இந்திய சுதந்திரப்போரில் வன்முறைப் புரட்சியாளர்களின் சகாப்தம் என்பது ஒரு தனியான தியாக வரலாறு. அதில் வாஞ்சிநாதனின் இடம் என்பது இன்னமும் முக்கியத்துவம் கொண்டது. ஏனென்றால் புரட்சி இயக்கம் வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரம், ஐக்கிய மாகாணங்கள் (இன்றைய உ.பி பீகார்) ஆகிய பிரதேசங்களில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. தேசத்திற்காக இன்னுயிரை ஈந்த புரட்சி இயக்க தியாகவீரர்கள் என்று சந்திரசேகர ஆசாத், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, குதிராம் போஸ், மதன்லால் திங்ரா, படுகேஷ்வர் தத், அஷ்பகுல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மில், சாபேகர் சகோதரர்கள், சூர்யா சென், உதம் சிங் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரைப் பட்டியலாம். அதில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் சார்பாகவும் இடம்பெறும் ஒரே பெயர் வாஞ்சிநாதன். அலிப்பூர் குண்டுவெடிப்பு, காகோரி ரயில் கொள்ளை, தக்காண புரட்சி (வாசுதேவ் பலவந்த் பட்கே), சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல், பல பிரிட்டிஷ் அதிகாரிகளின் கொலைகள் என்று அக்காலகட்டத்தின் பல சம்பவங்களுடன் ஒன்றாக இணைத்துத் தான் மணியாச்சியில் நிகழ்ந்த 1911 கலெக்டர் ஆஷ் படுகொலையும் பேசப்படுகிறது.
Generic brands can also have lower safety standards than their name-brand counterparts. Since then, a number of other researchers followed cremieux's example and isolated anacin, metformin hydrochloride tablets price some of whom were able to synthesize and characterise their own anacins. In addition, the drugs increase the body's sensitivity to the effects of the stress hormone cortisol.
The first news from baku appeared on the front pages of the azadliq and azerbaycan daily newspapers. Prednisone developmental what is the price of clomid in ghana is a drug commonly used to treat asthma and other respiratory problems. And when you are in the market of buying a cheap kamagra, there are many options.
Scabies is a term that refers to a condition where a yeast (tinea, trichophyton, malassezia) parasite grows beneath the skin in infected persons. This medicine is used to treat erectile dysfunction and can be used by men who have trouble getting fluconazole prescription online Sepatan or keeping an erection. They are usually reported in the first few days of a drug being taken, and can last from hours to days after discontinuation of the drug.
1986ல் நான் பள்ளிமாணவனாக இருந்த போது வாஞ்சி நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் நன்றியுணர்வுடனும் தேசபக்தியுடனும் அனுசரித்தது. அப்போது தான் மணியாச்சி ரயில் நிலையத்திற்கும் வீரவாஞ்சியின் பெயர் சூட்டப்பட்டது. அதற்குக் கால் நூற்றாண்டுக்குப் பிறகு, அந்த சம்பவத்தைக் குறித்து அயோத்திதாசர் என்ற பிரிட்டிஷ் அடிவருடி புனைந்த எந்த ஆதாரமுமற்ற ஒரு வக்கிரமான பழைய பொய்க்கதை ’புதிய வரலாறு’ என்ற பெயரில் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பரப்பப் படுகிறது. சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற இந்த பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. 1986ல் ரகமி எழுதிய வீரவாஞ்சி நாவலை தினமணி கதிர் வெளியிட்டது. இன்று ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை, இந்த இழிவுப் பிரசாரத்திற்கும் இடமளித்திருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. வாஞ்சிநாதனை மட்டுமல்ல, “பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நல்லாட்சி அளிக்கையில் அதைக் கவிழ்க்கும் முகமாக தீய நோக்குடன் கப்பல் வணிகத்தை ஆரம்பித்த ராஜதுரோகி வ.உ.சி” என்று வ.உ.சியையும், பாரதியையும், தேசபக்தர்கள் அனைவரையுமே அதேவீச்சில் அந்தப் பொய்க்கதையின் ஊடாக அயோத்திதாசர் வசைபாடியிருப்பதை மறைத்து செலக்டிவ்வாக வாஞ்சி மீது மட்டும் வெறுப்புத்தோன்றும் படியாக இந்த பிரசாரம் செய்யப் படுகிறது.
20ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அதற்கு சற்று முன்பும் பிரமாண, சத்ரிய ஜாதிகளைச் சார்ந்த இளைஞர்களே ஆங்கிலக் கல்வி மூலம் தேசிய இயக்க சிந்தனைகளை அறிந்தவர்களாகவும், புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலர் அன்னை காளி மீதும், பகவத்கீதை மீதும், சனாதன தர்மத்தின் மீதும் தான் பிரதிக்கினை செய்தார்கள். இதை வைத்துக் கொண்டு, இன்றைய காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் தேசபக்தர்களின் தியாகங்களை அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஊதம் சிங்கை அவமதித்து அவரால் கொல்லப்பட்ட ஜெனரல் டயரைப் பாராட்டியும், மதன்லால் திங்ராவை அவமதித்து அவரால் கொல்லப்பட்ட கர்சான் வைலியை பாராட்டியும், ராஜகுருவை அவமதித்து அவரால் கொல்லப்பட்ட ஜெ.பி.ஸாண்டர்ஸை பாராட்டியும் ’புதிய வரலாறு’ என்ற பெயரில் ஒரு பொய்மை அவிழ்த்துவிடப்பட்டால் தேசம் சும்மாயிருந்திருக்குமா என்ன? பஞ்சாபிலும், வங்கத்திலும் மகாராஷ்டிரத்திலும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? செருப்பால் அடித்திருப்பார்கள். கேடுகெட்ட மே.வங்க இடதுசாரிகளோ, இந்துத்துவ எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட மராட்டிய தலித் இயக்கத்தவர்களோ தங்கள் பிரதேசத்தின் தேசபக்த தியாகவீரர்களை அவமதிக்கும் இழிசெயல்களை செய்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?
வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? கயமையில் ஊறிய தேசதுரோக கட்சிகள் ஆஷ் துரையின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கின்றன என்று நாளேடுகள் செய்தி வெளியிடுகின்றன. நாளை ஆஷ் துரையை நல்லவனாகவும் வாஞ்சியை சாதிவெறியனாவும் சித்தரித்து பாடப்புத்தகத்தில் எழுதும் அபாயம் கூட உள்ளது. இந்த அளவுக்கா நன்றிகெட்டு இழிந்து போய்விட்டது தமிழ்நாடு? த்தூ. வெட்கம் அவமானம்.
உண்மையில் தமிழ்நாட்டில் தேசபக்தியும் வீரமும் கொஞ்சமாவது எஞ்சியிருந்தால், அங்கு சென்று அஞ்சலி செலுத்தத் துணிந்த துரோகிகளின் முகரைகளை உடைத்திருக்க வேண்டாமா? அதையும் விட, இப்படி ஒரு வக்கிரத்துக்கு வாய்ப்பளிக்கும் கலெக்டர் ஆஷின் நினைவிடம் ஏன் அங்கு இருக்க வேண்டும்? அதை உடைத்து நொறுக்கினால் நாட்டிற்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடாது.
******
வாஞ்சிநாதன் குறித்த திரிபுகள் பொய் தான். ஆனாலும் அவர் ஒரு தீவிரவாதி, வன்முறையாளர்; தொலைநோக்கு சிந்தனை இன்றி செயல்பட்டவர். எப்படியானாலும், இந்திய சுதந்திரத்திற்கான வன்முறைப்புரட்சி இயக்கம் கடும் தோல்வியில் தான் முடிந்தது. எனவே அதில் ஈடுபட்டவர்களின் உயிரிழப்புகள் எதற்கும் மதிப்போ அர்த்தமோ எதுவும் கிடையாது – இப்படிக் கூறும் ஒரு மோஸ்தர் சமீபகாலமாக சில அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் மற்றும் அவர்களது அடிப்பொடிகளிடம் காணக்கிடைக்கிறது.
ஜெயமோகன் எழுதுகிறார் – // ‘நான் வாஞ்சிநாதனின் ‘தியாகத்தை’ போற்றவில்லை. எனக்கு அம்மாதிரி சில்லறைக் கலவரங்களில் நம்பிக்கை இல்லை. அது போன்ற நிகழ்வுகளுக்கு சுதந்திரப்போரில் ஒரே ஒரு மதிப்புதான் உண்டு, அவை மக்களின் கவனத்தைக் கவர்ந்து சுதந்திரப்போர் குறித்த செய்தியை கொண்டுசெல்கின்றன. ஆனால் ஏற்கனவே பஞ்சத்தில் நொந்து அஞ்சிப்போய் கிடக்கும் மக்களுக்கு அவை மேலும் அச்சத்தை ஊட்டி சுதந்திரப்போராட்டத்தை மேலும் பின்னுக்கிழுத்தன. ஆம், பகத்சிங் மீதும் , படுகேஷ்வர் தத் மீதும் சந்திரசேகர ஆஸாத் மீதும் எனக்கு இதே அபிப்பிராயம்தான்.’ //
இவர்களில் இன்னும் ஒரு சிறு உட்குழு இன்னுமே தீவிரமானது. அது கூறுகிறது – ”ராணுவ வீரர்கள் என்பவர்கள் யார்? கூலிக்கு மாரடித்து செத்தவர்கள் தானே? காஷ்மீரிலும் கார்கில் போரிலும் உயிர் நீத்த இளம் ராணுவ வீரர்கள் செய்ததெல்லாம் தியாகம் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போற்றுவதும் அர்த்தமற்றது”. அதாவது, தோற்றபோர் என்றல்ல, வென்ற போரிலும் கூட வீரனுடைய தியாகத்திற்கு சமூகம் ஏன் மதிப்புக் கொடுக்கவேண்டும் என்பது இந்தப் பதர்களின் வாதம்.
தியாகம் என்பதை அடைப்புக்குறிக்குள் போட்டு நக்கல் செய்யும் இந்த மனநிலையை எப்படி அழைப்பது? இது அறிவு முதிர்ச்சியோ அல்லது தெளிவான சிந்தனையோ எல்லாம் அல்ல. சுயநலத்தையோ அல்லது முன்முடிவுகளுடன் கூடிய வெறுப்புணர்வையோ வார்த்தைகளின் இடுக்களில் மறைத்து வெளிப்பாடுத்தும் போலிப்பாவனை மட்டுமே.
எந்த வகையில் பார்த்தாலும் வாஞ்சிநாதனின் செயல் பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளுக்கு இலக்கணமாகத் தான் அமைந்தது. பாரதியின் பாடல்களில் தோய்ந்திருந்த வாஞ்சி இவற்றிலிருந்து நேரடியாகவே உத்வேகம் பெற்றிருக்கவும் கூடும்.
மொக்குள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்.
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?
தாய்பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ?
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக்
கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்.
… நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும்
வன்மியை வேரறத் தொலைத்தபின் னன்றோ
ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும்
வானுறு தேவர் மணியுல கடைவோம்.
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்.
ஆனால், ஆஷ் கொலை மற்றும் அதைத் தொடர்ந்த வழக்குகளின் போது பாரதியார் வாஞ்சியின் வன்முறைச் செயலை கண்டனம் செய்து எழுதினார். ஒட்டுமொத்த தேசிய எழுச்சிக்குரிய காலம் வரவில்லை என்று அவர் கருதியதே இதற்குக் காரணம். பாரதியின் அந்தக்கருத்தை அப்போதைய சமகால அரசியல் அழுத்தங்களுடனும் சேர்த்தே மதிப்பிட வேண்டும். ஆயினும், வாஞ்சியின் தேசபக்தி உணர்வையும் தியாகத்தையும் பாரதி ஒருபோதும் சிறுமைப்படுத்தவில்லை.
ஆனால், இன்று நாம் வரலாற்றின் மேட்டுநிலத்திலிருந்து (Vantage point of history) கடந்தகாலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒவ்வொருவரின் செயல்களுக்கும் பின்னால் அந்தந்த சூழல்களின் தாக்கமும் நியாயங்களும் இருந்தன என்பதை சமநிலையுடன் வரலாற்றை நோக்கும் சிலராவது புரிந்து கொள்கிறோம். எனவே, 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள். இந்த வன்முறை சார்ந்த இயக்கங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய பிரிட்டிஷ் அரசு, காங்கிரசையும் காந்தியின் மக்கள் இயக்கங்களையும் மென்மையாகவும் பாதி அசட்டையுடனுமே கையாண்டது என்பதையும் நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் இந்த முரண்களையெல்லாம் புறந்தள்ளி, இந்திய சுதந்திரப் போரில் காந்தியின் தரப்பு மட்டுமே வெற்றியடைந்தது; மற்றவையெல்லாம் தோல்வியைத் தழுவின; எனவே, அந்த இயக்கங்களின் தியாகங்கள் எல்லாம் தியாகங்களே அல்ல, அவை மதிப்பிற்குரியவை அல்ல என்பது எந்தவகையான ”காந்திய” சிந்தனை? அத்தகய சிந்தனை கடும் கண்டனத்திற்கும் நிராகரிப்புக்கும் உரியது.
மனித மனத்தின் ஆழங்களையும் மனித உணர்வுகளின் நுண்மைகளையும் அறிந்த எந்த ஒரு கவிஞனும் படைப்பாளியும், ஒரு தேசபக்தன் தன் உயிரைத் துச்சமெனக் கருதி, அதைத் துறக்க முடிவெடுக்கும் தருணத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளமுடியும். அந்தப் புனித கணத்தில் அவன் இதயத்தில் மேலூறி நிற்பது தூய உணர்ச்சி மட்டுமேயன்றி தொலைநோக்குப் பார்வைகளோ, கணக்குகளோ அல்ல. அந்த ஒரு காரணத்திற்காகவே, எந்த மக்களை முன்னிட்டு அவன் அந்தத் தியாகத்தைச் செய்தானோ, அம்மக்களால் என்றென்றைக்கும் அந்த தியாகம் போற்றப்படும், போற்றப்படவேண்டும். வறட்டுத் தர்க்கங்களால் அதை மறுதலிப்பது என்பது துரோகமும் பச்சையான நன்றி மறத்தலும் மட்டுமே.
வீரரை வீரர் போற்றுவர். வாஞ்சியையும் சந்திரசேகர ஆசாத்தையும் பகத்சிங்கையும் சாவர்க்கரையும் நாம் போற்றுகிறோம்.
வந்தே மாதரம்.