அர்த்தமற்ற புகார்கள்

அடடா! நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அறிவித்தார்கள், காங்கிரஸ்காரர்கள் தூக்கம் கெட்டுவிட்டது. உணவு உள் செல்வதில்லை. சதா காலமும், தூக்கத்திலும் கூட மோதி நினைவுதான். கனவிலும் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் பாவம் நரேந்திர மோடி… முன்பெல்லாம் இவர்களை எதிர்த்து நின்றவர்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் நரேந்திர மோதி அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தினம் ஒரு கூட்டம், ஒவ்வொரு மாநிலத்தில் நடத்துவதும், அதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து கேட்டு அவருக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதும் இவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிட்டது. அதன் எதிரொலிதான் காங்கிரஸ் தலைவர்களின் ஓலம், ஐயய்யோ மோடி எங்களை அப்படிச் சொல்லிவிட்டார், இப்படிச் சொல்லிவிட்டார் என்று புகார்க்காண்டம் படிக்கத் தொடங்கியிருப்பது….

View More அர்த்தமற்ற புகார்கள்

ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

ஐயா இளவரசரே, உங்கள் பாட்டியோ, உங்கள் தந்தையோ கொலை செய்யப்பட்டதற்கு இந்த நாடே கண்ணீர் விட்டு அழுதது. உங்களுக்குத் தெரியாது, பாவம், நீங்கள் அப்போது சின்ன பாப்பா. இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த குற்றவாளிகள் யார் என்பதையெல்லாம் காவல்துறை, புனலாய்வுத் துறை இவை தூண்டித் துருவி கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது… தம்பி! இது என்னவோ பள்ளிக்கூடத்து நாடகம் இல்லை. இது ஒரு பெரிய நாட்டின் வரலாற்று நிகழ்வு. இந்த அரசியலில் வெற்றி, தோல்வி, நாட்டின் முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் இவை அனைத்துமே உள்ளடங்கியிருக்கின்றன…. உங்களையெல்லாம் மூட்டை முடிச்சோடு வண்டி ஏற்றிவிட மக்கள் தயாராகி விட்டார்கள். பாவம், வீட்டுக்குப் போய், உங்கள் அம்மா, அக்கா குடும்பத்தாருக்கு நல்ல நாடகமாகப் போட்டு நடித்துக் காண்பியுங்கள். அவர்களாவது மனம் மகிழ்ந்து இருக்கட்டும். இந்த நாடும் ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விடும்.. .

View More ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத்,…

View More உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

ஐந்து மாநிலத் தேர்தலும் இந்திய அரசியலும்

காங்கிரஸ் இளவரசர் ராகுல் ‘புயல்வேக பிரசாரம்’ செய்தார். அவரது சகோதரியும், அவர்தம் கணவரும், அன்னையும் கூட உ.பியில் தெருத் தெருவாக சுற்றினார்கள். மத்திய அமைச்சர்களும் சளைக்கவில்லை. அமைச்சர் சல்மான் குர்ஷித் ‘’காங்கிரஸ் வென்றால் இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படும்’’ என்று விதிகளை மீறி அறிவித்தார். பிறகு தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார்.. சிதறிய நெல்லிக்காய் மூட்டைகளாக இருந்த பாஜக தலைவர்கள் ஆட்சியை மாற்ற மக்களிடம் வாக்கு கேட்டனர்…இனியேனும், ஊடகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்காமல், உண்மை நிலையை நடுநிலையுடன் செய்திகளாக தர வேண்டும்….

View More ஐந்து மாநிலத் தேர்தலும் இந்திய அரசியலும்

உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

2004ம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை மத்தியில் ஆட்சியில்
இருக்கின்ற கட்சி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. 2004ல் கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றி உள்ளார்களா என்பதைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இவர்களின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். விலைவாசி
உயர்ந்து கொண்டே போகிறது, விலைவாசியைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதைப் பற்றி ராகுல்
காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

View More உத்திரப் பிரதேசத் தேர்தலும் காங்கிரஸ் கட்சியும்

ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

அண்ணா ஹஸாரே போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டால் போதும், மக்களுக்கு ஏதோ நடக்கிறது என்று தோன்றும். ஏதோ தாங்கள் சாதித்துவிட்டது போல தோன்றும். அடுத்த தேர்தலில் எல்லா ஊழலுக்கும் காரணம் மன்மோகனின் நரைத்த தலைதான் காரணம். எனவே கன்னத்தில் குழி விழ சிரிக்கும் ராவுல் வின்ஸியை தேர்ந்தெடுங்கள் என்று மீண்டும் நாட்டை குழியில் தள்ள சோனியா காங்கிரஸின் பெரும் மூளைகள் திட்டம் போட்டிருக்கலாம்….

View More ஆயிரம் அண்ணாக்கள் கைதானாலும்…

இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

அறியாமையின் காரணமாக நடந்த சமுதாய அடக்குமுறையினால் சிலர் தாழ்த்தப்பட்டிருந்த நிலை அந்நியர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது… எத்தனை நிகழ்வுகளில் ‘இந்துக்கள்’ என்று இந்த அந்நிய சக்திகளால் வர்ணிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்… இவர்களில் யார் யார் எந்த நாட்டுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த நாட்டுக்கு ‘டாட்டா’ காட்டி அனுப்பி வைப்போம்.

View More இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா… இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது… மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.

View More ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]

ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?

“இது ஒரு புரட்சிகரமான இயக்கம். வேறு எந்த இயக்கமும் இதற்கு இணையாகாது. இங்கு ஒழுக்கமும் படிப்பும் நிறைந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். சமூகத்தை மாற்றியமைப்பது இந்த ஒரே இயக்கத்தினால்தான் முடியும்” என்றார் ஜெ.பி… நடுவயது தாண்டிவிட்ட ராகுல் இன்னும் அரசியல் முதிர்ச்சியற்று இருப்பது அவருக்கும் அவருடைய கட்சிக்கும் நல்லதல்ல. “ராகுல் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அதனால்தான் ஒரு தேசியவாத இயக்கத்திற்கும் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்.”…

View More ராகுல் பேச்சு அறிவின்மையா, அகம்பாவமா, அரசியல் முதிர்ச்சியின்மையா?

காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்?

View More காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை