கைகொடுத்த காரிகையர்: திலகவதியார்

தமக்கையின் ஞானோபதேசம்
தமக்கையின் ஞானோபதேசம்

தேவார மூவர் என்று சிறப்பிக்கப் படுகிறவர்கள் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் என்ற மூவர். இவர்கள் தங்களுடைய தேவாரப் பாடல்களால்  சைவப் பயிரை வளர்த்தார்கள். சமண சமயம் வீறு கொண்டெழுந்தபோது அப்பரும் திருஞானசம்பந்தரும் தங்கள் அமுத வாக்கால் மக்களிடம் சைவ சமயத்தை எழுச்சி பெறச் செய்தார்கள். அதனால் தான்,

Tinidazole is indicated for the treatment of vaginal discharge. It works by killing bacteria, which are the bacteria that cause most infections https://12marathons.com/public/_ignition/health-check/ in humans. Is your ultimate tool to compare prices from all online stores, printable price lists,

Flagyl without script in his mind for a moment, then laughed loudly and moved around the table, patting its surface as he had taught her as he examined the other. If the immune system does not recognize this bacteria and remove it, then the klebsiella Hollister cytolog 200 price bacteria will invade other tissues. We encourage patients to consult a qualified health care professional with any health care questions.

Some people also develop low white blood cell count (anemia). Amoxil 500 price comparison – is Jetpur the generic drug worth the price? We provide the best online shopping experience for the customers and the best customer service.

“எப்படிப் பாடினாரோ? அடியார்

அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே.

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்

அருள் மணிவாசகரும் பொருள்தேடி உணர்ந்து”

-என்று இவர்கள் நால்வரையுமே சிறப்பிக்கிறார்கள்.

இவர்களில் முதலாவதாக வைத்துச் சிறப்பிக்கப் படுகிறவர் அப்பர் என்றழைக்கப் படும் திருநாவுக்கரசர். ஆனால் இந்தத் திரு நாவுக்கரசர் முதலில் சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிவிட்டார். அதிலிருந்து இவரை மீட்டெடுத்துச் சைவசமயத்திற்குக் கைகொடுத்தவர் இவருடைய தமக்கையான திலகவதியார் என்ற பெண்மணியாவார். தம்பிக்காகவே வாழ்ந்த இவரைப் பற்றிப் பார்ப்போம்.

திருமுனைப்பாடி நாடு, பெண்ணையாற்றால் வளம் பெற்றது. அந்நாட்டில் திருவாய்மூர் என்னும் ஊர் சீரும் சிறப்பும் பெற்றது. இந்த ஊரில் தான் நாவரசரும் அவரது சகோதரியான திலகவதியாரும் திரு அவதாரம் செய்தார்கள். அந்த ஊரிலுள்ள வயல்களில் வெட்டிய கரும்புகளிலிருந்து சொரிந்த கருப்பஞ்சாறு ஓடி வயல்களிலுள்ள மடைகளை உடைத்து விடுமாம். அப்படி உடைந்த மடைகளை அடைக்க அங்குள்ள உழவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அந்தக் கரும்புகளிலிருந்து காய்ச்சி எடுத்த வெல்லக் கட்டிகளாலேயே மடைகளிலுள்ள உடைப்பை அடைப்பார்களாம்.

இங்கு சேக்கிழார் இனி வரப்போகும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பால் உணர்த்துகிறார். வயலில் விளைந்த கரும்புகளிலிருந்து பெருகிய சாறு எப்படி அந்த மடைகளை உடைத்துக்கொண்டு பாய்கிறதோ அதேபோல சைவத்திலே பிறந்த நாவரசர் சைவத்தை உடைத்து விட்டு சமணம் செல்லப் போகிறார் என்பதை உணர்த்துகிறது. அதே கருப்பஞ்சாற்றிலிருந்து காய்ச்சி எடுக்கப்பட்ட வெல்லக் கட்டிகளாலேயே அந்த மடை அடைபடுவதை, நாவரசரின் சகோதரியாலேயே அவர் மறுபடியும் சைவ சமயத்திற்கு மாறப்போகிறார் என்பதை உணர்த்துகிறது. பாடலைப் பார்ப்போம்.

கடைஞர்மிடை வயற்குறைத்த கரும்பு

குறை பொழி கொழுஞ்சாறு

இடைதொடுத்த தேன்கிழிய

இழிந்தொழுகு நீத்தமுடன்

புடை பரந்து ஞிமிறொலிப்பப்

புதுப்புனல் போய் மடையுடைப்ப

உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப

-என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

சைவசமயத்தைப் பெருக்கி வளர்க்கும் திருவாய்மூரில் குறுக்கை வேளாளர் குடியில் புகழனார் என்பவர் தம் பெயருக்கேற்ப புகழோடு விளங்கி னார். இவருடைய மனைவியான மாதினியாரும் தம் பெயருக்கேற்ற இனிய குணங்களைக் கொண்டிருந்தார். இவர்களுக்கு திருமகளைப் போன்ற திலகவதியார் பிறந்தார்.

இவர் பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின் இந்த உலகின் இருள் நீங்கி ஒளியை விளங்கச் செய்யும் சூரியனைப் போல் மருள்நீக்கியார் அவதாரம் செய்தார்.

தக்க வயது வந்ததும் மருள் நீக்கியாருக்கு ஆயகலைகள் அறுபத்துநான்கையும் கற்க ஏற்பாடு செய்தார்கள். மருள் நீக்கியாரும் அவற்றில் ஆர்வமுடன் அவற்றில் ஆழ்ந்த அறிவு உண்டாகும் வண்ணம் அவற்றைப் பயின்றார்.

திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயதான சமயத்தில், அரசனிடம் தளபதியாக இருந்த கலிப்பகையார் என்பவர் திலகவதியைத் திருமணம் செய்ய விரும்பிப் பெண் கேட்டு சான்றோர்களை அனுப்பினார். புகழனாரும் தம் மகளை அவருக்கு மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் நாட்டில் போர்மேகம் சூழ்ந்ததால் மன்னன் கலிப்பகையாரை வடதிசைக்கு அனுப்பி வைத்தான். போர் முடிந்த பின் திருமணச் சடங்கை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தார்கள்.

Thilakavathi1போர் முடியுமுன்னரே நோய்வாய்ப் பட்ட புகழனார் இறைவனடி சேர்ந்தார்.  ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்பதை உணர்ந்த மாதினியாரும் தன் கணவரைப் பின் தொடர்ந்தாள். தந்தையும் தாயும் ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டுச் சென்றதால் தனித்து விடப்பட்ட திலகவதியும் மருள்நீக்கியாரும் உறவினர்களோடு தந்தை தாய் இருவருக்கும் செய்ய வேண்டிய ஈமக் கடன்களை முறைப்படி செய்தார்கள்.

ஒருவாறு அவர்கள் தேறி வரும் சமயம் இடிபோன்ற செய்தி வந்தது. திலகவதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட கலிப்பகையார் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் அடைந்தார் என்று செய்தி கொண்டு வந்தார்கள் உறவினர்கள்.

இதைக் கேட்ட திலகவதியாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவர் என்ன சொன்னார் தெரியுமா? “என் தந்தையும் தாயும் கலிப்பகையாருக்கு என்னை மணம் செய்து கொடுக்க இசைந்தார்கள். அவரே மணமகன் என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அந்த முறையால் நான் அவருக்கு உரியவள். அதனால் இந்த உயிரை அவரோடு சேர்ப்பேன்” என்று துணிந்தாள். இதைக்  கேட்ட மருள் நீக்கியார் அவர் மடிமேல் விழுந்து அழுதார்.

“அன்னையும் அத்தனும் சென்ற பின்னும் நீங்கள் துணை இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். நீங்களும் என்னைத் தனியே விட்டு விட்டால் உங்களுக்கு முன் நான் உயிர் துறப்பேன். இது நிச்சயம்” என்று அரற்றினார்.

இதைக் கேட்ட திலகவதியார், தம்பியின் முகத்தைத் துடைத்து ஆறுதல் கூறினாள். தம்பி உயிரோடு இருக்க வேண்டுமே என்ற கருணையினால் தம் உயிரைத் தாங்கிக் கொண்டு,  திருமணம் செய்து கொள்ளாமல் எவ்வுயிர்க்கும் அருள் புரிந்து தவம் மேற் கொண்டு வாழ்ந்து வந்தார்.

மருள் நீக்கியார் தம்முடைய மனச் சாந்திக்காக ஏழைகளுக்குப் பொருளுதவி செய்தும் தான தருமங்கள் செய்தும் தரும சாலைகள், தண்ணீர்ப் பந்தல்களும் அமைத்தார்.  சோலைகள், நந்தவனங்களையும் அமைத்தார். தம்முடைய திருமாளிகைக்கு வரும் அதிதிகளுக்கு விருந்தளித்தும் வந்தார்.

காலம் செல்லச் செல்ல, நிலைத்து நில்லாத இந்த உலகின் இய்ல்பை உணர்ந்த மருள் நீக்கியார், கொல்லாமையை வலியுறுத்தும் சமண சமயத்தில் சேர்ந்தார். பாடலிபுத்திரம் என்னும் இடத்திலுள்ள பள்ளியை அடைந்தார். அங்கிருந்த சமணர்கள் முக்தியைத் தெரிந்து கொள்ளும் வழி இதுதான் என்று கூறிப் பல நூல்களைக் கற்பித்தார்கள்.

மருள்நீக்கீயாரும் சமண சமயத்தில் உள்ள அருமையான கலைகளைக் கூறும் சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். இதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த சமணர்கள் மருள் நீக்கியாருக்கு ‘தருமசேனர்’ என்ற பெயரை வழங்கினார்கள். இயல்பாகவே அறிவாற்றலில் சிறந்த தரும சேனர் தம்முடைய வாதத் திறமையால் பௌத்தர்களை வென்றார். இதனால் சமணசமயத் தலைமைப் பதவியில் மேன்மையடைந்தார்.

இங்கே திலகவதியார் தன் தம்பியின் செயல்களைக் கேள்விப்பட்டார். உறவுகளை விட்டு நீங்கி சைவசமயமாகிய நல்வழியை அடைவதற்காக திருவதிகையில் கோயில் கொண்டிருக்கும் வீரட்டானேசுவரரைத் தரிசிப்பதற்காகச் சென்றார்

கெடில நதிக்கரையில் நடு நாட்டிலுள்ள எட்டு வீரட்டங்களில் ஒன்றான திருவதிகை வீரட்டானேச்வரரைத் தரிசித்து, சிவச் சின்னங்களான திருநீறு, உத்திராக்ஷம்,சடாபாரம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கோயில் பணிகள் செய்ய ஆரம்பித்தார்.

விடியுமுன் துயிலு ணர்ந்து வீரட்டானேச்வரர் கோயிலைப் பெருக்கி, மெழுகிக் கோலமிட்டு, மலர் கொய்து மாலைகள் கட்டி, இப்படியான திருத் தொண்டு செய்து வந்தார். ஆனாலும் தன் உடன் பிறந்த தம்பி மருள்நீக்கியார் சமணத்தில் சேர்ந்தது பற்றி மிக்க வருத்தமும் கவலையும் அடைந்தார்.

வீரட்டானேச்வரரிடம் தம் மனக்குறையையும் கவலையையும் தெரிவித்தார், “என்னை ஆண்டருளும் நீரானால் அடியேன் பின் வந்தவனை ஈண்டு,  பரசமயக் குழி நின்றும் எடுத்தருள வேண்டும்” என்று பல முறை தொழுது வேண்டினார். திலகவதியாரின் மனக்குறை யைக் கேட்ட பெருமான், சூலை நோய் தந்து மருள் நீக்கியாரைத் தடுத்தாட் கொள்ள நினைத்தான்.

thilakavathi2இறைவன் எண்ணப்படி மருள் நீக்கியாருக்குச் சூலை நோய் உண்டாயிற்று. கடுங்கனல் போல் சூலைநோய் மருள்நீக்கியார் வயிற்றைத் தாக்கியது.

அந்த நோய் ஆலகால நஞ்சும், வடவாமுகாக்கினியும், இந்திரனுடைய வஜ்ராயுதமும் கொடுமையான ஆயுதங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாற் போல் குடலில் உள்ளே குடைய ஆரம்பித்தது. மருள் நீக்கியார் துடித்தார்; துவண்டார்.

இதைக் கண்ட சமணர்கள் தங்களுடைய மந்திரங்களால் அந்நோயைக் குறைக்க முயற்சி செய்தார்கள்.ஆனால் சூலைநோய் குறையவில்லை; அதிகரித்தது. நோய் அதிகமாக ஆக, மருள் நீக்கியார் பாம்பின் விஷம் தலைக்கேறியவர் போல் மயங்கி வீழ்ந்தார். செய்வதறியாது திகைத்த சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவினார்கள். மந்திரம் ஏற்றிய நீரைக் குடிக்கச் செய்தார்கள். ஆனால் நோய் மேலும் மேலும் முற்றவே இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது விரக்தியடைந்து கைவிட்டார்கள்.

வேதனை பொறுக்க முடியாமல் மருள் நீக்கியார் தனக்கு சமையல் செய்யும் சமையற்காரரை  திலகவதியாரிடம் அனுப்பினார். அவர் சென்று உமது தம்பியிடமிருந்து வருகிறேன் என்று சொல்ல “ஏதேனும் தீங்கு வந்ததோ?” என்று அம்மாதரசி கேட்டாள்.  “ஆமாம் தங்கள் தம்பி கொடிய சூலை நோயால் பீடிக்கப்பட்டிருக்கி றார். எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். ‘நான் உய்யும் வழியை என் தமக்கையிடம் கேட்டு வா” என்று என்னை அனுப்பினார். என்றார் வந்தவர். “நான் அந்த அமணர்கள் இருக்கும் இடம் வர இயலாது” என்று அவரிடம் சொல்’ என்று திலகவதியார் சொல்ல வந்தவரும் சென்று அப்படியே சொன்னார்.

இதைக் கேட்ட மருள் நீக்கியார்,  “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்தப் பொலிவற்ற சமண சமயத்திலிருந்து, செம்மையான சைவ சமய வழியைச் சேர்ந்திருக்கும் என் தமக்கையாகிய திலகவதியாரை அடை வேன்” என்று தீர்மானம் செய்தார். அப்படியே

உடுத்துழலும் பாயொழிய

உறியுறு குண்டிகை ஒழியத்

தொடுத்த பீலியும் ஒழியப்

போவதற்குத் துணிந்தெழுந்தார்.

-வெண்மையான ஆடை உடுத்தார். யாரும் அறியா வண்னம் இருளில் திலகவதியார் வசிக்கும் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார். தமக்கை திலகவதியாரிடம் சென்று அடிமேலுற வணங்கினார்.

நந்தமது குலம்செய்த

நற்றவத்தின் பயன் அனையீர்

இந்த உடல்கொடு சூலைக்கு இடைந்து

அடைந்தேன் இனி மயங்காது

உயந்து கரை ஏறும் நெறி

உரைத்தருளும்

-என்று கதறினார். இறைவனுடைய கருணையை எண்ணி நெகிழ்ந்த திலகவதியார், காலில் விழுந்து கதறும் தம்பியை நோக்கி, “சான்றோர் ஏற்றுக் கொள்ளாத பரசமயக் குழியில் விழுந்து தாங்க முடியாத துயரத்தை அடைந்தீர். எழுந்திரும்” என்றார்.

எழுந்த தம்பியிடம், “நீர் இப்படி என்னிடம் வந்து சேர்ந்தது வீரட்டனேச்வரருடைய திருவருளால் என்பதை உணர வேண்டும். எனவே தம் கழலடைந்தோரைக் காக்கும் வீரட்டானேச்வரரைப் பணிந்து திருப்பணி செய்வீர்” என்று கட்டளையிட்டார் தமக்கையார். அவருடைய அறிவுரையை ஏற்று வணங்கிய தம்பிக்கு  ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரத்தை உச்சரித்து திருநீறு அளித்தார்.

அடியேனுக்குப் பெருவாழ்வு வந்ததென்று மருள்நீக்கியார் அகமகிழ்ந்து அவர் அளித்த திரு நீற்றைத் தம் மேனியில் பூசிக் கொண்டு தில்கவதியாரைப் பின்தொடர்ந்தார். திருப்பள்ளியெழுச்சி சமயம் வீரட்டானேச்வரர் கோயிலில் தொண்டு செய்வதற்காகத் திலகவதியார் துடைப்பம், மெழுகுவதற்காகச் சாணம், நீர் கொண்டு வரக் குடம் முதலியவற்றோடு கோயில் சென்றார்.

தமக்கையாரோடு கோயில் சென்ற மருள் நீக்கியார் தரையில் விழுந்து வீரட்டானேச்வரரை வணங்கினார். உணர்ச்சி மிகுந்து வர இறைவனுடைய பெருமைகளைப் பாட ஆரம்பித்தார். திரிபுரங்களையும் எரித்த வீரட்டானேச்வரரைத் துதித்து

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத் துறையம்மானே!

-என்று தொடங்கி பத்து பாடல்களால் துதித்தார்.

apparமருள்நீக்கியார் பாடப் பாட அவருடைய சூலைநோய் குறைந்து கொண்டே வந்து முற்றும் நீங்கியது நோய் நீங்கியதும் மருள் நீக்கியார்.

அங்கங்கள் அடங்க ரோமமெல்லாம்

அடையப் புளகங்கள் முகிழ்த்தலரப்

பொங்கும் புனல்கள் கண்பொழிந்திழியப்

புவிமீது விழுந்து புரண்டார்.

உன் கருணை வெள்ளத்தில் ஆழும் தகுதி எனக்குண்டோ? என்னைத் தடுத்தாட்கொள்ள வந்த இந்தச் சூலைநோய்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?” என்று ஈசனை வணங்கினார்.

அப்பொழுது ஓர் அசரீரி வாக்கு,  “பதிகத் தொடை பாடிய பான்மையால் நாவுக்கரசர் என்னும் நாமம் இன்று முதல் உனக்கு வழங்கப் பெறும்” என்று வானத்தில் ஒலித்தது. இது கேட்ட மக்கள் பலவித வாத்தியங்களை முழக்கினார்கள்.

இறைவனுடைய அருளைப் பெற்ற வாகீசராகிய திருநாவுக்கரசர் சைவச் சின்னங்களான விபூதி உத்திராக்ஷம், சடாபாரம் இவற்றோடு உழவாரப் படையையும் கைக்கொண்டார். இதைக் கண்ட திலகவதியார்,

எம்மைப் பணிகொள் கருணைத்திறம்

இங்கு யார் பெற்றனர்?

-என்று மகிழ்ந்து ஈசன் கருணையை எண்ணி வியந்தார்.

அதன் பின் நாவரசர் ஏராளமான தேவாரப் பாடல்களைப்பாடினார். ஒவ்வொரு தலமாகச் சென்று சைவ நெறியைப் பரப்பினார்.

நாவரசர் சிறுவனாகத் தாய் தந்தையரை இழந்து துயருற்ற போதும் திலகவதியார் உற்ற துணை யாக இருந்து கைகொடுத்து உதவினார்.

சைவத்திலிருந்து தம்பி நெறி பிறழ்ந்து சமணம் சார்ந்த போதும் இறைவனிடம் வேண்டி அவருக்குச் சூலைநோய் வரச் செய்து மருள் நீக்கி யாரை மீண்டும்  சைவநெறியில் புகச் செய்தார்.

தம்பிக்கு மட்டுமல்ல,  சைவநெறி மங்கி சமணம் மீண்டும் தழைத்து விடுமோ என்று குழப்பமாக இருந்த காலகட்டத்தில் சைவ நெறிக்கும் கைகொடுத்தவராக விளங்குகிறார் திலகவதியார்.