அக்பர் என்னும் கயவன் – 18

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

You have to know the drug’s brand name, and the strength. Ivermectin for Bílina humans with a prescription drugs in india. It does not make you feel better but you may just feel a lot worse.

It is used to treat and prevent hormone related anemia. The review also reviews the safety and efficacy clomid for sale near me Ipameri of the newer therapies. The eye drops in the market that are safe and effective for eye problems.

If you visit the pharmacy on daily basis, you can save your money. If after taking the drug one suffers from side effects like itching, Aguilares azicip 500 tablet price burning, and nausea then he has to stop taking the. Your doctor can recommend a drug that is less likely to have any negative side effects.

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பர் கலைகளையும், இலக்கியங்களையும் ஆதரித்த சிறந்த அரசர் என நமது வரலாற்று நூல்கள் கூக்குரலிடுகின்றன. அதனையெல்லாம் விடவும் அக்பரின் அவையை அலங்கரித்த அற்புதமான ஒன்பது “நவரத்தினங்கள்” அவரது புகழைப் பறைசாற்றுவதாக இருப்பதாக நம்மையெல்லாம் நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் அதற்கு முற்றிலும் எதிரான உண்மைகளைச் சொல்லுகின்றன. அந்த “நவரத்தினங்கள்” அத்தனைபேரும் ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமற்ற, அக்பரை முகஸ்துதி செய்து பிழைக்கிற கைக்கூலிகள் என்பதே உண்மை.

வெளித் தோற்றத்திற்கு அக்பர் அவர்களை மதிப்பது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர்களை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை. “அல்லாவின் கருணையால் எனக்கு ஒரு நல்ல மந்திரி கூடக் கிட்டவில்லை. அப்படி இருந்திருந்தால் ஜனங்கள் நான் செய்வதனையெல்லாம் அவர்கள் சொல்லித்தான் செய்வதாக நினைத்திருப்பார்கள்” என்றார் அக்பர். அக்பரை வானளாவாகப் புகழ்ந்து பொய்யுரைகளை எழுதி வைத்த அபுல் ஃபசல் அக்பரின் நவரத்தினங்களில் ஒருவர் என்பதனை நினைக்கும் போது மற்ற ரத்தினங்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதினை நாம் எளிதாக யூகிக்கலாம். இந்திய வரலாற்றாசிரியர்கள் பீற்றிக் கொள்வது போல அவர்களில் ஒருவருக்குக் கூட அறிவோ, ஆற்றலோ இருந்ததில்லை.

அக்பரின் அரசவையை அலங்கரித்த நவரத்தினங்கள், அபுல் ஃபசல், அபுல் ஃபய்சி, தோடர்மல், மான்சிங், மிர்ஸா அஸிஸ் கோகா, அப்துல் ரஹிம்கான் கானா, பிர்பால், தான்சென் மற்றும் ஹக்கிம் ஹுமாம் என ஒன்பது பேர்கள் ஆவார்கள். ஏற்கனவே சொன்னபடி அக்பருக்கு இவர்கள் ஒருவர் மீதும் மரியாதை எதுவும் இருந்ததில்லை. ரத்தினங்களில் யாரேனும் இறந்த பிறகு அவர்களுக்கான நினைவிடங்களைக் கூட அக்பர் கட்டவில்லை. அதனையும் விட அவர்கள் இறந்தபிறகு அவர்களைக் குறித்து அக்பர் எங்குமே நல்லவிதமாக ஒரே ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்பதினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. அபுல் ஃபசல்

1551-ஆம் வருடம் பிறந்த அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல் ஃபசல் அல்லாமி, ஷேக் முபாரக் என்பவரின் மகன். அவருக்கும் அக்பரின் மகனான ஜஹாங்கீருக்கும் ஒத்து வரவில்லை. ஜஹாங்கிரின் உத்ரவின்பேரில் அபுல் ஃபசலை சராய் புர்க்கி என்கிற கிராமத்தில் வைத்து அபுல் ஃபசலைக் கொலை செய்துவிட்டார்கள். அதனைக் கண்டித்து அக்பர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதிலிருந்து அபுல் ஃபசல் மீது அக்பர் வைத்திருந்த மரியாதையை அறிந்து கொள்ளலாம்.

அபுல் ஃபசல் ஒரு அரேபியர். அவரருடைய ஷேக் முதாதையர்கள் அரேபியாவிலிருந்து வந்திருக்க வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டில் சிந்துப் பகுதியின் மீது படையெடுத்த அரேபியர்களுடன் அவரது மூதாதையர்களும் இந்தியாவிற்கு வந்து இங்கேயே குடியேறியிருக்க வாய்ப்பிருக்கிறது. அபுல் ஃபசலின் தகப்பனான ஷேக் முபாரக் சுன்னி இஸ்லாமியப் பிரிவிலிருந்து ஷியா பிரிவிற்கு மாறிவிட்டார். அதனைக் குறித்து அக்பருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். மத அடிப்படைவாதத்தில் ஊறியவரான அக்பர் உடனடியா ஷேக் முபாரக்கைக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். அக்பர் தன்னைக் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சிய ஷேக் முபாரக் அவரது இரு மகன்களான அபு ஃபய்ஸி மற்றும் அபு ஃபசலை ஆக்ராவில் விட்டுவிட்டு சலிம் சிஸ்தி தர்காவில் ஒளிந்து கொண்டார். பின்னர் அக்பரின் அரசவையில் பணிபுரியச் சென்ற அபு ஃபய்ஸி அவரது சகோதரரான அபு ஃபசலை 1574-ஆம் வருடம் அக்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஆரம்பத்தில் அக்பர் அவரைக் கண்டு கொள்ளவில்லை எனினும் முகஸ்துதி செய்வதில் வல்லவரான அபு ஃபசல் மெல்ல, மெல்ல அக்பரின் மனதில் இடம்பிடித்தார். பொய்களையும், புனைகதைகளையும் அக்பரின் சுயசரிதையான அக்பர் நாமாவில் எழுதி வைத்த பெருமை அபு ஃபசலையே சாரும். அரசவையில் இருந்த ஜஹாங்கிர் அபுல் ஃபசலையும் அவரது புளுகுகளையும் வெறுத்தார். அவரை நீக்குமாறு ஜஹாங்கிர் செய்த வற்புறுத்தல்களை உதாசீனம் செய்த அக்பர் அபுல் ஃபசலைத் தனக்கு நெருக்கமானவராக ஆக்கிக் கொண்டார். ஃபசலுக்கு 2000 குதிரைப்படைகளை நடத்தும் படைத்தலைவர் பதவியும் கொடுக்கிறார் அக்பர்.

அக்பருக்கு எதிராக புரட்சி செய்து அலஹாபாத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஜஹாங்கிருக்கு எதிராக அபுல் ஃபசலை அனுப்பி வைக்கிறார் அக்பர். அதனை அறிந்து கோபமுறும் ஜஹாங்கிர் அவரைத் தந்திரமாகக் கொலை செய்கிறார். ஃபலைச் சுற்றி வளைக்கும் ஜஹாங்கிரின் படைகள் அவரது உடலை ஈட்டிகளால் துளைக்கிறார்கள். பின்னர் ஃபசலின் தலை கொய்யப்பட்டு அலஹபாத்திலிருக்கும் ஜஹாங்கிருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஜஹாங்கிர் அந்தத் தலையைக் குப்பையில் தூக்கியெறிந்துவிட்டார். ஏற்கனவே சொன்னபடி அக்பர் ஃபசலின் மரணத்தைக் குறித்துத் துளியும் வருத்தப்படவில்லை. ஏனென்றால் அவரைச் சுற்றிலும் முகஸ்துதி செய்யும் கூட்டத்திற்குக் குறைவில்லை என்பதால்.

2. அபுல் ஃபய்ஸி

அபுல் ஃபசலின் சகோதரரான அபுல் ஃபய்ஸி அக்பரின் இரண்டாவது நவரத்தினம். அரசவைக் கவிஞராக அறியப்படுகிற அபுல் ஃபய்ஸி குறித்து அக்பர் மரியாதையாகச் சொன்னதாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. அக்பரின் மகனான முராத்திற்கு சிறிது காலம் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரும், அமிர் குஸ்ருவும் சமகாலத்திய சிறந்த பாரசீகக் கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். ஃபய்ஸி ஏறக்குறைய 101 புத்தகங்கள் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் புத்தகங்களுக்கான தடையங்கள் எதுவும் இல்லை. எனவே அவர் அத்தனை புத்தகங்கள் எழுதியதாகச் சொல்வது உண்மையில்லாமல் இருக்கலாம். ஆஸ்த்துமாவில் துன்பப்பட்ட அபுல் ஃபய்ஸி 1595-ஆம் வருடம் ஆக்ராவில் இறந்துவிட்டார்.

இந்திய வரலாற்றாசிரியர்கள் சொல்வது போல அக்பருக்குக் கலை, இலக்கியங்களில் துளியும் ஆர்வம் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. அபுல் ஃபய்சி எழுதியவற்றையெல்லாம் அக்பர் புகழ்ந்திருப்பார் என்பது போன்ற கற்பனை வேறெதுவும் இல்லை.

ராஜா தோடர்மால்

3. ராஜா தோடர்மல்

ராஜ தோடர்மல் ஒரு ராஜபுத்திர ஷத்திரியர். அக்பரின் படைகளைக் குறித்த கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்காக அக்பரால் வேலைக்கமர்த்தப்பட்டவர். முகஸ்துதியில் பிற ரத்தினங்களைப் போன்றவராதலால் மிக விரைவில் அக்பரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

அதன் பின்னர் அவரது முக்கிய வேலை அவரது ராஜபுத்திர அரசர்களை மிரட்டி அக்பரின் வழிக்குக் கொண்டுவருவதாக இருந்தது. அக்பருக்குப் பணியும் அரசர்களின் மகள்களை அக்பரின் அந்தப்புரத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும் முக்கிய பணியும் செய்தவர் ரத்தினமான தோடர்மல்.

அக்பர் போரில் வெல்லும் இடங்களில் புதிய வரிவிதிப்பு முறைகளைக் கொண்டுவந்து அப்பாவி ஹிந்துக்களைக் கசக்கிப் பிழிந்து, அக்பரி கஜானவை நிரப்பியவர். பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் தங்களின் மனைவி, பிள்ளைகளை அடிமைச் சந்தையில் விற்பனை செய்வதற்குக் காரணமானவர்.

முஸ்லிமான அக்பருக்கு சேவைகள் செய்தாலும் தோடர்மல் இறுதிவரை மதம்மாறாமல் ஹிந்துவாகவே இருந்தவர் என்பதினை ஒரு சாதனையாகச் சொல்லலாம். அதனால் நேர்ந்த அவமானங்களைத் தாங்க முடியாமல் ஹரித்துவாருக்கு சாமியாராகச் சென்றவரை மீண்டு அக்பர் அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். ஆனாலும் சிறிது காலத்திலேயே தனது 54 வயதில் தோடர்மல் இறந்துவிட்டார்.

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 17

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பர் அவரது ஆட்சிக்காலத்தில் நிரந்தரமாகக் கட்டமைக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார் என்று சொல்வதனைப் போன்ற பொய் வேறொன்றுமில்லை. அக்பரின் காலத்தில் மட்டுமல்ல. அவருக்கு முன்னர் இருந்த அத்தனை முகலாய ஆக்கிரமிப்பாளர்களிடையேயும் அதுபோன்றதொரு முறையான வரிவிதிப்பு முறைகள் இருந்ததேயில்லை. அப்படியே இருந்ததாக நாம் ஏற்றுக் கொண்டாலும் அது அத்தனையும் அரசின் பல பகுதிகளில் கொடுமையான முறையில் வரி வசூலிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த அக்பரின் அலுவலகர்களின் கொடூர நடவடிக்கைகளினால் காணாமல் போய்விட்டன. தனக்கு அளிக்கப்பட்ட பிராந்தியத்தில் வரி வசூலிக்கும் அதிகாரமுடையவனின் அப்போதைய மனோபாவத்திற்கு ஏற்ப வரிகள் கூடும் அல்லது குறையும். அதனைக் கொடுக்க மறுத்தவர்கள் கொடுமையாக சித்தரவதை செய்து கொல்லப்பட்டார்கள் என்பதே நாம் மீண்டும் மீண்டும் காண்பது.

இந்தக் கொடுமையான வரி வசூலிப்பு முறைகளிலிருந்து முஸ்லிம்களுக்குச் சிறிதளவேனும் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம்கள் கூட்டாகச் சேர்ந்து தங்களுக்குள் பணம் வசூலித்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும் அல்லது முல்லாக்களிடம் முறையிட்டு அவர்கள் மூலமாக அழுத்தம் கொடுத்தும் தங்களின் வரிச்சுமையைக் குறைத்துக் கொண்டார்கள். எனினும் அந்தச் சுமை பரிதாபகரமான ஹிந்துக்கள் மீது சுமத்தப்பட்டு அந்த நஷ்டத்தை ஈடுகட்ட நிர்பந்திக்கப்பட்டார்கள். ஹிந்துக்களும் இலஞ்சம் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும் அம்மாதிரியாக நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக, மிகக் குறைவானதே. கையூட்டு கொடுக்கையில் பிடிபட்டால் ஹிந்துவின் மானம், மரியாதையும், அவனது சொத்துக்களும், நிலமும் அதனுடன் அவனது மனைவி, மகள்களும் ஏதாவது ஒரு முஸ்லிம் அலுவலனின் அந்தப்புரத்தை அலங்கரிக்க வேண்டியிருக்கும்.

அக்பரின் எங்காவது படையெடுத்துச் சென்று கொண்டிருக்கையில் செல்லும் பகுதிகளில் உள்ளவர்களை மிரட்டிப் பணம் பறிப்பது என்பது நேரமெடுக்கும் செயல் என்பதால் மொத்த ராணுவமும் அந்தப் பகுதியைக் கொள்ளையடித்து மொட்டையாக்கும். அக்பர் அவ்வப்போது ஏதாவது காரணம் காட்டி புதிய வரிகளைத் தனது குடிமக்கள் மீது திணித்துக் கொண்டே இருந்தார். உதாரணத்திற்கு ஆக்ரா கோட்டையை பழுதுபார்ப்பதற்காக என்று அக்பர் விரித்த வரிகள். இப்படியாக தங்களைக் கொள்ளையடித்து, தங்களின் பெண்களைக் கவர்ந்து சென்று பாலியல் அடிமைகளாக்கிய, தங்களது வழிபடும் இடங்களை நாசம் செய்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஹிந்துக்கள் தொடர்ந்து சேவை செய்ய ஆணையிடப்பட்டார்கள். மறுத்தவன் உடனடியாகப் பிடிக்கப்பட்டு அடிமைச் சந்தையில் அடிமையாக விற்கப்படுவான் என்பதே தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

அக்பர்நாமா நூலை அக்பரிடம் சமர்ப்பிக்கும் அபுல் பசல்

இதன் பின்னனியிலேயே அக்பரின் வரி வசூலிப்புமுறை ஆரயப்பட வேண்டும். முதலில், ஹிந்துக்களால் வெறுக்கப்பட்ட ஜிஸியாவைப் பார்ப்போம். எட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளி வாழ்கின்ற ஹிந்துக்களின் மீது ஜிஸியா வரியை விதித்தார்கள். ஜிஸியாவினா ஹிந்துக்கள் பெரும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் உள்ளானார்கள். ஜிஸியா வரி என்பது குரானில் முகமது நபியால் சொல்லப்பட்டதொரு வரி. அதன்படி, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி இஸ்லாமிய நாடாகிறது. அந்த நாட்டில் வாழும் காஃபிர்கள் அவர்களின் பாதுகாப்புக்கென ஜிஸியா வரியைச் செலுத்தியே ஆகவேண்டும். அவ்வாறு செலுத்த மறுக்கும் காஃபிர்களைக் கொலை செய்ய அந்த முஸ்லிம் ஆட்சியாளக்கு அதிகாரம் வழங்குகிறது குரான்.

ஆனால் உண்மையில் “ஜிஸியா” வழங்கும் பாதுகாப்பு ஒரு பொய்த்தோற்றமே. ஜிஸியா வரியைச் செலுத்திய பிறகும் ஹிந்துக்கள் தொடர்ந்து அவமானங்களுக்கும், படுகொலைகளுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். ஹிந்துக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு, அவர்களின் மனைகளும், பிள்ளைகளும் பிடித்துச் செல்லப்பட்டார்கள். இத்தனை கொடூரங்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் பிழைத்துக் கிடப்பதற்காக மட்டுமே ஜிஸியா வசூலிக்கப்பட்டது.

ஜிஸியாவைக் குறித்து எழுதும் அக்பரின் வரலாற்றாசிரியர்களான பதாயுனி மற்றும் அபுல் ஃபசல் இருவருமே அக்பர் ஹிந்துக்களின் மீதான கருணையுடன் ஜிஸியாவை நீக்கிவிட்டதாகப் பொய்யாக எழுதி வைத்திருக்கிறார்கள். அக்பரின் காலத்தில் (பதாயுனி, அபுல் ஃபசல் காலமும் கூட) இந்தியாவில் பயணம் செய்த ஐரோப்பிய பயணிகள் அக்பர் ஹிந்துக்கள் மீதான ஜிஸியா வரியைத் தொடர்ந்து கொடூரமான முறையில் வசூலித்துக் கொண்டிருந்ததாக விளக்கமாக எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்கள். ராந்தம்போரை ஆண்ட ஹிந்து அரசரான ராய் சுர்ஜான் அக்பரை நேரில் சந்தித்து தன்னுடைய பிராந்தியங்களில் ஜிஸியா வரி வசூலிப்பதனை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது அக்பரின் வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அக்பர் ஜிஸியாவை நீக்கியிருந்தால் ராய் சுர்ஜான் எதற்காக மீண்டும் அந்த வேண்டுகோளை அக்பரின் முன் வைக்க வேண்டும்?

அக்பரின் அரசவையில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த ஜைன முனியான ஹிர்விஜய சூரி (ஜூன் 7, 1583 முதல்), “குஜராத் மற்றும் கத்தியவாரைச் சேர்ந்த ஹிந்துக்களும், ஜைனர்களும் இனி ஜிஸியா வரியைச் செலுத்தத் தேவையில்லை என அக்பர் உத்தரவிட்டு அதனை உறுதிப்படுத்தினார்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அக்பரின் அரசவைக்கு 1587-ஆம் வருடம் வந்த இன்னொரு ஜைன முனியான ஷாந்தியிடம் அக்பர் ஹிந்துக்கள், ஜைனர்கள் மீதான ஜிஸியாவை நீக்கவும், விலங்குகளைக் கொல்லத் தடை செய்வதாகவும் ஒரு உத்தரவைப் பிறப்பித்ததாகச் சொல்கிறார்.

இதனை சிறிது ஆராய்ந்தாலேயே இதில் இருக்கும் பொய்மையை எளிதாகக் கண்டடையலாம். ஏற்கனவே ஜிஸியாவை நீக்க உத்தரவிட்ட அக்பர், மீண்டும் ஒருமுறை ஜிஸியாவை நீக்குவதாகச் சொல்லக் காரணம் என்னவாக இருக்க முடியும்? உண்மையில் அக்பர் ஜிஸியாவை நீக்கவேயில்லை. அதாகப்பட்டது அதனைச் செய்வதற்கு அவருக்கு விருப்பமில்லை. அக்பர் ஜைன முனிகளிடம் புளுகியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமிய சட்டங்களின்படி, ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழ்கிற காஃபிர் அந்த நாட்டுக் குடிமகனாக அங்கீகரிக்கப்பட மாட்டான். அவ்வாறு இருக்கிற காஃபிர்களை அவமானங்களுடன் மட்டுமே வாழ இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே காஃபிர்களுக்கு எதிரான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் அந்தப் பகுதியில் வாழும் முல்லாவே தீர்மானிப்பான். இஸ்லாமியச் சட்டம் அந்த முல்லாவின் மூலமாகவே அங்கு வாழும் ஹிந்து காஃபிர்கள் மீது செயல்படுத்தப்படும் என்பதால் ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளையும், ஆலயங்கள் நிர்மாணிப்பதனையும், ஏன் இடிந்த பழையதொரு ஆலயத்தையும் மீண்டும் கட்டிக் கொள்வதற்கான அனுமதியும் கூட மறுக்கப்படும் என்பதே வரலாறு.

உண்மையில் அக்பருக்கு ஹிந்துக்களின் மீதான கரிசனம் எதுவும் இருந்ததில்லை. தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைக்கும் சாதாரண ஹிந்துவையும் அக்பர் விட்டு வைக்கவில்லை. அவ்வாறு திருமணமாகவிருக்கும் பெண்ணை அவளுடைய தகப்பன் முகலாய காவல் அதிகாரியிடம் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கட்டாயப்பட்டுத்தப்பட்டார்கள். பின்னர் அவர்களிடமிருந்து முடிந்த அளவிற்குப் பணம் கறக்கப்பட்டது. ஒருவகையில் இது அக்பரின் திருமண வரியாகும். அவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அக்பருக்குச் சென்றது. அந்தப் பெண் அழகானவளாக இருந்தால் அவள் கவர்ந்து செல்லப்பட்டு அக்பருக்கும் அவரது சகாக்களுக்கும் விருந்தாக்கப்பட்டாள். பின்னர் அந்தப் பெண் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டு தில்லித் தெருக்களில் திரியவிடப்பட்டாள்.

எனவே அக்பரின் வரி வசூலிப்பு முறைகளைக் குறித்து நமக்குப் பாடமெடுக்கிற இந்திய வரலாற்றாசிரியர்கள் நமக்குப் பொய்களையும், புனைகதைகளையும் நம்மிடம் திணிக்கிறார்கள். ஜிஸியா, திருமண வரி, புனிதப்பயண வரி, நீதி மன்ற வரி, பிறந்த நாளுக்கு எடைக்கு எடை தங்கம் வரி, வரி கொடுக்காதவனின் மொத்த சொத்தையும் அபகரிப்பது, அதுவுமில்லாவிட்டால் கொள்ளையடிப்பது என வித,விதமான முறைகளில் எந்தத் திட்டமும், வரைமுறையும், கோட்பாடுமின்றி அக்பரின் வரி வசூலிப்புகள் கோலாகலாமாக நடந்து கொண்டிருந்தன.

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 16

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பரின் ராணுவத்தைக் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.

அக்பரது பொது, நிதி நிர்வாகத்தைப் போலவே அவரது ராணுவமும் காட்டுமிராண்டித்தனமான குண்டர்களால் நிரம்பியது. போர் முரசம் அறையப்பட்டதும் பெரும் திரளாக வந்து கூடும் அவர்கள் பின்னர் முழுவதும் கட்டவிழ்த்து விடப்படுவார்கள். எதிரி நாட்டுடன் போர் துவக்குமுன் அக்பரின் படைத் தலைவர்கள் குரானின் வாசகங்களை எடுத்துச் சொல்லி அவர்களை வெறியூட்டி வைப்பார்கள். அக்பரின் படைத்தலைவர்கள் படையெடுத்துச் சென்று வெல்லும் நாட்டில் எண்ணிப்பார்க்கவே இயலாத குரூரங்களை நடத்தி முடிப்பார்கள். எதிரிகளின் தலைகளை வெட்டி அதனை அக்பருக்குப் பரிசாக அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் தலைகள் ஓரிடத்தில் குவித்து வைத்து, பின்னர் அதனைப் பார்வையிடும் அக்பரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

அக்பரின் அரசவையில் இருந்த வரி வசூலிக்கும் கொடூரர்களைப் போலவே அக்பரின் படையணிகளில் வேலை வெட்டியில்லாதவர்கள், கொலைகாரர்கள், அயோக்கியர்கள், மதவெறியர்கள், கொள்ளைக்காரர்கள், குண்டர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். அப்பாவிப் பொதுமக்களை மிரட்டுவது, கோவில்களை இடிப்பது, கொள்ளையடிப்பது, அவர்களின் பெண்களைக் கவர்ந்து சென்று கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வது போன்ற கொடூரங்களை வகைதொகையில்லாமல் நடத்திக் கொண்டிருந்தார்கள். இது அத்தனையும் அக்பரின் முழு சம்மதத்துடன் மட்டுமே நிகழ்ந்தது.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “அக்பரின் ராணுவம் மிகப் பலகீனமானது என்றாலும் அவரது எதிரிகளை விடவும் வலிமையானது. ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகுந்ததொரு ஐரோப்பிய ராணுவத்தின் முன்னர் அக்பரின் ராணுவம் ஒரு மணி நேரம் கூடத் தாக்குப் பிடித்திருக்கவியலாது. அக்பரின் படைத்தலைவர்கள் போர்ச்சுக்கீசிய குடியிருப்புகளைத் தாக்க முனைந்த போதெல்லாம் பரிதாபமாகத் தோற்றிருக்கிறார்கள் என்பதே இதற்கு ஒரு உதாரணம். அலெக்ஸாண்டர் போன்றவர்களெல்லாம் அக்பரின் நெற்றி மீது ஏறி நடந்து சென்றிருப்பார்கள். தென்னிந்தியாவில் பிற்காலத்தில் தோன்றிய மராத்தா குதிரைப்படைகள் அக்பருக்கு எதிராக எளிதானதொரு வெற்றியை அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்பரின் மிக மோசமான ராணுவ நிர்வாகம் தோல்வியை மட்டுமே பெறும் வடிவமைப்பைக் கொண்டது”.

“ஒரு அரசனாக போர்களில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அக்பர், அந்த வெற்றியை அடைவதற்கு எல்லாவிதமான கீழ்த்தரச் செயல்களிலும் இறங்குவதற்குத் தயாரானவராக இருந்தார். தனக்கு ஆதரவளிக்கிற அத்தனை பேர்களையும் தனது ராணுவத்திற்குள் இழுத்துக் கொண்டார் அக்பர்” என்கிறார் ஸ்மித்.

அக்பரின் ராணுவ முழக்கம் “ஹிந்துக்களைக் கொல்லு” என்பதாகும். அந்த ஹிந்து அக்பருக்கு ஆதரவாக அவருடைய படையணியில் இருந்தாலும் அவனைக் கொல்வதில் தவறேதுமில்லை. ஏனென்றால் ஹிந்துவைக் கொல்வது இஸ்லாமிய மதத்திற்கு நன்மைபயக்கும் ஒரு விஷயம்.

வரலாற்றாசிரியர் பதாயுனி அக்பரின் படையில் ஒரு சாதாரண சிப்பாயாகப் பணிபுரிந்தவர். ராணா பிரதாப்புக்கு எதிராக நிகழ்ந்த புகழ்பெற்ற ஹல்திகாட் போரில் பங்கேற்றவர். பதாயுனி சொல்கிறார், “நம்முடைய படையணியிலும் ராஜபுத்திரர்கள் இருக்கிறார்கள். நமக்கு எதிரிகளும் ராஜபுத்திரர்கள்தான். இவர்கள் இருவரையும் நான் எப்படிப் பிரித்துப் பார்ப்பது என நான் கமாண்டர் ஆஸப்கானிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த ஆஸப்கான், நீங்கள் நம்முடன் இருக்கும் ராஜபுத்திரனைக் கொன்றாலும் பாதகமில்லை. ஏனென்றால் இரண்டுபேர்களும் ஹிந்துக்கள்தான். அவர்களைக் கொல்வது இஸ்லாமிற்கு நன்மையாகத்தான் இருக்கும்”.

“ராணா பிரதாப்பின் பட்டத்து யானையை உடனடியாக தன்னிடம் அனுப்பி வைக்கக் கோருகிறார் அக்பர். பிரதாப் தனது பட்டத்து யானையை அனுப்பி வைக்க மறுத்துவிட்டதால் உடனடியாக அவர் மீது படையெடுத்துச் செல்லும்படி மான்சிங்கிடம் உத்தரவிட்டார் அக்பர். காஃபிர்களுக்கு எதிரான இந்தப் போர் என் இதயத்தைப் பெருமிதப்படுத்தியது. எனவே அக்பரிடம் சென்று காஃபிர்களுக்கு எதிரான இந்தப் புனிதப்போரில் (ஜிகாத்) என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். என்னுடைய தாடியை காஃபிர்களின் ரத்தத்தால் நிறம் மாற்றிக் கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் என அக்பரிடம் கூறினேன். பின்னர் குனிந்து அக்பரின் பாதத்தை முத்தமிட எத்தனிக்கையில் அக்பர் தனது கால்களை நகர்த்திக் கொண்டார். ஆனால் நான் வெளியே செல்ல எத்தனிக்கையில் என்னை மீண்டும் உள்ளே அழைத்த அக்பர் தன்னுடைய கை நிறைய பொற்காசுகளை அள்ளி என்னிடம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார்” என்கிறார் பதாயுனி.

ராணா பிரதாப் – அக்பர்

அக்பரைப் போலவே ராணாவும் ஒரு பிராந்தியத்தின் அரசர். அவருடைய பட்டத்து யானையை உடனடியாக தனக்கு அனுப்பி வைக்கும்படி சொல்வது ராணாவைச் சிறுமைப்படுத்தும் செயலே அன்றி வேறொன்றுமில்லை. ராணா அதற்குப் பணிந்து அவரின் யானையை அனுப்பி வைத்திருந்தாரென்றால் அக்பர் அத்துடன் நிறுத்தியிருக்க மாட்டார். உடனடியாக பெரும் கப்பத்தொகையைக் கேட்டனுப்பியிருப்பார். ராணாவின் குடும்பத்துப் பெண்களைத் தன்னுடைய அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டிருப்பார்.

ராணா அக்பரின் இஸ்லாமியப் படைகளை நொறுக்கித் தள்ளினார். அவரிடம் தோல்வியடைந்து பின்வாங்கி ஓடிய முஸ்லிம் படைத்தலைவர்கள் “வெற்றியடைவதற்குச் சிரமமான இடத்தில் தப்பியோடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என முகமது நபியே சொல்லியிருக்கிறார்” என்றார்கள் என்கிறார் பதாயுனி. ஆனால் அன்றைய தினம் மான்சிங்கினால் காப்பாற்றப்பட்டது. ராணாவுக்கு எதிராக வெறியுடன் போரிட்ட மான்சிங் இறுதியில் ராணாவின் பட்டத்து யானையைக் கைப்பற்றிப் பின்னர் அதனை அக்பரிடம் ஒப்படைக்கிறார். பெரிதும் மகிழ்ந்த அக்பர் அவருடைய கைகை நிறைய அஷ்ரஃபி (பொற்காசுகள்)யை அள்ளி மான்சிங்கின் கையில் கொடுக்கிறார்.

பதாயுனி சொல்வதின்படி, அக்பரின் படையிலிருந்த போர்வீரர்கள் எவருக்கும் முறையான போர்ப் பயிற்சிகளோ அல்லது உத்தரவுக்குக் கட்டுப்படும் கட்டுப்பாடுகளோ சொல்லித் தரப்படவில்லை. காஃபிர்களுக்கு எதிராக போர்புரிந்து அவர்களைக் கொல்வதால் அல்லாவின் சுவனத்தில் இடம்பிடிக்கும் ஆசையுள்ள அத்தனை முஸ்லிம்களும் ஹிந்துக்களுக்கு எதிரான படுகொலைகளைச் செய்வதற்கு சந்தோஷமாக ஒன்று கூடினார்கள். கையில் கிடைத்த கத்தியோ, ஈட்டியோ, அரிவாளோ அல்லது மரம் வெட்டும் கோடாலியோ என எந்த ஆயுதம் கையில் கிடைத்தாலும் அதனைத் தூக்கிக் கொண்டு போருக்குக் கிளம்பி வந்தார்கள்.

அக்பர் அடிப்படையில் ஒரு கொடூர மனோபாவம் உடையதொரு மனிதன். தக்காணத்தில் படையெடுத்துச் சென்ற அக்பரின் மகன் முராத் மிர்ஸா உடல் நிலை சரியில்லாமல் அங்கேயே இறந்து விட்டார். அவரது மகனின் மரணத்தின் துயரத்தை விடவும் தக்காணத்தைத் தாக்கியழித்து அதனைக் கைப்பற்றுவதனையே அக்பரின் மனம் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்ததாக ஃபரிஸ்டா எழுதுகிறார்.

அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பாதிரியார் மொன்செராட், “முகலாயச் சாலைகளின் எல்லாப் பக்கங்களிலும் முஸ்லிம் கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் நிரம்பியிருந்தார்கள். அவர்களின் கையில் சிக்கிய கிறிஸ்தவனும், ஹிந்துவும் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்” என்கிறார். அக்பரின் அரசவையில் இருந்த முக்கியஸ்தர்கள் அக்பருக்குத் தேவையான படைகளை அவர் கேட்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்கள். அவ்வாறு படைகளை அனுப்ப மறுப்பவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். அவருடைய மனைவியும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இம்மாதிரியான சூழ் நிலையில் முகலாய அரசின் ஒவ்வொரு குடிமகனும் ராணுவத்தில் சேர நிர்பந்திக்கப்பட்டான்.

பாதிரி மொன்செராட்டே, “அக்பரின் படையில் 45,000 குதிரைப்படையினரும், 5000 யானைகளும், பல்லாயிரக்கணக்கான காலாட்படைகளும் இருந்தார்கள். அவர்களுக்கான சம்பளம் அக்பரால் நேரடியாக வழங்கப்பட்டது. இதைத் தவிர ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அவர்களின் கீழ் படையணிகளை வைத்திருந்தார்கள். அக்பர் கேட்கும்போதெல்லாம் அவர்கள் அந்தப்படைகளை அக்பருக்கு அனுப்பிவைக்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.”

பெரும்பாலான அக்பரின் படையணிகள் கொள்ளையடிப்பதில் மட்டுமே காலத்தை ஓட்டினார்கள். விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவரும் தானியங்கள் மிகக் குறைந்த விலைக்கு சந்தையில் விற்கப்பட்டன. பின்னர் அந்தப் பணத்தை படையணிகள் தங்களுடன் பங்கிட்டுக் கொண்டன என்கிறார் பாதிரி மொன்சராட்டே. போருக்குப் போகிற அக்பர் அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களிடம் தானியத்தையும், பிற உணவுப் பொருட்களையும் கொண்டுவரச் சொல்லுவார். அவ்வாறு கொண்டு வந்த பொருட்களுக்கு மிகக் குறைந்த பணம் கொடுக்கப்பட்டும். அதனை ஏற்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்களின் மனைவி, பிள்ளைகள் அடிமைகளாக்கப்படுவார்கள் என்பதால் யாரும் அக்பரை எதிர்க்கத் துணியவில்லை.

அக்பர் மட்டுமில்லை. அவருக்கு முன்னும், பின்னும் வந்த அத்தனை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும் இதுபோன்றதொரு கொடூரச் செயல்களைத் தயக்கமில்லாமல் செய்திருப்பதினைக் காணலாம். ஒரு ஹிந்து அரசன் பிற நாட்டின் மீது படையெடுக்கையில் அங்கிருக்கும் அப்பாவிப் பொதுமக்களை ஒன்று செய்யமாட்டான். இரண்டு எதிரிப் படைகளும் நேருக்கு நேராக போர்க்களத்தில் போரிடும். ஆனால் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் பொதுமக்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. படையெடுத்துச் செல்லும் வழியில் இருக்கிற அப்பாவிகளின் வீடுகளும், வயல்களும் தீயிட்டுக் கொளுத்தப்படும். வழியில் இருக்கிற ஹிந்து ஆலயங்களை ஆக்கிரமித்து அங்கிருக்கும் சிலைகளை உடைப்பார்கள்.

கைப்பற்றப்படும் மொத்த நகரமும் முஸ்லிம் படைகளுக்குச் சேவை செய்யப் பணிக்கப்படும். மறுப்பவனுக்கு உயிர் உத்திரவாதமில்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள், மதமாற்றம் செய்யப்படுவார்கள். புதிதாக மதம் மாறியவன் இஸ்லாமியப்படைகளுடன் சேர்ந்து கொண்டு அதே கொடுமைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பான். முஸ்லிம் படையணிகள் பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருக ஆரம்பிக்கும். அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் கொள்ளையடித்துக் கொள்ள அனுமதியளிக்கப்படும்.

அதே சமயம் கோட்டை வாயிலை அடைத்துக் கொண்டு எதிரிகளை எதிர் நோக்கி நிற்கும் ஹிந்துப் படைவீரனுக்கு எந்த உதவியும் கிட்டாது. அங்கிருந்து பார்க்கையில் அவனுடைய குடும்பமும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போகப்படுவதனையும், அவனது வீடும்,வயலும் தீ வைத்துக் கொளுத்தப்படுவதனையும், ஆலயங்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக மாற்றப்படுவதனையும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டு நிற்பதனைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. இப்படியாக அவன் எதிரியுடன் போரிடுவதற்கு முன்பே அவன் போரிடுவதற்குத் தேவையான காரணங்கள் அனைத்து அழிந்து போயிருக்கும். பதுங்கு குழிகளில் பசியுடனும், பட்டினியுடனும் போராடிக் கொண்டிருக்கும் அவன் சரணடைவதனைத் தவிர வேறு வழியில்லை.

இது போன்ற கொடூரமான வழிமுறைகளே இந்தியாவில் இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கின்றன. இந்திய வரலாற்றைப் படிக்கிற ஒவ்வொருவனும், இந்தியாவில் அன்றைக்கு இருந்த வீரம் நிறைந்த ஹிந்து அரசர்கள் எவ்வாறு இந்தக் காட்டுமிராண்டிகளிடம் தோல்வியடைந்தார்கள் என்கிற கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்வான். ஹிந்து அரசர்கள் தேவையற்ற உயிர்க்கொலைகளைத் தவிர்த்து மரபு சார்ந்து போரிட்டுத் தோற்றுப் போனார்கள். சிறிதும் ஈவு இரக்கமின்றி மதவெறியுடன் கொடூரக் கொலைகள் செய்பவர்களை எதிர்த்து அவர்களால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்பதே உண்மை.

முஸ்லிம்களைப் போலவே ஹிந்துக்களும் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற கொள்கையுடன் போரிட்டிருந்தால், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட தங்களின் சகோதரரகளை மீண்டும் ஹிந்து மதத்திற்கு அனுமதித்திருந்தால் அக்பர் போன்றவர்களால் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பேரழிவு ஓரளவு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஹிந்துக்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பழமைவாதத்தில் தோய்ந்த ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட தங்களின் சகோதரர்களை ஒதுக்கி வைத்தார்கள். அவ்வாறு ஒதுக்கப்பட்டவன் கோபத்துடன் முஸ்லிம் படையணிகளில் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களைக் கொன்று குவித்தான்.

இருப்பினும், இந்த அத்தனை காரணங்களையும் மீறி ஹிந்துக்களின் போராடும் குணம் மறைந்துவிடவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் உலகில் வேறெந்த நாட்டிலும் நிகழவில்லை. இஸ்லாம் சென்ற ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோனேஷியாவரைக்கும் இஸ்லாமிய வாள்முனைக்கு அஞ்சி மதமாற்றங்கள் நிகழ்ந்தன. இன்றைக்கு அந்த நாடுகளெல்லாம் முழுமையான இஸ்லாமிய நாடுகள். ஆனால் ஹிந்து மதம் இன்றுவரை அழியவில்லை. மாறாக செழித்து வளர்ந்தே இருக்கிறது. ராஜபுத்திரர்களும், மராத்தாக்களும், சீக்கியர்களும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடியே வந்திருக்கிறார்கள்.

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 15

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

அக்பரின் நிதி நிர்வாகம் மோசமென்றால் அவரின் பொது நிர்வாகம் அதையும் விட மோசமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. “கிடைத்த வரைக்கும் சுருட்டு” என்பதே பொதுவானதொரு கொள்கையாக, சட்டமாக இருந்தது. சட்ட விரோதமான காரியங்களும், கொடூரமான சித்திரவதைகளும், வன்முறைகளும், முடிவே இல்லாமல் தொடர்ந்த போர்களும், அக்பருக்கு எதிராகக் கிளர்ந்த புரட்சிகளும், சொந்த நாட்டு மக்களின் மீது கொள்ளையடிப்பதற்காக மட்டுமே செய்யப்பட்ட அக்பரின் படையெடுப்புகளும், வாள்முனை மதமாற்றங்களும், அப்பாவிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு பணம் பறிக்கும் செயல்களும், படுகொலைகளும், லஞ்ச லாவண்யங்களும், பெண்களைத் தூக்கிச் செல்லுவதும், திருட்டும், வழிப்பறிக் கொள்ளையும், ஹிந்து வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் என அகராதியில் உள்ள அத்தனை கொடூரங்களும் அக்பரின் ஆட்சியில் நிகழ்ந்தன.

வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித், “அக்பரின் மொத்த நிர்வாகமும் சுயநலம் பிடித்த அயோக்கியக் கூட்டத்தின் கையில் இருந்தது. அவர்களின் ஒரே குறிக்கோள் தங்களுக்கும், தங்களின் கீழிருக்கும் படையணிகளுக்கும் தேவையானவற்றை எப்பாடுபட்டாவது அப்பாவிப் பொதுமக்களிடமிருந்து பிடுங்குவது என்பதில் மட்டுமே இருந்தது. அவ்வாறு தாங்கள் கேட்பதைத் தரமறுக்கும் அப்பாவிகள் மீது மிகக் கொடூரமான தண்டனைகளை அளித்தார்கள். கை அல்லது காலை வெட்டுவது, யானைகளைக் கொண்டு நசுக்கிக் கொல்லுவது, தலையை வெட்டுவது, சாட்டையால் கடுமையாக விளாசுவது போன்ற கொடூரச் செயல்களை அவர்கள் அரங்கேற்றினார்கள். எனவே இஸ்லாமிய அரசர்களின் கீழ் இருந்த இந்தியர்கள் இருந்த காலம் இஸ்லாமிய அரசர்களின் கொடூரச் செயல்களையும், அவர்களினால் அடக்கியாளப்பட்டவர்களின் துயரங்களையும் மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.”

அக்பரின் நீதி, நிர்வாகச் சிறப்புகளை பொய்யாக எழுதும் இந்திய வரலாற்றாசிரியன், அக்பரைப் போல இந்தியர்களை அடக்கியாண்ட, அவர்களைக் கொள்ளையடித்த, கற்பழித்த பிற இஸ்லாமிய அரசர்களுடன் ஒப்பிட்டு அவர்களை விடவும் அக்பர் சிறந்தவர் என்பது போன்றதொரு மாயத்தோற்றத்தை நம்முன்னே உருவாக்க விழைகிறார்கள். ஆனால் அது அத்தனை எளிதான ஒன்றில்லை. அக்பரின் கீழ் சுகமாக வாழ்ந்த இந்தியனின் வரலாறு எங்குமே எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவன் பட்ட துன்பமும், துயரமுமே எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கிறது. வின்செண்ட் ஸ்மித் சொல்வதுபோல அக்பரின் ஆட்சி பொதுமக்களின் நலனுக்காக நடந்த ஆட்சி என்பதற்கான ஆதாரமே இல்லை.

அதேசமயம் அக்பரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அவரைக் குறித்து இல்லாத கதைகளை மட்டுமே எழுதி வைத்த அவரது வரலாற்றாசிரியர்கள் மட்டுமே அக்பரை ஒரு “பேரரசர்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அதனையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய வரலாற்றாசிரியர்கள் அதே பொய்களையே மீண்டும், மீண்டும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அக்பரின் “சிறந்த” ஆட்சிக்கு ஆதாரம் இல்லையென்றாலும் அவரது கொலைகார, கொள்ளைக்கார ஆட்சிக்கு ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றனவே. பின் எதற்காக இன்னும் அக்பரைக் குறித்தான கட்டுக்கதைகளை இன்னும் நம்மீது திணிக்கிறார்கள்?

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

அக்பரின் மொத்த அரசாங்க அமைப்பும் ராணுவம் சார்ந்தது. தூரத்துப் பிராந்தியங்களில் ஆளுகிற அரசப்பிரதிநிதி எந்தவிதமான சட்ட, திட்டங்களுக்கும் கட்டுப்படாதவர். தான் நினைத்ததையே சட்டமாக அங்கு பிரயோகிக்கமுடியும். அங்கு வாழுகிற குடிமகன் அந்த பிரதிநிதி சொல்வதற்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கமுடியும். அப்படி நடக்காதவன் மீதான தண்டனை மிகக்கடுமையானது.

அபுல் ஃபஸல், “அக்பர் ஹிந்துஸ்தானத்தை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் உலகின் பிற பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த இஸ்லாமிய அரசர்கள் (துருக்கி, இரான் போன்றவை) விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மட்டுமே அரசின் வரியாக வசூலித்தார்கள். ஆனால் அக்பரோ மூன்றில் ஒருபகுதியை தனக்கென வசூலித்தார்”. அதாகப்பட்டது பாரசீக அரசனை விடவும் இரண்டு மடங்கு வரி. இதன் பயனாக சாதாரண விவசாயி பெரும் துன்பமடைந்தான்.

இஸ்லாமிய அடிப்படைவாத மனோபாவமும், மதவெறியும் கொண்டவரான அக்பரின் ஆட்சியின் கீழ் ஹிந்துக்கள் பெரும் துன்பமைடைந்தனர் என்பதே உண்மை.

அபுல் ஃபசல், “குரானில் சொல்லப்பட்டிருக்கும் கொடூரமான தண்டனைகளான கை, கால்களை வெட்டுவது போன்ற தண்டனைகள் அக்பரால் ஹிந்துக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. அவ்வாறு தண்டனைகள் வழங்கப்படுகிற நேரத்தில் அக்பரோ அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களோ சாதாரண நீதிமன்ற  நடவடிக்கைகளையோ அல்லது சாட்சிகளை விசாரிப்பது போன்றவற்றையோ செய்யவில்லை” என்கிறார். ஒவ்வொரு படைவீரனும் அக்பருக்கு எதிரானவர்களைக் கொல்ல ஆணையிடப்பட்டிருந்தான். எனவே யாரும், யாரையும் கொலை செய்வது எளிதாகியிருந்தது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் அபுல் ஃபசலின் அய்ன்-இ-அக்பரியை பெரிதுக் கொண்டாடுகிறவர்கள். ஆனால் வரலாற்றாசிரியர் வின்செண்ட் ஸ்மித் அவ்வாறு நேரடியாக அபுல் ஃபசலின் பொய்களை நம்புதல் கூடாது என்கிறார். அபுல் ஃபசலின் அய்ன்-இ-அக்பரி முற்றிலும் புனைகதைகளால் ஆனதொரு கட்டுக்தையேயன்றி அதில் துளியும் உண்மையில்லை.

அக்பரும் தோடர்மல்லும் நடத்திய நிர்வாகம் ஏழைகைளைச் சுரண்டி, அரசாங்க வருமானத்தை (அதாகப்பட்டது அக்பரின்) கூட்டுவதற்காகச் செய்யப்பட்ட நிர்வாகம். கல்வியறிவற்ற அக்பர் ஒரு மரமண்டை மனிதர். ஏழைகளுக்கு உதவுவதும், குடிமக்களின் வாழ்வைச் சிறக்கச் செய்வது எல்லாம் அவரால் புரிந்து கொள்ளவே முடியாததொரு விஷயம். ஜாகிர்களைப் பிரிப்பது, குதிரைகளுக்கு முத்திரையிடுவது போன்றவை அனைத்துமே அக்பரின் வருமானத்தைப் பெருக்கச் செய்த செயல்கள் மட்டுமே.

ஆனால் முன்யோசனையற்ற, சுயநலம் மிகுந்த திட்டங்களினால் நிகழ்ந்த கொடுமைகள் ஏராளம். உதாரனமாக கண்மூடித்தனமாக ஜாகிர்களைப் பிரித்து, விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்ததன் காரணமாக 1595-ஆம் வருடம் முதல் 1598-ஆம் வருடம் வரை கொடுமையான பஞ்சங்கள் வட இந்தியாவை வாட்டியதனைச் சொல்லலாம். பொதுமக்களைக் கசக்கிப் பிழிந்த வரிகள் முகலாய அரசின் ஆறு நகரங்களைச் சேர்ந்த கஜானாவில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் அக்பர் அதிலிருந்து ஒரே ஒரு பைசாவைக் கூடக் கூட்டம், கூட்டமாகச் செத்து விழும் தனது குடிமக்களுக்குச் செலவு செய்யவில்லை.

அக்பரின் கீழ் பணிபுரிந்த அவரின் அத்தனை அலுவலகர்களும் சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றிப் பிழைத்தனர். ஒரு அரசன் பிறப்பிக்கும் உத்தரவும் மேலிருந்து கீழ் வரைக்கும் அத்தனை அலுவலகர்களாளும் நேர்மையாகச் செய்யப்படுவது இயலாத ஒன்று என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே எல்லாவிதமான ஏமாற்றுக் காரியங்களும், லஞ்ச ஊழல்களும் எல்லா மட்டத்திலும் பல்கிப் பெருகியிருந்தது.

தாரிக்-இ-ஃபிரோஷாஹி, இஸ்லாமிய அரசனின் கீழ் வசிக்கும் ஒரு ஹிந்துவின் நிலையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது,

“இஸ்லாமிய அரசனின் திவான் (கணக்காயன், அமைச்சன்) ஹிந்துக்களிடன் வரியைச் செலுத்தும்படி கேட்கையில் அந்த ஹிந்துவானவன் பணிவுடனும், அடக்கத்துடனும் அந்த வரியை திவானிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த திவான் வரி செலுத்துக் ஹிந்துவின் வாயில் எச்சிலைத் துப்ப நினைத்தால் அந்த ஹிந்து எந்தவிதமான தயக்கமுமின்றி தனது வாயைத் திறந்து திவான் துப்பும் எச்சிலை தனது வாயில் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படியாக தங்களின் திறந்த வாயுடன் ஹிந்துக்கள் திவானின் முன்னால் நிற்கவேண்டும். ஒரு காஃபிர் ஹிந்துவானவன் இஸ்லாமிய அரசனுக்குத் தனது பணிவைத் தெரிவிப்பதுடன், அந்த இஸ்லாமிய அரசனின் பாதுகாப்பையும் வேண்டி நின்று, இஸ்லாமின் பெருமையையும் அவனுக்கு உணர்த்தும். இஸ்லாம் ஒன்றே உண்மையான மதம் எனவும் மற்றக் கடவுளர்கள் எல்லாம் பொய்யானவர்கள் என்பதினை அவனுக்குக் காட்டும்.

ஒரு ஹிந்துவைக் கேவலமாக நடத்த வேண்டுவது ஒரு இஸ்லாமியனின் கடமை. ஏனென்றால் ஹிந்துக்களே முஸ்தபாவின் (முகது நபி) மிகப் பெரும் எதிரிகள். ஹிந்துக்களைக் கண்ட இடத்தில் கொல்லவும், கொள்ளையடிக்கவும், அவர்களையும், அவர்களின் பெண்களையும் அடிமைகளாக்கவும் முஸ்தபா (முகமது நபி) கட்டளையிட்டிருக்கிறார். ஒன்று ஹிந்துக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட, அடிமைகளாக்கப்பட்ட, அவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற குரான் உத்தரவிடுகிறது.”

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 14

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

மத்தியகால இந்தியாவின் வரலாற்றைப் படிக்கிற வரலாற்று ஆர்வலர்கள் ரஸியா சுல்தானா, அலாவுதின் கில்ஜி, ஃபெரோஸ்ஷா துக்ளக், ஷேர் ஷா, அக்பர் போன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நிதி நிர்வாகத் திறமையைக் குறித்து அளவுக்கதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டிருபதனைக் கண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த விளக்கங்கள் அத்தனையும் பொய்யான தகவல்களே. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த அவர்களின் வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்த பொய்யையும், புனை கதைகளையும் இந்திய வரலாற்றாசிரியர்கள் தங்களின் வசதிக்கேற்ப எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை என்பதினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முகமது-பின்-காசிமின் காலம் துவங்கி 1858-ஆம் வருடம் முகலாய ஆட்சி முடிவடையும் வரைக்கும் இஸ்லாமிய அரசர்களிடம் நிதி நிர்வாகம் என்பதே இருந்ததில்லை. அவர்களின் பொருளாதாரம் கொள்ளையடிப்பு பொருளாதாரம். பல்வேறு விதமான வரிகள், ஊழல்கள், அடுத்தவனிடம் அடித்துப் பிடுங்குவது, செத்தவனின் சொத்தை (அவனுக்கு வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தனதாக்கிக் கொள்வது, அடுத்த நாட்டின் மீது திடீரெனப்படையெடுத்து அப்பாவிகளிடம் கொள்ளையடிப்பது என அத்தனை கீழ்த்தரச் செயல்களையும் செய்த பொருளாதாரம் அது. அவ்வாறு செய்வதற்கு அன்றைக்கு ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமிய அரசனின் முழு அனுமதியும் இருந்தது.

ஒரு நாட்டின் நிதி நிர்வாகம் சரியானதாக இருக்கவேண்டுமென்றால் உண்மயான, சட்டபூர்வமான, அனைவராலும் மதிக்கக்கூடியதொரு நிதி நிர்வாகமாக அது இருக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட நிதி பொதுமக்களின் நன்மைக்கென உபயோகப்படுத்தவும் வேண்டும். நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அங்கு சாந்தியும் சமாதானமும் நிலவவும் அந்தப் பணம் உபயோகிக்கப்படுவதே நியாயமானது. முறையானது. குடிமக்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத வரி வசூலிக்கப்படவேண்டும். அவ்வாறு வசூலிக்கப்படும் வரியானது ஒரு நிலையான கால வரம்பிற்குள் வசூலிக்கப்படுவதுடன், அத்துமீறி வரி வசூல் செய்வதனைத் தடுக்கும் வகையான நீதி பரிபாலனங்களும் அங்கு செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தியாவை ஆண்ட எந்தவொரு இஸ்லாமிய அரசிலும் இந்த வழிவகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக சரித்திரமே இல்லை.

காரணம், இஸ்லாமிய அரசர்கள் அவர்கள் ஆண்ட நாட்டின் குடிமக்களுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் அல்ல. அவர்களின் நலம் விரும்பிகளாக அவர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. குரான் ஒன்றிற்கு மட்டுமே ஒரு இஸ்லாமிய அரசன் பதிலளிக்கக் கடமைப்பட்டவனாகத் தன்னை எண்ணிக் கொண்டான். மெக்காவையும், மதீனாவையும் மட்டுமே தனது அளவுகோலாகக் கருதிக் கொண்ட இஸ்லாமிய அரசர்கள் அனைவரும் இந்தியர்களை வெறுத்தார்கள். அவர்களை ஒருபோதும் ஹிந்துக்கள் என அவர்கள் அழைத்ததில்லை. தங்களின் கீழ் வாழ்ந்த இந்தியக் குடிமக்களை காஃபிர்கள் என்றும், திருடர்கள் என்றும், விலங்குகள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும் அழைத்தார்கள். அப்படியே எழுதியும் வைத்தார்கள். தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஹிந்துக்களை அடிமைகளைப் போல நடத்தி அவர்களைக் கசக்கிப் பிழியவே ஒவ்வொரு இஸ்லாமிய அரசனும் நினைத்தான். ஆனால் இந்திய வரலாற்றாசிரியர்கள் எவரும் இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல தயங்கியே இருந்திருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இஸ்லாமிய அரசனும் விடாமல் தொடர்ந்து போர்புரிந்து கொண்டிருந்தான். தன்னுடைய உடன் பிறந்தவர்களுடன் அல்லது தனக்கெதிராக புரட்சி செய்கிற தனது படைத் தலைவர்களுடன் அல்லது அடுத்த நாட்டு ஹிந்து அரசனுடன் என அவர்களின் போர் ஓயவே இல்லை. அவ்வாறு நடந்த போர்கள் அந்தப் பகுதியில் அல்லது நாட்டில் வாழ்ந்த மக்களைக் கொள்ளையடிக்கவும், கொலைகள் செய்யவும், பெண்கள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவும் உபயோகப்படுத்தப்பட்டது.

ஒரே சமயத்தில் பல முஸ்லிம் அரசர்கள் பலமுனைகளிலிருந்து ஒருவருக்கொருவர் போர் செய்து அழிவதும் நடந்து கொண்டிருந்தது. உதாரணமாக தாரா ஷிகோ, ஷுஜா, அவ்ரங்க்ஸிப், முராத் சகோதரர்கள் முகலாய அரியணைக்காக ஒருவருக்கொருவர் தொடர்ந்து போர் செய்தார்கள். இதுபோன்றதொரு அரசு மக்களிடம் நியாயமான முறையில் வரி வசூலித்து அதில் வரும் பணத்தில் போர் செய்வது என்பது நினைத்துக் கூட பார்க்கவியலாத ஒன்று. கொள்ளையடிப்பது ஒன்றே இதற்கு பதில்.

இந்தியாவின் மீது படையெடுத்து வந்த அல்லது ஆண்ட அக்பர், ஃபெரோஸ்ஷா, ஷேர்ஷா, தைமூர் போன்றவர்கள் சாலைகளின் ஓரம் சத்திரங்கள் கட்டி அதில் பயணிகள் தங்க வசதிகள் செய்து கொடுத்தார்கள் என்பதெல்லாம் ஆதாரமற்ற அண்டப்புளுகுகளே. இந்தியாவை ஆண்ட ஷத்திரிய அரசர்கள் கட்டி வைத்த சத்திரங்களின் மீது தங்களின் பெயர்களைப் பொறித்துக் கொண்டார்கள் அவர்கள் என்பதே உண்மை.

இஸ்லாமிய அரசர்கள் அதுபோன்ற சத்திரங்களையும், தங்கும் விடுதிகளையும் கட்டினார்கள் என்றால் அது தொடர்ச்சியாக அவர்கள் ஆண்ட எல்லாப் பகுதிகளின் சாலையோரங்களிலும் அவர்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் எங்குமே அது காணக்கிடைக்கவில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன்னர் ஆண்ட ஹிந்து அரசர்கள் நட்டுவைத்த நிழல்தரும் மரங்களைக் கூட ஆக்கிரமிப்பாளர்களான இஸ்லாமிய அரசர்கள் விட்டு வைக்கவில்லை. அவற்றை வெட்டியெடுத்து விறகுக்கும், படகு தயாரிக்கவும், கோட்டைகளில் ஏறும் ஏணிகள் தயாரிக்கவும், ஆயுதங்களுக்குக் கைப்பிடியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள் என்பதே வரலாறே தவிர அவர்கள் எங்கும் மரம் நட்டுப் பராமரிக்கவில்லை.

இன்றைக்கு இந்தியாவில் தேர்வெழுதப் போகும் மாணவனை உண்மைக்குப் புறம்பாக ஜஹாங்கிரின், அக்பரின், ஷேர்ஷாவின், முகமது துக்ளக்கின் அல்லது ஃபெரோஸ்ஷா துக்ளக்கின் ஆட்சிச் சிறப்புகளைக் குறித்து எழுதப் பணிக்கும் தேர்வுகள் இந்தியர்களுக்கு பெரும் துரோகத்தை இழைக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. தங்களின் அரசுகள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் சின்னாபின்னப் படுத்தப்பட்ட பின்னரும் சிறப்பாக ஆண்ட சிவாஜியைக் குறித்தும், ராணா பிரதாப்பின் ஆட்சியைக் குறித்தும், அவர்களின் தியாகத்தைக் குறித்தும், துன்பங்களிடையேயும் குடிமக்களின் அன்பைப் பெற்ற அந்தச் சிறந்த மனிதர்களைக் குறித்தும் அல்லவா அந்த மாணவர்களை தேர்வெழுதச் சொல்ல வேண்டும்?

இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்களிலேயே மிகச் சிறந்தவர் அக்பர் என நமக்கு மீண்டும், மீண்டும் கிளிப்பிள்ளைகளைப் போலக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் உண்மையில் அக்பரின் ஆட்சி ஒரு பெரும் கொள்ளைக்கார, குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து துன்புறுத்திய ஆட்சி என்பதினை நாம் காண வேண்டும். குடிமக்களைக் குறித்த அக்கறை சிறிதும் இல்லாத ஆட்சி ஒன்று இருந்ததென்றால் அது அக்பரின் ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

குடிமக்களைக் கசக்கிப் பிழிபவர்களை மட்டுமே நிதி நிர்வாகத்தைக் கவனிக்க அக்பர் அனுமதிப்பார் என்கிறார் வரலாற்றாசிரியரான பதாயுனி. அதற்கு ஏராளமான உதாரணங்களைத் தருகிறார். ஏழைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் சையத் மிர் ஃபதாவுல்லா போன்றவர்களுக்குத்தான் அக்பரின் அரசவையில் மரியாதை இருந்தது. “இனிமேல் தன்னைப் பார்க்க வரும் அத்தனை பேர்களும், அவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் அல்லது சாதாரண குடிமக்களாக இருந்தாலும், தனக்குப் பரிசுகள் கொண்டுவந்து தரவேண்டும்” என ஆணையிடும் அக்பர் எந்த விதத்தில் குடிமக்களுக்கு நன்மை செய்பவராக இருந்திருக்கவியலும்?

தனது ஆட்சிக்குட்பட்ட எல்லா பர்கானாக்களையும் (மாவட்டங்கள்) ஒரே அளவாகப் பிரித்து அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவருடமும் தனக்குக் கோடிக்கணக்கில் வரிகட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் அக்பர். ஆனால் எல்லாப் பர்கானாக்களும் வளமையானவையாக இருந்திருக்கவில்லை. வறண்ட பகுதிகளும், மலைகளும், பாலைவனங்களும், காடுகளும், நதிகளும் இருந்த பகுதிகளும் ஒரே அளவாகப் பிரிக்கப்பட்டு அந்தப்பகுதிகள் அனைத்தும் ஒரேமாதிரியான வரிகட்ட வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களிடமிருந்து பணத்தை எப்பாடுபட்டகிலும் கசக்கிப் பிழிய குரோரிகள் (கோடிப்பணம்) என்பவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

மிகக் கொடூரமாக நடந்து கொண்ட குரோரிகளின் காரணமாக பல ஏழை விவசாயிகள் அவர்களின் பிள்ளைகளையும், மனைவியையும் சந்தையில் அடிமைகளாக விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பலர் அவர்களின் விவசாய நிலங்களைக் கைவிட்டுவிட்டு பிற நாடுகளுக்குத் தப்பியோடினார்கள். விவசாயம் முற்றிலும் நிறுத்தப்பட்டு எங்கும் குழப்பம் நிலவியது. ஆனால் சரிவர பணத்தை வசூலிக்காத குரோரிகள் ராஅஜா தோடர்மல் போன்ற அக்பரின் கையாட்களால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அடிகளாலும், உதைகளாலும் பல குரோரிகள் இறந்தார்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு நாட்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

சரியாக வரி வசூல் செய்யாத பல அதிகாரிகள் சிறையிலேயே இறந்தார்கள். அவர்களைக் குழிகளில் புதைத்த மறுகணம் இறந்தவர்களுக்குச் சொந்தமான நிலங்களும், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அக்பரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்பரின் அமீர்கள் அப்பாவிகளிடம் பிடுங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள். சாதாரண குடிமக்களைக் குறித்து அக்பரோ அல்லது அவரது கீழ் பணிபுரிந்த வஸீர்களோ அல்லது அமீர்களோ எந்தக் கவலையும் படவில்லை. ராஜா தோடர்மல் போன்ற அயோக்கியர்கள் அக்பரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேலும், மேலும் குடிமக்களை கசக்கிப் பிழிந்து அவர்களை ஒட்டாண்டிகளாக்கினார்கள்.

இந்த வரலாற்றைத்தான் அக்பரின் சிறந்த நிதி நிர்வாகமாக இந்திய வரலாற்றாசிரியர்கள் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரலாறு நமது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்குமானால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகு இந்தியா ஒரு பெரும் வல்லரசாக மாறியிருக்கும்.

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 13

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பர் மதுவிற்கும், ஓப்பியம் போன்ற போதை மருந்துகளுக்கும் அடிமையானதொரு மனிதர். மனசாட்சியை உறுத்தும்படியான கொடூரங்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிகழ்த்தி முடித்த அக்பர், அந்தச் செயல்களையெல்லாம் மறப்பதற்கானதொரு வடிகாலாகவே  இந்தப் போதைப் பழக்கத்தை உபயோகித்திருக்க வேண்டும்.

வின்செண்ட் ஸ்மித், “அக்பர் தன் வாழ்நாளில் பெரும்பகுதியில் குடிகாரராக, போதைமருந்து உபயோகிப்பாளராகவே கழித்தார். இந்தப் பழக்கம் அவரது தைமூர் அரச பரம்பரையிலிருந்து அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அக்பரின் பாட்டனான பாபரை இந்த விஷயத்தில் அடித்துக் கொள்ளவே இயலாது. அவரது தகப்பனான ஹுமாயுனோ அதனையும் விட மோசமான ஓப்பியத்திற்கு அடிமையானதொரு மனிதர். நன்றாக போதையை ஏற்றிக் கொண்ட அக்பர் அரசவையில் செய்த மோசமான செயல்கள் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்பரின் உதாரணத்தைத் தொடர்ந்து அவரது அரசவையில் இருந்த அத்தனை பேர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார்கள்.

அக்பரின் இரண்டு மகன்கள் (முராத் மற்றும் தானியெல்) இந்தப் போதைப் பழக்கங்கள் காரணமாக இளவயதிலேயே இறந்து போயிருந்தார்கள். அவரது மகனான ஜஹாங்கிர் அவரது உடல் உறுதியின் காரணமாக பிழைத்துக் கிடந்தார். ஜஹாங்கிரின் குடிப்பழக்கம் உலகப் பிரசித்தமானது. மூக்கு முட்டக் குடித்த அக்பர் யானையின் மீதேறி, யமுனையில் படகுகளைக் கட்டி அமைக்கப்பட்ட பாலத்தின் மீது வேகமாக ஓடியிருக்கிறார். சூரத்தில் குடித்துவிட்டு அருகிலிருப்பவர்களுடன் கத்திச் சண்டை போட முயன்ற சம்பவங்களும் உண்டு”.

****

இந்திய வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்வது என்னவென்றால், பல சிறிய ராஜ்ஜியங்களாகச் சிதறிக்கிடந்த இந்திய அரசுகளை வென்று அவற்றை ஒருங்கிணைத்து, ஒன்றுபடுத்தி ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கியவர் அக்பரே என்பது. ஆனால் அதில் சிறிதும் உண்மை இல்லை. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இதுபோன்றதொரு முடிவுக்கு வருவது தவறானேதேயாகும்.

முதலில் மனதளவிலோ அல்லது உடலளவிலோ அல்லது இன, மொழி வழியாகவோ அக்பர் ஒரு இந்தியரில்லை. அவர் முற்றிலும் இந்தியாவிற்கு அன்னியப்பட்டதொரு ஆக்கிரமிப்பாளர். அவருடைய எண்ணமெல்லாம் இந்தியர்களை வென்று, அவர்களை அடிமைப்படுத்தி, அவர்களின் கலாச்சார, வாழ்வாதாரங்களை அழிப்பதாக மட்டுமே இருந்திருக்க முடியுமே தவிர அவர்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்பதற்காக இருக்கவே முடியாது. அவ்வாறு அக்பர் இந்தியர்களுக்கு நன்மைகள் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மாறாக அவர் வாழ்நாள் முழுவதும் இந்தியர்களின் மொழி, இன, கலாச்சார, பொருளாதார அடையாளங்களை அழிப்பதாக, குறிப்பாக ஹிந்துக்களை அவமதிப்பதாக மட்டுமே இருந்தது என்பதினை யாராலும் மறுக்க இயலாது.

அக்பர் மட்டுமில்லை. அவருக்கு அடுத்து வந்த அவரது வாரிசுகளும் தங்களை இந்திய வம்சாவளியினராகக் காட்டிக் கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும் தைமூர் குடும்பமும், சக்டாய் (Chagtai) அரசும் மட்டுமே அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதினை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். துருக்கியையும், இராக், இரான், சிரியா, ஆப்கானிஸ்தான், அபிசீனிய நாடுகளைத் தங்களின் தந்தையர் நாடாகவும், மெக்காவையும், மெதினாவையும் தங்களின் வழிபடு இடமாகவும், இந்திய ஹிந்துக்களைத் தங்களில் எதிரிகளாகவும் மட்டுமே கருதி வந்தனர். இந்திய ஹிந்துக்களைப் படுகொலை செய்வதனையும், அவர்களின் வழிபாட்டிடங்களை அழிப்பதனையும் தங்களின் புனிதக் கடமையாகவும் செய்து வந்தார்கள் என்பதனைப் பார்க்கையில் சரியான சிந்தனையுள்ள இந்தியர்கள் எவரும் அவர்களைத் தங்களில் ஒருவராக நினைக்கவே மாட்டார்கள் என்பது உறுதி.

அக்பர் – இறப்பிற்குப் பின் வரையப்பட்ட சித்திரம்

எங்கிருந்தோ வந்து தங்களின் ஊரைத் திருடியும், கொள்ளையடித்தும்,  தங்களின் பெண்களின் கற்பைச் சூறையாடியும் வாழும் ஒருவன், தங்களுடைன், தங்களுடைய ஊரிலேயே வசிப்பதால் அவன் அந்த ஊரைச் சேர்ந்தவனாகிவிடுவானா என்ன? உண்மையில் அக்பரின் நடவடிக்கைகளினால் வெறுத்துப் போயிருந்த இந்தியர்கள் அவரை பெருந்தொல்லையாகவே கருதினார்கள். அக்பர் இறந்ததும் ஒரு பெரும் தொல்லை ஒழுந்ததாகப் பெருமூச்சு விட்ட இந்தியர்களே அதிகமிருந்தார்கள்.

இந்தியர்களுக்கு முற்றிலும் அன்னியரான அக்பர் இந்தியக் குடிமக்களை மிகக் கொடூரமாக அடக்கி ஆண்டார். இதனைக் குறித்துக் கூறும் வின்செண்ட் ஸ்மித், “உண்மையில் இதுபோன்றதொரு கொடுமையான அரசன் உலகில் எங்கும் இருந்ததில்லை. அக்பரின் ஒரே குறிக்கோள் இந்தியர்களை அடக்கியாள்வது மட்டும்தான். அவரது மொத்த ஆட்சியும் அடுத்த நாடுகளைத் தாக்கிப் பிடிப்பது என்பது மட்டுமே முக்கியமானதொரு செயலாக இருந்தது. ஒவ்வொரு சுதந்திர இந்திய அரசையும் வென்று அடிமைப்படுத்துவதே அக்பரின் தலையாய இலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. ராணி துர்காவதியின் கீழ் வாழ்ந்த கோண்ட்வானா ராஜ்ஜிய மக்கள் நிச்சயமாக ஆசிப்கானின் (அக்பரி தளபதி) கீழ் வாழ்வதனைவிடவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்…”

அக்பரையும் அசோகரையும் ஒப்பிடுகிற அறிவிலிகளைக் கண்டு அக்பர் சிரித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. கலிங்கத்தை வென்ற அசோகர் வன்முறையை முற்றிலும் ஒதுக்கித் தள்ளியவர். ஆனால் அக்பரோ கொலைகளிலும், கொள்ளைகளிலும் மகிழ்கிற அற்பனாகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்ததொரு கயவன்.

அக்பரால் வெல்லப்பட்ட சிற்றரசுகள் அனைத்திலுமே அக்பரின் வாள் இடைவிடாத படுகொலைகளையும், கொள்ளைகளையும், கற்பழிப்புகளையும், வழிபாட்டுத் தல அழிப்புகளையும், பெண்களைக் கவர்ந்து செல்வதனையும், அப்பாவிகளை அடிமைகளாகப் பிடித்துச் செல்வதனையும், கோவில்களை அழித்து மசூதிகளாக்குவதனையும்…..இன்ன பிற கொடுமைகளையும் இடைவிடாமல் செய்திருக்கிறது என்பதினை அக்பரின் வரலாற்றாசிரியர்களே சந்தேகமின்றி குறித்து வைத்துள்ளார்கள். சித்தூர், ரந்தம்பூர், கலிஞ்சார், குஜராத், பெங்கால், பிகார், ஒரிசா, காஷ்மீர் கண்டேஷ், அகமத் நகர், அஸீர்கத், பன்ஸ்வாடா, டோங்க்பூர், பிகானீர், ஜோத்பூர், ஜெய்சால்மீர், சிரோஹி, காபூல், நாகர்கோட், பூன்தி…..என அளவிடமுடியாத இந்திய நகரங்கள் அக்பரிடம் சிக்கிச் சின்னாபின்னமடைந்தன என்பதன்றோ உண்மை?

வென்ற அரசர்களின் பெண்களை தனது அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்ட அக்பரை எப்படி அசோகனுக்கு இணையாகக் கூறமுடியும்? நாளெல்லாம் போதை மருந்து உண்டு, அடுத்தவனை அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த படிப்பறிவில்லாத அக்பருடன், தூய ஒழுக்கமும், பக்தியும் கொண்டு தங்களின் வாழ்நாளைக் கழித்த ஒரே ஒரு ஹிந்து சிற்றரசனுக்குக் கூட இணையில்லாதவர் அக்பர்.

தோற்ற ஹிந்து அரசனின் பெண்களைத் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் அடைத்த நாளில் இருந்த அந்தப் பெண்ணின் வாழ்வு முடியும் வரைக்கும் அவள் அதனை விட்டு வெளியே வரவே முடியாது. அவர்களின் பெற்றோர்களோ அல்லது உறவினர்களோ அந்தப் பெண்ணைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏறக்குறைய ஐந்தாயிரம் பெண்கள் அடைந்து கிடக்கும் அந்தப்புரத்தில் அடைக்கப்பட்ட, ஹிந்து அரசனால் செல்லமாக வளர்க்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதியை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை வயிறார உணவு கூட அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பில்லை. கழிப்பிட, குளியறைகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு கரண்டியளவு எண்ணெயைக் கூட அந்தப் பெண்கள் பெறமுடியாத கொடூரத்தில்தான் வாழ்ந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் உழலும் தங்களின் பெண்ணை எண்ணி வருந்தும் அவர்களின் பெற்றோர்களின் மனநிலையைக் குறித்து சிறிது எண்ணிப்பாருங்கள். மனசாட்சியுள்ள எந்த அரசனாவது இதுபோன்றதொரு செயலைச் செய்யத் துணிவானா?

சில நேரங்களில் அந்தப்புரப் பெண்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் உண்டு. உதாரணமாக ஜஹாங்கிரின் மனைவியான மன்பாய். இத்தனைக்கும் மன்பாயின் சகோதரன் அக்பரின் அரசவையில் ஒரு குறிப்பிடத்தக்க பதவியில் இருந்தவர். இஸ்லாமிய வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அந்தப் பெண்கள் பரிசாக அளிக்கப்பட்டார்கள். சட்ட ரீதியான மனைவிகள் அந்தப்புரத்துப் பெண்கள் எவரேனும் கருவடைந்தால் அவர்களைக் கொன்றார்கள். தங்களின் பிள்ளைகளுக்குப் போட்டியாக அவளின் பிள்ளை வந்துவிடக்கூடாது என்பதற்காக. கட்டாயக் கருக்கலைப்புகளும் உண்டு. இவை அத்தனையும் ஹிந்து அரசர்களைக் கேவலப்படுத்துவதற்காக மட்டுமே அக்பர் என்னும் கயவனால் செய்யப்பட்டவை.

பல ஹிந்துக் கோவில்கள் அக்பரால் இஸ்லாமிய பயணியர் விடுதிகளாக, மசூதிகளாக, குதிரைகள் கட்டும் லாயமாக மாற்றப்பட்டிருக்கின்றனவே அன்றி இந்திய வரலாற்றாசிரியர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் போல அக்பர் “எல்லா மதங்களையும் சமமாக பாவித்தற்கான” ஆதாரங்கள் எதுவுமில்லை. அக்பர் அடிப்படையில் சந்தேகமில்லாமல் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். எல்லா மதங்களையும் சமமாக நினைத்த “அக்பர் தி கிரேட்” ஏன் ஒரே ஒரு மசூதியைக் கூட பயணியர் விடுதியாக, குதிரை லாயமாக மாற்றவில்லை?

(தொடரும்)

****

அக்பர் என்னும் கயவன் – 12

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பர் தான் தோற்கடிக்கும் நாடுகளில் இருந்து பெண்களைப் பிடிப்பதனை ஒரு தொழிலாகவே கொண்டிருந்ததொரு கயவன் என்று நான் சொன்னால் பெரும்பாலான இந்தியர்கள் அதனை மறுக்கவே செய்வார்கள். ஏனென்றால் அவர்களது மூளை பொய்களாலும், புனை கதைகளாலும் நிரப்பப்பட்டுள்ளன.

ராணி துர்காவதி

பெரும்பாலான இந்தியர்கள் ராணி துர்காவதி என்னும் வீரப்பெண்மணியை அறிந்திருக்க மாட்டார்கள். அக்பரின் படையினரை எதிர்த்துப் போராடிய ராணி துர்காவதி தோல்வியடையும் நிலையில் போற்களத்தில் வைத்தே தற்கொலை செய்து கொண்டார். அக்பரிடம் பிடிபட்டால் தனக்கு ஏற்படும் கதியை நன்கு உணர்ந்ததாலேயே அந்தப் பெண்மணி அந்த முடிவை எடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துர்காவதியின் சகோதரியான கமலாவதியும், அவளது மருமகளும் சிறைப்பிடிக்கப்பட்டு அக்பரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, இறை அச்சத்துடனும், பக்தியுடனும் வாழ்ந்த ஹிந்து அரச, அரசிகளைத் தோற்கடித்து அவர்களின் பெண்களைப் பிடித்துக் கொண்டு வந்து,  மதுவிலும் போதைமருந்திலும், கொலையிலும், படுகொலைகளிலும் மூழ்கிக் கிடக்கும் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டுவந்து அவர்களை அவமானமும், சிறுமையும் செய்வது மட்டுமே அக்பரின் நோக்கமாக இருந்தது. இதனை உணர்ந்த ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை எரித்துக் கொன்றார்கள். இப்படிப்பட்ட கயவனையே நமது வரலாற்றாசிரியர்கள் பிற மதத்துப் பெண்களை திருமணம் செய்து அக்பர் மத ஒற்றுமையைக் காத்தார் எனக் கதை கட்டுகிறார்கள்.

அக்பரின் வரலாற்றாசிரியரும், மஹா புளுகன் என்று அறியப்பட்டவருமான அபுல் ஃபசல், “அக்பர் தனது அந்தப்புரத்துப் பெண்களுக்காக அருமையான மாளிகைகளைக் கட்டினார். அங்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தாலும் அக்பர் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனியறையை அளித்தார். மேலும் அந்தப் பெண்களை பல குழுக்களாகப் பிரித்து அந்தப் பெண்களுக்கென பல வேலைகளைக் கொடுத்திருந்தார். பல நல்ல குணமுள்ள பெண்கள் அந்தப் பெண்களைக் கவனித்துக் கொள்ளும் தாதிகளாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை மேற்பார்வை செய்பவர்களாகவும் அக்பரால் நியமிக்கப்பட்டனர். இன்னொரு பெண் அவர்களின் தேவைகளை எழுதிக் கொடுக்கும் எழுத்தராகவும் இருந்தாள்” என்கிறார்.

இதனை விடவும் ஆகாசப் புளுகினை நாம் எங்கும் கண்டிருக்க இயலாது. இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் ஐந்தாயிரம் பெண்கள் தங்குவதற்கு ஏற்றவாறு அக்பரால் கட்டிக் கொடுக்கப்பட்ட மாளிகையை நாம் காணமுடியாது என்பதே உண்மை.

அக்பர் தனது அரசவை முக்கியஸ்தர்களின் மனைவிகளையும் விட்டு வைக்கவில்லை. பதாயுனி சொல்கிறார், “தங்களை அரசருக்கு ‘அறிமுகப்படுத்திக்’ கொள்ள விழையும் “தகுதியுள்ள”அரசவை முக்கியஸ்தர்களின் பேகம்கள் அக்பருக்கு தங்களின் விருப்பத்தைத் தெருவித்து பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட முக்கியஸ்தர்களின் மனைவிகள் அக்பரின் அந்தப்புரத்திலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும். அந்தப்புரத்தைப் பாதுகாப்பதெற்கென தன்னிடமிருக்கும் ஏராளமான காவலாளிகளை நம்பாத எண்ணமுடையவரான, அந்தப்புரத்தை தன்னுடைய நேரடிக் கண்கானிப்பிலிருந்து விலக்கியதேயில்லை”.

மேற்சொன்னவற்றை சிறிது ஆராய்ந்து பார்ப்போம். திருமணமான எந்தப் பெண் தன்னை அக்பரிடம் மனமுவந்து ஒப்புவிப்பாள்? ஏற்கனவே பெண்களால் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தில் நுழைவதற்கென மனுக் கொடுத்துக் காத்துக் கிடக்க அந்தப் பெண்களுக்கு வேறு வேலையில்லையா என்ன? தன்னுடைய கணவனைய்ம், குழந்தைகளையும், உற்றார் உறவினர்களையும் மாதக் கணக்கில் விட்டுவிட்டு அக்பரின் அந்தப்புரத்தில் அடைந்து கிடைக்க அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? மேற்சொன்ன “தகுதியுள்ள பெண்கள்” என்பதற்கு அக்பரின் கண்ணில் பட்ட தனது அரசவை முக்கியஸ்தர்களின் அழகான மனைவிகள் எனபதுதானே அதற்கு அர்த்தம். அவர்கள் வர மறுத்தால் அல்லது அவர்கள் கணவர்கள் அனுப்ப மறுத்தால் அவர்களுக்கு என்ன நிகழும் என்று நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆக, அக்பர் அடுத்தவனுடைய மனைவியை மாதக் கணக்கில் தன்னுடன் வைத்திருந்து சந்தோஷித்திருக்கிறார். அதற்குப் பிறகும் அவராக திரும்ப அவரது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தால்தான் உண்டு. இல்லைலெயென்றால் அவளும் ஐந்தாயிரம் பேர்களில் ஒருத்தியாக மாறிப்போவாள்.

அக்பர் அந்தப்புரத்தின் பாதுகாப்பைத் தானே நேரடியாக கண்காணித்தார் என்பதிலும் அர்த்தம் உண்டு. ஏனென்றால் அரசவையில் தனக்கு அருகில் இருப்பவன் தனது மனைவியை மீட்டெடுக்க எந்த நேரத்திலும் எதுவும் செய்வான் என்பது அக்பருக்கு நன்றாகவே தெரியும். நிச்சயமாக அவருக்கு மிரட்டல்களும் வந்திருக்கவே செய்யும். எனவே அக்பர் அந்தப்புர பாதுகாப்பில் தனது பிடியை இறுக்கமாக வைத்திருந்திருக்கக் காரணம் இருக்கிறது.

தனது இருப்பிடத்திற்கு அருகிலிருந்த பெரும் விபச்சார மையங்களை நிர்வகிப்பதிலும், அதில் பணிபுரிந்த விபச்சாரிகள் மீதும் அக்பருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. தனது விபச்சார மையங்களில் பணிபுரியும் பெண்களிடையே இருந்த கன்னிகளின் எண்ணிக்கையையும் அக்பர் துல்லியமாகக் கணக்கு வைத்திருந்தார். அவ்வப்போது விபச்சாரிகளையும், கன்னிகளையும் அழைத்துப் பேசுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தார் அக்பர்.

அபுல் ஃபசல் சொல்கிறார், “பேரரசர் அரண்மனைக்கு அருகிலிருந்த விபச்சாரிகளின் பகுதியில் ஒரு மதுக்கடையைத் திறந்தார். அந்த விபச்சார மையத்தில் பணிபுரிந்த பெண்களின் எண்ணிக்கையை யாராலும் கணக்கிட இயலாத அளவிற்கு ஏராளமான பெண்கள் அங்கு இருந்தார்கள். அந்தப் பகுதி ‘சைத்தான் புரா’ என்றழைக்கப்பட்டது. அரச சேவகர்கள் நடனமாடும் பெண்களைத் தங்களுடன் அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் வழக்கமிருந்தது. அக்பருக்கு அறிமுகமானதொரு அரச சேவகனுக்கு கன்னிப் பெண் எவளும் தேவையாக இருந்தால் அவன் முதலில் அக்பரின் அனுமதியைப் பெற வேண்டும். பெண்களைப் போலவே சிறுவர்களும் அங்கு விபச்சாரம் செய்து வந்தார்கள். இதன் காரணமாக அங்கு அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு ரத்தம் சிந்தியது…..பேரரசர் அவ்வப்போது விபச்சாரப் பெண்களில் முக்கியமானவளை அழைத்து முதன்முதலில் யாரால் அவர்கள் கன்னி கழிந்தார்கள் என்பதினைக் கேட்டு மகிழ்ந்தார்….”.

அக்பர்நாமா நூலை அக்பரிடம் சமர்ப்பிக்கும் அபுல் பசல்

இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்பில் கூறப்படும் “விபச்சாரிகள்” என்கிற பதம் ஹிந்துப் பெண்களைக் குறித்தே சொல்லப்பட்டது என்பதினை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். போர்களில் தங்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், கணவன்மாரையும் இழந்த அப்பாவிப் பெண்கள் அக்பரால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைக்கப்பட்டார்கள்.

மேற்கூறிய விஷயங்கள் பெரும்பாலான இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கலாம். ஆனால் அக்பரின் ஆட்சிக்காலத்தில் உண்மையிலேயே நிகழ்ந்த அவலங்கள் எனபதினை உங்களின் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். சிறுவர்களுடன் உறவு கொள்வதில் ஆரம்பித்து விபச்சாரமும், போதைமருந்து உபயோகமும், குடிகாரர்களின் சண்டைகளும் அக்பரின் அரசாட்சியில் தினப்படி வாழ்க்கைமுறையாகவே இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஒரு பேரரசனே சிறுவர்களை பிறருக்குப் புணர்ச்சிக்கென அனுப்பி வைக்கும் “சேவைகள்” உலகின் எங்குமே கேள்விப்பட்டிருராத ஒரு விஷயமாகும்.

சிறுவர்களைப் புணர்வது அக்பரின் “விலைமதிப்பற்ற” பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அக்பரின் பாட்டனான பாபர் தனக்கும் இன்னொரு சிறுவனுக்கும் இருந்த முறையற்ற தொடர்பினைக் குறித்து மிக விளக்கமாகவே அவரது வரலாற்றுக் குறிப்புகளில் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். சிறுவர்களின் மீது பித்துப் பிடித்து அலைந்த பாபரை அவர் தனது மனைவியிடம் உடலுறவு கொள்ளும்படி பாபரின் தாய் வற்புறுத்தி அனுப்பி வைத்த சம்பவமும் பதிவாகியிருக்கிறது. அக்பரின் தகப்பனான ஹுமாயுன் அதற்குச் சிறிது குறைந்தவனில்லை. தனது உபயோகத்திற்கென சிறுவர்களை எப்போது தன்னுடனேயே வைத்திருந்தான் ஹுமாயுன். அக்பரும் ஏராளமான சிறுவர்களை தனது அந்தப்புரத்திற்கு அருகிலேயே வைத்திருந்ததாக அபுல் ஃபசல் கூறுகிறார்.

அக்பரின் சேவகர்கள் தங்களுக்கென “ஆண் காதலர்களை” வைத்திருப்பது சர்வ சாதாரணமானதொரு விஷயம். அபுல் ஃபசல் சொல்கிறார், “அக்பரின் ஆட்சிக்காலத்து 12-ஆவது வருடத்தில் அக்பரின் அரசவை சேவகனான முஸாஃபர் என்பவன் குதுப் என்னும் சிறுவனுடன் உறவு வைத்திருந்தான். பொறாமையடைந்த அக்பர் வேண்டுமென்றே அந்தச் சிறுவனை முஸாஃபரின் வீட்டிலிருந்து பிடித்து கொண்டு வர ஆணையிட்டார். அதனால் கோபமடைந்த முஸாஃபர் ஒரு ஃபக்கீரின் உடையை அணிந்து காட்டுக்குள் சென்றுவிட்டான். வேறுவழியில்லாமல் அக்பர் அவனைத் திரும்ப அழைத்து அவனது “ஆண் காதலனை” அவனிடம் ஒப்படைத்தார்”.

இதே போன்றதொரு இன்னொரு சம்பவம் அடில்ஷா காலத்தில் நிகழ்ந்தது. தன்னை தவறான முறையில் உபயோகிக்க முயன்ற அடில்ஷாவை அவரது அரண்மனையிலிருந்த அலி ஒருவன் கொன்றுவிட்டான். அடில்ஷா சிறுவர்களைப் புணர்வதில் பேரின்பம் கொண்டவர். தனது இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பீதரின் மாலிக் பரீத் என்பவரிடமிருந்து இரண்டு அலிகளை விலைக்கு வாங்கிய அடில்ஷா அதில் ஒருவனை உபயோகிக்க முயல்கையில் அவனால் கொல்லப்பட்டான். எனவே ஆண்களுடன் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்வதும், சிறுவர்களைப் புணர்வதும் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆட்சியின் ஒரு அங்கமாகவே இருந்துவந்துள்ளது என்பதினை அறியலாம்.

அபுல் ஃபசல் அக்பரின் அரசவையில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தையும் கூறுகிறார்.

“ஷா குலி-மகரம்கான் என்பவன் காபூல்கான் என்கிற சிறுவனுடன் காதல்வயப் பட்டிருந்தான். அக்பர் அவனிடமிருந்து அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டார். கோபமடைந்த குலி-மகரம்கான் ஒரு யோகியைப் போல உடையணிந்து சாமியாராக காட்டிற்குள் போய்விட்டான் (வழக்கம் போல!). அக்பரின் மாமனான பஹ்ரம் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு குலி-மகரம்கானை மீண்டும் அக்பரிடம் அழைத்துப் போனார். வேறு வழியில்லாத அக்பரும் குலி-மகரம்கானிடம் அவனது காதலனான காபூல்கானை ஒப்படைத்தார்”.

பின்னர் அக்பர் குலி-மகரம்கானை தனது அந்தப்புரத்திற்குள் அனுமதித்தார். அப்பாவித்தனமாக அந்தப்புரத்திற்குள் சென்ற குலி-மகரம்கானை காயடித்துவிட்டார் அக்பர்.

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 11

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி… 

அக்பரின் சமகால குறிப்பேடுகள் அவர் தனது ஹராமிலும் (அந்தப்புரம்), சிறைகளிலும், சத்திரங்களிலும் அடைத்து வைத்திருந்த ஏராளமான அழகிய பெண்களை தனது உபயோகத்திற்கு மட்டும் வைத்துக் கொண்டதுடன் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவர்களைப் பகிர்ந்து கொண்டதனையும் குறிப்பிடுகின்றன. அவரைச் சந்திக்க வருபவர்கள் பெண்களை பல இடங்களிலிருந்தும் கொண்டுவந்து அவரிடம் ஒப்படைத்தார்கள். வரலாற்றாசிரியர் பதாயுனி சொல்கிறார், “ஷியாக்கள் என்கிற ஒரே காரணத்திற்காக காஷ்மீரை ஆண்ட மீர் யாகூப்பும், பாரசீகத்தின் இஸ்ஃபஹானைச் சார்ந்த மிர்ஸா முக்கிமும் அக்பரால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹுசைன் கான் என்பவரின் இரு மகள்களை அக்பருக்குப் பரிசளிக்க அரசவைக்கு வந்தவர்கள்”.

இதன்படி யார் வேண்டுமானாலும் யாருடைய மகளையோ, சகோதரியையோ அல்லது மனைவியையோ தூக்கிக் கொண்டு வந்து அக்பருக்குப் பரிசாக அளிக்கலாம் அல்லது அவனது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்கிற நிலைமைதான் அக்பரின் ஆட்சிக்காலத்தில் நிலவியிருக்கிறது எனக் காட்டுகிறது.

நகர்ப்புறங்களுக்கும், கிராமப்பகுதிகளுக்கும் சென்ற அக்பரின் படையினர் அங்கிருந்த ஆண்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பெண்களைக் கைப்பற்றி அவர்களை இரக்கமின்றி வன்புணர்வு செய்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பின்னர் அந்தப் பெண்கள் வாழ வழியின்றி விபச்சாரம் செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான அபலைப் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. பதாயுனி, “முகலாய அரசில் விபச்சாரிகளின் எண்ணிக்கை தலைநகரில் எண்ணவே இயலாத அளவிற்குப் பெருகிக் கொண்டே சென்றது.  அக்பர் அவர்களை கவனித்துக் கொள்ள ஒரு மந்திரியையும், ஒரு செயலாளனையும் நியமித்தார். அந்தப் பெண்களை உபயோகித்துக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்லலாம். அதேசமயம் நடனப் பெண்களை எவரும் தங்களது வீடுகளுக்கு, ஒருசில நிபந்தனைகளுக்கு உட்படாமல்,  அழைத்துச் செல்வதனை  அக்பர் அனுமதிக்கவில்லை.

யாருக்கேனும் ஒரு  கன்னிப் பெண் தேவைப்பட்டால், அவர்கள் அக்பருக்கு அறிந்தவர்களாக இருந்தால், அவர்களின் உதவியாளர்கள் மூலம் அக்பருக்கு மனு அளிக்க வேண்டும். எத்தனை சட்ட திட்டங்கள் புனையப்பட்டாலும் பலர் புனைப்பெயர்களை உபயோகித்து அந்தப் பெண்களை தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். இதன் காரணமாக தீயொழுக்கம் மிகுந்த குடிகாரர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்தினார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் இதுபோன்ற செயல்களை அக்பரால் முழுமையாகக் கட்டுப்படுத்த இயலவில்லை.

அக்பர் தனக்குத் தெரிந்த பல விபச்சாரிகளைத் தனிப்பட்ட முறையில் தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து அவர்களை யார், யாரெல்லாம் உபயோகித்துக் கொண்டார்கள் என்பது போன்ற ‘கிளு, கிளு’ கதைகளை கேட்டு மகிழ்ந்தார்” என்கிறார்.

இந்தியாவில் நடந்த இஸ்லாமிய ஆட்சி ஹிந்துஸ்தானத்தை ஒரு மாபெரும் விபச்சார கூடமாக மாற்றியது. அவ்வாறு மாற்றிய இஸ்லாமிய அரசர்களுக்கெல்லாம் அரசன் அக்பர்தான் என்பதில் சந்தேகமில்லை.

போரில் தோற்றுச் சரணடையும் ஹிந்து அரசர்கள் தங்களின் பெண்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்பர் விரும்பினார். இந்த வழிமுறையின் மூலமாக இந்தியாவின் பல தலைசிறந்த ஹிந்து அரசர்களின் மகள்களைத் தனது அந்தப்புரத்திற்கு அபரித்துச் சென்றார். ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையில் கூடிக் கொண்டே போன தோல்வியுற்ற அரசர்களின் பெண்கள் எவ்வாறு வன்புணர்வுக்கும், விபச்சாரம் செய்வதற்கும் ஆளானார்கள் என்பதனை விளக்குவதற்கு பதாயுனி சொல்லும் ஒரு சம்பவம் இது. “ஆப்கானின் ஸ்வாட் பகுதியையும் பாஜூரையும் பிடித்து அழிக்கும்படி அக்பர் தனது தளபதிகளான ஜய்ன் கோகாவுக்கும் ஆசஃப்கானுக்கும் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அந்தப் பகுதியை ஆண்ட ஜலாலாவைத் தோற்கடித்து பல ஆயிரக்கணக்கான படைவீரர்களைக் கொன்றனர். ஜலாலாவின் மனைவிகளும், அவரது குடும்பமும் பின்னர் 14,000 மேற்பட்ட உறவினர்களும் அக்பரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்”. இப்படியாக அக்பரை அடைந்த ஏராளமான பெண்கள் ஆடு, மாடுகளைப் போல நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்கள். பின்னர் அரசவையின் முக்கியஸ்தர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டார்கள். பல ஆண்களின் கைமாறிய அந்த அப்பாவிப் பெண்களின் நிலையை விளக்குவது கடினம். நேரம் காலமில்லாமல் புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண்கள் சரியான உணவின்றி அழுக்குப் பிடித்த அறைகளில் அடைத்துவைக்கப்பட்டார்கள். தினப்படி ஏச்சும், தங்களின் அந்தஸ்திற்குத் தகுதியில்லா கேவலமான வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டும்,  மூக்கின் முனை வரைக்கும் வரும் புர்க்காக்களை அணியச் செய்தும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

பல தார மணத்தை விலக்க இயலாத அக்பர் தனது அந்தப்புரத்திலிருக்கும் பெண்களை தனது அரசவைப் பிரதனிகளுக்குப் பகிர்ந்தளிக்கப் போவதாக வதந்திகள் பரவியது. அந்த வதந்திகள் உண்மையானதாகவே இருக்க வேண்டும். அக்பருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனைவிகள் இருந்ததில்லை என்பதினை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். தன்னுடைய அந்தப்புரத்திலிருந்த அத்தனை பெண்களும் தன்னுடையவர்கள் என்கிற எண்ணமுடையவர் அக்பர். வெல்லப்பட்ட நாடுகளில் இருக்கும் எந்தவொரு அழகிய பெண்ணும் தனது அந்தப்புரத்திற்கு மட்டுமே வந்தாக வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்படியே அக்பர் தனது அந்தப்புரத்துப் பெண்களை பிறருக்குப் பகிர்ந்தளித்திருந்தாலும் அவருக்கு ஒன்றும் குறைந்திருக்கப் போவதில்லை. ஏனென்றால் அக்பரின் அந்தப்புரம் தொடர்ச்சியாக வெல்லப்பட்ட நாட்டுப் பெண்களால் நிரம்பிக் கொண்டே இருந்தது.

இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் இருந்த ஒற்றுமைகளைக் குறித்து அக்பரின் அரசவை முஸல்மான்களிடம் விவாதித்துக் கொண்டிருந்த பாதிரி மொன்சராட்டே, அவருடைய சக பாதிரியான ருடால்ஃப் என்பவர் இஸ்லாமின் தீர்க்கதரிசியானவர் அவருடைய புத்தகத்தில் தான் இயற்கைக்கு முரணான புணர்ச்சிகளைச் செய்ய (சிறுவர்களுடன்) அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருப்பதனை சுட்டிக்கட்டியவுடன் அங்கிருந்த முஸல்மான்கள் அவமானத்தில் முகம் சிவந்தார்கள் என்கிறார்.

டாமனில் எதிர்பாராரத தாக்குதலைத் துவங்கிய முகலாயப் படைகள், தங்களிடம் பிடிபட்ட போர்த்துக்கீசிய சிப்பாய்களிடம் அவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் அழகான, ராஜகுலப் பெண்களைப் பரிசளிப்பதாக அக்பரின் படையினர் வாக்களித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த போர்ச்சுக்கீசிய சிப்பாய்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு அக்பரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. அவ்வாறு வாக்களிக்கப்பட்ட “அழகான, ராஜகுலப்” பெண்கள் அக்பரால் சிறைப்பிடிக்கப்பட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஹிந்துப் பெண்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் பெரும்பாலான ஹிந்துப் பெண்கள் அக்பராலும் அவரது முகலாய அரசவையினராலும், சிப்பாய்களாலும் விபச்சாரிகள், நாட்டியப் பெண்கள், அடிமைகள் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வாறே அவர்கள் எழுதிய குறிப்புகளிலும் எழுதி வைத்திருக்கின்றனர் என்பதினைக் காணலாம்.

தன்னிடம் பிடிபட்ட பெண்களைத் துன்புறுத்தாமல், கற்பழிக்காமல் விட்டு வைப்பது ஒரு பெரும் இரக்க குணமாக தம்பட்டமடித்துக் கொண்டார் அக்பர். அவ்வாறு நிகழ்வது அபூர்வமான ஒன்று. அயோத்தியாவை ஆண்ட மாசும் ஃபரான்குடியைத் தோற்கடித்து விரட்டிய அக்பர் அவரது படைத்தலைவனான ஷாபாஸ்கானிடம் மாசுமின் வீட்டுப் பெண்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டது ஒரு உதாரணம். அனேகமாக ஒரு ஹிந்து அரசருக்கு அவ்வாறு நிகழ்வது சாத்தியமேயில்லை.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, விதவையான ஹிந்துப் பெண்கள் ஆற்றங்கரையில் உடன்கட்டை ஏறுவதினை தனது அரண்மனை உப்பரிகையிலிருந்து அக்பர் ரசித்துப் பார்ப்பதுடன், தனது விருந்தினர்களையும் அழைத்து அதனைக் காட்டி மகிழ்வார். அதேசமயம் அந்த விதவைப் பெண் அழகானவளாக இருந்தால் அக்பர் அந்தப் பெண் உடன்கட்டை ஏறுவதனைத் தடுத்து அவளைத் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டு செல்வார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு உதாரணமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ராய் ராய்சிங்கின் மகளை பன்னவைச் சேர்ந்த ராஜா ராமச்சந்திராவின் மகனான  விர் பத்ரா மணமுடித்திருந்தார். விர் பத்ரா அக்பரிடம் பணிபுரிந்து கொண்டிருந்தார். ராஜா ராமச்சந்திரா இறந்தவுடன் அக்பர் அவரை பன்னாவிற்குச் சென்று ஆட்சிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்படி உத்தரவிடுகிறார். ஆனால் விர் பத்ரா பன்னாவை நெருங்குகையில் அவர் சென்ற பல்லக்கிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார். அவருடைய மனைவி உடன்கட்டை ஏற இருக்கையில் அக்பர் அதனைத் தடுத்து அவளைத் தன்னோடு அழைத்துச் சென்று அவளையும் தனது அந்தப்புரத்தில் அடைத்துவிட்டார்.  மேலோட்டமாகப் பார்க்கையில் மிக உயரிய ஒன்றாகத் தெரியும் இதனை சிறிது யோசித்தால் அந்தப் பெண்ணை அடைவதற்காக அகபர் செய்த் திட்டமிட்ட படுகொலை என்பதனை நாம் உணரலாம். விர் பத்ரா அக்பரின் அரசவையின் பணிபுரிந்த ஒருவர் என்பதால் அக்பர் அவரது மனைவியை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

விர் பத்ராவின் மரணத்தில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் ஏராளம். பன்னாவின் தலை நகரை அடைய இருக்கையில் எப்படி விர் பத்ரா திடீரென பல்லக்கில் இருந்து கீழே விழுந்தார்? அப்படியே விழுந்திருந்தாலும் தரையிலிருந்து சில அடிகள் உயரமே இருக்கிற பல்லக்கில் இருந்து விழுந்தவுடனேயே எப்படி ஒருவனால் அதே இடத்தில் மரிக்க முடியும்?

ராஜா ஜெய்மல்

இதுபோன்ற இன்னொரு சம்பவத்தையும் பார்ப்போம். ராஜா பகவான்தாஸின் உறவினரான ஜெய்முல் என்பவர் அரச காரியமாக நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அவரச காரியம் எனச் சொல்லப்பட்டதால் தொடர்ந்து குதிரையில் பயனிக்கும் ஜெய்முல் சவுசா என்கிற இடத்தில் வெயில் தாங்காமல் களைப்புற்று இறந்துவிட்டார் (என அக்பரின் வரலாற்றாசிரிய அபுல் ஃபசல் கூறுகிறார்). உதய்சிங்கின் மகளான ஜெய்முல்லின் மனைவி கணவனுடன் தானும் உடன்கட்டை ஏறப் பிரயத்தனங்கள் செய்து கொண்டிருக்கையில் அக்பர் அந்த இடத்திற்கு குதிரையில் விரைந்து வந்து அந்தப் பெண்ணைத் தடுக்கிறார். அவளுடைய உறவினர்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். பின்னர் அந்தப் பெண்ணும் அக்பரின் அந்தப்புரத்தில் சென்று அடைபடுகிறாள்.

இந்தச் சம்பவத்தைக் கொஞ்சம் ஆராய்வோம். ராஜா ஜெய்முல் இளவயதுடையவர். உடல் வலிமை கொண்டவர். அனேகமாக ஒரு முக்கியமில்லாத, போலித்தனமான வேலையைச் செய்யப் பணிக்கப்பட்டஅவர் அக்பரின் அரசவையை விட்டு வெளியே வந்தவுடனேயே அவர் இறந்திருக்க வேண்டும். அல்லது கொல்லப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்பரால் எப்படி அந்த இடத்திற்கு உடனடியாக வந்திருக்க முடியும்? ஜெய்முல் இன்ன இடத்தில்தான் இறப்பார் என்று முன் கூட்டியே அறிந்திருந்தாலன்றி அக்பரால் உடனடியாக குதிரையில் ஏறி அங்கு வந்திருக்க இயலாது என்பதே உண்மை. எனவே ஜெய்முல் அக்பர் இருக்குமிடத்திற்கு அருகாமையில்தான் இறந்திருக்க முடியும்.

ஜெய் முல்லின் மனைவி உடன் கட்டை ஏறும் இடத்திற்கு அக்பரே தன்னந்தனியாக குதிரையில் விரைந்து வந்து காப்பாற்றியதெல்லாம் அபுல் ஃபசலின் கற்பனையாகத்தான் இருக்க முடியும். அக்பர் அந்தப் பெண்ணைக் கைப்பற்றிக் கொண்டு போனால் ஜெய்முல்லின் உறவினர்கள் அதனைத் தடுப்பார்கள் என்பதால் தகுந்த பாதுகாப்புடனேயே அங்கு அவர் போயிருக்க வேண்டும். ஏற்கனவே சொன்னபடி எதிர்த்தவர்கள் அத்தனைபேர்களும் பாதாளச்சிறையில் சென்று முடிந்தார்கள். எனவே இது ஒரு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகமே.

(தொடரும்)

அக்பர் என்னும் கயவன் – 10

பி.என்.ஓக் (P.N.Oak) எழுதிய Who says Akbar is Great? என்னும் புத்தகத்தின் அடிப்படையில் இத்தொடர் எழுதப்படுகிறது.  

<< தொடரின்  மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி.. 

சிந்து (Indus) நதியைக் கடப்பதக்குச் சரியானதொரு இடத்தைக் கண்டுபிடிக்கும்படி ஒரு அதிகாரிக்கு உத்தரவிடுகிறார் அக்பர். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த ஆசாமி ஆற்றைக் கடப்பதற்கு சரியான இடம் எதுவுமில்லை என்று பதிலளிக்கிறார். நான் சொன்ன இடத்தில் போய்ப் பார்த்தயா? என்று கேட்கிறார் அக்பர். அவ்வளவு தொலைவு செல்லவில்லை என்று சொல்லும் அந்த அதிகாரியை உடனே பிடித்துக் கயிற்றில் கட்ட உத்தரவிடும் அக்பர், அந்த ஆசாமியை அழைத்துக் கொண்டு தான் சென்று பார்க்கச் சொன்ன இடத்திற்கு போகிறார். மாட்டுத்தோலில் காற்றடைக்கப்பட்ட ஒரு மிதவையில் அந்த ஆளைத் தூக்கிப் போட்டுக் கட்டி ஆற்றில் தூக்கி எறிய உத்தரவிடுகிறார். அதன்படியே செய்து முடிக்கிறார்கள்.

அக்பரின் சேனையிலிருந்த அத்தனை பேர்களும் ஆற்றின் கரையில் நின்று அந்தக் காட்சியைக் காண்கிறார்கள். மிதவையில் கட்டப்பட்ட அந்த அதிகாரி ஆற்றின் போக்கில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அலைக்கழிக்கப்படுகிறார். கண்ணீர் விட்டுக் கதறி அழும் அந்த ஆள் தன்னை மன்னிக்கும்படி கெஞ்சுகிறான். அக்பரின் கூடாரத்தைத் தாண்டி அந்த மிதவை செல்கையில் அவரை ஆற்றிலிருந்து மீட்கச் சொல்லிய அக்பர், அந்த ஆளை அரசாங்கச் சொத்தாக கணக்கெழுதச் சொல்கிறார். அதன்படி அந்த ஆள் சந்தயில் விற்பனைக்குக் கொண்டு போகப்பட்டு அடிமையாக விற்பனை செய்யப்படுகிறான். அந்த ஆசாமியுடைய நண்பர்களில் ஒருவர் அவரை 80 பொற்காசுகளுக்கு விலைக்கு வாங்குகிறார். அந்தப் பணம் அரசாங்கப் பொக்கிஷத்தில் சேர்க்கப்படுகிறது. இப்படியாக தவறு செய்த ஒருத்தனைத் தண்டிக்கும் அக்பர், அவனை அடிமையாக விற்பனை செய்து அதில் காசும் பார்க்கிறார்.

பாதிரி மான்செராட் அக்பரின் தந்திர நடத்தையைக் குறிக்கும் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். “கைபர் கணவாயைக் கடந்து சமவெளியை அடைந்த அக்பர், தான் ஆப்கானிஸ்தானுக்குப் போகையில் தனக்கு உணவு தானியங்களை அளிக்க மறுத்த கிராமங்களை எரித்து அழிக்கும்படி உத்தரவிட்டார்.  போருக்குப் போகையில் அந்தக் கிராமத்தினரைத் தாக்கினால் கைபர் கணவாயின் குறுகிய வழியில் தானும் தன்னுடைய படையினரும் தாக்குதலுக்கு உள்ளாக நேருமென்பதாலும், ஒருவேளை போரில் தோல்வியடைந்து இந்தியாவுக்குப் பின்வாங்க நேர்ந்தால் அவர்கள் வழியை அடைத்துவிட வாய்ப்பிருப்பதாலும் அவர்களை ஒன்றும் செய்யாமல் சென்ற அக்பர், ஆப்கானிஸ்தானத்திலிருந்து திரும்பி வருகையில் அதனை மறக்காமல் அந்தக் கிராமத்தினரை தாக்கி அழித்தார்”.

தன்னை எதிர்த்த இளவரசன் ஒருவனை குவாலியர் கோட்டையில் அடைத்து, அவன் சாகும் வரை சங்கிலியால் பிணைத்து கட்ட உத்தரவிட்டதை நினைவு கூர்கிறார் பாதிரி மான்செராட். பொதுவாக தண்டனைக்குள்ளான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிற அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்கள் மூலமாக குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் சாதாரணர்கள் அரச காவலாளிகளிடம் அல்லது தபால்களை சுமந்து ஓடுபவர்களிடம் தண்டனை வழங்க ஒப்படைக்கப்படுவார்கள். மேற்படி காவலளி தோல்பட்டைகளும், சாட்டைகளும், கூர்மையான ஆணிகள் அறைந்த மரக்கட்டைகளும், கைதிகளை அடிக்க உதவும் வழ வழப்பான கட்டைகளும்,  அவனின் தலையை நசுக்கிக் கொல்லும் ஆணியறையப்பட்ட வழ,வழப்பான பலகைகளும் எனப் பல கொடூரமான ஆயுதங்களைத் தன்னுடன் வைத்திருப்பான். அத்துடன் பலவிதமான சங்கிலிகளும், இடுக்கி போன்ற ஆயுதங்களும், கை விலங்குகளும் மற்ற இரும்பால் செய்த கொடூரமான ஆயுதங்களும் அரண்மனையில் வாயில் கதவுகளுக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருக்கும். அதனை தண்டனை வழங்கும் காவலாளி பாதுகாத்துக் கொண்டிருப்பான்.

*******

அக்பரின் சமகால இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புகள் அக்பரின் மட்டுமீறிய பெண்ணாசை குறித்தான நீண்ட குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. உண்மையில் பெரும்பாலான அவரது போர்களின் நோக்கம் தோற்கடிக்கப்பட்ட அரசர்களின் பெண்களைப் பிடித்து தனது அந்தப்புரத்தில் அடைப்பது என்பதுதான். தோற்கடிக்கப்பட்டவன் இஸ்லாமியனாக இருந்தால் அவர்களின் நிரம்பி வழியும் அந்தப்புரம் அப்படியே அக்பரின் கையில் ஒப்படைக்கப்படும். அதுவே ஹிந்துக்களாக இருந்தால் அவர்கள் குரூரமாக மிரட்டப்பட்டு அவர்களின் சகோதரிகளையும், மகள்களையும் பிற பெண்களையும் தனது அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு நிர்பந்திப்பது அக்பரின் வழக்கமாக இருந்தது.

முகலாய அந்தப்புரம் – ஒரு ஓவியம்

அதையும் விட தனது அந்தப்புரத்திற்குப் பெண்களைக் கவர்ந்து வருவதற்கு அக்பர் பலவிதமான தந்திரங்களையும் கடைபிடித்தார். தன்னைப் பார்க்க வருகிற முக்கியஸ்தர்கள் அல்லது அவரின் படைத்தளபதிகளின் மீதான அக்பரது கோபத்தைத் தனித்து அவரைக் குஷிப்படுத்த அந்தப்புரத்திற்குப் பெண்களை அனுப்ப நிர்பந்திக்கப்பட்டார்கள். அல்லது கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏற முயலும் பெண்களைக் காப்பாற்றுவது என்கிற போர்வையில் அவர்களைத் தூக்கி வருவது, தோற்ற அரசனின் பெண்களைக் கும்பலாக இழுத்துக் கொண்டு வருவது போன்றவை அக்பராலும் அவரது படையினராலும் செய்யப்பட்டன.

ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழும் ஒரு பேரரசனின் சுகத்திற்காக ஆடுகளைப் போல அந்தப்புரத்தில் அடைக்கப்பட்டு வாழ்ந்த அந்தப் பரிதாபகராமான அந்தப் பெண்களின் அவலத்தை எவராலும் எளிதில் யூகிக்க முடியும். என்றைக்காவது வெளியூர் செல்லும் அக்பரின் அந்தப்புரத்து அழகிகள் பெண் யானையின் மீது நாலாபுறமும் அடைக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட கூண்டுகளில் ஏற்றப்பட்டு,  அவரின் கூடச் செல்லும் வாழ்வினை மகிழ்ச்சியாகவா நினைத்திருப்பார்கள்? அவர்களின் வாழ்க்கை முழுவதும் புர்காக்களால் அடைக்கப்பட்ட ஊமை விலங்குகளைப் போல வாழ்ந்த அவர்கள், அக்பரின் பார்வை தன்மீது விழும்வரை ஒரு மூலையில் கிடந்தார்கள்.

அக்பரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பாதிரிகளின் குறிப்பைக் கூறும் வரலாற்றாசிரியர் ஸ்மித்,”1582-ஆம் வருடம் அகாவிவா (Aquaviva) என்கிற பாதிரியின் தலைமையில் வந்தவர்கள் அக்பர் ஒரு பெரும் குடிகாரர் எனக் காண்கிறார்கள். வயதான பாதிரியான அகாவிவா அக்பரின் பெண்களைச் சூழ்ந்து வாழும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறையைக் குறித்து கண்டனம் செய்கிறார். தன்னை விமர்சிப்பவர்களை மன்னிக்கும் மனோபாவமற்றவரான அக்பர் முகம் சிவந்து அந்த இடத்தைவிட்ட அகன்றார்” என்கிறார். போதைக்கு அடிமையான அக்பரின் முன்னோர்களில் இருந்து அக்பர் எந்தவிதத்திலும் மாறியவராக இருக்கவில்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

அடுத்தவனின் மனைவிகளை அபகரிக்கும் எண்ணம் அக்பருக்குள் பெரும் நெருப்பெனக் கனன்றுகொண்டே இருந்திருக்கிறது. அக்பரின் தளபதிகளில் ஒருவனான ஆதம்கான் மால்வாவின் அரசன் பாஸ்பகதூரைத் தோற்கடிக்கிறான். பாஸ்பகதூர் இன்னுமொரு கேடுகெட்ட, தீயொழுக்கம் நிரம்பிய இஸ்லாமிய அரசன். பாஸ்பகதூரின் அந்தப்புர அழகிகளை ஆதம்கான் தனதுடையவர்களாக ஆக்கிக் கொண்டான் என ஆக்ராவிலிருக்கும் அக்பருக்குத் தகவல் வருகிறது. தனக்குக் கிடைக்க வேண்டிய அழகிகளைத் தனது தளபதி கைப்பற்றிக் கொண்டதனை அறிந்த பத்தொன்பது வயதே நிரம்பிய அக்பர்  பெரும் கோபம் கொண்டு உடனடியா ஆக்ராவை விட்டு (ஏப்ரல் 27, 1561) மால்வாவுக்குக் கிளம்புகிறார். ஆதம்கான் அக்பரின் தாதியான மஹம்  அனாகா என்பவளின் மகன். அக்பரின் குரூர மனப்பான்யையும், கொலைவெறித்தனத்தையும் நன்கு அறிந்தவளான மஹம் அனாகா உடனடியாக ஆட்களை அனுப்பி ஆதம்கானை எச்சரிக்கிறாள்.

பின்னர் அக்பரைத் தொடர்ந்து செல்லும் மஹம் அனாகா அக்பரிடம் தனது மகனின் தவறை மன்னிக்கும்படி வேண்டுகிறாள். அக்பர் ஆதம்கானை மன்னிக்கிறார். ஆனால் ஆதம்கானோஅந்தப்புரத்திலிருந்த இரண்டு பேரழகிகளான ஹிந்துப் பெண்களை  அக்பருக்குத் தெரியாமல் தள்ளிக் கொண்டுபோய் ஒளித்துவைக்கிறான். ஆக்ராவுக்குப் புறப்படத் தயாராக இருந்த அக்பருக்குத் தெரிய வருகிறது. உடனடியாக அந்தப் பெண்களை தன் முன்னர் அழைத்துவரும்படி ஆணையிடுகிறார் அக்பர். அந்தப் பெண்கள் அக்பருக்கு முன் வந்து உண்மையைச் சொன்னால் தன்னுடைய மகனின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று அஞ்சிய மஹம் அனாகா அந்த இரண்டு அப்பாவி ஹிந்துப் பெண்களையும் கொலை செய்கிறாள். பின்னர் அக்பரிடம் அந்தப் பெண்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகப் பொய் சொல்கிறாள். பின்னர் அந்தப் பெண்களைப் பற்றி அக்பர் எதுவும் கேட்கவில்லை. இறந்து போனவர்களைப் பற்றி அவருக்கு என்ன கவலை?

தனது மிகச் சிறிய பதினாலாவது வயதில் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாக அரியணை ஏறிய நாளிலிருந்து அக்பரின் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. அக்பரின் வரலாற்றாசிரியரான அபுல்ஃபசல் புர்காக்களின் பின்னே வீழ்ந்து கிடந்த அக்பரைக் குறித்து ஓயாமல் புகழ்கிறார்.

அக்பரின் பாதுகாவலரும், மாமனுமான பைராம்கானுடன் ஏற்பட்ட பகை காரணமாக பைராம்கானின் அதிகாரங்களை படிப்படியாக பிடுங்கி அவரைக் கொலை செய்தபின் அக்பர் வேசிகளால் ஆட்டுவிக்கப்பட்டார் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். “பைராம்கானின் அதிகாரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அக்பர் நேர்மையற்ற, தீய எண்ணம் கொண்ட பெண்கள் பட்டாளத்தினால் ஆட்டுவிக்கப்பட்டார். மிக மோசமான பாவாடை அரசாங்கம் நடத்திய அக்பர், ராஜாங்க நடவடிக்கைகளில் முற்றிலும் தனது ஆர்வத்தை இழந்தவராக இருந்தார். மஹம் அனாகா போன்ற நம்புவதற்குத் தகுதியற்ற பெண்கள் அவரை ஆட்டுவித்தார்கள்” என்கிறார்.

முகலாய வரலாற்றில் மகம் அனாகாவின் இடம் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. பெண்களைக் கூட்டிக் கொடுகிற, அக்பரின் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கு பெண்களைத் தயார் செய்து, அக்பருக்கும் பிற அரசவை முக்கியஸ்தர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அழகிகளைஅனுப்பி வைக்கிற மகம் அனாகா முகலாய அரசின் முக்கிய முடிவுகளில் தனது ஆளுமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்தாள். இரண்டு அப்பாவி ஹிந்துப் பெண்களின் கொலையில் மஹம் அனாகாவின் பங்கினை ஏற்கனவே பார்த்தோம்.

அக்பரின் பெண்ணாசையைக் குறித்துக் கூறும் பதாயுனி, “மதுராவிற்குச் செல்லும் அக்பர் அங்கிருக்கும் முக்கியஸ்தர்களின் பெண்களுடன் திருமண உறவு கொள்வதற்காக கவ்வாலி பாடுகிறவர்களையும், அலிகளையும் சுற்றியுள்ள நாடுகளுக்கு அனுப்பி வேவு பார்த்தார். அந்தப்புரங்களில் மிக எளிதாகப் புகுந்த அவர்கள் அங்கிருந்த அழகிகளைக் குறித்து அக்பருக்குச் சொன்னார்கள். மொத்த நகரத்திலும் அச்சம் ஒரு பெரும் தீயைப் போலப் பரவியது. அப்துல் வாஸி என்பவனுடைய மனைவி மிகப் பேரழகுடையவள். அக்பரின் கண்கள் அவள் மீது பட்டன. முகலாய அரசர் எந்தவொரு பெண்ணின் மீதாவது ஆசை வைத்தால் அந்தப் பெண்ணின் கணவன் சத்தமில்லாமல் விவாகரத்து செய்துவிட்டு அவளை உடனடியாக அரசரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்”.

அவ்வாறு அனுப்ப மறுப்பவர்களுக்கு நிகழும் கதியை நம்மால் எளிதாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். அப்பாவிகளின் அந்தப்புரத்தில் புகுந்து அழகான பெண்களைத் அரசனுக்காகத் தூக்கிச் செல்லும் ஆயுதம் தாங்கிய முகலாய படைத்தலைவனை யாரால் என்ன செய்துவிட முடியும்?

இதன் காரணமாகவே பெரும்பாலான ஹிந்துப் பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களைத் தீயிலிட்டுக் கொளுத்திக் கொண்டு மரணமடைந்தார்கள். இன்னும் சிலர் தங்களின் பெண்களின் முகத்தில் வாளால் வெட்டியும், தீயில் கருக்கியும் அவளது முகத்தை அவலட்சணமாக்கினார்கள். இன்னும் சிலர் தங்களைத் தூக்கிச் செல்ல வந்த முகலாயப் படைத்தலைவனுக்கு பொன்னும், பொருளும் கொடுத்து அவனது மனதை மாற்ற முயன்றார்கள். பெரும்பாலான சமயங்களில் தப்புவதற்கு வாய்பில்லாமல் நிரம்பி வழியும் அக்பரின் அந்தப்புரத்தின் ஐயாயிரத்தில் ஒருத்தியாக அடைபட்டார்கள். இதன் காரணமாகவே அக்பர் வரும் வழியிலிருந்த அப்பாவிகள் சிதறி ஓடினார்கள். தங்களின் சொத்துக்களைப் பறிகொடுத்து பராரிகளானாவர்கள் தங்களின் மனவிகளை, அன்னையரை, சகோதரிகளை ஒரு கயவனுக்கு ஒப்புக் கொடுக்க மனமின்றி அஞ்சி ஒடுங்கினார்கள்.

(தொடரும்)