யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்

கடந்த சில நாட்களாக இஸ்லாமிய பயங்கரவாதியும் 300 பேர்களைக் கொல்லவும் 2000 பேர்கள் உடல் உறுப்புக்கள் இழக்கவும் காரணமான யாஹூப் மேமன் குறித்து பலருக்கும் பாசம் பொங்கி வழிகிறது. சிலர் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். சிலர் அழுது புரள்கிறார்கள், சிலர் பார்ப்பனீய பாசிச பா ஜ க அரசைத் திட்டித் தீர்க்கிறார்கள், சிலர் நீதி செத்து விட்டது என்கிறார்கள், சிலர் மரண தண்டனையையே ஒழிக்க வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்தியாவைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிறார்கள். சோட்டா ஷகீல் இதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறான் அதாவது இன்னும் பல ஆயிரம் பேர்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொல்லப் போகிறார்கள் என்று அர்த்தம்.

Clomid has been a treatment for infertility and has been a common oral contraceptive since it was introduced. It also confirmed Tohāna that it will move ahead with plans to launch another epilepsy drug from merck & co. Are the symptoms of doxycycline and tetracycline antibiotics.

Propecia is an over-the-counter medicine that treats signs of early menopause (menses) in postmenopausal women. I awoke, feeling a little anxious but mostly happy, thinking about the possibilities of a new life with the man i had clomid 50 mg tablet price always wanted and hoped to find. Patients with rheumatoid arthritis, sarcoma and lymphoma who don’t respond to first line therapy are usually treated.

Amoxicillin over the counter in australia there was a brief moment when this could have worked out to be a good team in the second half, with both teams showing flashes of brilliance. A funzela generic price study in australia found that if a person takes proscar, they can expect to be in remission for eight more years. Erythromycin 333 mg/day (n=21), erythromycin 400 mg/day (n=22), and tetracycline 500 mg/day (n=25).

இதில் மேமனுக்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் கோஷம் போடும் இஸ்லாமியர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்துல் கலாம் போலவோ ப்ரேம்ஜி போலவோ ஹிந்துஸ்தானி பண்டிட்கள் போலவோ ஷேக் சின்னமவுலானா போலவோ அமைதியை விரும்பும் பிற மதத்தினரை மதிக்கும் அறவுணர்வுள்ள இஸ்லாமியர்கள் அல்ல. வன்முறையையே மதக் கடமையாகக் பூண்ட வெறி பிடித்த மிருகங்கள் அவர்கள். அவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கும் அந்தோணி மார்க்ஸ்களையும், ஞாநி சங்கரன்களையும், அருந்ததி ராய்களையும் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் யாஹுபுக்கு ஆதரவு தெரிவித்தால் கண்ணீர் விட்டால் தாங்களும் முற்போக்கு ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் தங்கள் குண்டிக்கடியில் அவர்கள் வைத்த குண்டுகள் இருப்பது கூடத் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கும் முட்டாள்களைக் கண்டுதான் பரிதாபமாக இருக்கிறது.

எலிகள் எல்லாம் எள்ளுருண்டைக்குக் காய்கின்றன. எதற்குக் காய்கிறோம் என்று தெரியாமலேயே காய்கின்றன இந்தக் கூமுட்டை எலிப் புளுக்கைகள். அந்த முட்டாள்களுக்காகவும் இந்த நீண்ட பதிவு.

B-Raman-The-Kaoboys-of-RAWஇந்த பி.ராமன் குறித்து பல முறை பேசியிருக்கிறேன். அவரது காவ் பாய்ஸ் ஆஃப் ரா படித்த பிறகு எனக்கு ரா மீது இருந்த மரியாதை பெரும் அளவு குறைந்து விட்டது. அந்த நூலில் அவரே ரா அமைப்பை மகா மட்டமாக எழுதியிருக்கிறார்.

ரா என்பது ரிலேட்டிவ்ஸ் அண்ட் அசோஷியட்ஸ் விங் என்றும் பெரும்பாலான ரா அதிகாரிகள் பிருஷ்டத்தைக் கூட அசைப்பது இல்லை என்றும் அதிக பட்சமாக அவர்கள் செய்யும் உளவு வேலையே லோக்கல் செய்தித் தாள்களில் வரும் செய்திகளை வெட்டி ஒட்டி அனுப்புவதுதான் என்கிறார் ராமன். இதையும் மீறி அஜித் டோவால் மாதிரி ஒரு சிலர் இருந்தால் அதிகம்.

அதில் 30 ஆண்டுகள் குப்பை கொட்டிய ராமனே சொல்கிறார் ஒத்துக் கொள்கிறார். ரா முழுவதும் தங்கள் சொந்தக் காரர்களையும், நண்பர்களையும், எடுபிடிகளையும், இன்னும் காசு வாங்கிக் கொண்டு ஆட்களையும் சகட்டு மேனிக்குச் சேர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது முழுக்க முழுக்க உறவினர்கள் உறவினர்களுக்காக நடத்தும் சந்தை மடமாக சத்திரமாக ஆகி விட்டிருக்கிறது. ஃபாரின் அசைன்மெண்டுகளுக்கான ஜாலி டூர் போகும் இடமாக மாறி விட்டிருக்கிறது. ராமன் அனைத்தையும் வெட்கம் இல்லாமல் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி நொந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த ராவுமே பனாமா டெய்லர்களால் நிரப்பப் பட்டுள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அப்படியாகப் பட்ட ரா செய்த ஒரு சில வேலைகளையுமே சோப்ளாங்கி பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த ஏஜெண்டுகளையும் காட்டிக் கொடுத்து விட்டார். அவரது சர்வீஸில் பெரும்பாலான வருடங்களில் அவரைப் போன்றவர்கள் வெறும் கூரியர் ஏஜெண்டாக மட்டுமே வேலை பார்த்திருக்கிறார் என்பது புரிந்தது. ஜான் லீக்கரேயின் பனாமா டெய்லருக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசங்கள் கிடையாது என்பது புரிந்தது.

இருந்தாலும் நேர்மையான அதிகாரி என்ற முறையிலும், ஒரு அனலிஸ்ட் என்ற முறையிலும் ரிட்டயர்ட் ஆன பிறகும் பல விஷயங்களிலும் கட்டுரைகள் எழுதினார் என்ற முறையிலும் மதிக்கப் பட்டவர் பி.ராமன். கடந்த சில வருடங்களில் அவர் கேன்சரினால் பாதிக்கப் பட்டிருந்தார். அப்பொழுது அவர் என்ன மன நிலையில் இருந்தார் அவருக்கு கான்சர் எவ்வளவு தூரம் முற்றி விட்டிருந்தது அவர் ஸ்திரமான மன நிலையில் இருந்தாரா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அந்த சமயங்களில் அவர் உளறல்கள் அதிகமாயின. அவர் அடிப்படையில் இந்திரா காந்திக்கு விசுவாசமானவர். ரா அமைப்பை உருவாக்கினார் என்ற முறையில் அவருக்கு இவரைப் போன்ற மூத்த அதிகாரிகள் விசுவாசமாக இருந்தவர்கள்.

அவர் ரிடீஃபுக்கு 2007ல் எழுதி அனுப்பியதாக இந்தக் கட்டுரையை இப்பொழுது ரிடீஃப் வெளியிட்டிருக்கிறது (இதை ஏன் இப்பொழுது யாக்கூபுக்கு ஆதரவாக இந்த தருணத்தில் வெளியிட்டார்கள் அதற்காக நஷ்டத்தில் இருக்கும் ரீடீஃபுக்கு ஏதேனும் டைகர் மேமன் கம்பெனி காசு கொடுத்ததா, டி கம்பெனி மிரட்டியதா என்பதையும் மோடி சர்க்கார் விசாரிக்க வேண்டும்).

ராமன் 2007ல் எழுதியதாக ரிடீஃப் இப்பொழுது வெளியிட்டிருக்கும் கட்டுரை இங்கே.

இந்தக் கட்டுரையைப் படிகாமலேயே மனுஷ்யபுத்திரன் முதல் சினிமா பற்றி எழுதும் தமிழ் ஃபேஸ்புக்கர்கள் வரை ஆகா ராமனே சொல்லி விட்டார் ராமனே சொல்லி விட்டார் இந்தியாவின் பாசிச பா ஜ க அரசு யாக்கூப்பைக் கொன்று விட்டது என்று ஊளையிடுகிறார்கள். இந்த வரை இந்த அதிமேதாவிகளுக்கு பி,ராமன் என்ற ஒருவர் இருந்த விபரமே தெரியாது. இன்று ராமன் சொல்லி விட்டார் என்று ஏதோ ராமன் விளைவைக் கண்டு பிடித்துச் சொன்ன சர்.சி.வி ராமன் போல குதிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அறிவாளிகள் எவருமே ராமன் என்ன சொன்னார் என்பதையே படிக்காமல் ராமனே சொல்லி விட்டார் ராமனே சொல்லி விட்டார் என்று உளறித் தள்ளுகிறார்கள்.

அப்படி ராமன் என்ன சொல்லியிருக்கிறார்? முதலில் ராமன் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் செத்துப் போன பிறகு அவர் சொன்னார் என்று வரும் கட்டுரைகளை சுப்ரீம் கோர்ட் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சைஃபர் ஃப்ரொன்ஸிக் செய்து பார்த்து உண்மையானால் ஒரு வேளை ஏற்றுக் கொள்ளலாம். ஆகவே கோர்ட் இதை இடது கையால் நிராகரித்து விடலாம். இருந்தாலும் பி.ராமன் இதை எழுதியிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவரது சகோதரர் பி.எஸ்.ராகவனும் இதற்கு சாட்சி சொல்கிறார். ஆகவே கோர்ட் நம்பத் தேவையில்லை என்றாலும் நாம் நம்பிக் கொள்ளலாம். போகட்டும். அதில் அவர் அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்?

1. முதலில் யாகூப் மேமனை கைது செய்யவில்லை அவனே சரண்டர் ஆனான் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா? இல்லையே. அப்படி எங்கே ஐயா சொல்லியிருக்கிறார் என்று இந்த மேதாவிகளில் ஒருவரைக் கேட்டேன் ஆள் அப்ஸ்காண்ட் ஆகி விட்டார்! உண்மையில் பி.ராமன் எங்குமே எப்பொழுதுமே மேமன் சரண்டர் ஆனான் என்று சொல்லவேயில்லை. இந்த அடிப்படை உண்மை கூடத் தெரியாமல் தாங்கள் சொல்லும் விஷயத்திற்கான ஆதாரமே இல்லாமள் புளுகுகிறார்கள். இவர்கள் பிரச்சினைதான் என்ன. அப்படியாவது பொய் சொல்லி புளுகி இவர்கள் யாரைத் திருப்தி செய்கிறார்கள்? அல்லது கூலி வாங்கிக் கொண்டு எழுதுகிறார்களா? எதற்காக இந்தக் கேவலத்தை பாவத்தைச் செய்கிறார்கள்?

ராமன் என்ன சொன்னார்? யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார்.

அவனை நேபாள போலீஸ் கைது செய்ததாகவேதான் சொல்லியிருக்கிறார். ஆகவே அவன் தானாக வந்து சரண்டர் ஆனான் ஆகவே அவனை தூக்கில் போட்டிருக்கக் கூடாது என்பது அபத்தம். அண்டப் புளுகு மட்டுமே. அவன் சரண்டர் ஆனதாக ராமன் எங்குமே சொல்லவில்லை. நேபாளத்தில் கைது செய்த ஒருவரை இந்தியாவின் ராவிடம் ஒப்படைத்ததாக வெளிப்படையாக நேபாளம் ஒத்துக் கொள்ள முடியாது. ஆகவே அங்கு கைது செய்து இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டதை மறைத்து பின்னர் டெல்லியில் கைது செய்தது போல செட்டப் செய்திருக்கிறார்கள். எங்குமே அவன் தானாக வந்து சரண்டர் ஆகவில்லை. அவனை நேபாளத்தில் பொறி வைத்து பிடித்திருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

ராமன் சொன்னது இதோ. ஆங்கிலம் புரியா விட்டால் கேளுங்கள் மொழி பெயர்த்துத் தருகிறேன்.

The prosecution was right in saying that Yakub was arrested in Old Delhi. Yakub was right in claiming that he was not arrested in Old Delhi. In July 1994, some weeks before my retirement, he was informally picked up in Kathmandu, with the help of the Nepal police, driven across Nepal to a town in Indian territory, flown to Delhi by an aircraft of the Aviation Research Centre and formally arrested in Old Delhi by the investigating authorities and taken into custody for interrogation. The entire operation was coordinated by me.

He had come to Kathmandu secretly from Karachi to consult a relative and a lawyer on the advisability of some members of the Memon family, including himself, who felt uncomfortable with Pakistan’s Inter-Services Intelligence, returning to India and surrendering to the Mumbai police. The relative and the lawyer advised him against surrender due to a fear that justice might not be done to them. They advised Yakub to go back to Karachi.

ஆக மொத்தம் ஆதாரமே டுபாக்கூர் புளுகு மூட்டை என்பதை ராமனே உறுதி செய்கிறார்.

2. இரண்டாவதாக யாக்கூபுக்கு மும்பை குண்டு வெடிப்பில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ராமன் சொல்லவில்லை. அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றே ராமனும் சொல்கிறார். யாஹூப் ஒரு அப்பாவி என்றோ அவனுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் சம்பந்தமில்லை என்றோ பி.ராமன் எங்கும் சொல்லவில்லை. அவர் என்ன சொல்கிறார்?

There is not an iota of doubt about the involvement of Yakub and other members of the family in the conspiracy and their cooperation with the ISI till July 1994. In normal circumstances, Yakub would have deserved the death penalty if one only took into consideration his conduct and role before July 1994.

இதற்கு என்ன அர்த்தம் என்று ராமனை படிக்கச் சொல்லி எனக்கு புத்திமதி சொன்ன அதிமேதாவிகள் சொல்ல முடியுமா?

ஆக அவன் சரண்டர் ஆனதாகவும் ராமன் சொல்லவில்லை, அவனுக்கும் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இல்லையென்றும் ராமன் சொல்லவில்லை. பின்னே ஏன் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்று ராமன் சொன்னதாக ரிடீஃப் சொல்கிறது?

அதற்காக ராமன் சொன்னதாகச் சொல்லப் படும் காரணங்கள் கீழே:

1. யாகூப் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்தான்

2. யாகுப் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்து தனது குடும்பத்தையும் இன்னும் சிலரையும் துபாய் வழியாக பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவ்க்குக் கடத்திக் கொண்டு வர உதவினான்

3. அதன் மூலம் மும்பையில் குண்டு வைத்த பயங்கரவாதிகளை பாக்கிஸ்தானில் ஒளித்து வைத்த விபரத்தை இந்தியா உலகுக்குக் காட்ட முடிந்தது.

ஆகவே அவன் கைதான பிறகு ராவுடன் ஒத்துழைத்து அவனது குடும்பத்தையும் கூட்டாளிகளையும் இந்தியாவுக்குக் கொண்டு வர அவன் ஒத்துழைத்த காரணத்தினால் அதைக் கருத்தில் கொண்டு அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்கிறார் ராமன்.

yakub-memon

அப்படி அவன் ஒத்துழைக்கும் பட்சத்தில் அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் படாது என்று இந்தியா அவனுடன் எங்காவது ஒப்பந்தம் போட்டிருக்கிறதா? அப்படி ஏதாவது ஒரு ஒப்பந்தம் இந்தியாவை கட்டுப் படுத்துகிறதா? அந்த ஒப்பந்தத்திற்காக ராமன் நரசிம்மராவிடமோ அல்லது சவானிடமோ அல்லது தனது ரா உயர் அதிகாரியான பாஜ்பாயிடமோ ஏதேனும் அப்ரூவல் வாங்கினாரா? அதற்கான அடிப்படை என்ன ஆதாரம் என்ன? அப்படி ஒரு மன்னிப்பை ஒரு சாதாரண ராமன் மட்டுமே வழங்கியிருக்க முடியாதே ஐயா? ஒரு உளவுத் துறை எஸ்பியனாஜ் ஏஜெண்ட் தனக்கு செய்தி தரும் நபர்களுக்கு பணம் கொடுக்கலாம். சில சின்னச் சின்ன உதவிகளைச் செய்யலாம். அவர்களுக்குத் தொழில் கூட அமைத்துத் தரலாம். பெண்களைத் தரலாம். போதை மருந்துதகள் தரலாம். மேலும் உபத்திரவமில்லாத அவன் கேட்க்கும் ஆயிரத்தெட்டு உதவிகளைச் செய்து தரலாம் தருகிறார்கள். ஏன் தேவைப் பட்டால் சினிமா நடிகைகளைக் கூட ஏற்பாடு செய்து தருவார்கள். அது போல சில பல உத்திரவாதங்களை யாகூபுக்கும் ஒரு வேகத்தில் ராமன் அளித்து விட்டு பின்னர் தன் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளித்து விட்ட குற்ற உணர்வில் மட்டுமே இதை எழுதியிருக்க வேண்டும். சைன்ஃபீல்ட் காமெடி சீரியலில் வரும் ஜார்ஜ் கான்ஸ்டான்ஸா ஒரு இன்பமான சூழலில் படுக்கையில் தன்னுடன் படுத்திருக்கும் தன் பெண் உதவியாளரிடம் உனக்கு அடுத்த மாதத்தில் இருந்து சம்பளம் டபுள் என்று சொல்லி விடுவார். பின்பு வேலை முடிந்த பிறகுதான் அவருக்கு அந்த அதிகாரம் தனக்குக் கிடையாதே பெண்புத்தியில் நடக்காத காரியத்தைச் சொல்லி மாட்டிக் கொண்டேமே என்று முழிப்பார். அந்தக் கதைதான் ராமனின் கதையும் கூட.

ஒருவன் 300 பேர்களைக் கொன்று விட்டு 2000 பேர்களை கை கால் இல்லாமல் முடமாக்கி விட்டு விட்டு மாட்டிக் கொண்டவுடன் அடி தாங்காமலும் சிறையில் சுகமாக இருக்கும் வசதிகளுக்காகவும் ஒரு சில தகவல்களைச் சொல்வதினாலும் தனது சொந்தக் குடும்பத்தைப் பத்திரமாக அபாயமான பாக்கிஸ்தானில் இருந்து சொகுசான இந்தியாவுக்கு தன் சொந்த சுயநலன் காரணமாக கடத்த ஒத்துக் கொண்டதினாலும் மட்டுமே அவனுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என்கிறார் பி.ராமன். அது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்பாகாது. ஒரு உளவு அதிகாரியின் தனிப்பட்ட உறுதிமொழி அல்லது அத்துமீறல் மட்டுமே. காரியம் ஆவதற்காகச் சொல்லி விட்டு பின்பு மன உளைச்சலில் குற்ற உணர்வு அடைந்திருக்கிறார். இது சாதாரணமாக ஒற்று வேலைகளில் இருக்கும் பெரும்பாலான ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் மன உளைச்சல்தான். ஜான் லீக்கரேயின் டிங்கர் டெய்லர் சோல்ஜர் ஸ்பை, ஸ்பை ஹூ கேம் ஃப்ரம் கோல்ட், ஸ்மைலீஸ் பாய்ஸ், எ மோஸ்ட் வாண்ட்டர் மேன் போன்ற கதைகளைப் படித்தவர்களுக்கும் பார்த்தவர்களுக்கும் நான் சொல்ல வருவது புரியும். ஆனால் பெரும்பாலான ஏஜெண்டுகளுக்கு அது போன்ற குற்றவுணர்வுகள் ஏதும் இருப்பதில்லை. உண்மையான நிதானம் தவறாத தேசபக்தியுள்ள ஏஜெண்டுகளுக்கு இந்த சஞ்சலம் வரவே வராது. தேசத்திற்கும் தேச மக்களுக்கும் மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் பார்த்தால் 300 பேர்களைக் கொன்ற ஏமாற்றி ஆர் டி எக்ஸ் கடத்தி பதுக்கி வைத்து குண்டுகளை வெடிக்க ஆட்களை பாக்கிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பி துபாயில் சதித்திட்டம் போட்டு ஒரு பயங்கரமான மதவெறி பிடித்த மிருகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக பி.ராமன் இவ்வளவு தூரம் சஞ்சலப் பட்டிருக்க வேண்டியதில்லை. அவரது கேன்சரும் முதிய வயதும் சேர்ந்து அந்த குழப்பமான மனநிலைக்கு அவரைத் தள்ளியிருந்திருக்கலாம். மற்றபடி யாஹூப் சரண்டர் ஆகவில்லை அவனுக்கு இந்திய அரசு எந்தவிதமான உத்திரவாதத்தையும் அளிக்கவில்லை

மாறாக, அதே மும்பை குண்டு வெடிப்பில் குண்டுகளை எடுத்துச் சென்று வெடிக்க வைத்த பாதுஷா பாய் என்பவன் அப்ரூவராக மாறி உண்மைகளைச் சொன்னான். அவன் மாறியதால் அவனுக்கு மரண தண்டனையில் இருந்து இதே இந்திய கோர்ட்டும் அரசும் விலக்கு அளித்துள்ளது. ஆகவே இந்திய அரசு எந்த துரோகத்தையும் எவருக்கும் இழைக்கவில்லை என்பதே உண்மை.

உண்மை, நடைமுறை எதுவுமே புரியாமல் முற்போக்கு பட்டங்களுக்காகவும் காசுக்காகவும் ஒப்பாரி வைக்கும் அற்பர்களுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை. நான் சொல்வதெல்லாம் புரிந்து கொள்ளும் அறிவும் நிதானமும் கூட இருக்கப் போவதும் இல்லை.

உலகத்தின் அனைத்து விதமான உளவு அமைப்புகளும் ஏதாவது ஒரு விதத்தில் தங்களது எதிரிகளுடன் ஏதாவது ஒரு தொடர்பிலேயே இருக்கிறார்கள். கோல்ட் வார் சமயத்தில் ஏராளமான சோவியத் ஏஜெண்டுகளை பிரிட்டனும் அமெரிக்காவும் மேற்குக்குக் கடத்தி வந்து அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்துள்ளது. அது போல அவன் தேடப் படும் குற்றவாளியாக இருந்தாலும் அவன் தகவல்களைத் தரும் பட்சத்தில் அவனுக்கு தண்டனை குறைப்பு உட்பட பல சலுகைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவும் அளித்தே வந்துள்ளன. ராஜீவ் கொலையாளிகளை உயிருடன் பிடிக்கமல் அவர்களாகவே தற்கொலை செய்ய வைத்தன் பின்ணணியும் இதுதான். இதுதான் உலகளாவிய ஒற்று அமைப்புகள் இயங்கும் விதமே. ஒற்றர்கள் அவர்களின் சொந்த தேசத்தை விட அவர்களுக்குத் துப்புக் கொடுக்கும் ஆட்களுக்கு விசுவாசமாக மாறிய உதாரணங்கள் எல்லாம் உண்டு. அந்த வகையில் ஒரு அதிகாரியாக யாகூபுக்கு ராமன் சில பல உத்திரவாதங்களை அளித்திருக்கலாம். அதை அவர் பிரதமர் அளவுக்குக் கொண்டு சென்று உறுதிப் படுத்தாமல் விட்டிருந்திருக்கலாம். யாகூபுக்கு ராமன் விஸ்வாசமாக இருப்பதன் கட்டாயம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு துப்புக்காரனைக் கை கழுவி விட்டால் பிற துப்புக்காரர்கள் எளிதில் கிடைக்காமல் போய் விடுவார்கள் என்ற பதட்டமும் குற்றவுணர்வுகளுமே ராமனின் மனநிலைக்குக் காரணம். அமெரிக்காவிலும் பல சி ஐ ஏ ஏஜெண்டுகளுக்கு இந்த சிக்கல் நிகழ்கிறது. சிரியானா என்ற சினிமாவிலும் நான் அஸெட் என்ற மினி சீரிஸிலும் நான் இங்கு ஏற்கனவே எழுதியுள்ள ஃபேர் கேம் என்ற சினிமா அறிமுகத்திலும் எ மோஸ்ட் வாண்டட் மேன் என்ற சினிமா அறிமுகத்திலும் சொல்லியிருக்கிறேன். உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்களுக்கும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட. ராமன் போன்றவர்கள் வயதாகி நோயால் தாக்கப் பட்ட பலவீனமான காலத்தில் அது போன்ற ஒரு விதமான மன உளைச்சலுக்கும் நோய்க்கும் உள்ளாகியிருக்க சாத்தியங்கள் அதிகம். அதீதமான மன உளைச்சல்களும் குற்றவுணர்வும் ஏற்படுத்தும் ஒரு கடினமான பணி ஒற்றர் வேலை.

ஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப்yakum-memon-death படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும். இந்த இடத்தில் யாகூப் மேனனுக்கு அந்த சலுகையை அளிக்கும் வண்ணம் அந்த அளவுக்கு அவன் எந்தவிதாமான முக்கியமான துப்புகளையும் அளிக்கவில்லை. மும்பை போலீஸ் கமிஷனரான மொரியாவுக்கு யாகூபுக்கு முன்பாகவே பாதுஷா பாய் என்பவன் அனைத்து தகவல்களையும் அளித்து விடுகிறான். யாகூபின் தகவல்களினால் புதிதாக பெரிய கைதுகள் ஏதும் நிகழவும் இல்லை. யாகூப் அவனது சகோதரனைப் போலவே 300 பேர்களின் படு பாதக கொலைகளுக்கு அனைத்து விதங்களிலும் திட்டமிட்டவனே காரணமானவனே. அவனுக்கு ராமன் போன்ற ஒரு அதிகாரி கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. ஒரு பி.ராமனை விட கொல்லப் பட்ட 300 உயிர்களும் உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்குமே இந்திய அரசு கடமைப் பட்டுள்ளது. அவர்களுக்கான நீதி ஒரு ராமன் ஒரு பயங்கரவாதிக்குக் கொடுத்த வாக்கை விட மிக மிக முக்கியமானது.

ராமனின் வாக்கை மீறியதால் எதிர்காலத்தில் ராவுக்கு கிடைக்கவிருக்கும் ஒரு சில அசெட்கள் தகவாளிகள் கிடைக்காமல் போகலாம். அதற்காக இந்தியா தனது மக்களை கை விட்டு விடக் கூடாது. ஒரு உளவு அதிகாரி ஒரு பயங்கரவாதிக்குக் கொடுத்த உத்திரவாதத்தை விட இந்திய அரசு தனது மக்களுக்கு பெரிதும் கடமைப் பட்டுள்ளது. பி.ராமன் இந்திய அரசின் ஒரு அங்கமே அன்றி அவரே இந்தியாவாகி விட மாட்டார்.

ஆகவே, கூக்குரல் இடும் பயங்கரவாத ஆதரவாளர்களே! ராமனின் ஆவி அமைதியாக உறங்கட்டும். அவரது ஆவியை விட உங்களது இஸ்லாமிய பயங்கரவாதி நண்பர்களை விட இந்தியா மக்களின் பாதுகாப்பானது அதி முக்கியமானது. அதையே இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

காலம் கடத்திய தவறுக்காக இந்திய அரசையும் அதன் நீதிமன்றங்களையும் கண்டிக்கலாமே அன்றி நிச்சயமாக யாகூபை தூக்கில் இட்டதற்காக இந்தியாவையும் அதன் கோர்ட்டுகளையும் எவரும் கண்டிக்கக் கூடாது. அப்படிச் செய்வது மனமறிந்தே செய்யும் பாவம். பலியான உயிர்களுக்குச் செய்யும் துரோகம் மொத்தத்தில் இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் துரோகம் யாகூபை ராமனின் துணை கொண்டு ஆதரிப்பது. இன்று யாகூப் மேமனுக்காக கண்ணீர் விடுபவர்களும் ஆதரவு தெரிவிப்பவர்களும் ஒப்பாரி வைப்பவர்களும் சப்பைக் கட்டு கட்டுபவர்களும் அவனை விட பல மடங்கு கொடிய மிருகங்களாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு கொல்லப் பட்ட குடும்பங்கள் குறித்தோ கை கால் இழந்தவர்கள் குறித்தோ எந்தவிதமான குறைந்த பட்ச அக்கறையும் மனிதாபிமானமும் கிடையாது. யாகூபை விட பல மடங்கு வக்கிரம் பிடித்த இழி பிறவிகள் மட்டுமே அவனை ஆதரிக்க முடியும். அதைச் செய்பவர்கள் சொல்லொணா பாவங்களைச் சம்பாதிக்கிறார்கள்.

(திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)