மோடி – மகத்தான மன்னன்! முன்னேறும் முதல்வன்!

உலக அளவில் வேகமாக முன்னேறும் மிகவும் சக்தி வாய்ந்த நகரங்களுள் ஒன்றாக, இந்தியாவில் முதலாவதாக, அகமதாபாத் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளது ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை.

You are probably wondering where exactly it went wrong, but the answer is simple. To be the kind of person who never makes Warburton anyone feel bad about themselves. The order will be delivered directly to the pharmacy, or to a nearby pharmacy or hospital for pick up, at the time of your order.

These products are manufactured by us and sold to the customers through our website, baclofen-for-sale-in-india.org. I'm a college student and i have https://zubype.cz/cenik/ chronic back pain. I was doing well with my diabetes and i tried to control it, but it wasn't working out.

I was prescribed propecia 10 mg in the morning with breakfast and then it was taken 30 minutes later. If you http://mtviewprop.com/homes-for-sale-sold-details/33000-CRYSTAL-MOUNTAIN-BOULEVARD-E-215-GREENWATER-WA-98022/1672184/26/ have clomid online pharmacy questions, e-mail them to our support staff, or to your doctor. Drugs are often made to treat certain diseases, but sometimes they also have the potential to treat or prevent the disease.

narndra-modi-campaigns

text1

உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம், விவசாயம், தொழில்துறை, மகளிர் மேம்பாடு, சமூகநலம், சாலை வசதி, அனைத்திற்கும் தேவையான கட்டுமானங்கள் என்று எல்லா துறைகளிலும் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
 
கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்துவரும் பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது ஒன்றையே கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் உள்ள கல்வி, சுகாதார மற்றும் தொழில் வல்லுனர்கள் அனைவரும் அவரின் ஊழலற்ற சிறப்பான ஆட்சிமுறையைப் பெரிதும் பாராட்டுகின்றனர்.
 
இத்தனைக்கும் மற்ற மாநிலங்கள் போல் வருமானத்திற்காக, மக்களின் ஆரோக்கியத்தையும் ஏழைக் குடும்பங்களின் குடியையும் கெடுக்கும் மதுபான வியாபாரத்தை மேற்கொள்ளாமல், பூரண மதுவிலக்கு அமலில் இருக்கின்றபோதும் திறமையாக ஆட்சிபுரிந்து நிதிநிலையை அதிக இருப்புடன் வைத்துள்ளார் மோடி.

ஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூக சங்கதிகளுக்கான துறை (Economic & Social Affairs), ஒளிவு மறைவு அற்ற, பொறுப்புமிக்க நிர்வாகமும் பொதுமக்கள் சேவையும் (Better Management; Better Public Service- Improving Transparency, Accountability and Responsiveness in the Public Service Category) தந்ததற்காக உலக அளவில் இரண்டாம் பரிசைத் தந்து, மோடி அரசைப் பெருமைப்படுத்தியுள்ளது. இது இரண்டாவது முறை. முதல் முறை சென்ற ஆண்டும் ஐ.நா. பரிசு பெற்றது குஜராத் அரசு. அந்த நற்சான்றிதழைத் தன்னுடைய அலுவலகத்தில்- தன் அறையில்- மாட்டி வைத்துவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாகத் தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் மோடி.

un-award-for-modi

 

இந்தியா டுடே பத்திரிகை நாடு முழுவதும் எடுத்த கருத்துக் கணிப்பின்படி, சிறந்த முதல்வர் விருதை மூன்றுமுறை வென்றுள்ளார் மோடி.
 
மத்திய அரசு, தனியார் ஆராய்ச்சி மையங்கள், வெளிநாட்டு அமைப்புகள், பத்திரிகைகள் என ஒட்டு மொத்தமாக மோடி 90 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். அனைத்து விருதுகளும் அவரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்காகவும் மாநிலத்தின் அனைத்துத் துறை முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கப்பட்ட விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது. (Ref:http://gujaratindia.com/state-profile/awards.htm )

இவற்றின் எதிரொலியாகத்தானோ என்னவோ சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளிலும் மற்றும் நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், தாலுக்கா பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸை இருக்கின்ற இடம் தெரியாமல் செய்து விட்டனர் குஜராத் மக்கள்.
 
குஜராத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிகளில் மோடியின் பிரம்மாண்ட வெற்றி எதிர்க்கட்சியான காங்கிரஸை ஒட்டு மொத்தமாக ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளையும் 53 நகராட்சிகளில் 42 நகராட்சிகளையும் 24 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 21-ஐயும், 208 தாலுக்கா பஞ்சாயத்துகளில் 155-ஐயும் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இந்தத் தேர்தலில் பா.ஜ.கட்சிக்கு 80 சதவீத வெற்றியும் காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவீத வெற்றியும் மற்ற கட்சிகளுக்கு 2 சதவீத வெற்றியும் கிடைத்துள்ளன.

success
 text2

ஆம். அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பவநகர், ஜாம்நகர் ஆகிய ஆறு நகராட்சிகளையும் பெரிய அளவு வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது பா.ஜ.கட்சி. கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல்கள் மேலும் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

table1
 
இந்த வெற்றி மோடியின் சிறந்த நிர்வாகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

மோடியின் நல்லாட்சிக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

 • பத்து வருடத்திற்கு முன்னால் 6700 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இருந்த குஜராத்தின் நிதிநிலைமை, தற்போது 500 கோடி ரூபாய் அதிக இருப்புடன் இருக்கிறது.
 • அரசின் அனைத்துத் துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, ஊழலற்ற சிறப்பான பணிபுரிதலால், எல்லாத் துறைகளிலும், தேசிய சராசரியை விட பல மடங்கு அதிகமான வளர்ச்சி காட்டி சாதனை செய்து வருகிறது மோடி அரசு.
 • மற்ற மாநில அரசுகள் “நலத்திட்டம்” என்ற பெயரில் இலவசங்களை அள்ளி வீசும்போது, எதையுமே இலவசமாகக் கொடுக்காமல் ஏழை மக்களுக்குத் தேவையான பொருள்களை, தரமான நிலையில் நியாயமான விலையில் தடங்கல் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்குமாறு செய்கிறது மோடியின் அரசு.
 • குஜராத்தில் 185 சிற்றாறுகளும் 8 அழியாத ஆறுகளும் உள்ளன. இவற்றை இணைத்ததன் மூலம் நிலத்தடி நீர் பெருமளவில் அதிகரித்துள்ளது. மோடி தலைமையேற்று கடந்த 10 ஆண்டுகளில் விவசாயப் பொருளாதார வளர்ச்சி 9% ஆக (தேசிய சராசரி 2% தான்) உயர்ந்துள்ளது.
 • பத்து வருடங்களுக்கு முன்னால் 2500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்த குஜராத் மின்சார வாரியம் தற்போது 500 கோடி ரூபாய் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மின்சாரக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
 • “ஜோதிக்ராம் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள 18000 கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் 3 பகுதி (3 Phase) மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை அமல்படுத்தச் சொல்லி இந்திய அரசு மற்ற மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்திருக்கிறது.
 • மேலும், பெரும்பான்மையான மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதாகச் சொல்லிக்கொண்டு, பல நேரங்களில் மின்தடை மூலம் விவசாய உற்பத்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும்போது, மோடி அரசு 24 மணிநேரம் மின்சாரமும் பாசனத்திற்குத் தங்குதடையின்றி நீரும் கொடுத்து, மின்கட்டணம் கட்டாத விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கிறது. 24 மணிநேரமும் மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கப் பெற்று உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளும் விவசாயிகள் சந்தோஷமாக, கட்டணங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிச் செல்கின்றனர்.
 • பொதுமக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தேங்கியுள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், 810 புதிய நீதிமன்றங்கள் (700 தற்காலிக நீதிமன்றங்களையும் சேர்த்து) அமைத்துள்ளார். ஒவ்வொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு ஒரே வருடத்தில் தீர்க்கப்படவேண்டும் என்கிற கட்டாயமும் பின்பற்றப்படுகிறது. மாலை நேர நீதிமன்றங்களும் நடத்தி, வழக்குகளை விரைவாக முடிக்கிறது குஜராத் அரசு. உச்ச நீதிமன்றம் மாலை நேர கோர்ட்டுகளை நடத்தச்சொல்லி மற்ற மாநிலங்களுக்கும் பரிந்துரை செய்திருக்கிறது.
 • அரசு, தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாலும் தொழிலாளர்களுடன் நல்ல உறவு முறை பராமரிப்பதாலும் வேலைநிறுத்தங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒரு வேலைநாள் கூட வீணாகாமல் மாநிலம் நடக்கிறது.
 • ”சிரஞ்சீவி” திட்டத்தின் மூலம் சிசுக்கொலைகள் முழுவதுமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும், உலக வங்கியும் ஆராய்ந்து வருகின்றன.
 • குழந்தைகள் ஆரம்பக் கல்வி பெற அனைத்துக் கிராமங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளும் நாள் தவறாமல் வகுப்புகளுக்கு ஆஜராவதற்கான அனைத்து வழிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. குழந்தைகளுக்கு சீரான சுகாதாரம், சிறப்பான கல்வி ஆகியவை கிடைக்க புதிய வழிமுறையைக் (ஒவ்வொரு குழந்தையையும் கண்காணிக்கும் விதமாக- Child Tracking System) கையாள்கிறது அரசாங்கம்.
 • மகளிர் கல்வியில் 100% பெண் குழந்தைகள் பள்ளியில் படிக்கின்றன. ஆரம்பக் கல்வி முடித்தவுடன் மாணவர்கள் படிப்பை நிறுத்துவது (Drop-out rate) 40%-லிருந்து 2%-மாக குறைந்துள்ளது.
 • கடந்த 10 ஆண்டுகளில் 14 பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டுள்ளன. தொழிற் கல்விக்கான இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. கப்பல் பொறியியல் (Marine Engineering), தடயவியல் விஞ்ஞானம் (Forensic Science) போன்றவற்றிற்கான பிரத்தியேகக் கல்வி நிறுவனங்களும், மிகவும் புதிய திட்டமாக “பாதுகாப்பு-சக்தி” (Raksha Shakti) பல்கலைக் கழகம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளன. தேசப்பாதுகாப்புக்கென்றே பாடத்திட்டம் அமைத்து அதற்கு ஒரு பல்கலையும் துவங்கியள்ளது மோடி அரசின் ஒப்பற்ற சாதனை. அதே போல் குழந்தைகளுக்கென்று ஒரு பிரத்தியேகமன பல்கலையும திட்டமிடப் படுகின்றது.
 • இவ்வளவு நலத்திட்டங்கள் மட்டுமில்லை; வருவாய்க்காக மற்ற மாநிலங்களில் ஆறென ஓடும் குடும்பங்களைக் குலைக்கும் மதுபானம் அறவே இல்லை. மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமலே இத்தனை நலத்திட்டங்களும் செயல்படுத்தியுள்ளார் மோடி.
 • நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டுமே உள்ள குஜராத் மாநிலம், தொழில்துறையில் 16% உற்பத்தியும், 16% முதலீடும், 15% ஏற்றுமதியும், 30% சந்தை ஆக்கிரமிப்பும் செய்கிறது.
 • ஊழலற்ற திறமையான அரசாட்சி நடப்பதால், தொழிலதிபர்கள் பலரும் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் கட்டுமானங்களையும் வேகமாகவும் சிறப்பாகவும் செய்து கொடுப்பதால், அவர்கள் மோடியின் குஜராத் மாநிலத்தில் விரும்பி முதலீடு செய்கின்றனர். டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை துவங்குவதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் இரண்டே நாள்களில் குஜராத் அரசு முடித்து கொடுத்ததே ஒரு சிறந்த உதாரணம்.

 
shala-praveshotsav-launched-by-honble-cm-02

 

குஜராத் மக்கள் ஜாதி மத வித்தியாசமின்றி மோடியின் பின்னால் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் அளித்த வாக்குகளின் விவரங்களே சான்று.

 

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – வாக்கு விவரங்கள்

vote-details

 

சர்தார் சரோவர் நர்மதா நிகம் திட்டம்

sardarsarovardam

 • மத்தியப்பிரதேசத்தில் தொடங்கி 1312 கிலோமீட்டர் கடந்து குஜராத்தில் வந்து சேரும் நர்மதை நதி இந்தியாவின் நான்காவது பெரிய நதியாகும்.
 • இந் நதிநீரை முறையாகப் பயன்படுத்துவதற்காக ஒரு மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்திற்கு 1961-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.
 • 70,000 கோடி ரூபாய்கள் கணக்கிடப்பட்டுள்ள இத்திட்டம் 2012-ல் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுவிடும்.
 • இத்திட்டத்தினால் மூன்றில் இரண்டு பங்கு மத்தியப் பிரதேசமும் ஒரு பங்கு குஜராத்தும் பயனடையும்.
 • இத்திட்டத்தில் 30 பெரிய அணைகளும் 135 சராசரி அணைகளும் கட்டப்படுகின்றன. முக்கியமான பெரிய அணை 121.9 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இது உலகத்திலேயே பெரிய கான்கிரீட் அணையாக 8 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.
 • இந்த அணையின் தண்ணீர் மின்உற்பத்திக்கும் வேளாண்மைக்கும் குடிநீர் வசதிக்கும் பயன்படுத்தப்படும். 1450 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 57% மத்தியப் பிரதேசத்திற்கும் 27% மஹாராஷ்டிராவிற்கும் 16% குஜராத்திற்கும் வழங்கப்படும். 9633 கிராமங்களுக்கும் 131 டவுன் பஞ்சாயத்துக்களுக்கும் முழுநேரமும் குடிநீர் கிடைக்கும். ராஜஸ்தானிலுள்ள 75000 ஹெக்டேர் நிலம் உட்பட 1.845 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்குப் நீர்பாசனம் கிடைக்கும்.
 • இத்திட்டத்தினால் 8.7 மெட்ரிக் டன் விவசாய உற்பத்தி செய்யமுடியும்.
 • 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மார்ச் 4, 1998-ல் பா.ஜ.க. குஜராத்தில் ஆட்சியமைத்தது. 2001-ல் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் சரியாக நடத்தப்படவில்லை என்கிற காரணத்தால் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளான கேஷுபாய் படேல், அக்டோபர் 6, 2001-ல் பதவி விலகினார். பின்னர் நரேந்திர மோடி முதல்வர் பொறுப்பேற்றார். பூகம்ப நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு மக்களின் நம்பிக்கையையும் பாராட்டையும் பெற்றார்.

narendra-modi-227 பிப்ரவரி 2002 அன்று கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளான 59 ஹிந்துக்கள் (பெண்கள், குழந்தைகள் உட்பட) பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 ஹிந்துக்களும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினரும் போலி மதச்சார்பின்மைவாதிகளும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களும் குஜராத்தில் 3000-க்கும் அதிகமான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி கடுமையான பொய்ப்பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் பா.ஜ.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க, நரேந்திர மோடி இரண்டாவதுமுறை முதல்வரானார்.
 
அதிலிருந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை மட்டுமே கடமையாகக் கொண்டு கடுமையாக உழைத்த மோடியை எப்படியாவது பதவிலிருந்து இறக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் முயற்சி மேற்கொண்டனர். அவரைக் கொலைகாரராகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவராகவும் சித்தரித்தனர்.
 
2005-ல் நடந்த போலிஸ் என்கௌண்டரில் சொராப்புத்தின் என்கிற பயங்கரவாதி கொல்லப்பட்ட சம்பவத்தையும் மோடிக்கு எதிராகப் பயன்படுத்தினர். 2007 சட்டசபைத் தேர்தலில் மோடியை “மரண வியாபாரி” என்று சொல்லி பிரசாரம் மேற்கொண்டனர் காங்கிரஸ் தலைவி சோனியாவும் அவர் மகன் ராகுலும். ஆயினும் குஜராத் மக்கள் மோடியின் ஊழலற்ற சிறந்த ஆட்சிக்கு ஆதரவளித்தனர். பா.ஜ.க 117 இடங்களில் அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றார்.
 
2009 பொதுத் தேர்தலில் மீண்டும் மத்திய அரசைக் கைப்பற்றிய காங்கிரஸ், நரேந்திர மோடி அரசுக்கு நெருக்கடியாக அரசியல் களத்தில் சில காய்களை நகர்த்தும் விதத்தில், தன் கைப்பாவை சி.பி.ஐ மூலம் சொராப்புத்தின் என்கௌண்டர் வழக்கை உபயோகப்படுத்தி வருகிறது. அவ்வழக்கில் மோடி அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அமித் ஷாவைக் கைது செய்தது சி.பி.ஐ. மூன்று மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் இறுதியில்தான் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மத்திய காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.-யைத் தவறாகப் பயன்படுத்துவதாக பா.ஜ.க. கடுமையான பிரசாரம் மேற்கொண்டது. மேலும் காமன்வெல்த் போட்டிகளில் நடந்துள்ள ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழலை வெளியில் சொல்லியும் மோடி பிரசாரம் மேற்கொண்டார். குஜராத் மாநில முன்னேற்றங்களைப் பட்டியலிட்டும் மத்திய அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியை விமரிசனம் செய்தும் மோடி மேற்கொண்ட பிரசாரத்திற்கு வரவேற்பு இருந்தது கண்கூடாகத் தெரிந்தது.
 
ஆனால் தங்கள் தலைமையில் மத்திய அரசின் ஆட்சி இருந்தபோதும், வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சாதனைகள் எதுவும் இல்லாததாலும் மோடியின் அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சொல்ல முடியாததாலும் காங்கிரஸ் கட்சியினரின் பிரசாரம் சுரத்தில்லாமல் இருந்தது. மக்களும் கங்கிரஸ் கட்சியினரை ஒதுக்கித் தள்ளியுள்ளனர்.
 
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க பெற்ற வாக்குகளில் 30 சதவிகிதம் முஸ்லிம் சமுதாயத்தினர் அளித்தவை என்று மோடி கூறியிருக்கிறார். ராஜ்கோட் நகராட்சியின் 18-வது வார்டில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாமா என்கிற முஸ்லிம் பெண்மணி, “முஸ்லிம் சமுதாயத்தினர் மாநிலத்தின் முன்னேற்றத்தையே விரும்புகின்றனர். முதல்வர் மோடி பல முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவதால், குஜராத் முஸ்லிம்கள் பா.ஜ.க நோக்கி வரத்தொடங்கிவிட்டனர். எனக்கு என் சமுதாயத்தினர் 40%-க்கும் மேல் வாக்களித்துள்ளனர்” என்று உறுதியாகக் கூறுகிறார்.

 • வழவழப்பான சாலைகள்
 • 24 மணிநேர மின்சாரம்
 • 24 மணிநேர தண்ணீர்
 • பூரண மதுவிலக்கு அமல்
 • லஞ்சம் என்பதே இல்லை
 • அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி
 • அனைவருக்கும் சுகாதார வசதிகள்

 

navrathri-garba

ஐந்து கோடி குஜராத் மக்கள், ஜாதி மத பேதமின்றி போலிப் பிரசாரங்களை ஒதுக்கி தங்கள் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் வைத்து வாக்களித்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.
 
மோடி பெற்றுள்ள அமோக வெற்றி, காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் ஆகியவற்றுக்கு விழுந்துள்ள மறுக்கமுடியாத, மறக்கமுடியாத அடி என்பதில் சந்தேகமில்லை.

ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும்!

மூலம்: பிரான்ஸ்வா கொத்தியே (François Gautier)
தமிழில்: ல. ரோகிணி

sri-sri-ravi-shankar

லட்சக்கணக்கானோர் அவரை பூஜிக்கின்றனர். பயங்கரவாதிகள் அவருடைய காலடியில் தங்களுடைய ஆயுதங்களைக் கீழே போட்டுள்ளனர். அவர் ஒரே ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசி யாருமே, எப்போதுமே பார்த்ததில்லை. உண்மையும், அன்பும் அவருடைய வாழ்க்கையின் மாறாத லட்சியங்களாக இருந்து வருகின்றன. இருந்தும் 30-05-2010 ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பிறகு, பெரும்பாலான ஊடகங்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இழிவுபடுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அவர் பொய் சொல்வது போல் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. உண்மை என்னவென்றால் இன்றுள்ள சூழ்நிலையில் ஹிந்து குருமார்கள், ஆச்சார்யார்களுக்கு எதிராக புழுதிவாரி துற்றிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடந்து கொண்டுள்ளது.

காஞ்சி சங்கராச்சாரியாருடன் அது தொடங்கியது. இன்று ஊடகங்களும் அரசும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை அவருடைய சீடர்களின் கண்ணோட்டத்திலும், பொதுவாக இந்தியர்கள் மத்தியிலும் இழிவுபடுத்த முயற்சிக்கின்றனர். அடுத்தது யரோ?

இன்றைய காலகட்டத்தில் ஹிந்துக்கள் மீது இந்த அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏன் என்பதை ஆராய வேண்டும். முதலாவதாக ‘கர்மா’ வைத்தான் சொல்லவேண்டும். ஹிந்துக்கள் பலமுறை ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துள்ளனர். அவர்கள் அசிரத்தை கொண்டவர்களாக, விழிப்பற்றவர்களாக, சில சமயங்களில் அகந்தை கொண்டவர்களாக ஆகிவிட்டனர். இரண்டாவதாக இன்று பல கூட்டுச் சக்திகள் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹிந்து தர்மத்தைத் தாக்கி வருகின்றன.

முதலாவதாக இந்த நாட்டின் ‘இயக்கு சக்தியாக’ இன்றியமையாத தலைவராக உள்ள நபர் ஒரு கிறிஸ்தவர்! (சோனியா என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை) கிறிஸ்துவ ஆதிக்கம் உள்ள எந்த ஒரு நாட்டிலும், உதாரணமாக ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் ‘ஒரு ஹிந்து’ இவ்வாறு திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கமுடியுமா?

இரண்டாவதாக, இந்தியாவின் இன்றைய தலைவர்களில் பலர் மார்க்சிஸ்ட் மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். மதம் காலாவதியான ஒன்று. இறுதியில் அதைக் கைகழுவிவிடவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். (ஆனால் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும். அவர்கள் கிறிஸ்தவ மதத்தையோ, இஸ்லாமையோ தொடமாட்டார்கள்). இதன் காரணமாகத்தான் ‘யோக நாடான பாரதத்தில்’ ஆன்மிக மற்றும் யோக ஸ்தாபனங்களைத் தாக்குகிறார்கள்.

மூன்றாவதாக, இப்போது கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றங்கள் செய்வது, முன் எப்போதையும் விட மிக அதிகமாக நடக்கிறது. இத்தகைய மதமாற்றங்கள் இப்போது நடைபெறும் வீச்சு போல், என்றுமே இருந்ததில்லை. பிரிட்டிஷார் காலத்தில் கூட, கிறிஸ்தவ மதத்திற்கு, இந்த அளவுக்கு மதமாற்றங்கள் நிகழவில்லை. மூன்று சதவீத இந்தியர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், ‘புது சென்ஸஸ்’ விஷயங்களைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். சுனாமி வந்த பிறகு தமிழகக் கடற்கரைப் பகுதியில் 12% இந்தியர்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக ஏமாந்த, விவரம் தெரியாத, மேற்கத்திய மக்கள் கொடுத்த லட்சக்கணக்கான டாலர்களின் துணையோடு, இந்த மதமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இந்திய முஸ்லிம்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது ஒரு தீவிரவகை இஸ்லாமை இந்தியாவுக்குத் தங்களுடன் கொண்டு வந்துள்ளனர். ஹிந்து விரோத வன்முறை, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற இந்தச் சூழ்நிலை உதவியாக உள்ளது. இந்தியாவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களின் உதவியும் ஆதரவும் இல்லாமல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் செயல்படவே இயலாது.

இறுதியாக, தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ‘மேற்கத்திய மயமாதல்’ இந்தியாவில் புயலடிக்கும் வேகத்தில் பரவிக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய அபாயமாக இருக்கக்கூடும். ஏனென்றால் பல ஆசிய நாடுகளின் ஆத்மாக்களை மேற்கத்திய தாக்கம் கொன்றுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு போப் உள்ளார். முஸ்லிம்களுக்கு குரானின் கட்டளை உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்சின் ‘தாஸ் கேபிடல்’ புத்தகம் உள்ளது. ஆனால், ஹிந்துக்கள் முற்றிலுமாக பிளவுபட்டுக்கிடக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்துக் குவிக்க முடியுமோ அதில் ஹிந்துக்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மேற்கத்திய வாழ்க்கை முறையைக் காப்பியடித்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கு ஹிந்து கலாசாரம், ஹிந்து நெறிமுறைகளையும் ஹிந்துக்கள் சொல்லித் தருவதில்லை. மாறாக ஒவ்வொரு முஸ்லிம் குழந்தைக்கும் ‘குரான்’ கற்பிக்கப்படுகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ உள்ள ஹிந்துக் குழுக்கள், இடைவிடாது, தங்களுக்குள் சண்டை இட்டுக்கொண்டு உள்ளன. இதன் விளைவாக ‘பேரம் பேசும் சக்தி’ அவர்களிடம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்திய முஸ்லிம்கள் அல்லது இந்திய கிறிஸ்தவர்களிடம் இதற்கு நேர்மாறான நிலை உள்ளது. நரேந்திர மோடி போன்ற ஒரு மாநில முதல்-அமைச்சருக்கே ‘விசா‘ கிடைக்காமல் செய்ய இந்திய கிறிஸ்தவர்களால் முடிகிறது. இத்தனைக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு அதிகமான திறமையோடு, ஊழல் இன்றி செயல்பட்டு வருகிறது.

hindu-gurus-and-saints

எனவே, ஹிந்து குருமார்களும் சுவாமிகளும் ஆச்சார்யர்களும் ஒரு குடையின்கீழ் அணிதிரள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த அமைப்பை, ‘தலைமை ஹிந்து கவுன்சில்’ என்று அழைக்கலாம். ஒவ்வொரு ஹிந்துக் குழுவும், குருவும், தங்களுடைய தலைமையை, சுயேச்சைத் தன்மையைத் தொடரலாம். ஆனால், இவர்கள் அனைவரும் வருடத்திற்கு மூன்று முறை கூடவேண்டும். பலவிதமான கட்டளைகளை நெறிமுறைகளை இவர்கள் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள 80 கோடி ஹிந்துக்கள், உலக அளவில் சேர்த்து 100 கோடி ஹிந்துக்களும் இந்தக் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும்.

இந்தியா முழுவதிலும் ஏராளமான ஹிந்து குருமார்களும், சுவாமிகளும் உள்ளனர் அவர்கள் அனைவரையும், ஒரே குழுவாக ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பது என்பது நடக்காத காரியம். இந்தியாவில் 12 மிக முக்கியமான ஹிந்து குருமார்கள் உள்ளனர். பெரும்பாலான சீடர்களை அவர்கள் கொண்டுள்ளனர். பிற எல்லா சுவாமிகள், குருமார்களை அவர்கள் பிரதிநித்த்துவப் படுத்துகின்றனர். எனவே அவர்களைக் கொண்டு இந்தத் தலைமை ஹிந்து கவுன்சிலை அமைக்கவேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைக்கிறேன்.

முதல்கட்டமாக, அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரியார், கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். உறுப்பினர்களும், அதேமாதிரி மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் இன்னும் பற்பல பெரிய குருமார்களும், அவர்களது பெரிய அடியார்கள் கூட்டங்களும் உள்ளன.

aum_om_ohm‘ஹிந்து தர்மம்’ மட்டும் பேராபத்தில் சிக்கி இருக்கவில்லை. பல யுகங்களாக இந்தியாவுக்குக் கிடைத்த எல்லையற்ற ஞானமும் கூட இன்று பேராபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இந்தியாவில் மட்டுமே இந்த ஞானம் தப்பிப் பிழைப்பது எஞ்சியுள்ளது. இந்த ஞானம் மட்டுமே உலகைக் காக்கவல்லது. தங்களிடம் ‘தேவையான எண்ணிக்கை’ உள்ளது என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உலகில் ஹிந்துக்கள் மிகவும் வெற்றிகரமான, சட்டத்தை மதித்து நடக்கும் சக்திவாய்ந்த சமூகமாக விளங்குகின்றனர். அவர்களது குருமார்களை யாரும் கேவலப்படுத்தக்கூடாது.

நன்றி: விஜயபாரதம் 09-07-2010 இதழ்.

francois_gautierபிரபல பத்திரிகையாளர் பிரான்ஸ்வா கொத்தியே 1959-ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். தனது 19-வது வயதில் இந்தியா வந்த அவர் ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகள் இந்து தர்ம தத்துவங்களையும், இந்து வாழ்க்கை முறையையும், கலாசாரத்தையும் பயின்றார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். இந்தியப் பெண் நம்ரதாவை மணம் புரிந்தார். இந்துத்துவம், இந்து அரசியல், சமூக பிரசினைகள் ஆகியவை பற்றி உறுதியான பார்வையுடன் தொடர்ந்து பேசியும்,எழுதியும் வருபவர் கொத்தியே. ரிடீஃப்.காம், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், தி சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் இவரது பத்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய வரலாறு, இந்து குருமார்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் விவரங்கள் இங்கே..