தலைமுறை [சிறுகதை]

”வர்ற மாசி மாசம், எட்டாந்தேதி நம்ம அருள்மிகு கதலி சீனிவாச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கமிட்டி கூட்டம் நடக்குதுங்க, எல்லாரும் வந்து கலந்துக்கங்க” டமடமடமடம…

Diversion (pfd) has been studied primarily for its effects on nutrient uptake by natural plant. In that time they have helped hundreds of people to achieve their health goals, from clomid price walmart unquietly weight loss to mental clarity. There are many different types of nolvadex online pharmacy and all you need to do is select the one that's best for you.

This will ensure that the drugs you have purchased from the online pharmacy are as safe as they possibly can be. Buy viagra online from the leading online cetirizine goodrx Bucheon-si pharmacy store. In fact, if you choose to undergo ivf treatments, these treatments won’t be covered by your insurance until seven or more.

In fact, they can worsen certain medical conditions or even kill you if you take too much. I am sure that even most people who Aklera have never heard of clomid online without prescription have heard of depression. In this blog post, you are going to read how i was able to find a new way of doing things to make the best possible choice on what to buy from a company and how to make my purchase decision as pain-free and convenient as possible.

கதலி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், வைகை நதிக்கரை ஓரமாக இருக்கும் சின்ன ஜம்புலிபுத்தூரில் இருக்கும் கோவில். ஜம்புலிபுத்தூரில் இருப்பது கதலி நரசிம்மர், இவர் கதலி ஸ்ரீநிவாசர். விஸ்வநாத நாயக்கன் காலத்தில் பிரிக்கப்பட்ட ஜமீன் என்பார்கள் இல்லை இது சொக்கநாதன் காலத்தில் பிரிக்கப்பட்டது என்பார்கள். ஆனால் இன்று பெயருக்கு ஜமீன்தார் மட்டுமே இருக்கின்றார்.

“வழக்கம் போல ஜமீன்தார் லோகன்துரைதான் திருவிழா கமிட்டி தலைவர், பெருமாள் கணக்குவழக்கு பாத்துப்பாரு, மந்தைய கவுண்டர், குருணை வெள்ளை, ஆண்டவர் மூணு பேரும் நிதி வசூல்”

“எல்லா ஜாதிக்கட்டு வரியும் வந்திருச்சி”

“அம்பி ஐயங்கார் கிட்ட மறுபடியும் நினைவு படுத்துங்க, அவர் பாட்டுக்கு கொடியேத்தம் அன்னிக்கி கடைய திறந்து வச்சிட்டு உக்காந்துரப் போறாரு”

“கொடிக்கயிறு வாங்க வேண்டாமா”

“அதுக்குதான் நாளைக்கு மந்திரி வீட்டுக்கு போகனும்”

ஹாஜி கமால் ராவுத்தரின் வீடு. ஊருக்குள் மந்திரி வீடு என்ற பெயரே பரிச்சியம். நாயக்கர்கள் காலத்தில் ஜமீன்தார்கள் ஆட்சியிலிருந்த போது, இவர்கள் குடும்பத்தினர்தான் மந்திரியாக பணிபுரிந்து வந்தனர். அந்த மதிப்பு இன்றும் உண்டு.

லோகன்துரை, பெருமாள், மந்தைய கவுண்டர் அனைவரும் உள்ளே சென்றனர். “வாங்க வாங்க” என்று வரவேற்றார் கமால் ராவுத்தர். மூட்டிய வெள்ளை வேட்டி, கை வைத்த பனியனுடன் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார்.

“எழுந்து வந்து வரவேற்க முடியல, மன்னிக்கனும்”

“எப்படி இருக்கீங்க ராவுத்தரே” என்று கேட்டார் லோகன்துரை.

“இருக்கேன், அல்லா கருணையால நல்லா இருக்கேன். நடக்கத்தான் முடியல. பள்ளிக்கு கூட போக முடியல”

“வயசாச்சு இல்ல, எங்க அப்பாவ விட நீங்க ரெண்டு வயசு கம்மி, எனக்கே இப்ப அம்பதாகி போச்சு” என்றார் லோகன்துரை.

“நம்ம கோவில் திருவிழான்னு கேள்விப் பட்டேன்” என்றார் ராவுத்தர்

உள்ளேயிருந்து அவரது மகள் ஐரீன் கையில் மோர் குவளைகளுடன் வந்தார். அவர்கள் வழக்கப்படி தலையை சேலையால் மறைத்து கொண்டிருந்தார்.

“ஆமாங்க, அடுத்த வாரம் கோடியேத்தம், கொடிக்கயிறு வழக்கமா நம்ம வீட்லதான் வாங்கி தர்றது வழக்கம், அதோடு நீங்கதான வந்து குடில் கட்டைய தொட்டு தரணும், அதான் முறையா சொல்லிட்டு போலாம்னு வந்தோம்”

“ஆமா, கயிறு ஏற்கனவே தயாரா இருக்கு, அத எடுத்துட்டு வாம்மா”

“ஐரின் இங்கதான் இருக்கா” என்றார் லோகன்துரை

“மாப்பிள்ள மெளத்தானதுக்கு பின்னா இவ இங்கதான் இருக்கா”

ஐரின் உள்ளேயிருந்து ஒரு பெரிய தட்டில், புதுக்கயிறு, பெரிய துணி கொடி மரத்தில் சுற்ற, ஒரு நூறு ரூபாய் கட்டு என்று அனைத்தையும் கொண்டு வந்தார்.

“நீயே உன் கையால கொடம்மா” என்றார் ராவுத்தர்.

லோகன்துரை எழுந்து நின்று வாங்கிக் கொண்டு அதை பெருமாளிடம் தந்தார்.

“அப்ப வர்றோம், தேரோட்டம் அன்னிக்கி வழக்கம போல மேள தாளத்தோட வந்து அழைச்சிட்டு போறோம். இப்ப கிளம்பறோம்” என்றார் மந்தைய கவுண்டர்.

“என்னால எங்க நடக்க முடியும். ஜமால் ஜமாலத்தான் அனுப்பனும், ஆனா” என்று நிறுத்தினார்.

“அதுவும் சரிதான், அடுத்த தலைமுறைக்கு பட்டம் கட்ட வேண்டியதுதான” என்று கூறினார் பெருமாள்

வெளியே வந்த போது ஜமால் உள்ளே நுழைந்தான். முப்பது வயதிருக்கலாம். பைஜாமா ஜிப்பா தலையில் கருப்பு துருக்கி குல்லா, அவன் பின்னால் அவரது பர்தா அணிந்த மனைவி. எங்கோ வெளியில் சென்றுவிட்டு வருகின்றார்கள். அந்நியர்களை கண்டதும் அவன் மனைவி வேகமாக உள்ளே சென்று மறைந்தாள். அவனும் அவன் பையனும் வராண்டாவில் நின்று கொண்டிருந்தனர்.

“நல்ல வேளை தம்பியே வந்துட்டாரு” என்றார் குருணை வெள்ளை. குருணை வெள்ளை தன் ஜிப்பா பையிலிருந்த பொட்டணத்தை பிரித்து ஒரு கற்கண்டை எடுத்து அந்த குட்டி பையனிடம் தந்தார். அவன் தயக்கத்துடன் வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.

வராண்டாவில் நின்றபடியே அனைத்தையும் சொன்னார்கள்

“அத்தா ஏற்கனவே சொன்னாரு, ஆனா பாருங்க நான் எப்படி இந்து கோவிலுக்கு எல்லாம் வர முடியும் சொல்லுங்க. கட்சியில் வேற இருக்கேன். கட்சியில கேள்வி கேட்டா ஒன்னும் சொல்ல முடியாது”

“இல்ல தம்பி, நியாயமா உங்க தாத்தா தான் இத பண்ணனும், அவரால வர முடியல, உங்க அத்தாவும் இல்ல” என்றார் மந்தையக்கவுண்டர்.

“அதுக்கு நா என்ன பண்ண முடியும், என்னால வர முடியாது. ஊர் ஊரா போய் மத்தவங்கள பண்ணக்கூடாதுன்னு சொல்றத நானே செஞ்சா எப்படி ”

“தம்பி, நீங்க மந்திரி பரம்பரை, நான் ஜமீன் பரம்பரை, இப்ப அதுக்கு எந்த மதிப்பும் இல்ல. ஏதோ ஒரு காலத்துல நீங்க இஸ்லாம் பக்கம் போய்ட்டீங்க. இருந்தும் மந்திரிங்கற முறைல கோவில்ல உங்களுக்கான மரியாதை எப்பவும் உண்டு. ராஜா ஆட்சியை நடத்துறவர்ன்னு தேர் வடத்தையும், ஆட்சி அலைபாயாம பாத்துக்குற மந்திரிக்கு தேரை வழிநடத்துர குடில் கட்டையையும் எடுத்து தர அனுமதி தந்தாங்க மக்கள், அந்த பாக்கியம் இன்னமும் நமக்கு இருக்குன்னு பெருமை பட்டுக்கனும். இது கூட இன்னும் எத்தன வருஷமோ?” என்றார் லோகன்துரை.

“பத்து வருஷம் முன்னாடி நடந்த திருவிழாவுல கூட உங்க தாத்தா தான் குடில் கட்டைய தொட்டு கொடுத்தாரு. அப்ப உங்க அப்பா இருந்தாரு. அவருக்கு பட்டமும் கட்டினோம்.” என்றார் பெருமாள்.

“அது அப்பங்க, இப்ப காலமெல்லாம் மாறிப் போச்சு, இப்ப எங்களுக்கு எது தப்பு சரின்னு தெரிஞ்சி போச்சு. நீங்க போய்ட்டு வாங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்,

ஏதும் பதில் பேசாமல் நடந்தார்கள்.

அன்றிரவு கோவிலில் கமிட்டி கூட்டம். லோகன்துரையின் மகன் ஷ்யாமும் வந்திருந்தான்.

“என்னப்பா அந்தாள போய் ஏன் கூப்பிட்டீங்க. அவர கூப்பட வேண்டாம்னு நான் சொன்னேல்ல, நம்ம கோவில் திருவிழாவுக்கு அவங்க ஆளுங்க எதுக்கு. வெறும் மாலைய மட்டும் வாங்கிட்டு போகவா? பிராசாதம் வாங்கிப்பாங்களா, குங்குமம் வச்சுப்பாங்களா? துளசி வாங்கிப்பாங்களா?

“டேய், ராவுத்தர் அப்பா எல்லாம் வாங்கிட்டிருந்தவர்தான், நானே சின்ன பிள்ளைல பாத்திருக்கேன். ராவுத்தரும் அப்படி இருந்தவர்தான், பின்னாடி அவங்க ஆளுங்க கொஞ்சம் சங்கடப்படறாங்கன்னு ஜாடையா சொன்னாப்ல, அதனால நாமளும் அத மதிச்சி ஒன்னும் தர்றதில்ல ”

“பேசாம தேனி கலெக்ட்ர கூப்டு அவரை வைச்சு நடத்துவோம்”

பங்குனி மாசம் பத்தாம் தேதி. தேர் நன்றாக இலுப்பெண்ணை பூசப்பட்டு பளபளப்பாக இருந்தது. சக்கரங்களுக்கு அருகில் கட்டை போடுபவர்கள் தயாராக இருந்தனர். அவர்கள் இடுப்பில் கயிற்றை கட்டி அதை பிடித்தபடி அவர்கள் பின்னால் ஆட்கள் தயாராக இருந்தனர். கட்டை போடும் போது கொஞ்சம் கவனம் தவறினாலும் சக்கரம் மேலே ஏறிவிடும், அதனால் பின்னால் இருப்பவர்கள் படு உஷாராக இருக்க வேண்டும், பெரும்பாலும் மாமன் மச்சானாக இருப்பார்கள். குடில் கட்டையை மாவட்ட ஆட்சியர் எடுத்து தர கட்டை போடுபவர்களில் மூத்தவர் பெற்று கொண்டார்.

கோவில் நிர்வாக அதிகாரி கொடியசைக்க, லோகன்துரை முதலில் தேர் வடத்தை தொட்டு எடுத்தார். கொடியசைவு கண்டதும், தேர் தட்டிலிருந்த மேளக்காரர்கள் கெட்டி மேளம் கொட்ட, கொம்பு, சங்கு, சேகண்டி எல்லாம் முழங்க, மக்கள் அனைவரும் கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுக்க ஆரம்பித்தனர்.

தேரின் பின் சக்கரத்தின் அடியில் நெம்புகட்டையை போட்டு அதற்கான ஆட்கள் அதன் மீது ஏறி நின்று கையிலிருந்த மூங்கிலை தரையில் ஊன்றி கொண்டு மிதித்தனர்.

தேர் அசைந்தது. கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழும்பியது. தேர் குடங்குகள் க்ரீச் க்ரீச் சத்தம் எழுப்பியபடி பெரிதாக ஆடின. சின்ன சின்ன மரத்துணுக்குகள் சிதறியது.

இடத்தை விட்டு ஒரு அடி முன்னேறியிருக்கும். ஏதோ மரம் முறிவது போன்ற பெரிய சத்தம் கேட்டது, தேர் பயங்கரமாக குலுங்கியது. கட்டை போடுபவர்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் கட்டைகளை போட்டு தேரை நிறுத்தினார்கள். மேள சத்தம் மாறி முழங்க, வடமிழுப்பது நின்றது

உள் அச்சு முறிந்திருந்தது.

“இப்படி ஆகிப் போச்சேப்பா”

“இறங்கு பொழுதுல கொடியேத்துனா இப்படித்தான் நடக்கும்”

“அய்யருங்க சரியில்லப்பா”

உடனடியாக கோவிலில் இருந்த உபரி அச்சை எடுத்து வர ஆளனுப்பினார்கள். தச்சர்கள் அச்சை சரி செய்ய ஆரம்பித்தார்கள்.

“க்ரேனை வச்சி தேரை உசத்துறதுதான் ஒரே வழி”

“இல்ல பெரிய ஜாக்கி வச்சி தூக்கிடுவோம். ”

“அத்தாம் பெரிய கிரேனுக்கு ஜாக்கிக்கு எங்கிட்டு போக”

“திருச்சி பெல்லுல இருக்கும், அங்க என் மச்சான் இருக்கான் நான் பேசுறேன்”

இரவு ஒன்றும் நடக்கவில்லை.

அதிகாலை ஐந்து மணி, ஒரு கார் தேரடிக்கு வந்தது, தேருக்கு எவ்வளவு அருகில் வர முடியுமோ அந்தளவிற்கு வந்து நின்றது

ராவுத்தர், சுத்தமான வெள்ளை வேட்டி சட்டை, தலையில் சல்லடை குல்லா

காரில் எப்படி ஏறினாரோ தெரியவில்லை. பின் சீட்டில் மகள். அவரது வண்டிக்கு பின்னால் ஒரு ட்ராக்டர், கற்கள், மரக்கட்டைகள், மணல் மூட்டைகள், வேலையாட்கள்.

காரிலிருந்து கஷ்டப்பட்டு இறங்கி டிராக்டரிலிருந்து இறக்கப்பட்ட ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவர் வந்த விபரம் அறிந்த லோகன்துரை, பெருமாள், கவுண்டர் என்று அனைவரும் கூடிவிட்டனர்.

“நேத்தே விஷயம் தெரியும், நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பீங்கன்னு நினச்சேன், சரி ஒன்னும் முடியலன்னதும்தான் வந்தேன்.” என்றார் ராவுத்தர்

“ஏற்பாடு நடந்துட்டு இருக்கு, ஆனா நேரம்தான் அதிகமாகுது என்ன செய்ய” என்றார் லோகன்துரை.

“நான் சரி பண்ணி தர்றேன், பண்ணலாமா?”

“என்ன அனுமதி கேட்டுட்டு, நம்ம ஊர் தேரு, தாராளமா செய்யுங்க” என்றார் லோகன்துரை.

“வேற யாரும் வந்து என்ன தொந்தரவு செய்யக்கூடாது, யோசன சொல்லக் கூடாது. எல்லாரையும் வெளிய அனுப்புங்க” என்றார்.

“இவருக்கு என்ன தெரியும், நான் கட்சியில பேசி எம்.பி மூலமா ஜாக்கி, இஞ்ஞினியர் எல்லாரையும் வரவழைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன், இவரு என்ன” என்று குதிதான் ஷ்யாம். லோகன்துரை அவனை அடக்கிவிட்டு, “நீங்க பண்ணுங்க ராவுத்தரே, நான் ஏற்பாடு பண்றேன், ஈஓ கிட்டயும் நான் பேசிக்கிறேன்” என்றார்.

கூட்டம் விரட்டப்பட்டு, சுற்றி கயிறு கட்டி போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேரின் மீது ஒரே ஒரு குட்டி அர்ச்சகர் தவிர்த்து அனைவரும் இறக்கப்பட்டனர்.

முதலில் தேரின் இரண்டு அச்சுகளுக்கு அடியில் கற்கள் வேகமாக அடுக்கப்பட்டன, மணல் மூட்டைகளை பக்கவாட்டில் அடுக்கினர். அச்சிற்கும் கற்களுக்கும் இருந்த சின்ன சின்ன இடைவெளியில் பெரிய மர ஆப்புகளை அடித்து இறுக்கினார்கள். தேர் இப்போது கற்களின் மேல் நின்று கொண்டிருந்தது.

காலியாக இருந்த தேரடியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. வெயில் ஏறிக்கொண்டிருந்தது. அறநிலையத்துறை ஆட்கள் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். பெருமாள் சென்று காருக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.

”ராவுத்தரே ஏதாவது குடிக்கிறீங்களா?”

”வேண்டாம்யா, நோம்பு வச்சிருக்கேன். ”

”சரி, சரி, வருஷா வருஷா நாளுங்க மாறி மாறி வருதா, தெரியாம போச்சு.”

”அய்யா, சக்கரத்த கழட்ட வேண்டியதுதான் பாக்கி.”

உள் சக்கரங்களுக்கு அடியிலும், பக்கவாட்டில் ஒரு அரையடிக்கு பள்ளம் தோண்ட ஆணையிட்டார், தோண்ட தோண்ட மெதுவாக சக்கரம் விடுபட்டது. மெதுவாக கழட்டி பக்கவாட்டில் தோண்டிய பள்ளத்தில் இறக்கினார்கள். அங்கிருந்து நீளமாக ஓரு ஓடை போல பள்ளம் வெட்டி, சக்கரங்களை உருட்டி வெளியேற்றினார்கள். அச்சை மாட்டி, மீண்டும் அதே வழியில் சக்கரங்களை மாட்டினார்கள்.

தோண்டிய பள்ளத்தில் கற்களை கொட்டி இறுக்கினார்கள். சிமிண்ட் பாலையும் கரைத்து ஊற்றி, உள் சக்கரத்திற்கு அடியில் பெரிய பெரிய இரும்பு கம்பிகளை போட்டு, மேலே தட்டையான கட்டைகளை வைத்து இறுக்கி மண்ணின் நெகிழ்வில் சக்கரம் சிக்காமல், அதே சமயம் உருண்டு வெளியே வரவும் தோதாகச் செய்தார்கள்.
அங்கேயே இருந்து அனைத்தையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

மூன்று மணிக்கு தேர் தயாரானது,

கவுண்டரை அழைத்த ராவுத்தர், “வடக்கயிறு நீளத்த கொஞ்சம் கொறச்சிடுங்க, ரொம்ப பேரு இழுத்தா வேகம் அதிகமாகும், புது அச்சு வேற”

சற்று யோசித்த கவுண்டர், “வேண்டாம்யா, ஒவ்வொரு ஜாதிக்கும் வடக்கயிறுல பங்கிருக்கு, எங்க ஜாதிப் பங்க வெட்டிடாங்கன்னு கலாட்டா வரும், எதுக்கு. பாத்து சமாளிச்சிக்கலாம், கட்ட போடறவங்கள கொஞ்சம் பாத்துக்க சொல்றேன்”

“சரி, புது அச்சு. பாத்து சூதானமா நடத்துங்க”

“வந்தது வந்துட்டீங்க, நீங்களே இருந்து கட்டையை எடுத்து கொடுத்துடுங்க உங்க பையன் முடியாதுன்னு சொல்லிட்டாரு”

“தெரியும், என்னையும் போகக்கூடாதுன்னுதான் சொன்னான், அவனுங்களுக்கு இது புரியாது, விடுங்க”

அனைத்தும் மீண்டும் தயாரானது, அர்ச்சகர், மந்திரி ராவுத்தருக்கு பரிவட்டம் கட்டி மாலையிட்டார்.

கட்டையை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தனர், ராவுத்தர் தன் மகளிடம் “அம்மா அத தொட்டு எடுத்து அவங்க கிட்ட கொடு” என்றார்.

ஐரீன், அருகிலிருந்த பூக்களை எடுத்து அதன் மீது தூவிவிட்டு கட்டையை எடுத்து அருகிலிருந்த கட்டை போடுபவரிடம் தந்தார்.

கோவிந்தா கோஷத்துடன் தேர் புறப்பட்டது.

*******

ரெங்கசுப்ரமணி இணையத்தில் தொடர்ந்து  இலக்கிய விமரிசனங்களையும் புத்தகப் பார்வைகளையும் எழுதிவரும் தீவிர இலக்கிய வாசகர்.  அவரது வலைப்பதிவு கட்டுரைகளை இங்கே வாசிக்கலாம்.

மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்

மாதொருபாகன் நாவல் விவகாரத்தை முகாந்திரமாக வைத்து, இந்துத்துவ இயக்கங்களையும், திருச்செங்கோட்டு மக்களையும், கவுண்டர் சமுதாய மக்களையும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் பேசி தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் யார்?

தீராவிட தறுதலைகள், முற்போக்கு முகமூடி அணிந்துள்ள  மார்க்ஸிஸ்ட்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகள்.

இது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களது சதி வலையிலிருந்து மீண்டெழுந்து அவதூறு, பொய், ஆபாச பிரச்சாரங்களை முறியடிக்கும் மன வலிமையையும் , அறிவையும் மக்கள் பெற்று புதிய பாதையை அமைத்துள்ளனர். விஷமத்தனமான பிரச்சாரங்களையும், நச்சு சதி வலைகளையும் அறுத்தெறிய புதிய ஆயுதத்தை, திருநீலகண்டனாக ஆலகால விஷத்தை உண்ட அம்மை அப்பனே, அந்த ஈசனே திருச்செங்கோடு மக்களுக்கு வழங்கி இருக்கிறார்.

Tiruchengode_sivan_hill_temple

நாவல் எழுதி நஞ்சு விதைத்து ஊர் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வதைத்து குற்றவாளிகளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்து கூனி குறுகி இருக்க செய்தார்கள். இந்த அப்பாவி ஊர் மக்களின் கருத்தைக் கேட்க எந்த ஊடகத்திற்கும் காதுகளோ, கண்களோ, புலன்களோ ஒப்பவில்லை. முற்போக்கு மாஃபியா கும்பல்களும், தீராவிட விஷம கும்பலின் பிரச்சாரங்களும்,  அன்னிய மதங்களின் நச்சு பேச்சுகளும், நிதி ஆதாரங்களும், ஊடக பலங்களும் கிளப்பிய புழுதியில் உண்மை உலகிற்கு தெரியாமல் போய் விட்டது. ஆற்றாது அழுத மக்களின் கண்ணீரை ஆற்ற இறைவன் ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறான். அது தான் ” ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற முயற்சி.

பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். இந்த பிரச்சினையை எப்படி அணுகலாம் என்று கூடி பேசி, ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். பிரிவினைவாத, வகுப்புவாத, அடிப்படைவாத அமைப்புகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவதூறாகவும், ஆபாசமாகவும், கோவிலையும், கோவிலுக்கு வரும் பெண்களையும் அவமானப்படுத்தும் விதமாக எழுதப் பட்ட புனைவைக் கண்டு மனம் வெதும்பிய அந்த மக்கள், தங்களது எதிர்ப்புப் போராட்டில் ஒரு கட்டத்திலும் அகிம்சையைக் கைவிடவில்லை. இந்த தேசத்தின் பாரம்பரிய முறைப்படி உண்ணா நோன்பு இருந்தார்கள். காவல் துறையில் அரசியல் சாசன சட்டம் அனுமதிக்கும் படி சென்று புகார் அளித்தார்கள். இதற்கு ஒரு மறுப்பு செய்தி வெளியிடுங்கள் என்று கோரினார்கர். புனைவை உண்மையான வரலாறு என்று சொல்லி வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாம் என்றும், பொய்யை, புனை சுருட்டை உண்மை நிகழ்ந்த வரலாறு என்று புளுகுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும் கோரினார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கோரினார். தன் ஆபாச செய்கைக்காக தன் புத்தகத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்தார்.

ஆனால் இதை முன் வைத்து திருச்செங்கோட்டு இறைவனையும், கோவிலையும் கேவலப்படுத்தவும், தேர் திருவிழாவை தடுத்து நிறுத்தி சிதைக்கவும் அந்நிய கைக்கூலிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட சதி கும்பல்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த நிகழ்வை கருத்து சுதந்திரத்திற்கே ஏற்பட்ட கேடு என்றும், இந்திய அரசுக்கும் மக்களுக்கு இடப்பட்ட சவால் என்றும் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர். முற்போக்கு மாஃபியாக்களின் பிரச்சார பீரங்கிகள் திக்கெட்டும் முழங்கின. கருணாநிதி ஐயோ கொல்றாங்களே என்ற நாடகத்தை எப்படி அரங்கேற்றினாரோ, அதற்கு 100 மடங்கு மேலாக இந்த கும்பலின் ஆர்கெஸ்ட்ராக்களும், ஊடக விபச்சார நிறுவனங்களும் அவதூறுகளை அள்ளி அள்ளி அப்பாவி மக்கள் மீது வீசினார்கள்.

thiruchengode_arthanareeswarar_picமுற்போக்கு முகாம்களை சேர்ந்த இழிபிறவிகள், “திருவிழாவிற்கு போய் திருச்செங்கோட்டு பெண்கள் பல பேருடன் இருந்து குழந்தை பெற்ற வரலாறை நீங்கள் மறுக்க கூடாது” என்று கோஷம் போட்டார்கள். காலம் காலமாக கவுண்டர் சமூகத்தில் இப்படி திருவிழாவில், சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது என்று கூசாமல் சொன்னார்கள். அடிப்படை அற உணர்வு சிறிதும் அற்ற இந்த தறுதலைகள் தாங்களே விளக்கு பிடித்து பார்த்தது போல தங்கள் பிரச்சார ஊடகங்களில் தங்கள் சொந்த மண்ணின் மக்களை கேவலப்படுத்தினர். திருச்செங்கோட்டிற்குப் பிறந்தவனே என்று புதிய வசைகளை பரப்பி விட்டார்கள். வக்கிரம் பிடித்த மார்க்ஸிஸ்ட்கள், தீராவிட தறுதலைகளின் கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கான கற்பனை விழைவை திருச்செங்கோட்டு மக்கள் மீதும், தேர்திருவிழாவின் மீதும் ஏற்றி பிரச்சாரம் செய்தார்கள். சீன அடிவருடி மஞ்சள் பத்திரிக்கையான தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் எரிகிற வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பதாக அவதூறுகளையும், ஆபாசங்களையும், திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களையும் தொடர்ந்து பரப்பியது.  அந்த நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் இந்த கருத்து வேசைத்தனத்தை தன் லாப வெறிக்காக ஊதி பெரிதாக்கி குளிர் காய்ந்தது. டைம்ஸ் நவ், பிபிசி, நியு யார்க் டைம்ஸ் வரை இந்த கேடு கெட்ட கேவலத்தை விற்பனைப் பண்டமாக்கி, திருச்செங்கோட்டு மக்களை கேடு கெட்டவர்கள், காட்டு மிராண்டிகள் என்று கூசாமல் சித்தரித்தார்கள் ஊடக வியாபாரிகள்.

கருத்து சுதந்திரத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அயோக்கியர்களின் லட்சணங்களை பாருங்கள்.

மாற்றுக் கருத்து கொள்ள வாய்ப்பிருப்பவர்களை எல்லாம் கொலை செய்த ஸ்டாலின், லெனின், மாவோ, போல்பாட் வழி வந்த களவாணி கொலைகார மாவோயிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள் –  கருத்து சுதந்திரத்திற்காக உயிரை கொடுப்பார்களாம் !

பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் கார்ட்டூன் வரைந்ததற்காக 17 எழுத்தாளர்களை , பத்திரிக்கையாளர்களை கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் !

இனவெறி பிடித்த ஈவேரா என்று ஆதாரபூர்வமாக விமர்சனத்தை வைத்த்தற்காகவே வன்முறையில் இறங்கிய, தீராவிட கும்பல்கள், அழகிரிக்கு செல்வாக்கில்லை என்று சொன்னதற்காக 3 பத்திரிக்கையாளர்களை உயிரோடு எரித்த தீராவிட தறுதலைகள், கருத்து சுதந்திரம் பற்றி வெட்கமின்றி வகுப்பெடுக்கின்றன !

ஆனால் இத்தனை சதி வலைகளையும் அறுத்து வீசி, தங்களுக்குள் பகைமை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளின் சதியை நீர்த்து போகச்செய்யும் படியா ஒரு அமைதியான முயற்சியை துவங்கி இருக்கிறார்கள் திருச்செங்கோட்டு மக்கள். “ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற இயக்கத்தினைத் தொடங்கி இருக்கிறார்கள்.

thiruchengode_ardhanareeswarar“ஊர் கூடி தேர் இழுப்போம்” இயக்கம்

இந்த இயக்கத்தின் மூலமாக திருச்செங்கோட்டின் தேர் திருவிழாவின் 96 மண்டகப்படி அறக்கட்டளை உள்ள சமூகங்களையும் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவை உலகே திரும்பி பார்க்கும் ஒரு சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை விழாவாக நடத்தலாம் என்று ஊர் கூடி பேசி முடிவு எடுத்திருக்கிறார்கள். 96 மண்டகப்படி அறக்கட்டளை தாரர்களையும் தொடர்பு கொண்டு அவர்கள் சமுகத்திலிருந்து அனைவரையும், அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை வரவைப்பது, இழந்த பெருமையை மீட்டெடுப்பது, நம்மை காக்கும் அம்மைஅப்பனுக்கு நம் நன்றியை முறையாக செலுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு களம் இறங்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் தேர்த்திருவிழாவை சமூக ஒன்றினைவு நிகழ்வாக்கவும், ஒற்றுமையை மீட்டெடுக்கவும் தான் ஏற்படுத்தினார்கள். ஊர் கூடி தேர் இழுக்கும் பொழுது மகத்தான ஒரு நிகழ்வில் இணையும் மனிதப் புள்ளியாகவும், பல உயிர்கள் இணைந்த ஒரே உயிராகவும் திகழும் வண்ணம் ஏற்பாடும் செய்திருந்தார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு நடுவில் குந்தகம் ஏற்பட்டிருந்தது. அதை இனி துடைத்தெறிய, ஊரின் அனைத்து குடிகளும் தங்களால் இயன்றதை செய்து இந்த சமூகத்தை ஒன்றிணைத்து ஒற்றை சக்தியாக தங்களை மீள் கட்டமைத்து கொள்கிறார்கள். இந்த முறை அவர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு சரடாக திருச்செங்கோட்டு தேர் திருவிழா இருக்க போகிறது. மக்களின் உடல்களும், மனங்களும் ஒன்றாக சங்கமித்து இந்த பாரத வர்ஷமே திரும்பி பார்க்க வைக்கும் மகத்தான மானுட முயற்சியை செய்ய இருக்கிறார்கள்.

14 நாள் தேர் திருவிழாவிலும் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தின் பழமையையும் பெருமையும் அங்கீகரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த சக்தியாக உருமாற முடிவு செய்து முயற்சி செய்கிறார்கள். இந்த முறை 1 லட்சம் பத்திரிக்கைகள் அடித்து, பிருங்கி முனிவரின் பெயராலும், இந்த ஊருக்கு அருள் தரும் கண்ணகி அன்னையின் பெயராலும், மாதொருபாகனின் அருள் பெற அன்போடு அழைக்க போகிறார்கள். அத்தோடு திருவிழாவில் கொங்கு பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க இருக்கிறார்கள். இந்த மண்ணின் மாண்பையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அதன் அழகியலோடு  நவீன உலகிற்கு காட்ட இருக்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் பிறப்பு, சமூக ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார காரணிகள் அனைத்து புறத்தளைகளையும் உதறிவிட்டு அனைவரும் திருச்செங்கோட்டு ஈசனின் மக்களாக, செங்கோட்டையன் பாகத்தாளாக தங்களையே கண்டடைந்து ஒரு மகத்தான சரித்திரம் படைக்க இருக்கிறார்கள்.

thiruchengode-chariot

கொங்கு சமூகங்களின் பாரம்பரிய குல குருக்களையும் இந்த விழாவிற்கு வரவழைக்க இருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்து தங்கள் அனைவரையும் மாதொருபாகனின் அறச்செல்வர்களாகவும், அறசெல்விகளாகவும் உலகிற்கு அறிவுறுத்த இருக்கிறார்கள். இவ்வளவு திரளான அனைத்து சமூக மக்களும் தங்களுக்கிடையில் மீண்டும் நம் பழைய பாசத்தையும் நேசத்தையும் மீட்டெடுத்து ஒரு புதிய விளக்கை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் ஏற்றுகிறார்கள்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இந்த மகத்தான மானுட முயற்சி வெற்றி அடைய நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அனைவரும் நம் ஊர் தேர்திருவிழாக்களையும் விமர்சையாக கொண்டாடி நம் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தி நிலை பெறச்செய்வோம்.

மானுட உள்ளங்களின் ஒருங்கிணைவு என்பது வரலாறுகளை நிகழ்த்த செய்வது. சதிச்செயல்களாலும், அவதூறுகளாலும் திருச்செங்கோட்டு சகோதரிகளையும், தேர்திருவிழாவையும் அவதூறு செய்த முற்போக்கு, தீராவிட, கம்யூனிச, இஸ்லாமிய , கிறிஸ்த்தவ அமைப்புகளின் சதி மோசடிகளிலிருந்து அப்பாவி திருச்செங்கோட்டு மக்களை வரலாறு விடுதலை செய்யும். உண்மையை உலகம் உணர்ந்தே தீரும். உமையொருபாகன் இந்த கயவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க பிரார்த்திப்போம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

பொள்ளாச்சி: இஸ்லாமிய அராஜகத்தை எதிர்கொண்ட இந்துப் பெண்கள்

100 பக்தர்கள் பூவோடு ஏந்தி அலங்கரிப் பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஊர்வலமாக வந்தனர்.   ஊர்வலத்தில் வந்த பெண்கள்  சாமியான போடப் பட்டிருந்த வீட்டின்  உரிமையாளரிடம் பந்தலை அகற்றக் கோரினர். அவர் ஒரு முஸ்லிம்..   தொழுகையை முடித்து வெளியே வந்த  100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசினர்..  நள்ளிரவு 12 மணிக்கு  கோவை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்தார்..

pollachi-hindu-women-power