ரமணரின் கீதாசாரம் – 3

தீமைகள் வளரும் போது அவைகளைத் தடுக்கும் எண்ணம் இல்லாது போனால், நன்மைகள் வளர முடியாது என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம் அல்லவா? அப்போது தீமைகள் ஊக்குவிப்போரை எப்படி அடக்க வேண்டும் என்பது தானே நமது லட்சியமாய் இருக்கிறது? இந்தப் போர்க்களத்தில் நடக்கப் போவதும் அதுவே…

View More ரமணரின் கீதாசாரம் – 3

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை”, “கால பின் வரையறை” என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்… பௌத்த நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.. தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

View More ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

அறிவுக்கு பொருந்தும் பயம் ஏற்படுகையில் மனித உடல் ஆபத்திலிருந்து தப்பிக்க உத்வேகம் பெறுகிறது. ஆனால் அதே பயம் உயிர் ஆபத்திற்காக அல்லாது மற்ற காரணங்களுக்காக ஏற்படும்போது உடல் செயல்பட மறுக்கிறது. தவறான முடிவுகளையும் எடுக்கிறது… உலகையே கலக்கி கொண்டிருக்கும் ஒரே பரபரப்பு அறிவியல் இதுதான்…

View More பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1

அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

தன்னடியார்களுக்குக் காட்சிதரும் பொருட்டு அவதாரம் எடுக்கக் கிளம்பி, வழியிலே கொடியோர்களைத் தண்டித்தல் என்னும் முக்கியமான காரியத்தையும் செய்து முடிக்கிறான் கண்ணன் […] “கீதை உபதேசம் செய்தான்”, “கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் அர்ஜுனனுக்கு விளக்கினான்”, “கடினமான உபநிடத அர்த்தங்களை எடுத்துக் கூறினான்” என்றெல்லாம் ஆழ்வார்கள் அவ்வளவாகப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனுடைய குழந்தைப் பருவ விளையாட்டுகளிலேயே மெய் மறந்து பாசுரம் பாசுரமாகப் பாடியுள்ளனர்.[…]

View More அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…

அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

View More யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…

அச்சுதனின் அவதாரப் பெருமை

பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். “நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை’ என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?” என்று கேட்கலாம்.

View More அச்சுதனின் அவதாரப் பெருமை

போகப் போகத் தெரியும்-14

ஹெகல் உருவாக்கிய முரணியக்க முறையைக் கருவியாகக் கொண்டு வரலாற்றை அளந்தார் ஒருவர். அவரை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பொதுவுடமைக் கட்சியை ஏற்படுத்திய காரல் மார்க்ஸ். ஆனால் தோட்டத்துப் பச்சிலையைத் தோழர்கள் பயன்படுத்துவதில்லை. முரணியக்கப் பொருள்முதல் வாதத்திற்கான முதலீடு இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என்பதை இங்கிருக்கும் தோழர்கள் இன்னும் உணரவில்லை…

View More போகப் போகத் தெரியும்-14

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.

View More பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு