வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும் … வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

View More வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்

தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்… சிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன் ..

View More தேசபக்த வீரர் வ.உ.சி: நினைவுத் துளிகள்

தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

… இந்தப் பிரிவினைவாத இயக்கங்களின் குண்டர்கள் ராணுவத்தைத் தாக்கியதிலும், தேசியக்கொடியை எரிக்க முயன்றதிலும் ஆச்சரியம் இல்லை .. ஆனால் கடைந்தெடுத்த சமூக விரோத, தேச விரோத கும்பலுக்கு அனாதை இல்லத்தில் “சேவை” செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது….

View More தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

… இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

View More அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

ஆதி அந்தமில்லாத தர்ம நெறியாகிய நம் இந்து மதத்தில் வன்முறைக்கோ, பயங்கரவாதத்திற்கோ, எள்ளளவும் இடமில்லை…. மனமுதிர்ச்சி இன்றி, விளைவுகள் பற்றி சிந்திக்காமல் இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்கள் (இவர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்…”காவி தீவிரவாதம்” போன்ற பொறுப்பற்ற பிரசாரங்களினால், ஏற்கெனவே ஒற்றுமையின்றி பிரிந்து கிடந்து, தன் ஒருங்கிணைந்த ஊக்கத் திறனையும், சக்தியையும் உணராமல் இருக்கும் இந்து சமுதாயத்தில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து, தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்….தீவிரவாதம் ஒழியட்டும். ஜனநாயகம் தழைக்கட்டும். அமைதி பெருகட்டும். தேசம் எல்லாத் துறைகளிலும் வளரட்டும்.

View More தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயகம் வளர்ப்போம்

ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும், கலைஞர்களும் சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் தேசியத் திருநாள்.

“தேவி! மூவுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் எவையோ அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.”

View More ஆயுதபூஜை, விஜயதசமி: தேசசக்தி பொங்கும் தெய்வத் திருவிழா!

விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மீண்டும் எழுவாய்
இது உறக்கம்தான் மரணமல்ல
புது வாழ்வில் விழித்தெழும்
துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன்
கமலமலர் விழிகளின் சிறு அயரல்
ஓ சத்தியமே!
உன்னை வேண்டி நிற்கும் உலகம்
உனக்கென்றும் அழிவில்லை

View More விழித்தெழும் பாரதத்தை நோக்கி: விவேகானந்தர் கவிதை

மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

(பாடலும் விளக்கமும்.) ரஷ்யப் புரட்சியையும் ஃபிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு…

View More மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1