மண்ணுருண்டையா மாளவியா?

திராவிட கழகம் என்கிற பகுத்தறிவற்ற இனவாத அமைப்பு தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது.  இந்த அமைப்பு அவ்வப்போது தனது வரலாற்று அறிவின்மையை தம்பட்டம் போட்டு அறிவிக்கும்.  அது நகைசுவையாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் ஒரு விசித்திர மனோபாவம் என்னவென்றால் இப்படிப்பட்ட நகைசுவை உளறல்களை உண்மை என ஒரு கூட்டம் நினைத்துவிடுவதுதான். இல்லையென்றால் திராவிட இனவாதம் என்கிற சமூக நோய் இத்தனை தூரம் வளர்ந்திருக்குமா என்ன?  சரி விஷயத்துக்கு வருவோம்…  26-டிசம்பர்-2014  அன்று ‘விடுதலை’ என்கிற திராவிட இனவாத இணையதளத்தில் மதன் மோகன் மாளவியா அவர்களைக் குறித்து  ’யார் இந்த மண்ணுருண்டை மாளவியா’ என்கிற தலைப்பில் ஒரு அவதூறு கட்டுரை. அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வசையின்றி தொகுத்தால் அதன் சாராம்சம் இதுதான்:

The aqueous suspension is in capsules, syringes, and bottles. This article will review the most recent changes in the dapoxetine amoxil online prescription drug market. It is small and light and has a very simple control interface, making it easy to use and maintain.

Doxycycline is used to solve the problems related to bacterial infections in the body. So you have to factor in how much clomid tablet cost you would pay for the drug if you did not have a prescription. The other option you can consider is to buy finpecia usa online.

The active ingredient is prednisolone acetate, which has no effect on the eye. It was introduced in japan as a drug candidate in 1960, but was withdrawn Fuquay-Varina after its efficacy was demonstrated to be inferior to that of amitriptyline. With a foreword by gloria emerson and an afterword by paul debevec.

மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார்.  தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை  எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு  இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது?

இதை தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளது விடுதலை.

ஆனால் உண்மை என்ன?

அன்றைய தேதியில் சாதியக் கொடுமைகளை எதிர்த்த ‘மேல்சாதி’ எனப்படும் இந்துக்களில் பண்டித மதன் மோகன் மாளவியா போன்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு தாண்டி வந்து இன்று அவரது நிலைபாடுகளில் நாம் குறை கண்டுபிடிக்க முடியலாம். ஆனால் அன்று அவரது நிலைபாடுகள் புரட்சிகரமானவை. அதைவிட முக்கியமாக அவை யதார்த்த சூழல்களை கணக்கில் கொண்டு முற்போக்குத்தன்மையுடனும் மானுடத்தன்மையுடனும் அமைந்தவை.

1. மண்ணுருண்டையை தன்னுடன் எடுத்து போனார் மாளவியா.  ஏனென்றால் மனுஸ்மிருதி கடல்கடந்து போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறது. மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது. s8மனு ஸ்மிருதி என்பது ஏதோ பத்து கட்டளைகள் போல ஆண்டவன் மேலே இருந்து கொடுத்தது அல்ல. இங்கு நிலவிய சம்பிரதாயங்கள், பண்பாட்டு முறைகள், அரசியல், சமூக அடக்குமுறை இவை அனைத்திலிருந்தும் உருவானதுதான் மனு ஸ்மிருதி.  ஒருவன் தனது ஊரை விட்டு நாட்டை விட்டு போக கூடாது என்பது ஒரு விதி. இன்றைக்கும் ஊரில் கோவில் திருவிழா என்றால் அனைவரும் திரும்பி வந்துவிட வேண்டும்; கோவில் திருவிழாவுக்கு கொடிமரம் வைத்தால் பந்தல் கால் நட்டால் ஊருக்கு வெளியே போகக் கூடாது என்றெல்லாம் நம் நாட்டில் வழக்குமுறைகள் உள்ளன. இதன் ஒரு வெளிப்பாடே கடல் கடந்து செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு தடை. ஆனால் கல்விக்காகவும் தேச விடுதலைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கடல் கடந்து செல்லும் போது பழமையை புதுமைக்காக எப்படி அழகுடன் வளைத்தெடுப்பது என்பதற்கு மாளவியா செய்த செயல் அருமையான எடுத்துக்காட்டு.  ஏன் கடல் கடந்து செல்லக் கூடாது? ஏனெனில் தாய்நாட்டின் மீது பிறந்த மண்ணின் மீது பாசம் வேண்டும். எங்கு சென்றாலும் இந்த மண்ணின் மைந்தன் நீ எனும் உணர்வு வேண்டும். அதை ‘சிம்பாலிக்’காக காட்டினால் போதும். அடிப்படைவாதிகளை போல எழுதப்பட்ட நூலில் எழுத்துகளை பிடித்து கொண்டு தொங்க வேண்டியதில்லை. மகாத்மா மாளவியாவின் பகுத்தறிவும் ஆழமும் கொஞ்சமாவது ஈ.வெ.ராமசாமிக்கு இருந்திருந்தால் இந்த கட்டுரையையே எழுத வேண்டியிருந்திருக்காது.

2. தலித் ஆலய நுழைவு போராட்டத்தில் பண்டித மதன் மோகன்மாளவியாவின் நிலைபாடு என்ன?

தலித் பிரச்சனையில் தொடர்ந்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர்  மதன் மோகன் மாளவியா.  1923 இல் கயாவில் இந்து மகாசபையின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அதில் மாளவியா பேசினார். இது குறித்த செய்தி பின்னர் பத்திரிகைகளில் வந்திருந்தது. இதுதான் அந்த செய்தி:

சுவாமி சிரத்தானந்தர் செல்வந்தர்களான தலித் மக்கள் கோவில்கள் கட்டியிருந்தாலும் கூட அந்த கோவில்களுக்கு உள்ளேயே அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார். அப்போது மாளவியா கண்களில் கண்ணீர் வழிய “என் தலைப்பாகையை நான்  இந்து மதத்தைச் சார்ந்த என் தலித் சகோதரர்கள் காலடிகளில் ஏன் வைக்கக் கூடாது? தலித் சகோதரர்கள் ஏன் ஆலயங்களில் பிரவேசித்து இறை தரிசனம் செய்ய உரிமை அளிக்கக் கூடாது? பாவங்கள் நிறைந்தவனாகிய நான் என் தலித் சகோதரர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடக் கூடாது என சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என தழுதழுத்த குரலில் கூறினார்.[1]

சங்கராச்சாரியாருக்கு எதிராக தலித் குரலை ஆதரித்தவர் மகாத்மா மதன்மோகன் மாளவியா.

தலித் சமுதாயத்தைச் சார்ந்த தேசிய தலைவர்களில் முக்கியமானவர் பாபு ஜகஜீவன் ராம். இவரது மனைவி இந்திராணி ஜகஜீவன்ராம் பாபுவின் வாழ்க்கை சரிதத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார்:

இந்து மகாசபையில் 17 ஆவது மாநாடு 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 29-31 வரை பூனாவில் நடைபெற்றது. அதில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலித்துகளிடம் இந்துக்களிலிருந்து தம்மை பிரித்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ‘உங்கள் முன் தலைவணங்குகிறோம்’ என அவர் தலித்துகளைக் கேட்டுக் கொண்டார்.  சமுதாய வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் ihl346இந்துக்களிடையே நிலவும் பிறப்படிப்படையிலான பாரபட்சங்கள் நீக்கப்பட வேண்டும் என மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. பள்ளிக்கூடங்கள், குளிக்கும் குளத்துறைகள், குடிநீர் ஆதாரங்கள், உணவு நிலையங்கள், தெருக்கள், பூங்காக்கள். தர்மசாலைகள், கோவில்கள் ஆகியவற்றை பயன்படுத்த சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து இந்துக்களுக்கும் உரிமை வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட நாசிக் சங்கராச்சாரியாருடன் ஜகஜீவன்ராம் கடுமையாக விவாதிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. கோவிலுக்குள் நுழையலாம் ஆனால் கர்ப்பகிருகத்துக்குள்ளே நுழைய தடைகள் இருக்க வேண்டுமென்று சங்கராச்சாரியார் வாதிட்டார்.  ஜகஜீவன்ராம் தன்னுடைய தீர்மானத்தை 30 தலித் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். தலித்துகளுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது என்பது அவர் நிலைபாடு. அது ஒரு கடும் சண்டையாக இருந்தது. சங்கராச்சாரியாருக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது. மக்கள் அவரை மரியாதையுடனும் மதநம்பிக்கையுடனும் பார்த்தனர். என் கணவர் அவரை கடுமையாக எதிர்த்தார். வெளிநடப்பு செய்யப் போவதாக அறிவித்தார். பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜகஜீவன் ராமுக்கு ஆதரவாக வலிமையான ஒரு பேருரை ஆற்றினார்.  முஞ்சே, ஜெயகர் ஆகிய (இந்துமகாசபை) தலைவர்களும் அவரை ஆதரித்தனர்.  ஜகஜீவன்ராம் கொண்டு வந்த தீர்மானம் கடும் சச்சரவுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. [2]

பெண்களின் திருமண வயதை அதிகமாக்கும் சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட போது தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த மாளவியா இறுதியில் அதனை ஆதரித்து பேசினார்.  பண்டித மதன் மோகன் மாளவியா போல ஒரு தலைவரின் வாழ்க்கை என்பதை  எப்படி பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையைக் கூட திராவிடர் கழகம் போன்ற போலி பகுத்தறிவு கும்பல்கள் உணர்ந்திடவில்லை.

மாளவியாவின் காலகட்டத்தில் வலிமையாக இருந்த ஆச்சாரவாதிகளின் பிற்போக்குத்தன்மையை மென்மையுடன் மாற்றி அமைத்தவர் அவர். பெண்களுக்கான வாக்குரிமை என்பது அன்று இருக்கவில்லை. 1918 இல் பெண்களுக்கான வாக்குரிமைக்காக சரோஜினி நாயுடு பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் குரல் கொடுக்கிறார். அப்போது அதனை எதிர்த்தவர் மதன் மோகன் மாளவியா. ஆனால் அதே பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தலைமையில்தான் டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பெண்களின் வாக்குரிமைக்கான தீர்மானம் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படுகிறது. மாளவியா அதனை நடத்துகிறார். [3]  அதாவது சீர்திருத்தங்களை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அதனை முழுமையாக செயல்படுத்துவது மாளவியாவின் நோக்கம். ஏனெனில் சமூக சீர்திருத்தங்களை பயன்படுத்தி ஆச்சாரவாதிகளையும் முற்போக்காளர்களையும் மோதவிடும் காலனிய சதித்திட்டத்தை மாளவியா உணர்ந்திருந்தார். எனவே ஆச்சாரவாதிகளை தனிமைப்படுத்தாமல் சமூக சீர்திருத்தங்களை ஏற்க வைக்கும் கடுமையான பணியை அவர் ஏற்றெடுத்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார்.  முற்போக்கான சட்டங்கள் இயற்றப்படும் போது ஆச்சாரவாதிகளுக்கு அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவர் உருவாக்கினார். அன்றைய காலனிய சமூக தேக்கநிலை சூழலில் இத்தகைய சமரசவாதிகளால்தான் உண்மையிலேயே சமூக முன்னேற்றம் ஏற்பட்டதே அல்லாமல், போலி பகுத்தறிவும், இனவாதமும் பேசியவர்களால் அல்ல.

விடுதலை போராட்டத்திலும் மாளவியா ஈடுபட்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில் ஜாலியன்வாலாபாக் படுகொலை குறித்து எழுதும் போது அங்கே நிவாரண பணிகளை மேற்கொண்ட இருதலைவர்கள் மதன் மோகன் மாளவியாவும் சுவாமி சிரத்தானந்தரும் என சுட்டிக்காட்டுகிறார். [4]இருவருமே ஹிந்து மகாசபை தலைவர்கள்தான். விடுதலை போரில் உயிர்தியாகமும் உடல் குருதியும் சிந்தி அடிபட்டு விழுந்து கிடந்தவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதில் முன்னணியில் நின்றவரைத்தான் வெள்ளைக்காரன் இந்தியாவிலேயே இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட கூட்டம்தான்  ’பார்ப்பனர்’ என்றும் ’மண்ணுருண்டை’ என்றும் அடையாளப்படுத்துகிறது.

வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் மாளவியாவின் பங்கு மிகப்பெரியது.  பாரதம் முழுவதும் அலைந்து திரிந்து ஒவ்வொரு புரவலரிடமும் இரந்து அவர் உருவாக்கிய கல்வி கோவில் இந்த பல்கலைக்கழகம்.  1435_BHUமாளவியா உருவாக்கிய காசி இந்து பல்கலைக்கழகமும் விடுதலை போராட்டத்தில் பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாயிற்று. அரசு உதவி தொகைகளால் நடத்தப்பட்ட காசி இந்து பல்கலைக்கழகம் பிரிட்டிஷ் எதிர்ப்பின் கேந்திரமாக விளங்கியதால் அதை இல்லாமல் ஆக்கிவிட அரசு முடிவு செய்திருந்தது. இரண்டாம் உலகப் போர் வீரர்களுக்கான ஒரு ராணுவ மருத்துவமனையாக அதை மாற்றிவிட அரசு பரிசீலனை செய்து வந்ததை மதன் மோகன் மாளவியா அறிந்தார். தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தான் இந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டிருப்பது பல்கலைக்கழகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதை அறிந்ததும் அவர் பல்கலைக்கழக பொறுப்பை டாக்டர்.ராதாகிருஷ்ணனுக்கு அளித்து கொண்டு தாம் விலகிக் கொண்டார்.[5]

தாம் உழைத்து உருவாக்கிய அமைப்பு நீடித்து வளர தம்மையே அதன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் தியாக மனப்பான்மை மாளவியாவின் மனப்பான்மை. ஆனால் தானும் உழைக்காமல், இன்னொரு ஆசாமி, ஈவெரா, அவரும் உழைக்காமல் உருவாக்கிய சொத்துக்கு,  வாரிசாகி  அதற்கு வாரிசாகவும் தன் சொந்த மகனையே வாரிசாக்கும் ஒரு கும்பலுக்கு இந்த தியாக சீலரின் பெருமை புரியாமல் போவதில் அதிசயம் இல்லைதான்.

சாரதா சட்டத்துக்கான போராட்டத்திலோ அல்லது பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டத்திலோ ஈ.வெ.ராமசாமிக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஈ.வெ.ராமசாமி இதற்கெல்லாம் பிறகு பெண்களின் பிரச்சனைகளையும் இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு சமூக அவலத்தையும் வெறுப்பு பிரச்சாரத்துக்கான முதலீடாக மட்டும் பயன்படுத்தினாரே ஒழிய பெண் உரிமைக்கான எவ்வித அடிப்படை போராட்டத்திலும் ஈடுபட்டவரல்லர் அவர்.  தலித் பிரச்சனைகளை பொறுத்தவரையிலோ கேட்கவே வேண்டாம். கீழ்வெண்மணி அறிக்கை ஒன்று போதும் ஈ.வெ.ராமசாமியின் போலித்தனத்தை தோலுரித்துக் காட்ட.

மண்ணுருண்டையா மாளவியா? ஆம் மண்ணுருண்டைதான் மாளவியா…

பகுத்தறிவு என்கிற பெயரில் வெள்ளையனின் இனவாதத்தை பரப்புவதைக் காட்டிலும்   புத்தனும் ராமானுஜனும் நடந்த இந்த மண்ணின் மண்ணுருண்டையாக இருப்பது பெரும் பாக்கியம். என்றென்றைக்கும் ஈவெராமசாமியின் போலி பகுத்தறிவை விட, திராவிட  இயக்கத்தின் இனவாத வெறுப்பை விட  மதன் மோகன் மாளவியாவின் மண்ணுருண்டை இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கும் உறுதுணையாக இருக்கும்.

சான்றாதாரங்கள்:

[1] The Indian Annual Register, Volume 2, Annual Register Office., 1925,  பக்.132

[2] Indrani Jagjivan Ram, Milestones: A Memoir, Penguin Books India,2010, பக்.52

[3] Vir Bharat Talwar, Feminist Consciousness in Women’s Journals in Hindi: 1910-1920, in Recasting Women: Essays in Indian Colonial History, Rutgers University Press, 1990 பக். 226  & Vadivelu Rajalakshmi, The political behaviour of women in Tamil Nadu, Inter-India Publications, 1985, பக்.40

[4] Jawaharlal Nehru, An autobiography: with musings on recent events in India, The Bodley Head, 1955 பக்.42

[5] Mamta Anand, S. Radhakrishnan His Life And Works, Atlantic Publishers, 2006, பக். 25

தேசிய உணர்வை அவமதிக்கும் பிரதமர்!

பாரத சமுதாயம் என்ன பாபம் செய்ததோ, அதனை வழி நடத்திச் செல்லும் பொறுப்பு மன் மோகன் சிங் என்னும் அந்நியரின் கைப்பாவையிடம் சிக்கிக் கொண்டுள்ளது.

இந்த அந்நியருக்கு பாரதத்தின் நலன் மீது ஆத்மார்த்தமாக எவ்வித ஈடுபாடும் இருப்பது சாத்தியமில்லை. பாரதத்தின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டாலும், கை மாறிப் போனாலும், பாரதத்தின் மீது பகைமை பாராட்டும் நாடுகள் பல மாறு வேடங்களில் உள்ளே புகுந்து பொருளாதாரச் சீர்குலைவையும், உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைவிக்கும் நாச வேலைகளையும் செய்தாலும் அதுபற்றிச் சிறிதளவும் கவலைப்படாமல் அகப்பட்டவரை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கும் அந்நிய சக்திக்குத் துணை போகிறோமே என்கிற உறுத்தல்கூட இல்லாமல் காலந் தள்ளிக்கொண்டிருக்கும் ஒருவரின் கையில் இன்று நாட்டின் நிர்வாகம் மாட்டிக்கொண்டுள்ளது.

மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்ட மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தில்தான் என்றுமே காணாத வகையில் இன்று மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரதம் ஆளாகியிருக்கிறது. நேர்மையான வழியில் பொருளீட்டும் எவராலும், அவர்களின் வருமானம் பல்லாயிரங்களாகவே இருந்தாலுங் கூட விலைவாசிக்கு ஈடு கொடுக்க இயலவில்லை. இந்நிலையில் சாமானிய மக்களின் நிலைமை எம்மாத்திரம்? தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கத் தொடங்காத குறைதான்!

ஊழல் செய்து லஞ்சம் வாங்கிப் பழகியவர்களைத் தவிர வேறு எவராலும் இன்று நிம்மதியாக வாழ முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

நிர்வாகத் திறனோ, அமைச்சரவை சகாக்கள் மீதான ஆளுமையோ, சுய மரியாதையோ, நாட்டு நடப்பு பற்றிய கவலையோ சிறிதும் இல்லாத, மிகவும் நம்பகமான பினாமியாகத் தனக்கு ஒருவர் வேண்டும் என்று சோனியா காந்தி தேடியதில் அகப்பட்டவர்தான் மன்மோகன் சிங் என்பது இப்போது புரிகிறது. இதன் விளைவாக நாடு அனுபவிக்கப் போகும் பேராபத்தை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.

மன்மோகன் சிங் எது குறித்தும் கவலைப்படாமல் பினாமிப் பிரதமராக இருப்பதிலேயே சுகம் கண்டு வருகிறார் என்று மட்டுமே எண்ணிக்கொண்டிருந்த நமக்கு அது போதாது என்று மிகப் பெரிய அதிர்ச்சியையும் கொடுத்துவிட்டார், மன்மோகன் சிங். முன்பின் யோசியாமல், என்ன பேசுகிறோம் என்கிற பிரக்ஞையுமின்றி தேசிய உணர்வையே அவமதிக்கத் தொடங்கியிருக்கிறார், அவர்.

bjp-ekta-yatra-posterகஷ்யப முனிவர் பெயரால் அமைந்த காஷ்மீர பூமி ஹிந்துஸ்தானத்தின் பிரிக்க முடியாததோர் அங்கம் என்பதை நினைவூட்டி, தேசிய உணர்வை நாடெங்கிலும் புதிய எழுச்சியுடன் தோற்றுவிக்க வேண்டியே பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி கிழக்கே சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு தேசத்தின் குறுக்காக எட்டு மாநிலங்களைக் கடந்து குடியரசு தினத்தன்று மேற்கே காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் நமது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் செயல் திட்டத்தை மேற்கொள்ள நேர்ந்தது.

காஷ்மீரம் ஹிந்துஸ்தானத்தின் அங்கம்; அதனுள் பிரவேசிப்பது ஒவ்வொரு ஹிந்துஸ்தானப் பிரஜையின் உரிமை என்பதை நிலைநாட்டுவதற்கென்றே புறப்பட்டுச் சென்று, தடையை மீறிச் சிறையில் அடைபட்டு, ஷேக் அப்துல்லாவின் வஞ்சகச் சதியால் சிறையிலேயே உயிரிழந்த தியாக சீலர் சியாமா பிரசாத்தின் மகத்தான தேசப் பற்றுக்கு அஞ்சலி செலுத்துவது போலவும் மேற்கொள்ளப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் திட்டத்தை அரசியல் காரணங்களுக்கான நடவடிக்கை என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் கொச்சைப் படுத்தியிருக்கிறார், மன்மோகன்.

bjp-anurag_thakur_shahnawaz_hussainகுடியரசு தினத்தனறு பாரத தேசத்தின் ஒரு பகுதியில் தேசியக் கொடியை ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்று நாட்டின் பிரதமரே விமர்சிப்பாரேயானால் அது பிரிவினைச் சக்திகளுக்குக் கொண்டாட்டமாகி விடாதா? சிறு குழந்தைக்குக்கூட எளிதில் புரியக் கூடிய இந்த உண்மை மன்மோகனுக்குத் தெரியாமலா போகும்? தெரிந்தே அவர் செய்த இந்த விமர்சனம் தேசிய உணர்வையே அவமதிக்கும் செயல் அல்லவா? அதிலும் குடியரசு தின சந்தர்ப்பத்தில் தேசிய உணர்வை ஊட்ட வேண்டிய பிரதமர் பதவியில் இருக்கும் நபர் இப்படிப் பேசலாமா? இந்த அவலத்தை எங்கே சொல்லி ஆற்றிக்கொள்வது?

குடியரசு தினத்தன்று பிரிவினைச் சக்திகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தேசியக் கொடியேற்றி தேசிய உணர்வைத் தூண்டும் பாரதிய ஜனதா இளைஞர்களின் கடமையுணர்வைப் பாராட்ட மனமில்லாவிடினும் அதற்கு அரசியல் நோக்கமா கற்பிப்பது? உமக்குத்தான் அதற்குத் துணிவு இல்லை, கொடியேற்றத் தடை விதிக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை கண்டிக்கவும் திராணியில்லை, தடையை மீறி தேசியக் கொடியேற்றச் செல்லும் தேச பக்தர்களை அவமதிக்காமலாவது இருக்க வேண்டாமா நாட்டின் பிரதமர்? இதிலுமா அரசியல் பண்ணுவது?

இன்று மன்மோகன் பொறுப்பில், சோனியா காங்கிரஸ் தலைமையில் குப்பை கொட்டும் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் அலங்கோலங்கள் ஆயிரமாயிரம் இருக்க, அரசியல் பண்ணுவதற்கு பா.ஜ.க.வுக்கு விஷயத்துக்கா பஞ்சம்? போயும் போயும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றும் தேசியக் கடமையை வைத்தா அது அரசியல் பண்ணும்?

ஒரு தேசியத் திருநாளன்று தேசியக் கொடியை தேசத்தின் ஒரு பகுதியில் ஏற்றுவது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்றும் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவது வெட்கங்கெட்ட பேச்சு என்பது மட்டுமல்ல, தேசிய உணர்வுக்கே அவம்ரியாதை என்கிற பிரக்ஞை கூட இல்லாத ஒருவரை இன்னும் எத்தனை காலத்திற்கு பிரதம மந்திரியாக இந்த நாடு சகித்துக்கொண்டிருக்கப் போகிறது?

தேசப் பற்றும் பொறுப்புணர்வும் மிக்க மக்கள்தான் இதற்கு விடை கூற வேண்டும்.

ஒரு தேசம், இரு உரைகள்

ந்திய தர்க்க சாஸ்திரத்தில் அருந்ததி நியாயம் என்று ஒரு கருதுகோள் உண்டு. அருந்ததி என்ற நட்சத்திரம் மிகச் சிறியது. வானவெளியில் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். அதனால் அதற்கு அருகில் உள்ள பெரிய நட்சத்திரத்தைக் காட்டி, பிறகு படிப்படியாக சின்ன நட்சத்திரத்தை அடையாளம் சொல்வார்கள். பருண்மையிலிருந்து நுண்மைக்கு அறிவுபூர்வமாக இட்டுச் செல்லும் வழிமுறை.

வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிக் கூட நுண்ணுணர்வு கொண்டவர் தான் அவர். ஆனால் God of small things என்றே ஒரு ஆங்கில நாவல் எழுதி புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் சமீபத்தில் தில்லியில் ஆற்றிய உரையில் நியாயம் என்பது சிறிதும் இல்லை என்று இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் கருதுகிறார்கள்.

’காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை, அது தான் வரலாற்று உண்மை. பசியும் நிர்வாணமும் தாண்டவமாடும் இந்தியாவிலிருந்து (bhookhe nange hindustan) காஷ்மீரிகள் விடுதலை அடைய வேண்டும்.இந்தியாவின் அடக்குமுறைக்கான சாதனங்களாக தாங்கள் பயன்படுத்தப் படுவதை காஷ்மீரிகள் அனுமதிக்கக் கூடாது’.

arundhati_royதில்லியில் ஒரு பொது நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரிவினைவாதியும் தீவிரவாதியுமான சையத் அலி ஷா கீலானியுடன் ஒரே மேடையில் அமர்ந்து அவர் பேசிய மேற்கூறிய சொற்கள் அங்கு அமர்ந்திருந்த சட்டத்தை மதிக்கும் பல தரப்பட்ட இந்தியர்களையும், குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதத்தால் காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாகி விட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரையும், கொதித்தெழ வைத்தன. அவர்கள் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்ப, காவலர்கள் உள்நுழைந்து அந்த தேசபக்தர்களை வெளியேற்ற, காவல்துறை பாதுகாப்புடன் அம்மணியின் பிரசாரம் இனிதே நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, அவர்மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப் படலாம், அவர் கைது கூட செய்யப்படலாம் என்று செய்தி ஊடகங்கள் சொல்லத் தொடங்கின.

’ஸ்ரீநகரில் இருந்து இதை எழுதுகிறேன். சமீபத்தில் காஷ்மீர் பற்றி பொதுக்கூட்டங்களில் நான் சொன்ன கருத்துக்களுக்காக தேசவிரோகக் குற்றத்தின் கீழ் நான் கைது செய்யப் படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பல காலமாக சொல்வதைத் தான் நான் எதிரொலிக்கிறேன். எனது பேச்சை உன்னிப்பாகப் படிப்பவர்கள் அது நீதிக்கான அழைப்பு என்பதைப் புரிந்து கொள்வார்கள். உலகின் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்புகளில் ஒன்றின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீர் மக்களுக்காக நீதி கேட்கிறேன்.. தங்கள் மனத்திலிருப்பதைப் பேசும் எழுத்தாளர்களின் வாயை அடைக்கும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன். கார்ப்பரேட் ஊழல் பெருச்சாளிகளும், கொலைகாரர்களும் சுதந்திரமாகத் திரிய, நீதிக்காக பேசுபவர்களை ஜெயிலில் அடைக்கக் கோரும் இந்த தேசத்திற்காக பரிதாபப் படுகிறேன்’

என்று அடுத்த நாள் தனக்கே உரிய தார்மீக தளுக்கு மொழியில் அறிக்கை வெளியிட்டார் அருந்ததி ராய். எப்போது கைது வரும், எப்போது தியாகக் கிரீடத்தை சூடிக் கொள்ளலாம் என்று அவர் துடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.

மேலும், இந்த தேசத்தின் ஏழைகளிலும் ஏழைகளுக்காக (poorest of the poor) தான் குரல் கொடுப்பதாகவும் அவர் முரசறைகிறார். சக இந்தியர்கள் மீது தீராத வெறுப்பும் மதவெறியும் ததும்பி வழியும் முகங்களுடன் இந்தியக் காவல் படைகள் மீது கூலிவாங்கிக் கொண்டு கல்லெறியும் காஷ்மீரி லும்பன் கூட்டங்களை நாடு முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்கத் தான் செய்தது. நன்கு தின்று ஊட்டம் பெற்ற உடல்கள். நேர்த்தியான உடைகள். அகம்பாவமும் திமிரும் கலந்த பேச்சுகள். காலை எழுந்தவுடன் தெருவுக்கு வந்து நின்றுகொண்டு இந்தியா எங்களை நசுக்குகிறது என்று வெறிக்கூச்சல்கள். பல பத்தாண்டுகளாக காஷ்மீரிகளின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்று இந்திய அரசு கோடிகோடியாகக் கொண்டு கொட்டும் பணத்தை (The Great Kashmiri Loot of India என்று ரிடீஃப் ராஜீவ் சீனிவாசன் ஒருமுறை எழுதியிருந்தார்) எந்த ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த விடாமல் எப்போதும் இந்திய தேசிய எதிர்ப்பையும், வன்முறையையும் ஆறாமல் வைத்திருக்கும் பிரிவினைவாதிகள்.

இவர்களைப் பார்த்து நாம் ஏழைகளிலும் ஏழைகள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும் என்று அருந்ததி நினைக்கிறாரோ? மாறாக, இந்த நாட்டின் உண்மையான ஏழைகள் காஷ்மீரில் இல்லை. தோற்றத்திலேயே பரிதாபகரமாகக் காட்சியளிக்கும் வனவாசிகளும், வாழ்க்கையே ஒரு தினசரி போராட்டமாக உடலை உருக்கி உதிரத்தைச் சிந்தி வேலை செய்யும் உழைப்பாளிகளும் ஒரிஸ்ஸாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் ஜார்கண்டிலும், ஏன் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட மற்ற எல்லா இந்திய மாநிலங்களிலும் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பில் பசியாறி, கனவுகளைக் கண்ணில் தேக்கி தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் கோடிக் கணக்கான இந்திய கீழ் நடுத்தர வர்க்கத்து மாந்தர்கள் “ஏழைகள்” இல்லையா?

tamilnadu_poor_govt_school

அவர்கள் அடக்குமுறையின் கீழ் வாழ்வதாக நினைக்கவில்லை. பிரிவினை கோரவும் இல்லை. அவர்கள் விழைவது ஒன்றுபட்ட தேசிய வாழ்க்கையை, அது சாத்தியமாக்கும் அளப்பரிய வாய்ப்பு வசதிகளை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை. அவர்கள் வேண்டுவது உணவும், உடையும், கல்வியும், தொழில் வாய்ப்புகளும். சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். காஷ்மீர் பிரிவினைவாதத்தால் நாட்டின் வடக்கு மூலையில் மட்டும் தான் பிரசினை. மாவோயிச பயங்கரவாதம் தலையெடுத்தால் இந்தியா முழுவதுமே தீப்பற்றி எரியுமே. இதை விட இந்தியாவின் ஏழையிலும் ஏழைகளான மக்களுக்கு நல்லது என்ன இருக்க முடியும்?

அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் (state), தேசத்தையும் (nation) வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும் என்ற கருத்து தான் உண்மையில் அவர் பிரசாரம் செய்வது. ’பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மக்களை அவர்கள் விருப்பதிற்கு மாறாகப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் கூண்டு இந்தியா’ என்று இதற்கு முன்பு ஒருமுறை தன் உள்ளக் கருத்தை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

அரசு இயந்திரத்தின் திறமையின்மையையும், போலிஸ் அராஜகங்களையும், உள்ளூர் பிரசினைகளையும் குழைத்துக் கலக்கி, அதன்மீது தேசவிரோத பிரிவினை வாதத்தையும், இஸ்லாமிய மதவெறியையும், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தையும் அவியலாகக் கலந்து அப்பி ஒட்டுமொத்தமாக இந்தியா என்ற கருத்தையே தன் காழ்ப்புணர்ச்சிக்கு இலக்காக்கி துவேஷ பிரசாரம் செய்கிறார் அருந்ததி ராய். அவர் அடக்குமுறை என்று முத்திரை குத்தி வசைபாடுதை இந்த தேசத்தின் மண்மீது மட்டும் தான் நின்று கொண்டு அவர் செய்ய முடியும்.

இது கருத்துச் சுதந்திரத்தின் கட்டற்ற வெளிப்பாடு அல்ல, அதன் துஷ்பிரயோகம். இதற்குப் பெயர் நீதிக்கும் நல்வாழ்வுக்குமான குரல் அல்ல, கடைந்தெடுத்த அறிவுஜீவிக் கயமைத்தனம். அதனால் தான் அதே வார்ப்பில் உள்ள தேசவிரோதிகளும், அறிவுஜீவி கிரிமினல்களும் உடனடியாக இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

‘அருந்ததி ராய் சொல்வதைத் தான் நானும் நாற்பது வருஷமாக சொல்லி வருகிறேன். அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆங்கிலத்தில் பேசும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது இந்தியா மட்டுமல்ல உலக அளவில் கவனிக்கப் படுகிறது’ என்று புல்லரிக்கிறார் ஆந்திராவின் பிரபல நக்சலைட் பயங்கரவாதி வரவர ராவ். இந்திய வெறுப்பு பிரசாரத்தில் அருந்ததி ராயின் சக பயணி இவர். எம்.எஸ்.எஸ் பாண்டியன் என்ற தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ”ஆய்வாளர்” சொல்கிறார் – “1962ல் அண்ணாதுரை தனிநாடு வேண்டும் என்றே முழங்கினார் – நேரடியான பிரிவினைக் கோரிக்கை அது.இப்போது அப்படியெல்லாம் பேசுவதே அபசாரம் (taboo) ஆகி விட்டது. காளைச்சாணம்! ஜனநாயகம் என்ற பெயரில் *இந்த விவாதம் கூட* செய்யமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அக்கிரமம்” (இந்தியன் எக்ஸ்பிரஸ், 14 நவம்பர்,2010). இந்திய மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு மானியம் வழங்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் இதைப் பேசுகிறார்.

நல்லது. பாண்டியன் வீட்டில் தினந்தோறும் காலை எழுந்தவுடன் அவரும் அவர் மனைவியும் சேர்ந்து வாழலாமா வேண்டாமா என்ற விவாதம் ஒவ்வொரு நாளும் நடந்தால் தான் அது உண்மையான ஜனநாயக குடும்ப அமைப்பு என்று கருதுகிறார் போலத் தெரிகிறது. முதலில் அதை அவர் தன் வீட்டில் செயல்படுத்தத் தயாரா? வீட்டுக்கு ஒரு நீதி நாட்டுக்கு வேறோரு நீதியா?

அருந்ததி ராய்க்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புணர்வை நடுத்தர வர்க்க போலி பாவனை (middle class hypocricy) என்று வசைபாடுகிறார்கள் இந்த மேல்தட்டு, மேட்டிமைவாத அறிவுஜீவிகள்.

ஏனென்றால் நாட்டின் அமைதியிலும் நல்வாழ்விலும் அதிக அக்கறை கொண்டது இந்த நடுத்தர வர்க்கம் தான். இந்த மாபெரும் ஜன சமூகத்தில் வேதனைகளைச் சகித்துக் கொண்டு, அதே சமயம் தன் கனவுகளையும் உயிரோட்டத்துடன் வைத்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வர்க்கம் என்றால் அது தான். இந்த சமூகத்தின் சில்லறைத் தனமும் கையறு நிலையும் முட்டாள்தனங்களும் மட்டுமல்ல, இதன் நீதியுணர்வும் அறவுணர்வும் சாதனைகளுக்கும் உன்னதங்களுக்குமான பெருமையும் கூட பெருமளவில் நடுத்தரவர்க்கத்தைத் தான் சாரும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் அப்படித் தான்.

அருந்ததியின் உரையால் கடுப்படைந்திருந்த இந்திய உள்ளங்களில் பாரக் ஒபாமா இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உடனடியாக ஒரு உவகையையும் ஒத்திசைவையும் உண்டாக்கியது ஆச்சரியமில்லை.

barack_obama2பொருளாதார, உலக அரசியல் ரீதியாக ஒபாமா விஜயத்தின் தாக்கம் என்ன, சாதக பாதங்கள் என்ன என்பது பற்றி நிறையவே பேசி விவாதிக்கப் பட்டு விட்டது. அதற்குள் போகவேண்டாம். தனது சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில், குறியீடுகளிலும் (symbolism), சமிக்ஞைகளிலும் (gestures) மிகவும் கவனம் செலுத்துபவர் ஒபாமா என்று கூறப்படுகிறது. எனவே இந்தியப் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் என்ன என்று பார்க்கலாம். அந்த உரை ஒரு சம்பிரதாய நடைமுறையே என்றாலும் கூட வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் உள்ள நேர்த்தியும் பொருட்செறிவும் அதைத் தயாரித்தவரின் கைவண்ணமே என்றாலும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அரசின் முழு அங்கீகாரமும் அதன் மீது படிந்துள்ளது என்பதால் அது முக்கியமாகிறது.

”அறிவியலும், சிந்தனைத் திறனும் வளர்ந்த ஒரு பழம்பெரும் பண்பாடு. மானுட வளர்ச்சியின் மீதான அடிப்படை நம்பிக்கை. இந்த அசைக்க முடியாத அஸ்திவாரத்தின் மீது தான், சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி உயர்ந்த அந்த நள்ளிரவு முதற்கொண்டு நீங்கள் தேசத்தைக் கட்டமைத்திருக்கிறீர்கள். இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக ஆகியிருக்கிறீர்கள்”.

இது வெறும் புகழுரை அல்ல. பெரும் வேறுபாடுகள் கொண்ட ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக ஒபாமா தன் மன ஆழத்திலிருந்தே இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ண இடமிருக்கிறது.

மகாத்மா காந்தியைப் பலமுறை குறிப்பிட்டது அந்த உரை.

”காந்தி என்ற ஒருவர் தனது செய்தியை அமெரிக்காவுக்கும், உலகிற்கும் அளித்திருக்காவிட்டால், இன்று அமெரிக்க ஜனாதிபதியாக உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்க முடியாது என்பதையும் நான் மனதில் கொள்கிறேன்”.

தனது சொந்த வாழ்க்கையை முன்வைத்து, உலகெங்கும் உள்ள அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான பேரொளியாக எப்படி “அடக்குமுறை தேசியமான” இந்தியா விளங்கி வருகிறது என்பதைச் சொல்ல ஒபாமா தவறவில்லை.

“இந்தியாவின் வலிமை, சொல்லப் போனால் இந்தியா என்ற கருத்தாக்கமே (the very idea of india) அனைத்து நிறங்களையும், சாதிகளையும், குழுக்களையும் அரவணைத்துக் கொள்வது தான் என்று நீங்கள் காட்டியிருக்கிறீர்கள். இந்த சபையே அந்தப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. சமயங்களின் இந்தப் பன்முகத் தன்மையைத் தான் எனது சொந்த ஊரான சிகாகோவுக்கு நூறு வருடம் முன்பு வந்த புகழ்பெற்ற சுவாமி, விவேகானந்தர் என்ற அந்த சுவாமி சிலாகித்துப் பேசினார். புனிதமும் தூய்மையும் ஈகையும் உலகில் எந்த ஒரு திருச்சபையின் தனிச்சொத்தும் அல்ல; ஒவ்வொரு சமயமும் உயர்ந்த ஒழுக்கமும், பண்புகளும் கொண்ட ஆண்களையும் பெண்களையும் உருவாக்கியிருக்கிறது என்று அவர் சொன்னார்.”

இது தான் அமெரிக்காவின், உலகத்தின் பார்வையில் இந்திய தேசியத்தின் உண்மையான மதிப்பீடு.

”.. ஒன்றிணைந்த மானுடம் என்பதைக் கண்டறிந்த பிறகு, நாம் நேசிக்கும் லட்சியங்களை நிறைவேற்றுவது பற்றி நாம் யோசிக்கலாம். இந்தியர்களுக்கு நூற்றாண்டுகளாக வழிகாட்டி வரும் பஞ்சதந்திரம் என்ற கதைத் தொகுப்பில் ஒரு எளிய அறிவுரை உள்ளது. இந்தப் பேரவையின் நுழைவாயிலில் உள்ளே வருபவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கும் படி கல்வெட்டாக அதை வைத்திருக்கிறார்கள் – இது உன்னுடையது அது என்னுடையது என்பது சிறிய மனங்களின் கணக்கு. விசால இதயம் படைத்தவர்களுக்கு உலகமே அவர்களது குடும்பம்.”

நவீன ஆன்மிகவாதிகளின் பிரசங்கங்களில் நாம் அடிக்கடி கேட்கும் “வசுதைவ குடும்பகம்”- உலகமே ஒரு குடும்பம் என்ற மேற்கோளை அதன் சரியான இடம்பொருள் சுட்டி ஒபாமா குறிப்பிட்டார். இந்த மேற்கோள் பஞ்சதந்திரக் கதையில் ஒரு நரி சொல்லும் ராஜதந்திர உபதேசமாகத் தான் வருகிறது. ஆனால் உலக சகோதரத்துவத்துக்கான செய்தியும் உள்ளுறை பொருளாக இதில் உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க நட்பு சீனாவையோ, பாகிஸ்தானையோ தனிமைப் படுத்தும் நோக்கில் இருக்காது, ஏனென்றால் அரசியலில் “உலகம் எல்லாம் ஒரே குடும்பம்” என்று குறிப்புணர்த்தக் கூட ஒபாமா எண்ணியிருக்கலாம். எதுவானாலும், பண்டைய இந்தியாவின் முதிர்ச்சியடைந்த அரசியல் ஞானத்தை அந்த இடத்தில் சரியாக மேற்கோள் காட்டியது பாராட்டத் தக்கது.

“நமது இணைந்த எதிர்காலத்திற்கான எனது நம்பிக்கை இந்தியாவின் புகழ்மிக்க கடந்தகாலத்தின் மீது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகை உருவாக்கி வரும் பண்பாட்டின் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பின் அடிப்படையிலானது. மனித உடலின் நுட்பங்களையும், நமது பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் பற்றிய அறிவின் திறவுகோல் இந்தியர்களிடம் இருந்தது. நமது தகவல் யுகமே, ஏன் பூஜ்யம் என்ற எண் உட்பட, இந்தியக் கண்டுபிடிப்புகளின் மீது தான் வேர்விட்டு நின்று கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.”

timesless_indian_civilizationஇதையே நாம் சொன்னால் இந்துத்துவ புருடா என்று எள்ளி நகையாடுபவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

ஒபாமாவின் உரை இந்தியாவை ஒரு அரசாட்சியாக மட்டுமல்ல, ஒரு தேசமாக, ஒரு வாழும் கலாசாரமாக, ஒரு பண்பாடாக (civilization) அணுகிப் பேசியது என்பதைக் கவனிக்க வேண்டும். மரங்களை வைத்து காட்டை எடைபோடுவது போல இந்திய அரசு அமைப்பின் ஊழல்களை மட்டும் வைத்து இந்தியா என்ற மகோன்னதத்தை அது மதிப்பிடவில்லை. நமது போலி மதச்சார்பின்மை அறிவுஜீவிகளுக்கு என்னென்ன கருத்தாக்கங்கள் கடும் மலச்சிக்கலை ஏற்படுத்துமேர் அவற்றை ஒவ்வொன்றாகப் போற்றிப் புகழ்ந்து ஒபாமா பேசியிருக்கிறார் என்று சொல்வது சரியாக இருக்கும்.

அருந்ததி ராயின் தேசவிரோத உரைக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இணையத்தில் பெடிஷன்கள் மூலம் பிரசாரம் நடத்தப் பட்டது. அந்த நேரத்தின் உணர்ச்சி வசத்தில் அதில் நானும் உடனே கையெழுத்திட்டேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்று தோன்றுகிறது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்ட அரசின் நிலைப்பாடு, இப்போதைக்கு மிகச் சரியானது என்றே நினைக்கிறேன். கருத்து சுதந்திரத்தின் பதாகையைத் தூக்கிப் பிடித்ததற்காக ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கொடுங் கரங்களால் சிறைப்படுத்தப் பட்டவர் என்ற தியாகிப் பட்டம் பற்றியும், அவரது இலக்கியப் படைப்புகளை இப்போது யாருமே படிக்காத காரணத்தால் தவறவிட்ட சர்வதேச கவனத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றியும் அருந்ததி ராய் கனவு கண்டிருக்கக் கூடும். அவரது அந்தக் கனவில் மண் விழுந்திருக்கிறது.

கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் தீர்மானத்தில் (First amendment) வரையறுக்கப் பட்டுள்ளது. அதனை வடிவமைத்த சட்ட மேதை ஜேம்ஸ் மேடிஸன் அப்போது சொன்ன ஒரு கருத்து சிந்தனைக்குரியது – ’ஒரு சில நச்சுக் கிளைகளை வெட்டப் போய் நற்கனிகளை வழங்கும் மரத்தின் வீரியத்தை நாம் காயப் படுத்துவதைக் காட்டிலும், அவை கொஞ்சம் செழித்து வளர்வதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது’.

அருந்ததி நியாயத்தின் இன்னொரு பரிணாமம்?

**********

சுட்டிகள்: அருந்ததி ராய் உரை, ஒபாமா உரை

வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

bharat_mata_abanindranathவந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

– வந்தே மாதரம்:  மகாகவி பாரதியாரின் மொழியாக்கம் (முழுவதும் இங்கே).

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும்  நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: – ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: – கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: – ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: – கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: – ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: – ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: – ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: – லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: – ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: – வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: – தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

– கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, திருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து.   இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான  வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன – வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” – திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

–  ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்”  என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!

வந்தே மாதரம்!