ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2

வேதங்களுக்கு கீதையை விட நல்ல பாஷ்யம் இதுவரையில் எழுதப் படவில்லல, இனிமேலும் எழுதமுடியாது. வேதங்களுக்கு மூலப் பொருளான அந்த பகவானே திருவுருவம் தாங்கி வந்து, அவைகளின் பொருளை விளக்கும்பொருட்டுக் கீதையை உபதேசம் செய்தருளினார். இந்த உபதேசத்தைத் தான் தற்கால இந்தியாவும், உலகமும் நாடி நிற்கின்றன…..விக்கிரக ஆராதனையை ஒழிப்பதற்காக நீங்கள் கத்திகளையும், பீரங்கிகளையும் கொண்டு, உலகம் முழுவதும் ரத்தப் பெருக்கெடுத்து ஓடும்படி செய்யலாம்; ஆனால் அவைகளின் அவசியம் இருக்கும் வரை அவை இருந்தே தீரும். அங்ஙனமே பலவிதமான வழிபாடுகளும், மத அனுஷ்டானங்களூம் இருக்கும். அவை ஏன் இருக்கவேண்டும் என்பதை கீதையிலிருந்து தெரிந்துகொள்ளுகிறோம்.

View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1

அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள்! ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சுவாமி விவேகானந்தரின் அழகிய உரையை மகிழ்வுடன் அளிக்கிறோம். “அன்பு செய்வதற்காகவே அன்பு, பணியாற்றுவதற்காகவே பணி, சேவை செய்வதற்காகவே கடமை, என்ற கருத்து மனிதனுடைய மத வாழ்க்கையின் சரித்திரத்திலேயே ஓர் உன்னதமான இடத்தைக் குறிக்கின்றது. இது உலக சரித்திரத்தில் முதல் தடவையாக எல்லா அவதாரபுருஷர்களிலும் மேம்பட்டவரான ஸ்ரீகிருஷ்ணருடைய திருவாயிலிருந்து, இந்திய மண்ணிடையே பிறந்தது … ‘நீ வழிபடாவிடில், நீ நரகத்திற்கு போவாய் அல்லது வேறுவிதமாக கஷ்டப்படுவாய்’ என்று தெய்வம் உரைப்பதாக நம்பி சிலர் பயத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு செய்கிறார்கள். இத்தகைய தாழ்ந்த எண்ணங்கள் இருக்கும் வரையில் ஒருவன் கோபிகளுடைய எல்லையற்ற அன்பை எங்ஙனம் உணர முடியும்?”

View More ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.

View More பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

ஸ்ரீ கிருஷ்ணர் “பெண்களும் பரகதி பெறுவர்” (கீதை 9.32) என கீதையில் கூறுகிற போது அவர் கூறுவது ‘பெண் தாழ்ந்தவள்’ எனும் மனநிலை படைத்த ஆணினை நோக்கி என்றே கருத வேண்டும். “அவளுக்கு ஞானமும் வீடுபேறும் கிடைக்கும்” என கீதை சொல்வது மிக உன்னத நிலையை இந்த பிறவியிலேயே அவள் அடைந்திட முடியும் என்னும் எக்காலத்துக்குமான உண்மையையும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்….சீதை எந்த இடத்திலும் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு பெண்ணடிமைப் பாத்திரமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக வலுவான பெண்ணியப் பார்வை கொண்ட, அதே நேரத்தில் சமுதாயத்துக்கு ஒரு தன்னிறைவு இலட்சியமாக திகழும் பாத்திரமாகவே அவள் காட்டப் படுகிறாள். குறுகிய எல்லைகளைக் கடந்து மானுடம் முழுவதையும் அரவணைக்கும் பார்வையை சீதை மூலமாக இராமாயணம் நமக்கு வைக்கிறது

View More கீதை, சீதை, தாய் தெய்வம், பெண்ணடிமைத்தனம்: சில கேள்விகள்

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Gandhiji“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.”

View More இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி