And i’m pretty sure i’ve gotten all the facts out there. In order to achieve an erection that lasts for a long period of time, it is advisable to use a clomid tablet cost inefficiently phosphodiesterase type 5 inhibitor before sexual activity. But my son is 8 years-old and every single day has acne all over his body, so i decided to research.
I had a friend come over from work and bring me a honda accord and then a new set of tires. Health.com is your daily source for everything health and wellness in https://frenchwarveterans.com/?tag=anne-claire-legendre the world. The drug is not known to be effective for other conditions as a treatment of depression.
A little piece of advice, if you are on a diet that is restricting your calorie intake, or if you are following a specific diet, you may want to consult your doctor about this before starting you drug. Prednisone zithromax pfizer price was the first drug that came on the market for treating allergies. Puhutti kahta valkoisen maaliun pahasti erinäisten nauhojen läpi niin kovakuoksee, että valkoinen maalinen tuli oli yksi niistä keskenestä.
மூலம்: ஸ்ரீகாந்த் தலகேரி ஸ்வராஜ்யா இதழில் எழுதிய கட்டுரை (மார்ச் 2019)
தமிழில்: எஸ்.எஸ்.ராகவேந்திரன்
ஆசிரியர் குறிப்பு: இக்கட்டுரையின் ஆசிரியர் ஸ்ரீகாந்த் தலகேரி (Shrikant Talageri) கல்விப் புலங்கள் எதையும் சாராமல் சுயமாகவே கற்று மாபெரும் ஆய்வாளராக வளர்ந்த வரலாற்றாசிரியர். வரலாறு, மொழியியல், கலாச்சாரம், தேசியம், மதங்கள் ஆகியவை குறித்து சிறப்பான ஆய்வுகளைச் செய்துள்ள தலகேரி சம்ஸ்கிருதம், கொங்கணி, மராத்தி உட்பட இருபது மொழிகளில் வல்லுனர். வேதகாலம் மற்றும் இந்தியாவின் தொல்வரலாறு குறித்து The Rigveda: A Historical Analysis, Rigveda and the Avesta: Final Evidence, The Aryan Invasion Theory and Indian Nationalism, Genetics and the Aryan debate ஆகிய நான்கு மாபெரும் நூல்களை இவர் எழுதியுள்ளார்.

டோனி ஜோசப், ஒரு வணிக இதழாளர். அவரது புதிய புத்தகம் ஒன்று “ஹரப்பாவில் வாழ்ந்தவர்கள் யார்?” “ஆரியர்கள் வந்தேறிகளா?” “ஜாதிய முறை எப்போது துவங்கியது?” என்பன போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தன்னிடம் உள்ளதாகச் சொல்கிறது. இந்த நூலின் தலைப்பு “Early Indians: The Story of Our Ancestors and Where They Came From” (ஆதிகால இந்தியர்கள்: நமது மூதாதையர்களின் கதை, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?). இது ஆரியர் படையெடுப்பு கொள்கையை நிறுவும் இன்னொரு முயற்சி. அந்தக் கொள்கைக்கு தொல்லியல் சான்றுகள் இன்றுவரை கிடையாது. இதையும் மீறி, மரபணுவியல் மூலம் இந்த முறை எப்படியாவது படையெடுப்பை ஸ்தாபிக்க முயன்றுள்ளார்.
ஆரியர் படையெடுப்பு (Aryan Invasion Theory – AIT) எனும் கொள்கைக்கு மாற்றாக, “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” (Out Of India Theory – OIT) என்னும் கொள்கை இன்று பரவலாகப் பேசப்படுகிறது. “இந்தியாவில் இருந்து வெளியே சென்ற மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழி, கலாசார ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்” என்பதுதான் OIT. ஆனால், பல ஐரோப்பிய, அமேரிக்க இந்தியவிலாளர்கள் படையெடுப்புக் கொள்கையை கைவிடத் தயாராக இல்லை.
மரபணுவியல் ஒரு நவீன விஞ்ஞானம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட விவாதத்துக்கு மரபணு ஆதாரம் முழுமையாகப் பொருந்தாத ஒன்று. இதன் மூலம் ஊன்குருத்தின் DNA எந்தத் திசையில் நகர்ந்தது என்று மட்டுமே கணிக்க முடியும். இந்தோ-ஆரிய கலாசாரம், மொழி போன்றவை அதே விதமாக நகரவேண்டும் என்கிற தேவை கிடையாது. மேலும், மொழி, கலாசாரம் போன்றவற்றை மரபணு மூலம் கண்டறிய வழியும் கிடையாது. மரபணுக்களும், கலாச்சாரமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடன், ஒரே திசையில்தான் பயணிக்க வேண்டும் என்கிற தேவை கிடையாது. இந்த அடிப்படையில், மரபணுவியலை வைத்து, கலாசார நகர்வைத் தீர்மானிப்பது எடுத்த எடுப்பிலேயே பிழையான முயற்சி.
உதாரணமாக, ஆங்கிலமும் ஸ்பானிஷ் மொழியும் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. ஆனால் இதனை ஐரோப்பாவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களின் மக்களின் மரபணுக்களை வைத்து கணிக்க முடியுமா? இன்று அமெரிக்கப் பழங்குடிகள், மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இம்மொழிகளைப் பேசுவது மரபணு நகர்வின் மூலம்தான் என்று கூறலாமா? பௌத்த மதம் இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கும் (துவக்கத்தில்) மேற்கு ஆசியாவுக்கும்கூடப் பரவியது.
இந்தப் பரவலைக் கணிக்க “பௌத்த மரபணு” உள்ளதா என்ன? சதுரங்க விளையாட்டு இந்தியாவில் இருந்து சென்றதுதான். அது வடக்கில் மங்கோலியா, கிழக்கில் வியட்நாம், மேற்கில் அரேபியா வரை பரவியுள்ளது. பல ஆசிய நாடுகளின் தேசிய விளையாட்டு. இதனை “சதுரங்க மரபணு கூட்டம்” மூலமாகக் உறுதிசெய்ய வழியுண்டா?
இந்த விவாதம் அபத்தத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறது, தீர்வு வருவதகாத் தெரியவில்லை. இரண்டு பக்கங்களும் தங்கள் விவாதங்களையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருகிறார்கள். இந்திய வெளியேற்றக் கொள்கைதான் வெல்வதாகத் தெரிகிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு படையெடுப்புக் கொள்கைக்காரர்கள் பதில் சொல்லக்கூட மறுக்கின்றனர். (இதுபற்றி பல புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளேன்).
ஜோசப், விவாதத்துக்குள் புகும்போதே, தன்னிடம் ஆரியர் படையெடுப்பை இறுதியாக நிரூபிக்கத் எல்லா ஆதாரங்களும் உள்ளன எனும் துணிபுடன் நுழைகிறார். அவரது வாதங்களை தகர்க்கும் முன்பாக, இந்தப் புத்தகத்தின் நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இந்த நூலில்:
- அண்டவியல், புவியியல் பற்றிய சுவாரசியமான தகவல்கள் உள்ளன [பக்கம் 1-6]
- சரித்திரத்துக்கு முந்தைய மானுடவியல் மற்றும் மரபணுவியல் பற்றியும் சுவைமிக்க கருத்துகள் உள்ளன [பக்கம் 13-60]
- வேளாண்மையின் சரித்திரமும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது [பக்கம் 61-97]
மேற்கண்ட துறைகளுக்கு இவையெல்லாம் சிறந்த முன்னுரைகள். ஹரப்பவுக்கு முந்தைய நாகரீகம், ஹரப்பா நாகரீகம் போன்ற சரித்திர விவரணைகளையும் மிக நன்றாக எழுதியுள்ளார். [99-132] “அக்காடிய முத்திரைகள், இந்திய நீர் எருமைகளின் சித்திரங்கள் போன்றவை, மெசபடோமிய கலாசாரத்தில் உள்ளன. இவற்றின் மூலம் ஹரப்பா நாகரீகத்தின் தாக்கம் அங்கே இருந்தது” என்று சிறப்பாகக் காட்டியுள்ளார் ஜோசப்.
“இந்தியாவின் முதல் நாகரீகத்தை சேர்ந்த மக்களை என்ன பெயரிட்டு அழைப்பது?” என்பது பற்றியும் ஜோசப் ஒரு எளிமையான கருத்தை முன்வைக்கிறார். தொல்லியல், சரித்திர நிபுணர்கள் முதன்முதலில் கண்டுபிடித்த நகரம் ஹரப்பா. இதை மட்டுமே வைத்து, ஹரப்பா நாகரீகம் என்று அழைப்பதை அவர் ஒப்பவில்லை. சிந்து சமவெளி, அல்லது சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று அழைப்பதையும் சரியாகவே மறுக்கிறார். அன்றைய இந்திய மக்கள் இந்த நிலப்பரப்புகளையும் தாண்டிப் பரவி இருந்தனர்.
ஆனால் அவரது சந்தேகத்துக்குரிய கூற்றுகள் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே துவங்குகின்றன. இந்த நூலின் சாரம் முகவுரையில் தெளிவாகத் தெரிகிறது. “மனித இனத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலவரிசை” என்று ஒரு சிறிய பட்டியல் கொடுத்துள்ளார் ஜோசப்.
இந்த ஆட்டவனையில், பொயுமு 2000-1000 எனும் இடத்தில் “அலையலையாக ஆயர் கூட்டங்கள் மத்திய ஆசியாவில் இருந்து தெற்கு ஆசியா நோக்கிப் பெயர்ந்தனர். இந்தோ-ஐரோப்பிய மொழிகளையும், புதிய மத, கலாசாரப் பழக்கங்கையும் தங்களுடன் கொண்டுவந்தனர்” என்று உள்ளது (pp xiv). [பொயுமு – பொதுயுகத்திற்கு முன் – Before Common Era – BCE]
“நமது மூதாதையர்களின் கதை, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” எனும் கேள்விக்கு நமது டோனி கொடுக்க விரும்பும் பதில் மொத்தமும் இந்தக் காலகட்டத்தில்தான் அடங்கியுள்ளது. பொயுமு 2000 முதல் 1000 வரை புலம் பெயர்ந்தவர்களின் அடையாளம்தான் புத்தகத்தின் அட்டையில் உள்ள “ஹரப்பாவில் வாழ்ந்தவர்கள் யார்?” “ஆரியர்கள் வந்தேறிகளா?” “ஜாதிய முறை எப்போது துவங்கியது?” எனும் மூன்று கேள்விகளுக்கும் பதில்.
இந்தப் புத்தகத்தை பின்வரும் கேள்விகள், அவை தொடர்பான தகவல்கள் மூலம் ஆராயலாம்:
- ஹரப்பர்கள் திராவிட மொழி பேசியவர்களா?
- பொயுமு 2000 முதல் 1000 வரை மட்டும் என் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இருக்கிறது?
- இந்த ‘மரபணு ஆதாரம்’ இந்தோ ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார்கள் என்று உறுதி செய்கிறதா?
- “பழைய” மற்றும் “புதிய” ரிக்வேதப் பகுதிகள் படையெடுப்பு Vs வெளிப்போதல் விவாதத்தில் என்ன தகவல்களைத் தருகிறது?
- நம்மிடம் காலக்கிரமம் பற்றிய என்ன ஆதாரம் உள்ளது? குறிப்பாக ரிக் வேதத்தின் காலக்கிரமம் எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது?
- மரபணு ஆதாரம் படையெடுப்பை உறுதி செய்கிறதா அல்லது வெளிப்போதலை மறுக்கிறதா?
- ஜாதிய அமைப்பு எப்போது துவங்கியது?
- சரஸ்வதி நதியின் உண்மையான கதை என்ன?
- ‘பண்டைய இந்தியாவில் குதிரை’ எனும் கருத்து நமக்கு என்ன சொல்கிறது?
இவற்றில் சில கேள்விகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை பற்றிய விரிவான ஆய்வு இன்னொரு சமயம் தனியாக வெளியாகும்.
இந்த நூலின் ஆசிரியர் முதலிலேயே “ஹரப்பர்களின் மொழி இன்னது என்று நிச்சயமாகத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். அனால் அதன் பிறகு, “சரித்திர, தொல்லியல் வல்லுனர்கள் ஹரப்பா எழுத்துக்கள் பண்டைய திராவிட மொழியாக இருக்கலாம் என்று பெருவரியகக் கூறுகின்றனர்” என்பன போன்ற புனைவுகளை இடைச்செருகுகிறார். அந்த மொழி எது என்று இன்றுவரை தெரியாது என்று சொல்லிவிட்டு இதுபோன்ற முடிவுகளுக்கு வருவது விபரீதமான செயல்.
வேறு சரித்திர ஆதாரம் கிடைக்காதவரையில், இந்த மொழி அதே பகுதியில் பேசப்பட்ட மொழி, அல்லது அந்த மொழியின் வடிவம் என்று சொல்வதுதான் நேர்மையான அணுகுமுறை. பொயுமு 1000 காலத்தைச் சேர்ந்த ஒரு புதிய மொழி எழுத்துகள் கனடா நாட்டில் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். “அது ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளின் எழுத்து வடிவம்” என்று யாரும் சொல்ல மாட்ட்டார்கள். காரணம், ஆங்கிலமும் பிரெஞ்சும் அந்தப் பகுதிகளுக்கு சமீபமாகத்தான் வந்தது என்று சரித்திரபூர்வமாக நமக்குத் தெரியும்.
இதேபோல் பொயுமு 5000 காலத்தை சேர்ந்த இதுவரை கண்டுபிடிக்கபடாத ஒரு எழுத்து வடிவம் தமிழகம், சீனா அல்லது சவுதி அரேபியப் பகுதியில் கிடைத்தால்; வேறு உறுதியான சரித்திர ஆதாரம் இல்லாத பட்சத்தில், அது முறையே திராவிட, சீன அல்லது யூத மொழியினத்தைச் சேர்ந்தது என்றுதான் சொல்ல முடியும்.
மொத்த சரித்திரம், மரபுகளின்படி, ஹரப்பா பகுதியில் இந்தோ-ஆரிய மொழிகளைத் தவிர வேறு எந்த மொழியும் பேசப்படவில்லை என்று தெரிகிறது. ரிக்வேதம்தான் மிகப்பழைய இந்தோ-ஆரிய நூல். இதனை மேலைநாட்டு அறிஞர்கள் பெரும்பான்மையாக இரும்புக்காலத்துக்கு முன் அதாவது, பொயுமு 1200 என்று கணக்கிட்டு உள்ளனர். இந்த நூல் அதே ஹரப்பா பகுதியைச் சேர்ந்தது.
ஹரப்பாவின் மொழி இந்தோ-ஆரிய மொழி கிடையாது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அதைவிட, அது திராவிட மொழி என்பதற்கு (அப்படி யாரேனும் சொல்லத் துணிந்தால்) அடிப்படைச் சான்றுகூடக் கிடையாது. இந்த சூழலில், “ஹரப்பாவில் இருந்தவர்கள் பண்டைய திராவிட மொழியைப் பேசினார்கள்” என்று சொல்ல அரசியல் காரணங்கள் மட்டுமே பின்னணியாக இருக்க முடியும்.
அடுத்து பொயுமு 2000-1000 தான் “ஆரிய வந்தேற்றம்” நிகழ்ந்த காலம் என்கிறது இந்த நூல். இதுதான் இந்த நூலுக்கும், இது சார்ந்த விவாதத்துக்கும் மையப்புள்ளி.
இந்தக் கால அளவைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் என்று புரிந்துகொள்ள வேண்டும். ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய வந்தேறிகள் எனும் மொத்தக் கொள்கைக்கும் ஒரே அடிப்படைதான். “வடஇந்தியா, ஐரோப்பிய நாடுகள், மற்றும் இடைப்பட்ட பகுதிகளின் மொழிகளுக்கு இடையே ஒற்றுமைகள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை, இந்த மொழிகளின் பொதுவான மூதாதை மொழி ஒன்று இருக்க வேண்டும். அது தோன்றிய இடம் தெற்கு ரஷ்யாவின் புல்வெளிகள்.” என்று சொல்லப்படுகிறது.
மொத்தம் பன்னிரண்டு இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இருந்தன என்று மொழியியல் சான்றுகள் மூலம் தெரிகிறது. அவை, க்ளெக்டிக், இத்தாலிய, சால்விய, பால்டிக், ஜெர்மானிய, கிரேக்க, அனதோலிய, அர்மேனிய, ஈரானிய, டாச்சேரிய, இந்தோ-ஆரிய மொழிகள். மூவாயிரமாவது ஆண்டு (பொயுமு 3000) வாக்கில் அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தன.
அனதோலிய மொழிதான் முதன்முதலில் பிரிந்தது. அந்த மொழி இன்று வழக்கில் இல்லை. தோன்றிய இடத்தில் தங்கிய மொழிகள் ஐந்து. அவை கிரேக்கம், ஆர்மேனிய, ஈரானிய, இந்தோ-ஆரிய மொழிகள். ஒரே இடத்தில் இருந்ததால், அவை தொடர்ந்து மாற்றம் அடைந்து, புதிய மொழியம்சங்களைப் பெற்றன. இதனால் தெற்கு ரஷ்யாதான் இந்த மொழிகளின் உற்பத்தி ஸ்தானம் என்றால், இந்தோ-ஆரிய இடப்பெயர்வு, பொயுமு 3000க்கு பல ஆண்டுகள் பின்னர்தான் துவங்கி இருக்க வேண்டும்.
இந்தோ-ஆரியர்கள் முதலில் சிறிய குழுக்களாக மத்திய ஆசியா வந்து, வடகிழக்கு திசையில் இருந்து, இந்தியாவுக்குள் ஹரப்பா நாகரீகம் இருக்கும் இடத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சரித்திர அறிஞர்கள் ஆரியர்கள் ஹரப்பா நாகரீகத்தின் மையத்தில் திடீரென்று குதிக்கவில்லை என்று நிச்சயமாகக் கூறுகிறார்கள். பொயுமு 4500 முதல் பொயுமு 500 வரை எந்தவிதமான பேரழிவும் ஹரப்பா பகுதிகளில் நிகழவில்லை.
இன்னொருபுறம், ரிக்வேதம் வேறொரு இடத்தில் இருந்து வந்த நினைவுகள் எதையும் பேசவில்லை. அப்பகுதி மக்களுக்கு, தென்கிழக்கு ஆஃப்கானிஸ்தான் தாண்டி எந்த நிலப்பகுடியைப் பற்றிய அறிவும் இல்லை என்றே தெரிகிறது.
திராவிட மொழி சம்மந்தம் உள்ள ஒரு எதிரி இனம், நட்பு இனம் அல்லது ஒரே ஒரு சம்பவம்கூட ஒட்டுமொத்த ரிக்வேதத்திலும் கிடையாது. ஜோசப் சொல்லும் ரிக்வேதக் காலத்ததின் படி பார்த்தல் கூட, பொயுமு 1400 முதல் பொயுமு 1000 வரை ஒரே ஒரு நதியின் பெயரிலோ, இடத்தின் பெயரிலோ திராவிட மொழியின் சாயல் கிடையாது. அவ்வாறு உள்ளது என்று எந்த மொழியியல் நிபுணரும் கூறவில்லை.
புதிய மக்கள் வந்து ஒரு பகுதியைக் கைப்பற்றிய பிறகும் கூட, பழைய பெயருடனே நதிகள் வழங்கப்பெறும். இதுதான் சரித்திரம் காட்டும் சான்று. வேத காலத்தில் இந்தப் பகுதியின் நதிகள் அனைத்துமே சம்ஸ்க்ருத மொழி, அல்லது அதன் கிளை மொழிப் பெயர்களாகவே உள்ளன. வேதத்துக்கு முந்தைய மொழி என்று எதுவும் இருப்பதாகக் தெரியவில்லை. அதனால், ரிக்வேதம் முழுக்க அந்தப் பகுதி இந்தோ-ஆரிய நிலப்பரப்பு என்றுதான் உறுதி செய்கிறது.
அதற்கு முன்னால் எல்லாப் பெயர்களும் திராவிட மொழியாக இருக்கவும் வாய்ப்பில்லை. காரணம், மேலே குறிப்பிட்ட அளவுக்கு ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்றால், அது பொயுமு 2000க்குப் பிறகு, ‘சிறு குழுக்களாக’ வந்த ஆரியர்களால் சாத்தியம் இல்லை. பேரழிவு நடந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன.

1990 வாக்கில் இந்தோ-ஆரிய மொழியின் தோற்றம் மற்றும் பரவல் பற்றிய மிகப்பெரிய ஆய்வுகள் நிகழ்ந்தன. அதன் விளைவாக, மொழியியல், தொல்லியல், நூல்கள் என்று எல்லா ஆதாரங்களுமே ஒன்று “இந்தியாதான் உற்பத்தி ஸ்தானம்”, அல்லது “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கை தான் சரியானது என்று உறுதி செய்தன. அப்போது, அறிவுசார் தளத்தில், ஆரியப் படையெடுப்புக் கொள்கையை ஆதரித்தவர்கள் விவாதங்களை விட்டே ஓடிவிட்டனர். மீண்டும் இன்று பொருந்தாத மரபணுவியல் துறையை நோக்கி இந்த விவாதத்தை திசைச்திருப்ப முயல்கின்றனர். ஆனால், மரபணுவியல் மூலம் மொழி அல்லது கலாசார நகர்வுகளைக் கணிக்க முடியாது என்று முன்னமே விளக்கியுள்ளோம்.
இதன் அடிப்படையில் ரிக்வேதத்தின் அகச்சான்றுகளைப் பார்க்கலாம். அவை “இந்தியாவிலிருந்து வெளிப்போதல்” கொள்கைக்கு ஒத்துப்போகின்றன. ரிக்வேதத்தில் பத்து மண்டலங்கள் இருந்தாலும், அதனை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியும். அவற்றை இந்த கட்டுரைக்காக, “புதிய” ரிக்வேதம், “பழைய” ரிக்வேதம் என்று வைத்துகொள்வோம். ரிக்வேத ஆய்வுகளில் பொதுவாக 2 முதல் 7 வரை உள்ள மண்டலங்களை ‘குடும்ப நூல்கள்’ என்றும்; 1, 8, 9, 10 ஆகிய மண்டலங்களை ‘குடும்பம் சாரா நூல்கள்’ என்றும் அழைப்பது வழக்கம்.
மண்டலங்களை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:
அ) குடும்ப மண்டலங்கள் பத்து பிரதான ரிஷி குடும்பங்களால் இயற்றப்பட்டு இருக்கும். பிற நூல்கள் பொதுவாகவும், பிறராலும் உருவானவை.
ஆ) குடும்ப மண்டலங்களில் உள்ள ஸூக்தங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் (முதலில் இந்திரன் பிறகு அக்னி என்பதுபோல்) அமைந்திருக்கும். ஒரே தேவதைகள் பற்றிய ஸூக்தங்கள் அடுத்து அடுத்து வந்தால், அவை அநுவாக எண்ணிக்கைப்படி மேலிருந்து கீழாக (13, 11, 9, 8, ) வரிசைப் படுத்தி இருக்கும். ஒரே அநுவாக எண்ணிக்கை கொண்ட ஸூக்தங்கள், சந்தஸ் (செய்யுள் வடிவம்) அடிப்படையில் வரிசையாக – அதாவது முதலில் காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப் என்ற வரிசையில – இருக்கும். பிற மண்டலங்கள் இந்தக் கிரமத்தை பின்பற்றுவது கிடையாது.
ஆனால், ஐந்தாவது மண்டலம் குடும்ப மண்டலங்களைவிட, அதிகம் பிற மண்டலங்களின் தன்மையையே கொண்டுள்ளது. அதனால் அதனை புதிய குடும்பம் சாராத மண்டலங்களில் சேர்க்க வேண்டும். இதன்படி, பழைய மண்டலங்கள் 2, 3, 4, 6 மற்றும் 7, பழைய ரிக் வேதம். மண்டலம் 5 புதிய ரிக்வேதத்தின் முதல் மண்டலம்.
2-4 மற்றும் 6-7 ஆகிய பழைய மண்டலங்களில் இருக்கும் சில ஸூக்தங்கள் பின்னாளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன என்று அறிஞர்கள் கண்டறிந்து உள்ளனர். இவை முதல் மற்றும் எட்டாம் மண்டலங்கள் இணைக்கப்பட்டபோது நிகழ்ந்த மாற்றங்கள். இவற்றை ‘திருத்திய ஸூக்தங்கள்’ என்று சொல்கிறோம். இப்படி சேர்க்கப்பட்ட பகுதிகள், பழைய ரிக்வேதத்தை சேர்ந்தவை. ஆனால் புதிய ரிக்வேத மண்டலங்கள் உருவான காலத்தில் இவை மாற்றப்பட்டன.
இதன்படி ரிக்வேதம் இரண்டு பகுதிகள்:
- பழைய ரிக் வேதம்
நூல்கள்: 2-4, 6-7, (திருத்திய ஸூக்தங்கள் நீங்கலாக)
இது 280 ஸூக்தங்கள், 2,351 அநுவாகங்கள்
- புதிய ரிக் வேதம்
நூல்கள்: 1, 5, 8-10
686 ஸூக்தங்கள், 7,311 அநுவாகங்கள்
இவை இரண்டுக்கும் இடையே,
- திருத்திய ஸூக்தங்கள்
62 ஸூக்தங்கள், 890 அநுவாகங்கள்
இந்த மூன்றாவது பகுதி பழைய ரிக் வேதத்துக்கு பிர்சேர்கையாக உள்ளது. புதிய ரிக்வேதத்துக்கும், பழைய ரிக் வேதத்துக்கும் இடையில் உள்ள பாலம் போன்ற ஸூக்தங்கள் இவை.
இவை இரண்டுக்கும் இடையே பல தெளிவான வேறுபாடுகள் உள்ளன. மேலைநாட்டு மொழியியலாளர்கள் கூறும் முக்கியமான வேறுபாடு, இரு பகுதிகளும் உபயோகிக்கும் வார்த்தைகளில் உள்ளது. பழைய ரிக்வேதம் அதிகமாக இந்தோ-ஐரோப்பிய வார்த்தைகளை உபயோகிக்கிறது. அதனால் இந்தப் பகுதி காலத்தால் முந்தியது மட்டும் அல்ல, தனது பிற சகோதர இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் அதிக நெருக்கமாக உள்ள பகுதி.
புதிய ரிக்வேத மண்டலங்களில் புதிய (அந்தக் காலகட்டத்தின் படி) சம்ஸ்க்ருத வார்த்தைகள் அதிகமாக உள்ளன. மேலே குறிப்பிட்ட பழைய வார்த்தைப் பிரயோகங்கள், புதியவை இரண்டையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்றால், திருத்திய ஸூக்தங்களில் காணலாம். இதன் மூலம், ரிக்வேதத்தின் மொழிப் பரிணாம வளர்ச்சி தெளிவாகப் புரியும்.
உதாரணமாக “நக்த” என்பது இரவைக் குறிக்கும் பழைய ரிக்வேத வார்த்தை. இது அவெஸ்டா மொழியில் நாக்ஸ்ட், ஜெர்மனி-நாச்ட், நவீன கிரேக்கத்தில் நுக்தா, இலத்தீன் மொழியில் நாக்டே, பழைய ரஷிய மொழியில் நோஷ்டி, பழைய ஐரிஷ்-நொச்ட், அல்பேனிய நடே, லித்துவேனிய நக்டிஸ், டோசெரிய மொழியில் நக்ட், ஹிட்டைட் மொழியில் நெகுஷ்.
“ராத்ரி” என்பது இரவைக் குறிக்கும் புதிய ரிக்வேத வார்த்தை. இது எந்த இந்தோ-ஐரோப்ப மொழியிலும் இல்லை. இந்த வார்த்தையை புதிய மண்டலங்களிலும், 7வது மண்டலத்தின் திருத்தப்பட்ட ஸூக்தத்திலும் மட்டுமே காணலாம். இதே பதம் பின்னாளில், அதர்வ வேதத்திலும், யஜுர் வேதத்திலும் எண்ணற்ற இடங்களில் இரவைக் குறிக்கப் பயன்படுகிறது. செவ்வியல் சம்ஸ்க்ருதம், நவீன இந்தோ-ஆரிய மொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகளிலும் இந்த வார்த்தையின் வேறு வடிவங்கள் உள்ளது. இந்த மொழிகள் சம்ஸ்க்ருதத்தில் இருந்து மேற்கண்ட வார்த்தையை பெற்றன. ‘ராத்ரி’ உபயோகிக்கும் எந்த மொழியிலும் ‘நக்த’ பயன்பாடு கிடையாது.
பழைய-புதிய ரிக்வேதப் பிரிவினை இன்னமும் சில பாகுபாடுகளின் மூலம் மேலைநாட்டு அறிஞர்களால் உறுதிசெய்யப் படுகிறது:
- பழைய ரிக் வேத சூக்தங்களை அருளியவர்கள் பண்டைய ரிஷிகள், புதிய ரிக்வேதம் அவர்களது சந்ததி ரிஷிகள் இயற்றியது.
- புதிய பகுதிகளில் பழைய பகுதியின் ரிஷிகள், அரசர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பழைய பகுதிகளில் புதிய பகுதிகள் பற்றிய அதுபோன்ற குறிப்புகள் இல்லை.
- பழைய ரிக்வேத ஸூக்தங்களில் சில புதிய பகுதிகள் உள்ளன என்று பார்த்தோம் (திருத்திய ஸூக்தம்). அவை பண்டைய ரிஷிகளின் பெயரில் இருந்தாலும், அவற்றை அருளியவர்கள் சந்ததி ரிஷிகள்தான். புதிய பகுதிகளில் இந்த சந்ததி ரிஷிகளின் சொந்தப் பெயர்களே குறிப்பிடப் பட்டுள்ளன.
இன்னமும் பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றை இங்கே விளக்கினால், கட்டுரை மிகவும் நீண்டுவிடும்.
இப்போது நேரடி காலக்கிரம சான்றுகளுக்கு வருவோம். இந்திய வரலாற்று எழுதாண்மை (Historiography) பற்றிய தகவல்கள் இரண்டு முக்கியமான இடங்களில் இருந்து கிடைகின்றன. முதல் இடம், அசோகர் உருவாகிய ஸ்தூபிகள்; அவற்றில் உள்ள வாசகங்கள். இவை மூலம் இந்தியாவுக்கு உள்ளே பொயுமு மூன்றாவது நூற்றாண்டில் பயன்பட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிவடிவம் தெரிகிறது. இதன் அடிப்படையில், பொயுமு 200 க்குப் பிறகு, ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.
இரண்டாவது ஆதாரம் மேற்கு ஆசிய சிரியா-ஈராக் பகுதிகளின் மிட்டானி சாம்ராஜ்யம். அந்தக் கல்வெட்டுகள் பொயுமு 16-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் இந்தியாவுக்கு வெளியேயான இந்தோ-ஐரோப்பிய மொழி வடிவங்கள் உள்ளன. மேற்கண்ட இரண்டு ஆதாரங்களையும், நாம் இப்போது முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ள முடிகிறது.
இவற்றின் மூலம் பொயுமு 2000 வாக்கிலோ, அல்லது அதற்கு முன்போ, மத்திய ஆசியாவில் இருந்து ஆரியர்கள் வந்தார்கள் என்று சொல்ல இடமில்லை.
பொயுமு 2000 முதல் பொயுமு 1000 வரையிலான காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இடமாற்றம்; அதற்கு ஜோசப் கூறும் “உலகின் 92 விஞ்ஞானிகள்” கொடுக்கும் மரபணு ஆதாரம் – இவை எதுவும் இந்த தொல்லியல் மொழியியல் ஆதாரங்களின் அடிப்படையில் பொருந்தவில்லை.
இந்தத் தொல்லியல் ஆதாரங்கள் பற்றி கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம். யார் இந்த மிட்டானிகள்? பொயுமு 1500 முதல் இரண்டு நூற்றாண்டுகள் சிரியா-ஈராக் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிட்டானிகள். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இவர்களைப் பற்றிய ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தன. அவற்றில் இருந்து, இந்த அரசர்கள் இந்தோ-ஆரியர்கள் என்று தெரிகிறது.
மிட்டானி சாம்ராஜ்ய மக்கள் இந்தோ-ஆரிய மொழியைப் பேசினார்களா? அவர்கள் பேசியது ஹுரியன் அல்லது, ஹுரைட் மொழி. இது இந்தோ-ஆரிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி கிடையாது. ஆனால் இவர்களைச் சார்ந்த கல்வெட்டு ஆதாரங்களில் இந்தோ-ஆரிய மொழிகள் உள்ளன. இதில் இருந்து அந்தப் பகுதியை ஆட்சி செய்த மக்கள் ரிக்வேத கலாச்சரத்தில் இருந்து வந்தவர்கள் என்பது உறுதியாகிறது.
மேற்கு ஆசியாவின் கல்வெட்டுகளும், ஆவணங்களும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் கிடைத்தன. இவற்றை ஆய்ந்தபின், மிட்டானி அரசர்களின் இந்தோ-ஆரியத் தொடர்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல்கள், இந்தியவியல் ஆய்வில் ஒரு பெரிய களேபரத்தை நிகழ்த்தியது. மேற்கு ஆசியாவின் மையத்தில் வேத கலாசாரத்தை சேர்ந்த இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்கள் எப்படி வந்தார்கள்? எதிர்ப்புறம் நகர்வு நிகழும்போது, அதே காலகட்டத்தில்தான் இந்தியா நோக்கி ஆரியர்கள் வந்தனர் என்று எப்படி சொல்ல முடியும்? அதுவும் ரிக்வேதம் இயற்றப்பட்ட காலத்துக்கு பின் எப்படி இது நிகழ முடியும்? இப்போது பேசப்படும் மரபணு ஆதாரம் எந்த காலகட்டத்தைக் காட்டுகிறது?
இதற்கு மேலைநாட்டு இந்தியவியல் அறிஞர்கள் ஒரு ‘தீர்வு’ கண்டனர்.
“மத்திய ஆசியாவில் இருந்து இரண்டு ஆரியக் குழுக்கள் பிரிந்துவிட்டன. ஒன்று மேற்கு ஆசியா நோக்கிச் சென்றது. அந்தக் குழுவின் ஆதாரங்கள்தான் இப்போது மேற்கில் கிடைக்கின்றன. இன்னொரு குழு இந்தியா நோக்கி கிழக்கில் சென்றது. ரிக் வேதத்துக்கு முந்தைய காலத்தில் இது நிகழ்ந்தது. ஆனால், இவர்கள் வேத கலாசாரம் உள்ள இந்தோ-ஆரியர்கள். இந்தியாவில் ரிக்வேதம் இயற்றிய ஆரியர்கள் நுழைந்த அதே காலத்தில், மேற்கு ஆசியாவில் இரண்டாவது குழு நுழைந்தது.”
இதுதான் அந்தத் “தீர்வு”.
இது உண்மையாக இருக்கவேண்டும் என்றால், ரிக் வேதத்தில் உள்ள சான்றுகளும், மிட்டானி சான்றுகளும் வேதத்துக்கு முந்தைய காலத்தில் ஒன்றாக இருக்க வேண்டும். இதனை ஆய்வு செய்து, ஆதாரங்களை கொடுக்க, ஜோசப்பின் “உலகெங்கும் உள்ள 92 விஞ்ஞானிகள்” வசதியாக மறந்துவிட்டனர்.
நாம் அந்த ஆய்வை செய்து பார்க்கலாம். ஒருவேளை வேதங்கள் இயற்றப்படும் முன் இந்தப் பிரிவு (மத்திய ஆசியாவிலேயே) நடந்திருந்தால், மிட்டானி ஆதாரங்களில் உள்ள வார்த்தைகள் பழைய ரிக் வேதத்திலும் இருக்க வேண்டும். ஆனால், அந்த வார்த்தைகள் புதிய ரிக் வேதத்தில்தான் காணப்படுகின்றன. பழைய ரிக் வேதத்தில் மிட்டானி வார்த்தைகளோ, அவற்றின் வேறு வடிவமோ ஒரு இடத்தில் கூட இல்லை. ஈரானியர்களின் அவெஸ்டா நூல்களுக்கு எப்படி புதிய ரிக் வேதத்துடன் மட்டுமே தொடர்பு உள்ளதோ அதேபோல் மிட்டானி ஆதாரங்களும் புதிய ரிக் வேதத் தொடர்பு மட்டுமே கொண்டுள்ளன.
இந்த கால அமைப்பும், ரிக்வேதத்தின் காலமும் தவிர்க்க முடியாத ஆதாரங்கள். இவற்றுடன் ஒத்துப்போனால்தான் ஜோசப் சொல்லும் மரபணு வாதம் செல்லுபடியாகும்.
மிட்டானி சாம்ராஜ்யத்துக்கும், ரிக் வேதத்துக்கும் கலாசாரத் தொடர்பு உள்ளது. இந்தத் தொடர்பு புதிய ரிக்வேதத்தில் மட்டுமே உள்ளது. அதனால், மிட்டானிகள், அவெஸ்டா இயற்றிய இரானியர்கள், புதிய ரிக்வேதம் எழுதிய இந்திய ஆரியர்கள் மூவரும் ஒரே பகுதியில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் மிட்டானிகள் மேற்கு நோக்கி சென்று ஆட்சி அமைத்திருக்க முடியும்.
இங்கே இரண்டு வாதங்கள் உள்ளன:
- மிட்டானிகள் மத்திய ஆசியாவில் இருந்து பிரிந்து, மேற்கு நோக்கிச் சென்றனர். அதே காலத்தில் இன்னொரு குழு ஆரியர்கள், கிழக்கு நோக்கிச் சென்று, சப்த சிந்து பகுதியை அடைந்தனர். அடைந்த பிறகு, பழைய ரிக்வேதம், அதன்பின் புதிய ரிக்வேதம் எழுதினர்.
- மிட்டானிகள் புதிய ரிக்வேதம் எழுதப்பட்ட பிறகு, இந்தியாவில் இருந்து மேற்கு ஆசியாவுக்குச் சென்றனர்.
புதிய ரிக்வேதம் எழுதப்பட்ட நிலப்பரப்பு, மேற்கு உத்திரப் பிரதேசம், ஹரியானா துவங்கி, தென்கிழக்கு ஆஃப்கானிஸ்தான் வரையில் இருந்தது.
புதிய ரிக்வேதம் பழைய ரிக்வேதத்துக்கு காலத்தால் பிந்தியது என்று தெளிவாகப் பார்த்தோம். இதனால், முதல் வாதம் நிராகரிக்கப்படுகிறது. புதிய ரிக்வேதம்-மிட்டானி-அவெஸ்டா கலாசாரக் கூறுகள், பின்னாளில் புராணம், இதிகாசம் என்று எல்லா இடங்களிலும் தொடர்கிறது. ஆனால், அதற்கு முன் பழைய ரிக் வேதத்தில் சுத்தமாகக் கிடையாது. பழைய ரிக் வேதமும், புதிய ரிக்வேதம் இயற்றப்பட்ட நிலப்பரப்பிலேயே உருவானது.
இதனால் இரண்டாவது வாதம்தான் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது:
மிட்டானிகளின் மூதாதையர் ஹரியானா முதல் ஆஃப்கானிஸ்தான் வரை இருந்த ரிக்வேத கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள்தான் மேற்கு ஆசியா சென்று, மிட்டானி சாம்ராஜ்யம் அமைத்தனர்.
அடுத்த கேள்வி, பழைய ரிக்வேதம் எங்கே இயற்றப்பட்டது? பழைய ரிக்வேதம் புனையப்பட்ட பகுதிகள் கிழக்கு எல்லை. அதாவது, ஹரியானா, மேற்கு உத்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் துவங்கி, மேற்கு நோக்கி வளர்ந்தது இந்திய-ஆரியர்களின் நிலப்பரப்பு. புதிய ரிக்வேதம் இயற்றப்பட்ட காலத்தில் அவர்கள் தென்மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதி வரை வந்தடைந்தனர். இந்த நகர்வுகளுக்கு ரிக்வேதத்திலேயே ஆதாரம் உள்ளது. அரசர்கள், அவர்களின் நில விஸ்தீகரிப்பு போன்ற தகவல்கள் மிகவும் விரிவாக பழைய ரிக் வேதத்தில் பேசப்படுகின்றன.
மூன்று மேற்குப் பகுதி நதிகளின் பெயர்கள்தான் பழைய ரிக்வேதத்தில் உள்ளன. அவை சிந்து, மற்றும் சிந்துவின் மேற்குக் கிளைகளான ரஸா, சரயு நதிகள். இவை அனைத்தும் ரிக் வேதத்தின் நான்காவது மண்டலத்தில் மட்டுமே உள்ளன. 6, 3, 7, 2 ஆகிய இதர பழைய ரிக்வேத மண்டலங்களில் அவை கிடையாது. “பாரத புரூ” எனும் வேதக் குழுவின் கடைசி மேற்கு நகர்வு நான்காவது மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிகப்பழைய மண்டலமாகிய ஆறாவது மண்டலத்தில் வெறும் சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் மட்டுமே மூன்று ஸூக்தங்களில் உள்ளன. கங்கைக் கரையின் நீண்ட புதர்கள் பற்றிய உவமை உள்ளது. கங்கை நதிக்கரையை பற்றிய அழ்ந்த புரிதல் பழைய ரிக்வேதத்தை எழுதியவர்களுக்கு இருந்தது.
அடுத்து ஜான்வி (கங்கை) நதிக்கரையை மண்டலம்-3 “தேவர்களின் ஆதி இருப்பிடம்” என்று குறிக்கிறது.
அடுத்தது மண்டலம்-4. முதன்முறையாக சிந்து, சரயு, ரஸா ஆகிய மேற்கு நதிகளைக் குறிக்கிறது. இரண்டாவது மண்டலம் வெறும் சரஸ்வதி நதியை மட்டுமே குறிக்கிறது. இதன் மூலம் சரஸ்வதி கரையில் துவங்கிய இந்திய-ஆரியர்களின் மேற்குப் பயணம் தெளிவாகப் புரியும்.
இவை எல்லாமே பழைய ரிக்வேதம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதற்குப் பின், முழுமையாக மேற்கு நோக்கி விரிந்து, ஆஃப்கானிஸ்தான் எல்லையில்தான் புதிய ரிக்வேத மண்டலங்களின் துவக்கம். புதிய ரிக்வேத கலாச்சாரத்தைதான் மிட்டானிகளின் மூதாதைகள் இங்கிருந்து கொண்டு சென்றனர். பொயுமு 1500 வாக்கில், சிரியா-ஈரான் பகுதியில் மிட்டானி சாம்ராஜ்யம் அமைத்தனர்.
இதுதான் ஹரியானா முதல் ஈராக் வரை, பழைய ரிக்வேதம் முதல், மிட்டானி கல்வெட்டுகள் வரை உள்ள படிப்படியான நகர்வின் கால வரிசை.
ஜோசப் கூற்றுப்படி, “உலகெங்கும் உள்ள 92 விஞ்ஞானிகள்”, அவர்களது மரபணு தகவல்கள், இவையெல்லாம் “அலையலையாக ஆயர் கூட்டங்கள் மத்திய ஆசியாவில் இருந்து தெற்கு ஆசியா நோக்கிப் பெயர்ந்தனர்.” என்று நிரூபிக்கின்றன (அப்படி சொல்லப்படுகிறது). அதாவது, பல மனித இனங்களின் மரபணுக்கள் மத்திய ஆசியா முதல், தெற்கு ஆசியா வரை பரவியுள்ளன. ஆனால் மொழியின் நகர்வு இதற்கு நேர் எதிர் திசையில் உள்ளது. மரபணு ஆதாரம் வேறு எதை நிரூபிப்பதாக அவர்கள் கூறினாலும்; நிச்சயமாக மொழி, கலாசாரம் இவற்றை கணிக்க முடியாது. “இந்தோ-ஐரோப்பிய மொழிகளையும், புதிய மத, கலாசாரப் பழக்கங்கையும்” கொண்டுவந்த ஆதாரமும் இல்லை.
பொயுமு 3000க்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்த மொழிகள் வடஇந்தியாவில் இருந்தன. அதற்கு முந்தைய காலத்திலும் அவை அங்கே இருந்திருக்க வாய்ப்புண்டு. இவர்கள் இடமாற்றம் நிகழ்ந்தபோது, தேசம் முழுதும் பரவினர். எந்தவித படையெடுப்பு, சண்டையும் நிகழவில்லை. மாறாக, இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்களுடன் சேர்ந்தனர். இவர்கள் சென்ற இடங்களில் கலாசாரப் பங்களிப்பும் உள்ளது.
ஒருவேளை ஜோசப்பும் அவரது படையெடுப்பு கும்பலும், “வெளிப்போதல்” கொள்கைக்கு எதிராக வாதிட வேண்டும் என்றால், அதற்கு உண்டான காலக்கிரமம், சரித்திரம், போன்ற ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். ரிக் வேதத்தின் காலக்கிரம, புவியியல் சான்றுகள் மட்டுமே இவர்கள் கூறும் நகர்வை தகர்த்துவிடுகிறது.
இதுபற்றிய இன்னொரு ஆழமாக ஆய்வு கூடிய விரைவில் வெளியாகும். அந்தத் தனிவரைவில் ஜோசப்பின் புத்தகம் கூறும் ஒவ்வொரு செய்தியையும் தனித் தனியாக ஆய்வு செய்து பார்க்கலாம்.
(கட்டுரையாசிரியர் இது தொடர்பாக தனது வாதங்கள் அனைத்தையும் தொகுத்து Genetics and the Aryan debate: “Early Indians” Tony Joseph’s Latest Assault என்ற புத்தகமாக எழுதியுள்ளார்).
இக்கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ள எஸ்.எஸ்.ராகவேந்திரன் வரலாறு, பண்பாடு, கலாசாரம், ஆன்மீகம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார். எட்டு பகுதிகளில் திராவிட மாயை என்ற சிறப்பான வீடியோ தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.