திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

பேரா. வ.வெ.சு.

“திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் தன்னுடைய குறட்பாக்களில் ஒவ்வோர் அதிகாரத்திலும், தான் எடுத்துக்கொண்டுள்ள கருத்துப்பொருட்களை விளக்கும்போது, உபதேசங்களாகச் சொல்லிக் கடைசியில் தன் கருத்தை ஆணையாக இடுவார். சம்ஸ்க்ருதத்தில் “உபதேஷா” மற்றும் “ஆதேஷா” என்று கூறுவர். அதாவது குருவானவர், தன் சீடர்களுக்கு நல்லமுறையில் உபதேசங்களைக் கூறிவிட்டுக் அவர்கள் கேட்காத நிலையில் கண்டிக்கும் விதமாக உத்தரவிடுவதைப் போல, திருவள்ளுவர் நமக்குப் பல கருத்துகளைத் தன் குறட்பாக்கள் மூலம் விளக்கியுள்ளார்” என்று கவிமாமணியும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் வ.வெ.சுப்பிரமணியம் கூறினார்.

And may also be referred to as clomid online pharmacy, clomid pharmacy, clomid order online, clomid online meds, clomid purchase, or clomid buy. Doxycycline is used to Westervoort clomid online prescription treat a variety of skin conditions. Some doctors are required to ask for authorization from their clients before they will start buying such drugs.

Trazodone tablets (sustained-release) are used to relieve symptoms associated with depression, including sleeplessness, irritability, anger, and weight loss. This medication is used methodologically clomid 50 mg online delivery to treat the symptoms of respiratory tract infections (common colds, bronchitis, and the flu). Now a days the online pharmacy is more than the online pharmacy.

Doxycycline was found to have no effect on weight loss and the rate of weight gain when used as. A 63-year-old diabetic female http://mtviewprop.com/ presented with bilateral serous retinal detachment and rapid onset of bilateral macular edema in right eye. Dapoxetine 60 price in india is a great deal and you can buy cheap dapoxetine in india online from our site and get the dapoxetine without paying any cost to the delivery.

வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலைப் பற்றிய கருத்தரங்கு சென்ற 08-01-2018 திங்கட்கிழமை அன்று, மயிலை பாரடிய வித்யா பவன் சிற்றரங்கில் நடந்தது. அந்தக் கருத்தரங்கில் மேற்கண்டவாறு தலைமை உரையாற்றிப் பேசினார் பேராசிரியர் வ.வெ.சு.

அவர் மேலும் பேசுகையில், “திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது. அறத்துப்பால் குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை, பிரம்மச்சாரி விரதம், கிரஹஸ்த விரதம், சன்யாஸம் என்று மூன்று வகையாகப் பிரித்திருப்பது அருமையான வகைப்படுத்தல். மேலும், ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ என்று ஆரம்பிக்கும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை “அக்ஷராப்யாசம்” என்று வகைப்படுத்தியிருப்பது அற்புதம். பிரம்மச்சரிய விரதம் அக்ஷராப்யாஸத்தில் தான் ஆரம்பிக்கிறது.”

“அதைப் போலவே அடுத்ததாக “வான்சிறப்பு” அதிகாரர்த்தை “பிக்ஷாவந்தனம்” என்று விளக்கியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவ்விடத்தில் தைத்ரிய உபனிஷத் சொல்வதைச் சுட்டிக் காட்டி அதையே வள்ளுவரும் கூறுவதை உறுதி செய்கிறார் நாகஸ்வாமி. அதாவது பிரம்மச்சரிய விரதத்தில் கல்வி கற்க ஆரம்பித்தவுடன், உணவின் முக்கியத்துவமும் மாணவனுக்குக் கற்றுவிக்கப்படுகிறது. அவன் குருகுல வாழ்வில் ஆசிரியருடன் இருந்தாலும், தன்னுடைய உணவுக்காகப் பிக்ஷைக்குத்தான் போக வேண்டும். ஆகவே அன்னம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டாகின்றது, போன்றவற்றை அவன் தன் அனுபவித்திலேயே உணர்ந்துகொள்கிறான். அன்னம் உருவாக நீர் காரணமாகின்றது. நீரை மழை தருகின்றது. பிரம்மச்சரிய விரதத்தில் கல்வியுடன் கூடவே நீர், அன்னம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அக்ஷராப்யாசத்துக்கு அடுத்ததாக பிக்ஷாவந்தனம் கூறப்படுகிறது. அதையே வள்ளுவரும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பு என்று வைத்தார்.”

“அதைப்போலவே தான் அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையும். இங்கே உலகத்தைத் துறந்தவர்கள் என்பதைவிட, ஒழுக்கத்தின்பாற் தங்களை ஈந்தவர் என்கிற வகையில் ‘ஒழுக்கத்து நீத்தார்’ என்று கொள்வதே சரி. ஆகவே, நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தை ஆசாரமாகக் கொண்டு, பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள் தங்களை ஒழுக்கத்தின்பாற் அளித்திட வேண்டும் என்று உறுதி செய்கிறார்.”

இவ்வாறாக, வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட கருத்துப் பொருட்களின் சாரங்களைப் பிழிந்து திருக்குறளில் திருவள்ளுவர் கொடுத்துள்ளதை நன்றாக ஆய்வு செய்து, திறம்பட எழுதியுள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. இந்நூலைப் படித்து, இதன் கருத்துக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் செல்வது நம் கடமையாகும்” என்று கூறித் தன் தலைமை உரையை நிறைவு செய்தார் பேராசிரியர் வ.வெ.சு.

டாக்டர் இரா.நாகசாமி

முன்னதாக அறிமுக உரை வழங்கிய டாக்டர் நாகஸ்வாமி, பின்வருமாறு பேசினார்.

“நமது வேத கலாச்சாரத்தின் சாரத்தைத் தருகின்ற நூலாக ஒரு புரட்சிகரமான பார்வையுடன் திருக்குறளை அணுகி எழுதப்பட்டுள்ள நூல் இது. நமது தர்ம சாஸ்த்திரம், அர்த்த சாஸ்த்திரம், நாட்டிய சாஸ்த்திரம், காம சாஸ்த்திரம் ஆகியவற்றின் கருத்துப் பொருட்கள் திருக்குறள் எங்கும் நெடுக உள்ளன. நமது ஹிந்து தர்மத்தின் அடிப்படைகளான நான்கு புருஷார்த்தங்களாகிய தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவற்றில் முதல் மூன்றான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை “த்ரிவர்கம்” என்கிற ஒற்றைக் கோட்பாடாகக்கருதி முறையே அறம், பொருள் ம்ற்றும் காமம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது”

“வள்ளுவரின் குறள் நமது வர்ணாஸ்ரமத் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய மற்றும் சூத்திர வர்ணத்தவரின் வாழ்க்கை முறை, மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பல குறட்பாக்களில் பேசும் திருவள்ளுவர், நான்கு ஆஸ்ரம தர்மங்களான பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாஸம் ஆகியவற்றைப் பற்றியும் முதல் தொகுதியான அறத்துப்பாலில் பேசுகிறார். தேவர்கள், ரிஷிகள் மற்றும் பித்ருக்களுக்குச் செய்யும் தர்ப்பணம் பற்றியும், பஞ்ச மஹா யக்யங்கள் என்று சொல்லப்படுகின்ற ஐந்து வகையான யாகங்கள் பற்றியும் பேசுகிறார்.”

“தர்ம சாஸ்த்திரங்களைக் கருத்துப் பொருளாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தியும் எழுதியுள்ளார் திருவள்ளுவர். பொருட்பாலில் அந்தணர் நூலாகிய வேதங்களைப் பற்றியும் தர்ம சாஸ்த்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டு, மன்னர்கள் அவற்றைப் பின்பற்றுவதே கடமை என்று சொல்லும் விதத்தில்,

‘அந்தணர் நூலுக்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்’

என்றும்,

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூற்மறப்பர்

காவலன் காவான் எனின்’

என்றும் திருவள்ளுவர் தெளிவாக அறுதொழில் புரியும் அறவோரான அந்தணர்களின் நூல்களான வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்த்திரங்கள் சொல்படி செங்கோல் செலுத்துவதே மன்னரின் கடமை என்று நிலைநிறுத்துகிறார். இதையே தான் புறநானூறு (35) ‘அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை’ என்று கூறுகிறது.”

“மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.”

“காமத்துப்பால் தொகுதியில் திருவள்ளுவர் களவு மற்றும் கற்பு என்று இருவகையாகப் பிரித்துக்கொண்டு, நாட்டிய சஸ்த்திரம் மற்றும் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம் ஆகியவற்றிலிருந்து குறிப்புகளை எடுத்தாள்கிறார். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், த.பொ.மீனாட்சிசுந்தரம், டாக்டர்.மு.வரதராசனார், ஆகியோர் காமத்துப் பால் தொகுதியை ‘நாடக வழக்கு’ என்றே குறிப்பிடுகின்றனர்.”

“பிராகிருத மொழியில் தம்மபதா என்று ஒரு நூல் உள்ளது. இது புத்தரின் உபதேசங்களை உள்ளடக்கியது, பௌத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசும் நூல். இதையும் இந்நூலில் காட்டியுள்ளேன். மேலும் புத்தர் பிராம்மணர்களுக்கு உயர்ந்த நிலையைக் கொடுத்து உபதேசித்துள்ள ‘பாம்மண வக்கோ’ (பிராம்மண வர்கம்) பற்றியும் ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளேன். ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் பிராம்மணர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தப் பிராம்மண துவேஷத்தின் அர்த்தமற்ற தன்மையை தம்மபதா பற்றிய அத்தியாயத்தைப் படிக்கையில் புரிந்து கொள்ளலாம். ஜி.யு.போப், லஸாரஸ், போன்றவர்களின் மொழியாகத்தையும் ஆங்காங்கே குறிப்பிட்டு, அவை எவ்வளவு பற்றாக்குறையுடன் இருக்கின்றன என்பதைப் பரிமேலழகரின் உரையுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.”

“இறுதியாக, வேத, உபநிடத, தர்ம சாஸ்த்திரங்களின் சாரங்களைத் தமிழில் குறட்பாக்களாகத் தொகுத்து வழங்கும் திருவள்ளுவர், மனு, யாக்யவல்கியர், கௌதமர், ஆபஸ்தம்பர், போதாயனர், பராசரர், வசிஷ்டர் போன்ற மஹரிஷிகள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் ஆவார். திருவள்ளுவர் வைதீக தர்ம மார்க்கத்தைத் தமிழில் எளிமையாக வழங்கியுள்ளதே திருக்குறள் என்கிற உண்மை எழுகின்றது. திருக்குறளைத் தொடர்ந்து வாசிக்கும் அன்பர்களின் திருக்குறள் பற்றிய பார்வையை இந்நூல் மாற்றும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்”

பேராசிரியர் வ.வெ.சுவைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியின் சென்னை மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ஒரு பாடலுடன் தன் உரையைத் தொடங்கிய டாக்டர் சேயோன், தாம் நடத்திவரும் மயிலைத் திருவள்ளுவர் சங்கத்தின் பல ஆண்டுகால சேவைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் கொடுத்தார்.

அவர் தன்னுடைய உரையில், “டாக்டர் நாகஸ்வாமி அவர்களின் இப்பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. திருக்குறளில் திருவள்ளுவர் நமது வேத, தர்ம சாஸ்த்திரங்களின் கருத்துப்பொருட்களைக் கையாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத் தெளிவாகவே தொகுத்தளித்துள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. குறிப்பாகப் பொருட்பாலில், மன்னரின் அட்சி முறைப் பற்றியும் செங்கோல் பற்றியும் பேசுமிடங்களில் எல்லாம் திருவள்ளுவர் அர்த்த சாஸ்த்திரத்தையும் தர்ம சாஸ்த்திரங்களையும் குறிப்பிட்டே பேசுகிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகில் இந்நூல் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய ஆய்வும் விவாதங்களும் மேலும் தொடரும். தமிழ் இலக்கிய உலகு நன்மை பெறும்” என்றார்.

பி.ஆர்.ஹரன்

அவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் பேசினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவரும் ‘ஹிந்து மித்திரன்’ பத்திரிகையின் ஆசிரியருமான திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் கடைசி நேரத்தில் கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலாத காரணங்களால் அவர் சார்பாகக் கலந்து கொண்டார் பி.ஆர்.ஹரன். அவர் தன்னுடைய வழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் நுலில், திருக்குறளை கிறிஸ்தவ மயமாக்கும் காலனிய முயற்சியைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழகத்துள் நுழைந்த 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்றார். அவர்கள் மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டனர்; தமிழ் இலக்கியங்களைத் தங்களுடைய கிறிஸ்தவ இலக்கிய கருத்தாக்கங்களுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்தனர்; மேலும் கலாச்சாரக்களவு (Inculturation) மூலம் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர்; என்று கூறினார்.

தன்னை ரோமானிய பிராம்மணர் என்று சொல்லிக்கொண்ட ரோமானியப் பாதிரி ராபர்ட்-டி-நொபிலி, இத்தாலிய முனிவர் என்று சொல்லிக்கொண்ட கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், ஜெர்மானிய ஐயர் என்று சொல்லிக்கொண்ட பார்த்தலோமியோ ஸீகன்பால்கு, ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் எவ்வாறு தமிழ் மொழியையும், சில தமிழ் நூல்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் விவிலியத்தைத் தமிழில் கொண்டுவந்துப் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர் என்றும், தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கி எவ்வாறு திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் ஆக்கவும், திருக்குறளைக் கிறிஸ்தவ நூலாக ஆக்கவும் முயன்றனர் என்றும், அம்முயற்சி இன்றும் தொடர்வதைப் பற்றியும் விவரித்துப் பேசினார். டாக்டர் நாகஸ்வாமியின் உழைப்பும் பங்களிப்பும் போற்றப்பட வேண்டும் என்று கூறிய பி.ஆர்.ஹரன், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைவருக்கும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தொல்லியல் அறிஞரும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளருமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமியுடனான தன்னுடைய துறை ரீதியான தொடர்பைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். தன்னுடைய தொல்லியல் அனுபவத்தையும், தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனக்குள்ள ஆளுமையையும் நன்றாகப் பயன்படுத்தி இந்நூலை அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். அவர் மேலும், தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் அடுத்த தலைமுறையினருக்கு மற்ற நெடிய இலக்கியங்களை விட, குறுந்தகவல் (SMS) போன்று விளங்கும் திருக்குறளை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். அந்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், திருக்குறள் போன்ற ஒரு தமிழ் இலக்கியத்தின் மீது அவர்களுடைய ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்திலும் இருக்கும், என்றார்.

ஊரன் அடிகள்

இறுதியாக, எதிர்பாராமல் எழுந்தருளிய ஊரன் அடிகள் அவர்களுடைய அருளாசியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சொந்த வேலையாக பாரதிய வித்யா பவனுக்கு வந்தபோது, டாக்டர் சேயோன் மூலம் நிகழ்ச்சி பற்றி அறிந்து கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய ஆசியுரையில், தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் எவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்பதையும், அன்னியர்கள் தமிழ் பங்களிப்பு செய்திருந்தாலும் அவர்களின் நோக்கம் மதமாற்றம் தான் என்பதையும் விளக்கிப் பேசினார். இன்றைய காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்த நூல்  மிகவும் தேவையானது என்று கூறினார்.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரத்தாஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

கருத்தரங்கு நடந்த அன்று (08-01-18 – மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி) மாலை, பாரதிய வித்யா பவனும் வேத பாட நிதி அறக்கட்டளையும் இணைந்து, காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, அவரது ஆராதனை தினத்தை முன்னிட்டு, பாரதிய வித்யா பவனின் பிரதான அரங்கில் “ஸ்ரத்தாஞ்சலி” நிகழ்ச்சி நடத்தின. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னின்று ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.

மாலை 5.30க்குச் சரியாகத் தொடங்கிய நிகழ்ச்சியில், வேத பண்டிதர்களின் வேதபாராயணத்துடன் காஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவப் படத்திற்குப் பூஜை செய்யப்பட்டு, தீப ஆராதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலும், அவருடைய மகன் திரு.மோகன் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “Samadarsan” என்கிற நூலும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அருளாசிகளுடன், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டன.

நூல் வெளியீடு, தேவாரத் திருப்பதிகப் பாடலுடன் தொடங்கியது. ஆச்சாரிய ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி அவர்கள், வெளியிடவிருக்கின்ற இரு நூல்களைப்பற்றியும் அறிமுக உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆச்சார்ய ஸ்வாமிகள் இரு நூல்களையும் வெளியிட, முதல் பிரதிகளை ‘கிரி டிரேடர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டார்.  

அடுத்ததாக, தமிழ்நடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர் தலைவர் திரு, வேதாந்தம் ஜி அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகசாமியின் புத்தகத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவர் பேசுகையில், “டாக்டர் நாகசாமி அவர்கள் தன்னுடைய ‘திருக்குறள் வேத சாரம்’ என்ற புத்தகத்தைத் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலையில் துணிவோடு வெளியிடுவதற்கான காரணம் அவரிடம் இருந்த ஆதாரங்களே ஆகும். தமிழும் சமஸ்கிருதமும் நம் நாட்டில் இணைந்தே இருந்து வந்துள்ளன. இப்பொழுது நிலவும் பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த சதி. ஆதலால், இப்படியான மாயையிலிருந்து விலக இந்தப் புத்தகம் உதவும். இந்தப் புத்தகத்தை மிகவும் பாடுபட்டுக் கொண்டு வந்துள்ள டாக்டர் நாகசாமிக்கு நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறித் தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு இல கணேசன் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், “இன்று ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் நினைவு தின நிகழ்ச்சி அதில் வள்ளுவர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றால் இருவருமே வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள். இது பல ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேசம் முழுவதும் வேறுபட்டாலும் அனைத்து மொழிகளிலும் ஒற்றுமை இருக்கிறது. அதனால் இந்த ‘அகர’ என்ற சொல்லே பாரத தேசத்திற்குத் தான் பொருந்தும், இந்தப் புத்தகம் கடுமையான விமர்சனங்களைப் பெறும் என்று திரு. வேதாந்தம்ஜி அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் அந்த விமர்சனத்தாலேயே இந்தப் புத்தகம் அமோகமாக விற்பனை ஆகும் என்று கூறி அனைவருக்கும் நன்றி பாராட்டி ஸ்ரீ பெரியவாளுக்கு நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, முன்னாள் IG திரு. C.L.ராமகிருஷ்ணன் IPS அவர்கள் ‘சமதரிசனம்’ என்ற புத்தகத்தைக் குறித்துப் பேசினார். அவர் தன் உரையில், “நிறைய தமிழ் புத்தகத்திலிருந்தும், வேதம் மற்றும் வேதாந்தம், உபநிஷத் போன்றவற்றிலிருந்தும் மேற்கோள்கள்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் ஒரு விரிவான புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதாது; பல முறைகள் படித்தால் தான் நமக்கு லாவகம் கிடைக்கும்” என்று கூறி தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய தமிழக ஆளுனரின் முன்னாள் செயலாளர் திருமதி கரியாலி IAS அவர்கள், “திருக்குறளுக்கு டாக்டர் நாகசாமி ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளார். அவர் நிறைய ஆதாரங்களுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் மகன் மோகன் நாகஸ்வாமி எழுதியுள்ள சமதரிசனம் என்ற புத்தகத்த்தின் சாரமானது, கடவுள் என்பவர் எப்படி அனைவரையும் ஒன்று போல் பார்க்கிறாரோ, அது போல் நாமும் அனைத்தையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதாகும், என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்” என்று கூறிப் பாராட்டித் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக, வேத பாட நிதி அறகட்டளையின் அறங்காவலர் திரு.சரபேஸ்வரன் அவர்கள், “இந்த வேத பாட நிதி டிரஸ்ட் 1983ல் பரமாச்சார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. திரு.நானி பல்கிவாலா அவர்கள் இந்த டிரஸ்டின் முதல் சேர்மனாக இருந்தார். இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் TVS group லேட். T.சந்தானம் என்பவர். இந்த டிரஸ்ட்டின் நோக்கம் ஏதாவது ஒரு வேத சாகையை அத்யயனம் செய்து கொண்டு நமது புராதன கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் வேத பண்டிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நன்மதிப்பு கொடுத்து மரியாதை செய்து வருவதாகும். அதன்படியே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதியுதவி செய்து வருகிறோம். 60வயதிற்கு மேற்பட்ட 150க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம். இப்படிப்பட்ட வேத பண்டிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் அந்திம காரியங்களான 13 நாட்கள் காரியங்களுக்கும் உடனடியாக நிதியுதவி செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பாரதிய வித்யா பவனும் மிகவும் உடந்தையாக இருந்து உதவுகிறது.” என்றார்.

திரு. நாகசாமி அவர்கள் வருகைப்புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி மரியாதை செய்தார்.

நிறைவாக அனுக்ரஹம் செய்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தன்னுடைய அருளாசியில், “மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி அன்று ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராதனையைப் பக்தி பூர்வமாகவும், வைதீக முறைப்படியும் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். பலவிதமான சேவைக் காரியங்களும் அவர் அருளால் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அந்தச் சேவைக் காரியங்களும் தொடரவேண்டும்; அவருடைய ஆராதனையும் தொடரவேண்டும். ஆச்சார்யாளின் அனுக்ரஹத்துடன் அனைத்தும் நடந்தேற வேண்டும்” என்றார்.

அவர் மேலும், “ஸ்ரீ மஹாபெரியவா, சாஸ்திரங்களையும், சரித்திரத்தையும் காப்பாற்றி சரித்திரம் படைத்தவர். திருக்குறளின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் தன்னுடைய உபன்யாசங்களில் சொல்லி இருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தர்மத்திற்கு அரணாக விளங்கி, தர்மசாஸ்திரத்தில், உள்ள சந்தேகங்களை நீக்கி அனைவருடைய பார்வையிலும் தர்மசாஸ்திரத்தை விளக்கி, வெளி நாட்டவர்களுக்கும் அருள் புரிந்து அனுகிரகித்துள்ளார். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசியும், பெரிவாளின் அனுக்கிரஹமும் கிடைக்கட்டும்” என்று கூறி பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் அருளி, பிரசாதமும் வழங்கினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திருவள்ளுவரை அனைத்து விதமான அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். அவரை சமணர் என்றும் கிறிஸ்தவர் என்றும் முத்திரை குத்தும் முயற்சியில் மத அரசியலிலும், அவருடைய பிறப்பை ஆய்வு செய்கின்ற முயற்சியில் ஜாதி அரசியலிலும், அவருடைய பிறந்த தினத்தைக் குறித்துப் பொது அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக இருந்துகொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினர், தமிழ் என்கிற பெயரில் திருவள்ளுவரை வெற்று அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவர்களால் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் பிராம்மண துவேஷத்தையும் சம்ஸ்க்ருத வெறுப்பையும், வேத தர்ம சாஸ்த்திர மறுப்பையும் கொள்கைகளாகக் கொண்டுள்ள திராவிட இயக்கம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் தொடர்ந்து சீரழிக்க முயன்று வரும் காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்தப் புத்தகம் மகத்தான சேவை என்பதில் ஐயமில்லை.

இப்புத்தகம் அவசியம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் தமிழ் கூறும் நல்லுலகில் பரப்பப்பட வேண்டும் என்பதே நமது அவா.

எழுமின் விழிமின் – 23

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

பாரதப் பெண்ணினமும் ஐரோப்பியப் பெண்ணினமும்* 

உங்களது அறிவுக்கூர்மை எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் தூய்மையை விலையாகக் கொடுத்து அதைப் பெறுவதாயின் வேண்டாம்.

உங்களுக்குத் தெரிகிற பல விஷயங்களைக் கண்டு அதற்காக உங்களைப் போற்றுகிறேன். ஆனால் தீயனவற்றை ரோஜா மலரால் மூடி மறைத்து அதை நல்லது என்று அழைக்கின்ற முறையை நான் வெறுக்கிறேன். ஒருவருக்குள்ள அறிவுத் திறமை தான் மிக உயர்ந்த நல்ல குணம் என்பது தவறு; ஒழுக்க நேர்மையும் ஆத்மீக சக்தியும் தான் நாங்கள் அடைய விரும்புகிற குணங்கள். எங்கள் நாட்டுப் பெண்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகள் அல்ல. ஆனால் அதிகமான தூய்மை அவர்களுக்கு உண்டு. எல்லாப் பெண்களும் தமது கணவரைத் தவிர மற்றெல்லாரையும் புதல்வர்களைப் போலவே கருதுவார்கள்.

எல்லா ஆண்களும் தனது மனைவியைத் தவிர மற்றப் பெண்களைத் தாயைப் போலக் கருதுதல் வேண்டும். என்னைச் சுற்றி நடக்கிற சம்பவங்களைக் கவனித்து ஆண்மைத் தனத்தின் பேரால் ஆண்கள் பெண்களை உபசரிக்கின்ற டம்பத்தைப் பார்த்தால் எனது ஆத்மா வெறுப்பால் நிறைந்து விடுகிறது. பெண் என்கிற பால் பாகுபாட்டை ஒதுக்கி விட்டு, பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது. அதுவரை அவர்கள் வெறும் விளையாட்டுச் சாமான்களாக இருப்பார்களே ஒழிய அதைவிட உயரமாட்டார்கள். திருமண முறிவுக்கும் (விவாகரத்து) காரணம் இவையெல்லாம் தான். உங்களுடைய ஆண்மக்கள் உங்களைக் குனிந்து வணங்குகிறார்கள். உட்கார நாற்காலி தருகிறார்கள். அடுத்த மூச்சில் உங்களுக்குப் பாராட்டுத் தருகிறார்கள். “பெண்ணே, உனது கண்கள் எவ்வளவு அழகாக உள்ளன!” என்று கூறுகிறார்கள். இவ்வளவு செய்ய அவர்களுக்கு உரிமை ஏது? அவ்வளவு தூரம் போவதற்கு மனிதன் எப்படித் துணிகிறான்? பெண்களாகிய நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள்? மனிதத் தன்மையிலுள்ள கண்யக் குறைவான விஷயங்களை இத்தகைய செயல்கள் வளர்க்கின்றன. கண்யமான உயர்ந்த லட்சியங்களை நோக்கி மனிதனை அவை உயர்த்துவதில்லை.

நாம் ஆண்கள், பெண்கள் என்று நினைக்கக் கூடாது. நாம் மனிதர்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும், பரஸ்பரம் உதவி செய்து கொள்ளவும் பிறந்துள்ளோம் என்று நினைக்க வேண்டும். ஓர் இளைஞனும் யுவதியும் தனித்து விடப்பட்டால் உடனே அவன் அவளுக்குப் புகழ்மாலை சூட்டுகிறான். ஒரு மனைவியை அவன் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் ஒருகால் அவன் இருநூறு பெண்களைக் காதலித்திருப்பான். அப்பாடா! நான் மாத்திரம் கலியாணம் பண்ணிக் கொள்கிற கோஷ்டியில் சேர்ந்திருந்தால், இந்த ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமலேயே அன்புக்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துக் கொள்வேன்.

நான் பாரதத்தில் இருந்த போது, இந்த விஷயங்களை எல்லாம் வெளியிலிருந்து பார்த்த போது, இதெல்லாம் சரிதான் என்றும் இவை வெறும் கேலிச் செயல்கள் தான் என்றும் சொன்ன விளக்கத்தை நம்பினேன். அதன்பின் நான் பிரயாணத்துக்குக் கிளம்பினேன். உங்களது இப்பழக்கம் சரியல்ல என்று எனக்குத் தெரியும். அது தவறு தான். ஆனால் மேல் நாட்டினரான நீங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டு விட்டு அது நல்லது தான் என்று அழைக்கிறீர்கள். மேல்நாட்டிலுள்ள தேசங்களுடைய கஷ்டம் என்னவென்றால், அதை முதிர்ச்சியடையாத வாலிப நாடுகள். வாலிபம், முட்டாள்தனம், சஞ்சலமான சித்தம், ஏராளமான செல்வம் – இவை அவர்களிடம் ஒன்று சேர்ந்துள்ளன. இதுதான் கஷ்டம். இந்தக் கெட்ட குணங்களில் ஏதாவது ஒன்று இருந்தாலே எவ்வளவோ விஷமங்கள் நடந்து விடும். அப்படியிருக்க, இவை நான்கும் ஒன்று சேர்ந்து விட்டாலோ, கேட்க வேண்டுமா? ஜாக்கிரதையாக இருங்கள்!

(*நியூயார்க்கில் 1890களில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி)

********

ஆரிய, ஐரோப்பிய நாகரிகங்களின் அமைப்பு முறை:

ஐரோப்பிய நாகரிகத்தை ஒரு துணித்துண்டுக்கு ஒப்பிடலாம். இவைதான் அதிலுள்ள பொருட்கள்: கடற்கரையிலுள்ள பரந்த, மித சீதோஷ்ண நிலையிலுள்ள மலைநாடு தான் அதற்கான தறி; பலமுள்ள, போர்க்குணங்கள் வாய்ந்த, பல இனங்களின் சேர்க்கையால் உருவான கலப்பு இனம் தான் அதற்கான பஞ்சு. தனது சொந்தப் பாதுகாப்புக்காகவும், தனது சமயப் பாதுகாப்புக்காகவும் நடக்கிற போர்முறை தான் அதன் ஊடுநூல். வாள் வீசுகிறவன் பெரியவன், வாள்வீச முடியாதவன் தனது சுதந்திரத்தைக் கைவிட்டு யாராவது ஒரு போர்வீரனுடைய பாதுகாப்பின் கீழ் வாழ்கிறான். அதனுடைய பாவு நூல்தான் வாணிபம். இந்த நாகரிகத்தின் பாதை வாள் ஆகும். அதற்குத் துணைபுரியும் படை தைரியமும் சக்தியும். அதன் குறிக்கோள், இவ்வுலகிலும் மறு உலகிலும் சுக போகங்களை அனுபவிப்பது ஆகும்.

நம் நிலை எப்படி? ஆரியர்கள் அமைதியில் ஆர்வமுள்ளவர்கள். நிலத்தைப் பண்படுத்தும் உழவர்கள். தமது குடும்பங்களுக்கு எவ்விதத் தொந்தரவும் இன்றி அதனை நிர்வகித்து வரமுடிந்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள். அப்படிப் பட்ட வாழ்க்கையில் அவர்களுக்கு ஏராளமான ஓய்வு நேரம் இருந்ததால், ஆழ்ந்து சிந்திக்கவும் நாகரிகத்துடன் விளங்கவும் அதிகமான சந்தர்ப்பம் கிடைத்தது. நம்முடைய ஜனக மகாராஜா தம் கையாலேயே நிலத்தை உழுதார். அந்தக் காலத்தில் சத்தியத்தை உணர்ந்தவர்களில் அவர் மிகவும் பெரியவராக இருந்தார். நமது நாட்டில் ரிஷிகள், முனிவர்கள், யோகிகள் இவர்கள் ஆரம்ப முதலே தோன்றியுள்ளார்கள். ஆரம்ப முதலே உலகம் ஒரு மாயக் கற்பனையாகும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நீங்கள் கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம். ஆனால் நீங்கள் தேடுகிற இன்பம் சமாதானத்தில் தான் உறைந்துள்ளது. புலன்வழி இன்பங்களைத் துறப்பதில் தான் சாந்தி உள்ளது. உடலின் வளர்ச்சி முன்னேற்றத்தில் மட்டும் இன்ப சுகம் இல்லை, மனத்தையும் அறிவையும் பயன்படுத்துவதில் தான் உள்ளது.

காடுகளை விளைச்சல் நிலமாகத் திருத்தி மாற்றியவர்கள் ஞானிகளான முனிவர்களே தான். பின்னர், தாம் திருத்திய நிலப்பகுதியில் வேத காலத்து யாக மேடையை அமைத்தார்கள். பாரத நாட்டின் தூய வானில் யாக யக்ஞங்களின் புனிதப் புகை எழுந்தது. அமைதி நிலவும் அந்தக் காற்றில் வேத மந்திரங்களின் ஒலியும் எதிரொலியும் எழுந்தன. மாடுகளும், கன்றுகளும் மற்ற மிருகங்களும் எத்தகைய அபாயமும் அச்சமுமின்றி மேய்ந்து வந்தன. கல்வியறிவு, தர்மம் இவற்றின் கீழ் வாளுக்கான இடம் அமைக்கப் பட்டது. வாளின் வேலை தர்மத்தையும், மக்கள், கால்நடைகள் இவற்றின் உயிர்களையும் பாதுகாப்பது தான். பலமற்றவர்களை அபாய காலத்தில் காப்பாற்றுகிறவன் வீரன், க்ஷத்திரியன். உழுகிற ஏர் மீதும், வாளின் மீதும், தர்மம் – அனைவரையும் பாதுகாக்கும் சக்தி – ஆதிக்கம் செலுத்தியது. தர்மமானது மன்னர்களுக்கெல்லாம் மன்னன். உலகமெல்லாம் உறங்கும் பொழுது கூட தர்மம் எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கும். தர்மத்தின் பாதுகாப்பின் கீழ் ஒவ்வொருவரும் சுகமாக இருந்தார்கள்.

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தார்கள் என்றும், பூர்வீகக் குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும், அவர்களை நிர்மூலமாக்கி விட்டுப் பாரதத்தில் குடியேறினார்கள் என்றும் கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்பற்ற பொய், முட்டாள்தனமான பேச்சு ஆகும். இப்படியெல்லாம் உங்கள் ஐரோப்பியப் பண்டிதர்கள் பேசுகிறார்கள். நமது பாரத அறிஞர்கள் கூட இத்தகைய கருத்துக்களூக்கெல்லாம் ‘ஆமாம்’ போடுவது விந்தையாக இருக்கிறது. அன்றியும், இந்த ராட்சதப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் பட்டு வருகின்றன. இது உண்மையில் மிகமிக மோசமான செயலாகும்.

நானே ஓர் அறிவிலி. ஏதோ புலமை இருப்பதாக நான் பாசாங்கு பண்ணவில்லை. ஆனால் எனக்குப் புரிகின்ற சிறு விஷயங்களை வைத்துக் கொண்டு பாரிஸ் மகாநாட்டில் நான் இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்தேன். இந்த விஷயத்தைக் குறித்து நான் பாரதீய அறிஞர்களிடமும், மேனாட்டு வித்வான்களிடமும் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பான நேரம் கிடைக்கும் போது, அவர்களது இந்த ஊகக் கற்பனையை விரிவாக, அணு அணுவாக எதிர்த்துப் பல ஆட்சேபங்களை எழுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு – நமது நாட்டுப் பண்டிதர்களுக்குச் சொல்லுகிறேன் – “நீங்கள் எல்லாம் கற்றறிந்த மனிதர்கள். தயது செய்து உங்களது பழைய நூல்களையும், சாஸ்திரங்களையும் துருவி ஆராய்ந்து, சொந்தமான முடிவுக்கு வாருங்கள்” என்று சொல்லுகிறேன்.

ஐரோப்பியர் தமக்கு வாய்ப்பான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அங்கங்குள்ள பூர்வீக குடிமக்களைப் பூண்டறுத்து விட்டு, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சௌகரியமாகவும், வசதியாகவும் குடியேறி விடுவார்கள். ஆகவே ஆரியர்களும் அவ்வாறே செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேல்நாட்டவர்கள் தமது சொந்த நாட்டிலேயே தங்கிக் கொண்டு, தமது உள்நாட்டு விளைபொருள் வசதிகளையே முற்றிலும் நம்பி வாழ்ந்திருப்பார்களேயானால், அவர்கள் மிக மோசமான நாடோடி மக்களாகக் கருதப் பட்டிருப்பார்கள். ஆகவே, அவர்கள் வெறி கொண்டு உலகெங்கும் ஓடிச் சென்றார்கள். பிறருடைய நிலங்களின் செழுமை வளத்தால் தம் ஊனை வளர்க்க வகை தேடினார்கள். ஆகவே ஆரியர்களும் அது போலவே செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டுகிறார்கள். இப்படிக் கூறுவதற்கெல்லாம் சாட்சிகள் எங்கே? கற்பனைக் கதை அளக்கிறீர்களா? அப்படியாயின், உங்களுடைய விசித்திரக் கதைப்புகளை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த வேதத்தில், எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆரியர் வந்ததாக உங்களுக்குத் தெரிகிறது? காடுகளில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளை அவர்கள் வெட்டி வீழ்த்தியதாக உங்களுக்கு எங்கிருந்து தெரிய வந்தது? இது போன்ற மடமைப் பேச்சுகளைப் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்? நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே.. அதிலிருந்து பெரிய, அருமையான கட்டுக் கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?

அது சரி. ராமாயணம் என்பது என்ன? தென்பாரதத்தில் இருந்த காட்டுமிராண்டிப் பூர்வீகக் குடிகளை ஆரியர்கள் தோற்கடித்ததா? ராமச்சந்திரர் நாகரிகமுள்ள ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன். ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன் ராமனை விட சற்றே உயர்ந்த நாகரிகம் வாய்த்திருந்தானே ஒழிய, தாழ்ந்தவனாக இருக்கவில்லை. இலங்கையின் நாகரிகம் அயோத்தியை விட ஒருவிதத்தில் உயர்ந்து இருந்ததே ஒழிய, நிச்சயமாகத் தாழ்ந்திருக்கவில்லை. இதற்குப் பிறகு, இந்த வானரர்களும், மற்ற தென் பாரத மக்களும் எப்பொழுது தோற்கடிக்கப் பட்டார்கள்? அதற்கு மாறாக, அவர்களெல்லாம் ராமச்சந்திரரின் நண்பர்களாகவும், உடன் உழைப்பவர்களாக இருந்தார்கள். வாலி, குகன் ஆகியோருடைய எந்தெந்த ராஜ்யங்கள் ராமச்சந்திரரால் ஆக்கிரமிக்கப் பட்டு தனது பேரரசுடன் இணைத்துக் கொள்ளப் பட்டன? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆரிய நாகரிகமாகிற தறியிலுள்ள துணி பரந்த, உஷ்ணமான சமதள பூமியாகும். அதனிடையிலே அகலமான, போக்குவரத்துக்கு உகந்த நதிகள் ஓடுகின்றன. இந்தத் துணிக்கான பஞ்சு மிக உயர்ந்த நாகரிக நிலை, அரை நாகரிக நிலை, காட்டுமிராண்டி நிலை ஆகியவற்றைக் கொண்டது. இந்த நிலைகளிலுள்ள பெருமளவிலான ஆரிய மக்களின் வர்ணாசிரம முறை அதன் ஊடுநூல். இயற்கையில் காணப்படும் பூசலையும் போட்டா போட்டியையும் வெல்வது அதன் பாவுநூல்.

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல்நிலைக்கு உயர்த்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்களது நிலங்களில் நீங்கள் குடியேறி இருக்கிறீர்கள். நிரந்தரமாக அவர்கள் தீர்ந்து போனார்கள். உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? அங்கிருந்த ஆதிக் குடிமக்கள் இப்பொழுது எங்கே? அவர்கள் வேரறுக்கப் பட்டு விட்டார்கள். காட்டு மிருகங்களைப் போல அவர்களைக் கருதி நீங்கள் அடியோடு கொலை செய்து விட்டீர்கள். எங்கே அவ்வாறு செய்ய உங்களுக்கு ஆற்றல் இல்லையோ, அந்த நாடுகள் மட்டுமே தான், அந்த தேசம் தான் இன்றும் உயிருடன் இருக்கிறது.

ஆனால், பாரதம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. ஆரியர்கள் அன்பும், தாராள மனப்பான்மையும் வாய்த்திருந்தார்கள். அவர்களது உள்ளங்கள் கடலைப் போலப் பரந்தும், எல்லையில்லாமலும் இருந்தன. அவர்களது மூளைகள் மனித வரம்புக்கு மீறி மேதாவிலாசம் வாய்த்திருந்தன. உலகத்தில் தோன்றி மறைகிற, வெளிப்பார்வைக்கு இன்பம் போலத் தோன்றுகிற, ஆனால் உண்மையில் பார்த்தால் மிருகத் தனமான செயல்கள், அவர்களது உள்ளத்திலும் மூளையிலும் இடம் பெறவே இல்லை. எனது சொந்த நாட்டினரான முட்டாள்களே! உங்களை ஒன்று கேட்கிறேன். முதற்குடிகளின் நிலத்தில் குடியேறுவதற்காக ஆரியர்கள் அவர்களை அழித்து ஒழித்திருந்தால், வர்ணாசிரம முறையை ஏற்படுத்தியிருக்க முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

தாமே வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும். தம்முடைய தரத்துக்கு, இல்லை, தம்மையும் விட உயர்ந்த நிலைக்கு எல்லோரையும் உயர்த்துவது ஆரியர்களின் நோக்கம். ஐரோப்பிய நாகரிகத்தின் பாதை வாள். ஆரியர்களின் பாதை, மக்கள் சமூகத்தை வர்ணங்களாகப் பகுப்பதாக இருந்தது. வெவ்வேறு வர்ணங்களாகப் பகுக்கும் இந்த முறை நாகரிக நிலைக்கு ஏறிச் செல்லும் படியாகவே கட்டமைக்கப் பட்டது. ஒருவனது கல்விக்கும் பண்பாட்டுக்கும் தக்க அளவில், அவனை மேலும் மேலும் உயர்ந்து எழுந்து முன்னேறச் செய்வதாகவே இந்தப் பாகுபாட்டு அமைப்பு இருந்தது. ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனுக்கு வெற்றி, பலவீனனுக்கு சாவு என்பது நிலை. பாரத பூமியில் சமூகச் சட்டம் ஒவ்வொன்றும் பலவீனனின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதாகும்.

(தொடரும்…)

அடுத்த பகுதி >>

காஞ்சி மாமுனிவர் குறித்த விமர்சனங்கள்: ஓர் எதிர்வினை

ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கற்றறிந்த சான்றோர்களின் பங்கு இதில் அதிகம். அதனினும் அதிகம் இரந்துண்டு வாழும் துறவிகளுக்கு. ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். வரும் ஜீன் திங்கள் 6ஆம் திகதி பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது ஜெயந்தி தினம்.

ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரது திருவடி பணிந்து எனது மாறுபடும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அதற்கு முன்.

கடந்த மூன்று வருஷங்களாக தமிழ் ஹிந்து தளம் மற்றும் விஜயவாணி தளம் இரண்டிலும் பதிவேறும் வ்யாசங்களை வாசித்து வருகிறேன். பல நேரெதிர்ப் பார்வைகளைக் கொடுக்கும் வ்யாசங்கள் பதிவேறும் தளங்கள் இவை எனினும் இரண்டும் ஹிந்துத்வப் பார்வைகள் சார்ந்த தளம் என்பது என் புரிதல்.

பரம பூஜனீய டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வல்கர், பூஜ்ய சாவர்க்கர் மற்றும் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நானாஜி தேஷ்முக் போன்ற பற்பல பெரியோர்களால் ஹிந்துத்வம் என்ற ஆல வ்ருக்ஷம் போஷிக்கப்பட்டு வளர்ந்துள்ளது. பன்முகம் என்ற முக்யமான கருதுகோளும் ஹிந்துக்களின் அன்றாட வாழ்வில் பரிணமிக்கும் பன்முகத்தன்மையுமே காலக்கணக்கிடவியலா ஹிந்து சமயத்தின் ஆணிவேர் என்றால் மிகையாகாது. வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற பற்பல தத்துவ ரீதியில் வேறுபடும் சமயங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் தத்துவங்களை தர்க்கிக்கும் முறைகளும் தர்க்கத்தின் கருதுபொருள்களும் ஒருகுடைக்கீழ் வருவதால் இவையனைத்தும் ஹைந்தவம் என்ற ஆலவ்ருக்ஷத்தின் பல கிளைகள் என்றால் மிகையாகா.

தமிழ்ஹிந்துதளம் பெரும்பாலும் ஹிந்துத்வப்பார்வையின் ஒரு பரிமாணத்தைத் தெரிவிக்கும் படியாக வ்யாசங்களையும் உத்தரங்களையும் தாங்கி வந்தாலும் மாற்றுப்பார்வைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறது. பூசல்களும் வசவுகளுமே பதிவுகள் என்ற ரீதியில் உலாவரும் தனிநபர் ப்ளாக்குகள் மற்றும் இணையதளங்கள் போலல்லாது வ்யாசங்களும் உத்தரங்களும் கண்யமிக்கவையாகவும் கருத்தாழம் உள்ளனவையாகவும் இயன்றவரை மட்டுறுத்தலுக்கு உட்பட்டே தமிழ் ஹிந்துவில் வெளியாகின்றன. லக்ஷ்மண் ரேகா (இலக்குவன் கோடு) மீறப்படும் போது ஆசிரியர் குழு தலையிட்டு வரைமுறைகள் மீறப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.

இப்போது காஞ்சிமாமுனிவர் பற்றி தளத்தில் பதிவான கருத்துக்களையும் எனது மாற்றுக்கருத்துக்களையும் பார்ப்போம்.

ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள், சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012) என்ற வ்யாசத்தில் April 27, 2012 அன்று பதிவு செய்த உத்தரத்தில் பதியப்பட்டது :-

தலைமுறைகள் கஷ்டப்பட்டு அரும் பெரும் நூல்களைக்கொண்டு உருவாக்கிய ஒரு நூலகத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து ஆபாச மஞ்சள் புத்தகங்களை வைத்துக் கொண்டு இந்த நூலகமே இந்த மஞ்சள் புத்தகங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் என சொல்லி அப்படி சொல்வதையே மகா பெரிய லைப்ரரியன் குரல் என பைண்ட் போட்டு பாகங்கள்பாகங்களாக விற்று அப்படி ஆபாச புத்தகங்களை விற்கிற நபரை நடராஜர் முதல் மகாவிஷ்ணு வரை எல்லா வித தெய்வங்களாகவும் காட்டி ஏன் அதற்கும் மேலாக காட்டி நூலகத்தை ஆக்கிரமித்து கொண்டால்…என்னால் முடிந்த வரை என்னுடைய நூல்களை எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது நல்ல லைப்ரரி இப்படி பட்ட ஆபாச குரல்கள் வரமுடியாத லைப்ரரி ஒன்றை தேடி பிடித்து போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும். ஏனென்றால் நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது அவர்களல்லவா?

ஸ்ரீமான் களிமிகு கணபதி அவர்கள் 29ம் திகதி ஏப்ரல் அன்றைய பதிவில் பூஜைக்குறியவரான ஸ்ரீ மஹாஸ்வாமி அவர்களது ஜாதி-வர்ணம் பற்றிய கருத்துக்கள் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது என்றும் அவை காலனியப்பார்வை என்றும் “அநீ எதிர்த்தது அவரது இந்த காலனியப் பார்வையைத்தான் என்றால் அது சரியே” என பதிவு செய்துள்ளார்.

ஆனால் ஸ்ரீ அ.நீ அவர்களது மேற்கண்ட பதிவில் இடித்துக் காட்டுவது என்பது இப்படி குறிப்பிட்ட கருத்து அல்லாது மிகப்பல கீழ்க்கண்ட விஷயங்கள் என்றே தோன்றுகிறது.

  1. ஸ்ரீ அ.நீ எதிர்ப்பது 7 தொகுதிகளாக அமரர் ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட “தெய்வத்தின் குரல்” என்ற ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் அவர்களது கருத்துக்கள் அடங்கிய நூற்தொகுப்பு என்பது என் புரிதல். தவறென்றால் நான் திருத்திக்கொள்கிறேன்.
  2. ஸ்ரீ அ.நீ அவர்கள் எதிர்க்க விழைவது சில கருத்துக்கள் என்று ஸ்ரீ களிமிகு கணபதி தெரிவித்து இருந்தாலும் முழு தொகுப்பையுமே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் எனவே மறைமுகமாக ஸ்ரீ அ.நி பதிவு செய்துள்ளார் என்பது என் புரிதல்.
  3. பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமியை நடராஜர் எனவும் மஹாவிஷ்ணு என காட்டப்படுவதை இவர் ஏற்கவில்லை. ஹிந்து சமயம் என்ற நூலகத்தில் இவர் ஏற்கும் பல நூற்கள் இருப்பினும் தெய்வத்தின் குரல் என்பது கிட்டத்தட்ட ஹிந்து மதம் என்ற ஒட்டு மொத்த நூலகத்தின் குரல் அல்லது லைப்ரேரியன் குரல் அதாவது பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியின் குரல் என உருவகப்படுத்தப்பட்டு அதனை ஏற்கவியலாது என கூறுகிறார்.
  4. “நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது” என்ற படிக்கு பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது கருத்துக்கள் ஏதோ ஹிந்து மதம் சம்பந்தமான விஷயங்களில் அதிகாரபூர்வமான கடைசீச் சொல் என்ற படிக்கு ஒரு கருத்து உலா வருவதாகவும் மேற்கண்ட கருத்தில் தொனிக்கிறது.

ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் மறைவுக்கான இரங்கல் வ்யாசத்தில் தெய்வத்தின் குரல் சம்பந்தமாக முதலில் ப்ரசுரிக்கப்பட்ட கருத்தில் கூட கிட்டத்தட்ட இதே கருத்தையொத்த கருத்துக்கு நான் மாறுபட்டு என் உத்தரத்தில் அதை தெரிவு செய்திருந்தேன். ஆசிரியர் குழுவினர் என் உத்தரத்தின் அப்பகுதியை நீக்கிவிட்டு வ்யாசத்தில் உள்ள கருத்துக்களை திருத்தம் செய்திருந்தனர்.

பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து “தெய்வத்தின் குரல்” தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். இதைப்புரிந்து கொள்ள இயலும். அக்கருத்தை காய்த்தல் உவத்தலில்லாது கறாராக பதிவு செய்திருந்தால் எனது இவ்யாசத்திற்கு அவசியமிருந்திருக்காது.

நான் “தெய்வத்தின் குரல்” என்ற நூலின் முழு ஏழு பாகங்களும் வாசித்ததில்லை. பின்னிட்டும் நான் வாசித்த படிக்கும் முழு தொகுப்பையுமே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என்ற முத்திரை குத்தும் படியான கருத்தை ஏற்க இயலாது. இங்கு கருத்துக்கள் பகிரும் பல ஹிந்து நண்பர்களுக்கும் என்னுடன் இவ்விஷயத்தில் உடன்படுவார்கள் என எண்ணுகிறேன்.

ஹிந்து மதம் சார்ந்த வேதங்கள், உபநிஷதங்கள், சிற்பம், நாட்டியம், ஆயுர்வேதம், தமிழ் மொழி, ஸம்ஸ்க்ருத மொழி, அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் போன்ற தத்துவங்கள் பற்றிய தகவல்கள் வினாயகர், சக்தி, சிவன், விஷ்ணு, ஐயப்பன், அனுமன் போன்ற தெய்வங்கள் பற்றிய தகவல்கள் ஆதிசங்கரர் கால ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், பிறப்பிலிருந்து இறப்பு வரை ஹிந்துக்களது வாழ்வில் செய்யப்பெறும் ஸம்ஸ்காரங்கள், பிடி அரிசித்திட்டம், கோவிலில் உழவாரப்பணி, குளம் போன்ற நீர் நிலைகளை வெட்டுதல், அவற்றை பாதுகாத்தல் அவற்றில் ஆடுமாடுகளும் நீர் அருந்த வழி செய்தல், அனாதை ப்ரேதங்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தல், போன்றும் மற்றும் எண்ணிறந்த தகவல்கள் அடங்கிய ஒரு கருத்துக்களஞ்சியமாகத்தான் நான் அத்தொகுப்புகளைப்பார்க்கிறேன்.

சமூஹச் சேவகர் என்ற ரீதியிலோ ஹிந்து சமயத்தின் அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்றாதவர் என்ற ரீதியிலோ அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர் எனினும் அத்வைதத்திலேயே வேறு குருமார்களை பின் பற்றுபவர் என்ற ரீதியிலோ பல விஷயங்களில் அத்தொகுப்புகளில் சொல்லப்பட்ட பல கருத்துக்கள் பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம். ஆனாலும் மிகப்பலருக்கும் மிகப்பல கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கும் (வேற்று மதத்தவர் உட்பட) என்பது என் புரிதல். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என உருவகப்படுத்துவது முற்றிலும் ஏற்கவியலாது.

ஜைமினியின் பூர்வமீமாம்ச சூத்திரங்கள் அதற்கு பட்டரின் வார்த்திகங்கள் அவற்றில் பௌத்தக் கருத்தாக்கங்களுக்கு எதிர்ப்புகள், கௌடபாதரின் பௌத்தவாதங்களை மறுதலிக்கும் மாண்டூக்ய காரிகை மற்றும் ஆதிசங்கரரின் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்கள் அவற்றுடன் சில விஷயங்களில் ஒத்தும் பல விஷயங்களில் மாறுபட்டும் உடையவர் ராமானுஜர் மற்றும் மத்வாசார்யர் எழுதிய பாஷ்யங்கள் முதல் ஸ்ரீல பக்திவேதாந்த ப்ரபுபாதர் எழுதிய “பகவத் கீதை உண்மையுருவில்” வரை ஹிந்து மதத்தில் வேறு பாடு இல்லாது காலங்காலமாக ஸ்திரமாக இருந்து வருவது பதியப்படும் கருத்துக்களும் அதற்கு மாற்றாக பதியப்படும் கருத்துக்களும். ஆதி சங்கரரை மறைமுக பௌத்தர் என்றும் மாயாவாதி என்றும் மற்றும் தரக்குறைவாக விமர்சிக்கும் (மணிமஞ்சரி போன்று) மற்றைய தர்சன நூல்களும் உண்டு. மேற்கண்ட விமர்சனங்களைப்பார்க்குங்கால் மணிமஞ்சரி பற்றி நினைவில் வந்தது.

ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரை நடராஜர் மற்றும் மஹாவிஷ்ணு என்று போற்றுவதையும் “தெய்வத்தின் குரல்” என்று புத்தகத் தொகுப்பிற்கு இடப்பட்டிருக்கும் பெயரை எதிர்ப்பதற்கும் மாற்றுக் கருத்துக்கள் :-

த்வே ரூபே வாஸுதேவஸ்ய சரம் சாசரமேவ ச|
சரம் சன்யாஸினம் ரூபமசரம் ப்ரதிமாதிகம் ||

அர்ச்சாவதாரமாக அசையாது உருவத்துடன் ஒரு ரூபமும் பரிவ்ராஜகராய் அலைந்து திரியும் படியாய் இருக்கும் சன்யாஸி என மற்றொரு ரூபமும் பகவன் வாஸுதேவனுக்கு. ஆக மேற்கண்ட ச்லோகத்தின்படி யதிகளை நாராயண ஸ்வரூபமாகக் கருத வேண்டும் என ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சொல்லப்படும் உன்மத்தரான ஜடபரதரிலிருந்து பாஷ்யங்களில் சொல்லப்படும் ஆத்ம ஞானியான தர்மவ்யாதர் என்ற கசாப்புக்கடைக்காரரிலிருந்து ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு, போன்ற சன்யாசிகளிலிருந்து ரமணர், ராமக்ருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், ஸ்வாமி சித்பவானந்தர், ஸ்வாமி அபேதானந்தர், மாதா அம்ருதானந்தமயி என்று இன்றைய காலக்ரமம் வரை இங்கு நான் குறிப்பிட்ட குறிப்பிடாத அனைத்து ஆன்ம ஞானிகளும் துறவிகளும் மேற்கண்ட வ்யாச வாக்கின் படி நாரயண ஸ்வரூபமாகத் தான் கருதப்படுகின்றனர். அவ்வாறு கருது என மேற்கண்ட வ்யாச வாணி சொல்கிறது. அதையொட்டி யதிகள் தெய்வத்திற்கொப்ப தொழப்படுவது மரபு சார்ந்த விஷயமே. இதில் விந்தையேதுமில்லை. மரபை ஏற்காதவர்கள் அல்லது மரபை மீற விழைபவர்கள் இதை ஏற்காதிருக்கலாம். மரபை ஏற்பவர்களை இவ்விஷயமாய் இடித்துரைப்பது தேவையற்றது.

உடனேயே “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்ற வாக்யப்படி உலகமே விஷ்ணு மயம் தானே யதி மட்டும் என்ன தனியாக நாராயண ஸ்வரூபம் என ப்ரதிவாதத்தில் இறங்க வேண்டாம். யதிகளை நாரயண ஸ்வரூபமாகக் கருது என்பது ஆன்றோர் வாக்கு சாஸ்த்ர வாக்கின் படி எதிர் கருத்தில் காணப்படும் அவஹேளனம் மாற்றுக்கருத்தால் மறுக்கப்படுகிறது.

நெறி பிறழ்ந்து செயல் படும் துறவிகள் உளரே எனில் பகவத் ச்ருஷ்டியில் நெறி பிறழாத ச்ருஷ்டியே இல்லை எனலாம். மானுடர்களால் துதிக்கப்பெறும் தேவர் தலைவனான இந்திரனே கூட நெறி பிறழ்ந்ததுண்டு என்பது புராணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாம்பின கால் பாம்பறியும் என்ற ரீதியில் ஆன்மீகம் வேண்டுவோருக்கு ஆன்மீகத்தில் உயர்நிலைக்கு உயர்த்தும் துறவியரும் குருமார்களும் மாறாக மந்திரத்தால் மாங்காய் வேண்டுவோருக்குத் துறவி அல்லது குரு என்ற பெயரில் கண்கட்டு வித்தைக்காரரோ மந்திரவாதியோ கிடைப்பார் என்பதும் அவரவர் எண்ணப்பாங்குகள் படி. யத் பாவம் தத் பவதி – எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே ஆவாய்.

“தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஸ்ரீமான் ஜடாயு அவர்களுக்கும் செரிமானமாகாததைக் கவனித்துள்ளேன். ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை என்ற வ்யாசத்தின் December 21, 2010 ம் திகதிய தனது உத்தரத்தில் ஸ்ரீமான் ஜடாயு கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

”தெய்வத்தின் குரல்” என்று அதீத வழிபாட்டுணர்வுடன் பெயரிடப் பட்டிருக்கும் உபன்யாசத் தொகுப்பு நூலை இங்கு மறுமொழிகளில் பலர் சுட்டிக் காட்டுகிறார்கள் (என்னிடம் கேட்டால், “காஞ்சி பரமசாரியார் உபன்யாசங்கள் தொகுப்பு” என்ற பெயரே பொருத்தமானது என்பேன், Complete Works of Swami Vivekananda என்பது போல). இந்தப் பெயரே மிரட்டும் தொனியில் இருக்கிறது!”

என்னிடம் கேட்டால் “Complete Works of Swami Vivekananda” என்பதற்குக் கூட “தெய்வத்தின் குரல்” என்று குறிப்பிடுவதில் தவறேதுமில்லை என்றே சொல்வேன். ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க துறவிகளில் ஒருவரான நாராயண ஸ்வரூபமான ஸ்வாமி விவேகானந்தரின் நூற்தொகுப்பை “தெய்வத்தின் குரல்” என குறிப்பிடுவது சாஸ்த்ர சம்மதமானது தான் என்பது மேற்கண்ட வ்யாசவாணியின் படி தவறில்லை என சித்தமாகிறது. சரி,அது எப்படி ஒரே பெயரில் பல நூற்கள் என வினா எழலாம். பாகவதம் என்ற படிக்கு ஸ்ரீமத் பாகவதமும் உண்டு தேவி பாகவதமும் உண்டு. ஸஹஸ்ரநாமம் என்ற படிக்கு விஷ்ணு, லலிதா, சிவ, சுப்ரமண்ய என பல ஸஹஸ்ரநாமங்களுண்டு. கோவில் என்றால் வைஷ்ணவர்கட்கு ஸ்ரீரங்கம் சைவர்கட்கு சிதம்பரம். ஆக ப்ரச்சினையேதும் இல்லை.

மேலும் “தெய்வத்தின் குரல்” என்ற புஸ்தகத் தொகுப்பு அமரர் ஸ்ரீ ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டது. பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் ஸ்ரீமான் ரா.கணபதி அவர்களின் குரு என அறிகிறேன்.

ஒரு குழந்தையிடம் குரு பற்றிய ஸம்ஸ்க்ருத ச்லோகம் ஒன்று சொல்லு என்றால் ஆஸேது ஹிமாசலம் உள்ள எந்த ஒரு குழந்தையும் பட்டென்று உதிர்க்கும் ச்லோகம்

“குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:”

குரு என்ற ஸ்தானத்தில் இருப்பவரை மும்மூர்த்தி ஸ்வரூபமாகக் கருது என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன. விஸ்வாமித்ரர் ராமபிரான், சாந்தீபனி கண்ணன், சங்கரர் பத்மபாதர், ராமானுஜர் கூரத்தாழ்வார், மத்வர் ஆனந்ததீர்த்தர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு ஆறு கோஸ்வாமிகள், ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் என நீண்ட குரு சிஷ்ய பரம்பரை வழக்கில் பாரத வர்ஷம் முழுதும் குருவானவர் வழிபாட்டுணர்வுடனேயே சிஷ்யனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். “அதீத” என்ற அடைமொழி அவ்வழிபாட்டுணர்வை “அதீதமாய்” பார்ப்பவரின் பார்வையில் தான். ஆதிசங்கரர் வாவென்றழைக்க எதிரில் நதியுள்ளது என்று கூட பார்க்காமல் நதிநீரில் நடந்து வந்த பத்மபாதருக்கு தனது செயல் வழிபாட்டுணர்வா அது “அதீதமானதா” என்றெல்லாம் யோசித்து பின் அவ்வாறு அச்செயல் செய்யப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

மர்க்கட மார்ஜால ந்யாயம் குரு சிஷ்ய உறவுக்கு சொல்லப்படுகிறது. மர்க்கடம் என்றால் குரங்கு மார்ஜாலம் என்றால் பூனை. மலைக்கும் மடுவுக்கும் மேட்டிலும் பள்ளத்திலும் குரங்கு தாவினாலும் குரங்குக் குட்டி தன் தாயை விடாது இறுக்கப்பற்றிக்கொள்ளும். செல்லுமிடந்தோறும் தன் குட்டிப்பூனையைத் தாய்ப்பூனை கவ்விச்செல்லும். சிஷ்யனானவன் தன் குருவை மர்க்கட சிசுவின் பாவத்தில் பற்ற வேணும் என்றும் குருவானவர் மார்ஜால மாதா பாவத்தில் தன் சிஷ்யனை அரவணைக்க வேணும் என்றும் இதன் தாத்பர்யம்.

குருவிடத்து சிஷ்யனுக்கு வழிபாட்டுணர்வு மற்றும் அதை வகை தொகைப்படுத்தல் அதை ஏற்காதது அல்லது புறந்தள்ள விழைவது அவரவர் விருப்பம். வழிபாட்டுணர்வை இழித்துரைப்பதோ அதை எடை போட்டு “சாதாரணம்” அல்லது “அதீதம்” என வகைத்தொகைப்படுத்துவதோ மரபின் பாற்பட்டதன்று. தேவையற்றதும்.

“தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஒரு யதியின் கருத்துக்கள் என்ற ரீதியில் வைக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய குரு என்ற ரீதியில் வைக்கப்பட்டிருந்தாலும் சரியானது தான் என்பது மேற் சொன்ன காரணங்களால் சித்தமாகிறது.

தெய்வத்தின் குரல் என்ற சொல்லாடல் ஏன் மிரட்டும் தொனியில் உள்ளது என புரியவில்லை!!!!!! ஹிந்து தெய்வங்களெதுவும் என்னை நீ வணங்காவிடில் மீளா நரகம் புகுவாய் என பூச்சாண்டியெல்லாம் காட்டுவதில்லையே.

மிகப்பரந்த ஹிந்து சமயத்தின் மிகப்பல பரிமாணங்களில் ஒரு பரிமாணமாகவே தான் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி முன் வைக்கப்படுகிறார். ஒட்டு மொத்த ஹிந்து சமயத்தின் அதிகாரமான குரலாக அவரோ அல்லது வேறு யாருமோ அவரை முன் வைக்கவில்லை என்பது என் புரிதல். சைவர்களுக்கோ வைஷ்ணவர்களுக்கோ அவர் வாதங்களை ஏற்கவேண்டுமென்பதில்லை. அவரவர் வழிப்படி வழிபாடுகள் செய் என்று தான் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிளும் சொல்கிறார் என்றே என் புரிதல். சைவர்கள் வைஷ்ணவர்கள் போன்று அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்ற விழைவோர் அனைவரும் கூட அவர் சொல் தான் கடைசீ சொல் என்று சொல்வதில்லையே. அவரை குருவாக ஏற்பவருக்கு அவர் சொல் கடைசீ சொல்லாக இருக்கலாம். அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர்களில் கூட மற்ற குருமார்களை ஏற்பவர்களுக்கு பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியின் சொல் கடைசீ சொல் என இல்லையே. இல்லாத ஒன்று ஏன் இருப்பதாகக் காண்பிக்கப் படுகிறது தெரியவில்லை.

மஹாத்மா காந்தி காஞ்சி மாமுனிவரைக் காண பாலக்காடு சென்றாரா. அல்லது காஞ்சி மாமுனிவர் காந்தியடிகளைக்கண்டு பழமைவாதம் பேண மன்றாடினாரா என்றெல்லாம் இணைய தளங்களில் விவாதம் செய்யப்பட்டுள்ளது. விவாதத்தினூடே உதிர்க்கப்பட்ட விஷயங்களில் காந்தியடிகள் காஞ்சிமாமுனிவரை அப்படி ஒன்றும் மதித்தவரில்லை என்பதும் ஒன்று. இருவரிடையே நிகழ்ந்த சம்பாஷணம் யாது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனில் எழுதுபவரிடம் எழுதுகோலும் தட்டிவிட்டால் பறந்தோடும் மனக்குதிரை விரும்பும் மார்க்கத்தில் சென்று கற்பனையை எழுத்தில் வடிக்கும் திறமையும் வழிபட வாசகர்களும் இருப்பார்களானால் எழுதப்படுவது சரித்திரம் என சாதிக்க வேண்டிய அவசியமிருக்காது. எழுதப்பட்டது சரித்திரம் என்று வழிபடும் வாசகர்கள் நிர்த்தாரணம் செய்வர்.

“மஹாமனா மாளவியோ மஹாத்மா காந்திரேவச” என முந்தைய ப்ராதஸ்மரணம் அதவா பாரத பக்தி ஸ்தோத்ரத்திலும் “தாதாபாயீ கோப பந்து: திலகோ காந்திராத்ருதா:” என இப்போதைய “ஏகாத்மதா ஸ்தோத்ரத்தில் ஸ்வயம் சேவகர்களால் ஸ்மரிக்கப்படும் காந்தியடிகள் காஞ்சிமாமுனிவரை ஏற்றுக்கொண்டாரா இல்லையா மதித்தாரா மதிக்கவில்லையா என்பதெல்லாம் அனுமானத்தின் பாற்பட்ட கருத்துக்களே. நெருப்பு சுடும் என்பது போல மறுக்க முடியாது நிர்த்தாரணம் செய்யப்பட்ட உண்மைகளன்று.

காந்தியடிகளை உள்ளபடி அவரின் நற்கருத்துக்களுக்காக ஏற்றுக்கொண்டாலும் தேசத்தை நாசம் செய்த செய்கின்ற காங்கிரஸ்காரர்கள் போன்று அவருடைய நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஸ்வயம் சேவகர்கள் ஏற்பதில்லை என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம்.

மேலும் ஹிந்து சமயத்திற்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் காந்தியடிகளால் நன்மையேற்பட்டதா தீமைகள் விளைந்துள்ளதா என்பதில் ஹிந்து எழுச்சிக்குப் பாடுபடுபவர்களில் வெகு நிச்சயமாக இரு கருத்துக்கள் உண்டு. இந்த தளத்திலும் மற்றைய ஹிந்துத்வ தளங்களிலும் ஹிந்துக்களால் மதிக்கப்படும் இளைய மற்றும் முதிய பல எழுத்தாளர்கள் காந்தியடிகளையும் காந்திய கருத்துக்களையும் அவரின் சில அல்லது ஒட்டுமொத்த நிலைப்பட்டுகளையும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர் என்பது சுடுகின்ற உண்மை.

ஆனால் ஹிந்து மதத்திலும் ஹிந்து சமய எழுச்சியிலும் அல்லும் பகலும் பாடுபடும் ஸ்வயம் சேவகர்கள் மாற்றுக் கருத்துக்களன்றி ஏற்கும் மாமனிதர் குருஜி என அன்புடன் அழைக்கப்படும் சங்கத்தின் இரண்டாவது சர் சங்க சாலக் (அகிலபாரத தலைவர்) என்ற பொறுப்பில் இருந்த பரம பூஜனீய ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் அவர்கள்.

யார் காஞ்சி மாமுனிவரை மதிக்கிறார்களோ இல்லையோ, கருத்து வேறுபாடின்றி ஹிந்து இயக்கத்தினரால் மிக உயர்வாக மதிக்கப்படும் குருஜி அவர்கள் பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவரை மிகவும் மதித்தவர். காந்தியடிகள் காஞ்சிமாமுனிவர் சந்திப்பின் அடிப்படையில் அடித்துவிடப்படும் கருத்துக்கள் போன்று புனைவா இது என வினா எழலாம். இது என் கற்பனா சக்தியால் புனையப்படும் கருத்தன்று. ஆதார பூர்வமானது.

டாக்டர்ஜி என அன்புடன் அழைக்கப்படும் சங்கத்தின் முதலாவது சர் சங்க சாலக் பொறுப்பில் இருந்த பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களது நினைவில் நாக்பூர் நகரத்தில் “ஸ்ம்ருதி மந்திரம்” என்ற நினைவாலயம் பரம் பூஜனீய குருஜி அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பாரத நாடு முழுதிலிருந்தும் ப.பூ.டாக்டர்ஜீ அவர்களின் பிறந்தநாள் அன்று நிச்சயிக்கப்பட்ட அந்நினைவாலய திறப்புவிழாவில் ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் காலையிலும் மாலையிலும் வேதமந்த்ரங்கள் ஓதப்பட்டும் மற்றும் சதுர்வேத பாராயணத்திற்கும் பரம் பூஜனீய குருஜி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஆசீர்வதித்தருளுமாறு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை பரம் பூஜனீய குருஜி அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் வேண்டுகிறார். அந்த ஸ்ரீமுகத்தின் நகல் இத்துடன் இணைப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டது இக்கடிதம். முதல் பக்கத்தில் ஸம்ஸ்க்ருத பாஷையிலும் இரண்டாவது பக்கத்தில் ஹிந்தி பாஷையிலும் எழுதியுள்ளார். மேற்கண்ட கடிதத்தின் நகலை இன்றும் ப.பூ.குருஜி அவர்களுக்கான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

[gview file=”http://www.tamilhindu.com/wp-content/uploads/Shankaracharya_Kanchi.pdf”]

இயன்றவரை தமிழ் லிபியில் கீழே அக்கடிதத்தை ட்ரான்ஸ்லிடரேட் செய்துள்ளேன்.

“சைத்ரே ஸுதி ப்ரதிபதி பரமபூஜனீய டா.ஹேட்கேவார் மஹாபாகானாம் ஜன்மதிவஸே யதாநிஸ்சிதம் ததீய ஸ்ம்ருதிமந்திர ஸமுத்காடயத. அஸ்ய மஹோத்ஸவக்ருதே பாரத வர்ஷஸ்ய ஸமஸ்த ப்ரதேசத: ப்ரதிநிதிபூதா: ஸஹஸ்ரச: ஸ்வயம்சேவகதுரீ நாகபுரே சங்க கேந்த்ரஸ்தானே ஸ உத்ஸாஹம் ——-. ஸ்ம்ருதி மந்திர உத்காடன தினே ப்ராத: ஸாயஞ்ச வேதமந்த்ரோச்சார பூர்வகம் ஸமுசிதோ—- நிஹிதா. ஸாயங்காலே ஸார்வஜனீய மஹோத்ஸவ அவஸரே சதுர்வேத படனானந்தரம் பூஜ்ய சரணானாம் மங்களாசீர்வசன பத்ரம் மயா ஸர்வேப்ய: ச்ராவயித்வா ஏதாந்நிமித்தம் ஸ்ரீமத்பி: ப்ரோஷிதானாம் பூதி-குங்கும- மந்த்ராக்ஷதானாம் ஸமர்ச்சனேனைவ ஸ்ம்ருதிமந்திரஸ்ய உத்காடனம் ஸஞ்ஜானாம் இதி ப்ரோத்கோஷிதம். ஏவம் விதேன விதினா ஸ்ம்ருதி மந்திர உத்காடன மஹோத்ஸவ: ஸமபாத்யத.

அஸ்ய மஹோத்ஸவஸ்ய ——–ஆசாஸே.

——அஸ்மாகம் ஸர்வேஷாம் பகவத்க்ருபா——-.

ஸ்ரீமஜ்ஜகத்குரு க்ருபாபிலாஷீ சரணரஜ:
மா. ஸ. கோல்வல்கர்

(கோள்வால்கரோபாத ஸதாசிவ ஸுத: மாதவ:)

ப.பூ குருஜி அவர்கள் கடிதத்தை முடிக்கையில் ஸ்ரீ ஜகத்குரு அவர்களின் க்ருபைக்கு விழையும் அவரது அடிப்பொடி என தன்னை விளித்து கடிதத்தை நிறைவு செய்கிறார்.

பூஜைக்கு உரிய காஞ்சிமாமுனிவர் ஹிந்து தர்மத்திற்கு ஊறு விளைத்ததாக தமிழ் ஹிந்து தளத்தில் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உபன்யாசங்களின் தொகுப்பான நூல் ஆபாச மஞ்சள் புத்தகம் என இத்தளத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்து இயக்கங்களை பரிச்ரமப்பட்டு கட்டமைத்த ஹிந்து இயக்கங்களின் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருந்த ப.பூ. குருஜி பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவரை குறிக்கையில் அவர்களின் க்ருபைக்கு விழையும் அவரது அடிப்பொடி என விளிக்கிறார். இவை நான் தெளிவு படுத்தும் விஷயங்கள். “ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்” – அப்ரியமான உண்மைகளை பேசாதே என்ற மூத்தோர் சொல்லை பின்பற்றி மேற்சொன்ன கருத்துச்சாரங்களிலிருந்து நாம் மேலும் என்ன புரிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இதை வாசிப்பவரிடம் விட்டு விடுகிறேன்.

ப.பூ.குருஜி அவர்கள் பூஜ்ய ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் அவர்களின் நேரடி சீடரான அகண்டானந்தரின் சிஷ்யர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

ஸ்ரீமான் செந்தில் அவர்கள் “வேதம் புனிதமடைந்தது” என்ற வ்யாசத்தின் உத்தரங்களில் ஸ்வாமி விவேகானந்தர், ஸ்வாமி சித்பவானந்தர், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் போன்ற பெரியோர்களை சுடுசொற்களால் குறிப்பிட்ட போது தலையிட்ட ஆசிரியர் குழு ஹிந்து இயக்கங்களின் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருக்கும் ப.பூ. குருஜி அவர்களால் வணங்கப்பெற்ற காஞ்சிமாமுனிவர் ஹிந்து தர்மத்திற்கு ஊறு விளைவித்தவர் என்றும் அவர் கருத்துக்கள் அடங்கிய “தெய்வத்தின் குரல்” என்ற ஒட்டுமொத்த நூற்தொகுப்பு “ஆபாச மஞ்சள் பத்திரிக்கை” என இகழப்பட்ட பின்னர் மௌனம் சாதித்ததும் துரத்ருஷ்ட வசமானதே.

கருத்து வேறுபாடுகளை விவாதம் செய்வது ஆரோக்யமானது. அவசியமானதும் கூட. சமூஹத்தின் முன்னோடிகளை அவர் தம் கருத்துக்களை தரம் தாழ்ந்து முத்திரை குத்துவதை தவிர்க்கலாமே. தமிழ் ஹிந்து தளத்திற்கும் வசவு தளங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என புரிதல். வசவுப்பதிவுகள் அவற்றை நிறைவு செய்யும் தன்மையவை.

பூஜ்ய ஸ்ரீ காஞ்சிமாமுனிவரை போற்றி அவர் தம் திருத்தாள்களில் அடியேன் சமர்ப்பிப்பது :-

சமதர்சன சந்துஷ்டாய நமோ நம:
வேத தர்ம சாஸ்த்ர பரிபாலனாய நமோ நம:
பாத்ராபாத்ரபேதவினா காருண்யாம்ருத கடாக்ஷ வர்ஷிணாய நமோ நம:

ஸௌலப்ய ஸௌசீல்யாதி ஆத்மகுண பரிபூர்ண விக்ரஹ சந்த்ரசேகரேந்த்ர யதிவர்ய: இத்யனுஸ்ம்ருத்ய வந்திதோஹம் வாரம் வாரம்.

பி.கு :-

  1. பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் அடியேனுடைய குருஸ்தானத்திய யதிவரர் அன்று. அடியேன் மிகவும் போற்றும் யதிவரர்களில் ஒருவர்.
  2. என்னுடைய இயல்பான மொழிநடையில் வ்யாசம் எழுதப்பட்ட பின்பும் இயன்றவரை தமிழ்ப்பதங்களால் மொழிநடை சீர்திருத்தப்பட்டுள்ளது. தமிழாங்கில விரும்பிகள் எப்போதும் போல் மணிப்ரவாள மொழிநடையின் மீது ப்ரத்யேகமாக சகதி வீச விரும்பலாம். அது அவர்களது விருப்பம். சொல்லப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நிறை குறைகளை பகிர விழையும் வாசகர்களுக்காக இவ்யாசம் சமர்ப்பிக்கப்படுகிறது.
  3. காவிரித்தண்ணீருக்காக கர்நாடகாவும் முல்லைப்பெரியாறுத் தண்ணீருக்காக கேரளமும் அவர்களிடையே சிக்கித்தவிக்கும் தமிழகமும் பார்க்கும் போது காஞ்சிமாமுனிவர் தாமிரபரணி நதி பற்றிய உபன்யாசம் இருபது முப்பதாண்டுகளுக்கு முன் கல்கி தீபாவளி மலரில் ப்ரசுரமானது நினைவுக்கு வருகிறது. மலயாளத்து மன்னன் ஒருவனது ப்ரம்மஹத்தி தோஷம் விலக கர்நாடக தேசத்து ப்ரம்மசாரி ஒருவன் தமிழகத்தில் தாமிரபரணி நதியைக் கொணர்ந்தது பற்றியதான உபன்யாசம்/ கதை. அவர் சொன்ன கதைப்படி இப்ரதேசங்களில் இருந்த ஒற்றுமை அபிமானம் எங்கே இன்று மாற்று ப்ரதேசத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுப்பதற்கு இடையூறுகள் செய்யும் மனப்பான்மை எங்கே என்பது துலங்கும். அந்த கதையை / உபன்யாசத்தை தமிழ் ஹிந்து தளம் வெளியிடுமாயின் துறவறத்துக்கு அடையாளமாக விளங்கிய ஹிந்து தர்மத்தின் பெருமை மிக்க துறவியாம் காஞ்சி மாமுனிவரை மனது நிறைவுடன் நினைவு கூர்வதாக அமையும்”வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே”என ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாடுவது பொழுதுபோகாது பாடும் பாடல் அல்ல வாஸ்தவத்தில் இத்தேசத்தில் உணர்வு பூர்வ ஒற்றுமை இருந்தது என துலங்கும். இன்று அவ்வொற்றுமை அரசியல்வாதிகளால் சிதைவு பட்டு வருகிறது ஆனால் அது நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற அவா நம்மில் உறுதியாக உள்ளது. அதற்கு உழைப்போம்.

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1

(தங்கமும், வைரமும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதுதான். இருந்தும் ஒன்றை உருக்கி வெவ்வேறு வடிவத்திலும், அளவிலும் நகைகளாகவும், மற்றதை வெவ்வேறு கோணங்களில் பட்டை தீட்டியும், வெவ்வேறு இடங்களில் பொருத்தியும் அழகு பார்க்கிறோம். அதுபோல நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மீகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இத்தொடர். ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.)

முன்னுரை:

இந்திய விமானப் படையின் வானிலைப் பிரிவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றியபின் 1989-ம் வருடம் ஒய்வு பெறும்போது, மூல ஆசிரியர் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு, அவரது விருப்பங்களை நன்கு புரிந்து கொண்ட சக ஊழியர்கள், ஒரு வால்மீகி ராமாயணம் புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அந்த நூலை வான்மீகி முனிவர் 24,000 செய்யுட்கள் வடிவில் 500 அத்தியாயங்களில் இயற்றியுள்ளார். அதை ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயமாக படித்து, தனது குறிப்புகளையும் எழுதி வந்தார். அப்படி அவர் அந்த நூலை மூன்றாம் முறையாகப் படித்து வரும் போது, வால்மீகி முனிவர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ராமாயணத்தை எழுதியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதை “Rama: a Model for Mankind” என்ற தலைப்பில் தனது ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்குப் பொருத்தம் என்று தோன்றிய மூல சம்ஸ்க்ருத சுலோகங்களை தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலத்தில் விளக்கி அதன் தொடர்பான இராமாயண நிகழ்ச்சிகளையும் விவரித்துள்ளார். அந்த மூல நூலை நான் படிக்க நேர்ந்தபோது, நான் பெற்ற இன்பத்தை தமிழ்ஹிந்து வாசகர்களுக்கும் மொழியாக்கம் செய்து அளிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.

உடனே ஆசிரியரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அதற்கு அவர் அனுமதியைக் கேட்டேன். அவரோ, “பகீரதன் தனது முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு என்று கங்கை நதியைக் கொண்டு வந்தான்; நாம் எவருடைய அனுமதியைப் பெற்று கங்கை நீரைப் பருகுகிறோம் என்று போஜ மகராஜா சம்பு ராமாயணத்தில் சொல்வதைச் சொல்லி, தாங்கள் மொழியாக்கம் செய்ய அனுமதி அளிப்பதற்கு நான் யார் ? ராமாயணம் மக்கள் அனைவரின் சொத்து. தங்கள் பணியைத் தாராளமாகச் செய்யுங்கள்” என்று மிக்க பெருந்தன்மையுடன் ஆசீர்வதித்தார். ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள மூலச் செய்யுட்களையும், சில சொற்களின் பொருளையும் நான் IIT Kanpur தொகுத்தளித்துள்ள வால்மீகி இராமாயண இணையதளத்திலிருந்து ( http://valmiki.iitk.ac.in/index.php?id=translation ) அப்படியே எடுத்து தொடர் கட்டுரையில் பொருத்தியுள்ளேன். நாரதர், வால்மீகி முதற்கொண்டு லக்ஷ்மிநாராயணன் உள்ளிட்ட நம்முடன் என்றும் வாழும் பாரதப் பெரியோர்களை மானசீகமாக வணங்கி, எனது பணியை வரும் ராம நவமி முதற்கொண்டு இத்தொடர் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருந்து எல்லாம் நல்லபடி நடந்தேற அருள் புரிவானாக.

1. கற்ற பின் நிற்க அதற்குத் தக
तपःस्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम् ।
नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् ।। 1.1.1 ।।

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | 
நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

तपस्वी ascetic, वाल्मीकि: Valmiki, तप: स्वाध्यायनिरतम् highly delighted in the practice of religious austerities and study of vedas, वाग्विदां वरम् eloquent among the knowledgeable, मुनिपुङ्गवम् pre-eminent among sages, नारदम् Narada, परिपप्रच्छ enquired.

முனிவர்களுள் சிறந்தவரும், வேதம், யக்ஞம் மற்றும் பலவிதமான கலைகளைக் கற்று அவை சொல்வதற்கு ஏற்ப வாழ்பவருமான நாரத முனியை வால்மீகி முனிவர் கேட்கிறார் ( உலகில் வாழ்வாங்கு வாழ்பவனின் குணங்கள் எத்தகையது என்று).

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

2. பதினாறும் பெற்ற பெருவாழ்வு

को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | 
த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||

अस्मिन् लोके in this world, साम्प्रतम् now, गुणवान् endowed with excellent qualities, क: नु who indeed, वीर्यवांश्च with prowess, धर्मज्ञ: च knower of righteousness, कृतज्ञ: च grateful (who remembers even little help done by others), सत्यवाक्य: truthful in his statements, दृढव्रत: firm in his vows (till such time he achieves the results), क: who?

चारित्रेण च को युक्तः सर्वभूतेषु को हितः ।
विद्वान् कः कः समर्थश्च कश्चैकप्रियदर्शनः ।। 1.1.3 ।।

சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: | 
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: ||  1.1.3 ||

क: who?, चारित्रेण with good conduct, युक्त: is endowed, क: who?, सर्वभूतेषु for all living beings, हित: benefactor, क: who?, विद्वान् learned man (knower of everything which is to be known), क: who?, समर्थ: च competent (capable of doing things which cannot be done by others), क: who? एकप्रियदर्शन: च solely delightful in appearance to everyone,

आत्मवान् को जितक्रोधो द्युतिमान् को ऽनसूयकः ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।। 1.1.4 ।।

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | 
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

आत्मवान् self-restrained, क: who?, जितक्रोध: one who has conquered anger, द्युतिमान् one who is endowed with splendour, अनसूयक: one who is free from envy (envy – depicting one’s merits as weak points), क: who?, जातरोषस्य excited to wrath, कस्य to whom, संयुगे in the battle, देवा: च celestial beings, devatas, बिभ्यति are afraid of.

நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

குணங்கள் என்று வந்துவிட்டாலே நல்லவை, கெட்டவை என்ற இருமை வந்துவிடும். இதில் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் எது மிகுந்து காணப்படுகிறதோ, அந்த சமயத்தில் அவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ குறிப்பிடுகிறோம். அதாவது ஒருவனுக்கு நல்லவனாகவோ, தீயவனாகவோ இருப்பதற்கு சரிசம வாய்ப்புகள் இருக்கின்றன. நீதி, உண்மை கலந்த தூய எண்ணங்களோடு வாழ்ந்து, அவை ஒட்டிய செயல்களைப் புரிய விரும்புவோன் நல்லவனாகவே வளர்வான், இருப்பான். அப்படி எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்? இதை எல்லாம் யோசித்த வால்மீகி முனிவர் மேற்கண்டவாறு பதினாறு நற்குணங்களைப் பட்டியலிட்டார்.

சாதாரண மக்களிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தால், இவ்வளவா என்று மலைத்துப் போய் இதெல்லாம் நமக்கு ஆவாது, நம்மால் முடியாது என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி, இக்குணங்கள் அனைத்தையும் உள்ளடக்கி வாழும் ஒருவனைப் பற்றிச் சொன்னால் நன்மை பயக்குமே என்று எண்ணினார். அப்படியும் ஒருவன் இருக்கிறானா, அப்போது நம்மாலும் அப்படி வாழ இயலும் என்று தோன்றுவது மக்களின் சாதாரண இயல்புதானே? ஆதலால் நாரதரை அணுகி அவர் வினவும் போது, அவரும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருந்த இராமனின் வரலாற்றைப் பற்றிச் சொல்வதாக அமைந்துள்ளது இராமாயண காவியம். அதன் முதல் அத்தியாயத்திலேயே நூறு செய்யுட்களில் ராமனின் கதையாக இராமாயணக் காவியம் முழுவதும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் தொடக்கமே மேலே நாம் கண்ட அந்த பதினாறு குணங்களின் விரிவான பட்டியல்தான்.

இன்று வேண்டுமானால் இராமனை நாம் தெய்வமாகக் கொண்டாடலாம். ஆனால் வால்மீகியின் இராமாயணத்திலோ இராமன் ஒரு சாதாரண மனிதனைப் போல்தான் காட்சி அளிக்கிறார். அதில் அவர் எந்த விதமான அமானுஷ்ய அல்லது தெய்வீக குணாதிசயங்களைக் காட்டவில்லை. ஆக இராமன் மதித்து, நேசித்து, வாழ்ந்த நெறிமுறைகள் அனைத்துமே எந்த மனிதனாலும் எளிதாகக் கடைப்பிடிக்க முடியும். வால்மீகி முனிவர் தந்த இராமனை நாம் எவருமே நம் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொள்ள முடியும்.

(தொடரும்)

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்