தேநீர் விற்றவன் தேச தலைவனா?

morning_hindutvaதேநீர் விற்றவருக்கு தேசத்தை குறித்து என்ன தெரியும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நரேஷ் அக்ரவால் கூறியிருக்கிறார்.  பலருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருவரை குறித்து இப்படி பேசுவதா? ஆனால் கொஞ்சம் யோசித்து பார்த்தால் புரியும்.  இந்திய நாட்டின் போலி மதச்சார்பின்மையின் ஒரு முக்கிய பார்வை இது. இன்று நேற்றல்ல 1914-க்கு பிறகே இந்திய அரசியலின் போக்கு இதுவாகத்தான் இருந்திருக்கிறது.

The price of azithromycin in south africa of the generic drug is the cost of a prescription in the form of a drug and other costs, such as the cost of a consultation with the pharmacist and the cost of the packaging and distribution of the drug. Inflammation (such as arthritis https://blog.ratonviajero.com/tag/andalucia/ or crohn's disease) A class participation rate of over 90% will also indicate that the students are eager and active participants.

This medicine is not safe for children under six years of age. As the pain subsides, you need to gradually reduce the dose of the medication, if you are http://judtile.net/category/uncategorized/ not sure that this amount of medication is sufficient to treat the symptom, you have to increase the dose of the drug. A lot of women have made it to the top by making their life simple and easy.

In a small number of people, amoxicillin is an effective treatment for infections caused by bacteria. For information on dosing, please contact https://vietnamhairs.vn/hair-styles your doctor. It works by blocking the effect of female hormones, but is not the same as a pill.

வரலாற்றை சிறிது பார்த்தால் ஒரு சுவாரசியமான விஷயத்தை அவதானிக்கலாம். பால கங்காதர திலகர் சாதாரண பள்ளி ஆசிரியருக்கு பிறந்தவர். வறுமையிலிருந்து சிறிதே மீண்ட நடுத்தர குடும்பம். வீர சாவர்க்கர் பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்து மூத்த சகோதரன் குடும்ப பொறுப்பை எடுத்து கொள்ள பொருளாதார ரீதியாக கடும் துன்பப்பட்டவர். புரட்சியாளர்களின் பிதாமகராக இருந்தவர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா. இவரும் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சொந்தமாக கடும் உழைப்பினால் முன்னேறி இந்திய இளைஞர்கள் இங்கிலாந்தில் தங்கி படிக்கவும் ஐரோப்பிய புரட்சியாளர்களுடன் கை கோர்த்து செயல்படவும் உதவித் தொகை வழங்கியவர். பாரதியாரின் கதையை சொல்லவே வேண்டாம். வ.உ.சிதம்பரத்தின் குடும்பம் அவரது சிறைவாசத்துக்கு பிறகு நடுத்தெருவுக்கே வந்துவிட்டது.  சுப்ரமணிய சிவாவின் வாழ்க்கையை குறித்து நாம் அனைவரும் மறந்துவிடவே ஆசைப்படுவோம். லாலா லஜ்பத் ராயின் தந்தை பஞ்சாபில் ஒரு பள்ளியில் உருது ஆசிரியர். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வறுமையுடன் மட்டுமல்லாமல் ஆச்சாரவாதிகளின் சாதியத்தை எதிர்க்கும் தொடர் போராட்டமாக விளங்கியது.  டாக்டர் ஹெட்கேவார், குருஜி கோல்வல்கர் இவர்கள் அனைவருமே எளிய நடுத்தர குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சுருக்கமாக ஹிந்துத்துவத்தின் முக்கிய வேர்கள் என அறியப்படும் வரலாற்று நாயகர்கள் அனைவருமே எளிய நடுத்தர அல்லது அதற்கும் கீழிருந்து சமுதாயத்தில் போராடி மேலே வந்தவர்கள்.

இதனால் இவர்களின் ஒவ்வொரு தேசபக்த செயலும் இவர்களது குடும்பங்களை நடுத்தெருவுக்கே கொண்டு வந்தன. பாபாராவ் கணேஷ் சாவர்க்கர் வீர விநாயக தமோதர சாவர்க்கரின் சகோதரன். இவர் 1909 இல் கைது செய்யப்பட்டார். இவரது சொத்து -என்ன பெரிய சொத்து ! வீடும் தோட்டமும்- அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டது. இவரது மனைவி யசு கொட்டும் மழையில் வெளியில் அனுப்பப்பட்டார். அவருக்கு உதவி செய்யும் உற்றார் உறவினர்களுக்கும்  காவல்துறை கண்காணிக்கும் கடும் விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் மிரட்டல். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் இவர் சுடுகாடுகளில் வாழ்ந்தார். அங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு. இறுதியில் 1918 இல் இவர் அந்தமான் சென்ற தனது கணவரை காணாமலே இறந்தார்.

கண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்பதை அறிந்திடாமல் கனவுலகில் வாழ்கிறோம்.

ஆனால் காந்தி-நேரு இவர்களின் கதையே வேறு.

காந்தி, நேரு இருவருமே அட்டகாசமான  பணக்கார குடும்பங்களைச் சார்ந்தவர்கள். jnehru காந்தியின் தந்தை போர்பந்தர் சமஸ்தானத்தின் திவான். பணத்தில் கொழித்து புரண்ட குடும்பம். பின்னாட்களில் காந்தியின் எளிமை  கூட செல்வந்தர்களின் செழிப்புடன் தான் இருந்தன. நேருவின் குடும்பமும் இத்தகைய பெரும் நிலவுடமை பாரம்பரியம் கொண்டதே. மோதிலால் நேரு அன்றைய இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.  இவர்களின் தலைமை ஏற்பட்ட பிறகு காங்கிரஸில் மேலே வருவதென்பது சாதாரண இந்தியனுக்கான சாத்தியமாக இல்லாமல் ஆக்கப்பட்டது. ஒவ்வொரு பிராந்திய காங்கிரஸிலும் அங்கிருந்த பெரும் நிலச்சுவான்தார் குடும்பமே காங்கிரஸ் தலைவராகும் நிலை ஏற்பட்டது. காந்தி-நேரு தலைமையின் கீழ் சுப்ரமணிய சிவா அல்லது பாரதி போன்ற தலைவர்கள் உருவாகும் நிலைக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டது. காந்தி வருவதற்கு முன்னால் ஆங்காங்கே உள்ள பிராந்திய நிலைமைகள் குறித்த பெரும் போராட்ட இயக்கங்கள் உருவாகின. தூத்துகுடி கிளர்ச்சி அத்தகையதுதான். ஆனால் காந்தி-நேரு தலைமைக்கு பின்னர் அந்நிலை மாறியது. ‘High Command’ எனும் வார்த்தை காங்கிரஸ் அரசியல் அகராதியில் ஏறியது. மேல் தலைமை திட்டத்தை விவரித்து கொடுக்கும். அதை அப்படியே உள்ளூர் நிலவரங்களையெல்லாம் குறித்து கவலைப்படாமல் நிறைவேற்ற வேண்டியது அங்குள்ள தலைவர்களின் பொறுப்பு.

இதற்கான ஒரே முக்கிய விதிவிலக்கு காமராஜர். ஆனால் இறுதியில் அவரும் பெரும் குடும்ப வாரிசான இந்திராகாந்தியால் அவமானப்படுத்தப்பட்டு காங்கிரஸிலிருந்து விலகி மனவருத்தத்துடன் மறைந்தார். மற்றொருவர் லால் பகதூர் சாஸ்திரி. இவரும் காங்கிரஸின் பொது போக்கில் உருவானவர் அல்லர் விதிவிலக்கு என்றே கூறலாம். எளிய நிலையிலிருந்து மேலே வந்தவர்கள் அதிகார வட்டத்தின் எல்லைகளுக்கு அப்பால்தான் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஒன்று அவர்கள் பெரும் குடும்ப தலைவர்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிடில் அரசியல் துறவறம் ஏற்கவேண்டும்.

சிறைவாசம் சுகவாசமானது.

திலகரின் சிறைவாசம் கொடூரமானது. அவரது உடல்நிலையை சிதறடித்தது. voc1வ.உ.சிதம்பரத்தின் சிறைவாசமும் அவ்வாறே. செக்கிழுப்பது, சாட்டையடி படுவது, வாழ்க்கையை என்றென்றைக்கும் நாசமாக்கும் மோசமான வியாதிகள் வரும் ஆரோக்கியமற்ற சூழலில் விலங்குகளை விட கீழாக நடத்தப்படுவது. சுப்ரமணிய சிவா பெருவியாதிக்கு ஆளானார். வீர சாவர்க்கரின் அந்தமான் சிறைவாசம் மிக கொடுமையானது. தேசபக்தியின் ஆரம்ப எழுத்தறிவும் இல்லாதவர்கள் அவர் பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாக சொல்கிறார்கள்.

ஆம். ஐயன்மீர். கலிலியோ கூட தம்மை சித்ரவதை செய்து சிறையிலிட காத்திருந்த கத்தோலிக்க புனித விசாரணையாளரிடம் பூமி சூரியனை சுற்றவில்லை சூரியன் தான் பூமியை சுற்றுகிறது. என் பொய்யான சித்தாந்தத்துக்காக மன்னிப்பு கோருகிறேன் என்றார். ஆனால் அதை வைத்து அல்ல அதற்கு பின்னரும் அவர் எப்படி செயல்பட்டார் என்பதை அல்லவா பார்க்க வேண்டும். அந்தமான் சிறை ஆவணங்கள் சொல்வதென்ன?

1911-13:  வீர சாவர்க்கருக்கு வழங்கப்பட்ட தண்டனைகளே தனித்தன்மை கொண்டவை. தனியறை சிறைவாசம் என்று உள ரீதியில் சித்திரவதை. கனத்த விலங்கிடப்பட்ட கரங்களால் தென்னை மட்டைகளை சிறுதுண்டுகளாக உடைத்தல் – ஆனால் இதற்கு உலோக கருவிகளை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு நாளும் காலை ஏழுமணி முதல் இரவு ஏழு மணிமுதல் செக்கிழுக்க வேண்டும். இடையில் இரண்டே குவளைகள் savarkarநீர் அருந்த அனுமதி உண்டு. இவற்றுக்குள் கொஞ்சம் எளிமையான தண்டனை என்னவென்றால் ஒரு நாள் முழுவதும் தென்னை நார்களை பிய்த்து வெறுங்கையால் நூலாக மாற்றுவது. இந்த நிலையில்தான் நவம்பர் 14 1913 இல்  அவர் பிரிட்டிஷாருக்கு அளித்த விண்ணப்பத்தில் தாம் இச்சிறையிலிருந்து நீக்கப்பட்டால் சட்டத்திற்குட்பட்ட செயல்பாடுகளுடன் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறும் வாசகங்கள் இருக்கின்றன. அதற்கு பின்னர் நடப்பவைதான் முக்கியமானவை. பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் தந்திரமானவர்கள். வீர சாவர்க்கர் உண்மையாகத்தான் இவற்றை சொல்கிறாரா என அறிய ஒரு பரிசோதனை செய்கின்றனர்.  நவம்பர் 16 1913 இல் சாவர்க்கர் தம் தோழர்களுக்கு தாம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டதாக தெரிவிக்க வேண்டுமென பிரிட்டிஷ் அரசு கூறுகிறது. வீர சாவர்க்கர் அதை ஏற்கிறார். ஆனால் அதற்கு அரசு இடைத்தரகு இன்றி நேரடியாக தாமே பேச வேண்டும் என்று சொல்கிறார்.  அவ்வாறில்லையெனில் தாம் ஏதும் செய்ய இயலாதெனக் கூறுவிடுகிறார்.  பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு சாவர்க்கர் ‘திருந்தவில்லை’ என்பது புரிகிறது. இதற்கு பின்னர் அந்தமான் சிறையைப் பார்வையிட்ட சர்.ரெஜினால்ட் கிரடாக்கு தம் அறிக்கையில் வீர சாவர்க்கர் இன்னமும் ‘திருந்தவில்லை ‘ என கூறுகிறார்.

சிறை ஆவணங்கள் மூன்று சம்பவங்களில் வீர சாவர்க்கர் சிறைக்குள் தண்டனை பெற்றதை சொல்கின்றன. 1912, 1913, 1914. ஆம். அவர் ‘கருணை மனு’ சமர்ப்பித்த பிறகு சிறைக்குள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தியதற்காக தண்டனை பெற்றிருக்கிறார்.

முதல் உலகப் போர் காலகட்டம். வீர சாவர்க்கர் மீண்டும் ஒரு கருணை மனு அனுப்புகிறார்:

அக்டோபர் 3, 1914 தேதியிட்ட அந்த விண்ணப்பத்தில்  அரசியல் கைதிகளை விடுவிக்க கோருகிறார். அவர்கள் விடுவிக்கப்பட்டால் முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்காகப் போராடுவர் என வீரசாவர்க்கர் கூறுகிறார்:  ‘எனது விடுதலை எனக்கு முக்கியமில்லை. எனவே என்னை விடுதலை செய்யாமல் என்னைத்தவிர ஏனைய அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள். ‘  சர்.கிரடாக் பின்வரும் வார்த்தைகளால் வீர சாவர்க்கரின் விண்ணப்பதை நிராகரிக்கிறார்: ‘அவர்களது இரகசியத்தொடர்புகளை நாம் கண்காணித்து வருகையில் தெரிவது என்னவென்றால் அவர்கள் இத்தருணத்தை (முதல் உலகப்போரை) தமக்கு ஆதரவாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே. ‘

சாவர்க்கரின் இந்த கொந்தளிப்பான சிறை வாசத்துடன் நேருவின் சிறைவாசத்தை ஒப்பிடுவது அவசியமாகிறது.

nehru2ஜவஹர்லால் நேருவின் அணுக்கரான ஆஸஃப் அலி தனது காதல் மனைவிக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் நேருவுக்கு சிறையில் அளிக்கப்படும் சலுகைகளை பக்தி பரவசத்துடன் வர்ணிக்கிறார். அவருக்கென்றே தனியான படுக்கை, தனி நாற்காலிகள், தனியான மேசை, அவருக்கு பிடித்தமான நீல நிற ஜன்னல் திரைசீலைகள்… நேருவின் சிறை அறை ’ஒரு குட்டி பங்களாவாகவே’ காட்சி அளித்தது. என்கிறார் அவருக்கென்று அவர் விரும்புல் நூல்கள் தருவிக்கப்பட்டன. அவர் விரும்பும் போது தனிமையும் விரும்பும் போது பிறருடன் சேர்ந்திருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர் தேவைப்படும் போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க அனுமதிக்கப்பட்டார். பொதுமேடைகளில் பேசுவது மட்டும் முடியாது அவ்வளவுதான். 

சிறை வாசத்தையே வசந்தகாலமாக்கும் ரசவாதி நேரு.

ஒவ்வொரு இந்திய தேசியவாதியின் அயல் நாட்டு உறவுகளும் கண்காணிக்கப்பட்டது. ஆனால் நேரு தன் மனைவியின் சுகவீனத்துக்காக சுவிட்சர்லாந்த் சென்றார். சாவர்க்கருக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்திருந்தது. ஆனால் பிரிட்டிஷார் கடுமையாக எச்சரித்திருந்தனர். எந்த நேரத்திலும் எங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் நீங்கள் மீண்டும் அந்தமானுக்கு அனுப்பப்படுவீர்கள். ஆனால் 1938 இல் சாவர்க்கர் ஜப்பானில் இருக்கும் விடுதலை வீரரான ராஷ் பிகாரிபோஸுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்கிறார்.  அதே ஆண்டு ராஷ் பிகாரி போஸ் ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்குகிறார். ஜனவரி 1941 இல் பாரதத்திலிருந்து நேதாஜி தப்பி வெளியேறுகிறார். அதற்கு முன் இறுதியாக வீர சாவர்க்கரை மட்டுமே சந்திக்கிறார். இச்சந்திப்பும் அடைத்த கதவுகளுக்கு பின்னே நடைபெறுகிறது. நேதாஜிக்கு சோவியத் இல்லாவிட்டால் ஜெர்மனி ஆகிய நாடுகளிடமிருந்து ஆதரவு கிடக்கும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் சாவர்க்கர் ஜப்பானிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இருக்கும் இந்தியர்களையும் இந்திய தேசியவாதிகளையும் சந்திப்பதே நல்லதென்று கருதுகிறார்.

Savarkar12ஜூன் 25 1944 இல் சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பில் நேதாஜியின் ஆஸாத் ஹிந்த் போர்படையின் முதன்மை தலைவர்கள் வீர சாவர்க்கருக்கு தம் நன்றியையும், வணக்கங்களையும்  சமர்ப்பிக்கிறார்கள். ‘சில அரசியல் தலைவர்கள் தெளிவான பார்வையின்மையின் காரணமாக இந்திய இராணுவ வீரர்களை கூலிப்படையாளர்கள் எனச் சொல்கையில் வீர சாவர்க்கர் அச்சமின்றி இளைஞர்களை இந்திய இராணுவத்தில் இணையுமாறு கூறுவது மனமகிழ்ச்சி அளிக்கிறது. ‘ என சுதந்திர இந்திய தேசிய ராணுவத்தின் தலைவர்  கூறுகிறார். ‘வீர சாவர்க்கருக்கு வணக்கம் தெரிவிப்பது தியாகத்திற்கே வணக்கம் தெரிவிப்பதான மகிழ்ச்சியும் கடமையுமான செயலாகும். ‘ என ராஷ் பேகாரி போஸ் கூறுகிறார்.

என்ன தியாகம் செய்தால் என்ன?

நேருவுக்கு சர்வதேச அரசியல் தெரியும். வேறெந்த தலைவருக்கு அது தெரியும்? நேருவுக்கு அழகான ஆங்கிலம் பேச தெரியும். அயல்நாட்டு பத்திரிகையாளர்களுடன் அற்புதமான ஆங்கிலத்தில் உரையாடத் தெரியும். காஷ்மிர் பிரச்சனைக்கு கூட இந்திய ராணுவத்தை விட மௌண்ட்பேட்டன்களுடனான புரிதல் மூலமாக பிரச்சனையை தீர்த்துவிட முடியுமென்று நம்பிய அகிம்சா மூர்த்தி நம் வசந்த கால இளவரசன் என்கிறார்கள்.

modiஅத்தகைய திறமைகள் சாவர்க்கருக்கு உண்டா? ஐநா சபைக்கு காஷ்மிர் பிரச்சனையை கொண்டு போக படேலுக்கு தெரியுமா? சாவர்க்கர் உயிரை துச்சமென மதித்து ஆகப்பெரிய இழப்புகளை சந்தித்து இறுதி மூச்சு வரை தேசத்தையே தன் லட்சியமாக க்கொண்டு வாழ்ந்திருக்கலாம். சமஸ்தானங்களாக சிதறுண்டு போகட்டும் என வெள்ளைக்காரன் போட்ட திட்டத்தை மண்ணை கவ்வ வைக்க தன் உடல்நிலையை தியாகம் செய்து படேல் உழைத்திருக்கலாம்.  பெருநோய் உடலை அரிக்க சுப்பிரமணிய சிவா செக்கிழுத்திருக்கலாம்… ஆனால் அன்னை இந்திராகாந்தி சின்னவயதிலேயே பொம்மைகளை தன் முன் நிற்கவைத்து அவற்றிடம் இன்குலாப் சிந்தாபாத் என முழங்கினார் தெரியுமா? (இது பாட புத்தகங்களில் கூட இடம் பெற்ற நிகழ்ச்சி.) ஜவஹர்லால் நேரு – அந்த வசந்தத்தின் இளவரசன் செக்கசெவேலென்று இருப்பார் தெரியுமா?

ஆம்…

தேநீர் விற்றவர் தேசத்தலைவர் ஆகமுடியுமா என்கிற கேள்வி ஊடகச்சீற்றமின்றி எவ்வித தார்மிக வெட்கமும் இன்றி வைக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் இதுதான். இதுவும் போலி மதச்சார்பின்மை மனவியாதிதான்.

தேநீர் விற்றவர், தெருவில் வாழும் மக்கள் நிலையை அவர்களில் ஒருவராக அனுபவித்தவர் அவர்தான் சிறந்த தேசத்தலைவர்களாக முடியும்… அத்தகையவர் மட்டுமே ஆக முடியும்.

நாளை காலை மீண்டும் சந்திப்போம் தேநீர் கோப்பையுடன்…

வந்தே மாதரம்!

 

 

 

செப்-26, திருச்சி: நரேந்திர மோடி அழைக்கிறார்

இளந்தாமரை மாநாட்டில் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் நரேந்திர மோடி எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார். இந்த மாபெரும் நிகழ்வில் பங்கு பெற இணையத்தில் இங்கே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

செப்டம்பர்-26 அன்று திருச்சியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அளவில் தொண்டர்கள், குறிப்பாக 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தித் தர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://modiintamilnadu.com/index-intamil.php

Modi_Trichy_FB

அன்புள்ள அண்ணன் திருமாவளவனுக்கு….

மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு,

வணக்கம்.

மோடிக்கு விசா கொடுக்கக் கூடாதென்று ஒபாமாவுக்கு இஸ்லாமியர் பலருடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளீர்கள். இதை செய்த தமிழ்நாட்டு புண்ணியவான்கள் நீங்கள் மட்டும் இல்லை. கூடவே வேறு சிலரும் செய்துள்ளனர். ஆனால்  குளவி உங்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்கிறது ஏனெனில் நீங்கள் எந்த சமுதாயத்துக்காக குரல் கொடுப்பதாக சொல்கிறீர்களோ அந்த சமுதாயத்துக்கு ஒரு ஹிந்துவாக குளவி கடன்பட்டிருக்கிறது. அந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து ஒரு ஹிந்துவாக குளவி பெரும் குற்ற உணர்வும் வேதனை உணர்வும் அவமான உணர்வும் கொண்டிருக்கிறது.  thiruma3சில மாவட்டங்களில் நிலவும் இரட்டை டம்ளர் முறையை ஒழித்ததில் விடுதலை சிறுத்தைகளுக்கு உள்ள பங்கு மிக சிறப்பானது. வரலாற்று முக்கியத்துவமுடையது. அதையும் எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதது. அதற்காக அக்கட்சியின் தலைவராக உங்களை குளவி கையெடுத்து வணங்குகிறது.  ஈஷா யோகா சத்குரு ஜக்கி வாசுதேவ் உடனான தங்கள் உரையாடல் மிகச் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு ஹிந்து ஆன்மிகத்தலைவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அவை. அவற்றை பொது ஊடகத்தில் அருமையாக முன்வைத்த தங்கள் குரலுக்காகவும் குளவி உங்களுக்கு கடன் பட்டிருக்கிறது. [காணொளி இங்கே] மேலும் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் படுகொலையைக் கண்டித்துள்ளீர்கள் அதற்கும் நன்றி.

ஆனால் உங்கள் இஸ்லாமிய ஆதரவு நிலைபாடு ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளுக்கான குரல் என்பதை தாண்டி ஒரு மதவாதத்தின் ஆதரவு, மத ஏகாதிபத்தியத்தின் ஆதரவு  என்பதாக மாறுவதை குளவி காண்கிறது.  பாரதமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போதிசத்வரான பாபா சாகேப் அம்பேத்கரின் பெயரை தினமும் காலை பிரார்த்தனையில் குளவி சொல்லி வருகிறது.  ambedkarஅண்ணலின் படத்தையே பயன்படுத்தி அரசியல் செய்யும் முதன்மையான தமிழக அரசியல்வாதியாக நீங்கள் இன்று விளங்குவதால் நீங்கள் செய்யும் செயல்களைக் குறித்து  இக்கடிதத்தை எழுத வேண்டியதாகிறது. நீங்கள் தொடர்ந்து தீவிர இஸ்லாமிய ஆதரவு நிலைபாட்டை எடுத்துக் கொண்டிருப்பதை தமிழகம் அறியும். கோவை குண்டுவெடிப்பின் முக்கிய மூளை என கைது செய்யப்பட்ட மதானியை ஆதரிக்கிறீர்கள். ’நான் இஸ்லாமியன் ஆவேன்’ என கூறுகிறீர்கள்.  இதை நீங்கள் செய்வது  உங்கள் உரிமை. ஆனால் இதை நீங்கள் அண்ணல் அம்பேத்கரின் பெயரில் செய்யும் போது இந்த மனநிலை குறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் வருகிறது.  இது பாபா சாகேப் அம்பேத்கரின் குரல்:

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு அவர்கள் ஹிந்துக்களை எதிர்க்கிற காரணத்தினாலேயே முஸ்லீம்களை நண்பர்களாக பார்க்கிற ஒரு வழக்கம் வந்திருக்கிறது. இது ஒரு தவறு. முஸ்லீம்கள் ஒடுக்கப்பட்ட மகக்ளின் ஆதரவை விரும்புகிறார்களே அல்லாமல் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதில்லை. (டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர், Writings and Speeches, பாகம்- 17, பகுதி 1, Education Dept., Govt. of Maharashtra,பக்.367)

இதன் சத்தியத்தன்மையை அறிய உங்களுக்கு பல சந்தர்ப்பங்கள் வாய்த்துள்ளன. ஆனால் அவற்றிலெல்லாம் மிக வேதனை தரும் ஒரு சம்பவத்தை இப்போது நினைவுபடுத்துகிறேன்.

கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள பழையப்பட்டினம் என்ற கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள், 35 இஸ்லாமிய குடும்பங்கள், 40 கோனார் சமூக குடும்பங்கள், 20 ரெட்டியார் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராமப் பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபா கூட்டம் தலைவர் சி.தர்மலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் பஞ்சாயத்து நூலகம் எதிரில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் பின்னர் சில இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே அந்த சிலையை பிரச்சனைக்குள்ளாக்குகின்றனர்.  இஸ்லாமியர்கள் உருவவழிபாட்டை மேற்கொள்ளாத காரணத்தால் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு முன் அந்த சிலை இருக்கக்கூடாது என்கின்றனர். சிலைக்கு மாலையோ, மரியாதையோ செய்ய ஊர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  தலித் மக்கள் தவித்தனர். தலித் தலைவர்களை சந்தித்து முறையிடுகின்றனர். ஆனால்  விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?thiruma1 அந்த சிலையை அங்கிருந்து அகற்றி தலித் மக்கள் பகுதியிலே வைத்துக்கொள்ள வலியுறுத்தினீர்கள்.  பாபா சாகேப் அம்பேத்கர் ஒரு சாதியின் தலைவர் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் இருப்பதால் இந்த தேசத்தின் இதயமாகவும் அவர் இருக்கிறார். அவர் சிலையை ஊர் மத்தியில் அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக் கொண்ட சூழலில் மதவாத சக்திகளுக்காக தலித் பகுதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என சொல்வது எவ்விதத்தில் நியாயம்? ஒரு படி மேலே போய் அண்ணலின் சிலையை அகற்றுவதாக நீங்களே இஸ்லாமிய ஜமாத்துக்கு கடிதமும் எழுதினீர்கள்.

இன்றைக்கு நீங்கள் ஆதரிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் காவல்துறையிலும் ராணுவத்திலும் கூட மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கோருகின்றனவே. ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

இந்தியா ராணுவத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரிப்பை குறைக்கவும் இந்தியாவை பாதுகாப்பாக்கவும் இந்த விரோத சக்திகளை வெளியேற்றுவதே நல்லது. நாம் நம் தேசத்தை பாதுகாப்போம். பாகிஸ்தான் அதன் இஸ்லாமியத்தை இந்தியாவில் பரப்ப முடியும் எனும் தவறான எண்ணத்தை கைக்கொள்ள வேண்டாம். ஹிந்துக்கள் அதனை மண்ணைக் கவ்வ வைப்பார்கள். எனக்கு சில விஷயங்களில் சாதி இந்துக்களுடன் மோதல் இருக்கிறது.  உண்மைதான். ஆனால் நான் உங்கள் முன் சபதமேற்கிறேன். என் உயிரை தேசத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்பேன் என்று சபதமேற்கிறேன். (டாக்டர்.பீமராவ் ராம்ஜி அம்பேத்கர், Writings and Speeches, பாகம்-17, பகுதி- 3 Education Dept., Govt. of Maharashtra, பக்.233)

இன்றைக்கு நீங்கள் இங்கு ஆதரிக்கும் அதே மதவாத இயக்கங்கள்தான் 2010 இல் கேரளத்தில் ஒரு தலித் இளைஞனை ரத்தம் கசிய 23 வெட்டுகளுடன் பிணமாக்கின. (Dalit youth executed ‘Taliban-style’ in Kerala, The Times of India, 20-Oct-2010) ஆனால் அவையே இங்கே தலித்துகளுக்கு சட்ட உதவி வழங்குவோம் என கூறுகின்றன.

சரி இவற்றையெல்லாம் மீறி உங்களுக்கு ஒரு நியாயம் கோபம் உள்ளது. தர்மபுரியில் வீடுகள் எரிந்த போது எந்த இந்து அமைப்புகளும் இந்து ஆதீனங்களும் பார்க்கவில்லை என. இளவரசன் மரணம் விசயத்தில் இந்து அமைப்புகளின் நிலைபாடு என்ன என்று. இதே வருத்தம் வேதனை ஆத்திரம் குளவிக்கும் இருக்கிறது. அதை நீங்கள் நேரடியாக கேட்கலாம். ஆனால்  எங்கே சங்கம் வலுவாக உள்ளதோ அங்கே இவ்விசயம் எப்படி கையாளப்படுகிறது என்பதை நீங்கள் நோக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

பாபா சாகேப் பெயரை மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைப்பது என முடிவு செய்த போது அதை சிவசேனா எதிர்த்தது. ஆனால் ஆர். எஸ்.எஸ் பாஜக அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றின. பாபா சாகேப் அம்பேத்கரின் அனைத்து எழுத்துக்களையும் மகாராஷ்டிர அராசங்கம் வெளியிட்ட போது 123அதில் ‘ரிடில்ஸ் இன் ஹிந்துயிசம்’ எனும் பகுதி இண்டு மதத்தை கடுமையாக தாக்குவதால் அதை வெளியிடக்கூடாது என பல பழமைவாதிகள் கூறினார்கள். ஆனால் அப்போது ஆர்.எஸ்.எஸ் அதிகாரபூர்வமாக அதை வெளியிட ஆதரவு தெரிவித்தது.  ஆர் எஸ் எஸ்ஸின் மூன்றாவது சர்சங்கசாலக்காக இருந்த பாளா சாகேப் தேவரஸ் அவர்களின் முதல் பேச்சிலேயே பாபா சாகேப் முன்வைத்த சமூக ஆன்மிக சமத்துவத்தைதான் மேற்கோள் காட்டினார். ஆம்! இன்றைக்கு திராவிட இயக்கங்களும் கம்யூனிஸ்ட்களும் பாபா சாகேபை தங்கள் போஸ்டர்களில் போடுவதற்கு முன்னால் 1970களிலேயே தன் பிராத்தனையில் அவரது புனித நினைவை போற்றும் இயக்கம் ஆர் எஸ் எஸ். பாபா சாகேப் ‘நான் ஹிந்துவாக மடிய மாட்டேன்’ என்று சொன்னார். அந்த பிரகடனத்துக்கு பிறகே அவரை ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க டாக்டர் ஹெட்கேவார் அழைத்தார். பாபா சாகேப் அம்பேத்கரும் அதற்கு சம்மதித்து ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பாபா சாகேப் மும்பையில் போட்டியிட்ட போது அவரது தேர்தல் ஏஜெண்டாக செயல்பட்டவர் பாரதிய மஸ்தூர் சங்க அமைப்பின் நிறுவனரான தத்தோ பந்த் தெங்கடிஜி அவர்கள்.  புகழ்பெற்ற தலித்திய இலக்கியவாதி நாமதேவ் தியோல் ஆர்.எஸ்.எஸ்ஸை தலித் விடுதலைக்கு உகந்த ஒரு அமைப்பாக கருதி கை கொடுத்தது அண்மையில் நிகழ்ந்த நிகழ்வு.  அனைத்து முக்கிய இந்து கோவில்களிலும் முதன்மை பூசகராக தலித்தை நியமிக்க வேண்டுமென்று அண்மையில் காலமான சுதர்ஷன்ஜி கூறியதையும் நீங்கள் தெரிந்திருக்கலாம்.photo.cms_thumb

ஹிந்துத்துவத்தின் இந்த பாரம்பரியத்தை நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டுமென ஒரு சகோதர உரிமையுடன் உங்களுக்கு குளவி கோரிக்கை வைக்கிறது.

இந்து மதத்தை தாக்குவதாகவே இருந்தாலும் பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்துக்களை வெளியிட ஆதரவு தெரிவித்த இந்துத்துவர்கள் எங்கே அதற்கு மாறாக அவர் சிலையை சட்டபூர்வமாக நீதி மன்ற அனுமதியுடன் பொதுஇடத்தில் வைக்க மதவாத எதிர்ப்பு தெரிவிக்கும் சக்திகள் எங்கே? இதில் நீங்கள் யாருடன் எங்கே இணைந்து நிற்கிறீர்கள்?

குஜராத்திலும் தலித்துகள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ஆனால் அங்கே நீங்கள் எந்த மோடியை எதிர்க்கிறீர்களோ அவர்தான் தலித்துகள் மீதான சம்பிரதாய கொடுமைகளை களைய எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தார். ஆம் தலித்துகளை கோவில் பூசகர்களாக்க குஜராத் அரசு திட்டம் கொண்டு வந்துள்ளது.  காணொளியை இங்கே காணவும்.  மனித உரிமை கமிஷன் தலைவரும் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பாலகிருஷ்ணன் குஜராத்தில் தலித்துகளின் நிலை மற்ற இடங்களை விட நன்றாக உள்ளதென கூறியுள்ளார். (பார்க்கவும்:http://www.dnaindia.com/india/1688964/report-gujarat-doing-well-in-dalit-welfare-says-nhrc-chairman)

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து இந்திய தலைவர் ஒருவருக்கு எதிராக அமெரிக்க அதிபருக்கு கையெழுத்திட்டு நீங்கள் அனுப்பியுள்ள கோரிக்கை ஏனோ பாபா சாகேப் இந்திய அரசியல் நிர்ணய சட்ட குழுமத்தில் இறுதியில் ஆற்றிய உரையை நினைவூட்டியது:

என்னை மிகவும் சங்கடப்படுத்தும்  ஒரு விஷயம் உண்டு. அது இந்தியா இதற்கு முன்னர் தன் சுதந்திரத்தை இழந்திருக்கிறாள் என்பது மட்டுமல்ல அது அவளுடைய சொந்த மக்களின் துரோகத்தால் நம்பிக்கைத் துரோகத்தால் நடந்தது என்பதுதான்.  முகமது பின் காசிம் இந்த தேசத்தின் சிந்து பிரதேசத்தின் மீது படையெடுத்து வந்த போது  தாஹிர் அரசனின் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு தனது அரசனுக்காக போரிடாமல் இருந்தார்கள்.  ஜய்சந்தின் துரோகமே முகமது கோரியை இந்தியாவுக்குள் அழைத்து ப்ருத்விராஜனுக்கு எதிராக போரிட செய்தது  வீர சிவாஜி ஹிந்துக்களின் விடுதலைக்காக போராடிய போது சில மராட்டிய பிரபுக்களும் அரசர்களும் மொகலாய பேரரசர்களுடன் இணைந்து செயல்பட்டனர். சீக்கிய அரசுகளுக்கு shivajiஎதிராக பிரிட்டிஷ் செயல்பட்ட போது குலாப் சிங்  பிரிட்டிஷாருக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்தார். 1857 இல் பாரதத்தின் பெரும் பகுதி பிரிட்டிஷாருக்கு எதிராக முதல் விடுதலை போரில் எழுந்த போது சீக்கியர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. வரலாறு மீண்டும் இவ்வாறு நிகழுமா? இந்த பரிதவிப்புக்கு காரணம் இன்றும் நம் பழைய எதிரிகள் சாதியமாகவும் சித்தாந்தபிடிப்புகளாகவும்  இருக்கபோவதும் நாம் பல்வேறு கட்சிகளாக பிரிவுபட்டு நிற்கபோவதுமே காரணம். தங்கள் கொள்கைகளுக்கு மேலாக இந்தியர்கள் பாரதத்தை முன்னிறுத்துவார்களா? எனக்கு தெரியாது.  ஆனால் இது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும். அரசியல் கட்சிகள் தேசத்தை தேசத்தின் தனியாண்மையை தங்கள் கோட்பாடுகளுக்கு மேலாக வைக்க வேண்டும்.  இல்லாவிடில் நம் சுதந்திரம் இரண்டாவது முறையும் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டு நாம் அதை நிரந்தரமாக இழந்துவிடுவோம். அத்தகைய ஒரு சூழல் எழுவதற்கு எதிராக நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இயங்க வேண்டும். நம் சுதந்திரத்தை நம் இறுதிச் சொட்டு ரதத்ததால் பாதுகாக்க வேண்டும்.

கீழே உள்ள இந்த இரண்டு கடிதங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே கேள்வியைத்தான் உங்கள் மனசாட்சியிடம் கேட்கவைக்கிறது. பாபா சாகேப் அம்பேத்கர் மேலே கூறிய உரையில் பட்டியலிடும் விடுதலை வீரர்களான தாஹிர், பிருத்வி ராஜன், வீர சிவாஜி, மஹாராஜா ரஞ்சித் சிங் ஆகியோருடன் உங்கள் அணியா? அல்லது அன்னிய ஆக்கிரமிப்பாளருடன் இணைந்தவர்களுடன் உங்கள் அணியா? thiruma2

அண்ணன் திருமாவளவன் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தகுதியான வெகுசில அரசியல்வாதிகளில் ஒருவர். அது சமூக ஒருங்கிணைப்பின் மூலம் பாபா சாகேப் அம்பேத்கரின் வாரிசாக நிகழட்டும். பெருந்தலைவர் எம்.சி.ராஜாவும் சுவாமி சகஜானந்தரும் ஐயா வைகுண்டரும் பாரதியும் உருவாக்கிய பாதையில் நிகழட்டும். தீராவிடத்தின் பாதையில் அல்ல.

வேதனை கலந்து இன்னும் நம்பிக்கையுடன்

ஜெய் பீம் ஜெய் ஹிந்த்

wasp1குளவி

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

uthar3கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத், பத்ரி நாத் அமைந்துள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு நடைபெற்று இருக்கிறது. புனித கங்கை அன்னையும், யமுனை அன்னையும் தன் ஊழி நடனத்தை ஆடியிருக்கிறார்கள். இந்துக்களின் புனித யாத்திரைக்காலமான இந்த நாள்களில் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் பெய்த பெரு மழையால் கங்கையிலும், யமுனையிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வழியில்  நதியின் பாதைக்கு இடையூறாகவும் ஆக்ரமித்தும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் விடுதிகளோடு அருகில் இருந்த கட்டிடங்களையும், வழிபாட்டு தடங்களையும்  நகர்த்தி விட்டது. தனக்கான பாதையை நதிகள் ஏற்படுத்தி கொண்டது.  அலக்நந்தா, பாகீரதி, மந்தாகினி நதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெய்த கனமழை பெருவெள்ளமாக மாறி விட்டது. மிகப்பெரிய பேரழிவை இந்த வெள்ளமும், அதனால் நதிக்கரைகளிலும் , மலைப்பாதைகளிலும் ஏற்பட்ட  நிலச்சரிவு பெருந்துயரத்தை ஏற்படுத்தி விட்டது. 3 நாள்களாக இடை விடாத பெய்த மழையால் ஏற்பட்ட அபரிமிதமான நீர்ப்போக்கு பெரும் நிலச்சரிவை கரை யோரங்களிலும், பெருமழை தன் பங்கிற்கு மலைபகுதிகளில் பெரும் நிலச்சரிவையும் ஏற்படுத்தி உத்தரகாண்ட் மாநிலத்தை தேசத்தின் பிற பகுதிகளில் இருந்து பிரித்து விட்டது .

uthar1பெருவெள்ளமானது இந்துக்களின் பல புனித திருத்தலங்களை உழுக்கி எடுத்து விட்டது. கேதார் நாத், பத்ரி நாத் மற்றும் சமேலி ,கெளரிகுண்ட் ஆகிய இடங்களில் வழிபட்டு கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் உடமைகளை இழந்து மாட்டிக்கொண்டார்கள். அந்த மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தங்களின் இருப்பிடத்திலேயே வீடு மற்றும் பொருட்களை இழந்து அனாதைகளாக இருக்கிறார்கள். தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் முன்னோர்களுக்கு நீர் கடன் செய்வதற்கும், தங்களின் உயிருக்கும் மேலாக இருக்கும் இறைவனை தரிசிப்பதற்காகவும் வந்தவர்கள் ஆதரவின்றி நிற்கிறார்கள். சாலை வழியாகவோ, இருப்பு பாதைகள் வழியாகவோ அவர்கள் மலை பிரதேசங்களிலிருந்து சமவெளிக்கு வருவதற்கு எந்த மார்க்கமும் இல்லை. தொடர்ச்சியாக பெய்யும் பெரு மழை, மலைபிரதேசங்களுக்கே உரிய ஊடுருவும் குளிர்,  நிராதாரவான நிலை ஏற்படுத்தி இருக்கும் அச்சம் என அங்குள்ள பக்தர்கள் மிகவும் பயந்து போய் இருக்கிறார்கள். உணவுப்பொருட்கள் குறைபாடு, பெரும்பாலும் வயதான பக்தர்களுக்கான மருத்துவ வசதிகள் . மூப்பும், தகவல் தொடர்பு குளறுபடிகளும் பக்தர்களை இன்னும் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தி வருத்தப்பட வைக்கிறது.

uthar2இதற்கிடையில் சுமாராக 90 சதுர கிலோமீட்டர் அளவிற்கு  நதிக்கரை ஓரங்களில் இருந்த கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. பேருந்துகள், மகிழ்வுந்துகள், கார்கள், வீடுகள் அப்படியே வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள் நமக்கு பெரும் அச்சத்தை ஊட்டுகின்றன. கேதார் நாத், பத்ரி நாத் பகுதிகளில் ஆலயம், புண்ணிய ஸ்தலங்களை சுற்றி சிறிய அளவில் கடை வைத்திருந்த சுமார் 5000 பேருக்கு மேல் என்ன ஆனார்கள் என்ற விவரம் இல்லை. கழுதைகளையும், குட்டை குதிரைகளையும் கொண்டு பக்தர்களை மேலே ஏற்றி சென்று சேவை செய்து கொண்டிருந்த சேவையாளர்களும், கால் நடைகளும் இப்போது இல்லை. மலை மீது வயதானவர்களை தூக்கி சுமந்து செல்லும் டோலிகள் என்ன ஆனார்கள் என்ற விபரம் இல்லை. பல மாநிலத்தை சேர்ந்தவர்களை பற்றிய விபரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. வெள்ளகாட்சிகளை காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. மனம் பதை பதைப்புடன் ஒரு வித அதிர்ச்சி மன நிலையில் உறைந்து பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது நிச்சயம் மிகப்பெரிய மானுட சோகமாக காலத்தில் உறைந்து தான் இருக்கப்போகிறது.

uthaஇதில் நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு நம்மையும், பாதிக்கப்பட்டவர்களையும் ஆசுவாசப்படுத்தியது ராணுவத்தினரும் , ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் தான் . இவ்வளவு பெரிய மானுட சோகம் நடந்து கொண்டிருக்கையில் மாநில அரசும், மத்திய அரசும் தங்களின் செயல்படாத தன்மையிலிருந்து விழித்து கொள்ள 2 நாள்கள் ஆனது. அதற்குள் மரணங்களின் எண்ணிக்கை 10,000த்தை தாண்டியிருந்தது. 2,00,000க்கும் மேலான மக்கள் துண்டிக்கப்பட்ட நிலத்தில் நிராதரவாக நின்றார்கள் . 585 பிணங்கள் கங்கையிலேயே எடுக்கப்பட்டது. ஆனால் அரசு இன்னும் சாவு எண்ணிக்கை 5000க்குள் தான் இருக்கும் என்று பொய் சொல்லி வருகிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் விஜய் பகுகுணா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த பேரிடரை சமாளிக்க முடியாமல் ஸ்தம்பித்து பின்னரே தாமதமாக நடவடிக்கையில் இறங்கியது. மத்திய அரசும், பேரிடர் மேலாண்மை மையமும் 2 நாள்கள் கழித்தே விழித்து ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்த போது வெள்ளம் பெருமளவு உயிர்களை பலி கொண்டு, பலருடைய வாழ்வாதரங்களை சிதைத்து முடித்திருந்தது.

uthar14
மீட்பு, மறு சீரமைப்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்

ராணுவ வீரர்களும், இந்திய ராணுவத்தின் விமானப்படை வீரர்களும் உடனடியாக களம் இறங்கி மீட்பு பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டு மக்களை காப்பாற்றினார். அவர்களுக்கு உறுதுணையாக ராணுவத்தின் பொறியாளர் பிரிவும், மருத்துவர்கள் பிரிவும் உடனடியாக செயல்பட்டு பல மனித உயிர்களை காப்பாற்றினார்கள். உத்தரகாண்ட்டின் கேதார் மலை பிரதேசம் முழுக்க சாலை மார்க்கமாக அணுக இயலாதவாறு துண்டிக்கப்பட்டு விட்டது. ராணுவ பொறியாளர்கள், வீரர்கள் இணைந்து அவசர வழிகளையும், சாலை மார்க்கங்களையும் சீர் செய்ய முயன்று சாதித்தார்கள். நதிகளை கடக்க ரோப்கள் வழியாகவும், அங்கேயே கிடைத்த மூங்கில்கள், கயிறுகள் கொண்டும் தற்காலிக பாலங்களை அமைத்தும் மக்களை சமவெளிக்கு கடத்தினார்கள். ரிஷிகேஷின் பரமார்த்த  நிகேதன் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான சிவன் சிலையின் கழுத்து வரை ஒடிக்கொண்டிருந்த வெள்ள நீரை காண்பித்தார்கள். ஆற்றின் விஸ்வரூபம் . இயற்கையின் ஊழி மனித பிரயத்தனங்களின் எல்லையை காட்டி விட வல்லது.

uthar4ராணுவ வீரர்கள் 2000 பேருக்கு மேல் 17ம் தேதி முதல் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய ராணுவத்தின் விமானப்படை,இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வீர்ர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்களுடன் இணைந்து மீட்பு பணியை ஆரம்பித்தார்கள். பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒரு சேவையாகும் . அது முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது. ராணுவத்தின் பொறியாளர்கள் பிரிவு தகவல் தொடர்பை செயற்கை கோள் உதவியுடன் மீள் கட்டமைப்பு செய்தார்கள். முதல் 3 நாள்களில் 32772 நபர்களை இந்தோ திபெத் படையும் பேரிடர் மீட்பு படையும் மீட்டது. நேற்று வரை சுமாராக 76000 பேர் வரை மீட்கப்பட்டிருக்கிறார்கள் என அதிகார பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது 6800 ராணுவ வீரர்களும் 40 ராணுவ ஹெலிகாப்டர்களும் களத்தில் இருக்கின்றன. 1 லட்சம் கிலோவிற்க்கு மேலான உணவுப்பொருட்களை ராணுவம் வழங்கி இருக்கிறது. 6 பிரசவங்கள் ராணுவ மருத்துவர்களால் பார்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தேசம் சந்தித்த பெரிய அழிவு மற்றும் சவால் இது என்று சொல்லலாம். ராணுவ வீர்ர்களின் அயராத முயற்சியும், இந்திய விமானப்படைக்கும் உயிருள்ள வரை ஒவ்வொரு இந்துவும் கடமைப்பட்டவனாக இருக்கிறான்.

uthar13பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு சீரமைக்க தனியான துறை ஒதுக்கப்பட்டு வேலை செய்தாலே குறைந்தது 1 ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்படுகிறது. மீண்டும் மழை அங்கே துவங்கி இருக்கிறது. மீட்பு பணிகளை அது பாதித்து இருக்கிறது. அரசு கொஞ்சம் அசமஞ்சமாக இல்லாமல் விரைந்து செயல் பட்டிருந்தால் இன்னும் உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்,.மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நிர்வாக ரீதியில் சுத்தமாக ஒருங்கிணைந்து செயல்படாததால் மீட்பு, நிவாரணப்பணிகள் தாமதமாகிக்கொண்டே சென்றன. இதற்கிடையே குஜராத் முதல்வரும்,பிரதமர் வேட்பாளருமான  நரேந்திர மோடி அவர்கள் விரைந்து வந்து அங்குள்ள மக்களுக்கு தன் அரசு நிர்வாகம் மூலமும், தங்களுடைய பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு மூலமும் உதவிகள் செய்ய ஆரம்பித்தார். களத்தில் இறங்கி. மக்களை காப்பாற்றி அவர்களை அப்புறப்படுத்த தன்னலமற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 1000க்கும் அதிகமானோர் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என முயற்சித்தனர். ஏனென்றால் செயல்படாத காங்கிரஸ் அரசுக்கு அதை பற்றி எந்த அக்கறையும் இருக்காது என்பதை உணர்ந்தே இப்படி செயலாற்றினார்கள். வழக்கம் போல சோனியாவும், மன்மோகனும் வெள்ளம் பாதித்த பகுதிகளை தரையில் இருந்து 800 அடி உயரத்தில்; பார்த்து விட்டு பீட்ஸா சாப்பிட்டு விட்டு அப்படியே பறந்து விட்டனர். காங்கிரஸின் அவல இளவரசர் ஸ்பெயினில் தன் மாபியா காதலியுடன் இருந்தார். அதனால் அவரால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கூட வர முடிய வில்லை.

uthar7

பேரிடர் மேலாண்மையில் ஒரு பகுதியாக உலகத்தின் சிறந்த தேடுதல் தளமாக உள்ள கூகுள் நிறுவனம் தன் பங்கிற்கு கூகுள் பர்சன் ஃபைண்டர் என்ற வசதியை மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறது. இதன் மூலம் நம் சொந்தங்களை தேடிக்கொள்ள வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது கூகுள் நிறுவனம் அதற்கு நம் வாழ்த்துக்கள் . .http://google.org/personfinder/2013-uttrakhand-floods/

வருங்கால பிரதமராக முன்னிற்கும் மோடி தன் அரசாங்கத்தின் அதிகாரிகளுடனும், மருத்துவர்கள், பொறியாளர்களுடனும் நேரடியாக களத்திற்கு வந்தார். மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். மக்களுக்கு ஆறுதல் கூறினார். ராணுவ வீர்ர்களுக்கும், மீட்பு குழுவினருக்கும் உணவு ஏற்பாடுகளை செய்தார். மக்கள் சமவெளியை அடைவதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளை செய்தார். தன் சொந்த செலவிலும், குஜராத் செலவிலும் 4 விமானங்களையும், 25 பேருந்துகளையும், 800 இன்னோவா கார்களையும் வரவழைத்தார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும், ராணுவ வீரர்களும் மீட்ட மக்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.மேலும் வேறு என்ன விதமான உதவிகள் கேட்டாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்கள் இந்த பேரிழப்பை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாஜகவின் எம்.பி. எம்,எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கையளிக்க உத்தரவிட்டார். முதல் நாளிலேயே 2 கோடி ரூபாய் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மைக்கு மோடி அளித்தார். மேலும் மருந்து பொருட்களையும் , குளிர் தாங்கும் உடைகளையும் வழங்கினார். ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக இருந்து ராணுவ வீரர்களை பாராட்டி விட்டு ஊக்குவித்த மோடிக்கு நம் நன்றிகள். மோடியை மீட்க வந்த ராம்போ என வட இந்திய பத்திரிக்கைகள் தலைப்பு செய்தியில் கொண்டாடின.

uthar11மோடியின் செயலாற்றலுக்கு கிடைத்த வரவேற்பை கண்ட காங்கிரஸிம், மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒரு சாராரும் மோடியை வசை மாறி பொழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் சேவை இது போன்ற பேரிடர் நேரங்களில் என்றுமே மிக முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் . சங்க அலுவலகர்களும் ஸ்வயம் சேவக்குகளும் ராணுவத்துடன் இணைந்து மீட்பு பணிகளில் பெருமளவு ஈடுபட்டனர். அது பற்றிய செய்திகளை அறவே தவிர்த்து விட்டு மட்டுமே பிரசுரிக்கும் இதழ்கள் இந்த முறை கொஞ்சம் அவற்றை மாற்றிக்கொண்டன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவைகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி 30 நிமிடங்கள் சிறப்பு காட்சிகளாக ஒளிபரப்பியது. காங்கிரஸ் கட்சியின் ஊது குழல்கள் மறு சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் மோடியை விமர்சித்து கொண்டு தங்கள் வயிற்று எரிச்சலை வெளிப்படுத்தி கொண்டிருந்தார்கள்.

uthar15இந்திய தேசிய ராணுவத்தை கறித்து கொட்டும் சீமான் கும்பல்கள்,திராவிட இயக்க குறுங்குழுக்கள், இஸ்லாமிய அமைப்புகளுக்கு எல்லாம் இது ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இப்படியான ஒரு தியாக அமைப்பை இனி குறை சொன்னால் அவர்களை நாம் சகித்து கொண்டிருக்க கூடாது என்ற நிலைக்கு சாமானியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய விமானப்படை வீரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும், அங்கு பாரத அன்னையின் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு சகோதரனின் நலனுக்காகவும், அவர்களின் குடும்ப நலனுக்காகவும் பிரார்த்தித்து கொள்வது நம் கடமை. அங்கு இருக்கும் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஒவ்வொருவரும் குடும்பத்தோடு இணைய நம் பிரார்த்தனைகளை இறைவனிடம் வைப்போம். மீட்பு, மறு சீரமைப்புக்காக நம் ஒவ்வொருவரும் நம்மாலன உதவிகளை செய்வோம். வாருங்கள் வளமான எதிர்காலத்தை உருவாக்க கை கோர்ப்போம். வாழ்க பாரதம்.

uthar16உங்களின் மேலான உதவிகளை நீங்கள் உங்கள் ஊரில் உள்ள சேவாபாரதி அமைப்பின் அலுவலகத்தில் சேர்ப்பித்து விடலாம். அல்லது  பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் சேர்ப்பித்து விடவும். இது நம் கடமை.

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

மோடிக்கும், மன்மோகன் சிங், சோனியா கும்பலுக்கும் உள்ள வேறுபாடுகள்:

uthar10uthar12மோடி தானே களத்தில் இறங்கி மீட்பு, மறுசீரமைப்பு வேலைகளை ஊக்குவித்து மக்களை காப்பாற்றினார். காங்கிரஸ் கும்பல் அதை மறைக்க தன் மீடியா அடிமைகளை கட்டவிழ்த்து விட்டு மறைக்க முயற்சித்தார்கள். மக்களே முன் வந்து சமூக ஊடகங்களில் அதற்கு எதிர்வினை ஆற்றி மோடிக்கு நன்றி தெரிவித்தார்கள். பிறகு மன் மோகனும் , சோனியாவும் தனியாக சொகுசு விமானத்தில் உட்கார்ந்து கொண்டு வெள்ளக்காட்சிகளை வேடிக்கை பார்த்ததை அனைவரும் விமர்சித்தனர். அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் வெக்கமில்லாமல் பாஜகவையும் மோடியையும் விமர்சிக்க கிளம்பி விட்டது காங்கிரஸ். மேலும் சில அதிர்ச்சியை பார்க்கலாம். வெள்ளத்தில் இறந்தவர்களை தரையில் கொண்டு வந்து உறவினர்களிடம் அளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யாமல் தனியார் ஹெலிகாப்டர் ஏஜென்சிகளுக்கு அந்த காண்ட்ராக்டை அளித்து விட்டது. தனியார் ஏஜென்சி என்றால் அது நிச்சயம் ஒரு பிராடு கம்பெனியாகத்தானே இருக்கும். அதில் மிக முக்கியமாக ஒரு கம்பெனி புளு ப்ரீஸ் சார்ட்டர் சர்வீஸ் அதன் கட்டண விபரம் பின் வருமாறு உயிருடன் vadraஇருப்பவர்களை காப்பாற்றி தரையிறக்க ரூபாய் 2 லட்சம் / ஒரு நபருக்கும், இறந்த உடலை எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க 1 லட்சம்/ஆள் என்ற கணக்கில் வசூலிக்கிறது.  (http://inagist.com/all/349463767689601024/) இந்த கம்பெனியின் முதலாளி யார் என்றால் இத்தாலிய அன்னையின் மருமகன் ராபர்ட் வதேராவுடையது. சுக்தேவ் விகார், டெல்லி என்ற ராபர்ட் வதேராவின் பெயரில் உள்ள கட்டிடத்தில் இயங்குவதாக கம்பெனி பற்ரிய புரபைலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியான பேரழிவிலும் காசு பார்க்கும் ஈன பிறவிகளை என்ன சொல்லி திட்டுவது.மேலும் இவர்களின் இளவரசன் ராகுல் ஸ்பெயின் உல்லாச பயணம் முடிந்து வரும் வரை தேசம் முழுக்க உள்ள அனைவரும் உத்தரகாண்ட் மக்களுக்கு வழங்கிய 13 டாரஸ் லாரி முழுக்க இருந்த உணவு, மருந்து பொருட்களை காங்கிரஸ் கட்சி அலுவலக வாசலிலேயே வைத்திருந்து பிறகு 3 நாள்கள் கழித்து உல்லாச பயணம் முடித்து ராகுல் வந்த பிறகு அந்த நிவாரணப்பொருட்கள் உத்தரகாண்ட் நோக்கி சென்றன. எவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தாலும் அதில் கூட வெக்கமில்லாமல் அரசியல் செய்வது தான் காங்கிரஸ் ஈனப்பிறவிகளின் செயல் என்று வெறுப்போடு மக்கள் முணு முணுக்கிறார்கள். செவிடர்களின் காதில் இது ஏறட்டும். ( https://www.facebook.com/RealityOfKhangress/posts/405835099532800 )

uthar6

 

இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது செய்திகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் MI 17 ரக உலங்கு வானுர்தி விபத்திற்குள்ளாகி 8ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 19 பக்தர்கள் அதே இடத்தில் இறந்து விட்டார்கள். காங்கிரஸ் அரசால் ரஷ்யாவின் தயாரிப்பான இந்த வகை ஹெலிக்காப்டர்கள் உலக நாடுகள் அனைத்தாலும் வாங்கப்பட்டுள்ளது . இது வரை மொத்தமே 14 முறை மட்டுமே விபத்திற்குள்ளான MI 17 வகை ஹெலிக்காப்டர்கள் 5 முறை இந்தியாவில் மட்டுமே விபத்திற்குள்ளாகி இருக்கிறது. 2008 ஆம் ஆண்டிலிருந்து 1500 கோடி ரூபாய்க்கு மேல் ரஷிய அரசுக்கு கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் இந்த வகை வானுர்தி. இது வரை 80 பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களையும், அதிகாரிகளையும் பலி வாங்கியுள்ளது. அனைத்திலும் கமிஷன் வாங்கி இந்த தேசத்தை அழிக்கும் கொலைகார காங்கிரஸ் கட்சியின் இந்த ஊழல் தேச பக்தர்களை பலி வாங்குவதை இன்னும் பார்த்து கொண்டு தான் இருக்க வேண்டுமா ?

நரேந்திர மோடி எனும் சாமுராய்

போருக்கு ஆயத்தமாகும் பாஜக தளபதி
போருக்கு ஆயத்தமாகும் பாஜக தளபதி

நரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய பலசாலிகள், யாராலும் நேர்மையான யுத்தத்தில் தோற்கடிக்க முடியாத சக்திமான்கள். யாருடன் எதிர்த்து போரிடுகிறார்களோ அவர்களின் பலத்தை இருவரும் பெற்று விடுவார்கள். காவிய நாயகன் வாலியை போலவே காவி நாயகன் மோடியும் அத்தகைய வரம் பெற்றவர். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு களத்தில் இருப்பவர் . தேசிய அரசியலில் நரேந்திர மோடியின் எழுச்சிக்கு முன்பு வரை அரசியல் என்பது காங்கிரஸ் செய்யும் களவாணித்தனங்களை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது.  ஆனால் மோடியின் தேசிய அரசியல் பிரவேசத்திற்கு பின் அனைத்தும் மோடி மையப்படுத்தப்பட்ட அரசியலாகவும் செய்தியாகவும் மாறி விட்டது. அரசியல், மற்றும் செய்தி உலகின் மைய அச்சு மோடியை வைத்து சுழல துவங்கி விட்டது.

பில்லா என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் “ என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஏன் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கியது “ என்று அதைப்போலத்தான் மோடி, அவரின் அரசியல் வாழ்வு முழுக்க திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பீகாரில் பாஜக தயவுடன் இவ்வளவு நாளும் வெற்றி பெற்று அரசு அதிகாரத்தில் இருந்த நீதிஷ்குமார், தீடீரென மதச்சார்பின்மை பேய் பிடித்து பாஜகவுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்து கொண்டார். அனைத்து பத்திரிக்கைகளும், ஆங்கில செய்தி ஊடகங்களும் ஏதோ நிதிஷ்குமார் அடுத்த பிரதமர் என்ற அளவுக்கு பேசத்துவங்கி விட்டன. மூன்றாவது அணி ஏற்பட்டு அது ஆட்சியை கைப்பற்றி விடும் என்பது போன்ற புது உளறல்களை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மோடிக்கு இது பெரும் பின்னடைவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இவற்றை எல்லாம் பொய்பிக்க இருக்கிறார் மோடி எனும் சாமுராய். களத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது போர் வெற்றியை தீர்மானிப்பதில்லை, எத்தனை பேர் உணர்வோடும், வீரத்தோடும் போராடுகிறார்கள் என்பது தான் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாகும்.

மோடியை தனிமைப்படுத்துவது தான் இந்திய அரசியலுக்கு நல்லது என்கிறார் நிதிஷ் . ஆனால் தன்னந்தனியாக வென்று வாகை சூடும் அயராத சாமுராய் ஆக விஸ்வரூபம் எடுப்பார் மோடி. பலமான எதிரிகளிடம் மோதும் போது தான் அபாரமான பலமுள்ளவனாக மாறுவது வீரர்களுக்கு இயல்பு. சோதனைகளை சாதனைக்கு உரிய களமாக மாற்றுவது சரித்திர நாயகர்களுக்கு உரியது . நாட்டை சீரழிக்கும் காங்கிரஸ் அரசு, அதன் அயல் நாட்டு தலைமையின் ஆபத்தான செல்வ வளம், கிறிஸ்த்தவ எண்ணிக்கை பலம்,. இந்தியாவை துண்டாடத்துடிக்கும் துரோகிகளுடனான உறவு. அந்நிய சதிகள், கம்யூனிஸ விஷ வித்துக்களின் வதந்தி பிரச்சாரம், தீவிரவாதிகளின் பயம் மோடி வந்தால் நம்மால் வாலாட்ட முடியாதே என்பதற்காக பூணும் மதச்சார்பின்மை வேடம். அயல் நாடுகள் சுயமரியாதையுள்ள , சுய அறிவுள்ள, தேசபக்தியுள்ள சிந்திக்க தெரிந்த வலுவான தலைமை அமையக்கூடாது என்பதற்காக தங்களின் முழு பலத்தையும் மோடிக்கு எதிராக பிரயோகிக்கின்றன.  சொந்த சகோதரர்களுக்குள் பிரிவினையை விதைத்து நாட்டை நாசமாக்க விளையும் அந்நிய சக்திகள், அதற்கும் பலியாகும் சில அப்பாவிகளையும் உள்ளடக்கியுள்ள படையை கொண்டு போருக்கு புறப்படும் இந்த வீரனுக்கு துணை நிற்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை .

அகண்ட பாரதத்தை நோக்கி ...

அகண்ட பாரதத்தை நோக்கி …

மோடியின் வாழ்க்கை முழுக்கவே ஏராளமான சோதனைகளை சாதனைகளாக மாற்றிய நிகழ்வுகள் தான். மாபெரும் வீரர்கள் வரலாற்றில் அடித்தட்டிலிருந்து சில நேரம் உருவாகி விஸ்வரூபம் எடுப்பார்கள் .  அடித்தட்டு மக்களின் கனவு, அவர்களின் வலி இவற்றை உணர்ந்துள்ள ஒரு தலைவனுக்கு இந்த தேசத்தின் நிலை, அதன் பாரம்பரிய பெருமை, அயல் தேசங்களின் அச்சுறுத்தல்கள், அபாயங்கள், சதிகள் பற்றிய அறிவும், தெளிவும் இருந்து அதை தீர்க்கும் ஞானமும், மூத்தோர்களின் ஆசியும் உள்ள ஒரு தனித்தன்மையான தலைவனாக உருவெடுக்கிறார் மோடி. 1950 செப்டம்பரில் மிக சாதாரண விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார். வறுமையை உரமாக கொண்டு வளர்ந்தார். தகப்பனார் மற்றும் சகோதர்ர்க்கு உதவியாக தேனீர் டம்ளர்களை கழுவி வைக்கும் சாமான்யனாக இருந்து இன்று பாரதத்தை வழி நடத்தும் அளவுக்கு தன் உழைப்பாலும், முயற்சியாலும் முன்னெறி இருக்கிறார். பள்ளி பருவத்திலேயே இந்திய பாகிஸ்தான் போரின் போது, ராணுவ வீரர்களுக்கு சேவையாற்றி முன்மாதிரியான வாழ்க்கையை துவங்குகிறார். எம்.ஏ. அரசியல் படிக்கிறார். அரசியல் தத்துவங்கள் பற்றி ஆழமாக கற்கிறார். ஆர்.எஸ்.எஸ் ஸின் தன்னலமற்ற தேச சேவையில் இணைத்து கொள்கிறார். இந்து சமய அறத்தை முன்னிறுத்தும் மாணவ சேவை அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷித்தில் பங்கேற்று தன்னை செதுக்கி கொள்கிறார்.

 

modi0061967ல் குஜராத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்ட போது இரவு பகல் பாராது சேவை செய்கிறார், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் . இதற்கு உரமாக இருந்து கை கொடுத்தனர் அவரின் சக ஏபிவிபி தொண்டர்கள். கல்லூரியில் படிக்கும் போதே நெருங்கிய சங்க தொடர்பில் இருந்த மோடி . தன் கல்லூரி படிப்பிற்கு பிறகு சங்கத்தில் பிரச்சாரகராக தன்னை அர்ப்பணித்து கொள்கிறார். பிரச்சாரக்குள் எனப்படுபவர்கள் ஒரு ரிஷியை போல வாழ்பவர்கள். மிக்க்குறைந்த உணவு, மற்றும் உடை மட்டும் கொண்டு அதிக அளவு சேவையை மக்களுக்கு ஆற்றுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான் அவர்களின் பணி. பல நேரங்களில் சாப்பிட எதுவும் கிடைக்காது, கடுமையான பணிச்சூழலில் பணியாற்ற வேண்டி இருக்கும். இளமையின் அனைத்து இன்பங்களையும் தியாகம் செய்து கொண்டு தங்களை பாரதத்தாயின் பாதத்தில் சமர்பித்து கொண்டு தொண்டையும், தியாகத்தையும் மட்டுமே கைக்கொண்டு வாழ வேண்டும். இந்த காரணத்திற்காகவே மோடி பிரதமராக மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். தன் வாழ்க்கையை, தன் புலன் இன்பங்களை, குடும்பத்தை, இளமையை இந்த தேசத்திற்காக , இந்த தேசத்தின் நலனுக்காக தியாகம் செய்த ரிஷி போன்ற தலைவன் நம்மை தலைமை ஏற்க வேண்டுமா ? அல்லது ஒரு அந்நிய கைக்கூலியின் மகனும், தேசத்தின் சாபமுமான ஒரு மக்கு இளவரசன் நமக்கு தலைமை ஏற்க வேண்டுமா ?

1977 இந்த தேசம் அவசர நிலையை எதிர் கொண்ட போது மோடி அதன் அடக்குமுறையையும் அராஜகத்தையும் எதிர்த்து போராடினார், சிறை சென்றார்.தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். 20 இளமையான துடிப்புள்ள ஆண்டுகளை ஆர். எஸ்.எஸ் ஸின் சேவையில் கழித்த மோடி 1987ல் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைகிறார். ஒவ்வொரு படியாக முன்னேறுகிறார். இவரின் அயராத உழைப்பும், அரவணைத்து செல்லும் குணமும், திறமையான வேலை வாங்கும் தன்மையும் ,யுக்தியும் அர்ப்பணிப்பும் இவருக்கு மாநில செயலாளர் பதவியை பெற்று தருகிறது. மதி நுட்பமும், அரசியல் யுக்தியில் தேர்ச்சியும் பெற்ற மோடியின் வழிகாட்டுதலும் உழைப்பும் 1995ல் குஜராத்தில் பாஜக ஆட்சி அமைய மிக முக்கியமான காரணியாகிறது. அத்வானியின் ரத யாத்திரையை வெற்றிகரமாக பொறுப்பேற்றுக்கொண்டு நடத்தியதில் மோடியின் பங்கு சிறப்பானது. பாஜகவின் ஆட்சி காலத்தின் போது தேசிய செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார் மோடி. மேலும் 5 மாநிலங்களுக்கு பிரபாரியாக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் அமைந்திருந்த கேசுபாய் படேல் அரசு 2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூஜ் பூகம்பம் என்ற பேரிடரை அனுபவமில்லாமல் கையாண்டது. இது தூய்மைவாதிகளான பாஜகவினருக்கு சங்கடத்தை அளித்த்து. உடனடியாக கேஷிபாய் படேல் நீக்கப்பட்டு அறிவுக்கூர்மையும், ஆற்றலும் மிகுந்த இளம் மோடியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதனை இவன் முடிப்பான் என ஆய்ந்து அதனை அவன் கண் விடல் எனும் குறளுக்கேற்ப தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே செய்து நாட்டிற்கும், கட்சிக்கும் பெருமை சேர்த்தார் மோடி.

களத்தில் இறங்கி ஆறுதல் சொல்லும் தலைவன்
களத்தில் இறங்கி ஆறுதல் சொல்லும் தலைவன்

பேரிடர் மேலாண்மையில் மிகபெரும் சாதனைகளை அநாயசமாக செய்தார் மோடி, அதற்கு அவருக்கு துணை நின்றது தன்னலமற்ற சேவையை லட்சியமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அதன் பயிற்சியும் ஆகும். இயற்கையின் கோபத்தால் நொறுங்கி உருக்குலைந்த குஜராத் நகரங்களை மறுகட்டமைப்பு செய்தார் மோடி. உருக்குலைந்த நகர்களை மிகவும் திட்டமிட்டு புதிய வளர்ச்சிக்கு உரிய வகையில் செப்பனிட்டு வடித்தெடுத்தார். பேரழிவிலிருந்த ஒரு நகரை சாம்பலில் இருந்து உயிர்த்தெழ வைத்தார். பூகம்பம் எனும் பேரிடர் சோதனையை வளர்ச்சிக்குரிய திட்டமிட்ட நகராக மாற்ற கிடைத்த ஒரு சாதனை வாய்ப்பாக மாற்றிக்கொண்டவர் மோடி. ஆட்சி கட்டிலில் ஏறிய நொடி முதல் அயராத சவால்களை அநாயசமாக சந்தித்து அவற்றை வாய்ப்பாக மாற்றுபவர் மோடி. 2001க்கு முன்பான குஜராத்தில் இந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்று நினைத்து கொண்டு தீவிரவாத , வகுப்புவாத இயக்கங்கள் அவர்களை தாக்கி அழித்து பணத்தை கொள்ளையடித்து வந்தன. குஜராத் என்பது மதக்கலவரங்களின் கூடாரமாக இருந்து வந்தது. கோத்ராவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு அயோத்தியில் வழிபாடு முடித்து விட்டு வந்த அப்பாவி இந்துக்களை ரயில் பெட்டிக்குள் அடைத்து 100க்கும் மேற்பட்ட அப்பாவிகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றார்கள். வேண்டுமென்றே மதக்கலவரத்தை தூண்டி தீவிரவாதத்திற்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் மோடியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார்கள் .

அதில் சந்தேகம் வராமல் இருப்பதற்காக இஸ்லாமியர்களையும் கொன்று இந்துக்களையும் கொன்று தீவிரவாதிகள் கொலைவெறிதாண்டவம் ஆடினார்கள். மோடி நிர்வாகம் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது. கலவரத்தில் 758 இஸ்லாமியர்களும் 264 இந்துக்களும் கொலை செய்யப்பட்டார்கள்.

guj01ஆனால் அதுவே அங்கு கடைசி வன்முறையாக ஆனது. அடுத்த 12 ஆண்டுகளில் ஒரு மதக்கலவரம் கூட நடக்காத முன்னோடி மாநிலமாக குஜராத்தை மாற்றி விட்டார் மோடி. கடினமான சோதனைகளை சாதனைகள் ஆக்குவது மோடிக்கு இயல்பான ஒன்றாகும். கல்வி வளர்ச்சி, தொழில் வளத்தில் பின்னால் இருந்த குஜராத்தை முன்ணனிக்கு கொண்டு வந்தார். அபாரமான சாலைகளை கொண்டு நகரங்களை இணைத்தார். மெட்ரோவை குஜராத்திற்கு கொண்டு வர முனைந்தார். காங்கிரஸ் அரசு நிதி ஒதுக்க மறுத்து விட்ட்து. உடனே சாலை போக்குவரத்திலேயே மிக உத்திரவாதமானதும் பெரும்பயனளிக்க கூடியதுமான விரைவு போக்குவரத்தை குஜராத்தில் அறிமுகப்படுத்தினார். நர்மதா அணைக்கட்டு பிரச்சினையை எப்போதும் ஊதிக்கொண்டே மக்களுக்கு பயன்படாமல் செய்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்ட்களை ஒடுக்கி நர்மதா திட்டத்தை செம்மையாக செயல்படுத்தினார்.

 

தொழில் வளத்திற்கு இன்றியமையாத மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்து புதிய மிகை மின் மாநிலமாக மாற்றிக்காட்டினார். மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினைகளில் நீண்ட கால நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு அமல்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்தார். பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சர்வதேச சந்தைகளின் நுட்பங்களை விளக்க பொருளாதார நிபுணர்களை துணைக்கழைத்தார்.  அடித்தட்டு இஸ்லாமியர்கள் பல பேர் ஈடுபட்டிருந்த பட்டம் செய்யும் பாரம்பரிய தொழிலை மேம்படுத்த மேலாண்மை வல்லுனர்கள் வந்தார்கள். அவர்களின் வாழ்க்கை பாதையையே மாற்றி அமைத்தார். நிலையான ஆட்சியை ஏற்படுத்தினார். பால் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து உயர்த்தினார். கல்வி, அறிவில் நடுனிலையில் இருந்த குஜராத்தை மிகவும் உயர்த்தினார். மின்சார சிக்கனத்தை மாணவர்கள் மூலம் சாதித்து காட்டினார்.

modi3ஜோதிகிராம்யோஜனா(http://www.gujaratcmfellowship.org/document/Gujarat%20Overall%20Development/Jyotigram%20Yojana%20Article_Devika%20Devaiah_2010.pdfதிட்டத்தின்மூலம்குஜராத் முழுக்க மின் வினியோகத்தை சீர்படுத்தினார். விவசாயிகளுக்கு தனி மின்பாதைகளை அமைத்து அவர்களுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்தார்.  (தமிழகம் போன்ற மாநிலத்தில் எப்போது  மின்சாரம்  வரும் , போகும் என்பதெல்லாம் இறைவனுக்கே தெரியாது.)  18065  கிராமங்களுக்கு  24  மணி நேரமும் மின்சாரம் வழங்குவதற்காக 1204 கோடி ரூபாயில்  வெறும் 30 மாதங்களில் இதை சாதித்து  காட்டினார்.  76518 கிமீட்டருக்கு  புதிய மின்கம்பிகள் போடப்பட்டுள்ளன. 2559 பெரிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளது. இது  போக  புதிதாக 18724 புது  ட்ரான்ஸ்பார்மர்கள்  போடப்பட்டுள்ளது.   17,00.000 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. அதன் வழியே மின்இணைப்புகளின் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்ட செயல்திறனுடன்  செயல்படுவதை  அரசு  உறுதி  செய்ததது. 56,307 கி.மீட்டருக்குபுதிய ht லைன்களும், 22146 கிமீட்டருக்குபுதிய lt லைன்களும்ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில்இந்தியாவின் 32 மாநிலங்களில்  நடக்காத  சாதனை இது. இத்தோடு  மின்சாரவாரியம்  லாபகரமாக  இயங்கும் ஒரேமாநிலம்  மோடியின் குஜராத். இன்னும் சிறிதுநாளில் காந்திநகர் முழுசூரியசக்தி நகரமாகும்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மோடியின் பாய்ச்சல். இந்தியாவிற்கே முன் மாதிரியான இ-மம்தா திட்டத்தை அறிமுகம் செய்தார். குஜராத் கர்ப்பிணிகளின் ஆரோக்கிய மேம்பாடு, மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றிய அக்கறையோடு செயல்படும் திட்டம் (http://articles.timesofindia.indiatimes.com/2011-07-25/ahmedabad/29812366_1_pregnant-women-infant-mortality-mamta) கர்ப்பிணிகளின் உணவு பழக்க வழக்கத்திற்கேற்ப அவர்களுக்கு போதுமான சத்து கிடைப்பதை அரசே உறுதிப்படுத்துவது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அரசு மற்றும் மக்களின் பங்களிப்புடன் சிறப்பான குழந்தைகளை, அதாவது ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உறுதி செய்வது தான் மம்தா திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொது சுகாதாரத்திலும், ஏழைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் சிறப்பான அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தையும் , தங்கு தடையற்ற மருத்துவ வசதிகளையும் மக்களுக்கு அர்ப்பணித்தார் மோடி. சிரஞ்சீவியோஜனா மூலம் தனியார் மருத்துவ மனைகளிலும் ஏழை மக்களுக்கு குறைவான விலையில் மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

உள்கட்டமைப்பு, நகர நிர்வாகம், மின் ஆளுமை, தொழில் வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, கல்வி , விவசாயம் சிறு தொழில் முனைவோர் மேம்பாடு, சிறு , குறு வணிகர்களின் தொழில் வளர்ச்சி பாதுகாப்பு, சட்டம் , ஒழுங்கு, அரசு சலுகைகள், உதவித்தொகைகள் உடனே கிடைக்க ஏற்பாடு. போக்குவரத்து துறையில் புரட்சி, கப்பல் கட்டும் தொழில்,உள் நாட்டு விமான போக்குவரத்து, வைர வியாபாரம், பஞ்சு நுகர்வு, ஜவுளித்தொழிலுக்கான சிரப்பு ஊக்கம், பால் பொருட்கள் உற்பத்தி, உலக தரத்தில் பெருகும் கல்வி கூடங்கள், உயர்தர சாலைகள். மனித வள மேம்பாடு என்று எதை எடுத்து கொண்டாலும் குஜராத் நிகழ்த்திய பாய்ச்சல்கள் அபாரமானது. இந்த பணிரெண்டு ஆண்டுகளில் மோடியின் தலைமையில் ஏற்பட்ட வளர்ச்சி 50 ஆண்டுகளில் காங்கிரஸ் நிகழ்த்தி காட்டாத சாதனை தான். இவை அனைத்தும் ஆதாரங்களோடு இணையத்தில் கிடைக்கிறது. வளர்ச்சி அரசியலில் மோடியை குற்றம் சொல்ல முடியாதவர்கள், மதச்சார்பின்மை எனும் அசிங்கமான ஆயுதத்தை எடுத்து கொண்டு ஆடுகிறார்கள்.

namoஎதற்கெடுத்தாலும், கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்பு நடந்தது என்று ஒரு பிலாக்கணத்தை வைக்கிறார்கள். தேசிய சிறுபான்மை கமிஷன் எனும் சிறுபான்மை அடிவருடி அமைப்பே 730 பேர்கள் தான் இஸ்லாமியர்கள் இறந்தார்கள் என்று காங்கிரஸ் கைக்கூலி அரசாங்கத்திடம் அறிக்கை அளித்த பிறகும், இன்னும் ஏதேதோ எண்ணிக்கைகளை இட்டுக்கட்டி மோடி மீதான மாய பயத்தை கட்டமைக்கிறார்கள். இறந்த போன 300க்கும் மேற்பட்ட அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி என்று சொல்லகூட துப்பில்லாத இவர்களிடம் நாம் என்ன கருணையை பிச்சை ஏந்திக்கொண்டா கேட்க முடியும், இந்த நாட்டில் மதச்சார்பற்ற வேசித்தனம் என்பது இந்துக்களை காறி உமிழ்ந்து முஸ்லீம் லீக்குடனுடம், கிறிஸ்த்தவ பயங்கரவாதிகளுடன் கொள்ளும் வியாபார கூட்டு என்பது தான். இந்த வியாபார உத்தியை பயன்படுத்தி தான் காங்கிரஸ் எனும் இத்தாலிய அடிமை அந்நிய நிறுவனம் இந்த மக்களை ஏமாற்றி நம்மை எல்லாம் அயல் நாட்டிற்கு விற்றுக்கொண்டிருக்கிறது. கோத்ராவில் ரயிலில் வந்த அப்பாவி இந்துக்களை பெட்ரோல் ஊற்றி கதற கதற இந்து பெண்களையும், குழந்தைகளையும், ராம பக்தர்களையும் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த இஸ்லாமிய சதிகாரர்களை பற்றி ஒரு வார்த்தை சொல்லக்கூட ஆண்மையற்று இருந்த  நபும்சக பேடிகளுக்கு நடுவே ./ சிறுபான்மை வாக்கு வங்கிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பயங்கரவாத செயல்களை செய்து கொண்டிருந்த தீவிரவாதிகளை சட்டத்தின் வழியில் நியாயமான முறையில் தைரியமாக ஆண்மையோடு ஒடுக்கினார் மோடி. மக்களை காப்பாற்றினார் ஒடுக்கப்பட்டதாலேயே தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து சொந்த மாநில மக்களின் அபரிமிதமான மக்கள் செல்வாக்கை பெற்றார்.  அப்படி 3 வது முறையாக முதல்வராக போட்டியிடுகையில் பல இன்னல்களை சந்தித்தார். சாதி ரீதியில் பிற்பட்டவர் என விமர்சிக்க பட்டு ஒடுக்க நினைத்த அனைத்து அரச வம்ச சதிகளையும் மக்கள் சக்தி கொண்டு முறியடித்தார். மீண்டும் மகுடம் சூடினார்.

modi007மோடி. மரண வியாபாரி என்று சொன்ன காங்கிரஸ் 1,40,000 தமிழ் மக்களை கொன்று அழிக்க ஆயுதம் வழங்கிய சோனியா காங்கிரஸ். 60,000 பெண்கள் விதவையாக தாலி அறுத்து கொண்டு தெருவில் பிச்சை எடுக்க வைத்த காங்கிரஸ். 10,000க்கும் மேற்பட்ட சீக்கியர்களை கொன்று ரத்தம் குடித்த கொலைகார காங்கிரஸ் துளியும் வெக்கமின்றி மோடியை இன்று குற்றம் சாட்டுகிறது.இந்த தேசத்தின் எல்லையில் 19 கிமீட்டர் ஊடுருவும் சீனாவை கண்டிக்க துப்பில்லாத, முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளும், கட்சிகளும் இன்று மோடியை விமர்சிக்க வந்து விட்டன. ஊழலில் ஊறி முடை நாற்றம் எடுத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மோடியை விமர்சிக்க வழியின்றி சிபிஐ ஐ அதற்கு தகுந்தாற் போல ஏவி இஸ்ராத் ஜகான் போலி என்கவுண்டர் என்று புது பொய்யை திரிக்கிறது. இதுவரை மோடி மீது அனைவரும் சொன்ன குற்றச்சாட்டை அவர் பொய் என்று நிருபித்தே வந்திருக்கிறார். இப்போதும் அப்படியே நிருபிப்பார். வஞ்சகத்தில் ஊறியுள்ள காங்கிரஸ் கட்சி பெரும் நிதியை காட்டி நிதிஸை விலைக்கு வாங்கியும், மம்தா, முல்லா முலாயம் போன்ற மூன்றாந்தர அரசியலாளர்களை கொண்டு காங்கிரஸிக்கு எதிரான மக்களின் ஓட்டை பிரிக்க 3 வது அணி என்ற ஒரு போலியான அமைப்பை ஏற்படுத்த முயல்கிறது.

பீகாரிலே ஏதோ நிதிஷ் குமார் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்று இருந்தது போலவும், அவரின் நிழலில் பாஜக குளிர் காய்ந்த்து போலவும் இன்று பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்களும்,காங்கிரஸ் கட்சியும் இவ்வளவு நாள் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இன்று மதச்சார்பின்மை நோயால் வாட்டப்பட்டிருக்கும் நிதிஷ் குமார் தான் கோத்ராவில் ரயிலில் வந்த அப்பாவி கர சேவகர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய போது ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவர் என்ன சின்ன குழந்தையாகவா இருந்தார். அன்று தெரியாத உண்மை இன்று என்ன தெரிந்து விட்டது. இதே மோடியின் பிரச்சார பலத்தை வெக்கமில்லாமல் பெற்று தானே 2003ல் ஆட்சிக்கட்டிலில் ஏறினீர்கள் நிதிஷ் என்று யாரும் இவர்களை கேட்க மாட்டார்கள்,

மோடியை பாராட்டி நிதிஷ் குமாரின் பேச்சு, கோத்ரா சம்பவத்திற்கு பிறகு (http://www.youtube.com/watch?v=WQYK62Qp97E ) ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி விலாசம் இல்லாமல் போயிருக்கும் அன்று பாஜகவும், வாஜ்பாய் என்ற நல்ல மனிதரும் இல்லாவிட்டால், இன்று நாதியற்று ஒரு அரசியல் அநாதையாக தான் நிதிஷ் குமாரும், சிவானந்த திவாரியும், சரத்யாதவும் நின்று இருப்பார்கள். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்கிறார் வள்ளுவர். பாஜக என்ற கட்சி செய்த நன்றியை மறந்து விட்டு கேவலமாக காங்கிரஸ் வீசும் எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்பட்டு அதன் பின்னால் சென்று பாஜகவுக்கு துரோகம் செய்யும் நிதிஷ் அவர்களே காலம் உங்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும். காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது என்றால் நமக்கு எதிரான வாக்குகள் மூன்றாவது அணி என்றும் பாஜக ஆதரவு என்றும், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் அளிக்கும் ஆதரவு இவற்றை கொண்டு அராஜகத்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறது. அந்த கனவை மோடி தன்னந்தனியாக உடைத்து எறிவார். சிவாஜி திரைப்படத்தில் ஒரு வசனம் சிங்கம் சிங்கிளாத்தான் வரும், சிறு நரிகள் தான் கூட்டமாக வரும் என்று சொல்வார். அது போல மோடி சிங்கிளான சிங்கம் தான் . தனித்தே பல சாதனைகளை புரிவார்.

modi005பாஜக தனியாக நின்றால் எதையும் சாதிக்க முடியாது . மோடி தலைமையில் அது தோற்று போகும் என்று சாபம் கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள் முதலில் இரட்டை இலக்க தொகுதிகளை ஜெயிக்க ஏதாவது வழியிருக்கிறதா என்று பாருங்கள். பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கயவர்களே பாஜக மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்களின் நியாய உணர்வின் மீதும், தேச பக்தியும் , சூடு, சொரணையும் உள்ள மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. உங்களை போல திருட்டுதனம் செய்து ஈனப்பிழைப்பு பிழைத்தும், அயல் நாட்டிற்கு என் தேசத்தை அடகு வைத்தும் முறையற்ற முறையில் ஜெயிக்க விரும்பவில்லை . மோடி ஒற்றை ஆள் தான் ஆனால் ஒரு வெற்றிகரமான போர் உத்தி வகுப்பாளரும், தளராத தளகர்த்தரும் ஆவார். காங்கிரஸ் கட்சியில் உள்ளது போல கூலிக்கு மாரடிக்கிற கொள்ளைகூட்டம் அல்ல பாஜக . நெஞ்சிலே கொள்கை ஏந்தி, நெற்றியிலே தேச பக்தியை சுடராக கொண்டிருக்கும் தியாக செம்மல்களின் கூட்டம் பாஜக. அயராது பாடுபடும் அஞ்சாத சிங்கங்களையும் சிறுத்தைகளையும் கொண்ட அரசியல் இயக்கம் பாஜக. ஒவ்வொரு அரசியல் இயக்கமும் பாஜகவின் நிழலில் வளர்ந்து பலம் பெற்ற பிறகு அதை எட்டி உதைத்து விட்டு செல்வதையே தொழிலாக கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தேசத்திற்காக அனைத்தையும் பொறுத்து கொண்டு அயராது கடமையாற்ற மோடி பின்னால் ஒரு பெரும் மக்கள் இயக்கமே தயாராக இருக்கிறது. மேலும் ஒரு பூரண ஸ்வயம் சேவக் இந்த தேசத்தை ஆளும் போது தான் இதன் மகத்துவம் பரிபூரணமாக வெளிவரும்.

கூட்டணி பலம் இல்லாத பாஜக என்று விமர்சிக்கும் அரசியல் அறிஞர்களுக்கு வரலாறு தெரியவில்லை. மகா பாரதத்தில் பாண்டவர்கள் 7 அக்ரோணி சேனைகள் மட்டும் தான் வைத்திருந்தார்கள், கெளரவர்கள் 11 அக்ரோணி சேனைகளை கொண்டிருந்தார்கள், பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன், பூரிசிரவசு, அஸ்வத்தாமன் என்று ஏராளமான வீரத்தலைமைகளை பெற்றிருந்தார்கள். வென்றது பாண்டவர்கள் தானே . வரலாற்றில்  1526 ஆம் ஆண்டு  நடந்த முதலாம் பானிபட் போரை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். வெறும் 8000 படை வீர்ர்களுடன் வந்த பாபர்,200000 அதிகமான இப்ராஹிம் லோடியின் படையை சின்னாபினாமாக்கி வெற்றி அடைந்தார். ஒரே வித்யாசம் தான் பாபரிடம் போர் உத்தியும், பீரங்கியும் இருந்தது. லோடியிடம் வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான படை மட்டும் இருந்தது . லோடியிடம் இல்லாத்து இன்று மோடியிடம் இருக்கிறது. பாஜகவிடம் இருக்கிறது மோடி எனும் சாமுராயும், அஞ்சாத துணிவுள்ள பாஜக தொண்டர்களும் இணைந்தால் போதும், தர்மம் நிச்சயம் வெல்லும். பாரத்த்தை பாஜக அரசாளும். பாரதம் உலகிற்கே முன்னுதாரணமாக திகழும். மோடி மிளிர்வார், தன்னந்தனியாக ….

காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

காங்கிரஸை ஆதரிக்கும் கருணாநிதியின் முடிவுக்குக்கான காரணங்களை அவரும், அவரின் அடிவருடிகளும் விவரிக்கிறார்கள்.

அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் சோனியாவின் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு என்று நம்பும் ஒன்றுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவை கருணாநிதி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த அபரிமிதமான பரிசை அரசியல் சாணக்கியர் கருணாநிதி, தியாகத் திருவிளக்கு அம்மையாருக்கு தன் கிறிஸ்த்துமஸ், புத்தாண்டுப் பரிசாக வழங்கி அமெரிக்காவையும், அம்மையாரையும் ஒரே நேரத்தில் குஷிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதியின் கட்சியை– காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை– அதாவது சில நேரங்களில் சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்த நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவுக் கரத்தை மீண்டும் துடைத்துக் கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிரூபித்திருக்கும் கருணாநிதியின் ராஜதந்திரத்தை மன்னிக்க ”இராசதந்திர“, ” இனமான ” உணர்வு மிக்க நகர்வை, மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பனப் பதர்களும், மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிகின்றன.

சூடு சொரணையற்ற, மானங்கெட்ட, உப்பை உணவில் சேர்க்காத பிறவி என்று அவை வர்ணித்து வந்தாலும் அதை முறியடிக்க பெரியார் அன்றே சொன்னது போல இவை அனைத்துமே ஆரிய சதியை, ஒடுக்க நம் இனமான இளவல் கருணாநிதிவின் அபாரமான சாணக்கியத்தனத்தை பகடி செய்தாலும் இது எதையுமே காதில் வாங்கதது போல நடிக்கும் தம் அண்ணனின் சாதுர்யத்தை எப்படி மெச்சுவது என்பது புரியாமல் இருக்கிறார், மானமிகு வீரமணி அவர்கள்.

நம் தலைவரின் தேசபக்தியைப் புரிந்து கொள்ள ஈரேழு 14 லோகங்களிலும் வார்த்தை கிடையாது. 600-க்கும் மேற்பட்ட செம்மொழி வடிவங்களில் மெளனம் சாதிக்கும் (பிரதமர் என்று அடிக்கடி குறிப்பிடப்படும்) மன்மோகன்சிங்கே, நம் தலைவரின் தேசப்பற்றைக் கண்டு புளாகாங்கிதத்தோடு கண்ணில் நீர் சொறிய என்ன சொல்வது என்பது புரியாமல் மேலும் 5 மொழிகளில் மெளனம் சாதித்துக்கொண்டு நிற்கிறார். அனைத்துக் களேபரங்களும், இன்று காலை கருணாநிதி தேச நலன் கருதி (எந்த தேசத்தின் நலன் கருதி என்பதைச் சொல்லாமல் விட்டதை அரசியல் சாணக்கியத்தனம் என்றே பொருள் கொள்க.) அந்நிய முதலீட்டிற்கு ஆதரவு தரும் மத்திய அரசின் கொள்கையை, தான் எதிர்த்தாலும், இந்த அரசு கவிழக்கூடாது என்பதற்காக தன் ஆதரவை அரசுக்குத் தெரிவிப்பதாகச் சொன்னார்.

இது ஒன்றும், தான் திருவிளக்கு அம்மையாரின் மிரட்டல், பிளாக்மெயிலுக்கு பயந்தோ. இனமான இளவல் தம்பி ராசா இனி கோர்ட்டில் விசாரித்தால் கொள்ளையடித்ததில் கொடுத்த பங்கைப் பற்றியும், குடும்பம் அடித்த கொள்ளைகளைப் பற்றியும் கோர்ட்டில் சந்தி சிரிக்கச் செய்து விடுவேன் என செல்லமாய் சொல்லியதற்காகவோ, 2G-யை இன்னும் கொஞ்சமாய் தோண்டினால்கூட திருக்குவளை முன்னேற்ற கழகமும், திருட்டுத்தனமாய் ஆரம்பித்த சன், கலைஞர் டி.வி சாம்ராஜ்யங்களும் சரிந்து மீண்டும் திருட்டு ரயில் ஏறி திருவாரூருக்குச் செல்ல வேண்டுமோ என்பதற்காகவோ, பங்குப் பணத்தை பங்கம் வராமல் பங்கு வைத்த தன் மனைவி, துணைவி, இணைவி, இவர்கள் பெற்றெடுத்த குலக்கொழுந்துகள், அவர்கள் பெற்றெடுத்த வாரிசுகள் அனைவருடனும், தன் மொத்த சொத்தும் ஜப்தி செய்யப்பட்டு கம்பி எண்ணிக் களி தின்போம் என்பதற்காகவோ அல்ல; வெறும் தேச நலன் கருதியும் உழைக்கும் மக்களின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தான் இது போன்ற கடினமான முடிவை எடுத்துள்ளார் கருணாநிதி.

இதைப் புரிந்து கொள்ளாத அறிவிலிகள், பார்ப்பனக் கொடுக்குகள், குல்லுக பட்டரின் வாரிசுகள், பார்ப்பன அடிவருடிகள், ஆரிய சதி செய்யும் அரவக்கொடுக்குகள், தமிழ் பேசும் வல்லூறுகள் கருணாநிதியைக் கிண்டலும் கேலியும் செய்தாலும் அதைத் தாண்டியும் தியாகத் திருவிளக்கு அம்மையார் அவர்களுக்கு அடிபணிந்து சேவையாற்றுவார் நம் கலைஞர் என்பதை தெரிவிக்கிறார் கலைஞர் டீவி புகழ் சூனா பானா வீணா.

இது தொடர்பாக தப்பட்டை ஒலி நாளிதழில் தன் தம்பிக்கு ஒரு உணர்ச்சிமிகு கடிதம் எழுதுகிறார் கருணாநிதி –

“கழக உடன்பிறப்புக்களே, அந்நிய முதலீட்டை ஆதரிப்பதால் நாட்டில் வெறும் 30 கோடி குடும்பங்கள் மட்டும் தான் வாழ்வாதரத்தை இழந்து தெருவில் பிச்சை எடுத்து உண்ண வேண்டிய நிலை வரும். ஆனாலும் பாருங்கள் குலக்கொழுந்துகளே! அதிலும் 2 அல்லது 3 பார்ப்பனக் குடும்பங்களும் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் என்பதற்காகவே தான் இதை இந்தக் கருணாநிதி ஆதரிக்கிறான். என் திராவிட இனக் கடவுள் பெரியாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக 30 கோடி குடும்பங்களை என்ன இந்த தேசத்தையே சூறையாடுவான் இந்த கருணாநிதி. அதற்காக இரட்டை ஆயுள்தண்டனை என்ன, தூக்கு தண்டனையே ஆனாலும் ஏற்றுக்கொள்ள என் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களை வெளியிலிருந்து வழிநடத்த என் வாரிசுகள் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் என்னும் பெரும்சுமையை என் குடும்பமும், சிறை, மரண தண்டனைகள் இன்ன பிற சில்லறைக் கஷ்டங்களை என் தொண்டர்களும் பார்த்து கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியைப் பற்றி தெரியாத கயவர்களும், ஆரிய வந்தேறிகளும்தான் திருவிளக்கு அம்மையாரை அந்நிய ஆபத்து என வர்ணிக்கிறார்கள். தம்பி! அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா?

1,76,000 கோடி கொள்ளை அடிக்கச் சொன்னதோடு அல்லாமல் நம் பங்குப் பணத்தை 10% மேல் போட்டுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வெறும் 3 மாதத்திலேயே நம்மை எல்லாம் சிறையில் இருந்து விடுவித்ததோடு அல்லாமல் அப்படி ஒரு கொள்ளையே நடக்கவில்லை என்று சொல்லி 120 கோடி மக்களையும் நம்பவைத்திருக்கிறார். அவர் சாமர்த்தியம் யாருக்கு வரும்?. பெரியார், அண்ணா கூட ஆரிய மாயை, பார்ப்பன சதி என்றெல்லாம் ஜல்லியடித்து சித்தாந்தம், வெங்காயம் வெளக்குமாறு என்று சொல்லியே 2 கோடி மக்களை மட்டும்தான் ஏமாற்றி காதில் பூசுத்த முடிந்தது. ஆனால் அந்நிய அம்மையார் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தையே போலியாக நடத்தி ஃபோர்ஜரி செய்ய எப்படியெல்லாம் சதி செய்கிறார்! 120 கோடி மக்களை மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைவருக்கும் காதில் பூ சுற்றும் கலை, வேறு யாருக்கு வரும்? நயவஞ்சகத்தைக் கூட எவ்வளவு நாகரிகமாகச் செய்கிறார் பாருங்கள்!! இவரோடு கூட்டணி வைத்தது நம் முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் மட்டுமே சாத்தியம். இவருக்கு முன்னால் நம் திருட்டெல்லாம் ஒன்றுமே இல்லை.

இவரோடு கூட்டணி வைத்துக் கொள்ளையடிப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? கூட்டணி வைத்திருப்பவர்களை பாராடா தம்பி, மாட்டுத்தீவனத்திலேயே பல ஆயிரம் கோடி திருடிய லல்லு பிரசாத்ஜி, தாஜ் காரிடர் கேஸில் 4000 கோடி திருடிய மாயாவதி அம்மையார். கொள்ளை, கொலையில் வல்ல சிபு சோரனார், சர்க்கரை ஊழல் புகழ் சரத் பவார்; தவிர சொந்தக் கட்சியில் உள்ள 206 பேருமே கடைந்தெடுத்த ஊழல்வாதிகள்தான். நாமும் தான் 1950-லிருந்து மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறோம். கொள்கை, கோட்பாடு, கடமை, கண்ணியம், தெருப்புழுதி என்று வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி விஞ்ஞானரீதியாகக் கொள்ளையடித்தாலும் பிச்சை காசு 100 கோடியைத் தாண்டமுடியவில்லை தாண்டவக்கோனே!. ஆனால் திருவிளக்கு அம்மையார் திருவிளையாடல்கள் எல்லாமே ஊழல் எல்லாமே 2G, 4G, காமன்வெல்த், நிலக்கரி ஊழல், ராணுவ ஆயுத பேர ஊழல் என்று லட்சம் கோடிகளுக்கு மேலான மெகா, மகா சைஸ்தான் தம்பி. பிரிட்டிஷ்காரன் 400 வருடங்களில் கொள்ளையடித்ததை விட அதிகமாக 8 வருடங்களில் கொள்ளையடிக்கும் அம்மணியின் கால் தூசுக்கு ஈடாவர்களா யாரேனும்? இல்லை இனியும் பிறக்கத்தான் முடியுமா சொல்லடா உடன்பிறப்பே!

பிரிட்டிஷ்காரன் 400 வருடங்கள் கூட்டமாக வந்திருந்தும் 1,50,000 தமிழ்- மன்னிக்க திரமிள, திராவிட மக்களைக் கூடக் கொல்லவில்லை. ஆனால் இத்தாலியத் திருவிளக்கு அம்மையார் ஒரே ஆண்டில் 1,50,000-க்கும் மேலான தமிழ் மக்களை துள்ளத் துடிக்க கொன்று ரசித்தார்களே, இந்தச் சாமர்த்தியமும் துணிவும் யாருக்கு வரும்? அதற்குக் கூட இருந்து கொடுவாள் பிடித்ததற்காக 40,000 கோடி செலவு என்று கணக்கு மட்டும் காண்பித்த சேது சமுத்திர திட்டத் தொகையையும் நமக்கே தாரைவார்த்த அந்த இத்தாலிய பால் வடியும் வதனத்தை பாராடா என் அன்பு தம்பி. அண்ணா அன்றே சொன்னார் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டர் என்று. .பாலிடால் போல வெள்ளையாய் இருக்கிறார் அம்மையார். 400 ரூபாய் கொடுத்தாலே நான் அவர்களுக்கு விசுவாசமாய் இருப்பேன். 40,000 கோடியை வீசி எறிந்த அந்த தியாகத் தாய்க்கு ஒரு பிரச்சினை என்றால் அமைதியாக இருக்கலாமா? வரலாறு நம்மை மன்னிக்குமா? புவியியல் நம்மை கவனிக்குமா? அறிவியல் தான் நம்மை அவிக்குமா?.

இதற்கு முன்னால் கூடத்தான் நாம் கூட்டணி வைத்திருந்தோமே காவி பண்டாரங்களோடு! ஒத்தை பைசாவிற்கு பெற மாட்டார்கள். பிரதம மந்திரி என்றுதான் பெயர் வாஜ்பாயிக்கு. கூரை வீடாக இருந்தாலும், கூழாக இருந்தாலும் குடித்து விட்டுப் படுத்து விடுவார். ஆடம்பரத்தின் அரிச்சுவடி கூட தெரியாதவர், கேட்டால் ‘ஸ்வயம் சேவக்’ என்று பெருமை வேறு பேசுவார். கிராம மக்களுக்குத் தொண்டாற்றினார் என்பதற்காக தானே வலிந்துபோய் பகுத்தறிவுக்கு பங்கம் விளைவிக்கும்படி சின்னதாய் என்ற பெண்ணின் காலில் விழுகிறார். யார் வேண்டுமானாலும் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச வேண்டுமானால் எப்பொழுது வேண்டுமானாலும் போய் பார்க்கலாமாம். கூடவே கன்னம் வைக்கும் கூட்டணித் திருடர்கள் மன்னிக்கவும் தலைவர்கள்கூட திருவிளக்கு அம்மையாரைப் பார்க்க முடியாது.

காவி பண்டாரக் கூட்டத்தில் இருந்து வந்த வாஜ்பாய், 30000 கொடுத்தால் தான் தொலைபேசி கிடைக்கும் என்று இருந்த கௌரவத்தை மாற்றி அனைவருக்கும் தொலைபேசியைக் கிடைக்கச் செய்து அதன் மரியாதையையே போக்கி விட்டார். கிராமப் பெண்கள் அடுப்பூதிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காக அனைவருக்கும் தங்கு தடையில்லாமல் சிலிண்டர் கிடைக்க உத்தரவு இடுகிறார். இந்தியாவை இணைக்க சாலைகளை அதுவும் நான்கு வழி சாலைகளை அமைக்க உத்தரவு இடுகிறார். குழந்தைகள் கல்வி பெறுவதற்காகவும், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் சர்வ சிக்‌ஷ அபியான் என்று கொண்டுவர நிதி ஒதுக்குகிறார். அணுகுண்டு வெடித்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறார். சுதேசி தொழில் நுட்பத்தை வளர்க்கத் திட்டமிடுகிறார். சுய அறிவு இருப்பவர்கள், சூடு, சொரணை இருக்கிறவர்கள், ஊழல் செய்யாதவர்களுக்கு பதவி அளிக்கிறார். தேச எல்லைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கிறார். மின்சார உற்பத்தியை பெருக்குகிறார். தொழில் துறையை பலப்படுத்துகிறார். ஊழலை அனுமதிப்பதே இல்லை.

எப்பொழுது பார்த்தாலும் மக்கள் முன்னேற்றம் தான் முக்கியமென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா கும்பல் எல்லாம் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள்?. ஜனாதிபதியாவது தேறினாரா என்றால், இவர்கள் கொண்டு வந்த அப்துல் கலாம் உள்ளூர் ஊழலும் தெரியாமல் வெளிநாடு சுற்றுப்பயணமும் செய்யாமல் மாணவர்களிடம் பேசுகிறேன், உள்நாட்டை பார்க்கிறேன், வல்லரசாக்குகிறேன் என்று சொல்கிறவரைக் கொண்டு வந்து பதவில உட்கார வைத்தார்கள். இவர்களை எல்லாம் ஆதரிக்க வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயமாகப் போய்விட்டது,

என்னுடைய பதவியே போனாலும் திமுக ஆட்சி கேடு கெட்டதாக இருந்தால்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, ஆட்சியை ஒரே ஓட்டில் இழந்ததால் வந்த வினை. நானெல்லாம் பதவி போகுமென்றால், பதவிக்கு ஒரு ஆபத்து வருமேயானால் பெற்ற பிள்ளையைக் கூட யாரென்று தெரியாது என்று தைரியமாகச் சொல்லுவேன். இந்த காவிக்கும்பல் என்னவென்றால் நீதி, நியாயம் தர்மம் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். பண்டாரக் கும்பலின் துணை பிரதமரோ, பிரதமர் பதவியை சிபாரிசு செய்கிறார். செய்யாத ஊழலுக்காக குற்றம் சுமத்தியதற்கே பதவியை ராஜினாமா செய்கிறார். குற்றம் இல்லை என்று சொல்லும் வரை தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார். கேட்டால் சங்கம் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒழுக்கம் என்கிறார்கள். இவர்களோடு கூட்டுவைத்தால் விளங்குவோமா?

இதே நம் இத்தாலியத் திருவிளக்கு அம்மையாரை பார்! பெட்ரோல் விலையை மட்டும் 18 தடவை ஏற்றி இருக்கிறார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையையும் தாறுமாறாக ஏற்றி விடுகிறார். அமெரிக்கா அரசும், அதன் நிறுவனங்களின் நலனுக்காகவும் நம் மக்களைப் பிழிந்து எடுக்கிறார். நாட்டிற்கு கேடு தான் விளையும் ஆனால் தனக்கு 1,00,000 கோடி கமிஷன் கிடைக்கும் என்பதற்காக அபாயகரமான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு சாமானியர்களின் தலையெழுத்தை மாற்றுகிறார். சிலிண்டர் உபயோகப்படுத்தி மக்கள் ஆரோக்கியக் குறைபாடு அடையக்கூடாது என்பதற்காக வரலாறு காணாத வகையில் சிலிண்டர் விலையை 250% கூட்டி அதற்கும் ,ரேஷன் வைத்து வறுமையை எப்படி வளர்க்கிறார் பாருங்கள். 1947-லிருந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து கொள்ளையடித்துச் சுரண்டி வருகிறது; என்றைக்காவது சாலை போட வேண்டும்,. பள்ளிக்குழந்தைகளின் கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று சிந்தித்தது உண்டா? எல்லையில்தான் பாதுகாப்பை பலப்படுத்தினால், பின் போர் எப்படி வரும்? பாதுகாப்புத் துறையில்தான் பின் எப்படிக் கொள்ளைஅடிப்பது?

குடிக்கிற தண்ணிருக்கு கூட வரி விதித்து மக்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி தன் அடிமை தாகத்தை தீர்த்துக்கொள்கிறார் அம்மையார். குடியரசுத் தலைவர் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு கூட எவ்வளவு ஊழல் மிகுந்த உத்தமர்களைத் தேர்வு செய்கிறார் பாருங்கள். ஊழலுக்காக எவ்வளவு கீழ்த்தரமாகவும் செயல்படுவேன் என்கிற உறுதிதான் இத்தாலிய அம்மையாரின் கவர்ச்சிக்குக் காரணம். எதிரிகளை எப்படி ஹெலிக்காப்டர் விபத்தில் கொல்வது என்பதை கலையாகப் பயின்றுள்ள அம்மையார் எங்கே? தன் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வைத்த ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த இடையூறும் பண்ணாத வாஜ்பாயி எங்கே? அட, இந்தப் பண்டார கும்பலின் அடுத்த பிரதமராவது ஊழல் செய்பவரா என்றால் அவரும் ஒழுக்கமானவராக இருக்கிறார். தேசத்தின் வளர்ச்சிக்காக எந்நேரமும் சிந்திப்பவராக இருக்கிறார். விடுமுறை தினங்களில் கூட ராணுவ வீரர்களோடு கழிக்கிறார்.

எல்லா பிரச்சினைகளையும் நேருக்கு நேர் சந்தித்து தர்மத்தின் படி நின்று தீர்க்கிறார். மோடியை பார்ப்பான் என்று திட்டி வெறுப்பை விதைக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. மனைவி, துணைவி, இணைவி, மகளிரணித் தலைவி பெற்ற மகளின் கூட படிக்கும் பிள்ளைகள் என்றாவது ஏதாவது தொடர்புகள் இருக்குமா என்றால் அதுவும் இல்லை? ”அவரும் பத்தினி இல்லை, நானும் உத்தமனில்லை” மாதிரியான ஆபாச அறுவெறுப்பு மேற்கோள்கள் இல்லாமல் என்ன ஒரு வாழ்க்கை!! இது போன்ற காவிப்பண்டாரங்களின் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மனதை இரும்பாக்கிக்கொண்டு, கண்ணின் மணியாம் கனிமொழியை வழக்கில் இருந்து விடுவிப்பதோடு 10,000 கோடியோ எவ்வளவோ அவர்கள் போடும் பிச்சைக் காசையும் வாங்கிக்கொண்டு, நம் தம்பி ராசா களி தின்றாலும் பரவாயில்லை என்று கண்ணீரோடு கழகம் இந்த முடிவை எடுக்கிறது.

சோனியா அம்மையார் நம் ஆதரவை எதற்காகக் கேட்கிறார்? பெற்ற தாயையும், பிறந்த பொன்னாட்டையும் தானே அடகு வைப்பதற்காகக் கேட்கிறார். அதற்கு பதிலாகத்தான் கற்றை, கற்றையாகப் பணம் தருகிறாரே? வேறு என்ன வேண்டும். கூட கொள்ளையடிக்க பதவி தருகிறார். கொள்ளையை மறைக்க அனைத்து தகிடுதத்தங்களையும் செய்கிறார். இதற்காக என்ன வேண்டுமானாலும் தரலாமே? பதவியையும், பணத்தையும் யார் எதற்காகக் கொடுத்தாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுக்கத்தானே வேண்டும். அது பெற்ற தாயாக இருந்தால் என்ன? பெற்ற பிள்ளையாக இருந்தால் என்ன? அம்மா செண்ட்டிமெண்ட், தாய் நாடு செண்டிமெண்ட் எல்லாம் நம்மை கட்டிப்போட வந்த ஆரிய சதி என்று சொல்லி விட்டு வேறு வேலை பார்க்க போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். வெறும் 30 கோடி குடும்பங்கள் நாசமாகப் போகும் என்பதற்காக நமக்கு கிடைக்கும் பதவி, லஞ்சத்தை விட்டுக்கொடுக்க முடியுமா? இல்லை கனிமொழியைத்தான் திகாரில் தினமும் பொங்கலும் கெட்டிசட்னியும் தின்ன அனுப்ப முடியுமா? மதவாத சதியை முறியடிப்போம், திராவிடத் தமிழ் இனம் காப்போம்.

எனவே இனமானத் தம்பி இதையெல்லாம் நீ உணர்வில் இருத்தி சிறை செல்லவும், தூக்குக் கயிற்றை முத்தமிடவும் நீயும், உன் வாரிசுகளும் தயாராக வேண்டும். உங்களை ஆட்சி செய்ய நானும், என் வாரிசுகளும் தயாராக இருக்கிறோம் என்பதை அன்போடு கட்டளை இடுகிறான் உன் அண்ணன்.

அன்புடன்,
மு.கருணாநிதி

— என முடியும் கடிதத்தையும் வெளியிட்டு, தான் இந்த முடிவை நாட்டின் நலன் கருதியே எடுத்தேன் என்பதை தன் கரகர குரலில் கண்ணீர் வரப் படித்துக் காண்பித்து தன் தேச பக்தியை நிலை நிறுத்தினார். கருணாநிதி.

பத்திகளிலும், பத்திரிக்கைகளிலும் வரும் தன்னிலை விளக்கம்
(நன்றி முகனூல் நண்பர்கள்)

 1. பொருளாதார மேதை, குலாம் நபி ஆசாத் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஏற்படும் ஆபத்தையும், 2ஜி வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தால் கனிமொழிக்கு ஏற்படும் ஆபத்தையும் விரிவாக எடுத்துரைத்ததை அடுத்து, மத்திய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவது என்று முடிவெடுத்தார்….
  (சஸ்பென்ஸ் ஓவர்!) – அன்பழகன் முகனூலில்
 2. நான் பார்ப்பனராக இல்லாமல் சூத்திரனாக பிறந்துவிட்டதால் தான் நான் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு கொடுத்ததை கண்டிக்கிறார்கள் – கருணாநிதி வெளியிடப்போகும் அறிக்கையில் இருந்து – த.முத்துகிருஷ்ணன்
 3. கருணாநிதி :
  நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கேட்டாலும் அதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை இல்லை. காரணம் வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மதவாத சக்திகள் என்ற காரணம். அதை போட்டுகொள்ளுங்கள்.வீரமணி : அப்படித்தான் அப்படித்தான் ராசா அதேதான்.
 4. அண்ணே..தலிவர் இப்படி பண்ணிட்டாரே..சஸ்பென்ஸ்ன்னு கூட சொன்னாரே..அதிரடியா ஏதாவது செய்வாருன்னு எதிர்பாத்தா இப்படி விழுந்து கிடக்காரே..?நேத்து ஒருத்தர் வந்துட்டு போனாரே..அவரு பேரு தான் குலாப் ஜாமுன்..ஆனா கொண்டுவந்தது அக்மார்க் திகார் களிடா…ஒண்ணும் பண்ண முடியாது..

  அண்ணே..மூணு மாசமா..நான் சும்மா இருக்காம பேஸ்புக்ல சில்லறை..கல்லறைன்னு எதிர்த்து கவிதை, கட்டுரைலாம் எழுதிட்டேண்ணே..இனி ஒரு பய மதிக்கமாட்டானே..

  அடேய்…நீ என்ன புதுசா..? பலகாலமா இதாண்டா நடக்குது..இதெல்லாம் எங்களுக்கு பழகிபோச்சு..போய் அதையெல்லாம் தேடி டெலிட் பண்ணிட்டு புதுசா சாதகமா பாயிண்ட்ஸ் ரெடி பண்ணு..போ..

  அண்ணே..எங்கப்பா மளிகைக்கடை வெச்சிருக்கார்ண்ணே..கொஞ்சம் சங்கடமா இருக்கு..

  சரி..நீ அப்ப கரண்டு, காவேரி பிரச்னையை பத்தி எழுது..இல்லன்னா “புல்லட் ராஜா”ன்னு ஒரு படம் வந்துருக்கு..இன்னும் இங்க யாரும் விமர்சனம் எழுதலை..நீ அதை எழுது..

  சரிண்ணே..யாருனா கலாய்ச்சா நீங்க வந்து சப்போர்ட் பண்ண மறந்துடாதீங்க..வரேன் — ராஜேஷ்

 5. அன்னிய முதலீடு: ஆட்சி கவிழாமல் இருக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு – தலிவர்..!!

  பின்குறிப்பு :படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை .:) – சுந்தர வடிவேல்

கம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 10 [இறுதிப் பகுதி]

முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 |  பகுதி 6 | பகுதி 7  | பகுதி 8 பகுதி 9

 

தொடர்ச்சி..

எடுக்கப்படும் முடிவுகள்; அதனால் ஏற்படும் விளைவுகள்

பொதுவுடைமையை எதிர்க்கும் என்னைப் போன்றவர்கள், தனிப்பட்ட மனிதர்களின் முடிவுகளுக்கு, அவர்களை பொறுப்பேற்கச் செய்யும் நடைமுறையையும் ஆதரித்தாக வேண்டும். நான் கண்டிப்பாக ஆதரிக்கிறேன். திரு. இராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையில், பஞ்சாயத்து ராஜ் என்னும் திட்டத்தை உருவாக்கியது நினைவுக்கு வரலாம். இன்றும் கூட, அந்தத் திட்டத்தை முழுமூச்சுடன் ஆதரித்து, நடைமுறைபடுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர் திரு. மணிசங்கர் அய்யர். அந்தத் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நான் பார்க்கவில்லை. ஆனால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகப்படி அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். ஒரே ஒரு ஷரத்துடன்.கிராம பொருளாதாரத்தின் பல கூறுகளை, அந்தந்த கிராமப் பஞ்சாயத்து கவுன்சிலிடம் விட்டுவிட வேண்டும் என்பது சரியான கருத்துதான். கிராமப் பள்ளிக்கு ஆசிரியரை நியமிப்பது, மருத்துவரை நியமிப்பது, குறிப்பிட்ட அளவில் வரி வசூல் செய்து கொள்வது போன்றவை சரியான அணுகுமுறைதான்.

இந்த முடிவுகள் தங்களுக்கு பயன்தரும் போது காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் அதே மக்கள், முடிவுகளினால் ஏதேனும் சிரமங்கள் ஏற்படும்போதும் அவர்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டும் மானியத்திற்காக க்யூவில் நிற்கக் கூடாது.இது கிராம அளவில் மட்டுமல்ல. அதை விட அதிகமாக தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் நாம் கடைபிடித்தே ஆக வேண்டிய ஒரு வழிமுறை. நாம் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். சில பிரச்சினைகளுக்காக எடுக்கப்படும் முடிவுகளைப் பற்றியும், அதற்கும் அந்த தனிநபரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை பற்றியும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

 • எங்களின் குடும்ப நண்பர் ஒருவர். குழந்தைகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. சொந்த வீட்டை விற்று விட்டு, வேறு ஒரு புதிய இடத்தில் வீடு வாங்கிக் கொண்டு குடியேறியுள்ளனர். புதிய வீடு கட்டிய பிறகு எஞ்சியுள்ள 15 இலட்சம் ருபாய்களை எப்படி முதலீடு செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்டார்கள். அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களில் பெரும்பாலான பணத்தை முதலீடு செய்து கொள்ளுங்கள். உங்கள் வயதிற்கு அதுதான் பாதுகாப்பானது என்று கூறினேன்.ஆனாலும், ஒரு தனிப்பட்ட மனிதரை நம்பி, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு (பேராசைப்பட்டு) வட்டிக்கு அளித்துள்ளனர்.அந்த நபர் பணத்துடன் ஓடிவிட்டால் கூட என் குடும்ப நண்பரின் மேல் நான் கருணை காட்ட மாட்டேன்.
 • எங்கள் கிராமத்திற்கு அருகில் ஒரு சாலை விபத்து நடந்தது. 8 பேர் பயணிக்க வேண்டிய டாடா சூமோவில் 15 பேர் பயணித்ததால் விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர். அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடு அளிக்கிறது தமிழக அரசு. என்னைப் பொருத்தவரை, விதிகளை மீறுவோர் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இதற்கு இழப்பீடு அளிக்காவிட்டால்தான், பார்க்கிற பொதுமக்களுக்கும் ஒரு பாடம் கிடைக்கும்.
 • நாம் இது போன்ற நிகழ்ச்சிகளை பல முறை கண்டிருப்போம். பல காலம் குடிக்கும் நம் பார்ட்டிகள், வயிறு கெட்டுப்போய் அரசு மருத்துவமனையில் சேருவார்கள். என்னைப் பொருத்தவரை குடிகாரர்களுக்கு இலவச சிகிச்சையே அளிக்கக்கூடாது. உடல் ஆரோக்கியம் கெடும் என்று நன்றாகத் தெரிந்துதானே குடிக்கிறார்கள். குடிப்பது அவர்கள் உரிமை. பிறகு நிவாரணம் பெற மட்டும் ஏன் நம் வரிப்பணத்தைக் கேட்க வேண்டும்?
 • தற்காலத்தில் அமீர்கான்தானே ஹிட். அவரின் நிகழ்ச்சி ஒன்றில், வெளிநாட்டு வாழ் மணமகன் கிடைப்பதற்காக,மகளின் பெற்றோர் கடன் வாங்கிக் கஷ்டப்படுவதைப் பற்றி உருக்கமாக பஞ்சாபில் இருந்து ஒருவர் பேட்டி அளித்தார். என்னைப் பொருத்தவரை இது முற்றிலுமாக பேராசை பிடித்த பெற்றோர்களின் பிரச்சினை. இது வரிப்பணத்தை பங்கு கேட்பது அல்ல. ஆனால் நம் கருணையைக் கூட அவர்களுக்கு அளிக்கக்கூடாது. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் விளைவுகளை அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.
 • 90-களில் இளைஞர்களாக இருந்தவர்கள் பலர் “மௌன ராகம்” என்ற திரைப்படத்தைப் பார்த்திருப்பார்கள். நானும்தான்.அதில் எனக்கு பிடித்தது, சந்திரகுமார் (கதாநாயகன்) டில்லியில் வசிக்கும் வீடுதான். அது போன்ற வீட்டை நானும் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்க வேண்டும் என்ற கனவு பலரைப் போல் எனக்கும் இருந்தது. அடையார் போட் கிளப் ரோட்டில் வாங்குவது நடக்க முடியாத அட்டூழியப் பேராசை. ஆனால், கொஞ்சம் வசதியாக வீடு வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால் அதற்கு நான் அதிகப்படியாக திறமையை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாததால், சாதாரண 2 படுக்கை அறை கொண்ட வீட்டை, அதுவும் ஒரு கிராமத்தில்தான் வாங்க முடிந்தது. ஆனால், என்னைப் போன்ற இலட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் அமேரிக்காவில், சந்திரகுமார் வசிக்கும் வீட்டைப்போல் வாங்கிக் கொண்டார்கள். அதற்குக் குப்பையான விளக்கங்களை அளித்து, தூபம் காட்டியது அமேரிக்க அரசுகள். பின் Foreclosure வராமல் என்ன வரும்? என்னைப் பொர்ருத்தவரை, அமேரிக்காவில் வீட்டு வசதித் துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது,பேராசை காட்டிய அரசும், பேராசை கொண்ட கீழ்நடுத்தர மக்களும்தான்.

அடுத்ததாக, தவறான முடிவுகள் எடுக்கையில் விளைவுகளை சந்திக்க வேண்டியதில்லை என்ற நிலைக்கு சமூகத்தில் பலர் வந்துவிட்டால், அங்கு எந்த ஒழுங்கும் இருக்க முடியாது. இது பல்துறைகளில் இயங்கும் வியாபாரத்திற்கு மட்டும் பொருந்தும் விளக்கம் அல்ல. அதைத் தாண்டி, குற்றம் இழைப்பவர்களுக்கும் சரியான தண்டனைகள் அளிப்பதில் நவீன சமூகம் சிக்கல்களை சந்திக்கிறது. கருணை என்னும் குணாதிசயம்தான் இதற்கெல்லாம் காரணம்.

ஆசை மற்றும் சுயநலம் என்ற இயற்கையான குணாதிசயங்களால்தான், மனித சமூகமே இயங்குகிறது. அவற்றை இயற்கை நியதிகளாக ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல, அவை நேர்மையற்ற குணங்கள் என்றும் பரப்புவது மனித சக்தியையே அமுக்கி விடும். நாம் இங்கு, சங்கரனையோ, தாயுமானவரையோ பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. அவர்கள் கௌபீனத்தையே தேவைக்கு அதிகமான சொத்தாக நினைத்தவர்கள். அது ஆன்மிகத் தளத்திற்கான வெளி. நாம் சாதாரண மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கருணை என்னும் குணாதிசயம், இயற்கை நியதிகளுக்குப் பொருந்தாத அளவில் செல்லும்போதும், ஆசை மற்றும் சுயநலனை முன்னிருத்துவதையே கேவலமாக சித்தரிக்கும்போதும், சமூகத்திற்கு சிரமங்கள்தான் ஏற்படும்.தனிமனிதர்களின் சாதாரணமான தினசரி வாழ்வில் எடுக்கும் முடிவுகளைப் போல், தனிமனிதர்களின் குற்றங்களுக்கான விளைவுகளையும் கருணை அடிப்படையில் அவதானிக்க ஆரம்பித்துள்ளோம்.

சமூக ஒழுங்கு என்பது நிலைநிறுத்தப்பட, குற்றங்களாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் நடைபெறுகையில், அதற்கான தண்டனைகளும் அளிக்கப்பட்டாக வேண்டும். பழங்காலத்தில் சாதாரண சிறைகளும், பாதாளச் சிறைகளும் இருந்தன. பாதாளச் சிறைக்குச் சென்ற ஒருவன் மறுபடி எந்தக் குற்றத்திலும் ஈடுபடமாட்டான்;. பாதாள சிறையில் அவனுக்கு கிடைக்கும் தண்டனையை நினைத்தாலே, அவனால் கனவிலும் மீண்டும் குற்றங்களில் ஈடுபட முடியாது. ஆனால் இன்றோ நிலை முற்றிலும் தலைகீழ்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சில வசதிகள் அளிக்கப்படுவது நியாயம்தான் என்றாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கும் இது நீட்டிக்கப்படுவது சுத்த பைத்தியக்காரத்தனம். இது உலகமெங்கும் ஜனநாயக நாடுகளில் உள்ள குறைபாடுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கும், சிறையில் பிரியாணி அளித்தால், தண்டனை முடிந்து வெளிவே வரும் ஒரு குற்றவாளி,. மீண்டும் அதே தவறை செய்ய அஞ்சவே மாட்டான். இரு வேளைதான் உணவு, வெயிலில் தினமும் குறைந்த அளவே இருக்க முடியும், எந்த ஆடம்பர வசதியும் இருக்காது, வாழ்வது கிட்டத்தட்ட நரகமாக இருக்கும் என்ற நிலையை நாம் சிறைச்சாலைகளில் கொண்டு வர வேண்டும்.

பீர்பாலிடம் கொதிக்கும் பாலைக் குடித்த பூனையைப் போல், குற்றவாளிகள் சிறைகளில் இருக்கும் சூழலை நினைத்தவுடனேயே அஞ்ச வேண்டும். சமூக ஒழுங்கை நிலைநிறுத்த இது ஒன்றே ஒரே வழி.அமேரிக்காவில் இதற்கான உதாரணங்கள் அதிகம் உள்ளன. நாம் இன்னும் அந்த அளவிற்கு செல்லவில்லை.குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்பவர்கள், மோசமான பாலியல் குற்றங்களை செய்பவர்களுக்குக் கூட சில கால சிறைவாசத்திற்குப் பிறகு அமேரிக்காவில் விடுதலை கிடைத்து விடுகிறது.

இந்தியாவிலும், அரசியல் தலைவர்களின் பிறந்தநாளின் போதெல்லாம், குற்றங்கள் நிருபிக்கப்பட்டவர்களுக்கான தண்டனைகள் கூட குறைக்கப்பட்டு விடுதலை அடைந்து விடுகின்றனர். அரசியல் ரீதியாக இது பயனுள்ளது என்று சில அரசியல்வாதிகள் நினைப்பது ஆச்சரியமாக உள்ளது.மேலும், நவீன அறிவியலாளர்கள் சிலர், இந்தக் கருணை என்ற குணாம்சத்தை பைத்தியக்காரத்தனத்தின் உச்சிக்கு  எடுத்துச் செல்ல முயல்கின்றனர். அதாவது, சாதாரண மனிதனின் மூளையையும், குற்றவாளியின் மூளையையும் சோதனைகள் செய்து பார்த்ததாகவும், அதில் குற்றவாளிகளின் மூளையின் சில பகுதிகள் அளவுக்கதிகமாக வேகமாக செயல்படுகின்றன என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆகவே, குற்றம் செய்யும் மனிதன், தானாகக் குற்றம் இழைக்கவில்லை. அவனின் மூளைதான் காரணம் என்றும் பிதற்றுகின்றனர்.

இப்படியே போனால், குற்றம் செய்பவர்களின் மூளைதான் குற்றங்களுக்கு காரணம். ஆகவே தண்டனைகளே தேவையில்லை என்றும் கூறப்படலாம். Altruism என்பதை எந்தவித எல்லைகளும் இல்லாமல் குற்றவாளிகளுக்கும் நடைமுறைபடுத்துவதால் சமூகம் அழியவே செய்யும். என்னைப் பொருத்தவரை, எந்த மனிதனும் அவன் எடுக்கும் முடிவுகளுக்கு, அம்மனிதனே விளைவுகளை அனுபவித்தாக வேண்டும். வியாபாரம் என்றால் இலாபத்தையும் நஷ்டத்தையும் அவனே சந்திக்க வேண்டும். குற்றங்கள் என்றால் தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.

 

இந்திய Ponzi திட்டங்கள் தாக்குப் பிடிக்குமா?

நான் இந்திய அரசு செயல்படுத்தும் பல திட்டங்கள் வெறும் சீட்டு கம்பெனி திட்டங்கள் என்ற என் கருத்தை எழுதினேன்.இதை கணக்குகளைக் கொண்டு எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்.நம் நாட்டின் 2012-13ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுக் கணக்கின்படி, மத்திய அரசின் வருவாய் 10 இலட்சம் கோடி. செலவு 15 இலட்சம் கோடி. 5 இலட்சம் கோடி பற்றாக்குறை. பற்றாக்குறை அதிகமானால் என்ன என்று கேட்கலாம். பற்றாக்குறை அதிகமாக அதிகமாக, நம் கடன் தொகை அதிகரிக்கும்; கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குத்தான் கடன் கொடுப்பார்கள். வாங்கும் கடனின் பெரும் பகுதி வட்டி கட்டவே சரியாகி விடும். ஒரு நிலையில் திவாலாகி விடும். இதைச் சரிய்ய, ஒன்று வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவுகளைக் குறைக்க வேண்டும். நான் இரண்டையுமே செய்ய வேண்டும் என்றே இக்கட்டுரையில் எழுதி வந்துள்ளேன். தொழில்துறை பெருகுவதனால் மட்டுமே வரி வருமானமும், அதனாலேயே மற்ற வருமானங்களும் அதிகரிக்கும். ஒன்றுக்கும் உதவாத மானியத் திட்டங்களை நிறுத்த முடியாவிட்டாலும், செலவுகளைக் குறைக்கவாவது ஆரம்பித்தாக வேண்டும்.

இல்லையேல், 5 இலட்சம் கோடி பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். விலைவாசி அதிகரிக்கும். 100 நாள் வேலை திட்டத்தின் தினப்படி சம்பளமும் அதிகரிக்கப்படவேண்டும். ஏனெனில் 100 ரூபாய்க்கு மதிப்பு இருக்காது. இது ஒரு தொடர் கதை. ஒரு நிலையில் நாட்டின் நிதித்துறை திவாலாகி விடும். இது போன்று நடந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. சமீபத்திய உதாரணம் கிரேக்கம். இந்திய அரசின் நிதிநிலை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை என்பது உண்மைதான். திவாலாகும் ஆபத்து உடனடியாக இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இந்தப் பற்றாக்குறையை சற்றேறக்குறைய இதே நிலையில் வைத்திருப்பதால் யாருக்குமே உபயோகம் இல்லை. மானியங்களை குறைக்கும் நடவடிக்கைகளை செய்யாதது மட்டுமல்ல, அவற்றை நம் அரசு அதிகப்படுத்திக் கொண்டும் செல்கிறது. என்னைப் போன்றவர்கள், சரிதான், பொருளாதார சீர்திருத்தங்கள் இனி நடக்கப் போவதில்லை என்று நினைக்கும் போது, தடாலடியாக பெட்ரோலின் விலை ஏற்றப்படுகிறது. டீஸலும், சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படும் என்ற சமிக்ஞைகள் வருகின்றன. பாராளுமன்றத்தில் தேங்கி உள்ள பொருளாதாரச் சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று என்னைப் போன்றவர்கள் கனவு காண ஆரம்பித்து விடுகிறோம்.

தற்பொழுதைய நிலையில், சீர்திருத்தங்கள் முழுமனதுடன் நடைபெறுவதில்லை. ஆனாலும் தொழில்துறை முன்னேற சில நடவடிக்கைகள் எடுக்கத்தான் படுகின்றன. ஆகவே வருவாய் அதிகரிக்கிறது. மானியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றன. கூட்டிக் கழித்து பார்த்தால், நாம் பிரச்சினையிலிருந்து விடுபட நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஆனால் பிரச்சினையும் அதிகமாவதில்லை. பற்றாக்குறையை அதே இடத்திலேயே வைத்துக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறோம்.

 

அமேரிக்காவில் வலதுசாரிகளின் வளர்ச்சி

சமீப காலங்களில் “Occupy Wall Street” என்ற இடதுசாரி கம்யூனிஸ்ட் கொரில்லாக்களின் குழு அமேரிக்கா முழுவதிலும் பல்வேறு நகரங்களில் ஆர்பாட்டங்களை நடத்தி வருகிறது. ஊடகங்களால் வெகுவாகப் புகழப்பட்ட இந்தப்க் குழுக்கள், நகரங்களில் உள்ள பார்க்குகளை நாறடித்தது மட்டும்தான் மிச்சம். பணக்காரர்களை எதிர்ப்பதும், மேன்மேலும் மானியங்களை ஓசியில் பெறுவதுமே இந்தக் கும்பலின் நோக்கம். சில மாதங்களிலேயே ஊடகங்களின் அதீத ஆதரவு இருந்தும், இந்த ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து விட்டது. ஆனால் மற்றொரு குழு அமேரிக்காவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செயல்படுத்திக் காட்டி விட்டது. 2008இல் திரு.ஒபாமா பதவியேற்றவுடன் செயல்படுத்திய சுகாதாரத்துறை சீர்திருத்தங்களால் வெறுப்புற்ற வலதுசாரிகள், அமேரிக்கா முழுவதிலும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர். Tea Party Movement என்றும் அந்த இயக்கத்தை அழைத்தனர். அமேரிக்காவின் அரசியல் சூழலில் இரு கட்சி ஆட்சிமுறை இருப்பதாலும், இரண்டு கட்சிகளுமே மானியத் திட்டங்களை மேற்கொள்வதாலும், ஒரு தனி இயக்கமாக உருவெடுத்தது இந்தக் குழு. அரசியல் ரீதியில் தங்கள் பிரதிநிதிகளை அமேரிக்கப் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதால் மட்டுமே, அமேரிக்காவின் எதிர்காலத்தைக் காக்க முடியும் என்று தீர்மானமாக நம்பினர்.

குடியரசுக் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டாலும், அதன் தலைவர்களையும் விமர்சனமும் செய்து வந்தனர். 2010இல் நடந்த இடைத்தேர்தல்களில் 62 காங்கிரஸ் உறுப்பினர்களை அனுப்பி திரு.ஒபாமா எடுக்கும் ஒவ்வொரு மானியத் திட்டங்களுக்கும் வெற்றிகரமாக முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகின்றனர். அமேரிக்க அரசு புதியதாகச் செய்யும் எந்த செலவுகளுக்கும், அதே அளவில் வேறு துறைகளில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே புதிய செலவுகளுக்கான மசோதாக்கள் நிறைவேறுகின்றன.

இந்தக் குழுவின் சமய, சமூக நிலைப்பாடுகள் மிகவும் பழமைவாதத்தைச் சேர்ந்தவை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்- குறிப்பாக ஊடகத்தினர்- இந்த நிலைப்பாடுகளையே முன்னிறுத்தி எதிர்த்தனர். ஆனால் இந்த வலதுசாரிக்குழு தன் நிலைகளை பொருளாதார நிலைப்பாட்டை முன்னிருத்தியே மக்களிடம் பரப்பி குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது. இந்தக் கதையை நான் எழுதியதற்குக் காரணம். வலதுசாரித்துவத்தை, ஊடகங்கள் சமய, சமூக நிலைப்பாடுகளை வைத்துத் தகர்க்கவே முயலும். அமேரிக்காவில் மிகப்பெரிய அளவில் நடுத்தர, உயர்நடுத்தர மக்கள் உள்ளதாலும், அரசின் தலையீடு இல்லாமல் வாழ்க்கை அமைய வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதாலும் இக்குழு வெற்றி பெற்றது. மேலும் குறிப்பாக எந்த நிலையிலும் தங்களின் பொருளாதார நிலைப்பாட்டில் சமரசங்களைப் பெரிய அளவில் செய்து கொள்ளாதது முக்கியமான அம்சம். வெற்றி பெறுகிறோமோ, தோற்றுப் போகிறோமோ, நம் கொள்கையில் தெளிவாக இருந்தால் மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியையே நான் இந்த நிகழ்வுகளிலிருந்து பெறுகிறேன்.

 

இந்தியாவின் எதிர்காலம்

எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனக்கு என்றுமே உண்டு. நம்பிக்கைதானே வாழ்க்கை. 1991இல் லைசென்ஸ் ராஜ் ஒழிக்கப்பட்டது. அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வந்தன. கூட்டணி ஆட்சிகளினாலும், கம்யூனிஸ்ட் கொரில்லாக்களினாலும் இந்த சீர்திருத்தங்களின் வேகம் அவ்வப்போது தொய்ந்து போகவே செய்தது. 2009இல் இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்த காங்கிரஸ், அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களைச் செய்யும் என்று என்னைப் போன்ற பலர் எதிர்பார்த்து காத்திருந்தோம். இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்.இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள் இன்னும் துவங்கியபாடே இல்லை. தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல், விவசாய மானியங்களைக் குறைத்தல், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொது விநியோக நிறுவனங்கள் போன்றவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல், இன்னும் எஞ்சியிருக்கும் லைசென்ஸ் முறைகளை அழித்தொழித்தல், குறிப்பாக சிறுதொழில்களில் அரசின் தலையீடுகளை நிறுத்துதல் போன்றவை ஆரம்பிக்கப்படவேயில்லை. நான் ஏற்கெனவே எழுதியதைப் போல, இதற்கெல்லாம் எதிர்ப்பு என்பது எக்காலத்திலும், எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்யும். மேற்கூறிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகையில், பாதிக்கப்படுவோர் இருக்கவே செய்வார்கள். “இந்தியாவின் எதிர்காலத்திற்காக” இதையெல்லாம் செய்துதான் தீர வேண்டும்.

மேலும், பாதிக்கப்படுவோர் என்பவர் யார் என்று நமக்கு நன்றாகவே தெரியும். கம்யூனிஸ்ட் யூனியன் மாஃபியா கும்பலால் பாதுகாக்கப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். “டம்மி பீஸ்” என்று வடிவேலு குறிப்பிடுவதைப் போன்றவர்கள்தான் இவர்கள். இவர்களைக் காப்பாற்றத்தான் யூனியன்கள் போராடுகின்றன. இந்த டம்மி பீஸ்களால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மோசமாக நஷ்டப்படுகின்றன. ஒரு டம்மி பீஸை களையெடுப்பதால், பல இந்தியர்களுக்கு இலாபமே ஏற்படும். எவ்வளவு நாள்தான் எந்த வேலைத்தரத்தையும் காண்பிக்காத டம்மி பீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என்று அனைத்து வசதிகளையும் அளிக்க முடியும்? தனியார்மயம் ஆனால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை போகாது. வேலை செய்யாமல், செய்யத்தெரியாமல்  இருக்கும் டம்மி பீஸ்களுக்கு வேலை போகத்தான் செய்யும். அவர்களுக்குக் கருணை காட்ட நான் தயாராக இல்லை.

‘அங்காடித்தெரு’ திரைப்படம் நினைவுக்கு வருகிறதா? ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்கள்தானே அவர்களின் பாஷையில் வர்க்கப்போராட்டக்காரர்கள். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள் போராடுவதுதானே இயற்கை. ஆனால் அவர்கள் என் தந்தையைப் போன்றவர்களுக்கு ஆதரவாகவே போராடுவார்கள். எல்லாம் வர்த்தகம்தான். ஒவ்வொரு முறையும் சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஓய்வூதியத்தில் செயல்படுத்தும்போதும், என் தந்தை 1000 ரூபாய்களை யூனியனுக்கு அளிக்கிறார். 12000 பேருக்கு ஓய்வூதியம் சென்னை துறைமுகத்தில் வழங்கப்படுகிறது என்று எழுதினேன். கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் டெல்கோ, மாருதி போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் 30000 சம்பளம், 10000 ஊக்கத்தொகை பெற்றுக்கொண்டு உயர்நடுத்தர நிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களை தொழிலாள வர்க்கத்தினர் என்று அழைப்பது எவ்வளவு நேர்மைத் துணிவற்ற வாதம்?

சம்பள கமிஷனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 10 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள அதிகரிப்பு செய்யும் கமிஷன் அது. 6-வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தியாகிவிட்டது. ஆனால், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 5வது சம்பள கமிஷன் 1990-களில் அளித்த பரிந்துரைகளை இன்னும் நடைமுறைப்படுத்தவே இல்லை. சம்பளம் மட்டும்தான் அதிகரிக்கப்படுகிறது.

அதைத் தாண்டி, வேறு பல பரிந்துரைகளும் அந்த சம்பள கமிஷனில் அளிக்கப்பட்டது. உதாரணமாக–

 • மத்திய அரசு நிர்வாகத்தில் 30 சதவிகித ஊழியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
 • 1994ம் ஆண்டு கணக்கின்படி, 3 இலட்சம் பதவிகள் காலியாக உள்ளன. அவைகள் நிரப்பப்படவே கூடாது.
 • 10 வருடங்களுக்கு புதியதாக யாரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாது.
 • அதிக வேலைத்திறனை வெளிப்படுத்துவோருக்கு மட்டுமே ஊக்கத்தொகை அளிக்கப்பட வேண்டும்.
 • தப்பித்தவறி சில ஆயிரம் பேர் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டால், அதற்கு இணையாக விருப்ப ஓய்வுத்
  திட்டங்களின் மூலம் ஆட்குறைப்பைச் செய்யவேண்டும்.
 • அரசு நிர்வாகத்தை “அதிகாரிகளைக் கொண்டு நடத்தும்”-Officer Based Administration முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 • வேலைகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகள் மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்.அது முடியாதபோது ஊழியர்களை ஒப்பந்த முறையில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

90-களில் பரிந்துரைக்கப்பட்ட 5-வது சம்பள கமிஷனின் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகள் ஏட்டளவிலேயே உள்ளன. 2008-இல் வெளிவந்த 6வது சம்பள கமிஷனும் மேற்குறிப்பிட்டதைப் போன்ற பரிந்துரைகளையே அளித்துள்ளது. இவற்றைப் போன்ற பரிந்துரைகளை சீண்டுவார் இல்லை. ஆனால் 40 சதவிகித சம்பள அதிகரிப்பு மட்டும் தவறாமல் நடந்து விடுகிறது.

இந்தியாவின் தற்பொழுதைய தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்கள் அத்தியாவசியம். தொழிலாளர் நலனை முன்னெடுப்பது என்பது, “என்ன செய்தாலும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க முடியாது” என்ற கேவலமான நிலைக்கு வந்து விட்டது.

நாம் இன்று “மதில்மேல் பூனை” நிலையில் இருக்கிறோம். 1991-இல் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்களினால் சுவர் மீது ஏறி விட்டோம். மேலும் சீர்திருத்தங்களைச் செய்து முன்னேறுவதே சிறந்த வழி. பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு இனி நமக்கு இல்லவே இல்லை. பாதி சீர்திருத்தங்களின் பயன்களையும் ஒரு சாரார் அனுபவித்து விட்டார்கள். எவ்வளவு நாள்தான் மதில் மேலேயே நின்று கொண்டிருப்பது. அரேபிய நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி எழுதிய, புலிட்ஸர் பரிசு பெற்ற நிருபர் திரு. தாமஸ் ஃப்ரீட்மேன்  எழுதியது–

“கடந்த 20 ஆண்டுகளாக (அரேபிய நாடுகளில்) அனுசரிக்கப்பட்ட சந்தை பொருளாதார முறை அப்பட்டமான அரசியல் சுயநலன்களுக்காகவும், ஊழல்வாதிகளால் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டது. ஆனால், மாறியுள்ள சூழலில், சரியான வழி, சந்தைப் பொருளாதாரம் அனுசரிக்கப்படும் முறைகளை சீர்படுத்துவதுதானே தவிர, பழைய சோஷலிஸ முறைக்குச் செல்வது அல்ல.

 சந்தையின் அடிப்படையில் இயங்கும் பொருளாதாரம், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் போக்கு, சட்டத்தின் வழி வியாபாரம் என்பதை நடைமுறைப்படுத்துவது மற்றும் கீழ்நிலையில் வசிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் சரியான மானியங்களை அளிப்பது போன்றவற்றை நடைமுறைபடுத்துவதே சரியான வழியாக இருக்கும்.

 இதை நடைமுறைபடுத்த அரேபிய நாடுகளில் புதிய சிந்தனைகளைக் கொண்ட புதிய தலைவர்கள் முன்னுக்கு வர வேண்டும். இந்த புதிய தலைவர்கள் பட்டவர்த்தனமான உண்மைகளை, கடினமான உண்மைகளைக் கூறுபவர்களாகவும் இருக்க வேண்டும்.”

இதை படித்த எனக்கு, இந்தச் செய்தி அரேபிய நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கும் முற்றிலுமாகப் பொருந்தும் என்று புரிந்தது.

 

எனக்கு பிடித்தது சப்பாத்தி கதைதான்.

நம் நாட்டிற்கான சப்பாத்தியின் அளவை கொஞ்ச-நஞ்சமல்ல மிகப்பெரியதாக மாற்ற வேண்டும். இதற்கு கடுமையான முடிவுகளை எடுத்துத் தான் தீர வேண்டும். சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்.

 

சப்பாத்தியைப் பெரியதாக மாற்றியவர்

இன்றைய இந்தியாவை வளர்ச்சியின் அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல, தேசபக்தி நிறைந்த, மனோதிடம் கொண்ட, அப்பழுக்கற்ற, நேர்மைக்கு இலக்கணமான, தலைமைப் பண்புகள் நிறைந்த ஒரு பிரதமர் வேண்டும். அடுத்து அரசியல் ரீதியாக ஏழைகளை வசப்படுத்தும் திறமையும் வேண்டும். அரசியல் ரீதியாக ஏழைகளை வசப்படுத்துவது என்றால் என்ன என்று நமக்கு நன்றாகவே தெரியும். வெளியில் கூற முடியவில்லையா? அதையும் நானே சிறு அளவில் பட்டவர்த்தனமாக எழுதுகிறேன். ஏழைகளிடம் சென்று பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பற்றி பிரஸ்தாபிக்க முடியாது. பொருளாதாரம் அல்லாத வேறு விஷயங்களைக் குறித்தே பேச வேண்டும். அவ்விஷயங்களில், தான் பிரதமராக பதவியில் இருந்தால், ஏழைகளுக்கு அந்த சிரமங்களிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்று பரப்ப வேண்டும். பொருளாதாரத்தில் அனைத்து ஏழைகளுக்கும் நன்மை செய்வது நடைமுறை சாத்தியமல்ல என்று பேசுபவருக்கே தெளிவாக தெரியும். ஆகவே அரசியல் எதிரிகளை மையமாக வைத்தே அரசியல் செய்தாக வேண்டிய கட்டாயம் இந்தியச் சூழலில் உள்ளது. அந்நிய முதலீட்டைப் பற்றி பேச ஆரம்பித்தால், வெள்ளையர்களுக்கு நாட்டை அடிமைப்படுத்தும் முயற்சி என்று அரசியல் எதிரிகள் பரப்பி விடுவார்கள்.

பெரும்பான்மையான ஓட்டு ஏழைகளிடமே உள்ளது. அவர்களின் ஓட்டுகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் இலவசங்களையும் மானியங்களையும் அளிக்க முடியாது. ஏழைகளுக்கு நன்மை செய்வது என்பது, தற்காலிகமாக ஏழைகளுக்கு சிரமங்களை அளிப்பதுதான். இப்படிப்பட்ட அரசியல் சாதுரியம் கொண்டவர் இந்தியாவில் இருக்கிறாரா? ஏன் இல்லை?

ஆனால் போனஸ் போன்று அதிகப்படியான இன்னொரு குணாதியமும் கொண்ட ஒருவர் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் சப்பாத்தியின் அளவை பெரியதாக மாற்றிக்காட்டியவர். அந்த மாநிலத்தை உலக அரங்கில் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர். விவரம் அறிந்த பலரால் பாராட்டப்படுபவர். வேற யாரு? நம் மோடிதான்.

குஜராத்தில் பெரும்பாலான மக்களுக்கு வாய்ப்புகள்; உழைப்புக்கு அங்கீகாரம்; நவீனப் பொருளாதார முறைகளை சட்டப்படி அனுசரிப்பது போன்ற பல நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்திக் காட்டியுள்ளார். கடந்த 10 வருடங்களாக திரு.மோடி அவர்கள் நடைமுறைப்படுத்தியிருப்பது, சந்தைப் பொருளாதார முறைமைகளைத்தான். அதனால் கிடைத்த வளர்ச்சியினால்தான் அவரின் பெயர் பிரசித்தி பெற்றிருக்கிறது. ஒரு பத்திரிகையில் வெளியான திரு.மோடி அவர்களின் பேட்டியைப் படியுங்கள்– சந்தை பொருளாதார முறை, தனியார்மயமாக்கத்தின் அவசியம், அந்நிய முதலீட்டின் அவசியம் என்று இக்கட்டுரையில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட விஷயங்களைத்தான் திரு.மோடி அவர்கள் பேசுகிறார்.

திரு.மோடி அவர்களை ஆதரிக்கிறோம். ஆனால் அவர் நடைமுறைப்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்க மாட்டோம் என்று எவரேனும் கூறினால் அவருக்கு மனநல மருத்துவமனையில்தான் இடம் அளிக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளித்துள்ளார் திரு.மோடி. குஜராத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற திரு.மோடிக்கு, ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை அளிப்பதே இன்றைய நிலையில் நாம் செய்யக் கூடியது. 80-களில் பிரிட்டனின் பிரதமராகப் பதவியில் இருந்த திருமதி.மார்கரேட் தாட்சர், பதவியேற்றவுடனேயே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் வேலைகளை ஆரம்பித்தார். வரலாறு காணாத அளவிற்கு எதிர்ப்புகளைச் சந்தித்தார். சில நாட்களுக்கு பிரிட்டனே ஸ்தம்பித்து விட்டது. ஒரே ஒரு படி கூட அவர் இறங்கி வரவில்லை. பொதுமக்களுக்கு தனியார்மயமாக்கத்தின் இலாபங்களை எடுத்துக் கூறினார். நெடுங்காலத்திற்கு பொதுத்துறையை அரசு கட்டிக்காப்பாற்ற முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பரப்பினார். யூனியன் மாஃபியா கும்பலின் எதிர்ப்பு பிசுபிசுத்து போனது. வழிக்கு வந்தார்கள். வேலைக்கும் வந்தார்கள். பொதுத்துறை நிறுவனங்களின் தனியார் மயமாக்கம் நடக்கவே செய்தது. பிரிட்டனின் வரலாற்றில் திருமதி. மார்கரே தாட்சர் “இரும்பு பெண்மணி” என்றே கருதப்படுகிறார். 1980-இல் தன் கட்சியினரிடையே உரை ஆற்றுகையில், “என் அரசு பொருளாதார தாராளமயமாக்கத்தை தொடர்ந்து செய்யும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசின்பார். அவர் பேசிய இந்த வாக்கியம் பிரசித்தி பெற்றது– “You turn if you want to. The lady’s not for turning!

எந்த நாட்டிலும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். இந்தியாவில் இந்த யூனியன் மாஃபியா கும்பலை “நேருக்கு நேராக” எதிர்க்கும் நேர்மைத்துணிவு, எனக்குத் தெரிந்து திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே உள்ளது. எனக்கு மட்டும் திரு.மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் அவரிடம் ஒரே ஒரு விஷயத்தை கூறவே விரும்புவேன்.

“இந்தியாவில் 2-ஆம் தலைமுறை அலைக்கற்றை ஊழலினால், 2-ஆம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்கள் துவங்கப் படவே இல்லை. அவற்றில் முக்கியமாக வங்கிகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் முழுவதும் தனியார்மயமாக்கப்படும்போதுதான்  இந்தச் சீர்திருத்தங்கள் முழுமையடையும். நம் நாட்டில் மோசமாக நிர்வகிக்கப்படும், மிகவும்  சமான போக்குவரத்து நிறுவனமான இந்திய ரயில்வேயின் வேலைகளை ஒரேயடியாக  தனியாருக்கு ஒப்பந்தத்தில் அளித்துவிடுங்கள். 2001இல் வெளிவந்த திரு.ராகேஷ் மோஹன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை, ரயில்வே துறையை ஒரு கார்பொரேட் நிறுவனமாக மாற்றி, தனியாரின் பங்களிப்பையும் பெற்று இலாப நோக்கத்துடன் நடத்தவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. கட்டண விதிப்பு, நிர்வாகத்தை நடத்தும் முறை, முதலீட்டைப் பெறும் வழிகள் போன்றவற்றை அமல்படுத்தும் அதிகாரம் முழுமையாக அரசு அல்லாத நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. 11

வருடங்கள் கழிந்த நிலையில், கார்பொரேட் நிறுவனமாக நடத்த முயற்சித்தாலும் யூனியன் மாஃபியா கும்பல் எதிர்க்கவே செய்யும். தனியாருக்குக் கூறு போட்டு விற்றாலும் எதிர்ப்பே மிஞ்சும். எதற்கு படிப்படியாக இதை நடைமுறை படுத்த வேண்டும்? ஒரேயடியாக ரயில்வே துறையின் வேலைகளை தனியாருக்கு ஒப்பந்த முறையில் அளித்து விடுங்கள்.

பேருந்துகளையும், ரயில்களையும், விமானங்களையும் அரசு இயக்குவது முட்டாள்தனம்.”

 

ரயில்வே துறையில்தான் அதிகமாக ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். எதிர்ப்பும் மிக அதிக அளவில் இருக்கும். இந்த எதிர்ப்பை மட்டும் சந்தித்து வென்று விட்டால், மற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் ஒரு சிரமமும் இருக்காது. மேலும் சீர்திருத்தங்களைச் செய்த பிற நாட்டு அனுபவங்களையும் நாம் பார்த்து விட்டோமே! எதற்கு ஒவ்வொரு படியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரே அடி. நெத்தி அடி. யூனியன் மாஃபியா கும்பல், தலையும் புரியாமல், வாலும் புரியாமல் பேதலித்துப் போய்விட வேண்டும். நம் நாடு வளம்பெற, பெருவாரியான மக்கள் நல்ல வாழ்க்கைத்தரம் அடைய, இந்த கும்பல் சிரமப்பட்டுத்தான் ஆகவேண்டும். “எல்லோரும் நலமோடிருக்கப் பிரார்த்திக்கிறேன் பராபரமே!” என்றெல்லாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க முடியாது. யூனியன் மாஃபியா கும்பல் சிரமங்களை எதிர்கொண்டால்தான் நம் வாழ்வு வளம் பெறும்.

ஒரு விஷயத்தை கவனித்தாக வேண்டும். திருமதி.மார்கரேட் தாட்சர், 11 வருடங்களுக்குப் பின் அடுத்தக்கட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களை மீண்டும் ஆரம்பிக்கும் போது, அவர் கட்சியிலேயே எதிர்ப்பு அதிகமாகி பதவியிலிருந்து ராஜிநாமா செய்தார். திரு. மோடி அரசியல் சாதுரியம் மிக்கவர். எதிர்ப்புகளையே 10 வருடங்களாக சந்தித்து வருபவர். ஆகவே அவர் வெல்வார் என்றே நான் நம்புகிறேன்.

மேற்கூறியவை எல்லாம் என் ஆசைகள்தான். நடைமுறையில் நான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட மானியங்கள் அவ்வளவையும் திரு.மோடி தடாலடியாக நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது இந்திய அரசியல் சூழலில் சாத்தியமும் இல்லை. ஆனால் மானியங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு நிதிநிலை சீர்செய்யப்படும் என்ற சமிக்ஞையை கண்டிப்பாக அளிப்பார் என்றே நம்புகிறேன். நான் எதிர்பார்க்கும் வேகத்தில் மானியங்கள் குறைக்கப்படாது. ஆனால், எதிர்காலத்தில் அந்நிலையை அடைவதை நோக்கியே அவரின் பயணம் இருக்கும். மேலும் நாட்டின் வளர்ச்சியில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். கடினமான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மட்டுமல்ல, அதைப் பெரும்பாலான பொதுமக்களுக்கு சரியாக, அரசியல் ரீதியாக எடுத்தும் செல்வார். இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

“விதுர நீதியில் கூறப்பட்டிருப்பது போல், யார் செல்வத்தை தகுதியுள்ளோரிடம் சேர்க்கிறானோ, மனிதர்களிடையே உள்ள வித்தியாசங்களின் அடிப்படையில் அவர்களை  நடத்துகிறானோ, அறிவுள்ளவனோ, சுறுசுறுப்பாக இருப்பவனோ அவனே மனிதர்களில் அதிகாரம் கொண்டவன்.”

 

நான் திரு.மோடிக்கு ஓட்டு போட முடிவெடுத்து விட்டேன். அப்ப நீங்க?

முடிவுரை:-

இவ்வளவு எழுதிய பிறகும், கம்யூனிஸத்தை எதிர்க்கிறோம். ஆனால் ஏழைகளுக்கு உதவத்தான் வேண்டும்; வாழ்வாதாரங்கள் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் நினைத்தால் உங்களுக்கு அருமையான வழி உள்ளது. காலம் காலமாக, ராபின் ஹூட்டின் வழி செல்லும் அந்த குழு என்றுமே இருக்கும். அதன் கொள்கை பிரகடனம் கீழ்வருமாறு இருக்கும்.

தோழர்களே, வாருங்கள். உங்களுக்கு உன்னதமான எதிர்காலத்தை தருகிறோம். ஆயுதப்  போராட்டத்தின் மூலம், அயோக்கிய பணக்காரர்களிடமிருந்து சொத்துகளைப் பறித்து, நாம்  பகிர்ந்து கொண்டு, அற்புதமான எதிர்காலத்தை அடைவோம். பணக்காரர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் இராணுவத்தையும், காவல் துறையையும்  பூண்டோடு அழிப்போம். சோவியத் யூனியனும், சீனாவும் பொதுவுடைமையைத் தவறாக நடைமுறைப்படுத்தி விட்டன. வர்க்கப் போராட்டத்தை வர்த்தகப் போராட்டமாக்கி விட்டன. நாம்  சரியாக நடைமுறைப்படுத்தலாம். சப்பாத்தியின் அளவை பணக்காரர்களிடமிருந்து கொள்ளை அடிக்கும் வளங்களைக்  கொண்டே பெரிதாக்கிக் கொள்ளலாம். (பணக்காரர்கள் இல்லாது போனால் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு சாப்பிடலாம்.). நம் அனைத்துத் தேவைகளையும் நம் போலிட்ப்யூரோ கவனித்துக் கொள்ளும்.”

 

பணக்காரர்கள் சாமர்த்தியத்துடன் உழைத்து சொத்துகளை சேர்த்து வைத்துக் கொள்வார்களாம். இந்த கொரில்லாக்கள் பறித்துக் கொள்வார்களாம். குழப்பம் உள்ளவர்கள் அங்கே சேர்ந்து கொள்ளலாம். அனைத்துச் சந்தேகங்களையும் கேட்டுக் கொள்ளலாம். அதாவது வினவி(!) க்கொள்ளலாம். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வினவு குழுக்களின் கிளைகள் என்றுமே இருந்து வந்துள்ளன. இது போர். அவர்களின் சிந்தனைகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியாக வேண்டும். கருணை இல்லாத பிறவிகள் என்று நம்மீது விமர்சனம் வந்தாலும் சரி, நாங்கள் இயற்கை நியதியை பெருமளவில் அனுசரித்து, என்றென்றும் எங்கள் கலாசாரத்தின் விழுமியங்களை மூலதனமாகக் கொண்டே வாழ்வோம் என்று சிந்திக்கத் தெரிய வேண்டும். லூஸுத்தனம் என்பது, “செய்த காரியத்தையே மறுபடி மறுபடி செய்து கொண்டு, வேறுவிதமான முடிவு வரும் என்று எதிர்பார்ப்பது” என்று கூறுவர்.

சோவியத் யூனியனும், சீனாவும் பொதுவுடைமையைச் செயல்படுத்த முயன்றன. சோவியத் யூனியன் அதில் வெற்றி பெற்றதாக வெளியில் உதார் விட்டு, உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு, கடைசியில் அழிந்து விழுந்தது. சீனாவும் அதையே செய்ய முயன்று, பாதிப் பயணத்தில் லூசுத்தனம் அகன்று, சந்தைப் பொருளாதார முறையை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது. ஐரோப்பிய நாடுகள், கல்வியையும், மருத்துவத்தையும், அனைவர்க்கும் அளிப்பதில் வெற்றிகரமாக செயல்படுத்தியே விட்டன. ஆனால் வளங்கள் பல இருந்தாலும், சோம்பேறிகள் பெருகியதால், நெடுங்காலத்திற்கு இதைத் தொடர முடியாமல், கீழே விழுந்து விட்டன.

அமேரிக்கா, சந்தைப் பொருளாதாரம் என்று கூறிக் கொண்டே, பல மட்டங்களில் மானியங்களை அள்ளி வழங்கி கல்வி மற்றும் மருத்துவத்தை கிட்டத்தட்ட அனைவர்க்கும் வழங்கியே வருகிறது. நாட்டின் பொருளாதாரம் ஆட ஆரம்பித்தவுடன், அதன் பல கூறுகளும் விழ ஆரம்பித்துள்ளன. உலக சமுதாயத்தின் பல முயற்சிகளை நாம் கண்டும் கூட, நம் இந்தியாவும் அதே இலக்கை அடைய பயணம் மேற்கொண்டுள்ளது. ஜனநாயகத்தை நாம் அனுசரிப்பதால், “கல்வி மற்றும் மருத்துவம்” அனைவர்க்கும் கிடைத்து விட்டது என்று போக்குக் காட்டவும் முடியாது. 121 கோடி மக்கள் தொகை இருப்பதால் நம்மால் அந்த இலக்கை அடையவும் முடியாது. அதிக மக்கள்தொகை உள்ளதால், இந்தியாவில் மானியங்கள் கூடாது என நான் கூற வில்லை. மக்கள்தொகை குறைந்த நாடுகளிலும் இது தோற்றுப்போயிருக்கிறது. தோற்றுத்தான் போகும் என்பதுதான் என் வாதம். அதைப் போலவே, ஏழை நாடாக உள்ளதால், இந்தியாவில் மானியங்கள் கூடாது என நான் கூற வில்லை. பணக்கார நாடுகளிலும் இது தோற்றுப் போயிருக்கிறது. தோற்றுத்தான் போகும் என்பதுதான் என் வாதம்.  சில விதிவிலக்குகளைத் தவிர, மற்ற அனைவர்க்கும் எக்காலத்திலும் மானியங்கள் அளிக்கப்படக்கூடாது.

நமக்கு 3 வழிகளே உள்ளன.

முதலாவது வழி, பொதுவுடைமையை முழுமையாக அனுசரிப்பது. இது தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. தோல்வியில்தான் முடியும். இல்லை என்று கூறுபவர்களுடன் விவாதித்து பயனில்லை.

இரண்டாவது வழி, நடைமுறைச் சாத்தியமில்லாத, நெடுங்காலத்திற்குத் தொடர முடியாத, பொதுநலன்களை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை அனுசரிப்பது. இன்று பெரும்பாலான நாடுகளில் இதுவே நிலை. தோற்றுப் போய்க் கொண்டிருந்தாலும் வெற்று உதாருடன் அதையே தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மையக்கருத்து.

மூன்றாவது வழி, எக்காலத்திலும் தொடரக்கூடிய, தாக்குப்பிடிக்கக் கூடிய, இயற்கையுடன் இயைந்து செல்லக்கூடிய முறை என்பது இன்றைய மோசமான மானிய திட்டங்களிலிருந்து வெளிவருவதுதான். இல்லையேல் விளைவுகளை நாம் அனைவரும் சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கும். தற்பொழுதைய உலக சமூகங்களை அவதானிக்கும்போது, நாம் அது போன்ற விளைவுகளை மேலும் கொடூரமாக சந்திக்க இருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.

“காதல் என்பது பொதுவுடைமை” என்று ஒரு திரைப்படப் பாடல் வரும். காதலைப் போன்ற வர்த்தகப்படுத்த முடியாத குணாதிசயங்கள் பொதுவாக அனைவர்க்கும், பொதுவுடைமையாக இருந்து விட்டு போகட்டும். தோல்வியை ஒப்புக் கொள்வோம். பொதுவுடைமை கூறுகளை அதிகம் கொண்ட பயணத்தை இடை நிறுத்துவோம்.

சிந்தனையில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு (Human Spirit) மனித சக்திக்கு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்குவோம். “எல்லார்க்கும் எல்லாம்” எதார்த்தத்திற்கு விரோதமானது, இயற்கைக்கும், அறிவியலுக்கும் எதிரானது.

நம் மரபுகளுக்கு எதிரானது.

முற்றும்.

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-31, 2012)

நரேந்திர மோடிக்கு ஓட்டு போடுங்கள்! நான் கனவில் கூட குஜராத் பக்கம் போனதில்லையே என்கிறீர்களா, பிரச்சனை இல்லை, நீங்கள் ஓட்டு போடுவது அமெரிக்காவின் புகழ் பெற்ற டைம் மாகசீன் நடத்தும் 2012ம் ஆண்டுக்கான நூறு சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தான். இத்துடன் சென்ற வாரம் வெளிவந்த டைம் மாக்சீன் புத்தகத்தின் முன் அட்டையில் மோதி அவர்களின் படத்தை போட்டு Modi means business! என்று தலைப்பிட்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோதி அவர்கள் ராஜீவ் காந்திக்கும், ஜவஹர் லால் நேருவுக்கும் இருந்த உலகளாவிய பிராபல்யத்தைப் போல உலகின் பார்வையில் முக்கியமான நபராக முன்னேறி வருகிறார் என்றால் மிகையில்லை.

அமெரிக்காவில் வெளிவரும் பத்திரிக்கைக்கு மோதியைப் பாராட்ட மனது இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள எந்த பத்திரிக்கையும் மோதிக்கு ஆதரவாகவோ, எதிர் பிரச்சாரம் இல்லாமலோ ஒரு எழுத்து கூட இதுவரை எழுதியதில்லை என்பது வெட்கக் கேடு. தொடர்ந்து மோதிக்கு எதிரான பிரச்சாரத்தில் இந்திய பத்திரிகைகள் பெரும் தொண்டு ஆற்றி வருகின்றன. அப்படிப் பட்ட பிரசாரத்துக்கு எதிர்பிரசாரத்தில் இறங்காமல்,மோதி அமைதியாக அவற்றுக்கு தன் செயல்பாட்டினாலேயே உரக்க நன்றாக பதிலளித்து வருகிறார். அண்மையில் அவுட்லுக் பத்திரிக்கையில் மோதியைக் குறுக்கு விசாரணை செய்வது போல இருபத்தி ஐந்து கேள்விகளை வெளியிட்டு இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்திருந்தனர். மோதி இவற்றைச் சட்டை செய்யப் போவதில்லை என்றாலும் gujaratriots.com தளத்தில் அருமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்துத்துவர்கள் தம் விமர்சனங்கள், பதிலடிகள் ஆகியவற்றை எடுத்து வைக்கும் போது பத்திரிகை – தொலைகாட்சி ஊடகங்களில் பெரும்பாலும் புறக்கணிப்பு செய்யப் பட்டாலும், இணையம் ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பது கலிகாலத்திலும் ஒரு நல்ல விஷயம் எனலாம்.

அரசியல், பொருளாதாரம் போன்ற விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால், டைம் போன்ற வெளிநாட்டு பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியோ, இந்திய மக்களை, குறிப்பாக இந்துக்களைப் பற்றியோ சரியான புரிதல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அண்மையில் பிபிசி ஹோலி பண்டிகை குறித்து வெளியிட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹோலிப் பண்டிகை ஒரு அருவருக்கத் தக்க (filthy) நிகழ்ச்சி என்று பிபிசி இணைய தளத்தில் செய்தி வந்த போது, பிபிசி கூடவா இன்னுமா இப்படி என்று வியப்பும் ஏமாற்றமும் ஏற்படுகிறது.

அந்த ஏமாற்றத்தை மறக்க வைக்க நல்ல செய்தி ஒன்று. தமிழ் ஹிந்துவில் திரு. சுப்பு அவர்கள் எழுதி “போகப் போகப் தெரியும்…” என்ற தொடராக வெளிவந்து பின்னர் திராவிட மாயை என்ற பெயரில் புத்தகமாகவும் வெளிவந்தது பலருக்கும் தெரிந்ததே. இத்தொடர் புதிய தகவல்களுடன், துக்ளக் பத்திரிகையில் வெளிவரத் துவங்கி உள்ளது. திராவிடக் கட்சிகளை விமர்சிப்பதே தமிழர்களுக்கு விரோதமானது என்ற மாயை நிலவி வந்தது – அல்லது அப்படிப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். சென்ற முறை திமுக ஆட்சி நடந்த விதத்தில் இருந்து மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர். அதற்கு கருணாநிதிக்கும் நாம் நன்றிக் கடமைப் பட்டுள்ளோம். துக்ளக் போன்ற பிரபலமான பத்திரிகையில் சரியான நேரத்தில் வருகிற அருமையான தொடர். இத்தொடரும் அதன் நோக்கமும் வெற்றி அடைய சுப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சாதிய எதிர்ப்பு, பெண்ணுக்கு விடுதலை, அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதெல்லாம் திராவிடக் கட்சிகளின் சாதனை என்று பாடப்புத்தகங்களில் எழுதி நம் பிள்ளைகளின் இளம் வயதிலேயே கட்சிப் பிரச்சாரத்தை பதிய வைக்கிறார்கள். உண்மையில் திராவிடக் கட்சிகள் இல்லாமல் இருந்தாலும் இந்த மாற்றங்கள் வந்திருக்கும். இதைத் தனிக்கட்டுரையாகத் தான் விளக்க வேண்டும் – ஏனெனில் அவ்வளவு பிரச்சார முழக்கங்கள் சிந்தனையை மழுங்க அடித்து விட்டன. உதாரணமாக ஒரு செய்தி: தமிழகத்தில் அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கருணாநிதி அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அது வெறும் பிரச்சாரமாகவே போய் விட்டது. தொடர்ந்து வந்த ஜெயலலிதா அரசும், கருணாநிதி நிமிர்த்தியதை எல்லாம் கவிழ்த்து வைக்கும் வேகத்தில் இந்த திட்டத்தை மூடுவிழா செய்து விட்டது. இது தான் திராவிடக் கட்சிகளின் சீர்த்திருத்த லட்சணம்.

இதே சமயத்தில் கேரளாவில், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அமைப்பின் கீழ் வரும் சுமார் இரண்டாயிரம் பழமையும் பெருமையும் வாய்ந்த கோவில்களில் பிராமணர் மட்டும் அல்லாது எல்லா சாதிகளில் இருந்தும் அர்ச்சகர்களை நியமிக்கத் துவங்கி உள்ளனர். குணங்கள், ஈடுபாடு, கல்வி, தொழில் ஆகியவற்றாலேயே ஒருவர் பிராமணன் ஆகிறார், பிறப்பால் அல்ல என்கிறார் இந்த தேவஸ்வம் போர்டின் செயலாளர் ஜெயக்குமார். கேரளத்தில் எவ்வளவு அமைதியாக இப்படி ஒன்றை சாதித்திருக்கிறார்கள் என்று வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான். கேரளாவைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் பரவ வேண்டும். நிச்சயம் இது பரவும்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் – மொழி. மலையாள மொழியில் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் மிக அதிகம். எனவே மலையாள மொழியை, அதன் நூல்களைப் படிக்கும் சராசரி மலையாளிகளுக்குக் கூட சம்ஸ்கிருத சொற்களஞ்சியத்தின் சொற்களும் உச்சரிப்பும் பிடிபட்டு விடும். கதகளி, மோகினியாட்டம் போன்ற கலைகள் முழுக்க சம்ஸ்கிருத மயமானவை. அங்கு சம்ஸ்கிருதத்தை யாரும் அன்னியமாக நினைப்பது கிடையாது. ஈழவர்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட நாராயணகுருவே சம்ஸ்கிருத நூல்களை எழுதியிருக்கிறார்.. ஐயன் காளியின் மருமகன் கேசவன் சாஸ்திரி ஒரு மாபெரும் சம்ஸ்கிருத அறிஞர். கேரள கோவில்களில் சர்வ சாதாரணமாக நாயர்கள், ஈழவர்கள் என்று எல்லா சாதியினரும் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ர நாமம் சொல்வதைக் காணலாம்.

தமிழகத்தில் சம்ஸ்கிருதக் கல்வி தேய்ந்து மறைந்து கொண்டிருக்கிறது. (அண்மையில் கிரியா தமிழ் அகராதியில் சம்ஸ்க்ருதம் பற்றிய குறிப்பில் வழக்கொழிந்து போன மொழி என்பது போல குறிப்பிட்டிருப்பதை காண நேர்ந்தது. இது ஒரு தவறான தகவல் ஆகும் – ஒரு உதாரணம் அண்மையில் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் சம்ஸ்க்ருதத்தை மாநில மொழியாக அறிவித்தனர்.) தனித்தமிழ் / திராவிட இயக்கங்களும் மக்களிடமிருந்து அந்த மொழியையே அன்னியப் படுத்தி விட்டன.

இந்நிலையில் தமிழகத்தில் மாற்றங்களை உருப்படியாகக் கொண்டுவர வலுவான இந்து அமைப்புகளோ, உறுதுணையாக அரசின் திடமான எண்ணமோ இல்லை. தமிழக இந்து இயக்கங்கள் பரவலாக ஆங்காங்கே இருக்கிறார்களே தவிர ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. மாறாக கிறிஸ்தவ அமைப்புகளைப் பாருங்கள். Church of South India (CSI) என்கிற தென்னிந்திய கிறிஸ்தவ சர்ச் அமைப்பு ஒரு மாபெரும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. ஆங்காங்கே பெரும் பொருட்செலவில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் என்று கட்டி வருகிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது, எப்படி செலவாகிறது, எவ்வளவு லாபம் ஈட்டுகிறார்கள், என்ன விதத்தில் செயல்படுகிறார்கள் என்று யாருக்கும் தெரிய நியாயம் இல்லை. ஒப்பீட்டில் தமிழகத்தில் இந்து இயக்கங்கள் இந்த அளவு பண பலமோ, செல்வாக்கோ இல்லை என்று தான் சொல்லவேண்டும். கொசுறு:

ஒரு சேவை அமைப்பை இப்படி ஆராய்ச்சி செய்யலாமா என்று கேட்பீர்களேயானால் இந்த செய்தியை படியுங்கள். அந்த அமைப்பே தன்னை ஒரு நிறுவனமாக (Company) ஆகத்தான் பதிவு செய்து கொண்டுள்ளது. CSI அமைப்பு ஒரு பதிவு செய்யப் பட்ட நிறுவனமே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்பளித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை, கணக்கு வழக்குகளில் முறை கேடு செய்து வருவது குறித்த வழக்கில் தான் உயர்நீதி மன்றம் இவ்வாறு தீர்ப்பு கூறி உள்ளது.

இந்தியாவில் தான் சிறுபான்மை அமைப்புகள் என்ற பெயரில் பெருமளவு பண மோசடி, மதமாற்றம், அமைதியைக் குலைத்தல் ஆகியவற்றில் தைரியமாக ஈடுபட முடிகிறது. இதை விசாரித்தால், உடனே இந்து மதம் என்ன வாழ்கிறது? சாதி கொடுமைகள் இந்து மதத்தில் தானே இருக்கின்றன என்பார்கள். இந்த சாதி என்ற ஒன்றை வைத்தே இந்துக்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, தம்மைக் குறித்த எந்த விமர்சனத்தையும் மறுத்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் சாதியத்துக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாகவும் சட்டங்கள் இயற்றுவதும், உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்துவதுமாக மாற்றங்களை முன்னெடுப்பது இந்துக்களே. இதை இந்துக்களும் உணரவேண்டும்.

பாகிஸ்தானில் பாருங்கள், அங்கே முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மதமாக சாதி பிரச்சனை இல்லாமல் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள் என்று இங்கிருந்து கொண்டு பெரும்பாலார் நினைக்கின்றனர். உண்மையில் அங்கே நிகழ்வதே வேறு. அங்கே முஸ்லிம்களில் ஒரு பிரிவினரான அஹமதியாக்களை, அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று சிறுபான்மையினர் ஆக்கி விட்டது அந்த நாட்டு அரசு. சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள், இந்துக்கள் ஆகியோர் சொல்ல முடியாத துயரத்தையும் கொடுமையையும் அனுபவித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானில் எத்தனையோ இன்னல்களை அனுபவித்தும் செத்தாலும் சாவேனே தவிர முஸ்லிமாக மாறமாட்டேன் என்று ஒரு இந்துப் பெண் போராடி வருகிறார். முழுவிவரம் இங்கே.

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள், முஸ்லிம் மதத்தினுள்ளேயே முஸ்லிம் அல்லாதவர் என்று முத்திரை குத்தப் பட்ட அகமதியாக்கள் ஆகிய இனத்தவர்களின் பெண்களை கடத்திச் சென்று விடுவதும், ஆண்களை கொலை செய்வதும், தொழில் செய்ய விடாமல் தடுப்பதுமாக பல மனித உரிமை மீறல்கள் நடை பெறுவதாக பாகிஸ்தானிய மனித உரிமை அமைப்பு கூறி உள்ளது. நூற்றுக் கணக்கான இந்துக்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலமாக வருவதற்கு முயன்று வருகிறார்கள் என்கிறது இந்த செய்தி.

சரி இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்தால் பாகிஸ்தானிய இந்துக்களுக்கு பிரச்சனை தீர்ந்து விடுகிறதா என்றால் அதுவும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பிரச்சனை என்றால் தூக்கத்தை இழக்கும் காங்கிரஸ் அரசு தலைமை, இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் கண்டுகொள்வதே இல்லை. பாகிஸ்தானில் இருந்து சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து இங்கேயே காஷ்மீரில் இரண்டு மூன்று தலைமுறை வாழ்ந்து விட்ட இந்துக்களுக்கு இன்னும் குடியுரிமை கொடுக்கப் படவில்லை. அவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே தொடர்ந்து வரும் அரசுகள் நடத்தி வருகின்றன. பாகிஸ்தானிய இந்து அகதிகளை விடுங்கள், இங்கே இந்தியாவிலேயே பிறந்த காஷ்மீர் இந்துக்கள் மட்டும் என்ன வாழ்ந்து விட்டார்கள். அவர்கள் வாழ்க்கையும் சிக்கலாகவே இருந்து வருகிறது என்கிறது பயனியர் நாளிதழின் இந்த கட்டுரை.

எத்தனையோ இன்னல்களை அனுபவித்து விட்டாலும் காஷ்மீர் இந்துக்களுக்கு ஜீவ சக்தி இந்து மதத்தில் இருந்தே கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையை உயிர்ப்பிப்பது இந்து பண்பாட்டுக் கூறுகள் தான் என்பதில் ஐயமில்லை. இந்த ஜீவசக்தி நமது பாரத தேசத்துக்கே உரிய சிறப்பு.

கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1

தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அண்மையில் சென்னை வந்த தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறிச் சென்றிருக்கிறார். இது குறித்து ஆணையர் ஏன் திடீரென்று முழங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், பல்லாண்டு காலமாகவே பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரும் அறிந்ததே.

தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கருத்துத் திணிப்புகளாக இருப்பதால், உண்மையான முடிவுகளை அவை பிரதிபலிப்பதில்லை. ஆனால்,  மின்னணு ஊடகங்களுக்கு கணிப்புகள் வெளியிடுவதென்பது, ஒரு அற்புதமான வசூல் வாய்ப்பு. விளம்பரம் வாயிலாக மட்டுமின்றி,  கட்சிகளின் கவனிப்பாலும் தேர்தல் சமயங்களில் கணிப்பு ஊடகங்கள் லாபமடைகின்றன. அரசியலில் நேர்மை ,  தேர்தலில் நாணயம் பற்றிப்  பேசிக் கொண்டிருக்கும்  கட்சி  வழக்கம்போல, இந்த ஊடகங்களால் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்படும்.  இப்போதும்கூட, கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கக் கூடாது என்று ஊடக அரங்கிலிருந்தே தீனமான  குரல்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளன.

தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை அறியச் செய்யும் வழிமுறையே. உலக நாடுகள் பலவற்றில் இம்முறை வெகுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபரின் செல்வாக்கு உயர்வு- சரிவு குறித்து அவ்வப்போது கணிப்புகள் வெளியாவதுண்டு. அரசின் கொள்கைகள் – அதன் விளைவுகள் குறித்தும்கூட கருத்துக் கணிப்புகள் அங்கு வெளியிடப்படுகின்றன. ஒருவகையில் அரசினை இத்தகைய கணிப்புகள் திருத்தி, வழிநடத்துகின்றன.

ஆனால், நமது நாட்டில் ஊடகங்கள் பத்திரிகை தர்மப்படி செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. தனிப்பட்ட விருப்பு- வெறுப்பு, சுயநல நோக்கம், வர்த்தக தந்திரம், அச்சம் போன்ற காரணங்களால் தடுமாறும் இந்திய ஊடகங்களிடம் நடுநிலையான கருத்துக் கணிப்பை எதிர்பார்ப்பது, முட்டாள்தனமானது.

தேர்தல் கருத்துக் கணிப்புகளை அரசியல் கட்சிகளும், தங்களுக்கு சாதகம் என்றால் ஏற்பதும், பாதகம் என்றால் எதிர்ப்பதும் வாடிக்கை. ஆனால், சில ஊடகங்கள் வெளியிடும் கணிப்புக்கள் தேர்தல் முடிந்தபிறகு முற்றிலும் தவறாக இருக்கும். அதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. பொய்த்துப்போன கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஊடகங்களைக் கண்டிக்க வேண்டிய நுகர்வோரான வாசகர்கள் கண்டுகொள்ளாததால், ஒவ்வொரு தேர்தலிலும், இத்தகைய முட்டாள்தனமான கணிப்புகளும் தொடர்ந்து  வெளிவருகின்றன.

விழிப்புணர்வற்ற சமுதாயத்திற்கு, திட்டமிடலுக்கு உதவும் அரிய சாதனமான கருத்துக் கணிப்புகளை பயன்படுத்தத் தெரிவதில்லை. எனவே தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளது போல,  கணிப்புகளுக்கு முழுமையாக தடை விதிப்பதே சரியாக இருக்கும் என்பது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கருத்தாக உள்ளது. எனினும் ஆணையர் கூறியுள்ளதாலேயே, அவரது யோசனையை எதிர்த்தாக வேண்டியுள்ளது.

கணிப்பு என்பது என்ன?

நாட்டு மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை குறிப்பிட்ட மாதிரி (SAMPLE) அளவில், கேட்டறிந்து, அந்தப் புள்ளிவிபரங்களின் (STATISTICS) அடிப்படையில் அரசியல் காற்று  வீசும் திசையை ஆவதானிப்பதே  தேர்தல் கணிப்பு. ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சியும், பிரத்யேக கணிப்பாளர்களைக் கொண்டு இத்தகைய கணிப்புகளைப் பெற்று, அதன் அடிப்படியில் தங்கள் செயல்பாடுகளை வடிவமைக்கின்றன. அவை பெரும்பாலும் ரகசியமானவை என்பதால், அவற்றால் எந்த சர்ச்சையும் ஏற்படுவதில்லை. பொதுஜன ஊடகங்களில்  வெளியாகும் கருத்துக் கணிப்புகளே சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.

பொதுவாக, கணிப்பு என்பது முன்னறிவிப்பு, நிர்ணயம், கணக்கீடு, மதிப்பீடு, கருத்து என பல பொருள்களில் அணுகப்படுகிறது (நன்றி: க்ரியாவின் தமிழ் அகராதி) உரிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நடுநிலையுடன் மதிப்பிட்டு, தெளிவான முடிவுகளை நிர்ணயிப்பதும், மதிப்பீடுகளை உருவாக்குவதும், மக்களுக்கு முன்னறிவிப்பதும், கருத்து தெரிவிப்பதும் கணிப்பின் கடமை. ஆனால்,  நமது ஊடகங்களின் கணிப்புகள் நடுநிலை இன்றி செயல்படுவதால் அவற்றின் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

நமது ஊடகங்களின் கணிப்புகளை, அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வெற்றி பெறும் / தோல்வி பெறும் (WIN  / DEFEAT) என்பதே கணிப்பின் ஆதாரம். இது மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பது. ஆனால், இதற்குள் நான்கு வகையான உட்பிரிவுகளும் அதன் அடிப்படையில் எட்டு விதமான முடிவுகளும் இருப்பது யாருக்கும் தெரிவதில்லை. அவற்றைத் தெரிந்துகொண்டால், என்.டி.டி.வி.யோ, அவுட்லுக்கோ  வெளியிடும் கருத்துத் திணிப்புகள் கண்டு நீங்கள் ஆயாசம் அடைய மாட்டீர்கள்.

எந்த ஒரு கணிப்பிற்கும் பின்புலத்தில் நோக்கம், விருப்பம்,  எதிர்பார்ப்பு,  மதிப்பீடு ஆகிய நான்கு நிலைகள் இருக்கின்றன. இந்த நான்கு நிலைகளின் அடிப்படையில் ஒரு கட்சியின் வெற்றி அல்லது தோல்வி கணிக்கப்படும்போது அவை எட்டு வகையான முடிவுகளைத் தரலாம். அவற்றை நாம் இங்கு ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..

நோக்கத்துடன் இயங்கும் கணிப்புகள்:

ஒரு தி.மு.க. தொண்டரிடம் சென்று, அடுத்த சட்டசபை தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்  என்று கேட்டுப் பாருங்கள். உங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, அடுத்த நிமிடமே ”கலைஞர் தான் அடுத்த முதல்வர்” என்பார். வேறு பதிலை அவர் சொன்னால்தான்  அதிசயம். அதாவது தி.மு.க. தொண்டரைப் பொருத்த வரை, திமு.க. வெல்லும் என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, நோக்கமும் கூட.

அவரிடமே அ.தி.மு.க.வின் நிலை பற்றிக் கேட்டுப் பாருங்கள். ”அக்கட்சிக்கு முன்வைப்புத் தொகைகூடக் கிடைக்காது” என்பார். அதாவது நோக்கத்துடன் கூடியவரின் கணிப்பு, ஒரு கட்சி வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும் (MUST WIN / MUST DEFEAT) என்பதாகவே இருக்கும்.

நமது ஊடகங்களின் கணிப்புகளிலும் இத்தகைய அணுகுமுறையை நீங்கள் கண்டிருக்கலாம். நக்கீரன் வாரஇதழ் வெளியிடும் கணிப்புகள் பெரும்பாலும் இப்படி அமைபவையே. சென்ற சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க வெல்லும் தொகுதிகள் என்று நக்கீரன் அறிவித்த தொகுதிகளில் அக்கட்சி ஜெயித்திருந்தால், தி.மு.க  அரசுக்கு ‘மைனாரிட்டி அரசு’ என்ற அவப்பெயர் ஜெயலலிதாவால் சூட்டப்பட்டிருக்காது.

namo-no-1

சென்ற குஜராத் சட்டசபை தேர்தலிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆங்கில ஊடகங்கள் வெளிப்படுத்தின. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அமைந்துவிடக் கூடாது என்பதை ஒரு பிரசார இயக்கமாகவே  அவை முன்னெடுத்தன. அவற்றின் கணிப்புகளிலும், ‘மோடி மண்ணைக் கவ்வுவார்’ என்றே குறிப்பிட்டன. ஆனால், ஊடகங்களின் முகத்தில் கரியைப் பூசி, மீண்டும் வென்று, கணிப்பாளர்களை மண் கவ்வச் செய்தார் மோடி.

தமிழகத்தில் நக்கீரன் வெளியிட்ட கருத்துக் கணிப்பு திமு.க. வெல்ல வேண்டும் (MUST WIN) என்ற அடிப்படையிலானது. குஜராத்தில் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பு பா.ஜ.க. தோற்க வேண்டும் (MUST DEFEAT) என்ற அடிப்படையிலானது. இந்த இரண்டு வகையான கணிப்புகளும் மக்கள் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆயினும், தேர்தல் சமயத்தில் இந்த கணிப்புகள் ஏற்படுத்திய உளவியல் தாக்கங்களையும் நெருக்கடிகளையும் சிந்தித்துப் பாருங்கள். ஊடகங்களின் அதர்மம் புரியும்.

விருப்பத்துடன் இயங்கும் கணிப்புகள்:

ஏதாவது ஒரு தமிழக அரசு ஊழியரிடம் சென்று, வரும் தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த நிமிடமே, தி.மு.க வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புகளை பட்டியலிடத் துவங்கி விடுவார். வானவில் ஊழலால் தனிப்பட்ட வகையில் குடிமகன் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றுகூட அவர் சொல்லக்கூடும் (எனது அனுபவம் இது).  தங்களுக்கு அள்ளி வழங்கிய  கலைஞர் மீண்டும் முதல்வராவார் (SHOULD WIN) என்பது அரசு ஊழியர்களின் விருப்பம். அதுவே அவர்களது கருத்திலும் கணிப்பிலும் எதிரொலிக்கும்.

அடுத்ததாக, ஒரு முஸ்லிம் குடியிருப்பிற்குச் சென்று அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானி பிரதமர் ஆவாரா அன்று கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு இது ஒரு சோதனை. என்ன பதில் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? உண்மையிலேயே அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமியரும் கூட, அதை தனது குடியிருப்பில் கருத்துக் கணிப்பின்போது வெளிப்படையாகச் சொல்வார்  என்று எதிர்பார்க்கிறீர்களா?

பெரும்பாலான சிறுபான்மையினர், பா.ஜ.க.வின் எதிரிகள் நடத்திவரும் துஷ்பிரசாரத்தால், அக்கட்சியை எதிரியாகவே அனுமானிக்கிறார்கள் என்பது ரகசியமல்ல. சென்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு  தெரிவித்தவர்களில் சிறுபான்மையினரின் உட்பிரிவு சதவிகிதம் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை   என்பது இந்தியா டுடே கணிப்பில் தெரியவந்தது. அதாவது, அதிகப்படியான  சிறுபான்மையினரின் தேர்வு ‘அத்வானி பிரதமராகக் கூடாது’ (SHOULD NOT WIN) என்பதாக இருந்துள்ளது.

எதிர்காலத்தைக்  குறிக்கும் துணைச் சொல்லான ‘SHALL’ என்பதன் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமே ‘SHOULD’. அதாவது நமது யூகம்  விருப்பத்தின் அடிப்படையில் அமையும்போது, அது உறுதிப்படுத்தப்பட்ட கணிப்பாகவே வெளிப்படுகிறது. அரசு ஊழியர் தி.முக. வெல்லும் (SHOULD WIN ) என்கிறார்;  இஸ்லாமியர் பா.ஜ.க. வெல்லாது (SHOULD NOT WIN) என்கிறார். இவை இரண்டுமே விருப்பத்தை அடித்தளமாகக் கொண்டவை.

விருப்பங்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படலாம். அதற்காகத்தான் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கணிப்பாளரே விருப்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது.

சென்ற சட்டசபைத் தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர்  வெளியிட்ட கணிப்புகள், தி.மு.க. சார்ந்த திணிப்புகளாகவே இருந்ததற்குக் காரணம்,  அதன் அடித்தளத்தில் இயங்கிய  விருப்பங்கள் தான்.  சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது துக்ளக் கூறிய ஹேஷ்யங்கள் பலிக்காமல் போனதும், பா.ஜ.க. சார்ந்த துக்ளக்கின் அணுகுமுறைதான்.

நோக்கத்துடன் கூடிய கணிப்புகள் போலவே விருப்பத்துடன் கூடிய கணிப்புகளும் தோல்வியில் முடிகின்றன. ஆனால், தேர்தல் காலத்தில் கட்சிகளுக்கு பின்பலமாக இவை உதவுகின்றன. கட்சிகளின் கொள்கைகள் மீதான அபிமானம், அரசுகளின் செயல்முறை மீதான நாட்டம்,  நன்றியுணர்வுடன் கூடிய ஆசை  போன்றவை விருப்பக் கணிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். எப்படியாயினும், இத்தகைய அணுகுமுறை வாசகர்களை குறிப்பிட்ட அளவில் முட்டாளாக்கி அவர்களை தவறாக வழிநடத்துகிறது என்பது உண்மை.

(எதிர்பார்ப்புக் கணிப்பு,  மதிப்பீட்டுக் கணிப்பு குறித்து அடுத்த பகுதியில்…)

சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு

எழுதியவர்: வி. சண்முகநாதன், பாராளுமன்ற இணைச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, நியூ டெல்லி.

manmohan-singh_0மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ யை அரசியல் ஆயுதமாக ஆக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. எதிர்க்கட்சித் தலைவர்களைப் பயமுறுத்திப் பணியவைக்க சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே எதிர்க்கட்சிகளைக் காயப்படுத்தும் நடவடிக்கையே. சி,பி.ஐ யின் சுதந்திரத்தையும் நடுநிலையையும் அழித்து விட்டார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதில் சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தொல்லைதரும் வகையில் சி.பி.ஐ. பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே சி.பி,ஐ யினை துஷ்பிரயோகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சாதமாக சி.பி.ஐ எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும்.

quattrocchi_3399e1. சி.பி.ஐ யினைத் தவறாகப் பயன்படுத்தியே போபர்ஸ் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.  சி.பி.ஐ யின் தேடப்படும் பட்டியலில் நீண்டகாலமாக இருந்தவ இத்தாலிய வர்த்தகரான ஓட்டாவோ குத்ரோச்சியை திடீரென நீக்கினார் மன்மோகன் சிங். போபர்ஸ் ஆயுத பேர ஊழல் வழக்கில் 12 வருடங்களாக சர்வதேச இண்டர்போல் அமைப்பால் சந்தேகப் பேர்வழியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு எதிரான ரெட்கார்னர் நோட்டிஸ் விலக்கிக்கொள்ளப்பட்டது.

2. காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் 1984ம் ஆண்டு சீக்கியர்கள்மீது நடந்த பயங்கர தாக்குதல்களில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். சிபிஐ ஜெகதீஷ் டைட்லரை அந்த வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது.

3. மாநில சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்ற அஜித் ஜோகியின் மீதான வழக்குகள் அனைத்தும் மிகவும் சாதுர்யமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

4. லாலு பிரசாத் யாதவ் வருமானத்துகு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை பலவீனப்படுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை மாற்றியபடி இருந்தது.

வருமான வரித்துறை மேல்முறையீடு செய்ய ஏற்றவகையில் நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் ஏற்படுத்திக் கொடுத்து குற்றச்சாட்டிலிருந்து விடுபடும் வகையில் வரிக் கட்டுப்பாட்டிலிருந்தும் விலக்கி, அவருடைய சொத்துக்களைக் காப்பாற்றி, குற்றவியல் வழக்கில் இருந்து அவர் விடுபட வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படி நடந்தபோது உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று சி.பி.ஐ யிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில அரசு மேல்முறையீடு செய்தபோது, அவ்வாறு அப்பீல் செய்ய வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சி.பி.ஐ பரிந்துரை செய்தது.

mayavathi5. 2007 ஆம் ஆண்டில் பி.எஸ். பி. யின் ஆதரவு அரசுக்குத் தேவைப்பட்டபோது, பி.எஸ்.பி. தலைவி செல்வி மாயாவதி மீதான தாஜ் காரிடார் வழக்கு ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. எனினும் 2008ஆம் ஆண்டில் மத்திய ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்தபோது அதனை ஆதரித்த மாயாவதியை அடக்குவதற்காகவே அவருக்கு எதிரான அளவுக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்குக்கு உயிர் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஏப்ரலில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தின் போது, மாயாவதியின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கினை நீர்த்துப்போகச்செய்தது.

6. முலாயம் சிங் யாதவ், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலை எடுத்தப்போதும் பிறகு ஆதரவு தெரிவித்தபோதும் வழக்குகளைக் கூட்டியும் குறைத்தும் நிலைமைக்குத் தக்கவாறு சி.பி.ஐ செயல்பட்டது.

7. பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது பொய்யான வழக்கினைப் பதிவு செய்தது. அதுவும் நீதிபதி புக்கான் தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரித்து, அவருக்கு எதிராக வழக்கு எதுவும் தேவையில்லை என்று அறிவித்தும் கூட வழக்கு பதிவு செய்யப்பட்டது.

8. சி.பி.ஐ யின் கொடுங்கோன்மைக்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது, இன்றைய குஜராத் மாநில விவகாரம், குஜராத் அரசின் சீரிய நடவடிக்கைகளை முடக்கும் வகையில், மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக, கட்டாயப்படுத்தியும் அச்சுறுத்தியும் பழிவாங்கும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ ஈடுபட்டு வருகிறது. அதுவும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு பல்வேறு கட்சிகளில் இந்த வழக்குகளின் மீது விசாரணை நடத்தி முடித்த நிலையில்.

கடந்த ஆறுவருட ஐ.மு. கூட்டணி ஆட்சியில், அத்தியாவசியப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றத்தை கட்டுக்குள் வைப்பதில், அரசு தோல்வி கண்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்டுகளை அடக்குவதிலும் தாக்குதல்களைக் கண்டறிந்து தடுப்பதிலும் இந்த அரசு தன் இயலாமையையே வெளிப்படுத்தியுள்ளது.

மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான ஊழல்களில் இந்த அரசின் அமைச்சர்கள் பலருடைய கை வெளிப்படையாகத் தெரிகிறது. 2ஜி அலைவரிசையை மிகக் குறைவாகக் காட்டி, ஒதுக்கபட்டதில் நடந்த ஊழலால், அரசின் கஜானாவுக்கு 60,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் சி.பி.ஐ யினை தங்களுக்கு சாதகமாகக் கையாண்டு, ஆளும் காங்கிரஸ் தன் ஐ.மு. கூட்டணி தலைவர்கள் தொடர்புடைய வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களின் தலைக்கு மேலே தொங்கும் கூடிய கத்தியாக, சி,பி.ஐ யினை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சியினை பயமுறுத்தி, பலவீனப்படுத்தி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கூட்ட பேரம் பேசுகிறது. எல்லா வகையிலும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தும் இவர்களுக்கு எதிராக மக்கள் போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

நன்றி: விஜயபாரதம் (25-6-2010) இதழ்.