உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ்-இன்  (BRICS) ஆறாவது மாநாடு  பிரேசிலில் ஃபோர்ட்டாலிசாவில் ஜூலை 15-இல் துவங்கி ஜூலை 17-இல் முடிவுற்றது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின்  ஆதிக்கத்துக்கு எதிரான வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலித்தது. குறிப்பாக,  பாரதப் பிரதமர் மோடியின் உரை, பிரிக்ஸ் மாநாட்டில் தனிச்சிறப்பாக ஒலித்தது.

For treatment of infection due to herpes simplex virus type 1 (hsv-1), acyclovir tablets are usually used in combination with other drugs. Males are more likely to use Bendorf these drugs than females. The cause of bacterial meningitis is typically the result of.

It can be a very hard thing to come back from an eating disorder. This is because the what is allegra prescribed for drug is more effective than other drugs in treating erectile dysfunction problem. These tabs contain the capsule that contains doxycycline hyc 100mg tab side effects, or 250mg of doxycycline hyc 100mg tab side effects, which equals to 500mg of the active ingredient,

I first went to the doctor in 2006 and have been using it every three weeks ever since. You can crop online clomid prescription any number of images at the same time using this image sequence tool. However, you should consult a physician before using these.

இம்மாநாட்டில்,  ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற பாரதப் பண்பாட்டின் அடிநாதத்தை வெளிப்படுத்தி உலகத் தலைவர்களைக் கவர்ந்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

ஜூலை 16-இல் பிரேசிலியா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் மோடி ஆற்றிய உரையின் சுருக்கம் இது…

.

***

BRICS modi2

.

திப்பிற்குரிய பிரிக்ஸ் மாநாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே, பெண்களே, கனவான்களே!

பிரேசிலில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அளித்த விருந்தோம்பலுக்காக பிரேசிலின் குடியரசு தலைவர் ரூசெப்,  பிரேசில் அரசு, மக்களுக்கு என் நன்றி.

இது என்னுடைய முதல் பிரிக்ஸ் மாநாடு. உண்மையாகவே இது ஒரு செறிவூட்டும் அனுபவம். இங்கு கூடியிருக்கும் உலகத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையிலும் தொலைநோக்குச் சிந்தனைகளிலும் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். இங்கிருக்கும் ஒவ்வொரு தலைவருடனும் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றதில் பெருமையடைகிறேன் வரும் நாட்களில் இந்த உறவு மேலும் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

.

வரலாற்றுத் தருணம்:

வரலாற்றின் முக்கிய தருணத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பொருளாதாரத்திலும் அரசியலிலும் பெரும் குழப்பத்தை உலகம் தற்போது சந்தித்து வருகிறது. உலகின் பல முக்கிய பகுதிகளில் சச்சரவுகளும் நிலையற்ற தன்மையும் அதிகரித்துள்ளன. இவை வறுமையைச் சமாளிப்பதில் உள்ள சவால்களை அதிகப்படுத்துகின்றன. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் நிலையான வளர்ச்சி மாதிரியையும் உருவாக்கவும் இந்நிலை சவாலாக உள்ளது.

அமைதி மற்றும் நிலையான சூழ்நிலையை மீண்டும் கொண்டுவருவதே உலகின் அவசரத் தேவையாகும். இதற்காக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய வழிமுறைகளை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த அவசிய தேவையைப்  ‘பிரிக்ஸ்’ அமைப்பால் பூர்த்தி செய்ய முடியும. நான் இவ்வாறு நம்புவதற்கு காரணம் சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ்-க்கு உள்ள தனித்தன்மையே.

ஏனென்றால் மற்ற அமைப்புகள் (உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்றவை),  வளர்ச்சி அடைந்த நாடுகளின் கூட்டமைப்பாகவே உள்ளன. ஆனால், பிரிக்ஸ் ‘வருங்காலத் திறன்’ என்ற அளவுகோலைக் கொண்டே நாடுகளை ஒன்றுசேர்த்துள்ளது. பிரிக்ஸ்-இன் அடிப்படை நோக்கம் முன்னோக்கிப் பார்ப்பதே. அதனால், ஏற்கனவே உள்ள சர்வதேச அமைப்புகளில் பிரிக்ஸ் புதிய கண்ணோட்டத்தையும் வழிமுறைகளையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

அதனால் நம்மிடையிலான உறவும், பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சியும் இந்த அடிப்படை நோக்கத்தைத் தக்கவைப்பதாக இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். அமைதியான, சீரான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதில் பிரிக்ஸ்-இன் குரல் தெளிவாக இருக்க வேண்டும்.

 .

உறவை வலுப்படுத்துவோம்!

பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற உலகத்தின் முக்கிய சவால்களை எதிர்கொள்ள நமது ஒத்துழைப்பை இன்னமும் பலப்படுத்த வேண்டும். வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உலகக் கருத்தை வடிவமைப்பதில் பிரிக்ஸ் முன்னோடிப் பங்கு வகிக்க வேண்டும். 2015-க்குப் பிறகான வளர்ச்சி செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாக வறுமை ஒழிப்பு இடம்பெறுவதும் இதில் அடங்கும்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு,  சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற உலக அமைப்புகளின் நிர்வாக முறையில் சீர்திருத்தங்களை நாம் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பின் ஆட்சி முறையை வடிவமைப்பதில் நாம் உதவ வேண்டும். வலுவான, சீரான மற்றும் நிலையான உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிப்படையான வர்த்தக வளர்ச்சி முறை அவசியம்.  இது, வளர்ச்சி குறித்த வளரும் நாடுகளின்  விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும்.

உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் செல்வாக்கை பிரிக்ஸ் அடைந்துவிட்டது. நமது நலன்கள் சிறக்க நமது உறவை மேலும் பலப்படுத்த வேண்டும். இந்த வலுவான மன்றத்தை விரிவுபடுத்துவது அவசியம். இந்த மாநாட்டைத் தாண்டியும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். நமது மாநிலங்கள், நகரங்கள், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடையிலான, அடுத்த நிலையிலான பரிமாற்றங்களிலும் நாம் முதன்மையாக விளங்க வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகளின் மக்கள் தொடர்பை மையமாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கோடு பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றத்தை நிறுவுதல் ஒரு நல்ல முயற்சியாக அமையும். பிரிக்ஸ் மொழிப் பள்ளிகள் ஆரம்பித்தல், மற்றொரு முயற்சியாக அமையும். அதில் நம் அனைவரின் மொழிகளும் கற்பிக்கப்படலாம்.

அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்க பெரிய அளவிலான திறந்தநிலை இணையப் படிப்புகளை ஆரம்பிப்பது பற்றி நாம் பரிசீலிக்க வேண்டும். பிரிக்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தப் பல்கலைக்கழகம், நம் நாட்டில் உள்ள கல்வி வளாகங்களை இணையம் மூலமாகவும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மூலமாகவும் இணைக்க உதவும்.

.

இணைந்து உழைப்போம்!

மரியாதைக்குரியவர்களே, நம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் வெற்றிபெற முடியும் என்று நான் நம்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் மற்றவருடைய அறிவுத் திறன்கள், ஆதார வளங்களில் பெற்றுள்ள பலத்தை அறிந்து போற்ற வேண்டும்.

நமது அனுபவங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளை வகுக்க வேண்டும்.  இதன்மூலம் எண்ணற்ற வழிகளைக் கண்டுபிடிக்கலாம். அவையாவன:

• மலிவானதும் நம்பகமானதுமான எரிசக்தி தொழில்நுட்பங்களில் நமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

• செயற்கைக்கோள்,  தகவல் தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்களைக் கொண்டு தரமான கல்வி, சுகாதாரத்தை எளிதில் கிடைக்கச் செய்தல்.

• பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறை மேம்பாட்டின் வளர்ச்சியை வடிவமைத்தல்.

• பேரழிவு மேலாண்மையில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.

• விளையாட்டுகளில் ஒத்துழைப்பும் போட்டிகளும்.

உலக உறவுகளில் பொருளாதார சக்திகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. வர்த்தகம், சுற்றுலாத் துறை,  தொழில்நுட்பம், பாரம்பரியம், திறமை போன்ற களங்களுக்கு ஏற்கனவே உள்ள கோட்பாடுகளை மாற்றியமைக்கும் சக்தி உண்டு.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவம், வளங்களின் கலவையைக் கொண்டுள்ளோம். நாம் நான்கு கண்டங்களைப் பிரதிபலிக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒப்பீட்டு அளவிலான நன்மைகளையும் நிறைவான பலத்தையும் பெற்றுள்ளோம். இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பிரிக்ஸ் உருவாக்க வேண்டும். அது நம் அனைவருக்கும் நன்மை செய்யும்.

.

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி:

இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2012) தில்லி பிரிக்ஸ் மாநாட்டில் கருவாக உருவான புதிய வளர்ச்சி வங்கி  என்ற கனவு, இன்று போர்டலீசாவில் நனவாகியுள்ளது. இந்த ‘பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி’, பிரிக்ஸ் நாடுகளுக்குப் பயன்தருவதுடன், பிற வளரும் நாடுகளுக்கும் ஆதரவாக இருக்கும்.

பிரிக்ஸின் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கும் ஏற்பாடானது பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாக்க புதுக் கருவியாக உள்ளது.  உலக நிதிச் சந்தைகளில் நிலையற்ற தன்மை அதிகரித்துள்ள வேளையில் இது ஒரு முக்கிய முயற்சியாகும்.

ஏற்றுமதி, கடன் உறுதி முகமைகள் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வங்கிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை வேறு சில முக்கியமான நடவடிக்கைகள். இவை பிரிக்ஸ் நாடுகளுக்கு மத்தியிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

நாம் இன்னமும் லட்சிய நோக்கோடு இருக்க வேண்டும் என்ற நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன். உலகின் எதிர்காலத்தை வரையறுக்கும் வாய்ப்பு நமக்குள்ளது.

‘வசுதைவ குடும்பகம்’ அதாவது “உலகம் முழுவதுமே ஒரே குடும்பம்” என்ற கருத்து, எங்கள் நாட்டின் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அத்தகைய மண்ணில் இருந்து வரும் நான் இதனை மாபெரும் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறேன்.

வளரும் உலகத்தின் நம்பிக்கைகள். விருப்பங்களை வலுப்படுத்தும் வகையில் நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த பிரேசில் அதிபர் தில்மா ரூசெப்புக்கும், இந்நாட்டு மக்களுக்கும் மீண்டும் நன்றி.

இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார்.