நமது கல்வித் துறையில் பத்து குறைகள்

இத்தனை நல்ல ஆசிரியர்கள் இருந்தும், ஏன் இத்தனை மோசமான மனிதர்கள் உருவாகி இருக்கிறார்கள்?

Our medical advice team is available to answer your questions. Price and quality: when it comes to the price of clomid and the drug supply, you http://judtile.net/glass-and-mosaic have three sources: brand-name and generic, or brand-name and generic compounded products. You will also learn about prednisolone’s side effects and how to avoid them.

The committee noted that, despite a number of reports, no clear evidence for a causal relationship was provided, and there was no scientific evidence that it caused a specific illness. Buy tamoxifen 10 Bhadaur cipro online mg tablets online from pharmacyplanet for cheap and save with the best discount online pharmacy. Doxycycline 400 mg price in us drugs and medicine.

Its ingredients help to nourish the body's immune system, improve digestion, and promote overall health. You get buy clomid 50mg your order delivered overnight and for the same price! Es el cierre por la noche del mundo del uso de la enfermedad y de la seguridad sanitaria y por la prohibición total del coronavirus.

ஒரு நாட்டில் நல்ல குடிமகன்கள் உருவாக, கல்வியும் கலாசாரமுமே காரணம். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் சமூகத்தை உருவாக்குகிறது. இரண்டில் ஒன்று பிறழ்ந்து போகும்போது மற்றதும் அவ்வாறே பிறழ்ந்து போகிறது. கல்வியும் கலாசாரமும் ஒருவனுக்கு உயர்வு நோக்கி முயற்சிக்கிற தன்மையை வளர்ப்பதாக இருக்கவேண்டும். எந்தக் கலையானாலும் கற்பவர் அதன் உன்னதத்தை அடையவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் மக்களின்/சமூகத்தின் கலாசாரமே அந்தக் கலையை வளர்ப்பதாக இருக்கும். இப்போது எந்தக் கல்வியை/கலையை/துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தந்தத் துறையில் உன்னதத்தை அடைவதை வலியுறுத்தும்/பாராட்டும், ஆதரிக்கும் கலாசாரம் இங்கே நசிந்து விட்டது.

ஒருவர் தான் எழுத்தாளன், கவிஞன் என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டால், அதைக் கேட்பவருக்கு உடனே மூளையில் உதிக்கும் கேள்வி, ‘எவ்வளவு வருமானம் வரும்?’ என்பதுதான். இதுவே இந்தச் சமூகத்தின் மொத்தக் கலசாரமாக இப்போது வளர்ந்து விட்டது. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் எவ்வளவு பணம் வரும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. அது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது கல்வித் துறையைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

முக்கியமான பத்து குறைகளை கல்வித் துறை மீது காண்கிறேன். இவற்றைக் குறித்து கல்விச்சமூகமே ஒரு ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.

  1. லாபநோக்கில் கல்வி நிறுவனங்கள் –

லாபமில்லாமல் கல்வி நிறுவனம் நடத்த முடியாது, ஆனால் வணிக வெறியில் மாணவர்களிடம் பணம் வசூல் செய்வது, கற்க சிரமப்படுபவர்களை விலக்கிவிட்டு, ப்ராய்லர் கோழித்தனமாக மார்க்கு வாங்கும் மாணவர்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற மாணவர்களைக் கைவிடுவது, ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் தராமல் இருப்பது, தரமற்ற ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவது, ஒழுங்காக நடத்த ஒரு பள்ளி போதாதென்று பல பள்ளிகளை ஷாப்பிங் மால் போல நடத்துவது, அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்து, குறைந்த விலைக்கு வாங்கிப் போட்டுப் பள்ளி நடத்துவது என்று பள்ளியை ஒரு வணிகமாகவே நடத்தும் போக்கு.

  1. தரமற்ற கல்வி ஒரு சுமை –

உண்மையிலேயே கற்க வேண்டும் என்று விரும்பி வருகிற மாணவருக்கு இங்கே தரமான கல்வி ஒரு பள்ளிக்கூடத்தில் கிடைக்கிறதா? இங்கே கல்வி என்பது பாடப்புத்தகம், அதனைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டையும் குறிக்கிறது. இந்தக் கல்விமுறை ஒரு மாணவனுக்குச் சிந்திக்கும் திறனையோ, தன்னம்பிக்கையையோ, தேர்வில் வெற்றி பெற வேண்டிய உழைப்பையோ ஊக்கப்படுத்துவதாகவே இல்லை. பக்கத்தை நிரப்புகிற பாடப்புத்தகத்தைப் படிக்க முடியாமல் படித்துவிட்டு தேர்விலும் பக்கத்தை நிரப்பிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

  1. பொறுப்பற்ற ஆசிரியர்கள் –

பனிரெண்டாம் வகுப்புப் பாடத்தில் ஒரே ஒரு சப்ஜெக்டை மூன்றே மாதத்தில் சொல்லிக் கொடுக்க ஓர் ஆசிரியர் ஒன்றரை லட்சம் ரூபாய் ட்யூஷன் ஃபீசாகக் கேட்கிறார். இதைக் கொடுக்கவும் ஒரு கூட்டம் க்யூவில் நிற்கிறது. இன்றைக்குப் பள்ளிக்குச் செல்கிற எந்த மாணவனுக்காவது தன் ஆசிரியர் மீது நல்ல மதிப்பு இருக்கிறதா? ஆசிரியர்களில் பலர் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவர்கள், வேலைக்கு வந்த பின்பு (நிர்மலா தேவி போன்றவர்கள்) வேறு ‘பல’ வேலைகள் செய்தவர்கள், வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குகிறவர்கள் இப்படி எத்தனை பேர்… ஒரு தர நிர்ணயத் தேர்வு அவரவர் துறையில் வைத்தால் எத்தனை ஆசிரியர்கள் தேறுவார்கள்?

  1. நிதானமில்லாத பெற்றோர்கள் –

வயிற்றில் குழந்தை உருவானவுடனேயே ஸ்கூலில் அட்மிஷன் போடும் நிலை, பெற்றோர்கள் தாங்களாகத் தேடிக் கொண்டது. ஒன்றாம் வகுப்பு சேரும்போதே நீட் தேர்வைக் குறித்து யோசிக்கும் பெற்றோர் ஒருபுறம்… ஐந்து லட்சம் ஃபீஸ் கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராக ஒரு கூட்டம்; குழந்தைகளுடன் ஒரு மணிநேரம்கூட செலவிட முடியாத பெற்றோர், லட்சம் லட்சமாக ஸ்கூல் ஃபீஸ் கட்டினால் ஆயிற்று என்று நினைக்கிறார்கள். குழந்தைக்கு என்ன விதமான கல்வி கிடைக்கிறது, நாம் என்ன செய்யவேண்டும் என்ற எந்த விழிப்புணர்ச்சியும் இல்லாத பெற்றோர்கள். விரசமான பாடல்களுக்கு டிவியில் சிறுவர்களை ஆடவிட்டு ரசிக்கும், அதனை ஆதர்சமாகத் தன் குழந்தைகளுக்கு எடுத்துவைக்கும் பெற்றோர் இந்தs சீரழிவுக்கு ஒரு முக்கிய காரணம்.

  1. குறிக்கோளற்ற மாணவர்கள் –

ஒரு மாணவர் தனக்கு எந்தக் கல்வித் துறையில் ஆர்வம் என்று எண்ணிப் பார்த்து அதற்காகவெல்லாம் உழைப்பது இல்லை. அப்படி ஒரு குறிக்கோளை அவருக்கு யாரும் சொல்லித் தருவதும் இல்லை, ஊக்கப்படுத்துவதும் இல்லை, தானாகக் கண்டடைவதும் இல்லை. எது சுலபம், எதில் ஏமாற்றலாம் என்பதை நோக்கியே மாணவர்களும் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு உதாரணமாக உள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களுமே கரப்டாக இருக்குபோது அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

  1. மாணவர்களிடம் அரசியல் –

இதற்குத் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். எல்லா கட்சிகளிலும் மாணவரணி வைத்திருக்கிறார்கள். சில கல்லூரிகள் நடப்பதே கட்சிகளுக்கு ஆள் சேர்க்கத்தானோ என்ற சந்தேகமே வருகிறது. படிக்கிற மாணவர்களிடத்தில், காம வெறி, அரசியல் வெறி, சாதி வெறி என்று வெறியூட்டிக் கொண்டேயிருக்கிறது இங்கே இருக்கிற அரசியல். ரவுடிகளே வக்கீல் படிப்பு படிக்கிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது. படிக்காமலே மார்க், மார்க் வாங்காமலே தேர்ச்சி, தேர்வானாலும் ஆகாவிட்டாலும் வேலை, வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம், சம்பளத்துக்கு மேல் லஞ்சம் என்று மாணவர்களுக்கு அரசியல் போட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாதை மோசமானது.

  1. வாழ்க்கைக்கு உதவாத கல்வி –

அண்மையில் ஐடி நிறுவனம் ஒன்று, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புரோகிராமர் வேலை என்று விளம்பரம் செய்திருந்தார்கள். அதில் ஆச்சரியமான உண்மை ஒன்று இருக்கிறது. கணினித் துறையில் புரோகிராமராக நுழைய அந்தக் கல்வியே போதும் என்பதுதான். EEE, ECE, MSc, MTech, BE, ME என்று பெரிய பெரிய படிப்பு படித்தவர்களாக புரோகிராமர் வேலைக்கு எடுத்து வந்தனர். இது கணினி நிறுவனங்களுக்கு, வேலை தேடிவரும் பட்டதாரிக் கூட்டத்தை வடிகட்ட ஒரு வழி, அவ்வளவுதான். கல்வி நிறுவனங்களோ இங்கே காலேஜ் படிக்காதவன் எழுதப் படிக்கத் தெரியாதவன் ரேஞ்சுக்கு ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள். அதனால் பெற்றோரும் மாணவரும் அந்த வீணான கல்வியை, பணத்தையும் உழைப்பையும் கொட்டிப் படிக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் இடத்தில் புகழ்பெற்ற ஒரு ஆர்கிடெக்ட் பி.காம் ஃபெயில். ஆனால் அவரது கூர்ந்த சிந்தனை ஐஐடியில் படித்துவிட்டு வந்தவர்களுக்குக் கூட இல்லை. ஆக ஒருவர் தனக்கு வேண்டிய துறையில் நன்றாக பெயர்பெறத் தேவையான கல்வி இங்கே கிடைப்பதில்லை, தேவையில்லாத சுமையான கல்வியே இங்கே ஏற்றி வைக்கப்படுகிறது.

  1. கல்விக்கு உதவாத சமூகம் –

சரி ஒருவர் தமிழில் எம்.ஏ படித்து ஆழ்ந்த புலமை பெற்றிருக்கிறார் என்றால், அவருக்கு வாழ்க்கை நிம்மதியாக ஓடுமா? தமிழ் என்று உதாரணத்துக்குச் சொன்னேன். பி.எஸ்.சி ஜியாலஜி படிக்கிறார் என்றேகூட வைத்துக்கொள்வோம், அவரால் என்ன செய்ய முடியும்? இங்கே அடிப்படை ஜீவாதாரத்தைப் பெறுவதே மிகக் கடினமாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள். மொழி அரசியல், சமூக நீதி அரசியல், லஞ்ச ஊழல் என்று கல்விக்கு மரியாதையே இல்லை. பலர் படிப்புக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ ஏதாவது ஒரு வேலைக்குப் போனால் போதும் என்று நினைக்கிற அளவுக்குக் கல்விக்கு மரியாதை, உரிய அங்கீகாரம், வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாத சமூகம் எப்படி உன்னதத்தை அடைய முடியும்? இந்தியாவில் இன்ஜினீயரிங், டாக்டர் தவிர வேறு துறைகள் உபயோகமில்லாதவை என்ற போக்கு வளர்ந்து விட்டது. எல்லோருமே டாக்டராகவும், இஞ்சினீீயராகவும் இருந்தால் என்ன ஆகும்?

  1. கலாசார புரிதல் இல்லாத கல்வி –

நமது கலாசாரத்தைப் பற்றிய ஓர் அடிப்படை அறிவைக்கூட நம் மாணவர்களிடம் காண முடியாது. ஏனென்றால் நமது கல்வி அதைப் பற்றி ஒரு சொல் கூட சொல்லித் தருவதில்லை. இந்திய மண்ணில் எழுந்த தத்துவங்கள், பெரியோர்கள், உன்னத மனிதர்கள், வீரம் செறிந்த மன்னர்கள், அன்னியப் படையெடுப்புகள், அதனை எதிர்கொண்ட மக்கள், வரலாற்றில் நமக்குக் கிடைக்கும் பாடம் என்று எதனையும் அப்ஜெக்டிவாக, நேர்மையாக மாணவர்களுக்குச் சொல்லும் கல்வித்திட்டமோ, ஆசிரியர்களோ இங்கே இல்லை. எந்தப் புதிய கருத்தையும் எதிர்கொள்ளும் சிந்திக்கும் திறனற்ற, மேலைநாட்டு மோகம்கொண்ட, காரண காரியங்களை அலசக் கூடிய அறிவு வளர்ச்சிபெறாத மாணவர்களையே இந்தக் கல்வி வளர்க்கிறது.

  1. வரலாற்றைத் திரிக்கும் அரசியல் –

அரசியல் கட்சிகள் தங்கள் இஷ்டத்துக்கு யார் பதவிக்கு வருகிறார்களோ அவர்களுக்குத் தகுந்தபடி, பாடதிட்டங்களை மாற்றுகின்றன. அரசியல் தலைவர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே தம்மைப் புகழும் பாடங்களைப் புகுத்துகிற நிகழ்வு இங்கேதான் காணமுடிகிறது. வேண்டுமென்றே ஒரு விஷயத்தை மாணவர்களுக்குச் சேராமல் தடுத்தல், மறைத்தல், மாற்றிச் சொல்லுதல் என்று பாடத்திட்டங்களை அரசியல் வளைக்கிறது. அரசியல் ஆதரவின்றி இன்று ஒருவர் துணைவேந்தராக முடியாத நிலை இங்கே எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆக அரசியல் சார்பில்லாமல் இங்கே கல்வித்துறையில் எந்த விஷயமும் நடப்பதில்லை.

மகாத்மா காந்தி, அதுவரை நமக்கென்ன என்று இருந்த பெருவாரியான மக்களையெல்லாம் அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்று சொல்வார்கள், இன்று அது ஓவர்டோசாகி எல்லாவற்றிலும் அரசியல், சுயலாபம் என்று இன்னொரு முனையை அடைந்துவிட்டிருக்கிறது. இது குறித்துத் தனிமனிதர்கள் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் இதைப்பற்றிப் பொதுவான ஒரு உரையாடலையாவது உருவாக்க வேண்டியது இந்நேரத்தில் நம் ஒவ்வொருவரின் கடமை.

எழுமின் விழிமின் – 20

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

கல்வியைப் பரப்புவது அல்லது உலகியல் ஞானத்தைப் பரப்புவது

மேல்நாடுகளிடையே உள்ள முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் ரகசியம் பரவலான கல்விதான்.

மேற்றிசை நாடுகளுக்கும் கீழ்த்திசை நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் முழுவதும் இதில்தான் உள்ளது. அவர்கள் ஒன்றுபட்ட மக்களினமாக உள்ளார்கள். நாம் அப்படி இல்லை. மேல்நாடுகளில் நாகரிகமும் கல்வியும் மெதுவாகப் பரவி, பாமர மக்களிடையேயும் குடிபுகுந்துள்ளன. பாரதத்திலும் அமெரிக்காவிலும் உள்ள உயர்தர வகுப்பினர் ஒரேமாதிரிதான் உள்ளனர். ஆனால் இரு நாடுகளிலுமுள்ள தாழ்ந்த வகுப்பு மக்களிடையே உள்ள இடைவெளித் தூரத்தைக் கணக்கிட முடியாது. ஆங்கிலேயர்கள் பாரதத்தை எளிதாக வென்றதன் காரணம் என்ன? அவர்கள் ஒன்றுபட்ட மக்களினம்; நாம் அப்படியில்லை.

நம்மிடையே ஒரு மகா புருஷர் காலமானால் மற்றொருவர் கிடைப்பதற்காக நாம் பல நூற்றாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். மேல்நாடுகளில் சாகிற அதே வேகத்தில் உற்பத்தியும் செய்கிறார்கள். இங்கே உயர்ந்த மனிதர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏன் அப்படி? பெரிய மனிதர்களைத் தேடிப் பொறுக்கிச் சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக அவர்களிடையே ஏராளமான பேர்கள் உள்ளனர். நம்மிடம் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். முப்பதுகோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம் தேர்ந்தெடுப்பதற்குக் குறுகிய அளவு வசதியுடனிருக்கிறது. மூன்று கோடி, நான்கு கோடி, ஆறு கோடிப் பேர்களைக் கொண்ட சமுதாயங்களை விட நம் நாட்டில் வசதி குறைவு. ஏனெனில் பிற நாடுகளில் கல்வி கற்ற ஆண், பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்; நமது நாட்டிலுள்ள பெருங்குறை இது. இதனை நீக்கியாக வேண்டும். பாமர மக்களுக்குக் கல்வி புகட்டி உயர்த்துங்கள்; இதன் மூலமாகத்தான் ஒன்றுபட்ட மக்களினத்தை உண்டாக்க முடியும்.

“மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ”- “தாயே (உனக்குக்) கடவுளாக இருக்கட்டும். தந்தையே (உனக்குக்) கடவுளாக இருக்கட்டும்” என்று படித்திருக்கிறீர்கள். ஆனால் “தரித்ர தேவோ பவ; மூர்க்க தேவோ பவ”, “ஏழைகள் படிக்காதவர்கள், அறியாமையிலுள்ளவர்கள், துயருற்றவர்கள் இவர்கள் உங்களது தெய்வமாக இருக்கட்டும்” என்று நான் கூறுகிறேன். இவர்களுக்குத் தொண்டு செய்வதே அனைத்திலும் உயர்ந்த சமயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உயிரற்ற இன்றைய கல்வி முறை:

நீங்கள் இப்பொழுது பெற்றுவரும் கல்வி முறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் கெடுதல்களே மிகுதியாக உள்ளன. அந்தக் கெடுதல்கள் நல்ல அம்சங்கள் யாவற்றையும் மறைக்கும்படி அவ்வளவு அதிகமாக உள்ளன. முதலாவது அது நம் மக்களுக்கு ஆண்மையளிக்கக் கூடியதாக இல்லை. அது முற்றிலும் எதிர்மறைத் தன்மையானதாக உள்ளது. எதிர்மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் கல்வி அல்லது பயிற்சி மரணத்தைவிடக் கொடியதாகும். ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அதன் தகப்பனார் ஒரு முட்டாள் என்று முதற் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இரண்டாவது அதன் பாட்டனார் பைத்தியக்காரர் என்றும் மூன்றாவதாக அதன் ஆசிரியர்கள் வெளிவேஷக்காரர்கள் என்றும் நான்காவதாக நம் சாஸ்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் கற்பிக்கப்படுகிறது. அந்தக் குழந்தை பதினாறு வயதை அடையும்பொழுது எதிர்மறை உணர்ச்சியின் வடிவமாக, உயிரற்ற, எலும்பற்ற வஸ்துவாக ஆகிவிடுகிறது.

நம் நாட்டில் மிக உயர்ந்த மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற விபரம் நமக்கும் உணர்த்தப்படுவதேயில்லை. ஆக்கக் கருத்து எதுவும் நமக்குக் கற்பிக்கப்படுவதில்லை. நமது கைகளையும் கால்களையும் எப்படிப் பயன்படுத்துவது என்றுகூட நமக்குத் தெரியாது. ஆங்கிலேயர்களின் மூதாதையர்களைப் பற்றிய எல்லா புள்ளிவிவரங்களையும் நாம் தெளிவாக அறிகிறோம். ஆனால் நமது சொந்த மூதாதையர்களைப் பற்றி அக்கறைப்படாத பரிதாப நிலை உள்ளது. நாம் பலவீனத்தைத்தான் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் தோற்கடிக்கப்பட்ட மக்களினமாதலால் “நாம் பலவீனர்கள். நமக்கு எதிலும் சுதந்திரமில்லை” என்று நாமே நம்பும் நிலைக்கு இழிந்துவிட்டோம். இந்நிலையில் “சிரத்தை”யை இழக்காமல் எப்படி இருக்க முடியும்?

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும். கருத்துகள் ஜீரணமாக வேண்டும். நீங்கள் ஐந்தே கருத்துகளை நன்றாக ஜீரணித்துக் கிரகித்து, அவற்றை உங்களது வாழ்க்கையிலும் ஒழுக்கத்திலும் நிறைந்ததாகச் செய்வீர்களாயின், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனைவிட பெரிய கல்விமான் ஆவீர்கள்.

ஆகையால் நமது லட்சியம் நம் தேசத்துக் கல்வி, ஞானமனைத்தையும் பெறுவதாக இருக்க வேண்டும். நமது தார்மிக, லௌகிக, ஞானம் அனைத்தும் அடங்கிய அந்தக் கல்வி ஞானத்தை, சாத்தியமான வரையில் நமது தேசீய வழிகளில், தேசீய அடிப்படைகளில் நாம் கைக்கொள்ள வேண்டும்.

ஏழைகளுக்குக் கல்வி புகட்டுகிற கடினமான வேலை:

ஏழைகளுக்குக் கல்வி புகட்டுவதில் உள்ள பெரிய கஷ்டம் இதுதான்.

ஒவ்வொரு கிராமத்திலும் இலவசப் பள்ளிகளைத் திறக்கிறோம் என்றே வைத்துக்கொண்டாலும்கூட, அப்பொழுதும் ஏழைப் பிள்ளைகள் தமது வாழ்க்கைச் செலவுக்காகச் சம்பாதிப்பதற்கு நிலத்தில் உழுவதற்குப் போவார்களே தவிர, உங்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். நம்மிடம் பணமில்லை; கல்வி கற்க அவர்களை வரச் செய்யவும் நம்மால் முடியாது. இந்தப் பிரச்சினை ஏமாற்றமளிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது. எனினும் நான் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன்.

பிரச்சினைக்கு ஒரு வழி:

சந்நியாசிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும்.

“மலை முகம்மதுவிடம் வராவிட்டால், முகம்மது மலையிடம் போகவேண்டும்” என்று ஒரு பழமொழி உண்டு. ஏழை மக்கள் கல்விச் சாலைக்கு வரமுடியாவிட்டால் கல்வி ஏழைகளிடம் செல்ல வேண்டும். அவர்கள் உழுகிற இடம், தொழிற்சாலை முதலிய எல்லா இடங்களுக்கும் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும்.

நமது நாட்டில் ஒரே சிந்தனையும் தன்னலத் தியாகமும் கொண்ட சந்நியாசிகள் ஆயிரக்கணக்கில், கிராமம் கிராமமாகச் சென்று சமய ஞானத்தைப் போதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை உலகாயத விஷயங்களைக் கூடக் கற்பிப்பதற்கு ஆசிரியராக ஏற்பாடு செய்தால் அவர்கள் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாகச் சென்று சமய போதனையை மட்டுமின்றிக் கல்வியறிவையும் அளித்துக்கொண்டே செல்வார்கள்.

அவர்கள் கிராமந்தோறும் சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் சமயத்தை மட்டுமின்றிக் கல்வியையும் கொண்டுசெல்லட்டும்.

உதாரணமாக கிராம மக்கள் நாள் முழுவதும் வேலை செய்த பிறகு ஊருக்குத் திரும்புகிறார்கள். ஏதாவதொரு மரத்தடியிலோ அல்லது வேறோர் இடத்திலோ உட்கார்ந்துகொண்டு, புகைபிடித்துக் கொண்டு, அரட்டையடித்துக்கொண்டு காலம்கழித்துக் கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்தில் பழுத்த சந்நியாசிகள் இருவர் அங்கேயே போய் அவர்களை மடக்கிப் போட்டுக்கொண்டு காமிரா மூலம் வானசாஸ்திர சம்பந்தமான படங்களையோ அல்லது வேறு படங்களையோ, பல்வேறு நாடுகளின் காட்சிகளையோ, வரலாறுகளையோ காட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறாக பூமிகோளங்கள், பூகோளப் படங்கள் முதலியவற்றின் துணைகொண்டு வாய்மொழியாகவே விஷயங்களைக் கற்பிக்க முடியும்.

அறிவு நுழைவதற்குக் கண்கள் மட்டுந்தான் வாயில் என்பதல்ல. காதுகள் (கேள்வி) மூலமாகவும் எல்லாம் செய்ய முடியும். அதன் மூலம் மக்களுக்குக் கருத்துகளும், நீதிநெறியுணர்வும் கிடைக்கும். மேலும் நல்ல விஷயங்களைக் கற்க விழைவார்கள். அத்துடன் நமது வேலை முடிவடைகிறது.

மக்களுக்குக் கருத்துகளை வழங்கவேண்டும். அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்குமாறு அவர்களது கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் அவர்களுக்குரிய நல்வழியை அவர்களே வகுத்துக் கொள்வார்கள்.

ரசாயனப் பொருள்களை ஒன்றாகக் கலந்துவைப்பது நம் கடமை. அவை படிகக் கட்டிகளாக மாறுவது இறைவனின் சட்டப்படி நடக்கும். அவர்களது உள்ளங்களில் நல்ல கருத்துகளை விதைப்போம். மற்றவற்றைத் தாமே செய்துகொள்வார்கள். பாமரனுக்குக் கல்வி அளிப்பது என்பது இதுதான்.

மகத்தான, சமய ரீதியான உற்சாகத்தின் மூலம் வேலை செய்வார்கள்:

இந்தப் பெரும் பணியை ஏற்றெடுத்து, இந்தத் தியாகத்தைச் செய்யச் சந்நியாசிகளை எது தூண்டும்? சமய உணர்ச்சியினால் எழும் உற்சாகம்தான். ஒவ்வொரு புதிய சமய உணர்ச்சி அலைக்கும் ஒரு புதிய கேந்திரம் தேவைப்படுகிறது. அந்தக் கேந்திரத்தின் மூலந்தான் பழைய சமயத்தில் புத்துணர்ச்சி ஊட்ட முடியும். உங்களுடைய கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தூக்கியெறியுங்கள். அவற்றால் பயன் உண்டாகாது. ஒழுக்கநெறி, ஒருவரது உதாரண வாழ்க்கை, ஒரு கேந்திரம், இவை இருக்கவேண்டும். தெய்வீக புருஷன் ஒருவன் வழிகாட்டிச் செல்லவேண்டும். அந்த மையப்புள்ளியைச் சுற்றி மற்ற எல்லாச் சக்திகளும் சூழ்ந்து நின்று சமுதாயத்தின்மீது அலைபோலப் புரண்டு வந்து எல்லா அழுக்குகளையும் அடித்துக்கொண்டு போய்விடும்.

ஒர் மரத்துண்டைச் சுலபமாக அறுக்கவேண்டுமானால் அதில் இழையோடுகிற போக்கில்தான் அறுக்கவேண்டும். அதுபோல பழைய ஹிந்து சமுதாயத்தின் மூலமாகத்தான் நாட்டைச் சீர்திருத்த முடியுமேயன்றி இந்த நவநாகரிகச் சீர்திருத்த இயக்கங்கள் மூலம் முடியாது.

அதே நேரத்தில் இந்தச் சீர்திருத்தவாதிகள் மேற்கத்திய கலாசாரம், கிழக்கிந்திய கலாசாரம் ஆகிய இரண்டையும் தம்மோடு இணைக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்கவேண்டும்.

நாட்டின் ஆன்மிகக் கல்வியும் லௌகிகக் கல்வியும் நமது பிடிப்புக்குள் இருக்கவேண்டும். அதைப்பற்றியே கனவு கண்டு, அதைப் பற்றியே பேசிவந்து, அதைப் பற்றியே சிந்தித்து, அதை நிறைவேற்ற வேண்டும். அதுவரையில் நமது மக்கள் சமுதாயத்துக்கு விடிவுகாலமில்லை. இதனைச் செய்துமுடிக்க ஓர் இயக்கம் தேவைப்படுகிறது.

எல்லா இடங்களிலும் நடவடிக்கைகளுக்கான கேந்திரங்களைத் துவக்க வேண்டும்:

இது மிகப்பெரிய திட்டம். எப்பொழுதாவது இது நிறைவேறுமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வேலையைத் துவக்க வேண்டும். எப்படி? உதாரணமாகச் சென்னை மாகாணத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் ஒரு கோயில் அமைக்க வேண்டும். ஏனெனில் ஹிந்துக்களிடம் சமயத்திலிருந்துதான் எல்லாமே ஆரம்பமாக வேண்டும். அது காரணமாக நம் மதப்பிரிவுகளுக்குள் சண்டை உண்டாகலாமென நீங்கள் சொல்லலாம். ஆனால் “ஓம்” என்ற சின்னத்தை மாத்திரம் வைத்தால் அது தனிச் சார்பு அற்ற கோயிலாகிவிடும். ஏனெனில் “ஓம்” என்பது எந்த ஒரு பிரிவுக்கும் உட்படாத மிக உயர்ந்த சின்னமாகும்.

“ஓம்” என்பது சின்னமாக இருக்கக் கூடாது என்று இங்கே உள்ள எந்தப் பிரிவினராவது நம்புவார்களாயின் அவர்கள் தம்மை ஹிந்து என அழைத்துக்கொள்ளும் தகுதியிழந்து விடுவார்கள். ஹிந்து மதத்தை ஒவ்வொருவருமே தத்தம் உட்பிரிவின் கருத்துகளுக்குத் தக்க விளக்குக்கின்ற உரிமை பெற்றுள்ளார்கள். ஆனால் நமக்குப் பொதுவான ஓர் ஆலயம் நிச்சயமாகத் தேவை. மற்ற இடங்களில் நீங்கள் விரும்புகிற, உங்களுக்குச் சொந்தமான விக்கிரகங்களும் சின்னங்களும் இருக்கட்டும். ஆனால் இங்கே உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களுடன் பூசலிட வேண்டாம்.

இங்கே எல்லாப் பிரிவினருக்கும் பொதுவாக உள்ள கருத்துகள் கற்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் பல்வேறு பிரிவினரும் இங்கு வரவும், தத்தம் தத்துவங்களைப் போதிப்பதற்கு முழு உரிமையும் இருக்க வேண்டும். அதில் ஒரே ஒரு நிபந்தனைதான். பிற பிரிவினருடன் சண்டை மட்டும் போட்டுக்கொள்ளக் கூடாது. நீங்கள் சொல்ல விரும்புவதைச் சொல்லுங்கள்; உலகம் கேட்க விரும்புகிறது. ஆனால் மற்றவர்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைக் கேட்பதற்கு உலகத்துக்கு நேரம் கிடையாது. அதை நீங்கள் உங்களிடமே வைத்துக்கொள்ளலாம்.

பிரசாரகர்களையும் ஆசிரியர்களையும் பயிற்றுவித்தல்:

இரண்டாவதாக, இக்கோயிலுடன் தொடர்புடையதாக ஒரு ஸ்தாபகம் இருக்கவேண்டும். ஆங்காங்கே சென்று நமது மக்களுக்குச் சமயப் பிரசாரம் புரிவதுடன் லௌகிகக் கல்வியையும் அளிக்கக்கூடிய ஆசிரியர்களை அங்கே பயிற்றுவிக்க வேண்டும். நாம் ஏற்கனவே சமயத்தை வீட்டுக்கு வீடு கொண்டுசென்று வருகிறோம். அதனுடன் கூட உலகியல் கல்வியையும் கொண்டுசெல்ல வேண்டும். அதனை எளிதில் செய்ய முடியும். பின்னர் பிரசாரகர், ஆசிரியர் குழுவின் மூலமாக இவ்வேலை விஸ்தரிக்கும். படிப்படியாக மற்ற இடங்களிலும் அதே போன்ற கோயில்களை நிர்மாணித்து, பாரதம் முழுவதையும் அரவணைக்கும்வரை விஸ்தரிப்போம். இதுவே என் திட்டம்.

இது பிரம்மாண்டமானதாகத் தோன்றலாம். ஆனால் இது மிகவும் அத்தியாவசியமானதாகும். இதற்கு வேண்டிய பணம் எங்கிருந்து வருமெனக் கேட்கலாம். பணம் தேவையில்லை. பணத்தில் ஒன்றுமேயில்லை. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாமல் இருந்து வந்திருக்கிறேன். ஆனால் எனக்கு வேண்டிய பணமும் மற்ற பொருள்களும் வந்தே தீர வேண்டும். ஏனெனில் அவை எனது அடிமைகள்; நான் அவற்றுக்கு அடிமையல்ல. ஆகவே பணமும் மற்றவையும் வந்தே ஆகவேண்டும். ‘வந்தேயாக வேண்டும்’ என்பதே- சரியான சொல் ஆகும்.

மனிதர்கள்- மனபூர்வமான மனிதர்கள்- தேவை:

இப்பணியை ஆற்றக்கூடிய மனிதர்கள் எங்கே? அதுதான் கேள்வி.

மனிதர்கள்; மனிதர்கள்தான் வேண்டும். மற்ற எல்லாம் தயாராகிவிடும். வலிமைமிக்க, ஆண்மையுள்ள, நம்பிக்கை வாய்ந்த, குருத்தெலும்பு வரை மனபூர்வமாகப் பணிபுரியத்தக்க இளைஞர்கள் வேண்டும்.

இளம் சந்ததியரிடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் புதிய சந்ததியிலிருந்து எனது ஊழியர்கள் தோன்றுவார்கள். சிங்கங்களைப் போல அவர்கள் இந்தப் பிரச்சினை முழுவதையும் தீர்த்துவைப்பார்கள். நான் எனது கருத்துகளுக்கு ஒரு வடிவம் கொடுத்தேன். அதற்காக எனது வாழ்க்கையைக் கொடுத்தேன். நான் வெற்றி பெறவில்லையென்றால் என்னைவிடச் சிறந்தவர் ஒருவர் எனக்குப் பிறகு வந்து அதனைச் செய்து முடிப்பார். அதற்காகப் போராடுவதிலேயே நான் திருப்தியடைவேன்.

உங்கள் ஆத்மாவில் அளவற்ற சக்தியிருக்கிறதென்றும் இந்நாடு முழுவதையும் உங்களால் தட்டியெழுப்ப உங்களால் முடியும் என்றும் உங்களில் ஒவ்வொருவரும் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் செல்வோம். நமது கருத்துகள் அந்தந்த நாடுகளை உருவாக்கும் பல சக்திகளுடன் சேர்ந்து அவற்றில் ஓர் அம்சமாகக் கலந்துவிடும். பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ஒவ்வொரு மக்களினத்தின் வாழ்க்கையினுள்ளும் நாம் நுழையவேண்டும். இந்நிலை ஏற்பட நாம் உழைத்தாக வேண்டும். அதற்காகவே இளைஞர்கள் தேவை என்கிறேன். “இளைஞன் பலமுள்ளவன். நல்ல ஆரோக்கியமுள்ளவன். கூரிய அறிவுள்ளவன் – இத்தகையவனே இறைவனை அடைவான்” என்று வேதங்கள் கூறுகின்றன.

உங்களுக்கு இளமையின் சக்தித்துடிப்பு இருக்கும் பொழுதுதான் உங்களது வருங்காலத்தைப் பற்றி நிர்ணயிக்க வேண்டும். நீங்கள் தளர்ந்து வாடித் தேய்ந்துபோன பிறகு அல்ல; இளமையின் சுறுசுறுப்பும் புதுமைத் தளதளப்பும் இருக்கும் பொழுதுதான் தீர்மானிக்க வேண்டும். பணி புரியுங்கள். இதுவே தக்க தருணம். ஏனெனில் அன்றலர்ந்த, கைபடாத, முகராத, மலர்களை மட்டுமே இறைவன் திருவடியில் அர்ச்சிக்க வேண்டும்; சமர்ப்பிக்க வேண்டும். அவற்றையே இறைவன் ஏற்கிறார்.

ஆகவே நாம் ஓர் உயர்ந்த லட்சியத்தை மேற்கொள்வோம். நமது முழு வாழ்வையும் அதற்கென அர்ப்பணம் செய்வோம். இதுவே நமது முடிவான தீர்மானமாக இருக்கட்டும். “என்னுடைய மக்களை உய்விப்பதற்காக மீண்டும் தோன்றுவேன்” என்று கூறியுள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நம்மை ஆசிர்வதிப்பாராக! நமது லட்சியங்கள் ஈடேறுவதற்காக அவர் நம்மை வழிநடத்திச் செய்வாராக!

உத்திஷ்ட ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத – [கட உபநிடதம் 1-3-4]

எழுமின்! விழிமின்! குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!


(தொடரும்…)

அடுத்த பகுதி >>

எழுமின் விழிமின் – 8

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு:  ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்:  ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.


<< முந்தைய பகுதி 

தொடர்ச்சி..

மறுமலர்ச்சிப் பணி – அதன் அடிப்படையும் போக்கும்

ஓ பாரத நாடே !

பிறருடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதனாலே, மட்டரகமாகப் பிறரைப் பின்பற்றி நடிப்பதனாலே, பிறரை நம்பி வாழ்வதனாலே, நாகரிகத்தின் சிகரத்தையும் சீர் சிறப்பின் சிகரத்தையும் நீ எய்திவிட முடியுமா ?

அவமானகரமான இந்தக் கோழைத்தனத்தினாலே வீரதீரர்களுக்கே உரித்தான சுதந்திரத்தை நீ அடைய முடியுமா ?

ஓ பாரத நாடே !

சீதை, சாவித்திரி, தமயந்தி முதலிய கற்பில் சிறந்த உத்தமிகளை மறவாதே. உனது பெண்மையின் லட்சியத்துக்கு அவர்களே உதாரணம் !

யோகிகளுக்கெல்லாம் யோகியும், எல்லாவற்றையும் துறந்தவருமான உமாபதியாம் சங்கரனே நீ வணங்கும் கடவுள் என்பதை மறவாதே !

உனது திருமணம், உனது செல்வம், உனது உயிர் முதலானவை, உனது பிரத்தியேக இந்திரிய சுகபோகத்திற்கும், உனது சொந்த நன்மைகளுக்கும் ஏற்பட்டவை அல்ல என்பதை மறவாதே !

நீ தேவியின் பலி பீடத்துக்கான ஒரு யாகத் திரவியமாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே !

உனது சமூக அமைப்பானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பம் தான் என்பதை மறவாதே !

தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே !

வீரனே !

தீரனாக இரு ! கோழைத்தனத்தை அகல ஓட்டு ! நீ ஒரு பாரத வாசி என்பதில் பெருமைகொள். “நான் ஒரு பாரத வாசி; ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன் !” என்று  பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு !

மூட பாரதீயனும், பிராம்மண பாரதீயனும், பறையனாகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்வாய். இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறவனாயினும், உரத்த குரலெடுத்து “பாரதீயரே எனது சகோதரர்; பாரதீயரே எனது உயிர்; பாரதத்தின் தேவ, தேவிகளே நான் வணங்கும் தெய்வங்கள்; பாரதத்தின் ஜன சமூகமே நான் குழந்தையாக இருந்தபோது படுத்து வளர்ந்த தொட்டில்; இளமையில் விளையாடிக் களித்த எழிற்பூங்கா; மூப்படைந்த தருணத்தில் அடையும் வாராணாசியான மோட்சம்” என்று பெருமையுடன் சொல்வாயாக !

சகோதரனே ! “பாரத பூமியே எனது அதியுயர்ந்த மோட்சலோகம்; பாரதத்தின் நன்மையே எனது நன்மை!” என்று சொல்வாயாக !

இரவிலும் பகலிலும் “கௌரி வல்லப ! அகிலாண்டேசுவரி ! ஆண்மைத்தனத்தை எனக்கு அருள்வீர்களாக ! வல்லமையை அருளும் தாயே ! எனது கோழைத்தனத்தை அகற்றுவாய். எனது பேடித்தனத்தைப் போக்குவாய் ! என்னை ஓர் ஆண்மகனாக ஆக்கு !” என்று இடையறாது பிரார்த்தனை செய் !

‘மேலை நாட்டில் இருந்து வருவதே தலைசிறந்தது’

இந்நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்நாட்டின் செல்வாக்கு பாரதத்துக்குள் பொழியத் துவங்கியபோது, வெற்றி கொண்ட மேனாட்டவர்கள் வாள்கரத்துடன், ரிஷிகளின் புதல்வர்களிடம் வந்தார்கள்.

“நீங்கள் வெறும் காட்டுமிராண்டிகள். கனவு காண்கிறவர்களின் இனத்தவர் நீங்கள். உங்களது சமயம் வெறும் கட்டுக்கதை தான். உங்களது கடவுளும், ஆத்மாவும் நீங்கள் எதை எய்ய விரும்பிப் போராடினீர்களோ அவையும், எல்லாமே அர்த்தமற்றவை. ஆயிரமாண்டுகளாக நீங்கள் நடத்திய போராட்டம், ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பூண்ட முடிவற்ற துறவறம் ஆகியவை எல்லாம் வீணாகிவிட்டன” என்று நிரூபித்துக் காட்ட வந்தார்கள். அப்பொழுது பல்கலைக் கழக மாணவர்களிடையே இந்தப் பிரச்சினை பரபரப்பை உண்டாக்கியது.

‘இதுவரையில் வாழ்ந்து வந்த நமது தேசீய வாழ்க்கை தோற்று விட்டதா ? மேலைநாட்டுத் திட்டத்தின்படிப் புதிதாக ஆரம்பிக்க வேண்டியதுதானா ? நமது பழைய புத்தகங்களைக் கிழித்து, தத்துவ ஞானங்களைக் கொளுத்தி, உபதேசகர்களை ஓட்டி விரட்டிக் கோயில்களை இடித்துத் தள்ளலாமா ?’

என்றெல்லாம் எண்ணினார்கள்.

தங்கள் சமயத்தை வாள்கொண்டும் துப்பாக்கி கொண்டும் நிரூபித்துக்காட்டிய வெற்றியாளனான மேல் நாட்டவன், நமது பழைய வழி முறைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்றும், வெறும் விக்கிரக ஆராதனை தான் என்றும் கூறவில்லையா ?

மேல்நாட்டவன் திட்டப்படி துவக்கப்பட்ட புதிய கல்விக் கூடங்களில் பழக்கப் படுத்தப்பட்டு, கல்விப் பயிற்சி பெற்றவர்கள் மேற்கூறிய கருத்துக்களைத் தமது சிறு பிராயம் முதலே உட்கொண்டார்கள். ஆகவே, அவர்களுக்குச் சந்தேகங்கள் எழுந்ததைக் குறித்து வியப்படைய வேண்டியதில்லை. ஆனால், மூடநம்பிக்கைகளைத் தூர எறிந்துவிட்டு, சத்தியம் எது என்று உண்மையான ஆராய்ச்சியைத் துவக்காமல், ”மேற்குநாடு என்ன சொல்கிறது?” என்ற கேள்விதான் உண்மைக்கு ஒரே உரைகல்லாகி இருக்கிறது.  ‘குருமார்கள் ஒழிய வேண்டும்; வேதங்கள் ஒழிய வேண்டும்’ – ஏனெனில், அவ்வாறு மேல்நாடு கூறுகிறதே ?

பலசாலியை அண்டி அனைவரும் போகிறார்கள்

இங்கிலாந்திலும்கூட கவனித்திருக்கிறேன் – பலங்குறைந்த தேச மக்களுக்குப் பிறந்த குழந்தைகள் இங்கிலாந்தில் பிறந்தால், தாம் கிரேக்கர், போர்த்துக்கீசியர், ஸ்பெயின் நாட்டவர் என்று முறைப்படித் தம்மை அழைத்துக் கொள்ளாமல் ஆங்கிலேயன் என்றே தம்மை அழைத்துக் கொள்கின்றன. பலமுள்ளவனையே எல்லாரும் அனுசரித்துப் போகிறார்கள். பலமுள்ளவனின் புகழொளி நமது உடலின் மீதும் பட்டுப் பிரதிபலிக்காதா? பலசாலியின் புகழ் ஜொலிப்பில் இருந்து கடன் வாங்கி நாமும் மினுக்கிக் கொள்லலாமே? என்பவை பலமில்லாதவனின் விருப்பமாக இருக்கிறது.

பாரதம் உறக்கத்தில் இருந்து விழித்து வருகிறது

இப்பொழுதுள்ள பாரத அரசாங்கத்திடம்* சில குறைகள் உள்ளன. அத்துடன் மிகப்பெரிய நல்ல அம்சங்களும் உள்ளன. அவற்றுள் மிகப்பெரிய நன்மை இதுதான்: பாடலிபுத்திர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு, இதுவரை பாரத நாடானது பிரிட்டனைப் போன்று, நாடு நெடுகிலும் தனது செங்கோலைச் செலுத்திவரும் சக்திவாய்ந்த ஓர் இயந்திரத்தின் கண்காணிபின்கீழ் இருந்ததில்லை.

(* –  இது 1880 – 1904 காலகட்டத்தில்  பேசப்பட்டது  என்பதை   நினைவில் கொள்ளவும்).

வைசியர்களின் ஆதிபத்தியத்தில் (வைசியனிடம் இயற்கையாகவே இருக்கும் கடும் உழைப்புக் குணத்துக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்) உலகத்தின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு வியாபாரப் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.

அதே நேரத்தில் அதே இயல்பின் விளைவாகப் பற்பல நாடுகளின் கருத்துக்களும், சிந்தனைகளும் பாரதத்தின் எலும்புக்குள்ளும், ஊன் உதிரத்துக்குள்ளும் பலவந்தமாக நுழைந்து வருகின்றன. இந்தக் கருத்துக்களிலும் சிந்தனைகளிலும் பாரதத்துக்கு மிகுந்த நன்மை தருவதாக உள்ளவை சில. வேறு சில தீமை விளைவிக்கக் கூடியவை. மற்றக் கருத்துக்கலெல்லாம், இந்த நாட்டு வாசிகளான மக்களுக்கு எது உண்மையாகவே நல்லது என்பது பற்றி முடிவு கட்ட முடியாத அந்நியர்களின் அறிவீனத்தையும், திறமையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.

ஆனால், தன்னை மூடி மேடுபோலச் சூழந்திருக்கும் நன்மை-தீமைகளைத் துளைத்துக்கொண்டு பாரதத்தின் வருங்கால வள வாழ்வு எழுந்து வருகிறது. இதற்கான நிச்சயமான அறிகுறி காணப்படுகிறது. ஒருபுறம் பாரதத்துக்குச் சொந்தமான பழைய தேசீய லட்சியங்கள். மறுபுறம் அந்நிய நாடுகளால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விசித்திரமான லட்சியங்கள்.

இவை இரண்டும் ஒன்றையொன்று தாக்குகின்றன. அதனிடையே மெல்ல நீளுறக்கத்தில் இருந்து சாவதானமாகக் கண் விழித்து வருகிறது பாரதம்.

இந்தச் சிறு விழிப்பில் இருந்து, நவபாரதத்தில் சுதந்திரமன வெளிச்சார்பு அற்ற சிந்தனையானது ஓரளவுக்கு உதித்து வருகிறது. ஒருபுறம் நவீன மேல்நாட்டு விஞ்ஞானம் கோடிசூரியப் பிரகாசத்துடன் கண்ணைப் பறிக்கிறது. நேர்முகமாக வேலை செய்யும் கண்கண்ட கூரிய சக்திகளைக் கொண்டு திட்டவட்டமான உண்மைகளை அவர்கள் திரட்டிச் சேர்த்திருக்கிறார்கள். அந்தத் திட்டவட்டமான உண்மைகள் என்ற ரதத்தின் மீதேறி வந்து நம்மைத் தாக்கிக் காயமுறச் செய்கிறார்கள்.

பாரதநாடு புகழின் சிகரத்தில் இருந்த காலத்தில் அதன் பண்டைய முன்னோர்கள் நம்பிக்கையும் சக்தியும் ஊட்டுகின்ற ஞான சம்பிரதாயங்களை வகுத்தார்கள். அதன் சம்பிரதாயங்களைப் பாரத நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்த மகிரிஷிகள் சரித்திரத்தின் ஏடுகளில் இருந்து திரட்டி வெளிக் கொணர்ந்தார்கள்.

அந்தப் பாரம்பரியங்கள் எண்ணிலடங்காத ஆண்டுகளாக, நூற்றாண்டுகளாக ஓடி வருகின்றன; உலகனைத்திடம் கொண்டுள்ள அன்பினால் அதிகமான துடிப்பைப் பெற்று, பாரதத்தின் இரத்தக் குழாய்களில் பாய்ந்து வந்துள்ளன.

அந்தப் பரம்பரை எவராலும் மிஞ்சப் படாத வீரத்தைக் காட்டுகிறது. மனித சக்திக்கு மீறிய மேதாவிலாசத்தையும் மிகவுயர்ந்த ஆத்மீகத்தையும் வெளிக்காட்டுகிறது. தேவர்களும் அது கண்டு பொறாமைப் படுகிறார்கள். இந்தக் காட்சிகள் வருங்கால பாரதத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தூண்டுகின்றன.

ஒருபுறம் அப்பட்டமான உலகாயத வாதம், செல்வக் கொழிப்பு, பிரம்மாண்டமான சக்திகளின் குவியல், தீவிரமான போக உணர்ச்சி ஆகியவை எல்லாம் அந்நிய இலக்கியங்கள் மூலம் மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கின. மறுபுறம் இத்தகைய கர்ணகடூரமான குழப்பக் கூச்சலுக்கிடையே, மெல்லிய, ஆனால் தெளிவான, தவறற்றக் குரலில் தனது பழைய தெய்வங்களின் உள்ளமுருக்கும் ஓலத்தைக் கேட்டு பாரதத்தாய் திடுக்கிட்டெழுகிறாள்.

அவள் முன்னிலையில் மேனாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பலவிதமான விசித்திர போகப் பொருள்கள் உள்ளன. தேவலோகப் பானங்கள், சுவையாகச் சமைக்கப்பட்ட விலையுயர்ந்த உணவு, நேர்த்தியான ஆடையணிகள், மேன்மை வாய்ந்த அரண்மனைகள், புதுவிதமான வண்டி, வாகனங்கள், புதிய பழக்கங்கள், புதிய நாகரிக முறையில் ஆடையணிந்து கொண்டு நன்கு கற்றுத் தேர்ந்த பெண்கள்  வெட்கமில்லாத சுதந்திரத்துடன் நடமாடும் காட்சி – இவையெல்லாம் இதற்கு முன் உணர்ந்திராத ஆசைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

மறுபடியும் காட்சி மாறுகிறது. அதே இடத்தில் உக்ரமான தோற்றமளிக்கும் புதுக்காட்சி விரிகின்றது: சீதை, சாவித்திரி, கடுமையான ஞான சம்பந்தமான விரதங்கள், உபவாசங்கள், காட்டிலுள்ள தனி இடம், அரை நிர்வாணமான துறவியின் சடை முடியும், காவியாடையும், சமாதியும், பிரம்மத்தைத் தேடும் முயற்சியும் ஆகிய இக்காட்சிகளே தோன்றுகின்றன.

ஒரு பக்கம் தன்னலத்தை அடிப்படையாகக் கொண்ட மேலை நாட்டுச் சமூகங்களின் சுதந்திரம்; மறுபக்கம் ஆரியமக்கள் சமூகத்தினது தன்னல மறுப்பின் எல்லை. இத்தகைய உக்ரமான போராட்டத்தில் பாரத சமுதாயம் மேலும் கீழும் தூக்கியெறியப்படுவதில் என்ன புதுமை இருக்கிறது ?

மேலை நாட்டின் லட்சியம் – தனி மனிதனின் சுதந்திரம்; அதன் மொழி – பணம் திரட்டும் கல்வி; அதற்கான வழி – அரசியல்.

பாரதத்தின் லட்சியம் – முக்தி; அதன் மொழி – வேதம்; அதற்கான வழி – துறவு.

சிறிது நேரம் தற்காலப் பாரதம், “இனி வரப்போகும் நிச்சயமற்ற ஞான நலத்தின் கவர்ச்சிக்கு நான் உள்ளாகி, அதனை வீணாக எதிர்பார்த்து, இந்த எனது உலக வாழ்க்கையைப் பாழக்கிக்கொண்டு வருகிறேன்” என்று நினைப்பது போன்று உள்ளது. ஆனால், என்ன ஆச்சரியம் !

மறுபடியும் அது –  ‘இதி ஸம்ஸாரே ஸ்புடரதோஷ: கதமிஹ மானவ தவ ஸந்தோஷ:’ – மரணமும் மாறுபாடும் நிறைந்த பிறவியாகிய இதிலே, மனிதனே, உனக்கு மகிழ்ச்சி எவ்வாறு உண்டகும்?’ என்ற வாக்கியத்தைக் கேட்டு, மந்திரத்தால் கட்டுண்டவரைப் போன்று அதைக் கூர்ந்து கவனிக்கிறது.

புதிய பாரதம் ஒரு பக்கம், “மேலை நாட்டினரின் கருத்துக்களையும், மொழியையும், உணவையும், உடையையும், நடையையும் நாம் கைப்பற்றினால்தான் மேலை நாட்டின்ரைப் போன்று ஆற்றலும் சக்தியும் உடையவராவோம்” என்று கூறிக்கொண்டிருக்கிறது.

பழைய பாரதமோ மறுபக்கத்தில், “பேதைகளே ! ‘காப்பி’யடிப்பதானால் பிறருடைய கருத்துக்கள் ஒருவனுக்கு ஒருநாளும் தனது சொந்தக் கருத்துக்கள் ஆவதில்லை. உழைத்துப் பெறுவதனால் அன்றி எதுவும் ஒருவனது உரிமையாகாது. சிங்கத்தின் தோலைப் போர்த்த கழுதை சிங்கமாவதுண்டோ?” என்று மறுத்துரைக்கிறது.

புதிய பாரதம் ஒரு பக்கம், “மேலை நாட்டினர் செய்வது நன்மையாவது திண்ணம்; அன்றேல், அவர்கள் அவ்வளவு பெருமையை எவ்வாறு அடைந்தனர்?” என்று கேட்க, பழைய பாரதம் மறுபக்கம், “மின்னலின் ஒளி, கடும் பிரகாசமாக இருக்கிறது. ஆனால், அது ஒரு கணத்திற்கே ! சிறுவர்களே பாருங்கள். அது உங்கள் கண்ணைப் பறிக்கின்றது. ஜாக்கிரதை!” என்று எச்சரிக்கிறது.

(தொடரும்)

அடுத்த பகுதி >> 

சிலுவையில் இந்தியக் கல்வி?

media-persons-injured-by-csi-trivandrum

திருவனந்தபுரம், 2011 ஜூலை 14: அந்த இடத்தில் மீடியாக்காரர்களை குண்டர்களும் காவல் துறையினரும் ஒன்று சேர்ந்து ரத்தவிளாறாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இரண்டு தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்த நான்கைந்து நிருபர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தங்கள் சகாக்களைக் காப்பாற்ற மற்ற சில நிருபர்களும் பத்திரிகையாளர்களும் வந்தனர். குண்டர்களைத் தடுத்து நிறுத்துமாறு அவர்கள் காவல்துறையினரிடம் முறையிட, அவர்கள் மீது மேலதிக வன்முறை செலுத்தப்பட்டது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் பேரில், விஷமிகளுடன் சேர்ந்து கொண்டு நிருபர்களைத் தாக்கிய காவலர்களை மாநில அரசு பிறகு அரைமனதுடன் சஸ்பெண்ட் செய்தது.

சம்பவம் நடந்த இடம் நகரின் சி.எஸ்.ஐ. திருச்சபை தலைமையகம் (டயசீஸ்). நிருபர்களைத் தாக்கிய கும்பலில் பெரும்பாலோர் சர்ச் பணியாளர்கள்; சில மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் உண்டு. தாக்குதலை நடத்தி முடித்த பின்னர், சர்ச் பணியாளர்கள் நிருபர்களின் காமிராவை உடைத்து நொறுக்கி, அதில் தாக்குதல் காட்சிகள் பதிவாகியிருந்ததையும் திருடி வைத்துக் கொண்டனர்.

காரணம்? சர்ச் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் சில பல லட்சங்களை கேபிடேஷன் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து, சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கப் படுவதை இந்த ஊடகத்தினர் அம்பலப்படுத்தி விட்டார்கள் என்பதுதான்.

உள்ளூர் பத்திரிகைகள் சர்ச் மருத்துவக் கல்லூரியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பல காலமாகவே எழுதிக் கொண்டுதான் இருந்திருக்கின்றன. ஆயினும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மிக மோசமான கல்வித் தகுதிகளும் மதிப்பெண்களும் கொண்ட பணம் கொழுத்த மாணவர்களுக்கு மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின்கீழ் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. லகரங்களைத் தராத, ஆனால் உண்மையிலேயே இடம் கிடைத்திருக்க வேண்டிய தகுதியுள்ள மாணவர்களின் கதி பற்றி சர்ச்சுக்கு எந்தக் கவலையும் இல்லை. பணம் கொடுத்து இடம் வாங்கிய சில மாணவர்கள் அரசு நடத்திய பொது நுழைவுத் தேர்வில் மகா மட்டமான ரேங்க் (47000-க்கும் கீழே!!) வாங்கியிருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை வைத்து தேசிய அளவில் ஏதேனும் கொந்தளிப்பு நிகழ்ந்ததா? ஊடகங்களுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரான இந்த வன்முறையைக் கண்டித்து எங்கேயாவது, ஏதாவது எதிர்ப்புப் பேரணிகள் நடந்ததா? வழக்கமாக இத்தகைய விஷயங்களுக்காகப் பொங்கி எழும் சிவில் சொசைட்டி செயல்வீரர்கள் இந்த அராஜகம் குறித்து கனத்த மௌனத்தை மட்டுமே தங்கள் எதிர்வினையாக அளிக்கிறார்கள்.

இதே போல ஒரு சம்பவம் ஒரு ஹிந்து டிரஸ்ட் நடத்தும் கல்லூரியிலோ அல்லது பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்திலோ நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். எத்தனை எரிமலைகள் இந்நேரம் வெடித்திருக்கும்! எத்தனை தொலைக்காட்சி சேனல்களில் நாள்கணக்கில் ”இந்துத்துவ குண்டர்கள்” நார்நாராகக் கிழிபட்டிருப்பார்கள்!

கோவை அருகில் உள்ள காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி, தமிழகத்தின் ஒரு பிரபல கிறிஸ்தவ மதபோதக மாஃபியாவால் நடத்தப்படும் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சமீபத்தில் நிர்வாகத்திற்கு எதிராக, பெரிய போராட்டத்தில் இறங்கினார்கள். கிறிஸ்தவ பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள மாணவர்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது என்பதும் அவர்களது முக்கிய கோரிக்கைகளில் ஒன்று. கடும் போராட்டத்திற்கும், காவல்துறை தலையீட்டிற்கும் பிறகு, நிர்வாகம் சில “விதிமுறைகளை” தளர்த்துவதற்கு ஒத்துக் கொண்டது. பொறியியல் படிக்கும் வளர்ந்த மாணவர்களையே மதப் பிரச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கும் அளவுக்கு ஒரு கிறிஸ்தவ உயர்கல்வி நிறுவனம் செயல்படுகிறது என்ற விஷயமே இந்த போரட்டத்தின் மூலமாகத் தான் தெரிய வந்தது.

amen_the-autobiography-of-a-nunகேரளத்திலுள்ள ஒரு பிரபலமான கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் கன்யாஸ்திரீ சிஸ்டர் ஜெஸ்மி “ஆமென்- ஒரு கன்யாஸ்திரியின் சுயசரிதை” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் (தமிழில் காலச்சுவடு பதிப்பக வெளியீடு). கிறிஸ்தவ கான்வெண்டுகளுக்குள் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் பற்றியும் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்கள் குறித்தும் அந்த நூலில் அவர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அதோடு, அவர் பணியாற்றிய கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் நிகழ்ந்த சட்ட மீறல்கள், அற மீறல்கள், அதிகாரச் செயல்பாடுகளைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை அமல்படுத்துவது போல பாவனைசெய்து, அதே சமயம் உரியவர்களுக்கு இடம் தராமல் ஏமாற்றுவது, சுயநிதிப் பிரிவின் இடங்களுக்கு அதிக நன்கொடை வசூலிப்பது… இப்படிப் பல வகை அத்துமீறல்கள். இதெல்லாம் மற்ற கல்வி நிலையங்களிலும் நடப்பதுதான். ஆனால், அங்கு மக்கள் சக்தியும் ஊடகங்களும் அதைக் கேள்வி கேட்கவாவது முடிகிறது. கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் விஷயத்தில், அவர்களது அளப்பரிய மத அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் கொண்டு எதுவும் வெளியே வர முடியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். அதையும் மீறித்தான் சில விஷயங்கள் கசிந்து வருகின்றன.

***

சில வாரங்கள் முன்பு ”இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள்” என்ற இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளிவந்தது. கல்வியின் தரம், ஆசிரியர்கள், வசதிகள், மாணவர்களின் சாதனைகள் என்று பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொண்டு கல்லூரிகளை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக இந்தக் கணிப்பு வந்து கொண்டிருக்கிற்து. இதில் ஒவ்வொரு வருடமும் முதல் 10 என்ற பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை தில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, கல்கத்தா செயிண்ட் சேவியர் கல்லூரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, பெங்களூர் கிரைஸ்ட் காலேஜ், புணே ஃபெர்குசன் கல்லூரி போன்றவை. கலைத் துறைகள் (Humanities), அறிவியல் துறைகள் (Sciences), மருத்துவம் ஆகியவற்றில் முதல் 25 பட்டியலிலும் முதல் 50 பட்டியலிலும் பெரும்பான்மையாக இடம் பெற்றிருப்பவை கிறிஸ்தவக் கல்லூரிகளே. பொறியியல், வணிகம், சட்டம் ஆகிய துறைகளில்தான் ஐஐடிக்கள், என்.ஐ.டிக்கள், ஐஐஎம்கள், அரசு சட்டக் கல்லூரிகள், அதைத் தொடர்ந்து மற்ற கல்லூரிகள் ஆகியவை பட்டியலில் உள்ளன. இந்தத் துறைகளுக்கான பட்டியலிலும் கிறிஸ்தவக் கல்லூரிகள் இல்லாமல் இல்லை. ஆனால் முன்பு சொன்ன துறைகள் போல முற்றாக ஆக்கிரமித்திருக்கவில்லை, அவ்வளவே.

அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்விச் சங்கம் (All India Association for Christian Higher Education) என்ற அமைப்பின் புள்ளிவிபரப்படி, இந்தியாவில் நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான கிறிஸ்தவ கல்லூரிகள் 27. சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை 20. சுதந்திரமடைந்தபோது இந்தியாவில் இருந்த 450 கல்லூரிகளில் ஏறத்தாழ 100 கல்லூரிகள் கிறிஸ்தவக் கல்லூரிகள். 2011-ஆம் ஆண்டு கணக்குப்படி, 300 கல்லூரிகள் கிறிஸ்தவக் கல்லூரிகள். இன்றைய தேதியில், இந்திய மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கிறிஸ்தவக் கல்லூரிகளின் எண்ணிக்கை விகிதாசாரப்படி மிக மிக அதிகம். எனவே, ஒரு சராசரி இந்து மாணவரை விட சராசரி கிறிஸ்தவ மாணவருக்கு நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் அதே மடங்கு அதிகமாக இருக்கும்.

இன்னொரு முக்கியமான வேறுபாடு- பொதுவான இந்து மக்களால் நிர்வகித்து நடத்தப்படும் பல துறைகளுக்கான கல்வி நிலையங்கள் போல, இவை பொதுவான கிறிஸ்தவ மக்களால் நடத்தப்படுபவை அல்ல. மாறாக கத்தோலிக்க திருச்சபை, சி.எஸ்.ஐ, ஜெசூட்டுகள் போன்ற மிகப் பெரிய கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவை. இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அளப்பரிய அதிகாரங்களை அளிக்கும் 30-வது சட்டப் பிரிவு குறித்து ஏற்கனவே ஒரு கட்டுரையில் விரிவாகப் பேசியிருக்கிறோம். அந்த சட்டப் பிரிவைக் காரணம் காட்டி, இந்தியா டுடே பட்டியலில் பல துறைகளில் முதல் இடத்தில் உள்ள தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் 50% இடங்கள் கிறிஸ்தவ மாணவர்களுக்கே ஒதுக்கப்படும் என்று அந்தக் கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. அது தொடர்பான வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இது அரசு நிதி உதவி பெறும் கல்லூரி; ஆனால் நிர்வாகம் முழுவதும் சர்ச் கையில். கல்லூரியின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே சாதகமாகத் தீர்ப்பு வரும் வகையில் சட்டம் இருக்கிறது என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். எனவே, வருங்காலத்தில் இந்தியாவில் எல்லாத் *தலைசிறந்த* கல்லூரிகளும் இதே போன்ற கிறிஸ்தவ முன்னுரிமைக் கொள்கைகளை சட்ட ரீதியாகவே அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். இப்படியாக, உயர்தரக் கல்லூரிகளில் உயர்தர உயர்கல்வி, தட்டில் வைத்து கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப் படுவதற்காக, பெரும்பான்மை இந்தியர்கள் செலுத்தும் வரிப்பணம் செலவழிக்கப்படும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வித் துறைகளில் மிகச் சிறந்த கல்லூரிகள் ஒட்டுமொத்தமாகவே கிறிஸ்தவ மத அதிகார பீடங்களின் கையில்தான் உள்ளன. இது ஏற்கனவே தெரிந்ததுதான்; இத்தகைய கணிப்புகள் அந்த உண்மையை இன்னும் உறுதிப் படுத்துகின்றன. லயோலா, செயின்ட் ஸ்டீபன்ஸ் போன்ற கல்லூரிகள் நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்டவை. பல சாதனையாளர்களை உருவாக்கியவை. எனவே அவற்றின் தரமும், மதிப்பும் உயர்ந்த நிலையில் இருப்பதில் வியப்பில்லை. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் முழு ஆதரவும், பொருளுதவியும் இக்கல்வி நிலையங்களுக்கு இருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் இவற்றுக்கு மாற்றாக, மிகப் பெரிய முயற்சிகள் எடுத்து, ஒவ்வொரு காசாகச் சேர்த்துத்தான் நம் நாட்டவர்கள் இந்திய தேசியக் கல்விக் கூடங்களை உருவாக்க வேண்டியிருந்தது. காசியின் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகம் முதல் திருநெல்வேலி இந்துக் கல்லூரி வரை அப்படி உருவானவையே. ஆனால் சுதந்திரத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகும், கல்வித் துறையில் கிறிஸ்தவ மேலாதிக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

நடைமுறைத் தளத்தில் பல கிறிஸ்தவக் கல்லூரிகளின் செயல்பாடுகள் ஒரு பொதுவான, மதச்சார்பற்ற கல்வி நிலையம் போலவேதான் இருக்கின்றன. ஆனால் தங்கள் கல்வி அமைப்புகளின் முக்கிய நோக்கங்கள் என்று அவர்களே பிரகடனப் படுத்தியிருப்பதைப் பார்த்தால், அதில் முதன்மையாக இருப்பது ஏசு கிறிஸ்தவின் நற்செய்தியைப் பரப்புவதும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மக்களை மனந்திரும்ப வைப்பதுமே. அந்த இறுதி இலக்குக்கான ஒரு சாதனமாகத்தான் கல்வி வரையறுக்கப்படுகிறது.

***

revdvalsan-thampu

மேற்கத்திய நாடுகளில், அமெரிக்காவில் கூட ஆரம்பத்தில் கல்வி அமைப்புகள் மிஷனரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆனால் அறிவியல் வளர்ச்சியும் நவீன பொருளாதார முன்னேற்றங்களும் பெருகி, மேற்குலகில் கிறிஸ்தவத்தின் வலு குறையக் குறைய, அந்த அதிகாரம் சம்பிரதாய ரீதியாகத் தொடர்கிறதே அன்றி, கல்விக் கொள்கைகளை முற்றாகக் கட்டுப்படுத்தும் விதமாக அல்ல. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. இந்தக் கல்வி நிலையங்களின் தலைவர்களாகவும் துணைவேந்தர்களாகவும் அப்பட்டமான கிறிஸ்தவ அடிப்படைவாத பாதிரியார்களே உள்ளனர். இவ்வளவு பெருமை பெற்ற செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியின் தற்போதைய பிரின்சிபால் ரெவரெண்ட் வல்சன் தம்பு. இவரை சர்ச் தடாலடியாக நியமித்தபோது, இவர் ஆய்வு முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெறாதவர் என்று ஆட்சேபம் எழுப்பப்பட்டது. உடனடியாக, அலகாபாத் விவசாயப் பல்கலைக் கழகம் அவரை ஆய்வறிஞராக ஆக்கியது! ஏனென்றால், அந்தப் பல்கலைக் கழகத்தில் விவசாயத்தோடு கூட முக்கியத் துறையாக இருப்பது கிறிஸ்தவ இறையியல் (theology). இதே போன்று, பல பொதுப் பெயர் தாங்கிய கிறிஸ்தவக் கல்லூரிகளில் கிறிஸ்தவ இறையியல் சார்ந்த பாடத்திட்டங்களும், துறைகளும் உள்ளுக்குள் தந்திரமாக நுழைக்கப்பட்டுள்ளன.

கலைத் துறைகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இன்றைய சூழலில், படிப்பில் நல்ல திறமையும் தேர்ச்சியும் உடைய மாணவர்கள் கணினி, மருத்துவம், மேனேஜ்மெண்ட் ஆகிய தொழில்சார்ந்த (professional) துறைகளையே உயர்கல்விக்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, வரலாறு, சமூகவியல், சமூகப் பணி (social work), அரசியல், மொழித் துறைகள் ஆகியவை காத்தாடுகின்றன; அல்லது வேறுவழியில்லாமல் இவற்றில் சேரும் மிகச் சுமாரான, சராசரியான மாணவர்களை வைத்துக் கொண்டு நடந்து வருகின்றன. ஆனால் வரலாறு சார்ந்த, சமூகம் சார்ந்த கல்விப்புல ஆய்வுகளும் கருத்தாக்கங்களும் இத்துறைகளில் இருந்துதான் வரவேண்டும். ஏற்கனவே இத்தகைய தேக்க நிலை இருந்து வரும் சூழலில், இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்களில் உள்ள இத்தகைய துறைகளை இடதுசாரித் தரப்பினரும் கிறிஸ்தவர்களும் விஷக் கிருமிகள் போன்று ஆக்கிரமித்துள்ளார்கள். ஐரோப்பிய மையவாதத்தையும் காலாவதியான காலனியக் கருதுகோள்களையும் இந்திய தேசியத்தைப் பிளவுபடுத்தும் கண்ணிகளையுமே பாடங்களாகப் போதித்து மீள்சுழற்சி செய்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமான சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்கும் சக்தி இத்தகைய கல்வியாளர்களின் கையில் உள்ளது. இவர்கள் உருவாக்கும் மெக்காலேயின் வாரிசுகள்தான் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகத் துறைகளிலும் நுழைகிறார்கள். இந்துப் பண்பாட்டையும், இந்து சமூகத்தையும், இந்திய தேசியத்தையும் எதிர்மறைக் கண்ணோட்டத்துடனேயே அணுகவும் சித்தரிக்கவும் அவர்கள் தங்கள் கல்விக் கூடங்களிலேயே பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.

breaking-india

அத்துடன், இத்தகைய கல்வித் துறைகள் பொய்யான ஆய்வுகளையும் கருத்தாக்கங்களையும் “வளர்த்தெடுப்பதற்கான” களங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக, செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவத்தில் இருந்துதான் இந்துமதத்தின் பல பிரிவுகள் உருவாயின என்று கூறும் டுபாக்கூர் ”ஆய்வுத் தாள்களின்” பட்டியல் Breaking India நூலில் தரப் பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலைப் பார்த்தால், சில குறிப்பிட்ட கல்லூரிகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருந்தே மீண்டும் மீண்டும் இத்தகைய ஆய்வு அறிக்கைகள் உற்பத்தி செய்யப்படுவது புலப்படும். அதிலும், ஒரு சில “ஆய்வாளர்களே” திரும்பத் திரும்ப தங்களுக்குள் ஒருவரது ஆய்வுத் தாளை இன்னொருவர் மேற்கோளாகக் காண்பித்து, தங்கள் சீரிய “ஆய்வு முடிவுகளை” வெளியிட்டிருப்பார்கள். இப்படியே ஒரு சுழல்போல அது போய்க் கொண்டிருக்கும்!

student-christian-movement-of-indiaஇந்திய கிறிஸ்தவ மாணவர் இயக்கம் (Student Christian Movement of India) என்ற முற்றிலும் மத அடிப்படையிலான மாணவர் இயக்கத்தையும் கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள் ஊக்குவித்து வளர்த்து வருகின்றன. இந்தியா முழுவதும் இந்த இயக்கத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். World Student Christian Federation என்ற அகில உலக கிறிஸ்தவ மதப்பிரசார மாணவர் அமைப்பில் இந்த இயக்கமும் ஓர் உறுப்பினராக உள்ளது.

எனவே, எண்ணிக்கை ரீதியாக மட்டுமல்ல, கருத்தியல் ரீதியாகவும் பல துறைகளை இந்தக் கல்வி நிலையங்கள் கிறிஸ்தவ மயமாக்கி வருகின்றன. இதற்கு ஏதுவாகவே நமது ஒட்டுமொத்த கல்விச் சூழலும் அமைந்து விட்டிருப்பது ஒரு சோகம்.

***

உயர்கல்வியில் மட்டுமல்ல, பள்ளிக் கல்வியிலும் கிறிஸ்தவ ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 50,000 கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளிகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. மற்ற எல்லா கிறிஸ்தவப் பிரிவுகளையும், உதிரி மதபோதக அமைப்புகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை கட்டாயம் ஒரு இலட்சத்தைத் தாண்டும்.

இது தவிர, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை இன்று மத்திய, மாநில அரசுகளை விட அதிகமாக, கிறிஸ்தவ அமைப்புகளே நடத்தி வருகின்றன. ஏழ்மையில் உழலும் கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, ஒரு புகலிடமாக இந்த பயிற்சிப் பள்ளிகள் தங்களை அறிவித்துக் கொள்கின்றன. இவற்றில் சேர்ந்து பயிலும் அப்பாவிப் பெண்கள் கிறிஸ்த மூளைச்சலவையோடு, சில இடங்களில் பாலியல் அத்துமீறல்களுக்கும் ஆளாகிறார்கள் என்று அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன. குண்டர் தாக்குதல்களுக்கெல்லாம் துணிந்த நேர்மையான ஊடகங்கள்தான் அது பற்றிய உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் பள்ளிக் கல்வி பாடநூல் வரைவுக் குழுக்களிலும் கிறிஸ்தவ மதப்பிரசார எண்ணம் கொண்டவர்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். இந்துப் பண்பாடு மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்படியும், கிறிஸ்தவ ஆளுமைகள், கருத்துகள் ஆகியவற்றின் மீது பரிவு உண்டாக்கும்படியும் பாடப் புத்தகங்களில் இவர்கள் பாடங்களை அமைக்கின்றனர். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் எல்லா வகுப்புகளுக்குமான பாடப் புத்தகங்களை ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தாலே இது புரிய வரும். உதாரணமாக, தமிழ்ப் பாட நூல்களின் செய்யுள் பகுதியில் தமிழின் உண்மையான இலக்கியச் செல்வங்களான கம்பராமாயணம், பெரிய புராணம், திருமுறைகள், பிரபந்தம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவை ஓரங்கட்டப்பட்டு அல்லது பெயரளவில் வைக்கப் பட்டு, தேம்பாவணி, பெத்லேகம் குறவஞ்சி போன்ற அப்பட்டமான மதப்பிரசார ஜல்லிகள் மதச்சார்பின்மை என்ற பெயரால் நுழைக்கப் படுகின்றன. வரலாற்றுப் பாடங்கள் படுமோசமான திரிபுகளுடன் எழுதப் படுகின்றன. தனியார் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள பாடநூல்களை பல பள்ளிகள் பரிந்துரை செய்கின்றன. கொஞ்சம் தேடிப் பார்த்தால், அத்தகைய பல பதிப்பகங்களுக்கும் கிறிஸ்தவத் தொடர்புகள் இருப்பது தெரியவந்து முகத்தில் அறைகிறது.

கிறிஸ்தவப் பள்ளிகளில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் நடக்கும் மதமாற்றப் பிரசாரங்களும், உளவியல் ரீதியான அழுத்தங்களும் நாம் அறிந்தவை. ஆனால் சில சமயங்களில் இவர்கள் தங்கள் பலத்தை அப்பட்டமான அரசியல் காரணங்களுக்காக வெளிப்படையாகவே பிரயோகிக்கிறார்கள்.

protest-in-orissa

ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில், 2008-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜன்மாஷ்டமி இரவில் கிறிஸ்தவ-மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மிகப் பெரும் கலவரம் வெடித்தது. இரு தரப்பிலும் சேதங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதன் பின்னணியில், ”கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து” 29-8-2008 அன்று இந்தியாவில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிகளும் மூடப்படும் என்று அகில இந்திய கத்தோலிக்க பிஷப்கள் சம்மேளனம் அறிவித்தது. ஒன்று விடாமல் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஒரிஸ்ஸா அரசுக்கு எதிராகவும், இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரித்தும் எழுதப்பட்ட அட்டைகள் கைகளில் திணிக்கப் பட்டு, பாதிரிகள் புடைசூழ பள்ளிக் குழந்தைகள் வெயிலில் நடத்தப்பட்டனர். ஒரிஸ்ஸாவில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கை இந்தப் பேரணிகளில் எழுப்பப்பட்டது. இலட்சக் கணக்கான இந்துக் குழந்தைகள் கிறிஸ்தவ மத அதிகார அமைப்பின் அரசியல் நோக்கங்களுக்காக பகடைக் காய்களாக ஆக்கப்பட்டனர். ’கிறிஸ்தவர்களின் உயிர்தான் மதிக்கத் தக்கது; இந்து உயிர்கள் ஈசல் போல சாவதற்காகப் பிறந்தவைதான்’ என்ற கருத்து ஆழமாக அவர்கள் மனதில் வேரூன்றப் பட்டது.

இந்த அப்பட்டமான சட்டமீறல் பற்றி மனித உரிமை ஆணையம் எதுவும் கேள்வி கேட்டதாகத் தெரியவில்லை. பொது சிவில் அமைப்புகளை விடுங்கள், இந்து அமைப்புகள் கூட சர்ச்சின் இந்த அராஜக நடவடிக்கை குறித்துக் கண்டுகொள்ளவில்லை; வழக்கு ஏதும் போட்டதாகத் தெரியவில்லை. வழக்கமான அசமஞ்சத் தனத்துடன் இந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு பேச்சுக்காக, இந்துத்துவ இயக்கங்கள் சார்ந்த அமைப்புகள் நடத்தும் பள்ளிகள் அனைத்தும் ஏதோவோர் இந்து அரசியல் போராட்டத்திற்கு ஆதரவாக இப்படி அணி திரள்வதாக அறிவிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாட்டில் என்ன களேபரம் நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!

***

நீண்டகால அளவில் கல்வித் துறையில் கிறிஸ்தவம் உருவாக்கும் விளைவுகள் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில், பைபிள் பெல்ட் என்று சொல்லப்படும் பகுதிகளில் பரிணாம அறிவியலைப் பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அடிப்படைவாதக் குழுக்கள் பலகாலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய குழுக்கள் கருத்தடைக்கு எதிராகவும் குளோனிங் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகளுக்கு எதிராகவும் நிலைப்பாடு எடுத்துள்ளனர். இந்தக் குழுக்களையே இங்குள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதர்சமாக எண்ணி வருகின்றனர். எனவே அறிவியலுக்கு எதிரான இத்தகைய கிறிஸ்தவ இயக்கங்கள் இங்கும் உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஏற்கனவே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவத் துறை PG Diploma in Ethics and Biotechnology என்று ஒரு டிப்ளமா வகுப்பு நடத்தி சான்றிதழ் தருகிறது. சம்பந்தமே இல்லாமல் கிறிஸ்தவத் துறை ஏன் உயிரியலில் மூக்கை நுழைக்க வேண்டும்?

இந்தியாவின் கல்வித் துறையில் கிறிஸ்தவமும், கிறிஸ்தவ மத அதிகார அமைப்புகளும் அளவுக்கதிமான ஆதிக்கமும் தாக்கமும் செலுத்தி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் எதுவும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் தேச நலனை விடவும் கிறிஸ்தவ வாக்கு வங்கியையே முக்கியமாக எண்ணும் போக்கு உடையவை.

ஆனால் இது இப்படியே நீடிக்கக் கூடாது. அரசு நிதிஉதவி பெறும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளும், கல்விக் கொள்கைகளும் அவற்றுக்கு இணையான மற்ற கல்வி நிறுவனங்கள் போலவே அமையுமாறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப் பட வேண்டும். அரசு நிதி உதவி பெறாத தனியார் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப் பட வேண்டும். நீண்ட கால அளவில் கிறிஸ்தவ கல்வி நிலையங்களுக்கு மாற்றாக சிறந்த கல்வி நிலையங்களை தெளிவான இந்துத்துவ சமூகப் பிரக்ஞையுடன் இந்து மத, சமூக இயக்கங்கள் உருவாக்கி வளர்க்கவேண்டும்.

இந்துத்துவர்கள் மட்டுமல்ல; சுதந்திரம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு ஆகிய விழுமியங்களில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லா இந்தியர்களுமே கவலைப்பட வேண்டிய விஷயம் இது.