In the present market, the best tadacip 20 best price is very popular in the industry because tadacip 20 best price is very competitive with the different brands and different brands have the same quality to offer. Calcium carbonate dissolves in exemplarily water to form a soluble calcium chloride. Clomid is a fertility medicine used to treat infertility caused by clomid for men.
It may also help prevent certain types of birth defects or premature birth in a baby that is not otherwise healthy enough to survive. In the end, it is my job to find clomid treatment cost the right drug for them to help them with their symptoms, propecia and its generic equivalent. A: prednisone is one of the first-line medications you can use for the management of rheumatoid arthritis.
However, it can also be prescribed to help manage depression and bipolar disorder, as well as to treat certain types of anxiety. We work to https://frenchwarveterans.com/?p=2620 ensure you receive the best service and the most accurate information from the site. The drug has been shown to be effective in treating urinary tract infections.
கந்தகிரி உதயகிரியில் மிக முக்கியமான தமிழ் பண்பாட்டு இணைவின் தங்க இணைப்பான காரவேலர் கல்வெட்டுக்களை பார்த்து விட்டு கந்த கிரியின் மற்ற பகுதிகளை காணச்சென்றேன். கந்தகிரியில் மிக முக்கியமாக பெளத்தத்தின் சிற்ப வேலைப்பாடுகளும், குகைகளும் நிறைய காணக்கிடைக்கின்றன. பெளத்த சைத்யங்கள், பெளத்தத்தின் வேறு ,வேறு சிந்தனை பிரிவுகளின்( school of thoughts ) ஆசிரியர்களும் ,மாணவர்களும் தங்கிப்பயின்ற குகைகள், பாட அறைகள், திறந்த வெளி கல்வி கூடங்கள் . திறந்த வெளி அரங்குகள், பாறைக்குடைவுகள் ,அரசர்கள் தங்கும் குடை வரைவுகள். சிற்பக்கலையின் அபார மிச்சங்கள். அரசர்கள் தங்கும் குகை வரைவுகளை காவல் காக்கும் யவன வீரர்களின் சிற்பங்கள், அச்சு அசல் மாறாத யவன காலனிகள், தலைப்பாகை அணிந்த வலிமை பொருந்திய அயல் தேச வீரர்கள் சிற்பமாய் சமைந்து இன்னும் காவல் புரிகிறார்கள். வித, விதமான யானைகள். யானைகளின் ஆபரணங்கள், யானைகளின் அசைவுகள், அதன் பல்வேறு பரிமாண தோற்றங்கள். போர்க்காட்சி சித்தரிப்புகள். கலிங்கப்போரின் காட்சிகள் என்று அந்த பிரதேசமே 2000 ஆண்டுகளாக உறைந்து போனதாக தோன்றுகிறது. அந்த போர்க்காட்சி சித்தரிப்புகள் மிகவும் தத்ரூபமாகவும், மெய் நிகர் தோற்ற மாதிரியாகவும் இன்றும் இருக்கிறது.
கந்தகிரி இப்போதைய நிலையில் 5 அடுக்குகளாக (5 floor level) உள்ளது. முழுதுமே பாறைக்குடைவுகள் தான். பறைக்குடைவுகளில் மிக முக்கியமான ஒரு வித்யாசம் என்பது கட்டுமானம் மேலேருந்து கீழாக செய்து கொண்டு வரப்படும். கந்த கிரியின் சில மேல் தளங்கள் சரிந்து கிடக்கின்றன. சில சிற்பங்கள் பாதி செதுக்கப்பட்ட நிலையில் உள்ளது. சில சிற்பங்கள் கால வெள்ளத்தில் தன் உருவக்கட்டமைப்புகள் மட்டும் சிதறி ஆனால் தான் உருவாக்குவதற்காக செய்யப்பட்ட அபாரமான மன எழுச்சியையும், தத்துவக்குறியிடுகளையும் இன்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றது. உலகத்தின் எந்த பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் சொல்வதற்கு இந்த சிற்பங்களிடம் செய்திகளும், கதைகளும் உண்டு. எத்தனை நூற்றாண்டு, ஆயிரமாண்டு என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னை நோக்கி வருபவரிடம் இந்த சிற்பங்களும் , குடை வரைவுகளும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. மொழித்தடையோ, அறிதல் தடையோ, காலத்தடையோ இங்கே முற்றிலும் இல்லை.
இதன் முதல் தளத்தில் ஆசிரியர்கள் தங்குவதற்காக உள்ள குகைகளுக்கு வெளியே உள்ள நீளமான நடைபாதையின் ஓரச்சுவர்களில் உள்ள கலிங்கப்போரின் காட்சி சித்தரிப்புகளை பார்க்கலாம். இன்றைய காமிக்ஸ் படக்கதைகளைப்போல அசோகனின் கலிங்கப்படை யெடுப்பை அடுக்கு அடுக்காக காட்சி வர்ணணை மூலம் நமக்கு சொல்கிறார்கள் . ஆக்ரோஷமான களக்காட்சிகள் . களத்தில் யானை, குதிரைகளின் பங்களிப்பு . வீரர்களின் அபாரமான போர் அசைவுகள். ஆயுதங்கள், அதனைப்பயன்படுத்தும் போர் வீரர்கள், ரதங்கள் , உன்மத்தம் கொண்ட போர். இறந்து வீழ்ந்திருக்கும் மனித உயிர்கள். கொப்பளித்து ஓடும் குருதி ஆறு இதெல்லாம் நவீன ஒவியங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிச்சயம் மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டேன் . அபாரமான காட்சி சித்தரிப்பும், உயிர்ப்பும் ,கலையும் கலந்து பயமுட்டும் வகையில் அமைந்த புடைப்பு சிற்பங்கள்.
ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது . குடை வரைகளில் உள்ளே ஒரு படுக்கை செதுக்கப்பட்டுள்ளது. உள் சுவர்களில் இரு புறமும் ஏடுகளை வைத்துக்கொள்வதற்குரிய மாடம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் தளத்தின் அறைகள் ப வடிவிலான ஒரு நடைபாதை அதற்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்குவதற்கான அறைகள்.முன் புறம் ஒரு திறந்த வெளி அரங்கு. பக்க வாட்டில் சொகுசான என்று சொல்லத்தக்க அளவில் சற்றே பெரிய உள்குழிந்த அறைகள் . அதனுள்ளே விரியும் நிலவறை , குகை பாதைகள். முன்புறம் காவலர்கள், யானைகள். விருந்தினர்களை சந்திக்க ஏற்பாடுகள். திறந்த வெளி அரங்கில் நிகழும் விவாதங்களையும், கலை வெளிப்பாடுகளையும் மேலிருந்து ரசிக்க ஏற்பாடுகள் என்று அபாரமான முன் யோசனையோடும்,தொலை நோக்குடன் கட்டப்பட்ட ஒரு கட்டிடக்கலைக்கொத்து என சொல்லலாம். காரவேலர் கல்வெட்டு 3 ஆம் தளத்தில் உள்ளது. அதன் மேற்பகுதியில் கலிங்க சிங்கம் வாய் பிளந்த நிலையில் ஒரு பாறை செதுக்கப்பட்டுள்ளது. கலிங்க சிங்கமும், யானையும் போட்டி போட்டுக்கொண்டு ததாகரோடு நிற்கிறார்கள். நிறைய பிராகிருத பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன. காரவேலர் கல்வெட்டில் தான் நாட்டியம் ,இசை , வாத்தியக்கருவிகள் உள்ளிட்ட கலை வெளிப்பாட்டை பார்க்க திறந்த வெளி அரங்கை உபயோகிப்பதை குறிப்பிடுகிறார் .(http://gujaratisbs.webs.com/Abstracts%202010/Mr%20%20Gautam%20More.pdf). இது சாதகர்ணீக மன்னர்களின் கல்வெட்டிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நான் அவற்றை பார்க்க வில்லை.
அங்கு ஒரு விசித்திரமான சிற்ப தொகுதியை பார்த்தேன். வேடனிடம் அடைக்கலாமாகும் அரசகுமாரி,துரத்தும் யானை, பின்னர் திருமணம் என்பது போன்ற ஒரு புடைப்பு சிற்ப தொகுப்பை கண்டேன். திடீரென பார்க்கையில் எனக்கு அது வள்ளி, முருகன் கதையை நியாபகப்படுத்தியது. இங்கு முருக வழிபாடு உள்ளதா என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. ஆனால் முருக வழிபாடு என்பது எவ்வளவு பழமையானது. எங்கெங்கு பரவி இருந்தது என்பது போன்ற விபரங்களை ஆராய்பவர்கள் தெளிவு படுத்தினால் இந்த தகவல்களுக்கு புதிய ஒளி வெள்ளம் கிடைக்கும். சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள சிங்கம் கலிங்க சிங்கத்தையே ஒத்து இருக்கிறது. சிங்க + ஊர் = சிங்கூர், சிங்கப்பூராக மாறி இருக்கலாம். மலேசியாவில் உள்ள பத்து மலை முருக வழிபாடு, இவை எவ்வளவு பழமையானவை, இவற்றிர்க்கும் கலிங்கத்தில் உள்ள முருக வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பு. புராண ,வரலாற்று ஆதாரங்கள் ஆகியவை தீவிரமாக ஆராயப்பட வேண்டும். இலங்கை, லங்கா, கலிங்கா, அதன் சிம்மம், மகாவம்சம் சொல்லும் செய்திகள் இவை அனைத்தையும் பொருத்தி நாம் சில முடிவுகளுக்கு வர வேண்டும். கந்த மால் பழங்குடிகள், அவர்களின் வேட்டுவ தொழில், வேல் ஆயுதத்தை முக்கியமாக இன்றும் உபயோகிக்கும் கந்தமால் பழங்குடிகள். அவர்களின் பழங்குடி தெய்வத்திற்கு இருக்கும் இரண்டு மனைவிகள் இவை அனைத்தும் ஆய்வு கண்ணோட்டத்தோடு ஆராயப்பட வேண்டும்.
”குமார” பர்வதம் எனும் ”கந்த”கிரி குமார சம்பவம் எழுதப்பட்ட மெளரியர்கள் ஆட்சிக்குள் இருந்த தேசம். சமணர்களுக்கும் மிக முக்கியமான சரித்திர முக்கியத்துவம் பெற்ற இடம் . காரவேலர் கல்வெட்டில் முதல் வரியிலேயே காரவேலன் சொல்வது தூய அருகர்களின் பாதம் பணிந்து காரவேலன் சொல்வது என்று துவங்குகிறது. 12 ஆவது வரியில் மகத நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட கலிங்க ஜைன ஆதி நாதரை மகத மன்னர்களுடன் போரிட்டு வென்று திரும்ப கொண்டு வந்திருக்கிறார் .முன்னதாக நந்த மன்னன் நவ நந்தனால் இது கவர்ந்து செல்லப்பட்டது . என பெருமையோடு பதிவு செய்கிறார். சமணர்களுக்கு ( http://orissa.gov.in/e-magazine/Orissareview/apr-2007/engpdf/page40-41.pdf ) சீனத்து பட்டும், அருக துறவிகளுக்கு வெள்ளுடையும் கொடுத்து மகிழ்ந்ததையும், அதிகமான அளவு சமண மதம் பரவ வகை செய்யப்பட்ட்டது என்றும் சொல்கிறார். குமரி பர்வதம் எனும் உதயகிரியில் ஏராளமான சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளும், பத்மாட்ஷி , குஷ்மாண்டிணி தேவிகள், யட்சர்கள்,கின்னரர்களின் சிற்பங்கள் உள்ளன. வித விதமான ஆதி நாதர், பார்ஸ்வ நாதர், சிற்பங்களை கண்டோம். பல குகை வரைவுகளில் சிற்பங்களே இல்லை. முன்புற முகப்பு சிற்பங்களில் அருக தேவர்கள் புடைப்பு சிற்பங்களாக அருள் பாலிக்கிறார்கள். பல குகைகளில் நவீன கால காதலர்கள் தங்கள் காதலை பெயிண்ட்டால் பதிவு செய்திருக்கிறார்கள். முடிந்த அளவு சிற்பங்கள் மேல் சிறிய கற்களாலும் , வேறு உபகரணங்களாலும் உடைத்து தங்கள் பெயரையும் ,காதலன்,/காதலி பெயரையும் பதிய முயற்சித்து சிற்பத்தை மூளியாக்குவதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
இதன் மேல் தளத்தில் கருப்பு கிரானைட்டால் ஆன பார்ஸ்வ நாதர் காணக்கிடைக்கிறார். உதயகிரி, கந்த கிரியில் மட்டும் 700க்கும் மேற்பட்ட குகைகள், குடை வரைகள் பல்வேறு மன்னர்களால் செதுக்கப்பட்டுள்ளன. பெளத்தர்களுக்கும், சமணர்களுக்கும் பெரிய அளவில் இங்கு குகைகள் எந்த பாகுபாடுமின்றி தொடர்ந்து வந்த ஹிந்து மன்னர்களால் துவேஷமின்றி வழங்கப்பட்டுள்ளது. சோமவன்ஷிகள், சாதவாகனர்கள், மெளரியர்கள், நந்தர்கள் ,குஷாணர்கள், சேதிபர்கள் , கலிங்க சோழர்கள், கடைசியாக விஜய நகர பேரரசர்கள் வரை பெளத்தர்களுக்கும் , சமணர்களுக்கும் தொடர்ச்சியாக நிவந்தங்கள் கொடுக்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் இவர்களுக்கு நிதி உதவி செய்திருக்கிறார்கள். எந்த கலிங்க வரலாற்றுக்குறிப்பிலும் ஹிந்து மன்னர்கள் பெளத்த, சமண ஆலயங்களை இடித்தனர். உடைத்தனர் என்பது போன்ற தரவுகளே இல்லை . மாறாக இங்கு சிதைந்த நிலையில் இந்த குகைகள் காணக்கிடைப்பதற்கு இஸ்லாமிய படையெடுப்பு ஒரு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது (http://voiceofdharma.org/books/siii/ch7.htm ). தொடர்ச்சியாக வெறி பிடித்த காட்டு மிராண்டி இஸ்லாமிய படைத்தலைவர்கள் எரியூட்டி அழித்து ஒழித்திருக்கிறார்கள் . ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள் .,தோற்று போன வீரர்களை பெருவாரியாக வெட்டிக்கொன்று தங்கள் பாலைவன காட்டுமிராண்டித்தனத்தை நிறுவி இருக்கிறார்கள் (http://www.oocities.org/hindoo_humanist/mughal.html ) .

அப்பாவியான பெளத்த,சமண தர்மத்தை கடை பிடிக்கும் நாகரீகமான மக்கள் தர்மம் தவறாத அன்பையே கடவுளாக வழிபடும் அப்பாவி ஹிந்துக்கள் இந்த காட்டு மிராண்டித்தனமான, தர்மத்திற்கு புறம்பான அராஜக ,குரூரர்களுடனான போரில் வீழ்ந்து மாண்டார்கள் . உயிருடன் எஞ்சிய ஆண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு ஆண்மைஅழிக்கப்பட்டு நபும்சகர்களாக அரேபிய அடிமைகளின் அந்தப்புரங்களில் ஆசை நாயகர்களாக அமர்த்தப்பட்டனர். இஸ்லாமிய காட்டு மிராண்டித் தனமான போர்கள் , அழிவுகள் ,கற்பழிப்புகள் பற்றி சீதாராம் கோயல் (http://sitaram.0catch.com/page266.htm ).ஆனால் பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து விடுவார்கள்.மேற்கு வங்கத்தில் இருந்த கம்யூனிஸ் அரசோ அரசாணை வெளியிட்டு இஸ்லாமிய கொடுரர்கள் செய்த பேரழிவுகளை வரலாற்றில் மறைக்க சொல்லி ஆணையிடும். இதெல்லாம் போலி மதச்சார்பின்மையின் சில நோய்கூறுகள். இந்தியா என்பது ஒரே நாடு என்பதற்கு பல சாட்சிகளும், வரலாற்று உண்மைகளும் பயணம் செய்யும் பொழுது பார்த்துக்கொண்டே வரலாம்,. வேறு, வேறு மொழிகள், உடைகள், வித்யாசமான உணவுப்பழக்கம், இறைவழிபாட்டில், கலை, இலக்கிய ரசனைகளில் வேறு வேறு விதமான மாற்றங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், பண்பாடு , நாகரீகம் என்பதெல்லாம் இமயம் முதல் குமரி வரை ஒரே மாதிரி இருப்பதை காணலாம். ஆலயங்கள், வழி பாட்டு முறைகள், சகிப்பு தன்மை , விருந்தினர்களை போற்றுதல், துறவிகள் மீதான மரியாதை, தாய் ,தந்தைகளை மதித்தல், குடும்ப அமைப்புகள். வட்டார மொழிகளில் தமிழ், பிராகிருத, சமஸ்கிருத மொழிகளின் கலப்புகள். கலைகளில் தெரியும் பிற மொழி கூறுகள். நதிகளை தாயாக வணங்குவது . மானுட நேசம் இவை எல்லாமே இந்த தேசம் ஒரே தேசம் என்பதை தொடர்ந்து நிருபித்துக்கொண்டே இருக்கிறது. என்றெல்லாம் யோசித்துக்கொண்டே புவனேஸ்வரிலிருந்து கோனார்க் நோக்கி நகர்ந்தேன்.
கோனார்க்கை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். பாரதத்தின் மகத்தான கலையாக்கங்களில் ஒன்று. மானுட யத்தனங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த ஆக்கம். இந்து மதத்தின் ஆறு தொகைகளில் செளரம் எனும் சூரிய வழிபாட்டுத்தொகையின் முக்கியமான கோயிலாக வாழும் ஆலயமாக இன்றும் நீடித்து நிலைக்கிறது . இதன் தொன்மம் மகாபாராத காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு சாபத்தால் தோல் வியாதி ஏற்படுகிறது . 12 ஆண்டு கால கடின தவத்தின் பயனால் சூரிய தேவரால் பார்க்கப்பட்டு ஆசி வழங்கப்பட்டு தன் நோய் தீர்க்கிறார் யது குல இளவல் என்கிறது பாரதம். வைட்டமின் d குறைபாட்டால் நோய் பீடிப்புக்கு ஆளாகும் யது இளவரசனை சூரிய வெப்பம் சரி செய்கிறது . சூரியன் ஒளியின் கடவுள் , அவருக்கு நன்றி சொல்லும் முகமாக இந்த பேராலயம் பாரத காலத்தில் கட்டப்பட்டதாக தொன்மம் நிலவுகிறது . இன்றைய பாரதத்தின் பெரும்பான்மையான கோயில்கள் ஏதாவது ஒரு பழங்கால நினைவை உயிர்ப்பிக்கவோ, முக்கியமான வரலாற்று, சமூக நினைவுகளை சமூக பொது மனத்தில் இருத்திக்கொள்வதற்காகவோ தான் கட்டப்பட்டதாக இருக்கிறது.
சடங்குகள், பலிகள் பற்றியும் இது போன்ற கண்ணொட்டத்தில் அணுகினால் புதிய திறப்புகள் கிடைப்பதை காணலாம். கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதான கண்ணோட்டம், நினைவு சமூகத்தின் பொது மனத்தில் ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வந்திருக்கும். அது தொடர்பான செய்திகள், குறிப்புகள் பாரம்பரிய கலை வடிவமான ஒடிஸி மூலமாகவும், கதையாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மூலமாகவும் செய்தி நூற்றாண்டுகள் தோறும், காலந்தோறும் கடத்தப்பட்டு கொண்டிருக்கும். பின்னாளில் வரும் ஏதோ ஒரு அரசன் அந்த இடத்தில் மீண்டும் கோயிலை நிர்மாணிப்பான். கோயில் மீண்டும் பல்லாயிரம் ஆண்டுகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெறும். அப்படியான ஒரு காலத்தொடர்ச்சி தான் இந்த மாபெரும் கலையற்புதமான கோனார்க் சூரியனார் கோயில். நாகரா பாணியும், சிறிது திராவிட பாணியும் கலந்து கட்டப்பட்ட கோயில் தமிழக கலிங்க கலையின் மிகச்சிறந்த ,தேர்ந்த கலை கலப்பு ஆகும். நூற்றாண்டுகளாக ,ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலையில் கொண்டும் கொடுத்தும் பேணிக்காக்கப்பட்டு வந்திருக்கும் நீண்ட உறவு தொடர் சங்கிலி இது. இதன் கோபுர வடிவம் நம் தஞ்சை பெரிய கோவிலை ஒத்து இருக்கும். உயர்த்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை விட கொஞ்சம் தான் குறைவான கோயில். ஆனால் சிற்ப அற்புதங்கள், அமைப்பு இவற்றிர்க்கு ஈடு இணை வைக்க முடியவே முடியாது. தேர் வடிவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தை பற்றியும் இதனை இடித்து நாசமாக்கிய நயவஞ்சகர்களை பற்றியும், இதை சீர் செய்ய விரும்பிய ஆங்கிலேயர்கள் பற்றியும், செளர வழிபாடு, அதன் பரவல் ,கீழைக்கங்க மன்னர்களின் கொடைகள். திராவிட சிற்பிகள் இவைகளைப்பற்றி வரும் வாரம் தொடர்கிறேன்..
மேலதிக தகவலுக்கு : http://mughalinvaders.wordpress.com/2011/10/05/british-sources-confirm-atrocities-against-indians/
(தொடரும்)