திக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்

ஜீலை மாதம் 13ந் தேதி மும்பையில் மூன்று இடங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்தன.

The active ingredient is dapoxetine, an antidepressant. Among these parasites, *haemonchus*, *teladorsagia*, *contracaecum*, *strongyloides*, *trichuris* and *oesophagostomum* genera belong to gastrointestinal http://bizgatefinancial.com/industries-served/ parasites of domestic and wild animals. There are two tamoxifen dosage forms, 20 mg and 50 mg, both of which can be given as a single dose or taken once or twice daily depending on your medical history and your symptoms.

The side effects that appear to cause it include: stomach and abdominal discomfort, diarrhea, and lightheadedness. In general, any diet that does not allow the Corcoran development of the disease but may improve the tone of the skin. I thought it was odd that you could not eat breakfast.

However, it is rare to be able to use this treatment to cure an infection. Amoxicillin can be taken in Port Said clomid drug price in nigeria the morning before a meal, and it should be used with caution during pregnancy, as this medicine can affect the mother’s ability to make enough of an immune response to her own baby. A blood test that analyzes the concentration of neurontin in a small sample of blood.

தேசம் முழுவதும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல்களை நிகழ்த்தியது இந்தியன் முஜாஹிதீன் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகவே இருக்கக் கூடும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வழக்கம் போலவே திக்விஜய்சிங் சங்க பரிவார்களையும் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீதும் பாரதீய ஜனதா கட்சியின் மீதும் திக் விஜய் சிங் சுமத்தும் குற்றச்சாட்டுகள் புதிதல்ல. சில ஆண்டு காலமாகவே குறிப்பாக எப்பொழுதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி வருகிறதே, அப்போதெல்லாம் திக் விஜய் சிங் இம்மாதிரி அபத்தமான பேச்சு பேசுவது வாடிக்கையாகி விட்டது. நாடு முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் பற்றி இதுவரை வாய் திறந்து எவ்வித கருத்தையும் இந்த ஆசாமி கூறவில்லை. இவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் வடிக்கட்டிய பொய் என்பது உலகறிந்த உண்மையாகும். 1949லிருந்து காஷ்மீரில் நடத்தும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை பற்றிய கருத்துகளை இதுவரை கூறாதவர் என்பது கவனிக்க தக்கது.

july_2011_mumbai_bomb_blast

18.7.2011 மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை பற்றி கூறும் போது “ஆர்.எஸ்.எஸ். வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்திருக்கிறார்கள்” என்றார். உண்மையில் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை ஆர்.எஸ்.எஸ் இயக்குகிறார்கள் என்றால், திக்விஜய் சிங்கின் காங்கிரஸ் கட்சி தான் மத்தியில் ஆட்சியில் உள்ளது. இவர்கள் இது சம்பந்தமாக தனது அதிகாரத்தின் கீழ் உள்ள உளவு அமைப்புகளை முடுக்கி விட்டு, தக்க சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கலாமே? ஏன் அதை செய்யவில்லை? அல்லது மத்திய அரசுக்கு திக்விஜய்சிங் தனது கோரிக்கையை இது வரை ஏன் வைக்கவில்லை? திடீர் என 23.7.2011 அன்று போபாலுக்கு அருகில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு வெடி குண்டு தயாரிப்பது பற்றிய பயிற்சி கொடுக்கிறார்கள் “என கூறுகிறார். ஆகவே இவரது குற்றச்சாட்டில் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக எவ்வித அரசு பதவியும் இல்லாமல் இருப்பதால் பதவி வெறியின் காரணமாகவே உளறுகிறார்.

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் இழந்தார்கள். இந்த சம்பவத்தில் காவல் துறை பொறுப்பாளர் ஹேமந்த கார்கரே வும் உயிர் இழந்தார். இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டு காவலில் உள்ள கசாப் கூட தன்மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டையும் இஸ்லாமிய அமைப்புகளின் தொடர்பையும் மறுக்கவில்லை.

ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலில் ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்லாமல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார். திக் விஜய் சிங்குக்கும் கர்கரேக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் எதுவுமே நடக்கவில்லை என மும்பை புலனாய்வு செய்து கூறியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முழுவதும் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பயங்கரவாத இயக்கம் லஷ்கர்-இ-தொய்பா என்பதும், இவர்களுக்கு முழு உதவி புரிந்தது தடை செய்யப்பட்ட இயக்கமான சிமி என்பதும் புலன் விசாரனையில் தெரிய வந்தது. தான் சொல்லிய அப்பட்டமான பொய்க்கு இன்றுவரை திக்விஜய் சிங் வெட்கப் படவுமில்லை, தேசத்தின் முன்பு மன்னிப்பு கேட்கவுமில்லை.

மகராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள மலோகன் நகரில் இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை இன்று வரை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ந் தேதி சைக்கிள் ஒன்றில் இருந்த குண்டு வெடித்து ஐந்து பேர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி என இந்து சன்யாசியை கைது செய்ததை மட்டும் வைத்துக்கொண்டு குற்றம் சுமத்தும் திக்விஜய்சிங் இதற்கு முன் நடந்த குண்டு வெடிப்பின் குற்றவாளிகள் இஸ்லாமியர்கள் என தெரிந்து கைது செய்யாதது ஏன் என்பது பற்றி பேச மறுக்கிறார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி டெல்லியில் ”26/11 – An R.S.S. Conspiracy” எனும் தலைப்பில் எழுதப் பட்ட ஒரு டுமீல் புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் திக்விஜய்சிங். இந்த புத்தகத்தை எழுதியவர் Aziz Burney என்பவர். இவர் எழுதிய பல கட்டுரைகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்து தீவிரவாதி என்றும், இந்து அமைப்புகள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புகள் என்றும் தொடர்ந்து எழுதி வருபவர். இவரின் உற்ற நன்பர் காவி பயங்கரவாதம் என கூறிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இந்த எழுத்தாள ஆசாமி 2009ம் ஆண்டு துவக்கத்தில் எழுதிய கட்டுரையில் நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த கார்கரேவை இந்தியாராணுவம் கொன்றது என எழுதினார்! அதே கட்டுரையில் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும், ஆர்.எஸ்.எஸ். என்றும் குறிப்பிட்டு எழுதினார். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதி மன்றத்தில், இவர் மீது பொய்யான, ஆதாரமற்ற இந்திய எதிர்ப்பு கட்டுரை எழுதியதற்காக குற்றம் சாட்டப்படு வழக்கு நடக்கிறது. இப்படி பட்ட தேச விரோதியின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட திக்விஜய்சிங் எப்படி பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் கருப்பு பணத்தை தடுக்கவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும் உண்ணவிரதம் மேற் கொண்ட பாபா ராம்தேவ் போராட்டததை கொச்சசைப்படுத்தினார். உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு முன் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சுபோத் காந்த் சகாய் போன்ற நான்கு அமைச்சர்கள் பாபா ராம் தேவ் அவர்களை சந்தித்து பேசியதை கண்டித்தார். அமைச்சர்கள் பேசியது அரசு தரப்பில் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தம் கிடையாது என்றும் கூறினார். இந்த வார்த்தைகளோடு நிறுத்தி இருந்தால் எவ்வித விமர்சனமும் எழுந்திருக்காது. இதற்கு ஒரு படி மேலே போய் பாபா ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தூண்டுதால் தான் காரணம் என குற்றச்சாட்டை சுமத்தினார். நாட்டிற்கு விரோதமான காரியங்கள் நடக்கும் போது ஆர்.எஸ்.எஸ் கை கட்டி வாய் மூடி இருக்க வேண்டும் என திக்விஜய்சிங் எதிர்பார்க்கிறா என்பது புரியவில்லை.

நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ் நாட்டின் ஒற்றுமைக்கும், ஜனநாயகத்தை பாதுகாக்வும் தனது பங்கினை செவ்வனே செய்துள்ளது. 1947க்கு முன் நாட்டில் நடந்த சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தியடிகள் விடுத்த அறைகூவலுக்கு அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டதால் விடுதலை பெற்றோம். சுதந்திரத்திற்கு பின் பல்வேறு சம்பவங்களில் அரசு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்ட போதும், நாட்டின் இறையான்மைக்கு ஆபத்து ஏற்பட்ட போதும், நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்ட போதும் அதை மீட்பதற்காகவே பல்வேறு போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரங்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் ஏராளம்.

1974ம் ஆண்டு ஜீன் மாதம் ஜெயப்பிரகாஷ் நாராயண் துவக்கிய போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அன்றைய தினத்திலிருந்த பாரதீய ஜனசங்கம் முழுமையாக கலந்து கொண்டதால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது என்பதும், 1975ல் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசர நிலையை எதிர்த்து அனைவரும் ஒரே அணியில் திரண்டதால் இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தை திரும்ப பெற்றார் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மீண்டும் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தலைமறைவில் போராட்டத்தை நடத்தினார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகவே சமுதாயத்தின் மேன்மைக்கு பங்கம் எற்படுதம் ஊழல், மோசடி, கருப்பு பணம் போன்ற தீய சக்திகளை அழிக்க அனைவரும் ஒரே அணியில் இணையும் போது ஆளும் கட்சியினர் கூறும் பழைய பல்லவிதான் ஆர்.எஸ்.எஸ். என்ற பூசாண்டியாகும். நாடு தழுவிய பொதுவான பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு இல்லாமல் எந்த போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.

raul_rss_simiஇன்று பாரத தேசத்துடன் காஷ்மீர் மாநிலம் இணைந்து இருப்பது ஆர்.எஸ்.எஸ் சின் இடைவிடாத போராட்டமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. சர்தார் பட்டேல் மற்றும் காந்திஜி மூலம் இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டும் என மகாராஜா ஹரிசிங்க்கு முயற்சி செய்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. ஆகவே சர்தார் பட்டேல் திரு மேகர் சந்த் மகாஜன் மூலம் மகாராஜா ஹரிசிங்கிடம் பேச ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜிக்கு கடிதம் கொடுத்தார். குடிதம் கிடைத்தவுடன் குருஜி தனது அனைத்து சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்து விட்டு பண்டிட் திரு பிரேம் நாத் டோக்கராவும் உடனிருக்க, மகாராஜா ஹரி சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தி காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைய முழு சம்மத்தை வாங்கினார். காஷ்மீர் இந்தியாவுடன் இணைய முழு முயற்சி எடுத்து வெற்றி கண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்பதை பொய்மையும் கயமையுமே உருவான திக்விஜய் சிங் போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஆனால் இந்திய மக்களுக்கு மறக்கவில்லை.

காஷ்மீர் மாநில பிரதமராக ஷேக் அப்துல்லா பதவி ஏற்றவுடன் காஷ்மீர் மாநிலத்திற்கு வருபவர்கள் அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டுதான் வர வேண்டும் என உத்திரவிட்ட போது, பாரதீய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த டாக்டர் சியம பிரசாத் முகர்ஜி சட்டத்தை மீறி பத்தான்கோட் பகுதியிலிருந்து ஸ்ரீநகருக்கு பாதயாத்திரை சென்று மர்மமான முறையில் சிறையில் உயிர் விட்டபின் தான் நேரு நடவடிக்கை எடுத்தார். ஆகவே இந்த நாட்டில் நடக்கும் தேச விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகள் நடக்குமானால் அதை தடுக்க யார் முன் வந்தாலும் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தங்களது முழு ஆதரவை கொடுக்கும் என்பது வரலாற்று உண்மையாகும்.

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கில் முறைகேடு செயது சிறையில் உள்ள சுரேஷ் கல்மாடியும் கார்கில் பேரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு வீடு கட்டி தரும் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடுகள் செய்து தனக்கு வேண்டியவர்களும் ஒதுக்கீடு செய்ததும், இன்னும் சில முறைகேடுகளுக்காகவும் முதல்வர் பதவியை இழந்த அசோக் சவான் ஆகிய இருவரும் அப்பாவிகள் என திக்விஜய் சிங் 11.7.2011 அன்று கருத்து தெரிவித்துள்ளார். இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த இருவர் மீதும் மத்திய புலனாய்வு துறை விரிவான விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் சுமத்திய பின்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்ச நீதி மன்றத்தில் கேள்விகள் எழுந்த பின்னர் மத்திய அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தது. ஆனால், உச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை !

23.8.2008 ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி அன்று நள்ளிரவில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் கண்டமால் மாவட்டத்தில் சுவாமி லஷ்மணந்த சரஸ்வதி சுவாமி மற்றும் இரண்டு பேர் உட்பட மூன்று பேர்களை கொன்ற கிறிஸ்துவ மாவோயிஸ்ட்களை பற்றி இந்த ஆசாமி வாய் திறக்காது ஏன்? இந்துக் கடவுள்களை கேவலமாக விமர்சத்து புத்தகம் எழுதிய நியூ லைப் எனும் கிறிஸ்துவ மிஷனரி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஏன் முன் வரவில்லை என்பது பற்றி திக்விஜய்சிங் நினைத்திருப்பாரா? கர்நாடக மாநிலத்தில் 2008 இறுதியில் மங்களுர் & ஹூப்ளியில் நடந்த மத கலவரத்தை விசாரிக்க மத்திய அரசின் உள்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்வதற்கு அனுப்பட்டதே, அதே போல் ஏன் ஒரிஸ்ஸா மாநிலத்தில் கண்டமால் சம்பவத்திற்கு உடனடி விசாரணை நடத்த மத்திய அரசு தனது செயலாளர்களை அனுப்பவில்லை? இது பற்றி திக்விஜய்சிங் கவலைப் பட்டாரா என்பது தெரியவில்லை.

இந்து இயக்கங்கள் பற்றி தினசரி அபத்தமான கருத்துக்களை கூறி வரும் திக்விஜய்சிங், கிறிஸ்துவ பயங்கரவாதத்தை பற்றி எப்போதாவது கண்டன கணைகளை வீசினாரா? இந்திய நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், மணிபூர், திரிபுரா, மேகாலயா, நாகர்லாந்து, அருணாசல பிரதேசம், போன்ற மாநிலங்களில் உள்ள தனி நாடு கோரும் பிரிவினை தீவிரவாத இயக்கங்களுக்கு அந்த மாநிலங்களில் உள்ள கிறிஸ்துவ சர்சுகள் ஆயுதங்கள், நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது நாடறிந்த, உலகம் அறிந்த விஷயம். திக்விஜய்சிங்க்கு தெரியாதா என்ன? ஆனால் இந்த கிறிஸ்தவ பயங்கரவாதத்தை எதிர்த்து ஒரு சொல் அவர் கூறியிருக்கிறாரா?

”Nagaland for Christ"
”Nagaland for Christ"

2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிபுராவில் உள்ள  Noapara Baptist Church அமைப்பின் பாதிரியார் Nagmanlal Halam கைது செய்யப்பட்டார். கைதுக்கு முக்கிய காரணம் திரிபுராவில் உள்ள நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலந்து என்ற அமைப்புக்கு ஆயுத உதவி செய்வதற்காக தனது சர்சு வளாகத்தில் கள்ள தனமாக வெடி மருந்து வைத்திருந்தது. இவரை போலவே திரிபுராவில் உள்ள பல்வேறு சர்சுகளில் உள்ள பாதிரியார்கள் பிரிவினை கோரும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்து வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் வெளிப்படையாகவே Naglim for Christ (நாகாலாந்து கிறிஸ்துவுக்கே) எனும் கோஷத்துடன் வலம் வருகிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் Manmasi National Christian Army என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் தோன்றியுள்ள கிறிஸ்துவ பயங்கரவாத செயல்பாடுகளைப் பற்றி வாய் திறக்காத திக்விஜய்சிங் இந்து இயக்கங்களை மட்டும் குறி வைத்து தாக்குவது தனது தலைமைக்கு உச்சி குளிர வேண்டும் என்பதற்காக செய்வது.

திக் விஜய்சிங்கின் அறிக்கைக்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கூறி வருகிறார்கள். இது வரை கட்சியின் தலைவி சோனியாவும் அடுத்த பிரதமர் பதவிக்கு வர துடிக்கும் ராகுல் காந்தியும் எவ்வளவு கேட்ட போதும் திக்விஜய் சிங்கின் உளறல்கள் பற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்கள். அப்படியானால் இந்த உளறல்களுக்கு பொறுப்பேற்பது யார்?

திக்விஜய் சிங்கின் உளறல்களால், காங்கிரஸ் கட்சியின் கள்ள மௌனத்தால் யாருக்கு என்ன பயன்? இந்தியாவை தாக்கி அழிக்கத் திட்டமிட்டு வேலை செய்யும் அன்னிய சக்திகளுக்கும், அவர்களுக்குத் துணை போகும் உள்ளூர் இஸ்லாமிய, கிறிஸ்தவ பயங்கரவாதிகளுக்கும் இவை கொண்டாட்டத்தை ஏற்படுத்துகின்றன என்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லை.

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மூன்றாம் பாகம்.

பாகம் 1ல்: ஜோகேந்திரநாத் மண்டல் என்ற தலித் தலைவர் பற்றிய அறிமுகம். அவர் சிறுபான்மையினரும் தலித்துகளும் ஒன்றிணைந்து முன்னேற முடியும் என்று நம்பியது. மக்கள் ஆதரவு இல்லாத முஸ்லீம் லீக் அரசைப் பலமுறைகள் காப்பாற்றியது. டாக்கா கலவரத்தின் பின்னணி மற்றும் அந்தக் கலவரத்தின் கொடூரங்கள். கலவரத்தில் தலித்துகளான நாம்தாரிகளை முஸ்லீம்கள் அழித்தது. இருப்பினும், நாமதாரிகளை மத நல்லிணக்கத்தோடு இருக்க ஜோகேந்திரநாத் மண்டல் உழைத்தது போன்ற தகவல்கள் உள்ளன.

பாகம் 2ல்: முஸ்லீம்களால் அழிக்கப்பட்டாலும், பட்டியல் வகுப்பினர்,  முஸ்லீம் லீக்கிற்கு விசுவாசமான ஜோகேந்திரநாத் மண்டலை ஆதரித்தது. பாகிஸ்தானின் முதல் அமைச்சரவையில் பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டது. அவரைத் தவிர வேறு பட்டியல் வகுப்பினரையும் அமைச்சராக்க பாகிஸ்தான் மறுத்தது. நாமசூத்திரர்கள் என்ற தலித் பிரிவினரின் மேல் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, அவர்களைக் குவியல் குவியலாக முஸ்லீம்கள் கொன்றழித்தது. கலவரத்தின்போது, இந்துப் பெண்களைப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்களாகக் கருதி முஸ்லீம் தலைவர்கள் கூட்டம் கூட்டமாகக் கற்பழித்தது. இந்தக் கலவரத்தில் அரசே ஈடுபட்டது. இந்தக் கலவரங்கள் பற்றி அமைச்சரவையில் பேச சட்ட அமைச்சரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது போன்ற தகவல்கள் உள்ளன.

முந்தைய பாகங்கள்:
பாகம் 1 || பாகம் 2

மூன்றாம் பாகத்தைப் படியுங்கள்…..

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

டாக்கா கலவரத்தின் பின்னணி

21. டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள் ஐந்து:

bangladesh-islamic-terrorism-jihad-300x203அ. கால்ஷீரா மற்றும் நாச்சோல் பற்றிய ஒத்திவைப்பு தீர்மானங்கள் சட்டபேரவையில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிய தைரியத்திற்கு தண்டனை தருவது.

ஆ. ஸூரஹர்தி குழுவுக்கும் நஜிமுதீன் குழுவுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் குழு மோதல் பாராளுமன்ற கட்சியில் பிளவு ஏற்படும் அளவுக்கு போனது.

இ. கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் முயற்சியை சில இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் மேற்கொண்டது  கிழக்கு வங்காள அரசுக்கும் முஸ்ஸிம் லீக் தலைவர்களுக்கும் கவலை அளித்தது. அவர்கள் அதைத் தவிர்க்க எண்ணினர்.

அவர்களின் சிந்தனைப்படி கிழக்கு வங்காளத்தில் ஒரு பெரிய மதக்கலவரம்  நடந்தால் அது கண்டிப்பாக மேற்கு வங்காளத்திலும் பரவும். அங்கு முஸ்லீம்கள் கொல்லப்படலாம். கிழக்கு மற்றும் மேற்கு வங்காளங்களில் நடக்கும். 

மதக்கலவரங்களின் விளைவுகள் இந்த ஒற்றுமை முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியும்.

ஈ. வங்காளி முஸ்லீம்களுக்கும் வங்காளி  அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையே இருந்த நம்பிக்கையின்மை பெரிதாக வளர ஆரம்பித்தது. இதை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பை உருவாகுவதன் மூலமே ஒழிக்க முடியும். இவர்கள் பேசும் மொழியும் சிக்கலுக்கு ஒரு காரணம்.

உ. பணமதிப்பை குறைக்காததன் விளைவு மற்றும் இந்திய-பாகிஸ்தான் வணிகத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டையின் விளைவுகள் கிழக்கு வங்காளப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இந்த பாதிப்பு முதலில் நகரப் பகுதிகளிலும் பின்பு கிராமப் பகுதிகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. வரும் பொருளாதார பஞ்சத்தில் இருந்து முஸ்லீம்களின் கவனத்தை இந்துக்களுக்கும் எதிரான ஜிகாத் மூலம் விலக்க முடியும் என முஸ்லீம் லீக் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் நினைத்தனர்.

மலைக்கவைக்கும் தகவல்கள் – பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர்

bangladesh-hindus-genocide-jihad-islam-muslim22. நான் ஒன்பது நாள் டாக்காவில் தங்கியிருந்த போது கலவரம் நடந்த நகரப்  பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் பார்வையிட்டேன். பி.ஸ். தேஜ்கானில் இருக்கும் மிர்பூருக்கும் சென்றேன். டாக்கா – நாராயண்கஞ் மற்றும் டாக்கா–சிட்டகாங் வழி இருப்பு பாதைகளிலும் ரயில் பெட்டிகளிலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியளித்தது.

டாக்கா கலவரத்தின் இரண்டாவது நாள், நான் கிழக்கு வங்காள முதலமைச்சரைச் சந்தித்து அவர் மாவட்ட நகரங்களிலும் கிராமங்களிலும் கலவரம் நடக்காமல் இருக்க எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கேட்டுக்கொண்டேன்.

1950 பிப்ரவரி 20 ஆம் தேதி நான் பாரிசால் நகரத்திற்கு போனேன். அங்கு நடந்தவைகளைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த மாவட்ட நகரத்தில் பெரும்பாலான இந்து வீடுகள் எரிக்கப்பட்டன.  பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் கொல்லப்பட்டனர். நான் அந்த மாவட்டத்தில் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டேன். அங்கு முஸ்லீம் கலவரக்காரர்கள் செய்த கொடுமைகள் இதுவரை நான் அறியாதவையாக இருந்தன.

அருகில் இருக்கும் காஷிபூர், மாதப்ஷா (Madhabpasha ) மற்றும் லகுட்யா எனும் பகுதிகள் நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தும் வானங்கள் செல்லக்கூடிய சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தும் கலவரக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை.

மாதப்ஷா (Madhabpasha ) ஜமின்தார் வீட்டில் 200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 40 பேர் காயமடைந்தனர். மைவ்லாடி (Muladi) எனும் இடம் நரக வேதனையை அனுபவித்தது.

மைவ்லாடி பந்தர் எனும் இடத்தில் மட்டும் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த கலவரக்காரர்களில் முஸ்லீம்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர்.

bangladesh-jihad-islam-murdered-hindusபக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

பிஸ். ராஜ்புர் இல் இருக்கும் கைபார்ட்டகளி (Kaibartakhali ) எனும் இடத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். காவல் துறை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்து வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டன. உள்ளே இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன.

பாபுகன்ஞ் கடைவீதியில் இருந்த எல்லா இந்து கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டு அவர்கள் எரிக்கப்பட்டனர்.  நிறைய இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.

பெறப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறைந்த பட்சம் 2,500 பேர் பாரிசால் மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்டனர்.
டாக்காவிலும் கிழக்குவங்காளத்திலும் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் ஆகும்.

உற்றார் உறவினரை இழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவலக்குரல் என்னுடைய இதயத்தை உருக்கியது. “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.

டெல்லி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த எந்த ஆர்வமும் இல்லை

(இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரை காக்க வழிவகை செய்ய லியாகத் அலிகானுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தம் டெல்லி ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.)

23. மார்ச்சின் பிற்பகுதில் கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்துக்கள் அகதிகளாக வெளியேறுவது ஆரம்பித்தது. குறைந்த கால அளவில் எல்லா இந்துக்களும் வங்காளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் எனத்  தோன்றியது.

இதற்கு எதிராக போர்க்குரல் இந்தியாவில் எழுந்தது. ஒரு தேசியப் பேரழிவு நிகழ்வதை தடுக்க முடியாது போல் தோன்றியது. இப்படி வந்திருக்கக்கூடிய அவலம் ஆனது ஏப்ரல் 8 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட டெல்லி ஒப்பந்தத்தால் தவிர்க்கப்பட்டது.

பயத்தில் இருந்த பங்களாதேசத்து  இந்துக்களின் தைரியம் குறைந்தது. அவர்களது பயத்தைத் தவிர்க்க நான் கிழக்கு வங்காளத்தில் பெரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். டாக்கா, பாரிசால், பரிதாபூர், குலானா ஜெஸ்ஸூர் மாவட்டங்களில் பல இடங்களுக்குச்  சென்றேன். அங்கு பல டஜன் கூட்டங்களில் பேசினேன். அதில் இந்துக்களைத் துணிவுடன் இருக்கும் படியும் அவர்களின் குடும்ப வீடுகளையும் சொத்தையும் விட்டு விட்டுப்  போக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.

கிழக்கு வங்காள அரசும் முஸ்லீம் லீக் தலைவர்களும் டெல்லி ஒப்பந்ததின் விதிகளை புழங்குவார்கள் என நம்பியே இதைச் சொன்னேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கிழக்கு வங்காள அரசோ முஸ்லீம் லீக் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தைப்  புழக்கத்திற்கு கொண்டுவருவதில் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் என எனக்குப் புரிந்தது.

கிழக்கு வங்காள அரசு  டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அரசு இயந்திரங்களை அமைப்பதிலோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளையோ  எடுக்க வில்லை. டெல்லி ஒப்பந்தத்திற்குப் பிறகு உடனடியாக தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பிய இந்துக்கள் அவர்களின் வீடுகளும் நிலங்களும் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை கண்டார்கள். அவைகள் அவர்களுக்குத் திருப்பி தரப்படவில்லை.

மவுலானா அக்ரம் கானின் வெறுப்பு பரப்புரை

24. முஸ்லீம் லீக் தலைவர்களின் மீதான என்னுடைய சந்தேகம் உறுதிப்பட்டது எப்போது எனில் நான் முஸ்லீம் லீக் மாகாண தலைவர் ஆன மவுலானா அக்ரம் கான் மாத பத்திரிக்கையான “முகம்மதி” யின் “பைசக்” மாத வெளியீட்டில் எழுதியதைப் படித்த போது தான்.

இதற்கு முன்னர், பாகிஸ்தானின் சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆன முனைவர் ஏ. எம். மாலிக் டாக்கா ரேடியோ நிலையம் அதனுடைய முதல் ரேடியோ ஒலிபரப்பை செய்த போது பேசினார். அப்போது முகம்மது நபி கூட அரேபியாவில் இருந்த யூதர்களுக்கு அவர்களுடைய சமய உரிமையை அளித்தார் எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த மவுலானா அக்ரம் கான் அந்தப் பத்திரிக்கையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

bangladesh-muslims-kill-hindu-friday-prayer“முனைவர் மாலிக்கினுடைய பேச்சு அரேபியாவின் யூதர்களைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். முகம்மது நபியால் அரேபியாவின் யூதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் தரப்பட்டது உண்மை தான். ஆனால், அது வரலாற்றில் முதல் பகுதி மட்டுமே. ஆனால், வரலாற்றின் கடைசிப்பகுதி தூதர் முகம்மது “எல்லா யூதர்களையும் அரேபியாவை விட்டு துரத்துங்கள்” என்று உத்தரவிட்டதைக் கொண்டுள்ளது.”

முஸ்லீம்களிடையே அரசியல், சமூக, மத வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைக்  கொண்டிருக்கும் மவுலானா கானின் எழுத்திற்குப் பிறகும் நான் நூருல் அமின் அமைச்சரவை நம்பிக்கை குறைவாக நடந்து கொள்ளாது என சிறிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால், டி.என் பராரி யை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டெல்லி ஒப்பந்தத்தின் படி  நூருல் அமின் நியமித்த போது அந்த எதிர்ப்பார்ப்பு சுக்கு நூறானது. டெல்லி ஒப்பந்தத்தின்படி சிறுபான்மையினரில் இருந்து ஒருவரைத்தான், சிறுபான்மையினருக்கு நம்பிக்கை வரும்படி சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கபடவேண்டும்; அவர் தான் கிழக்கு மற்றும் மேற்கு வங்காள அரசுகளுக்கு தொடர்பாளராக இருப்பார்.

நூருல் அமின் அரசின் அக்கறையின்மை

25. என்னுடைய ஒரு பொது அறிக்கையில், டி.என் பாராரியை சிறுபான்மையினரின் சார்பான அமைச்சராக நியமித்தது எந்த நம்பிக்கையையும் கொண்டுவரவில்லை என்பதைக் கூறினேன். மாறாக அது சிறுபான்மையினரின் மனதில் நூருல் அமின் அரசின் மேல் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் உடைத்தது என்பதைச் சொல்லி இருந்தேன். நூருல் அமினின் அரசு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் விருப்பம் இல்லாது இருப்பதோடு மட்டுமல்லாமல் டெல்லி ஒப்பந்தத்தின் முதன்மை விதிகளை தோற்கடிக்க விரும்பியது என்றும் எனது அறிக்கையின் மூலம் நான் கூறினேன்.

bangladesh-jihad-islam_dead-hindusநான் திரும்பவும் சொல்கிறேன். டி.என் பாராரி அவரை மட்டும் தான் முன்னிறுத்துகிறார், வேறு யாரையும் அல்ல. அவர் வங்காள சட்டசபைக்கு காங்கிரஸ்ஸின் சீட்டிலும் அதன் பணம் மற்றும் அமைப்பு பலத்திலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் வகுப்பு குழு வேட்பாளர்களை எதிர்த்தவர். அவருடைய தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு காங்கிரஸுக்குத் துரோகம் செய்து விட்டுப் பட்டியல் வகுப்பு குழுவில் சேர்ந்துகொண்டார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் குழுவில் இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டார். பராரியின் முந்தைய செயல்கள், தகுதிகள், நடத்தைகள் ஆகியவை டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட ஒரு அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்று சொல்லும் என் அறிக்கையை எனக்குத் தெரிந்தவரையில் கிழக்கு வங்காள இந்துக்கள் ஒப்புக்கொள்வார்கள்.

26. அந்த பதவிக்கு நான் நூருல் அமீனிடம் மூன்று பெயர்களை பரிந்துரைத்திருந்தேன். நான் பரிந்துரைத்ததில் ஒருவர், எம்.ஏ, எல்எல்.பி. முடித்து டாக்கா உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் ஆக பணிபுரிபவர். அவ்ர் பஷல் ஹக் அமைச்சவரையில் முதல் நான்கு வருடம் பணிபுரிந்தவர், ஆறு வருடம் தலைவராக கல்கத்தா நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றியவர், மேலும் ஆறு வருடம் மூத்த துணைத்தலைவராக பட்டியல் வகுப்பு குழுவிற்கு பணியாற்றியவர். நான் பரிந்துரைத்ததில் இரண்டாவது நபர், எம்.ஏ, எல்எல்.பி. அவர் ஏழு வருடம் சட்ட மேலவையில் உறுப்பினராக பணியாற்றியவர்.

எனக்கு தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன காரணங்களுக்காக நூருல் அமின்  இந்த இரண்டு நபர்களில் ஒருவரை அமைச்சராக நியமிப்பதை விட்டு விட்டு நான் சரியான காரணங்களை முன்வைத்து எதிர்க்கும் ஒரு நபரை அமைச்சராக நியமித்தார் என்பது தான்.

மாற்றிச்சொல்வது பற்றிய எந்த பயமும் இல்லாமல் இதைச் சொல்கிறேன், நூருல் அமீனின் பாராரியை அமைச்சராக நியமிக்கும் முடிவு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததின் முடிவான நிருபணம் ஆகும். கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அவர்களின்  உயிர், சொத்து, உடைமைகள், கவுரவம், மதம் பற்றி எந்த பயமும் இல்லாமல் வாழ்வதுதான் அந்த டெல்லி ஒப்பந்தம் உருவாவதற்கான முதன்மை காரணம் ஆகும்.

இந்துக்களை கசக்கி பிழியும் அரசின் திட்டம்

27. இந்த இடத்தில் உங்களிடம் ஓரிரு முறைக்கு மேல் சொன்னதான, கிழக்கு வங்காள அரசு இன்னமும் அந்த மாநிலத்தில் இருக்கும் இந்துக்களை கசக்கி பிழியும் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நடைமுறை படுத்தி வருகிறது என்பதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்துக்களைப் பாகிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கும் திட்டம், நன்றாக் திட்டமிட்டப்பட்டு நடைமுறைப்பட்டுத்தப்பட்ட திட்டம். வெற்றிகரமாக மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதுவே இப்போது கிழக்கு பாகிஸ்தானிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டி.என் பாராரி யை அமைச்சராக நியமித்ததும் அந்த விஷயத்தில் நான் செய்த பரிந்துரைகளுக்கு கிழக்கு வங்காள அரசு தந்த மோசமான விளக்கமும் இஸ்ஸாமிய அரசு என்று அவர்கள் அழைக்கும் அரசு எப்படி இருக்கும் என உறுதி செய்கிறது. இந்துக்களுக்கு பாகிஸ்தான் முழு திருப்தியையோ அல்லது முழு பாதுகாப்பையோ அளிக்கவில்லை. அவர்கள் இப்போது இந்து அறிவாளிகளை துரத்த முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் பாகிஸ்தானின் சமூக,அரசியல், மற்றும் பொருளாதார வாழ்க்கை இந்து அறிவாளிகளால் மாற்றம் அடையாமல் இருக்கும்.

bangladesh-genocide-hindu-skullsஇணை ஓட்டுமுறையை தவிர்க்கும் செயல்கள்

28. எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால் ஓட்டுமுறை பற்றிய கேள்வி இன்னமும் முடிவாகாமல் இருப்பது தான். சிறுபான்மை சப் கமிட்டி நிறுவப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அது மூன்று முறை கூடி இருக்கிறது. இணை ஓட்டுப் பதிவா அல்லது பொது ஓட்டுப்  பதிவா எனும் விவாதம் கடந்த டிசம்பரில் கூடிய கமிட்டியின் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதில் எல்லா அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரும் கலந்து கொண்டு அவர்களின் இணை ஓட்டு பதிவிற்கும், கூடவே பின் தங்கிய மைனாரிட்டிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பதற்கும் அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த கமிட்டியின் மற்றொரு கூட்டத்திலும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த விஷயம் பற்றிய எந்த விவாதமும் இல்லாமல் அந்த கூட்டம் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த முக்கிய விஷயத்தில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் செய்யும் இந்த தவிர்க்கும் நடவடிக்கைகளின் பின் இருக்கும் காரணத்தை பற்றித் தெரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.

(முகம்மது நபிகளின் வழிகாட்டுதலில் பங்களாதேச இந்துக்களின் அப்போதைய ஒட்டுமொத்த நிலை என்ன? அடுத்த பாகத்தில் காண்போம்.)

தொடரும்….

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02

ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமாக் கடிதத்தின் மொழிபெயர்ப்பு தொடர்கிறது ….

முந்தைய பாகம்: பாகம் 1 

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

வங்காளப் பிரிவினை

8. இந்த விஷயத்துடன் நான் வங்காளப் பிரிவினையை எதிர்த்தேன் என்பதும் இந்த இடத்தில் சொல்லப்படவேண்டும்.  இதன் தொடர்பாகப் பரப்புரையை தொடங்கிய போது எல்லா பக்கங்களில் இருந்தும் பெருவாரியான எதிர்ப்பை மட்டுமல்லாது சொல்லமுடியாத அவமானம், இழிசொற்களைச் சந்திக்கவேண்டியிருந்தது.

மிகுந்த வேதனையோடு இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் இருந்த முப்பத்திரண்டு கோடி இந்துக்களும் என்னை புறக்கணித்து என்னை இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் எதிரி என்று சொல்லிய நாட்களை நினைவுகூர்கிறேன். ஆனால் என்னுடைய பாகிஸ்தானிய விசுவாசம் இவற்றால் பாதிக்கப்படவோ அல்லது மாறவோ இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று பதிலளித்த வங்காளத்தின் 70 லட்சம் பட்டியல் வகுப்பினருக்கு என்னுடைய நன்றிகள். அவர்கள் எனக்கு மாறாத ஆதரவும் ஊக்கமும் அளித்து வந்தார்கள்.

bangladesh-1971-hindu-circumcised

9. ஆகஸ்டு 14, 1947 இல் பாகிஸ்தானின் உருவாக்கத்திற்கு பின் நீங்கள் பாகிஸ்தானின் அமைச்சரவையை அமைத்தீர்கள். அதில் நான் ஓர் அமைச்சராக பதவியேற்றேன். அதே போல் காஜா நஜிமூதீன் மேற்கு வங்களாத்தில் தற்காலிக அமைச்சரவையை அமைத்தார். ஆகஸ்ட் 10 இல் நான், காஜா நஜிமூதீன் கராச்சியில் இருந்தபோது பேசி, அவருடைய அமைச்சரவையில் இரண்டு பட்டியல் வகுப்பினரை அமைச்சர்களாக சேர்க்கும்படி கோரிக்கை வைத்தேன். அவர் அதை இன்னும் சில காலங்களில் செய்து விடுவதாக உறுதியளித்தார். ஆனால், அதன்பின்பு நீங்கள், காஜா நஜிமூதீன், மற்றும் இப்போதைய முதல் அமைச்சர் நூருல் அமீன் ஆகியோருடன் இதன் தொடர்பாக நடந்த விரும்பத்தகாத மற்றும் ஏமாற்றமளிக்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

எப்போது எனக்கு காஜா நஜிமூதீன் எதாவது ஒரு [வலுவற்ற] காரணத்தைச் சொல்லி இந்த விஷயத்தை தவிர்க்கிறார் என்று புரிந்ததோ அப்போது நான் பொறுமையிழந்து எரிச்சலடைந்தேன். மேலும் பாகிஸ்தானின் முஸ்ஸீம் லீக் தலைவருடனும் மேற்கு வங்களா முஸ்ஸீம் லீக்கின் தலைவருடனும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினேன். கடைசியாக இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

நீங்கள் இந்த விஷயத்தை காஜா நஜிமூதீனுடன் என் முன்னால் உங்களுடைய வீட்டில் பேசினீர்கள். காஜா நஜிமூதீன் ஒரு பட்டில் வகுப்பு உறுப்பினரை தனது அமைச்சரவையில், தான் டாக்கா திரும்பியவுடன் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே இந்த விஷயத்தில் காஜா நஜிமுதீனின் உறுதிமொழி மீது எனக்கு சந்தேகம் இருந்ததால் ஒரு காலரீதியான வரையறை செய்யுமாறு கேட்டேன். ஒரு மாதத்திற்குள் காஜா நஜிமுதீன் இதில் செயல்படவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நான் பதவி விலகிவிடுவேன் என்று வலியுறுத்தினேன். நீங்கள் மற்றும் காஜா நஜிமுதீன் இருவரும் இதற்கு ஒப்புக்கொண்டீர்கள். ஆனால் கடவுளே, நீங்கள் உண்மையோடு அந்த வார்த்தைகளை சொல்லவில்லை.

காஜா நஜிமூதின் தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. நூருல் அமீன், கிழக்கு வங்காள முதலமைச்சர் ஆன பின்பு இன்னும் ஒரு முறை இந்த விஷயத்தை அவருடன் பேசினேன். அவரும் முன் போல் பழைய தவிர்க்கும் செயல்களையே செய்தார். அப்போது நான் மீண்டும் அந்த விஷயத்தை உங்களின் 1949 டாக்கா பயணத்திற்கு முன் உங்களிடம் கொண்டு வந்தேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக சிறுபான்மையினர் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என உறுதியளித்தீர்கள். கூடவே அந்தப் பதவிக்கு இரண்டு அல்லது மூன்று பெயர்களைக் கேட்டீர்கள்.

உங்களுடைய சொல்லிற்கு மதிப்பளித்து நான் கிழக்கு வங்காளத்தில் பெடரேஷன் குழுமத்தில் இருந்து மூன்று பெயர்களை உங்களுக்கு அனுப்பினேன். பின்பு அதைப்பற்றி நீங்கள் டாக்காவில் இருந்து திரும்பிய பின்பு விசாரித்தபோது, நீங்கள் வெறுமனே “நூருல் அமின் தில்லியில் இருந்து வரட்டும்” என பதிலளித்தீர்கள். சில நாட்களுக்குப் பின்பு கேட்ட போதும் நீங்கள் அந்த விஷயத்தை தவிர்த்தீர்கள். நான் இந்த விஷயத்தில் நீங்களோ அல்லது நூருல் அமீனோ ஒரு பட்டியல் வகுப்பினரை அமைச்சவரையில் கொண்டுவர விருப்பம் இல்லாமல் இருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள தள்ளப்பட்டேன்.

இது மட்டுமல்லாது நூருல் அமீன் மற்றும் பல கிழக்கு வங்காள லீக் தலைவர்கள் பட்டியல் வகுப்பு உறுப்பினர்களிடையே பிரிவினையை உண்டாக்க முயல்கிறார்கள் என்பதும் என் கவனத்திற்கு வந்தது. என்னுடைய தலைமையும் மிகப்பரவலான புகழும் தவறாக கருதப்படுகிறது என எனக்குத்  தோன்றியது. பயமின்றி பேசும் என்னுடைய திறன், கண்காணிப்பு, மற்றும் பொதுவாக பாகிஸ்தானின் சிறுபான்மையினரின் விருப்பங்களையும் பட்டியல் வகுப்பினருடைய விருப்பங்களையும் அதிக கவனத்துடன்  காப்பாற்றுவதில் காட்டும் நேர்மை சில மேற்கு வங்காள அரசுக்கும், லீக் தலைவர்களுக்கு கவலை அளித்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாகிஸ்தானின் சிறுபான்மையினரை காப்பாற்றுவதில் நான் உறுதி பூண்டேன்.

இந்துக்களுக்கு எதிரான கொள்கை

10. வங்காளப்பிரிவினை பற்றிய கேள்வி எழுந்தபோது, பட்டியல் வகுப்பு மக்கள் பிரிவினையின் விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டனர். அவர்களின் சார்பாக அப்போதைய வங்காள அமைச்சர் ஸரஹ்ர்தியிடம் இந்த பிரச்சினை எடுத்துச்செல்லப்பட்டது. அதற்கு அவர் பட்டியல் வகுப்பினரின் எந்த உரிமைகளும் பிரிவினையினால் பாதிக்கப்படாது எனவும் அவர்கள் அந்த உரிமைகளை அனுபவிக்கவும் கூடவே சில உரிமைகளும் அவர்களுக்கு தரப்படும் என்ற அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.

இந்த உறுதிமொழி, ஸூரஹர்தியின் தனிப்பட்ட தகுதியினாலும் வங்காளத்தின் லீக் அமைச்சரவையின் முதலமைச்சர் என்ற முறையிலும் தரப்பட்டது. ஆனால், கடும் வருத்ததுடன் சொல்லப்படவேண்டியது என்னவென்றால் பிரிவினைக்குப் பின் அதுவும் முகம்மது அலி ஜின்னாவின் மறைவிற்குப் பின்பு பட்டியல் வகுப்பினர் அவர்களுடைய உரிமைகளைப் பெறவில்லை.

bangladesh-muslims-kill-hindu-friday-prayer

உங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன், பட்டியல் வகுப்பினரின் பிரச்சினைகளைப் பற்றி உங்களுடைய கவனத்திற்கு நான் அவ்வப்போது கொண்டு வந்தது. கிழக்கு வங்காள அரசின் திறமையற்ற நிர்வாகத் திறமைகளைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கியது நினைவு இருக்கும் என நம்புகிறேன். நான், காவல்துறைக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.

ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் துறை எடுத்த கொடூர நடவடிக்கைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். கிழக்கு வங்காள அரசினால், குறிப்பாகக் காவல் துறையினாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களினாலும் கடைப்பிடிக்கப்படும் இந்துக்களுக்கு எதிரான கொள்கை பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது பற்றி எந்த தயக்கமும் நான் காட்டியதில்லை.

சில சம்பவங்கள்

11. என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய முதல் சம்பவம் கோபால்கஞ் அருகில் இருக்கும் டிக்காகுல் (Digharkul ) எனும் கிராமத்தில் நடைபெற்றது. அங்கு போலியான குற்றச்சாட்டின் பேரில் முஸ்ஸீம்களின் கொடுமைகள் உள்ளூர் நாமசூத்திரர்கள் மீது நடைபெற்றது.

நடந்தது என்னவென்றால் ஒரு முஸ்ஸீம் படகில் சென்று மீன் பிடிக்க வலை வீசியுள்ளார். அப்போது அங்கு வந்த நாமசூத்திரர் ஒருவரும் அதே இடத்தில் வலை வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த முஸ்ஸீம், அருகில் இருக்கும் முஸ்ஸீம் கிராமத்திற்கு சென்று அவரும் அவருடன் வந்த பெண் ஒருவரும் நாமசூத்திரர்களின் கும்பலால் தாக்கப்பட்டதாக பொய் குற்றச்சாட்டு ஒன்றை அளித்துள்ளார்.

 

hindu-women-raped-by-muslims-islam-jihad
சமீபத்தில் வன்புணரப்பட்ட பங்களாதேச இந்துப் பெண்

 

அப்போது கோபால்கஞ் கால்வாய் வழியாக வந்த கோபால்கஞ் சப் டிவினசல் ஆபீசர் எந்த விசாரணையும் செய்யாமல் அந்தக் குற்றச்சாட்டை உண்மை என ஒப்புக்கொண்டு ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு அந்த நாம சூத்திரர்களை தண்டிப்பதற்காக அனுப்பினார். ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் வந்தபோது உள்ளூர் முஸ்ஸீம்களும் அவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

முஸ்ஸீம்கள், நாம சூத்திரர்களின் வீடுகளை கொள்ளையிட்டது போதாமல் ஆண்களையும் பெண்களையும் கடுமையாக தாக்கி, வீடுகளை சேதப்படுத்தினார்கள். இவர்களின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் ஒரு கர்ப்பிணி பெண் அந்த இடத்திலேயே கரு கலைந்தாள். உள்ளூர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற தாக்குதல் அங்கு வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

12. இரண்டாவது சம்பவம், 1949 ஆம் ஆண்டின் முதல் பகுதியில், பாரிசால் மாவட்டத்தில் இருக்கும் பி எஸ் கோர்னாடி (P.S. Gournadi) எனும் இடத்தில் நடைபெற்றது. அங்கு யூனியன் போர்டில் (உள்ளூர் பஞ்சாயத்து போன்ற அமைப்பு) இருந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமல் இருந்தது. இதிலே ஒரு குழு உள்ளூர் காவல் துறை அதிகாரிகளின் நல்லெண்ணத்தை பெற்று இருந்ததால் அவர்களின் எதிரிகளைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி ஒழிக்க சதித்திட்டம் தீட்டினார்கள்.

இந்தக் குழு தந்த போலியான தகவலான, உள்ளூர் காவல் நிலையம் தாக்கப்படும் என்பதின் அடிப்படையில், கோர்னாடி காவல் தலைவர் ஆயுதம் தாங்கிய படையை அனுப்புமாறு தலமையகத்தை கேட்டுக்கொண்டார்.  காவலர்கள், ஆயுதம் தாங்கிய படையுடன் உதவியோடு நிறைய வீடுகளை சோதனையிட்டு விலையுர்ந்த பொருள்களை கொள்ளையிட்டனர், இந்த வீடுகளில் இருந்தவர்கள் அரசியலிலேயே ஈடுபட்டதில்லையாதலால் கம்யூனிஸ்டுகளாக இருக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை. பெருவாரியான மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆங்கில பள்ளிகளில் படித்த மாணவர்களும் வேலை செய்த ஆசிரியர்களும் அவர்கள் கம்யூனிஸ்டாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்பட்டனர். அந்த பகுதி என்னுடைய பூர்வீக கிராமத்திற்கு மிகவும் அருகில் இருப்பதால் எனக்கு இந்த சம்பவம் தகவல் சொல்லப்பட்டது. மாவட்ட நீதிபதிக்கும் காவல்துறை கண்கானிப்பாளருக்கும் இந்த நிகழ்வு பற்றி விசாரணை தேவை என கடிதம் எழுதினேன்.

அங்கிருக்கும் உள்ளூர் மக்களில் பலரும் சப் டிவிசனல் ஆபிசருக்கு விசாரணை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. மாவட்ட தலமையகத்திற்கு என்னால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு கூட பதில் இல்லை. இந்த விஷயத்தை நீங்கள் உட்பட பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்களிடம் கொண்டு வந்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை.

இரவு முழுவதும் இழிவுக்குள்ளான இந்துப் பெண்கள்

13. ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரால் அப்பாவி இந்துக்கள் அதிலும் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் மீது ஷில்ஹெட் மாவட்டத்தில் இருக்கும் ஹபிப்கார் எனும் ஊரில் நடத்தப்பெற்ற கொடூரங்களை பற்றி சொல்லியாகவேண்டும். அப்பாவி ஆண்களும் பெண்களும் கொடூரமாக தாக்கப்பட்டனர், பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், முஸ்ஸீம்களாலும் காவல் துறையினராலும் வீடுகள் தாக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ராணுவத்தினர் உள்ளூர் மக்களை கொடுமை படுத்துதல், இந்துக்கள் வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துச்செல்லும் போனற கொடூரங்களுடன் இந்துக்களை துன்புறுத்தி இந்து பெண்களை இரவு ராணுவ முகாமுக்கு வரவைத்து அவர்களின் ஆசையை தீர்த்துக்கொண்டார்கள். இந்த உண்மையும் கூட உங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நீங்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தீர்கள், ஆனால் எதுவும் செய்யப்படவில்லை.

14. அதன் பின்பு, ராஜ்சாஷி மாவட்டத்தில் இருக்கும் நாச்சோல் (Nachole) எனும் இடத்தில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குகிறேன் என்ற பெயரில் காவல் துறையும் உள்ளூர் முஸ்ஸீம்களும் இணைந்து இந்துக்களை துன்புறுத்தி அவர்களின் உடமைகளை கொள்ளையடித்தார்கள். அந்த சந்தால்கள் எல்லையை தாண்டி மேற்கு வங்காளத்திற்கு வந்தார்கள். அவர்கள் முஸ்ஸீம்களும் காவல்துறையும் இணைந்து நடத்திய கொடுமைகளை விவரித்தார்கள்.

15. கொடும் கோரமான அடக்குமுறைகள் டிசம்பர் 20, 1949 இல் காகுலானா (Khulna) மாவட்டத்தில் பி.எஸ், மோல்ஹாரட் (P.S. Mollarhat ) கீழிருக்கும் கால்ஷிரா (Kalshira ) கிராமத்தில் நடந்தன. நடந்தது என்னவென்றால், ஜோய்தேவ் பிராஹ்மனா எனபவரின் வீட்டில் சில தேடப்படும் கம்யூனிச குற்றவாளிகள் இருக்கிறார்கள் என தேடுதல் வேட்டையில்  பின்னிரவு வேளையில் நான்கு காவலர்கள் ஈடுபட்டார்கள். காவலர்கள் வரும் அறிகுறியில் கம்யூனிஸ்டுகளாகச் சொல்லப்படும் சில இளைஞர்கள் அந்த வீட்டில் இருந்து தப்பித்தார்கள்.

ஒரு காவலர் ஜோய்தேவ் இன் வீட்டில் நுழைந்து அவருடைய மனைவியை தாக்கியுள்ளார், அவருடைய சத்தம் கேட்டு ஜோய்தேவும் அவருடன் தப்பித்த இளைஞர்களும் திரும்பி வந்தார்கள். அவர்கள் அவரசத்திலும் வேறு வழியில்லாததாலும் வீட்டினுள் நுழைந்த போது அங்கு துப்பாக்கியுடன் இருந்த நான்கு காவலர்களைக் கண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் உந்தப்பட்டவர்களாக அந்த காவலரை அடித்தார்கள். அந்த அடியில் அவர் அங்கேயே உயிரிழந்தார். இளைஞர்கள் அடுத்த காவலரை தாக்கும் போது மற்ற இருவரும் தப்பித்து ஓடி அருகில் இருக்கும் கிராமத்தினரை உதவிக்கு அழைத்து வந்தார்கள். இது சூரிய உதயத்திற்கு முன்பு நடந்ததால் இளைஞர்கள், இறந்தவரின் உடலோடு தப்பித்து விட்டார்கள்.

hindu-women-raped-by-muslims-bangladesh

காலானா வின் காவல்துறை கண்காணிப்பாளர், அன்று மதியம் அந்த இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரோடு வந்தார். இடைப்பட்ட வேளையில் அந்த தாக்குதல் நடத்தியவர்களும் பக்கத்து வீட்டினரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் பெரும்பான்மையான கிராமத்தினர் நடந்த சம்பவத்தின் விளைவுகள் பற்றி அறியாமல் வீட்டிலே தங்கியிருந்தார்கள். தொடர்ந்து,  ராணுவம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழுள்ள காவல்துறையினர் இணைந்து அப்பாவி இந்து கிராம மக்களை அடித்துத் துன்புறுத்த தொடங்கினார்கள்.

கூடவே அருகில் இருக்கும் முஸ்ஸீம்களை அழைத்து இந்த வீடுகளை கொள்ளையடிக்க உதவினார்கள். பல பேர் இதில் கொல்லப்பட்டார்கள், ஆண்களும் பெண்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். வீடுகளில் இருந்த தெய்வ உருக்கள் உடைக்கப்பட்டு, வழிபாட்டு இடங்கள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. பல பெண்கள், ராணுவத்தினராலும் காவல் துறையினராலும் உள்ளூர் முஸ்ஸீம்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.

இப்படி, நரகக் கொடூரங்கள், ஒன்றில் இருந்து ஒன்றரை மைல் நீளம் இருக்கும் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட கால்ஷீரா கிராமத்தில் மட்டுமல்லாது அருகில் இருக்கும் பல கிராமங்களிலும் கட்டவிழக்கப்பட்டது. இந்த கால்ஷிரா கிராமம் ஆனது ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் இருந்ததாக சந்தேகப்படாத கிராமம் ஆகும்.

இன்னோரு கிராமம் ஆன ஜலார்தண்கா (Jhalardanga). கால்ஷிரா கிராமத்தில் இருந்து மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது, அது கம்யூனிஸ்டு நடவடிக்கைகளுக்கு பெயர் போனது ஆகும். ஒரு தடவை காவல்துறையினரின் பெரும் படை கம்யூனிஸ்டுகளை தேடும் வேட்டையில் வந்தபோது ஜலார்தண்கா கிராம மக்கள் இந்த கால்ஷீரா கிராமத்தில் அடைக்கலம் புகுந்தார்கள், ஏனென்றால், இந்த கால்ஷீரா கிராமம் பாதுகாப்பான கிராமம் ஆகும்.

16. நான் அந்த கால்ஷிரா கிராமத்திற்கும் அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களுக்கும் பிப்ரவரி 28, 1950 இல் சென்றேன். குலானாவின் காவல்துறை கண்காணிப்பாளரும் முஸ்ஸீம் லீக்கின் சில தலைவர்களும் என்னுடன் இருந்தனர். எப்போது அந்த கால்ஷீரா கிராமத்திற்கு போன போது அந்த கிராமம் உருக்குலைந்து இடிபாடுகளாக இருந்தது. காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் அந்த கிராமத்தில் 350 குடும்பங்கள் இருந்ததாகவும் ஆனால் இப்போது மூன்று வீடுகளைத் தவிர மற்றவை இடிக்கப்பட்டதாகவும் என்னிடம் சொல்லப்பட்டது. நாம சூத்திரர்களுக்கு சொந்தமான படகுகளும் கால்நடைகள் எல்லாமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. நான் இந்த உண்மைகளை முதலமைச்சர், முதன்மை செயலாளர், தலைமை காவல் ஆய்வாளர் மற்றும் உங்களுக்கும் எழுதினேன்.

17. இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லப்படவேண்டும். இந்த சம்பவங்கள் மேற்கு வங்காள பத்திரிக்கைகளில் வெளிவந்து அங்கிருந்த இந்துக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கால்ஷீராவில் பாதிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும், வீடு இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் என அனைவரும் கல்கத்தாவுக்கு வந்து அவர்களின் கொடுமைகளைச் சொல்லினர். அதனால் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் மேற்கு வங்காளத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது.

பிப்ரவரி தொந்தரவின் காரணங்கள்

 18. இந்த இடத்தில் குறிப்பிடவேண்டியது என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் கால்ஷீரா மற்றும் அதன் தொடர்புடைய சம்பவங்களுக்குப்  பதிலடியாக சில மதக்கலவரங்கள் நடந்த செய்திகள் கிழக்கு வங்காள பத்திரிக்கைகளில் உருப்பெருக்கி சொல்லப்பட்டன. 1950 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் கிழக்கு வங்காள சட்டமன்றத்தின் நிதிநிலை கூடுகை ஆரம்பித்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள், கால்ஷீரா மற்றும் நச்சோலி பற்றி விவாதிக்க இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வர அனுமதி கேட்டார்கள். ஆனால், அந்தத் தீர்மானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

bangladeshgenocide-islam-jihad
அப்பாவி ரிக்‌ஷாக்காரர்களையும் அழித்த அமைதி மார்க்கம்

 

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தார்கள். இந்து உறுப்பினர்களின் இந்த நடவடிக்கை அங்கிருந்த அமைச்சர்களை மட்டுமல்லாது மாநிலத்தின் முஸ்ஸீம் தலைவர்களையும் அதிகாரிகளையும் எரிச்சலடையச் செய்தது. இதுதான் ஒருவேளை பிப்ரவரி 1950 இல் நடந்த டாக்கா மற்றும் கிழக்கு வங்காள கலவரங்களின் முதன்மை காரணமாக இருக்கலாம்.

19. பிப்ரவரி 10, 1950 ஆம் திகதி காலை பத்துமணிக்கு ஒரு பெண் அவளுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டதாகக் காண்பிக்க சிகப்பு நிற மையால் வண்ணம் தீட்டப்பட்டு கிழக்கு வங்காள தலைமைச் செயலகம் முன்பு கொண்டு வரப்பட்டாள். உடனே செயலகத்தில் இருந்த அரசு அதிகாரிகள் வேலையை நிறுத்தி விட்டு வெளியேறி ஊர்வலமாக புறப்பட்டு இந்துக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பழிவாங்க கோரினார்கள். இந்த ஊர்வலம் ஒரு மைல் தூரம் போன போது கூட்டம் சேர ஆரம்பித்தது.

அது 12 மணிக்கு விக்டோரியா பூங்காவில் சேர்ந்தது, அங்கு இந்துக்களுக்கு எதிரான இன்னும் மோசமான பேச்சுக்கள் பல தலைவர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பேசப்பட்டன. இந்த இடத்தில் சிரிப்பான செயல் என்னவென்றால் இந்த முழு நாடகம் செயலகத்தின் ஊழியர்களால் நடத்தப்படும் போது கிழக்கு வங்காளத்தின் தலைமைச் செயலர், மேற்கு வங்காள தலைமைச் செயலருடன் எவ்வாறு இரண்டு வங்காளங்களிலும் மதக்கலவரங்களை ஒழிப்பது என்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.

அரசு அதிகாரிகள் கொள்ளையர்களுக்கு உதவினர். 

20. கலவரம் மதியம் ஒரு மணிக்கு நகரத்தின் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தது. முழு மூச்சில் நகரத்தின் எல்லா இடங்களிலும் தீ வைத்தல், இந்து கடைகள், மற்றும் வீடுகளைக் கொள்ளையிடுதல், மற்றும் இந்துக்களைக் கொல்லுதல் என்பவை இந்துக்களைக் கண்ட இடத்திலே செய்யப்பட்டன. இந்தக் கொலை, கொள்ளை போன்றவை காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையிலே நடைபெற்றதற்கான ஆதாரம் எனக்கு முஸ்ஸீம்களிடம் இருந்தும் கூட கிடைத்தன. 

 

எம்மதமும் சம்மதம் என்றோமே....

 

 இந்துக்களுக்குச் சொந்தமான நகைக்கடைகள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே கொள்ளையிடப்பட்டன. அந்தக் காவலர்கள், கொள்ளையை தடுக்கத் தவறியது மட்டுமல்லாது கொள்ளையடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி உதவினர். என்னுடைய துரதிர்ஷ்டவசமாக நான் அதே நாள் 5 மணிக்கு டாக்காவிற்கு சென்றேன். என்னுடைய கடும் வருத்ததிற்கு காரணமாக இந்த சம்பவங்களை அருகில் இருந்து பார்க்கும் துர்ப்பாக்கியத்தை பெற்றேன். நான் அங்கு பார்த்ததும் அருகில் இருந்தவர்களிடம் கேட்டதும் இதயத்தில் வலியை உண்டாக்குவதும் நம்பமுடியாததும் ஆகும்.

(தொடர்ச்சியாக நடக்கும் வரலாற்று உண்மைகள் தொடரும்…)

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

dalit_jogendranath_mandal_pakistan_law_minister“மகா மனிதன்”.
தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் – “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல். சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.

இவரது உழைப்பால் முஸ்லீம் லீக் பங்களாதேசில் பல முறை காப்பாற்றப்பட்டது. பல முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக, அறிவுத் தெளிவும் சமூக நல்லிணக்க நோக்கும் கொண்ட இவரே அமைந்தார். இருப்பினும், இஸ்லாமிய மனநிலை மற்ற மதத்தவர்களுக்கு வாழ்வுரிமை வழங்காது என்ற நிதர்சனம் அவரது முகத்தில் அறைந்தது.

மற்ற மதத்தினருக்கு, முக்கியமாக நாமதாரிகள் போன்ற தலித்துகளுக்கு, இஸ்லாமியத்தின்படி கொல்லப்பட்டு அழிக்கப்படுவதே விதியாகிவிட்டதை நேரடியாக அறிந்து தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், நல்லிணக்கம் நச்சாகிவிட்டதறிந்து பதறிப் போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு,  குறிப்பாக தலித் தலைவர்களுக்கு, என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.

இவர் பற்றி மேலும் அறிய:
தமிழ் பேப்பர் தளத்தில் || கூட்டாஞ்சோறு தளத்தில் || விக்கிப்பீடியா தளத்தில்

கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே:
ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்

வரலாறும், நம் பெரியோர்களும் மீண்டும் மீண்டும் நடைமுறை உண்மைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுத் தெரிந்தவர்களிடம் பாடம் கற்றுக் கொள்வோம். இனியாவது.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [குறள்: 822]

என் அன்பிக்குரிய [பாகிஸ்தான்] பிரதமர் அவர்களுக்கு,

மிகுந்த வேதனை கொண்ட இதயத்தினாலும்  கிழக்கு வங்காளத்திலுள்ள [தற்போதைய பங்களாதேசம்] பின் தங்கிய இந்து மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற என் பணித்திட்டம் தோல்வியடைந்த வருத்தத்தினாலும் உங்களின் அமைச்சரவையில் இருந்து விலகவேண்டிய முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவை எடுக்க இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் நிலவி வரும் சூழல் பற்றி விளங்கச் சொல்லுவதே சரியானதாக இருக்கும்.

1. என்னுடைய பதவி விலகலின் சமீபத்திய மற்றும் நெடுநாள் காரணங்களைச் சொல்லுவதற்கு முன் முஸ்ஸீம் லீக் உடன் இணைந்து பணியாற்றிய வேளைகளில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுவது உபயோகமாக இருக்கும்.

சில முக்கிய முஸ்ஸீம் லீக் பிரமுகர்கள் 1943 பிப்ரவரியில் என்னைச் சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் வங்காள சட்டசபையில் மூஸ்லீம் லீக்குடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டேன். 1943 மார்ச்சில் பஸல் ஹக் அமைச்சரவை கவிழ்ந்த பிறகு இருபத்தியோரு பட்டியல் வகுப்பு எம் எல் ஏ க்களுடன் நான் லீக்கின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக இருந்த காஜா நஜிமுதீன் அவர்களுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டேன். காஜா நஜிமூதீன் தன்னுடைய அமைச்சரவையை 1943 ஏப்ரலில் அமைத்தார்.

மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளை அமைச்சரவையில் சேர்ப்பது, வருடம் ஐந்து லட்சம் ரூபாயை பட்டியல் வகுப்பினரின் கல்விக்காக ஒதுக்குவது, பாகுபாடில்லாத மத பிரதிநிதித்துவத்தை அரசின் பணியிடங்களுக்கு அமல்படுத்துவது என்ற நிபந்தனைகளுடன் கூடியது எங்களுடைய ஒத்துழைப்பு ஆகும்.

2. இந்த நிபந்தனைகளைத் தவிர, முஸ்ஸீம் லீக்குடனான ஒத்துழைப்புக்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருந்தன.

முதலாவதாக வங்காள முஸ்லீம்களின் பொருளாதார நோக்கங்கள் பட்டியல் வகுப்புடன் பெரும்பாலும் ஒத்துப்போயின. முஸ்லீம்கள் பொதுவாக விவசாயிகளாகவும் கூலித்தொழிலாளிகளாகவும் இருந்ததைப் போலவே பட்டியல் வகுப்பினரும் இருந்தனர். முஸ்லீம்களின் ஒருபிரிவினர் மீனவர்களாக இருந்ததைப்  போலவே பட்டியல் வகுப்பினரின் ஒரு பகுதியினரும் இருந்தனர்.

இரண்டாவதாக, பட்டியல் வகுப்பினரும் முஸ்ஸீம்களும் பொதுவாகவே கல்வியில் பின் தங்கி இருந்தனர். லீக்குடனும் அமைச்சரவையுடனும் என்னுடைய ஒத்துழைப்பு, மிகப்பெரிய அளவில் சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் அதன் விளைவாக பெரும்பகுதி வங்காளர்களுக்கு இரண்டு தரப்பிலும் இருந்து பலனை கொண்டுவரும்.

கூடவே சிறப்புச் சலுகைகள் பெற்ற சக்தி வாய்ந்தவர்களின் அதீத உரிமைகளையும் அளவற்ற வசதியையும் குறைப்பதுடன் மதரீதியான அமைதியையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் தான் காரணம்.

இங்கு முதலமைச்சர் காஜா நஜிமுதீன், மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளைச் சேர்த்ததுடன் என்னுடைய சமூகத்தில் இருந்து மூன்று சட்டமன்றச் செயலர்களையும் சேர்த்துக்கொண்டார் என்பது சொல்லப்படவேண்டும்.

ஸுஹ்ரவார்தி அமைச்சரவை

direct_action_day_bangladesh_islam3. 1946 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு ஹெச். எஸ். ஸுஹ்ரவார்தி, லீக் சட்டமன்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பின் 1946 ஏப்ரலில் அமைச்சரவையை அமைத்தார். சட்டமன்றத்தின் ஒரே ஒரு பட்டியல் வகுப்பு உறுப்பினராக கூட்டுத் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.

ஸுஹ்ரவார்தி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டேன். 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் நாள் தான் கல்கத்தாவில் லீக்கின் நேரடி நடவடிக்கை நாளாக (Direct Action Day)  அனுசரிக்கப்பட்டது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் அது யூதர்கள் கொல்லப்பட்ட ஹோலோகாஸ்ட் போன்ற கொடூரத்தில் முடிந்தது.

லீக்கின் அமைச்சரவையில் இருந்து நான் விலகவேண்டும் என இந்துக்கள் கோரினார்கள். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. எனக்குத் தினமும் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. ஆனால், நான் என்னுடைய நிலையில் உறுதியாக இருந்தேன். கூடவே எங்களுடைய பத்திரிக்கையான ஜாக்ரனில் பட்டியல் வகுப்பினரை காங்கிரஸுக்கும் முஸ்ஸீம் லீக்குக்கும் இடையில் நடக்கும் சண்டையில் கலந்துகொள்ளவேண்டாம் என்ற கோரிக்கையை என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் வெளியிட்டேன்.

கடும் கோபத்தில் இருந்த இந்துக்கள் கூட்டத்தில் இருந்து என்னுடைய உயர்சாதி இந்து பக்கத்து வீட்டுக்காரர்களால் தான் நான் காப்பாற்ற பட்டேன் என்பதையும் இந்த இடத்தில் தாழ்மையுடன் சொல்லவேண்டும்.

[ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த] கல்கத்தா கொடூரம் 1946 அக்டோபரில் நாகோளி கலவரத்தால் தொடரப்பட்டது. அங்கு பட்டியல் வகுப்பு இந்துக்கள் உட்பட நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் பல இந்துக்கள் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டனர். இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்பட்டனர். என்னுடைய வகுப்பைச் சேர்ந்த பலர் உயிரை இழந்தனர். பலர் உடமைகளை இழந்தனர். இந்த கலவரங்கள் நிகழ்ந்த உடன் டிப்பேரியா மற்றும் பெனி பகுதிகளுக்குச் சென்று கலவரம் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டேன்.

இந்துக்களின் சொல்லொணாத் துயரங்கள் என்னைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது; இருந்த போதிலும் முஸ்ஸீம் லீக்குடன் என்னுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்தேன். கல்கத்தா கலவரங்கள் நிகழ்ந்தவுடன் ஸுஹ்ரவார்தி அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முயற்சியினால் மட்டுமே, நான்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் மற்றும் நான்கு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களின் ஆதரவினாலும் காங்கிரஸ் வென்றிருக்கவேண்டிய சட்டமன்றம் காப்பாற்றபட்டது, இல்லையேல் முஸ்ஸீம் லீக் அமைச்சரவை தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

4. 1946 அக்டோபரில் எதிர்பாராத விதமாக எனக்கு ஸுஹ்ரவார்தியிடம் இருந்து இந்திய இடைக்கால அமைச்சரவையில் பங்கு பெறும் அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகும், என்னுடைய முடிவைச் சொல்ல ஒரு மணிநேரமே தரப்பட்டதாலும், நான் அமைச்சரவையில் பங்கு பெறுவதை ஒப்புக்கொண்டேன், கூடவே என்னுடைய தலைவர் பி. ஆர். அம்பேத்கர் என்னுடைய முடிவை நிராகரித்தால் நான் அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவேன் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். நல்லவேளையாக அம்பேத்கர் தன்னுடைய அனுமதியை லண்டனில் இருந்து தந்தி மூலம் அனுப்பினார்.

தில்லிக்கு போய் சட்ட உறுப்பினராகப் பதவி ஏற்கப் போகும் முன் அப்போதைய கிழக்கு வங்காள முதல் அமைச்சரான ஸுஹ்ரவார்தியைச் சந்தித்து அமைச்சரவையில் என்னுடைய இடத்தில் இரண்டு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவும், இரண்டு சட்டமன்றச் செயலர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நியமிக்கவும் ஒப்புக்கொள்ள வைத்தேன்.

direct_action_day_bangladesh_islam_025. 1946ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி இடைக்கால அமைச்சரவையில் சேர்ந்தேன். ஒரு மாத காலத்திற்குப் பிறகு கல்கத்தாவிற்கு சென்றேன். ஸுஹ்ரவார்தி என்னிடம் கிழக்கு வங்காளத்தில் சில பகுதிகளில் மத மோதல்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக பட்டியல் வகுப்பினரான நாம சூத்திரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கோபால்கன்ஜ் துணைப்பிரிவில் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஸுஹ்ரவார்தி என்னிடம் அந்த பகுதிகளுக்குச் சென்று முஸ்ஸீம்களுகளிடமும் நாமசூத்திரர்களிடமும் பேசுமாறு கூறினார்.

உண்மை என்னவென்றால் திருப்பி தாக்க ஆயுத்தமாக எல்லா ஏற்பாடுகளையும் நாமசூத்திரர்கள் செய்திருந்தினர். நான் ஒரு டஜன் பெரிய கூட்டங்களில் பேசினேன். அதன் விளைவாக நாமசூத்திரர்கள் திருப்பிதாக்கும் எண்ணத்தை கைவிட்டனர். பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டது.

6. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேய அரசு ஜூலை மூன்றாம் நாள் அறிக்கையின் மூலம் இந்தியப் பிரிவினைக்கான முன்மொழிவுகளை வெளியிட்டார்கள். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறிப்பாக முஸ்ஸீம் அல்லாத பகுதிகள் அதிர்ந்தன.

உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டுமானால், நான் எப்போதுமே முஸ்ஸீம் லீக்கின் பாகிஸ்தானிய கோரிக்கையை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதி வந்தேன். நேர்மையுடன் சொல்லவேண்டுமானால் இந்தியா முழுவதிலும் மேல்வர்க்க இந்துக்களின் ஆதிக்கத்தனத்திற்கு எதிரான முஸ்லீமகளின் வருத்தங்கள் நியாயமானவை என்று எண்ணிய போதிலும், என்னுடைய கருத்துப்படி பாகிஸ்தானின் உருவாக்கம் இந்த மதப் பிரச்சினையை எப்போதும் தீர்க்காது என நம்பினேன்.

இந்தப் பிரிவினையின் தவிர்க்க முடியாத விளைவாக ஒட்டு மொத்த நாடும் தொடர்ந்த அல்லது முடிவேயிராத வறுமை, கல்வியின்மை, கூடவே கீழ்நிலையில் இருக்கும் இரு நாடுகளின் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவர்கள் என்று எண்ணினேன். கூடவே பாகிஸ்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக பின் தங்கிய மற்றும் முன்னேற்றம் அடையாத நாடாகவும் மாறுவிடும் என நினைத்தேன்.

லாகூர் தீர்மானம்

7. இப்போது பாகிஸ்தானை ஒரு தூய்மையான இஸ்ஸாமிய ஷரியத் சட்டத்தின் வழியும் இஸ்ஸாமிய வழிமுறைகளின் மூலமாகவும் ஆட்சி செய்யப்படும் நாடாக மாற்ற செய்யப்படும் முயற்சிகள் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். முஸ்ஸீம் லீக், லாகூரில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்குப் பிறகு முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் செய்யும் செயல்களோடு இது ஒத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட பகுதிகள்,

. நிலபரப்பு ரீதியாக தொடர்ச்சியாக முஸ்ஸீம் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுத்  தேவைப்பட்டால் நிலப்பரப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு, தனி நாடுகளாக சுதந்திரமாகவும் இறையாண்மையுடனும் அமையும்படி பிரிக்கப்படவேண்டும்.

. அமல்படுத்த கண்டிப்பாகத் தேவைப்படும் உறுதிகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டு சிறுபான்மையினருக்கு அவர்களின் மத, பண்பாட்டு, அரசியல், நிர்வாக, மற்றும் இதர உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான தெளிவான ஷரத்துகள் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் தரப்படவேண்டும்.

மேற்கண்ட இரண்டு ஷரத்துகளின்படி,

அஅ. வடமேற்கு மற்றும் கிழக்கு முஸ்ஸீம் பகுதிகள் இரண்டு தனிநாடுகள் ஆக அமைக்கப்படும்.

அஆ. அந்த இரண்டு நாடுகளும் சுதந்திரமாகவும் இறையாண்மை உடனும் இருக்கும்

அஇ. அங்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு கூடவே வாழ்க்கையின் எல்லா நிலைகளில் இருக்கும் தேவைகள் மதிக்கப்படும்

jogendra-nath-mandal-and-dr_-ambedkarஅஈ. அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்குத் தெளிவான ஷரத்துகளும், சிறுபான்மையினரின் ஆலோசனையும் அளிக்கப்படும்

என்பதை விளக்கின.

இது என்னுடைய நம்பிக்கையை இந்தத் தீர்மானத்தின் மேலும் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் மேலும் உறுதிப்படுத்தியது. கூடவே முகம்மது அலி ஜின்னா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 தேதி அரசியல் நிர்ணைய சபை உறுப்பினர் என்ற வகையில் செய்த அறிவிப்பின் மூலம் இந்துக்களும் முஸ்ஸீம்களும் சரிசமாக மதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள் எனவும் உறுதிப்படுத்தினார்.

அப்போது மக்களை முழு உரிமை உடைய முஸ்ஸீம்கள் எனவும் இஸ்ஸாமிய நாட்டின் பாதுகாப்பிலும் முஸ்ஸீம்களின் பாதுகாப்பிலும் இருக்கும் திம்மிக்கள் எனவும் பிரிக்கவேண்டிய கேள்வியே ஏற்படவில்லை.

இந்த எல்லா வாக்குறுதிகளும் எல்லா நிலைகளும் உங்களுக்குத் தெரிந்தும் உங்களுடைய அனுமதியுடனும் முகம்மது அலி ஜின்னாவின் விருப்பங்களுக்கும் எதிராகவும் சிறுபான்மையினர் [பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள்] கொடுமைகளும் அவமானங்களுக்கும் உள்ளாகின்றனர்.

(கடிதம் கற்றுத் தரும் பாடம் தொடரும்….)

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04

bomb-blast1980க்கு முன் தமிழகத்தில் பெரிய அளவில் பயங்கரவாதச் செயல்கள்  நடைபெற்றதாக எவ்விதத் தகவல்களும் கிடையாது.  ஆனால், இப்போது?

இப்போது இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், இஸ்லாமிய பயங்கரவாத வேலைகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன.  இது எப்படி ஆரம்பித்தது ?

காஷ்மீர் மாநிலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட பல்வேறு அமைப்புகள், 1980களில் இந்தியா முழுவதும் வேறு பெயர்களில் காலப் போக்கில் ஊடுருவியதே தீவிரவாதம் இந்தியாவில் வலிமைபெற மூல காரணமாகும்.

இதன் தொடர்ச்சியாக 1980களில் தென்னக மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளுக்கும் புனிதத் தீவிரவாதம் புனிதப் பயணம் செய்தது. 1980க்குப் பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது. 

தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் இந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தனித்தனியாக இயக்கங்கள் நடத்தி வருகிறார்கள்.  அல்-உம்மா, மனித நீதிப் பாசறை, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், தவ்ஹித் ஜமாத் என்கிற பெயர்களில் தங்களது செயல்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

இவ்வமைப்புக்கள் உருவான பின்பு தென்னிந்தியா முழுவதும், பல தீவிரவாதத் தாக்குதல்கள் ஒருங்கிணைந்து செய்யப்பட்டு வருகின்றன. நாம் அறிந்த கோயம்புத்தூர் கலவரம் கூட திட்டமிட்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களில் ஒன்றே.

உங்கள் ஊரில் நடந்ததும் நடப்பதும்

நாடு விடுதலை பெற்ற 1947ம் ஆண்டிலிருந்தே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரியும் எல்லாக் கட்சிகளும் சிறுபான்மையினர் நலனுக்காகப் பல சலுகைகளைச் செய்து வருகின்றன. இந்தச் சலுகைகள் இஸ்லாமிய நாடுகளிலும், கிறுத்துவ நாடுகளிலும்கூட அந்த மதத்தாருக்குக் கிடையாது. ஆனால், வன்முறை விரும்பிகளால் மறைக்கப்படுகிற, மறுக்கப்படுகிற, திரிக்கப்படுகிற உண்மையாக இப்போது அது மாறிப்போய்விட்டது.

“சமூக நீதி என்பது முஸ்லீம்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் மனித நீதிப் பாசறை தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது” என அந்த அமைப்பின் பொறுப்பாளர் பத்திரிக்கைகளுக்கு இப்போது செய்தி அனுப்புகிறார். யார் இந்த மனித நீதிப் பாசறையினர்?

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான  முக்கிய இயக்கம் அல்-உம்மா எனத் தெரிந்த பின் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்டதால் தங்களது அமைப்பிற்கு மனித நீதிப் பாசறை எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள் அல்-உம்மா இயக்கத்தினர். 

தமிழகத்தில் கோவையிலும், தேனியிலும் மனித நீதிப் பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கிறது. இந்த இரு மாவட்டங்களும் கேரளத்தின் எல்லையில் இருந்த படியால் இவர்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளும் கேரளத்தில் உள்ள NDFயிடமிருந்து கிடைத்து வருகின்றன. 

islam_terroristதடை செய்யப்பட்டவுடன் பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு செயல்பாடுகளைத் தொடர்வது அனைத்துத் தீவிரவாத அமைப்புக்களுக்கும் இப்போது சாத்தியமாகிவிட்டது. 2001ல் தடை செய்யப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பின் பெயரை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.

தடை பெயருக்கு மட்டும்தான் போலும். “பெயரளவில் தடை” எனும் வழக்குச் சொல்லுக்கு வேறு உதாரணங்கள் வேண்டியதில்லை. 
 
நடந்தவை நடந்தபடி

எல்லா வழிகளிலும் தங்களது வலிமையை தொடர்ந்து காட்டி வரவேண்டும் என்பது வன்முறை மதங்களின் போதனை. சட்டங்களை மதிக்காமல் புறக்கணிப்பது, காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் கலவரம் செய்வது மிரட்டுவது போன்றவை வலிமையை மற்றவர்களுக்குக் காட்டச் செய்யப்படும் வரலாற்று அடையாளங்கள்.

தமிழ்நாட்டில், தாங்கள் பெரும்பான்மையினராக உள்ள ஊர்களைத் தங்களுக்கேயான தனிநாடாகவே இஸ்லாமிய அமைப்பினர் நடத்துகின்றனர். தங்களது வலிமையைக் காட்டப் பல கொலைகளையும், அடாவடி மிரட்டல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஊர்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர்.

கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று.

1981ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காகத் திருக்கோவிலூர் சுந்தரம் தாக்கப்பட்டார். 

1984ம் ஆண்டு மே மாதம் கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, மாநிலத் தலைவர் நாராயணராவ் உட்பட சிலர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்கள். 

இதைத் தொடர்ந்து  அல்-உம்மா இயக்கத்தின் பொறுப்பாளர் பாட்சா, திரு ராமகோபாலன் அவர்களை மதுரை ரயில் நிலையத்தில் கொலை செய்ய முயன்றான்.

தொடர்ச்சியாக மூகாம்பிகை மணி, கூடங்குளம் ஜெயராஜ் உட்படப் பலர் தொடர்ந்து இந்த இயக்கத்தினரால் தாக்கப்பட்டார்கள்.

30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவர் படு கொலை செய்யப்பட்டார். 

5.9.1991ல் அதே கோவையில் வீர சிவக்குமார் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.  

கோவையில் தொடர்ந்து நடைபெறும் கொலைகள் காரணமாக அன்றைய காவல் துறை ஆணையர்களாக இருந்த திரு ஜீ.கணேசன் என்பவரும், துணை கமிஷனராக இருந்த டி.ராதாகிருஷ்ண ராஜாவும் உடனடியாகக் கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்தார்கள். 

கொலைகளைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட ஆய்வின் போது ஒரு ராணுவம் நடத்தும் அளவில் ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் இஸ்லாமியர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக கோட்டை மேடு பகுதியில், 6க்கும் அதிகமான செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, சுயமரியாதைப் பாரம்பரியத்தில் வந்த திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது. அதனால், 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் திமுகவின் பொறுப்பாளரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கோவை மு. ராமநாதன் பொதுக் கூட்டம் ஒன்றில் இவ்வாறு பேசினார்:

“…திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வெற்றி செய்தி கிடைக்கும் போதே, கோட்டை மேடு பகுதியில் உள்ள செக் போஸ்ட்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும்….”

இந்தப் பேச்சின் காரணமாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதே இஸ்லாமிய இளைஞர்கள் செக் போஸ்ட்களை தகர்த்தனர். தடுத்த காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். செக்போஸ்ட்டுகளைப் பாதுகாத்த காவல் துறையினரை அரசாங்கம் தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தல்களும் எழுந்தன.

அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளக் கோவை சிறையில் வார்டனாக இருந்த பூபாலன் என்பவர் சிறையிலேயே கொலை செய்யப்பட்டார்.

கலவரம் விதைக்கப்பட்ட கதை

CORRECTION Pakistan Militant Patronsவன்முறையே உயிர்மூச்சு எனும் போதனைகளை நம்புபவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது மட்டுமே உயிர்ப்புடன் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள். அதனாலேயே வன்முறையைத் தேடி அலைகிறார்கள். வன்முறைக்கான வாய்ப்பு இல்லாவிட்டால், வாய்ப்புக்களை உருவாக்குகிறார்கள்.

29.11.1997ந் தேதி கோவை கடைவீதியில் உள்ள காவல் நிலையம் அருகில் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தார் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சந்திரசேகரன். 

அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, ஓட்டி வந்தவர்களிடம் லைஸன்ஸ் இல்லை என்பதைக் கண்டறிந்தார். அபராதம் கட்ட மறுத்து மோசமாக நடந்து கொண்டனர் அந்த ஓட்டுனர்கள். இந்தியாவின் இறையாண்மைக்கு, சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதை அந்த இளைஞர்களின் நடவடிக்கைகள் தெரிவித்தன. ஆகவே, வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அழைத்துச் சென்று விட்டார். 

இந்தத் தகவல் தெரிந்தவுடன் அல்-உம்மாவின் மாநில செயலாளர் முகமது அன்சாரி உடனடியாகக் காவல் நிலைத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தகராறு செய்து கொண்டு இருந்தார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்கள் இஸ்லாமியர்களாம்.

அவர் அங்கு தகராறு செய்யும் அதே நேரத்தில், காவல் நிலையத்திற்கு அருகில் போக்குவரத்தைச் சீர் படுத்திக் கொண்டிருந்த காவலர் செல்வராஜ் மீது மூன்று அல்-உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அந்தக் காவலரைப் படு கொலை செய்தார்கள்.  

விதைத்தவன் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டாமா? 1997ம் வருடம் தங்களது எதிர்ப்பைக் காட்ட  மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடி குண்டு வைத்து வெடிக்கச் செய்தார்கள். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புலா எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகளில் குண்டு வெடித்துச் சிலர் கொல்லப்பட்டார்கள். 

இதே போலவே 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அடியில் குண்டு வைக்கப்பட்டு , குண்டு வெடித்ததில் பலர் படு காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்குக் காரணம் தமிழகத்தில் உள்ள ஜிகாத் கமிட்டி என்பதும், எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தவர்கள் நேஷனல் டிபன்ஸ் போர்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

உடன்பிறந்தும் கொன்றனரே உடன்பிறப்புக்கள்

ஜனவரி மாதம் 31ந் தேதி அன்றே, கோவையில் உள்ள காவல் துறையின் உயர் அதிகாரிகள் முதல்வருக்கு அவசரம் அவசரமாக ஒரு தகவலைத் தெரிவித்தனர். 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கக் கூடிய சூழ் நிலை இருப்பதாக அந்தத் தகவல் தெரிவித்தது. உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவு எதிர்பார்த்தார்கள் தகவல் அனுப்பிய உயர் அதிகாரிகள். 

coimbatore_bomb_ramakrishnan_bodyஆனால், திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதால் அப்போதைய முதல்வரான கருணாநிதி அவர்கள் எவ்விதமான உத்திரவும் கொடுக்கவில்லை.

19.2.1998ந் தேதி “தி ஹிந்து” நாளிதழில் “Prior warning not taken seriously” எனத் தலைப்பிட்டு வந்த கட்டுரை இந்த உண்மை பற்றி சாட்சி கூறுகிறது.

காவல் துறையினர் எதிர்பார்த்த அந்தத் தாக்குதல் நடந்தே விட்டது. அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி, இஸ்லாமிக் டிஃபன்ஸ் போர்ஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டாகச் சேர்ந்து நடத்திய திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய குண்டு வெடிப்புகளாகும்.

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் அத்வானியைக் கொலை செய்ய நடந்த குண்டு  வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் கூட, இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் மென்மையான போக்கையே திராவிட இயக்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர். 

அமைதியை நாடியவர் அழிக்கப்பட்டார்

2006 டிசம்பர் மாதம். தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சித்தனர். கோவிலுக்கு அருகில், கோவில் நிலத்தில் பள்ளிவாசல் எழுந்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழும் என்று சொல்லி, அந்தப் பிரச்சினைகள் உருவாகக் கூடாது என்று பேசி வந்தார் இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியன். பள்ளிவாசல் முயற்சியைத் தடுத்ததற்காக குமார பாண்டியன் 17.12.2006ல் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டார். 

குட்டி பாக்கிஸ்தான்களும், குண்டு வெடிப்புகளும்

ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பிரச்சினைக்குரிய பகுதியாகும். ஆகவே, மேலப்பாளையத்தை மையப் பகுதியாக வைத்துக் கொண்டு இவர்கள் செயல்படுகிறார்கள். பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தஞ்சம் புகும் இடமாக மேலப்பாளையம் விளங்குகிறது.

26.7.2006ல் மனித நீதிப் பாசறையில், புதிதாக அறிவகம் எனும் அமைப்பை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டன. மத மாற்றத்தின் மூலம் ஜிகாதிகளை அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய அம்சமாகக் கொண்டு  இந்தமுகாம் நடத்தப்பட்டது. 

மனித நீதிப் பாசறையில் இரண்டு முக்கிய அமைப்புகள் செயல்படுகின்றன: அறிவகம் மற்றும் தமிழ்நாடு டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட். இந்த இரண்டு அமைப்புகளைப் பற்றி துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் சஞ்சய் அரோரா தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகும்.

“மனித நீதிப் பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த இரண்டு துணை அமைப்புகளும் மனித நீதிப் பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகின்றன.” 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

“நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்து, மதம்  மாறியவர்களைத் தேனி மாவட்டத்தில் உள்ள முத்துத்தேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்புகிறது இந்த அமைப்பு.  அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்குப் பயிற்சி எனும் பெயரில் மூளைச் சலவை செய்வது,  1992 டிசம்பர் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவங்களின் சி.டி.யை காட்டுவது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்களின் காட்சிகள் அடங்கிய சி.டியைக்  காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது போன்றவற்றை அவர்கள் செய்கிறார்கள்.

நெல்லிக்குப்பத்தில் உள்ள முஸ்லீம் பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனை நடத்திய போது 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து long sickles, foreign-made daggers, along with other items – celephones, audio and video cassettes, an amplifier, a binocular, a camera, digital diaries போன்றவை கைப்பற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.

குப்பையிலும் மலரும் குண்டுமணிகள்

1997 பிப்ரவரி 10ந் தேதி சென்னைக்கு அருகில் வேப்பேரியில் ஒரு குப்பை கூடையில் 1000 டெட்டனேட்டர்கள் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு பிடித்தார்கள். 

கோவையிலிருந்து சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அப்துல்லா என்பவன் இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டான். இவன் கைது செய்யப்பட்ட இரண்டு தினங்களுக்குள், டெட்டனேட்டர்கள் கண்டு பிடிக்கப்பட்ட அதே இடத்தில், 750 எலக்டிரிக் டெட்டேனட்டர்கள், அத்துடன் வெடி குண்டுகள் தயாரிக்கத் தேவையான கெமிக்கல்களும் மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டன. 

ஆகவே, தொடரும்  இம்மாதிரி சம்பவங்களின் காரணமாகத் தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த அல்-உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டிகள் திட்டமிட்டுள்ளது நன்கு தெரிந்தும் அரசு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை நிலவரம். 

பலமடையும் பயங்கரவாதமும், பலமூட்டும் விஷக்கிருமிகளும்

தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம், கட்சி துவக்கப்பட்ட காலங்களிலிருந்தே இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன்  செயல்படுகிறது. அது தவறல்ல. ஆனால், மற்ற நம்பிக்கைகளுக்கு மரியாதை தரும் இஸ்லாமியப் பெரியவர்களை ஆதரிக்க மறுத்து, அவர்களை ஒதுக்கிவிட்டு, மதவெறி பரப்பும் வன்முறை விரும்பிகளை ஆதரிப்பதுதான் தவறு.

மாற்று மதத்தினர் மீதும், தனிநபர் மீதும் இஸ்லாமியர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினால் கூட, அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கூடத் தயக்கம் காட்டும் கட்சி திமுகவேயாகும்.

1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த  குண்டு வெடிப்பில் 11 பேர்கள் கொல்லப்பட்டது அல்-உம்மா எனும் பயங்கரவாத அமைப்பின் செயலாகும். 

இதன் காரணமாகத் தமிழகக் காவல் துறையினர் பல இடங்களில் தங்களது சோதனைகளைத் துவங்கிய போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தன. 

11.3.1997ந் தேதி சென்னைக்கு அருகில் கொடுங்கையூரில் அல்-உம்மா இயக்கத்தைச் சார்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடத்திய போது, வெடி குண்டுகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஜெல்லட்டின் குச்சிகள், டெட்டேனட்டர்கள், வெடிகுண்டு தயாரிக்க உதவும் இரும்பு பைப்கள், வெடிக்கும் நேரத்தை நிர்ணையிக்கும் அலாரம் டைம்பீஸ் ஆகியவை கிடைத்தன. 

இதன் காரணமாக இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் முகமது கான் –  எஸ்.ஏ. பாட்சாவின் சகோதரர். இரண்டாமவர் சாகுல் ஹமீது. கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது முறையான வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

கொடுங்கையூர் போலவே 8.2.1997ல் தஞ்சாவூருக்கு அருகில் சாலியமங்கலத்தில் இருந்த முகமதியா ரைஸ் மில்லில் குண்டு வெடித்து இருவர் மாண்டார்கள். பலர் காயமடைந்தார்கள்.

இந்த ஆலையில் 84 ஜெலட்டின் குச்சிகள், 50 கிலோ சல்பர், 11.5 கிலோ அமோனியம் நைட்ரேட், 100 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. 

இந்த சம்பவத்தில் அரிசி ஆலை அதிபர் அப்துல் ஹமீதும் அவரது மகன் அப்துல் காதரும் படு காயமடைந்தார்கள். படு காயமடைந்த அப்துல் காதருக்குத் தமிழகத்தில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகப் பின்னாளில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக மதுரை மாவட்டத்தைச் சார்ந்த அப்துல் குத்தூஸ், அப்துல் சலீம் என்ற இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தமிழகக் காவல் துறை முழுமையான  நடவடிக்கை எதுவும் எடுக்க இயலவில்லை.

இதில் அதிர்ச்சி அடையும் ஒரு விஷயமும் இருக்கிறது. திட்டமிட்டதற்கு முன்பாகவே தவறுதலாக முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி  ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யாரென்பதைக் கடைசியில் பார்ப்போம். (ஒரு க்ளூ: அவர் கோயம்புத்தூரில் பேச வந்த அத்வானி அல்ல. இந்தச் சம்பவம் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பே நடந்தது.)

islamic-fundamentalism031இதில் நாம் நினைவில் உறுதியாக பதிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இதுவரை நாம் பார்த்த அத்தனைத் தீவிரவாதச் செயல்களும், குண்டு வெடிப்புகளும், கொலைகளும் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துவருகின்றன. அந்த முடிவற்ற தொடர்கதையின் ஒரு அத்தியாயம்தான் கோவை குண்டு வெடிப்புகள்.

1998ல் நடைபெற்ற கோவை குண்டு வெடிப்புக்குப் பின்பு, அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் போல் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பை 22.7.2006ந் தேதி நடத்தப் போட்டிருந்த திட்டம் காவல்துறைக்குத் தெரிய வந்தது. தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக மனித நீதிப் பாசறையைச் சார்ந்த ஐந்து பேர்களைக் கோவை காவல் துணை கண்காணிப்பாளர் திரு ரத்தினசபாபதி கைது செய்தார்.

கைது செய்து சில தினங்களில் மனித நீதிப் பாசறை தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியது. கைது செய்த துணை ஆணையர் உடனடியாகப் பணி மாற்றம் செய்யப்பட்டார். 

குற்றம் நீருபிக்கப்பட்ட, ஆயுள் தண்டனை கைதியாகக் கோவை சிறையில் இருந்த பக்ரூதின் அலி அகமது உட்பட எட்டு குற்றவாளிகளை விடுவித்தது திமுக அரசு.  
 
கோவையில் பயங்கரவாதச் சம்பவங்கள் நடப்பதற்குரிய அறிகுறி எதுவும் கிடையாது எனக் கூறி ஐந்து பேர்களையும் 9.2.2008ல் திமுக அரசு விடுதலை செய்துவிட்டது. ஆனால், மத்திய உளவுத்  துறை செய்திப்படி  முஸ்லிம் அமைப்பான மனித நீதிப் பாசறை  ரத்ததானம் செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சிலேட்டு புத்தகம் வழங்குவது போன்றவை ஒருபுறம் வழங்கிக் கொண்டு, மறுபுறம் தீவிரவாதப் பயிற்சிகளை அளிப்பதும், குண்டு தயாரிப்பதும், மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையாகக் கொண்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

2006ம் ஆண்டு மே மாதம் இறுதியில் 20க்கு மேற்பட்ட அல்-உம்மா அமைப்பைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தனர். அவர்களைத் திமுக அரசு எவ்வித காரணமும் இல்லாமல் விடுவித்தது. 

இது போல்,  தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகளை இந்த அரசு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விடுவித்தது.

karunanidhi-with-kulla-iftarதிமுகவின் ஸ்தாபகர் சி.என். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவின் போது 2011 வரை சிறையில் இருக்க வேண்டிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை 2008 செப்டம்பர் மாதமே  விடுதலை செய்த அரசு, திராவிட பாரம்பரியத்தில் வந்த திமுக அரசேயாகும்.

வளர்த்த கடா ?

அரிசி ஆலையில் குண்டு தவறுதலாக வெடித்தபோது அதற்கு அருகாமையில் ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி பேசிக்கொண்டிருந்தார் என்று பார்த்தோம் அல்லவா? சம்பவ இடத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் பேசிக் கொண்டிருந்தவர் திமுகவின் தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள்தான்.

அரபியப் பெருங்கடலின் அழிவு அலைகள் ஓயவில்லை.

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-03

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி சிமி இயக்கத்திற்கு தடை விதித்த பின் அமைப்பின் பொறுப்பில் உள்ளவர்கள் பல்வேறு அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டும் வேறு பெயர்களில் புதிய அமைப்பை துவக்கினார்கள்.  அவ்வாறு துவக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று இந்தியன் முஜாஹூதீன் என்கிற அமைப்பாகும்.

இந்தியன் முஜாஹூதீன் (Indian Mujahedeen)

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளில் இந்தியன் முஜாஹூதீன் எனும் அமைப்பு முக்கியமான பயங்கரவாத இயக்கமாகும்.  2008ம் ஆண்டுக்கு முன் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றதா என்கிற சந்தேகம் பலர் மனதில் எழுந்தது.  2007ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி,  பைசாபாத், லக்னோ போன்ற மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வெடித்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இயக்கம் இந்தியன் முஜாஹூதீன் என தெரியவந்தது.  குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் உத்திரப் பிரதேச காவல் துறையினர் பல இடங்களில் உள்ள இஸ்லாமியர்களின் இல்லங்களில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தை நடத்தியவர்கள் புதிய இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.  நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்த Jaish-e-Muhammad அமைப்பைச் சார்ந்தவர்களை வழக்குரைஞர் சிலர் தாக்கியதற்காகப் பழி வாங்கவே நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நடத்தியதாகப் பல்வேறு மீடியாக்களுக்குத் தகவல் கொடுத்த பின் தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியன் முஜாஹூதீன் எனும் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக உளவுத் துறைக்கு தெரியவந்தது.

இந்தியன் முஜாஹூதீன் அமைப்பின் விசித்திரம் தாக்குதல் நடத்துவதற்கு முன் அனைத்து மீடியாக்களுக்கும்  தகவல் கொடுத்து விட்டுத் தாக்குதல்களை நடத்துவது.  இந்த புதிய அமைப்பில் உள்ளவர்கள், தடை செய்யப்பட்ட மூன்று முக்கிய அமைப்பினர்:

 ஒன்று சிமி, இரண்டாவது ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி(Harkat-ul-jihad-e-islami) என்ற இயக்கமும்,  மூன்றாவதாக சிறையில் உள்ள அப்டாப் அன்சாரியின் (Aftab Ansari) ஆதரவாளர்கள் அடங்கிய அமைப்பும் உள்ளடங்கிய பயங்கரவாத இயக்கம்தான் இந்தியன் முஜாஹூதீன். 

தாக்குதல் நடத்துவதற்கு முன் இ-மெயில் அனுப்பும் போது தெளிவாகக் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுப்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 

நடுத்தர மற்றும் கீழ் தட்டு இஸ்லாமியர்களில் உள்ள இந்து விரோத சிந்தனை உள்ளவர்களை அணுகி அவர்களை இயக்கத்தில் இணைப்பது,  ஓசாமா பின்லேடனில் சிந்தனையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றிற்காகத் துவக்கப்பட்ட இயக்கம் இந்தியன் முஜாஹூதீன்.  இவர்களுக்கு லஷ்கார்-இ-தொய்பாவூடனும் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.யுடனும் இன்னும் சில பயங்கரவாத அமைப்புடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலங்களும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தியன் முஜாஹூதீன் அமைப்பைப் பற்றிய முழு விவரங்கள் கிடைத்துள்ளன.  முன்னாள் சிமி இயக்கத்தின் பொறுப்பாளாரான ஸாஃப்ட்வேர் என்ஜினியரான அப்துல் சுபான் குரேஷி (Abdul Subhan Qreshi) என்பவனால் இந்த இயக்கம் துவக்கப்பட்டது.  இதற்கு முன்னரே உத்திர பிரதேச மாநிலம் ஆஸம்காட் பகுதியில் எலக்ட்ராணிக் என்ஜினியரான முன்னாள் சிமி இயக்கத்தை சார்ந்த சாதிக் இஸ்ரார் சேஷ் (Sadiq Israr Sheikh) என்பவன் இந்த இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கியவன்.  இவனது மைத்துனர் பாகிஸ்தானைச் சார்ந்த முஜாஹித் சலீம் என்பவன் மூலம் லஷ்கர்-இ-தொய்பாவின் தொடர்பு ஏற்பட்டு, அதன் மூலம் பயங்கரவாத பயிற்சி பெற்றவன். 

2006ம் ஆண்டு ஜீலை மாதம் மும்பையில் நடந்த ரயில் தொடர் குண்டு வெடிப்பின் சூத்ரதாரியாவான். முழுமையாக இந்தியன் முஜாஹூதின் அமைப்பினர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் முன் பல்வேறு தாக்குதல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.  விசாரனையில் கிடைத்த தகவல்களில் ஆச்சரியப்படத் தக்க செய்தி இந்தியன் முஜாஹூதின் அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் ஐ.டி யில் பணிபுரிபவர்கள். இவர்களில் பலர்  பெரும் செல்வந்தர்கள்.  குறிப்பாக அஷ்கர்  பீர்பாய் (Asghar Peerbhoy) சல்மான் காதர் ஷைகாந்த் (Salman Kadar Shaikhand) அசிப் பஸிரிதின் ஷேக் (Asif Bashiruddin Shaikh) போன்றவர்கள் குறிப்பிட தக்கவர்கள்.  யாஹூ இணைய தளத்தில் பணிபுரிந்த பீர்பாய் இந்தியன் முஜாஹூதின் அமைப்பின் மீடியாவின் முக்கிய பொறுப்பாளார்.
 
இந்தியன் முஜாஹூதீன் அமைப்பைப் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.  கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் மும்பை காவல் துறையினர் நடத்திய 1809 பக்க விசாரணை  அறிக்கையின் அடிப்படையில் சில சம்பவங்கள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தியன் முஜாஹூதீன் நடத்திய முக்கியமான நான்கு தாக்குதல்கள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் முழுமையாக காவல் துறையினருக்கு தெரிய வந்தது.

13.5.2008ந் தேதி ஜெய்ப்பூரில் ஒன்பது இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளின் காரணமாக 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.  25.7.2008ந் தேதி பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும்,  26.7.2008ந் தேதி அகமதாபாத் நகரில் 16 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பும், இதில் 38 பேர்கள் கொல்லபட்டதும், நூற்றுக்கணக்கானவர்கள் படு காயமடைந்த சம்பவமும், 23.9.2008ந் தேதி தலைநகர்  டெல்லியில் ஐந்து இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமும், இந்தியன் முஜாஹூதீனின் கொடூர செயல்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. பல்வேறு சம்பவங்களில், குறிப்பாக 2008ம் ஆண்டு ஜீலை 26ந் தேதி அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட கோரி (Ghauri) ஹூசைனி (Husaini) இருவரும் சிமி இயக்கத்தினர்.

அகமதாபாத் மற்றும் சில இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் கேரளத்தில் உள்ள ஆல்வா என்கிற மாவட்டம்.  இந்த மாவட்டத்தில் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம்  50 நபர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது.  இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் உஸ்மான் அகர்பாட்டிவாலாவும்(Usman Agarbattiwala) சாஜீத் மன்சூரி என்பவனும் முக்கியமானவர்கள்.  ஆல்வாவில் கொடுக்கப்பட்ட பயிற்சியைப் போலவே கேரளமாநிலத்தில் உள்ள  Halol எனும் பகுதியில் உள்ள பாவகாத் மலைப் பகுதியில் (Pavagadh hills) 2008ல் பயிற்சி அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான பயங்கரவாதி முகமது சபி (Muhammed Saif). இவனிடம் நடத்திய விசாரனையில் இந்தியன் முஜாஹூதீன் அமைப்பின் செயல்பாடுகள் நோக்கங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.  பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காகவே நான்கு விதமான பிரிவுகள் செயல்படுவதாகத் தெரிவித்தான். 

இந்த நான்கு பிரிவுகளுக்கும் ஒரு கமாண்டர் இருப்பார். அவர் லஷ்கர்-இ-தொய்பாவில் முழுப் பயிற்சி எடுத்தவர் சகாபுதீன் கோரி (Shahabuddin Ghauri) என்பவன் தலைமையில் உள்ள பிரிவு தென்னகத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதும்,  அதை செயல்படுத்துவதும், இந்தப் பிரிவின் தலைமையிடமாக இருந்த மாநிலம் கேரளமாகும். 

இரண்டாவது பிரிவுக்கு சாகீத்-அல்-சர்கவீ (Shadeed-al-zarqawi) என்பவனின் தலைமையில் அரசியல் தலைவர்களையும் சில முக்கியமானவர்களையும் கொல்லுவதற்கு ஏற்படுத்தப்பட்ட தற்கொலை பிரிவாகும்.  மூன்றாவது பிரிவு முகமது கஷ்னவி (Muhammad Ghaznavi) வட இந்தியாவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதும், தாக்குதல்களில் அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய இலக்காகும். நான்காவதாக பூனாவைத்  தலைமையிடமாகக் கொண்டு அனைத்து மீடியாவிற்கும் செய்திகள் அனுப்புவது.

பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்நாடகா ஃபோரம் டிக்னிடி என்கிற இஸ்லாமிய அமைப்பும், நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரண்ட் என்கிற கேரளத்தில் இயங்கிய முஸ்லீம் பயங்கரவாத அமைப்பும், தமிழகத்தில் இந்து விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் மனித நீதி பாசறையும்,   தென்னகப் பகுதியிலிருந்து வட பகுதியில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கம்யூனிடி சோஷியல் அண்ட் எஜூகேஷனல் சொஸைட்டியும், ஆந்திராவில் ஏற்கனவே உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி புரியும் ஆந்திரப் பிரதேஷ் அஸோஷியேஷன் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ் என்கிற இயக்கமும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நகரிக் அதிகார் சுரக்ஷா சமிதியும், இறுதியாகக் கோவா பகுதியில் உள்ள கோவா ஸிடிஸன்ஸ் ஃபோரம் போன்ற இருபது அமைப்புகளின் கலவையும் சேர்த்து பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் புதிய பெயரில் துவக்கப்பட்டுள்ளது.  இவர்கள் பெண்களுக்காக,   குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக,  இமாம்களுக்காக, வழக்கறிஞர்களுக்காக,  டாக்டர்களுக்காக, பத்திரிக்கையாளார்களுக்காக என்று எல்லா பிரிவுகளிலும் உள்ள இஸ்லாமியர்களை இணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிற்கு கேரளத்தில் மட்டும் 30,000 க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.  நாடு முழுவதும் 80,000க்கும்  மேற்பட்டவர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள்.

இவர்கள் கொடுக்கும் சந்தாகையைக் கொண்டு இயக்கத்தை வளர்ப்பதாகக் கூறினாலும், உண்மையில் இவர்களுக்கு அரபு நாடுகளிலிருந்து கோடிக் கணக்கான நிதி வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக ஹவாலா முறையிலும் கேரளத்தில் குவியும் அந்நியச் செலாவணியே இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக இந்திய உளவுத் துறை தெரிவிக்கிறது.  இதில் கேரளத்தைச் சார்ந்த 25 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள். இவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ 40,000 கோடிக்கு மேல் அந்நிய செலவாணியாக அனுப்பும் தொகையில் எழுபது சதவீதம் பயங்கரவாதிகளுக்கு செல்வதாகவும் உளவுத் துறையினர் தெரிவிக்கின்றனா.

“இருபது வருடங்களில் கேரளத்தை முஸ்லீம்கள் பெரும் பான்மையினராக வாழும் மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்.  மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற பணத்தையும் ஆசையைத் தூண்டும் வேறு வழிகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.   முஸ்லீம்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இஸ்லாமியர் அல்லாத பெண்களைக் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள்”. 

மேற்குறிய வார்த்தைகளை வெளிப்படுத்தியவர் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்தவரோ அல்லது சங்க பரிவார்களைச் சார்ந்தவர்களோ கிடையாது. முழுக்க முழுக்க தொழிலாளர் வர்க்கத்திற்குப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ளும் கேரள முதல்வர் அச்சுதானந்தன் என்பது வியப்பிற்குறிய செய்தியாகும்.  கேரள முதல்வர் மேலும் கூறும் போது “கேரள மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களைப் பற்றி கூறினேன்.  இது தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கூறிய கருத்தாகும்” என்று சொல்லி உள்ளார்.

கராச்சி புராஜெக்ட்

ஐ.எஸ்.ஐ., பாகிஸ்தான் ராணுவம், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹூஜி போன்ற அமைப்புகளுக்கிடையே 2003ல் தீட்டப்பட்ட சதியின் பெயர் கராச்சி புராஜெக்ட் என்பதாகும்.  இந்த சதி திட்டத்தின் ஒரு அங்கமே புனேயில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவமாகும்.  இந்தியாவில் தேடப்பட்டு பாகிஸ்தானில் தஞ்சமடைந்தோர் மூலம் இந்திய முஸ்லிம் இளைஞர்களை பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் வழியாக வரவழைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி தருகிறது.  ஆயுதப் பயிற்சி பெறுபவர்களை மூளைச் சலவை செய்வதற்கு இந்தியாவில் 1992ந் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடைபெற்ற சம்வத்தின் வீடியோக் காட்சிகளையும், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தின் காட்சிகளையும் காட்டி அவர்களை இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவின் இறையான்மைக்கு எதிராகவும் தயார் செய்கிறார்கள்.  இந்த பணிகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கு இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளான ரியாஸ்,  இக்பால் பட் போன்றவர்களைப் பயன் படுத்திக் கொள்கின்றனர். இந்த சதி திட்டத்தின் முக்கிய நோக்கமே இந்தியாவின் ராணுவ மற்றும் பொருளாதார சாதகங்களை குலைக்கும் பாகிஸ்தானின் முக்கிய நோக்கமான காஷ்மீர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும்.

2005ம் ஆண்டு முதல் இந்த சதி திட்டத்தின் படி 10 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இந்த தாக்குதல்களில் 500க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  திசைமாறிய இந்திய இஸ்லாமிய இளைஞர்களையூம், உள்ளுரிலேயே கிடைக்கும் வெடி மருந்துகளையும் பயன்படுத்துவது இந்தியாவின் இதயப் பகுதிகளை மட்டும் குறி வைத்து தாக்குவது.  இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நிகழும் போது பாகிஸ்தான் மீது எவ்வித சந்தேகம் வராமல் பார்த்துக் கொள்வது இந்த சதித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

பங்களாதேஷிலுள்ள ஹூஜி பிரிவின் தலைவனான ஷாஹித் பிலாலுக்கு  இரண்டாம் கட்டத் தலைவனான அப்துல் க்வாஜா கைதான பிறகுதான் இந்திய அரசிற்கே கராச்சி சதி பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்தன.  2009ம் ஆண்டு பங்களாதேஷில ரா நடத்திய ரகசிய நடவடிக்கையின் காரணமாகக் கைது செய்யப்பட்ட க்வாஜாவை இலங்கை வழியாக சென்னைக்கு கொண்டு வந்து ஹைதராபாதில் 2010ம் வருடம் ஜனவரியில் நடத்திய விசாரணையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடிய இடங்களைப் பற்றிய விவரங்களை தொரிவித்தான்.  க்வாஜாவை போல இன்னும் சிலரை கைது செய்து விசாரித்த போது இந்திய இளைஞர்களுக்குப் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மறைவான மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளிப்பதாக தெரிந்தது.   2003ல் துவக்கப்பட்ட இந்தச் சதி திட்டத்திற்கு இரண்டு வருடங்களில் 40 முதல் 50 வரை ஜிகாதிக்கள் பயிற்சி பெற்று தாக்குதல் நடத்த இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்கள்.

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம்

மத மாற்றத்தின் காரணமாகவே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் துளிர் விட துவங்கியது.  1982ம் ஆண்டு மார்ச்சு மாதம் கன்னியாகுமாரி  மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நடந்த பயங்கர கலவரத்திற்குப் பிறகு தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தனது பணியினை செய்ய முற்பட்டது.  1981ம் ஆண்டு கோவை ஆர்.எஸ் புரத்தில் நடந்த இந்து முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திருக்கோலிலுர் சுந்தரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். 1961ம் ஆண்டிலிருந்து 1971ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வகுப்பு மோதல்கள் அதிக அளவில் நடந்துள்ளதாக 1985ல் கோகுலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 1980ம் ஆண்டின் இறுதியிலிருந்து 1990ம் ஆண்டின் துவக்கத்திற்குள் தமிழகத்தில் நடந்த வகுப்புக்  கலவரங்களின் மூலமாக இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்கள் முளைத்தன.  உள்ளுர் முஸ்லீம் வியாபாரிகளாலும், அன்னிய ஏஜென்ட்களின் வழியே கிடைத்த நிதியினாலும் இந்த இயக்கங்கள் மெல்ல மெல்ல வளர்ந்தன.  தமிழகக் காவல்துறையினர்  அறிக்கையின் படி 1983ல் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைந்தது மட்டுமில்லாமல் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளையும் சிறப்பாகச் செய்யத்  துவங்கினார்கள்.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் 13க்கு மேற்பட்ட இஸ்லாமிய பங்கரவாத இயக்கங்கள் துவங்கபட்டன.  அல்-உம்மா, Muslim Defence Force, மனித நீதிப் பாசறை, தேசிய பாதுகாப்புப் பேரவை, ட்ரூத் வாய்ஸ், அகில இந்திய ஜிகாத் கமிட்டி, Deender Anjuman, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், சுன்னத் ஜமாத் பேரவை, சுன்னத் ஜமாத் இளைஞர் பேரவை, சிமி போன்ற இயக்கங்கள் துவங்கின.  1990ம் ஆண்டின் மத்தியில் இந்துக்களை தாக்குவதற்காகவே துவக்கப்பட்ட இயக்கம் அல்-உம்மா வாகும்.  துமிழகத்தில் பல் வேறு பயங்கரவாத இஸ்லாமிய இயக்கங்கள் இருந்தாலும் அவைகளில் அல்-உம்மா மிகவும் முக்கியமான இயக்கமாகும்.  1993ல் உருவாக்கப்பட்ட அல்-உம்மா இயக்கத்தில் முஸ்லீம் வியாபாரிகளின் நிதி உதவியுடன் தனியார் படை ஒன்றையும் அமைத்திருந்தார்கள்.  அமைப்பைத் துவக்கும் போது இஸ்லாமியர்களின் நலனை காப்பதற்காக துவக்கப்பட்டதாகக் கூறினாலும், நாளடைவில் இந்துக்களைத் தாக்குவதற்காக துவக்கப்பட்டாக மாற்றினார்கள். 

இவர்களின் திட்டத்தின் படி 1984ம் ஆண்டு கோவையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு பின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடந்த கவவரத்தில் திரு ஜனா. கிருஷ்ணமூர்த்தி, திரு. டி.ஆர். கோபால், திரு. நாராணராவ், திரு திருகோவிலுர் சுந்தரம் ஆகியோர் மிக கொடுரமான முறையில் தாக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து 1987ல் இந்து முன்னணியின் திரு இராம. கோபாலன் அவர்கள் மதுரை ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டார். அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் இந்த கொடுரமான செயலை செய்தவர்கள். இதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டாலும், மாநிலக் காவல் துறையினரால் நிரூபிக்க இயலாத காரணத்தில் பாட்ஷா உட்பட பலர் விடுவிக்கப்பட்டார்கள்.  1987ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்குப் பின் அல் உம்மா இயக்கத்தினர் இந்து இயக்கங்களின் தலைவர்களைத் தாக்குவதற்காகவே Islamic Youth Association எனும் புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.  இந்த அமைப்பினரின் பணியே முஸ்லீம்களை கடுமையாக யாராவது தாக்கி பேசினால் அவர்களைத் தாக்குவது.  இந்த சிந்தனையினால்தான் 30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவரையும், 5.9.1991ல் அதே கோவையில் வீர சிவா என்பவரையும் இந்த இயக்கத்தினர் கொலை செய்தார்கள்.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதிக்குப் பின் தமிழகத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களின் உணர்வுகளைத் தூண்டித் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமைப்பு அல் உம்மா மட்டுமே. 

அயோத்தியில் நடந்த சம்பவங்களைப் புகைப்படங்களாக எடுத்து அனைத்து இஸ்லாமியர்கள் மத்தியில் காண்பித்து அவர்களிடம் இஸ்லாமியர்களைக் காக்க அதிக நிதி உதவி தேவைப்படுவதாக எடுத்து கூறும் காரியத்தில் ஈடுபட்டார்கள்.  1993ம் ஆண்டு அயோத்தி சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கோவையில் பெரும் கலவரத்தை உருவாக்க அங்கே சாலை மறியல்களும் கொள்ளையடித்தலும் நடைபெற்றன.

1993ம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ந் தேதி சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர்கள் மாண்டார்கள்.  இந்த நிகழ்வுக்குப் பின் தமிழகம் முழுவதும் அல் உம்மா இயக்கத்தினரின் செயல்பாடுகள் வெகுவாக நிகழ துவங்கின.

1993ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியாக அல் உம்மா வின் பாட்ஷா உட்பட 15 பேர்கள் 1980ம் ஆண்டு தேசீய பாதுகாப்பு சட்டப்படியும், 1987ல் கொண்டு வந்த தடா சட்டத்தின் படியும் கைது செய்யப்பட்டார்கள். 

1996ல் நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதின் காரணமாக 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் எவ்விதக் காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட பாட்ஷா உட்பட 15 பேர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்.  விடுதலைக்குப் பின் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்கள் தங்குதடையின்றி அதிக அளவில் நடைபெற்றன.  கோவை காவல் துறையினர் கோட்டைமேடு பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்த போது அங்கு பல வீடுகளில் கையெறி குண்டுகள், ஐல்லட்டின் குச்சிகள்,  நாட்டு வெடி குண்டுகள் அதிக அளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 1995ம் ஆண்டு இஸ்லாமிக் டிப்பன்ஸ் போர்ஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் சினிமா பட இயக்குநர் திரு மணிரத்தினம் வீட்டின் மீது வெடி குண்டு வீசினார்கள்.  1996ல் சென்னையில் தொடர்ச்சியாகப் பல உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தன.  மேலப்பாளையத்தில் இந்து முன்னணியின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.  அயோத்தியில் கும்மட்டம் இடிக்கப்பட்ட தினத்தன்று 5ம் ஆண்டு நினைவாக திருச்சியில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. ஈரோட்டில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. திருச்சூரில் ஆலப்புலா எக்ஸ்பிரஸ் வண்டியிலும் குண்டு வெடித்தது.  இந்த மூன்று சம்பவங்களிலும் பலர்  கொல்லப்பட்டார்கள்.

இந்த மூன்று சம்பவங்களையும் நடத்தியவர்கள் கேரளத்தில் உள்ள ஐ.டி.எப் என்கிற பயங்கரவாத இயக்கமும், தமிழகத்தில் உள்ள அகில இந்திய ஜிகாத் கமிட்டியும் ஆகும்.

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் கோவை குண்டு வெடிப்பு நிகழ்வு ஆகும். 98ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காகக் கோவையில் பிரச்சாரம் செய்ய வருகை தந்த திரு. அத்வானி அவர்களைக்  கொல்ல நடந்த சதி திட்டம். இந்தத் திட்டத்திற்கு அல் உம்மா இயக்கத்தினர் வைத்த பெயா; ‘Operation All-hu-Akbar என்பதாகும்.  அன்றைய தினம் விமானம் கால தாமதமாக கோவை வந்ததால் அத்வானி அவர்கள் உயிர் தப்பினார். ஆனால் 18இடங்களில் நடந்த குண்டு வெடிப்பின் காரணமாக 77 பேர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள்.  இந்தத்  திட்டத்தை நிறைவேற்ற அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வெடி மருந்துகள் கொணடு வரப்பட்டன.  இந்தச் சம்பவம் கொடுத்த தெம்பின் காரணமாக தொடர்ச்சியாக மதுரையில் இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு ராஜகோபலன் விடியற்காலையில் கொல்லப்பட்டார். திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொல்லபட்டார். 2000ம் ஆண்டு ஜனவாரி 31ந் தேதி சென்னையில் இந்த இரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் 10 பேரை காவல் துறையினர் கைது செய்தார்கள். இந்தக் கைது சம்பவத்தை கண்டித்து சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் குண்டு வெடித்தது.
    
நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் இந்தப் பயங்கரவாதிகள் மீது பல வழக்குகள் இருந்தாலும் சில நேரங்களில் பாரத பிரதம மந்தியே அவர்களிடம் பேச்சு வார்த்தைகள் நடத்திய சம்பவங்களும் உண்டு. 

JKLFன் பொறுப்பாளார் முகமுது யாசின் மாலிக் என்பவனுடன் பாரத பிரதம மந்திரியும் தேசீயப்  பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் பல முறை ரகசிய பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்கள். 

இவர்களுடன் யாசின் மாலிக் ஜனவரி மாதம் 2006ல் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன் அதாவது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ந் தேதி லஷ்கர்-இ-தொய்பாவின் சகோதர அமைப்பான Jameet-ud-Dawa வின் தலைமை பொறுப்பாளார் Hatiz Mohammad Saeed  என்பவருடன் கலந்து பேசி விட்டுத்தான் பாரத பிரதம மந்திரியை சந்திக்க முன்வந்தார்.  ஏற்கனவே யாசின் மாலிக் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. 

Awantipora விமான படைத்தளத்தின் பொறுப்பாளர்கள் நான்கு பேரைக் கொன்ற வழக்கிலும் குற்றவாளியாக உள்ள யாசின் மாலிக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்தது போல் அமைந்தது.

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-02


முந்தைய பகுதி

தொடர்ச்சி…

islam_simiபாரத நாட்டில் பயங்கரவாதச் செயல்பாடுகளை ஊக்குவிக்கின்ற அமைப்பாக பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யாக இருந்தாலும், கொடுக்கின்ற திட்டங்களைச் சரியாக செயல்படுத்துவது இந்தியாவில் தோன்றிய சிமி (SIMI) இயக்கமாகும்.  இந்திய அரசின் உளவுத் துறை அறிக்கையின் படி பல்வேறு காலகட்டங்களில் வெளிநாட்டு அமைப்பினருக்கு, குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பாவினருக்கு சகலவிதமான பயங்கரவாத தாக்குதல்களுக்கும் உதவிகளைச் செய்து கொடுப்பது சிமி அமைப்பாகும்.

சிமி (Students Islamic Movement of India)

1977ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ந் தேதி  உத்திரபிரதேச மாநிலத்தில் அலிகார் பல்கலைக் கழகப் பேராசிரியர் முகம்மது அகமத்துல்லாக் சித்திக் என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இவர் Western Illinois University Macombல் இதழியல் மற்றும் பொதுத் தொடர்பு பிரிவின் பேராசிரியராக பணிபுரிந்தவர்.  ஜமாத்-இ-இஸ்லாம்-இந்து எனும் அமைப்பின் தலைவராகவும் இருந்தவர். சிமி இயக்கத்தை துவக்கி அதன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி தெளிவாக அறிவித்துள்ளார். மனித வாழ்க்கையைக் குரானின் போதனைகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும், இஸ்லாத்தை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும். இதற்காக ஜிகாத்தை துவக்க வேண்டும் என்பவை இவ்வமைப்பின் அடிப்படையான கோட்பாடுகளாகும்.

islam_simi_intro“இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின்  மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை.  ஓவ்வொரு இந்தியனையும் கட்டாயப் படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம்.  தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லீமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்” என்பது சிமி இயக்கத்தின் செயல்திட்டமாகும்.

சிமி இயக்கத்தில் இருப்பவர்கள், இஸ்லாம் அல்லாத மற்ற அனைத்துக் கருத்துக்களுக்கும், முக்கியமாக  இந்து மதங்களுக்கும், மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் சிந்தனைக்கும் எதிரானவர்கள். SIMI is widely belived  to be against Hinduism, western beliefs and ideals, as well as othe ‘anti-islamic cultures, ‘   has declared Jihad against India, the aim of which is to establish Dar-ul-Islam (Land of Islam) by either forcefully converting everyone to Islam or by violence.  As the organization does not belive in a nation-state, it does not believe in the Indian Constitution or the secular order.  SIMI also regards idol worship as a sin and considers it to be a holy duty to terminate idol worship.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களின்  மூலமாக பாரத தேசத்தை  இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்குப் படித்து வேலையில்லாத இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்ய சிமி இயக்கத்தில் சேர்க்க அதிகக் கவனத்தை  அவர்கள் செலுத்தினார்கள்.  1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் பிரச்சினைக்குரிய கும்மட்டம் இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் இவர்கள் ஜிகாத் பாதைக்கு மாறியதாகவும் பலர் கூறுகின்றார்கள்.

peaceful_islamists2001ம் ஆண்டிலிருந்து பாரத தேசத்தில் நடந்த அனைத்துத் தீவிரவாத தாக்குதல்களிலும் சிமி இயக்கத்தின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. மும்பை, பெங்களுர், ஜதராபாத் மற்றும் வெளிநாட்டிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும்  கோவா போன்ற இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் சிமி இயக்கத்தின் தொடர்பு மகத்தானதாகும்.

27.7.2006ந் தேதி புது டெல்லியில் Unlawful Activities (Prevention ) Tribunal இவ்வமைப்பு குறித்து விவாதம் நடந்தது. முன்பு தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் மீது மீண்டும் தடை விதிக்க வேண்டுமா?”  என்கிற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்த பதில்  “ வெளிப்படையாகத் தடை விதிக்கப்பட்ட பின் சிமி இயக்கத்தினர் எவ்விதத் தீவிரவாதச் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை.  ஆனால் நாட்டில் நடந்த அனைத்துக் குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும், வகுப்புக் கலவரங்களிலும் சிமி இயக்கத்தினர் அதிக அளவில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் உள்ளன”  எனத் தெரிவித்தனர்.

2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று புது டெல்லியில் மூன்று இடங்களில்  நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு Islamic Inquilabi Mahaz என்கிற Islamic Revolutionary Front அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.  இந்த அமைப்பிற்கும் சிமி இயக்கத்தினருக்கும் அதிக தொடர்பு இருப்பதாகவும், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன் பல முறை இரண்டு அமைப்பினரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்க்கா மற்றும் ஹூப்ளியிலும் சந்தித்துள்ளனர் என்று விசாரணையின் போது மத்திய உளவுத் துறையினர் தெரிவித்தார்கள்.

islam_services2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி சிமி இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்ட பின் கூட பாரத தேசத்தில் தங்களது பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்கு Tahreek Ihya-e-Ummat மற்றும் Movement for the Revival of the Ummah எனும் பெயர்களில் தங்களது செயல்பாடுகளைத் தொடர்ந்து செவ்வனே செய்து கொண்டு இருந்தார்கள்.

2003ம் ஆண்டு நடந்த பல தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது லஷ்கர்-இ-தொய்பாவின் கூட்டாளியாகவோ தீவிரவாத தாக்குதல்களை இவ்வமைப்பு நடத்தியுள்ளது. நடந்த அனைத்து தாக்குதல்களிலும் சிமி இயக்கத்தினரின் முழு உதவியுடன் லஷ்கர்-இ-தொய்பாவினர் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளர்கள்.

பாக்கிஸ்தான் வகுத்து கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் பாரத தேசத்தில் உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளை பயன் படுத்திக் கொண்டவர்கள் சிமி இயக்தினர்.   மத்திய பிரதேசம்  இந்தூரிலிருந்து 35 கிமீ தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் ஜிகாதிகளுக்கு வெடிமருந்து தயாரிப்பது, அவற்றை எப்படி கையாளுவது என்கிற பயிற்சிகள் கொடுத்தனர்.  இந்தப் பயிற்சிக்கு ஜார்கண்ட் , கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் உள்ள சிமி இயக்கத்தினர் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.

1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந் தேதி அயோத்தியில் நடந்த நிகழ்வுக்குப் பின் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் சிமி இயக்கத்தினர் அதிக அளவில் மகாராஷ்ட்ரம், அஸ்ஸாம், பீகார், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள்.  சிமி இயக்கத்தினருக்கு பங்களா தேஷ் நாட்டின் தீவிரவாத இயக்கமான Harkat-ul-Jehad-al-Islamiயுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்த இயக்கத்தின் தொடர்பு மட்டுமில்லாமல் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடனும் பாக்கிஸ்தானின் தீவிரவாத இயக்கமான் லஷ்கர்-இ-தொய்பாவுடனும் சிமி இயக்கத்தினருக்கு தொடர்ப்பு உண்டு.  Harlat-ul-Jehad-al-Islamiக்கு ஆட்கள் பிடிக்க கான்பூர் லக்னோ, அம்பேத்கார் நகர், அலிகார், அலகாபாத், ஆஸிம்காட், சோனலி, பெரேஷ்ஸாபாத் போன்ற நகரங்களில் உள்ள சிமி இயக்கத்தினர் அவர்களுக்கு  முழு உதவி புரிந்தார்கள்.

துவக்க காலங்களில் சிமி இயக்கச் செயல்பாடுகளில் Maududiயின் சொல்வாக்கும் செல்வாக்கும் அடிமட்டம் வரையில் ஊடுருவி இருந்தன.  இதன் காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமிய இயக்கத்தின் ஒரு பகுதி பாரத தேசத்தில் துவங்கப்பட்டது. அதற்குப் பெயர் ஜமாத்-இ-இஸ்லாமி-இந்த் என்பதாகும்.

simi_khilafatகாலப்போக்கில் சிமி இயக்கத்தினர் Muslim Student Association, Students Islamic Union, Students Islamic Organization, Muslim Youth Association போன்ற அமைப்புக்களுடன் தங்களை இரண்டறக் கலந்து அவர்களைத் தங்களின்  செயல்பாடுகளுக்குத் துணையாக வைத்துக்கொணடார்கள். இந்தக் கூட்டின் காரணமாக அமெரிக்காவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின், அமெரிக்காவிற்கு எதிராகவும் ஒசமா பின்லேடனை ஆதரித்தும்  மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.

சிமி இயக்கத்தினருக்கு ரியாத்தில் உள்ள World Assembly of Muslim Youth (WAMY) எனும் அமைப்பிலிருந்தும், குவைத்தில் தலைமையகமாகச் செயல்படும் International Islamic Federation of Students Organisationலிருந்தும் பெருமளவு நிதி கிடைக்கிறது.  சிக்காகோவில் அமைக்கப்பட்ட Consulation Committee of Indian Muslims எனும் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிமி இயக்கத்தினருக்குத் தார்மீக ஆதரவும் பொருளுதவியும் அதிக அளவில் செய்கின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் பெறப்படும் நிதியை வைத்துக் கொண்டு  குஜராத் கேரளா உத்திர பிரதேசம் பீகார் ஜார்கண்ட் கர்நாடக போன்ற மாநிலங்களில் மட்டும் 25,000க்கு அதிகமான இஸ்லாமிய இளைஞர்கள சிமி இயகத்தில் சேர்ந்துள்ளனர்.
islam_tamilnadu1இந்தியாவில் உள்ள பல இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் சிமி இயக்கத்தினர் வைத்துள்ளார்கள். கேரளத்தைத்  தலைமையிடமாக அமைத்து செயல்படும் National Democratic Front , Islamic Youth Centre என்கிற இரு அமைப்புகளும் , தமிழகத்தில் உள்ள தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் எனும் பெயரில்  உள்ள இந்த அமைப்பும் சிமி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1993ம் ஆண்டு சீக்கிய தீவிரவாதிகளைத்  தொடர்ச்சியாகக் கைது செய்த போது , சீக்கிய தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் ஒருங்கிணைக்கும் பணியினைச் செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். இப் பணியினைச் செய்ய சிமி இயக்கத்தினருக்கு ஆதரவாகத் துணை நின்றவர்கள்  பாக்கிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஜமாத்-இ-இஸ்லாமி என்கிற அமைப்பினர்.

சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பினை விரிவுபடுத்த உத்திரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் இஸ்லாமிய மாணவர்களை அதிக அளவில் சேர்த்து மிகப் பெரிய வலிமையான இயக்கமாக மாற்றினார்கள்.  மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அவுரங்காபாத், மலோகான், ஜலாகான், தானே போன்ற நகரங்களில் அதிக  ஆட்களை சிமி இயக்கத்தில் சேர்த்தனர். சித்தாந்த ரீதியாக இவர்கள் ஆசிய கண்டத்தில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்த Sha Waliullah, Sayyid Ahmad,  Haji Shariat Allah , Maulana   Maududi ஆகியவர்களின் போதனையில் சிமி இயக்கத்தினர் செயல்படுகிறார்கள். பல சந்தர்பங்களில் சிமி இயக்கத்தினர் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை துவக்கிய Maulana Maududi வழிகாட்டுதலில் தங்களின் பணிகளை நிர்ணயிக்கிறார்கள்.

islam_terroristமுஸ்லீம் மக்கட் தொகை அதிகம் கொண்ட கான்பூர், அலிகார், முராதாபாத், ஷரன்பூர், லக்னே, ஆஸம்காட் ஆகிய நகரங்களில் வாழும் இஸ்லாமியர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு நிலைப் பாட்டை விளக்கி  தங்களது இயக்கமான சிமியில் இணையச்  செய்வதற்கு  அதிக முயற்சிகள்  மேற்கொள்ளப்படுகின்றன.  உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தலைமறைவு இயக்கம் நடத்தும் பயங்கரவாதிகளுடன் சிமி இயக்கத்தினர் தங்களது தொடர்புகளை அதிக அளவில் ஏற்படுத்திக் கொண்டார்கள்.  உத்திர பிரதேசத்தில் 9 மாவட்டங்களில் சிமி இயக்கத்தினர் தேச விரோத நடவடிக்கைகளில்  அதிக அளவில் ஈடுபடுவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அவ்விதமாக இசுலாமிய மதப் பணிகள் Lucknow, Kanpur, Aligarh, Agra, Faizabad, Bahraich, Barabanki, Lakhimpur Kheri, Azamgarh ஆகிய இடங்களில் நடக்கின்றன.  கேரளாவில் இயங்கும் 12 முன்னணி நிறுவனங்களும் அதில் அடக்கம். திருவனந்தபுரத்தில் இரண்டும் கொச்சியில் ஒன்றும் மலப்புரம் மாவட்டத்தில் Kondotty ஆகிய இடங்களிலும் சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் அதிக அளவில் உள்ளன.

madanee-sufi-bombசிமி இயக்கத்தில் பெண்கள் பிரிவு கேரளத்தில் மட்டும்  உள்ளது. கேரளத்தில் உள்ள சிமி இயக்கத்தினருக்கு பாக்கிஸ்தான் மற்றும் குவைத்திலிருந்து தேவைக்கும்  அதிகமாகவே நிதி வருகிறது.  பாரத தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு உதவ Covert Action Division என்கிற பிரிவை 1950ல் ஐ.எஸ்.ஐ துவக்கியதை இன்று சிமி இயக்கத்தினர் முழுமையாக பயன்படுத்தி வருகிறார்கள்.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அவுரங்காபாத், மலோகான், ஜலகான், தானே, ஆகிய நகரங்கள் சிமி இயக்கத்தின் வலிமையான பகுதிகளாகும்.   ஜலகான், நாசிக், தானே, சோலப்பூர், கோலாப்பூர், நான்டாட், அவுரங்காபாத் , பூனே, போன்ற மாவட்டங்களில் மதராசாக்கள் சிமி இயக்கத்தின் பணிகளை செய்கின்றன.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் மட்டும் 3000 மதராசாக்கள் இயங்குகின்றன. இதில் மும்பையில் மட்டும் 500 மதராசாக்கள் உள்ளன. 2001ம் வருடம் சிமி இயக்கத்தின் மீது தடைவிதிக்கப்படுவதற்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் மீது 33 வழக்குகள் பதிவாயிருந்தன.  இந்தூர், உஜ்ஜினி, போபால் போன்ற நகரங்களில் அதிக அளவில் சிமி இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.  சிமி இயக்கத்தின் தேசீயப் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி (Safdar Nagori) மீது மட்டும் 49 வழக்குகள் பதிவாயிருந்தன.  2001ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட பின் 180 சிமி இயக்கத்தினர் மகாராஷ்ட்ர மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Khandwa பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட 10 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சிமி இயக்கத்தின் மீது தடை விதித்த பின் மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற  மதராசாக்கள், முஸ்லீம் கிளப், முஸ்லீம் வாசகசாலைகள், முஸ்லீம் கலாச்சார மையங்கள் போன்றவற்றில் சிமி இயக்கத்தினர் அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள்.  2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24பர்கான மாவட்டத்தில் உள்ள Mograhat எனுமிடத்தில் Islamic Siksha  Shivirs என்கிற அமைப்பின் மூலமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.  இந்த பயிற்சி வகுப்பில் பயங்கரவாத செயல்கள் எவ்விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் எவ்வாறு ஊடுருவ வேண்டும் என்றும் பயிற்சிகள்  அளிக்கப்பட்டன.

lashkar_islamமேற்கு வங்க மாநிலத்தில் பல மாவட்டங்களிலும் பங்களா தேஷ்சில் சிட்டங்காங் பகுதியிலும் சிமி இயக்கத்தின் உள்ளுர் கூட்டங்கள் தொடாந்து நடைபெறுகின்றன.   Islamic Siksha  Shivirs இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் ஜமாலுதீன் சௌத்திரி என்பவர் ஏழு நபர்களை சிட்டகாங், டாக்கா மற்றும் Rangpur போன்ற நகரங்களில் இஸ்லாமிய கல்விக்கு சிமி இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களாக அனுப்பி வைத்தார்.  கல்வி என்ற பெயரில் மேற்படி இடங்களில் அவர்களுக்குப் பயங்கரவாத செயல்களுக்கு ஆயுதங்களை கையாளுவது திட்டங்கள் தீட்டுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் சிமி இயக்கத்தின் ஆதரவுடன் இந்திய தேசீய லீக் என்கிற பெயரில் இயக்கம் துவக்கப்பட்,டு அந்த இயக்கத்தின் சார்பாக 2004ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டார்கள்.  அவை  Jangipur,Murshidabad, Diamond Harbour, Basirhat, Jadarpur, Kolkata North east ஆகிய தொகுதிகள் ஆகும்.

சிமி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் மேற்கு வங்கத்தின் முக்கிய பொறுப்பாளருமான Hasan Saidullah Ashraji என்பவர் Basirhat      தொகுதியில் போட்டியிட்டார்.  மேற்கு வங்க மாநிலத்தில் சிமி இயக்கத்தினரின் வளர்ச்சி அந்த மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டங்களான  மால்டா,மூர்ஸிதாபாத், வடக்கு தெற்கு Dinajpur மற்றும் கல்கத்தா போன்ற பகுதிகளில் தங்களின் செயல்பாடுகளை  அதிக அளவில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சிமி இயக்கத்தினர் ஜனநாயம் மதச்சார்பின்மை தேசீயம் போன்ற கொள்கைகளில் எவ்வித நம்பிக்கையும்  மதிப்பும் வைக்கக்கூடாது  என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.   இதற்காக 400 முழு நேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  இதில் 20000க்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

சிமியில் 30வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். இவர்களுக்கு எனத் தனியாக பிரசுரங்கள் உள்ளன. அவை மளையாளத்தில் விவேகம் என்கிற இதழ், தமிழில் செய்தி மடல், குஜராத்தியில் Iqraa என்றும் வங்கத்தில் Rupantar என்றும் இந்தியில் Tahreek என்றும் உருதுவில் Al Harkah மற்றும் Shaheen Times என்ற பெயரில் இதழ்கள் வெளிவருகின்றன.
இந்திய துணை கண்டத்திற்கு அப்பாலும் சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். இதில் சவுதி அரேபியாவும் அதை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகளிலும் சிமி க்கு அமைப்புகள் உள்ளன.  2003ல் சுமார் 350 இந்திய இஸ்லாமியர்கள் ஜோர்டான்,  லிபியா, சவுதி அரோபியா, ஓமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் International Islamic Front என்கிற அமைப்பின் மூலமாக ஈராக்கில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தேவைப்பட்டால் கையில் ஆயுதங்களை எடுப்பதுமாக மதப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

சிமி அமைப்பில் உள்ள மாணவர்களிடம் உள்ள உலக வரைபடத்தில் காஷ்மீர் பாக்கிஸ்தானில் இருப்பது போல் அச்சடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலமே இந்தியாவில் இல்லாதது போல் அச்சடிக்கப்பட்ட படத்தை அவர்கள் மாணவர்களிடம் விநியோகித்து வந்தனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை சி.பி.சி.ஜ.டி. போலீசார் கைது செய்தார்கள்.  தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட அந்த நபரும் சிமி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது. ஆந்திராவில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அதிக அளவில் படிக்கும் பள்ளிகளில் உள்ள இந்திய வரைபடத்தில காஷ்மீர் மாநிலம் தனி நாடாக இருப்பது போல் அச்சடிக்கபட்டு வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னையில் 2002ம் ஆண்டு மூன்று முறை தாவூத் இப்ரகீம் ஆட்கள் பிடிப்பட்டுள்ளனர்.  அவர்களைப் பிடித்து மும்பை போலீஸில் ஒப்படைப்பதைத் தவிர சென்னை போலீஸார் வேறு எதுவும் செய்யவில்லை. அவர்கள் எதற்காக வந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்ததது யார்,   சென்னையில் அவர்கள் யார் யாரைச் சந்தித்தார்கள் என்பதைப் பற்றி சென்னை காவல் துறையினா தங்களது விசாரனையை நடத்தவில்லை என்பவை  கேள்வி குறியானது.

mumbai_blast_mahim_dead_body_200607241993ல் ரயிலில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட பலர் கூறிய தகவல்கள்: 1989-90ல் காஷ்மீரில் சென்டர் எங்களுக்கு வெடிகுண்டுகள் குறித்துப் பயிற்சி அளித்தது.  எங்களுக்குப் பயிற்சி அளித்தவரின்  பெயர் சலாவுதீன். இவர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்.  1992ல் இந்தியா வந்து எங்களை எல்லாம் சந்தித்து பயிற்சியெல்லாம் ஞாபகம் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுப் போனார் என்றனர்.  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிமி இயக்கத்தினர் நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதும் மட்டுமில்லாமல், அவர்களின் பயங்கரவாத தாக்குதலுக்குத் தேவையான ஆலோசனைகளும் உதவிகளும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

1993ம் வருடம் மார்சு மாதம் 12ந் தேதி மும்பையில் 13 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு நடந்தன.  இச் சம்பவத்தில் 257 பேர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படு காயம் அடைந்தார்கள்.  பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து. இந்த வெடிமருந்து முதன் முதலில் மும்பை குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்டது.  இவ்வளவு மோசமான குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தியவன் மும்பை உலகின் தாதா இப்ரகீம் தாவுத் ஆவான்.

1993ம் வருடம் ஜனவரி மாதம் 29ந் தேதி முதல் பிப்ரவரி 2ந் தேதிக்குள் இந்த சம்பவத்திற்குரிய வெடிப் பொருட்கள் கொண்டு வருவதற்கு கடற்கரை பகுதியான ஷெகாடியில் உள்ள காவல்துறையினரைச் சரிகட்டினார்கள். இதற்காக அவர்களுக்குப் பல லட்சம் ரூபாய்கள் லஞ்சமாக வழங்கப்பட்டன.  அதிகாரிகளைச் சரிகட்டியபின் 1993ம்வருடம் பிப்ரவரி மாதம் 3ந் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் உள்ள பாக்கிஸ்தானுக்குச் சொந்தமான கப்பலிருந்து வேறு கப்பலுக்கு 1500 கிலோ. ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, ஏ.கே.56 ரக துப்பாக்கிகள், மற்றும் கையெறி குண்டுகள் மாற்றப்பட்டன.  ஏற்கனவே, இந்த வகையான குண்டுகளை கையாளுவது எப்படி என்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.  இந்த பயிற்சிக்கு இரண்டு குழுக்கள் பாக்கிஸ்தான் வழியாக துபாய்க்கு 19 பேர்கள் அனுப்பபட்டார்கள். இவர்கள் துபாயில் தங்களது பயிற்சிகளை முடித்துக் கொண்டு 1993ம் வருடம் பிப்ரவரி மாதம் 4ந் தேதி மும்பைக்கு வந்தார்கள்.

cctv_tender_to_monitor_jihadsமும்பைக்கு வெடிபொருள் வந்தது 1993ம் வருடம் என்றால் தவறான கருத்தாகும். ஏற்கனவே 1944ம் வருடம் ஏப்ரல் மாதம் 14ந் தேதி கப்பல் நிறைய வெடிகுண்டுகள் வந்தன. இந்த வருடத்தை பம்பாய் மக்கள் எளிதாக மறந்து விட தயாராக இல்லை.

வெடிபொருட்களை ஏற்றுவதற்கு போர்ட் ஸ்டிகினி எனும் கப்பல் தயார் நிலையில் இருந்தது.  வெடிமருந்தை இறக்குவதற்கு முன்பாகவே அருகில் இருந்த ஸ்டிகினி எனும் கப்பல் எரியத் தொடங்கியது.  சிறிது நேரத்தில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. மாற்று கப்பலுக்கு இறக்க வேண்டிய 1400 டன் வெடிமருந்துகள் வெடித்தன. 800க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். 1944ம் ஆண்டு சம்பவத்திற்குப் பின் 1993ம் வருடம் மார்சு மாதம் 12ந் தேதி நடந்த சம்பவம் தான் மிகப் பெரிய நாசகார சம்பவமாகும்.

1993ம் வருடம் மும்பையில் நடந்த சம்பவத்திற்கு முழு முதற் காரணம் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்பது விசாணையில் தெரியவந்தது.   பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருக்கும்  Wah Cantt என்கிற வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனம்தான் இந்த வெடிபொருட்களைத் தயாரித்தது என்பது பின்னர் தெரியவந்தது.  அல்கூசைனியில் டைகர் மேமனின் வீட்டில் விசாரணை நடத்திய போது   Wah Nabel Industries, Wah Cantt. என்று அச்சிடப்பட்டிருந்த  பெட்டிகள் கிடைத்தன.

லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டு இந்தியாவில் நடத்திய தாக்குதல்கள், 1.10.2001ந் தேதி காஷ்மீர் சட்டமன்ற வளாகத்தில் நடத்திய தாக்குதல், சட்டமன்றத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து காரில் வைத்திருந்து வெடிகுண்டு வெடித்து 38 பேர்கள் கொல்லப்பட்டது, 13.12.2001ந் தேதி பாராளுமன்ற கட்டிடம் தாக்குதல் சம்பவம், இந்த சம்பவத்தில் ஜந்து தீவிரவாதிகளும் ஏழு பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டது இவை அனைத்திலும் சிமியின் பங்கு தலைமைத்துவம் வாய்ந்தது.  பாராளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட ஜந்து தீவிரவாதிகளும் பாக்கிஸ்தானைச் சார்ந்தவர்கள்.

aligarh_islam22.1.2002ந் தேதி கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் நடத்திய தாக்குதலில் நான்கு காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள். இருபத்தி ஒன்று காவலர்கள் படு காயமடைந்தவர்கள். அலிகார் பல்கலைக்  கழகத்தில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள்  மத்தியில் சிமி இயக்கத்தின் ஆதரவு அதிக அளவில் உள்ளது என்பது  உலகறிந்த உண்மையாகும்.

டாட்டா கன்சல்டனசி நிறுவனம் தனக்கான ஆள் எடுக்கும் விளம்பரத்தில் அலிகார் பல்கலை கழக மாணவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.

(தொடரும்)

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 1

முன்னுரை:

“All muslims are not terrorists. But, unfortunately most of the terrorists are muslims.”

என்ற வாக்கியம் பிரசித்தமானது.

george_w_bush2001ல் அமேரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அன்றைய அதிபர் புஷ் அவர்கள் சில முஸ்லீம் தலைவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் அமேரிக்காவின் எதிரிகள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் எனவும் எல்லா முஸ்லீம்களும் இல்லை என்றும் தெளிவு படுத்தினார். “Islam is a religion of Peace” என்றும் கூறினார். அங்கிருந்த முஸ்லீம் தலைவர் ஒருவர் தீவிரவாதிகள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டதால்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அத்தாக்குதலை அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் கூறினார்.

2008 நவம்பரில் இந்தியாவில் மும்பாய் நகரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பிறகும் இந்திய முஸ்லீம் தலைவர்கள் கிட்டத்தட்ட இதே தொனியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உலகில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கு பிறகும் முஸ்லீம் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான முஸ்லீம் மதகுருமார்கள் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது.

120 கோடி மக்கள் அனுசரிக்கும் ஒரு மதம் மிகவும் பழமையான கொள்கைகளுடனும், சீர்திருத்தங்களை அனுமதிக்காமலும் அனுசரிக்கப் படுவதால் உலகெங்கிலும் மத சச்சரவுகள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது.

இதை ஆராயும், முஸ்லீம்கள் அல்லாத பலரும் சீர்திருத்தங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.

நான் இதிலிருந்து வேறுபட்டு முஸ்லீம்கள் மட்டுமே தங்களுக்குள்ளேயே இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். மேலும் மிதவாத முஸ்லீம்களால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும் என்றும் இச்சீர்திருத்தங்களை இப்பொழுதே அவர்கள் ஆரம்பிக்கா விட்டால் சமூகங்கள் உச்சகட்ட அழிவுக்கு செல்லும் என்றும் நம்புகிறேன்.

அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பகுதிக்கு வெகு அருகாமையில் மசூதி ஒன்றை கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அமேரிக்கர்களின் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

USREPORT-US-USA-NEWYORK-MOSQUE

முஸ்லீம்களின் பல பழமைவாத கொள்கைகளாலும், குறிப்பாக இந்த புதிய மசூதியின் கட்டமைப்பினாலும் ஏற்படும் பாதகங்கள் மற்றும் இக்கொள்கைகளை இன்றைய யதார்த்தத்தில் சீரமைக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் அலசுவது இக்கட்டுரையின் நோக்கம்.

முக்கிய குறிப்பு:

நான் முஸ்லீம்கள் அனைவரையும் எதிரிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ நினைக்கவில்லை. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மழையினால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பது நமக்கு தெரியும். பாதிக்கப்பட்ட ஒருவரையும் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஹிந்துவையும் பேட்டி எடுத்தால் இருவரும் ஒரே தொனியில் பேசுவார்கள். மொத்தத்தில் மக்களின் தேவை மிக எளிமையானது. நாகரீகமாக வாழ உரிமை, திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம், மனைவி மக்களுடன் வாழ சமூக அங்கீகாரம், தன்னை விட தன் குழந்தைகளை நல்ல நிலையில் வாழ வைக்க நினைக்கும் பெற்றோர், குற்ற செயல்களை செய்வோரின் மீது சட்டப்படி நடவடிக்கை, மனம் தொய்ந்து போகும்போது தேவைப்படும் இசை மற்றும் பிற கேளிக்கைகள், மன அமைதி பெற மதம் இவையெல்லாம் உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களின் தேவைகள். முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, தேவைகள் ஒன்றுதான்.

முஸ்லீம்களுக்கு உருவாகும் பிரச்சினைகள் இந்த தேவைகளை கருத்தில் கொள்ளாது வாழ்வதால் உருவாகுபவை. அவர்களின் சமூக பிரச்சினைகள் மற்ற மதத்தினரையும் பாதிப்பதால் என்னைப் போன்றவர்களும் பேச வேண்டிய நிலை.

பகுதி-I

இரட்டை கோபுர தாக்குதல் பகுதிக்கு அருகில் மசூதி-சர்ச்சை:ayaan-hirsi-ali

அமேரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில்  13 மாடி இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் மசூதி கட்டப்படப்போவது குறித்த சர்ச்சைகள் அமேரிக்காவில் சூடு பிடித்துள்ளது. இவற்றை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் பற்றிய வேறுபாடுகளை கொஞ்சம் பார்க்கலாம்.

புதிய மசூதியை எதிர்ப்பவர்கள்:

(1) அலி சீனா, வாஃபா சுல்தான், அயான் ஹிர்ஸி அலி போன்றவர்கள்:

இவர்கள் முஸ்லீம்களாக பிறந்து அவர்களின் நாடுகளில் (ஈரான், சோமாலியா போன்றவை) கொடுமை படுத்தப் பட்டவர்கள். மேற்கத்திய நாடுகளுக்கு வந்து குடியேறிய பின் தங்கள் நாட்டை மட்டுமல்லாது தங்களின் தாய் மதமாகிய இஸ்லாத்தின் மீதும் மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள். இணைய தளம் மூலமாகவும் மற்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் முஸ்லீம்களை இஸ்லாத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறுபவர்கள். இவர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் உள்ளார்கள். இஸ்லாத்தை முழுவதுமாக எதிர்ப்பதால் இவர்களுக்கு சாதாரண முஸ்லீம்களிடையே ஆதரவில்லை. இவர்கள் இந்த புதிய மசூதியை மட்டுமல்லாது அனைத்து இஸ்லாமிய விளக்கங்கள் மற்றும் குறியீடுகளை எதிர்ப்பவர்கள்.
zuhdi-jasser
(2) டாக்டர் ஜேஸ்ஸர் (Dr. Zuhdi Jasser) போன்றவர்கள்:

முஸ்லீம்களாகவே இருந்து கொண்டு தங்கள் மதப்புத்தகங்களின் விளக்கங்களை காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டு முஸ்லீம்கள் வாழ வேண்டும், வாழ முடியும் என்று வாதாடுபவர்கள். இவர்களை போன்றவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் முஸ்லீம் சமூகத்தில் உண்டு. ஆனாலும் மதகுருமார்களின் கருத்திலிருந்து வேறுபடுவதால் இவர்களுக்கும் சாதாரண முஸ்லீம்களிடம் பெரிய ஆதரவு இல்லை. 9/11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் அனுதாபத்திற்காகவும், மனிதர்களின் அடிப்படை உணர்திறனை முன்வைத்தும் (Sensitivity) இந்த புதிய மசூதி கட்டப்படக்கூடாது என்று கூறுபவர்கள்.

(3) கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்கள்:

நாம் ஊகிக்கிறபடியே இந்த புதிய மசூதி முஸ்லீம்களின் ஜிஹாத்தின் ஒருவகை என்று கூறுபவர்கள். பிரச்சினை மசூதி கட்டப்படுவதை குறித்து அல்ல. எந்த இடத்தில் கட்டப்படுகிறது என்பதுதான்-என்பது இவர்கள் வாதம். இதற்கு இவர்கள் வரலாற்றிலிருந்து சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். முஸ்லீம்கள் எந்த நாட்டை போரில் வென்றாலும் அந்த நாட்டின் முக்கிய கலாச்சார குறியீட்டை அழித்து அதன் மேல் மசூதி ஒன்றை கட்டியிருக்கிறார்கள். உதாரணமாக ஜெருசெலத்தில் அல்-அக்ஸா மசூதி, இந்தியாவில் முக்கிய கோயில்களை அழித்து அதன்மேல் மசூதிகள் கட்டியது போன்றவை. ஆகவே, இது வெறும் மசூதி அல்ல. இது ஒரு வெற்றி அறைகூவல் என்பது இவர்கள் வாதம்.
pameela-geller
இந்த மசூதிக்கான எதிர்ப்பு முதன்முதலில் ஒரு இணைய தள  Blogல் உருவானது. பமீளா கெல்லர் (Pameela Geller) என்பவர்தான் மே மாதத்தில் இந்த மசூதி கட்டப்பட்டால் அது மேற்கத்திய கலாச்சாரத்தின் அழிவுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என்று எழுதியவர். இந்த பெண்மணி ஆரம்பித்து வைத்த இந்த போராட்டம் அமேரிக்காவின் பல மட்டங்களில் வெடித்திருக்கிறது.

(4)அரசியல்வாதிகள்:

பெரும்பான்மையான குடியரசு கட்சி அரசியல்வாதிகளும், ஜனநாயக கட்சியிலேயே சிலரும் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை எதிர்க்கிறார்கள்.

புதிய மசூதியை ஆதரிப்பவர்கள்:

(1) பெரும்பாலான முஸ்லீம்கள்:

நாம் ஊகிக்கிறபடியே பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். இந்த கட்டிடத்தில் மசூதி மட்டுமல்லாது “மதங்களுக்கிடையேயான ஒற்றுமை” வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறுகிறார்கள்.

(2) அரசியல்வாதிகள்:

ஜனநாயக கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் இந்த புதிய மசூதி கட்டப்படுவதை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக அமேரிக்க அதிபர் ஒபாமா இதை ஆதரிக்கிறார். அவரின் ஆதரவு பேச்சு மேலும் பல ஆட்சேபனைகளை எழுப்பியது. அடுத்த நாளே தான் அந்த மசூதி கட்டப்பட முடியுமா/முடியாதா என்பதை பற்றித்தான் பேசியதாகவும் அந்த இடத்தில் கட்டப்படுவது சரியா/தவறா என்பதை பற்றி இல்லை என்றும் மறு விளக்கம் அளித்தார்.

(3) பொது ஜனத்திலேயே சிலர்:

முஸ்லீம் தீவிரவாதிகள் சிலரால் தாக்கப்பட்டதற்காக எல்லா முஸ்லீம்களின் மேலும் பழி போடுவது சரியல்ல என்றும் அமேரிக்க அரசியல் சட்டத்தின் அடிப்படையில் “ஒவ்வொரு மனிதனின் மத உரிமை”யின் அடிப்படையிலும் எந்த இடத்திலும் எந்த மதத்தினரும் தங்கள் வழிபாட்டு கட்டிடத்தை கட்டிக்கொள்ள உரிமை உண்டு என்றும் கூறுகிறார்கள்.

இந்த புதிய மசூதிக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களை பார்த்தோம். இங்கு இன்னுமொரு முக்கிய பிரச்சினையையும் கவனிக்க வேண்டும்.

பெயர் சர்ச்சை: (Cordoba Mosque)

cordoba-mosqueஇந்த புதிய மசூதிக்கு “கார்டோபா மசூதி” என்று நாமகரணம் செய்யப் பட்டுள்ளது. “கார்டோபா” என்பதன் பெயரின் வரலாற்றை பார்த்தாக வேண்டும். கார்டோபா என்னும் பழமையான நகரம் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. இங்கு கி.பி.600களில் ஒரு கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. ஆனால் கி.பி.700களில் முஸ்லீம் மன்னர்களால் ஸ்பெயினின் இந்த பகுதி பிடிக்கப் பட்டவுடன் இந்த சர்ச், மசூதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 1200களில் கிறிஸ்தவ அரசரால் இந்த பிராந்தியம் பிடிக்கப்பட்டவுடன் மீண்டும் சர்ச்சாக மாற்றப்பட்டது. இந்த பெயரின் முக்கியத்துவத்தை வாத பிரதிவாதங்களுடன் நோக்கலாம்.

புதிய மசூதியை ஆதரிப்பவர்களின் வாதம்:

ஸ்பெயினின் இந்த கார்டோபா பகுதி கி.பி. 700களில் முஸ்லீம் அரசர்களின் கைக்கு வந்தும் கூட, கிறிஸ்தவ மற்றும் யூதர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுடன் வாழ அனுமதி அளிக்க பட்டது. இன்றைய மதச்சார்பற்ற கொள்கைகளை அன்றே முஸ்லீம் மன்னர்கள் அந்த பிராந்தியத்தில் நடத்தி காட்டினார்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் கூறியாக வேண்டும். அமேரிக்க அதிபர் ஒபாமா எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதில் முஸ்லீம்கள் மதச்சார்பற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று புகழும்போது குறிப்பாக இந்த கார்டோபா பிராந்திய அரசாங்கத்தை சிலாகித்து பேசினார்.

கிறிஸ்தவ, யூத கடும்போக்காளர்களின் பிரதிவாதம்:

– மதச்சார்பற்ற அரசாங்கம் என்றால் ஏன் அங்கிருந்த சர்ச் அகற்றப்பட்டது?

ஒரு வெற்றி அறைகூவலுக்காகவும், மற்ற மதத்தினர் முஸ்லீம்களுக்கு அடங்கியவர்கள் என்று வெளிபடுத்துவதற்காகவும்தானே சர்ச்சின் இடத்தில் மசூதி கட்டப்பட்டது.

islamic_jihad1– மேலும் கி.பி.1200களில் முஸ்லீம் மன்னர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டவுடன் அந்த பிராந்தியத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவ மற்றும் யூதர்களை கொன்று குவித்து விட்டுத்தான் தோற்று ஓடினார்கள். தங்களுடைய அரசாங்கம் இருக்கும்வரை மதச்சார்பற்றவர்கள் போல் நடித்தவர்கள் தாங்கள் தோற்கும் நிலையில் மற்ற மதத்தினரை, அப்பாவிகளை கொன்று போட்டது எப்படி மதச்சார்பற்ற அரசாக வரலாற்றில் பார்க்கப்பட முடியும்?

மேற்கூறிய அனைத்தும் சரித்திரபூர்வமாக ஆவணப்படுத்த பட்டவை. மேலும் அதிபர் ஒபாமா பேசிய பேச்சை பற்றி பி.பி.சி வானொலியில் ஒரு ஆவணத்தொகுப்பை (Documentary) ஒலிபரப்பினார்கள். அதில் பேசிய வரலாற்று அறிஞர்கள் ஒபாமா ஸ்பெயினின் கார்டோபா இஸ்லாமிய அரசாங்கத்தை “மதச்சார்பற்ற அரசாங்கம்” என்று கூறியது தவறுதான் என்றார்கள்.

சரி, இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 70%க்கும் அதிகமானோர் இந்த புதிய மசூதி கட்டப்பட அனுமதிக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்.

இவ்வளவு பெரிய அளவில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் வெளிப்படுத்தும் இந்த புதிய மசூதிக்கான எதிர்ப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இந்நிலை தீடிரென்று ஏற்பட்டதில்லை. பல வருடங்களாக அமேரிக்காவில் தொடரும் உள்நாட்டு தீவிரவாதம் போன்ற காரணங்களால்தான் அமேரிக்கர்களின் இந்த மனநிலை மாற்றம். அமேரிக்காவில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையை அந்நாட்டு மக்களில் பலர் அடைந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது. குறிப்பாக முஸ்லீம்களை எதிர்க்கும் அரசியல்வாதிகளுக்கு அந்நாடுகளில் மக்கள் ஆதரவு அதிகரித்து இருப்பதையும் இங்கு நோக்கலாம்.

155889448மேலும் மேற்குலகில் குறிப்பாக அமேரிக்காவில் இஸ்லாத்தின் மீதான விமர்சனம் வரம்பை மீறி சென்றிருக்கிறது. பேச்சு சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் பரிபூர்ணமாக அமேரிக்கர்களுக்கு இருப்பதால் அதை தடுக்க வழியில்லை. ஏதோ ஒரிருவர் இணைய தளங்களில் எழுதுகிறார்கள் என்றால் அதை உதாசீனம் செய்து விடலாம். முஸ்லீம் அல்லாத அமேரிக்கர்களில் 18% பேர் அதிபர் ஒபாமா ஒரு முஸ்லீம் என்று நம்புகிறார்கள். அவர் அமேரிக்காவில் பிறக்கவில்லை என்றும் நம்புகிறார்கள்.

அதிபர் ஒபாமாவின் கொள்கைகளைப்பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றாலும், பொய்களை பெரும்பான்மையான அமேரிக்கர்கள் நம்புவது விவரம் அறிந்தவர்களிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு இன்னொரு விஷயத்தை கூறியாக வேண்டும். கிறிஸ்தவ மற்றும் யூத கடும்போக்காளர்கள் எவ்வாறு வரம்பு மீறி இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறார்களோ அதைப்போன்றே முஸ்லீம் கடும்போக்காளர்களும் அமேரிக்கர்களுக்கு எதிராகவும், ஜிஹாத்திற்கு ஆதரவாகவும் வரம்பு மீறி எழுதுகிறார்கள்.

உணர்ச்சி கொந்தளிப்புடன் இருக்கும் அமேரிக்க சமூகத்தின் இன்றைய நிலையில் அறிவுபூர்வமாக பிரச்சினையை கையாள்வது கடினம்தான்.

எனினும், இந்த மசூதி சர்ச்சையை விடுத்து, இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களினால் மற்ற மதத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்களை விரிவாக பார்க்கலாம்.

(தொடரும்)