ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7

சென்ற பகுதியில் ராஃபேல் போர்விமானம் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும், அதற்கும், யூரோஃபைட்டர் டைஃபூன் விமானத்திற்கும் என்ன ஒற்றுமை, என்ன வேறுபாடு, அவற்றின் சிறப்புகள், நிறை-குறைகள் என்னவென்ன என்பதையும் கண்டோம்.

The american college of obstetricians and gynecologists states that women with gestational diabetes are three times more likely to experience severe complications during pregnancy than women without gestational diabetes. They provide information on what clomiphene citrate cost canada to expect and are open to new members so they can help you make the transition as smooth as possible. There is no official amount that you should take in order to lose fat and gain muscles.

The risk of breast cancer and ovarian cancer in men increases when they are older and are overweight. Clomid prescription in usa is Berlin Treptow sold at a price ranging from to , with the lowest price being for a 3g. A health insurance plan will help cover the cost of the care your doctor gives you.

However, if you are a patient that has mild or moderate covid-19 symptoms and are considering azithromycin 500 mg covid-19 therapy as part of a combination, please contact our team for more information on the therapy. Doxycycline for rats is a drug used primarily for the treatment Betong buy amoxicillin for uti of lyme disease, tularemia, scrub typhus, rocky mountain spotted fever, and babesiosis. We have a huge number of different online pharmacy websites on the internet, but all of them have their own unique features.

அத்துடன், டசோல் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படிப் பெறவேண்டிய நூற்று இருபத்தாறு விமானங்களுக்குப் பதிலாக, 2015ல் ஏன் பிரெஞ்சு அரசுமூலமாக முப்பத்தாறு விமானங்கள் மட்டும் பாரத அரசால் வாங்கத் தீர்மானித்து ஒப்பந்தமிடப்பட்டது என்பதையும் அறிந்துகொண்டோம்.

பழைய ஒப்பந்தத்தைவிட அதிகமான விலையில் ராஃபேல் விமானங்கள் வாங்கப்படுகின்றன என்று ஊடகங்களில் பல்வேறுசமயங்களில் பேசப்பட்டுவருகிறது.  ஒரு விமானத்தை எட்டுக்கோடியே ஐந்து லட்சம் யூரோக்களுக்குப் பதிலாக ஒன்பது கோடியே பதினேழு லட்சம் யூரோக்களுக்கு வாங்கவேண்டும் என்றும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது.

இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது, பழைய ஒப்பந்த்த்திற்கும், புதிதுக்கும் என்ன வேறுபாடு என்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

இந்த ஒப்பீட்டுக்கு உதவிய வலைத்தளம் கீழே குறிக்கப்பட்டுள்ளது:[1]

விவரம் பழைய 126 விமான ஒப்பந்தம் புதிய 36 விமான ஒப்பந்தம்
ஒப்பந்ததாரர்கள் டசோல் நிறுவனமும், பாரத அரசும் பிரெஞ்சு, பாரத அரசுகள்
விமான எண்ணிக்கை 128 [பறக்கும் நிலைமையில் 18 + எச்.ஏ.எல். நிறுவனம் 108 விமானங்கள் தயாரிக்க அனுமதி] 36 பறக்கும் நிலையிலுள்ள விமானங்கள் + மிராஜ் 2000 மேம்பாடு
மொத்த மதிப்பு 1001,80,00,000 யூரோ  [₹ 765.4 கோடி] 787 கோடி யூரோ [333 கோடிவிமானங்களுக்கு] (₹ 58.24 கோடி)
விமானக் கூடு விலை 10,08,50,000 யூரோ (8,05,00,000 = 2015 வரையிலான 3.9% பணவீக்க உயர்வு) – ₹765.4 கோடி 9,17,00,000 யூரோ – ₹696 கோடி
பாரதத்திற்குத் தேவையான மேம்பாடுகள் ஒப்பந்தத்தில் இல்லை;  சேர்த்தால் ஒரு விமானத்திற்கு அதிகப்படி ₹1705 கோடி மொத்தம் 13 மேம்பாடுகளின் விலை: 170 கோடி யூரோ -₹13,000 கோடி — தலைக் கவசத்தில் [ஹெல்மெட்] மாட்டப்பட்ட இஸ்ரேலியக் காட்சிமுறை —  லே போன்ற உயரமான விமான தளங்களிலிருந்து புறப்படும் தன்மை — எலெக்ட்ரானிக் ஜாமிங் வசதி — இன்னபிற
பணவீக்கப் படி நிலையான 3.9% உயர்வு 3.5% குறியீட்டு உயர்வு
ஒப்பந்தம் இறுதியாக்கப்பட்டதா? இல்லை 2016 –  பிரதமர் நரேந்திர மோதியும், அதிபர் ஹாலந்தும் கையொப்பமிட்டனர்
இராணுவ தளவாடங்கள் குறிப்பிடப்படவில்லை ₹5180 கோடி பெறுமானமுள்ள பல்வேறு தளவாடங்கள்
மனித உழைப்பு 8.37 கோடி மணிநேர மனித உழைப்பு –  ஒரு விமானத்திற்கு ₹13,500கோடி அதிகம் தேவையில்லை
தளவாட சேமிப்பு குறிப்பிடப்படவில்லை ஆறுமாதங்கள் இலவசம்
ஒப்படைக்கும் சமயம்   ஐந்து மாதங்கள் முன்னதாக
பயிற்சி குறிப்பிடப்படவில்லை 10 பாரத விமானப்படையோருக்கு  (3 விமானிகள் + 60 மணி நேரம் பயிற்சி விமான உபயோகம்

இந்த ஒப்பீடு முதல் ஒப்பந்தத்திற்கும், தற்போதைய ஒப்பந்தத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் காட்டுகிறது.  பல்வேறு விவரங்கள் முதல் ஒப்பந்தத்தில் இல்லையென்பதும் கண்கூடு.  எனவே கூட்டிக்கழித்துப் பார்த்துத்தான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ள இயலும்.  பழைய ஒப்பந்தம் வெறும் சாதா அளவு சாப்பாடு என்றால், புது ஒப்பந்தம் பல்வேறு புது ஐட்டங்களுள்ள சிறப்பு சாப்பாடு எனலாம்.

ஒப்பிட்டுப் பார்த்து வாசகர்களே எது உண்மை, எது மேம்பாடான ஒப்பந்தம் என்ற முடிவுக்கு வரவேண்டும்.

Image result for India specific rafale under test
இந்தியாவுக்கான ராஃபேல் விமானத்தைச் சோதனை செய்யும் பாரத விமானி

பாரதத்துக்கான ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட ராஃபேல் போர்விமானத்தைப் பரிசோதனை செய்யவும், 36 விமானங்களின் தயாரிப்பை மேற்பார்வை பார்க்கவும் பாரத விமானப்படை விமானிகள்/அலுவலர்கள் நால்வர் 2017லிருந்து பிரான்சு நாட்டில் தங்கியுள்ளனர்.[2] 

முதல் விமானம் செப்டெம்பர் மாதம் வந்துசேரும் என்று ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.[3]

அதுசரி, இத்தோடு போர்விமானக் கஷ்டங்கள் திர்ந்துவிட்டனவா என்றால், அதுதான் இல்லை.  பாரத விமானப் படையில் நூற்றுப்பன்னிரண்டு மிக்-21 போர்விமானங்களுடன் முப்பத்தொன்பது மிக்-21 பயிற்சி விமானங்களும் உள்ளன.  இவற்றில் நூற்றுப்பன்னிரண்டை ஓய்வுகொடுத்து அனுப்பத்தான் 128 ராஃபேல் விமானங்கள் வாங்கமுயன்று, 36 என்று ஆகியுள்ளது.  எனவே, எப்படியும் இன்னும் 110 விமானங்கள் வாங்குவதென்று உறுதியாகியுள்ளது.

ஆனால், அதற்காக மீண்டும் பல்வேறு விமான நிறுவனங்களிடமிருந்து மீண்டும் விவரக் கோரிக்கை [Request for Information – RFI] கோரப்பட்டுள்ளது.  பழையபடி அமெரிக்க போயிங், லாக்ஹீட் மார்ட்டின், சுவீடனைச் சேர்ந்த ஸாப், பிரெஞ்சு டசோல், ஐரோப்பிய யூரோஃபைட்டர் கன்சார்ட்டியம், ரஷ்ய யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பொரேஷன் ஆகியவை இக்கோரிக்கைக்கு பதிலளித்துக் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[4]

பாரதத்தைப் பொருத்தவரை, அதனது விண்வெளித் தொழில்நுட்பம் மிகவும் சிறந்து விளங்குகிறது என்பதில் ஒரு ஐயமுமில்லை.  செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது;[5]  விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது;[6]  கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது;  அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது.  ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.

Image result for mangalyaan satellite
மங்கல்யான் செயற்கைக் கோள்
மிஷன் சக்தி ஏவுகணை

அப்படியிருந்தும், ஆசியாவின் முதல் சூப்பர்சானிக் போர்விமானத்தை வடிவமைத்து வெற்றிகாணுவதில் பின்தங்கியது வரலாறு.

மிக்-21 விமானத்தை வடிவமைத்துத் தயாரிக்கும் தொழில்நுட்பம் பாரதத்திற்கும், சீனாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் கிடைத்தது.  ஆயினும், சீனா விமானத்துறையில் சீனா கண்ட முன்னேற்றம் பாரதம் காணவில்லை என்பதே கசப்பான உண்மை.

பாரதத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் [ஐ.எஸ்.ஆர்.ஓ] கண்ட வெற்றியை ஏன் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் காணவில்லை என்பது ஒரு கேள்விக்குறிதான்.

சென்ற ஆண்டில்[2018] அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப், சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான ஸீ.டி.ஈக்கு (ZTE) அமெரிக்காவிலிருந்து உதிரிப்பொருள்கள் ஏற்றுமதியைத் தடைசெய்தார். சீனா ஈரானிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதியைத் தொடர்ந்ததே அதற்குக் காரணம்.

உடனே சீனாவின் தலைசிறந்த தொலைத்தொடர்பு இயந்திர உற்பத்தி நிறுவனமான ஹுவாவே, கைபேசிகளில் (cell phones) உபயோகிக்கப்படும் அமெரிக்க ஆப்பில் கணிணிச் சில்லைவிடச் [Apple semi-conductor chip] சிறந்த ஒன்றை வடிவமைத்துத் தயாரிப்பதில் வெற்றிகண்டது.[7] இதை அது ஒரே ஆண்டில் நிகழ்த்திக் காட்டியது.

அப்படிப்பட்ட உந்துதலும், திறமை வெளிப்பாடும், அதற்கு ஆதரவும் இருந்தால், பாரதம் தலைசிறந்த போர்விமானத்தை வடிவமைத்து வெற்றிகாணும் என நம்பலாம்.

[முற்றும்]


[1]   Rafale Deal — In’s and Out’s ( Complete Story ), The Factual Indian, Sep 17, 2018,  https://medium.com/@thefactualindian2/rafale-deal-ins-and-out-s-complete-story-7d100c85540b

[2]   First Rafale for India being flight-tested in France, only one will arrive custom-made by Sushant Singh, The Indian Express, September 8, 2018, https://indianexpress.com/article/india/first-rafale-for-india-being-flight-tested-in-france-only-one-will-arrive-custom-made-5345837/  

[3]     Hindustan Times, New Delhi, March 4, 2019, https://www.hindustantimes.com/india-news/rafale-to-join-iaf-inventory-in-september-says-air-chief-dhanoa/story-KXXboYnx1IE89oti8w28uK.html

[4]   India to Buy 110 Fighter Jets By Franz-Stefan Gady, The Diplomat, April 11, 2018, https://thediplomat.com/2018/04/india-to-buy-110-fighter-jets/

[5]   India’s Orbiter Mission Arrives at Mars by Solar System Explorartion Research Virtual Institue, NASA, https://sservi.nasa.gov/articles/indias-orbiter-mission-arrives-at-mars/

[6]   India’s Anti-Satellite Missile Test Is a Big Deal, by Doris Elin Salazar, Space.com, March 30, 2019, https://www.space.com/india-anti-satellite-test-significance.html  

[7]   The Chinese Tortoise and the American Hare by David P. Goldman, April 29 2019, PJ Media, https://pjmedia.com/spengler/the-chinese-tortoise-and-the-american-hare/

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6

2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ராஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.

நூற்று இருபத்தாறு விமானங்களை வாங்கப்போவதாகச் சொல்லிவிட்டுத் திடுதிப்பென்று முப்பத்தாறு விமானங்கள்தான் வாங்குவோம் என்று பாரதம் எப்படிச் சொல்லலாம், அது டசோல் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகாதா, முதன்முதலில் எச்.ஏ.எல். நிறுவனம் நூற்றெட்டு விமானங்களை உற்பத்திசெய்யும் என்பதும் என்னவாயிற்று, ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்பது வெறும் வாய்ப்பந்தல்தானா என்ற கேள்வியும் பலர் மனதில் எழலாம்.

அதற்கு விடையளித்துவிட்டு[1] மேலே தொடருவோம்:

 • முதலில் டசோல் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இறுதியாக்கப்படவில்லை.
 • நாற்பதாண்டுகள் போர்விமானங்கள் நல்லபடியாக இயங்குவதற்குத் தேவையான விவரங்கள் அதில் சேர்க்கப்படவில்லை.
 • விமானங்களைப் பாரதத்தில் உருவாக்க டசோல் நிறுவனம் கொடுத்த வேலை நேரத்தைவிட் {man-hours} எச்.ஏ.எல். நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டேமுக்கால் அளவு அதிகநேரம் கேட்டது. அதாவது, 3,10,00,000 மணிகளுக்குப் பதிலாக, 8,37,00,000 மணிநேர உழைப்பு வேண்டும் என்று வாதிட்டது. அதை டசோல் ஒப்புக்கொள்ளவில்லை.
 • இன்னொரு மிகவும் முக்கியமான, மிகவும் வருந்த்ததக்க விஷயம் எச்.ஏ.எல். நிறுவனத்தின்மீதிருந்த தரக்கட்டுப்பாடு அவநம்பிக்கைதான்.  அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் காலத்தில் டிமத்தி ரோமர் [Timothy Romer] என்பவர் அமெரிக்க அரசுக்குக் கொடுத்த இரகசிய அறிக்கையில் போயிங்/லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்களுடன் கூட்டுச்சேர்ந்து இயங்கத் திறமையற்றது என்று எச்.ஏ.எல். நிறுவனத்தைப்பற்றி தெரிவித்திருந்தது.  ஏனெனில் அவ்விரு அமெரிக்க நிறுவனங்களும் தத்தம் விமானங்களைப் பாரதத்திற்கு விற்கமுயன்றுகொண்டிருந்ததை முன்னமேயே கண்டிருக்கலாம்.
 • இந்த அறிக்கை எப்படியோ டசோல் நிறுவனத்தின் கைக்குக் கிட்டியவுடன், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோனியின் அனுமதியுடன் நாசிக்கிலுள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தைத் தரக்கட்டுப்பாடுச் சோதனை நடத்தப்பட்டது.
 • டசோலின் அறிக்கையைப் படித்த பிரெஞ்சு அரசு, ராஃபேல் விமானம் எச்.ஏ.எல். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் தரமாக இருக்கமுடியாது என்ற தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
 • அதற்குக் காரணம் எச்.ஏ.ஏல். நிறுவனம் சுகோய் எஸ்.யு-30 போர்விமானங்களை தயாரிக்கும்போது நேரும் இடர்பாடுகள்தான்.  இப்படியிருக்கும்போது தங்களது போர்விமான உற்பத்தியில் தாங்கள் பெற்றிருக்கும் உலகப் புகழை இழக்கத் தயாராக இல்லை என்று 2014 துவக்கத்தில் டசோல், பிரஞ்சு அரசுக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
 • இதில் மிகவும் அவமானமான சொற்றொடர் என்னவென்றால், “அவர்களின் [எச்.ஏ.ஏல்] உற்பத்திக்கூடம் ஒழுங்கற்றமுறையில் [கசாப்புக்கடைபோல] இருக்கிறது” என்று குறிப்பிட்டதுதான்.
 • இப்படிக் குறிப்பிட்டது அமைச்சர் அந்தோணிக்குப் பிடிக்காததால் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.  இருப்பினும் பிரெஞ்சு அரசு ராஃபேல் விமான உற்பத்தியில் (எச்.ஏ.ஏல் நிறுவனத்தில்) தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆக, டசோல் நிறுவனம் [அதுமட்டுமல்ல, அமெரிக்க விமான நிறுவனங்களும்கூட] பாரதத்தில் — எச்.ஏ.ஏல் நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய முடியாது என்று தெரிவித்தபின்னர் பாரதத்தின்முன் நின்ற பெரும் பிரச்சினை இதுதான்:

 • டசோல் நிறுவனத்துடன் ஓப்பந்தம் இழுபறியாக இருக்கும்போது — 2001லிருந்து 2014வரை பாரத விமானப்படைக்குப் புது தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட புது போர்விமானங்கள் வராத நிலையில் என்ன முடிவை எடுக்க முடியும்?

எப்படியாவது முழுதாக, பறக்கும் நிலையிலுள்ள, பாரதம் விரும்பும் தொழில் நுட்பங்களுள்ள, தாக்கும் திறனுள்ள, தளவாடங்களுள்ள, பாரத விமானப்படைத் தலைமை விரும்பும் போர்விமானமான ரஃபேலை உடனே பெறவேண்டும் என்றால் – அதைப் பிரெஞ்சு அரசின் மூலம்தான் அடையமுடியும் என்ற நிலைமை பாரதத்திற்கு ஏற்பட்டது.

டஎப்பொழுது பிரெஞ்சு அரசு மறுத்துவிட்டதோ, அப்பொழுது ராஃபேல் விமானம்தான் வாங்கவேண்டுமா, யூரோஃபைட்டர் டைஃபூன் விமானத்தை வாங்கியிருக்கலாமே என்ற கேள்வி எழலாமல்லவா?

ஆகவே, இந்த இரு விமானங்களையும் ஒப்பிடலாமா?

மேலே இருப்பது டைஃபூன்; கீழே ராஃபேல்
 • ராஃபேலின் ராடார் தொழில்நுட்பத்திறனில் யூரோஃபைட்டர் டைஃபூனைவிட உயர்வானது,  அது ஒரேசமயத்தில் நாற்பது விமானங்களைக் கண்டுபிடித்து, எட்டை எதிர்த்துத் தாக்கவல்லது.  விண்ணிலிருந்து தரையிலிருக்கும் ராணுவ அமைப்புகளைத் தாக்கியழிப்பதில் வல்லமை படைத்தது.
 • வெறும் விமானத்தின் விலையைமட்டும் நோக்கினால், ராஃபேல் டைஃபூனைவிட 2 கோடியே 52 லட்சம் டாலர்கள் [73 கோடி ரூபாய்கள்] விலை [2009 விலை]  குறைவானது.[2]
 • ராஃபேல் விமானத்தின் குறுக்குப் பரப்பளவு சிறிதாக இருப்பதால், ராடார்மூலம் அதை முன்னமே கண்டுபிடிப்பது சிரமம்.
 • தரைப்படைக்குப் தந்திரமாகப் பாதுகாப்புக் கொடுத்துத் தாக்குவதில் ராஃபேல் சிறந்த்து.
 • டைஃபூன் விமானத்தின் உற்பத்தி 2020ல் நிறுத்தப்படும் என்றும், தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிகிறது.
 • குண்டுவீசுவதில் ராஃபேல் சிறந்தது.  மேலும், டைபூஃன் பறக்கும்போது ராஃபேலைவிட நிலையற்றது. இது டைஃபூனின் ஒரு குறையாகும்.[3]
 • ஒலியைவிட அதிகவேகத்தில் [சூப்பர்சானிக்] அதிக தளவாட எடையில்லாதபோது திறன்படச் செலுத்துவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது யூரோஃபைட்டர் டைஃபூன்.  ஆனால், எல்லா வேகத்திலும், அதிக எடையை ஏற்றிக்கொண்டு எழும்பும் திறன்வாய்ந்தது ராஃபேல் விமானம்.[4]
 • டைஃபூன் அதிவேகமாகச் செல்லும் திறமை வாய்ந்ததால், நேருக்குநேர் தாக்குதல் நடத்துவதில் ரஃபேலைவிடத் திறமைவாய்ந்தது.
 • ராடார் மூலம் பல்வேறு தொலைவு/உயரங்களில் அதிகமான இலக்குகளை அடிக்க ராஃபேல் விமானம் சிறந்த ஒன்றாகும்.
 • பராமரிக்கவும், பறந்து தாக்கும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளவும், இரண்டுக்குமே அதிகச் செலவாகும்.
 • டைஃபூன் அதிகபட்சம் 1550 மைல்[2500 கிமீ] வேகத்திலும், ராஃபேல் 1190 மைல் [1915 கிமீ] வேகத்திலும் செல்லவல்லவை.[5]
 • டைஃபூன் 1800 மைல் [2900 கிமீ] தூரமும்,  64990 அடி [19810 மீட்டர்] உயரமும், ராஃபேல் 1150 மைல் [1850 கிமீ] தூரமும், 49984 அடி [15235 மீட்டர்] உயரமும் செல்லும்.

ஆகவே, சில விஷயங்களில் டைஃபூன் விமானம் ரஃபேலைவிட அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.  மொத்தமாகப் பார்த்தால், டைஃபூன் விமானமே சிறந்தது, அதையே பாரத விமானப்படைத் தலைமை தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் என்று தோன்றும்.

ஏன் அது தேர்ந்தெடுக்கப்படவில்லை?

ராஃபேல் விமானத்தில் பொருத்தப்படும் மீட்டியார் [Meteor] என்னும் தளவாடம் கண்ணுக்குத்தெரியும் 60 மைல் [100 கிமீ] தூரத்திற்கும் மேலாகச் சென்று எதிரியைத் தாக்கவல்லது.  பாகிஸ்தானிடமிருக்கும் அமெரிக்கத் தளவாடம் அம்ராமைவிட [AMRAAM] ஐந்து மடங்கு கொல்லும் திறன் படைத்தது.

யூரோஃபைட்டர் டைஃபூன் நான்கு நாடுகளால் உற்பத்திசெய்யப்படுகிறது, அமெரிக்கத் தளவாடங்கள் பொருத்தப்பட்டது.  போர்சமயத்தில் எந்த ஒரு நாடு பிணங்கிக்கொண்டாலும், டைஃபூன் கிடைப்பதிலோ, பராமரிப்பதிலோ, தளவாடங்கள் கிடைப்பதிலோ சுணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறாது.  அச்சமயத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கிய விமானத்தை உபயோகிக்க முடியாமல் அழகுபார்க்கத்தான் முடியும்.[6]

எல்லாவற்றிற்கும் மேலாக, பாரத விமானப்படை விமானிகள் பிரெஞ்சுத் தயாரிப்பான மிராஜ் விமானத்தை விரும்புகிறார்கள். இதுவரை அந்த விமானத்தைப் பாகிஸ்தானின் போர்விமானங்களால் வீழ்த்த இயலவில்லை.  கர்ஜில் போரிலும் அவை வெற்றிவாகை சூடியிருக்கின்றன. 2030வரை அவற்றின் தொழில்நுட்பம் சிறந்து விளங்கும். [7],[8]  ஆகையால், ராஃபேல் போர்விமானம் பாரதப் படைத் தலைமையால் விரும்பப்படுகிறது.

[தொடரும்]


[1]   Rafale Deal — In’s and Out’s (Complete Story), The Factual Indian, Sep 17, 2018, https://medium.com/@thefactualindian2/rafale-deal-ins-and-out-s-complete-story-7d100c85540b

[2]   Is Rafale superior to Eurofighter? Let’s find the answer by Surendra Singh, The Times of India Blogs, Feb 18, 2012

[3]   Dassault Rafale vs Eurofighter Typhoon, Aviatia, https://aviatia.net/rafale-vs-eurofighter/

[4]   Typhoon versus Rafale: The final word, Hush Kit, December 2015, https://hushkit.net/2015/12/18/typhoon-versus-rafale-the-final-word/

[5]   Compare Aircraft Results – Eurofighter Typhoon (EF2000) vs Dassault Rafale, Militaryfactory.com, https://www.militaryfactory.com/aircraft/compare-aircraft-results.asp?form=form&aircraft1=55&aircraft2=60&Submit=COMPARE

[6]   Dassault Rafale v/s. Eurofighter Typhoon :- Why Government Ignored Offer From Eurofighter by Indian Defence Update, dec 3, 2017, https://defenceupdate.in/dassault-rafale-v-s-eurofighter-typhoon-government-ignored-offer-eurofighter/

[7]   Rafale deal: The controversy and some unanswered questions By Manu Pubby, Aug 23, 2018, The Economic Times

[8]   Indian Air Force Mirage-2000:  All You Need to Know About the Fighter Jet Used for Surgical Strikes 2.0 by Arjit Garge, February 28, 2019, News18.com, https://www.news18.com/news/auto/indian-air-force-mirage-2000-all-you-need-to-know-about-the-fighter-jet-used-for-surgical-strikes-2-0-2049837.html

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5

 “ஆகவே, தனக்கு வலிமைமிக்க போர்விமானங்கள் வேண்டுமென்றால், தங்குதடையின்றி, பலமுனைத் தாக்குதல்களில் சிறந்த நடுத்தர விமானங்களை [Medium Muti Role Combat Aircraft – MMRCA] வாங்கித் தயாரிக்கவேன்டும என்ற முடிவை பாரதம் எடுத்தது.

வயதாகிவரும், பழைய தொழில்நுட்பமுள்ள மிக்-21 விமானங்களை மாற்றிவைப்பதற்காக, பாரத விமானப்படைத் தலைமை [அப்பாடா, ஒருவழியாக இக்கட்டுரையில் பாரதப் படைத்தலைமை பற்றி வந்துவிட்டது!] வேறு விமானங்கள் வாங்கவேண்டும் என்ற விருப்பத்தை 2000ல், அதாவது கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்குமுன் அப்பொழுதிருந்த அரசாங்கத்திடம் [பாரதீய ஜனதா கூட்டணி] தெரிவித்தது.[1]  அவ்விமானங்கள் பலசெயல்பாட்டுத் திறன்

[multi-role]

உள்ளவையாகவும் இருக்கவேண்டும் என்றும் பாரத விமானப்படைத் தலைமை அரசிடம் கோரிக்கைவைத்தது.  மேலும், பழைய மிக்-21 விமானங்கள் அப்பொழுது பலமுறை விபத்துக்குள்ளாகிவந்தன.  எனவே, அப்பொழுதே நாற்பது ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பம்கொண்ட அவற்றுக்குப் பதிலாக, மிகவும் புதுத் தொழில்நுட்பம்கொண்ட விமானங்களை பாரதம்பெறவேண்டும் என்பதே அக்கோரிக்கையின் சாராம்சம்.

2001ல் அத்தகைய 126 விமானங்களுக்கான விவரக் கோரிக்கை [Request for Information – RFI] எழுப்பப்பட்டது. விவரக் கோரிக்கையா, அப்படியென்றால் என்ன என்ற கேள்வி இப்பொழுது நம் மனதில் எழுகிறது. 

ஒரு திட்டத்தைத் துவங்கும் காலத்தில் நமது தேவை என்ன என்பதைத் திட்டவட்டமாக முடிவு செய்ய இயலாமலிருக்கலாம்.  உதாரணமாக, ஒரு திருமணத்திற்குத் சமையல் கான்ட்ராக்ட் கொடுக்கவேண்டும் என்னும்போது, எத்தனை காய்கறி, என்னென்ன சிறப்பான சாப்பாடு, எத்தனைபேர்களுக்கு, என்னென்ன ஐட்டங்கள்போடவேன்டும் என்று முடிவுசெய்ய இயலாது.  அச்சமயத்தில், பல சமையல் கான்ட்ராக்டர்களிடம் அவர்கள் என்னென்ன செய்வார்கள், எவ்வளவு செலவாகும், அவர்களது சிறப்பான அம்சம் என்ன என்று பேச்சுவார்த்தை துவங்குவோம்.  அதைத்தான் விவரக் கோரிக்கை என்று சொல்வார்கள்.  இதைத் துவங்குவதால், எவருக்கும் கான்ட்ராக்ட் தரப்போகிறோம் என்று முடிவுசெய்வதில்லை.

அதுபோலத்தான் புதிய போர்விமானத்திற்கு விவரக்கோரிக்கை பல விமானத் தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.

ஆனால், அக்கோரிக்கை ஆறு ஆண்டுகள் கிணற்றுக்குள்போடப்பட்ட கல்மாதிரி அரசிடமே கிடந்தது.

அப்பாடா அதுவரை என்ன நடந்தது?

அது அரசு விவகாரம். 

அதற்குள் நாம் போர் விமானத்தின் பலசெயல் திறன்[2] என்றால் என்ன என்று பார்ப்போம்…

அவையாவன:

 • விண் பாதுகாப்பு / விண் மேம்பாடு [air superiority]: வானத்தில் பறந்து, எதிரிகள் தன்னைத் தரையிலிருந்தோ, விண்ணிலிருந்தோ தாக்க இயலாது தற்காத்துக்கொண்டு, கடுமையான எதிரிப்பின்றி எதிரிகள்மீது விண்தாக்குதல் நடத்துவது – அப்படி நடத்தும் திறனிருப்பதுவே விண் மேம்பாடு. இதில் விண்ணில் ஈடற்றநிலையை [air supremacy] அடைந்தால் விமானப்படைகளை எதிர்ப்பே இன்றி எங்குவேண்டுமானாலும் தங்குதடையின்றி இயங்க இயலும்.[3]  1971 வங்கதேச விடுதலைப் போரில் பாரதம் கிழக்குப் பாகிஸ்தானில் விண்ணில் ஈடற்றநிலையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 • [எதிரி விமானங்களின்] நுழைவைப் தடுப்பது[Interceptor]: / [எதிரி நமது நில்]ஆக்கிரமிப்பை மறுத்தல்: இவ்வகை விமானம் மிகவேகமாக மிக உயரத்திற்குப் பறந்துசென்று  எதிரியின் குண்டுவீசும் விவிமானங்களைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்தது. விரைவில் விண்ணிலேற அதன் எஞ்சிங்களுக்கு அசாத்திய உந்துவலிமை இருக்கும்.  சிட்டுக்குருவியைப்போல மேலும்-கீழும் பக்கவாட்டிலும் கண்ணிமைக்குமுன் திரும்பும் திறமையும், மிக உயரத்தில் செயல்படும் வல்லமையும் இருக்கும்.
 • உளவு பார்த்தல்:  தற்பொழுது இது செயற்கைகோள்களால் செய்யப்படுகிறது.  அவற்றிலிருந்து விவரம் பெறும் திறனும் இவ்வகை விமானங்களுக்கு உண்டு.
 • நெருங்கிய விண் ஒத்துழைப்பு: தரைப்படைகள் முன்னேறிச் செல்லும்போது, அவற்றிற்கு ஆதரவாக எதிரிகளின் தளவாடங்கலையும், எதிரிப்படைகள்மீதும் குண்டுவீசித் தாக்குதல்.
 • பறந்து குறிவைத்தல்:  நின்றுகொண்டோ, உட்கார்ந்தோ, படுத்துக்கொண்டோ துப்பாக்கியால் சுட்டாலே, நம்மால் குறிபார்த்து தொலைதூரத்தில் [நூறு மீட்டர்] உள்ள அசையாத குறியை அடிப்பது மிகவும் கடினமான ஒன்று.  அப்படியிருக்கும்போது நூற்றுக்கணக்கான மைல் வேகத்தில் மேலும் கீழும் பற்நதுகொண்டிருக்கும் போர்விமானம் ஒன்று, அதேமாதிரி பறக்கும் இன்னொரு விமானத்தை குறிபார்த்துத் தாக்கி அழிக்கவேண்டுமென்றால், அதற்குத் தகுந்தவாறு, நுட்பமான வசதிகள், கருவிகள் அதில் பொருத்தியிருக்கப்படவேண்டும்.  ஏனெனில் விமானிக்கு ஓரிரு கணங்கள்கூட குறிபார்க்க நேரமிருக்காது.  அத்துடன் அந்த விமானி தனது விமானத்தையும் எதிரியின் விண்-நிலத் தாக்குதலிருந்து காத்துக்கொள்ளவேண்டும்.  இத்தகைய திறன் படைத்திருக்கும் இவ்வகை விமானம்.
 • விண்ணிலிருந்து நிலத்தை நுட்பமாகத் தாக்குதல்:  இத்திறனும் மேற்சொன்னமாதிரிதான்.  தன்னைத் தாக்கவரும் எதிரி விமானத்திலிருந்து தப்பித்துப் பறந்துகொண்டு, தரையிலிருந்து தன்னைக் குறிவைத்துத் தாக்கும் விமானம்தாக்கிப் பீரங்கிகளையும், எதிரிகளின் உளவறியும் கட்டுமானங்களையும், ஆயுதக் கிடங்குகளையும், இதர இலக்குகளயும் தாக்கும் திறனும் வேண்டும்.
 • கப்பலைத் தாக்கும் திறன்: பொதுவாகவே, போர்க்கப்பல்களில் விமானங்கள் உண்டு, அவற்றையும் சமாளித்து, கப்பல்களின்மீது குண்டுவீசி அவற்றைச் சேதப்படுத்தும் வல்லமையும் இவ்விவிமானங்களுக்கு உண்டு.
 • அணுசக்தி அச்சமூட்டித் தடுத்தல் [அணு ஆயுதங்களை ஏவும் திறன்]:  இவை அணுஆயுதங்களை எடுத்துச் சென்று, எதிரிநாடுகளில் விடும் திறமை பெற்றவை.
 • விண்ணில் [மற்ற விமானத்திலிருந்து] எரிபொருள் பெறும் திறன்:  இதைப்பற்றி முன்பே விளக்கப்பட்டிருக்கிறது.  அதை மிகவும் இலகுவாகச் செய்யும் திறன்படைத்தவை இவ்வகை விமானங்கள்.

மேலே குறிப்பிட்ட அத்தனை செயத்திறன்களை உடைய விமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் [டென்டர்கள்] 2007ம் ஆண்டு இந்தியாவில் அப்பொழுது கோலோச்சிய காங்கிரஸ் கூட்டணி அரசால் ஆறு வழங்குநர்களிடமிருந்து வரவேற்கப்பட்டன.[4] அதில் 126 போர் விமானங்களின் விலை கிட்டத்தட்ட 42000 கோடி ரூபாய்கள் (975 கோடி டாலர்) எனவும் மதிப்பிடப்பட்டது.

ரஃபேல் விமானம்
மிக்-35
ஸாப் கிரிப்பென்

அந்த வழங்குநர்கள் தயாரிக்கும் போர்விமானங்கள் முறையே, ரஷ்யாவின் மிக்-35, ஸ்வீடன் சாப் (Saab) நிறுவனத்தின் ஜே.ஏ.எஸ்-39 கிரிப்பென், பிரெஞ்சு டசோல் நிறுவனத்தின் ராஃபேல், அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டினின் எஃப்-16 ஃபால்கன், போயிங்கின் எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னட், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி இணைந்து யூரோப்பியன் ஏரோனாடிக் டிஃபென்ஸ் அன்ட் ஸ்பேஸ் கம்பெனி (EADS) தயாரிக்கும் யூரோஃபைட்டர் டைஃபூன் ஆகும்.

எஃப்-16 ஃபால்கன்
எஃப்-18 சூப்பர் ஹார்னட்

2008ல் அமெரிக்க நிறுவனங்கள் போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ரஷ்யாவின் யுனைட்டெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பொரேஷன், பிரேஞ்சு டசோல், ஐரோப்பாவின் ஈ.ஏ.டி.எஸ் ஆகியவை தங்கள் விமானங்களின் விலைமதிப்பு ஒப்பந்தத்தை அளித்தன. தொழில்நுட்ப மதிப்பீடு, களச் சோதனைகள் [field trials] ஆகஸ்ட் 2008ல் துவங்கி நவம்பரில் முடிந்தன.

யூரொஃபைட்டர் டைஃபூன்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து, 2011ல் பாரதப் பாதுகாப்பு அமைச்சகம் டசோல் மற்றும் ஈ.ஏ.டி.எஸ் நிறுவனங்களுடன் போர்விமானங்கள் வாங்குவதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும்,[5] போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் இவற்றின் விலைமதிப்பு ஒப்பந்தம் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவித்தது.

அதுவரை டசோல் நிறுவனம் ஒரு ரஃபேல் விமானத்தைக்கூட விற்கவில்லை என்பதும், ஆறு நாடுகள் 707 யூரோஃபைட்டர் விமானங்களுக்கு அனுப்பாணை [ஆர்டர்] கொடுத்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.[6]

ஈ.ஏ.டி.எஸ் நிறுவனம் பாரதத்தை யூரோஃபைட்டர் திட்டத்தின் பங்குதாரராக்கி, டைஃபூன் போர்விமானத்தின் வடிவமைப்பிலும், மேன்மைப்படுத்துவதிலும் ஒருபங்கில் அப்பொழுதும், எதிர்காலத்திலும் சேர்த்துக்கொள்ள ஒப்பியது.

ஆயினும், பாரத விமானப்படை ஏற்கனவே பிரெஞ்சு மிராஜ்-2000 போர்விமானத்தை உபயோகப்படுத்துவதாலும், கர்ஜில் போரில் கைகொடுத்ததால் பாரத விமானப்படை விமானிகள் அதன்மேல் உயிரையே வைத்திருப்பதாலும், மிராஜ்-2000க்கு மிகவும் தொடர்புடையது என்பதாலும், ரஃபேல் விமானம் லிபியாவிலும், ஆஃப்கானிஸ்தானத்திலும் களம்கண்டிருந்ததாலும், ஈ.ஏ.டி.எஸ் நிறுவனத்தைவிடக் குறைந்தவிலையில் போர்விமானம் செய்துதர டசோல் நிறுவனமே ஒப்புக்கொண்டதால், 2012ல் பாரதம் அதை முன்னிறுத்திக்கொண்டது.

யூரோஃபைட்டர் டைஃபூனும் லிபியாவில் களம்கண்டும், ஆஃப்கானிஸ்தானத்தில் உபயோகிக்க அனுமதிபெற்றிருந்தாலும், மேற்சொன்ன காரணங்களுக்காக அது புறந்தள்ளப்பட்டது.

திட்ட அறிக்கைக் கோரிக்கைப்படி [Request for Proposal – RFP] 126 விமானங்களில் முதல் 18ஐ ஒப்பந்ததாரர் மூன்று ஆண்டுகளுகளில் பாரத விமானப்படைக்கு செய்து தரவேண்டும் என்றும், மீதியை பங்களூருவிலுள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உற்பத்திசெய்யவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

அடுத்த ஆண்டு டசோல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ஆயினும், பட்ஜெட் தட்டுப்பாட்டினால் 2015வரை விமான ஒப்பந்தம் பற்றிய நடவடிக்கையை ஒத்திப்போடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.  இருந்தபோதிலும், டசோல் நிறுவனம் நம்பிக்கையை இழக்கவில்லை.

இதற்கிடையில், டசோல் நிறுவனத்துடன் ரஃபேல் விமானங்கள் வாங்க என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதைக் கண்டால் அது பின்னால் வருவதற்கு கருத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

முதலில் செய்துகொண்ட ஒப்பந்தம் டசோல் நிறுவனத்திற்கும், பாரதத்தின் [காங்கிரஸ் கூட்டணி] அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந்த ஒப்பந்தம் டசோல் மிகவும் குறைந்த ஏல மதிப்பீடு கொடுத்ததால் செய்யப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு தொடரலாம்.

இதன்படி,

 • வாங்கவேண்டிய 126 விமானங்களில் பதினெட்டு பறக்கும் நிலையில் டசோல் நிறுவனத்தால் தயாரித்துக் கொடுக்கப்படவேண்டும்.
 • மீதி 108 மவிமானங்களைத் தயாரிக்க பாரதத்தின் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு உரிமம் [license] வழங்கப்படவேண்டும்.
 • ஒப்பந்தத்தின் அப்போதைய மொத்த மதிப்பு 1000 கோடி யூரோக்கள் [₹68,150 கோடி].  வெறும் கூடான [bare-bone] பறக்கக்கூடிய விமானத்தின் விலை 10 கோடி யூரோக்கள் [₹765.4 கோடி].
 • இதில் இந்தியாவுக்காகவென்று எந்தவொரு மேம்பாடோ, ஏற்பாடோ கிடையாது.  அப்படிச் செய்தால் அதன் விலை ஆயிரம் கோடி ரூபாய்வரை உயர்ந்து ₹1705 கோடி ரூபாய்களாக உயரும்.
 • அதோடு மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 3.9% பணவீக்க உயர்வுக்கும் வழிசெய்யும் ஏற்பாடும் இருந்தது.
 • இதில் செயல்திறனின் அடிப்படையான போர்த்தளவாட்ங்களைப்பற்றியோ, உதிரிப் பகுதிகள், எஞ்சின், விமானங்கள், இவை தொடர்ந்து கிடைப்பது, விமானம் ஓட்ட, விமானப்பராமரிப்பு, இவைபற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவே இல்லை.
 • ஒப்பந்தம் முடிவுறுத்தப்படாததால், விமானம் எப்பொழுது பாரதத்திற்குக் கொடுக்கப்படவேண்டும் என்றும் அதில் எழுதப்படவில்லை.
Image result for Modi and French President
பிரெஞ்சு அதிபர் பிரான்ஸ்வா ஹாலன்டும், பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும்

இப்படி மூன்று ஆண்டுகள் டசோல் நிறுவனத்திற்கும், பாரத அரசுக்கும் இழுபறிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கையில், 2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ரஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.[7]

அடுத்தநாள், பாரதப் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் அம்முடிவு சரிதான் என்றும், இந்த ஒப்பந்தம் பாரத-பிரெஞ்சு அரசுகளுக்கு இடையிலுள்ளது என்றும், டசோல் நிறுவனத்துடனானது அன்று என்றும் தெரிவித்தார்.

[தொடரும்]


[1]   Rafale deal: Why French jets are at the centre of an Indian political storm, By Vikas Pandey BBC News, Delhi, Sep 25, 2018, https://www.bbc.com/news/world-asia-india-45636806

[2]   Omnirole by Design, Dassult Aviation,  https://www.dassault-aviation.com/en/defense/rafale/omnirole-by-design/

[3]  Air Superiority – concept,  http://www.au.af.mil/au/awc/awcgate/warden/wrdchp01.htm

[4]   Rafale deal:  Why French jets are at the centre of an Indian political Storm by Vikas Pandey, BBC News New Delhi, Sep. 26, 2018,  https://www.bbc.com/news/world-asia-india-45636806   

[5]   Rafale:  Did India get a bad government to government deal? By Pushan Das, Observer Research Foundation, Nov. 10, 2018, https://www.orfonline.org/research/rafale-row-did-india-get-bad-government-to-government-deal-45612/

[6]   Eurofigher Typhoon vs. Dassult Rafale by Tommy Phillip, Defence Aviation, July 20, 2011, https://www.defenceaviation.com/2011/07/eurofighter-typhoon-vs-dassault-rafale.html

[7]   India orders 36 French-made Rafale fight jets – PM Modi by John Irish, Elizabeth Pinequ, Reuters Money News, April 10, 2015, https://in.reuters.com/article/india-france-rafale/india-orders-36-french-made-rafale-fighter-jets-pm-modi-idINKBN0N10OL20150410