சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]

தான் அன்பும், மதிப்பும் கொண்ட ராஜீவ் இறந்துவிட்டார் என்பதையே சோனியாவால் நம்ப முடியவில்லை. இனி ராஜீவின் அன்பான பேச்சுக்களோ ஆழமான முத்தங்களோ சோனியாவுக்குக் கிடைக்கப்போவதில்லை… இந்திரா காந்தியைப் பற்றியும் ராஜீவ் காந்தியைப் பற்றியும் எந்தவிதமான விமர்சனமும் புத்தகத்தில் வைக்கவில்லை என்பது உண்மைதான். போஃபார்ஸ், குத்ரோச்சி பற்றிய சர்ச்சைகளைப் பற்றியும் நான் எழுதவில்லை. காரணம், நேரு குடும்பத்தினர் அனைவரும் நேர்மையாளர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை…

View More சிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]

கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

உலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்த ஆய்வாளர் கருதுகிறார்… தமிழ்நாட்டு அலிகள் நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர்… ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய பாரம்பரியங்களே இந்த மண்ணின் “விளிம்பு நிலை” மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது.

View More கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!

திராவிட இயக்க வரலாறு குறித்த பல அரிய, சுவாரசியமான தகவல்களுடன் நமது தளத்தில் சுப்பு அவர்கள் எழுதி வந்த “போகப் போகத் தெரியும்” தொடர், மேலும் முழுமையாக செழுமைப் படுத்தப் பட்டு புத்தமாக வெளிவந்திருக்கிறது. ஜனவரி-29 முதல் தஞ்சாவூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் திரிசக்தி பதிப்பக அரங்கில் கிடைக்கும்.

View More ”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது!

பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா? சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா? உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் – இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா? முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா? – சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

View More பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

சொற்றமிழ் சூடுவார்

பேணிக் காப்பாரின்றி எண்ணற்ற சிவன் கோயில்கள் தமிழகத்தில் சிதிலமடைந்து வருவதுபோல ஓதுவார் பரம்பரையும் போற்றுவாறின்றி மங்கி வருகின்றது… தீட்சிதர் கீர்த்தனைகள் திருமுறைகளுக்கு எதிரானவை அல்ல; தீட்சிதர் சுந்தரமூர்த்தி நாயனார் மேல் பத்திகொண்டு அவரைப் போற்றி ‘டக்கா’ என்னும் அபூர்வராகத்தில் ஒருகீர்த்தனை இயற்றியுள்ளார் …

View More சொற்றமிழ் சூடுவார்

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

… பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான்…

View More இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009

‘புத்தகக் கண்காட்சிக்குள் பெய்திடும் மாமழை’ என்று ஹரன்பிரசன்னா எழுதியிருந்ததால் பயந்துபோய் குடை, ஜெர்கின் சகிதம்தான் பெங்களூரிலிருந்து கிளம்பினேன். சென்னையில் இறங்கியதும் மழைக்கான அறிகுறியே இல்லை…

View More சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009