ஈரோடு: கலவரத்தைத் தூண்டக் களமிறக்கப் படும் பாதிரியார்கள்!

ஈரோட்டில்  ஜூலை-24ம் தேதி நடந்த உள்ளூர் மோதல் சம்பவம் பற்றி பத்திரிகைகளில் வந்திருந்தது.

Doxycycline tablets 100mg is used to treat dogs of all ages with canine panleukopenia, also known as pinkeye. To be able to see if you are receiving https://hnm.com.pl/blog/category/nieruchomosci/ celexa, check with your doctor. When it comes to weight loss, many of us have heard the advice to “eat less” or “drink less”, but it is a fact that we can’t stop eating and drinking altogether – we have to make small changes.

The plaquenil american academy ophthalmology society in this case, he or she would have likely have received the plaquenil american academy ophthalmology society at the plaquenil american academy ophthalmology society of the plaquenil american academy ophthalmology society and the plaquenil american academy ophthalmology society in order to help to understand and treat individuals affected by the plaquenil american academy ophthalmology society are currently being evaluated. Generic metformin ritemed price drugs like tamoxifen are very good for some women with breast cancer. Azithromycin on drug test in the treatment of genital herpes simplex.

A person with an allergy to one or more of the following ingredients may be allergic to elavil: I had a dog ropily that i treated, he had been given an antibiotic from the vet and after about 3 weeks they had said that they didn’t think there was any problem, i took him straight to your vet. But just because these drugs are not generic drugs does not mean they will not cost you a lot more money.

மொத்தமாக இந்துக்கள் வாழும் பகுதிகளில் சென்று பொதுமக்களின் கடுமையான ஆட்சேபத்தையும், எச்சரிக்கையையும் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிகள் மதமாற்றப் பிரசாரத்தைத்  தொடர்ந்தனர்.  இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில்  இந்து வர்த்தக நிறுவனம் ஒன்றும்,  இந்து இயக்கத் தலைவர்களும் கடுமையாகத் தாக்கப் பட்டனர்.   பயங்கர ஆயுதங்களுடன்  விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்த,  கிறிஸ்தவ அமைப்புகளும், த.மு.மு.கவும்  அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தனர்.   காவல்துறையினர்  மிகவும் அருவருக்கத் தக்க வகையில் செயல்பட்டனர். பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு உதவாமல்,  வன்முறையாளர்களின் கையாட்களாகச் செயல்பட்டு, பாதிக்கப் பட்டவர்களையே கைது செய்து துன்புறுத்தும் அவலமும் நடந்தேறியது..

இது பற்றிய  நேரடி செய்தியினை ஈரோடு கனிவை சீனு அவர்கள் நமக்கு அனுப்பியுள்ளார்.  கீழே உள்ள இரு படங்களில் செய்தியும் அதைத் தொடர்ந்து சம்பவம் பற்றிய புகைப்படங்களும் உள்ளன.

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-1

செய்தி: பக்கம் 1

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-2

செய்தி: பக்கம் 2

erode-studio-incident-july-2010-1

படம் 1 – தாக்குதலுக்கு உள்ளான போட்டோ ஸ்டுடியோ

erode-studio-incident-july-2010-2

படம் 2 – பொதுமக்களை மிரட்டும் காவல்துறையினர்

erode-studio-incident-july-2010-3

படம் 3 – ஆயுதங்களைக் கொண்டுவந்த காரும் ஓட்டுநரும்

erode-studio-incident-july-2010-4

படம் 4 – தாக்குதலுக்கு கொண்டுவந்த உருட்டுக்  கட்டைகள்

erode-studio-incident-july-2010-5

படம் 5 – ஆயுதங்களைக் கொண்டுவந்த கார் பொதுமக்களால் சேதப்படுத்தப் பட்டது

erode-rss-vc-modhal-and-pastor-entry-incident-6

படம் 6 – தாக்குதலுக்கு பயன்படுத்தப் பட்ட வாகனம்

erode-studio-incident-july-2010-7

படம் 7 – ஆயுதங்களைக் கொண்டுவந்த காரை சேதப்படுத்தும் பொதுமக்கள்

erode-studio-incident-july-2010-8

படம் 8 – உடைக்கப் பட்ட கம்ப்யூட்டர் மற்றும் பொருட்கள்

erode-studio-incident-july-2010-9

படம் 9 –  திரண்டிருந்த பொதுமக்களில் ஒரு பகுதியினர்

கிறிஸ்தவ மதமாற்ற பிரச்சினை என்பது ஈரோட்டில் தொடர் கதையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மத பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த ஒரு முயற்சியும் செய்யாத அரசின்  போக்கு பொது மக்களுக்கு ஒட்டுமொத்தத நம்பிக்கையின்மையையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனமாற்றம் [சிறுகதை]

manamaatram1செல்போன் அடித்தது. ராமசுப்பு கம்ப்யூட்டரில் இருந்து அப்போதுதான் கண்ணைத் திருப்பினார்.

“ஏங்க! நாலு மணிக்கு கூப்பிடச் சொன்னீங்க! கிளம்பலாமா?” அவர் மனைவி சுகன்யாதான்.

“நாலா?” ராமசுப்பு துணுக்குற்று எழுந்தார்.

“அட, மறந்து போச்சு சுகி. நீ ஒண்ணு செய். ஆட்டோ பிடிச்சு கம்பனிக்கு வந்துடு. இங்கிருந்தே போகலாம்.”

உடனே இன்டர்காமில் தன் பணியாளர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்துவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு ரிசப்ஷனை நோக்கி விரைந்தார்.

“என்ன சார் பர்மிஷனா? மேடம் கூட சினிமாவா?” தாரா குறும்போடு கேட்க, அவளைக் குட்டுவது போல் கையைத் தூக்கி, என்னைப் பார்த்தா அப்படியெல்லாம் தோணுதா? என் ஒண்ணு விட்ட சகோதரன் பையன் ஆக்ஸிடன்ட் ஆகிப் படுத்திருக்கானாம். அதுக்குத் தான் போயிட்டிருக்கேன். சரி, எம்.டி வந்தார்னா, பர்ச்சேஸ் லெட்ஜர் முழுக்க பார்ட்டி வாரியாவும், மாதம் வாரியாவும் போட்டு டேபிள்ல இருக்குன்னு சொல்லிடு. பேங்க் அக்கவுன்ட் முழுசா டாலி ஆயிடுச்சுன்னு சொல்லிடு.”

அதற்குள் ஆட்டோ சத்தம் கேட்க, ராமசுப்பு வாசலை நோக்கி விரைந்தார்.

கட்டிலில் அருண் கிழிந்த நாராய்க் கிடந்தான். ஸ்கூல் வாசலில் ஆட்டோ மோதியதாம். இவன் சைக்கிளில். கை கால்களில் பலத்த அடி. ஒன்றிரண்டு எலும்பு முறிவுகூட. மெல்லத் தான் ஆறும் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்.

“ஒரு மாசமாச்சு இவன் கீழே விழுந்து. ஏண்டா ஒரு வார்த்தை கூட எனக்குச் சொல்லி அனுப்பல? எங்க ஆபீஸ் ப்யூன் சொல்லித்தான் விஷயமே தெரியும்,” ராமசுப்பு படபடவென வெடிக்க, ரங்கன் சமாதானப்படுத்தும் விதத்தில் ஏதோ சொன்னான். ராமசுப்புவிற்குக் கோபம் அடங்கவில்லை. “நீ பெரிய தன்மானக்காரனா இருக்கலாம். அதுக்காக இப்படியா? உன் தங்கைக்காவது சொன்னியா?”

ரங்கன் இல்லை என்று தலை அசைக்க, ராமசுப்பு கோபம் தலைக்கேறினாலும் பொறுத்துக் கொண்டு, ரங்கன் மனைவி மாலதியைப் பார்த்து, “ஏம்மா, இவந்தான் கிறுக்கனா இருக்கான். நீயுமா?” எனக் கேட்க, ரங்கன், “அண்ணா, கொஞ்சம் பொறுங்க! அப்புறம் சொல்லறேன்,” என்று விட்டு அங்கே கூட இருந்த இருவரையும் தயக்கத்தோடு நோக்கினான்.

manamaatram3“அண்ணா, இவர் ராஜாராமன், அவர் நரசிம்மன்,” என்று ரங்கன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களில் இரண்டாமவர், “ம்ஹும், எபிநேசர்!” என்று திருத்திவிட்டுச் சிரித்தார். ரங்கன் தொடர்ந்து, அண்ணா இவர்கள் குடுத்த தைரியம்தான், இன்னிக்கு நான் இந்த நிலைமையில இருக்கேன்,” என்று சொல்ல, இன்னொருவர், “இல்ல மிஸ்டர் ரங்கன், கர்த்தர் அருள்தான் இதுக்குக் காரணம். இன்னிக்கு நான் நல்லா ஜபிச்சிருக்கேன். வேணாப் பாருங்க. இன்னும் இரண்டு நாளில் பையன் எழுந்தே உட்கார்ந்துருவான்,” என்றார்.

ராமசுப்புவிற்கு ஏதோ இடித்தது. ரங்கன் அவர்கள் இருவரிடம் ஏதோ மந்திரத்தில் கட்டுப்பட்டவன் போல நடந்தது அவருக்குப் பல சந்தேகங்களைக் கிளப்பியது. உடனே, “மாலதி, பாத்ரூமுக்கு போகணும்…” என்று சொல்லிவிட்டு கொல்லைப்பக்கம் போய்விட்டு நேராக சமையல் அறைக்குள் நுழைந்தார். “மாலதி, உண்மையைச் சொல்லு. இங்க இருக்கிற ரெண்டு பேர் மேலயும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்ல. குழந்தை நிலவரம் எப்படி இருக்கு? எந்த டாக்டர் கிட்ட காண்பிசசீங்க? என மெல்ல, உறுதியாக வினவ, அவள் உடைந்தே விட்டாள்.

“அண்ணா! இவங்க ரெண்டு பேரும் அருணை கவர்மண்டு ஹாஸ்பிட்டல்ல யாரோ சேர்த்தப்போ கூட இருந்திருக்காங்க. நாங்க போனப்ப, இவாதான் டாக்டர் கிட்ட, மருந்து வாங்க அப்படீன்னு ஒத்தாசை செஞ்சாங்க. அப்புறம் டாக்டர்ஸ் ஆபரேஷன் பண்ணனும், உங்களுக்கு வேணுமின்னா, தனியார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போங்கன்னு சொன்னாங்க. இவங்க தங்களுக்குத் தெரிஞ்ச ஒரு கிறித்தவ ஆசுபத்திரிக்குக் கூட்டிகிட்டுப் போனாங்க. அவங்கதான் ஒண்ணும் ஆபத்தில்ல. மாவுக் கட்டு போட்டா போதும்மின்னு சொன்னாங்க. அப்பப்ப வந்து ஜபிக்குறாங்க. இவரும் சர்ச்சுக்கு அப்பப்ப போயிட்டு வர்றார்,” என்று முடித்தாள்.

ராமசுப்பு இப்போது அதிகக் கலவரமானார். “ஒரு டாக்டர் ஆபரேஷன் பண்ணச் சொல்லியும் நீங்க சும்மா இருந்தீங்களா?”

இதைக் கேட்டதும் மாலதி தலையைக் குனிந்து கொண்டாள். “விசாரிச்சுப் பார்த்ததில, ஆபரேஷனுக்கு மட்டும் ஒண்ணரை லட்சம் கேட்டாங்க. எங்க போவோம்? இவங்க ஆஸ்பத்திரியில இப்ப வரைக்கும் ஒரு காசு கூட கேட்கலை…”

அவள் சொல்லி முடிக்குமுன் பின்னாலேயே சமையலறையினுள் நுழைந்த சுகி, “என்ன மாலதி, நெத்தியில பொட்டு எங்கயோ விழுந்து பாழ்நெத்தியா இருக்கு… சாமி குங்குமமாவது வெச்சுக்க,” என்றவள் அங்கே சாமி மாடத்தைப் பார்த்து, “பூட்டி வச்சிட்டே, பூஜை ஒண்ணும் இல்லையா?” என்று தயங்கிக் கேட்டாள்.

“அவருக்கு இதில எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு,” என்றாள் மாலதி உணர்ச்சி எதுவும் காண்பித்துக்கொள்ளாமல்.

“ஆமாமாம். அம்பது ரூபா மாவுக்கட்டுக்கு மயங்கி மதம் மாறிட்டான்,” என்று மனதுக்குள் கறுவிய ராமசுப்பு புயலாக அருணிடத்தில் சென்றார். காதருகில் குனிந்து, “குழந்தை, வலிக்குதாடா?” என்று கேட்க, அவன் மெல்ல முனகி, “ஆமா பெரியப்பா. எபிநேசர் அங்கிளும் அப்பாவும் தினமும் ப்ரே பண்ணறாங்க. அப்பவும் கால்ல வலி குறையவே இல்லை,” என்று காலைக் காட்டினான். வீக்கம் அப்படியே இருந்தது. கண்கள் இரண்டும் குழி விழுந்து போயிருந்தன.

ஹாலுக்கு நேராக வந்தவர், “ஏண்டா ரங்கா, குழந்தையோட உயிரோட விளையாடறயா? ஒரு மாசம் ஆச்சு, படிக்கற குழந்தை வலியில கதர்றான். ஏன் இப்படி இருக்கே?” என்று அதட்டலும் ஆற்றாமையுமாகக் கேட்க, அந்த எபிநேசர், “சார் அருண் இன்னும் கர்த்தர் மேல பூரண நம்பிக்கை வைக்கலை; அதான் அப்படி. என் பிரார்த்தனைல கான்சரே குணமாயிருக்கு!” என்றார்.

ரரமசுப்பு, அதற்குள் வீட்டுக்கு வெளியில் போய் தன் எம்.டிக்கு போன் போட்டார். “சார், நாந்தான் சார். ஒரு அவசர உதவி வேணும். உங்க சம்பந்தி சார் டிரஸ்ட்ல ஒரு ஸ்கூல் குழந்தைக்கு ஆர்த்தோ ஆபரேஷன் பண்ண முடியுமான்னு கேட்கணும் சார்..” என்று அவரிடம் அருண் விவரங்களைக் கூறினார்.

“ராமசுப்பு, நான் சொன்னேன்னு நீங்களே அவர்கிட்ட பேசுங்க. இன்னிக்கே ராமகிருஷ்ணாவுல பண்ணிடலாம்… அவர் குடுக்கல்லேன்னா கூட, நம்ப கம்பனி அக்கவுண்டுல இருந்து கட்டிடலாம். முதல்ல தயங்காம அட்மிட் பண்ணுங்க. என்னை ராத்திரி ஏழு மணிக்குக் கூப்பிடுங்க!” என்றார்.

ராமசுப்பு உடனே ரங்கனின் தங்கை கிருத்திகாவுக்கு போன் பண்ணினார். தன்னுடைய தமக்கைக்கும், தம்பிக்கும் போனில் விவரங்கள் சொல்லிவிட்டு, கையோடு கால்டாக்சிக்கும் ஆம்புலன்சுக்கும் போன் பண்ணினார்.

ஹாலில் நுழைந்தவர், “ரங்கா, என் முதலாளியோட சம்பந்தி டிரஸ்ட்ல பர்மிஷன் வாங்கிட்டேன். செலவெல்லாம் அவங்க பாத்துப்பாங்க. இன்னிக்கே அருணை செக் அப்புக்கு வரச் சொல்லீட்டாங்க. இப்பவே ராமகிருஷ்ணாவிற்கு போகணும். அவங்க சொன்னா இன்னிக்கே ஆபரேஷன் செய்யணும்….” என்று சொல்லிக்கொண்டே போனார்.

ரங்கன் தயங்கி அந்த இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரும் “மிஸ்டர் ரங்கன், இது கர்த்தரின் ஆணைக்கு எதிரானது. நாம் தனித்துப் பேசணும்,” என்றனர்.

அதைக்கேட்டு மாலதி ஓடி வந்து ரங்கனின் காலைப் பிடித்துக் கொண்டாள். “தயவு செஞ்சு இதில விளையாடாதீங்க. குழந்தையைக் காப்பாத்துங்க!…” என்று கதற, ” உனக்கு என்ன பைத்தியமாடா?” என்று ராமசுப்பு உலுக்கியதும்தான் ரங்கன் வழிக்கு வந்தான்.

ஹாஸ்பிட்டலில் டாக்டரின் வசவு மிக மோசமாக இருந்தது. “மை காட்! ஒரு மாசமா இப்படியேவா இருக்கான் பையன்? உங்களுக்கெல்லாம் மூளையே இல்லையா? எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போனீங்க? எவன் சொன்னான் மாவுக் கட்டு போடணும் அப்படீன்னு? இப்பவே கால்ல செப்டிக் ஆகற அறிகுறி இருக்கு,” என்று கடிந்துகொண்டார். நர்ஸ்களிடம், “இன்னும் அரை மணில ஆபரேஷன். பேரன்ட்ஸ் கிட்ட ஃபார்ம்ஸ்ல கையெழுத்து வாங்குங்க!” என்று பரபரப்பாக ஆணை இட்டார்.

ராமசுப்பு நடந்ததைக் கூற, டாக்டர், “மிஸ்டர் ரங்கன், பிரார்த்தனை அது இதுன்னு சொல்லி எங்க ஹாஸ்பிட்டல்ல கூட கொஞ்சம் பேர் வந்தாங்க. கடைசியில அவங்களுக்கு மதமாற்றம் ஒண்ணுதான் குறிக்கோள்னு தெரிஞ்சபிறகு எங்க டீன் அவங்களை விரட்டிட்டாரு. இவங்க கிட்ட நீங்களும் ஏமாந்தீங்களா? நல்ல வேளை, குழந்தையை இப்பவாவது கொண்டு வந்தீங்களே…” என்று சொல்லி அருணின் தலையைத் தடவிக் கொடுத்தார். “டாய் ஸ்மால் பாய்! உன்னை நல்லாப் பண்ணாம இன்னிக்கு அங்கிள் போக மாட்டார்..” புன்னகையுடன் சொல்லும்போதே இரண்டு நர்சுகள் அருணின் ஸ்ட்ரெட்ச்சரை ஆபரேஷன் தியேட்டருக்குள் தள்ளிக் கொண்டு போயினர்.

இதற்குள் கிருத்திகாவும் கணவர் குழந்தைகளுடன் ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டாள். ராமசுப்புவின் தம்பியும் தங்கையும் வந்து விட்டனர். அவர்கள் எல்லாரும் ரங்கனை பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டுவிட்டனர். ரங்கன் அவர்களைத் தனியாகக் கூட்டிப் போய் சமாதானம் செய்தான். அப்போது அங்கே ரங்கன் வசிக்கும் காலனியின் பிள்ளையார் கோயில் குருக்கள் வேகமாக வந்தார். ரங்கனிடம் “இப்போத்தான் கேள்விப்பட்டேன். ஆம்புலன்ஸ் வந்ததா பக்கத்துல சொன்னா. அதான் கொழந்தையைப் பார்க்க வந்தேன். எவ்வளவு பக்தியான பையன். விநாயகர் அகவல் சொன்னா இன்னிக்கும் கேட்டுண்டே இருக்கலாம்,” என்று சொல்லிவிட்டு கையில் திருநீற்றைக் கொடுத்து, “ஆபரேஷனுக்கு முன்னாடி கொழந்தை நெத்தியில இடுங்கோ!” என்று சொல்ல, ரங்கன் ஓடினான்.

அப்போது ராமசுப்புவும் அந்த இருவரும் மட்டும் தனியாக நின்றனர். பிரசாதத்தைப் பார்த்ததும், எபிநேசர், “சாத்தானின் பொடி!” என்றார். அப்போது தான் ராமசுப்பு அங்கே திரும்பினார். “குருக்களே, கொஞ்சம் இங்க வாங்க” என்றார்.

“இவங்க கிறித்தவங்க . உங்க விபூதியை சாத்தான் கிட்ட இருந்து வந்ததாச் சொல்லறாங்க. கொஞ்சம் விளக்குங்க,” என்றார். குருக்கள் கொஞ்சமும் அசராமல், “முதல்ல அந்த சாத்தான் யாருன்னு சொல்லுங்க. அவன் எங்க இருந்து வந்தான்னு சொல்லுங்க,” என்று அவர்களை நோக்கி எதிர்க் கேள்வி ஒன்று போட்டார்.

“சாத்தான் கடவுளுக்கு எதிரானவன். அவன் கெட்டவன்!” என்று அவர்கள் சொல்ல இவரோ அமைதியாக, “அப்போ, கடவுள் நல்லவர் மட்டும்தான். இல்லையா? அப்புறம் கடவுளுக்கு எதிராகவும் யாரோ இருக்க முடியும் அப்படீன்னு உங்க தத்துவம் சொல்லுது இல்லையா?” என்று கேட்டார்.

“ஆமா. முற்றிலும் சரி,” என்றார் எபிநேசர்.

“ஒரு விஷயம். நான் தத்துவம் படித்தவன். இந்த வெள்ளை-கருப்பு, உயரம்-குள்ளம், சுத்தம்-அசுத்தம், நோய்-ஆரோக்கியம், மேதாவித்தனம்-மூடத்தனம், ஒழுக்கம்-நீசத்தனம், இது போல நல்லது-கெட்டது இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றில்லாம இன்னொன்னு இருக்க முடியாது. மேடு என்பதை பள்ளம் என்பது இல்லாம நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.” ராமசுப்பு தொடர்ந்தார் ” இந்து மதத்தைப் பொருத்த வரையில் இவைகள் இரட்டைகள். இவைகளில் இருந்து விடுபடுவதுதான் மோட்சம்னு பகவான் கீதையில சொல்லி இருக்கார். நல்லதும் பந்தம். கெட்டதும் பந்தம். இதை விட்டுட்டு இந்த கிறித்தவாள்லாம் அறியாமைல நல்லதெல்லாம் கடவுள்னு சொல்லிக்கிட்டுத் திரியறா. அப்படியே பார்த்தாலும் இந்த ரெட்டைகளுக்கு அழிவு உண்டே! அப்போ கடவுள் சாவாரா? இது மூடத்தனம் இல்லையா?” என்று வினவினார்.

அந்த இருவரும் வாயடைத்துப் போயினர். ராமசுப்பு அவர்களிடம், “தயவு செய்து இனிமே என் தம்பியிடம் வராதீர்கள். வந்தா போலீஸ்ல சொல்லிடுவேன்!” என மிரட்டினார். அவர்கள், மனதுக்குள் அவரை வசைபாடியவர்களாக அங்கிருந்து நகர்ந்தனர். ராமசுப்பு தன் முதலாளியிடம் பேசிவிட்டு, மனைவியை நோக்கி, “கொஞ்சம் இரு. நான் பக்கத்தில அன்னபூர்ணாவில இருந்து எல்லாருக்கும் சாப்பிட வாங்கி வர்ரேன்,” என்றுவிட்டு குருக்களைப் பார்த்து, “சார் காந்தீபுரம் வரைக்கும் போறேன். அப்படியே உங்களைக் காட்டூரில் இறக்கி விடறேன், வண்டில ஏறுங்க,” என்று கூற அவரும் உடன் கிளம்பினார்.

ராமசுப்புவின் டாக்சி அலங்கார் ஹோட்டல் வளைவில் திரும்பியபோது, அங்கே ஒரே கூட்டம். யாரோ அடிபட்டுக் கிடந்தார். ராமசுப்பு டிரைவரை நிறுத்தச் சொல்லிவிட்டு, காரில் இருந்து இறங்கி ஓடினார். அங்கே ரத்த வெள்ளத்தில் எபிநேசர்! அவரது நண்பரைக் காணோம். கூடவே குருக்களும் ஓடிவர, “எல்லாரும் ஒதுங்கிக்குங்க. இவர் எங்க குடும்ப நண்பர்தான்..” என்று சொல்லிவிட்டு “குருக்களே பிடிங்க!” என்றபடி எபிநேசரின் தலைமாட்டிற்கு ஓடினார். இருவரும் அவரைக் காரில் படுக்க வைத்தனர்.

கார் திரும்ப ஆஸ்பத்திரிக்கு ஓடியது.

“என்னடா என் செல்லம்? கால் எப்படிடா இருக்கு?” காலையில் அருண் விழித்ததும் ராமசுப்பு கேட்டார்.

“அசைக்க முடியலை பெரியப்பா!”

ராத்திரி முழுதும் மயக்க மருந்தின் ஆளுமையில் இருந்தவன் இப்போதுதான் தெளிவாகியிருந்தான். குருக்களும் ராத்திரி முழுவதும் அங்கேயே இருந்துவிட்டார். குருக்களைப் பார்த்ததும் அருண், “மாமா! நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க, “எனக்கு என்னடா தங்கம்? நீ இப்படிப் பேசவும்தான் எனக்கு நிம்மதியே. இந்தாடா கண்ணா…” என்று ஆதுரமாக நெற்றியில் திருநீற்றை வைத்தார்.

அசையமுடியாததால் அருண் மெதுவாகத் தன் தலையை மட்டும் திருப்பி வார்டில் இருந்தவர்களை எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். 2 பெட் தள்ளி இருந்தவரைப் பார்த்ததும் திடுக்கிட்டு, “ஏன் பெரியப்பா, அது எபிநேசர் மாமா தானே?” என வினவினான்.
 “ஆமாண்டா கண்ணா! அவர் நேத்து ஸ்கூட்டர்ல அடிபட்டுக் கிடந்தார். அவருக்கும் நேத்து கைல சின்ன ஆபரேஷன். கொஞ்சம் இரு அவரைப் போய் பாத்துட்டு வர்ரேன்,” என்று சொல்லிவிட்டு எபிநேசரை நோக்கிச் சென்றார்.

“என்ன சார் எப்படியிருக்கு?” என வினவ, அவர் மெல்லச் சிரித்தார். பக்கத்தில் இருந்த அவர் மனைவி கைகூப்பி, “என் வீட்டுக்காரர் எல்லாம் சொன்னார். இவர் கூட இருந்தவர் சர்ச்சு ஹாஸ்பிட்டல்ல கேட்டுட்டு வர்ரேன்னுட்டு போனவர்தான், திரும்பி வரவே இல்லை. இவர்தான் போன வருஷமே அதிகாரபூர்வமா மதம் மாறிட்டாரே! இன்னும் இவரால அவங்களுக்குப் பிரயோஜனம் இல்ல போல. சம்பந்தமே இல்லாத நீங்க செஞ்ச உதவியாலதான் இவர் இப்ப….” அந்த அம்மாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

குருக்களும் அவர்களைச் சமாதானம் செய்தார். “கடவுள் எல்லாருக்கும் பொது. இந்த மதபோதகர்கள் ஏதோ ஓர் அதிசயத்தைக் காண்பிக்கற மாதிரி கூட்டிட்டு போய் குறுகிய மனப்பான்மை என்கிற சேத்தில தள்ளிடுறா. புதுசா கடவுள் பேர் ஒண்ணைச் சொல்லி எல்லாத்தையும் முட்டாளாக்குறா. இந்து மதம் எப்போதும் கடவுளை மையமா உள்ள மதம் இல்ல. தர்மமும் சத்தியமும் மோக்ஷமும் மையமா உள்ள மதம். அதனாலதான் இங்க முப்பத்து முக்கோடிக் கடவுள் பேர் உண்டு,” என்று விளக்கினார்.
 
“வாஸ்தவம் தான்” என்று கண்கலங்கிய எபிநேசரின் மனைவி சட்டென்று, “எனக்கும் பிரசாதம் கொடுப்பீங்களா குருக்களே?” என்றாள். “ஏம்மா, நீங்க போன வருஷம் வரை இந்துக்கள்தானே. அப்போ இந்தப் பிரசாதம் வாங்கிக்கலாம்,” என்று தன் பையில் இருந்து கல்கண்டும் விபூதியும் எடுக்க, எபிநேசர், “சரளா, எனக்கும் திருநீறு வெச்சுவிடு” என்றார். குருக்கள் பரவசமடைந்து, “முருகா! எல்லாருக்கும் துணை நீதாண்டா!!” என்றவாறு அவரே எபிநேசரின் நெற்றியில் திருநீற்றை இட்டார்.

manamaatram2பக்கத்துப் படுக்கையில் இருந்து அருண், “எபிநேசர் அங்கிள்! விநாயகர் அகவல் படிங்க. வலி போயிடும்!” என்று தன் தலையணை அடியில் இருந்து சிறு புத்தகத்தை எடுத்தான்.

“சரிடா கண்ணா! இனிமே என்னை நீ நரசிம்மன் மாமான்னே கூப்பிடு,” என்று நரசிம்மன் புன்னகைத்தார். விநாயகர் அகவல் புத்தகத்தைப் பிரிக்க கையில் வாங்கியவர் ஏதோ அதன்மேல் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்பவர் போல், “சரளா, இனிமே நாம பொய் சொல்லி ஆள் பிடிச்சி காசு சம்பாதிக்க வேண்டாம். உண்மையா இருப்போம்,” என்றார். முகம் தெளிவாகவும் வாக்கு திடமாகவும் இருந்தது.

“சர்வே ஜனா சுகினோ பவந்து!” என்று குருக்கள் கூற, ரங்கனும் ஆமோதித்தான்.

ராமசுப்பு, “இந்து மதத்தில் அவரவர் கடவுள் அவரவர் அந்தராத்மா தான். அது எப்போதும் உறங்காதிருந்து வழிதவறியவரையும் சரியான நேரத்தில் திரும்ப வழிநடத்திவிடுகிறது.” என்று பரவசப்பட்டார். ஒருகணம் நிதானமாகக் கண்மூடி, கைகூப்பி தன் அந்தராத்மாவை வணங்கினார்.

மறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களில் ‘கிழவன் சேதுபதி’ சிறப்பானவன். அவன் வரலாற்றை திரு மீ.மனோகரன் எழுதியிருக்கிறார். அதில் பிரிட்டோ பாதிரியார் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. தென் மாவட்டங்களில் மதமாற்றம் எப்படி நடந்தது என்பதற்கு இந்த வரலாறு ஒரு எடுத்துக்காட்டு. இனி பிரிட்டோ பாதிரியார் பற்றி படியுங்கள்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.

2252_bhaskara_sethupatiஇத்தகைய பாரம்பரியமிக்க சேதுபதிகளில் பலரும் புகழ்வாய்ந்தவர்கள். கிழவன் சேதுபதி, முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி இப்படிப் பலர். இவர்களில் பாஸ்கர சேதுபதி சுமார் நூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வ மத மாநாட்டுக்கு அனுப்பி வைத்தவர். அவர் 1897ல் தாய்நாடு திரும்பிய போது இலங்கை வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் வந்து காலடி வைத்த போது, சுவாமிஜியின் காலடி பாரத புண்ணிய பூமியில் படுவதற்கு முன் தன் தலைமீது காலடி வைக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றவர். பற்பல தானதர்மங்களைச் செய்தவர். அந்தக் காலத்திலேயே சென்னை கிருத்துவக் கல்லூரியில் எஃப்.ஏ. எனப்படும் இண்டெர்மீடியட் பாஸ் செய்தவர். ஆங்கிலம், தமிழ் இவற்றில் பாண்டித்தியம் வாய்ந்தவர். கலை இலக்கியங்களைப் போற்றியவர். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.

ஆயினும் இவர்களது வரலாற்றை ஆய்ந்து பார்க்க விரும்பினால், நம்மவர்கள் எவரும் எழுதிவைக்காத நிலையில் போர்த்துகீசிய பாதிரிமார்களும், கிறிஸ்தவ மதப் பிரச்சாகர்களும் எழுதிவைத்தவைகளைத்தான் நம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். இப்படி ஒருதலைப் பட்சமான செய்திகளை பாதிரிமார்களின் குறிப்புகளிலிருந்தும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கெசட்டுகளிலிருந்தும் எடுத்தாளும் நம்மவர்கள் இதிலுள்ள உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு மாறாக, அவர்களது செயல்களைப் போற்றியும், இங்கிருந்த இந்து மன்னர்களின் செய்கைகளைக் குறை கூறியும் எழுதி வைத்திருப்பது தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டதொரு வரலாற்று செய்தி இராமநாதபுரத்தை நெடுங்காலம் ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் நடந்திருப்பதாக நமக்குத் தெரிகிறது.

பிரிட்டோ எனும் போர்த்துகீசிய பாதிரியாருக்கு மனிதாபிமானத்தோடு கிழவன் சேதுபதி ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக்கொண்டு தன் மத வழிபாட்டை நடத்த அனுமதி கொடுத்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பிரிட்டோ பாதிரியார் மறவர்களை மதமாற்றம் செய்யத் தலைப்பட்டார். அவர் எல்லை மீறி அரண்மனையிலேயே கைவைத்ததும், அதனால் கிழவன் சேதுபதியின் மருமகளும், தம்பியும் கூட பாதிக்கப் பட்டதும், மன்னன் விழித்துக் கொண்டான். தன் தம்பியிடம்  ”ஏன் இப்படிச் செய்தாய்? நமது இந்து தர்மத்தில் இல்லாத எதை அந்த கிருத்துவ மதத்தில் கண்டுவிட்டாய்? அந்த பாதிரியார் உன்னை என்ன சொல்லி மதமாற்றம் செய்தார்? மன்னர் குடும்பத்து நீயே மதம் மாறினால், அது இந்த ராஜ்யத்துக்கே ஆபத்து அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் அது என் இஷ்டம் என்றார். சரி, இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்று அந்த ஜான் பிரிட்டோ பாதிரியாரை வரவழைத்து அவர் மீது விசாரணை நடத்தப் பட்டது.  பாதிரியார் தண்டிக்கப்பட்டார்.

john_de_brito_stampஇதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் “இன்று” என்ற தலைப்பில் செய்திக்கு முன் ஒளிபரப்பும் வரலாற்றுச் செய்தியொன்றில் ஒரு தொலைக்காட்சி ஊடகம், இந்த பிரிட்டோ பாதிரியார் செய்தது பெரும் தியாகம் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இப்போதும் கூட இந்த மதமாற்ற நாடகங்களைப் புரிந்து கொள்ளாத நம் மக்களைப் பற்றி நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

ஆனால், நடந்த வரலாறு என்ன?

நாம் பார்க்கப் போகும் இந்தப் பாதிரியாரின் முழுப்பெயர் ஜான் டி பிரிட்டோ என்பதாகும். இவர் காலம் 1647 முதல் 1693 வரை. இவர் போர்த்துகல் நாட்டில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். பிரேசில் நாட்டில் இவரது தந்தை கவர்னராக இருந்தாராம். வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இந்த பிரிட்டோ, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இந்தியா செல்லத் துடித்தார். அதன் காரணமாக இவர் மதபோதகராவதற்காக 1662இல் அதற்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். ஐரோப்பா தவிர்த்த ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளில் மதப் பிரச்சாரம், மதமாற்றம் இவைகளைச் செய்வதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்தே இவர் இந்தியா வந்தார். குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் மறவர் சமூக மக்களைக் குறிவைத்து இவர் மதமாற்றம் செய்ய விழைந்தார்.

தனது 26ஆவது வயதில் 1674இல் இவர் இந்தியா வந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துத் தனது மதமாற்றப் பணிக்குத் தென்னிந்தியாவில் மறவர் பூமியே சிறந்தது என்ற எண்ணத்தில் இவர் 1686இல் மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்து பனங்குடி எனும் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைக்குளம் எனுமிடத்தில்  தனது மதமாற்ற முகாமைத் தொடங்கினார். தாங்கள் பரம்பரை பரம்பரையாக போற்றிப் பாதுகாத்துவந்த சமய நெறிகளில் அலுத்துப் போயோ என்னவோ அந்தப் பாதிரியார் இங்கு குடியேறிய சில நாட்களுக்குள்ளாக, சில பிராமணர்கள் உட்பட இவரது வாசாலப் பேச்சினாலும், புதிய வழிபாட்டு முறைகளைக் கண்டு மோகித்தும், மதம் மாறினார்கள். இது அந்தப் பாதிரியாருக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்க வேண்டும். பரவாயில்லையே முதல் வியாபாரமே கண்டு முதல் அதிகம் பார்த்து விட்டோமே, இனி மேலும் அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்றால் மக்கள் மந்தை மந்தையாக மதம் மாறுவார்கள் போலிருக்கிறதே என்று இவர் வியந்து போனார்.

நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.

sethupathi_kings_palaceபிரிட்டோ பாதிரியாரின் புதிய சீடர்கள் அவருக்கு அருளானந்தர் என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தினர். இவர் இந்தப் பகுதியில் குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவருக்கு நிறையபேர் மதமாற்றத்திற்கு இணங்கி விட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் செல்லும் நோக்கில் இவர் சிவகங்கை வழியாக பாகனேரிக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள மேலமங்கலம் எனும் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இராமநாதபுரம் கிழவன் சேதுபதியின் முதலமைச்சராக இருந்த குமார பிள்ளை இந்தப் பாதிரியார் தங்கள் மக்களை மதமாற்றம் செய்யும் செய்தியறிந்து மறவர் படையைக் கொண்டு பிரிட்டோ பாதிரியாரைக் கைது செய்தார். அந்த மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் பத்து நாட்கள் காளையார் கோயில் சிறையில் இருந்த பிறகு இவர்கள் அனைவரும் பாகனேரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கிழவன் சேதுபதியிடமிருந்து, கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பாதிரியாரையும் அவரோடு இருப்பவர்களையும் இராமநாதபுரத்துக்குக் கொண்டு வரும்படி கட்டளை வந்தது.

அங்கு மன்னனின் அரசவையில் பிரிட்டோ பாதிரியார் விசாரிக்கப்பட்டார்.  அந்த விசாரணையின் போது, இந்த நாட்டில் இந்துக்கள் பல கடவுளர்களை வணங்குவதாகவும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதாகவும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வணங்கும் இவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவதுதான் தனது மதத்தின் நோக்கமென்றும், அந்தப் புனிதமான பணியைத்தான் தான் செய்து வருவதாகவும் பிரிட்டோ வாதாடினார். அப்படி என்னதான் உங்கள் மதம் போதிக்கிறது என்று மன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார். உடனே அவையிலிருந்த பெரியோர்கள், இந்த பாதிரி நம் மன்னனின் மனதைக் கூட கலைத்து விடுவார் என்று அஞ்சினர்.

எனினும் மன்னனின் கட்டளைக்கிணங்க பாதிரியார் அரண்மனைக்குச் சென்று அங்கு அரசனுக்குச் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு தனது மதத்தின் அருமை பெருமைகளை வர்ணிக்கத் தொடங்கி விட்டார். அவர் சொல்லச் சொல்ல அரசனுக்கு கோபம் கூடியது. ஆனால் தான் குடிப்பழக்கத்துக்கு ஆளானவன், மேலும் பலதாரங்களை மணந்து கொண்டிருப்பவன் என்பதால் ஒருவகைக் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு  நேரடியாக பாதிரியாரை எதிர்த்து அவன் வாதம் செய்யவில்லை. எனவே சமாளித்துக் கொண்டு அரசன் சொன்னான் “பாதிரியாரே! நீங்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மதத்தைப் பின்பற்றுவதையோ, உங்கள் கடவுளை வணங்குவதையோ நான் தடுக்கவில்லை. ஆனால், எங்களுடைய கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவைகளுக்கு மாறான எதையும் நீங்கள் உபதேசிக்க நான் அனுமதிக்க முடியாது. மீறி நடந்தால் உங்கள் உயிருக்கு நான் ஜவாப்தாரியல்ல” என்று எச்சரித்து பாதிரியைப் போக விடுத்தான்.

அதன் பிறகு அரசனைச் சந்திக்க பிரிட்டோ பாதிரியார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சிலகாலம் தென் தமிழ்நாட்டில் தன் மதமாற்ற வேலைகளை நிறைவுற செய்து முடித்த பின் 1687இல் அவர் போர்சுகல் திரும்பினார். இந்தியாவில் வெற்றிகரமாக மதமாற்றங்களைச் செய்துவிட்டு நாடு திரும்பும் பாதிரியாரை அந்நாட்டு மதவாதிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். போர்ச்சுகலில் சில காலம் இருந்த பிறகு அவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்பினார். தனது நண்பரான டிகோஸ்டா எனும் பாதிரியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு லிஸ்பனில் (போர்த்துகல் தலைநகர்) உள்ள அரண்மனையை விட தென் தமிழ்நாட்டு மறவர் மண்ணே மிகவும் பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதன்படி அவர் மீண்டும் இந்தியாவை அடைந்து கோவாவில் தரையிறங்கினார். அங்கிருந்து பாண்டிய நாட்டு மண்ணுக்கு வந்து தனது பணியைத் தொடங்கினார்.

தாதியாத் தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ தாதியாத் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான்.

அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த தாதியாத் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.

john_de_brito_christian_pictureஅரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!  அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த தாதியாத் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.

ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார்  அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள்  உள்ளன.  ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.   பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.

“Most of the Historians who have written on this account have mostly dependant on Jesuit records and so their picture is necessarily pro-christian. The historian’s task is to find out the truth. Britto’s death issue was carefully propagated in such a way so as to create public sympathy in India and Europe”.

– History of Tamilnadu from Viswanatha Nayakar to M.G.Ramachandran: ஆர்.எட்வின் ராஜன் & டி.ஞானசேகர் (பக்கம் 63, 64)

பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது  மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு என்று இவர்கள் சொல்வதிலிருந்து உண்மை நிலவரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. செயல்பாடுகள் தான் மாறவில்லை!

மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

மூலம்: நவோமி ப்ரெட்டிமேன் (Naomi Prettyman)
தமிழில்: ஜடாயு

naomi_prettyman_ex_christian1நான் மிசௌரி மாநிலத்தின் கான்சாஸ் சிடி நகரில் (யு.எஸ்) வசீகரம் மிகுந்த எனது கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டேன். கிறிஸ்தவ இல்லங்களில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் போன்றே ஐந்து வயதாகும்போது நானும் “ரட்சிக்கப்” பட்டேன். எனக்கும், என் கூடப் பிறந்த ஏழு சகோதர, சகோதரிகளுக்கும் எனது  அம்மாவே வீட்டுப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றுத் தந்தார். எனது நண்பர்களாக இருந்த எங்கள் சர்ச்சைச் சேர்ந்த எல்லாக் குழந்தைகளும் இதே வகையில் தான் வளர்க்கப் பட்டார்கள்.

நாங்கள் கான்சாஸ் நகரில் இருந்த எந்த உட்பிரிவையும் சாராத (non-denominational) கிறிஸ்தவ சர்ச்சுக்குச் சென்றோம். அங்கு அதிதீவிர கிறிஸ்தவத்தைக் கடைப் பிடித்தோம். மக்கள் ஆடுவதும், ஆவேசத்துடன் கூச்சலிடுவதும், வலிப்பு வந்தவர்கள் போன்று நடப்பதுமாக, பிரார்த்தனை நேரங்கள் பெரும்பாலும் வெறியாட்டங்களாகவே இருந்தன. “ஜீசஸ் கேம்ப்” என்ற ஆவணப் படம் எங்களுக்கு அளிக்கப் பட்ட அந்த போதனைகளை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகிறது. அப்போதே நாங்கள் “ஏசுவின் போர்வீரர்களாக” இருந்தோம். சர்ச் அதன் உறுப்பினர்களை மிஷன் குழுக்களாக பல இடங்களுக்கு அனுப்பியது, குறிப்பாக மெக்சிகோவுக்கு.

இதற்கெல்லாம் நான் உடன்பட்டேன். அந்தக் காலத்தில் எனது வாழ்க்கை லட்சியம் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது, கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதாக இருந்தது. ஒரு சராசரி பதின்மவயது ஜீசஸ் பைத்தியமாக (“Jesus Freak”) இருந்தேன்.

ஜீசஸ் கேம்ப் ஆவணப் படம் – முன்னோட்டம்

Jesus Camp is a 2006 documentary directed by Rachel Grady and Heidi Ewing about a pentecostal summer camp for children who spend their summers learning and practicing their “prophetic gifts” and being taught that they can “take back America for Christ.”

எனக்கு பதினான்கு வயது இருக்கும்போது, இந்தியாவில் புதுதில்லிக்கு மிஷன் குழுவாக செல்ல தகுந்த ஊழியர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக சர்ச்சில் அறிவித்தார்கள். நான் கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது உயிர் நண்பனும் அந்த மிஷன் குழுவில் செல்வதாக இருந்தான். நான் அவனை விட்டுப் பிரிந்திருக்க விரும்பவில்லை. அந்தக் கோடை விடுமுறை முழுவதும் பலவிதமாக வேலை செய்து பணம் திரட்டினேன் – புல்வெளி சீர்செய்வது, புத்தகம் விற்பது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, நன்கொடை கேட்பது இப்படியெல்லாம்.

இப்படித் தான் பதினான்கே வயதான நான் இந்தியா போகும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். எங்களது மிஷன் குழுத்தலைவர் பணி என்ன என்பதைத் தெளிவாகவே விளக்கியிருந்தார் – அந்தப் பகுதி முழுவதும் மக்களை வலைவீசித் தேட வேண்டும், ஜப வீடுகளை உருவாக்க வேண்டும் (”scout the land” and plant “house churches”). அங்கு நாங்கள் ஆச்சரியகரமான இந்தியக் குடிகளை சந்தித்தோம். அவர்களைப் போலவே உடையணிந்து கொண்டோம். அவர்களுடன் புது தில்லி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்தோம். பிரசினை என்னவென்றால், அவர்கள் அனைவரும் இந்துமதம் அல்லது புத்த மதத்தைக் கடைப் பிடிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களது “தீய, சாத்தானிய” வழிகள் அகன்று, ஏசு அவர்களது மண்ணிற்கு வந்து அவர்களுக்கு ஒளி காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்தோம். நானும் பணியில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்.

hindu_religion_is_cultureநாங்கள் இந்தியாவில் இருந்தபோது தீபாவளி என்ற பண்டிகை வந்தது. அதைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த மக்கள் தங்களது மதம் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும், சிரத்தையையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மதம் எப்படி அவர்களது கலாசாரத்தின் அழகிய அங்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.

நான் யு.எஸ் திரும்பியதும், எனது 5 வயது தங்கை மிகவும் நோய்வாய்ப் பட்டாள். எங்கள் பெற்றோர்கள் ”கர்த்தரே பெரிய மருத்துவர்” என்ற நம்பிக்கை கொண்டிருந்ததனால் எனது தங்கை 2004ம் வருடம் ஜனவரி 9ம் நாள் இறந்து போனாள் (“Victory Halbert” என்று கூகிள் செய்தால் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்). எங்கள் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். நானும், என் உடன்பிறந்தவர்களும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப் பட்டோம். மூன்று வருடங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சீர்திருத்த இல்லங்களுக்கும் அலைக்கழிக்கப் பட்டு, கடைசியாக எங்கள் அப்பாவிடம் கொண்டு சேர்க்கப் பட்டோம். அப்போது விவாகரத்தாகியிருந்தது, அம்மா பிரிந்து சென்று விட்டிருந்தாள். அப்பா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டார். நிறையக் குடிக்க ஆரம்பித்தார். என் இஷ்டப் படி என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதித்தார்.

நான் ஒருவிதமாக வளர்க்கப் பட்ட வீட்டுச் சூழலிலிருந்து, மதச்சார்பற்ற சுதந்திர உலகத்துக்குள் தள்ளப் பட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அம்மாவிடம் வீட்டுப் பள்ளிக் கூடத்தில் பாடம். பிறகு, மிசௌரி மாநிலத்திலேயே மிகவும் மோசமான அரசுப் பள்ளிகள் இருக்கும் பகுதியில் அரசுப் பள்ளிக்குப் போகவேண்டி வற்புறுத்தப் பட்டேன்.

நான் அறியவந்த எல்லாவற்றுக்கும் எதிராக புரட்சி செய்தேன். அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை தவறவிட்டேன், அதனால் பள்ளியிலிருந்து நிற்கவேண்டியதாயிற்று. புதிய பெரிய கிளாஸ் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றினேன். கடைசியாக பதினேழு வயதில், பள்ளிப் பருவத்தில் சினேகமான தோழனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினேன். உடனேயே, நான் கர்ப்பமானேன். என்னை இழுத்துப் பிடித்து வைத்திருந்த எல்லாவற்றையும் உதறி, என் வாழ்க்கை இட்டுச் செல்லும் பாதையில் செல்லத் தொடங்கினேன். நானும் என் தோழனும் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினோம். சேர்ந்து வாழ நிச்சயித்தோம். 2008ல் எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. இறுதியாக திருமணம் செய்து கொண்டோம். அப்போது வயது எனக்கு 19, அவனுக்கு 21. பிறகு புது வீடு கட்டிச் சென்றோம். நான் வீட்டிலிருந்தே குழந்தைகள் காப்பகம் நடத்தினேன். அவன் கல்லூரியில் படித்த பட்டதாரி என்பதால் நல்ல வேலை கிடைத்தது. நாங்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதுகாப்பு அடைந்து விட்டோம்.

என் கணவர் பாப்டிஸ்ட் (Baptist) சூழலில் வளர்ந்தவர். என்னைப் போலவே அவரும் தன்னை கிறிஸ்தவன் என்று பெருமையாக அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் நாங்கள் இருவருமே எங்கள் நம்பிக்கைகளுடன் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் இள வயதினர். கிறிஸ்தவ மதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாததால், அதைப் பற்றிப் பேசுவதை முற்றாகவே தவிர்த்தோம்.

எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஏராளமான கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டேன். இதை அலங்கோலமாகாமல் எப்படி என் பாப்டிஸ்ட் கணவருடன் பேசப் போகிறேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளை அவருக்கும் பைபிளைப் பற்றி கிறிஸ்தவத்தைப் பற்றி அதே போன்று கேள்விகள் இருந்தன என்று தெரியவந்தது. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும், இதைப் பற்றி என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.

mclout_kansasஅது 2009ம் ஆண்டு கோடை காலம். என் அப்பா, தீவிரமாக கிறிஸ்தவத்தை உதறித் தள்ளி விட்டிருந்தார். மத மௌடிகம் பற்றி இடைவிடாத பேச்சுக்களிலும், சதிவலைகள் பற்றிய சலிக்காத உரையாடல்களிலும் ஊறி அதன் எல்லைக்கே சென்று விட்டிருந்தார். ”ஓய்வான உழைப்பாளர் தினம்” (Laid Back Labor Day) என்ற கொண்டாட்டத்திற்காக கான்சஸின் மெக்லவுத் (Mclouth) பிரதேசத்திற்கு கூட்டாகச் சேர்ந்து போக எங்களை அழைத்தார். நாங்கள் தயங்கினோம், ஏனென்றால் அந்த இடம் பாகன்கள் அதாவது இயற்கை வழிபாட்டாளர்கள் கூடும் மைதானம் (Pagan campground). கிறிஸ்தவர்களான எங்களுக்கு, பாகன்கள் சாத்தானிய வழிபாட்டாளர்கள், சூனியக் காரர்கள் என்று ஆதிமுதலே கற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது.

இருந்தாலும் அங்கு போனோம். அது எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இப்போது நாங்களே எங்களை ”பாகன்கள்” என்று அழைத்துக் கொள்கிறோம். எதையும் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மந்திர வித்தைகளையும், மறைஞானத்தையும் திறந்த மனதுடன் அணுகுகிறோம். இயற்கை மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

கர்த்தரால் நிராகரிக்கப் படுவது பற்றியும், நரகத்தில் உழல்வது பற்றியும் இப்போது எனக்குப் பயம் இல்லை. உலகத்தில் ஒருவர் சொல்வதும் முழு உண்மை இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது. அப்படி இருக்க ஒரே ஒரு மதம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்? மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்.

இந்த வாழ்க்கைக் கதையைச் சொன்னதன் நோக்கம் என்ன என்று என்னால் சரியாகக் கூற முடியவில்லை. இது ஒரு வாக்குமூலம் அல்ல. நான் யார், எப்படிப் பட்டவளாகியிருக்கிறேன் என்பதை உறுதியுடன் சொல்ல விரும்பினேன் என்றே நினைக்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். முன்னாள் கிறிஸ்தவர்களாக எங்களது பழைய நினைவுகளை, எண்ணங்களை, புரிதலுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கணவர் கிடைத்தார் என்பது என் அதிர்ஷ்டம். இந்த இடத்தில் “நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொல்லப் படாமல், என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் (மற்ற இடங்களில் அப்படி நிறையப் பேர் இன்னமும் சொல்லத் தான் செய்கிறார்கள். நான் தான் நம்புவதில்லை).

நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் – அச்சம். கர்த்தரால் நிராகரிக்கப் பட்டு நரகத்தில் உழலாமல், சுவர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற அச்சத்தால், முற்றாக பைபிளில் கூறியபடி வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். எனக்கு பைபிளைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே உள்ளது, ஆனால் இப்போது வேண்டாம்.

ex_christian_tshirtஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் – இப்போதும் நான் அச்ச உணர்வுடன் போராட வேண்டியுள்ளது, கிறிஸ்தவத்தின் காரணமாக. சில சமயம் நினைக்கிறேன் – ஒருவேளை நான் எண்ணுவது தவறோ? உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.

(இந்தக் கட்டுரை Exchristian.net என்ற இணையதளத்தில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை ஆசிரியர் போன்று கிறிஸ்தவ மதத்தால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்வுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவக்கியவர்கள் மற்றும் அதில் முயல்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையதளம் அது).

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3

(தொடர்ச்சி…)

மனித உரிமையாளர்களின் மாய்மாலங்கள்

close guantanamoஇந்தியாவில் இந்த மனித உரிமையாளர்கள் அடிக்கும் கொட்டங்களை எழுதி மாளாது. அதனால் அதை விட்டுவிட்டு இந்த நூற்றாண்டில் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலையும் அதைத் தொடர்ந்து இவர்கள் அடித்த கூத்துகளையும் நோக்கலாம். செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா இத்தாக்குதலில் தொடர்பு உடையவர்களையும் மற்றும் பல இஸ்லாமியத் தீவிரவாதிகளையும் “க்வொண்டனமா பே” என்னும் இடத்தில் சிறை வைத்தது. இத்தாக்குதலுக்கு சூத்ரதானியான “கலீத் ஷேய்க் முகமது” என்பவரும் இதில் அடக்கம். ஜார்ஷ் புஷ்ஷை அரக்கனாகவும், ஒபாமாவை அமைதிக் காவலனாகவும் உருவகப்படுத்தியும் மனித உரிமையாளர்களின் வெறி அடங்கவில்லை. கம்யூனிஸத்தை அனுசரிக்க மனிதர்கள் இருக்கும்வரை உலகில் கிறுக்கர்களும், வெறி பிடித்தவர்களும் இருந்தே தீருவார்கள். ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்னும் பெயரில் தீவிரவாத்திற்கு நெய் ஊற்றுவதுதானே கம்யூனிஸ்டுகளின் வேலை. இந்த வேலையை மனித உரிமையாளர்களும் செவ்வனே செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் கலீத் ஷேய்க் முகமது, இந்தியாவில் அப்சல் குரு போன்றோருக்கு ஆதரவாக செயல்படுவதுதானே இவர்கள் வேலை. செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்த 3000 அப்பாவிகளும் மனிதர்களே அல்ல. அப்பாவிகளைக் கொன்ற “கலீத் ஷேய்க் முகமது” மற்றும் அவருடைய கூட்டாளிகளும்தானே மனிதர்கள். அந்த மனித உரிமையாளர்களின் கூற்றுப்படி இந்த மனிதர்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டுமாம். அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாதாம்.

[இங்கு ஒரு இடைச்செருகல் செய்தி. துக்ளக் ஆசிரியர் சோ ஒருமுறை எழுதியது. நம் வீட்டில் கொள்ளை நடக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். சில நாட்களுக்குப் பிறகு போலீஸ் அந்தக் கொள்ளைக்காரனை பிடித்து விடுகிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நாம் போலீஸிடம் சென்று அந்த கொள்ளைக்காரனை நல்ல முறையில் நடத்துங்கள் என்றா கூறுவோம். அக்கொள்ளையனை என்ன வேண்டுமானாலும் செய்து என்னிடமிருந்து திருடிய பொருட்களை வாங்கிக் கொடுங்கள் என்றுதானே கூறுவோம். ஒரு திருடனையே நாம் இப்படி நடத்தும்பொழுது 3000 அப்பாவிகளைக் கொன்ற கலீத் ஷேய்க் முகமது போன்ற மிருகங்களை துன்புறுத்தி அவர்களின் அடுத்த கட்ட தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க உணவா கொடுப்பது?]

இதுபோன்ற மனித உரிமையாளர்களின் பிடியில் சிக்கிய ஒபாமா, தான் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த “க்வொண்டனமா பே” சிறையை மூடி விடுவதாக வாக்குறுதி அளித்தார்.

Closing Guantanomo: “On my first day in office, I prohibited — without exception or equivocation — the use of torture by the United States of America. I ordered the prison at Guantanamo Bay closed, and we are doing the hard work of forging a framework to combat extremism within the rule of law.” — Barack Obama.

ஒபாமாவிற்கு பதவி ஏற்றபிறகுதான் புரிந்தது, அச்சிறையை மூடுவது எளிதல்ல என்பது. அங்கு கிட்டத்தட்ட 200 முஸ்லீம் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையை மூடியபிறகு அத்தீவிரவாதிகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை அறியாமல் உணர்ச்சிவசத்தில் உளறியதால் ஏற்பட்ட விளைவு இது.

 

கடைசியாக விருதும் விழுந்தது

உலகில் என்றுமே புனிதத்திற்கும், உண்மைக்கும், நியாயத்திற்கும் தனி இடம் இருந்தே தீரும். உத்தம மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்று அறைகூவ “நோபல் அமைதிப் பரிசு” என்றொரு விருது வழங்கப்பட்டு வந்தது. நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பவர்களுக்கும், தன்னுடைய அல்லது மற்றொரு நாட்டின் சேனையின் அளவை குறைப்பவர்களுக்கும், உலக அமைதிக்காக மாநாடுகள் போன்றவைகளை நடத்துபவர்களுக்கும் இந்த “நோபல் அமைதிப் பரிசு” வழங்கப்பட வேண்டும் என்பது இவ்விருதை உருவாக்கிய “ஆல்பிரட் நோபல்” என்பவரின் அவா. நோபல் தன் முழு சொத்துகளையும் இந்த விருதுகள் உருவாக்கப்பட வழங்கினார். அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டாலும் “நோபல் அமைதி விருது” மிகவும் கௌரவமாக கருதப்பட்டு வந்தது.

obama-gets-peace-prize-cartoon-by-zapiroஇந்த ஆண்டு இவ்விருதை வழங்க முடிவெடுக்கும் மனிதர்களுக்கும் மற்றவர்களைப் போன்றே இனவாதம், சிறுபான்மைப் பேய் போன்றவை பிடித்துக்கொண்டது. பதவியேற்று 9 மாதமே ஆகியுள்ளவரும் உலகில் நடந்துவரும் எந்தப் பெரிய மோதலையும் தீர்க்காதவரும் மட்டுமல்ல அவற்றைத் தீர்க்க எந்த கொள்கை மாற்றத்தையும் ஏற்படுத்தாதவருமான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 
இன ஒற்றுமைக்கான ஒரே வழி: [பெண் கொடுத்து பெண் எடுப்பது]

mixed-marriageஇக்காலத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் கூறும் வகையில் இன ஒற்றுமை உலகில் ஏற்பட ஒரே ஒரு வழிதான் உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு கவுண்டர் தன் பெண்ணை காரைக்குடியில் உள்ள ஒரு செட்டியாரின் பையனுக்கு மனமுவந்து திருமணம் செய்விக்கத் தயாராக வேண்டும். (அது என்ன, பிராமணர்களை மட்டும்தான் உதாரணம் காட்ட வேண்டுமா?) காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் செய்யப்படும் திருமணத்தைப் பற்றி இங்கு பேசவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியைச் சேர்ந்த பெற்றோரும் மனமுவந்து தங்கள் மகனையோ, மகளையோ வேற்று ஜாதியைச் சேர்ந்தவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும். ஐரோப்பாவில் என்றால் தன் வெள்ளை மகனுக்கு ஆசியப் பெண்ணைத் திருமணம் செய்விக்க வேண்டும். இது இன்னும் பல தலைமுறைகளுக்கு கற்பனையாகவே இருக்கப்போவதால் நாம் அடுத்த விஷயத்திற்குச் செல்வோம்.

 
இன ஒற்றுமைக்கான நாம் கூறும் விளக்கம்

வேற்றுமையில் ஒற்றுமை
 
எல்லா இனத்தாரும் தங்கள் தங்கள் பிரதேசங்களில் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப தங்களின் மூதாதையர்களின் பாரம்பரிய முறையிலும் தங்களின் கலாசாரக் குறியீடுகளைப் பேணி பாதுகாத்துக்கொண்டும் வாழ்வதே நடைமுறைக்கு சாத்தியமானதும் மனித சமுதாயம் அமைதியாக வாழ்வதற்குண்டானதுமான வழி.

 
நமக்கிருக்கும் வழிகள்

இது வரையில் மேற்கத்திய நாடுகளின் சமுதாயத்தின் பல மட்டங்களில் குடியேறிகளால் ஏற்படும் அபத்தங்களைக் கண்டோம். “இன ஒற்றுமை” ஆதரவாளர்களால் கூறப்படும் “Cosmopolitan Culture” பெரும்பான்மை சமுதாயங்களிடையே வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளது. மேற்கத்திய சமுதாயங்கள் இன வேற்றுமை என்ற நிலையிலிருந்து “இன துவேஷம்” என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. நடைமுறை யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு வரும்காலங்களில் இரத்தக் களரியைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இது நாமே உருவாக்கிக்கொண்ட புற்றுநோய். சாதாரண மருந்து மற்றும் ஊசிகளால் புற்றுநோயை குணப்படுத்த முடியாது. Chemotherapy எனப்படும் மிக வீரியமான மருந்துகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். Immigration Freeze– இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டே தீரும். உயிரைக் காப்பாற்ற இந்த வலியைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். சில நேரங்களில் Surgery ,அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும்– விருப்பப்பட்டவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டி வரும்.

மேற்கத்திய நாடுகளின் குடியேறிகளால் கடந்த 20, 30 வருடங்களில் அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியாத அளவு மாறியிருக்கிறது. இவை உள்காயங்களைப் போல் அவர்களுக்கு தொடர்ந்து வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதலைப் போன்ற இன்னொரு தாக்குதல் ஏற்படும்போதோ அல்லது வேறுவகையில் ஏற்படும்போதோ வெள்ளையர்களின் கோபம் வன்முறையாக மாறலாம். முதலுதவியைப் போன்று அவர்களுக்கு இன்று சில மருந்துகள் தேவைப்படுகின்றன.

(1) முதலாவதாக மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு (வெள்ளையர்கள் மற்றும் யூதர்கள் தவிர) புதியதாக குடியுரிமை கொடுக்கப்படக்கூடாது. மற்ற நாட்டின் வெள்ளையர்கள் மற்றும் யூதர்களும் இதற்கு விதிவிலக்காகவே இருப்பார்கள். உதாரணமாக ஐரோப்பிய நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கோ, ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவிற்கோ குடியேறும் வழி அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்குள் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இரண்டு முக்கிய ஒற்றுமைகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒன்று. அதைவிட முக்கியமானது மதம் என்னும் ஒற்றுமை. இரண்டாவதாக யூதர்கள். இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள அவர்களின் பைபிளின் கடைசி புத்தகமான “Revelation”க்கு செல்ல வேண்டும். அப்புத்தகத்தின்படி இயேசு கிறிஸ்து மறுபடியும் இவ்வுலகில் உயிர்த்தெழ யூதர்களுக்கு கடவுளாலேயே வழங்கப்பட்ட பூமி இருந்தாக வேண்டும். 1948ல் பிரிட்டனின் காலனியாக இருந்த இஸ்ரேலில் வெறும் 25 சதவிகித யூதர்களே வாழ்ந்து வந்தார்கள். மற்றவர்கள் பாலஸ்தினீய முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும். இந்தப் புத்தகத்தின் அடிப்படையிலேயே சிறுபான்மையாக இருந்த யூதர்களுக்கு தனி நாட்டை பிரிட்டன் வழங்கியது என்று கூறுவார்கள். இவ்விஷயங்கள் பலருக்கு கோபத்தையே ஏற்படுத்தும். ஆனால் வெள்ளையர்களோடு யூதர்கள் சில சமாதானங்களை செய்துகொண்டு சேர்ந்து வாழமுடியும். இந்துக்களாலும், முஸ்லீம்களாலும், ஆப்பிரிக்கக் கருப்பர்களாலும் வெள்ளையர்களோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. இந்த இன ஒற்றுமை, வரும் காலங்களில் ஏற்படுமா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றுள்ள யதார்த்தத்தை நோக்கும்போது இவ்வினங்கள், ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வசிக்கும்போது, வரும் காலங்களில் தோன்றக்கூடும் என்கிற இன ஒற்றுமையைவிட இன்னும் சில காலத்தில் ஏற்படப்போகும் இரத்தக் களரியே நம்மை அச்சுறுத்துகிறது.

work-permit(2) இங்கே இன்னொரு யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளில் அவர்களின் தொழிற்துறை வேலைகளுக்கு ஆட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதால் அதை நிரப்ப அந்நியர்கள் அங்கு செல்லத்தான் வேண்டி வரும். “Work Permit” (வேலைக்கான அனுமதி) எவருக்கும் எக்காலத்திலும் “Citizenship” குடியுரிமையாக மாறக்கூடாது. அந்நியர்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது பணம் சம்பாதிக்க மட்டுமே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உதாரணமாக ஆப்பிரிக்க சோமாலியாவில் ஒரு நாளைக்கு அரை டாலருக்கும் கீழே சம்பாதிப்பவருக்கு அமெரிக்காவில் கூலி வேலைக்கும் ஒரு நாளைக்கு 50 டாலர் கிடைக்கிறது. இதில் ஈடுபடும் இருவருக்குமே லாபம்தான். அமெரிக்காவிற்கும் ஆட்கள் கிடைக்கிறார்கள். சோமாலியராலும் தன் குடும்பத்தை வறுமையின் கொடுமையிலிருந்து மீட்க முடிகிறது. இந்த வியாபாரத்தில் குடியுரிமையை நாம் ஏன் இழுக்க வேண்டும்?

(3) மூன்றாவதாக ஒரு நாட்டின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க ஒரு இனத்து அல்லது குழுவின் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று பிறகு குடியுரிமை பெறுகிறார்கள். இவர்களுக்கு தற்காலிகக் குடியுரிமை கொடுக்கப்படலாம். இதுவும் அவர்கள் உண்மையான அகதிகள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்புதான் அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க பல மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். வரும்காலங்களில் இது போன்ற சமயங்களில் தற்காலிகக் குடியுரிமை கொடுக்கப்படலாம். அவர்களின் சொந்த நாட்டில் நிலைமை சீரடையும் பட்சத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

இது போன்ற நிலை வரும்காலங்களில் ஏற்பட்டாலும் பல்வேறு இன மக்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ வேண்டி வரலாம். அந்நியர்கள் மேற்கத்திய நாடுகளில் சென்று வாழும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைப் பற்றி துக்ளக்கில் சோ எழுதியதைப் பார்க்கலாம். “ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் எந்த நாட்டிற்குச் சென்றாலும் இந்திய மாணவர்கள் அடக்கத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். சங்கம் அமைத்து கோஷங்கள் போடுவது, தெருவில் இறங்கிப் போராட்டம் செய்வது போன்றவற்றால் அந்நாட்டுப் பெரும்பான்மை சமூக மக்களின் வெறுப்புக்குத்தான் ஆளாக வேண்டும்.”

இந்த அறிவுரை இந்திய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து அந்நியர்களுக்கும் பொருந்தும். உலக அளவில் வலது சாரி சக்திகள் ஒன்றிணைவது ஒன்றே வழி

குடியேறிகளின் பிரச்சினை ஒருபுறம் இருக்க அதைப் போலவே இன ரீதியில் மிக முக்கியமான இன்னொரு பிரச்சினையையும் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.

taliban-fightersஇந்து, கிறிஸ்தவ மற்றும் யூத இனங்களை வேரறுக்க ஒரு அரக்கன் உருவாகியிருக்கிறான். அந்த அரக்கனின் பெயர்தான் தாலிபான். (இக்கட்டுரையின் வசதிக்காக இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரையும் தாலிபான் என்றே கூறுகிறேன்.ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா என்றும் இந்தியாவில் லஷ்கர்-எ-தொய்பா, ஜெய்ஷ்-எ-முகமது என்றும் இஸ்ரேலில் ஹமாஸ், ஹிஸ்பொல்லா என்றும் இவர்கள் அழைக்கப்பட்டாலும் இவர்களின் நோக்கம் ஒன்றுதான்.) யூதர்களால் தாலிபான்களை கட்டுக்குள் வைக்க முடிகிறதே தவிர அழிக்க முடியவில்லை. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கோ ஆப்கானிஸ்தானில் மண்ணைக் கவ்வ வேண்டிய நிலை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோற்றால் உடனடியாக நடுங்க வேண்டிய நாடு அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிகளோ அல்ல, இந்தியாதான். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து நம் குல வைரி நாடான பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து விடுவர். மேற்கூறிய தகவல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்– தாலிபான்’களை நம் மூன்று இனங்களாலும் தனித்தனியாக அழிக்க முடியாது என்பதுதான். காலத்தின் கட்டாயத்திற்காகவாவது இந்த மூன்று இனங்களும் சேர வேண்டியதுதான்.சரி, ஆனால் நம் மூவருக்குள்ளும் உள்ள பிணக்குகளை மறந்து நம்மால் இணைய முடியுமா? சற்று சிந்திப்போம்.

 
கிறிஸ்தவர்களும் யூதர்களும்

முன்னரே கூறிய படி அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் வேற்றுமையும் உள்ளது, ஒற்றுமையும் உள்ளது. யூதர்களே இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள் என்பது கிறிஸ்தவர்களின் வாதம். அதே சமயத்தில் யூதர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கூறுவதும் பைபிள்தான் என்பதால் அவர்களுக்குள்ள வேற்றுமையை விட ஒற்றுமை அதிகம்தான்.1948லிருந்து இஸ்ரேலின் சரித்திரத்தைப் பாருங்கள்; யூதர்களுக்காக மேற்கத்திய நாடுகள் பட்ட சிரமங்கள் அவர்களுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத ஒற்றுமையை விளக்கும். நேபாளத்தை நாம் கைகழுவி விட்டதால் சீனக் கூலிப்படையான மாவோயிஸ்டுகள் வசம் அந்நாடு போனதையும் பாருங்கள். மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலைக் கைகழுவி விடும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

 
யூதர்களும் இந்துக்களும்

நம்மிரு இனங்களுக்கும் வரலாற்று ரீதியாகக் கூட எந்த ஒரு சுணக்கமும் இருந்ததில்லை. யூதர்களில் ஒரு சிலர் பல தலைமுறைகளாக இந்தியாவின் கேரளாவில் வாழ்ந்து வருவதையும் இங்கு நோக்கலாம். இஸ்ரேலுடன் நாம் இராஜ்ஜீயத் தொடர்புகளை ஆரம்பித்தவுடன் அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் நம்முடைய ஜனாதிபதியைச் சந்தித்தவுடன் சமஸ்கிருதத்திலேயே முதல் வார்த்தையைக் கூறினார். நம் இரு நாட்டு மக்களும் பண்டைய கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். ஆகவே நம்முடைய கலாசாரத்தின் ஆணிவேரான சமஸ்கிருத்தில் பேசுவது மிகவும் முக்கியம் என்று கருதினார். மேலும் காஷ்மீர் பிரச்சினை தீர தம் நாடு, இந்திய-பாகிஸ்தான் எல்லை முழுவதும் “Computerised Sensors”ஐ அமைத்துத் தருவதாக உறுதி அளித்தார். நாம் யூதர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் நம்மை நோக்கி பல அடிகள் முன்னோக்கி வருவர். அவர்கள் நம்மையும் நம் மதத்தையும் மதிப்பவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

 
இந்துக்களும் கிறிஸ்தவர்களும்

conversionagenda2இங்கு ஒன்றை கூறித்தான் ஆக வேண்டும். நமக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள பிணக்குகள் சில வருடங்களில் கூட தீரும் என்று கூற முடியாது. 200 வருடங்களாக நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் புரிந்த கொடுமைகளின் வடுவே இன்னும் மறையவில்லை. சமஸ்கிருதத்தை பார்ப்பனர்களின் மொழி என்றும் பார்ப்பனர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிய ஆரியர்கள் என்றும் புரளி மூட்டையை அவிழ்த்து விட்டார்கள். இதனுடைய தாக்கத்திலிருந்தே நம்மால் இன்னும் வெளிவர முடியவில்லை. ஆனால் இன்றுள்ள யதார்த்த நிலையில் நம்மால் கடந்த காலத்தை மறக்கவோ மன்னிக்கவோ இயலவில்லையென்றாலும் இனி வரும்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த காலத்தையாவது நாம் வாதத்திலிருந்து நீக்கினாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினையாக இருப்பது மதமாற்றமே. உணர்ச்சி வசப்படாமல் யோசித்து பார்த்தால் இந்த மதமாற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது பணம்தான் என்பது புரியும். அதாவது மேற்கத்திய நாடுகளிலிருந்து நம் நாட்டின் மிஷனரிகளுக்கு அனுப்பப்படும் பணமே இந்த மதமாற்றம் என்னும் பேய்க்கு உயிராக இருக்கிறது. எப்படியேனும் இந்தப் பணப் பட்டுவாடாவை நாம் தடுத்து விட்டால் இங்கிருக்கும் மதமாற்றப் பேய் சில வருடங்கள் துடித்து பின்னர் அடங்கிவிடும். இதை நடைமுறைப்படுத்த நாம் மேற்கத்திய நாடுகளுடன் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பை நாடவேண்டியதுதான் வழி. அதற்கு நாம் சில விலைகளை கொடுத்துத்தான் தீர வேண்டும். உதாரணமாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியத் துருப்புகளை அனுப்புவது, இரான் நாட்டு விஷயத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலையை எடுப்பது, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது போன்றவற்றைச் செய்ய நேரிடலாம்.

 
வலதுசாரிகள் ஒன்றுபடும் விஷயங்கள்

நம் மூன்று இனங்களுக்குள்ளும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமைக்கான காரணிகளும் உள்ளன. கருக் கலைப்பு, ஓரினச் சேர்க்கை, “Embryonic Stem cells” என்ற மூல உயிரணுவை பிரிப்பதற்காக ஒரு சிசுவை உருவாக்கி அழிப்பது போன்ற விஷயங்களை எதிர்ப்பதில் நம் மூன்று இன வலதுசாரிகளும் ஒன்றுபடுகின்றன.

சரி, மேற்கூறிய விஷயங்கள் இன்றைய நிலையில் சாத்தியமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இதற்கு முக்கியத் தடையாக இருப்பது ஜனநாயகக் கட்சிகள்தான். (ஜனநாயகம் இல்லை). இந்தியாவில் காங்கிரஸ், அமெரிக்காவில் பதவியில் இருக்கும் ஜனநாயக கட்சி, பிரிட்டனில் பதவியில் உள்ள தொழிலாளர் கட்சி போன்றவை எப்பொழுதும் “புனித சிறுபான்மை ஸ்நானம்” செய்வதால் மதமாற்றத்தைப் பற்றியோ, குடியேறிகளால் தோன்றும் பிரச்சினைகளைப் பற்றியோ இவர்களுக்கு அக்கறையில்லை. இவர்களிடம் உள்ள இன்னொரு பிரச்சினை, தங்களை எப்பொழுதும் மதச் சார்பற்றவர்களாகக் காட்டிக்கொள்வது. உலகில் மக்களின் அடையாளமாக இருப்பது மதமே. பெரும்பான்மையினருடைய மதத்துடன் தொடர்பு இல்லாமலும் சிறுபான்மையினர்களின் மதங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதே மதச்சார்பற்ற நிலை என்பது இவர்களின் புரிதல். இதற்கு எதிரிடையாக மதமே மக்களை ஒன்றிணைக்கும் சக்தி என்றும், மதங்களாலேயே மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்றும் மூதாதையர்களின் வாழ்க்கை நம் போன்றோருக்கு பாடம் என்றும் நினைப்பது வலதுசாரிகளின் கொள்கை.

 
மூன்றாவது முனைத் தாக்குதல்

குடியுரிமை பிரச்சினையும் தாலிபான்’களும் நம்மை இருபுறம் அழுத்த மூன்றாவது முனையில் கம்யூனிசத்தைச் சேராத நாத்திகர்களும், நாத்திகத்தையே கொள்கையாகக்கொண்ட கம்யூனிஸ்டுகளும் நம்மை நெருக்குகிறார்கள். இதை விளக்க ஒரே ஒரு மிக முக்கியமான உதாரணத்தைக் காண்போம்.

 
சிலுவையே சிலுவையில் அறையப்பட்டது

crucifix-on-a-classroom-wall-in-romeவடக்கு இத்தாலியில் ஒரு பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளின் தாயார் அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் சிலுவையின் படம் இருப்பதால் தன் குழந்தைக்கு மதச்சார்பற்ற கல்வி கிடைப்பதில்லை என்றும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் வாதாடினார். இத்தாலியின் நீதிமன்றத்தில் இவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவுடன் அவர் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்நீதிமன்றத்தில் இவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பள்ளிகளில் சிலுவையை வைக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். சரி, இதோடு நீதிபதிகள் நிற்கவில்லை. தன்னுடைய குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்குவது என்பதில் பெற்றோர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் கடவுளை நம்புவதா வேண்டாமா என்பதில் குழந்தைகளுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. (கத்தோலிக்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் நாட்டில் தங்கள் மத அடையாளங்கள் உள்ள பள்ளிகளில் கல்வி அளிக்க உரிமை கிடையாதா?)

இத்தோடும் நீதிபதிகள் நிற்கவில்லை. இது போன்ற மத அடையாளங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டால் மற்ற மதங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு (அதாவது சிறுபான்மை மக்களின் குழந்தைகளுக்கு) தொந்தரவாக இருக்குமாம்.

இத்தோடு இந்த விஷயம் முடியும் என்று நினைக்காதீர்கள். இத்தீர்ப்பை ஆராய்ந்த வல்லுநர்கள் இனி அரசுக் கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்து அரசுச் சார்புடைய இடங்களிலும் சிலுவையை வைக்கமுடியாது என்ற நிலை தோன்றப் போகிறது என்றார்கள். மேலும் இது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பானபடியால் இத்தீர்ப்பு எல்லா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கட்டுப்படுத்தும். கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக வெள்ளையர்கள் பரிபாலித்து வரும் கலாசாரச் சின்னங்களை குடியேறிகளும், நாத்திகர்களும் சிறிது சிறிதாக அழிப்பதை இதை விடத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள முடியாது.

நம்மூரில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்று திராவிடக் கட்சிகள் கூறி வருவதையும் நாம் இங்கு நோக்கலாம்.

 
முடிவுரை

சமஸ்கிருதத்தில் ஒரு விஷயத்தை பாகுபடுத்திப் பார்க்க “உத்தம, மத்யம மற்றும் அதம” என்ற சொற்களை உபயோகிப்பார்கள். உதாரணமாக மனிதனை பொருளாதார அளவில் “பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை” என்று பிரிக்கலாம். உலகம் தோன்றிய நாள் முதல் இந்தப் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருந்தே வந்திருக்கிறது. கடந்த 150 வருடங்களாக இந்த ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க முனைந்த பொதுவுடைமைக் கொள்கைகளான கம்யூனிசம் மற்றும் சோஷலிஸம் போன்றவை ஒழிந்திருக்கிறதே தவிர பொருளாதார ஏற்ற தாழ்வுகள் ஒழிந்தபாடில்லை. இதைப் போலவே மனிதனை புத்திகூர்மை அடிப்படையில், “புத்திசாலி, சுமாரான அறிவாளி மற்றும் முட்டாள்” என்று பிரிக்கிறார்கள். இதுபோன்ற இயற்கையான பாகுபாடுகள் சில நேரங்களில் தவறாகத் தென்பட்டாலும் இந்த ஏற்ற தாழ்வுகள் உலகம் உள்ள வரையில் இருக்கத்தான் போகிறது. (இல்லாவிட்டால் மனித குலத்தின் இயக்கம் இவ்வளவு வேகத்தோடும் சுவாரசியங்களோடும் இல்லாமலும் போகலாம்.)

இதைப் போன்றே நாகரிகம் முதிர்ந்த நிலையிலும் மனிதன் தனக்குள்ளே பல பிரிவுகளை அமைத்துக் கொண்டிருக்கிறான். இதில் மத ரீதியான பிரிவு மிகவும் முக்கியமானது. இது சரியா, தவறா அல்லது இந்தப் பிரிவுகள் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவெடுக்கும்.

இன்றுள்ள மனிதனின் நாகரிக முதிர்ச்சியைக் கணக்கில் கொண்டு, இனப் படுகொலைகளை ஏற்பட விடாமல் செய்வது நமக்குள்ள பெரிய சவால். நான் முன்மொழிந்த வழிகள் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குள்ளாகவாவது வெள்ளையர்களின் மனதில் தோன்றியிருக்கும் இனத் துவேஷத்தை இன வேற்றுமையாகக் குறைத்தாக வேண்டும்.

மேலே குறிப்பிட்ட மும்முனை தாக்குதலும் இந்தியாவிலும் உள்ளது. பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால்.

 
இறுதியாக ஒரு விஷயம்

பல லட்சம் மக்கள் தொகை உள்ள நகரத்தில் சில ஆயிரம் வேற்றின மக்கள் குடியேறுவதை பெரும்பான்மை சமூக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் பல லட்சம் மக்கள் தொகை உள்ள நகரில் சில லட்சம் வேற்றின மக்கள் குடியேறுவதை எந்த இனத்து மக்களும் ஏற்றுக்கொள்வதில்லை.

மனிதனின் இயற்கையான இந்த மனநிலையைப் புரிந்துகொள்வோம். நலம் பெறுவோம்.

என்னப்பன் ருத்ரனான சிவன் தீயோரை அழித்து நல்லோரைக் காப்பாற்ற அவன் காலடியில் வணங்கி நிற்போம்.

முற்றும்.

பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபம் – தீபத் திருவிழா

lingodbhavaசிவ பெருமானை “ஜோதி ஸ்வரூபம்” ஆகக்கண்டு வழிபாடு செய்து கொண்டாடுவதே கார்த்திகை தீபத் திருவிழா. மஹாவிஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் இடையே ‘தங்களில் யார் சக்தி வாய்ந்தவர்’ என்கிற வாக்குவாதம் ஏற்பட்டபோது, அப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், அவர்களுடைய அகங்காரத்தை அகற்றுவதற்காகவும், தன்னுடைய அடி-முடியைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொன்னார் சிவபெருமான். பிரம்மா “அன்ன பக்‌ஷி” உருவம் கொண்டு சிவ பெருமானின் முடியைக் காணப் பறந்தார். மஹாவிஷ்ணு “வராஹம்” போன்று உருவம் தரித்து சிவபெருமானின் பாதங்களைக் கண்டுபிடிக்க பூமியைத் தோண்டிச் சென்றார். இறுதியில் இருவராலும் இயலாமல் போகவே, சிவபெருமான் தன் ஜோதி ஸ்வரூபத்தைக் காண்பிக்க, இருவரும் தங்களுடைய நிலையுணர்ந்து அகங்காரம் நீங்கப் பெற்றனர். கார்த்திகை நட்சத்திர தினமான அன்று தன்னுடைய ஜோதியை சிவபெருமான் ஒரு குன்றாக மாற்ற, அதுவே “திருவண்ணாமலை” என்கிற பெயர் பெற்று மக்கள் வழிபடும் அக்னி லிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இது புராணம்.

புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு சம்பவமானது, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து, கார்த்திகை நட்சத்திரம் கூடிய திருநாளில் முருகப்பெருமான் பிறந்ததாகும். இவ்விரு சம்பவங்களையும் முன்னிட்டு, கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ”கார்த்திகை தீபத் திருவிழா” கொண்டாடுவது இந்துக்களின், குறிப்பாக தமிழ் இந்துக்களின் ஆன்மீகக் கலாசரப் பாரம்பரியம்.

தமிழ் மொழி சிவபெருமானின் இரண்டு கண்களில் (மற்றது ஸம்ஸ்க்ருதம்) ஒன்றாகக் கருதப்படுவதாலும், அவருடைய மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணிலிருந்து “தமிழ்க் கடவுள்” என்று போற்றப்படும் முருகப்பெருமான் தோன்றியதாலும், தமிழ் இந்துக்கள் கார்த்திகைத் தீபத் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து குன்றங்களிலும் நெய்தீபம் ஏற்றி, சிவபெருமான், பார்வதி தேவி, விநாயகப் பெருமான், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை அமைதியும், நல்வாழ்வும் வேண்டி வழிபடுவது தமிழ் இந்துக்களின் பண்பாடு.

“பிருங்கி மலை” – பிருங்கி மஹரிஷி தவம் செய்த குன்று

இஸ்லாமியர்களும், கிறுத்துவர்களும் நம் பாரத தேசத்தின் மீது படையெடுத்து நம்மை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி ஆட்சி செய்தபோது, லட்சக்கணக்கான கோவில்களை அடியோடு அழித்தனர். பல மலைக்கோயில்களையும், குன்றுகளில் உள்ள கோயில்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை அழித்து அவ்விடத்தில் சர்ச்சுகளும் மசூதிகளும் கட்டித் தங்களின் வழிபாட்டுத் தலங்களாகவும் மாற்றினர். அம்மாதிரி சென்னைப்பகுதியில் மாற்றப்பட்ட இடங்களுள் ஒன்று தான் தற்போது “புனித தோமையர் மலை” என்று அழைக்கப்படுகிற “பிருங்கி மலை”. 1910-ஆம் ஆண்டு வரை கூட அது பிருங்கி மலை என்றே அழைக்கப்பட்டு வதுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மிகவும் போற்றத் தகுந்த சரித்திரம் வாய்ந்தது பிருங்கி மலை.

சிவபெருமானின் மீது பெரும் பக்தி கொண்டவர் பிருங்கி மஹரிஷி. எப்பேர்பட்ட பக்தியென்றால், சிவனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். சிவனின் மறுபாகமான சக்தியைக் கூட வணங்கமாட்டார் அந்த அளவிற்கு சிவபெருமானின் மீது மட்டுமே பக்தி செலுத்திவந்தவர். ஒருமுறை சிவபெருமானை வழிபட கைலாயம் சென்ற பிருங்கி மஹரிஷி, அங்கே சிவன்-சக்தி இருவரையும் முனிவர் பெருமக்கள் வலம் வந்து வணங்குவதைக் கண்டார். சக்தி தேவியை வணங்க விரும்பாத பிருங்கி மஹரிஷி வண்டின் உருவம் கொண்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கித் தன் வழிபாட்டை முடித்துக் கொண்டார்.

அவமானப் பட்ட சக்தி தேவியின் சாபத்தால் மஹரிஷி தன் சக்தியனைத்தையும் இழந்து வெறும் எலும்புக்கூடு போன்ற தோற்றத்தைப் பெற்று கீழே விழப்போகும் தருவாயில் தன் கோலைக் கொடுத்து அவரைத் தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். சிவனும் சக்தியும் ஒன்றேயாதலால் சிவ வழிபாடே சக்தி வழிபாடாகிவிடுகிறது என்கிற உண்மை கூடத் தெரியாமல் சக்தி தன் பக்தனை சபித்த காரணத்தால் கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதி தேவியை பூலோகம் சென்று கடும் தவம் செய்து பின்னர் வந்து தன்னை அடையுமாறு பணித்தார்.

அதன்படி பார்வதி தேவியும் செண்பக மலர்கள் பூத்துக் குலுங்கிய செண்பக வனத்தில் வந்து இறைவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அந்தத் தலமே இன்று “திரு நாகேஸ்வரம்” என்று புகழ் பெற்று விளங்குகிறது. அங்குள்ள ஈசன் “செண்பகவனேஸ்வரர்” என்றும் தவம் செய்யும் தேவி “கிரிஜ குஜாம்பாள்” என்றும் போற்றி வணங்கப் படுகின்றனர். தேவியின் தவம் கலையக்கூடாது என்பதால், கிரிஜ குஜாம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. மேலும் இத்தலம் நவக்ரஹ ஸ்தலங்களில் “ராகு” ஸ்தலமாகவும் விளங்குகிறது.

shiva_paravati_with_rishisபிருங்கி மஹரிஷி சக்தியை அவமானப் படுத்தியதையும் பொறுக்க மாட்டாத சிவபெருமான், அவரையும் பூவுலகு சென்று கடும் தவம் புரிந்து பின்னர் தன்னை வந்தடையுமாறு பணித்தார். பிருங்கி மஹரிஷி பூவுலகு வந்தமர்ந்து தவம் புரிந்த மலையே “பிருங்கி மலை” ஆகும். அம்மலையின் அடிவாரத்திலிருந்து சிவபெருமான் “நந்தி” உருவம் கொண்டு மஹரிஷிக்குத் தரிசனம் தந்து அருள் பாலிக்கிறார். அவ்விடமே பின்னர் “நந்தீஸ்வரர் ஆலயம்” என ஆக்கப்பட்டது. அவ்வாலயத்தின் தேவி “ஆவுடை நாயகி” என்று போற்றப்படுகிறாள். தற்போது ‘புனித தோமையர் மலை’ இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் நந்தீஸ்வரர் கோவிலிலிருந்து பார்த்தால் ‘பிருங்கி மலை’ அழகாகத் தெரியும். மேற்கண்ட வரலாறும் இக்கோவிலின் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளது. காஞ்சி முனிவர் மஹா பெரியவர் பரமாசார்ய ஸ்வாமிகள் இந்தக் கோவிலிற்கு வருகை தந்து இங்குள்ள மக்களுக்கு மேற்கண்ட தலபுராணத்தைக் கூறி அருளியிருக்கிறார்கள்.

விஜயநகர மன்னர்களால் பின்னாளில் பிருங்கி மலை மீது கட்டப்பட்ட கோவிலை, பதிநான்காம் நூற்றாண்டில் வந்த போர்ச்சுகீசியர்கள் இடித்துத் தரைமட்டாமாக்கி, இப்போதுள்ள புனித தோமையர் சர்ச்சைக் கட்டினர். மயிலைக் கடற்கரையில் அப்போதிருந்த கபாலீஸ்வரர் ஆலயத்தையும் போர்ச்சுகீசியர் இடித்து அதே இடத்தில் தற்போதுள்ள புனித தோமையர் தேவாலயத்தை எழுப்பியது குறிப்பிடத் தக்கது. பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகள் பல அந்த சர்ச்சின் சுவர்களில் இருந்து பின்னர் அழிக்கப்பட்டன. திருஞான சம்பந்தரும், அருணகிரிநாதரும் பாடியுள்ள பதிகங்களிலிருந்து மயிலைக் கடற்கரையில் அற்புதமான சிவ ஆலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலும் போர்ச்சுகீசியர் மயிலைக் கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் ஆலயத்தை அழித்த வரலாறு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளது. தற்போது திருமயிலை ஊரின் உள்ளே மாற்றியமைக்கப்பட்ட கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டுகளிலும் இவ்வுண்மை பொறிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு பல ஆதாரங்கள் கொண்ட ஒரு அற்புதமான வரலாறு மறைக்கப்பட்டு, ஒரு சிறுதுளி கூட உண்மையே இல்லாத, இந்தியாவிற்கு அவர் செல்லவில்லை என்று வாடிகனின் போப் பெனடிக்ட் அவர்களே ஒப்புக்கொண்ட, பொய்யான கதாபாத்திரமான தோமையர் என்பவர் பெயரில் மாபெரும் புளுகு மூட்டையான ஒரு வரலாறு புனையப்பட்டு, அவ்வரலாறு பள்ளிப் பாடங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது மிகவும் வேதனை தரும் ஒரு விஷயமாகும்.

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டங்கள்

சென்னை நகருக்கு அருகிலேயே தாம்பரம் என்னும் இடத்தில் உள்ள “பச்சை மலை”யிலும், பல்லாவரம் என்னும் இடத்தில் உள்ள ‘திரிசூலம்’ என்று அழைக்கப்படும் “பெரிய மலை”யிலும் சிவன் மற்றும் முருகன் கோவில்கள் உள்ளன. ஆயினும் இக்கோவில்களைச் சுற்றி கிறுத்துவ மிஷனரிகள் சூழ்ச்சிகள் மூலம் மதமாற்றம் செய்து ‘ஆன்ம அறுவடை’ செய்து வருகின்றனர். திரிசூலம் மற்றும் பச்சை மலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத்தினர் மற்றும் இந்து முன்னணியினர் ஆகியோரின் விடாமுயற்ச்சியினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிருங்கி மலையிலும் தீப வழிபாடு நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது.

“இந்த பிருங்கி மலையானது தொன்மையான புராண வரலாறு கொண்டுள்ளமையால், இதன் புராதன முக்கியத்துவத்தை கார்த்திகை தீபத் திருவிழா மூலம் மீட்பதே எங்கள் நோக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இத்திருவிழா இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரும். காவல் துறையினரிடம் சொல்லி அவர்கள் அனுமதியுடன் மற்றவர்களுக்கு எவ்வித தொல்லைகளும் கொடுக்காமல் அமைதியான முறையில் தீபத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். காவல் துறையும் பாதுகாப்பு தந்து எங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். இந்தப் புனிதமான பிருங்கி மலையின் உன்னத தல வரலாறு பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாது. பிருங்கி மலையின் உண்மைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தி அவர்கள் பெரும்பான்மையாக தீபத் திருவிழாவில் பங்கேற்குமாறு செய்வதே எங்கள் குறிக்கோள்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சேவகர்களுள் ஒருவரான பிருங்கி சரவணன் கூறினார்.

கிறுத்துவ சூழ்ச்சி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் அருகில் உள்ள அச்சிறுபாக்கம் எனும் ஊரில் உள்ள குன்றில் சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தைக் கைவசப்படுத்தி பிரும்மாண்டமாக ஒரு ஏசுவின் சிலையையும் நிர்மாணித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே மேரி மாதா சர்ச்சு ஒன்றைக்கட்டி வருகின்றது கத்தோலிக்க கிறுத்துவ சபை. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு பாத யாத்திரையாக வருகின்ற பக்தர்களை “இம்மலையின் மீது இருக்கும் மேரி மாதா தான் உண்மையான மாரியம்மன்; இம்மலையில் ஏறி அவளை தரிசனம் செய்துவிட்டு அவளின் அருள் பெற்றுப் பின்னர் மேல்மருவத்தூர் செல்லுங்கள்” என்றெல்லாம் சொல்லி அப்பக்தர்களைக் குழப்பி ஏமாற்றி வருகின்றனர் கிறுத்துவர்கள். அம்மலையில் பௌர்ணமி ‘கிரிவலம்’ கூட ஏற்பாடு செய்துள்ளது கிறுத்துவ சபை! அவ்வேற்பாடுகளை முன்னின்று செய்த அதே பாதிரியார் தான் தற்போது புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ளார். அவர் அங்கேயும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிந்துக்கள் பிருங்கி மலையில் தீபத் திருவிழா கொண்டாடி வருவதனால், அக்கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதைத் தடுப்பதற்காகவே அவர் இவ்வாறு சூழ்ச்சி செய்கிறாரோ என்று இந்துக்கள் சார்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

அச்சந்தேகத்தை உறுதி செய்த சரவணன், “இந்துக்களைப் பயங்கரவாதம், மதமாற்றம் ஆகிய ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றும், நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டுமென்றும், கார்த்திகைத் தீபத் திருநாளில் சிவபெருமான், சக்தி தேவி, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களிடம் வேண்டி வழிபாடு நடத்துகின்றோம்” என்று கூறினார்.

முடிவுரை

திருவண்ணாமலை, திருப்பறங்குன்றம் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலைக் கோவில்களிலும் கார்த்திகைத் தீபப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்ற போது, ஆறே கிலோமீட்டர் தொலைவில் மூன்று குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள சென்னை நகரம் மட்டும் விதிவிலக்காக இருக்கலாமா? நம் புராணத்திலும் முக்கியமான இடம் பெற்றுள்ள சென்னை நகரத்தில் வாழும் ஹிந்துக்கள், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியினர் விடா முயற்ச்சியுடன் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் திரிசூலம், பச்சை மலை, பிருங்கி மலை ஆகிய குன்றங்களின் தீபத் திருவிழாவில் பெருவாரியாகக் கலந்து கொண்டு அவ்வியக்கத்தினருக்குத் தங்கள் ஆதரவை நல்கி பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்-1

arun_shourieருண் ஷோரி (1941-) இந்தியாவின் தலைசிறந்த அரசியல், சமூக சிந்தனையாளர்களில் ஒருவர். உலக வங்கி மற்றும் இந்திய அரசின் திட்டக் குழுக்களில் பொருளாதார நிபுணராகவும், ராஜ்யசபை உறுப்பினராகவும், இந்திய அரசில் மத்திய அமைச்சராகவும் (1998-2004) ,  ”டைம்ஸ் ஆப் இந்தியா” மற்றும் ”இந்தியன் எக்ஸ்பிரஸ்” இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். நேர்மையும், துணிச்சலும் கொண்ட உறுதியான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளுக்காகவும்,  கூர்மையான, சமரசமற்ற ஆய்வு நோக்கிற்காகவும் பெரிதும் மதிக்கப் படுபவர்.  சமகால இந்திய அரசியல், சமூகம், சட்டம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார்.  கிறிஸ்தவ மிஷநரிகள், மதமாற்றங்கள், அவற்றின் சமூக விளைவுகள் பற்றி அவர் எழுதியிருக்கும்  இரண்டு முக்கியமான நூல்கள் பற்றியும், அவை உருவானதன் பின்னணி பற்றியும் எடுத்துரைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அது 1994ஆம் ஆண்டின்  ஜனவரி மாதம்.  இந்தியாவின் தலையாய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பான இந்திய கத்தோலிக்க பிஷப்கள் மாநாடு  (CBCI – Catholic Bishop’s Conference of India)  தனது 50வது ஆண்டு விழாவை விமரிசையாக்க் கொண்டாடிக் கொண்டிருந்தது.  கிறிஸ்தவ மிஷநரிகளின் செயல்பாடுகள் குறித்து “இந்துத் தரப்பின் மதிப்பீடு” என்ற வகையில் பேசுவதற்காக அருண் ஷோரி அழைக்கப் பட்டார். ஜனவரி-5ம் தேதி புணேயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து பிஷப்கள், பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.  மிஷநரிகள் பற்றிய பொதுவான விஷயங்களைத் தொட்டுச் சென்ற ஷோரியின் உரைக்குப் பின், கலந்து கொண்டவர்கள் ஷோரியை நோக்கி பல்வேறு விதமான கேள்விகளை எழுப்ப, அவை அனைத்திற்கும்  அவர் பதிலளித்தார். பின்னர், இந்த உரையை கத்தோலிக்க சபை தனது நினைவு மலரிலும் வெளியிட்டது.

இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் பணியைப் பற்றி ஒட்டுமொத்தமாக சுயமதிப்பீடு செய்து கொள்வதும் இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக இருந்தது. அதன்படி, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் என்ற வகையில் இது தொடர்பான இரண்டு மையமான ஆவணங்கள் அருண் ஷோரியின் பார்வைக்கு வந்தன. ”இந்தியாவில் மதப்பிரசாரப் போக்குகளும், பிரசினைகளும்: CBCI  கள ஆய்வுகளின் அடிப்படையில்”  என்ற ஆவணம் அவருக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப் பட்டது. ”இந்தியாவில் நமக்காகத் திறந்திருக்கும் வழிகள்: நமது பொதுவான தேடல்கள்”  என்ற ஆவணம் கூட்டத்தின் போது அவருக்கு வழங்கப் பட்ட்து. இந்த இரண்டு ஆவணங்களையும் கவனமாகப் படித்தார் அருண் ஷோரி. கிறிஸ்தவ மிஷநரிகள் பற்றிய தனது புரிதல்  முழுமையானதாக இல்லையோ என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்ட்து.

உடனே இது தொடர்பான பல தரவுகளையும் தேடிப் பிடித்துத் தனது ஆய்வுகளைத் தொடங்கினார். அடிப்படையான கிறிஸ்தவ இறையியல், இந்தியாவில் கிறிஸ்தவம் பரவியதன் வரலாறு,  மெக்காலே, ட்ரெவிலியன் (Trevelyan),  ரிச்சர்ட் டெம்பிள் ஆகிய பிரிட்டிஷ் காலனிய நிர்வாகிகளின் எழுத்துக்கள் மற்றும் உரைகள்,  வரலாற்று/மொழி அறிஞர்கள் என்ற போர்வையில் உலவிய மாக்ஸ் முல்லர், மோனியர் வில்லியம்ஸ் போன்ற் திரைமறைவு மிஷநரிகளின் படைப்புகள், 1853ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவில் கிறிஸ்தவ மத்த்தைப் பரப்புவது அரசின் தார்மீகக் கடமை என்பதை வலியுறுத்தி மிஷனரிகள் கொண்டு வந்த தீர்மானம், 1930 சைமன் கமிஷன் அறிக்கை, 1956ல் இந்திய அரசு நியமித்த நியோகி கமிட்டி மிஷநரிகளின் மோசடியான மதப்பரப்பல் செயல்பாடுகள் குறித்து அளித்த அறிக்கை.. இது போன்று இந்த விஷயம் தொடர்பான முதன்மை ஆதாரங்கள் (Primary sources) அனைத்தையும் அவர் அலசி ஆராய்ந்தார்.  இதே காலகட்டத்தில் கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் முதலியோர் இந்துத் தரப்பிலிருந்து வைத்த உறுதியான, ஆணித்தரமான எதிர்வினைகளையும் அவர் படிக்க நேர்ந்தது.  ஆனால் இந்தத் தொடக்க கால இந்து எதிர்வினைகள் பின்னாளில் தேய்ந்து மறைந்ததோடல்லாமல், சுதந்திர இந்தியாவில்,  முற்றிலும் மாறான நிலைப்பாடுகள் ஏற்பட்டு,  கற்றறிந்த இந்துக்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மிஷநரிகளின் பாஷையையே தாங்களும் உரத்துப் பேசத் தொடங்கி விட்டனர் என்பதையும் அவர் தெளிவாகக் கண்டறிந்தார்.

இந்தத் தீவிர ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு புத்தகமாக எழுதினார். “இந்தியாவில் மிஷநரிகள் – தொடரல்களும், மாறுதல்களும், குழப்பங்களும்” (Missionaries in India:  Continuities, changes, dilemmas)  என்ற அந்த நூல் 1994ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.

அவரது மகன் விக்ரமாதித்யா குறைப் பிரவசமாக, பிறப்பின் போதே cerebral palsy என்ற  மூளை பாதிப்புடன் மன வளர்ச்சி குன்றிப் பிறந்த  போது ஏற்பட்ட பேரதிர்ச்சியும்,  பதினெட்டு வருடங்களாகத் தன் அன்பு மகனுடன் வாழ்வதும், வாழ்க்கையையும், உலகத்தையும் பற்றிய ஆழமான ஆன்மீகக் கேள்விகளையும், புரிதல்களையும் தன்னுள் ஏற்படுத்தியிருப்பதாக இந்த நூலின் முன்னுரையில் ஷோரி கூறுகிறார்.  பின்னாட்களில் அமைச்சராக இருந்தபோது அளித்த பேட்டி ஒன்றில் தன் மகனைப் பற்றி ஒரு தந்தைக்கே உரிய பெருமையுடனும், ஆழ்ந்த புரிந்துணர்வுடனும், ”My son is a dominant  influence on me” என்று ஷோரி குறிப்பிடிருந்தார். ஒரு அறிவுஜீவியாக மட்டுமே பெரும்பாலும் அறியப் பட்டிருக்கும் அருண் ஷோரியின் பாச உணர்வும், மனித நேயமும் அதே அளவு ஆழம் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று வரை ஒரு நம்பிக்கையாளராக அல்லாமல், ஞானவாதியாகவே (agnostic) தொடரும் அருண் ஷோரி தனது ஆன்மிகத் தேடல்களின் ஊடாக கீதை,  உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் உள்ளிட்ட இந்து ஞான நூல்களையும், பிற மதங்களையும், காந்தியையும் ஆழ்ந்து பயின்றார்.    இருளில் மூழ்கியதாகவும், அழிக்கப் படவேண்டியதாகவும் கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து சித்தரித்து வந்த இந்து மரபுகளின் விசாலத் தன்மையையும், அழகையும், உன்னதத்தையும் கண்டறியும் புள்ளியில் இருந்தே இந்த நூலில் அவரது ஆய்வுகள் ஆரம்பிக்கின்றன. Premises and Consequences  என்ற நூலின் முதல் பகுதியில் ஷோரி எழுதுகிறார் –

”இந்து மரபுகள் ..  எந்த அளவிற்கு பூரணமான பிரபஞ்ச தரிசனம் சாத்தியமோ, அதைத் தொட முயன்றன. (மதம் என்கிற) இந்த மகாசமுத்திரத்தை முதன் முதலில் ருசி கண்டவை இந்து தரிசனங்களே.  மரத்தை வழிபடும் பழங்குடியினரும்,  காளையை, யானையை, சிங்கத்தை, நாகங்களை வழிபட்டு வந்தவர்களும் இங்கே  “மிருக இயல்பாளர்கள்” என்று இழித்துரைக்கப் படவில்லை.   அவர்களது வழிபாட்டுக் கூறுகளும் மரியாதையுடன்  தெய்வீகக் கணங்களில் சேர்த்துக் கொள்ளப் பட்டன… இது ஒரு யுக்தியாகவோ, தந்திரமாகவோ செய்யப் படவில்லை,  மாறாக  இந்த இணைத்துக் கொள்ளும் தன்மை ஆழ்ந்து  அனுபவித்தறிந்த ஆன்மிக மெய்யுணர்வின் அடிப்படையில் முழுமையான புரிதலுடன் கூடியதாகவே இருந்தது… ஒவ்வொன்றும் மாறுதலுக்கும், சீரமைப்புக்கும் உட்பட்டது தான் என்பதை இயல்பான ஒரு விஷயமாகவே  இந்து மரபு கருதியது..  இதனால் விளையும் மோதல்களை  சமன்வயப் படுத்த மிக அழகிய சொல்லாடல்களையும் அது உருவாக்கியது” – Missionaries in India,  பக்கம் 41-42

”ஆனால் இது எல்லாவற்றையுமே மிஷநரிகள் திரிபுகளுக்கு உட்படுத்தி இழித்துரைத்தனர்.  இணைப்புத் தன்மையை  பிற  மதங்களை முழுங்குவதற்கான  குயுக்தி என்று கண்டித்தனர்;   முரணியக்கமாக விரிவடைந்து செல்லும் தத்துவ விவாதங்களை  வெற்றுக் கூச்சல் என்றனர்; கட்டற்ற சுதந்திரத் தன்மையை  ”கருத்து ரீதியான பலவீனம்” என்று கூறினர். உள்முகப் பட்ட ஞானத் தேடலை ”நோயுற்ற சுய வெறுப்பு” என்று ஏளனம் செய்தனர். சத்தியத்தை நோக்கிச் செல்லப் பல வழிகள் உண்டு என்று காட்டுவதை  வழவழாத் தன்மை என்று கேலி செய்தனர். எல்லையற்ற பரம்பொருளுக்கு எல்லையற்ற பல வடிவங்கள் உண்டு என்பதை “குழப்படி” என்று முத்திரை குத்தினர்.  கருத்துச் சுதந்திரம் என்பதற்கு  “கிறிஸ்தவ மதத்தை மேன்மையானதாகச் சித்தரிப்பதும், இந்து மதத்தை இழித்துரைப்பதும்” என்று பொருள் கண்டனர்.  …. மதமாற்றம் என்பது ஒரு செயல்பாடு மட்டுமல்ல, அது தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியே என்னும் வகையில் மதப் பரவலை நிகழ்த்தினர்.   ஆனால் ஒரு சுவாமி சிரத்தானந்தர் (ஆரிய சமாஜத் துறவி) கிள்ம்பி இந்துமதம் திரும்ப விழைபவர்களுக்காக  வழிமுறைகளை உருவாக்குவதைக் கண்டு “இதற்கு இந்து மத சம்பிரதாயங்களின் படி இடமே கிடையாது”  என்று தீவிர பிரசாரம் செய்தனர்! ” – Missionaries in India,  பக்கம் 43.

God is Truth

இந்த மிஷநரிகள் ஏன் இப்படிக் கருதுகிறார்கள், பேசுகிறார்கள்? இந்து தர்மத்தின் வளமையை அவர்களால் ஏன் உணர முடிவதில்லை?  அதன் பல்வேறு அழகிய பரிமாணங்களை அவர்களுக்கு ஏன் ரசிக்கத் தோன்றுவதில்லை? மகாத்மா காந்திக்கும், போலந்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பேராசிரியரான க்ரெசன்ஸ்கி (Krzenski) என்பவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு உரையாடல் வழியாக இதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அருண் ஷோரி. அந்த சுவாரஸ்யமான உரையாடலில் காந்தி பல முறை தனது தார்மீக, சத்திய வாதங்களை வைக்கிறார். கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்கிறார். ஆனால் க்ரெசன்ஸ்கி “கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மதம், மற்றதெல்லாம் பொய்” என்பதையே பலவிதமாக மறுபடி மறுபடி கூறிக் கொண்டிருக்கிறார்.  ”கிறிஸ்தவ மதமாற்றம் என்பது ஒரு அபாயகரமான கொடு விஷம்” (the idea of Conversion, which I assure you is the deadliest poison that ever sapped the fountain of truth) என்ற காந்திஜியின் பிரபல மேற்கோள் இந்த உரையாடலின் போது பேராசிரியரை நோக்கி அவர் கூறியதே ஆகும். (இந்த உரையாடல் முழுமையாக Missionaries நூலில் தரப்பட்டுள்ளது).   ஷோரி எழுதுகிறார் –

“அதில் ஆச்சரியப் பட ஏதுமில்லை..  ஏனென்றால், கிறிஸ்தவத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான கருத்தும் அதுவே தான். ”வெளிப்படுத்தப் பட்ட”,  இறுதிநாள், இறுதித் தீர்ப்பை நம்புகிற எந்த ஒரு சித்தாந்தமும் – கிறிஸ்தவமும் சரி, இஸ்லாமும் சரி,  மார்க்சிய-லெனினிய- மாவோயிசங்களும் சரி இந்த நிலைப்பாடு கொண்டவை தான்:  ஒரே சத்தியம்,  அது அந்த ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தப் பட்டு விட்ட்து..  அவனால், அவன் சார்பாக அந்த ஒரே புத்தகத்தில் அது பதிவு செய்யப் பட்டு விட்டது.  அந்த ஒரே நூலின் சொற்கள் நேரடியாகப் புரிந்து கொள்ளக் கடினமானவை (!!!) என்பதால்,  உலகம் அனைத்தும் அவற்றை நடைமுறைப் படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு, ஒரு இடைத்தரகருக்கு, ஒரு “ஏஜென்ஸி”க்கு அடிணிய வேண்டும்.. அனைத்துலகமும்  இதை ஏற்றுக் கொள்ளும்  “இறுதி நாளில்”  தான் உலகனைத்தும் ஒளி உண்டாகும்; எனவே அந்த நாளை வரச் செய்ய வேண்டியது  ஏஜென்ஸியின் இன்றியமையாத கடமையாகிறது..  அந்த “ஒளி”  “காட்டப் படும்” அதை மறுப்பவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள்,  தங்களைத் துன்புறுத்திக் கொள்வது மட்டுமல்ல,  தேவனின்  ஆணைக்கும்,  அல்லாஹ்வின் இறை விருப்பத்திற்கும்  (அல்லது, கம்யூனிசத்தின் படி “சரித்திரத்திற்கும்”)  குறுக்கே வருகிறார்கள் என்றே ஏஜென்ஸி கருத வேண்டியாகிறது.. ஆக,  இதிலிருந்து தெளிவாகப் புலனாவது என்னவென்றால், சர்ச் மதம் மாற்றியே ஆக வேண்டும்,  மாவோ புரட்சியை ஏற்றுமதி செய்தே ஆக வேண்டும்;  கொமெய்னி இறைத்தூதரை பலவந்தமாக அறிவித்தே ஆகவேண்டும்..  அவர்கள் யாரும் செய்யாமல் தப்பிக்கவே முடியாத கடமைகள் இவை”.   (Missionaries, பக்கம் 12).

இதைத்  தொடர்ந்து, ஏஜென்ஸியின் பரவலையும், வீச்சையும் நிரூபிக்கும்  பல ஆதாரபூர்வமான விவரங்களை ஷோரி அளிக்கிறார். ”உலகளாவிய கிறிஸ்தவத்தை நடத்திச் செல்ல வருடந்தோறும் 145 பில்லியன் டாலர்கள் தேவைப் படுகின்றன”  (1990களில்) என்று கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றே கணக்கிடுகிறது.  1989ம் வருட விவரங்களின் படி,  உலகெங்கும் 40 லட்சம் முழுநேரப் பணியாளர்கள், 1800 கிறிஸ்தவ டிவி மற்றும் ரேடியோ சேனல்கள், சுமார் 3 லட்சம் வெளிநாட்டு மிஷநரிகள், அவர்களைப் பயிற்றுவிக்க 1000க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள்…”  என்று போகிறது இந்தப் பழைய கணக்கு.

போர்ச்சுகீசிய காலனிய ஆதிக்கக் காலத்திலிருந்தே இந்தியா ஒரு முக்கிய இலக்காக கிறிஸ்தவ வரைபடத்தில் இருந்து வருகிறது. 1986ல் வெளிவந்த  Mission Handbook: North American Overseas  என்ற ஆவணத்தின்படி, மொத்தம் ஒரு லட்சம்  மிஷநரிகள் (பாதிரியார்கள் போதகர்கள், மதப்பிரசாரகர்கள்) அந்த ஆண்டில் இந்தியாவில் செயல்பட்டு வந்தனர். 1971 முதல் 1983க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் முழுநேர மிஷநரி நிறுவன அமைப்புகளின் எண்ணிக்கை 420லிருந்து 2941 ஆக உயர்ந்தது. பின்வரும் வருடங்களில் மேன்மேலும் உயர்த்தத் திட்டம் தீட்டப் பட்டிருந்தது. தமிழகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவர்களே இல்லாத இடங்களில் எல்லாம் கூட ஆயிரக்கணக்கில் சர்ச்களை நடுவதற்கான  திட்டமும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.  இத்தகைய பல விவரங்களை அருண் ஷோரி அளித்துச் செல்கிறார். தற்போதைய நிலவரங்களின் படி இந்தப் புள்ளி விவரங்கள் எவ்வளவு பூதாகரமாக வளர்ந்திருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கிறிஸ்தவ பிரசாரகர்களே ‘எண்ணிக்கை விளையாட்டு’ (game of numbers)  என்று எரிச்சலுடனும், சலிப்புடனும் குறிப்பிடும் இந்த வைரஸ்தனமான பரவல் எங்கெங்கெங்கு, எப்படியெல்லாம் விரியும் என்பதற்கு மிஷநரிகள் எந்தக் கட்டுப் பாடும் வைத்துக் கொள்ளவில்லை..  கிடைக்கக் கிடைக்க லாபம் என்ற கண்ணோட்டம் தான். வட அமெரிக்காவிலும்,  தென் அமெரிக்காலும், ஆசியாவிலும் மதப் பரவலுக்காக எந்த விதமான வன்முறையையும், பலவந்தத்தையும் பிரயோகிக்க மிஷநரிகள் தயங்கவில்லை என்பதை நிரூபிக்க மலை மலையாக ஆவணங்கள் குவிந்து கிடக்கின்றன.  பஞ்சம் மற்றும் தட்டுப் பாடுகளின் போது,  மனந்திரும்புவர்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் இருக்கிறது என்றும் இவை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றன.

பார்க்க: ஆசியாவின்  காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷநரிகளும்

1823ல் கத்தோலிக்க சர்ச் வெளியிட்ட “இந்தியாவின் மிஷன்கள்” (India and its Missions)  என்ற நூலில் உள்ள “பஞ்சம் மற்றும் காலராவின் ஆன்மிக சாதகங்கள்” (Spiritual Advantages of Famine and Cholera)  என்ற கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை ஷோரி எடுத்துக் காட்டுகிறார்.  இதில், பாண்டிச்சேரியின் ஆர்ச் பிஷப் ஐரோப்பாவில் இருக்கும் தன் உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்,

“பஞ்சம் பெரும் அற்புதத்தையும், மகிமையையும் கொண்டு வந்திருக்கிறது.  போதனைக்காக வரும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர்; ஞானஸ்னான நீர் ஓடையாக வழிந்தோடுகிறது. அதில் தவிக்கும் பரதேசி ஈசல்கள் கூட்டம் கூட்டமாக பரமண்டலத்தை நோக்கிப் பறந்து வருகின்றன (“starving little tots fly in masses to heaven”). மருத்துவமனையே விசுவாசிகள் கூட்டமாகி விடுகிறது.  நெடுஞ்சாலைகளிலும், முனைகளிலும் நின்று அவர்களை “வற்புறுத்தி அழைத்து வர”  (புனித லூக்காவின் சுவிசேஷம், 14.23) வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாமாகவே வருகிறார்கள்!”  (Missionaries, பக்கம் 15).

நிறுவன கிறிஸ்தவத்தின் ஊடுருவல் யுக்திகள் சாதாரணமானவை அல்ல. எதிரெதிர் சக்திகள் என்று எண்ணப் பட்டவை கூட அதன் பரவலுக்கான மறைமுக உதவிகளாகவே இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவற்றை  ”வேலைப் பங்கீடு” (Division of Labour)  என்ற நூலின் இரண்டாம் பகுதியில் ஷோரி விவரிக்கிறார்.

(தொடரும்)

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.

324px-statue_of_g_u_popeபோப் அவர்கள் தாம் அறிந்து போற்றி வணங்கிய மேலைநாட்டு மெய்ஞ்ஞானிகளான தவத்திரு. பால், அசிசி நாட்டுத் துறவி அருள்திரு பிரான்சிஸ் போன்றோரின் வாழ்வையும் வாக்கையும் அவர் திருவாசகத்தில் கண்டு மகிழ்ந்தார் – “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”.  தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.

இது ஒரு கதை என்றே எண்ண என் மனம் துணிகின்றது. இது யாருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே. அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே எனும் ஐயங்கள் தோன்றுகின்றன.

போப் அவர்களின் சைவத் தமிழ்ப்பணிக்காக அவரைப் போற்றிப் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்,  திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மற்றொரு அறிஞர் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள். இதுவரைக்கும் தமிழ்சைவர்களுடைய தனிச் சொத்தாக இருந்துவந்த திருவாசக நிதிக்குவையை, போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்குத் திறந்து விட்டது என்றும், சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்ததென்றும், தங்களுடைய பழமை குறித்துத் தமிழர்களைப் பெருமை கொளச் செய்தது என்றும் திருவாசகமணி பூரித்துப் போனார் – “… … the genuine and gigantic efforts of Dr.Pope in uttering ‘Open Seasame” to throw open the doors of te Treasure-cave of Thiruvachakam to the cultured Savants of the West , stung the Tamils of their callousness and startled them into an awakening and appreciation of their past”.

ஆங்கிலம் உலகப் பொதுமொழியாதலினால் , அம்மொழியில் திருவாசகத்தை மொழிபெயர்த்ததினால் ஜி.யூ. போப் நம்முடைய மணிவாசகப் பெருமானைப் பலநாடுகளிலும் உள்ள பன்மொழி அறிஞர்களுக்கும் அறிமுகப்படுத்தினார் என்றும் இதைக் காட்டிலும் திருவாசகத்தையும் மணிவாசகரையும் உலகறியச் செய்வதற்கு வேறு சிறந்த வழி இல்லை என்றும் திருவாசகமணி அவர்கள் கருதினார்.

“அந்த கிறித்துவ இறைபணியாளர், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டுக்குத் தமிழ்ச்சைவ வுலகம் எம்முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது? அப்பெருந்தகையின் பெயர் தமிழ்மக்களின் நெஞ்சில் நீங்காது நிலவுவதாகுக!” என்று ஜி.யூ. போப்பின் தமிழ்ப்பணியை நன்றியோடு போற்றும் திருவாசகமணியின் நெகிழ்ந்த உள்ளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால்  மறைக்கப்பட்டுவிட்டது.

திருவாசக மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் அந்த மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு அறிமுகவுரையை ஜி.யூ. போப் எழுதியுள்ளார். ஜி.யூ. போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பைத் தமிழ்ச் சைவர்களில் எத்தனைபேர் படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்குண்டு.  ஜி.யூ போப்பின் மொழிபெயர்ப்பை வலைதளத்தில் ஏற்றியவர்களும் கூட அறிமுகவுரையை விலக்கிச் செய்யுள்பகுதியை மட்டுமே வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

ஜி.யூ. போப் திருவாசகத்தின் நீத்தல் விண்ணப்பம் என்ற பதிகத்திற்கு எழுதிய அறிமுகவுரையின் போக்கையும் அது தமிழ்ச்சைவர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை விளைப்பதாக உள்ளது என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

நீத்தல் விண்ணப்பம் தோன்றிய வரலாற்றை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஞானாசிரியனாகத் திருப்பெருந்துறையில் எழுந்தருளித் திருவாதவூரரை ஆட்கொள்ளுகிறான். இதன் பின்னர் அடிகளுக்கு மதுரையினொடு தொடர்பு முற்றிலும் நீங்குகிறது. பூவுலகிற்குத் தான் எழுந்தருளிய பணி நிறைவுற்றதும் இறைவன் உடனிருந்த அடியவர்கள அங்குக் குருந்த மரத்தடியில் ஓர் பீடம் அமைத்துத் தன்னை வழிபட்டு வருக  என்றும் சிலநாட்களில் அங்குள்ள பொய்கையின் ந்டுவில் ஒரு பேரொளி தோன்றும் என்றும் அதில் அனைவரும் புகுந்து திருக்கயிலை வருக என்றும் கூறியருளினான். திருவாதவூரரை மட்டும் அவர்களுடன் பேரொளியில் புகாமல் யாத்திரையாகத் தில்லைக்கு வருக என்றும் வழியில் அவர் வழிபடும் தலங்களில் குருவடிவாய் காட்சி அளிப்பதாகவும் கூறியருளித் திருக்கயிலைக்கு எழுந்தருளினான்.

siva_as_guru_to_manikkavasagarஇறைவனின் பிரிவாற்றாமையால் வருந்திய திருவாதவூரர் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு இறைவனின் காட்சியைப் பெறாமையால் வருந்தி நீத்தல்விண்ணப்பம் என்னும் இந்தப் பதிகத்தை அருளினார். இறைவன் காட்சி நல்கினான். இது மாணிக்கவாசகரது வரலாற்றைப் பாடிய கடவுண்மாமுனிவர் அறிவிக்கும் செய்திகள்.

‘உன்னை பிரிந்த யான் என் உடலைத் தீவாய் மடுக்கிலேன், மலைமேல் உருண்டு உயிரை மாய்ப்பேனல்லேன்,  நாதனே! இந்த உடலும் உயிரும் உன்னுடைய உடைமையென்றே இவ்வுடலைவிட்டு உயிரைப் பிரிக்க அஞ்சினேன், என் செய்வேன்’ என நிலத்தில் வீழ்ந்து புரண்டு அழுது புலம்பினார். கற்றைவார் சடையார் கோலங்காட்டி ஆட்கொண்ட அன்றே, வாதவூரர், சுற்றமும் தொடர்பும் முற்றிலும் நீத்தார்; இன்பமும் துன்பமும் அற்றார்; உடல்மேல் அபிமானம் துறந்தார்; வெறுக்கை (செல்வம்)மேல் வெறுக்கை வைத்தார்; செற்றமும் செருக்கும் காய்ந்தார்; நல்வினை தீவினை இரண்டும் தீர்ந்தார்.  இறைவன் திருவாதவூரரை ஆட்கொண்ட பின் அவரது நிலையாகப்  பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்தில் அறிவிப்பது இந்நிலை

இனி, போப் இந்த கட்டத்தில் மணிவாசகரை எப்படி அறிமுகம் செய்கின்றார் எனக் காண்போம்.

நீத்தல் விண்ணப்பம் முழுவதும் ஆன்ம முன்னேற்றத்தைத் தடை செய்யும் ஐம்புல மயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தெய்வத்தின் துணை வேண்டி மானுடம் எழுப்பும் உணர்ச்சி மிக்க பாடல்கள் என்ற முன்னுரையுடன் ஜி.யூ. போப், மாணிக்க வாசகர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றைக் கூறுகின்றார் –

”சிவன் குருவாக வந்து ஆட்கொண்டு பிரிந்த பின், திருவாதவூரர் பாண்டி நட்டில் உள்ள சிவத்தலங்களைக் கண்டு வழிபடலை மேற்கொண்டார். முதலில் உத்தரகோசமங்கையை அடைந்தார். அங்கு நீண்ட காலம் தங்கினார். திருப்பெருந்துறையிலும் மதுரையிலும் பெற்றிருந்த இறையனுபவத்திற்கு எதிர்விளைவான சோதனைகள் உத்தரகோச மங்கையில் திருவாதவூரருக்கு ஏற்பட்டன.

இளமையும்  பாண்டியமன்னனின் தனிப்பட்ட பேரன்பும் பெற்றிருந்த அடிகள் இதுவரை செல்வச்செழிப்புடன் இல்லற இன்பத்தில் வளமாக வாழ்ந்திருந்தார். இப்பொழுது அனைத்தையும் துறந்த துறவியாக மாற்றம் பெற்றார். மதுரையில் அமைச்சராக இருந்தபோது பெற்றிருந்த சுகபோக வாழ்க்கை அனுபவ நினைவும், உத்தரகோசமங்கைத் திருக்கோயிலில் இருந்த சூழலும் அடிகளுடைய புதிய தவவாழ்க்கைக்குப் பெருஞ்சோதனையாக இருந்தன. புலனிச்சை செய்யும் மயக்கத்தில் சிக்கிய அவர் தாம் விரும்பிய உயர்ந்த குறிக்கோளை அங்கு அவர் எட்ட முடியவில்லை.

உத்தரகோசமங்கைக் கோயிலின் சூழல் அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்தது. நீத்தல் விண்ணப்பத்தில் உள்ள பாடல்களைப் பார்த்தால் அவர் இருநிலைகளில் வருந்தி வந்தார் என அறிகிறோம். ஒன்று, அந்தக் கோவிலில் கூட்டம் கூட்டமாக இருந்த தேவரடியார்களின் தொடர்பால் அவருக்கு ஏற்பட்ட மனமயக்கம்; இரண்டாவது, புதிதாக அவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கைக்கு உரிய விரதங்களைக் மனம் ஒன்றிக்கடைப் பிடிக்க இயலாமை.

இந்த இரண்டினாலும் மணிவாசகர் கழிவிரக்கங்கொண்டு பாடிய ஒப்புதல் வாக்கு மூலமே நீத்தல் விண்ணப்பம்.”  – From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, – if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty, often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.

ஜி.யூ. போப் கூறும் இந்த வரலாறு மணிவாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன் மானம் உள்ள தமிழர்கள் போப்புக்குப் புகழ்மாலை சூட்டித் திருவாதவூரடிகளை ஒழுக்கக் கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?

போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்.

திருவாசகத்தில், குறிப்பாக நீத்தல் விண்ணப்பத்தில், திருவாதவூரடிகள் தாம் பெண்மயக்கத்தில் வருந்துவதாகக் கூறுவது போன்ற செய்திகள் அவர் தம்மைப் பற்றிக் கூறிய ஒப்புதல் வாக்கு மூலமல்ல. இது வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து  மேலும் வினைகளை ஈட்டிக் கொள்ளும் இயல்பைத் திருவாதவூரடிகள் தம்மேல் ஏற்றிக் கொண்டு கூறியதாகும். இதற்கு இவ்வாறன்றி, நம் அடிகளே மகளிர் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் மனத்தளவில் மகளிரை நினைந்திருந்தார் என்றும் அவ்வாறு இருப்பினும்  விழுத்தொழும்பில் நின்றதால் தம்மைக் கைவிடலாகாது என இறைவனிடம் மன்றாடினார் என்றும் அறியாது கூறிய போப்பை  எம்பெருமான் மன்னிப்பாராக.

உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி உலகவருக்காக இறைவனிடம் வேண்டுதல் இந்து பக்தி இலக்கிய மரபு. இதற்குத் தமிழிலேயே ஒரு சான்று காணலாம்.

காரைக்காலம்மையார் பெண்ணடியார் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. அவர் அருளிய ‘திருவிரட்டைமணிமாலை’ என்னும் திருப்பதிகத்தில்,

“நினையாது ஒழிதிகண் டாய்நெஞ்சமே
இங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும்
தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நம்
தாதைநொந் தாத செந்தீ
அனையான் அமரர் பிரான் அண்ட
வானன் அடித்தலமே” (13)

என்னும் பாடலில் தமக்கு மனைவியும் மக்களும் உள்ளதாகவும், நெஞ்சம் அவர்களை நினயாதொழிய வேண்டும் எனவும் பாடுகிறார். காரைக்கால் அம்மையாருக்கு மனைவியும் மக்களும் இருந்தனர் என இந்தப் பாடலின் அடிப்படையில் கூறினால், அவ்வாறு சொல்பவனை அறிவுடையவன் எனலாமா?

போப்பின் கருத்து அவருடைய கிறித்துவ மரபையொட்டி எழுந்ததுவாகும். கிறித்துவ Saint களில் பலர் Sinner களாக இருந்து Saint ஆனவர்களே. இந்த மரபில் எழுந்ததுதானே “Every saint had a past; and ever Sinner has a future” (Imitation of Christ) எனும் கொள்கை.

galatic_sivaஇந்தக் கோட்பாடு நம் ஆசாரிய மூர்த்திகளுக்கும் இந்து மரபுக்கும் ஒவ்வாத ஒன்று.

முத்தி நிலையில் பரமுத்தி அபரமுத்தி என்று இருநிலைகள் உண்டு. பரமுத்தியாவது சிவவியாபகத்தில் இரண்டறக் கலந்துவிடும் நிலை. இத்தகையோருக்கு மறுபிறப்பில்லை.

அபரமுத்தி என்பது பதமுத்தி என்றும் சொல்லப்படும். பதமுத்தியில் உள்ளவர்கள் இறைவன் ஆணையின்படி மீண்டும் உலகநன்மையின் பொருட்டுப் பிறந்து உரிய காலத்தில் பரமுத்தி அடைவர்.

இத்தகைய உயர்ந்த ஆன்மாக்களாக சிவனடியை மறவாப் பான்மையராக இருந்து, இறைவன் ஆணையால் ஒருபயன் கருதி உலகிற்கு அனுப்பப்பட்டவரே நம் ஆசாரிய மூர்த்திகள். அவர்களுடைய அருளிச்செயல்களிலேயே இதற்கு அகச்சான்றுகள் உள்ளன.

“துறக்குமா சொலப்படாய் திருந்தடி மறக்குமாறிலாத என்னை மையல்செய்து மண்ணில் பிறக்குமாறு காட்டினாய்” எனத் திருஞானசம்பந்தர் தாம் மண்ணில் பிறப்பதற்கு முன்னிருந்த நிலையைப் பாடினார்.

கயிலை மலையில் சிவனுக்கு அருகில் தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரை இறைவன், திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு மண்ணுலகில் பிறக்குமாறு செய்தான் என்னும் செய்தி திருநாவுக்கரசர் புராணம் முதற் செய்யுளில் தெரிகின்றது.

மாதவம் செய்த தென் திசை வாழத் திருத்தொண்டத்தொகை தமிழ் மண்ணுக்குக் கிடைக்கும் பொருட்டுத் திருக்கயிலையில் அணுக்கத்தொண்டராக இருந்த ஆலாலசுந்தரர் மீது ஒரு பழியேற்றி இறைவன் நம்பியாரூரராகப் பிறக்குமாறு செய்தான்.

திருஞான சம்பந்தரைப் போலவே, சிவலோகத்தில் சிவனடி மறவாப் பான்மையராகத் தன்னருகில் இருந்த ஒரு புண்ணிய ஆன்மாவை, திருவாசகத்தைப் பெற வேண்டி, மண்ணுலகத்தில் பிறக்குமார் இறைவன் செய்தான். மாணிக்கவாசகர் இச்செய்தியை,

“நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
…………………………………………………………………
ஆக்கி ஆண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே” (அதிசயப்பத்து 8)

எனக் கூறினார்.

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! திருவாசகத்தை மொழிபெயர்த்ததனல் அதன் பெருமையை உலகெங்கினும் போப் பரப்பினார் என்றால் இப்புகழோடு, மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார் என்றும் ஆம்..

இந்த Every Saint had a past; and every Sinner has a future என்னும் கொள்கை கிறித்துவர்களுக்கே பொருந்துமா என ஐயமாக உள்ளது. அவர்களுக்குத்தான் மறு பிறப்பு உடன்பாடில்லையே. Eternal hell அல்லது eternal heaven தானே அவர்களுக்கு விதிக்கப்பட்டது. சிலர் வாழ்நாள் முழுவதும் தீவினையாளர்களாகவே இருந்து இறந்தொழிகின்றனர். மறுபிறப்பை மறுக்கும் கிறுத்துவக் கோட்பாட்டின்படி இவர்கள் எவ்வாறு எதிர்காலத்தில் saints ஆவர்? வாழ்நாள் முழுவதும் saints களாக வாழ்ந்து மறைந்தவர்கள் தீவினையாளராக வாழ்ந்த இறந்த காலம் எப்படி இருந்திருக்கும்? முற்பிறப்புத்தான் மறுக்கப்பட்டுவிட்டதே.

போப் சைவ சித்தாந்தத்தைப் நூல்கள் வாயிலாகப் படித்திருந்தாலும் சித்தாந்த மரபினை அறியார். திருமுறைகளில் ஐயம் வந்தால், அதனை சித்தாந்த நெறி நிற்கும் சான்றோரிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். வெறும் தமிழ்ப்புலமை மட்டும் போதாது.(இதற்குச் சான்று தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய ‘தியாகராய செட்டியார்’ வரலாறு பார்க்கவும்). இந்த அறியாமையால் அவர் தவறான குறிப்புக்களும் எழுதியுள்ளார். இதனால் போப் சைவ நெறியைப் பாராட்டுகின்றாரா அல்லது பிற கிறித்துவர்களைப் போலக் கேலி செய்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுமாறு சில இடங்களில் கருத்துத் தெரிவிக்கின்றார்.

எப்படி ‘சங்கீதம்’ என்ற பைபிள் பகுதி கிறித்தவர்களின் மனத்தை ஆட்கொண்டிருக்கின்றதோ அப்படியே திருவாசகமும் காலங்காலமாகத் தமிழ்மொழி பேசும் மக்களின் பெரும்பான்மையோரின் மனத்தைத் தொட்டுள்ளது எனத் திருவாசகத்தைப் புகழ்ந்த போப் அவர்கள், இதில், மேன்மையான ஆன்மிகத் தத்துவச் சிந்தனைகளோடு மடமையானது என்று சொல்லத்தக்க உருவவழிபாடு பேணலும் கலந்துள்ளது; இன்றைய சைவநெறியில் ஒன்றையொன்று மறுதலித்துக்கின்ற, அதேசமயத்தில் பரஸ்பரம் வலுவூட்டுகின்ற இரு இயல்புகள் செழித்துள்ளன. சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எத்துணைக் கெத்துணை முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அத்துணைக்கு அத்துணை ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார் (There is in them a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce  to be the grossest idolatory. And this leads to the thought that in caiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen on another. The more philosophical and refined the caivite becomes , the more enthusiastic does he often apper to be in the performance of the incongruous rites of the popular worship. )

சைவம் உருவவழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்துகின்றது. ஆன்ம ஞானியும் புறவழிபாட்டைக் கைவிடலாகாது. சிவச்சொரூபம் அருவமாய் எங்கும் வியாபித்துள்ளது. உருவுடைய சீவர்களாகிய நாம் அந்த வியாபகத்தின் உள் உள்ளோம்.  நமக்குப் புறத்தேயுள்ள பொருள்களையே காண வல்ல கருவிகளைக் கொண்டுள்ள நாம் நமக்கு உள்ளும் புறம்பும் உள்ள அருவமாக உள்ள நம்மை நடத்திச் செல்லும் இறையின் அந்த வியாபக வடிவம் வழிபடுவதற்கு முன்னிலை(சன்னிதானம்) ஆகாது. அதனால்தான் உருவ வழிபாட்டை இந்து சமயம் வற்புறுத்துகின்றது. இறைவன் அடியவர் உளங்கொள்ளும் எந்த வடிவத்திலும் வந்து அருள்புரிவான், அந்த வடிவங்களெல்லாம் அருள்வடிவமே அன்றிக் கல் மண் பொன் போன்ற மாயாகாரிய வடிவங்கள் அல்ல என்பது இந்து மதக் கோட்பாடு. இறைவன் எந்த வடிவில்  தங்களுக்கு அருள் செய்தானோ அந்த உருவினைத் திருமுறையாசிரியர்கள் போற்றியுள்ளனர். மணிவாசகப் பெருமானுக்குச் சிவன் குருவடிவில் வந்தருளினான். ஆதலால் திருவாசகம் முழுவதும் குருஸ்துதியே ஆகும்.

தங்களுக்கு உருவ வழிபாடு இல்லை என்று கூறிக் கொள்ளுகின்ற கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அக்கிறித்து, முகம்மது என்பாரையே தம்முடைய மூர்த்திகளாகக் கொள்ளுவதால் அந்த இருவரும் அடைந்த கதியை அக்கிறித்துவர்களும் முகம்மதியர்களும் அடைவர் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை.  இவர்களும் உருவ வழிபாடு உடையவர்களே.

போப் மணிவாசகப் பெருமானைப் பிழைபடக் காட்டிய மற்றொரு முக்கியமான இடத்தை அறிய வேண்டும்.

இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டுத் தான் மணிவாசகரை ஆட்கொண்டதை உலகுக்கு அறிவித்தபின் , மணிவாசகர் தில்லைக்குச் செல்லுமுன் நடந்த நிகழ்ச்சிகளைத் திருவிளையடற் புராணமும் திருவாதவூரர்ப் புராணமும் விரித்துக் கூறுகின்றன. இறைவன் தன்பொருட்டு மண்சுமந்து கோவால் மொத்துண்ட கருணைத் திறத்தை நினைந்து மணிவாசகர் நினைந்து பலவாறு அழுது புலம்பினார். பாண்டியன் வாதவூரடிகளை அடைந்து வணங்கித் தனது பிழையைப் பொறுக்குமாறு வேண்டினான். ‘யான் நாளும் நுமது பணி செய்தொழுக இந்நாட்டின் ஆட்சியைத் தாங்களே ஏற்று நடத்தல் வேண்டும்’ என மன்னன் மணிவாசகரிடம் வேண்டி நின்றான். அரசனது அன்பினை உணர்ந்த வாதவூரடிகள், ‘என்னைத் திருபெருந்துறைக்குச் செல்ல விடுப்பதே இவ்வுலக ஆட்சியை எனக்கு வழங்கியதாகும்’ என்றார். அடிகளது சிவபத்தியின் மாண்பினை யுணர்ந்த மன்னன் ‘பெரியீர் நும் திருவுளப்படி செய்க’ எனக் கூறி விடை அளித்தான். திருவாதவூரர் நற்றவக் கோலம் பூண்டு திருப்பெருந்துறை நோக்கிச் சென்றார்.

manikka_vasagar_statueதமிழ்ச் சான்றோர்கள் கூறும் வாதவூரடிகள் வரலாறு இவ்வாறு இருக்க போப் இதனை வேறு விதமாகக் கூறுகின்றார். பாண்டிய நாட்டில் உள்ள மதுரைப் பெருங்கோவிலுக்கும் சோழமண்டலத்தில் சிதம்பரத்தில் உள்ள தில்லைப் பெருங் கோவிலுக்கும் ஏதோ ஒரு பெரிய போட்டி இருந்துள்ளதாகத் தெரிகின்றது. தில்லைக் கோவில் மதுரைக் கோவிலை பலநிலைகளில் முதன்மை பெற்றது எனலாம். மாணிக்க வாசகர் மதுரையை விடு நீங்கிய பின் மீண்டும் மதுரைக்கு வரவேயில்லை. இவர் குதிரைவாங்க அளித்த தன் பொருளைக் கவர்ந்து கொண்டதனைப் பாண்டிய மன்னன் மனதார மன்னிக்கவே இல்லை என ஊகிக்கலாம். போப்பின் ஊகத்தின்படி மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் தன்னை மனதார மன்னிக்காததால்தான் அவர் மீள மதுரைக்கு வரவில்லை என்பதாகும்.(It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses)

திருவாசகம் மொழிபெயர்ப்பு நூலுக்கு முன்னுரையில் போப் மாணிக்கவாசகர் வரலாறு எழுதியுள்ளார். அதில் பாண்டிய மன்னன் தன்னுடைய பிழைக்கு மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அவரைத் தன்னுடைய அமைச்சராகப் பணிகொள்ளுவதற்குத் தனக்குத் தகுதியில்லையாதலால் நாட்டை ஆளும் உரிமையை அவருக்கு அளித்துவிட முன் வந்ததாகவும் கூறியதற்குக் கண்டபத்து என்னும் பதிகத்தின் அறிமுகத்தில் கூறியுள்ள இந்தச் செய்தி முரண்படுகின்றது.(The King now pays the saint a visit, acknowledges all his  mistakes, declares his unworthiness to have such a , and offers to resign to him the kingdom)

இந்த முரண்பாடுகளால் ஒன்று நன்கு தெரிய வருகின்றது. புராணங்களும், சைவ உலகமும்  மாணிக்க வாசகருக்கு அளித்துள்ள உயர்வையும் அவருடைய மேன்மையையும் போப் அறிந்திருந்தாலும் , அவருடைய கிறித்துவ மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும்,  Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து  விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

தமிழனுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவர் தாமஸ் எனக் கூறுவோருக்கும் போப்புக்கும் என்ன வேறுபாடு? ஒரே குட்டையில் ஊறியவர்கள் தானே!

பவானி காதலிக்கிறாள்

[மூர் நாம் அவர்களின் ‘The Principle Of Adaptation’ என்கிற புனைவைத் தழுவியது]

[மூலம்: http://moor-nam.sulekha.com/blog/post/2004/12/the-principle-of-adaptation.htm]

-0-

marriage1‘அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே..’ குழைவான கிறங்கடிக்கும் குரலில் சித்ரா பாடிக் கொண்டிருந்தார். கோகுலாஷ்டமி கொண்டாடி விட்டு, முறுக்கும் சீடையும் தின்று மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தேன். “சீசந்திக்கு காசு…” வாசலில் இரண்டு மூன்று குழந்தைகள் சிறு தேர் செய்து, கிருஷ்ணர் படத்தை அதில் வைத்து இழுத்து வந்து, வீட்டின் முன் நின்று கூவினர்.

“பவானி…,” குரல் கொடுத்தேன். கல்லூரி விடுமுறை ஆதலால் இன்று வீட்டில்தான் இருக்கிறாள்.

மகள் பவானி என்னுடைய பர்ஸை லாகவமாகத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு ஓடிப் போய் அந்தக் குழந்தைகளிடம் கொடுத்து அவர்கள் மேலும் எழுப்பிய கூச்சலை ரசித்துவிட்டு வந்து என் அருகில் அமர்ந்தாள்.

“அப்பா..” என்றாள்.

எனக்கு இந்த அழைப்பு தெரியும். “சொல்லும்மா… என்ன வேண்டும்” என்றேன்.

“இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. கோவிச்சுக்காதீங்க.”

“இல்லை சொல்லு.”

“நான் ஒருவரை காதலிக்கிறேன். I’m seriously in love”.

“ஒ.. என்ன காதலிக்கிறாயா..”

“ஆமாம். நிஜமாகவே காதலிக்கிறேன்.”

“யாரும்மா அது.. என்ன செய்கிறான் அந்தப் பையன்?”

“அப்பா… அவர் பெயர் இபு… இப்ராஹீம். ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார்.”

“அம்மா.. அவர் ஒரு… “.

“ஆமாம் முஸ்லிம். என்ன அப்பா.. நீங்கள் எங்களைச் சுதந்திரமாக வளர்க்கவில்லையா.. நீங்களுமா இந்து முஸ்லிம் என்று மதவாதிகள் மாதிரி குறுகிய பார்வை பார்க்கிறீர்கள்? அவர் முஸ்லிமாக இருந்தால் என்ன அப்பா பிரச்சனை?”

“பிரச்சினை எனக்கு இல்லையம்மா. உனக்குத்தான். நானா அவர் கூட வாழப்போகிறேன்?”

“இல்லைப்பா.. அவர் மிகவும் நல்லவர். திறந்த மனதுடையவர். அவர் ஒன்றும் மதவெறி பிடித்தவர் இல்லை. ஒருமுறை பார்த்தால் நீங்களே புரிந்து கொள்ளுவீர்கள்”

என் மனதில் சிறு பயப்பந்து உருண்டது. திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தவமிருந்து பெற்ற பெண். அவள் ஆசைப் பட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஒரே பெண் என்று மிகவும் செல்லம். ஆண்டவா… இவள் வாழ்க்கையில் இனிமேலும் சந்தோஷமாக இருக்க வேண்டுமே என்று எப்போதும் வேண்டிக் கொள்வேன். இந்த பெண் தன திருமண விஷயத்தில் ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று கவலை வந்தது.

“எப்படி அம்மா அந்தப் பையனைத் தெரியும்?…”

“அது வந்துப்பா… “, சற்று தயங்கியவள், தைரியத்தை வளர்த்துக் கொண்டு, “இரண்டு மூன்று மாதம் முன்பு புதிதாக சிம் கார்ட் ஒன்று எனக்கு வாங்கினோம் ஞாபகம் இருக்கிறதா.. அதன் பிறகு ஒரு நாள் திடீரென்று இப்ராஹீம் கால் பண்ண ஆரம்பித்தார். முதலில் திட்டி விட்டேன். சில நாட்கள் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருந்தார். பாவமாக இருந்தது. நேரே கூப்பிட்டு இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். கால் பண்ணாதீர்கள் என்று சொல்லலாம் என்று அழைத்தேன். ஆனால் நேரே பார்த்ததும்தான் தெரிந்தது. அவர் மிகவும் நல்லவர்ப்பா.. நீங்கள் ந்யூஸ் பேப்பரையும், படங்களையும் பார்த்துவிட்டு முஸ்லிம் என்றாலே அடிப்படைவாதி… தீவிரவாதி என்று நினைத்துக் கொண்டு அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள்,” என்றாள்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. “ஏனம்மா.. உனக்கு எப்படித் தெரியும்.. அவன் நல்லவனா கெட்டவனா, அவன் குடும்பம் எப்படி, என்றெல்லாம் தெரியுமா? யாரென்று சரியாகத் தெரியாமலேயே, அவன் கெட்டவனாக, இசுலாமிய அடிப்படைவாதியாக இருக்கமுடியாது என்று எப்படிச் சொல்கிறாய்? உனக்கு லவ் ஜிகாத் என்றாள் என்ன என்று தெரியுமா?” சற்று கோபமாகவே கேட்டேன்.. அமைதியாக இருந்தாள்.

love-jihad“இப்போது புதிதாகக் கிளம்பி இருக்கும் அபாயம் இந்த லவ் ஜிகாத். முஸ்லிம் இல்லாத மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களை வேண்டுமென்றே முஸ்லிம் இளைஞர்கள் காதல் வலையில் சிக்க வைக்கிறார்களாம். கேரளாவிலும், மகாராஷ்ட்ரத்திலும் அரசாங்கமே இதில் விசாரணை துவங்கி உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் செய்தி வந்ததே படிக்க வில்லையா? இத்தனைக்கும் இரண்டுமே செக்யூலர் முத்திரை பெற்ற கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் அரசுகள். நிலைமை இப்படி இருக்கும் போது நீ இப்படிச் சொல்வது என் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.”

“அது எதோ கிறிஸ்தவப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவதாக அல்லவா சொன்னார்கள்..,” என்றாள்.

“ஆமாம்.. கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் அல்ல. ஐநூறுக்கு மேற்பட்ட இந்து பெண்களும்தான். இந்து பெண்கள் மட்டும் சீரழிந்தால் அரசாங்கம் ஏன் கவலைப்படப் போகிறது?… அது கிடக்கட்டும். அந்த பையனைப் பற்றி உனக்கு வேறு என்னென்ன தெரியும்?”

“அப்பா நீங்கள் இப்படி வருத்தப்படுவது எனக்கு அதிசயமாக இருக்கிறது. ஒரு நாள் கலப்புத் திருமணங்கள், மாற்று மதத் திருமணங்கள்தான் சாதி மதப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி என்று டீவியில் சொன்னபோது அதை ஒத்துக்கொண்டீர்களே. இப்போது இப்படி ரியாக்ட் செய்கிறீர்களே. நீங்கள் ஒரு தடவை இபுவைப் பாருங்கள். இபு ஒரு முறை கூட தன் மதத்தைப் பற்றி பேசியதே இல்லை,” என்றாள்.

“நீ இப்படிச் சொல்வதே எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. முதலில் அடிப்படைவாதி என்பவன் குண்டு வைக்கிற தற்கொலைத் தீவிரவாதி மட்டுமே என்று நினைப்பதே தவறு அம்மா. அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு, ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல், அமைதியாக தீவிரவாதத்தை ஆதரிக்கிற சைலன்ட் மெஜாரிட்டி கூட அடிப்படைவாதிகள்தான். இரண்டாவது நீங்கள் மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பதே எனக்கு என் சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது.”

“அப்பா உடனே அவர் தீவிரவாதி; அடிப்படைவாதி என்று தீர்ப்புச் சொல்லாதீர்கள். நீங்கள் இன்னும் அவரைப் பார்க்கவே இல்லை. முதலில் அவரைப் பாருங்கள். விரும்புவதாக இருந்தாலும் வெறுப்பதாக இருந்தாலும் பிறகு செய்யுங்கள்.”

தன் சிந்திக்கும் திறனையை மூடி விட்டு, உணர்ச்சிபூர்வமாக அவள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். இவளிடம் கொஞ்சம் பொறுமையாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அவளை நோக்கித் திரும்பி, நாற்காலியை இழுத்துப் போட்டுக்marriage2 கொண்டேன் – “அம்மா… கல்யாணம் என்பது விட்டுக்கொடுத்துப் போவது என்று உனக்குத் தெரியும். எல்லாரும் சொல்வது தான். அந்தப் பையன் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வான் என்று தெரிந்து கொண்டாயா? உனக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது அந்தப் பையன் எப்படி நடந்து கொள்வான் என்று நீ நினைக்கிறாய் என்று பார்ப்போம்.”

“உனக்குக் கோயிலுக்குப் போவது பிடிக்கும்தானே? உங்கள் திருமணத்திற்குப் பின் உன்னை உன் கணவன் கோயிலுக்குப் போகக் கூடாது என்று தடுத்தால் என்ன செய்வாய்?”

“அப்பா.. அவர் ஒன்றும் அப்படி சகிப்புத்தன்மை அற்று நடந்து கொள்ள மாட்டார்”

“சரிதான் அம்மா.. இப்போது வேண்டுமானால் அப்படி இருக்கலாம். முதலில் உன்னையே கோயிலுக்குப் போக அனுமதிக்காமல் இருக்கலாம். அல்லது இரண்டாவதாக உன்னை அனுப்பலாம் – ஆனால் அது அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதை எதிர்க்கலாம். அல்லது மூன்றாவதாக உன்னைக் கோயில் வாசல்வரைக்கும் துணைவந்து உள்ளே உன்னுடன் வராமல் இருக்கலாம். நான்காவதாக கோயிலுக்குப் போவதை வெறுத்தாலும் உனக்காக வரலாம். ஐந்தாவதாக உன்னுடைய ரசனையில் பங்கு கொண்டு, உன்னுடனே உள்ளபடியே விரும்பி கோயிலுக்கு வரலாம். எப்படி நடந்து கொள்வார் அவர் என்று நினைக்கிறாய்?”

“என்னுடன் கோயிலுக்கு விரும்பி வருவார் என்றே நினைக்கிறேன்” என்றாள்.

“அப்படியானால் நீயும் அப்படி நடந்து கொள்வாய் தானே.. அவர் விரும்புகிற எல்லாவற்றிலும் நீயும் பங்கு கொள்ள வேண்டும் அது தானே சரி?”

“ஆமாம்”

“அவர் முஸ்லிம் பண்டிகைகளைக் கொண்டாடினால் நீயும் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் மசூதியில் அனுமதிக்கிற போது போய், தொழுது விட்டு வரவேண்டும்”

“கண்டிப்பாக விருப்பத்துடன் நான் செய்வேன்”.

“அப்படியானால் இந்துப் பண்டிகைகளில் அவரும் பங்கு கொள்ளவேண்டும். தீபாவளி, வருடப் பிறப்பு, கோகுலாஷ்டமி எல்லாவற்றிலும் அவரும் பங்கு கொள்ள வேண்டும்”

அவள் அமைதியாக இருந்தாள்.

“அப்பா… அவர்கள் மதத்தில் மற்ற மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவது தடைசெய்யப் பட்டுள்ளது. அவர்கள் மதப்படி ஒருவர் இரண்டு மதப் பண்டிகைகளையும் கொண்டாட முடியாது.”

“இது சுத்த முட்டாள்தனம். ஏன் பங்கு கொள்ள முடியாது? நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எல்லா மதப் பண்டிகைகளிலும் கலந்து கொள்கிறாரே?”

“அவர் வேறு. சாதாரண முஸ்லிம்கள் வேறு.”

“ஏனம்மா அப்படி?”

“அவர்கள் சமூகத்தில் ஜமாத்தில் தண்டனை கூட கொடுப்பார்கள். அவர்கள் மதப்படி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதே தவறு. அது போகட்டும். எனக்கு வேண்டுமானால் நான் மட்டும் பண்டிகைகள் கொண்டாடிக் கொள்கிறேன். கோயிலுக்கு போய்க் கொள்கிறேன். அவரை இதில் ஈடுபடுத்த மாட்டேன்”

“ஆக, அவர் விட்டுக் கொடுக்க மாட்டார். நீ மட்டும் விட்டுக் கொடுக்கப் போகிறாய்?”

“அப்படி இல்லை. ஒரு விஷயத்தில் நான் விட்டுக் கொடுத்தால் வேறொன்றில் அவர் விட்டுக் கொடுப்பார்”

marriage3“இல்லையம்மா. இத்தனை நாள் எப்படி வளர்ந்தாயோ, எப்படிப் பழகினாயோ, உனக்கு என்னென்ன பிடிக்குமோ அனைத்தையும் அவருக்காக நீ விட்டுக் கொடுத்து உனக்கென்று விருப்பம் இல்லாமல் வாழப் போகிறாய். உனக்குப் பிறக்கும் குழந்தைகள் உன் அம்மாவையோ என்னையோ நம் பழக்க வழக்கங்களையோ எதையுமே கொள்ளாமல் வேறு யாரோவாகத்தான் இருப்பார்கள்”

அவள் யோசிக்கத் தொடங்கினாள். நான் மேலும் சொன்னேன்…

“உன் குழந்தைகள் கோயிலுக்கு வரமாட்டார்கள். நம் பண்டிகைகள் பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் எதிலும் பங்குகொள்ள மாட்டார்கள். நமது சொந்தக்காரர்கள், குடும்ப நண்பர்கள் யாருடனும் அவர்களுக்குத் தொடர்பு இருக்காது. வேற்று மனிதர்களாக நடந்துகொள்வார்கள்.”

“அப்பா.. அப்படி விடமாட்டேன். அவர்களை இரண்டு மதப் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுத்துவேன்.”

“நீ சின்னப் பெண்ணம்மா. உணர்ச்சிபூர்வமாக சிந்திக்கும்போதுsunset பெண்கள் குறுகிய கால முடிவுகளையே எடுக்கிறார்கள். உடல் ரீதியான விஷயங்களில் ஆண்கள் குறுகிய கால முடிவுகளை எடுக்கிறார்கள்.”

“சற்றே சிந்தித்துப் பார். அவரைப் பார்த்தவுடனே ஏற்பட்ட உணர்வுகளை மட்டும் வைத்தே நீ சிந்திக்கிறாய். இன்னும் உன் திருமணம், அதற்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றி நீங்கள் சிந்திக்கவும் இல்லை – பேசிக்கொள்ளவும் இல்லை. எதோ பார்த்தோம் பிடித்தது என்ற அளவிலேயே உங்கள் உறவு இருக்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரே கேள்விதான். விட்டுக்கொடுத்து வாழ்வதில், நீயும் உன் குழந்தைகளும் எல்லாவற்றையும் இழக்கப் போகிறீர்களா… அல்லது அவரும் விட்டுக் கொடுப்பார் என்று நினைக்கிறாயா?”

அவள் அமைதியாக இருக்க, நான் மேலும் தொடர்ந்தேன்.

“விட்டுக் கொடுத்தல், அந்நிய விஷயங்களை சகித்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுதல் என்பது வெற்றிகரமான திருமணத்திற்குத் தேவை அம்மா. திருமணம் மட்டும் அல்ல, அரசியல், வியாபாரம் என்று எல்லாத் துறையிலும் புதிய விஷயங்களை, அந்நியமான கலாசாரங்களை சகித்து ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

இயற்கையில் கூட வளைந்து கொடுத்து மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவைகள் நீண்டநாள் இருக்க முடியும். சராசரியாக பெண்கள் ஆண்களை விட நீண்டநாள்கள் வாழ்கிறார்கள். ஏன் தெரியுமா… பெண்களின் உடல் மாதவிடாய் பருவங்களிலிருந்து, பிள்ளை பெறுதல் போன்ற பல மாற்றங்களை சகித்து அதற்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வதால் தான். ஆனால் ஆண்களின் உடல் எந்தப் பெரிய மாற்றத்தையும் அடையாமல் அப்படியே இருந்து விடுகிறது.

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுகிற சமூகங்கள்தான் பெரியதொரு மனித இனங்களாக பல நூறு வருடங்களைக் கடந்து உயிர்ப்புடன் செயல்படுகின்றன. அவ்வாறு சகிப்புத்தன்மை இல்லாத சமூகங்கள் எப்போதும் மற்ற இனங்களுடன் உரசலும் போராட்டமுமாக ஒரு எதிர்ப்புத் தன்மையுடனேயே இருக்கின்றன. நவீன காலத்தில் இதைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எந்தெந்த நாடுகள் ஜனநாயகத்தை கடைபிடிக்கின்றனவோ அவை சகிப்புத்தன்மை, மாற்றங்களை ஏற்று, விட்டுக்கொடுத்து செயல்படுகிற நாடுகள் என்று சொல்லலாம்.

அவ்வாறு ஜனநாயகத்தை ஏற்காத நாடுகள் மாற்றத்தை விரும்பாத, பிற்போக்குவாத நாடுகளாகவே இருக்கின்றன. இதனால்தான் மத்தியக் கிழக்கு நாடுகள் ஏனைய மற்ற நாடுகளுடன் ஒரு போராட்டம் நிகழ்த்தியவாறே இருக்கின்றன. ஏனெனில் அங்கே உள்ள மக்களும் அரசும் இஸ்லாம் என்ற கொள்கையில் மிகவும் பிடிப்புடனும், மாற்றத்தை விரும்பாலும், மாறிவிட்ட சமூக கால பரிமாணத்தை புரிந்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனின் சகிப்புத்தன்மை, வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுகிற தன்மையை சோதிக்கும் கணம் ஒருவருடைய திருமணம்தான்!”

திருமணம் என்று வரும்போது இஸ்லாமியர்கள் மற்ற மதத்தவர்களுக்கு எந்தச் சலுகையும் கருணையும் காட்டுவதில்லை. குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் மற்ற மதத்தவர்களைத் திருமணம் செய்வது அவர்கள் மதத்தில் தடைசெய்யப் பட்டுள்ளது. அப்படியே திருமணம் செய்ய விரும்பினாலும் முதலில் அந்தப் பெண்ணை விரும்புகிறவர் மதம் மாறியாக வேண்டும். ஆனால் இதே இசுலாமிய ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. ஏனெனில் குரான் மூலமாகவே பெண்கள், வெறும் போகப் பொருளாகவும், ‘விளை நிலங்களாகவும்’, பிள்ளை பெறுகிற இயந்திரமாகவுமே கருதப் படுகிறது. கூர்ந்து கவனித்தால் இசுலாமிய ஆண்கள் மிகச் சாதாரணமாக மாற்று மதப் பெண்களை மணப்பதும், அதே இசுலாமியப் பெண்கள் அவ்வாறு செய்யச் சுதந்திரமில்லாமலும் இருக்கிறார்கள். இதை அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் என்று உலகமெங்கும் காணலாம்.

அறுநூறு வருட இசுலாமிய ஆட்சியில் ஒரு முஸ்லிம் ராணி கூட இந்து அரசரை மணந்தது இல்லை. ஆனால் இந்து அரசர்கள்தான் தன் பெண்களை இசுலாமிய அரசர்களுக்குப் பெண் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு எந்தவித கொடுக்கல்-வாங்கல், விட்டுக் கொடுத்தலிலும் முஸ்லிம்கள் ஈடுபடாததால் இந்த மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் ஆனதே இல்லை. அதனால்தான் இந்தியா மட்டும் அல்ல பிலிப்பைன்ஸ், ஐரோப்பா, தாய்லாந்து என்று எங்கே பார்த்தாலும் அவர்கள் மற்ற சமூகங்களுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.”

அப்பா, நீங்கள் இவ்வளவு தூரம் சொன்னது சரி. அது பொதுவாக இசுலாமிய சமூகத்தைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்கிறீர்கள். ஆனால் அது தனிமனிதர்களுக்கு ஏன் பொருந்த வேண்டும்? ஏன் இபு மாறுபட்டு இருக்கக் கூடாது?

“சரிதான் அம்மா. அந்த பையன் இப்போது வேண்டுமானால் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வயது ஆக ஆக குணமும் மாறக் கூடும். பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்த்ரேலியா என்று எங்கே பார்த்தாலும் முஸ்லிம் ஆண்கள் அங்குள்ள வெள்ளை இனப் பெண்களைத் திருமணம் செய்கிறார்கள். குழந்தைகள் பெற்று சில காலம் ஆனபின், தம் குழந்தைகளை அந்தந்த பிரதேச பழக்க வழக்கத்திலேயே வளர்க்காமல் அவர்களை அழைத்துக் கொண்டு, சௌதி, இந்தோனேசியா, பாகிஸ்தான் என்று ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி தமது குழந்தைகளை அவர்களது தாய்மார்களைப் போல் சுதந்திரமாக வளர்க்காமல் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆக்கி விடுகிறார்கள். ஏன் தெரியுமா? இதைத்தான் மிட்-லைஃப் க்ரைசிஸ் என்று மேற்கத்திய நாடுகளில் சொல்கிறார்கள்.

அதுவரை சூழ்நிலையால் அமுக்கி வைக்கப் பட்ட உள்ளுணர்வுகள் நாற்பது நாற்பத்தி ஐந்து வயதில் வெளிப்படுகின்றன. அதனால் தன் வாழ்வைப் பற்றியே மனதில் குழப்பம் விளைகிறது. இந்தியாவில் இதுநாள் வரை நாம் மிட்-லைப் க்ரைசிஸ் என்று கேள்விப் பட்டதே இல்லை; ஏனெனில் நமது ஆண்கள் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதனுடன் கலந்து விடுகிறார்கள்.

marriage4“அதனால்தான் சொல்கிறேன், வாழ்க்கைத் துணையைத் தேடும்போது, சகிப்புத்தன்மை, சமூகச் சூழ்நிலைகளுடன் ஒன்றிக் கலந்து விடுகிற தன்மை, விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருக்கிறதா என்று பார்!”

“ஆனால் அந்த இப்ராஹீம் அப்படி இருக்கலாம் இல்லையா? ஏன் நாம் மோசமானதை எதிர்பார்க்க வேண்டும்?”

“நிச்சயமாக இப்ராஹீம் நல்லவராகவே, வளைந்து கொடுத்து, நமது சமூகத்தில் கலந்து பழகக் கூடியவராகவே இருக்கட்டும். ஆனால் இதில் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று உறுதி செய்து கொள்ளுகிற முக்கியமான பொறுப்பு உன்னுடையது. நான் முன்பே சொன்னது போல், பெண்கள் உணர்வு பூர்வமான முடிவுகளை ஒரு குறுகியகாலப் பார்வை கொண்டே எடுக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கான ஒரு தீர்வை எடுப்பதில்லை”

“உனக்கு நான் வழிகாட்டத்தான் முடியும். முடிவெடுக்க வேண்டியது நீ மட்டுமே. பல்லாயிரம் ஆண்டு காலமாக சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி வந்த இனத்தில் பிறந்த நீ, அவ்வாறு சகிப்புத்தன்மை எதுவும் காட்டாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தெரிந்தெடுக்க வேண்டுமா என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்”

“அப்படியானால் என்ன சொல்ல வருகிறீர்கள்? அவரைத் திருமணம் செய்தால் நான் ஹிந்துக் கலாசாரத்தை கைகழுவ வேண்டியதுதான். அதோடு என் சுதந்திரத்தையும் இழக்க வேண்டியது வரும் என்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஹிந்துக் கலாசாரம், இசுலாமிய கலாசாரம், அமெரிக்கக் கலாசாரம் என்றெல்லாம் எதுவும் இல்லையம்மா. இரண்டே இரண்டு கலாசாரங்கள்தான் இருக்கின்றன. ஒன்று சரியான கலாசாரம். தவறான கலாசாரம் அவ்வளவுதான். முன்னது காலத்தை ஒட்டி தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருக்கும். பின்னது அப்படி இருக்காது.”

“பெற்றவர்களைக் கடைசிக் காலத்தில் வைத்துக் காப்பது நல்ல கலாசாரம். இதில் அமெரிக்க கலாசாரம் என்று எதுவும் இல்லை. பெற்றவர்களை வைத்துக் காப்பாற்றுகிற அமெரிக்கர்கர்களும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாத இந்தியர்களும் இருக்கிறார்கள். ஆணையும் பெண்ணையும் சமமாக நினைப்பது நல்ல கலாசாரம். அது பைபிளுக்கு விரோதமான கருத்து என்றாலும் ஆணுக்குச் சமமாக பெண்களையும் அமெரிக்கர்கள் நடத்துகிறார்கள். நமது நாட்டிலோ இந்துக்களில் பலர் அவ்வாறு எண்ணுவது இல்லை. போகட்டும், நல்ல கலாசாரம் என்பது பன்முகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். இந்துக் கலாசாரம் அப்படி சகிப்புத்தன்மையுடன் கூடிய பன்முகக் கலாசாரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பெயரைச் சொல்லி அப்பாவிகளைக் கொல்வது தவறான கலாசாரம். மாற்று மதப் பெண்களை விளைநிலமாகப் நினைப்பதும், தன் இனப் பெண்களை மாற்று மதத்தில் திருமணம் செய்யத் தடை விதிப்பதும் தவறான கலாசாரம். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தக் கொள்கையைக் கடைபிடிப்பதால் இது இசுலாமிய கலாசாரம் என்று ஆகிவிடாது.”

“அப்பா நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.”

“யோசி அம்மா, யோசி. நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் தடுக்க மாட்டேன். முடிவு உன்னுடையது. நீண்ட வாழ்நாளுக்கு ஏற்ற ஒரு முடிவை எடு. அந்த முடிவிலிருந்து பின்வாங்க உனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு யோசித்து முடிவு எடு”

உள்ளே நகர்ந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

wedding2‘ஜகதோ தாரண.. அடிசிதளெசோதா..’ இந்த உலகத்தைத் தாங்குகிற பகவான் கிருஷ்ணனுடன் அது எதுவும் தெரியாமலே யசோதை விளையாடினாள் என்ற புரந்தர தாசரின் பாடலை இப்போது சித்ரா பாடிக்கொண்டிருந்தார். பல வருடங்கள் வாழவேண்டிய வாழ்க்கையைக் குறித்து இந்தப் பெண் என்ன முடிவு எடுக்கப் போகிறாளோ என்று நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தது. அவள் நல்ல முடிவு எடுப்பாள். என் பெண் அல்லவா!

-0-

பிரபல மீடியா தளங்களில் லவ் ஜிகாத் குறித்துப் பார்க்க:

DailyMail: இளம்பெண்களை கட்டாய இசுலாமிய மதமாற்றத்திலிருந்து போலீசார் காப்பாற்றினார்

Express News Service: லவ் ஜிகாத்க்கு எதிரான நடவடிக்கை தேவை

Economic times: முஸ்லிம் பையன் – இந்து பெண்கள் திருமணத்தில் விசாரணை

TimesOfIndia: முஸ்லிம் பையன் – இந்து பெண்கள் திருமணத்தில் விசாரணை

DailyPioneer: பெண்களைக் குறிவைக்கும் ஜிகாதிகள்

Express Buzz: காதலிக்க மறுத்த பெண் கத்திக் குத்து

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

bus-with-facilities-for-differently-abledஅமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கவனித்திருக்கலாம்; அங்கே ஒவ்வொரு வளாகத்திலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் ஊனமுற்றவர்களுக்காக என்றே சிறப்பாக இடங்கள் ஒதுக்கி இருப்பார்கள். அவற்றில் வேறு யாராவது நிறுத்தினால் அபராதம் கட்டவேண்டிவரும். பொதுக் கழிவறைகள், பேருந்துகள் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்குத் தனி வசதிகள் உண்டு. இதையெல்லாம் பார்த்து வியந்து இந்த அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்களே, நமது நாட்டில் இது போல இல்லையே என்று எண்ணி வருந்தியது உண்டு. ஊனமுற்றவர் என்ற சொல்லுக்கு Physically Challenged, Physically Disabled என்று கூட சொல்லாமல் இப்போது “Differently abled” என்று மாற்றுத் திறன் கொண்டோர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

நமது நாட்டில் மாற்றுத் திறன் கொண்டவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு. அண்மையில் நடந்த சம்பவம் இது. பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அருகில் சக்கர வண்டியில் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த வழியாக வந்த மற்றொருவர் அவரைக் கண்டு கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை இவர் கையில் எடுத்துப் போட்டார். கையில் திடீரென்று விழுந்த காசைப் பார்த்த இவர் பொங்கி எழுந்து விட்டார். ‘அடப்பாவி, நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை.. நானும் பஸ் ஏறத்தான் வந்தேன். வேண்டுமானால் உனக்கு பத்து ரூபாய் நான் தருகிறேன்,’ என்று கோபப்பட்டார். காசு போட்டவர் மன்னிப்பு கேட்டும் அவரால் பொறுக்க முடியவில்லை. இப்படித்தான் நமது சமூகம் மாற்றுத் திறன் கொண்டவர்களை பரிதாபத்துக்குரியவர்களாகவும், உதவி தேவைப்படுபவர்களாகவும் கருதி தமக்கு சமமான நிலை அளிக்காமல் ஒதுக்கி விடுகிறது.

நமது சமூக எதிரொலிப்பாக திரைப்படங்களிலும் மாற்றுத்childrenwithdifferentabilities திறன் கொண்டவர்களை கதையில் ஒரு சுமையாகவும், பரிதாபமாகவும், சமயத்தில் வில்லத்தனமாகவும் காட்டி ஒரு வித அருவருப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய சூழலில் சாதாரணமாக ஊனம் உள்ளவர் ஆணாக இருந்தாலே அவர் பல இன்னல்களையும், சங்கடங்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஒரு பெண் ஊனமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். அவள் சமூகத்தில் மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் அவளுக்கு திருமணம் என்று வரும்போது உடல் ஊனம் கூட இருக்க வேண்டாம், குள்ளமாகவோ, கருப்பாகவோ இருந்தால் கூட அதையும் ஊனமாக எண்ணி அதிக வரதட்சணை கேட்டவர்கள் உண்டு. இவையெல்லாம் பெருமளவு இப்போது மாறிக் கொண்டு வருகின்றன. இருந்த போதும், நமது சமூகத்தில் மாற்றுத் திறன் கொண்டவர்களின் வாழ்வு மலர்ப்பாதை என்று சொல்லிவிட முடியாது.

பழனி மாம்பழ கவிச்சிங்க நாவலர் என்று ஒரு பெரும்புலவர் இருந்தார். அவருக்கு கண்பார்வை கிடையாது. அவர் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. முருகனின் அருள் பெற்றவர். அவரை சேதுநாட்டு மன்னர்கள் ஆதரித்து வந்தனர். அந்த மன்னர்களின் அரசவைக்கு பாடி பரிசில் பெற மற்றொரு புலவர் ஒருவர் வந்தார். வந்தவர் தாம் நூறு செய்யுள்கள் இயற்றி முதன் முறையாக அரங்கேற்ற வந்திருப்பதாக அறிவித்தார். பின்னர் அவைப் புலவராக அமர்ந்திருந்த நாவலரைக் கண்ட அவர், நாவலர் கண்பார்வை அற்றவர் என்று கண்டு, அவை மங்கலமாக இல்லையே என்று குறிப்பாக நாவலரை வெளியேறுமாறு கூறி அவமதித்தார். அக்காலங்களில் ஊனத்தை அமங்கலம் என்று கருதினார்கள். இப்போது அந்த எண்ணத்தை நினைத்தால் ஒரு விதத்தில் வியப்பாகக் கூட இருக்கும்.

நாவலரும் மறைவாக விலகினார். புலவர், தான் எழுதி வந்த பாடல்களை அரங்கேற்றம் செய்து முடிக்க, நாவலர் வெளியே வந்து இவை அனைத்தும் தான் ஏற்கனவே இயற்றியது என்று கூறி அதிர வைத்தார். தன் அபாரமான ஞாபக சக்தியால் ஒரே ஒரு முறைதான் கேட்டபோதும் பிழையின்றி அந்தப் புலவர் பாடிய அத்தனை பாடல்களையும் பாடினாராம். புலவர் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு பரிசுகள் பெறாமல் திரும்பிப் போக எத்தனிக்கவும், கவிச்சிங்க நாவலர் அவரை மன்னித்து மன்னரிடம் பரிசு பெற்றுக் கொடுத்தாராம்.

peoplewithdifferentabilities1மங்கலம் அமங்கலம் என்று பிரித்து வைத்திருப்பது ஒரு மனோதத்துவ மருத்துவம் என்று கண்ணதாசன் கூறுவார். சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கிடைக்கும் போது மனம் மகிழ்ந்து உடல் சிலிர்க்கும் உணர்வைப் பெறுவது போல், இந்த மங்கல வழக்குகளும் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கின்றன என்று சொல்வார். இதுவரையில் சரி; ஆனால் நல்ல எண்ணத்தை பின்னணியாகக் கொண்ட இது போன்ற செயல்கள் கூட காலப்போக்கில் சமூக வக்கிரங்கள் ஏற்றப்பட்டு, கணவனை இழந்த பெண்ணைக் காண்பது அமங்கலம், ஊனமுற்றவர்களைப் பார்ப்பது கூட அமங்கலம் என்று மாறியது. அந்தணர் தனியாளாக வருவதைக் காண்பதும் அமங்கலம் என்று சொல்வது உண்டு. ஆனால் இது என்னவோ இந்து மதத்துக்குண்டான இழிவு என்று சொல்வதற்கில்லை.

ஏனெனில் இந்து மதத்தில் ஊனத்தை ஒரு ஒதுக்கக்கூடிய விஷயமாகவே கருதியதில்லை. சனாதன தருமத்தை நீரூற்றி வளர்த்த பெரியவர்கள், ரிஷிகள், ஏன் சில தெய்வங்கள் கூட, உடலில் ஊனம் உடையவர்களாக இருக்கிறார்கள். கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர். கண்ணனைக் காதலித்த பெண்களில் ஊனமுற்ற பெண்ணும் இருந்திருக்கிறாள். ஊனமுற்றவர்களை விலக்கி வைக்காமல் சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல அவரவருக்குரிய பங்கை அளித்து வருவதையே இந்து மத இதிகாச புராணங்கள் பதிவு செய்துள்ளதை இச்சம்பவங்கள் மூலம் அறியலாம்.

பின் ஏன் ஊனத்தை அமங்கலம் என்று எண்ணக்கூடியpeoplewithdifferentabilities3 அளவுக்கு நேரிட்டது? இதற்குப் பின்னுள்ள சமூகப் பின்புலங்களை சற்று விரிவாகத்தான் அலச வேண்டும். கூட்டாக வாழ்வதே பழைய நாள்களில் பெரும்பான்மையாக இருந்த குடும்ப அமைப்பு. அதில் சொந்தத் தாய் தந்தையர் மட்டும் அல்லாது சின்ன தாத்தா, பெரிய அத்தை என்று தூரத்து உறவினர்களைக் கூட வைத்து சம்ரட்சிப்பது தருமம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். மாற்றுத் திறன் கொண்டவர்களும் விதிவிலக்கல்ல. அவர்களையும் அரவணைத்து குடும்பத்தில் அவருக்கு அதிக கஷ்டம் தெரியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அந்நியப் படையெடுப்புகள், சுரண்டல்கள், கொள்ளைகளினால் வளம் குன்றி தனிப்பட்ட வாழ்க்கையைத் தள்ளுவதே பெரிய கஷ்டம் என்று ஆனபின் எல்லா தருமங்களும் உதிர்ந்து போக பல குறுகிய மனப்பான்மைகளும், சுயநலமும் சேர்ந்து பல மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டன. இதன் நீட்சியாகவே குழந்தைத் திருமணம், சதி போன்ற கொடும் பாதகமான செயல்கள், சமூக சுயநலங்கள் நடைமுறை ஆகி, அது பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வந்த இந்து மதத்தின் மீது சுமத்தப் பட்டு, பரந்த நோக்குள்ள கொள்கைகள் எவ்வளவோ இருந்தும் மூடநம்பிக்கைகளும் இந்து மதக் கொள்கைகளாகப் பரிணமித்து விட்டன.

நமது இன்றைய காலகட்டத்தில் நாம் கண்கூடாக எத்தனையோ முதியோர் இல்லங்கள் பெருகி வருவதைக் காணவில்லையா.. வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களின் விளைவுதானே இப்படி பெற்றவர்களையே சுமையாக எண்ண வைத்திருக்கிறது. இதை யாரும் பாவம் என்று நினைக்காத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நூறு வருடங்களில் வயதான பெற்றோர்களை தள்ளி வைப்பது புனிதச் செயலாகவும் மதக் கொள்கையாகவும் கூட மாறக்கூடும். இப்படித்தான் அந்தந்த காலகட்டத்தின் சமூக மதிப்பீடுகள் மதக்கொள்கைகளாக மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறே ஊனத்தையும் அமங்கலம் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.

இக்காலத்தில் இவை அனைத்தும் முற்றிலும் மாறா விட்டாலும் ஊனமுற்றோர் குறித்த சமூகத்தின் பார்வை பெருமளவு மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. இப்போது அவ்வாறு அமங்கலம் என்று நினைப்பதை சாதாரணக் கருத்தாகக் கூட யாரும் நினைப்பதில்லை. இது போன்ற பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போதும் நகைப்புக்கு உரியதாகத்தான் எண்ணுவோம். இந்து மதம் இப்படி எத்தனையோ மூட நம்பிக்கைகளையும் சீர் திருத்தங்களையும் விலக்கியும் ஏற்றும் கடந்து வந்திருக்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் செய்ததை, சொன்னதை இன்னமும் அப்படியே அமுல்படுத்தத் துடிக்கும் ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பு நோக்கும்போது இந்து மதமே மாற்றத்தை ஏற்றுக் கொள்கிற முற்போக்கான மதம் என்பதில் ஐயமில்லை.

healing-touchஇதற்கு நேர்மாறாக முற்போக்கு முகமூடி அணிந்த கிறிஸ்தவ மதத்தில் நடப்பதைச் சொன்னால் மேலும் நகைப்புதான் எழும். எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெளிநாட்டுப் பண உதவியுடன் களமிறங்குகிற மிஷனரிகள் மாற்றுத் திறன் கொண்டவர்களையும் வைத்து ஒரு கூத்து நடத்துகிறார்கள். பிறவி ஊனம் உள்ளவர்களைக் குணப்படுத்துகிறேன், நடக்க முடியாதவர் நடப்பார், குருடர் பார்வை பெறுவார், வாய் பேச முடியாதவர் பேசுவார் என்று போலி உத்திரவாதங்களை அள்ளிவிட்டு, அப்பாவி மக்களை மிஷனரிகள் ஏமாற்றி மதம் மாற்றுகிறார்கள். சாதாரண மக்களும் இவர்கள் வலையில் விழுந்து மதம்மாறுகிறார்கள். தமது குறை தீராத போது, அந்த மக்களுக்குப் போதுமான நம்பிக்கை இல்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளுகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்க முயன்றால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடு என்று திரிக்கப்படும் என்று எண்ணி நடவடிக்கை எடுக்க யாரும் துணிவதில்லை.

மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையேhealing-touch2 இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான். கிறிஸ்தவத்தில் இது போல ஏதாவது மிராக்கிள் — அற்புதங்கள் செய்தால்தான் செய்பவரை ‘புனிதராக’ ஏற்றுக்கொள்வார்கள். அன்னை தெரேசா இப்படி எதுவும் செய்ததாகத் தெரியாவிட்டாலும் அவருக்கு புனிதர் என மரியாதை கிடைப்பதற்காகவே, ஒருவருக்கு கருப்பை புற்று நோயை அவர் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தினார் என்று கதைகட்டப் பட்டது. அப்படியும் புனிதர் என்ற பட்டம் பெற குறைந்தது இரண்டு அற்புதங்களாவது செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை கிறிஸ்தவ தலைமை விதிக்க, அப்படி இரண்டாவது அற்புதம் எதுவும் அன்னை தேரேசாவால் நடக்காமல் போனதால், ‘அர்ச்சிக்கப் பட்டவர்’ என்கிற பட்டம் மட்டுமே கிடைத்தது.

இப்படி இன்றைய நவீனமான காலத்திலும் இன்னமும் அற்புதங்கள் நிகழ்த்துவதன் மூலம் உடல் ஊனங்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் மிகவும் முற்போக்கான மதம் என்று எல்லோரையும் நம்ப வைக்கிறார்கள். சில நாள்கள் முன்பு ஆனந்த விகடன், சாமியார்கள் ஸ்பெசல் என்று இணைப்பிதழ் ஒன்று வெளியிட்டார்கள். கிளுகிளுப்புக்காக பலான சாமியார்கள் பற்றிச் செய்தி வந்ததே தவிர, இந்த பாதிரி சாமிகளைப் பற்றி ஒரு வரி கூட இல்லை. போலிச் சாமியார்களில் பாதிரியார்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். ஆனால் விகடன் போன்ற பத்திரிகைகள் ஏனோ கண்டும் காணாமல் இருக்கின்றன.

மாற்றுத் திறன் கொண்டவர்களுக்குத் தேவை நம்முடைய இரக்கம் இல்லை. சமூகத்தில் மற்றவர்களுக்கு ஈடான மரியாதையும் இடமும்தான் அவர்களுக்குத் தேவை. அதை விடுத்து அவர்களைப் பிரித்து வைப்பதோ, சந்தையாக நினைத்து மத வியாபாரம் செய்வதோ மிகவும் கீழ்த்தரமான செயல்.