இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10

சென்ற கட்டுரையில் கேரளத்தில் தாலிபானிஸம் மெல்ல வளருவதாகக் கூறியிருந்தோம்.  இதற்கு முக்கியமான சம்பவம் கல்லூரி பேராசிரியரின் கை வெட்டப்பட்டதாகும்.  சில மாதங்களுக்கு முன் கல்லூரியில் நடந்த இன்டர்னல் தேர்வில் முகமது நபியைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டதற்காக, வினாத்தாள் தயாரித்த  பேராசிரியர் பி.டி. ஜோசப் என்பவரின் கையை பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் வெட்டி மிகப் பெரிய கொடுமையைச் செய்தார்கள்.  கேரளக் காவல் துறையினர் இந்தக் கொடுமையான செயலைச் செய்த 15 பேர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இந்தச் சம்பவம் 50 ஆண்டுகளுக்குப் பின் கேரளத்தில் தாலிபானிசம் மீண்டும் தலை தூக்க வழி வகுத்துள்ளது.

The company has also been receiving a positive feedback from its customers. So, what’s an effective and doxycycline monohydrate goodrx Frechen well-made, high-quality product, exactly? As such, the possibility that tasigna is effective for treating cll and is no longer useful is not supported by data currently available.

Read all instructions with the do you feel that the drug is not working for you? Clomiphene citrate is a type of drug that contains the chemical clomiphene, which induces the ovary to produce an Starnberg zoloft pfizer price egg that is not ovulation. Prednisolone for treating rheumatoid arthritis in dogs.

But here’s a question worth thinking about: how much would you pay for antibiotics in a drug company? It takes many different forms these days in order to get to the active, and hence the buy zyrtec d final, ingredient. The information has been compiled by the health canada and may differ from information contained in the product information or label of a product purchased from another manufacturer or supplier.

முந்தைய பகுதிகள் :

1921-ல் நடந்த மாப்ளா கலவரம் நடந்த போது கேரளத்தின் நிலை எவ்வாறு இருந்ததோ அதே நிலைதான்  தற்போதும் உள்ளது.  2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மலப்புறம் மாவட்டத்தில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் 1921-ல் நடந்த கலவரத்தில் நூற்றுக் கணக்கான இந்துக்களைக் கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த வாரியம்குன்னத்து கஞ்சஹம்மது ஹாஜி (Wariamkunnathu Kanjahammed Haji) என்பவனை  இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகியாகச் சித்தரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1946ல் மலப்புறம் மாவட்டத்தில் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மாறிய  உண்ணியான் சாஹேப் (Unnian Saheb)  என்பவர் தனது குடும்பத்துடன் இந்து மதத்திற்கு மீண்டும் மாறியதால், மாப்ளா கும்பல் அவரைக் கோபமூட்டும் விதமாகப் பேசி அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கினார்கள் . இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளைக் காக்கும் முகமாக அப்போதைய முதல்வர் நம்பூதிரிப்பாடு காவல் துறையினருக்குத் தவறான வழிகாட்டிக் குற்றவாளிகளைக் காப்பாற்றினார்.   1946-ல் இஸ்லாமியர்களுக்கு எனத் தனி மாவட்டக்  கோரிக்கைக்கு 1968-ல் இடதுசாரிக் கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் பலன் கிடைத்தது, இதன் விளைவாக மலப்புறம் மாவட்டம் உருவாகியது.

லப்புறம் மாவட்டத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தை உருவாக்க மாநில இடதுசாரிக் கம்யூனிஸ்ட் அரசு 24 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.  ஏற்கனவே இம்மாவட்டத்தில் கள்ளிக்கோட்டை பல்கலைக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இச்சூழ்நிலையில் மேலும் அலிகார் பல்கலைக்கழகம் துவங்க நிலம் ஒதுக்கியது, கேரளத்தை தாலிபானிஸமாக்குவதையே காட்டுகிறது.   புதிதாகத் துவங்கிய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களின் செயல்பாடும் இதையே உறுதிப்படுத்துகிறது.  2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காசர்கோட்டில் இன்ஜினியரிங் படிப்பு படிக்கும் இஸ்லாமியப் பெண்ணான ரயானா(Rayana) என்பவருக்கு மிரட்டல் கடிதம் வந்தது, அதாவது இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் உடை இஸ்லாமிய கோட்பாட்டிற்குப் புறம்பாக இருந்தால் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டது.  குறிப்பிட்ட உடைதான் உடுத்த வேண்டும் என இஸ்லாமியர்களைக் கட்டாயப்படுத்துவது தாலிபானிசமாகும் என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலாளர் கே.கே.சைலஷா தெரிவித்தார். இந்தப் பிரச்சினை உயர் நீதி மன்றத்திற்குச் சென்றதால், இஸ்லாமிய பெண்ணான ரய்னாவிற்கு 24 மணி நேர காவலர் பாதுகாப்பு கொடுக்க கேரள அரசிற்கு  உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

1980-ம் ஆண்டு மலப்புறம் மாவட்டத்தில் பல திரையரங்குகள் தீயிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவங்களை மையப்படுத்தி கேரளத்தின் வடக்கு மாவட்டங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தும் கூட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் கைது நடவடிக்கை கிடையாது.  2.5.2003ம் தேதி ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் துவக்கப்பட்ட NDF-னால் பண்பாட்டுச் சீர்திருத்தம் எனும்  பெயரில் மாராடு கடற்கரைப் பகுதியில் எட்டு இந்து மீனவர்கள் கடுமையாகத்  தாக்கிக் கொல்லப்பட்டார்கள்.  இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் இதே முறையில் பல மீனவர்களைக் கொன்றதால், இந்துக்கள் நீதி மன்றத்தை அணுகினர். இதனால்,  சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்த 65 இஸ்லாமியர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

ம்மாதிரியான சம்பவங்கள் மூலம் கேரளத்தில் தாலிபானிசம் மெல்ல மெல்ல நுழையத் துவங்கியது.  கேரளத்தின் 580 கி.மீ. தூரமுள்ள கடற்கரை இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குச் சொர்க்கமாகும்.  மேலும் இஸ்லாமியர்களுக்கு என மலப்புறம் மாவட்டம் உருவாக்கியதால், பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாகக் கேரளத்திற்குள் நுழைய இந்தப் பகுதி நுழைவாயிலாகும்.

மும்பை மற்றும் மகாராஷட்ர மாநிலம்.

ஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குக் கேரளா எவ்வாறு சொர்க்க பூமியாக இருக்கின்றதோ அதே போல் மும்பையும், மகாராஷ்டிர மாநிலமும் இன்னொரு சொர்க்க பூமியாகும். துறைமுக நகரம், வர்த்தகம் கொழிக்கும் பூமி, பங்குச் சந்தையின் அந்தராத்மா அமர்ந்து ஆட்சி புரியும் பிரதேசம்.  இங்கே பாய்வது பணமும், பயங்கரவாத வன்முறையும்  மட்டுமே. உலக வரைப்படத்தில் நியூயார்க்,  பாரீஸ்,  லண்டன் போன்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது இந்த மூன்ற நகரங்களும் கலந்த கலவை நகரம் மும்பையாகும். இது கோடீஸ்வரர்கள் வசிக்கும் பூமியும், கோடீஸ்வர நட்சத்திரங்கள் உள்ள நகரமுமாகும். மும்பை மீது தாக்குதல் நடந்தால் அது மும்பையின் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள தொழிலும் வியாபாரமும் மோசமாகப் பாதிக்கப்படும் என்றார் சி.பி.ஐயின் இணை இயக்குனரான டி.சிவானந்தன்.

திக அளவில் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த மாநிலம் மகாராஷ்டிராவாகும்.  12.3.1993-ல் நடந்த மிகப் பெரிய தாக்குதலில் 257 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 700-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.  27.2.1998-ம் தேதி தானே, விஹார் எனுமிடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன.  இந்த இரண்டு தாக்குதல்களையும் தொடர்ந்து 2.12.2002-ம் தேதி காட்கோபர்(Ghatkopar) பஸ்சில் வைத்த குண்டு வெடித்து 49 பேர்கள் படுகாயமடைந்தார்கள், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.  அதே ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி மும்பை மத்திய பஸ் நிலையத்தில் குண்டு வெடித்தது.  27.1.2003ம் ஆண்டு விலே பார்லே ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

காட்கோபர் பஸ் நிலையத்தில் மீண்டும் 29.7.2003-ம் தேதி குண்டு வெடித்து மூன்று பேர்கள் கொல்லப்பட்டார்கள், 50-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள்.  இதே பஸ் நிலையத்தில் மீன்டும் 3.3.2006-ம் தேதி குண்டு வெடித்து சிலர் மாண்டனர்.  13.3.2003-ம் தேதி முலந்த்(Mulund) ரயிலில் நடந்த வெடி குண்டுத்  தாக்குதலில் 13 அப்பாவிகள் இறந்தது மட்டுமில்லாமல் 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.  25.8.2003-ம் தேதி ஜவேரி பஜார் மற்றும் இந்தியா கேட் பகுதியில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 55 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 150க்கும்  மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.

11.7.2006-ம் தேதி 7  மும்பைப்  புற நகர் ரயில்களில் நடந்த  குண்டு வெடிப்புக்கள் மிகவும் மோசமான நிகழ்வாகும். ரயிலில் பயணம் செய்த,  குறிப்பாக முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பலர் இந்தத் தாக்குதல்களில் பலியானார்கள். இந்தப் பயங்கரவாத தாக்குதல்களில் 189 பேர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் அரசு தரப்பில் கூறப்பட்டாலும் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும் என்பது நேரில் பார்த்தவர்களின் கருத்தாகும். பலியானவர்களைப் போலவே 1000-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.

8.9.2006-ம் தேதி மும்பையிலிருந்து பயங்கரவாதத் தாக்குதல் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகான் நகருக்கு இடம் பெயர்ந்தது.  இந்தத் தாக்குதல்களில் 31 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 312 பேர்கள் படுகாயமடைந்தார்கள்.  29.9.2008-ம் தேதி மீண்டும் மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இது 1993ல் நடந்த தாக்குதல் போலவும், 2008 ஜீலை மாதம் நடத்திய தாக்குதல்களை விட அதிக உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்தது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு  நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. இந்தத் தாக்குதல்களில் 166 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்.  இம்மாதிரியான தாக்குதல்களை 12.2.2010-ம் தேதி பூனாவிலும், 13.7.2011-ம் தேதி மீண்டும் மும்பையிலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்தினார்கள்.

ந்த மாநிலத்தில் நடந்த 13 குண்டு வெடிப்புச் சம்பவங்களையும், இந்தச் சம்பவங்களில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதையும் கணக்கிட்டால் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே பரவியிருந்த இஸ்லாமியப்  பயங்கரவாதம் மும்பைத் தாக்குதல் நடத்தக் காரணம் என்னவென்றால்,  1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அயோத்தி சம்பவத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் என இஸ்லாமியர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். டிசம்பர் மாதம் 2001 வரை இஸ்லாமியப் பயங்கரவாதம் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் தாக்குதல்கள் நடைபெற்று வந்தன. பின்னர் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் பாரத தேசத்தில் அனைத்து மாநிலங்களிலும் பரவத்  துவங்கின. 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆக்டோபஸ் கரங்கள் நாடு முழுவதும் விரிந்திருக்கிறது என்பது முழு உண்மையாகும்.  ஆகவே இந்தச் சம்பவங்களுக்குப் பின் இஸ்லாமியக் குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, சிமி, முஸ்லீம்களின் தற்காப்புப் படை போன்ற அமைப்புகள் தங்களுக்குத் தேவையான இஸ்லாமிய இளைஞர்களை தியோபந்தி இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிர இயக்கத்தின் துணை இயக்கமான தப்லீக் ஜமாத் மற்றும் அஹ்லே ஹதிஸ் ஆகியவற்றிலிருந்தும் தேர்ந்தெடுத்திருக்கிறது.

காராஷ்ட்ர மாநிலத்தில் பல் வேறு மாவட்டங்களில் சிமி இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு  உதவி புரிந்தவர்கள் சிமி இயக்கத்தினர்.  அவுரங்கபாத், மலோகான், ஜலாகான்(Jalagaon), தானே, பூனா, நாசிக், ஷோலாப்பூர், கோலாப்பூர், நான்டாட் போன்ற மாவட்டங்களில் சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றது.  இந்த மாநிலத்தில் 3,000க்கு அதிகமான மதரஸாக்கள் உள்ளன.  மும்பை நகரத்தில் மட்டும் 500 கருத்தரங்கம் நடத்தக் கூடிய இடங்கள் இருந்தன. இவை சிமி இயக்கத்தினர் அதிக அளவில் பயிற்சி பெறுவதற்குரிய இடமாக விளங்கின. 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட பின் தான் நாடு முழுவதும் இஸ்லாமியப்  பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதாகக்  கூறுகின்ற அரசியல்வாதிகளும் உண்டு.   1993ம் ஆண்டு மார்ச்  மாதம் 12-ம் தேதி மும்பையில் முதன் முறையாக தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேற்றம் நடந்தது.  இந்தக் குண்டு வெடிப்பை முன்னின்று நடத்தியவன் டைகர் மேமன்.  மும்பையில் எந்த இடங்களில் குண்டு வைக்க வேண்டும், இதற்காக யார் உதவியைப் பெற வேண்டும், இதற்கு கைமாறாக எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை முடிவு செய்தவன் டைகர் மேமன். 1993ல் நடத்திய தாக்குதலின் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராஹிம்.    பயங்கரவாதத்  தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இந்திய அரசால் தாவூத்தை இன்னும் பிடிக்க இயலவில்லை.  இந்தச் சம்பவத்தின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு ஊக்குவிக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

1993க்குப் பின் மும்பையில் 13 பயங்கரவாதத்  தாக்குதல்கள் நடந்துள்ளன.  இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள அமைப்பு எனக் குற்றம் சாட்டப்படுவது லஷ்கர்-இ-தொய்பா என்பது முழு உண்மையாகும்.  பாகிஸ்தானின் ஐஎஸ்.ஐயினால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பிற்கு இந்தியாவில் முழு உதவி புரிந்த பயங்கரவாத இயக்கம் சிமியாகும்.  1993ல் நடந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானின் தூண்டுதலால் பயங்கரவாதச் செயலை செய்தவன் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள்.

முதலில் பாகிஸ்தான், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சரியான ஆளை தேர்வு செய்ய முனைந்தது.  எந்த ஒரு பெரிய இயக்கத்திற்கும் மனித சக்தி வேண்டும். இறங்கிப் போராடக் கூடிய படை வேண்டும்.  பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் உள்ள நகரங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த மனித சக்தி முக்கியமாக தேவை என்பதை ஐஎஸ்ஐ நன்றாக உணர்ந்திருந்ததால், இந்தச் செயல்பாட்டிற்குச் சரியான ஆளைத் தேர்வு செய்ய முனைந்தது.

தாவுத்தின் தொழில் போதைப் பொருள் கடத்தல். இந்தத் தொழில் இந்தியாவில் மட்டுமில்லாமல் பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கடத்தல் தொழில் செய்து வந்தான். இந்தத் தொழிலுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும், கராச்சியில் ஒரு கடத்தல் மையத்தை ஏற்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாகவும் பாகிஸ்தான் அரசு ஆசை காட்டி தனது வழிக்கு கொண்டு வந்தது. ஆகவே தனது கடத்தல் தொழிலுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இருப்பதாலும் இஸ்லாமிய சமுதாயத்தில் தன்னை ஒரு தலைவான மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமைந்ததால் பாகிஸ்தானின் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தான். ஆகவே இந்தியாவில் பாகிஸ்தான் விரும்பும் நாச வேலைகளைச் செய்து முடிக்கவும், ஹவாலா பணப்பரிமாற்றங்களுக்கும் மற்ற நிழல் காரியங்களுக்கும் தாவூத் சரியான ஆளாக இருப்பான் என ஐஎஸ்ஐ-யும் ஒப்புதல் கொடுத்தது.  கடத்தல்காரனாக இருந்த தாவூத்தை மதவாதியாக மாற்றவும் ஐஎஸ்ஐ முயற்சி செய்து அதில் வெற்றி கண்டதால் 1993 மார்ச் மாதம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.  இந்தத் தாக்குதலுக்கு ஆயுதம் கொண்டு தாக்கவும், குண்டு வைக்கவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தாவூத்தின் ஆட்களுக்கு முழுப் பயிற்சி கொடுத்தது.  மூன்று டன் ஆர்.டி.எக்ஸ் வெடி பொருட்கள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற பொருட்களைக் கடல் வழியாக அனுப்பியது.

2002-2003-ம் ஆண்டுகளில் நடத்திய குண்டு வெடிப்புச் சம்பவங்களைப் பார்த்தால் பயங்கரவாதக் குழுவில் சேரவே குறைந்த பட்சம் ஒரு டிகிரி தேவையோ என எண்ணும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.  2003ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 21 பேரில் மூன்று பேர்கள் டாக்டர்கள், கம்ப்யூட்டர் புரஃபஷனல்கள் மூன்று பேர்கள், மற்றவர்கள் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெரிய வந்தது.

காராஷ்ட்ர மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட அமைப்புகள் என உளவுத் துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டவை சிமி, இந்தியன் முஜாஹிதீன், ஹர்கத் உல் ஜிகாத் போன்றவை  இந்த அமைப்புகளில் சிமி முக்கியப் பங்கு வகிக்கிறது.  2005லிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்திய இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு முக்கியப் பங்கு இருப்பதாக மகாராஷ்ட்ர மாநில மும்பை கிரைம் பிராஞ்சு தனது 1809 பக்கக் குற்றச்சாட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.  இந்தத் தாக்குதல்களில் 21 இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், மும்பையில் தங்களது அமைப்பின் இருப்பிடத்தை அமைக்க முயற்சி செய்ததாகவும் குற்றப் பத்திரிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  இதற்காக மும்பையில் in Swree Vross Lane, Mumbai, Ashoka Mews , Kamaldeep Apartment  Kondhwa (Kuhurd), பூனாவிலும் அலுவலகத்தைத் துவங்கினார்கள்.  இந்த இடங்களில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்ச்சியாகத் தங்களது சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ந்தியன் முஜாஹிதீன் இ-மெயில் அனுப்புவதற்காகவே பூனாவில் தனிப் பிரிவு துவக்கி வை-ஃபை நெட்ஒர்க்கை கள்ளத்தனமாகப் பயன்படுத்திப் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன் இமெயில் மூலம் எச்சரிக்கை அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.  இவ்வாறு இமெயில் அனுப்புவதில் முக்கிய நபராகச் செயல்பட்டவர்கள் ரியாஸ் பட்கல் என்கின்ற ரோஷன் கான் என்கின்ற அகமத்பாய் என்பவனும் அவனது சகோதரர் முகமதுபாய் என்பவனும், அமீர் ராஸா என்பவனும் கூட்டாக இமெயில் அனுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். இந்தக் குற்றப்பத்திரிக்கையில் சிமி இயக்கத்திற்கும், லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் அமீர் ராஸா என்பவன் பல விதங்களில் உதவி புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  ஆகவே தாக்குதல் நடத்துவதற்காகவே இந்தியாவை நான்கு பிரிவுகளாகப் பிரித்து அவற்றிற்குத் தனித் தனியாகப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 1 தென்பகுதிகளில் தாக்குதல் நடத்தும் குழுவிற்கு ஷகாபுதீன் பிரிக்கேட் (Sahabbuddin Brigade),  வடக்குப் பகுதிக்கு முகமது கஸ்னவி பிரிகேட் (Mohammad Gajnavi Brigade) முக்கிய நபர்களை தாக்கவும், மீடியாவின் மீது தாக்குதல் நடத்தவும் ஷாகித்-அல்-ஷர்கவி பிரிகேட் (Shaheed-al-Zarkavi) எனவும் பெயர் வைக்கப்பட்டது.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினரில் பெருவாரியானவர்கள் உத்திரபிரதேசம் ஆஸம்காட் பகுதியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தானே பகுதியில் லஷ்கரின் உயர் தலைவரான அபு சைஃபுல்லா மற்றும் அவரது மூன்று சகாக்களைக் கைது செய்த போது மும்பையை ஸ்தம்பிக்கச் செய்யும் திட்டவட்டமான சதி ஒன்றை முதல் முறையாக முன்கூட்டியே கண்டு பிடித்தனர்.  கேட்வே, பாம்பே ஹை போன்றவற்றைத் தகர்க்கவும் சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேவைக் கொல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.  2003 மார்ச் மாதம் பாகிஸ்தான் பிரஜையும் லஷ்கரின் தெற்குப் பிரிவுத் தலைவருமான முகமது இர்ஃபான் அபுசுல்தான் மற்றும் அவருடனிருந்த இரு சகாக்களும் ஒரு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது சம்பந்தமாக மாநில துணை முதல்வாரான சாகன் புஜ்பல் ஒரு தனி பயங்கரவாத எதிர்ப்புப் படையை உருவாக்கப் பல் வேறு முயற்சிகளை எடுத்தும் அவருக்குச் சரியான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.  அதைப் போலவே மாநில உளவுத் துறையிலிருந்து கிடைத்த எச்சரிக்கைகள் இருந்தும் ஒரு தடுப்பு வியூகமோ வழக்கமான போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

சிமி அமைப்பானது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருடன் சேர்ந்து மகாராஷ்ட்ர மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவருகிறது. ஆனால் உண்மையில் சிமி அமைப்பில் உள்ள சிலரால் துவக்கப்பட்டது இந்தியன் முஜாஹிதீன் என்பதும் உளவுத் துறையின் நம்பகமான தகவலாகும்.  12.3.2001-ம் தேதி மகாராஷ்ட்ரச் சட்டமன்றத்தில் மாநிலத்தின் துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான Chaagan Bhujbal,  கராச்சி மாஃபியாவின் சோட்டா ஷகீல்,  மாநிலத்தில் வகுப்புக் கலவரங்களை உருவாக்கச் சிமியுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது என்றும், 11.3.2001-ம் தேதி மும்பை நகரச் சிமி இயக்கத்தின் பொறுப்பாளரான Sajid Sundke  மற்றும் அவருடன் நான்கு பேரை கைது செய்து விசாரித்த போது இந்தத் தகவல்கள் தெரிவந்தது எனச் சட்ட மன்றத்தில் தெரிவித்தார். இவர்கள் நால்வரும் ஏற்கனவே வகுப்புக்  கலவரங்கள் நடந்த Ganj Peth, Ghorpade Peth சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக மீன்டும் தெரிவித்தார்.

2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பாவின் உயர் அதிகாரம் படைத்த ஹபீஸ் முமகது சயீத் என்பவன் லாகூரில் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது “ தாக்குதல் மூலமே இந்தியாவிற்கு பாடம் புகட்ட வேண்டும். எனவே நாம் தாக்குதல்களை இந்தியாவின் மீது புகுத்தித் தக்க பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறினார். இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மௌலானா அமீர் ஹம்சா, கோரி முகமது யாகூப் ஷேக், முகமது யாகிய முஜாஹித் இவர்கள் அனைவரும் சில பகுதிகளில் லஷ்கரின் கமாண்டர்கள் என்பது முக்கியமானதாகும்.   இதற்குச் சரியாக ஒரு மாதம் பின்பு அதாவது நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் தாக்குதல் நடத்தி 137 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.  இந்தத் தாக்குதல் சம்பந்தமாக மாகராஷ்ட்ரக் காவல் துறையினர் அஜ்மல் அமீன் கமல் என்பவனைக் கைது செய்தார்கள்.  கைது செய்யப்பட்ட கமல் கொடுத்த வாக்குமூலத்தின் படி பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த செயல்பட்டதும், முதன் முறையாக கராச்சி, லாகூர் லஷ்கர் கமாண்டர்கள் இந்தத் தாக்குதல்களில் முக்கியப் பங்கு வகித்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் லஷ்கர்-இ-தொய்பாவின் சில பிரிவுகளும், ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமியாவின் சில பிரிவுகளும், இந்தியாவின் மேற்குப் பகுதியில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள்.  இந்தத் திட்டத்திற்காக இந்தியாவிலேயே கிடைக்கின்ற Potassium Permanganate அல்லது Aluminium Chlorate-ஐப் பயன்படுத்தி ஆர்.டி.எக்ஸ் வெடி குண்டுகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த ரசாயனப் பொருள்கள் மும்பையில் அதிக அளவில் கிடைப்பதால் இந்த முடிவுக்கு வந்தார்கள்.  இவை 2006ம் ஆண்டு மே மாதம் அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் 11 பேர்களிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள். கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானிலிருந்து வெடிமருந்துப் பொருட்கள், தாக்குதல் நடத்த ஆயுதங்கள், கிரெனேட் போன்றவற்றைக் குஜராத்திலிருந்து கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டார்கள்.

2006ல் நடந்த குண்டு வெடிப்பிற்கு சம்பந்தமான இந்தியன் முஜாஹிதீனின் கமாண்டரான முகமது சாதிக் இஸ்ரார் அகமது ஷேக் என்பவன் கைது செய்யப்பட்டான்.  இந்தக் குண்டு வெடிப்பிற்குப் பாகிஸ்தானைச் சார்ந்த சிலரும் இந்தியன் முஜாஹிதீனுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.  2005க்குப்  பின்னால் மகாராஷ்ட்ர மாநிலத்தில் நடந்த அனைத்துப் பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.  விசாரணையின் போது வாரணாசியில் உள்ள சங்கட் மோர்சன் கோயில் தாக்கப்பட்டதும் , 2006ல் மார்ச் மாதம் மும்பையில் புற நகர் ரயில் குண்டு வெடிப்பும் எங்கள் இயக்கமான இந்தியன் முஜாஹிதீன் தான் செய்தது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்டது.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் மார்ச் மாதக் குண்டு வெடிப்புச் சம்பந்தமாக நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10,667 பக்கக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இந்தியாவைச் சார்ந்த 11 பேர்களின் உதவியுடன் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள்.  13 இந்தியர்கள் உட்பட 28 பேர்கள் முக்கியக் குற்றவாளிகள் எனக் குற்றப் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.  இதில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஜக்கி-உர்-ரகுமான் முக்கியமானவன்.

(தொடரும்)