வன்முறையே வரலாறாய்…- 31

“இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது” எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்… பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன. குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள். இந்திய முஸ்லிம்கள் மதச் சார்பற்ற கல்விமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை என்பதுவே வரலாறு… முஸ்லிம்கள் மாறி வரும் உலகின் முன்னேற்றங்களிலிருந்து விலகி நிற்க, இந்துக்கள் தங்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட கல்வியையும், அதனால் உண்டாகிய முன்னேற்றத்தையும் முழு அளவில் ஏற்றுக் கொண்டு முன்னேறினார்கள்.

View More வன்முறையே வரலாறாய்…- 31

வன்முறையே வரலாறாய்…- 30

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 30

வன்முறையே வரலாறாய்…- 29

“பொதுவில் இந்திய சாதிய அமைப்பு மிகவும் இளகும் தன்மையுடைய ஒன்றாகவே இருந்துவந்தது.. இந்தியாவிற்குள் நுழைந்த இஸ்லாம் இந்த இளகும் தன்மையை நீக்கி, சாதிய அமைப்பை இறுக்கியதுடன் அதனை நிரந்தரமாக்கவும் செய்தது” என்கிறார் ஜவகர்லால் நேரு… டெல்லிக்கருகில் இருக்கும் டோவாப் பகுதி கடுமையான வரி விதிப்பு காரணமாகவும், இஸ்லாமியப்படைகள் நடத்திய வெறியாட்டங்கள் காரணமாகவும் முற்றிலும் அழிந்தது. அங்கிருந்து தப்ப முடிந்த இந்துக்கள் காடுகளுக்கு ஓடித் தப்பினார்கள். அங்கும் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கோபமடைந்த சுல்தான் ஒரு பெரும் படையணியை அனுப்பி அங்கிருந்த இந்துக்களைப் பிடித்துவர உத்தரவிடுகிறான்…. பல இலட்சக்கணக்கான, இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளுக்கு அஞ்சிக் காடுகளில் ஒளிந்து வாழ்ந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளான. அவ்வாறு காடுகளிள் வாழ்ந்தவர்களில் எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் கலந்து வாழ்ந்ததுடன், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கலகங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 29

நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

அயோத்தியில் ஒரு நவாப் காலத்தில் நியாயம் ஹிந்துக்கள் பக்கம் இருந்ததால் அவர்களுக்குச் சாதகமான முடிவு உடனுக்குடன் எடுக்கப்பட்டது. ஆனால் அதே அயோத்தியில் 1947-க்குப் பிறகு சுதந்திர பாரதத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்களோ, ஸ்ரீ ராம ஜன்மஸ்தானத்தில் இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமபிரான் கோயிலை இடித்துக் கட்டப்பட்ட பாப்ரி மண்டபம் அகற்றப்பட்டு, அங்கு மீண்டும் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் எழுப்பப்பட வேண்டும் என்ற ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை!

View More நவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை!

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பயனுக்காக பயன்பட்ட கட்டடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும் வாயில் நிலைகளும், சிற்பங்களும் அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும் மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன… மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது நிரூபணமாகிறது…

View More அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி