுள்ளார் (சீதம்ம மாயம்ம – வசந்தா ராக கிருதி).

‘ராம சன்னிதி சேவையே பொன்னிலும் பொருளிலும் மிக உயர்வானது,’ என அறுதியிட்டுக் கூறுகிறார் (நிதி சால சுகமா).

கேட்க: நிதி சால சுகமா – கல்யாணி- எம்.எஸ்.சுப்புலட்சுமி

தியாகராஜ கிருதிகள் அளக்க இயலாத பொற்குவியலான சொற் சித்திரங்கள். வான் பொய்த்தாலும் தான் பொய்யாத குலமகள் காவேரியின் கரைகளில் பிறந்து வளர்ந்து பண்பட்டு நமக்கெல்லாம் பெருமை தரும் அருமைத் தென்னக கர்நாடக இசைச் செல்வங்கள்.

தியாகராஜ ஸ்வாமிகள் சமாதியடைந்த தினமான புஷ்ய பகுள பஞ்சமி தினம் ஆண்டு தோறும் அவருடைய சமாதியில் அனுசரிக்கப் படுகின்றது. கர்நாடக இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி அவருடைய கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை செய்து அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாண்டும் ஜனவரி 9-ம் தேதி ஆராதனை நடைபெறப் போகிறது.

சமீபத்தில் காவேரி பெருக்கெடுத்தோடும் திருவையாறில் தியாகராஜரின் சமாதிக்குச் சென்றிருந்தேன். ஒரு குழு அமர்ந்து ‘எந்தரோ மஹானுபாவுலு’ எனப்பாடிக் கொண்டிருந்தது. எத்தனை பொருள் செறிந்த சொற்கள். ‘எத்தனையோ மஹான்கள்; அனைவருக்கும் எனது வந்தனம்,’ என்ற மஹா பக்திமானான ஒரு அடியவரின் கால்பட்ட மண்ணில் நான் நிற்பதை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து அஞ்சலியில் கைகளைக் குவித்தேன்.

பிறிதொரு வாய்ப்புக் கிடைத்தால் மேலும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். வணக்கம்.