திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்

திரௌபதி குறித்து சமஸ்கிருத மகாபாரதத்தில் இல்லாத ஒரு கதை வழக்கில் உள்ளது. பின்னர் சில மகாபாரதங்களிலும் குடியேறியிருக்கிறது. பருவமல்லாத காலத்தில் பழுத்த மாங்கனி ஒன்றை திரௌபதி கேட்க அர்ஜுனன் அதை கணையால் அடித்து கொடுத்துவிடுகிறான். பிறகுதான் அவர்களுக்கு ஐயம் ஏற்படுகிறது – நாம் தவறு செய்துவிட்டோமோ என்று. கண்ணனிடம் கேட்கிறார்கள். கண்ணன் சொல்கிறான் அது சந்தீபன மகரிஷி உண்ணுவதற்கென்று. நிச்சயமாக மகரிஷி வந்தால் சாபம்தான். ஏற்கனவே வனத்தில் அலைந்து கொண்டிருக்கும் நமக்கு இப்போது ரிஷி சாபம் வேறா… என்ன செய்வதென்று கண்ணனைக் கேட்கிறார்கள். கண்ணன் சொல்கிறான் நீங்கள் ஒவ்வொருவரும் ஆழ்மனதில் ஒரு ஆசையைக் கொண்டிருப்பீர்கள். பிறழ் ஆசை. அதை சொல்லுங்கள் மாம்பழம் மீண்டும் மரத்தில் பழையது போல போய் சேர்ந்துவிடும். ஒவ்வொருவரும் சொல்கிறார்கள் தருமனுக்கு உள்ளே அரசாட்சி செய்ய ஆசை என்று ஆரம்பித்து அது செல்கிறது. இறுதியில் திரௌபதியின் முறை. அவள் மனதில் கர்ணன் மீது ஆசை இருப்பதை/ இருந்ததைக் கூறுகிறாள். மாங்கனி சென்று மரத்தில் முன் போல சேர்ந்து விடுகிறது.

Well, quality can mean different things to different people. A: there is https://abnovo.eu/services/one-stop-shop/ a high risk of infection with the use of abilify for depression. I was taking a variety of over-the-counter pain relievers including, but not limited to, tylenol, percocet, and motrin.

Bisphosphonates inhibit the breakdown of bone mineral in the presence of a calcium deficiency, and tamoxifen. Paroxetine is a medication that can help people who are suffering from headaches clomid price in naira Pakisaji and migraines. I have been taking it about 3 times a day for the past few years for a wide variety of reasons.

It is effective in the treatment of diseases like anxiety, panic disorder, phobias, migraine, delirium and some other conditions. To make it worse, i was engaged to a man who had made it very clear that he did not feel clomid cost repeatedly the same. Require high doses of chemotherapy as part of the treatment.

இந்த கதையைத்தான் பழ.கருப்பையா திரௌபதியை கீழ்மைப்படுத்த பயன்படுத்தியிருக்கிறார். கற்பு என்பதே கற்பிதமான விஷயம்தான். அது கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டது. ஒரு மரபணு பிறழ்ச்சியால் – mutation- நாளையே ஓரினச் சேர்க்கை அவசியமாகி அதுவே ஒழுக்க விதியென ஏற்கப்படலாம். இருபால்-சேர்க்கை ஆபத்தானதாகி குற்றமாகலாம். உடல் சார்ந்த எதுவுமில்லை ஒரு பாலினத்தவரின் மேன்மையை போற்றுவது. கண்ணகியை போற்றி மாதவியை எவரும் தூற்றுவதில்லை. கண்ணகி, மாதவி இருவருக்குமே இருக்கும் அளவு கடந்த தூய அன்பே இங்கு அவர்கள் மதிக்கப்படுவதற்கு காரணம். இதில் கண்ணகி திராவிட பெண் மாதவி ஆரிய பெண் என்று பேசுவது எவ்வளவு மடத்தனமோ அதற்கு சற்றும் குறையாத மடத்தனமே பழ.கருப்பையாவின் மடத்தனம்.

இதனை விளக்க ராமாவதாரத்திலிருந்தே ஆரம்பிப்பது சரியாக இருக்கும்.

காவியங்களில் இல்லாத சில விஷயங்களை பொது மனப்புத்தி சேர்ப்பதுண்டு. உதாரணமாக அகலிகை. நம் மனதில் மிகவும் ஊறிய ஒரு சித்திரம் கௌதமரின் வடிவில் இந்திரன் வந்தான். அறியாமல் அகலிகை தன்னை இழந்தாள் என்பது. ஆனால் ஆதி கவியும் சரி கம்ப நாட்டாழ்வாரும் சரி அப்படிச் சொல்லவில்லை. ’மதிம் சகார துர்மேதா தேவராஜகுதூஹலாத்’ என்பது ஆதிகவி வாக்கு: தேவேந்திரனே தன்னை விரும்புகிறான் என்று குதூகலத்தில் மதியிழந்து தன்னை இழந்தாள் என்கிறார். கம்ப நாட்டாழ்வார் கதைப் போக்கை கொஞ்சமாக மாற்றத்தான் செய்கிறார். ஆனால் தெளிவாக அவள் உணர்ந்தும் ஓரவில்லை என்கிறார்.

உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்

ராம காவியத்தில் வால்மீகி மிக முக்கியமான ஒரு விஷயத்தை பின்னர் சொல்கிறார்: உடலால் செய்த குற்றத்துக்கான கழுவாய் அவளுக்கு தவத்தால் கிடைத்தது. தபோபலத்தால் தூய்மை அடைந்தாள் -’தபோபல விசுத்தாங்கி’. அகலிகை கல்லானாள். ராமன் பாதத்தால் மீண்டும் எழுந்தாள் என்பது வால்மீகிக்கு வெளியே உருவானது. அகலிகை கவுதமன் சாபத்தால் கல்லானாள் என்பது தமிழ்நாட்டில் மிகவும் வழக்கிலிருந்தது. திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபத்தில் இக்காட்சி தீட்டப்பட்டிருந்தது என பரிபாடல் மூலம் அறிகிறோம்:

இந்திரன் பூசை: இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது …

ஆண்-மைய சமுதாயத்தில் பெண் உடல் முக்கிய உடமை ஆகிறது. அவள் உடலால் மாசுபட்டால் அத்துடன் அவளை மீளவே முடியாத அசுத்தமடைந்து விட்டதாக பார்க்கும் போக்கு உண்டு. அகலிகை அந்த போக்கு எதிராக எழுகிறாள். அவள் அறிந்தே குற்றம் செய்தாள். இக்குற்றத்துக்கு பல மதங்களில் கல்லால் அடித்து கொல்லும் பழக்கம் அக்காலகட்டத்தில் இருந்தது. ஆனால் அகலிகை அக்குற்றத்தை தன் தவத்தால் களைந்தாள். எனவே ராமன் அவள் பாதங்களில் விழுந்து வணங்கினான் என்கிறார் வால்மீகி. ‘பஞ்ச கன்யா ஸ்மரேத் நித்யம்’ என்று சொல்லும் ஸ்லோகத்தில் முதலில் வைக்கப்படுபவள் அகலிகை. இதுவே திரௌபதிக்கும் பொருந்தும்.

அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார். ஜோன்ஸ் சொல்லும் கதையில் திரௌபதியிடம் ஒரு பிராம்மணன் கிருஷ்ண லீலைகளை விவரிக்கிறான். அப்படி விவரிக்க விவரிக்க அவனே கிருஷ்ணனை போல ஜொலிக்கிறான். திரௌபதியின் கரங்களை பற்றுகிறான். மாங்கனி மீண்டும் மரமேக இந்நிகழ்ச்சியை அவள் சொல்கிறாள். சொல்ல சொல்ல ஐந்து சகோதரர்களுக்கும் இதயம் பட பட என அடிக்கிறது. அர்ஜுனன் முகம் கோபத்தில் சிவக்கிறது. ஆனால் அந்த அந்தணன் என்னை முத்தமிட்டான் அதைத்தவிர வேறெதுவும் செய்யவில்லை / நடக்கவில்லை என்கிறாள் திரௌபதி. மாங்கனி மரமேகுகிறது.

இங்கிருந்து ஜோன்ஸ் தாவுகிறார்.

Could you, ye Fair, like this black wife,
Restore us to primeval life,
And bid that apple, pluck’d for Eve
By him, who might all wives deceive,
Hang from its parent bough once more
Divine and perfect, as before,
Would you confess your little faults? …

Enchanted fruit or Hindu wife என கூகிளிட்டால் முழு பாடலும் கிட்டும். படியுங்கள்.

சைத்தானால் தூண்டப்பட்டு விலக்கப்பட்ட கனியை பறித்த ஏவாளுடன் தன் அகத்தை வெளிப்படுத்தி கனியை மீண்டும் மரமேக வைத்த திரௌபதியை ஒப்பிட்டு மானுடத்தின் மீட்சியே இத்தன்மையில் இருப்பதாக சுட்டிச் செல்கிறார் ஜோன்ஸ் – அக்காலத்திய கிறிஸ்தவ தாக்கம் நிறைந்தே. எனினும் இந்த ஒப்பீடு முக்கியமானது. பெண் தைரியமாக தன் முழுமையை முன்வைப்பதிலும் அதை குறுகிய ஒழுக்க விதிகளைத் தாண்டி இதயபூர்வமாக அவள் கணவர்கள் ஏற்பதிலும் அடிப்படையாக இருக்கும் அன்பு மானுடத்தை முழுமையடைய வைக்கும் எனும் ஒரு அக உண்மையை ஜோன்ஸால் இங்கு காண முடிந்திருக்கிறது. ஆனால் பழ.கருப்பையா? எவ்வளவோ மிகச் சிறந்த அறிஞர்களை நம் சமயத்துக்கு அளித்த ஒரு சமுதாயத்தில் இப்படி ஒன்றும் கண் திருஷ்டிக்கென பிறந்து தொலைத்திருக்கிறது.

ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதனிடம் தீராவிட வக்கிர மொண்ணைத்தனத்தை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

******

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

முந்தைய  பகுதிகள்:  பாகம் 1,   பாகம்  2

சென்ற இரு ஒப்பீடுகளில் கம்பனும், வால்மீகியும் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டோம்.  இந்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வதைப் பற்றிக் கண்ணுறுவோம். இவண், மரபுப் பண்பாடு மாற்றம் மிக நன்றாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி, சீதையின் வாக்குத் திறனும் புலனாகிறது.

 வால்மீகி ஆரண்ய காண்டத்தில், நான்கு சர்க்கங்களில் (46-49), 130 குறள் பாக்களில் (260 வரிகள்), இராவணன்-சீதையின் வாக்கு வாதத்தை எழுதி உள்ளார். அக்காட்சியையே, சடாயு உயிர் நீத்த படலத்தில் 53 விருத்தப் பாக்களில் (212 வரிகள்) கம்பனால் தீட்டப் பட்டிருக்கிறது. இருவரின் கைவண்ணமுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது.

rama_calendar6

சீதை சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொன்னதால் மனம் உடைந்த இலக்குவன், இராமன் சென்ற இடம் நோக்கிச் சென்றான்.  சீதை தனியாக விடப் பட்டாள். அது கண்டு, இராவணன் ஒரு துறவியைப் போல வேடம் அணிந்துகொண்டு, சீதை இருக்கும் பர்ணகசாலையை அடைந்தான்.

வால்மீகியின் ஆரண்ய காண்டத்தின் 46வது சர்க்கத்தில் துவங்குவோம்:

संदृश्य न प्रकंपन्ते न प्रवाति च मारुतः |

शीघ्र स्रोताः च तम् दृष्ट्वा वीक्षंतम् रक्त लोचनम् || ३-४६-७

स्तिमितम् गंतुम् आरेभे भयात् गोदावरी नदी |

அவனைக் கண்ட காற்றும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. குருதிச் சிவப்பான கண்களை உடைய அவனைப் பார்த்த அச்சத்தால் வேகமாகச் செல்லும் கோதாவரி ஆறும் மெல்லச் செல்ல ஆரம்பித்தது. – 3.46.7

अभ्यवर्तत वैदेहीम् चित्राम् इव शनैश्चरः |

सहसा भव्य रूपेण तृणैः कूप इव आवृतः || ३-४६-१०

புற்களால் மறைக்கப்பட்ட கிணறுபோல, தகுந்த (துறவி) வேடத்தில் (மறைத்துக்கொண்டு), சித்திரையில் சனியைப்போல வைதேகி முன்னால் சென்றான். – 3.46.10

दृष्ट्वा काम शर आविद्धो ब्रह्म घोषम् उदीरयन् |

अब्रवीत् प्रश्रितम् वाक्यम् रहिते राक्षस अधिपः || ३-४६-१४

ताम् उत्तमाम् त्रिलोकानाम् पद्म हीनाम् इव श्रियम् |

विभ्राजमानाम् वपुषा रावणः प्रशशंस ह || ३-४६-१५

காமனின் அம்புகளால் அடிக்கப்பட்ட அரக்கர் தலைவன் தனியளான (சீதையைப்) பார்த்துவிட்டு, பிரம்ம கோஷங்களை (வேதங்களை) முழங்கிக்கொண்டு, மரியாதையான சொற்களைச் சொன்னான். மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், தாமரை இல்லாத (தாமரையில் நிற்காத) இலக்குமியைப் போன்ற அவளின் உடலை முன்னும் பின்னுமாக (முன்னழகையும், பின்னழகையும்) இராவணன் புகழ்ந்தான். – 3.46.14-15

…இராவணன் பதினோரு சுலோகங்களில் சீதையின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் கொச்சையாக வர்ணிக்கிறான். அதன் பிறகு, நான்கு சுலோகங்கள் மூலமாக தன்னந்தனியளாக ஏன் சீதை இருக்கிறாள் என்று கேட்கிறான்….

द्विजाति वेषेण हि तम् दृष्ट्वा रावणम् आगतम् |
सर्वैः अतिथि सत्कारैः पूजयामास मैथिली || ३-४६-३३

प्रसह्य तस्या हरणे धृढम् मनः समर्पयामास आत्म वधाय रावणः || ३-४६-३७

ब्राह्मणः च अतिथिः च एष अनुक्तो हि शपेत माम् |

इति ध्यात्वा मुहूर्तम् तु सीता वचनम् अब्रवीत् || ३-४७-२

இருபிறப்பாளரின் (அந்தணரின்) வேடத்திலேயே வந்த அந்த இராவணனைப் பார்த்த மைதிலி, எல்லாவிதமான விருந்தினர் உபசாரத்துடன் பூசித்தாள்.  – 3.46.33

இராவணன் அவளைக் கட்டாயப்படுத்திக் கடத்தவேண்டுமென்ற உறுதியைத் தன் அழிவிற்காக மனதில் அர்ப்பணித்தான். – 3.46.37  

மறையவராகவும் விருந்தினராகவும் (இருக்கும்) இவர் பதில் கூறாமல் இருந்தால் என்னைச் சபித்து விடுவார் என்று சிறிது நேரம் சிந்தித்து (பார்த்து), சீதை பதில்களைப் சொன்னாள்.  – 3.47.2

…மிதிலையின் அரசமுனி ஜனகனின் மகள் சீதை தான் என்றும், பேரரசன் தசரதனின் மைந்தன் இராமனை மணமுடித்து, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இனிது வாழ்ந்ததையும், கைகேயின் சொற்கேட்டு, தசரதன் இராமனை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வருமாறு பணித்ததால், தனது கணவன் இராமன், தான், மற்றும் இளையோன் இலக்குவன் கங்கையைத் தாண்டி தண்டகாரண்யம் வந்ததையும், பொன் மானைப் பிடிக்க இராமன் சென்றதையும் பற்றி இருபது சுலோகங்களின் மூலம் வால்மீகி சீதை வாய்மொழியாக வரைந்திருக்கிறார்…

आगमिष्यति मे भर्ता वन्यम् आदाय पुष्कलम् |

रुरून् गोधान् वराहान् च हत्वा आदाय अमिषान् बहु || ३-४७-२३

सः त्वम् नाम च गोत्रम् च कुलम् आचक्ष्व तत्त्वतः |

एकः च दण्डकारण्ये किम् अर्थम् चरसि द्विज || ३-४७-२४

ravana2என் கணவர் காட்டிலிருந்து நிறையக் கருவரி மான்கள், கீரிப்பிள்ளைகள் (போன்ற மிருகங்கள்), பன்றிகளையும் கொன்று, நிறைய இறைச்சி எடுத்துக் கொண்டு வருவார்.  இருபிறப்பாளரே (அந்தணரே), உண்மையில் உமது பெயரையும், கோத்திரத்தையும், குலத்தையும், தெளிவு படுத்துவீராக;  தண்டகாரண்யத்தில் தனியாக எதற்காக அலைகிறீர்? – 3.47.23&24

…தான் அரக்கர்கோன் இராவணன் என்றும், கடலின் நடுவில் உள்ள இலங்கைக்கு அரசன் என்றும், அழகுள்ள பல மனைவியர் இருந்தும், அவளிடம் தான் மனதைப் பறிகொடுத்ததாகவும்,  அவள் தன்னுடன் வந்தால், அனைவருக்கும் தலைவியாக ஆக்குவதாகவும், (9 சுலோகங்கள்) ஆசை காட்டுகிறான்.  அதனால் கோபம் அடைந்த சீதை.பதினேழு சுலோகங்களில் தான் இராமனின் கற்புள்ள மனைவி என்றும், தன் கணவனின் பெருமையைப் பற்றியும், இராவணனால் தன் கணவரை வெற்றி கொள்ள இயலாது என்றும், இந்திரனின் மனைவி சசிதேவியைக் கடத்திச் சென்றாலும் ஒருவேளை அவனிடமிருந்து தப்பிவிடலாம், ஆனால் இராமனிடமிருந்து அவன் தப்ப இயலாது என்றும் அறிவிக்கிறாள். இபாடி ஒரு அரக்கனிடம் தனியாகச் சிக்கிகொண்டோமே என்று…

गात्र प्रकंपात् व्यथिता बभूव वात उद्धता सा कदली इव तन्वी || ३-४७-४९

காற்றினால் வீழ்த்தப்பட்ட வாழைமரத்தைப் போல உடல் நடுங்கி சித்திரவதைக்கு உள்ளானாள் (சீதை).  – 3.47.49

…குபேரனின் மாற்றாம்தாய் மகனான தான் மிகுந்த பலவான் என்றும், மானிடனான இராமன் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் இராவணன் தற்பெருமை பேசுவதாக நாற்பத்திஎட்டாம் சர்க்கத்தில் 19 சுலோகங்களில் விளக்குகிறார் வால்மீகி….

कथम् वैश्रवणम् देवम् सर्व देव नमस्कृतम् |

भ्रातरम् व्यपदिश्य त्वम् अशुभम् कर्तुम् इच्छसि || ३-४८-२१

அதைக் கெட்ட சீதை, “எல்லா வானவர்களாலும் வணங்கப்படும் தேவனான வைஸ்ரவனை (குபேரனை) உடன்பிறப்பு என்று அறிவித்துக்கொண்டே, நீ எப்படி நலமில்லாததைச் (தீய செயலை) செய்ய விரும்புகிறாய்?” என்று கோபிக்கிறாள்.  – 3.48.21

 
…அதனால் சினமடைந்த இராவணன், தனது அரக்க உருவத்தைக் காட்டி, (12 குறட்பாக்களில்) தற்பெருமை பேசுகிறான். அதன் பிறகு சீதையின் சொற்களால் மிகவும் கோபம் அடைந்து, தனது பெரிய வடிவத்தை எடுக்கிறான். தனது பலத்தால் எதையும் அழிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறது என்று மார் தட்டுகிறான். அந்தண வடிவை விட்டுவிட்டு, பத்து தலையுடனும், இருபது கைகளுடனும் காட்சி அளிக்கிறான்…

जग्राह रावणः सीताम् बुधः खे रोहिणीम् इव || ३-४९-१६

वामेन सीताम् पद्माक्षीम् मूर्धजेषु करेण सः |

ऊर्वोः तु दक्षिणेन एव परिजग्राह पाणिना || ३-४९-१७

तम् दृष्ट्वा गिरि शृंग आभम् तीक्ष्ण दंष्ट्रम् महा भुजम् |

प्राद्रवन् मृत्यु संकाशम् भय आर्ता वन देवताः || ३-४९-१८

புதன் ரோகிணியைப் பிடித்தது போல, இராவணன் சீதையைப் பற்றினான். அவன் தாமரையைப் போன்ற கண்களை உடைய சீதையின் கூந்தலை இடதுகையாலும்,, வலது கையினால் தொடைகளின் பின்புறத்தையும் பிடித்தான். நீண்ட கோரைப் பற்கள் உள்ளவனும், பெரிய புஜங்கள் உடையவனும், காலனைப் போன்றவனுமான அவனைப் பார்த்துப் பயந்து வனத்தின் தெய்வங்கள் விரைந்தோடின.  – (3.49.16-18)

…அப்படியே சீதையைத் தனது புஷ்பக விமானத்தில் இராவணன் கவர்ந்து சென்றான் என்கிறார் வால்மீகி…

சடாயு உயிர்நீத்த படலத்தில் கம்பநாட்டார் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காதுறுவோம்:

ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்

சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்

பாணியின் உழந்து இடைப் படிக்கின்றான் என

வீணையின் இசைபட வேதம் பாடுவான்.  – 3-823

உணவே இல்லாதவன் போல மெலிந்த உடல் உடையவன்; நீண்ட தூரம் வந்ததால் துயர் அடைந்து, தாளத்திற்கு ஏற்றவாறு பாடுவதைப்போல வீணையின் இசையைப்போன்ற குரலில் (சாம)வேதத்தைப் பாடினான்.

இவ்வாறு தவசியின் வேடத்தைப் புனைந்த இராவணன் தூய்மையான மனமுடைய அருந்ததிக்கு இணையான கற்புடைய சீதை இருந்த இடத்தை அடைந்து நாக்குழற, “இங்கு இருப்பது யார்?” என்று கேட்டான்.

தோகையும் அவ் வழி தோம் இல் சிந்தனைச்

சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்

பாகு இயல் கிளவியாள் பவளக் கொம்பர் போன்று

ஏகுமின் ஈண்டு என எதிர் வந்து எய்தினான்.  – 3.827

குற்றமற்ற நினைவு உடையவர் ஆறு நோன்புகளைச் செய்பவர் (அந்தணர்) என்ற நினைப்பால், (சர்க்கரைப்) பாகு போன்ற மொழியுடையவுளும், தோகை (மயிலைப்போன்றவளும், பவளக்கொடி போல இருந்த (சீதை), இங்கு வாருங்கள் என்று (அழைக்கவும்), எதிரே வந்து நின்றான்.

சீதையின் அழகில் மயங்கிய இராவணன், தன்னை மறக்கிறான். தான் பெற்ற நீண்ட ஆயுளும், இருபது கண்களும் சீதியின் அழகைக் கண்டு களிக்கப் போதாது என்று மறுகுகிறான்.  மூன்று உலகத்தில் இருக்கும் அனைவரும் இவளுக்கு தொண்டு செய்யும்படி செய்வேன்.  இவள் காலடியில் விழுந்து கிடப்பேன், இவளைப் பற்றிச் சொன்ன என் தங்கை சூர்ப்பனகைக்கு என் அரசைத் தந்து விடுவேன் என்று பகல் கனவு காண்கிறான்.  அந்தணன் வேடத்தில் வந்த அவனுக்கு பிரம்பினால் செய்த ஆசனத்தை அளித்து உபசரிக்கிறாள் சீதை….

நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து

அடங்கின பறவையும் விளங்கும் அஞ்சின

படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதகக்

கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே.  – 3.837

மற்றவர்களுக்குக் தீமை விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யும் அரக்கன் (இராவணனைக்) கண்ட உடனே, மலைகளை கூட நடுங்கின.  (காற்றில் இலைகளை அசைத்து ஒலி எழுப்பிக் கொண்டு இருக்கும்) மரங்களும் பேச முடியாமல் அடங்கிப் போய்விட்டன.  பரவைகளும், (காட்டில் இருக்கும்) மிருகங்களும் பயந்து (அமைதியாகி விட்டன).  படம் எடுத்து ஆடக்கூடிய பாம்புகளும், (படத்தை) குறுக்கிக்கொண்டு ஒதுங்கி (ஒளிந்து) கொண்டன.

 ..இராவணன் சீதையிடம் அவளைப்பற்றிக் கேட்கிறான்.  (சிற்)அன்னையின் சொல்லை நிறைவேற்றுவதற்காகக் கானகம் வந்திருக்கும் தனது கணவர், தம்பியுடன் தானும் வந்திருக்கிறேன் என்று பதில் சொல்கிறாள் சீதை.  அவன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று வினவுகிறாள். அதிற்கு எட்டு விருத்தப் பாக்களில் இராவணன் பதில் அளிப்பதாகச் சொல்கிறார் கம்பர். துறவி வேடம் பூண்ட அரக்கர் தலைவன், தான் இராவணின் தலை நகரான இலங்கையில் நீண்ட காலம் இருந்து விட்டுத் திரும்பியதாகக் கூறுகிறான்.  திருக்கயிலை மலையையே பெயர்த்து எடுத்தவன் அவன், படைக்கும் கடவுளான பிரம்மனின் குளத்தில் தோன்றியவன், மிகவும் அறிவாளி, பலசாலி, சிவபெருமான் தந்த வாளைப் பெற்றவன், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று சீதையிடம் தன்னைப்பற்றியே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். அதைக் கெட்ட சீதை…

வேதமும் வேதியர் அருளும் வெஃகலா

சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப்

பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு

ஏகு என் உடலமும் மிகை என்று எண்ணுவீர்.  —  3.851

“என் உடம்புகூட துறக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்க வேண்டிய (துறவியான) நீங்கள், வேதங்களையும், வேதியர் (வேதத்தைக் தந்த சிவபெருமானின்) அருளையும் வேண்டி (தவம்) புரியாமல், ஆறறிவு உடைய மனிதர்களைத் உண்ணகூடிய தீய செயல்களைச் செய்கின்ற பாவிகளான அரக்கர்களின் நகரத்தில் தங்குவதற்காக எதற்காகச் சென்றீர்கள்?” என்று கேட்கிறாள்.

…நீங்கள் மிகவும் தவறான செயலைச் செய்து விட்டர்கள் என்று அவனைக் கடிந்து கொள்கிறாள்.  சீதை தன்மீது சந்தேகம் கொள்கிறாள் என்று அறிந்து கொள்கிறான்.  எனவே, அது அரக்கர்களின் இயல்பு, நாம் என்ன செய்ய முடியும் என்று அதற்குச் சமாதானம் சொல்கிறான். அதை சீதை ஒப்புக் கொள்ளாமல் அவனுடன் வாதம் செய்கிறாள்.  இருவரும் தங்கள் பக்கமே சரி என்று விவாதம் செய்கிறார்கள்.

அரண் தரு திரள் தோள் சால வள எனின் ஆற்றல் உண்டோ

கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்

திரண்ட தோல் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்தன்னில்

இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்.  —  3.863

மதில்கள் போன்று பாதுகாப்புத் தருகின்ற சிறந்த தோள்கள் பல இருந்தால் மட்டும் வலிமை உண்டாகி விடுமா?  நீர்க் காக்கைகள் மிகுந்த இலங்கையின் அரசனை (இராவணனை) வீரக் கழல்கள் (சிலம்புகள்) அணிந்த வீரன் (கார்த்த வீர்யார்ச்சுனன்) சிறைப் பிடித்தான்.  (அப்படிப்பட்ட கார்த்த வீர்யார்ச்சுனனின்) காட்டு மரங்கள் போன்ற (ஆயிரம்) பலம் பொருந்திய தோள்களை, இரண்டே தோள்கள் கொண்ட ஒருவன் (பரசுராமன்)தான் கோடாரியால் வெட்டி எறிந்தான் என்று கேட்டாள்

…அதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், தனது துறவி வேடத்தை நீக்கிவிட்டு, தனது இயல்பான அரக்க உடலை எடுத்துக் கொள்கிறான்.  சீதை அதைக்கண்டு பயப்படுகிறாள் “என்னை இவ்வாறு தூற்றிய எவரையும் நான் கொன்று தின்று விடுவேன். நீ பெண் என்பதால் உன்னை விட்டு விடுகிறேன்.  நீ என்னுடன் வந்துவிடு, உன்னை மிகவும் சிறப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்…

புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்

அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா.  —  3.869

“இந்த உலகத்தில் ஒழுக்கமாக இருப்பதை விரும்ப மாட்டாய்; பெரிதாக எரிகின்ற (யாக அக்னியில்) தூயவர்கள் இடப்போகும் ஆகுதியை நாய் விரும்புவதைபோல எத்தகைய (இழிவான சொற்களைச்) சொல்கிறாய் அரக்கா?” என்று கேட்டாள்.

… என் கணவர் இராமனின் கூறிய அம்பு உன் மீது பாய்வதற்கு முன் இங்கிருந்து ஓடிப்போய் உன் இலங்கையில் ஒளிந்துகொள் எஎன்று சிறிதும் அஞ்சாமல் சீறி எழுகிறாள் சீதை.  அதைப் பொருட்படுத்தாமல், இராமனின் அம்பு என்னை ஒன்றும் செய்யாது. என்னை ஏற்றுக்கொள் என்று தரையில் விழுந்து அவளை வணங்கிக் கேட்கிறான் இராவணன்.  உடனே, சீதை, தன்னை இந்த இக்கட்டான் நிலைமையில் இருந்து காக்குமாறு இராமனையும், இலக்குவனையும் கூவி அழைக்கிறாள்…

ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்

தீண்டான் அயன் முன் உரை சிந்தைசெயா

தூண்தான் எனல் ஆம் உயர்தோள் வலியால்

கீண்டான் நிலம் யோசனை கீழ்ப் புடையே.  —  3.874

முன்காலத்தில் பிரம்மா கொடுத்த (சாபச்) சொற்களை நினைவில் கொண்டு, அப்பொழுது தீயவனான (இராவணன்), நூலைப்போன்ற இடையுடைய (சீதையை)த் தொட வில்லை.  தூண்கள் போன்ற உயர்ந்த தோள்களின் வலிமையால், (சீதையையும் சேர்த்து ஒரு) யோசனை அளவுக்கு நிலத்தைத் தோண்டி எடுத்தான்.

அதனால் மயக்கம் அடைந்த சீதையை நிலத்துடன் புஷ்பக விமானத்தில் எடுத்துச் சென்றான் என்று எடுத்துரைக்கிறார் கம்பர்.

ஒப்பீடு:

ஆரம்பம் ஒரே மாதிரி இருந்தாலும், வால்மீகியும், கம்பனும் இந்நிகழ்ச்சியைக் கூறியிருப்பதில் நிறைய மாற்றமிருக்கிறது.  எனவே, மாற்றங்கள் என்ன என்று பார்ப்போம்.

மிகப் பெரிய மாற்றம், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் விதம்தான்.  சீதையின் தலை மயிரை ஒரு கையாலும், தொடைகளின் பின்புறத்தை இன்னொரு கையாலும் பிடுத்துத் தூக்கிச் சென்றான் என்று வால்மீகி எழுதி உள்ளார்.  ஆனால், ஒரு யோசனை நிலத்தை அகழ்ந்து, சீதையைக் கவர்ந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.  “அயன் முன் உரை சிந்தைசெயா தீயவன் ஆயிழையைத் தீண்டான்”, அதாவது, பிரம்மா முன்னாளில் அளித்த சாபத்தைக் கருதியே, சீதையைத் தீயவனாகிய இராவணன் தொடவில்லை என்று எழுதி இருக்கிறார். கற்பில் சிறந்த சீதையை இராவணன் தொட்டுத் தூக்கிச் செல்வதைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், எனவே, மரபு காரணமாக கம்பர் இராவணனுக்கு ஒரு சாபம் இருந்தது என்று புனைந்து விட்டார் என்று எண்ணிவிடக் கூடாது.  அந்த சாபத்திற்கு ஆதாரத்தை அவர் வால்மீகியின் வடமொழி மூலத்திலிருந்துதான் பெற்றிருக்கிறார். யுத்த காண்டத்தில், பதிமூன்றாம் சர்க்கத்தில், பத்திலிருந்து பதினைந்தாம் சுலோகங்களில் அதை இராவணனின் வாய்மொழியாகவே, வால்மீகி எழுதிருக்கிறார்.  மகாபார்ச்வனுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் என்று இராவணன் தனது சாபத்தைப் பற்றிக் கூறுகிறான்.  புஞ்சிதஸ்தலை என்ற தேவகன்னிகையைத் தான் பலாத்காரம் செய்ததாகவும், அதை பிரம்மா அறிந்து மிகவும் கோபம் கொண்டு சபித்ததாகவும் சொல்கிறான்.

अद्यप्रभृति यामन्याम् बलान्नारीम् गमिष्यसि |

तदा ते शतधा मुर्धा फलिष्यति न संशयः || ६-१३-१४

இன்றிலிருந்து எந்த பிற பெண்ணிடம் பலவந்தமாகச் செல்கிறாயோ (பலாத்காரம் செய்கிறாயோ), அப்பொழுது உன் தலை நூறாக வெடிக்கும், சந்தேகமில்லை.  —  6.13.14

இதற்குப் பயந்தே நான் சீதையைக் கட்டாயப்படுத்தித் தன் விருப்பத்திற்கு உள்ளாக்கவில்லை என்று இராவணன் தெரிவிக்கிறான்.  இந்த ஆதாரத்தையே, கம்பர் குறிப்பிட்டு, சீதையை, அத்தீயவன் தீண்டவில்லை என்று தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார்.  இதிலிருந்து கம்பருக்கு வால்மீகி இராமாயணத்தில் இருந்த புலமையும், வடமொழித் திறனும் புலனாகிறது. இருவருமே சீதையை கற்பில் சிறந்தவளாகத்தான் போற்றி இருக்கிறார்கள். இராவணன் சீதையை பலாத்காரமாகத் தூக்கித்தான் சென்றான், ஆனால் பலவந்தம் செய்யவில்லை என்பதை இராவணனின் மூலமாகவே வால்மீகி தெள்ளக் தெளிவாக்கி உள்ளார்.

kidnaping-sita

அந்தணத் துறவியாக வேடம் அணிந்து வந்த இராவணனை சீதை வரவேற்று உபசரித்தாள் அரக்கரின் அரசன் சீதையை அங்கம் அங்கமாக, அவளிடமே வர்ணிக்கிறான் என்று வால்மிகி கூறியிருந்தாலும், ஒரு பெண்ணை, அவள் முன்னே அப்படி வர்ணிப்பது தமிழ் மரபாகாது என்று கம்பர் தவிர்த்து விடுகிறார்.  அதற்குப் பதிலாக, சீதையின் காலடியிலேயே விழுந்து கிடப்பேன், அவளைப் பற்றிச் சொன்ன தனது தங்கை சூர்ப்பனகைக்குத் தனது அரசையே பரிசளிப்பேன் என்று மனதிற்குள் மருகியதாக எழுதிவிடுகிறார்.  அரக்கன் அப்படித் தன்னை வர்ணித்தாலும், தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்றே சீதை அவனுக்குப் பதில் சொல்கிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

கம்பர் சொல்லாத ஒரு செய்தியை வால்மீகி சீதையின் வாயிலாகத் தெரிவிக்கிறார். காட்டு மிருகங்களின் இறைச்சியை (மாமிசத்தை) என் கணவர் நிறையக் கொண்டு வருவார், அந்த உணவு கிடைக்கும் என்று தெளிவு படுத்திய பின்னரே, கள்ளவேடம் பூண்ட துறவியின் குலம், கோத்திரம் பற்றி வினவுவதாக எழுதி இருக்கிறார். இதன்மூலம் அனைவரும் இறைச்சி உண்டார்கள் என்று தெரிகிறது.  ஆயினும், கம்பனுக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் புலால் மறுத்தல், கள் உண்ணாமை போன்ற இரண்டையும் அனவருக்கும் வலியுறுத்தி இருக்கிறார். எனவே, மறையவர்கள், துறவிகள் மாமிசம் உண்ணுவது என்பது திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ் நாட்டில் இருந்திருக்க இயலாது. அதனாலேயே கம்பர் இவ்வாறு எழுதாமல் தவிர்த்திருக்கிறார். மேலும் புறநானூற்றில் எவர் வீட்டில் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பது பற்றிய பாட்டில், அந்தணர் வீட்டில், அரிசிச் சோறும், கீரையும் கிட்டும் என்று நான் படித்திருக்கிறேன். ஆகவே, இடத்திற்குத் தகுந்தவாறு உணவும் மாறுபட்டது. இன்றும் காஷ்மீர் பண்டிதர்கள் ஆட்டிறைச்சியும், வங்காள பிராமணர்கள் மீனும் உண்ணுகிறார்கள். ஆனால் தென்னிந்தியா, குஜராத், ராஜஸ்தானில் புலால் (இறைச்சி) அவர்களால் தவிர்க்கப்படுகிறது. எனவே, வால்மீகியை ஆதாரம் காட்டி தவறாக யாரையும் பழிக்கக் கூடாது என்பதற்காகவே, சீதை வாய்மொழியான இந்த சுலோகம் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டது. எவர் மனத்தையும் புண்படுத்தவதற்காக அல்ல.

யார் என்று சீதை கேட்டதும், தன்னை இலங்கை மன்னன் என்றே அறிமுகம் செய்துகொள்வதாக வால்மீகி சொன்னாலும், கம்பர் அதை வேறுவிதமாகச் சொல்கிறார்.  இலங்கை மன்னனின் அரசவையில் சுகமாகக் காலம் கழித்து விட்டுத் திரும்பி வருவதாக அவன் சொல்வதாகக் கூறுகிறார்.  அதோடு மட்டுமல்லாமல், சீதையின் அறிவையும், வாதத் திறமையையும் கம்பர் வெளிப்படுத்துகிறார்.  இராவணன் சொன்னதை கேட்டதாம், ஆறு நோன்புகளை மேற் கொள்ளவேண்டியவரும், யாக்கையின் (உடலின்) நிலையாமையை அறிந்த நீர் எப்படி மனிதரைத் தின்னும் அரக்கனை அண்டி இருந்தீர் என்று கேட்கிறாள்.  வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகளைச் செய்தல், மற்றவர்களுக்குச் செய்வித்தல், தானம் வாங்குதல், தனது அன்றாடத் தேவைக்கு மீந்ததை மற்றவர்க்குத் தானமாக அளித்தல் என்ற ஆறு நோன்புகளையும் அந்தணர்கள் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறாள்; துறவிகளும், அந்தணர்களும் மற்றவர்களை அண்டியே இருக்கவேண்டும் என்றாலும், நல்லவர் அல்லாதோரை அண்டி இருக்கக் கூடாது என்ற அறிவுரையையும், ஒரு துறவிக்குச் சுட்டிக்காட்டத் தயங்காதவளாகவே சீதை கம்பரால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள்.

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள்.  வாதிட்ட விதம்தான் மாறி உள்ளது.  எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். ஆனால், உடல் வலிமை பயனற்றது, உன்னை ஆயிரம் கை கொன்ற கார்த்தவீர்யாஜுனன் சிறைப் பிடித்தான், அவனை இரண்டே தோள் கொன்ற பரசுராமன் வெட்டித் தள்ளினார் என்று இராவணனின் வரலாற்றையும், கார்த்தவீர்யாஜுனனின் வரலாற்றையும் சொல்லி அவனை எள்ளி நகையாடுகிறாள். சீதையின் சீரிய கல்வி அறிவை இதன்மூலம் நமக்குக் கம்பர் புலப்படுத்துகிறார்.  அதுமட்டுமல்ல, வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர்.  அவளது வீர்த்திற்கு அடி பணிந்து என்னை ஏற்றுக்கொள் என்று அவள் காலிலேயே இராவணன் விழுகிறான் என்று சீதியின் கற்புச் செருக்கை ஏத்தி இருக்கிறார் கம்பநாட்டார்.

இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்.

கடைசியாக, சீதையின் அந்தத் துணிச்சலை, அடுத்த ஒப்பீட்டில் இராவணன் அழிவுக்குப் பின்னர், இராமனுக்கும் சீதைக்கும் இடையில் நடக்கும் உரையாடலைக் காண்போம்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார். அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த ஃபத்வா எனும் பகிரங்கக் கொலை மிரட்டலைக் கண்டிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த இளம் பெண்களின் இசைக்குழுவான “பிரகாஷ்” (paragaash)-க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

Kashmir_Girls_Band

இவை எல்லாம் பாகிஸ்தான் ஆக்ரமித்துத் திருடிக்கொண்ட காஷ்மீரில்; தாலீபான்களின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடக்கவில்லை. ஜனநாயகத்தின் வாசலை வெளிச்சமிட்டுக் காட்டும் பாரத மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. நாகரிக சமுதாயமான பாரத சமுதாயத்தில் இந்த அநாகரிகமான செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை பேசும் எந்த நாளேடும் இது குறித்துப் பேசவில்லை. விவேகானந்தர் படத்தை பிரசுரிப்பதால் கற்பழிப்புகள் அதிகமாகிறது என்று அவதூறு செய்தி பரப்பிய இழிவான The Hindu நாளேடு இது பற்றி உடனே செய்தி வெளியிடவில்லை. ஆபாசத்தையும் கலாசாரக் கேட்டையும் பெருமளவு வியாபாரப்படுத்தும் ஆபாச Outlook இதழோ, இன்ன பிற காசு வாங்கிக்கொண்டு ஊடக வேசித்தனம் புரியும் இதழ்களோ, இது பற்றி வாயே திறக்கவில்லை. உச்சபட்சக் குரலில், இந்தியாவில் மகளிர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, கலாசாரக் காவலர்களான பாஜக, சங்பரிவார் கும்பல்களை அழிக்க வேண்டும் என்று தினமும் பிரசாரம் செய்யும்– அயல்நாட்டுப் பணத்தில் கொழிக்கும் ஆங்கில ஊடக ஜாம்பவான்களோ வாயைத் திறக்கவில்லை.

இந்த ஆபத்தான, வெளிப்படையான கொலை மிரட்டல் ஃபத்வா இந்தியச் சமூகத்தை எதை நோக்கி நகர்த்துகிறது? இது கேள்விக்குள்ளாக்கும் பெண் சுதந்திரத்தின் பின்விளைவுகள் என்ன? நாகரிக சமூகத்தில் இப்படியான பிற்போக்கான, அடிப்படைவாத சிந்தனைகளின் தாக்கம் என்ன? ஏற்கெனவே கல்வி அறிவு, வேலை வாய்ப்புத் துறையில் பின்தங்கி இருக்கும் ஏழை இஸ்லாமிய சகோதரிகளின் சமூக நிலையை என்ன விதமான அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தும்? தாலிபான் பாணியிலான வஹாபிய சிந்தனையின் பின்விளைவுகளையும் யோசிக்கலாம்.

சமீப காலமாக இந்தியா போன்ற பண்பாட்டுக் கூறுகளின் விளைநிலத்தில் அடிப்படைவாத அச்சுறுத்தல்களும், வஹாபியக் குரூரங்களுக்கு பெருகும் சிறுபான்மையின ஆதரவும், பொது நீரோட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையின மக்களை அச்சமும் பீதியும் கொள்ள வைக்கின்றன. கற்காலச் சிந்தனைகளை ஒட்டிய காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், நாகரிக மக்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் குரூரமான தண்டனை முறைகள். பழங்குடிகளின் கண்மூடித்தனமான போர் வெறியேற்றப்பட்ட மனிதர்கள், பாதிக்கப்படும் இளைய சமுதாயம், போராடிப் பெற்ற பெண் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கி பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், பாலியல் கொத்தடிமைகளாகவும் ஆக்குவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் இது போன்ற இழிவான செயல்களை உடனடியாகக் கிள்ளியெறியா விட்டால் பெரிய பாதிப்பை, கலாசாரச் சீரழிவை, மானுடப் பேரழிவை இது போன்ற செயல்கள் ஏற்படுத்தி விடும். கருத்துக் குருடர்களையும், போலி மதச்சார்பின்மை பேசுபவர்களையும், காட்டுமிராண்டிகளையும், அடிமை வியாபாரம் செய்வதற்காக அலையும் வியாபாரிகளையும் புறம்தள்ளிவிட்டு நாம் முன்னகர்வோம்.


காஷ்மீரில் முறிக்கப்பட்ட பெண் உரிமைக் குரல்:

malala03வங்கப் பிரிவினையின் போது தேவையற்ற முறையில் இந்திரா காந்தி கைதியாகப் பிடித்த 93,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களையும் கூலிப்படை பயங்கரவாதிகளையும் சிம்லா ஒப்பந்தப்படி எந்த நிபந்தனையும் விதிக்காமல்– பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்திருந்த காஷ்மீரப் பகுதிகளை விடுவிக்கவும் கோராமல்– விட்டதன் பிரதிபலனை இன்று வரை இந்தியா அனுபவிக்கிறது. அந்தப் பள்ளத்தாக்கின் அப்பாவி மக்களும், பூர்வகுடி பண்டிட்களும், தாக்கூர்களும், பாசுபத சைவத்தைப் பின்பற்றும் சிறுபான்மையின இந்துக்கள் மட்டுமின்றி, பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். தொடர்ச்சியாக உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதன் மூலம் அந்த மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றங்களைத் தடுத்துத் தேக்கி வைப்பதன் மூலம் அவர்களுக்கு இந்திய அரசின் மீது வெறுப்பை வளர்த்து, அந்தப் பகுதியைத் துண்டாடி இந்தியாவை சிதைக்கலாம் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடந்த 40 வருடங்களாக காஷ்மீரப் பள்ளத்தாக்கு மக்களுக்கு எந்தவித அமைதியும், நல்ல வாழ்வும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அங்கு திட்டமிட்டு அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் போஷித்து வளர்த்து வருகிறது. அவர்களால் பெருவாரியாக நிம்மதியைத் தொலைத்த காஷ்மீர மக்கள் நடுவில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பிக்கிறார்கள். காஷ்மீரத்து மக்கள் இப்போதுதான் சுதந்திரமாக வெளியே வர துவங்கியிருக்கிறார்கள்.

சில பதின்மப் பருவத்துச் சிறுமிகள் தங்களின் மேலான நுண்ணுர்வின் வாயிலாக உலகைப் பார்க்க விரும்பி இசை எனும் கலை வடிவத்தின் வழியாக தங்களின் குரல்களை திசையெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார்கள். பிரகாஷ் (from darkness to light) இருளிலிருந்து ஒளிக்கு என்ற வாக்கியத்துடன் ஒரு band இசைக்குழுவை அனிக்மா, நோமா மற்றும் ஃபாரா என்ற 3 சிறுமிகள் சென்ற ஜனவரி 2012-லிருந்து ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள் (குழுவின் ஃபேஸ்புக் பக்கம்). சென்ற டிசம்பரில் காஷ்மீரின் 2012-ஆம் ஆண்டுக்கான இசை விழாவில் பரிசு வென்ற பின் இந்தச் சிறுமிகளுக்கு முக்கியத்துவம் கூடியது. இந்தியா முழுக்க இவர்களுக்கு ஆதரவு பெருகியது. பலரும் இவர்களை ஊக்குவித்தனர். உடனே அடிப்படைவாதிகள் களத்தில் குதித்தனர். முதலில் அவர்களின் முகநூல் பக்கத்தில் மிரட்டினர். அவர்களின் மேனேஜர் நஸீரைத் தனியாக அழைத்து எச்சரித்தனர். திடீரென துகாதார்ன்-இ-மில்லத் என்ற இஸ்லாமிய பெண்கள் பயங்கரவாத அமைப்பினர் இந்தச் சிறுமிகள் செய்வது கொலை நிகர் குற்றம் என அறிவித்தனர்.

இப்படிப் பெண்கள் வெளியே வந்து பாடுவது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்தச் சிறுமிகள் தொடர்ந்து பாடினால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது. ஏற்கெனவே மாநிலத்தின் தலைமை முஃப்தி இந்தச் சிறுமிகளுக்குத் தடையாணை (ஃபத்வா) பிறப்பித்திருக்கிறார். என்றும் சல்மான் ருஷ்டிக்கு என்ன செய்தார்களோ, தஸ்லீமா நஸ்ரினுக்கு என்ன செய்தார்களோ, படிக்க வேண்டும் என்று சொன்னதற்காக மலாலாவை என்ன செய்தார்களோ அப்படிச் செய்வோம் என்று மென்மையான(?) மொழியில் சொன்னர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடிக்கும் சிலரும் இப்படியெல்லாம் இளம் பெண்கள் வெளியே வந்து பாடலாமா என்று பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். மறைமுகமான தாக்குதல் மிரட்டலும் அந்தப் பதிவுகளில் இருந்தன.

இந்த முக நூலில் இருந்தும் ஹயா அந்ராபி என்ற முகநூலில் இருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் போலீஸ் முதல் தகவல் அறிக்கை தயாரித்த உடன் உடனடியாக ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

[youtube http://www.youtube.com/watch?v=aX_BbG–ULg]

பகிரங்கக் கொலை மிரட்டலுடன் அந்த அழிக்கப்பட்ட யூ ட்யூப் வீடியோவின் காப்பியை ஹெட்லைன்ஸ்டுடே ஒளி பரப்பியது. அரசோ பயங்கர வாதிகளைக் கண்டிக்காமல் நீங்கள் பாடுங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்றதோடு அமைதி காத்தனர். பயந்து போன பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உயிருக்கும், மானத்திற்கும் பயந்து தங்கள் குழந்தைகளை அமைதி காக்கக் கேட்டுக்கொண்டனர்.

kashmir_girls_band_2

காஷ்மீரின் எழிலோடும் குளுமையோடும், இனிமையோடும் இருந்த அந்தப் பூங்குயில்களின் குரல்வளையும் ஜனநாயக உரிமைகளின் குரல்வளையும் ஒருங்கே நெறிக்கப்பட்டது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை முஃப்தி இப்படி பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கிறாரே என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. அனைவரும் அந்தச் சிறுமிகளுக்கு அறிவுரை வழங்கினர். சிறுமிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தலைமறைவாக வைத்துள்ளனர். யாரும், குறிப்பாக ஊடகங்கள், சிறுமிகளோடு தொடர்புகொள்ள முடியாத வகையில் அவர்களது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். முதலமைச்சரின் ட்வீட் உறுதிமொழியோ, காவல்துறையோ தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்தப் பெற்றோர் கூறுகின்றனர். பள்ளத்தாக்கு தனக்குக் கிடைத்த கூடுதல் இசைக்குரல் இனிமையை இழந்திருக்கிறது.

ஆனால் யார் கண்டித்தாலும் அடிப்படைவாதம் தான் இறுதியில் வெல்லும் என்ற முடிவை வலுவாக தாலீபானிய அடிப்படைவாத வஹாபிய சிந்தனை பொதுமக்களிடம் விதைக்கிறது. இதன் மூலம் பெருவாரியான பயத்தை விதைக்கிறது. நாகரிக சமூகத்தை இதன் மூலம் பின்னுக்கு இழுத்து கற்காலத்தில் மக்களை இருத்தப் பிரயத்தனபடுகிறது. பெண்களை சமையலுக்கும், பாலியல் வல்லுறவுக்கும், இதர வீட்டு வேலைகள் செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பண்டம் என்பதைத் தாண்டி வேறில்லை என பெண்களையும் நம்பச்செய்து அவர்களையும் அதற்காகப் போராட செய்யும் அளவுக்கு அது குரூரமாகத் திட்டமிட்டு செயலாற்றுகிறது.

இதன் மூலம் அருவெறுப்பு அடைந்திருக்கும் சராசரி நியாய உணர்வுள்ள எளிய இஸ்லாமிய மக்களிடம் நான் கேட்பதெல்லாம் அந்தச் சிறுமிகளுக்கு எதிரான இந்த மதவாத ஒடுக்குமுறையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே இளம் பெண்களின் கலைத்திறமை வெளிப்பாடுகள் கூடாது என்று சொல்கிறதா? உண்மைதான் என்றால் அது நியாயம்தானா? இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த 21-ஆம் நூற்றாண்டில் தொடர்வது பொருத்தம்தானா? பொருத்தமில்லை என்றால் இதற்கும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா? இப்போது நீங்கள் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டால் மலாலாவிற்கு நிகழ்ந்த கொடுமை சுதந்திர இந்தியாவின் மகள்களுக்கும் ஏற்படும். ட்வீட்டரில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அமைதி காக்கும் ஒமர் அப்துல்லா தன் ஜனநாயகக் கடமையிலிருந்து வழுவியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கற்பழிப்புக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அரசின் அவசரச் சட்டத்தையே இதற்கும் உபயோகித்து அப்பாவிப் பெண்களை, சிறுமிகளை மிரட்டிய அந்த மதத்தலைவருக்கும் அரசு விதிக்குமா?

women rights01இது போன்ற கேவலங்கள் எல்லாம் நாகரீக உலகிற்கும் பெண்கள் சமூகத்திற்கும் இடையில் ஒரு மிகப்பெரும் பள்ளத்தை உருவாக்கி பெண்களை வெறும் பண்டமாகவும், பாலியல் கொத்தடிமைகளாக மட்டுமே வைத்திருப்பதற்கான சதியை பழமைவாதிகள் முன்னெடுக்கிறார்கள். அதனால் தங்களின் சகோதரிகளும், தாய்மார்களும், மகள்களும் சமூக அமைப்பில் கீழான நிலையில் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரம் என்பது ஆண்களால் அனுமதிக்கப்படும் அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும். பெண் சமூகமே ஒழுக்கவியல் சங்கிலிகளால் கடுமையாகப் பிணைக்கப்பட்டு, அவர்களை மன உளைச்சலில் ஆழ்த்தி பழங்குடி சமூக அந்தஸ்த்திலேயே வைத்திருக்க பெரும் முயற்சி நடக்கிறது. இதனால் ஏற்கெனவே சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருக்ககூடிய ஏழை இஸ்லாமிய சகோதரிகள், தாய்மார்களின் வாழ்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளாகி, மேலும் சிக்கலாகப்போகிறது. கல்வி கற்கப் போனால் கொலை செய்வோம் என்று மிரட்டி, கொலை முயற்சியும் செய்த தாலீபான் பாணியிலான அடிமை முறையை இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டிலும் புகுத்தி இங்குள்ள ஏழை மக்களின் மீதும் தேவையற்ற அடிப்படை வாத சமூக அழுத்தங்களைத் திணிக்கிறார்கள்.

மலாலாவை கொலை செய்ய முயன்றது ஒரு சமூகத்தின் கல்வி முயற்சியை தடுப்பது மட்டுமே என்பதைத் தாண்டி அதற்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. இதன் விளைவுகள் அந்தச் சமூகத்தில் ஏற்படுத்தும் மதிப்புகளை நோக்கினால் ஏழை இஸ்லாமியச் சிறுமிகளின் கல்வி பின்னுக்குத் தள்ளப்படும். அவர்களுக்கான சமூக சுதந்திரம் பறிக்கப்படும். அவர்களின் கல்வி அறியாமையும், சமூகத் தனிமைப்படுத்தலும் அவர்களின் உரிமைகளை மேலும் இல்லாமலாக்கும். ஏற்கெனவே மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் இஸ்லாமிய சகோதரிகளும், தாய்மார்களும் மேலும் கீழான சமூக நிலையை அடையவே இது போன்ற வஹாபிய அடிப்படைவாத சிந்தனைகள் வழிவகுக்கும். புர்கா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கல்வி கற்கும் பெண்களைக் கொலை செய்வது, பள்ளியில் ஒரு மாணவனுடன் தன் மகள் பேசினார் என்பதற்காக பெற்ற குழந்தையின் மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெற்றோர்களை ஊக்குவித்து வளர்ப்பதன் வழியாக, பெண்களுக்கு 1000 ஆண்டுகளாக இருந்த சமூகத் தடைகளைத் தாண்டி வளர்ந்த இன்றைய நிலையை மீண்டும் மாற்றி பழைய நிலையை உறுதிப்படுத்துவதன் வழியாக அவர்களை பாலியல் கொத்தடிமைகளாக மட்டுமே வைத்திருப்பதற்கான மனநிலைக்கு எதிராகப் போரிட வேண்டியது நம் கடமையாகும். நம் சொந்த சகோதரிகளும், தாயும், மகளும் முன்னோக்கி நடப்பதைப் பெருமையுடன் பார்ப்பதும் அதை ஆதரிப்பதும் ஒரு நாகரிக சமூகத்தின் பெருமிதமான வெற்றியாக இருக்கும். பள்ளத்தாக்கில் சிறகொடிந்து இருக்கும் அந்தப் பாடும் வானம்பாடிகளுக்கு என் மனமார்ந்த ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

malala02

துக்தரன் – இ – மில்லத்

காஷ்மீரிலுள்ள செல்வாக்கு பெற்ற பெண்கள் அமைப்பு இந்த இசைக்குழுவுக்கு எதிரான நிலையை எடுத்தது.எதிர்ப்பு தெரிவித்தது .என்றெல்லாம் மிக மென்மையான மொழியில் மீடியாக்களால் (i meant it for paid media and pro secular media & media persons.)வர்ணிக்கப்பட்ட அந்த பெண்கள் அமைப்பு பற்றியும் அதன் தலைவி ஆயிஷா அந்ரோபி பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோம். DeM எனக்குறிப்பிடப்படும் துக்த்தரன் – இ – மில்லத் அமைப்பு 1987 முதல் செயல் படுகிறது தாங்கள் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு என்ற அறிவிப்போடு.அதிர்ச்சி அடைய வேண்டாம் . இதற்கு முன்னால் அதன் தலைவியின் பேச்சை கேட்டவர்கள் நடுங்கிப்போனார்கள். அது என்னவென்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் புர்கா அணியாமலோ, இஸ்லாமிய உடைகளை அணியாமலோ செல்பவர்கள் மட்டுமின்றி ஜீன்ஸ் உள்ளிட்ட மேலை நாட்டு உடைகளை அணிபவர்கள் மீது ஆசிட் வீச வேண்டும் என்று ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார் 2000 ஆவது ஆண்டு . இதை சிரமேற்று இவர்களின் பயங்கரவாத பிரிவான லஷ்கர் – இ ஜாபர் 2 பெண்கள் மீது ஆசிட் ஊற்றி தங்கள் செயலை மக்களுக்கு காண்பித்தார்கள் (http://www.mid-day.com/news/2001/sep/15235.htm ).அதை வெளிப்படையாக செய்ய தூண்டியவர் தான் அம்மையார் ஆயுஷா (http://banditash.wordpress.com/2008/04/06/dukhtaran-e-millat-asiya-andrabi/)அந்த்ராபி .  dem01பாகிஸ்தானால் திருட்டுத்தனமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் இப்போது ஒரு சம்பவம் நடந்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்தது.ஒரு இஸ்லாமிய மாணவி தன் வகுப்பு தோழனுடன் பேசியதற்காக சொந்த பெற்றோர்களால் ஆசிட் நிறைந்த ட்ரம்மில் அமிழ்த்தி கொல்லப்பட்டார்.அது மத ரீதியாக சரி தான் என வாதிட்டவர் தான் நம் மாதர் குல திலகம் ஆயிஷா அந்த்ரோபி.(http://www.guardian.co.uk/world/2012/nov/02/parents-accused-kashmir-acid-attack ).இந்த பெற்றோர்கள் சந்தேகித்த பெண்ணின் வயது 15.ஜோஹிரா யூசுப் எனும் பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய உறுப்பினர் தெரிவிப்பது என்ன வேன்றால் மாதம் 10 தாக்குதல் ஆவது பெண் குழந்தைகளின் உடை சார்ந்தும், ஒழுக்கம் சார்ந்தும் நடை பெறுகிறது . இது ஒரு நாகரீக சமூகம் தானா? என கேள்வி எழுப்புகிறார்.ஆனால் ஆயிஷாயும் அவரின் அடிப்படைவாத தோழிகளும் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள் அந்த பெண்களை . நீங்கள் பாடினால் உங்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது என்கிறார் . ஆறு ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காகவும் ,பயங்கரவாத செயல்களுக்காகவும் சிறை சென்று மீண்டு வந்த ஆயிசா அந்த்ரேபி.காஷ்மீரத்திற்காக துப்பாக்கி, வெடிகுண்டு ஏந்தி போராடும் லஷ்கர் இ தொய்பாவும், ஹரிககத் உல் முஜாகீதீனும் தான் காஷ்மீர் மக்களின் பிரதி நிதிகள். மற்றவர்கள் அல்ல என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் தான் இவர். இந்த அமைப்பை பற்றிய தெற்காசிய தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பின் இணைய தளம் சொல்வதை பாருங்கள் (http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/dukhtaran.htm ).இந்த அம்மையார் தான் மகளிர் அமைப்பின் தலைவர் என்றால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் என்ன விதமான முன்னேற்றம் ஏற்படும் என நினைக்க நடுக்கமாக இருக்கிறது.

dem02
மேலதிக விபரங்களுக்கு :

http://www.voanews.com/content/kashmiri-girl-band-folds-after-muslim-cleric-issues-fatwa/1597597.html

http://tribune.com.pk/story/502931/kashmir-girl-band-quits-after-fatwa/

http://www.irishtimes.com/newspaper/breaking/2013/0205/breaking26.html

http://www.bbc.co.uk/news/world-asia-india-21335186

http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/dukhtaran.htm

http://www.youtube.com/verify_controversy?next_url=/watch%3Fv%3D5Ue4Hm0-4YE%26bpctr%3D1360416591

http://www.youtube.com/watch?v=E3Za1GcHwKI

http://www.youtube.com/watch?v=-h_RaXdvlTY

 

நிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்

ந்த பெண்மணி வெளிநாட்டு பெண்மணி. ஆனால் இந்த தேசத்துக்காகவே வாழ்ந்தார். இந்த நாட்டுக்காக இந்நாட்டு மக்களுக்காக அவர்களில் ஒருவராக வாழ்ந்து தன்னைத்தானே அணு அணுவாக அவர்களுக்காக சமர்ப்பித்தார். ஏழை எளிய மக்கள் வாழும் குப்பங்களில் சேரிகளில் இறங்கி சென்று வேலை செய்தார். சாதாரண காலங்களில் மட்டுமல்ல பெரிய நோய் அந்த மாநகரம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில். அவர் யார்?

இந்த கேள்வியை கேளுங்கள். எந்த இந்து குழந்தையும் உடனடியாக இதற்கு பதிலளிக்கும்: அன்னை தெரெசா!

ஆனால் தெரசா செய்த ‘சேவை’யின் பின்னால் துல்லியமான பொருளாதார கணக்குகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளின் மத மற்றும் பண்பாட்டு மேலாண்மையை தூக்கிப் பிடிக்கும் பதாகை தாங்கியாக தெரசாவை முன்னாள் காலனிய சக்திகளும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் முன்வைத்தன. மனிதர்களை குறித்து கவலைப்படாத, மனிதர்களை இழிவு செய்கிற இந்திய பண்பாட்டினால் அவலமடைந்தவர்களுக்கு மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டார். தெரசா ஆற்றியது சேவை அல்ல; மேற்கத்திய பண்பாட்டு மத மேலாண்மையை மூன்றாம் உலகநாடுகள் ஏற்பதற்கான பிரச்சார முதலீடு.

ஆனால்… ஆனால், மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய பண்பாட்டின் மீதும் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம். அவர்தான் மார்கெரட் எலிஸபெத் நோபிள் என்கிற சகோதரி நிவேதிதை. பாரதத்துக்கு சமர்ப்பணமாக மேற்கு அளித்த சகோதரி அவர். உண்மையாக சமுதாயத்துக்கு தொண்டு செய்த அவரை, வழக்கம் போலவே போலி பகட்டுகளை மட்டுமே மதிக்கும் சமுதாயமாக மாறிவிட்ட நாம், மறந்துவிட்டோம்.

இந்நிலையில்தான் இரு நூல்கள் அவரது சமாதியின் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டுள்ளன.

 

யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி முதல்வராக இருபது ஆண்டுகள் சேவை செய்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது ஆராய்ச்சி ‘சகோதரி நிவேதிதையின் எழுத்துக்களில் பாரத தரிசனமும் பாரத விரோத போக்கின் மீது எதிர் தாக்குதலும்’ என்பதாகும். அவருக்கு தீட்சை அளித்த சுவாமி சித்பவானந்தர் அவருக்கு அளித்த கட்டளை ‘சகோதரி நிவேதிதையின் பெருமையை உலகறியச் செய்’ என்பதாகும். அவ்விதத்தில் வெளியாகி உள்ளவை இந்த இரு நூல்களும்.

’வினா விடைகளில் ஒரு வியத்தகு வாழ்வு’ – இந்நூல் கேள்வி பதில்களாக சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை விவரிக்கிறது. உதாரணமாக பிளேக் நோய் கல்கத்தாவை பீடித்து வாட்டிய காலகட்டத்தில் சகோதரி நிவேதிதையின் சேவையை இந்நூல் இப்படி விளக்குகிறது:

கேள்வி 129: சகோதரி நிவேதிதை பிளேக் நோய் நிவாரணப் பணியில் என்னென்ன செய்தார்?

நிவாரணக்குழு உறுப்பினர்களான ராமகிருஷ்ண மடத்துத் துறவியருடன் சேர்ந்து நிவாரணப் பணி எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதைச் செயல்படுத்துவதில் குழு உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்தார். நிவாரணப் பணிக்காக அரசு அதிகாரிகளை சந்தித்தார். திட்டமிடுதல் மட்டுமின்றி களத்திலும் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தார். தொண்டர்களோடு இணைந்து தானும் வேலைகள் அனைத்தையும் செய்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி அவர் உழைத்தார். பிளேக் நோயாளிகளை தானே நேரடியாக கவனித்து சிகிச்சை செய்தார். நிவாரணப் பணிக்கு தேவையான நிதி திரட்டினார். அதன் பொருட்டு வேண்டுகோள்கள் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார். மாணவர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார். பிளேக் நோய் நிவாரணம் குறித்தும் சுகாதரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு பகுதியில் தெருவை சுத்தம் செய்ய எவரும் வராத போது தாமே துடப்பத்தை எடுத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்யலானார். அவர் படைத்திருந்த ஆற்றல்களையெல்லாம் பொது நலத்திற்கு பயன்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. மரணத்தோடு போர் புரிவது போலிருந்தது அவர் சலிக்காமல் செய்த சேவை. (பக்.22)

வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வந்த சகோதரி ஒரு கட்டத்தில் அந்த பாலையும் மக்களுக்காக தியாகம் செய்தார். அந்த ஆச்சார வாதம் நிறைந்த எதிர்ப்பு சூழலில் பெண் குழந்தைகளுக்கு என கல்விச் சாலை தொடங்கினார். தாய்வழிக் கல்வி புகட்டினார்.

இக்கட்டத்தில் விவேகானந்தரிடம் ஆலோசனை கேட்கிறார் நிவேதிதை. அப்போது விவேகானந்தர் அளித்த அறிவுரை தனி கேள்வி-பதிலாக முன்வைக்கப்படுகிறது: “அதை (ஆலோசனையை) நீ பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொள்வாய்’ என்றார் சுவாமி விவேகானந்தர். (பக்.23)

பன்முக மேதமை கொண்டவராக இருந்த நிவேதிதை அறிவியலில் இந்தியர்களின் பங்களிப்பு இனிவரும் நாட்களில் பண்பாட்டு மேன்மையையும் விடுதலையையும் வலியுறுத்தவும் சமூக மேம்பாட்டுக்கும் முக்கியமானது என அறிந்து கொண்டார். எனவே ஜகதீஷ் சந்திர போஸுக்கு அவர் மிகவும் உதவி செய்தார். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு செய்த பல இடைஞ்சல்களை சகோதரி எதிர்த்து போராடினார். கொடி பிடிக்கவில்லை. கோஷங்கள் போடவில்லை. அமைதியாக மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார். (பக்.25) அன்று 1901 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையில் முக்கியமானது. ஏன்? அந்த ஆண்டில்தான் சகோதரி நிவேதிதை பாரதம் விடுதலை பெற்றால் ஒழிய முழுமையான மேம்பாடு பாரதத்துக்கு கிடைக்காது என முடிவுக்கு வந்தார். (பக்.31)

237 கேள்வி பதில்கள் மூலம் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை இந்த நூல் விளக்குகிறது. முக்கியமான சில புகைப்படங்கள் உள்ளன. மாணவ மாணவிகள் சகோதரியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் அவரது முக்கியமான கருத்துக்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

சகோதரி நிவேதிதையின் சமாதி தின நூற்றாண்டை ஒட்டி அதே ஆசிரியை எழுதியுள்ள மற்றொரு நூல் ‘நிகரில்லா நிவேதிதை’. வினாவிடை நூலில் கூறப்பட்டுள்ள விசயங்களின் விரிவான சித்திரத்தை இந்த நூலில் நாம் காண்கிறோம்.

‘நிகரில்லா நிவேதிதா’ நூல் ஆறு கட்டுரைகள் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொன்றும் சகோதரி நிவேதிதையின் ஒவ்வொரு பரிமாணத்தை ஆழமாக விளக்குகிறது. முதல் கட்டுரை ‘உன்னத குருவின் உத்தம சிஷ்யை’ இக்கட்டுரை சுவாமி விவேகானந்தர் எவ்விதமாக சகோதரி நிவேதிதையை மெய்ஞான பயிற்சிகள் மூலம் பாரத தேச சேவைக்கு பக்குவப்படுத்தினார் என்பதை விளக்குகிறது. அதில் சுவாமிஜி கடுமையாக இருந்தார். உதாரணமாக, சகோதரி நிவேதிதை ‘பொதுவாக உலக மக்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர் அவ்வாறல்ல’ என கூறினார். ‘பொதுவாக உலக மக்கள் குணத்திலிருந்து ஒரு இனத்தை மட்டும் மேம்படுத்தி சொல்லும் தேசபக்தி பாவமே தவிர வேறெதுவுமில்லை’ என கடுமையாக கூறினார் சுவாமி விவேகானந்தர். (பக்.20)

அடுத்த கட்டுரை ‘சகோதரி நிவேதிதையும் பாரத பண்பாடும்’. பாரத பண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்கும் சகோதரி நிவேதிதை அளித்த கூர்மையான பார்வையை கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை. குடும்ப அமைப்பாகட்டும், தினசரி நடைமுறை வாழ்க்கையாகட்டும், ஹிந்துக்களின் சமயச் சடங்குகள். கோவில் திருவிழாக்கள், தேசிய இதிகாசங்கள் என தொடங்கி வேப்பமர வழிபாடு வரை அனைத்தையும் சகோதரி நிவேதிதை ஆழமாக கவனித்து விரிவாக பதிவு செய்துள்ளது மட்டுமல்ல ஒரு அன்னியராக வெளியிலிருந்து மதிப்பிடாமல் ஒரு ஹிந்துவாக உள்ளே வாழ்ந்து உணர்ந்த தன்மையை இக்கட்டுரை நமக்கு அளிக்கிறது. இது வெறும் பண்பாட்டு மேன்மை மட்டும் சார்ந்த விசயமல்ல. ஒரு ஹிந்து சமூகவியல் – உள்ளார்ந்த பார்வை நமக்கு இன்று தேவைப்படுகிறது. அதற்கான தொடக்கப்புள்ளியை சகோதரி நிவேதிதை அளித்துள்ளார். அதை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுத்தோமா என்கிற சங்கடமான கேள்வியையும் அது நம்முள் எழுப்புகிறது.

அடுத்தது ‘சகோதரி நிவேதிதையும் சேவையும்’. எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள், குடிசை குடிசையாக சென்று பணியாற்றினர், எப்படி நிவேதிதா தானே களமிறங்கி பணியாற்றியதன் மூலம் முன்னுதாரணமாக விளங்கினார் என்பதையெல்லாம் இப்பகுதி தெளிவாக விளக்குகிறது. (நிகரில்லா நிவேதிதா பக். 71-2) அத்துடன் இது ஏதோ ஒரு ஆதாய அறுவடைக்காக செய்யப்படும் முதலீடு அல்ல மாறாக சேவைக்காகவே செய்யப்படும் சேவை. சேவையே வழிபாடாக அதுவே இலட்சியமாக நடத்தப்படும் சேவை. இச்சேவையின் தத்துவார்த்த உள்ளீடு ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகானந்த சேவை தத்துவம் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.

சகோதரி நிவேதிதை அடிப்படையில் ஒரு கல்வியாளர். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர். அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிப்பதே உண்மையான விடுதலையின் முதல் படியும் முக்கிய படியும் ஆகும் என்பதை உணர்ந்தவர். இங்கிலாந்தில் கல்வியாளராகவே அவர் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். வசதியான கல்விசாலை ஒன்றில் கிடைத்த வேலையை துறந்து நிலக்கரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி சேவை புரிய சென்றவர் அவர். அறிவியல் பூர்வமாகவும் நடைமுறைப்பூர்வமாகவும் கல்வி அமையவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

குழந்தை எந்த பிராணியைப் பார்த்தும் அருவருப்பு அடைவதோ அச்சம் கொள்வதோ கூடாது. அதன் பொருட்டு இந்த ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி நத்தை புழுக்கள் மரவட்டை ஆகிய ஜந்துக்களை குழந்தை தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். உயிரினங்களைப் பார்த்து அவை நமக்கு தோழர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்கிறார் நிவேதிதா. (பக்.93)

100 ஆண்டுகளுக்கு முன்னர் நிவேதிதா கூறிய இந்த கல்வியியல் கோட்பாடு இன்னும் நம் உயிரியல் கல்வியில் எட்டப்படாமலே உள்ளது என்பது எத்தனை வேதனையான விசயம்? அதே நேரத்தில் உயிரியலையும் சூழலியலையும் முழுமையாக கற்க இதுவே மிகவும் முதன்மையான வழிமுறை என்பதை இன்று சர்வதேச அளவில் உயிரியல் கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை சகோதரி வலியுறுத்தினார். குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க ஐம்பது கேள்விகளுக்கு ஆசிரியருக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். ’சகோதரி நிவேதிதையின் கல்விக்கொள்கைகள்’ என ஒரு கட்டுரையும் ’சகோதரி நிவேதிதை ஆற்றிய கல்விப்பணி’ என ஒரு கட்டுரையும் உள்ளன. இவை கல்வியில் அதன் தரத்தில் அதன் முக்கியத்துவத்தில் சகோதரி நிவேதிதை காட்டிய ஈடுபாட்டை விளக்குகின்றன. அத்துடன் பெண் கல்விக்காக எத்தனையோ சவால்களையும் எதிர்ப்புகளையும் மீறி சகோதரி நிவேதிதை உழைத்தார் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதி கட்டுரை சகோதரி நிவேதிதையின் தேசியம் குறித்ததாகும். பாரதத்தின் தேசிய கொடியை முதலில் உருவாக்கியவர் சகோதரியே. ததீசி முனிவரின் முதுகெலும்பால் உருவான வஜ்ஜிரம் வலிமை மற்றும் தன்னிகரற்ற தியாகத்தின் பண்பாட்டு-தொன்ம சின்னமாகும். அதையே இந்த தேசத்தின் சின்னமாக அவர் பொறித்திருந்தார். மகாபாரதத்தில் தாய் காந்தாரி கூறும் வார்த்தைகளான ’எங்கு அறமோ அங்கே வெற்றி’ (யதோ தர்மஸ் ததோ ஜய:) எனும் வார்த்தைகள் தேச இலச்சினை வாக்கியமாக சகோதரி கருதினார். தேசியம் என்பதை குறுகிய இனவாதமாக சகோதரி முன்வைக்கவில்லை.

– மகோன்னதமான தொன்மை வாய்ந்த பாரத பண்பாடு
– அதன் பன்மையில் ஒருமை காணும் திருஷ்டி
– உலககுருவாக விளங்கும் திறம் கொண்டிருப்பினும் உலக அரங்கில் இன்று பாரதம் அடைந்துள்ள வீழ்ச்சி
– அதிலிருந்து எப்படி மீண்டெழுவது

இந்த அனைத்துத் தன்மைகளையும் கணக்கில் கொண்டு அறிவார்ந்த தேசிய கருத்தாக்கங்களை அவர் முன்வைத்தார்.

உதாரணமாக காந்தார கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது; அது மட்டுமல்ல இந்திய கலை வளர்ச்சியே மேற்கத்திய கலை தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான் என ஒரு மேற்கத்திய ‘மேதாவி’ கூறினார். அதை மறுத்து, காந்தார கலையில் உள்ள மேற்கத்திய தாக்கமே அதன் பலவீனம் என்றும், காந்தார கலைக்கு முந்தைய மகத கலையின் இயல்பான சுதேசிய வளர்ச்சியை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது அந்த காலகட்டத்தின் மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் மேன்மையானதாக இருப்பதையும் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் நிவேதிதை முன்வைத்தார்.

இந்த இரு நூல்களும் சகோதரி நிவேதிதையின் சமாதி நூற்றாண்டுக்கு தமிழ் இந்துக்கள் அவர் நினைவுக்கு அளித்துள்ள அர்ப்பணமாகும். தமிழ்நாட்டில் பெண் விடுதலையை பரப்பிய பொது உணர்வில் பெரிய அளவில் கொண்டு சென்றவர் பாரதி. அதற்கு பாரதிக்கு குருவாக அமைந்தவர் நிவேதிதை. எனவே அந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் துறவி ஒருவர் இந்த இருநூல்களையும் எழுதியிருப்பது சரியான நன்றிக்கடனே. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் இந்த இருநூல்களையும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வரலாற்றுக் கடமையாகும்.

நிகரில்லா நிவேதிதா
(விலை ரூ 45/-)

வினா-விடையில் ஒரு வியத்தகு வாழ்வு
(விலை ரூ 40/-)

ஆசிரியை: பூஜனீய யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா

நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973

ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:

நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி

நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை. 

விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. 

[பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 15ம் பாகம் 

முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது.

அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு சிறப்புற்றிருந்தனர், பின்னர் எப்படி அடிமைப் படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் விரிவாகவே விவரித்திருக்கிறார்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு மனுதான் காரணம் என்பதை வலியுறுத்தி அதை ஒழிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர். பெண்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அமபேத்கர் கொண்டுவந்து நிறைவேற்றாமல் போன இந்து சட்டத்தொகுப்பை படித்தோமானால் அம்பேத்கரின் உள்ளம் வெளிப்படும். இதே கண்ணோட்டத்தை அம்பேத்கர் இஸ்லாத்திலும் எதிர்பார்க்கிறார்.

இந்துத்வ சுதந்திரம் இஸ்லாமில் இல்லை

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? அம்பேத்கர் எழுதுகிறார் :

‘‘…. அனுகூலமான சட்ட விதிகள் எல்லாம் இருந்தபோதிலும்கூட, முஸ்லீம் பெண்மணி உலகிலேயே நிராதரவற்றவளாக இருந்து வருகிறாள்.

ஓர் எகிப்திய முஸ்லீம் தலைவர் பின்வருமாறு கூறுகிறார்:-

‘‘இஸ்லாம் தனது தாழ்வு முத்திரையை அவள்மீது பதித்துள்ளது; மதத்தின் ஆதரவு பெற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக அவள் தனது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிடுவதற்கும், தனது ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு மான முழு வாய்ப்பு அவளுக்கு அளிக்கப்படவில்லை.’’

இஸ்லாமிய ஆண் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்

தான் குழந்தையாக இருந்தபோது தன்னுடைய பெற்றோர்களல்லாத மற்றவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒரு திருமணத்தை நிராகரிக்கும் துணிவு எந்த முஸ்லீம் யுவதிக்கும் இல்லை. விவாகரத்து செய்யும் உரிமையைத் தனக்கு அளிக்கக்கூடிய ஒரு ஷரத்தை தனது திருமண ஒப்பந்தத்தில் சேர்ப்பது நலமாக இருக்குமே என்று எந்த முஸ்லீம் மனைவியும் நினைப்பதில்லை.

இத்தகைய சந்தர்ப்பத்தில் அவளது கதிப்போக்கு ‘ஒரு முறை திருமணம் செய்து கொண்டுவிட்டால் என்றென்றைக்கும் திருமணமானவாள்’ என்பதாக அமைந்து விடுகிறது. எத்தகைய கடுமையாக இன்னல் இடுக்கண்கள், தாள முடியாத கொடுமைக்கு உள்ளானாலும் திருமண பந்தத்திலிருந்து அவள் தப்பமுடியாது. அவள் திருமணத்தை நிராகரிக்க இயலாது. ஆனால் அதேசமயம் கணவனோ எத்தகைய காரணமுமின்றி, எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம்.

தல்லாக் தல்லாக் கறிவேப்பிலை

இதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத்தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.

இந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார  அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.

இடதுகைப் பெண்களும், வலதுகைப் பெண்களும்

அது மட்டுமல்ல, பலதார மணம்1 செய்து கொள்வதற்கும், இல்லக்கிழத்தி2 வைத்துக் கொள்வதற்கும் முஸ்லீம் சட்டம் கணவனுக்கு அளித்துள்ள உரிமையால் முஸ்லீம் பெண்ணின் நிலைமை மேலும் மோசமாகிறது; அவளது வாழ்க்கைக்குப் பாதுகாப்பின்மை முன்னிலும் பெரிதும் அதிகரிக்கிறது. ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்வதற்கு, வரித்துக்கொள்வதற்கு முகமதிய சட்டம் அனுமதிக்கிறது.

[1. பலதாரங்களாகத் திருமணம் செய்யப்பட்ட பெண்கள். இவர்களை இடது கைப் பெண்கள் என்று அழைக்கிறது இஸ்லாம்.]

[2. அடிமைப் பெண்கள் மற்றும் வேலைக்காரப் பெண்கள். திருமணம் செய்யாமல் இவர்களை “வைத்துக்கொள்ள” இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவர்களை வலதுகைப் பெண்கள் (Malak-ul-ameen) என்று அழைக்கிறது இஸ்லாம்.]

ஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம் சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது.

வரைமுறை இன்றி அடிமையாக்கப்படும் பெண்கள்

அதிலும் பெண் அடிமைகள் விஷயத்தில் அவர்களது எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். எத்தகைய கட்டுப்பாடுமின்றி, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமின்றி முஸ்லீமுடன் கூடிவாழ்வதற்கு அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

பலதார மணமுறையாலும், சட்டபூர்வமாக் காமக் கிழத்திகளை வைத்துக்கொள்ளும் முறையாலும் ஏற்படும் எத்தனை எத்தனையோ தீமைகளையும், மிகப்பெரும் பாதகங்களையும் விவரிப்பதற்குச் சொற்களே இல்லையெனலாம். அதுவும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இதனால் ஏற்படும் இரங்கத்தக்க அவலநிலை சொல்லத் தரமன்று.

பலதார மணமுறையும் காமக்கிழத்திகளை வைத்துக் கொள்ளும் முறையும் அனுமதிக்கப் பட்டிருப்பதால் விதிவிலக்கின்றி எல்லா முஸ்லீம்களுமே இதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொதுப்படையான முறையில் கூறிவிட முடியாது என்பது உண்மையே. எனினும் ஒரு முஸ்லீம் இந்த உரிமைகளை, சலுகைகளை சுலபமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது மனைவிக்கு துன்பத்தையும் துயரத்தையும் தொல்லைகளையும் அவலநிலையயும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

காமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம்

திரு. ஜான் பூல் என்பவர் இஸ்லாமின் விரோதியல்ல. அவர் கூறுகிறார்: ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார்.

 ‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.

பண்டம்போல் பரிமாறிக்கொள்ளப்படும் பர்தா பெண்கள்

இவ்வாறு பெண்கள் வரைமுறையின்றி ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு மாறிக்கொண்டிருப்பதால் ஒரு கணவனும் வீடும் எங்கு கிடைத்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்; அல்லது, விவாகரத்து செய்யப்பட்டுவிட்ட நிலைமையில் ஜீவனத்துக்கு வேறுவழியின்றி கீழ்த்தரமான வழிகளில் ஈடுபடும்படியான நிலைக்கு உள்ளாகிறார்கள்.

ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்திற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.

ஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.

போகக் கழிப்பறையாகிப் போன இஸ்லாமியப் பெண்டிர்

நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும்  எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.

‘முகமதின் வாழ்க்கை’ என்ற தமது நூலில் முய்ர் பின்வருமாறு கூறுகிறார்: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது. இதனால் வழக்கம்போல் பெண்கள்தான் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.’’ என்று அம்பேத்கர் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, அவர் பர்தா முறையால் இஸ்லாத்தில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்கிறார். அதையும் பார்ப்போம்.

பர்தாவுக்குள் அடைக்கப்பட்ட பரிதாபப் பெண்கள்

அம்பேத்கர் கூறுகிறார் : ‘‘இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக் கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.

இன்னும் சொல்லப்போனால்,  முஸ்லீம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்துத் தீமைகளையும் வரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லீம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.

இந்தப் பர்தா முறையின் காரணமாக முஸ்லீம் பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பெண்மணிகள் முன்புற அறைகளுக்கோ, வெளி தாழ்வாரங்களுக்கோ, தோட்டங்களுக்கோ வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

புழக்கடைகளே பெரும்பாலும் அவர்களுடைய இருப்பிடங்களாக அமைந்துள்ளன.

இளம் வயதினரும் சரி, வயதானவர்களும் சரி ஒரே அறையில் அடைந்து கிடக்கின்றனர்.

எந்த ஓர் ஆண் வேலையாளும் அவர்கள் முன்னிலையில் பணியாற்ற இயலாது.

தன்னுடைய புதல்வர்கள், சகோதரர்கள், தந்தை, மாமன்மார்கள், கணவன் மற்றும் நம்பிக்கைக்குரிய மிகவும் நெருங்கிய உறவினர்கள் போன்றோரைப் பார்ப்பதற்கு மட்டுமே ஒரு முஸ்லீம் பெண்மணி அனுமதிக்கப்படுகிறாள்.

பிரார்த்தனைக்காக அவள் மசூதிக்குக் கூட செல்ல முடியாது.

அவள் எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும் புர்கா (முத்திரை) அணிந்தே செல்ல வேண்டும்.

இந்த புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.

நோய்கள் பரப்பும் நொய்மை மார்க்கம்

இத்தகைய ஒதுக்கல்முறை முஸ்லீம் பெண்களின் உடலாரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் அவர்களைச் சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன.

அவர்களுடைய உடலமைப்பு உருக்குலைகிறது; முதுகு வளைந்துவிடுகிறது; எலும்புகள் துருத்திக் கொள்கின்றன; கைகால்கள் உருக்கோணலாகி விடுகின்றன. விலா எலும்புகளும், மூட்டெலும்புகளும் இன்னும் சொல்லப்போனால் அவர்களது எலும்புகள் அனைத்தும் வலியெடுக்கின்றன. அவர்களிடம் அடிக்கடி மிகுதியான நெஞ்சுத் துடிப்பு காணப்படுகிறது.

இந்த இடுப்பெலும்பு உருத்திரிபு பிரசவத்தின்போது அகால மரணத்தில் கொண்டுபோய் விடுகிறது.

பர்தா முறை முஸ்லீம் பெண்களின் மனவளர்ச்சிக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் ஒரு தடையாக உள்ளது.

மனோவியாதிகளுக்குள் மாட்டிக்கொள்ளும் மார்க்கத்துப் பெண்டிர்

ஆரோக்கியமான சமூகவாழ்க்கை பறிக்கப்படுவதால் அது தார்மீக சிதைவுக்கு, சீர்கேட்டுக்கு இட்டுச் செல்கிறது. வெளி உலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர்கள் தங்கள் மனத்தை சிறு சிறு குடும்பச் சண்டைகளில் செலுத்துகிறார்கள்.

இதன் காரணமாக அவர்களது கண்ணோட்டம், மனப்பாங்கு மிகக் குறுகியதாக, கட்டுப்படுத்தப்பட்டதாகி விடுகிறது. முஸ்லீம் பெண்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த தம்முடைய சகோதரிகளுக்குப் பலதுறைகளிலும் பின்தங்கி இருக்கின்றனர். எத்தகைய வெளிநிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்.

அடிமைப் புத்தியும் தாழ்வுமனப்பான்மையும், பெரும் பாறாங்கல்லாக அவர்களை அழுத்தி அமிழ்த்துகின்றன.

அறிவாற்றல் பெறுவதில், மேலும் மேலும் கல்வி கற்பதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஏனென்றால் வீட்டின் நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள எதிலும் அக்கறை காட்டாதிருக்கும்படி அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.

பர்தா பெண்கள் குறிப்பாக நிராதரவற்றவர்களாக, அபலைகளாக, மருட்சியும் பீதியும் அடைபவர்களாக, வாழ்ககையில் எந்தப் போராட்டத்திலும் துணிந்து ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்களாக, தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

பர்தா ஒரு கடும் பிரச்சினை

இந்தியாவிலுள்ள முஸ்லீம்களிடையே பர்தாப் பெண்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது பர்தா பிரச்சினையின் பரந்த பரிமாணததையும் கடுமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

பர்தா முறை தார்மீக ரீதியில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுடன் ஒப்பிடும்போது உடல்ரீதியிலும், அறிவுத்துறை ரீதியிலும் அது தோற்றுவித்துள்ள விளைவுகள் அத்தனை கடுமையானவை அல்ல என்றே கூறவேண்டும்.

பர்தா முறை இருபாலரின் பால் ஈடுபாடு குறித்து, நாட்டம் குறித்து, வேட்கை குறித்து ஏற்பட்ட ஆழமான ஐயப்பாடே இந்த பர்தா முறை தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

 இரு இனங்களையும் பிரித்து இதனைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பர்தாமுறை முஸ்லீம் ஆண்களின் பழக்க நடை முறைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பர்தா முறை காரணமாக ஒரு முஸ்லீமுக்கு தனது வீட்டுப் பெண்களைத் தவிர வெளியே உள்ள வேறு எந்த முஸ்லீம் பெண்களுடனும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. தனது வீட்டுப் பெண்களுடன் அவனுக்குள்ள தொடர்பும்கூட எப்போதேனும் நடைபெறும் உரையாடலுடன் நின்றுவிடுகிறது.

மனப்பிறழ்வுப் பாலுணர்ச்சிகளை உருவாக்கும் இஸ்லாம்

ஒரு முஸ்லீம் ஆண் குழந்தைகளாகவும் வயதானவர்களாகவும் இருப்போரைத் தவிர வேறு எந்தப் பெண்பாலருடனும் தோழமை பூணவோ, ஒன்று கலந்து பழகவோ முடியாது.

இவ்வாறு ஆண்களை பெண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு ஆண்களின் பழக்க வழக்கங்கள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஆண், பெண் இருபாலரிடையேயும் உள்ள எல்லா தொடர்பையும் துண்டிக்கும் ஒரு சமூக அமைப்பு அதீத பாலுணர்ச்சி மீதும், இயற்கைக்கு மாறான இதர தீய பழக்கவழக்கஙகள் மீதும் நாட்டம்கொள்ளும் ஓர் ஆரோக்கியமற்ற போக்கையே தோற்றுவிக்கும் என்று கூறுவதற்கு ஒருவர் மனோதத்துவ நிபுணராக இருக்க வேண்டும் என்பதில்லை.

இந்துக்களை ஏன் இஸ்லாமியர் மதிப்பதில்லை ?

பர்தா முறையின் தீய விளைவுகள் முஸ்லீம் சமூகத்துடன் நின்றுவிடவில்லை. இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து சமூகரீதியில் ஒதுக்கிவைப்பதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த ஒதுக்கல் இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஒரு சாபக்கேடாக இருந்துவருவது அனைவருக்கும் தெரியும். இந்த வாதம் வலிந்து பெறப்பட்டதாகத் தோன்றக்கூடும், முஸ்லீம்களிடையே நிலவும் பர்தா முறையைக் காட்டிலும் இந்துக்களின் இணங்கிப் பழகாத போக்கே இந்தத் தனிமைப்படுத்தலுக்கு காரணம் என்று கூறக்கூடும். ஆனால் இந்துக்கள் இதை மறுக்கிறார்கள்.

இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால் இத்தகைய தொடர்பு ஒருபுறம் பெண்களுக்கும் இன்னொரு புறம் ஆண்களுக்கும் இடையேயான தொடர்பையே குறிக்கும் என்பதால் இது சாத்தியமில்லை என்று அவர் கூறுவது நியாயமாகவே தோன்றுகிறது.

பர்தா முறையும் அதன் விளைவாக ஏற்படும் தீமைகளும் முஸ்லீம்களிடையே மட்டுமின்றி, நாட்டின் சில பகுதிகளில் இந்துக்களில் குறிப்பிட்ட சில பகுதியினரிடையேயு்ம் காணப்படுகின்றன. ஆனால் இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

இந்துக்களின் இழிவு மதத்தால் ஏற்பட்டது அல்ல

அதாவது முஸ்லீம்களிடையே காணப்படும் பர்தா முறை மதத்தின் ஆணையை ஆதாரமாக, அடிப்படையாகக் கொண்டது. இந்துக்களிடையே நிலவும் பர்தா முறை அப்படிப்பட்டதல்ல.

இந்துக்களைவிட முஸ்லீம்களிடையே தான் பர்தா மிக ஆழமாக வேரோடிப் போயிருக்கிறது.

மதத்தின் ஆணைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையேயான தவிர்க்க முடியாத முரண்பாட்டை எதிர்கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் தான் இந்தத் தீமைக்கு முடிவுகட்டமுடியும்.

பர்தா பிரச்சினை – அதன் மரபு மூலம் ஒருபுறமிருக்க – முஸ்லீம்களுக்கு அது  உண்மையிலேயே ஒரு சிக்கலான பிரச்சினை.

ஆனால் இந்துக்களுக்கு அப்படியல்ல. இந்தத் தீமையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு முஸ்லீம்கள் ஏதேனும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்பதற்குச் சான்று ஏதும் இல்லை.’’

இவ்வாறு அம்பேத்கர் இஸ்லாத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் நிலையை விளக்குகிறார்.

 முந்தைய பாகங்களின் சுருக்கம்: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.  வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம். இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 ||

(தொடரும்….)