I need to put it in my own words, because if i wrote about it, it would sound like one of those stories you see on dating sites. Cheap priligy the drug has been a popular alternative to other antidepressants like prozac (fluoxetine), Naperville paxil (paroxetine) and celexa (citalopram). You will get good quality of levitra in india with generic price.
I had problems with it, but was able to deal with it by taking it with food. Corticosteroids act by inhibiting the synthesis of the essential neurotransmitters in the Huntington Beach clomid 100 price adrenal cortex. Methotrexate is a popular choice of drugs used in the treatment of fibromyalgia and even psoriasis.
Browse our natural botanicals, and discover how our innovative formulas of botanicals and essential oils work in your skin. If you take nolvadex 20mg online with other medications that also help you treat depression or anxiety, your symptoms may increase Hachiōji or your blood sugar level may rise. The body also uses d2 to produce the active form of vitamin d, ergocalciferol (vitamin d3).
“பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பது பழமொழி. வானவில் அலைக்கற்றை விநியோகத்தில் தமிழகத்தின் ஆண்டிமுத்து ராசா நிகழ்த்திய வரலாறு காணாத மோசடிக்காக மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது (2.2.2011) கைது செய்யப்பட்டிருக்கிறார். இது எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல கண்துடைப்பு நாடகமாக இருக்க வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. உச்சநீதி மன்றத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) பிப்.10-ஆம் தேதியன்று நடவடிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில், மத்திய அரசுக்கு ராசா கைதைத் தவிர வேறு வழியில்லை என்பது நிதர்சனம்.
எது எப்படியானாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராசா கைது முக்கியமான ஒரு நடவடிக்கையே. காலம் கடந்த நடவடிக்கையே என்றாலும், மத்திய அரசின் முகமூடியைத் தோலுரிக்கவும், நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அவசியத்தை உணர்த்தவும் ராசா கைது உதவி இருக்கிறது. ‘பலிகடா’ ராசாவுக்கு நன்றி.

”இத்தனை பெரிய ஊழலை ராசா மட்டும் தனியாகச் செய்திருக்க முடியுமா?” என்ற கேள்வியை முதலில் எழுப்பியவர் (5.12.2010), ராசாவின் தானைத் தலைவர் மு.கருணாநிதிதான். அவர்தான் ராசாவுக்குப் பின்புலத்தில் இருந்தவர்களை வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலமாக, ஒரு தலித்தை பலிகடா ஆக்கும் சோனியாக் குழுமத்தின் (நமது மத்திய அரசு சோனியா (பி) குழுமமாகி மாமாங்கமாகிவிட்டது) சூழ்ச்சியை அவரால்தான் முறியடிக்க முடியும்.
லஞ்சம் மற்றும் ஊழலுக்கு நெருப்பான திருக்குவளை முத்துவேல் கருணாநிதிக்கு இந்த அளப்பரிய கடமை உண்டு. ஆனால் அவரோ, தில்லியில் ஆறு மணிநேரம் காத்திருந்து அன்னை சோனியாவின் தரிசனம் பெற்று வருவதை பூர்வஜன்மப் புண்ணியமாகக் கருதிக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் ராசா விரைவில் ‘தியாகி’ பட்டம் சுமக்கக் கூடிய நாள் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.
இதே கருணாநிதி, ராசா மீது கடுகளவு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் உடனே அவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவோம் என்று சொன்னது பழங்கதை. இன்று அவரே தி.மு.க. பொதுக்குழுவில் ”கைது செய்யப்பட்டதாலோ, குற்றம் சுமத்தப்பட்டதாலோ ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார்” என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். நாக்கிற்கு நரம்பில்லை என்று சும்மாவா சொன்னார்கள்?
அதே பொதுக்குழுவில், ‘ராசா கைது ஓரளவு கலங்கவும் அதிர்ச்சி அடையவும் வைப்பதாக’ கருணாநிதி பேசினார். அது என்ன ஓரளவு? ஒருவேளை ராசா கைதுடன் சி.பி.ஐ நின்றுகொண்டதே, அதுவா? அல்லது அடுத்து வரும் வாரங்களில் காங்கிரஸ் எந்தத் திசையில் நகரும் என்று தெரியாத திகைப்பா? இந்த லட்சணத்தில் பா.ஜ.க. தலைவர் நிதின் காட்கரியைக் கண்டித்து தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானம் (3.2.2011) நிறைவேற்றி இருக்கிறது.
”2 ஜி அலைக்கற்றை ஊழல் என்ற திரைப்படத்தில் கதாநாயகன் ராசா என்றால் இயக்குனர் கருணாநிதிதான்” என்று காட்கரி சென்னை வந்தபோது விமர்சித்தாராம். அதற்காகத்தான் இந்தக் கண்டனத் தீர்மானம். காட்கரி சொன்ன இன்னொரு விஷயத்தைப் பற்றி கருணாநிதி பொதுக்குழுவில் மூச்சே விடவில்லை. அது என்ன தெரியுமா?
”அலைக்கற்றை மோசடியில் ராசாவை பலிகடா ஆக்கி மத்திய அரசு தப்பித்துவிடக் கூடாது. அவருக்குப் பின்னணியில் இருந்த அனைவர் மீதும், கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த பிரதமர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ராசா தனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் சி.பி.ஐ.-யிடம் சொல்லி பலிகடா ஆகாமல் தப்பிக்க வேண்டும்” என்றும் காட்கரி சொன்னார். உண்மையில் காட்கரியின் கருத்து ராசாவுக்கு ஆதரவானதல்லவா? பிறகு ஏன் கருணாநிதி காட்கரியைக் கண்டித்திருக்கிறார்? அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.
முதலாவது, ராசாவைப் பின்னணியில் இயக்கிய பெரு முதலாளிகள் பலர் அதற்கான நன்றிக்கடனைச் செலுத்திவிட்டார்கள். அதில் பெரும் பங்கு தி.மு.க. தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும்தான் பட்டுவாடா ஆகியிருக்கிறது. இந்தப் பணம் எந்த நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரங்கள் கூட கசிய ஆரம்பித்துவிட்டன. மோசடி முறையில் அலைக்கற்றைகளைத் தாரை வார்த்த ராசாவுக்குக் கிடைத்தது எள்ளுருண்டையாக (இதுவே ஆறாயிரம் கோடி என்கிறார்கள்!) இருக்கலாம். ஆனால், ராசாவை முன்வைத்துப் பணம் பண்ணியவர்கள் சம்பாதித்தது பல்லாயிரம் கோடி. கோடிகளை ஏப்பம் விட்ட கேடிகள் ராசாவைக் காப்பாற்ற முன்வருவார்களா?
அடுத்ததாக, ராசா மூலமாகக் கிடைத்த லாபப்பணம் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் நகராச் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மத்தியில் உள்ள சோனியாவை எதிர்ப்பது ஆபத்து என்பது எம்.ஜி.ஆரையே ஏமாற்றிய கருணாநிதிக்குத் தெரியாதா? சர்க்காரியா கமிஷனை அவரால் மறக்கத்தான் முடியுமா? கை கொடுக்கும் கை எப்போது வேண்டுமானாலும் கைவிடத் தயங்காது என்பது, தில்லியில் காத்திருந்தபோதே கருணாநிதிக்குப் புரிந்துவிட்டது. எனவே இப்போதைக்கு அன்னை சோனியாவை ஆத்திரமூட்டுவதை கலைஞர் கண்டிப்பாக விரும்ப மாட்டார்.
பொழுது போகாமல் இருக்கும் நேரங்களில் தானே கேள்வி கேட்டு தானே பதில் கூறும் கருணாநிதி, இப்போது ஏன் அமைதி காக்கிறார்? அவரது தலித் பாசம் அவ்வளவு தானா? ராசா கைது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காததன் மர்மம் என்ன? அடுத்து கனிமொழியையும் ராசாத்தியையும் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சமா?
எனினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, ”ராசா குற்றவாளி இல்லை” என்று திமு.க. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. உச்சநீதி மன்றமும் மத்தியத் தணிக்கை ஆணையமும் (சி.ஏ.ஜி) சி.பி.ஐ.யும் இந்தத் தீர்மானத்தை சிரமேற்றுச் செயல்படுவதுதான் பாக்கி.
வானவில் ஊழல் – ஒரு பின்னோக்கு
எந்த ஒரு திரைப்படத்திலும் பின்னோக்கு உத்தி (ஃபிளாஷ்பேக்) பயன்படுத்தப்பட்டால்தான் சுவாரசியமாக இருக்கிறது. வானவில் ஊழலிலும் பின்னோக்கு நமக்குத் தேவையாக இருக்கிறது. ஏனெனில், திகில் கதையை விஞ்சும் அதிரடியான திருப்பங்கள் நிறைந்ததுதான் வானவில் மோசடிக் கதை.
இந்தக் கதை முதலில் துவங்குவது மதுரையில்தான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அங்கிருந்த தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது (8.5.2007) தான், அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி பறிபோக வித்திட்ட காரணம்; அதனால்தான் ஆண்டிமுத்து ராசாவுக்கு அதே துறையின் அமைச்சராக (18.5.2007) முடிந்தது.
அதே நாளில், இரண்டாவது தலைமுறை (2 ஜி) அலைக்கற்றை விநியோகம் தொடர்பான சந்தைவிலை நிர்ணயம் குறித்த பரிந்துரைகளை, மத்தியத் தொலைதொடர்பு ஆணையம் (டிராய்) ராசாவின் அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதனை நிராகரித்தார் ராசா (28.5.2007). 2001-இல் கடைப்பிடிக்கப்பட்ட ‘முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் அலைக்கற்றை விநியோகிக்கப்படும் என்றார் ராசா. அதையும் கூட அவர் ஒழுங்காகச் செய்யவில்லை என்பதும், 2001-இன் விலை 2008-இல் சரியாகுமா என்பதும் வேறு விஷயம்
மிகவும் அவசரமான, சூழ்ச்சியான முறையில், அதே ஆண்டு செப். 20-25 தேதிகளுக்குள், ஸ்வான், யூனிடெக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்பக் கடைசித் தேதி 2007, அக்.1 என்று தொலைத்தொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப்.25-ஆம் தேதியே கடைசித் தேதி என்று, எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ.1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை.
இது குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டவுடன், அவரும் ராசாவுக்கு அறிவுரை கூறிக் கடிதம் எழுதினார். நியாயமான முறையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அதில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். அதை ராசா கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, பகிரங்க ஏலமுறை சாத்தியம் இல்லை என்று அவர் அறிவித்தார் (25.10.2007). இப்போது பிரதமர் கண்டுகொள்ளவில்லை,
ஏலத்தில் பயன்பெற்ற சில நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன (2008). இதையடுத்து அரசால் புரசலாக இந்த ஊழல் விவகாரம் வெளிவந்தது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) நடத்திய விசாரணையில், ஊழலின் முகாந்திரம் உறுதியானது. இதையடுத்து பிரதமருக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. ராசாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது (15.11.2008). இது குறித்து பதிலளித்த ஆ.ராசா, ”பிரதமருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன’‘ என்றார்.
இந்நிலையில், சி.ஏ.ஜி அறிக்கை புயலாக வந்தது. அலைக்கற்றை விநியோகத்தில் நடந்த முறைகேடுகளால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிவித்தது (17.10.2009). இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ராசாவும் மன்மோகனும் ஸ்திதப்பிரக்ஞர்களாகக் காட்சி அளித்தனர்.
பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிர்ப்பந்தங்களை அடுத்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது (21.10.2009). மறுநாள் மத்தியத் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தில் சோதனையும் நடத்தப்பட்டது. ஆயினும் ராசா கல்லுளிமங்கனாக அமைதி காத்தார்; பிரதமரோ இடிச்சபுளி போல அமைதி காத்தார்.
சி.பி.ஐ வழக்கு கண்துடைப்பு நாடகம் என்றுணர்ந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி பிரதமர் மன்மோகனுக்கு பல கடிதங்களை (31.10.2009) எழுதினார். இவர் 2008 நவ.29-லும் ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். 2010-லும் மார்ச் 8, 13 தேதிகளில் நினைவூட்டும் கடிதங்களையும் சாமி எழுதினார். ”தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என்று அதில் கூறி இருந்தார். ‘திருவாளர் புனிதமான’ மன்மோகனார் வழக்கம் போலக் கண்டுகொள்ளவே இல்லை.
வேறு வழியின்றி, சாமி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் (12.4.2010). வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபி.ஐ, அளித்த பதில், நீதிபதிகளைக் கோபமூட்டியது. வழக்கு விசாரணையில் இருப்பதாகக் கூறிய சி.பி.ஐ.யை, ”இதேபோலத்தான் அனைத்து வழக்குகளிலும் செயல்படுவீர்களா?’‘ என்று நீதிபதிகள் கண்டித்தனர் (29.10.2010).
மத்திய நிதி அமைச்சகத்திடம் சி.ஏ.ஜி தனது அறிக்கையை தாக்கல் செய்தது (10.11.2010). அதில் ஸ்பெக்ட்ரம் ஊழலால் இழப்பு ஏற்பட்டதை மீண்டும் சுட்டிக் காட்டியது. மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ”2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; எனவே சி.பி.ஐ விசாரணையும் தேவையில்லை” என்று பதிலளித்தது.
இதனைப் பரிசீலித்த நீதிபதிகள் மத்திய அரசைக் கடுமையாகக் குறை கூறினர் (16.11.2010). உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திற்கு அஞ்சி, நவ.14-இல் ராசா பதவி விலகினார்; கபில் சிபல் அந்தத் துறைக்குப் (நவ. 15) பொறுப்பேற்றார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால் ஸ்தம்பித்தன (9.11.2010 – 13.12.2010). குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் கூட நடக்காமல் வீணானது.
ராசா, அவரது நண்பர் (பினாமி?) சாதிக் பாட்சா, கனிமொழியின் நண்பர் (பினாமி?) ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட பலரின் வீடுகளில் சி.பி.ஐ திடீர் சோதனை நடத்தியது (8.12.2010). ‘ராசாவுக்கு அமைச்சர் பதவி வழங்கிய’ அதிகாரத் தரகர் நீரா ராடியா, டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைசால் உள்ளிட்ட பலரது இருப்பிடங்களில் மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது (15.12.2010).
அதைத் தொடர்ந்து டிச- 24, 25, 31 தேதிகளில் ஆ.ராசாவிடம் செல்லமான விசாரணை தில்லி சி.பி,ஐ. அலுவலகத்தில் நடத்தப்பட்டது. இதில் தெரியவந்த விஷயங்களை சி.பி.ஐ வெளிப்படுத்தவில்லை (ராசா என்ன இந்திரேஷ் குமாரா, விசாரிக்கப்படாததையும் கூட கசியவிட?).
பிரச்சினையைத் திசைதிருப்ப நீதிபதி சிவராஜ் பாட்டில் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை (டிச. 13) சிபல் நியமித்திருந்தார். 2001 முதலான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இக்குழு விசாரிக்கும் என்று அவர் சொன்னார். அக்குழுவோ ராசாவிடம் விசாரணை நடத்தப்படாது என்று மறுநாளே அறிவித்தது! இக்குழு தனது 150 பக்க அறிக்கையை கபில் சிபலிடம் வழங்கியது (31.1.2011). இதில் அமைச்சர் ராசா மற்றும் அவரது துறை அதிகாரிகள் சிலர் மீது மோசடிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகத் தகவல். மத்திய அரசு இதையும் வெளியிடவில்லை.
இதனிடையே, பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்றப் பொது கணக்குக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணையைத் துவக்கியது. ‘ஊழல் நடக்கவில்லை; சி.ஏ.ஜி. அறிக்கை தவறு’ என்று கபில் சிபல் (ஜன. 9) கூறியதை ஜோஷி வன்மையாகக் கண்டித்தார். உச்சநீதி மன்றமும் சிபலைக் கண்டித்தது (ஜன. 11).
நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஸ்பெக்ட்ரம் ஊழலை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு பல வகையான ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இப்போதும் நடத்துகின்றன. இந்நிலையில் ராசாவிடம் நான்காம் முறையாக சி.பி.ஐ விசாரணை நடத்தியது (1.2.2011). மறுநாள் விசாரணைக்கு வந்த ராசாவை கைது செய்த சி.பி.ஐ. ஐந்துநாள் காவலில் வைத்து விசாரித்தது. ராசாவுடன் மத்திய முன்னாள் தொலைதொடர்புத் துறை செயலர் சித்தார்த்த பெஹூரா, ராசாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தாலியா ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இப்போது நடப்பது உச்சமா?
திரைப்படத்தின் இறுதியில் வருவது உச்சக்கட்டம் எனப்படும் ‘கிளைமேக்ஸ்’. அப்படி ராசாவின் கைதைக் கூற முடியுமா? படத்தின் பெரும்பகுதியைப் பின்னோக்கு விழுங்கிவிட்ட நிலையில், அநேகமாக ராசா கைது, ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்ற மாபெரும் கதையின் முதல்பாகத்திற்கு வேண்டுமானால் முடிவாக இருக்கலாம். இதன் அடுத்த பகுதியில்தான் பல ரகசியங்கள் அவிழ வேண்டி இருக்கிறது.
அதாவது ராசா கைது முடிவல்ல; ஆரம்பமே. இத்துடன் நேயர்கள் திருப்தி அடைந்துவிட்டால், ஊழலின் சூத்திரதாரிகள் தப்பிவிட வழி ஏற்பட்டுவிடும்.
எனவே தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்தின்படி, ‘ராசா (மட்டும்) குற்றவாளி இல்லை’ என்று நாமும் ஏற்போம். அப்போதுதானே யார் குற்றவாளி என்ற கேள்வியை அடுத்துக் கேட்க முடியும்? கருணாநிதியின் நெருங்கிய நண்பரான வைரமுத்து (இவரது புத்தகத்தை வெளியிடுவதற்காகவே பிரதமரையும்கூடப் புறக்கணித்தாராம் மு.க!) பாணியில் கேள்விகளால் வேள்விகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்!